திருவிவிலியம் - எலியா எலிசா இறைவாக்கர் வரலாறு - கலிவெண்பாவில்

திருவிவிலிய எலியா எலிசா இறைவாக்கர் வாழ்க்கை வரலாறு

-கலிவெண்பாவில்



முன்னுரை



ஆதிநூல் வெண்பாபின் நான்கேள் எதுசெய்ய
வேதவர் சொன்னார் இறைவாக்கர் -ஆதலால்

கொண்டேன் தலைமேல் எலியா எலிசாவின்
விண்ணார் பணித்த படிசீராய் -மண்ணில்

திருவேதம் இட்டிடு வெண்பாவில் ஆணை,
திருவின்சொல் கேட்டுத் தலைமேல்; -திருவடி

வாழ்ந்த இறைவாக்கர் வல்லோன் எலியாவும்
வாழ்ந்தார் எலிசாவும் மண்ணிலே -ஆழ்மக்கள்

வேதர் இருவரைப் போலே சிலரேதான்;
வேதரில் ஓராள் மரிக்கவில்லை -ஆதலால்

வேதர் இருவாக்கர் வாழ்க்கையை வெண்பாவில்
ஆதிநூல்பின் நானும் எழுதிட -மேதவர்

விண்வியச் செய்கைகள் செய்தார் இருவாக்கர்
மண்ணிலே கர்த்தர் வரும்முன்னே -விண்ணார்

பணிசெய்தார் சீராக வாக்கரவர் நன்றாய்ப்
பணிந்தார் இசுரெலிறைச் சீர்.

முன்னுரை

எலியா படலம்



எலியா ஆகாபிடம் சென்று மழையும் பனியும் வாராது என்று இறைவாக்குரைத்தல்

இசுரேலும் யூதாவும் ஈராய் இசையார்,
வசைச்சிலை முன்னே வழிய, -இசுரேலின்

தேவன் அழைப்பை விடுத்தனர் தீமக்கள்
தேவர் சிலையென் பிழன்றனர் -தேவன்

இருளில் இருக்கும் மனிதர்க்கு வீசும்
இருள்நீக்(கு) ஒளிபோலே கர்த்தர் -தருவித்தார்

சீர்மாந்தன் ஆங்கே, எலியா அவன்பெயர்
நேர்திரு வாக்கன் அவன்சீரே -நேர்மகன்

கீலேயாத் தன்னில் எலியா திசுபியன்
போலே அதுவரை யாருமிலை -வேலாள்

முகத்த களிறாய் வலம்வந்தான் ஆங்கே
முகக்கவை ஏதில் மகனாய் -இகத்திலே

சொன்னது சொல்படி கீழ்படியும் மாந்தனாம்;
சொன்னவர் செய்வாரே சொல்நம்பி, -பின்வரும்

தீமைக் குறித்தவன் அஞ்சா, திசையாளும்
சீமானுக் கஞ்சா தவனாமே -சீமான்

இசுரேலை ஆகாப் இழியாளும் போழ்து
இசுரேலில் வந்தான் இவனே -திசையில்

ஒளிவீசுந் தேசமாம் நாடிதும் யேனோ
தொளியிழந்தே போனார் அலர்ந்தே -ஒளியார்

இறைவாக்கு வந்து இசுரேலின் மன்னா
இறைவாக்கைக் கேட்பீர், இசுரேல் -கறையால்

குறைபடும் எல்லாம் மழையிலாது என்றேன்
இறைவாக்கன் எந்தன் உரையே -இறைவன்முன்

நிற்கும்நான் சீரவரின் இன்னுயிர்க் கொண்டுதான்
நற்றிலாச் சொல்சொன்னேன் என்றவன் -நற்றிலான்

முன்நில்லாச் சென்றனன்; ஆங்கே இசுரெலில்
முன்போல இல்லா வறட்சியும் -இன்னாத்

தரிசாய்க் கிடந்த தரணி முழுதும்,
பரிசாக நேர்கர்த்தர் விட்டு, -திருவின்

விரைச்சொல், திருவின் சினத்தால் வறட்சி
விரித்தார் திருக்கை யவரும் -விரைந்து

மழையாங்கே பொய்த்திட மன்னன் அரண்டு
மழையும் வராது வளமில் -விழைநெற்

களமெலாம் போகும், கறைவாக்கன் தேடும்,
களமெலாம் தேடிக் களைத்து

இருவாக்கர் கலி 1

காகங்கள் உணவு கொடுக்க எலியா வாழ்தல்



இறைவாக்கைச் சீராண் எலியா அடைந்தான்;
இறைபகன்றார்: கேரீத் பெயராம் -சிறப்பூற்று

அப்பம் கொடுக்க அளித்தேன்நான் கட்டளை
அப்பம் அளிக்குமே காகங்கள் -தப்பிற்

கரவாக் கரைந்துண்ணும் காக்கை எனவே
கரைதன்னில் கேள்வி, உணவைக் -கரைந்துக்

கொடுக்குமே என்ற இறைவாக்கை நம்பி
எடுத்தான் எலியா நடையை -விடுத்தான்

மறுவினாக் கேட்கா மகனவன் நம்பி;
அறுமழைப் பொய்த்து விடவும் -சிறுநாட்கள்

காகம் இறைச்சியும் அப்பமும் தந்ததே
தாகம் தணித்ததூற்று நீரதும் -ஆகவே,

காகங்கள் காலையும் மாலையும் தந்துணவை
காகங்கள் சீராய் நிறைவேற்ற -ஆக

வறட்சியால் ஊற்றில் வரத்தில்லா நீர்போய்
வறட்சி விரிய விரிக்க, -சிறப்பில்லை

நொந்த மகனை, நிறைமகனே செல்சீதோன்!
வந்தனன் சாறிபாத் ஊர்

இருவாக்கர் கலி 2

எலியாவை சாறிபாத் விதவை வீட்டில் தஞ்சமாக இருக்க வைத்தல்



வறட்சியில் வாழ்ந்திடவே கைம்பெண்ணின் இல்லம்
அறிவாய் யிறைவனின் ஆணை -வறட்சி

சிறைவிடுக்கக் கட்டளை யிட்டேன் உனக்கும்
வறுமையின் பெண்ணிற்கு மாங்கு -அறிந்தவன்

சாறிபாத் ஊரில் எலியாவும் சேர்ந்திட,
சாறிபாத் நாறியதே ஊணின்றி, -சாறிபாத்

மக்களும் திண்டாட; கர்த்தரின் நல்வாக்கு
எக்காலம் போகாது வீணாக -அக்கா,

வெளியிலே சுள்ளிப் பொறுக்குங்கைம் பெண்ணே
வெளியில் பயணம் விரைந்து -வெளிசுடும்

வெக்கைதீர் நீர்கொடு பெண்ணே, எலியாசொல்
அக்கைம்பெண் கேட்டு விரைந்திட -அக்காசீர்

நீரெடுக்கச் செல்பெண்ணே நீயெனக்கு உண்ணப்பம்
சீரெடுத்து வாயெனும் சொல்கேட்டு -நேரா

திருக்கவே வேண்டினேன் தேவா, விருந்தின்
திருச்சொல்லைக் கேள்பெண் அலர்ந்து -திருவாய்

அளித்திடு அப்பம் எனக்கேட் டொளிந்து
ஒளியாதே, காண முகம்யேன் -வெளியில்

கலங்கினாய் ஏனோ மடந்தாய்நீ? நேராண்
கலங்கினோளைக் கேட்டான் மகனும் -கலங்கி,

கணவன் இழந்தவள் கைம்பெண் சிறப்பில்;
உணவுகொடு கேட்க, பசிதீர் -உணவைச்

சமைத்திட மாநெய் உளது சிறிதாய்,
சமைத்துண்டு கொல்வோம் உயிரை -அமைந்தே,

எனநான் இருக்க, திருவாண் உணவை,
எனைக்கேட்டீர், ஐயோ அழுதேன் -எனவே,

உயிருள்ள தேவனின் ஊழியன் சொல்கேள்
உயிர்கொடுக்கும் தேவனே நம்மின் -உயர்தேவன்

அஞ்சாதே சென்று சமைநீ, அடைசெய்துக்
கொஞ்சம் முதலிலென் கைத்தாரும் -அஞ்சாதே

சொல்கேள் இறைவன் திருவருட் சொல்லிது,
செல்மாநெய் ஈங்கே குறையாதே -சொல்நம்பு,

விண்மழை வீழ்வரை; செய்வாய் விரைந்தடை,
சொல்கேட்டுக் கீழ்படிந்தாள் பெண்ணவள் -அல்லாள்

இரண்டப்பம் மாநெய் இருக்குமெனச் சொன்னாள்
இரண்டிலே ஒன்றெடுத்துச் சென்றாள் -இருந்தோன்

கரம்நீட்டி வாங்கிக் களித்துண்ண, மாவும்
திருச்சொற் படியே நிலைத்து -அருளால்

ஒருநாள் இருநாள் நிலைத்தால் பெரிதோ
திருச்சொல்லி மூன்றாண் டுகளாய் -வரையிலே

பஞ்சம் கொடிதாய் இருப்பினும் வீட்டிதில்
தஞ்சம் குறைவிலா ஊண்

இருவாக்கர் கலி 3

சாறிபாத் விதவையின் பிள்ளை மரித்தலும் எலியா வேண்டுதல் செய்து உயிர்பித்தலும்



குறைஆயுள் பெண்கருப் பிள்ளை மரிக்க,
அறைக்குள் உறங்கும் எலியா! -அறைவிட்டு

வாரும் எதற்கோ மரித்தான் மகனெனது
சேரும் பழியுந்தன் மீதுதான் -சீராண்

எலியா விரைந்தோடிச் சென்றான் வலிக்கேள்
எலியா மரித்த உடல்காண் -எலியா:

கொலைசெய்ய வந்தேனோ பிள்ளையை, தேவா,
எலியாசொல் தாரும் உயிர்தான் -எலியாவோ

மன்றாடி வேண்டினான் மூன்றுவிசை மேல்விழுந்து
மன்றாட்டைக் கேட்டார் இறைவனார், -மன்றாட்டைக்

கேட்டு உயிர்த்தந்தார் கர்த்தர் சிறந்தங்கு,
இட்டான்கைம் பெண்கை மகனையே -நட்டவள்

பெண்ணோ மலைத்து நிலைக்கண் எடுக்காது
மண்ணில் இதுபோல் திருச்செய்தீர், -பெண்நானும்

எண்ணி முடியா விதங்கண்டேன்; மெய்நீரும்
விண்ணார் இறைவாக் கினன்

இருவாக்கர் கலி 4

மீண்டும் ஆகாப் முன்னர் எலியா காண்பிக்க வந்து ஓபதியாவைக் காணுதல்



மூன்றாண்டுச் சென்றப்பின் கர்த்தர் இறைவாக்குத்
தோன்றியது: நேராண் எலியாவே -தோன்று

வழுவரசன் ஆகாபின் முன்னராக, விண்ணின்
மழைவரு விப்பேன்நான் கேள்சீர் -அழிய

வழுச்செங்கோல் மன்னன் பழித்தான் மழையை;
மழைநீரில் வாடும் மிருகம் -அழியும்;

அழிகொடா, செல்வோம்வா ஓபதியா நாட்டில்
கழிப்புல்லைத் தேடு விரைந்த -அழிவின்

சமாரியா நாட்டைப் பகுத்தார் இருவர்
சமமாய் இருதிசைச் செல்ல, -சுமைமிருகம்

மட்டும் பிழைத்திட உண்டோபுல் தேடினர்
எட்டுதிசைத் தன்னில் அலர்ந்தவர் -மட்டிலா

நேர்மகன் ஓபதியா மன்னன்போல் இல்லாது
நேர்மக்கள் பல்லோரைக் காப்பாற்றி, -சேர்நீரும்

அப்பமும் நூறு இறைவாக் கினருண்ண,
தப்புவித்தான் யேசபேல் கையினின்று -அப்போ

வழிச்சென்ற ஓபதியா கண்ணில் எலியா;
அழிச்சொல் பகன்ற எலியா -விழுந்தான்

முகங்கவிழ்ந்து ஆங்கே; தலையாணே, நேரே,
முகன்எலியா தானோ? வினவ -அகமகிழ்ந்தே

மெய்யான்: எலியா, சரியே, அரசனிடம்
மெய்ச்சொல் எலியாவைக் கண்டு;

இருவாக்கர் கலி 5

ஓபதியா எலியாவோடு உரையாடுதல்



பகன்றதும் ஓபதியா, சொன்னான் பதறி,
பகரெளிது, சொற்செய்க் கொடிது -பகன்றான்

இறைச்சொன்ன வன்சொல் மழைபொய்க்க, வீணாய்,
சிறைச்செய்யத் தேடுவீர்! சென்றார் -நிறையில்

கறைமனிதன் இல்லையெனச் சொன்னால் அரசன்
குறைமன்னர் மெய்யாணைக் கேட்டு -குறையாணாம்

நான்போய் எலியா இருக்கிறானென் சொல்லிவிட்டு
நான்போன பின்னே இறைவனுங் -கோன்உம்மை

வேறூர் அழைச்சென்றால் என்செய்வேன் சேரிடம்
வேறேதும் யானறி யேன்சீரே -வேறாணின்

சொல்கேட்டு உம்மை அரசனும் காணாது,
சொல்பொய்யேன் என்னிடம் சொன்னாய்நீ, -சொல்போலே

சாகக் கொடுப்பானே ஆணை, சிறுவன்யான்
வாகை இறையடியான் கேள்மின்னே -சாக

இறைவாக்கர் எல்லாரும் கொன்றிடப் போனாள்
இறைவாக்கர் நூறை அடைத்து -இறைவாக்கர்

நீர்கொடுத்து அப்பம் கொடுத்துநான் காத்துவந்தேன்
நேர்நீர் அறிவீர் இதுவன்றோ -நேராண்

அடியேன் புரிச்சிறுச் செய்கை யுமது
மிடிசெவி எட்டியதோ நேரே -அடியன்

உயிர்தன்னைச் சோதிக்கா தீர்க்கோ; அயர்ந்தான்
உயிர்பிச்சைக் கேட்டு அவனும் -உயிரார்

திருக்கர்த்தர் என்றும் உயிரோடே உள்ளார்,
திருவின்முன் நின்றூ ழியஞ்செய்த் -திருவாக்கன்

என்சொல்கேள், இன்றே அரசனவன் முன்நிற்பேன்
என்றான் எலியா உரத்தங்கு -நன்றெனச்

சொல்கேட்டு ஓபதியா சென்றான் அரசனிடம்
சொல்சொல்ல மண்ணரசன் எங்கேயோ -சொல்சொல்லி

விட்ட எலியா விரைந்தென்னைக் காண்வர
எட்டச்செல் நீயும் விரைந்து

இருவாக்கர் கலி 6

பாகால் வழிபடுவோரை போட்டிக்கு அழைத்தலும் வென்று சிலை வழிபடுவோர் அழித்தலும்



இசுரவேலர் கூடி வரச்செய்யும் மன்னா
இசுரவேலர் வந்தால் உரைப்பேன் -திசையெங்கும்

நம்தேவன் கர்த்தர்போல் யாருளர், பாகாலோ
நம்தேவன் ஒப்பில் உணர்வீரே -அம்மான்

திசையெங்கும் காணீர் இசுரேலின் மக்காள்
அசைபோடும் காளைக் கொணர்வீர், -திசைதன்னில்

தெய்வம் எவரென்று சோதித் தறிவீரே
மெய்த்தீ விடையே இறைவனாம் -மெய்யாய்

அதுசரியே மக்கள் ஒருமித்துக் கூற
அதுபடியே ஈர்காளைக் கொண்டு -வதைபலிச்

செய்ய, சிலையின் வழிசெய்வோர் பல்லோரும்
செய்தார் சிலைவேண்டி வீணர்கள் -மெய்யாகக்

கையில் மணியெடுத்து, கோலால் தனையடித்து,
கையோ வறுமையோ என்றவர்கள் -கையிரு

வித்தைகள் செய்தவர் மன்றாட எள்ளினான்
அத்தகை வித்தைகள் நேர்சீராண் -அத்தாண்

ஒருவேளை தூங்கி யிருப்பானோ பாகால்
திருவேளை காப்போம் முடிய, -திருவுமெள்ளி,

சிற்றாள் சிலைமுன்னே வெட்ட, சிரித்தனன்,
அற்றே விடையில் வெறுத்தனர் -நற்றாண்

சரியிப்போ அந்திப் பலிநேரம் ஆக,
வரைசெய்த விண்ணப்பம் வீணே -திரைபின்னே

வாழ்கர்த்தர் மெய்தெய்வம் என்றே உரைத்திடுவார்
வாழ்க்காளைத் தீயால் அழித்திங்கு -வாழ்சீர்

இனத்தின்எண் பன்னிரு பாறைகள் இட்டு
இனப்பாவம் நீக்கும் பலியாய் -இனக்காளை

வெட்டி, பலிபீடம் மேல்வைத்து விட்டனன்
கொட்டியே தண்ணீரை நேர்சீராண் -கொட்டிடும்

நீரூற்றும் நான்கு குடம்நிறையப் பின்னர்நேர்
நீரூற்றும் என்றே பணித்திட -நீரூற்றும்

நான்கு குடம்மீண்டும்; பன்னீர் குடம்நீரோ
நான்கு புறமும் வளைத்தோட -வான்கண்டு

விண்ணோக்கி விண்ணாரே விண்ணின் விடைகொடும்
விண்ணவர் விண்ணின்று விண்தீயை -விண்கொடுக்க

மண்ணில் பலியும் தகைத்தே அவிந்ததங்கு
மண்ணும் வளைந்தோடும் நீர்தனை -மண்ணெரித்த

விண்தீ உடன்வர மக்கள் இசுரேலின்
விண்ணாராம் கர்த்தரே தேவனென -விண்செய்கைக்

கண்டு திகைத்தார் சிலைவழி வீண்செய்வோர்
கண்டான் எலியா நகைத்தனன் -மண்ணில்

ஒருமகனும் விட்டு விடாதீர்ச் சிலையோர்
திருமகனும் வெட்டவே ஆணை -திருமகன்

சங்காரம் செய்தனன் பன்னூறு பாகாலின்
சங்கத்தின் மக்களை ஆங்கு

இருவாக்கர் கலி 7

மீண்டும் மழைபெய்ய எலியா வேண்டுதல், பெருமழை சொரிதலும்



மன்னனும் என்செய் யறியாதே, போயினன்
மன்னனும் வாயடைத்து வேறாக -மன்னன்

விடைதா எலியா மழையெப்போ பெய்யும்
கிடைநிலமும் செய்யும் வறண்டு -அடடா

இதோயென் செவியில் மழையோசைக் கேட்டேன்
இதோசெல்லும் தேர்பூட்டி நீரும் -அதுபடியே

சென்றான் அரசன் எலியாவின் சொல்நம்ப,
சென்றான் எலியா மலைமேலே -சென்றவன்

தன்னூ ழியன்மேன் மலைமேலே நிற்கவைத்து,
தன்கால் முடக்கியவன் விண்நோக்கி -மன்றாடி

என்ன முகில்வந்தோ என்கேட்க, இல்லையே
ஒன்று மிலையென்று சொல்லவும் -அன்னவன்

பின்னும் முடக்கியவன் விண்நோக்கி வேண்டிட
என்ன முகில்வந்தோ இல்லையோ -நன்றாய்பார்

என்கேட்க ஒன்று மிலையென்று சொல்ல,
திரும்பி முகில்வந்தோ பாரு -திரும்பவும்

ஏழுதரம் செய்திட்ட வேண்டுதல் பின்னராய்
ஏழுவிரல் சிற்றளவாய் வந்ததே -வாழுலகில்

வாழவைக்க வேழாணின் விண்ணப்பம் கேட்டே
முகில்தந்தார் வேழாண் திருவும் -அகிலத்தில்

கார்முகில் சட்டென மிப்பெரிதாய் ஆகிட,
கார்முகில் பெய்யெனப் பெய்மழைக் -கொட்டிட,

பார்மன்னன் தேர்ப்பின்னே ஓடினான் நேர்மகன்
பார்மன்னன் முந்தினான் நேர்சீராண் -ஆர்த்தங்கு

பெய்யெனப் பெய்மழையை நல்லார் நலங்கண்டு
மெய்த்தேவன் கர்த்தர் எனப்போற்றி, -பொய்சொல்லிப்

பொய்யரசன் சென்றான் மனையாள் எசபேலே
மெய்யே எலியா செயல்

இருவாக்கர் கலி 8

யெசபேல் எலியாவை கொன்றிட ஆணை, எலியா தப்பித்து ஓட்டம்



என்னது தெய்வமென் தொண்டரை வெட்டினானோ
என்கையால் வீழ்த்திக் கொடியோனை -வன்செய்வேன்

என்றவளும் வன்மம் திருமேலே வைத்தவள்
வன்னாணைத் தேடிட ஓடினான் -அன்றே

திருவாக்கன்; ஓடினான் வாழ்வுகாக்க ஆங்கே
திருடனைப் போலே இரவில் -திருவும்

அரண்டோடி, சூரைச் செடிகீழ் உறங்க,
திருத்தூதன் தந்தான் உணவு -திரும்பி

திருத்தூதன் வந்தான், திருவின் துயில்போய்,
திருவாக்கன் கண்டான் உணவை, -திருக்கொள்

அருகே கலங்கொள்நீர் வாக்கன் அருந்தி,
திருவாக்கன் மீண்டும் உறங்க -திரும்பி

திருத்தூதன் கையிட்டு வாக்கன் எழுப்ப,
திருவாக்கன் கண்டான் உணவை -விரைந்துண்பாய்,

செல்தூரம் மிக்கே எனவே இரண்டுமுறை
சொல்கேட்டு வாக்கன் புசித்தனன் -சொல்போல்

நடைபோட்டான் நாற்பது நன்னாள் நவின்று
நடைகுறையாப் போனான் நிலத்து -நடைபோய்,

குடைபோல் குகையது ஓரேப் திருக்கேள்
கடைநான் திருவாக்க னேன்

இருவாக்கர் கலி 9

இறைவனை நோக்கி எலியா எனைஎடுத்துக் கொள்ளும் என்று விண்ணப்பம் செய்ய, இறைவனின் சமூகத்தை எலியா தரிசித்தல்



நன்மக்கள் தந்தையோர் நல்லோர் எனைவிட
என்னையேன் விட்டுவைத்தீர் இவ்வுலகில் -என்னைத்

தவிர இலைமக்கள் ஈங்கே; திருக்கேள்
தவிப்பதேன் என்ன செயலாய் -அவிந்தார்

இசுரேல் இனமக்கள் போனார் அலர்ந்து
இசுரேல் இனத்தோர் அழித்தார் -வசைவாக்கர்

நான்தனியே என்செய்வேன் கூறும் திருகர்த்தா
வான்கீழ் கொலைசெய்யத் தேடுகின்றார் -ஏன்சீர்

வெளிவா மகனே திருச்சொல்ல வந்தான்
வெளியில் திருச்சொல்லைக் கேட்டு -வெளியில்

திருவங்கு போனார்க் கடந்து திருவும்
வரும்திருவைக் காண விழைந்து -பெரிதாய்

மலைக்கிழிக்கும் காற்றுசெல்ல, பின்னர் அதிர்ந்த(து)
இலைமரம் வாழ்பூமி ஆனால் -இலையங்கு

இவ்வீர் வினையில் திருவும் வரும்தீக்காண்
அவ்வெம்மை இல்லை இறைவனார் -செவ்வை

வினைமூன்று ஆக, வினையில் இலையே;
தனித்தமர் மென்சத்தம் கேட்டு, -தனித்திரு

வாக்கன் முகம்மூட, கர்த்தர் உரைத்தாரே
வாக்கனே என்ன செயலாய்நீ -ஏக்கச்

சிறுவன் இருப்பது போல்நிலைக் கர்த்தர்
கறுக்கொள் மகனிலை ஈங்கே -வறுத்தார்

திருவாக்கர் மக்கள் அழித்தார் சிறப்பின்
திருப்பீடம் சேனைத் திருவே -திருவோ

எலியா விரைசெல் தமசுகு, ஆங்கே,
வலியோன் அரசன் அசகேல் -வலிசெய்யச்

செல்வாய் வனவழி, சென்றே முழுக்கிடுச்
செல்வன் எலிசா திருவாக்கன் -அல்லோன்

இசுரேலில் நிம்சி வழியோன் யெகூவை
இசுரேல் அரசன் முழுக்கு -இசுரேலில்

வாக்கனாய் உன்நிலையில் சாப்பாத் வழிஎலிசா
வாக்கனாய் நீயும் நிறுத்திடு -வாக்கா,

வரும்செயல் என்னவெனில் ஆசகேல் வன்கோல்
விரைந்தப்பி வந்தோன் யெகூகோல் -அரைத்தழிக்கும்

தப்பி எவரிருப்பின் வாக்கன் எலிசாதான்
தப்பாது வெட்டுவான் மெய்யிது -இட்டவர்

ஆயினும் நீயறிவாய், தேசத்தில் பாகாலாம்
பேயோன் முடங்கா நுதல்முத்தம் -வேயாதார்

ஏழா யிரம்பேர் உளரிங்கு; கேள்மகனே
கோழையேன் வேண்டாம் உயிர்

இருவாக்கர் கலி 10

எலிசாவை கண்டு பின்வரக் கூப்பிடுதல்



சென்றனன் சொல்கேட்டு வாக்கன் எலியாவும்
சென்றான் எலிசா திருவாழூர், -சென்றோன்

வெளியில் உழுதிடும் பன்னீர் உழவேர்
அளிக்கண்டான் வாக்கன் சிறந்து -களித்தவன்

பன்னிரு ஏரிற் பயிர்செய் மகன்கண்டு,
தன்மேல் வரையாடைப் போட்டதும் -என்பெற்றோர்

முத்தமிட்டு நான்வர நீர்அருளும் என்றவன்
முத்தமிடச் சென்றான் அகம்தன்னில் -அத்தாண்

இருகாளை ஏர்பூட்டு வெட்டக் கொணர்ந்து
விரைந்தே சமைத்தான் மரஏர் -எரித்து

இருமக்கள் ஊன்கறி உண்டப் பிறகாய்த்
திருமகன் போனான் அகம்தான் -திருவாண்

திருவந்து பின்னே வரையாடை இட்டான்
திருஎலியா பின்னே விரைச்செல் -இருவாக்கர்ச்

சென்றார் இறைவன் வழிச்செயல் செய்தங்கு
அன்னாரும் போனார் நிலம்

இருவாக்கர் கலி 11

பெனதாத் போர் புரிய இருமுறை வருதலும்; இரண்டாம் முறை தோற்றவனை ஆகாப் உயிரோடு விட்டுவிடுதலும்



பெனதாத் சிரியா அரசன் புரிப்போர்
அனைத்தும் எனதே அரணுள் -பெனதாத்தின்

தூதர் உரைக்க, உமதே எனச்சொல்லித்
தூதர் விடுத்தான் திரும்பச்செல் -தூதர்

திருப்பி விடுத்தான் பெனதாத் விடியல்
வருவர் திருவெடுக்க உன்கண் -திருவெல்லாம்

தூதர்கை இட்டிடு நாளை; திருவெல்லாம்
தூதர்கை இட்டிடேன் யான்சீரே -தூதரிடம்

என்திரு எல்லாம் உமதெனச் சொன்னேனே
வன்னாகப் போர்செய்ய மண்மைந்தன் -மன்னன்

பெனதாத் வரவேண்டும் என்று நினைக்க
அனைவரை ஆயத்தம் செய்வீர் -இறைவ

இறைவாக்கன் நேராக ஆகாபை நோக்கி
இறைவாக்கு ஈதே அரசே, -கறைமன்னன்

எல்லாரை வீழ்த்திச் சிறந்துவெல்வாய் மன்னவா
வல்லார்சொல் வந்தது வாக்கங்கு -நல்லே

இறைவாக்கன் சொல்கேள் இறைசொன்னால் மெய்யே
குறைமன்னன் சென்று விரைந்தே -கறைவெட்ட

யாம்போர்ப் புரிவோமே நன்று, எவர்எய்வா
ராம்முன்னே போரின் முனைதனில் -ஆம்நீங்கள்

போர்செய்வீர் என்று இறைவாக்கு வந்ததே
போர்தன்னில் முன்னெய் வதுநீரே -போர்கலந்து,

போர்தன்னில் வெற்றிச் சிறந்தான் அரசனும்
போர்வென்ற மன்னன் மகிழ்ந்தனன் -போர்வென்று

போர்முடிந்து செல்லும் அரசன் முகங்கண்டு
போர்வருவான் தீயோன் பெனதாத்தும் -ஓர்ஆண்டும்

போனப்பின் சொல்கேட்டு மண்ணாள் அரசனும்
போனானே கேட்டே அலர்ந்தனன் -ஏனோயேன்

என்செய்தோம் வீழ்ந்தோட என்றே பெனதாத்கேள்
அன்னாரின் தேவன் மலையிறை -என்றே

நிலையார் பழிசெய்தார் வன்னாய், நிலைமேல்
நிலைக்கர்த்தர் வாரார்க் குழியே -நிலைதனில்

ஓராண்டு ஓடப்பின் வந்தான் கறைமன்னன்
சீராக ஊரைப் பிடிக்கப்போர் -நேராணாம்

வாக்கன் இறைவாக்கு வந்திட, சொன்னானே
வாக்கு இறைசெய்வார் போர்தானே -வாக்கு

மலையில் மலைத்தேவன் அல்ல, நிலையாய்
நிலைக்கும் இறையான் எனநீர் -நிலையறிய

வந்தோர், குழியில் இறங்கும் இறைப்போரே
அந்த அறியார் அழிப்பீரே -இந்த

இறைவாக்கு என்றென்றும் பொய்க்காது மெய்யே
இறைவாக்கன் சொன்னது போலே -கறைமன்னன்

ஓடோட மிப்பெரிதாய்ப் போர்தன்னில் வெட்டினான்
ஆடடடா ஈதே இறைசொல்லாம் -ஆடிப்போய்

ஓடோடிச் சென்றான் பெனதாத்தும் ஆப்பெக்கில்
ஓடோடிச் செல்லென் துரத்தியோர் -ஓடுவோன்

விட்டார் உயிர்தப்ப, மன்னன் பெனதாத்தோ
விட்டான் புரியாதுப் போர்முகம் -திட்டம்போய்

போரில் புறமுதுகுக் காட்டினோம் என்செய்வோம்
நேராம் இசுரேலின் மன்னர்கள் -போரில்

விழுந்தோரை விட்டிடுவர் என்றே எமக்கு
விழைச்செய்தி, தூதர் விடும்நீர் -அழைத்தே

பெனதாத் விடுத்தனன் தூதர் விரைவாய்,
பெனதாத் உயிரோ டிருக்கும் -வினைசெய்யா

விட்டிடுவீர்க் கோவே இசுரேலின் மன்னவனே
தட்டாமல் செய்வீர் அருள்நீரே -எட்டிவர

என்ன பெனதாத் உயிரொ டிருக்கிறானோ?
அன்னார் எமது சகோதரனே -வன்செய்யா

விட்டிடும் சோதரனை என்றே மொழிபற்றிக்
கட்டினர் வேசத்தைத் தூதவர் -கிட்டாகச்

சேர்ந்தனர் நண்பர் இருமன்னர், சோதரராய்ச்
சேர்ந்ததும் ஆணை யிடுவித்து, -சேர்மன்னன்

போவீர் எனவிட்டான் நேரருள் செய்தவன்
சாவில் உயிரோடு சென்று

இருவாக்கர் கலி 12

இறைவாக்கன் ஆகாபிற்கு எதிராக வாக்குரைத்தல்



வாக்கன் ஒருவன் இறைவாக்கு உண்டாகி
வாக்கன் எனைப்புடை என்கேட்க -வாக்கன்

மறுக்க, இறைச்சொல்லைக் கீழ்படியாப் போனாய்
கறைஅரிமாப் பீறிடும் போடா -இறைவாக்கன்

சொல்படியே போனவனைப் பீறியது சிங்கமும்
சொல்கேட்டான் இன்னோர் விடுத்தனன் -சொல்படியே

விட்டான் புடைத்து, இறைவாக்கன் சென்றனன்
எட்டி விரைந்தான் தெருதனில் -எட்ட

அரசன் வரும்தெருவில் நின்றனன் பூசி
அரசன் வரவும் அரியோன் -அரசே

விரைப்போரின் வேளை ஒருவன் அடகாய்த்
திரைவணிகன் விட்டான் நிலத்து -திரையை

அவன்விட்டு இம்மனிதன் நீகாப்பாய் இல்லென்
இவன்மீட்கத் தாலந்து வெள்ளி -அவனோ

அவைநடுவே வேலையின் வேளையில் போனான்
இவனென்செய் வேனோ குறையோ -அவனங்கு

நேர்சொன்னாய் சொல்படியே தாலந்து வெள்ளியைச்
சேர்த்திடுவாய், காக்கத் தவறியதால் -நேர்க்கேள்

களைந்தான் அரிதாரம், வாக்கன் இறையின்
உளைச்சல் அரசனே கேள்மின் -அளைந்திங்கு

சாவிற்கு நான்நியந்த மானுடனைப் போயென,
சாவிலா விட்டாய்நீ ஆதலால் -சாவாய்

மகனே உயிர்ஈடாய் வாக்கன் உரைத்தான்
வகைதெரியாக் கொண்டான் சலிப்பு

இருவாக்கர் கலி 13

நாபோத்தின் தோட்டம் சூதாக ஆகாப் கொள்ளுதலும் அவனுக்கு எதிரான எலியாவின் இறைவாக்கும்



பேர்கொண்டோன் நாபோத்தின் தோட்டம் அரசன்காண்
பேர்தோட்டம் என்கையில் விற்றிடு, -பேர்கோன்யான்

என்றே உரைக்க, எவருக்கும் விற்றிட
என்மனம் இல்லை விடுமரசே -என்னயிது

பேர்தோட்டம் இல்லாது போனான் முகம்வாடி,
பேர்மன்னன் கண்டனள் பார்மனைவி: -பார்க்கின்றேன்

ஏனோ முகவாட்டம் என்கேட்க, பேர்மன்னன்
கோனோயான் தோட்ட மிலையெனக்கு -கோனாண்

முழுநாடும் உம்கையில் தானிருக்க யாரோ
கழிதோட்டம் இல்லென்று சொன்னால் -பழியது

என்றே மனதுள்ளே வஞ்சகம் செய்தனள்
கொன்றிடச் சூதாக கள்ளமாய் -அன்றவள்

சூதாய் எழுதினாள் யேசபேல் கோன்கொண்டு
சூதாய் இழுத்திடும் நாபோத்தை, -தீதாய்ப்

புரிந்தனன் சொற்குற்றம் என்றே கொலைசெய்
விரைந்தவனைக் கல்லெரிந்து நீரே -விரைந்தவர்

மக்களும் சூதாய்ப் பழித்தனர் பொய்சான்று,
தக்கவன் நாபோத்தைக் கொன்றனர் -அக்கணம்

விட்டனர் தூது கொலையுண்டான் நாபோத்து
இட்டனள் கையில் பரிசாக -இட்ட

பரிசைப் பெறவங்கு சென்றான் அரசன்
அரசன் வரும்வேளை வந்தான் -திருவும்

அரசன் எலியாவைக் கண்டதும் கேட்டான்
தெருஎதிர்ப்போன் கண்டாயோ நீயும் -தெருவில்

இறைவாக்கு வந்தே இறைவாக்கன் வந்தான்
கறைமன்னன் செய்கை இறைமுன் -கறைகூ

இறைவிட்டார் வாக்கன் இறைவழக்கு முன்னே
கறைமன்னன் தோட்டம் குறையோ -கறையே

மனையாளின் சொல்கேட்டுத் தீதாய்ச் செயலைக்
கனையாகச் செய்தாயே ஆகாப் -உனைகர்த்தர்

தீச்செய் இருவரைப் போலே அழிவிற்குப்
போச்செய்வார் முன்சொல் இறைச்சொல்லே -தீச்செயலாய்

நாய்நக்கும் உன்பார்ப்பை, தீமகனே நீபோவாய்;
பேய்சிலைகள் முன்னே முடங்கியே -போய்விட்டாய்;

சொல்முன் உரைகேள் அரசனே போவாய்நீ,
சொல்லெனதில் வாக்காம் இறைச்சொல்லே -அல்லவர்

உன்மக்கள் போவர் அழிந்து உனைப்போலே
உன்நிலமும் போகும் கலையிலா -வன்னாகி

என்றவன் மேல்மொழிச் சொன்னார் இறைவனார்
வன்சொல் எலியா உரை

இருவாக்கர் கலி 14

ஆகாப் சொல்கேட்டு இரட்டுடுத்தி கர்த்தரைப் பணிதலும் கர்த்தர் இரங்குதலும்



சொல்கேட்டு ஆகாபோ சொல்பெரிதே கர்த்தாவே
சொல்படியே செய்வீரோ சின்னவன் -சொல்கேட்கும்

கர்த்தர் இரங்கினார், சொல்கேட்டு, கேட்டாயோ
கர்த்தரின் முன்னரசன் தாழ்த்தினான் -கர்த்தர்

இறையே இறையே கறையான் புரிந்தேன்
இறையே எனைநீர் இரங்கி -இறைவனார்

மன்னியும் சீரிலான்; தோட்டம் அடையவே
இன்னாப் புரிந்தானை மன்னனும் -மன்னிப்பு

கேட்டிட, சீரார் இறைவனார் கேட்டிடு
கேட்டானை மன்னிப்பேன் இன்றுநான் -கேட்டிடு

தீமை இவன்காலம் வந்திடா, வந்திடும்
தீமை இவன்வழிமேல் என்றவரும் -தீமை

வழிவழியாய் வாங்கும் திருவவர் சொன்னார்
வழிமேல் பழிவாங்கு வேன்

இருவாக்கர் கலி 15

சீரியர் போருக்கு வர மிகாயாவை அழைத்து வர அனுப்புதல்



சென்றது மூன்றாண்டு, போரின்றி நன்றாக
வென்றிடப் போர்செய்தார் சீரியர் -கொன்றிட

வந்திட்டார் என்செய்வோம் என்றே வினவினான்
வந்தனர் வாக்கர் நிறைந்தங்கு -வந்தவன்

யூதா அரசனும் ஆங்கே தரித்திருக்க
யூதா இசுரேல் அரசர்முன் -வேதர்சொல்

என்றே அரசருங் கேட்டனர் மண்சொல்லை
மன்னர்கள் கேட்டார் சிரித்தங்கு -அன்றோ

சிதேக்கியா என்றோர் கறைவாக்கன் இட்டான்
சிதைக்கொம்பு எஃகால் சிரமேல் -இதுபோல்

சிதைப்பீர் அரசே வரும்போரில் வெல்வீர்,
சிதேக்கியா சொன்னான் உரைத்து -இதுபோல்

இவர்தவிர வேறு எவருண்டோ இங்கே?
இவர்விட்டால் ஓர்மகன் உண்டே -அவனோ

எனக்கெதிர் பேசி வகைச்சொல்வோன் என்றே
எனக்கில்லை சொல்விருப்பம் காண்சீர் -எனைக்கேள்

அழைநண்பா, கேட்போம் அவன்சொல்லை என்றே
அழைவிருந்தும் சொல்ல, களையோன் -அழைக்க

விடுத்தான் கொணர்வீர் மிகாயா அவைக்குள்
நடைப்போட்டான் வீட்டுள் தலை

இருவாக்கர் கலி 16

மிகாயாவின் இறைவாக்கு



மிகாயா விரைந்து வருவாய் அவைக்கு
மிகாயா அரசன் எதிராய் -மிகுக்கூறாய்

வன்சொல்லேன் என்றென்றும் யானே இறைவாக்கு
என்சொல்லோ சொல்வேன் சிறந்துநான் -அன்றொ

முதற்சொல்லாய்ச் சொன்னான் விரைந்திடும் மன்னா
அதுகேட்டு, கள்சொன்னாய் ஏனோ -இதுமொழி

இல்லை, முகம்வேறு கண்டேன் மறைத்தாயேன்
நல்லார் மறைச்சொல் உரைதனை -எல்லா

இறைச்சொல் மறைக்காதுச் சொல்லென்று உன்னை
இறைமுன்னர் எத்தனை ஆணை -முறையிட

வேண்டும் மகனே, பகன்றிடு வாக்கிறை
ஆண்டார் செவிகேட்க இன்றுநீ -ஆண்டார்

இறையின் திருமுன்னர் சேனை முறையில்
இறைவன் தரித்திருக்கக் கண்டேன் -இறைவன்

குறைமன்னன் ஆகாப்பை ராமோத்தில் வீழ
முறைசொல்வோர் யாருள ரோசொல் -முறைமுறை

ஆவியர்: பற்பலவாய் யாம்சொல்வோம் முன்னுரை,
தேவனோ என்விருப்பம் இல்லையென, -தேவன்முன்

கள்ளச்சொல் ஆவியும் வந்தது முன்னாக,
கள்சொல் அவர்நாவில் நான்சென்று -கள்சொல்லால்

வஞ்சித்து வாக்கை விடுப்பேன் நிலைசெல்வான்
அஞ்சாதே போர்முனைக்குக் கோனவன் -நஞ்சே

சரிசெல்வாய் என்றே திருச்சொல்ல ஆவி,
சரிமாந்தர் வாக்கர்மேல் வந்து, -விரைவாக்காய்ச்

செல்மன்னா என்றே உரைத்தார் இறைவாக்கை
அல்ல திறைசித்தம் கேள்மின்னே -அல்லா

இதுகேட்ட மன்னனும் சொன்னேனே வன்சொல்
வதைச்சொல்லே சொல்வான் எனநான் -அதுகேள்

வகைவழி எவ்வழி வந்ததாவி உன்னுள்
தகைத்தவன் வாக்கன் அடிக்க -வகைநீ

குழியில் பதுங்கி உயிர்தப்பும் போழ்து,
பழியிலை என்மேலே என்றே -பழிபோட்ட

நீயும் அறிவாய், சிதேக்கியா, என்றவனும்
பாயாது சொன்னான் உரைதனை -வேயவன்

போர்முடிந்து நான்வரும் வேளை வரையிவனைச்
சேர்சிறையில் என்றே உரைத்திட -நேர்மனிதன்

பூட்டிச் சிறையில் இடுவித்தான் மன்னனும்
வேட்டையாய்ப் போர்தொடுத்தான் கோ

இருவாக்கர் கலி 17

ஆகாபின் மரணம்



அரிதாரம் பூசி வெறுமே அரசன்
விரைசெல்வேன் நீரோ விரைசெல் -அரியில்

கரைமன்னன் சொன்னான் உரையது, போனார்
விரைப்போர்ப் புரிந்திடும் நாளில் -பெரியவன்

சீரிய மன்னனோ சிற்றாள் விடுத்திடுவீர்,
சீரவன் மன்னன் ஒருவனை -நேரெய்தும்

ஆணை யிடுவிக்க ஆங்கே களத்திலே
ஆணைப் படிநடந் தார்வீரர் -ஆணைபடி

மன்னரின் தேரை விரைவந்து தாக்கிட
மன்னவன் இல்லையே தேரிலே -என்செய்வோம்

என்றே பிரிந்தோடும் முன்னர் ஒருவனோ
தன்நாணில் யேற்றினான் அம்புதனை -அன்றே

அரிதாரம் பூசி வெறுமே அரசன்
அரிதாரி மேலம்புப் பட்டு -அரசன்

விரைந்தோட்டுத் தேரை இடம்விட்டு என்றே
விரைவாக்கி னானே அரசு -அரமாய்

முடிமேலே பாய்ந்தது வில்லம்பு, கோனுள்
முடியடி மூட அரசன் -முடிவெடுத்தும்

அம்பின் முனைத்தைத்தே தேவன் விழவைத்தார்
கொம்பும் உடைந்தது ஆங்குதான் -அம்புபோல்

தேரை விரைந்தோட்டி வந்தும் அரசனோ
வீரன் விடுஅம்பால் செத்திட, -தேரைக்

கழிவகற்ற நீர்குளஞ் செல்லவும் தேர்மேல்
வழிக்குருதி நாய்களும் நக்க -வழியாய்

எலியா உரைத்த இறைவன் நிலைச்சொல்
அலையும் தெருநாய்க் குடிக்கும் -கொலைக்குருதி

அச்சொல் விழாது நடந்தேறிப் போனது
அச்செய்கை, ஆழ்ந்தான் அரசு

இருவாக்கர் கலி 18

அகசியா நோய்பட்டு விழுந்து பாகால் சேபூப் இடம் கேட்க சொல்லுதலும் எலியா இடைமரித்து இறைவாக்கு சொல்லுதலும்



ஆகாப் இடத்தில் அகசியா மன்னனாகி
ஆகாபின் செய்கைகள் செய்துவந்தான் -வாகையோன்

மேல்வீட்டின் ஏணியின் கீழ்வீழ்ந்தான் வீழ்பட்டு
ஆல்யான் பிழைப்பேனோ கேள்மின்னே -வேல்சொல

பாகால் செபூப்சிலைக் கோவில் விரைந்துச்செல்
பாகால் செபூப்சொல்லைக் கேட்டுவாரும் -பாகால்

சிலைக்கோவில் சென்றனர் தூதர், எலியா
நிலைக்கர்த்தர் வாக்கைப் பகன்று -அலையாய்

இசுரேலில் இல்லை யிறையென்றோ பாகால்
திசைகேட்கப் விட்டான் சிலரை -இசுரேல்

இறைவன் உரைக்கேள்மின் விட்டதால் சாவான்
இறைவாக்கைச் சொன்னான் நிறைந்து -இறைச்சொல்லின்

பின்சென்றார் வீரர் இறைவாக்கைக் கேட்டவர்
பின்யேனோ வந்தீர் அரசனும் -பின்கேட்க

வந்துசொன்னச் சொல்லை அரசனிடம் சொன்னார்கள்
வந்தவன் யாரென்று சொல்லும்நீர் -அந்தாள்

பெயரறியோம் கோவே மயிராடை மேலே
அயரணி வார்க்கச்சை, இவ்வாண் -பெயரறிவேன்

நேராண் எலியாவே சொன்னான் உரையுமக்கு
நேராண் வரச்சொல் அரண்

இருவாக்கர் கலி 19

இருதலைவர் நூறு காலாட்களை விண்தீ அழிக்க எலியா கட்டளை யிடுதல்



தலைவன்சேர் ஐம்பது வீரர் மலைமேல்
எலியா இடம்சேர்ந்து, கேட்டான் -தலைவன்

எலியா இறைமனிதா! சொன்னார் அரசன்
வலிவருவீர் எம்மோ டரண்சீர் -வலிய

இறைமனிதன் யானென்றால் இக்கணமே விண்ணின்
இறைதீ விழுந்துக் கருக்கும் -இறைதீ

விழுந்து அனைவரும் சாக அரசன்
அழைக்திட வேறு தலைவன் -அழைக்க

தலைவன்சேர் ஐம்பது வீரர் மலையில்
எலியா இடம்சேர்ந்துக் கேட்டான் -தலைவன்

எலியா இறைமனிதா மன்னர் விரைந்தே
வலிஅழைத்தார் வாரும் அரண்சீர் -வலிய

இறைமனிதன் யானென்றால் இக்கணமே விண்ணின்
இறைதீ விழுந்துக் கருக்கும் -இறைதீ

விழுந்து அனைவர் கருக அரசன்
அழைக்திட வேறு தலை

இருவாக்கர் கலி 20

மூன்றாம் தலைவன் பணிந்து உயிர்பிச்சை கேட்டலும் எலியா புறப்பட்டு அரண்மனை செல்லுதலும்



தலைவன்சேர் ஐம்பது வீரர் மலையில்
எலியா இடம்சேர்ந்துக் கேட்டான் -தலைவன்

எலியா இறைமனிதா எம்முயிர் உம்முன்
வலியிருப்ப, கேட்டான் பணிந்து -அலையாய்

இறைத்தீக் கருகி இறந்தார் சிறுவர்
கறைமனிதர்ப் போற்கோவே, காணா -இறைதூதன்

சொன்னான் எலியாவே செல்வாய்நீ, சொல்கேட்டுச்
சொன்னதும் சென்றனன் சீரவன் -மன்னன்

அரண்சென்று மன்னன் முகம்நோக்கிச் சொன்னான்
திருக்கர்த்தர் உள்ளப்போ வீரர் -விரைந்தே

தெருப்போகச் சொன்னீர் அலகையின் கோவில்
திருச்சொல் லிதுமரிப்பீர் நீரும் -திருவினார்ச்

சொல்படியே செத்தான் அரசன் விழுந்தவன்
சொல்லென்றும் போகாதே வீழ்ந்தென்னாள் -கல்லிலை,

சொல்லுருவர் தானே திருக்கர்த்தர் என்றுமே
சொல்லுருவர் சொல்லே நிலைத்து

இருவாக்கர் கலி 21

கர்த்தர் எலியாவை விண்ணில் எடுத்துக் கொள்ளும் நாளில் நடந்தேறிய நிகழ்வுகள்



இருநீ எலிசா, திருஎன்னை பெத்தேல்
வரச்சொன்னார், கேட்டோன், திருவே -திருப்பெயரால்

நானும்மை விட்டு விலகாத் தரித்திருப்பேன்
நானே, எலிசா உரைத்திட்டான் -மேனாளாம்

பெத்தேலின் வாக்கர் உரைத்தார் வலிவந்து
அத்தார் திருவும் எடுப்பாரே -சித்தம்

அறிவீர் எலிசாவே என்றங்கு வாக்கை
அறிவிக்க, பேசா திரும்நீர் -சிறுவா

இருநீ எலிசா, திருவும் எரிகோ
வரச்சொன்னார், கேட்டோன்: திருவே -திருப்பெயரால்

நானும்மை விட்டு விலகாத் தரித்திருப்பேன்
கோனே உரைத்தான் சிறந்துநான் -மேனார்

எரிகோவின் வாக்கர் உரைத்தனர் வந்து
திருவும் எடுப்பார் எலியா; -திருச்சொல்

அறிவீர் எலிசாவே என்றங்கு வாக்கை
அறிவேன்யான் பேசா திரும்நீர் -சிறூவா

இருநீ எலிசா திருவென்னை யோர்தான்
வரச்சொன்னார், கேட்டோன்: திருவே -திருப்பெயரால்

நானும்மை விட்டு விலகாத் தரித்திருப்பேன்
கோனே உரைத்தான் சிறந்துநான் -மேனார்

இறைவாக்கர் ஐம்பது பின்சென்று பார்க்க
இறைவாக்கன் நேர்எலியா நின்று -அறுகரையில்

தோளின்மேல் துண்டெடுத்து யோர்தானைத் தொட்டதும்
கோளாறு விட்டுப் பிரிந்தனர் -ஆளவர்

அக்கரைப் பட்டதும் நேராண் எலியாவும்
அக்கரைநான் செல்முன் எதுவேண்டும் -இக்கரையில்

உம்வலிமை ஈராக வேண்டுமே உம்மாவி
எம்மேலே என்றான் சிறந்தெனக்கு -எம்மான்

அரிது அரிது இறைவாக்கின் ஆவி
அரிதான தொன்றை விழைக்கேள் -அரியணை

நோக்கி விரையுமென்னைக் கண்டால் வருமேநன்
வாக்கிறைவன் ஆவி இருமடங்காய் -ஆக்கமாய்

தீத்தேரும் தீப்பரியும் ஈர்பிரிக்க ஆங்கேதான்
ஆத்தோரம் சூழ்வளி மேல்செல்ல -மேத்தவனாய்

காத்திருந்துப் பார்த்தான் எலிசாவும், கோன்செல்ல
மேத்தவனின் வீழ்ந்தமேல் துண்டு

இருவாக்கர் கலி 22

எலிசா படலம்



எலியாவின் ஆவி எலிசாமேல் உள்ளதை இறைவாக்கர் காணுதல்



கரையில் எலியாவின் வீழ்த்துண்டைக் கைமேல்:
வரையாளும் கர்த்தா, திருவும் -விரைவாக்கு

எங்கே? உரைத்தவன் ஓங்கி அடித்ததும்
அங்கே பிரிந்தது ஆறது -மங்காதே

மேனின்ற வாக்கர் எலியாவின் ஆவியிவன்
மேனிவீழ்ச் சேதி அறிந்தவர்கள் -மேனிவலி

எம்மிடம் ஐம்பது வல்லோர் உளராமே
உம்மாண்டார்த் தேடுவோம் யாம்தானே -அம்மானே

வேண்டாம் எலியா விரைந்தேறிப் போனாரே
வீண்செயல் தேடுதல் என்றதும் -வீண்செயலா

ஆண்டவர் ஆவியானோர் ஆண்டாரைக் குன்றேதில்
காண்விட்டுப் போயிருப்பா ரோஆவி? -காண்கிலை

வேண்டாமே வேண்டாமே சொல்கேட்கா வாக்கரை
வீண்செயல் தேடுதல் என்றாலும் -வீண்சொல்லால்

என்னைநீர் வாட்டுகின்றீர், சொல்லி அனுப்பும்நீர்
இன்சொல்லோன் தேடிடுவீர் நன்றென -அன்றியும்

மூன்றாம்நாள் வல்லோர் இடம்வந்தார் கையில்லா
ஏன்நானும் சொன்னப்போ கேட்காதே -மூன்றுநாள்

தேடிப்பின் வந்தீரோ சொல்வீரே கண்டீரோ
தேடிய வாக்குரைப் போன்?

இருவாக்கர் கலி 23

எலிசா எரிகோவில் கரிப்பு நீரை உப்புபோட்டு சீராக்குதல்



எரிகோவில் வாக்கன் இருக்க விரைவாய்
இரும்மனிதர் வந்தார் இறையாண் -திருவின்

மனிதா விரைந்துநீர் வாரும் நகர்க்குள்
மனிதர் தவிக்கிறோம் ஏனென் -இனிதே

திருமண் குடியிருக்க நன்றே அழிநீர்க்
கரிப்பாலே வீணாய் நிலமும் -பெருமான்

புதுக்குடம் மண்பானைக் கொண்டுவாரும் என்கை
அதிலே நிறைஉப்புத் தாரும் -இதுகாரும்

கெட்டநீர் இன்றே திருவால் சுவைநீராய்
இட்டிந்த உப்பினால் சீராகும் -மட்டிலாது

சீராகி நீரினது ஊற்றது, நன்னீரைச்
சீராகத் தந்து நிலம்செழிக்க -நேராண்

எலிசாவின் முன்முதல் செய்கை நலமாய்
அலைநீரைச் செய்தான் சிறப்பு

இருவாக்கர் கலி 24

சிறுவர் இகழ எலிசா சபித்தலும் சிறுவர் பீறுண்டு போகுதலும்



வழிசென்றான் பெத்தேல் வழியில் சிறுவர்
வழியில் விளையாடிக் கொண்டு -வழிசென்ற

வாக்கன் தனைப்பார்க்க மண்டைமேல் ஞாவொளி
வாக்கன் வழுக்கையது வீசிட -ஆக்கமிலா

சிற்றார் மலைத்து சிறுவர்கள் ஏளனமாய்
அற்றே வழுக்கை தலையோனே -சற்றோ

வழுக்கை; மிகுதி ஒளியே எனவே
வழிசெல் வழுத்தலையோய் ஏறு -வழுக்கைத்

தலையோனோ சொன்னான் கெடுமொழி ஆங்கே
தலையை இகழ்சிறுவர் மேலாய் -தலையால்

இருகரடி வந்து இகழ்ந்த சிறுவர்
கரத்தாலே பீறிற்ற தாங்கே -இருகரடி,

சாகடித்த எண்ணிக்கை நாற்பத் திரண்டாமே
நோகுஞ் செயலே இகழ்

இருவாக்கர் கலி 25

மூன்று அரசர் போர்சென்று நீரின்றி தவித்தலும் கர்த்தர் நீரைக் கொடுத்தலும்



இசுரவேல் மன்னன் தகையூதா மன்னன்
இசுரவேல் வன்னெதிர் மோவாப் -திசைதன்னில்

போர்செய்ய ஏதோம் வழியே வழிசென்றார்,
போர்புரிய மூவர் இணைந்தனர் -போர்போர்போர்

ஏதோம் வனத்திலே ஏறிச் செலவங்கு
ஏதோம் வனத்திலே நீரின்றி -ஏதோம்

அரசனும் யூதா அரசனும் சேர்த்தே
அரசர்மூன் றைவிடுத்தோ சாக? -அரசே

எவருளர் இங்கே இறைவாக்கைக் கேட்க
எவருளர்ப் பூவின் திருவாம் -அவர்சொல்லைக்

கேட்டு எவரறி விப்பார் இறைவாக்கர்
கேட்டவர் சொன்னார் நிறைமகன் -நாட்டான்

இருக்கின்றான் சாப்பாத்தின் மைந்தன் எலிசா,
திருஎலியா வாக்கனுக்கு நீரைக் -கரம்வார்த்த

வாக்கனவன் என்கேட்டுச் சென்றான் எலிசாவின்
வாக்கை அறிய அரசர்கள் -வாக்கனோ

வந்ததும் ஏன்வந்தீர், செல்லும் அலகையோர்
வந்தவரில் யூதா அரசிருக்க -வந்தோரை

நின்றே விழைப்பேச்சுப் பேசுகின்றேன் கேட்டுணரும்
வன்செய்கை யானும் விடுத்திங்கு -அன்னவன்

யாழ்மீட்டும் ஓராள் வரச்சொல் விரைந்திங்கு;
யாழ்மீட்ட, கர்த்தரின் கைமேலே -ஆழ்வர

வேழ்மகன் சொன்னான் மொழியங்கே கேளீரோ
வாழ்வேள் பகன்ற மொழியது -தாழ்மண்

மழைவாரா விண்ணில் முகில்காற்றும் காணீர்
விழைநீர் வருமே நிலத்தில் -வழியெங்கும்

ஆழ்வாய்க்கால் வெட்டும் நிலம்நிறையும் நன்னீரால்
வாழ்வளிப்பார் கர்த்தர் சிறந்திங்கு -தாழ்மண்ணில்

சேனையின் தேவன் சிறுசெயல் காண்பீர்நீர்,
சேனையை வீழ்த்துவீர் மூவரும் -சேனையின்

தேவனின் செய்கை நிலமாள்வோர், காண்பீரே
தேவன்சொல் சொன்னான் நிறைமகன் -மேதவன்சொல்

ஏதோம் வழியாக நீர்விரைந்து வந்திட
ஏதேது நீரில்லை ஆதலால் -வாதையால்

சாவோம் எனச்சொன்ன மன்னர்கள் கண்காண,
தேவைக் குடிநீரும் வந்து

இருவாக்கர் கலி 26

நீரின் நிறம்கண்டு மோவாபியர் சேனை ஏமாந்து விழுதல், மோவாய் அரசன் போர்நிறுத்த தன்பிள்ளை பலி கொடுத்தல்



அரண்சுற்றி ஆழகழி வெட்டவங்கு நீரும்
அரண்சுற்றிச் சூழ்ந்திடக் காலை -அரண்வெளி

நீரின்மேல் ஞாயிறு மேல்வர, காணெதிரி
நீரை உதிர நிறமென -பாரீரோ

தம்தமரைத் தானே விழவெட்டிச் சாய்த்தாரோ
அம்மா! குருதியோ காண்பீரே -அம்மரு

மோவா பியர்வந்தார் கொள்ளை யிடவங்கே
போவோம் நகர வளம்கொள்ளை -மோவாப்

குடிமக்கள் நீர்நிறம் ஏமாந்தே, போனார்க்
குடியூரைக் கொள்ளை யிடவே -அடடா

குடியூர் அருகே இருக்கும் இசுரேல்
குடிமக்கள் கண்டு அடடா! -குடிமக்கள்

இன்னும் இருக்கின்றார் போனோம்யாம் ஏமாந்து,
நன்னீர் உதிர நிறம்கண்டு -அன்றோ

எதிரி இனத்தார் எதிர்ப்பார்க்காப் போது
எதிரி முறிந்தோட வெட்டி -எதிரியின்

நாட்டில் இவர்தூர்த்துப் போட்டார் நிலபுலம்
நாட்டில் அடைத்தார் குடிகளை -மேட்டிலே

மோவாப் அரசன் விரைப்போரைக் கண்டவன்
மேவி முதலாண் வழிப்பிள்ளை -ஆங்கே

பலியிட்டான் மன்னன், அதனால் கடுமை
வலிவீழ்ந் ததேநாட்டார் மேல்

இருவாக்கர் கலி 27

ஒருகுடம் எண்ணெய் ஊற்றாகி பலகுடம் நிறைத்த இறைவாக்கு



முன்வாழ்ந்த வாக்கன் மனைவி நிறைவாக்கன்
முன்வந்தாள் முன்னுரைப்போன் கேளாயோ -முன்வாக்கன்

என்கணவன் செத்தான், கடனிற் கிருபிள்ளை
என்கை கடன்திருப்பு என்றனன் -என்னால்

கடன்பட்ட நெஞ்சம் கடன்கொடுக்க ஏலா,
கடன்காரன் வந்தான் கடன்கேள் -இடைக்கருப்

பிள்ளை அடிமையாய், பிள்ளையின் தாய்மனம்
கொள்ளி யெரிந்ததே ஆங்குதான் -எள்ளா

நிலைக்கர்த்தர் முன்னே இறைவாக்கன் அஞ்சி
நிலைத்திருந்தான் நீரறிவீர், கோனே! -நிலையிது

நீக்க வழிசொல்லும் நேரில் நிலையிது
ஆக்க மிலையே கடனது -ஆக்கசீராள்

என்ன இருக்கிறது உன்வீட்டுள் என்கேட்டான்
என்ன இருக்குமாம் ஏழைநான் -முன்னர்

விதைப்பிழிந்த எண்ணெய் ஒருகுடம் மட்டும்
அதுதவிர ஒன்றும் இலையே -அதுபோதும்

வீட்டுள்ளே சேர்வாய் இருமக்கள் சேர்ந்தங்கு
வீட்டுள்ளே போகும்முன் சுற்றாரின் -வீட்டிற்குச்

சென்று, கலங்குடம் வாங்கு அனைவரின்
நன்றாய் அடைவாய்நீ வீடுசேர்வாய் -அன்றியும்

வீட்டுள்ளே சென்றதும் ஈர்மக்கள் சேர்ந்தங்கு
வீட்டறையில் எண்ணெய்க் குடம்கொட்டு -நாட்டில்

இதுவரை காணாச் செயல்காண்பீர் மூவர்
இதைசெய்வீர் இன்று சிறந்து -இதைக்கேள்

அதுசெய்யப் போனார், திருவின்சொல் கேட்டு
அதுவரை காணாச் செயலை -விதங்கண்டார்

மூவர் செயல்கண்டு செய்தார் கலமெல்லாம்
மூவர் நிறைத்தாரெண் ணெய்தனை -ஏவி

நிறைகலங்கள் ஆகி நிறைந்தவுடன் தாயும்
நிறைத்திட வேறேதும் உண்டோ -நிறைத்தோமே

எல்லாக் கலங்குடம் இங்கே சிறிதளவும்
இல்லை கலம்குடம் தாயவளே -இல்லத்தில்

இல்லை கலமெனும் சொல்வந்த போதேதான்
இல்லத்தில் வந்த குடநிரப்பு -அல்லல்தீர்

எண்ணெய் வரத்தும் நிறைநின்று போனது
எண்ணெய்க் குடம்வீ டெலாம்நிறை -எண்ணெய்

நிறைத்தவள் சென்றாள் நிறைவாக்கன் வீடு
நிறைந்ததே வீட்டில் நிறைய -நிறையக்

கலம்குடம், வந்ததெண்ணெய், கோனே! சிரித்த
குலத்தாளைக் கண்டான் நிறைந்து -குலப்பெண்

குடங்களை நீசென்று விற்றிடுவாய், பெண்ணே,
குடம்நிறை எண்ணெய்க் கலங்கள், -குடம்விற்றக்

காசில் கடன்தனை நீகொடுத்து மீதமிரு
காசிலே வாழ்ந்திடு வாய்

இருவாக்கர் கலி 28

சூனேமியாள் எலிசாவிற்கு மேலறை கட்டி கொடுத்தலும், அவளுக்கு பிள்ளை பேறு கொடுக்க இறைவாக்கு கொடுத்தலும்



சூனேம் திருவூரில் வாக்கன் தரித்திருக்க,
சூனேம் கணவானின் நேர்மனையாள், -ஆனோம்

பலவளம் நாம்பெற்றோம் கர்த்தர் அருளால்
நிலைசெய்வோம் மேலே அறையே -நிலமிது

சூனேம் திருவூரில் வாக்கன் தரிக்கவரின்
சூனேம் கணவானின் நேர்மனையாள் -சூனேம்

கணம்பொருந்து நல்லாளின் மேலறைத் தன்னில்
திணையமர்வான் நேராண் அயர்ந்து -கணவாண்

பலகாலம் சென்றப்பின் நேராண் நிறைந்து,
பலநேரம் வந்து தரித்தோம் -கலைமகள்

வேண்டும் வரமென்ன கேட்க, வளவர்யாம்
வேண்டுவ தொன்றில்லை கோமானே -ஆண்டவனின்

கேயாசி கைவேலைச் செய்வோன் திருவிற்கு,
கேயாசி சொன்னான் குணவதிக்குத் -தூயவர்

செய்ய ஒருசெயல் உண்டே, கருப்பிள்ளை
அய்யா, திருவே மகன்வேண்டும் -செய்யில்

ஒருபிள்ளை ஏற்படும் வேளையில் ஒன்றை,
திருக்கர்த்தர் தந்திடுவார் பெண்ணே -திருச்சொல்

நிறைவேற, பெண்ணும் கருவிலே பெற்றாள்
நிறையாண் மகவைச் சிறந்து -நிறைந்தவள்

தன்மகனைப் போற்றி வளர்த்தனள் பூப்போலே
நன்றாய் மகனும் வளர்ந்தனன் -மின்ன,

திருக்கர்த்தர் தந்தார் பதினாறாம் செல்வம்
திருப்பெற்றாள் பெண்ணும் நிறைந்து

இருவாக்கர் கலி 29

சூனேமியாளின் பிள்ளை மரித்தலும், எலிசாவை அவள் பார்க்க வருதல்.



களத்திலே தந்தைப்பால் சென்றவன் ஓர்நாள்
களத்தில் தலைநோவச் சேயோன் -களத்திலே

தந்தை விடுமிவனின் தாய்மடியில் இன்னுறங்க
அந்நோவால் பிள்ளை மரித்திட -அந்தவீட்டு

வைத்தனள் மேலறையில் பிள்ளையின் இன்னுடல்
வைத்தவள் விட்டாள் கணவனே -மேத்தகு

வாக்கன் இடம்போய் வரக்கழுதை வேலையாள்
ஆக்கம் தருவீர் விரைந்துநீர் -ஏக்கமேன்

ஏனோ விரைவாகப் போகிறாய் நாளிது
வானிறை ஓய்வுநாள் அல்லவே -வானில்

மதியில்லா வேளையும் அல்லவே ஏனோ
இதுவகை நீயேன் விரைவோ? -அதுசீர்

விரைந்தனுப்பும் உம்மோடு பேச முடியா
விரைந்தவள் சென்றனள் கர்மேல் -வரையது

வாக்கன் நிலைத்திருக்கும் மேமலைச் சென்றனள்
வாக்கன் வரக்கண்டான் பெண்ணாளை -வாக்கனோ

கேயாசி செல்முன்னே சூனேம் மனையாள்காண்
கேயாசி சென்றான் நலம்கேட்க, -கேயாசி

ஒன்றுமில்லை வந்தேன் இறைவாக்கன் காணவே
இன்றென்று கூறினாள் பெண்ணவள் -அன்றவள்

வந்தவள் பற்றினாள் வீழ்ந்தே கழலடி
வந்தனன் வேலை, கழல்விலக்க -இந்நாள்

விலக்காதே ஆழ்துயரம் உள்கொண்டோள் தன்னே
இலைமறைத்தார் கர்த்தர் அறியா -திலையகத்தே

நானோ கருப்பிள்ளைக் கேட்டேன் இறைவாக்கு
ஏனோ இதுவகை, பிள்ளையைத் -தானாய்

கொடுத்து விரைவாய் எடுத்தாரேன் கர்த்தர்
அடைநெஞ்சம் கொண்டாள் அழுது

இருவாக்கர் கலி 30

எலிசா சூநேமியாளின் மகனை உயிர்ப்பித்தல்



கேயாசி என்சொல்கேள் உன்னிடைக் கட்டிச்சேர்,
கேயாசி சென்றிடுவாய் என்கோலை -வேயாளும்

சென்றான் நிலத்தில் விரைந்தோடி மேல்வைக்க
நின்றாள் கழல்பற்றிப் பெண்ணவள் -இன்றேசீர்

நீர்வாரும் இல்லென்றால் நான்போகேன் என்றவள்
நேர்மனிதன் வந்திட வேழாளும் -சீர்ப்பொருந்த

பார்பெண்ணின் நெஞ்சம் பிழிந்தெடுத்த வன்துயரைப்
பார்த்தவன் சென்றான் வழிமேலே -நேர்வேலை

கேயாசி சென்றவன் பாதிவழி வந்தானே
போயே உமதின் திருக்கோலை, -கேயாசி

நான்வைக்க, பிள்ளை உயிர்க்காக் கிடந்தனன்
ஏன்செத்தோன் இங்கே உயிர்க்கவில்லை- யேன்நேரே

மேலறை வந்தவன் மன்றாட்டுச் செய்தனன்
மேலறையின் உள்ளேசென் றீர்தனித்து -வேலையாள்

உள்ளிருக்கச் செய்து மரித்தவன் மேல்படுக்க
உள்வெப்பம் மூண்டதைக் கண்டனன் -மெள்ளவன்

மேலறை உள்ளே உலாவி இறைக்கேட்க
மேலறையின் பிள்ளையின் மேல்படுக்க -வேலையாள்

கண்காண அம்மகன் ஏழுமுறை தும்மினான்
கண்திறந்தோன் பார்த்தான் மகனவன் -மண்ணிலே

பெண்ணை அழைத்திடுவாய், பெண்கை மகன்கொடுப்போம்
பெண்கையில் பிள்ளையைத் தந்திட்டான் -பெண்ணே

உயிரோடு பிள்ளைப் பிழைத்திருக்கான் பாராய்
உயிர்தந்தார் கர்த்தர் இறைவன் -உயராண்

கழல்பற்றி வீழ்ந்தாள் கணவான் மனைவி
விழலெந்தன் வாழ்க்கை, ஒளியாய்த் -தழல்போலப்

பிள்ளைக் கொடுத்தாரே கர்த்தர் இருப்பேனே
உள்ளவரை நன்றியாய் நான்

இருவாக்கர் கலி 31

சாவுக்கு ஏதுவான கூழை மாவு கொட்டி எலிசா சீர்செய்தல்



தேசத்தில் பஞ்சம் கடுமையாக, தேசத்தில்
பேசும் உரைவாக்கர்ப் பிள்ளைகள் -தேசத்தில்

உண்ணவே காய்ச்சிடு கூழ்என்றான் வாக்குரைப்போன்
உண்ணவே கூழ்காய்ச் சினர்நேரார் -உண்ண

ஒருவனங்கு சென்றான் திருச்சொல் படியே
விரைந்துநான் கூழ்செய்யக் காய்கள் -தருவேன்

மடையரின் கையில் பறித்தவன் தந்தான்
மடைச்சமைக்கக் கொம்மட்டிப் பேயாம் -மடையன்

கொடுத்தது பேய்காய், களங்காய் அறியா,
கொடுத்ததைப் போட்டனர் கூழில்; -கொடுமை,

கசப்பாகக் கூழ்மாற, சொன்னார்: எலிசா
கசப்பினால் பானையுள் சாவு -கசப்போ

திருவோ ஒருபிடி மாவினைத் தாரும்
திருவந்த மாகூழில் சேர்த்தான் -திருப்போட்ட

மாவால் கசப்பு விடுத்து, பனிவெம்போல்
சாவும் விலகிய தாங்கு

இருவாக்கர் கலி 32

சிலஅப்பங்கள் கொண்டு பலர்பசி ஆற்றுதல்



சிலநாட்கள் போனப்பின் சிற்றார்ப் புசிக்கச்
சிலவப்பம் தந்தான் ஒருவன் -சிலைபோல

நில்லா, பசிபோக்க மக்கள்முன் வைப்பீரே
கல்மன வேலைக் கலங்கிட -நல்லவரே

நூறுபேர் இங்கிருக்க அப்பமோ மிச்சிறிது
நூறுபேர் முன்வைப்ப தெங்ஙனம் -சேறை

அடிப்பரே மக்கள் குறைவானால் என்றான்
அடியஞ்சி வேலை அயர்ந்து -அடியாரின்

முன்வை உணவை மனிதா இதனைநீ
முன்னவர் உண்டப்பின் மீதமிரும் -என்றான்

திருவாக்கன், சொல்படியே வைத்தப்பம் மீதம்,
திருச்சொல் உரையும் நிறைந்து -திருவவன்

சீரார் மகனவர் பூவரும் போழ்திங்கு
சீராய் உணவுதர முன்னிழலாம் -சீராண்

எலிசா பழையகால பூமியில், சீரார்
வலியார் இயேசுவிற்கு முன்

இருவாக்கர் கலி 33

நாகமானின் தொழுநோய் குணமாக்க எலிசாவிடம் போக இசுரேலிய அடிமைப் பெண் சொல்லுதல்.



சீரியா நாட்டவர் போர்சென்று நேர்நாட்டின்
சீரிளம் பெண்ணைக் கொணர்ந்தனர் -சீரியா

நாட்டின் தலைவீரன் நாகமான் பட்டானே
நாட்கணக்காய் நோயாம் தொழுநோயாம் -ஆட்கள்

தலைவீரன் வீட்டில் தலைவியும் ஆங்கே
தலைவன் தவிநோய்த் தவிர்க்கா -நிலையில்

தலைவீரர்ச் செய்சீர் மருந்தில் தவிக்க,
தலைவியும் போனாள் தளர்ந்து -தலைவன்

பலபோர்கள் வெற்றிச் சிறந்தாலும் நோயால்
சிலபேரோ என்கணவன் பேரை -வலிநோய்

அலையெனக் கூறும் நிலையிதும் போகச்
சிலைபல வேண்டினேன் நான்தான் -அலர்ந்த

முகவாட்டம் கண்டாள் இசுரேல் இளம்பெண்
முகவாட்டம் ஏனோ தலைவி -முகங்கண்டேன்

வன்னாய் சினமில்லை, என்ன துயரோசொல்
என்னிடம் சொன்னாள் குறைமகள் -என்னின்

திருநாட்டில் உள்ளார் இறைவாக்கன் செல்வீர்,
திருநாட்டில் சீர்செய்த் திருக்காண், -தரித்தாணைச்

செல்லப் பகன்றிடும் நல்லாளே, விட்டாலே
அல்ல வழியேதும் காண்பீரோ -நல்லாள்

தலைவன் வருகையை நோக்கித் தலைவி,
தலையில் மலர்ச்சூடி நின்றாள்; -தலைவன்

தலைவி முகம்வாட்டம் போன நிலைக்காண்
தலைவியே என்ன சிறப்பு -தலைவி

மலர்நாணி மங்கை மடிவிழுந்தாள் ஆங்கே
மலர்நாற்றம் ஆகாத் தொழுநோய் -மலரேனோ

கேட்க, தலைவி: தலைவரே நற்செய்தி,
நாட்டவள் சொன்னாள் நவின்றனள் -நாட்டவள்

சேதிக்கேள் நோயாண் நிதமெனக்கு வாதைகள்
சாதிச் சிலைவழிப் பட்டோரால் -வேதனைத்

தீர்க்க முடியாது போனேன் கசந்தேநான்
தீர்க்க வழியுண்டோ சொல்மகளே -தீர்க்க

திருநாட்டில் உள்ளார் இறைவாக்கன் காண,
திருநாடுச் செல்ல, திருவே, -தரித்தவனைச்

செல்விடுவீர் நீரே இசுரேல் சமாரியா,
சொல்படி செய்வேன் சிறந்து

இருவாக்கர் கலி 34

நாகமான் எலிசாவைக் காணச் செல்லுதல்



திருவைத் தலைவன் திருக்காண மன்னா,
திருவேநான் செல்வேன்! அரசன்: -ஒருகடிதம்

கொண்டுப்போம் சேனைத் தலைவா, திருவும்மைத்
தண்டும்போம் நாடு தொடர்ந்திடும் -அண்டை

இசுரேல் அரசன் படித்தான் கடிதம்
இசுரேல் அரசன் திகைத்தான் -வசையாய்ச்

சிரியன் கடிதம் கொடுத்தான் வறுநோய்ச்
சரிசெய்ய யானோ இறைவன்? -சரியிலை,

மேலாடை மன்னன் கிழித்து, திசையாளும்
கோலன்யான் வாக்கால் சரிசெய்யக் -கோலென்னால்

கூடுமோ? என்னை இகழ்ந்தே அரசிரியன்
நாடுகிறான் வன்போருக் காய்வன்னான் -நாடரசு

மேலாடைத் தன்மேல் கிழித்தான் அலையாளும்
கோலோ எனக்கேள் இறைவாக்கன் -கோலே

விடுமவனை என்பால், இறைவாக்கன் உண்டென்
கொடும்செய்தி மன்னன் செவிக்கு -அடைந்து

வழிவந்தான் வாக்கன் மனைக்குத் தலைவன்
வழிவந்து நிற்க, திருவும் -கழிவிறக்கம்

கொண்டான். இறைவாக்கன்: செய்வாய் முறையேழு
தண்ணீரில் யோர்தான் முழுக்கு

இருவாக்கர் கலி 35

நாகமான் எலிசாவின் சொல்லைக் கேட்டு சினம்கொள அவனுடைய அடியாள் செய்யச் சொல்ல, செய்து குணமாகுதல்



சொல்கேள் சினமாய் வெளிவந்தான் நாகமான்
சொல்கேள் முழுக தமசுகு -சொல்லாறீர்

இல்லென் இசுரேல் வரைவந்தோம், கைத்தடவி
வல்நோயை நீக்கா விடுத்தனரே -அல்லலவன்

சொல்கேட்ட வேலைச் சிறுவனோ, சொல்கேளும்
சொல்லிப் பெரிய செயலென்றால் -சொல்கேட்பீர்

அன்றோ, இதுவெறும் நீர்முழுக்கே செய்யும்நீர்,
பின்பார்ப்போம் என்றான் சிறந்தங்கு -நன்றே

சரிபோவோம் வாபின்னே யோர்தான் குளிக்கச்
சரியானான் நாகமான் நோயைச் -சரிசெய்

எலிசா மனைவந் தினிமேல் திருவே
பலிசெய்வேன் கர்த்தர் இறைக்கே -பலிதர

வேறு இறைவன் உலகில் இலையென்று
வேறூர் மகன்சொன்னான் கர்த்தரே -கூறினான்

நல்லிறைவன் என்றே கொடுநோயை விட்டவன்கேள்
எல்லா வளம்கொடுப்பேன் நான்சீரே -நல்லாண்

வளம்வேண்டாம் போம்நீர் அமைதியாய் என்றே
வளம்கொடுத்த சீமானைப் போச்சொல், -வளவனோ

மண்கொண்டு செல்வேன் பலிபீடம் செய்வதற்கு
மண்கரமீர், கேட்டான் கழுதைமேல் -மண்ணில்

வழுவெந்தன் ஓர்செயலே கர்த்தர் பொருட்டாய்
வழுவாக்கா தேயிருப்பர் என்றான் -வழுமன்னன்

ரிம்மோன் பணிந்தாலே கைலாகுச் செய்திட
ரிம்மோன் பணிவேன் குறை

இருவாக்கர் கலி 36

கேயாசி பின்சென்று வெள்ளியும் ஆடையும் வாங்குதல், கேயாசியை நாகமான் தொழுநோய் பற்றுதல்



அமைதியாய்ச் செல்மகனே என்றே திருவும்
அமைச்சொல்லச் சென்றான் தலைவன் -சுமைசெல்லும்

தூரம் கடிசென்றான் கேயாசி, கேட்டனன்
தாரும் சிறிது வளம்தனை -பாருமே

வாக்கரின் பிள்ளை இருவராய் வந்தனர்
வாக்கரின் பிள்ளைகள் மேலாடை -வாக்கரிலை,

பொய்சொன்னான் கேயாசி ஆங்கே, தலைவனோ
மெய்யென நம்பிக் கொடுத்தனன் -அய்யய்யோ

வாக்கன் மனைவரையில் தூக்கிச் செலகழுதை
நோக்கன் வழிவிட்டான் வந்தோரை -வாக்கன்

மனைமுன்னே நீர்செல்வீர் நான்கொண்டு செல்வேன்
மனைவெள்ளி என்றான் கறையோன் -மனையிரும்

வாக்கன் மறைத்த செயலிழிவு, கேயாசி
வாக்கனின் முன்வர, கேட்டனன் -வாக்கனும்

எங்கேசொல் சென்றாய்க் கறையே எனக்கேட்க
இங்கே தரித்திருந்தேன், பொய்சொல -எங்கேநீ

ஓடிச்சென் றுன்னைத் தலைவனும் தேரின்று
ஓடி வரும்உன்னைக் காணிறங்க -ஓடிப்பின்

வந்த மனமெந்தன் கூட, இதுகாலம்
இந்த வளம்சேர்? வினவிட -அந்தாள்

வளம்கேட்டாய் ஆதல் குறைமனிதன் நோயும்
வளம்கேட்ட உன்மேல் வழியாய் -விளைவிதே

சொன்னதும் கேயாசி மேல்வந்த நோயாலே
பின்சென்றான் நோயாள் விடுத்து

இருவாக்கர் கலி 37

கோடரியை எலிசா நீரில் மிதக்க வைத்தல்



குடியூர் நெருக்கம் எனவே திருவே
குடியிருக்க யோர்தானில் போவோம் -குடியிருக்க

மேல்தளம் நீட்புற் றரிப்போம் எனக்கூற,
சால்சொன்னான் போம்நீர் விரைந்தங்கு -சால்பவரே

வாரும்நீர் எம்மோடு வந்தால் நலமாமே
வாருமென் சொல்கேட்டுச் சென்றானே -சேரிடம்

சென்றங்கு விழ்மரம் வெட்ட ஒருபிள்ளை
அன்றிழந்தான் கூர்கோ டரிதனை -மன்றாடி,

ஐயகோ என்செய்வேன் வாங்கினேன் நான்கடனாய்
ஐயகோ என்குரல்கேள் வந்தனன் -ஐயா

அதுயெந்தன் கோடரி யன்றே அழுதோன்
அதுவிழுந்த அவ்விடம் சொல்நேர் -அதுவிடம்

காண்பித்தான் பிள்ளை, ஒருசிறுக் கொம்புவெட்டிக்
காண்பித்த நீரிடம் போடவும் -காண்வியந்தார்

கொம்பின்மேல் எஃகுக்கூர்க் கோடரி வந்ததே
அம்புபோல் நீரில் மிதந்தங்கு -அம்மான்

எலிசா பிடியுந்தன் கோடரி என்றே
எலிசா புரிந்தான் வியச்செய் -எலிசா

இறைவாக்கன் செய்தது போலே இசுரேல்
நிறையில்லை மெய்யே இறை

இருவாக்கர் கலி 38

சீரிய மன்னனின் போர் ஆலோசனைகளை எலிசா இறைவாக்கு உரைத்தலும் அவன் இராணுவம் விட்டு பிடிக்க முனைதலும்



சீரிய மன்னன் பலமுறை போர்புரியச்
சீரிய வீரர் அனுப்பிட, -சீரியர்

போர்செய்ய வந்திடுவர் என்றே இறைவாக்கன்
போர்செல்ல ஆயத்தம் செய்தனன் -போர்வீரர்

கள்ளமாய்ச் சென்று அவர்திகைக்கச் செய்தாலே
அள்ளி வருவோம் வளத்தைநாம், -அள்ளவிடாக்

காத்தனர் நாட்டவர் கண்டதும், போர்குறித்து
வேத்தரசன் சொன்னது யாரிங்கே? -மேத்தாண்

படையில் சிறுவன் ஒருவன் பகன்றான்
கொடைநீர் அறைபேசும் சொல்லை -அடடா

இறைவாக்கன் சொல்வான் செவிகேட் டதுபோல்
இறையனோ போய்பிடிப்போம் நேரே -இறைவாக்கன்

தோத்தானில் வாழ்ந்தனன் தோத்தானைச் சுற்றியே
மேத்தாண் இராணுவம் வந்திட -மேத்தாண்

பிடிக்க இரவில் வளைந்திட மேத்தார்
அடியவனின் வேலையும் கண்டான் -அடியனோ

மேத்தாண் திருவே இரவில் வளைந்தாரே
மேத்தாண் திருவேயாம் என்செய்வோம் -மேத்தாண்

அவர்பால் இருப்போர் விடவும் நமதின்
தவவீரர் மிக்கே உளர்

இருவாக்கர் கலி 39

எலிசாவின் வேலையாளின் கண்களை கர்த்தர் திறந்தருள, தீப்பரி வீர்ர்கள் காணுதல்



அவர்பால் இருப்போர் விடவும் நமதின்
தவவீரர் மிக்கே உணர்வாய் -தவன்வேலை

காண்பதற்கு வேண்டினான் கண்கள் திறந்திட,
காண்பதற்குக் கண்கள் திறந்திட, -காண்வியன்

தீப்பரிமேல் லேகியான் பல்லா யிரம்மலையில்
தீப்போர்செய் வீரர்கள் சுற்றுவைத்து -மாப்பெருகி

வந்தவர் கண்மயங்கச் செய்யும் திருவேயென்
வந்தவர் கண்மயங்கிச் செய்தவன் -வந்தவர்

கைப்பிடித்துச் சென்றான் சமாரியா உள்நகரில்
கைப்பிடித்தோன் மன்னன் வினவவும் -கைப்போல்

திருவே இவர்தம்மை வெட்டிடு வோமோ
திருசொன்னான், வேண்டாம், களித்து -விருந்துண்ணச்

சொல்லி வழியனுப்பும் சீரியர் வன்சிறை
வல்லோய் இடாதீர் விடும்

இருவாக்கர் கலி 40

சீரியா முற்றிக்கைப் போட்டு சமாரியாவில் பஞ்சம்



பின்னொரு நாளிலே சீரியன் பேனதாத்
வன்போர்ப் புரிந்து வளம்கொள்ள -வன்னாய்

சமாரியா தேசம் இறங்கியே முற்ற,
சமாரியா பஞ்சத்தால் வாட -சமைக்க

பலவெள்ளிக் காசுகள் சிற்றினை விற்க,
பலரும் பசியாலே வாட, -சிலராய்ச்

சிறுத்தார்கள் நாட்டின் அரசன் வலமாய்
வறுமை நிலைக்கண் டழுது -அறனான்

நகரத்தின் எல்கைச் சுவர்மேல் நடக்க
நகரத்தின் எல்கைச் சுவர்மேல் -நகர்பெண்

நகரரசே எம்மையே காப்பாற்றும் என்சொல்
நகர்பெண்ணே என்வேண்டும் சொல்வாய் -இகமே

இதோகாண், இவளெந்தன் சோதரி, கேளீர்
இதேநாட்டில் ஓர்பிள்ளைப் பெற்றொம் -வதைபசி

மேலோங்க யாமோ உடன்படிக்கைச் செய்தோமே
வேளையில் பிள்ளை உணவாக -வேளை

புசித்தோம் கருப்பிள்ளை எந்தனின் நேற்று
புசிக்கத்தா உன்பிள்ளை என்றல் -புசிக்கத்

தராதே இவள்மறைத்தாள் கோனே, இதற்குத்
தருவீர்ச் சரிதீர்ப்பை இங்கு -திருவவன்

கேட்டவுடன் மன்னன்தன் மேலாடை வேள்கிழித்து,
கேட்டேனே எம்மக்கள் வன்னிலைக் -கேட்காத

வாக்கன் செவியோ, இதைக்கேட்டும் செய்யாத
வாக்கன் இருந்தென்ன வீண்

இருவாக்கர் கலி 41

எலிசாவை அழைத்தனுப்ப அரசன் ஆளை விட எலிசாவின் இறைவாக்கு



அரசன் ஒருவன் அனுப்பி அவைக்கவனை
கூட்டி அரசனின் தூதாக -நாட்டில்

வருமுன் அரசன் அனுப்பினான் தூதே,
எலிசா, வருவரெனப் பூட்டு -வலியோன்

கொலைசெய்யத் தீவிரிக்கும் மன்னனின் கால்கள்
அலைப்போலே வந்திடுதே வந்தால் -கொலைஞனாள்

பேசுபோதே வந்தனன் தூதுவன், வந்தவன்
பேசினான் மன்னனின் சொல்தனை -ஏசி

இதுசெயல் வன்னே இனியாமும் காக்க
இதுசெயல் வன்னாய் திருவும் -இதுசெய்ய

மன்னன்சொல் சொன்னான் அவைவந்த தூதுவன்
மன்னனும் வந்தான் தொடர்ந்தங்கு -மன்னா

திருக்கர்த்தர் சொல்கேள் அரசே நிலைக்கும்
திருவின்சொல், மாவின் ஒருக்கால் -வரும்நாளை

ஓர்காசே விற்கும் இருக்கால் தினைமாவும்
ஓர்காசே விற்கும் நிலை

இருவாக்கர் கலி 42

கர்த்தர் அன்றிரவு தந்த மீட்பு



விண்ணார் இரங்கியே விண்மதகுத் தன்னையே
விண்ணார் விடுத்தாலும் இச்செயல் -மண்ணில்

நிறைவாமோ நாளையில் கைலாகு மன்னன்
குறைக்கொடு சொன்னான் எதிர்த்து -குறையோனே

கண்காண்பாய், கண்கண்டும் பின்னே புசிக்காது
மண்ணாவாய் நீயும் எனப்பகன்றான் -விண்சொல்லை

மண்சொல்லாய் எண்ணியவன் செய்தவறை மன்னிக்கா
மண்ணாவாய் என்றான் திருச்சொன்னான் -மண்ணவர்

அன்றே தொழுநோய் அரித்தோர் விரைக்கூடி
என்னே கொடிபஞ்சம் போவோம்நாம் -இன்னாப்

படையில் சிறுவர்யாம், சென்று கொலையுண்
இடையில் கொலைப்பசியும் வாட்டு -நடையிலே

நான்குபேர்ச் சென்றனர் சீரியர் பாளையம்
நான்குபேர்ச் சென்றப்போ கண்டனர் -வான்ஓசை

வந்தே, இதோஇசுரேல் மன்னன் திசைமன்னர்
அந்தோ வரக்கூட்டி னானன்றோ? -வந்தவர்

கைகால் தெரியாது ஓட்டம் எடுத்தனர்
கைகால் தெரியாதே ஓடும்போ -கைகொண்டு

வந்த வளமெலாம் விட்டார் நிலத்திலே
அந்தோ சிரியரும் ஓடிட -அந்நாள்

வளம்கண்டு நால்வர் பதுக்குவோம் என்றே
வளம்கொண்டு நால்வர் பதுக்க -வளநிறை

உள்ளதே செய்கைத் தவறே இறைமுன்னே
உள்சென்று சொல்வோம் இதைநாமே -அள்ளி

மதிற்காவல் செய்வோனை ராக்காலம் கூவி
மதிற்காவல் செய்வோனே சென்றார் -மதியில்லாச்

சீரியர், இங்கே வளம்காண்பீர் வாரும்நீர்,
பேரா றுதலே இது

இருவாக்கர் கலி 43

எதிர் பேசிய அரச வேலைக்காரன் மிதியுண்டு சாகுதல்



மன்னா! துயிலெழும் நற்செய்திக் கொண்டுவந்தோம்
மன்னன் துயிலெழ, சொன்னவர் -வன்னாரின்

புத்தம் புதுநா டகமோ படைசிரியர்
அத்தாணும் நம்பா திருந்திட -அத்தே

சரிநீர் ஒருசெய்வீர், ஐந்து பரியில்
விரைவாக ஆட்கொண்டு ஆங்கே -சரியென்

திருவும் நமைமீட்டார் என்சொல் சரியே
திருமன்னன் சொன்னான் சரியாய் -திருச்சொல்

வினைசரியே என்று பரிமேல்சென் றோர்சொல்
வினைசெய்தார் மீட்டார் வினையால் -தினைக்கொள்வீர்

மக்காள் பெரும்பசி யாற்ற இடுவீரே
மக்காள் பெருங்கொள்ளைத் இட்டனர் -தக்கவர்

மக்கள் பெருங்கொள்ளை யிட்டார், படையிலே
அக்காலம் நம்பா திருந்தோனோ -இக்கட்டு

நீங்கிடக் கண்டான் சிறந்தவன் கண்டுமே
ஏங்கிப் புசியா மரித்தனன் -ஏங்கியே

வாயிலில் கூட்டம் ஒழுங்கின்மை ஆகிட
வாயிலில் கூட்டம் ஒழுங்குசெய்ய -வாயிலர்

ஏலா விழிக்க, அரசனும் விட்டானே
சீலாணே செய்வாய் ஒழுங்காக -சீலவனும்

சீலாண் ஒழுங்கைச் செயல்செய்யச் சென்றாலும்
ஏலாதே மக்கள் பெருங்கூட்டம் -சீலாணைக்

கால்கீழ் மிதிப்போட்டார் மக்களும் போனானே
கால்கீழ் மிதியுண் மரித்து

இருவாக்கர் கலி 44

சூனேமியாள் சமாரிய அரசனைக் காண வருதல்



சூனேம் கணவான் மனைவி யிடம்நோக்கி:
சூனேம் மகளே வரும்பஞ்சம் -சூனேம்

விடுத்துச்செல் தப்பி எனப்பகன்றார் வாக்கன்
எடுத்தார் உயிர்தப்ப ஓடு -நடந்தார்

பெலிசுதர் தேசம் பிழைக்கவே ஓடி,
பெலிசுதர் தேசத்தில் ஏழாய் -வலிப்பஞ்ச

ஆண்டுகள் தப்பித்துச் சென்றனர் சூனேம்பெண்
ஆண்டுநிறை வந்தனள் நாடுள்ளே -ஆண்டில்

அரசே வரும்பஞ்சம் தப்பித்தே யானும்
விரைந்தோடிச் சொல்லிறை வாக்கன் -உரைக்கேட்டுச்

சென்றேன் நிறையேழு ஆண்டுகள் சென்றதே
என்னின் நிலம்தாரும் கோசீரே -அன்னாள்

இதுவரும்போ கேயாசின் சொல்கேள் அரசன்
எதுவெல்லாம் செய்தார் திருவும் -அதுவகைச்

சொல்லும்நீர் என்றே உரைக்கேட்க விண்வியன்
சொல்செய்கைச் சொன்னான் விரித்தங்கு -அல்லவன்

சூனேம் குணவதியின் பிள்ளையும் செத்திட,
சூனேமில் மேலறை வீட்டிலே -வானார்

இறைவனை மன்றாடி வாக்கன் உயிர்த்தார்
குறைசெத்தப் பிள்ளையை ஆங்கு -இறையாண்

உயிர்த்தாரோ செத்தவன் இங்கே உயர்வாய்
உயர்வாக்கன் என்றே வியந்தான் -உயிர்தப்பச்

சென்றேன் நிறையேழு ஆண்டுகள் என்றவள்
நின்றாள் அரசவையில் பெண்ணவள் -நன்றே

இவளே பகன்றக் குணவதி யென்று
அவனும் பகன்றான் அரசன் -இவள்தானோ

பெண்ணும் விதங்கூற, செத்தான் கருப்பிள்ளை,
மண்ணில் உயிர்த்தார் இறை

இருவாக்கர் கலி 45

பெனாதாத் இறப்பும் ஆசகேல் அரியணை ஏறுதலும்



தமசுகு மன்னன் பெனதாத் விழுந்தான்
தமசுகு சென்றனன் வாக்கன் -தமசுகு

மன்னன் விடுத்தனன் தூதன், விழைக்கேளும்
என்னநான் ஆவேன் குணமென -அன்னவன்

தூதனாய் ஆசகேல் சென்றனன் வாக்கனிடம்
தூதன்கேள் வாக்கன் பகன்றனன் -தூதே

இறைவாக்கு மன்னன் பிழைப்பானே ஆனால்
நிறைச்சொல் மரிப்பான் அரசு -நிறையவே

ஆசகேல் தன்னின் முகம்கண்டு வாக்கனும்
ஆசகேல் போகச் சலித்தங்கு, -பேசாதே

கண்ணழுதான் வாக்கன் கணப்பொழுதும் நில்லாதே
கண்ணழுதாய் ஏனோ திருநீரும் -மண்ணில்

இசுரேல் பிறப்பைக் கொடுங்கோல்தீச் செய்யும்
திசைக்கேள் இதைக்கண்டேன் என்றான் -திசைவாக்கன்

எந்தனுக்குச் செய்த்தீங்கை இன்றே அறிவித்தார்
உந்தன் கொடுமை இறைவனார் -இந்தபடி

மன்னன் திருச்சொன்னார் என்ன அரசேநீர்
இன்னபடி நோய்பிழைப்பீர் என்றவன் -நன்றே

சிறுபோர்த்தி நீர்நனைத்துப் போட மரித்தான்
அறைதனில் மன்னன் கிடந்து -முறையிலா

ஆசகேல் வந்தான் திருமன்னன் சீரியர்
ஆசகேல் வந்ததை வாக்கனும் -பேசிய

நல்லிறைவன் வாக்கு நிலைநின்றச் சொல்லாமே
நல்வாக்கன் என்றும் சிறந்து

இருவாக்கர் கலி 46

யெகூவை எலிசா அரசனாக முழுக்கு செய்ய ஒருவனை விடுதலும் யெசபேல் குறித்த எலியாவின் முன்னுரை நிறைவேறுதல்



பலமன்னர் ஆண்டார் இசுரேலும் யூதா
நிலைமன்னன் உன்வழியில் தானே -நிலைவாக்காம்

தாவீதிற் கிட்டபடி கர்த்தர் கொடுமைகள்
பாவிகள் செய்யின் பொறுத்தாரே -மேவி

எலிசா இறைவாக்கன் தன்வேலை பார்த்து
வலியோர் இருமிடம் செல்நீ -அலையாண்

எலிசா இறைவாக்கைக் கேட்டு, சரியாண்
எலிசா இறைவாக்கை ஏந்தி -வலுப்பிள்ளைச்

சென்றான் அரண்மனை உள்ளே இருக்கின்ற
அன்னார், படைத்தலைவன் தேடுநீ -அன்னவன்

யேகூ கரம்பற்றி வாரும் அறையுள்ளே
யேகூ விரைவந்த தேனோயென் -ஆக

அரியணை மேலே நிலைக்கொண் டுயர்வாய்,
திருவாக்கும் எண்ணெய் முழுக்கு -திருச்சொல்லைச்

சொன்னப்பின் பிள்ளை விடுத்தோட நின்றவர்
சொன்னது யென்ன, தலைவரே? -சொன்னதைக்கேள்

சேனைத் தலைவர்கள் போற்றினர் மன்னவா!
சேனை யெமதின் தலைவனே -மானவன்

யேகூ அரசனாகி ஆண்டான் இசுரேலில்
யேகூ சிலையெல்லாம் தூர்த்தனன் -வாகையைச்

சூடியப்பின் நல்லாணும் சொல்படியே ஆகாபின்
பேடியர் கொன்றான் அரசனவன் -நாடிலே

யேகூ அரசன் யெசுரயேல் வீழ்த்தவும்
யேகூவைக் கைக்குள் இருவைக்க -வாகை

அரசி யெசபேல் அரிதாரம் பூசி
அரசே நலமோ குழைய -அரசியோ

சாளரம் ஒன்றின் வழிகேட்ட யேகூவோ
சாளரம் பின்னே எவரெந்தன் -சாளரம்

நோக்கிட மூன்றுபேர் வீழ்தள்ளும் வேசியை
நோக்கியோர் வீழ்த்தினர் பெண்தனை -தீக்காள்

யெசபேல் விழுந்தனள் செத்தாள் உடலை
யெசபேலா என்றறியா வண்ணம் -திசைவன

மாக்கள் குதறி எடுக்க, நிறைவாகி
வாக்கன் எலியாவின் வாக்கது -தாக்கிய

யேகூவின் பின்வந்த மன்னர்கள் செய்தனர்
யேகூவின் நற்செயல் நல்லிறை -யேகூ

வழித்தோன்றல் நான்வழி மன்னராகி ஆள்வர்
அழிவதில்லை கர்த்தரின் வாக்கு

இருவாக்கர் கலி 47

யோவாஸ் மரணப் படுக்கையில் எலிசாவைக் காணுதலும் அவனின் கடைசி இறைவாக்கும்



வாக்கன் எலிசா மரணிக்கும் போதங்கே
நோக்கி அழுதான் அரசனும் -வாக்கே

பரியாய் நெடுந்தேராய் வீற்றிருந்தீர், கோவே
சரியாண் உமைப்போல் இலையே -சரிநீரே

நாணேற்றும் வில்லைகீழ் சாளரம் எய்யும்நீர்
நாணேற்றி வில்விட நேர்கர்த்தர் -வீணர்

சிரியரின் மீட்கும் விடுமம்பு யீதே
சரியடியும் நீரும் தரையில் -பெரிதாண்

தரையிலே மூன்றுதரம் வில்லடித்து நின்றான்
தரையிலே மூன்றுதரம் மட்டும் -தரையடித்தீர்

ஆதலால் மூன்றே முறைவெல்வீர் சீரியரை,
போதுமென்று விட்டீர் அடிதனை -வாதைதீர்

ஐந்தாறு வில்லைத் தரையடித்தால் சீரியர்
ஏந்தா முறியடித்து வென்றிருப்பீர், -போந்து

முறைமூன்றே போதுமென்று விட்டீர் அடியை
முறைமூன்றே வெல்வீர் அரசு

இருவாக்கர் கலி 48

எலிசாவின் கல்லறையில் செத்தவனை போட உயிர்கொண்டு வருதல்



எலிசா வயதாகி ஆங்கே மரிக்க
எலிசாவின் பூவுடல் தன்னை -வலிபேறு

மக்கள் அனைவரும் வந்து அடக்கமிட
தக்காண் உடல்வைத்த கல்லறையோ -அக்கூர்

வெளிதன்னே கேள்மின்னே; தக்காண் இசுரேல்
அளிகர்த்தர் தன்னை விடுத்து -அளியாச்

சிலைப்போற்ற ஆங்கே எதிரி படையும்
அலைபோல வந்து; மரித்த -அலையாளை

உள்வைத்த கல்லறையில் வேற்றாள் பலநாள்பின்
உள்போட்டார் செத்தோன் உடல்பட -உள்போட்ட

போக்கன் உடலில் உயிர்வந்து வாக்கன்
இவனோ மரித்தும் உயிர்த்தான் -அவனே

இவன்குறித்தே வேதத்தின் சொல்
இருவாக்கர் கலி 49

யூதா அரசன் யோராம் குறித்த எலியாவின் கடிதம் - 2 நாளாகமம் 21



முதல்வாக்கன் சீராண் எலியா எழுதி
அதுயூத மேனரசன் யோராம் -அதுகடிதம்

வந்ததாய் எண்குறிப்போர் நூலிலே உண்டுவொரு
அந்நாட் குறிப்பாய் குறிப்பதுவே -அந்நாளில்

ஆண்ட அரசும் வழிதவறி யூதரை
ஆண்டவரை விட்டுச் சிலைபோற்ற -ஆண்டவன்

வாக்காக வந்த கடிதம் எலியாவின்
வாக்கதென நாட்குறித்தார் ஆங்குதான் -வாக்கன்

சுழற்காற்றில் மேலேறி சென்றபின் வந்த
அழற்கடிதம் எப்படி என்றே -குழம்பினர்

பல்லோர் படித்தோர் விதமாக ஆயினும்
நல்ல குறிப்பாளர் ஆங்கேதான் -நல்லென்

குறித்திட சீராகக் கொண்டார் குறிப்பை;
அறிந்த அரசனும் போனான் -குறித்தபடி

ஆங்கே இறைவாக்கன் சொல்நடந்து மன்னனவன்
ஆங்கே மரித்தான் எனவேதான் -ஆங்கே

வகையெப்போ வந்ததெனக் காணாமல் சீரார்
வகைக்குறிப்பு செய்தார் இறைச்சொல் -அகத்தின்

கடிதமது கண்டார் பலவாறு; சொன்னார்
கடிதமது சீராண் தனின்

இருவாக்கர் கலி 50

முடிவுரை



எலியா எலிசா இருபெரும் வாக்கர்
வலிவாழ்ந்தார் நாட்டில் இறைவன் -நிலைக்கர்த்தர்

தந்தத் திருப்பணியைச் செய்தார் இருவாக்கர்
அந்நாளில் நன்றாய்ச் சிறந்தவர் -இந்நாள்

இருவாக்கர் வாழ்க்கை எழுதிட கர்த்தர்
வருவித்தார் என்னை உலகில் -இருவாக்கர்

வாழ்க்கை முழுதுமே நேரிசை வெண்பாவாய்
ஆழ்பொருள் தந்தார் இறையவர் -வேழ்சீர்

இறைவாக்கர் வாழ்க்கை எழுதிட்டேன் நன்றாய்
இறைவன் அருளாலே இங்கே -குறையேதும்

கண்டால் பகர்வீரே நல்லோர்ப் புலவரில்
மண்கடை யானே சிறுவன்யான் -மண்ணில்

இறைவாக்கர் வாழ்க்கை எழுதிட்டு அச்சில்
இறைவன் அருளாலே ஏற்ற, -சிறந்திங்கு

வெண்பா வடிவிலே வேதம் இடுதிருசொல்
மண்ணில் சிரமேற்றேன் நான்

முடிவுரை

Comments

Popular posts from this blog

முழு வேதாகமம் வெண்பா வடிவில்