வேதாகம இசுரேலின் அரசர்கள் அவைப்பதிவு முதலாம் நூல் - வசனம் 8:20 வரை

தாவீதிற்கு அவனுடைய ஊழியர் அபிஷாக்கை தேடி கண்டுபிடித்து வந்து விட்டாலும் அரசன் அவளோடு கலவாதிருத்தல்

தாவீ தரசன் வயதுசென்று மூப்பனாக
மேவி உடுப்பாலே மூடினாலும், -தாவீதின்

இன்னுடலில் தேவையான சூடாக வில்லையென
அன்னவனின் சீரூ ழியர்களோ -நன்னவா

உம்முன்னே நின்றூ ழியம்செய்ய, பெண்ணொருத்தி
உம்மடியில் தான்படுத்தால் சூடாகும். -எம்மரசே

போவோம்யாம் நாடெங்கும் பெண்தேட என்றவர்கள்
மேவியே போனார்கள் பெண்கொள்ள -ஏவி

இசுரேலின் சீரெல்லை எல்லாம்போய்த் தேடி
இசுரேலில் நல்லழகி கொள்ள -திசையூரில்

கொண்டபெண் சூனேம் அபிசாக்கு நல்லாளாம்
கொண்டவளை நல்லரசன் வாழறையில் -அண்டிட

விட்டாலும் பெண்ணவளோ நல்லழகாள் அன்னவனோ
விட்டான் கலவாதே யங்கு

1 அரசர் கலி 1

அதோனியா அரசனாக அறிவிக்க இளவரசர்களை அழைத்து விருந்து வைக்க திட்டமிடுதல்.

அதோனியா என்னும் இளவரசன் தீதாய்
இதோநான் அரசனாவேன் நன்றாய் -விதமாகத்

தன்னையவன் தானே உயர்த்திட்டு தேர்களும்
தன்முன் நடக்கவே ஐம்பதுபேர் -இன்னாது

கொண்டான்; அவனது தந்தையாம் தாவீதோ
கொண்டவனைக் கேள்வியெதும் கேட்காமல் -கொண்டான்

கடிந்திடாமல் விட்டிட, ஆதீத் மகனோ
நடந்தான் வழிதீதாய் யோவாப் -பிடம்சேர்ந்து

ஆசரியன் அன்னான் அபியத்தார் சேர்ந்தங்கு
வீசையாய் ஆலோ சனைச்செய்து -ஆசரியன்

போர்த்தலைவன் சேர்ந்தவர் செய்தார் உதவியை
சீர்மக்கள் சாதோக்கும் நாத்தானும் -சீர்த்தலைவன்

யோய்தாவும் சீமேயி, ரேயி எனப்பலரும்
வேய்த்திட்டம் சேரா திருந்தனர் -வேய்ந்தே

மகனவன் அல்லதாய் திட்டத்தைத் தீட்டி
மகன்கள் அனைவரையும் உண்ண -பகையுள்ளம்

கொண்டோன் அழைப்பித்தான், சீர்மக்கள் தன்னிலே
அண்டாதான் சாலொமோனை விட்டனன் -கொண்டான்

அழைக்காது, நாத்தான், அபியத்தார், யோய்தா
அழைக்காது விட்டான் மகன்

1 அரசர் கலி 2

நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனை அரசனாக்க ஆலோசனைச் செய்து தாவீதிடம் சென்று முறையிடுதலும் சாலொமோனை தாவீது அரசனாக்குதலும்.

அப்போது நாத்தான் விரைந்துபோய் பத்செபாளே
இப்போதும் ஆகீத் மகனவன் -தப்பாக

செய்கிறான் மன்னனாக ஊன்விருந்து என்றந்த
செய்தியை நீகேட்க வில்லையோ? -வெய்த்திட்டம்

தன்னால் மகனொடு உன்னுயிரும் காத்திடவே
என்னிடம் ஆலோ சனைச்சொற்கேள் -மன்னனிடம்

சென்றுநீ கேட்டிடு, ஆண்டவனே உம்பின்னே
மன்னனாக என்மைந்தன் சாலொமோனை -அன்னவர்ச்

செய்திடு வீரென்றுச் சொன்னீரே சீர்நீரும்
செய்திசொல்லும் வேளையிலே நான்வருவேன் -வெய்த்திட்டம்

செய்கின்றான் என்றறி வித்திடவே, என்றதும்
செய்தாளே பத்செபாள் மன்னனின் -மெய்யறைக்கு

ஆங்கே அபிசாக்கு மன்னனுக்குச் சேவைசெய்ய
பாங்காக பத்செபாள் தான்விழுந் -தாங்கே

வணங்கிட, மன்னனோ என்னவேண்டும் என்றே
வணங்கியோளைக் கேட்டிட அன்னாள் -வணங்கினேன்

என்மன்னா, நீர்சொன்னீர் என்மைந்தன் சாலொமோனே
மன்னனாவான் என்றெனக்கு, ஆனாலும் -மன்னனாக

ஆகீத் மகனாம் அதோனியா செய்கிறானே
வேகவைத்து ஊன்விருந்து தன்னையே -ஆகவே

மன்னனுக்கு இச்செய்தி நானறிவித் திட்டிங்கு
அன்னவரே உம்சொல்லைக் கேட்கவந்தேன் -மன்னவா

இன்னாத இச்செய்தி தன்னையும் நற்செவியில்
இன்னாளில் சொல்லவில்லை என்றாலே -அன்னவன்

மன்னனாக வெய்தறி வித்தவுடன் மன்னனாக்க
யென்றே அறிவித்த உம்மகனும் -நன்னெனக்கும்

தீச்செயலாய் ஆகுமெனச் சொல்லிடவே வந்தேன்நான்
தீச்செய்கை வேண்டா மரசென -தீச்செய்தி

கேட்டரசன் ஆங்கே திகைத்திட, மன்னனிரும்
கோட்டைக்குள் வந்தனன் நாத்தானும் -கேட்டனன்

மன்னனிடம் பேசிட நேரம்தான், வீரனும்
மன்னிடம் பேச இறைவாக்கன் -அன்னவன்

நாத்தான் வருகையைச் சொல்ல, வரச்சொல்லும்
நாத்தானை என்றா னரசனும் -நாத்தானும்

வந்து வணங்கினான் நல்லரசே, என்றேனும்
இந்நாளில் வெய்நடக்கும் செய்கைகள் -இந்தபடி

என்றேநீர் சொன்னதுண்டோ மன்னனாக உம்பின்னே
அன்னான் அதோனியா ஆவதாக? -என்றுகேட்க

மன்னவனோ, பத்செபாளை கூப்பிடும் என்றங்கு
மன்னவனும் யோய்தா அபியத்தார் -என்முன்

வரச்சொல்லும் என்றுசொல்லி மூவரும் செல்வீர்
விரைவாக சாலொமோனைக் கொண்டு -விரைந்தேநீர்

கீகோன் அடைந்திட்டு ஆங்கவனை நெய்ச்சொரிந்து
ஆகச்செய் வீரே அரசனாக -ஆகியபின்

கோவேறு மேலேற்றி ஊர்வலமாய்க் கொண்டுவாரும்
மேவிமக்கள் மன்னனே வாழ்கவென -ஏவும்சொல்

என்றுரைக்க செய்தனர் அப்படியே ஆங்கேதான்
நன்றாக சாலொமோனை மன்னனாக்கி -மன்னனே

நீர்வாழ்க என்றே இனமக்கள் சொன்னார்கள்
சீர்விருந்தில் சென்றவன் யோனத்தான் -சீர்விருந்துள்

போக அதோனியா, நல்லவன்நீ நற்செய்தி
யாகச்சொல் என்றே பகரவும் -வேகமாக

மன்னனவர் சாலொமோனை மன்னனாக்கி விட்டாரே
அன்னவர் என்றுரைக்க, உண்ணவிரும் -அன்னரெலாம்

விட்டெழுந்துச் சென்றிட, வன்செய்தேன் என்றவன்
விட்டுபோய் கூடாரம் உள்ளேதான் -நட்டவனும்

மேன்பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துநிற்க
ஏன்செய்கை செய்தானென் கேட்காமல் -மேன்னரசு

வாவென் றழைத்தவனை வீட்டிற்கு சென்றிடு
வாயென்றுச் சொன்ன னரசு

1 அரசர் கலி 3

மோசேயின் நியாயப் பிரமாண கற்பனைகளைக் கைக்கொள்ள சாலொமோனை தாவீது அறிவுறுத்துதல்.

தாவீ தரசன் மரணமடை யும்காலம்
தாவீது தன்மகன் சாலொமோனை -மேவியழைத்

திட்டவன் கட்டளை யிட்டான் இவைதானே:
திட்டமாய் அப்பன்நான் பூமிவாழ் -நட்டார்

வழிதன்னே போவேன் மகனே; திடன்கொள்
விழித்திரு ஆணாக நீயே -வழிதன்னை

சீராய் விலகாது மெய்யோடும் நன்மனதும்
சீராய் நடந்திட்டுக் காத்தாலே -சீருனக்கு

சீரிசுரேல் ஆளும் அரியனைமேல் வீற்றிருக்க
சீராண் ஒருவன் இலாமலே -சீரின்றிப்

போவதில்லை என்றே திருக்கர்த்தர் என்குறித்து
தேவனார் சொன்னாரே; நீயென்ன -மேவிச்செய்

தாலும் விழைந்தெங்கே போனாலும் சீரறிவு
ஆலே நிறைந்திரு; சீர்மோசே -ஆலாண்

அளித்த சிறப்பான நீதிநேமம் எல்லாம்
களித்துநீ கைக்கொள் மகனே -களிவழி

தன்னிலே சீராய் நடக்க அவரினது
நன்காவல் காத்திடு வாய்

1 அரசர்கள் கலி 4

தாவீது தான் செய்ய நினைத்த சிலரின் பழியை வாங்க சாலோமோனுக்கு அறிவுறுத்தலும் தாவீது செத்து அடக்கம் செய்தபின்னர் சாலொமோனின் ஆளுகை நிலைப்பெறுதலும்.

செருயா மகனாமே யோவாப் இசுரேல்
திருப்படையோர் சீர்த்தலைவர் அப்னேர் -திருவாண்

அமாசா இருவர்க்கும் செய்தவக் குற்றம்
தமன்நீ அறிந்துள்ளாய்; நல்லார் -அமைதியாய்

வந்திட, வீணாய் குருதிதனை சிந்திட்டு
அந்தவிரு சீராண்கள் கொன்றானே -அந்தபடி,

ஆகையால் நீதிட்டம் போட்டுத்தான் அவ்வாணின்
தேகமது நல்லமைதி யாய்யுயிர்ச் -சாகாது

வெட்டிடுவாய் சீர்மகனே நீசிறந்து; நற்றாராம்
நட்டவர் கீலேயாத் பர்சிலாயின் -நட்டவர்க்கு

நீதயை செய்வாயே; உன்பந்தி தன்னிலே
மேதவர் ஊணுண்ணச் செய்திடு -வேதனையாய்

உன்தமனாம் அப்சலோம்முன் நான்ஓடிப் போகையில்,
என்னையவர்ச் சீராக ஆதரித்தார். -வன்னாணாம்

பாகூரிம் பென்யமீனன் கேரா மகன்சீமேய்
சாகாமல் உன்னிடத்தில் உள்ளானே -வாகையிலா

மக்னாயீம் நானோட என்னைக் கொடுஞ்சொல்லால்
தக்கிலாது பேசினான்; என்றாலும் -தக்கசெய்வோன்

போலவன் யோர்தானில் என்னெதிர் கொண்டுவந்தான்
சீலன்நான் வாளாலே கொல்வதில்லை -சீலர்மேல்

நானிங்கு ஆணையிட்டுத் தந்தேனே. ஆகிலும்
ஏனவன் குற்றமற்றோ னென்றெண்ணாய் -மேனாள்

அறிவுடையோர்; சீரில்லாண் மூப்பில் குருதி
தெறித்து குழியிறங்கச் செய்வ -தறிவாய்நீ

பின்பரசன் தாவீது தந்தைய ரோடேசேர்
அன்னவன் செத்திட, தாவீதின் நன்னகரில்

சீராணைச் செய்தார் அடக்கம்தான்; சீரவன்
சீராண் இசுரேல் அரசாண்ட -சீர்நாட்கள்

ஆண்டுகள் நாற்பது; எப்ரோனில் ஏழாமே
ஆண்டுகள் மீதி எருசலேமில் -ஆண்டானே

முப்பத்து மூன்றாக ஆண்டுகள் சாலொமோன்
அப்பனாம் தாவீதின் நல்லணையில் -அப்போது

வீற்றிருக்க ஆளுமை அன்னான்கீழ் நல்லபடி
தூற்றா நிலைகொண் டது

1 அரசர்கள் கலி 5

அதோனியா அபிஷாக்கை மணம்புரிய பத்சேபாளை தூது விடுதலும் சாலொமோன் அவனைக் கொல்லச் சொல்லுதலும்

சாலொமோனின் தாயிடம் ஆகீத் மகனவன்
சாலொமோனின் அண்ணன் அதோனியா -மேலவள்

வீடுவர, வந்திடுதல் சீரமைதி தானோயென்
வீடுவந்த அம்மகன் கேட்டிட -வீடுவந்தேன்

நானமைதி யோடுதான், சின்னம்மா; என்மனம்
தானலைந்தே போயிற்றே, மன்னனிடம் -மேனாள்நீர்

போய்க்கேட்க சின்னதொரு மன்றாட்டு உள்ளதே;
வேய்யில்லை என்மக்கள் என்பக்கம் -சாய்ந்தாரே

என்கை வரவேண் டியநன் னரசென
நின்னிறிவீர்; ஆயினும் கர்த்தரால் -இன்றோ

தமனாராம் சாலொமோன் வீற்றுள்ளார் சீராய்;
தமனிடம் கேட்டிடும் நீரே -தமனவர்

நல்லாள் அபிசாக்கை எந்தன் மனையாளாய்
நல்ல திருமணஞ் செய்துதர -அல்லாணின்

சொல்கேட்டு பத்செபாள் போனாளே மன்னனிடம்;
சொல்லம்மா, வந்தீரே சீரவைமுன் -சொல்நீரும்

ஈங்கமர்ந்து என்றே திருமன்னன் தாயமர
ஆங்கே சமனாய் மனையிட்டான் -ஆங்கேதான்

மன்னன்முன் நன்றாய் அமர்ந்தபின் பத்செபாள்
மன்னனின் அண்ணனின் ஆசைதனை -மன்னனுக்குச்

சொல்லிடவும் ஆங்கேயோ மன்னனவன் என்னயிது
சொல்சொன்னீர்? கேளும் அரியணையே -அல்லாணோ

அண்ணன்தான் என்றே, அரசன் மனையாளை
அண்ணனுக்காய் கேட்பதேன்? என்றவன் -அண்ணன்யேன்

சீரிலாராம் ஆசன் அபியத்தார் யோவாபு
சீரெனக் கேட்பீரோ என்றவன் -சீரற்றோன்,

வன்சினமாய், இன்றே அதோனியா சாவானே
என்றே திருமுன்னே ஆணையிட்டு -அன்னவனைச்

சென்றுகொல் என்றங்கு யோய்தா மகனுக்கு
அன்னவன் கட்டளைத் தந்திட -மன்னனின்

சொல்கேட்டுப் போனவன் அண்ணனைக் கொன்றானே
அல்லாணாய்ச் செத்தான் மகன்

1 அரசர்கள் கலி 6

அபியத்தாரை நகர்விட்டுப் போகச் சொல்லுதலும், யோவாபை கொன்றிட பெனாயாவிற்கு ஆணை யிடுதலும்

வன்சினத் தோடே அரசன் அபொயத்தார்
வன்னாசன் நோக்கி, கொலைசெய்ய -இன்றுநீ

பாத்திரன் என்றாலும் எந்தைமுன் பெட்டியை
மேத்தார் சுமந்தபடி யாலேதான் -ஆத்திரம்

கொண்டும் அழியாது விட்டிடுவேன்; ஆனதோத்
கொண்டாயே நன்னிலம் நீதானே -கொண்டயிடம்

சென்றுநீ வாழ்ந்திடு; இங்கே யினிஆசன்
வன்னாண்நீ இல்லையென தள்ளிட்டான் -அன்னவன்

வாக்கனுரை வந்து நிறைவேறிற் றாமங்கு
வாக்கனவன் சொன்னானே ஏலிவழி -வாக்கர்முன்

நில்லாது போவரென, ஆங்கே நிறைவேற
அல்லாதே போனான் அபியத்தார் -நில்லாதே

யோவாபும் உட்கையே என்றறிந்த மன்னனும்
யோவாபைக் கண்டுநீ கொல்வாயே -மேவியவன்

சாலொமோன் ஆணையிட, சொல்கேல் பெனாயாவும்
ஆலவன் தேடிவந்தால் ஆங்கேதான் -சீலார்முன்

யோவாபும் பீடத்தின் கோடுபிடித் தானங்கு;
யோவாபே வாருமே மன்னரவர் -மேவி

அழைக்கிறார் என்றங்குச் சென்று பெனாயா
அழைத்திட, நான்வர மாட்டேன் -விழைந்திங்கே

சாவேன் எனச்சொல்ல, அச்சொல்லை மன்னனிடம்
மேவியுரைத் தாரே; கறைச்சொல்லின் -ஏவுபடி

பீடத்தின் அண்டையில் தானேநீ வெட்டிடு
பீடம்முன் என்றுசொல்ல, ஆங்கேதான் -பீடம்முன்

வெட்டினான் யோவாபை சீரில்லா திட்டத்தை
நட்டரசன் வன்னெதிராய்ச் செய்ததால் -வெட்டுண்டு

செத்தானே யோவாபு, மன்னன்சொல் தானிறை
அத்தவன் செய்தான் சிறந்தங்கு -அத்தாணோ

ஆசனாய் நின்றிடத்தில் சாதோக்கை ஆசனாக்கி
வீசுபோர்ச் செய்திடவே வீரனாம் -தீசிலே

வைத்தான் பெனாயா படைத்தலைவன் என்றங்கு
மேத்தான் அரசு நிலைத்து

1 அரசர்கள் கலி 7

சீமேயியை எருசலேம் விட்டுப் போகாதிருக்க ஆணை கொடுத்தலும் மூன்றாண்டுகள் கழித்து சீமேயி அந்த ஆணையை மீற அவனையும் சாலொமோன் கொன்றிட ஆணையிடுதலும்

அரசனவன் சீமேயி தன்னழைத்துச் சொன்னான்
அரசனின் கட்டளை ஈதே -அரனூர்

எருசலேம் தன்னிலே வீடுகட்டி ஆங்கே
எருசலேமில் தானே இருப்பாய் -திருவூர்

எருசலேம் விட்டுநீ போகாதே; எப்போ
எருசலேம் விட்டுநீ போனால் -தரையிலே

சாவாய், குருதிப் பழியுன்மேல் தானிருக்கும்;
மேவியவன், நல்லதெனச் சென்றானே -பாவியும்

சீர்நகரில் வாழ்ந்தானே மூன்றாண்டு சீராக
சீர்நகரில் வாழ்ந்திட்டான் வேலையாள் -சேர்க்கொண்டே;

மூன்றாண்டு பின்னராய் வேலையாள் வன்னவனின்
தான்செய்கை தாளாது காத்தூரில் -தான்னோட

வேலையாள் மீட்டிட, காத்தூர் வரைச்சென்றே
வேலையாள் பின்தொடர்ந்தான் சீமேயி -வேலையாள்

விட்டோடி பின்சென்றான் சீமேயி என்றேதான்
நட்டரசன் காதுகேட்க, சீமேயி -விட்டுநீ

ஏன்சென்றாய் கர்த்தரின் ஆணையை மீறியே
மேன்கர்த்தர் முன்சொன்ன சொல்நீயும் -தான்மீறிச்

சென்றதால் உன்குருதி வீண்பழி உன்மேலே
இன்றே பெனாயாக்கை சாவாய்நீ -என்சொல்ல

நன்தலைவன் சொன்ன அரசாணை ஏற்றேதான்
அன்றே கொலைச்செய்தான் வன்

1 அரசர்கள் கலி 8

சாலொமோன் எகிப்தின் இளவரசியை மணமுடித்தலும், கிபியோனிலே தேவன் சாலொமோனின் கனவில் தோன்றுதலும், ஞானத்தை சாலொமோன் வேண்டுதல் செய்த பின்னர் இருபெண்டிர் கொண்டுவந்த வழக்கை தீர்த்தலும்.

எகிப்தின் அரசனோடு பெண்ணெடுத்தான் மன்னன்;
எகிப்தினது பார்வோன் மகளை -எகிப்தினின்று

கொண்டுவந்து தானே மணம்புரிந்து தன்னோடே
கொண்டவளைச் சீர்நகரில் வைத்தனன் -மன்னனவன்;

கோவிலையும் சீர்நகரில் சுற்று மதிலையும்
கோமா னவன்கட்டித் தீர்வரைக்கும் -கோமான்

மனைவியை வைத்தனன் சீர்நகரில்; மக்கள்
அனைவரும் கோவில் இலையே -அனைவரும்

மேடைமேல் இட்டார் பலிதனை; சாலொமோனும்
மேடைமேல் இட்டான் பலிகளை; -ஆடவன்

தந்தை வழிநின்றும் இட்டான் பலிகளை
அந்நாளில் நாறுபுகை மேடைதனில் -அந்தாண்;

கிபியோனில் மன்னன் பலியிடச் சென்று
கிபியோனில் பேர்மேடை தன்னில் -அவைமுன்னே

இட்டான் பலிகள் எரித்துத்தான்; ஆங்கேதான்
நட்டவன் தங்கிட கர்த்தரவர் -இட்டபலி

ஏற்றங்கே நள்ளிரவில் தான்கனவில் வந்திட்டார்;
நாற்றே, விரும்புவதை நீகேட்பாய் -சாற்றியிங்கே

என்றவனைக் கேட்டிட, சாலொமோனோ நற்றேவா
என்தந்தை தாவீது உம்மடியான் -என்றென்றும்

உம்மைத்தான் பற்றிட்டார், உண்மையும் நீதியும்
தம்மன நேர்மையுமாய் முன்னும்மின் -தம்நடந்தார்

நும்சீரோய் பேர்கிருபைச் செய்தவரை காத்திட்டீர்
நும்சீரோய் இந்நாளில் மன்னனாக -தம்மரி

நல்லணைமேல் வீற்றிருக்கச் சேய்தந்தீர் சீரவரே;
நல்லணைமேல் நானமர்ந்தும் போக்குவரத் -தில்யானோ

சிற்றாண் அறியா தவனாமே; நின்மக்கள்
நற்றவரே ஏராள மானோரே -நற்றாரை

நல்வழியில் நான்நடத்த, நன்மையும் தீமையும்
இல்லாம் எனவறிய ஞானத்தை -நல்லவரே

நீரளியும் சீரவா; ஏராளம் உம்மக்கள்
சீரவரை ஆள எவராலே -சீரவரே

ஆகுமோ! என்றிட, சாலொமோன் கேட்டயிந்த
ஏகச்சொல் கர்த்தரின் பார்வைக்கு -ஆகச்

சிறந்ததாய் பட்டதாலே ஆகையினால் தேவன்
சிறப்பாணெ, நீயின்று ஆயுள் -சிறப்பாக்கும்

செல்வம் தனைத்தாரும், என்பகைஞர் நீரழியும்
அல்லாது என்றுகேளா ஞானத்தை -நல்லபடி

நீகேட்டாய் ஆதலால் உன்சொல் படிசெய்தேன்;
நீகேட்ட ஞானம் உணர்மனம் -நீகேள்

படியுனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச்
சரியா னவன்முன்னர் வாழ்ந்தில் -சரியானோன்

பின்எழும்பு வானில்லை. நீயெனது நேமங்கள்
பின்பற்றி நுந்தைபோல் சீர்நடந்தால் -நன்றாக

உன்னாயுள் நன்றாக நீடித் திருக்குமே
என்றார் கனவிலே சீரவர். -அன்றே

உறக்கம் தெளிந்து விழித்தவன் கண்ட
சிறப்பது நன்கனவு என்றே -சிறப்பாண்

உணர்ந்தனன்; சீர்நகர் வந்திட்டு நல்லாண்
உணர்ந்தவன் தீப்பலி யிட்டு -தணலாம்முன்

வந்தார் இருபெண்டிர் வேசியர் மன்னனிடம்
வந்தவர்கள் சொன்னார்கள் தீர்த்திடும் -வந்தோம்யாம்

எங்களின் இக்கட்டை நின்முன்னே மன்னவா;
எங்களுக்கு பிள்ளைகள் தான்பிறந்தார் -இங்கே

இருக்கும் குழந்தையைப் பாரும், இரவில்
திரும்பிப் படுத்ததால் பிள்ளை -அரவமற்று

செத்திட அப்பிள்ளை என்முலையில் வைத்திட்டு
எத்தமாய் யென்பிள்ளை கொண்டாளே -எத்தப்பெண்

என்றிட, இல்லையில்லை என்பிள்ளை தானிதுவே
என்றனள் மற்றொருத்தி, பிள்ளையவன் -நன்தீர்ப்பு

வாள்கொண்டு வாருமே, பிள்ளையை வெட்டியே
ஆள்பெண்டிர்க் கைத்தாரும் பாதியுடல் -வேள்தீர்ப்புச்

செய்திட, பிள்ளையின் உண்மைத்தாய் தன்பிள்ளைச்
செய்திடாதீர், என்பிள்ளை மாற்றாள்கை -மெய்வளர

விட்டு விடுமே எனவங்கே சொல்லிட
விட்டு அறுத்திடும் பிள்ளையை -நட்டவளோ

தன்கண் இழந்தாலும் மாற்றாள் இழப்பதை
அன்றியும் வேண்டியே நின்றிட -மன்னனவன்

தாயவள் கொல்லாதே என்றுசொன்ன பெண்தானே,
சேயவனை கொல்லாதே பெண்கையில் -தாயின்

மனம்நோகா தந்திடுவீர் என்றே உரைத்தான்
இனமவர் கண்டார் சிறந்தே -இனத்திலே

ஞானவானாய் மன்னனைத் தந்தாரே என்றவரும்
மேனவர் அஞ்சி வியந்து

1 அரசர்கள் கலி 9

சாலொமோன் நாடு முழுவதும் வரி தண்ட பன்னிரண்டு தண்டல்காரர்களை வைத்தலும் அவனுடைய ஞானத்தை கேட்க பல மன்னர்கள் சுற்றிலும் இருந்து வருதலும்.

மன்னனாக சாலொமோன் நன்றாய் அரசாண்டான்
மன்னனவன் தண்டலுக்காய் வைத்தானே -அன்றியும்

தண்டற்கா ரர்கள் இனத்தின்மேல் பன்னிரண்டாய்
மண்முழுதும் நின்றவர்கள் மன்னனுக்காய்த் -தண்டினர்

சேர்வரியை ஆங்கே; சிலதண்டற் காரரையோ
வேர்தனது பெண்டிரை இல்லாலாய் -நேர்மன்னன்

தந்திட்டான்; அவ்வகையில் சீர்தண்டல் எல்லாமே
அந்நாளில் சேர்ந்துவர, ஒவ்வொரு -அந்தாட்கள்

மாதந் தொரும்வந்தே தண்டிட்ட சீர்வரியை
நீதியாய் மன்னனின் நேர்மனைக்கு -ஆதிமுதல்

தந்தனரே; சீராண் தனின்பேராம் ஞானமது
அந்தபடி அந்நாளில் வேறெவர்க்கும் -தந்ததில்லை

கர்த்தரவர் சீர்ஞானம்; கேதுருவை, மேன்மதிலில்
கர்த்தரால் உண்டாடும் ஈசோப்பை -கர்த்தர்

அளித்திட்ட ஞானத்தால் பாடினான் பாக்கள்;
அளித்திட்டான் நீதி மொழிகள் -களித்தவன்

மூவா யிரமாமே; பாட்டுக்கள் ஆயிரமேல்;
தேவனின் சீர்ப்படைப்பில் பாடாத -மேவுயிர்

இல்லையாமே; மன்னர்கள் சுற்றிலும் சீர்மக்கள்
நல்லதென கேட்டே திருஞானம் -அல்லவோ

என்றே செவிகேட்க வந்தாரே; வந்தவர்
அன்றோ வியந்தாரே கண்டனர் -அன்றிருந்த

சீரெகிப்து நாட்டவரின் சீர்ஞானம் மன்னன்முன்
சீரில்லா தென்றாகி, மற்றாராம் -சீரார்

கிழக்கத்தி மக்களின் ஞானமெலாம் கீழாய்
அழகனவன் ஞானத்தின் முன்

1 அரசர்கள் கலி 10

தீருவின் மன்னனாம் ஈராமிடம் கேதுரு மரங்களை வெட்டி அனுப்ப சாலொமோன் கேட்குதல்

தீருவின் மன்னனாம் ஈராம் பெயரவனின்
தீருவின் தூதரை விட்டவன் -சீராணோ

நண்பனாம் தாவீதின் வாழ்நாளெல் லாம்தானே;
மண்மன்னன் சாலொமோன் சொன்னானே -நண்பனும்

தாவீதின் வன்பகைஞர் எல்லாமே மன்னனா,
தாவீதின் கால்கட்கீழ் இட்டாரே -தேவனவர்

போராலே சுற்றிலும்; போர்செய்தே நாடிருக்க
தீருவின் மன்னனே நீரறிவீர் -சீரவர்

நற்றேவன் நல்லுறை இல்லமாம் கோவிலை
நற்றந்தை கட்டிட ஏலாரே -நற்றவரே

நீரறிவீர் இச்செய்தி தன்னைத்தான்; சீராகச்
சீரவர் தந்தார் இளைப்பாறச் -சீரெனக்கு

இப்போதோ, ஆதலால் வன்னெதிர் இல்லையே
அப்பாபோல் இங்கெனக்குத் தானறிவீர் -இப்போது;

ஆகையால்: நானுன் அரியணைமேல் வீற்றிருக்க
வாகைசூடும் உன்மகனே கோவிலை -ஆகிடக்

கட்டுவான் என்றிறைவன் எந்தையாம் தாவீதின்
தட்டாச்சொல் நற்படியே, என்தேவன் -எட்டாரின்

சீர்பெயர்க்காய்க் கோவிலைக் கட்டவேண்டும் என்றெண்ணம்
சீர்க்கொண்டேன் யானே; அரசனே -நீர்ச்செய்யும்

ஆதலால் லீபனோனில் கேதுருக்கள் வெட்டவே
சீதோ னியரைப்போல் வெட்டுவேலை -மேதைகள்

எங்களுக்குள் இல்லையென நீரறிவீர்; என்வேலை
தங்கித் தரிப்பரே உம்வேலை -அங்கேதான்

உம்வேலைக் காரரின் கூலியை நான்தருவேன்;
அம்சொல்லச் சொன்னான் அரசு

1 அரசர்கள் கலி 11

ஈராம் சாலொமோனுக்கு அனுமதிகொடுத்தலும் கோவிலின் வேலைகளை ஆரம்பித்தலும்

ஈராம் அரசனாம் சாலொமோனின் சொற்களை
சீரவன் கேட்டு மகிழ்ந்தனன் -சீரவரைப்

போற்றியவன் விட்டனன் தூதரை, சீரவர்
சாற்றியே ஞானமான சீர்மன்னன் -போற்றிடும்

வண்ணமாய் தாவீதின் நல்லணையில் வீற்றிருக்க
மண்மேலே தந்தவரை போற்றுகிறேன்; -மண்மேலே

சீரவர்க்கு நற்கோவில் கட்டிட தேவையான
தாருமரம் எல்லாமே தந்திட -சீராகக்

கட்டளை நான்தருவேன் உம்மனதிற் கேற்றபடி;
நட்டவராம் என்வேலை யாட்களவர் -கட்டுமரம்

தன்னை கடல்வழி விட்டிடுவர்; வேலையாள்
நன்றாக உண்ண உணவுதனை -அன்றுநீர்

தாரும் மரங்களை ஒப்புவித்தப் பின்னராய்,
சீரவனே என்மனம் வேண்டுவதை -சீராக;

அவ்வேலை யாட்களின் ஊணிற்காய் சாலொமோன்
அவ்வாறே கோதுமை எண்ணெயென -அவ்வேலை

செய்வோ ரிடம்தந்தான் ஈராம் கரம்சேர்க்க;
செய்திடவே வேலை, அமைஞ்சியாய் -செய்க்கூலி

ஆட்களை சேர்முப் பதாயிரமாய் தேர்ந்தெடுத்து
காட்டில் ஒருமாதம் என்றுமங்கே -வீட்டில்

இருமாதம் என்றே அதொனிராம் தானே
கரைச்செல்ல விட்டிட வைத்தான் -திருமன்னன்;

குன்றின்மேல் வெட்ட எழுபதி னாயிரம்பேர்
குன்றிலே எண்பதி னாயிரம் -தன்னே

மரம்வெட்ட தேர்ந்தெடுத்து வேலைசெய் ஆட்கள்
திருப்பணியை மூவா யிரம்மேல் -திருத்தலைவர்

முந்நூறாம், கோவிலிற்கு நல்லடிக்கல் நாட்டிட
அந்நாளில் மிக்க விலையாமே -அந்தபடி

நற்கற்கள் கொண்டுவர மன்னனவன் கட்டளை
நற்றிட, செய்தாரே வேலைதனை -நற்றாணின்

வேலைகளும், ஈராமின் வேலைகளும் சேர்ந்தங்கே
வேலை கிபிலியெனும் ஊராரும் -சீலவரின்

கோவிலிற்காய் நற்றவனு மாங்கு

1 அரசர்கள் கலி 12

கோவிலின் நீள அகல உயர அளவுகளும் சுற்றுக் கட்டுகளும் மதிற்சுவரும், ஒட்டுச்சுவரும், கர்த்தர் சாலோமோனோடு மீண்டும் பேசுதலும்

இசுரெலியர் நாடாம் எகிப்தினின்று தானே
திசையில் புறப்பட்டு ஆண்டு -மிசையாகி

ஆனதே நானூற்று எண்பதா யிற்றதே
மானமகன் மன்னனாகி நான்காமே -ஆனது

ஆண்டுகள் ஆனபின் சீப்மாதம் தன்னிலே
ஆண்டவராம் கர்த்தரின் கோவிலை -ஆண்ட

அரசனாம் சாலொமோன் கட்டத் தொடங்கி
அரசனவன் கட்டினான் கோவில் -திருவது

நீளமுழம் தானே அறுபதாம் முப்பதாம்
நீளவுயர் தானே இருபதாமே -நீளகலம்

கோவிலின் முன்வாயில் தன்னிலே மண்டபம்
கோவிலின் நீளகலம் முன்பத்து -கோவில்

அகலமு மாமே. குறுகிடும் பார்க்க
அகங்காண சாளரம் செய்வித் -தகைச்செய்து

கோவிலின் சுற்றுச் சுவரொடு கோவிலில்
கோவிலைச் சுற்றிலும் உண்டாக்கி -மேவுசீர்

நற்றறைகள் தன்னே உருவாக்கி, கீழிருக்கும்
நற்கட்டு ஐந்துமுழ நன்நடுவே -நற்றிருக்க

நல்லிரண்டாம் சுற்றி இருக்கிறது ஆறுமுழம்
அல்லாமல் மூன்றாவ தாயிருக்கும் -நல்லமதில்

ஏழுமுழம் நல்லகலம்; நற்றவை கோவிலின்
பாழாக்க சுற்றுசுவர் தன்னிலே -ஆழாதே

கோவிலைச் சுற்றிலும் ஒட்டுச் சுவர்களை
கோவிலில் கட்டுவித்தான் கோனவன் -தேவனின்

கோவிலது கட்டும் பொழுதங்கே நன்றாக
மேவுந்தீர் வேலைசெய்த கற்களால் -தேவனின்

கோவிலதைக் கட்டினான் அப்போதோ சுத்திகளோ
கோவிலைக் கட்டிட ஆயுதமோ -கோவிலின்

அண்டையிலே கேட்கவில்லை; நல்லறைகள் போகுமந்த
அண்டைபடி கோவில் வலப்புறம் -அண்சுழற்

ஏறிவிட்டு அங்கிருந்தே மூன்றாம் அறைகட்கு
ஏறிட வேண்டுமே ஆங்குதான் -வேறாகக்

கோவிலதை கேதுரு உத்திரமும் நற்பலகை
கோவிலை மச்சுபாவி செய்திட்டான் -கோவிலின்

சுற்றுகட்டு ஐந்துமுழ மாமே மரமதாம்
நற்கே துருவால் இணைத்திட்டான் -நற்றாராம்

கர்த்தர்சொல் அப்பொழுது சாலொமோனுக் குண்டாகி
கர்த்தரவர்: நீயெனது கட்டளைகள் -கர்த்தரின்

நீதி நியாயங்கள் தன்னை நிறைவேற்றி
நீதியாய் கற்பனைகள் சீர்ப்படி -வேதத்தைக்

கைக்கொண்டால் நீகட்டும் இக்கோவில் தன்குறித்து
ஆக்கமகன் தாவீ துடன்சொன்ன -ஆக்கச்சொல்

எல்லாமே உன்னிடத்தில் நான்நிறை வேற்றிடுவேன்,
அல்லாமல் சீரினத்துள் வாசம்செய் -நல்லாராய்

நானிருப்பேன் கைவிடாது என்றாரே சீரவர்
தானே அரசனுக்குச் சொல்லவும் -மேனான்

முடித்தானே கட்டிக்கோ வில்

1 அரசர்கள் கலி 13

கர்த்தரின் சாட்சிபெட்டி வைக்க சந்நிதியும், ஒலிவமரத்தால் கேரூபீன்களை சாலொமோன் உட்பிரகாரத்தில் வைத்தலும்

மேன்மரத்தால் தான்செய்தான் சாலொமோன் கோவிலதை
சான்றுபெட்டி உள்வைக்க சந்நிதியும் -மேன்பொற்

றகட்டாலே மூடி யிருப திருப
தகவளவு மேனோ இருப -தகையளவு

சந்நிதியில் கேரூபீன் நல்லுருவம் செய்தானே
அந்த யிருமேலார் அங்குவைக்க -இந்தவகை

கேரூபீன் செய்மரமோ நல்லொலிவம் தானன்றோ
கேரூபீன் மூடினான் பொன்னாலே -கேரூபீன்

செட்டைகள் தான்விரித்த வண்ணமாய் நிற்கவைத்து
செட்டையவை மற்றொன்று தொட்டிட -செட்டை

மறுபுறம் உட்சுவர் பட்டிட காண்போர்
பறக்கின்றார் என்வியன் சீரே -பறமேலார்

செய்துவைத்தான் சாலொமோன் மன்னனவன் சீராக
வெய்பெட்டி யுள்வை அறையொடு -வெய்க்கதவு

மேம்மரம் வெய்திட்டான் பொற்றகட்டால் மேலேகாண்
மேம்மானார் கேரூபீன் இட்டனர் -மேம்மரத்தில்

நல்லழகாய் மாதுளை என்றே பதித்தனர்
நல்லபடி ஏழாண்டில் தீர்த்து

1 அரசர்கள் கலி 14

லீபனோன் வனம் எனும் மாளிகை, அரமணை, மண்டபங்கள், தேவாலயத்திற்கு வெண்கல வார்ப்புகளை சாலமோன் செய்வித்து முடித்தல்

கோவிலைக் கட்டியபின் சாலொமோன் தன்வீட்டை
கோவவன் கட்டினான் ஆண்டுகள் -கோவாழ்

அரமனை கட்ட பதின்மூன்று செல்ல
அரசனவன் கட்டிய வீடு -மரவனம்

தன்பெயர் லீபனோன் அம்மா ளிகைப்பெயர்
அன்னவன் கட்டிடம் செய்திட்டான் -மன்னவன்

கட்டினான் நல்மணப் பெண்ணவள் பார்வோனின்
கட்டினான் மண்டபம் மூன்றென -யிட்டவன்

கட்டிய கட்டிடங்கள் சீர்விளக்கம் வேதத்தில்
இட்டிட வைத்தார் இறைவனார் -கட்டிட்ட

கோவிலிற்காய் தீருவெனும் ஊர்வாழும் மைந்தனாம்
கோவிலின் வெண்கல வார்ப்புகளைக் -கோவிலின்

தேவைக் கெனச்செய்ய ஈராம் பெயரவன்
தேவைகள் வார்ப்பித்தான் நப்தலிப் -பாவையாள்

தாய்அவனின்; செய்தான் கடல்போல பாத்திரம்
தூய்வெண் கலத்தாலே தூணிரண்டு -சேய்மகன்

செய்தனன் பற்பல நல்லலங் காரமாய்
செய்தனன் வெண்கலத்தால் யோர்தானின் -செய்யருகே

சட்டிகள் சாம்பல் கரண்டிகள் நற்கலங்கள்
இட்டனன் வெண்கலத்தால் செய்வித்தான் -வட்டமாய்

ஈரா யிரம்குடம் நீர்க்கொள்ளும் பாத்திரமாம்
சீராகக் கொப்பரைகள் பத்தாமே -சீரதன்

கொள்ளளவு நாற்பது நீர்க்குடமாம், வெண்கலத்தின்
கொள்ளெடை செய்யவில்லை சாலொமோன் -வள்ளலாய்

பொன்னாலே செய்வித்தான் பீடமும் மேசையும்
பொன்னாலே பத்து விளக்குகளும் -பொன்னாலே

செய்திட்டான் கத்திரிகள் என்றங்கு சீரவரின்
செய்வேலைக் காகவே ஆங்கு

1 அரசர்கள் கலி 15

கட்டிய ஆலயத்துள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் கொண்டுவந்து வைத்தலும் அதின் தண்டுகள் கூட தூய்யிடத்தில் காணாதிருத்தலும்

ஆலயம் கட்டித்தீர் நாளன்று சீயோனாம்
சீலவன் தாவீதின் நன்னகராம் -காலமே

கூட்டினான் சாலொமோன் மன்னனவன் சீரவன்
மாட்சிமை மக்களை ஆங்கவன் -நாட்டினிலே

ஆலயத்துள் ஆண்டவரின் ஆழ்சிறப்புப் பெட்டிதனை
சீலோர் கொணர்கவே என்றதும் -சீலோன்சொல்

சீலார் திருமக்கள் ஏத்தானீம் மாதமாம்
சீலார்த் திருப்பண் டிகைதனிலே -சீலவன்

சொற்படி சேர்ந்தனர் ஆங்குவர ஆசரியர்
மேற்பார்வை தன்னிலே லேவியரும் -சொற்கேட்டு

கொண்டுவந் தாரெல்லாப் பாத்திரமும் நன்றாக
ஆண்டவரின் ஆலயத் துள்வர - ஆண்டவர்க்கு

ஆண்டவரின் பெட்டிமுன் எண்ணிக்கை யில்லாமல்
கொண்டுவந்த நற்பலிகள் இட்டனரே -காண்மிகவாய்

பெட்டியதை ஆலயத்தின் சந்நிதியில் வைத்தனர்
பெட்டியைத் தோள்மேல் சுமந்தங்கு -பெட்டியை

கேரூபீன் செட்டை களின்நடுவே ஆசரியர்
சீராக ஆலயத் துள்வைக்க -சீராரின்

பெட்டி யிருக்கும் இடத்திலே கேரூபீன்
பெட்டி மறைத்துத்தன் செட்டையை -பெட்டியின்

மீதினில் சீர்விரித்து வேய இழுத்தனர்
மீதிருக்கும் தண்டுதனை ஆங்கேதான் -வேதவர்

தூய்யிடம் தன்னிலே தண்டுகள் காணவே
தூய்யிடம் தன்னிலே காணாமல் -தூய்மேலாய்

தூய்ப்பெட்டி உள்ளேதான் நிற்கவே தூயரின்
தூய்இசுரேல் வன்தேசம் விட்டபின் -தூய்ச்சீர்

இசுரேல் இனமக் களுடனே ஓரேப்
திசைமலை யிற்செய்த நல்ல -மிசைப்படிக்கை

மோசே திருவவனின் கையெழுத்தான் சீர்வடித்து
அன்றேநற் பெட்டியில் வைத்தனன் -நன்னிருக்

கற்பலகை கள்வே றிலையாமே -நற்றவர்
ஆசரியர் தூய்யிடம் விட்டுப் புறப்பட

நேசரவர் நன்மேகம் ஆலயத்தை -நேச
நிரப்பிட, மேகத் தினிமித்தம் லேவி

தரைநின்று ஊழியஞ்செய் யேலா -நரரவர்
போக மகிமை நிரப்பு

1 அரசர் கலி 16
காரிருளின் உள்ளே இறைவாசம் செய்குவேன்
சீராரும் ஆலயத்தை தேவனுக்கு -நேராய்

நிலையான வீடாகக் கொண்டிருக்க சீலோய்
மலையிலே கட்டினேன் கோவே -மலைதனில்

மக்கள் இடம்திரும்பி வாழ்த்தவும் ஆங்கவன்
தக்காண் திருமகன் சாலோமோன் -அக்கணமே

வாய்த்திறந்து விண்ணப்பம் செய்தனன் வான்நோக்கி
வேய்த்திருவே நன்றி இசுரேலின் -மேய்ப்பரே

ஆல்மகன் தாவீ துடன்செய்த வாக்கையவர்
கால்மகன் என்கையால் அல்லவே -சால்கர்த்தர்

தம்கையால் சீராய் நிறைவேற்றி னாரேசீர்;
தம்மனதில் எந்தை நினைத்தனன் -எம்மான்

எகிப்தில் எனது ஜனங்களை மீட்டே
அகற்றி வழிநடத்தும் அந்நாள் - அகத்தினில்

ஆலயம் கொள்ளவே ஊர்தெரிந் தேன்இல்லை
மேலவன் தாவீத் தலைவனாய் -சீலவர்

கர்த்தருக்கு ஆலயம் கட்டிடவே யானாலும்
கர்த்தர் அவனிடம், நல்லதே -கர்த்தருக்கு

ஆலயம் கட்டுவேன் என்றெண்ணம், ஆயினும்
ஆலயம் கட்டாய் மகனேநீ -ஆலயத்தை

கட்டுவான் உன்வழித் தோன்றல் மகனவன்
கட்டினேன் அவ்வா லயந்தனை -மட்டிலா

சீர்க்கர்த்தர் வேந்தனின் சீரருளால்; வாக்கவர்
சீர்செய் முடித்தாரே இன்றவர் -சீரவர்

சொற்படியே, எந்தையாம் தாவீதின் சீர்மகனாய்
நற்றார் இசுரேலின் மன்னனாய் -கற்றவன்

சாலமோன் நானமர்ந்து, நற்றவரின் தேவனாம்
சீலவர் கர்த்தரின் சீர்ப்பெயர்க்கு -ஆலயத்தில்

பெட்டி உடன்படிக்கை வைக்கவே நானிங்குக்
கட்டினேன் இன்றுகேள் மின்

1 அரசர் கலி 17

சாலொமோனின் விண்ணப்பம்

சாலொமோன் கர்த்தர் பலிபீடம் முன்நின்று
சீலார் இசுரவேல் மக்களவர் -மேலா

ணவன்நின்று, வானத்தை நோக்கியே வேண்ட
அவன்தனது கைகள் விரித்து: -அவனிியில்

சீரார் இசுரேலின் தேவனே, ஒப்பிலா
சீரே முழுமன தோடேஏ -சீராய்

நடக்கும் திருமக்க ளுக்கு இரக்கம்
உடன்படிக்கை காக்கும் நிறையோய் -நடந்தவன்

எந்தை திருவவன் தாவீதிற் செய்வாக்கு
தந்த திருவவர் மாற்றாதே -சிந்தாது

காத்தீர் சிறப்பாகக் கோமானே சொல்லைநீர்
ஏத்தவா இன்று நிறைவாக்கும் -காத்தவா

தாவீது தாசன்போல் தக்கான் வழித்தோன்றல்
மேவு வழிக்காப்பின் மன்னவனாய் - மேவியே

ஆளும் அரசுநிற் கும்மென்ற வாக்கைசீர்
மாளாப் பலன்நல்கும் மெய்யது -ஆளும்சீர்

வாக்கது வென்றே விளங்கட்டும் நல்லவரே
வாக்கவர் மெய்யாக பூமியில் -நீக்கமற

வாசம்செய் வாரோ? திரைவானம், மேல்வானம்
வாசம்செய்க் காணாதே சீரெந்தன் -பாசத்தால்

கட்டிய இவ்வா லயஞ்சிறி தன்றோஓ
கட்டிய ஆலயத்தில் நான்செய்யும் -நட்டார்க்கு

நல்கும்நல் விண்ணப்பம் மன்றாட்டைக் கேட்டுச்சீர்
நல்கும் திருவருள் நின்திரு -நல்மனதில்

ஆலயம் ஈதிலே நின்பெயர் நல்விளங்க
ஆலயம் மீதிலோ உம்கண்கள் -சீலரே

சூழிருள் ஞாவில் திறந்து

1 அரசர் கலி 18

Comments

Popular posts from this blog

முழு வேதாகமம் வெண்பா வடிவில்