திருவிவிலியம் - சாமுவேலின் முதலாம் நூல் - கலிவெண்பாவில்

அன்னாள் தனக்கு குழந்தை இல்லாததால் கர்த்தரின் சமூகத்தில் அழுது வேண்டுதல்



அன்னாள் எலுக்கானா தம்பதிக்கு பேறில்லை
அன்னாளின் சக்களத்தி பென்னின்னாள் -அன்னாளை

அற்றாய் நடத்திட அன்னாளும் நாடோறும்
தெற்றழுதாள் தேற்றேலா தாங்கவள் -நற்றங்கு

சீலோவில் சீலவர்ப் பெட்டி தரித்திருக்க
சீலோவிற் சென்றுப் படையலிட -சீலாண்

எலுக்கானா சென்றான் வழக்கப் படியே
வலுவாகப் பேசியது நாவு -வலியோர்க்கே

நாவடக்கம் நல்லார்க்கு மட்டுமென சக்களத்தி
நாவடக்கா நாவுறைக்க நாணியோள் -நாவுரை

கேட்ட நயமாது விட்டாள் மறுத்தனள்
ஈட்டா மலடிக் குணவுயேன் -கேட்ட

எலுக்கானா பாகங்கள் தந்தனன் ஈராய்
எலுக்கானா போய்பேசி அன்பே -அலுக்காத

நல்லாளே உன்கணவன் பத்துபிள்ளைக் கும்மேல்யான்
அல்லவை விட்டுப் புசித்திடு -நல்லவளே;

ஏலி திருக்கூடம் முன்னிருக்க கொட்டவந்து
சீலார் திருமுன்னர் அன்னாளும் -மேலிறையே

வேலாய் வருமிந்த சொற்கனைகள் விட்டொழிய
கோலாண் மகவொன்றுத் தாருமே -சீலார்

மகன்தந்தால் நல்லிறைவன் தன்னிற்கே சேவை
மகன்செய்வான் என்றும் மயிர்மேல் -அகற்றும்

சவரகன் கத்தி படாதிருக்கச் செய்வேன்
அவளங்கு கொட்டினாள் உள்ளம் -அவளங்கே

உள்பேசி வாயசைய கண்டாசன் ஏலியும்
தெள்மது உட்கொண்ட வீணளென் -வள்ளென

ஏனோ மயக்கத்தில் பேசுகின்றாய் போப்பெண்ணே
வானார் உறையுமிவ் வீடுவிட்டு -மேனவள்

அன்னாளோ ஆண்டவனே இல்லை மதுவில்லை
வன்சொல் படியிலை; என்துக்கம் -தன்னையே

மன்றாட்டாய் பேசினேன் மேலோர் செவிகேட்க;
மன்றாட்டோ! செய்வார் இறைவனார் -என்றனன்

ஏலியின் சொல்கேட்டு ஆண்டவா ஆகட்டும்
சீலோ இறைவனின் சொல்படி -மேலார்

திருமகன் தந்திடுவார் என்நம்பி பெண்ணும்
சிரித்தங்கு உண்டாள் உணவு

I சாமு கலி 1

சாமுவேலை ஆசரிப்பு கூடாரத்தில் கொண்டுவந்து அன்னாள் விடுதல்



பின்சென்றார் ராமா குடும்ப நகருக்கு
அன்னாள் இறையருள் பெற்றவள் -நன்கருவுற்

றாங்கு மகன்பெற்றாள் சாமுவேல்; ஆண்டினது
தீங்கரு பண்டிகையும் வந்திட -பாங்கிது

வாபெண்ணே போவோம்நாம் சீலோ இறைநோக்க
வாபோவோம் நற்படையல் செய்திட -வாபோவோம்

நம்மகன் நன்றி உரைத்திட என்றவனை
அம்மகன் தந்திடுவேன் ஆங்குதான் -அம்மானே

ஆதலினால் நீர்போம் முலைப்பால் மறந்தப்பின்
வேதவர் முன்னர் மகன்தருவேன் -வாதையென்

நீக்கினார் மன்றாட்டைக் கேட்டவர்; செய்பெண்ணே
நோக்கமிதை செய்வாரே கோன்தானே -ஆக்கம்

முலைப்பால் மறந்தப்பின் பிள்ளை எடுத்தே
முலையிதில் பாலூற வைத்த -அலையருள்

செய்யிறை முன்வந்து ஏலீ திருமுன்னே
செய்தேன் பொருத்தனை நானன்றே -மெய்யவர்

தேவனிடம் தேவனுக்காய் கேட்ட மகனிவன்
தேவன்முன் எந்நாளும் சேவைக்காய் -தேவனுக்கே

ஊழியஞ் செய்திட நேர்ந்தேன்நான் அந்நாளில்
தோழனவன் ஏற்றிடும் சீர்

I சாமு கலி 2

கர்த்தரைத் துதித்து அன்னாள் பாடிய பாட்டு



சீலோவில் வாசம்செய் நற்றேவா நீரன்றோ
மேலிறை உம்மைப்போல் வேறொரு -சீலவர்

இல்லை; மனமகிழ்ச்சி தந்தீர், பகைஞர்வீழ்
நல்லவரே கன்மலை நீர்தானே -அல்லவர்காள்

மேட்டிமைப் பேச்சது வேண்டாம் இனிமேலும்
நாட்டார் அகந்தைச்சொல் விட்டிடும் -வீட்டுறை

நன்கர்த்தர் செய்கைகள் தற்செயலே காணீரோ
நன்கர்த்தர் ஞானமுள்ள வர்சீரே -இன்னார்

பலமுள்ளோர் வில்முறிய தள்ளாடி யோரை
பலத்தால் இடைக்கட்ட; முட்டப் -பலப்புசித்தோர்

சோற்றிற்காய் வேலைசெய்ய; வன்பசித்தோர் உள்மகிழ
பேற்றில் மலடிக்கு ஏழுமகன் -ஆற்றி

நிறையபெற்ற தாயோ பலமின்றிப் போனாள்
நிறையவர் கொன்று உயிர்க்க -கறைமனிதன்

செய்கிறார்; செல்வமும் இன்மையும் கையளிப்பர்
செய்யின் சிறியோன் எழுப்புவீர் -செய்யின்

எளியவனைக் குப்பை யினின்றவர் மேல்செய்
தெளியோன் அமைச்சொ டமர -எளியோன்

அரசனின் செங்கோல் அளிக்கிறார்; பூமி
அரசராம் கர்த்தரின் சொத்து -அரசராம்

தூயவரின் பாதங்கள் விட்டுவில காவண்ணம்
தூயவரைக் காப்பார்; கொடியோரோ -வேயிருளில்

பேசா திருப்பர்; பெலத்தாலே ஆகுவதில்
பேசும் திருவோடு வீண்வழக்கு -ஆசென

நீதிசெய் தீர்த்து; சொரிந்தார் பெலன்கொம்பு
வேத ருயர்த்து மிறை

I சாமு கலி 3

சாமுவேலின் வளர்ச்சி



அன்னாளோ டங்குப் பணிந்திட்டான் சாமுவேல்
அன்றிலிருந் தங்கே தரித்தனன் -அன்றாடம்

சீலோ திருப்பணியைச் செய்தான் திருமகன்
சீலோ இறைவன் வசமாகி -சீலவன்

சாமுவேல் நன்றாய் வளர்ந்தான் இறைமுன்னே
சாமுவேல் தாயார் வருவாளே -சாமுவேல்

சீராய் அணிந்திட சட்டை எடுத்துவர
சீரவள் ஆண்டிலொரு நாளில்தான் -சீரவன்

சாமுவேல் மேலாடை மேற்சணல் ஏபோத்து
தீமையற ஆங்கே அணிந்தேதான் -சீமானாய்

மாந்தர் இறைவன் இருதிறத்தார் சேர்த்தங்கு
மாந்தவன் அன்பில் வளர்ந்தனன் -மாந்தனவன்

ஏலியும் சொன்னான், மகனைநீ நேர்ந்திட்டாய்
வாலவய தில்மேலோர் சீலவர் -சாலவே

தந்திடுவார் செல்வம் உமக்கென; பெற்றாளே
சந்தானப் பிள்ளைகள் ஐந்து

I சாமு கலி 4

ஏலியின் பிள்ளைகள் இசுரேலில் செய்த பாவங்கள்



ஏலி கறைமைந்தர் வன்செய்கை செய்தாரே
ஏலி அறிந்தும் தடுக்கவில்லை -ஏலி

செவிகேட்டான் கூடம் வரும்பெண்டிர் கூட
அவிக்கலவி செய்தார் பிழன்று -அவிசாவீர்

ஏன்மக்காள் ஈதுப் புரிகின்றீர் என்கேட்டு
வான்கர்த்தர் நேமங்கள் மீறிட -ஏன்நீரும்

செய்கின்றீர் என்றான் திருவவன், செய்கைகள்
செய்வதை மக்கள் விடாதிருக்க -மெய்யில்

பினகாசு ஒப்னி துறடெடுத்து வேகும்
நனிபலியில் பங்குதனை முன்னே -வினைப்பிடுங்க

மக்கள் வெறுப்பினால் கொண்டுவரா விட்டனர்
மக்களவர் போனார் பிழன்றங்கு -மக்களவர்

ஆசரிய பாகம் தருமின்னே வேலைக்கேள்
ஆசரிய பாகம் தருவோம்யாம் -வீசை

பொறுமென்றால் இல்லை பொறுக்கமாட் டோம்யாம்
கறைமனிதர் செய்தார் பிழையாய் -சிறப்பைத்

தரவில்லை என்றால் பலியினின் றிப்போ
தராவுந்தன் கையெடுப்போம் என்சொல் -தரங்கெட்ட

மாந்தர் இருவரையும் கொல்ல இறைவனார்
மைந்தனின் தந்தைக்கு வாக்கு

I சாமு கலி 5

ஏலியின் பிள்ளைகள் சாவார்கள் என்று ஏலிக்கு இறைவாக்கன் வந்து சொல்லுதல்



அடிமைத் தனவீடாம் மேலெகிப்து நாட்டில்
அடிமையாய் நின்றனர் முன்னோர் -அடிமை

விலக்கியென் முன்னே பலியெலாம் தந்தேன்
அலராகும் மைந்தர் மதித்து -அலராது

எப்போதும் உம்கிளை நிற்பர் எனும்வாக்கு
இப்போதே தள்ளினேன் இன்றேதான் -தப்பாது

என்னை உயர்த்தும் மனிதர் உயர்த்துவேன்
அன்றேல் மனிதரைத் தாழ்த்துவேன் -நன்றில்

கிளையில் இனிமூப்பன் வாரான்கேள் ஏலீ
கிளைகள் வயதுசெல்லா சாவர் -கிளையிவர்

ஈராண்மேல் வந்திடும் காண்குறி; வந்திடச்செய்
சீராணாய் ஓராண் எழுப்புவேன் -சீராண்

புவிமீந்தோர் சீரில் பலியிலே கொஞ்சம்
அவித்ததோ தாருமே போதும் -அவிசாவர்

ஈராண் கிளைகள் ஒருநாளில், விண்வாக்கு
சீராய் இறைவாக்கன் சொல்

I சாமு கலி 6

சாமுவேல் சிறுவனாக இருந்தபோதே கர்த்தர் அவனிடம் பேசுதல்



ஏலிக்கு முன்பாய் திருப்பணி செய்தனன்
மேலவர் வாக்கோ வியனாகி -மேலவர்

யாருக்கும் காணப் படவில்லை யாதலால்
சீரில் இருந்த இனமது -சீரில்லா

கண்ணிருண்ட ஏலிதூங்க, சாமுவேல் ஆலயத்தில்
கண்மூடா தேயிருக்க கேட்டனன் -விண்ணவர்சொல்.

கேட்டு, படுத்திருந்த ஏலியிடம் நீரெனை
கேட்டழைத்த காரணம் யாதென -கேட்டோ

அழைக்கவில்லை நானுனை சொல்லத் திரும்ப
அழைத்தாரே விண்ணவர். சீராண் -அழைக்கவும்

கேட்டு, படுத்திருந்த ஏலியிடம் நீரெனை
கேட்டழைத்த காரணம் யாதென -நாட்டார்நீர்

சாமுவேலே என்றென்னை நீரழைத்தீர் என்றனன்
சாமுவேலே, நானழைக்க வில்லையப்பா -சாமுவேலே

தூங்கு இடம்சென்று கண்களைப்போ என்னமோ;
தூங்கிடம் சென்றான் திருச்சேயோன் -ஆங்கவன்

கர்த்தர் இடைபடுதல் தன்னை அறியானே
கர்த்தர் திரும்ப அழைக்கவும் -தர்க்கம்

செயாதே திரும்பப்போய் கேட்டான் அழைத்து
செயவேண் டியதைச் சிறுவன் -இயலிலா

ஏலி உணர்ந்தனன் சீரழைப்பு வந்ததென
ஏலி பகன்றனன் சாமுவேலே -சீலவர்

சொல்லினி கேட்டால் உரைத்திடு: "ஆண்டவரே
சொல்லும் இருக்கின்றேன் நான்என்று" -சொல்லார்த்

திருவந்து நின்று; சிறுவா!, திருவே
திருவே பகரும் அடியேன் -திருச்சொல்

திருசொன்னார் செய்யும் செயலது கேட்கும்
திருவினத்தின் நித்தம் ஒலியே -திருயான்

தொடங்கி முடிப்பேன் கறைமக்கள் வாழ்க்கை
அடக்காது போனான் கெடுசொல் -விடுத்தும்

குடும்பம் அழிய திருத்தீர்ப்பு செய்து
இடும்பு பலியால்போ காது -மடியோன்

விடியல் வரைபடுத்து கோவிற் கதவை
விடியலில் வந்து திறக்க -விடியலே

ஏலி அழைத்தனன்: சாமுவேலே சொல்லிடு
சீலார் பகர்சொல் விடாதுநீ -சீலோய்

மறைக்காதே ஒன்றும் சிறுவா, திருமுன்
மறைக்கா திருக்க பகர -மறையவர்

சொல்லை அறிவித்தான்; ஏலி மறையவர்
வல்லார் நலம்செய்வார் காண்

I சாமு கலி 7

ஏலியின் மகன்கள் போரில் தோற்றுப்போகுதல் மற்றும் தேவனுடைய பெட்டி போரில் பிடிபட்டுப் போகுதல்



சிறுவன் வளர அவனுடன் சீரார்
சிறுவனிடம் சொன்ன அனைத்தும் -மறையவர்

போக விடாது நிறைவேற்றி சீலோவில்
ஏகர் அருளினார் சொல்தனை -மாகோன்

இசுரேல் இனத்தார் இறைவாக்கன் என்றே
இசுரேல் வரைமுழுதும் அங்கே -திசையெலாம்

நன்விளங்க வைத்தார் இறைவனார் தாண்முதல்
தென்பெயர் சேபா வரையிலே -நன்றாய்த்

திருச்சொல் நிறைவேற வந்த தினத்திற்
திருச்சொல் லதுமாங்கு போர்செய் -கரையெதிர்

வன்னார் பெலிசுதர் வந்தனர் ஆப்பெக்கு
மன்னரிலார் என்றே இனமெதிராய் -அன்னார்

பெலிசுதர் முன்னே எதிர்நின்ற போரில்
பெலிசுதர் முன்னே முறிந்தார் -அலைமக்கள்

ஓட, விழுந்தனர் நாலா யிரமினத்தார்
நாடி விரைந்தார் திருத்தேடி -நாடார்

திருச்சொல் வருமென நாடியவர் சீலோ
திருவிடம் வந்துநிற்க ஆங்கே -திருமுன்னே

ஏலியின் மைந்தர் இருக்க, இறைப்பெட்டி
ஏலி தமரே யெடும்பெட்டி -சீலார்

இறைவனார் வெற்றித் தருவார் எனவே
இறைப்பெட்டி தன்னை தமரேந் -திறைப்பெட்டி

போர்முனைக்கு வந்திட ஆர்பரித்தார் மக்களும்
போர்தனில் வெற்றிகொண்டாற் போலவே -நேர்ப்போரில்

போர்க்களத்தில் பெட்டிவர போனார் பெலிசுதர்
போர்க்களத்திற் பெட்டி எடுத்துவந் -தார்ஏனோ

சீரிறை பற்றி அறிந்துள்ளோம் நாமெல்லாம்
வேரில் அழித்தார் எகிப்துதனை -போரிலே

முன்னர் இதுவகை ஆகவில்லை மேதவர்
என்னே இறைவன் திருவினத்தை -நன்றாய்

வனங்காத்தார் அன்றோ. அவர்வந்த தாலே
இனமே அடிபணியா தீரே -இனமதோ

முன்விட மான இசுரேல் முறிந்தோடி
முன்சென்ற முப்பதி னாயிரம் -பின்வீழ

ஏலி தமரிருவர் சாக இறைப்பெட்டி
சீலாரில் கையில் பிடித்து

I சாமு கலி 8

ஏலிக்கு தேவனுடைய பெட்டி பிடிபட்டு போனதையும் அவனின் மகன்கள் மரித்ததையும் சொன்னவுடன் அவன் விழுந்து மரித்தல்



பென்யமீன் ஆளொருவன் தப்பியோடி வந்தனன்
தன்னாடை தானே கிழித்தவன் -அன்றே

நகர்சீலோ வந்து உரைக்க கலக்கம்
நகர்மேல் இறங்க புலம்ப -நகருள்

புலம்பலின் சத்தம் தனைக்கேட்ட ஏலி
புலம்பலிது ஏனோ அறிய -புலம்பியோரில்

ஓராளைக் கூப்பிட்டு என்னயிது தீப்புலம்பல்
சீரினத்தின் போர்செய்தி யோயென, -கோரியவன்

செய்திகொண்டு வந்தோ னிடம்கேட்டான் ஏலியும்
செய்திசொல் என்ன நடந்தது -செய்திகொண்டு

வந்தோன் பகன்றான் இருமக்கள் செத்தாரே
வந்தவரோ பெட்டி எடுத்துசெல -அந்நாளில்

தொண்ணூற்று எட்டு வயதான ஏலியவன்
விண்ணவரின் பெட்டி பிடிபட்ட -விண்விண்

மனம்வீழ் விழுந்தனன் ஆலய வாயில்
தனிலே பிடரி முறிந்து -இனவாண்

இசுரேல் இனத்தை சிறப்பில் நடத்தி
இசுரேல் இறைமாந்தன் செத்தான் -இசுரேலை

நாற்பது ஆண்டுகள் ஏலி நடத்தினான்
சேற்றில் விழுந்த யினமது -ஆற்றாது

ஏலியின் பிள்ளை பினகாசின் பெண்மனையாள்
ஏலிதமர் தன்கணவன், மைத்துனன் -வேலியில்

செத்தார் எனக்கேட்டு பெட்டி பிடிபட்ட
சத்தம் தனைக்கேட் டதிர்ந்தனள் -அத்தாள்

நிறைமாத கர்ப்பம் பிரசவிக்க ஆங்கே
இறையுனக்கு ஆண்தந்தார் சொல்லை -கறைமங்கை

கேளாது, போயிற்று நாட்டவர் மேன்மைதான்
வேளையிலும் மங்கை அதிர்ந்தனள் -வேளையில்

பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டு
பிள்ளை பெயரின் பொருளது -அள்ளக்

குறையாமல் இங்கிருந்த மேன்மை இலாது
கறைநில மாக குறைந்து

I சாமு கலி 9

பெலிசுதர் கர்த்தரின் பெட்டியை எடுத்துக்கொண்டு தாகோனின் கோவிலில் வைக்க தாகோன் சிலை பெட்டிமுன் விழுதல், இரண்டாம் நாள் தாகோன் சிலை உடைபடுதல்



வெற்றிவெற்றி என்றே கிடைத்ததைக் கொண்டாட
வெற்றிபெற்ற வன்னார் பெலிசுதர் -நற்றவரின்

பெட்டிதனை வீண்சிலையாம் தாகோனின் ஆலயத்தில்
விட்டுவைத்து போனார் இரவுதனில் -விட்டு

விடியவும் ஊரார் சிலைபணிய வந்தால்
அடிபணிந்து பெட்டிமுன் வீழ்ந்த -நெடுசிலையைக்

கொண்டுவந்து பின்னரும் வைத்தனர் வன்னினம்
கொண்டுவைத்து போனார் இரவுதனில் -அண்டம்

விடியவும் ஊரார் சிலைபணிய வந்தால்
அடிபணிந்து பெட்டிமுன் வீழ்ந்த -நெடுசிலையின்

கற்றலையும் கைகளும் ஆங்கே படிதனில்
நெற்றிபட வீழ்ந்து கிடந்தது -அற்றின்

தலையதும் கைகளும் வெவ்வேறாய் ஆங்கே
சிலைமூன்றாய் பெட்டியின் முன்னர் -சிலையொடிந்த

காட்சிகண்டு மக்கள் பதற, இறையச்சம்
காட்சிகண்டோர் தன்னைப் பிடித்தது -மாட்சித்

தலைகைகள் ஆங்கே படிதனில் கண்ட
சிலைபோற்றும் மக்கள் இனிமேல் -சிலைகோவில்

தன்னின் படிமிதியாப் போக வெறுங்கடன்
தன்னை பிறப்பித்தார் வீண்

I சாமு கலி 10

பெலிசுதரை கர்த்தர் வாதித்தலும் அவர்கள் கர்த்தருடைய பெட்டியை திருப்பி அனுப்புதலும்



அந்நகர மக்களை கர்த்தரவர் வாதிக்க
அந்நகரின் எல்லைக்குள் வந்தவர் -அந்நகரின்

வாதையால் பாடுபட வீண்சொன்னார் அந்தோயேன்
வாதிக் கிறாரோ இறையவர்? -மேதார்

அதிபரைக் கூடிவரச் செய்து புலம்ப
அதிபர் உரைத்தார் இறையின் -இதுபெட்டி

காத்தூரைச் சுற்றி எடுத்து செலவங்கே
காத்தூரை வாதை பிடித்திட -ஆத்தாடி!

காத்தூரின் மக்கள் இறைபெட்டி தன்னேயே
காத்தூரை விட்டவர் எக்ரோனை -காத்தூரார்

சுற்றிவிட ஐயகோ ஐயகோ தேவபெட்டி
சற்றும் விடாது யெமையிங்கு -நற்றார்

இறைவனார் வாதை மிகக்கொடுமை யாக
இறைதந்த மூலநோய் வாதை -இறையிலா

மக்கள்மேல் வந்துபலர் சாக, வினைநோயால்
மக்கள் குரலிட்டார் அங்கவர் -தக்கார்

மரிக்காத மக்களுள் மூலநோய் வாட்ட
மரிப்போமே இப்பெட்டி யாலே -மரிக்கா

திருக்க அனுப்பி விடும்பெட்டி மீண்டும்
திருவின் இனத்துள் திரும்ப -திருவின்

இறைப்பெட்டி ஏழுமாத காலம் பெலிசு
கறைதேசம் தன்னில் இருக்க -இறைவாதை

தாங்காத மக்கள் சிலைபூசை செய்யுமப்
பாங்கில் மனிதர் அழைத்திட -ஆங்கே

இறைப்பெட்டி தன்னைத் திருப்ப செயலாய்
சிறப்பு செயல்கேட்க ஆங்கே -இறைவனுக்குக்

குற்றந்தீர் காணிக்கை யாக சிலைகளை
குற்றமிலாப் பொன்னாலே செய்திடும் -அற்றார்

அசுதோத் அசுகலோன் காத்எக்ரோன் காசா
திசைஐந்து செல்வநகர் தன்னிற் -மிசைபூசை

செய்வோர்சொல் நோய்போல் சிலைசெய்து பெட்டியில்
செய்ததை வைத்தார் சிலைகளை -செய்தார்

எலிகளால் வாதை அதிகமாய் ஆக
எலியை சிலையாக்கி வைத்தார் -பலசிலைகள்

வாழ்கிராம எண்ணிக்கைக் காக இனக்கிராம
வாழ்மக்கள் செய்தனர் ஆங்குதான் -பாழ்மக்கள்

செய்வித்த இச்சிலைகள் வேறுபெட்டி தன்னிலே
பொய்வைத்தார் மக்கள் சிலைபூசை -செய்வோர்சொல்

கேட்டு இரண்டு கறவைப் பசுக்களை
பூட்டினர் வண்டில் தனிலவர் -நாட்டில்

இறைவாதை என்றால் யிதுதனது எல்லை
சிறப்பாகச் செல்லுமே நேராய் -சிறப்பாக

பெத்சிமேசின் எல்லைக்கு நேராய் விரைந்தது
பெத்சிமேசு வந்துவயல் நின்று

I சாமு கலி 11

பெத்ஷிமேஸ் ஊரார் பெட்டிக்குள்ளே பார்க்க அவர்களுக்கு வந்த வாதை



பெட்டிவர ஆங்கு களிப்புண்டு லேவியர்
பெட்டிவந்த வண்டில் பசுக்களை -பெட்டிமுன்

ஆங்கே பலியிட்டு ஆர்ப்பரித்து கொண்டாட்டம்
ஆங்கே களிப்பு நிறைந்திட -தாங்காக்

களிப்பாலே மக்கள் வழிதவறி ஆங்கே
அளியிறைப் பெட்டிக்குள் பார்க்க -எளிதில்

சினங்கொளா நல்லிறைக்கு ஏறு சினத்தால்
இனம்பலர் செத்தன ரங்கு -இனத்தாருள்

ஐம்பது ஆயிரம் சேர்த்து எழுபது
தீம்பட கண்ணாலே பார்த்திட -ஆம்சினத்தால்

மாண்டார் இனமங்கு பாழாகி வீணராய்
மாண்டதால் பெட்டி அனுப்பினர் -அண்டையூர்

கீரியாத் யாரீம்சீர் பெட்டி யெடுத்துநீர்
சீராகச் செல்வீர் இனம்

I சாமு கலி 12

தேவ பெட்டியை எலெயாசர் வீட்டில் கீரியாத் யாரீமில் வைத்தலும் சாமுவேல் அவர்களை சிலைகளை அகற்றிச் சுத்திகரிக்கச் சொல்லுதலும்



செய்திகேட்டு வந்தனர் கீரியாத் யாரிமியர்
மெய்யவர்தம் பெட்டி எடுத்தவர் -பொய்யிலான்

லேவி எலெயாசர் தம்மையவர் தூய்ப்படுத்தி
மேவிகாக்க வைத்தார் சிறந்தங்கு -ஏவா

திருபது ஆண்டுகள் பெட்டி இருக்க
இருமினம் எல்லாரும் சேர்ந்து -திருவவர்

தன்னை நினைத்துப் புலம்பிட சாமுவேல்
தன்னினம் நோக்கிப் பகன்றனன் -நீங்கள்

முழுமன தோடே திருயிறை நோக்கி
வழுச்சிலை எல்லாம் அகற்றி -முழுமையாய்

கர்த்தர் ஒருவரையே போற்ற, பெலிசுதரை
கர்த்தரவர் நீக்குவாரே காண்சீராய் -கர்த்தரல்லா

வீண்சிலை வீண்கோல் மரவெள்ளி எவ்வித
வீண்செய்கை விட்டு இனத்தவர் -அப்போ

இசுரேலர் நீர்மொண்டு ஊற்றியவர் நோன்பாய்
இசைந்தார் மிசுபாவில்; அன்றோ -மிசுபாவில்

வந்தோர் பகன்றனர் பாவியர் என்றவர்
அந்நாள் அறிக்கையைச் செய்து

I சாமு கலி 13

பெலிசுதருக்கு எதிரான யுத்தத்தில் இசுரேலை வெற்றிபெற இடிமுழக்கங்களை கர்த்தர் அனுப்புதல்



சாமுவேலே சாமுவேலே எங்களுக்காய் மன்றாடும்
சாமுவேலே என்று கதறிட -சாமுவேல்

பால்குடிக்கும் மேக்குட்டி தன்னைப் பலியிட
ஆல்கேட்டார் நல்லிறை வன்தானே -கோல்சீரார்

தந்தார் மறுமொழி கர்த்தர் அவனுக்கு
தந்தபலி பின்னர் பெலிசுதர் -வந்தனர்

போரிட ஆங்கு; இடிமுழக்கங் கள்தம்மால்
வீரர் கலங்கடித்தார் சீர்கர்த்தர் -வீரர்

மிசுபா முதலாக பெத்காரீம் நிற்க
இசுரேல் துரத்த பெலித்தர் -திசையோட

மக்கள் பிடித்தார் இழந்த நிலங்களை
தக்கவர் செய்தார் வியன்செய்கை -தக்கவன்

அப்பொழுது சாமுவேல் சேண்மிசுபா வின்னிடையே
தப்பா தொருகல்லை நாட்டியவன் -எப்போதும்

மாறா தவரே எமக்கு உதவினாரென்
கூறி, எபெனேசர் என்றனன் -சீறியே

அப்புறம் எல்லைதனில் வன்பெலித்தர் வாராது
எப்போதும் தாழ்த்தினார்; சீராணாம் -தப்பிலான்

வாழ்ந்திட்ட நாளெல்லாம் கர்த்தரின் கைபெலித்தர்
கீழ்பட நின்ற தெதிர்த்தனர் -வாழ்வோர்

எமோரி இனத்தோடே போரின்றி ஆங்கே
அமைதியாய்ப் போனார் இனம்

I சாமு கலி 14

சாமுவேலின் ஊழியமும் அவனுடைய பிள்ளைகளைப் பற்றி இசுரேலர் முறுமுறுத்தலும்



உயிரோ டிருந்ததன் நாளெல்லாம் காத்தான்
வியனாய் இசுரேலை சுற்றி -வியன்மகன்

பெத்தேல் மிசுபாசேர் கில்கால் எலாஞ்சுற்றி
அத்தவன் இல்லத்தில் சேர்ந்தனன் -அத்தவன்

ராமாவில் தானே அவனில்லம்; அங்கமர்ந்து
தேமா இசுரேலில் நீதிதர -ராமாவில்

கட்டினான் பீடத்தை ஆங்கே திருப்பலி
யிட்டிட நேராண் சிறந்தவன் -இட்டனன்

தன்மூப்பில் சாமுவேல் தன்வழி பிள்ளைகளை
தன்னின நீதி விசாரிக்க -முன்வைக்க

பிள்ளையவர் மூப்பன் வழிநடவா வீண்பொருள்பின்
அள்ளியவர் கையூட்டு பெற்றிட -பிள்ளைகள்

மூத்தவன் யோவேல், அபியா இளையோனாம்;
மூத்தோன் இளையோன் இருவரும் -மூத்தவர்

சொல்படி நீதிபதி யாகி, பெயர்செபாவில்
சொல்வழுவிப் சீரில் பிழன்றிட -நல்லார்

இசுரே லினமூப்பர் மூப்பன் வழியார்
திசைதவறக் கண்டு இராமா -திசைவந்து

சாமுவேல் தன்பார்த்து சொன்னார் வயதான
சாமுவேலே கேளீர் தவறிது -தேமா

நடவாது பிள்ளைகள் போனார் தவறி
நடக்கும் வழியுலகில் கண்டோம் -நடத்த

எமக்கு அரசனை ஏற்படுத்தும் சீரே
உமது வழிநடவா சேய்

I சாமு கலி 15

அரசனை ஏற்படுத்தும் என்று சாமுவேலிடம் இனத்தார் கேட்குதலும் இனத்தார் என்னை தள்ளிவிட்டனர் என கர்த்தர் கூறுதலும்



அரசனை ஏற்படுத்தும் என்ற அவர்சொல்
இருந்ததே தக்கா ததாக -விருப்பம்

தனைசெய்தான் விண்ணப்பம் சாமுவேலும் ஆங்கே
வினையிறை சொன்னார் விடையை -இனத்தவர்

மக்களின் சொல்லெலாம் கேள்மகனே என்றாரே
மக்கள் உனைத்தள்ள வில்லைகேள் -மக்கள்

எனையாளும் மேன்மை சிறப்பினின்று தள்ளி
வினைச்சொல்லார் வீணர் இவர்தாம் -அனைவர்

எகிப்தி லிருந்து புறப்பட்ட நாளாய்
வகையினம் என்னைவிட்டு, வேறே -தகாசிலை

தேவர் களைப்போற்றி எல்லாச்செய் கைபடியே
மேவிசேய் கின்றார் உனக்குமிங்கு -மேவியே

உன்மனதில் உள்ளவை தன்னைநீ சான்றாக
வன்னரசன் வந்தால் செயலதை -என்னினம்

கேட்க உரைத்திடு என்றதும் சாமுவேல்
கேட்டவர்க்கு சொன்னான் உரைத்தனன் -நாட்டாள்

தனக்கெனத் தேரும் அதன்முன்னே யோட
தனக்கென செல்வரும் நாட்டின் -இனத்தின்

வழியோரைக் கொண்டுசெல்வான்; பெண்டிர் தனையே
இழிசெய் சமையல் சமைக்க -வழியோர்

நிலவள உம்மின் அறுப்பில் சிறப்பை
குலவரசன் கொண்டுசெல்வான் வேலை -நலனிற்காய்

ஆயிரம் பேர்சேர்த்து ஆள வழியாரை
வேய எடுத்துச்செல் வான்சீராய் -ஆயமாய்

நெல்லோடு சாறும் ஒலிவம் அனைத்திலும்
வல்லவன் பத்தில் ஒருபங்கு -வல்லவனின்

ஊழியர்க்கை தண்டியே வாங்குவான் சீர்வரி
ஊழியரை கொள்வான் அரசனவன் -ஊழாக

மாக்களில் பத்தில் ஒருபங்கு கொள்வானே
தாக்க அவனுக்கு வேலையாளாய் -ஆக்கம்

குறைந்தே அழிபோவீர் மக்களே சீரில்
குறைகண்டு ஆண்டான் நிமித்தம் -கறையவர்

நீங்கள் முறையிட அந்நாள் முறையீடும்
தாங்கா வலியையும் காணாது -ஏங்கிடச்

செய்ய செவிதாரார் கர்த்தரவர் என்றவன்
மெய்யார் இறைச்சொல் பகரவும் -வெய்யாரோ

சாமுவேலின் சொல்லதைக் கேட்க மனதில்லா
ஆமே எமக்கரசன் வேண்டுமென்று -பாமரரைப்

போரில் வழிநடத்த முன்செல்ல வேண்டுமே
பாரில் உளார்போல் அரசென -சீரில்சொல்

சாமுவேல் கேட்டு இறைவன்முன் சொல்லிட
சாமுவேலை சீர்நோக்கி: சொல்லைக்கேள் -சாமுவேலே

ஆள ஒருவரசன் ஏற்படுத்து என்றதும்
ஆள அரசனைத் தேடு

I சாமு கலி 16

சவுல் தன் கழுதைகளைக் காணாது தேடி அலைந்து சாமுவேலிடம் வருதல்



பென்யமீன் சீர்குலத்தில் வல்லாண் பெயர்கீசு
இன்னான் மகன்சவுல் என்றழகன் -அன்றைய

ஆணழகன் தானே, இசுரேலில் காணசீர்
ஆணழகன் வேறில்லை யாங்குகேள் -ஆணவன்முன்

மற்றோர் அவனெதிரே குள்ளமாய் தோள்க்கீழே
சற்றே குனிந்து பலர்க்காண -சற்றென

கீசின் கழுதைகள் காணாமற் போயின
கீசோ, மகனவற்றை தேடுயென -கீசுமகன்

வேலையா ளோடு புறப்பட்டான் தந்தைசொல்
வேலை தனைதலைமேல் ஏற்றவன் -வேலையாளும்

சீர்மகனும் தேடி கழுதைகள் காணாது
சேர்சாலீம் நாட்டைக் கடந்தனர் -நேர்மேல்கீழ்

எங்கெங்கும் தேடி அவைகளைக் காணாதே
எங்கெங்கும் தேடினோம் நாமவற்றை -எங்கேயும்

காணவில்லை, எந்தை எமைக்குறித்து, போனானே
காணாக் கவலையுறு வார்சீரார் -காணுமே,

வேலையாள் சொன்னான், இதோநகருள் தேவனின்
வேலைசெய் மாந்தன் இருக்கிறார் -சீலவர்

சொல்படி எல்லாம் நடக்குமெனக் கேள்வியுற்றேன்
சொல்கேட்போம் தேடும் வழிதனை -சொல்கேட்டு,

சென்றாலும் என்னத்தைக் கொண்டுசெல்வோம் அன்னாரைச்
சென்றுகாண; திண்பண்டம் எல்லாமே -தின்றுதீர்த்தோம்

தேவனு டையார் அவருக்குக் கொண்டுபோக
மேவுநல் காணிக்கை யில்லைகையில் -ஏவன்:

இதோகாண்பீர், என்கையில் இன்னும்கால் சேக்கல்
இதோவெள்ளி உள்ளதே என்று -அதைநாமும்

தேவனு டையமாந்தன் நம்வழியைச் சொல்லவே
மேவுநல் காணிக்கை யாய்கையில்; -மேவியோர்

அக்காலம் தேவன்சொல் கேட்க வழிபோவோர்
தக்கா ரிடம்பேசு மாந்தனை -அக்கால

மாந்தரவர் ஞானங்காண் மாந்தனே என்றழைப்பர்
மாந்தருள ஞானங்காண் சீர்தனை -மாந்தா

சரியாகச் சொன்னா யடாநீயும் போவோம்
சரியார் வழிகேட்க நாமும் -இரும்நகரில்

பெண்களைக் கண்டு திருஞான மாந்தரிங்கு
பெண்களே உள்ளாரோ சொல்மின்னே -பெண்கள்:

விரைந்துபோம் மாக்கள் பலியிட வந்தார்;
விரையும் இனத்தார் பலிசெய்ச் -சிரந்தாழ்த்தி

தக்கார் வரும்வரைக் காப்பார்; அவர்வந்து
தக்கபலி வாழ்த்தவே ஊண்

I சாமு கலி 17

சாமுவேல் சவுலுக்கு சிறந்ததாக எடுத்துவைத்த உணவைத்தருதல்



நகர்நடுவே போனால் அவர்கள்முன் மேடை
நகரதின் மேலேற ஞானி -தொகைக்காண

வந்ததும் கண்டான் சவுல்வரும் முன்னாளே
நாளையிந் நேரத்தில் ஆண்வருவான் -நாளையே

பென்யமீன் நாட்டானை உன்னிடத்தில் நானனுப்ப
பென்யமீனன் என்மக்கள் ஆளவே -நன்றாய்

அரசனாக ஏற்படுத்த தைலநீ ராட்டி
அரசனாக்கு என்னினம் மேல்நீ -அரசாய்

அவனெனது மக்களை வன்பெலிசர் கையின்
றிவன்காப்பான் என்மக்கள் வீணர் -இவனைப்போல்

மன்னனை வேண்டிவந்த கூக்குரல் வந்தடைந்து
என்முன்னே கேட்டேன் முறைதானே -அன்னார்

சவுலின் முகத்தினைக் கண்டதும் சொன்னார்
இவனே அறிவித்த அம்மான் -இவனே

இனமாளத் தேர்ந்தேன்; சவுலங்கு கேள்வி
வினைஞான மாந்தனின் வீடு? -வினையினம்

ஞானச்சொல் சொல்வோன் எனவென்னை சொல்வார்கள்
ஞானச்சொல் கேள்மேடை மேல்நீபோ -ஞானியோடு

இன்று புசித்திட வேண்டும்நீ; நாளைகாலை
உன்மனக் கேள்விக்கு சீர்விடை -உன்செய்யில்

மூன்றுநாட்கள் முன்காணா மற்போக் கழுதைமேல்
ஏன்கவலை கொள்கிறாய், விட்டுவிடு -என்னினம்

யாரையிங்கு கண்ணோக்கி நாடுவது? உன்னையும்
உன்வீட்டார் தன்னையன் றோயென -என்ன!,

விடையாய் சவுலும், இசுரேலில் சின்ன
இடையர் குலமெனது அன்றோ; -இடத்திலே

பென்யமீனர்க் குள்ளே வழியெஞ் சிறிதன்றோ
என்னிடத்தில் சொல்கிறீர் ஏன்வகை? -அன்னார்

சவுலையும் வேலைசெய் வோனையும் சேர்த்து
தவருண்ணும் மேடை அழைத்து -அவருக்குள்

மேன்மை யிடந்தன்னில் உட்கார வைத்தவன்
ஏனோ திகைத்தனர் உண்ணவந்த -மேன்சீர்

அழைத்தவருள் பல்லோர் தலைவர்கள் ஆங்கே;
அழைத்தான் சமையல்செய் மாந்தன் -அழைத்துமுன்

சொன்னபங்கு எங்கே அதைக்கொண்டு வந்துவை
சொன்னபடி என்றான் திருவவன் -அன்னான்முன்

அப்பொழுது முன்னந் தொடையோடு ஊனையும்
தப்பா தெடுத்துவந்து வைத்தனன்; -அப்பொழுது

சாமுவேல்: வைத்த திருவுண்டி உண்டிடுவீர்;
சாமுவேலோ டேஉண் டனன்சேர்ந்து -சாமுவேல்

மேடைவிட்டு வந்தபின்பு மேல்வீட்டில் சீரவன்
பேசினான் சீர்மாந்தன்; வெவ்வேறு -பேசி

விடியவும் சாமுவேல் மேல்வீட்டின் மேலே
கடையழைத்து: ஆயத்தம் ஆகு

I சாமு கலி 18

சவுலை தனியாக இருக்கும் போது அரசனாக சாமுவேல் அபிஷேகித்தல்



சவுலவன் ஆயத்தம் ஆனபோது, ஆங்கே
சவுலோடு சேர்ந்துவந்தான் சீராண் -சவுல்போக

பட்டணத்தின் நற்கடை மட்டும் இறங்கிவந்து
எட்டிவேலை போகச்சொல் நீயவனை -எட்டிசெல

இப்பொழுது தேவனிறை சொல்லியச் சொல்தனை
தப்பாது கேட்க தரித்துநில் -அப்பொழுது

சாமுவேல் தைலத்தின் குப்பியை, ஆண்தலைமேல்
சாமுவேலும் வார்த்திட்டு, முத்தமிட்ட -சாமுவேல்

கர்த்தரே உன்னைத் தமதினம்மேல் சீராணாய்
கர்த்தர்நீ ராட்டினாரன் றோசீரே? -கர்த்தர்சொல்

இன்றைக்கு என்னைவிட்டுப் போம்போது, பென்யமீன்
நன்னெல்லை செல்சாகில் ராகேலின் -நன்னறை

அண்டை இரண்டு மனிதர்சொல் வந்ததே;
அண்டமெலாம் தேடிய ஙேயிங்கே -அண்டத்தில்

உன்தந்தை சென்ற கழுதைகள் வந்தாலும்
என்மகன் வந்துசேரா காரணம் -என்னவென

கேட்டுத் தவிக்கின்றார் போம்நீர் விரைவாக
நாட்டார் உரைப்பார் உனக்கவர் -நாட்டான்நீ

அவ்விடத்தை விட்டப் புறம்கடந்து போனதும்,
அவ்விட தாபோர் சமபூமி -அவ்விடத்தில்

தேவனை போற்றிட பெத்தேல்செல் மூவருனை
தேவனின் சொல்லென் கொடுப்பரே -மேவியவர்

மூன்றுமேக் குட்டியொடு, மற்றவன் மூன்றப்பம்,
மூன்றாம் மனிதனோ நற்சாறு -மேன்மையாய்

உன்னிடம் செய்திநலன் கேட்டவர் அப்பங்கள்
தன்னை கொடுப்பார் இரண்டுதான் -அன்றுதான்

பின்பெசு சேனையின் ஆயுதச் சாலையின்
நன்தேவ குன்றுக்குப் போவாய்நீ; -என்மகனே

அங்கே நகருள்ளே போகையில், மேடைவிட்ட
மங்கா திறைவாக்கர் கண்டுன்னை -மங்காதே

அப்போ திருஆவி உன்மேல் இறங்குவார்;
அப்பொழுது நீஅவ ரோடுசேர்ந்து -தப்பாது

வாக்குரை சொல்வாய் இறைவாக்கு தன்னைநீ
வாக்குரைத்த பின்மாறு வாய்சீரே -வாக்கின்

அடையாளங் கள்உனக்கு நேரிட ஏற்ற
படியேநீ செய்திடு; தேவன் -உடனே

இருக்கிறார் உன்னோடு ஆதலால் முன்னே
விரைந்திடு கில்கால் நகர்தான் -திருவிற்குத்

தீயில் பலிகள் செலுத்த வருவேன்நான்
வாயாலே நீசெய்ய வேண்டியதை -வேயா

துனக்கு அறிவிக்க, ஏழுநாள் காத்து
நினைந்திரு என்றான் திரு

I சாமு கலி 19

சாமுவேல் சொன்ன அடையாளங்கள் யாவும் நிறைவேற சவுல் மறைத்துக் கொள்ளுதல்



சாமுவேலை விட்டுப் புறப்பட, தேவனார்
தீமையிலா நல்மனதைத் தந்தாரே -சாமுவேல்

சொன்ன அடையாளங் கள்எல்லாம் அன்றுதானே
சொன்னபடி ஆனது ஆங்கேதான் -சொன்ன

மலையருகே வந்தபோது, வாக்கரின் கூட்டம்
அலையாக வாக்குரைக்க ஆங்கே -இலாதவன்

மேலும் திருஆவி வந்திட வாக்குரைத்தான்
ஏலா தவனும் சிறந்தங்கு -சீலாண்;

இதைக்கண்ட மக்கள் இறைவாக்கன் ஆனான்
இதென்ன சவுலும் இறைவாக் -கதைச்சொல

ஏனினவன் எப்போது ஆனான் இறைவாக்கன்
மானவர் கேட்டார் அழன்றவர் -மேனான்

இறைவாக்கு சொல்லி முடித்தபின் வந்தார்
சிறுதந்தை ஆங்கே; மறைந்த -மறையேனோ

என்றுகேட்க, காணாது போனோம்யாம் ஞானியிடம்
நின்றங்கு ஙேகுறித்துக் கேட்டிடத்தான் -சொன்ன

அரச விடயம் எதும்சொல்லா தேயே
விரைந்தனன் வீட்டுள் மறைய -அரசனாய்

ஆங்கே அறிவிக்க சாமுவேல் கூட்டினான்
தீங்கில் மிசுபாசீர் முன்

I சாமு கலி 20

சாமுவேல் சவுலை இனத்தார் முன் அரசனாக்குதல்



இசுரேல் இனத்தாரை நோக்கி: இசுரேல்
இசுரேல்கேள் தேவனாம் கர்த்தர் -திசைச்சொல்

இதுவே: இசுரேல், உனையெகிப்தின் வன்கோன்
வதைவிட்டு காத்தேன் திருயான் -அதுபோலே

உம்மை இறுகப் பிடித்த அரசர்க்கை
உம்மைவிட்டு நீங்கிடக் காத்தேன்நான் -உம்மை

சிறப்பாக காத்தயெனை நீரோ தவிர்த்துப்
புறக்கணித்து வேண்டு மரசு -அறன்குலம்

இப்பொழுது கர்த்தர்முன் உங்கள் குலம்படி
தப்பாது வாரும் இனத்தாரே -அப்போது

வந்தார் இனக்குல பன்னிருவர் வந்தவர்
அந்நாளில் பென்யமீன் நற்குலம் -அந்தகுல

மாத்திரி நன்னாண் குடும்பத்தின் மேல்சீட்டு
மேத்தவன் கீசின் குடும்பனாம் -காத்த

சவுல்மேலச் சீட்டுவர மக்கள் இணைந்து
சவுலைதேட ஆணோ இலையே -சவுலவன்

மக்கள்முன் வந்திடு வானோ இறைகேட்க
தக்கார் விடைதந்தார் ஏனவன் -தக்க

தளவாடங் கள்ளுள் இடத்தில் ஒளிந்தான்
ஒளிந்து யிருந்தவனை வந்தார் -களித்து

அழைத்தங்கு; சீராணோ ஆங்கிரு சீலார்
இருமக்கள் தோள்க்கீழாய் கண்டார் -திருவாண்

தெரிந்தவனைக் காண்பீர் சிறப்பே இருந்தவர்
அப்பொழுது ஆர்ப்பரித்து வாழ்கநீர் -எப்போதும்

என்றென்றும் வாழ்க அரசேநீர் என்றனர்
சாமுவேல் ஆளும் முறைதனை -ஏமயிறை

முன்னே எழுதியங்கு வைத்தனன் சீராக
அன்றவர் எல்லாம் களித்து

I சாமு கலி 21

சவுல் படையோடு சென்று அம்மோனியரை முறியடித்தல்



சவுலும் கிபியாவில் உள்ளவீடு சேர
சவுலின் படைதனில் சேர -அவனிறை

ஏவின மாந்தர் அவனோடே கூடப்போம்
தீவார்ப்பேய் மக்கள் முறுத்திட -ஏவான்

இவனா எமைமீட்பான் என்றுசொல்லி பேயோர்
அவனுக்குக் காணிக்கை தாரா -தவனை

அசட்டைப் புரிந்தனர்; ஆனாலும் கேட்டும்
வசைகேளா தோன்போல் இருந்தான் -திசையினில்

நாகாசு என்னும்தீ அம்மோ னியன்வந்து,
மாகாணம் கீலேயாத் யாபேசை -வேகமாய்

முற்றிக்கை போடவும்; யாபேசின் மாந்தரெல்லாம்
முற்றிக்கை போட்டோன்பால் கூறவும் -அற்றான்

உடன்படிக்கை செய்யும் யெமதோடு என்சொல்
உடன்படிக்கை செய்தால் உமையாம் -உடன்கீழ்

படிவோம் எனக்கூற நாகாசோ கேளீர்
எடுப்பேன்எல் லார்க்கண் வலது -நடுங்கியே

யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இசுரேலில்
நீபேசி சொன்னவை சொல்வோமே -நாபேச

ஏழுநாள் தூதர், எமைமீட்பார் இல்லையெனில்
ஏழுநாள்பின் உம்கீழ் பணிவோம்யான் -வேழாண்வாழ்

தூதர் சவுலின் நகராம் கிபியாவில்
தூதாகி விட்டாரே யாபேசு -காதுகேட்க

அச்செய்தி சொல்லவும் மக்கள் அழுதார்கள்
அச்செய்தி வன்செய் அறிந்தவர் -அச்செய்தி

மாடுபின் சென்றோன் சவுல்கேளா, மக்களும்
வீடுமுன் கூச்சல் அழுவது -நாடிதில்

ஏனோ எனக்கேட்க; யாபேசின் செய்திகளை
வானங்கீழ் சொன்னார் இடுக்கனை -மானவர்ச்சொல்

செய்திகளைக் கேட்டவுடன் தேவனாவி வந்திட
செய்திக்கேள் மிச்சினம் கொண்டவன் -செய்தியாக

ஓரிணை மாட்டைப் பிடித்து, இருதுண்டாய்
சீரவர்க் கெல்லாம் அனுப்பினான் -சீரில்

சவுலின்பின் வாராதோன் சாமுவேல்பின் வாரா
தவனுடைய ஆக்கள் இதுபோல் -அவணியில்

செய்யப் படுமென்று சொல்லி யனுப்பினான்;
செய்யிறை அச்சம் கவிந்தது -மெய்யாக

மக்கள் ஒருமனப் பட்டுப் புறப்பட்டார்
மக்களைப் பேசேக்கில் எண்ணிக்கை -தக்கவன்

எண்ணயினம் மூன்று இலட்சம்பேர், யூதரில்
எண்முப் பதினா யிரம்பேர்கள் -எண்ணியோன்

அங்குவந்த தூதரை நோக்கியவன்: நாளைக்கு
அங்கே வெயில்ஏறும் முன்னதாய் -உங்களுக்கு

மீட்பு கிடைக்குமென கீலேயாத் யாபேசின்
ஆட்களுக்குச் சொல்லுவீர் நீர்தானே -நாட்டில்

மறுநாளில் மன்னன் சவுல்வந்து மூன்று
சிறப்பாய் படையை வகுத்து, -நறுகிழக்கில்

ஆதவன் மேலேறும் முன்னே முறியடித்தான்
வேத வரெதிர்த்தம் மோன்

I சாமு கலி 22

சவுலை ஏற்காதவர்க்கு அம்மோனியர்களின் போரில் வெற்றிபெற சாமுவேல் அவர்களை கடிந்துகொள்ளுதல்



ஆதவன் மேலேறும் முன்னே முறியடித்தான்
வேத வரெதிர்த்தம் மோன்தனை -வேதெதிரி

தப்பித்து சென்றோரில் ஈராகச் சென்றாரில்
அப்பொழுது சாமுவேலை மக்களும் -தப்பாது

தாரும் சவுலை இகழ்ந்தோர் மரிக்கவெட்ட
சீராண் பகன்றான் விடும்சீரே -சீரவராம்

இந்நாளில் கர்த்தர் இசுரேலை மீட்டிருக்க
இந்நாளில் யாரும் மரிக்கலாகா -அந்நாளில்

சாமுவேல் மக்களிடம்: வாரும் அரசைநாம்
ஏம உறுதிசெய்ய கில்காலில் -ஆமென

அப்படியே எல்லாரும் கில்கால் அடைந்திட
தப்பாது கர்த்தர்முன் சென்றவர் -அப்போ

சவுலை அரசனாக்கி கர்த்தர்முன் நற்றாண்
சவுல்பலி யிட்டு மகிழ்ந்து

I சாமு கலி 23

சாமுவேல் இசுரேல் இனத்தோடு பேசி அவர்கள் அரசனை கேட்ட பாவம் குறித்து சொல்லுதல்



சீராண் இசுரேலர் நோக்கி: இதோநீங்கள்
சீராகச் சொன்ன படியெல்லாம் -சீராகச்

சொற்கேட்டு உங்களுக்கு ஓரரசன் ஏற்படுத்தி
சுற்றாரின் முன்னிறுத்தி னேன்நானே -நற்றாண்

அரசனவர் உங்களுக்கு முன்பா யிருக்க
நரைத்த கிழவனாய் ஆனேன் -இருந்தேன்

சிறுவன் முதல்இந்நாள் முன்பாகச் சீராய்
கறையிலா தோனாய்வாழ்ந் தேன்நான் -இறைமுன்

இதோநான், இருக்கிறேன்; கர்த்தரின் முன்பாய்
இதோநான் அரசனின் முன்பாய் -எதும்தவறு

நான்செய்து, ஆயேறு ஏதும் எடுத்தசேதி
நான்செய்தால் கூறும்நீர் சான்றுதான் -ஏன்சீரில்

யாரின் கழுதையை நானெடுத்துக் கொண்டேனோ?
யாருக்கு நீதியில் தீர்ப்பாக்கி -யாருக்

கிடுக்கண்செய் தேனோ? இடும்கையில் காசை
யிடும்கையூட் டென்றுரைத்தே னோசொல் -அடியேனால்

அப்படி யுண்டானால் எல்லாம் திருப்பிடுவேன்
அப்படி யேதுமுண்டோ சொல்லும்நீர் -தப்பிலை

உம்மேல், வகையேதும் செய்திலை என்றார்கள்
அம்மக்கள் சான்றாக அன்றுதான் -அம்மவரே

என்கையில் கையூட்டு ஏதுமில்லை என்பதற்கு
நன்கர்த்தர் சான்றெதிராய் உள்ளாரே -நன்கர்த்தர்

ஊற்றி அரசனாக்கி வைத்த அரசனும்
மாற்று எதிர்சான்று இங்கென -சாற்றி

அதற்கு இனத்தார்: அவர்சான்றே என்று
அதன்பின்னர் சாமுவேல் சொன்னான்: -வதைநாடு

சீரில் எகிப்தி லிருந்து அழைத்துவந்த
சீரார் இருவரைத்தந் தார்சீரே -சீராண்கள்

இப்போதும் கர்த்தர் உமக்கும் உமதுமுன்
தப்பாக செய்த எரிச்செய்கை -இப்போது

கர்த்தர்முன் உங்கள் நியாயத்தை பேசவே
கர்த்த ரினமேநில் இங்குதான் -கர்த்தரினம்

யாக்கோப் வழியார் எகிப்தில் முறையிட
யாக்கோப் வழிநுமது தந்தையர் -ஆக்கயிரு

மாந்தர் திருமோசே ஆரோன் அனுப்பினார்
வேந்தர் அழைத்துவர நாடிதிலே -வேந்தர்

எகிப்தி லிருந்து அழைத்துவந்து, இங்கே
வகையாய் குடியிருக்கச் செய்தார் -அகதேவன்

விட்டிட ஆங்கே சிசெரா படைகளுக்கும்
மட்பெலிசு மோவாப்கீழ் விற்றுவிட -நட்டாரும்

அப்போது கர்த்தரை நோக்கி முறையிட்டு
தப்பே சிலைபோற்றல் என்றவர் -அப்பாவி

மீட்டிடும், உம்மையே போற்றிடுவோம் என்றலற
மீட்டார் சிறப்பாண்கள் விட்டவரே -மீட்டாரே

அம்மோன் மகனாமே நாகாசு கோளெதிர்க்க
அம்மான் இறையே அரசராய் -எம்மானை

விட்டு அரசன் விரைந்தெமக்கு ஏற்படுத்தும்
விட்டு அகற்றினீர் வேந்து

I சாமு கலி 24

இடிமுழக்கங்களை கர்த்தர் அறுப்புகாலத்தில் ஏற்படுத்த, அஞ்சி இசுரேலர் எமக்காக மன்றாடும் என்று சொல்லுதலும் சாமுவேல் மன்றாடுதலும்.



நீங்கள் விரும்பித் தெரிந்தரசு உங்களைத்
தாங்கியாள ஏற்படுத்தி வைத்தாரே -பங்கே

எதிராய் கலகமேதும் செய்யாமல் அஞ்சி
மதிமுழுதும் போற்றுவீரே சீரார் -மதியினால்

அஞ்சி மதிமுழுதும் சீர்போற்ற நீங்களும்
அஞ்சும் அரசனும் வாழ்வீரே -அஞ்சாது

கீழ்ப்படி யாது விலகி கலகமிட
கீழ்ப்போவீர் எல்லாம் அழிந்துவீண் -ஆழ்சேறாய்

இப்பொழுது கர்த்தர் உமதுடைய கண்களுக்கு
தப்பாது முன்செய்யும் செய்கையே -இப்பெரிதே

நின்றுநீர் பாருங்கள். இன்றோ அறுப்பின்நாள்
நின்றுநீர் கேளும் இடிமுழக்கம் -இன்றுமதோ

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு மிப்பெரிதே
கர்த்தரை நோக்கிநான் கேட்கவும் -கர்த்தர்

இடிமுழக்கங் கள்சேர் மழைவரச் செய்தே
அடிப்பார் உணர்ந்திட நீங்கள் -அடித்தார்

இடிமுழக்கங் கள்சேர் மழைவரச் செய்தே
அடிக்க இனத்தாரும் அஞ்சி -அடியவர்

கர்த்தருக்கும் அங்கே திருவாணைச் சேர்த்தஞ்சி
கர்த்த ரிடத்தில் பிழைக்கவே -கர்த்தரை

கேளும் எமதெல்லாப் பாவங் களோடும்சேர்த்
தாள அரசனைக் கேட்டோமே -ஆளரசை

நீங்கள்கேள் பொல்லாப்பை யெல்லாமே செய்தீர்கள்;
நீங்களோ ஆகிலும் கர்த்தரை -நீங்காது

கர்த்தரை உங்கள் முழுமனது கொண்டுநீர்
கர்த்தரை மட்டுமே போற்றிடும் -கர்த்தர்

விலகிநீர் போகா திருங்கள்; பயனில்
சிலைவீணே; மீட்க இயலாச் -சிலைதானே;

கர்த்தரோ உங்களைத் தம்மினம் ஆக்கவே
கர்த்தர் விரும்பிய தாலேதான் -கர்த்தர்

தமதின்சீர் மேன்பெயர்க்காய் மக்களைச் சீரார்
இமைப்பொழுதும் கைவிடமாட் டாரே -இமைமூடி.

நானும் திருவினமாம் உங்களுக்காய் விண்ணப்பம்
ஏனோ புரியா திருந்தாலே -வானார்

எதிராகப் பாவம் புரிவோனா வேனே
அதனால் புரிவேன்மன் றாட்டு -அதனாலே

நன்மையும் செவ்வை யுமான வழியைநான்
இன்றுமக்கு போதிப்பேன் நன்றாக. -நன்கர்த்தர்

அஞ்சி முழுமன தோடண்மைப் போற்றுவீர்
அஞ்சத் தகுசெய்கை எண்ணுவீர் -அஞ்சாது

நீங்களோ விட்(டு)விலகி பொல்லாப்பைச் செய்யவே
நீங்கினால் நீங்களும் உங்களைத் -தாங்கும்

அரசனும் சேர்ந்தழிவீர் விண்ணார்சொல் கேள்மின்
திருவும் பகன்றான் அழிவு.

I சாமு கலி 25

சவுல் பெலிசுதரோடு போர்புரியப்போக சாமுவேல் வரும் முன்னே பலியிடுதல்



சவுலரசன் ஆண்ட இரண்டாம் வருடம்
சவுல்தனக்கு மூவா யிரம்பேர் -அவன்படையில்

சேர்த்து அவன்மகன் யோனத்தான் ஆளபடை
நேராண் கிபியாவில் தான்சேர -வீரராம்

மிக்மாசில் பெத்தேலில் ஈரா யிரம்பேரும்
தக்கான் மகனோடு ஆயிரம்பேர் -தக்கபடி

மற்றவரை தத்தமது கூடாரம் செல்லனுப்பி
நற்றாண் அரசாண்டான் சீராக -நற்றவன்

யோனத்தான் கேபா விலிரும் பெலித்தரை
தானே முறிய அடித்தனன்; -மானப்

பெலித்த ரதைக்கேட்க; தம்எபி ரேயர்
நிலைகேட்க ஊதினான் சங்கு -நிலையில்

நகரில் பெலித்தரைக் கோன்முறிக்க ஆங்கே
வகையாய் இசுரேல் இனமோ -அகலா

அருவருப்பு ஆனார்கள் என்கேட்ட நல்லார்
விரைந்தனர் கில்கால் நகர்தான் -விரைந்த

பெலித்தர் இசுரே லியரோடு போர்செய்
யலையலையாய் தேரோடு வீரர் -இலாதடிக்க

கூடிவந்து, பெத்தாவேல் கீழ்த்திசை மிக்மாசில்
கூடி இறங்கினர் சேர்ந்துகறை -நாடார்

இடும்பைக்காண் மக்கள் கெபிகளிலும், முள்ளின்
கடுங்காடு தன்னில் ஒளிய -கடந்தார்

சிலர்யோர்தான் காத்நாடு கீலேயாத் பக்கம்
அலறா திருந்தான் சவுலோ -அலாதங்குப்

போகா தவரோ சவுலின்பின் சென்றனர்
ஆக இறைவாக்கன் சாமுவேல் -ஈகைபலி

தந்திட வாக்கன் குறித்தந்த ஏழுநாள்
அந்நாளில் காத்தான் மகனவன் -அந்நாளில்

சாமுவேல் கில்கால் வரவில்லை என்றதும்
ஏம இறைகாப்பா ரோயினி -தேமா

எதிரியைக் காணவஞ்சி மக்கள் சிதற
இதைக்கண்டோன் போனான் விதிர்ந்து -இதோயிங்கு

நேர்செலுத்த தீப்பலியை எல்லாம் எடுத்துவா
சீர்செலுத்த என்றே செலுத்திட -நேர்லேவி

சாமுவேல் வந்தான்; சவுல்வணங்க, செய்ததென்ன
சாமுவேல் கேட்கவும், சாமுவேலே -ஏமயிறை

மக்கள் படைவிட்டு போகாத வண்ணமாய்
தக்கார் குறித்த நலநேரம் -அக்காலம்

வாரா திருக்க, பெலித்தரோ மிக்மாசில்
சேருவதால் இட்டேன் பலிதனை -பாருமே

கில்காலில் வன்பெலித்தர் வந்தார் எதிராக
வல்லார் வரக்கூடும் என்றுமினி -நல்லார்

இறைவனை விண்ணப்பம் செய்யவில்லை ஏனோ
மறைபலி யிட்டேன் துணிந்து -அறனில்

மதியீனம் செய்த செயலது கேள்மின்
விதித்த பிரமாணம் விட்டு -இதைசெய்தீர்

இல்லென்றால் கர்த்தர் இசுரேல்மேல் ஆளுகை
நல்லபடி செய்வார் சிறந்து.

I சாமு கலி 26

சவுலின் அரசு நிற்காது என்று சாமுவேலின் முதல் இறைவாக்கு



இப்போதோ உம்மின் நிலைநிற்கா தேயரசு;
தப்பிநீர் போனதால் கர்த்தரும் -தப்பாது

போகவே தம்மனதின் ஏற்ற மனிதனை
ஆகவே தேடுவார் சீர்தானே -வேகமாய்

சாமுவேல் கில்கால் விடுத்து கிபியாசெல்;
சாமுவேல் பேசியபின் தன்னோடு -ஏமாப்பு

செய்ய தொகைபார்க்க அங்கே அறுநூறு
மெய்யிருந்தார் சேர்த்து இனத்தவர் -வெய்யாண்

சவுலும் அவன்மகன் யோனத்தான் சேர்ந்து
அவர்களோ டேயிருக்கும் மக்கள் -அவர்நாடாம்

பென்யமீன் தன்னின் கிபியாவில் சென்றிருக்க;
வன்னார் பெலித்தர் மிகுந்தவர் -என்சொல

கொள்ளையிட மூன்றுபடை வந்தனர் வன்பெலித்தர்
கொள்ளைபடை ஒப்ரா வழி

I சாமு கலி 27

பெலிசுதர் கொள்ளையிட வருதலும், இனத்தாரின் கையில் ஆயுதம் இல்லாமல் இருந்தலும்;



கொள்ளையிட மூன்றுபடை வந்தனர் வன்பெலித்தர்
கொள்ளைபடை ஒப்ரா வழியாக -கொள்ளையிட

சூவால் பெயர்நாடு போயிற்று. பெத்தொரோன்
மேவ இரண்டுவழி யாகவர -ஏவியவர்

மூன்றாம் படைவனத்தில் சேபோயீம் பள்ளமெதிர்
கோன்யெல்லை போக எபிரெயர் -தான்செய்ய

ஆயுதக் கொல்லரை ஆங்கே அகற்றிட
ஆயுதம் செய்யாள் இலாதயினம் -மேயவுழ

தன்வயல் ஆயுதம் கூராக்க மக்களவர்
வன்னார் பெலித்தர் இடஞ்செல்ல -இன்னாரில்;

கூராக்க சிற்றரம் மட்டும் இருந்ததே;
கூரா யுதமில் படைக்காக -போரெனப்

போரிடும்நாள், ஆங்கே சவுலோடு யோனத்தான்
போர்செய்ய ஆயுதம் கையிருக்க -போர்செய்ய

வீரர்க்கை வாளோ இரும்பீட்டி ஒன்றுமிலா
போரதில் நின்ற படை.யது -சீரில்

பெலித்தரின் வன்படை மிக்மாசு போகும்
நலவழி மட்டும் பரம்பி -அலைபோல்

இருந்தனர் ஆங்கே எதிரிகள் ஆயின்
திருவினம் கைவாள் இலை

I சாமு கலி 28

யோனத்தானின் வீரமிகு செயலால் பெலிசுதர் தோற்று ஓடுதல்



ஆயுத மில்லா படையும் திகைத்துறு
ஆயுதம் ஏந்திய யோனத்தான் -ஆயுதம்

தூக்கும் மனிதனை நோக்கி வருவாயோ
தூக்கியென் பின்னே தனித்துநாம் -ஆக்கமாய்

உள்ளத்தில் உள்ளபடி யெல்லாம் புரிந்திடும்
உள்போவோம் வன்னார் பெலித்தரின் -துள்ளும்

படைகளின் ஆயுத வைப்பில் உறுவி
இடம்சென்றார் ஆங்கே இரண்டு -இடம்விட,

தந்தைக்கு சொல்லாமல் சென்றனன் யோனத்தான்
தந்தையோ மாதுளம்கீழ் மக்களோடு -சிந்தித்

திருந்தனன் என்செய்வோம் என்றறியா மன்னன்
கரங்கள் பிசைந்து திகைக்க -கரங்கொள்வாய்

போசேசு சேனே நெடும்பாறை செங்குத்தாம்
பேசி எதிரிமுன் ஏறிநாம் -மாசுயினம்

வீழ்த்திடப் போவோம்; எதிர்ப்பவர் வாயென்றால்
வீழ்த்தத் திருவளித்தார் கைதனில் -தீழ்த்தவப்

பாறையதில் ஒன்று வடக்கெதிர் மிக்மாசு
பாறையதில் மற்றது தென்கிபியா -பாறைகள்

நிற்க இடையே புகுந்து தவழ்ந்தனர்
நற்றார் இருவர் எதிர்போக -அற்றார்

நுனித்தோல் அகற்றாத தீயின மன்றோ
நனிகர்த்தர் வல்லவரே விண்ணார் -மனிதர்

சிறிதெனினும் மீட்டிட வல்லவர் தானே
சிறுவர்நாம் ஏறுவோம் குன்று -கறைச்சொல்

அடையாளம் என்னவெனில் வாயென்று சொல்ல
இடந்தரித்த தீயோரை நம்கை -தடையிலாத்

தந்தார் இறைவனார், யாம்வருவோம் நில்லென்றால்
அந்தயிடம் நிற்போம் தரித்துநாம் -அந்தோ

வரும்சிறுவர் தன்னைக்காண் வீண்மக்கள் பேசி
வரட்டும் வளைவிட்டு மேலே -விரைந்தழியப்

பாடம் புகட்டுவோம் புத்தியிலா மாந்தர்க்கு;
ஆடப் புகுந்தார் படைதனில் -வேடர்:

அடடா அடையாளம் நேர்த்தியாய் தந்தார்
தடையில்லை வீழ்த்திடத் தீயார் -இடம்போவோம்

என்பின்னே ஏறிவா இன்றளித்தார் வீணரை
நன்கர்த்தர் என்றேபோ ரிட்டனர் -அன்றோ

மடிந்து விழுந்தனர் தீயோர்; இருவர்
மடிய அழித்திட ஆங்கு -அடித்த

இடத்தில் இருபதுபேர் வீழ திருடர்
அடைந்தார் கலக்கம் அதிர்ந்து -இடம்தனில்

தேவன் புவியதிர்ச்சி உண்டுசெய்ய போர்வீரர்
தேவச் செயலால் கலங்கியே -ஏவுமாள்

இல்லாதே ஓடினர் வீரர் கலைந்தங்கு
இல்லின நோக்கனதைப் பார்த்தனன் -வல்லார்

இலக்கம்பார் யார்சென்றார் அப்பக்கம் சொல்ல
இலக்கம் தனில்மகனும் சிற்றான் -இலையிருவர்

என்றறிந்து மன்னன் திருப்பெட்டி கொண்டுவாரும்
என்றே உரைத்தா னரசு

I சாமு கலி 29

தேவனுடைய பெட்டியின் முன் சவுல் அனைவரும் நோன்பிருக்க ஆணையிடுதல்



சீலோ நகராசன் ஏலி வழிவந்த
சீலாண் அகிரா குருவாகி -மேலவரின்

பெட்டி இசுரேல் இருக்கும் இடத்திலே
எட்டி யிருந்தோன் அழைத்திட -நட்டார்

பெலித்தர் படையில் அமளி பெரிதே
வலியழை ஆசரியன் விட்டு -இலாதவரும்

சேர்ந்து இருவரோடு போரிடச் சென்றனர்
சேர்ந்தனர் மற்றாரு மாங்குதான் -சீர்தன்னில்

நீரிருக்கும் ஏரியில்தான் மீனிருக்கும் என்சென்ற
சீரின மக்களும் கைசேர்ந்து -ஓரினமாய்

ஓட விரட்ட எபிராயிம் மக்களும்
ஓட விரட்டினர் தீயவர் -நாடிதின்

மக்களே இன்றுமாலை என்னெதிரி வீழ்வரை
தக்கதே உண்ணா திருத்தலென -மக்களிடம்

ஆணையிட்டான் அன்றுகாலை; யோனத்தான் இச்செய்தி
ஆணறியா தேயிருந்தான் நோன்பு

I சாமு கலி 30

சவுலின் ஆணையை அறியாமல் யோனத்தான் தேன் புசித்தலும் அதனால் கர்த்தரிடம் இருந்து பதில் வாராமல் இருத்தலும்



பெலித்தர் முறிந்தோடி காடுகளுள் செல்ல
வலியினம் பின்தொடர்ந்தார் ஆங்கே -அலைதிரளாய்க்

கொள்ளை உணவிருந்தும் மக்கள் பருக்கையும்
கொள்ளா திருந்தார் பசிக்கவர் -தள்ளிநின்றோன்

நோன்பறியா யோனத் தனோகாட்டுள் பின்போக,
தேன்கூட்டில் தானே வழிந்தோடும் -தேன்தனை

தன்கோ லெடுத்து சுவைக்க பசிபோக
வன்னாணை சொன்னார் பயந்தவர் -என்ன?

தளர்ந்த இனத்தார் அதைக்கண்டு சொன்னான்
தளர்ந்துள்ளோம் ஏனெனில் ஆணை -களத்தினில்

இட்டாரே நும்தந்தை என்றதும், மக்களுண்டு
இட்டிருந்தால் போரது பேரழிவாம் -நட்ட

பெலித்தர் வகையாய் முறிந்திருப்பர் தீயோர்
வலியினம் உண்ணா ததாலே -வலியிழந்து

போர்செய்தார் சிற்றாய்; எனதுகண் பெற்றதே
சீர்த்தெளிவு தேனாலே காண்பீரே -சீர்கெட்டு

மாலையிலே மக்கள் உணவின்மேற் பாய்ந்துண்ண
சீலில் குருதியோடே ஊன்புசிக்க -வேலன்

சவுலுக்கு செய்திவர; செய்யாதீர் கொண்டு
சவுலிடம் வாரும் விலங்கு -சவுலோ

உணவுண்ட பின்னர் அரசன் பலியாய்
உணவோடு காணிக்கை கொண்டு -இணையிலாத்

தேவன் சிறப்பாகப் போற்றவே கட்டினான்
மேவி முதலது பீடமாம் -மேவிபெலிப்

பின்னர் சவுலும் இரவில் தொடர்ந்தடிப்போம்
பின்சென்று சொல்ல; அபியாவோ -நன்கர்த்தர்

சொல்கேட்போம் வாருமென பெட்டிசேர அங்கேயோ
சொல்வாரா நாளா னது

I சாமு கலி 31

இறைச்சொல் வராததால் யாரிடம் பிழையென சீட்டுபோடுதலும் யோனத்தானை மக்கள் தப்புவித்தலும்.



சொல்வாரா காரணி ஏனோ சினமுன்டான்
சொல்லார்முன் ஆணை முறிந்தந்த -சொல்லறியான்.

எந்த மனிதனால் ஆயிற்றோ சாகவேண்டும்
முந்தியென ஆணை கொடுத்தனன் -அந்தவகை

பெட்டிமுன் சீட்டுபோட்டார் ஆங்கே முறைதவறி
தட்டியோன் காண; விழுந்ததே -பெட்டிமுன்

யோனத்தான் தானே தவறினான் ஆணையென
ஏனோ புரிந்தாய்நீ வீண்மகனே -மானாரின்

சொல்படி யோனத்தான் சாக விழைத்தர
சொல்வது மீறி இனத்தாரும் -சொல்லவர்

தந்த பெருவெற்றி இந்நாளில், தந்தோனைத்
தந்திடுதல் தீதே விழைவென -அந்தநாள்

தப்பவிட்டார் யோனத்தான் அன்று துணைகொண்டு
எப்போதும் கைவிடாதார் தேவனுடை -தப்பாமே

மீட்டோனை இன்றழித்தல் என்றுமக்கள் கூச்சலிட
வீட்டிற்குப் போமென்றான் வேல்சீராண் -நாட்டிலே

அன்றிரவு சொல்வாரா காரணத்தால் பின்தொடரா
நின்றிட்டார் வல்லினத்தார்; முற்றிக்கை -தன்னை

பெலித்தரோ விட்டு யிடம்வாழச் சென்றார்
வலுப்பெற்றான் ஆங்கே அரசு -வலுப்பெற்று

சிற்றரசர் மோவாபும் ஏதோமும் அம்மோனும்
சிற்றூரார் சோபா பெலித்தரென -சுற்றரசர்

தம்மை சவுலடக்கி மீட்டான் இசுரேலை
தம்படைக்கு வல்லோரைச் சேர்த்து

I சாமு கலி 32

சவுலின் குடும்பம்



அரசன் அரசாண்டான் சீராய் சவுலும்
அரசன் அரசியைச் சேர -அரசன்

சவுலின் நிறைச்செல்வன் யோனாத்தான் சேர்த்து
சவுல்பேர் இசுவியும் மல்கி -சுவாவுமே

மேரேப்பும் மீகாளும் பெண்கள் சவுலுக்கு
சீராண் குடும்பம் அதுதானே -சீராண்

சவுலின் தளபதி நேர்பெற்ற அப்னேர்,
சவுல்சேர் அகினோவாம் இல்லாள் -இவன்தன்னின்

காத்தவன் அப்னேரோ சிற்றந்தை யின்மைந்தன்
காத்தனன் சீராய் அரசனை -மேத்தாண்

சவுலிருந்த நாளெல்லாம் வன்பெலித்தர் மேலே
சவுல்போர் செயவாங்கே போரில் -இவன்வெல்ல

தம்படைக்கு வல்லோரைச் சேர்த்தனன் சீராணும்
அம்மாண் படைபெருக நன்று

I சாமு கலி 33

கர்த்தர் சொல்லி சாமுவேல் அமலேக்கியரை வீழ்த்தி எல்லா மிருகங்கள் மற்றும் எல்லா மக்களையும் சாகடிப்பாய் என சவுலைப் பணித்தல்



நடபடிகள் பின்னே சவுல்நோக்கி மூப்பன்:
நடத்தினார் தேவன் உனையே -நடத்த

அரசனாய் வைத்தார் இனமேல் அரசே
அரசரின் சொல்கேளும் இன்று -இருந்தார்

அமலேக்கு என்னினம் வந்தபோது ஆங்கே
இமைக்காது வன்செய்தார் செய்கை -அமலேக்கின்

இச்செயல் என்மனதில் வைத்திருந்தேன் என்றாரே
அச்செயல் செய்தினம் வெட்டுவாய் -கச்சை

இனத்தோடு அங்கே விலங்கையும் சேர்த்து
இனமில்லாப் போக அழிப்பாய் -இனத்தில்

ஒருவிலங்கும் இல்லா தழிப்பாய் சிறப்பாய்
திருச்சொல் இதுவே சிறப்பு -திருவாண்

சவுலிதை மக்களுக்கு சொல்லி, தெலாயிம்
சவுல்சேர்ந்து மக்களெண்ண ஆங்கே -சவுலோடு

நின்றார் இரண்டு இலட்சம், பதினாக
நின்றவர் ஆயிரம் பேர்.

I சாமு கலி 34

கேனியரை சவுல் எச்சரித்தல், அமலேக்கை அழித்த பின்னர் விலங்குகளை கொல்லாது விடுதல்



போர்போர் எனவங்கு நற்றார் இனம்போக
போர்வகை செய்யவே சீராரும் -போர்சீர்

சவுலும் அமலேக் நகர்வந்து சேர்ந்து
சவுல்பதி வைத்தான் அடியில் -சவுல்கேனி

மக்களிடம்: சேர்த்தழிக்கா கேனியரே விட்டுப்போம்
மக்களே செல்மின் அகன்றுநீர் -தக்க

சவுல்சொல் செவிசாய்த்த கேனியர் போக
சவுல்மடங்க வீழ்த்தினான் ஆங்கே -அவனோ

அரசனாம் ஆகாக்கைக் கைப்பற்றி மற்ற
இரும்விலங்கை கொல்லாது விட்டார் -அருமை

விலங்காம் பொருளதை சேர்த்தழிக்க ஏலா
விலங்குகளை கொண்டுவரச் செய்து -நலமான

வற்றை எடுத்திட்டு மற்றதை வெட்டினான்
அற்றாண் படியாது கீழ்

I சாமு கலி 35

சவுலை கர்த்தர் தள்ளிவிட சாமுவேல் துக்கத்தோடு இருந்த பின்னர் சவுலிடம் அவனின் அரசு விழும் என்று சொல்லுதல்



அழிப்போர் முடியவும் சாமுவேலைக் கர்த்தர்
இழிமகன் என்சொல் நிறையே -அழிக்காது

விட்டதால் என்மனம் இன்று வலித்ததே
விட்டேன்கை என்றார் திருவவர் -நட்டானும்

அப்பொழுது தன்மனம் நொந்தங்கு நின்றினன்;
தப்பிற்காய் கர்த்தரை மன்றாட -அப்பொழுது

சீரெழுந்து வந்தவனைக் காணச் செலவங்கு
வீரத்தூண் கர்மேலில் கண்டிட -வீரரொடு

கில்கால் நகர்நோக்கி சென்றான் எனவறிந்து
கில்காலைச் சேர சவுலங்கு -நல்லார்சொல்

ஏற்று நிறைவேற்றி வந்தேன் எனச்சொல்ல
காற்றில் வருமொலி யாதுசீரில் -நாற்ற

அமலேக் இனத்தாரில் சீர்விலங்கை மக்கள்
உமதுடைய கர்த்தரின் பீட -அமைபலி

செய்யக் கொணர்ந்தார் சிலவிலங்கு என்சொல்ல
மெய்யார்சொல் கீழ்ப்படியார் வீண்தானே -அய்யய்யோ

இன்றிரவு நேர்சொன்ன சொற்களிவை கேளரசே
அன்றியும் சிற்றாணாய் நின்றவுமை -எண்குலத்தார்

ஆளக் கொணர்ந்தேன் சிறப்பாக்கி; நீசீரில்
கேளாப் பொருள்மேல் பறந்ததால் -கேளும்நீர்

சொல்கேட்டு செய்தேன் திருவின் அரசன்நான்
கில்காலில் மக்கள் பலியிட -சொல்கேளா

கொண்டுவந்தார் ஈதே முதலான மாக்களாம்
மண்ணுரைத்தான் காரணம் வீணரசு -மண்ணிலே

கீழ்ப்படிதல் காட்டிலும் எப்பலியும் சீரில்லை
கீழ்ப்படியா போனதால் விட்டகற்றி -கீழ்ப்படியும்

சீராணாய் தேர்ந்தெடுத்து வைப்பார் அரசனாக
சீரில் அழிந்த அரசனே -சீரில்

இரண்டகம் செய்தலோ சூனியப் பாவம்
முரட்டாட்டம் செய்கை அவமாம் -மரச்சிலைகள்

போற்றலுக் கீடாம் இறைசொல் புறக்கணித்தோன்
ஏற்காப் புறக்கணித்தார் சீரின்று -மாற்றினேன்

ஐயகோ ஐயகோ சொல்லாம் இறைச்சொல்லும்
ஐயகோ மீறியஞ்சி செய்தேனே -ஐயா

எனக்காக மன்றாடும் உம்கர்த்தர் கிட்டே
எனக்கேட்டான் வன்ன ரசுநேர் -மனம்போல்

மனம்மாற மாந்தனில் விண்ணரசு கேள்மின்
மனம்வலித்தே விட்டகற்றச் செய்தார் -இனமேல்

அரசன் அகற்றி மனம்போற்றும் நண்பன்
அரசனாய் ஆவான் விரைந்து; -இருப்பிடம்

போக திருவாண் திரும்ப, சவுலவன்
போகா திரும்சீரெ என்றவன் -ஏகமாய்

போர்த்திய போர்வையின் தொங்கலை கைப்பிடித்து
சேர்த்திழுக்க போர்வை கிழிந்தது -சேர்த்திழுத்த

இப்போர்வை போனபடி உன்னரசு போகுமே
தப்பிலா நல்லாண் உனைவிட -அப்பாலன்

கையில் அதைக்கொடுத்தார் சீரே. இசுரேலின்
கையவரே வெற்றியின் நன்று

I சாமு கலி 36

இறைவாக்கை அசட்டை செய்து சவுல் மக்கள்முன்னர் மேன்மைபடுத்த சாமுவேலைக் கோருதல்



இப்போது என்மக்கள் மூப்பருக்கு முன்பாக
தப்பாண் எனைவிடாது மேம்படுத்த -இப்போது

தேவனாம் கர்த்தரை நாம்பணிய வாருமே
மேவி பணிந்தான் சவுலங்கு -மேவியசீர்

சாமுவேல் சொன்னான்: அமலேக் கரசனை
சாமுவேல் என்முன் கொணர்கவென -சாமுவேல்முன்

ஆகாகு கொண்டுவர ஆகாக் சிரித்தனன்,
சாகும் கசப்பற்ற வன்னானேன் -சாகவே

உன்வாள் மடந்தையர் பிள்ளையற்று செய்ததுபோல்
உன்தாயும் பிள்ளையற்ற பெண்ணாவாள் -என்றுசொல்லி,

சாமுவேல் கில்காலில் கர்த்தர்முன் ஆகாகை
ஏமற துண்டித்துப் போட்டனன் -தாமிருக்கப்

பின்புசீர் சாமுவேல் ராமா விரைந்திட
தன்ஊர் கிபியா சவுல்போக -இன்னான்

மரணம் வரையிலும் பேசா திருந்தான்
அரசிடம் சாமுவேல் நேர்

I சாமு கலி 37

சாமுவேல் துக்கங்கொண்டாட எதுவரை துக்கமாக இருப்பாய் என கர்த்தர் கேட்டு ஈசாயின் வீட்டிற்கு சாமுவேலை கர்த்தர் அனுப்புதல்



திருமகன் தாவீதின் வாழ்க்கை தனையே
திருத்தமாய் வெண்பாவில் நானும் -கரத்தினால்

கையெழுத ஆண்டவரும் செய்வார் அருள்தானே
கையெடுத்துக் கும்பிடுவேன் மேல்சீரார் -வையம்

இசுரேல்மேல் மாந்தன் சவுலை அரசாய்
இசைவாக்கி வைத்ததை சீரார் -வசையென

ஆங்கே வலித்த மனதோடு சாமுவேல்
ஆங்கே வருந்தினான் நேர்மகன் -பாங்கில்

புறக்கணித்த வன்னர சிற்காக நீயும்
புறந்தள்ளி நிற்பாய் வருந்தி -நிறையவே

கொம்பிலே நாறெண்ணெய் கொண்டுவா; காட்டுவேன்
எம்மன மேற்ற அரசனைநீ -அம்மாணே

பெத்லெகேம் நல்லூரில் ஈசாய் எனும்நல்லோன்
பெத்தவன் தன்னில் ஒருவனே -அத்தவன்

என்னினம் ஆளப் பிறந்தவன் நன்றாமே
என்று தெரிந்தேன் அவனைநான் -அன்றியும்

சாமுவேலோ: எப்படிநான் போவேன்; சவுல்கேட்டால்
தீமைவிழக் கொன்றிடுவான், என்றதும் -ஏம

இறைவன்: ஒருகாளை கையோடே கொண்டு
இறைப்பலிக்கு ஈசாய் அழைத்து -இறைமுன்

விருந்தில் வரவங்கு செய்யவேண்டு; செய்கை
விருந்தில் அறிவிப்பேன் சீராண்; -விருந்தில்

உனக்கு பகருமம் மாந்தன் எனக்காய்
இனிதைலம் ஊற்று தலைமேல் -நனியார்த்

திருசொல் படியே விரைந்தனன் நேராய்
திருவரும் சேதிகேட்டு மூப்பர் -திருவாரும்

தத்தளிப்பு எம்முள்ளே நீர்வந்த காரணம்
அத்தவனே நன்றுதானே கேட்டனர் -அத்தூர்

அமைதியாய் நேரவர்க்கு சீர்ப்பலி தந்து
அமைதலோ டேஎண்ணி வந்தேன் -தமரே

உமைத்தூய தாக்கி அழைத்துவாரும் ஈசாய்
தமரை விருந்துண்ண நீர்

I சாமு கலி 38

தாவீதை அரசனாக சாமுவேல் அபிஷேகம் செய்தல்



தமர்வர சாமுவேல் மூத்தோன் எலியாப்
தமனோ இறைவனால் நெய்மேல் -தமனில்லை

காணாதே வீணே உடலமைப்பு காணாதே
காணாப் புறக்கணித்து விட்டுவிடு -காணவன்

அப்பொழுது ஈசாய் அபினதாபை கொண்டுவர
தப்பாது சொன்னான் இறைதெரிவில் -தப்பாண்

இவனென, சம்மாவை போகச் செயவும்
இவனில்லை என்றுரைத்தார் நேர்சீர் -அவனின

ஈசாய் வழியாராம் ஏழுபேர் முன்செல
பேசித் தெரியவில்லை கர்த்தரிவர் -ஈசாயே

வேறேதும் பிள்ளைகள் உண்டோ எனக்கேட்க
வேறுசிறு வன்தாவீ தேயுளன் -வேறாக

மந்தையை மேய்க்கும் இளையோன் இருக்கிறான்;
மந்தையில் ஆடுகளை மேய்க்கிறான் -விந்தை

சிறியோன் வரும்வரை இங்கே உணவு
சிறிதும் இறங்காது உள்ளே -சிறியவன்

ஆளை அனுப்பி அவனை அழைப்பித்தான்;
ஆளோ சிவந்தமேனி, பார்க்கண்கள் -மாளா

அழகாமே, ஆணழகன் முன்னிற்க ஆங்கே;
அழகன் தலைமேல்நெய் யூற்று -அழகாய்த்

திருச்சொல்லைக் கேட்டவன் கொம்பெடுத்து எண்ணெய்
திருத்தைலம் மேற்றவன் மேலே -திருவூற்ற

ஆங்கே தமர்நடுவே நிற்கவைத்து பற்றியதும்
பாங்காய்த் திருஆவி வந்தாரே -பாங்கந்த

தைலம் தலைமேல் வழிய திருஆவி
மேலே இறங்கிட; சாமுவேல் -வேலை

முடிந்ததென ராமா திரும்பிட வன்னாண்
முடிந்தது நாளில் சிறப்பு

I சாமு கலி 39

சவுலின் மேல் தீய ஆவி வர தாவீது கின்னரம் வாசிக்கச் செல்லுதல்



சவுல்மே லிருந்தத் திருஆவி நீங்க
சவுல்மேல் இறங்கியதே பேயும் -சவுலின்

அரசவை ஊழியர் சொன்னாரே, பிள்ளை
அரசிற்கு யாழ்மீட்ட வேண்டும் -அரசனுக்கு

யாழ்தனை பிள்ளையோன் மீட்டிடக் கீழிறங்கும்
கீழ்ப்பேயும் என்றே சரிதேட -யாழ்இசைக்க

பெத்லகேம் ஊரானாம் தாவீது பிள்ளையோன்
அத்தவ னோடே திருயிருக்க -அத்தவன்

போர்வீரன் மிக்க சமர்த்தன் அவனைநாம்
நேர்காண கொண்டுவர ஈசாயோ -சீர்மகனை

ஊண்தந்து போம்வழிக்குச் சாறுதந்து ஆடுதந்து
ஆண்தனை விட்டான்தந் தையவன் -ஆண்மகன்

அப்படியே தாவீது மன்னன் சவுலிடம்
தப்பாது வந்துநிற்க, மன்னனோ -அப்பழுக்கில்

ஆணழகன் கண்டு மிகஅன்பு செய்தானே
ஆணா யுதமேந்தும் நேர்தனை -வீணனுக்குப்

பொல்லாத பேய்வர ஆங்கே சவுலருகே
நல்லாண்யாழ் வாசிக்கப் பேய்விட்டு -நல்ல

குணம்பெற்றான் மன்னனு மாங்கே விரைந்து
குணம்பெற தங்கி தரித்து

I சாமு கலி 40

பெலிசுதர் போர்செய்ய பாளையம் இறங்கி கோலியாத் திமிராக பேசுதல்



பெலிசுதர் வந்தார் இனமெதிர் போர்போர்
பெலிசுதர் நின்றார் மலைமேல் -பெலிசு

மலைமேல் எதிரெதிர் நின்றார் இனத்தார்
மலையிடை பள்ளத் திலேயவர் -மன்ற

பெலிசுதர் காத்தூர் அசுரப் பிறப்பு
பெலிசுதன் ஓராண் கரையோன் -வலிந்தோன்

கொலியாத் பெயரவன் வீண்சொல் உரைத்தான்
மலையில் இறையார் தனையே -மலையில்

மலையவன் ஆறு முழமேல் உயரம்
மலைதனில் பேச இனத்தார் -மலையில்

இலாதவர்ப் போல இலாதார் ஒளிந்தார்;
தலையதைச் சீரா ஒளித்து -மலையாண்

விலாவினை மூடக் கவசம் எடையாம்
விலையதைந் தாயிர மாமே -மலையில்

மலையாண் உடலெலாம் மூடிக் கவசம்
எலாங்களை யாதவன் ஈட்டிச் -செலவே

இலாதோன் பிடித்து வரவும், இனத்தார்
மலையாண் உடலில் ஒளிவீழ் -மலைத்தார்

கலமவை வெங்கலம் மின்னிட; காண
மலையனோ வேறு பிழம்போ -மலைத்தார்

ஒலிவர நோக்கி, ஒலிப்பவன் சீரில்
மலையாண் பகன்றான் மலைத்த -அலரே

மலைப்படை வந்தீர் ஒருவனை விட்டு
மலையெனை வெட்டிட; தோற்றால் -இலாதோர்

மலையாம் மலைத்தார் அடிமை யெனவே
மலையாண் பகன்றான் பிழன்றே -மலையில்

ஒலிவர கேட்ட இனத்தார் ஒளிய
வலுவிழந் தானே சவுல்

I சாமு கலி 41

போர்களத்திற்கு ஈசாய் தாவீதை அனுப்ப, அவன் அங்கு கோலியாத்தின் கொக்கரிப்பை கேட்டல்



பெத்லெகேம் ஊரவன் ஈசாய் மகனவன்
அத்தவன் மக்களார் எட்டென -தத்தவன்

போர்களம் மூன்று மகன்செல; எட்டவன்
சீர்சேய் வினவ விரைந்துசெல் -சீர்கோன்

தவீதும் கிழவனார் சொல்படிச் செல்ல
புவிமேய் யினத்தினன் வேலை -இவைக்காண்

வரும்வரை என்றே விடுத்தவன் சென்றான்
அருமையாய் ஆடுகள் விட்டு -களத்திற்

தவீதும் கிழவனார் சொல்படிச் சென்றான்
தவிக்கும் தகப்பனின் மைந்தர் -செவிகேள்

அவியா திருப்பரென் கண்டுவா சேயே
அவித்ததூண் உன்கை யெடுத்து -அவையவர்

ஆயிரம் பேர்சீர் தளபதி கேட்டுவா
வாயின் சிறச்சொல் தமரவர் -ஆயர்க்

களம்விடு மைந்தா தமரை நினைந்து
உளவாட் டமதால் அழுது; -அளவுசேர்

சீராண் உணவதைக் கொண்டு களம்செல,
சீரார் தமரே நலமெனக் -கோரவும்

கோரினான் அல்லவன் நாற்பது நாட்களாய்
கோரியும் வாரா யினத்தவர் -தேராண்

ஒலிவர அஞ்சி இனத்தவர் ஓட
வலியவன் பேச்சோ செவியுள் -வலிக்க

இனத்தவர் வீரர் பகன்றார் பரிசு
இனத்துளே சீராண் எவரோ -இனத்தில்

கறையோன் கொலைசெயும் மாந்தனை கோனும்
மறைவளர்க் கன்னியைத் தந்து -மறையிலா

வண்ணம் குடும்பமே வாழ சிறப்பென
எண்ணித் தருவார்த் திருவெலாம் -எண்ணித்

தருவரோ சீர்த்திரு? என்சீர் இறைவன்
அருமைப் படைதனை காழ்ப்பாய் -கருப்பாய்

சொலவே நுனித்தோல் உடையோன் கறையோன்
பெலிசுதன் வீணெனச் சொல்ல -நிலையார்ப்

பகன்றார் பரிசிவை சொன்னார் அரசன்
பகறுவோன் கொல்வோன் சிறப்பாண் -பகறும்

வகையை எலியாப் சகோதரன் கண்டு
வகையேன் வருகை விடுத்தாய் -வகைமே

வசமாய் எவரிடம்? போரைத் துணிந்து
இசைவெணக் காண வருகை -திசையில்

அறிவேன் துணிகரம் வீணே அகமேன்
குறையோய் விரைவாய்த் திரும்பு -இறைவிட

வந்தேன் மனதிலே மாசிலான்; கண்டுநான்
தந்தேன் தகப்பனின் சொல்தனை -தந்தை

அனுப்பி வருகைப் புரிந்ததில் ஏதோ
இனமிறை வைத்தார் சிறப்பை -இனமவர்

வீரர் உரைத்திடும் கோன்சொல் பரிசெது
வீரர்ப் பகன்றார் பரிசிவை -சீரவன்

கைத்தரு வாரெனக் கேட்ட தவீதவன்
மேத்தவன் சொன்னவைக் கேட்டு

I சாமு கலி 42

சவுல் தாவீதை அழைத்து அவனிடம் உரையாடுதலும், தாவீது தனக்குண்டான போர்பழக்கம் பற்றி சொல்லுதலும்.



சவுலும் அழைத்திட; சீராண் பகன்றான்
இவனால் கலக்கம் திருவே -இவன்கறை

வேண்டாம்; அடியான் உமதுடை மாண்பிலான்
மாண்டிடச் செய்வேன் இவனையான்; -தாண்டிச்

செலநீ இளைஞன் சிறுவா; இளைஞன்
கலையைத் தெரிந்தவன் பன்னாள் -மலையிலே

மேய்த்தநான் மேய்த்ததை கூர்ப்பல் கரடியும்
வேய்ந்து கிடாரியை வாய்க்கொள -மேய்த்தேன்

இடையன்; எடுத்திட சிங்க வனக்கோன்
இடையினின் வாய்ப்பிடித் தாடு -இடையின்

வளமது போக விடாது தொடர்ந்தேன்
களத்திலே மாக்களின் பின்போய் -வளமிகு

தாடியைக் கையிற் பிடித்து அடித்ததை
ஆடவன் கொன்றேன் அவற்றைநான் -சாடும்

பெலித்தனோ பேராம் விலங்கதில் ஒன்றே
பெலித்தன் பெரிதாய்ச் சிறப்பில் -வலியார்

இறைவனின் சேனை தனையவன் ஏசி
கறையாய்ப் பகன்றக் கறையாண் -இறையவர்

சிங்கம் கரடி இவைதனை அங்கவர்
பங்கமில் சேர்த்தவர் தந்திட -இங்கிவன்

தப்புவிப் பாரென; தப்புவிப் பாரவர்
அப்படி ஆண்டவர் உன்னுடன் -தப்புவிப்

பார்சேய் புறப்படு; பார்நீ கவசமும்
சீர்திருச் சீரா கவசமும் -நேர்தர

பார்கோன் அரசரே பார்தனில் போட்டுநான்
சீர்மிதி எட்டும் நடந்திலை -சீர்த்தரும்

ஆடைகள் வேண்டிலை; வேடனைக் கோல்கவண்
பாடையில் ஆடவன் கல்

I சாமு கலி 43

தாவீது கோலியாத்தை கவண்கல்லை எரிந்து வீழ்த்துதல்



அடைப்பையில் ஐந்துகல் தேர்ந்து அடைத்து;
பிடிப்போன் பரிசையை முன்செல் -நடந்தவன்

யாரோ? உடலமைப் பில்லவன் சீரவன்
பாரிவன் வந்தனன் என்றவன் -பாரா

திருந்திட கிட்டி யிவன்செல ஏனோ
திருந்தா தவன்கெடு சொல்லை -கருத்தில்

தடியதைக் கொண்டு அடித்து விரட்ட
கடையனாம் நாயோ? கறையை -உடைத்து,

பறவைக் குணவாய்க் கொடுப்பேன்; உரைக்க
சிறப்பில் மனிதா கறைநீ -சிறப்பென

வாளொடு ஈட்டியும் கேடகம் கோளிதில்
ஆளவன் யானோ இசுரெலின் -கோளிறை

பேரால் வருகிறேன் உன்னிடம். சீரெனச்
சீரார் உனையென் கரந்தர -சீரி

லவுன்சொல் லடியுன் தலையை பெலித்தர்
எவனோ எவரும் விழவே -சுவைக்கும்

பறவை விலங்குகள்; பாரில் இசுரெல்
இறைவனார் உண்டென் றறிவர் -இறைவனார்

வாளதோ ஈட்டியோ கோளிறை மீட்பரில்
ஆளும் அறிவரே; போரிது -ஆளும்

திருவாம் இறைவன்; அவரே கொடுப்பார்
திருவிலார் உம்மையே ஒப்பு. -திருவில்

வழுமுன் வரவும் தவீது கொணர்ந்தவ்
வழுகல் கவணால் எறிய -விழுந்தனன்

மாந்தன் சிரம்பதிக் கல்லினால் ஏந்திலா
மாந்தனின் கையிரு வாளையே -மாந்தன்

தலையதைக் கொய்திடக் கொண்டான் தவீது
தலைவன் மரித்ததும் ஓடி -தலைகால்

புரிகிலார் வீழ்ந்தார் பெலித்தர் இசுரேல்
துரத்த, எழும்பியோர், யிட்டார் -பொருளவைக்

கொள்ளையாய்; மெள்ள தலைக்கை வருமவன்
தள்ளி; எவனெனக் கேட்டிட - வள்ளலே

யானோ அறிகிலேன் மேனாண் பெயரவன்
மானார் அறியப் பகன்றனன் -மானத்

தகப்பனார் ஈசாய் எனவே பகன்றான்
வகையாய் தலையொடு வந்து

I சாமு கலி 44

சவுலும் தாவீதும் திரும்பும் போது மக்கள் பாடிய பாட்டால் சவுல் சினங்கொளல்



தகப்பனின் வீடு திரும்ப விடாது
அகத்திலே கிட்டவே வைத்து -மகனாய்

வளர அழைக்க சவுலின் மகனோ
வளர தவீதிலே அன்பு -களரார்

இருவர் வருவதைக் கேட்டனர் ஊரார்
ஒருவர் ஒருவராய் நேரில் -தெருவிலே

வந்தனர் ஆட்டமும் பாட்டமும் சீரென
வந்தவர் பாடினர் பாட்டதில் -வந்த

சவுல்கொன் றதாயிரம்; சிற்றாண் தவீது
இவன்கொன் றபத்தா யிரமாம் -அவன்கேள்

இதனை இனத்தவர் பாட, சவுலோ
இதனால் அடைந்தான் சினத்தால் -எதனால்

எனக்கோ கொடுத்தார் வெறுமா யிரமே
இனத்தார் தவீதை மனதால் -வனத்தார்

எனவே கொடுத்தார் பதினா யிரமே
இனத்தவர் பாட்டிலே இன்று -அனைவரும்

இவ்வா றினத்தவர் என்முன் உரைத்திட
எவ்வகை மேலோ மனதுளே -அவ்வகைப்

பாட்டால் அறிந்தேன் அரசனாய் வெற்றென
ஏட்டில் இருப்பதோ கோன்முடி -மாட்டா

தவீதை பெலித்தர் கரத்தால் அழிக்க
சவுலவன் காத்திட; போரில் -அவனே

மரிப்பான் எனவே மனதுள் கருவி
அரித்தது பாடிய பாட்டு

I சாமு கலி 45

சவுலின் இரு பெண்களும் வெற்றி பெற்று வரும் தன் தந்தை முன் ஆடி வர, தாவீது அவர்களைக் கண்டு யாரிவர் எனக் கேட்டல்



இருவரும் வந்தனர் வெற்றியாய் வீரர்
இருமருங் கில்யாழ் ஒலிக்க -இருவரை

மக்கள் வரவேற் றிடவர, தக்கிரு
மக்களும் வந்தனர் ஆடியே -மக்களால்

கோனவன் மேன்மகிழ் மேராப் மிகாளுமே
கோனவன் இன்னிசை கேட்டிட -மானவன்

வீரனோ பெண்டிரைக் கண்டவன், ஆடுமிச்
சீரவர் யாரெனக் கேட்டிட -சீரிருப்

பெண்டிரார் கோனவன் பெண்களே, கண்டிராப்
பெண்டிரார் மேலவன் வாஞ்சையாய் -பெண்டிரார்

என்றால் இதுவே மடந்தையார்; என்றவன்
அன்றவன் தன்மன துள்தவம் -என்றோ

மனைவி அமைந்தால் இதுபோல் அழகி
மனைவியாய் வேண்டுமே சீர்

I சாமு கலி 46

சவுல் தன் மகளான மேராப்பை மணமுடிக்கத் தருவேன் என்று சொல்லி பின்னர் வேறொருவனுக்கு மணமுடித்தல்



திருவோ விடுத்தார் எனவறிந் தோனோ
திருமே லிருக்கும் திருவை -கரியாய்

மனதுளே எண்ணி கொலைசெய் திடுவேன்
இனவவன் என்றே கரிந்து -வினையாய்

தினம்தினம் ஆவியும் மேல்வர யாழால்
தினம்தினம் மீட்ட தவீது -மனமதோ

காரிரு ளாகவே கையிரு ஈட்டியால்
சீரவன் தாக்கினான் காழ்ப்பிலே -சீராண்

தவீதவன் பக்கமாய் சாய்ந்தவன் ஓடி
தவீதவன் தப்பினான் காழ்ப்பு -தவீதவன்

வீரம் புரிந்ததும் உள்ளே எரிந்தது
வீரனோ கொல்லுவேன் நானவன் -சீரவர்

வீரர் கணக்கு சரிபார் தவீதென
வீரர் கணக்கைச் சரியென -வீரன்

அருமையாய் வேலைப் புரிந்தான் தவீது
இருமிட மில்லை குறையும் -அருமை

மகனே மருமகன் செய்யத் தருவேன்
மகளைநா னென்றே முகத்தில் -மகளையோ

ஆசையாய்க் காட்டி வரவே தவீதவன்
பாச அரசென ஏற்றவன் -ஆசை

அரசன் மருமகன் ஆவது சீரே
அரசன் மருமகன் வாழ்வின் -திருவே

மனைவியாய்க் கொள்ளத் தகுதி யெனக்கு
மனதிலும் இல்லையே மண்யான் -இனத்தில்

தகப்பனின் வீடது சீரோ அரசன்
அகத்திலே பெண்தர, இல்லை -அகமகிழ்

கோனே அருமை நினைவுபோல் செய்திடும்
யானோ சிறுவன் எனச்சொல -மானாள்

கொடும்நாள் தனிலே மகளவள் மூத்தாள்
கொடுத்தான் கறையவன் வேறு -அடுத்தவன்

ஆட்ரியேல் கைத்தர ஆங்கே துளியுமாய்
வாட்டமில் விட்டதா வீதவன் -காட்டம்

அருகே இருந்தால் எனக்கு வினையே
அருகூர் தனிலே இருந்து -வரியை

பெறுவாய் எனவிட சென்றனன் சீராண்
பெறுநகர் சென்று அடைந்து

I சாமு கலி 47

சவுலின் மகள் மீகாள் தாவீதை நேசித்தலும் சவுல் அவளைக் கண்ணியாக வைத்தாலும் தாவீது அதை மேற்கொண்டு மீகாளை மணமுடித்தலும்



சவுலின் மகளவள் மீகாள்; மகளோ
அவளாய் தவீதை விரும்ப, -அவளோ

மெலிந்தனள் காணா தவளே, மருந்தோ
அலர்ந்தவர்க் கில்லை மதுவோ -வலியால்

உறக்கமில் கண்கள் இருளாய்க் கவிய
கிறக்கமாய் கண்கள் இருக்கும் -சிறப்பவள்

காதலன் காணா திருப்பதால் போயினள்
காதலால் மெல்லிடை யாளவள் -காதல்

பிரிவால் மகளவள் வாடி யிருக்கப்
பிரிவால் அரசனோ வாழ -இருவர்

இடையே இழுபறி யாக கடையில்
இடையவள் வென்றாள் மனது -இடையார்

சரிசரி சொல்லும் அவனிடம் மீகாள்
சரியவள் பெண்ணைத் தருவேன் -இருப்பினும்

கண்ணியாய்க் கன்னி யிருக்க பெலித்தரை
மண்ணிலே வீழ்த்திவா நீயவர் -மண்ணிலே

வன்னார் பெலித்தரைப் போரிட சாவது
இன்னாண் தனையணைக் கும்மென -மன்னவன்

சொன்னேன் மகளை மணம்செய் பரிசையோ
என்கை தராதே தவிர்த்திடு -என்னவன்

நற்றிறம் கொண்ட மனிதனாய் சீரவன்
அற்றார் பெலித்தரைப் போரிடு -அற்றவர்

வன்நுனி தோலது நூறை எடுத்துவா
என்பெண் மணமுடி என்றதும் -அன்னான்

அரசன் மருமகன் ஆவது சீரே
அரசன் மருமகன் வாழ்வின் -திருவே

தகப்பனின் வீடது சீரோ அரசன்
அகத்திலே பெண்தர இல்லை -முகத்தின்

ஒருநாள் கடைக்கண் அறிந்தான் திருவும்
சரியவள் நன்மனம் நோகா -திருக்கவும்

போயினன் வன்னார் எதிர்த்தவன் போரிலே
ஆயினன் வெற்றி அடைந்தவன் -மாயன்

ஒருநூ றெனக்கேள் அரசிடம் சீராண்
இருநூ றெனத்தோல் தரவும் -சரிசரி

பெண்ணாள் மெலிந்தாள் எனவே எடுத்துபோ
பெண்ணவள் சீராய் மனைவியாய் -மண்ணில்

பெலித்தர் வரும்போ தெலாம்சீர் மதியாய்
பெலித்தர் அழிவகைக் கண்டு -வலியிழ

மன்னனோ அஞ்சியோன் வாழ்நாள் முழுதுமாய்
வன்னெனக் கொண்டான் எதிர்த்து

I சாமு கலி 48

தாவீதைக் கொலைசெய்ய சவுல் ஆலோசனை செய்தலும் யோனத்தான் சவுலிடம் பேசி தாவீதைத் தப்புவித்தலும்



திருமகன் தாவீத் தனைக்கொலைச் செய்ய
திருக்கோ எடுத்திட்டான் வன்னாய் -திருக்கோ

அவையாரைக் கூட்டி யழைத்தா னரசன்
அவையாரே என்செய்வோம் சொல்லும் -அவையாரில்

தாவீத்தை தப்புவிக்க யோனத்தான் நின்றிருக்க
தாவீத் திடம்போய்ப் பகன்றனன், -தாவீதே

எந்தை சவுலார் உனைக்கொல்ல தேடுகிறார்
எந்தையின் கண்ணில் படாதொளியும் -எந்தையின்

பக்கத்தில் நின்றுநான் பட்சமாய்ப் பேசியந்த
பக்கத்தின் பேச்சை யறிவிப்பேன் -பக்கத்தில்

நின்ற மகனவன் ஆலோ சனைசொன்னான்
நன்றே செயலவன் ஏனோநீர் -நன்றியில்

சென்றீர் கறையாய்நீர் தாவீது பாவமேதும்
வன்செய் கிலையே அரசர்நீர் -வன்பாவம்

குற்றஞ் செயாதோனை கொல்வ தெனவேநீர்
குற்றமிலான் தன்கை உயிர்வைத்தே -தற்றான்

பெலிசுதன் அன்றழித்த போதுநீர் நன்றாய்
வலியார் மகிழ்ந்தீரே சீராய் -நிலமரசே

குற்றமிலான் கொன்றின்று பாவம்நீர் செய்வானேன்
குற்றமிலான் என்றுசொல்லி பேசிய -நற்றவனைக்

கண்டு சவுலோ; இலையிலை கொல்வதிலை
கண்காண கர்த்தர்மேல் ஆணையிட்டான் -கண்காண

மண்மைந்தன் கூட யிருந்தனன் கண்காண
மண்மைந்தன் கூட யிருக்கவும் -அண்டத்தீ

அங்கே யிருந்தோனை விட்டிடா வன்தொடர
மங்கிய ஆவிதான் தீர்த்து

I சாமு கலி 49

பெலிஸ்தர் போர்செய்ய வந்திட தாவீது வெற்றிபெற, தீயாவி சவுல்மேல் வருதலும் சவுல் ஈட்டியால் தாவீதை மீண்டும் உருவக் குத்த எறிதலும், தாவீது தப்பித்தலும்




வன்பெலிசு போர்செய்ய வந்திட, வன்னாரை

நன்மகன் சங்கரிக்க வந்ததே -வன்நினைவு
கோவிற்கு; தீயாவி ஏறவும் கோவவன்

கோவெனக் கூச்சலிட, யாழ்மீட்டி -கோவவனோ
தாவீத்தின் மேலே யொருயீட்டி தன்னைநேர்

தாவீத் இரும்திசையில் கோயெரிய -தாவீத்தோ
ஈட்டிக்குத் தானொதுங்கி ஓடினான் மாட்டிடா

ஈட்டியோன் கைக்கு தவனவன் -நீட்டி
ஒருஆணை செய்தான் அரசனோ, நாளை

திருநாள் வரையிலே காவல் -திருநாள்
எடுத்துவாரும் கொல்லவே என்றதும் மீகாள்

கெடுக்குமிந்த ஆணைக்கேட் டங்கே -அடைந்தனள்
மாபெரும் மங்கைக் கதிர்ச்சியே; தப்புவிப்பேன்

மாபேராய் வென்றான் பெலிசு
I சாமு கலி 50


சவுலின் ஆணையைக் கேட்ட தாவீதின் மனைவி மீகாள் தாவீதை தப்புவிக்க வைத்தல்




வஞ்சனையே என்றவள் தாவீத்தே வஞ்சனை

எஞ்சியோர்க் கஞ்சிடும் என்றவள் -வஞ்சனைக்குத்
தப்புவிக்க சீராணை சாளரத்தில் ஏற்றிவிட

தப்புவித்தான் தாவீது அன்றவன் -தப்பிக்க
கோன்விட்டான் தாவீதைக் கொண்டுவா வீட்டினின்று

கோன்சொல்லேந் திட்ட கறையோரும் -ஏன்வந்தார்
வீட்டுள்ளே என்றுகேள் மீகாளை கோன்சொல்லால்

நாட்டவனைக் கையிடும் என்றனர் -நாட்டானோ
மேல்சரி யில்லாத காரணியால் தூங்குகிறார்

கால்போர்த்தி பாருமெனச் சொல்லவும் -கால்போர்த்தி
ஓருருவம் கட்டிலில் கண்டவர் கோனே

ஒருவனங்கு கட்டிலில் தூங்க -இருகண்கள்
கண்டோம்யாம்; என்னயிது கொண்டுவரா வீரரே

கண்டுமவன் கொண்டுவரா தேனோநீர் -அண்டையிலே
தப்பிப்பான் கொண்டுவாரும் அன்னானை, தப்பிக்கா

தப்பாணை கட்டிலொடு கொண்டுவாரும் -தப்பாக
ஆணையைத் தந்திட; ஆணைகொண்டு வீரரோ

ஆணையிது சீராளே கட்டிலொடு -ஆணையாம்
கொண்டுசெல்வோம் என்றிட தன்கணவன் போர்த்துள்ள

கொண்டுசெல்லும் கட்டிலோடு மீகாளும் -அண்டைக்கோ
சென்றிட; ஆங்கே ஒருபொம்மை மேமயிர்

அன்றியந்த கட்டிலில் வேறிலை -வன்னாய்ச்
சினங்கொண்டு உன்கணவன் என்றா அவனை

மனப்பகையை தப்புவித்தாய் சொல்நீ -சினங்கொள்ளீர்
உன்தந்தை ஏனென்னைக் கொல்லவேண்டும் வன்னிதுவே

என்னைநீ போகவிடு என்றாரே -வன்னிலை
என்றே அறிவீரே கோனென அன்றவளை

வன்னவன் விட்டுவிட் டான்
I சாமு கலி 51


தாவீத் நாயோத்து அடைய மூன்றுமுறை வீரர் அனுப்ப எல்லாரும் இறைவாக்கு சொல்ல, சவுலும் போய் இறைவாக்கு சொல்லுதல்






தாவீத் அடைந்தனன் நாயோத்து சீராக
தாவீத் அடைந்ததை கோனறிய -தாவீத்தைக்

கொண்டுவர வீரரை கோனனுப்ப; வீரரோ
அண்டையில் கண்டார் இறைவாக்கர் -அண்டையில்

வாக்குரை மாந்தர் தலையாக சாமுவேல்
வாக்குரைத்தார் வீரரும் ஆங்குகேள் -வாக்குரைத்த

வீரரின் செய்திவர மன்னவன் வேறுசில
வீரரை போமென ஆங்கவர் -வீரரும்

வாக்குரைக்க; செய்திவர; மன்னவன் வேறுசிலர்
தாக்க அனுப்பிட்ட வீரரும் -வாக்குரைக்க;

வீரரின் செய்திவர மன்னவன் கொண்டசினம்
வீரரை நம்பிப் பயனிலை -தீரனாய்

யானே கொணருவேன் அக்கறை மாந்தனை
தானே விரைந்தான்நா யோத்திற்கு -மானார்

வரவும் திருஆவி மேல்வர ஆங்கே
இருந்தவ ரெல்லாஅம் வாக்காய் -உரைக்க

விரைந்தவன் கோனும் உரைத்தான் திருவாய்
அரணில் இறைவாக்காய் நாளின் -கரைவரை

கோனவன் ஆடையின்றி வாக்குரைத்துக் கீழ்கிடக்க
ஏனோ சவுலும் இறைவாக்கன் -ஏனோ

வகைவந்த சொல்லது; கர்த்தர் வகையாய்
அகமனது தூயோனைக் காத்து

I சாமு கலி 52

தாவீது இந்த நிலையில் பாடிய சங்கீதம் 59 கலிவெண்பாவில் படிக்க இங்கே செல்க



தாவீதும் யோனத்தானும் உடன்படிக்கை செய்தல்


தாவீது நாயோத்தை விட்டவனும் தப்பித்து
மேவியவன் யோனத்தான் காணச்சென் -றேவிசீரார்

ஏனென்னைக் கொன்றிடத்தான் தேடுகின்றார்? ஏனோயேன்?
ஏனோயென் பாவமது யென்னென்ன -ஏனிந்த

சொற்கள்வீண் தாவீதே, என்தந்தை அற்றாது
நற்றெந்தன் கேளாது செய்யமாட்டார் -அற்றாது

உம்மைக்கொல் செய்தியதை ஏன்மறைப்பார் உம்பக்கம்
உம்மோடு நானிருக்க அஞ்சியிரீர்; -உம்கண்ணில்

இங்கெனக்கு நற்றயையே வந்ததென உம்தந்தை
இங்கறிவார்; யோனத்தான் நோகாது -இங்கிந்த

வன்செய்தி சொல்லாமல் வன்செய்வீர், சொல்லிடுவார்
வன்சாவு ஈதோபார் ஓரடியே -என்சாவு

உம்முயிர்மேல் கர்த்தர்சீர் மேலாணை என்றிடவும்
உம்மனதின் சீர்விருப்பம் நண்பாசொல் -உம்விருப்பம்

செய்திடுவேன் என்றவனை நோக்கிசீரே, கண்டிடுவீர்
செய்கைகளை நாளைநிலா இல்லாநாள் -செய்விருந்து;

மூன்றுநாட்கள் நான்மறைந்து போய்வரவே விட்டிடுவீர்
மேன்மக்கள் நள்ளிரவு உண்விருந்தில் -நான்வாரேன்

உம்தந்தை யோடேஊண் உண்டிடநான் வாராது,
உம்தந்தை கேட்டாலோ சொல்லும்நீர் -அம்மகனோ

சென்றிட்டான் பெத்லகேமில் நற்பலியாம் என்னைக்கேள்
சென்றிட்டான் என்றுசொல்ல உம்தந்தை -யின்மனதில்

அல்லசொல்லோ இல்லையென்றால் நல்லின்று; அல்லாமல்
நல்லதில்லை என்றாலே நீர்கொல்லும் -அல்லாமல்;

நான்யேனோ உம்தந்தை யின்கையிலே சாகவேண்டும்
வான்கர்த்தர் மேலாணை நீரிட்டீர் -ஏன்வீண்சொல்

பொல்லாப்பு என்றாலே நான்உமக்கு நின்றிங்குச்
சொல்லாதே போவேனோ நண்பனுந்தன்: -சொல்லிடவே

யாருளரோ இப்புவியில் பொல்லாப்பு? யாரோயேன்
வாரும்நீர் ஊர்விட்டுப் போவோம்நாம் -சீராரும்

ஊர்வெளியே வந்திடவும் யோனத்தான் சொல்லாணை
நீர்சீராய் உம்பகைஞர் விட்டுவிட்டு -நேர்கர்த்தர்

நேரமையச் செய்திட்டால் எம்தனையர் தன்னிற்கு
நீரிங்கு சேர்ச்செய்வீர் நற்றையையே -சீரும்மை

என்தந்தை வாதிக்கும் எண்ணமேதும் கேட்டாலே
என்சொல்லை நானுமக்கு சொல்லாதே -அன்றுமறைத்

திட்டாலோ நேர்கர்த்தர் என்னையிங்கு விட்டிடாரே
இட்டேனே நல்லாணை இன்றுமக்கு -நட்டவனே

மூன்றாம்நாள் ஏசேல்கல் வாரும்நீர் அச்சொல்லை
மூன்றாம்நாள் நானறிவித் துப்போவேன் -மூன்றாம்நாள்

காண்குறிப்பு அம்பெய்து ஓய்பிள்ளாய் அம்பதுவே
காண்யேனோ அப்பாலே உள்ளதென்றால் -காண்குறிப்பு

சொல்லதுவே தீதாமே; இப்பாலே அம்பென்றால்
சொல்லதுவே நன்றாமே; ஈதேநம் -சொல்லாணை

என்றவனும் சொல்லவங்கு யோனத்தான் சீரிதுவே
என்றானே தாவீது அன்று

I சாமு கலி 53

இரண்டாம் நாளில் தாவீது உண்ண வராததை கண்டு சவுல் சினம் கொள்ளுதல்


விண்மதியில் அந்நாளில் எப்போதும் போலவங்கே
மண்ணரசன் வந்தமர்ந்தான் ஊண்விருந்தில் -மண்ணரசன்

தாவீதின் ஓரிருக்கை ஆளில்லாக் கண்டிடவே
மேவியேதோ தீட்டாகி விட்டானோ -ஏவாதே

உண்டனனே மண்ணரசன் அன்றுத்தான் வேளவனாம்
மண்ணரசன் கேளாது உண்டிடவே -உண்டாரே

வேளவரோ வன்செய்வார் ஊண்களிக்க, வேளவனோ
கோளிலவன் தீட்டெனவே வந்தில்லை -வேளவனோ

மற்றநாளில் ஊணருந்த வந்திடவும், அற்றவனும்
அற்றிருக்கை இல்லாது ஈசாயின் -நற்றெட்டாம்

தாவீதும் எங்கேயோ என்கேட்க தாவீதோ
மேவியென்சொல் கேட்டுத்தான் சென்றிட்டான் -தேவனுக்கு

பெத்லகேமில் நற்பலியைத் தந்திடவே நற்றமர்காள்
அத்தூரில் வந்தனரென் றென்னைச்சீர் -அத்தூரிற்

செல்வரவே கேட்டிடவும், போய்வாரும் என்றதுமே
செல்லவனும் போனானே என்றங்கு -சொல்படியே

சொல்லிடவும்; வன்சினத்தால் மண்ணரசன், செல்விட்ட
அல்லாது என்முன்னே சொல்கின்றாய் -அல்லதேதீ

அம்மாவுன் சீராளில் மாறுபாடூ உம்தாயோ
அம்மகனை அன்பாக நீநடத்த -அம்மாந்தன்

இம்மண்ணில் வாழ்வரைக்கும் என்னரசு எம்வழிக்கு
இம்மண்ணில் தானிலைக்கா தேபோகும் -அம்வழியான்

மேனவனில் கீழ்மாந்தன் கொன்றிடுவேன் என்றிடவும்
ஏனுமக்கு என்னவிழைத் தானோவன் மேனாளான்

என்னைவிட வன்நண்பன் உந்தனுக்கு மேலானான்
என்றங்கு தன்னீட்டி தானெறிய -அன்மகனோ

அம்மாவை வீண்பழித்த தந்தையின்மேல் -அம்மானும்
எம்தாயை என்நண்பன் ஏன்பழித்தார்? -அம்மானோ

மிக்கடிதாய் போனானே விட்டங்கு உண்ணாமல்
தக்கிலாரின் வன்விருந்தே என்று

I சாமு கலி 54

யோனாத்தான் சவுலின் மனதை தாவீதுக்கு அறிவித்தல்


மூன்றாம்நாள் சொல்படியே ஏசேல்கல் தான்போனோன்
தான்குறிப்பின் சீர்ப்படியே அம்பெய்து -ஏன்மகனே

அப்பாலே போனதம்பை நீகொணர்வாய் தப்பிலாது
அப்பாலே உள்ளதுபார் என்றிட்டான் -தப்பிலாது

அப்பிள்ளை அம்பெடுத்து வந்தவுடன் அப்போதூர்
அப்பிள்ளை சென்றப்பின் என்நண்ரா அப்பிள்ளைச்

சென்றானே வாரும்நீர்; தாவீதோ மண்வரையில்
நன்றாக கீழ்க்குனிந்து கும்பிட்டான் -நன்றியிலார்

செய்திட்டார் வன்திட்டம் கொல்லவுனை தப்பிக்கும்
செய்கைகளை நீர்செய்யும் என்றவனும் -அய்யோயென்

நண்பனேநான் என்செய்வேன் ஏலாதான், போவீரே
நண்பனேநீர் நல்லமைதி பெற்றிங்கு -நண்பனேகேள்

சீர்கர்த்தர் உம்வழிக்கும் எம்வழிக்கும் சீர்சான்றே
நேர்நிற்பார் நேர்கர்த்தர் மேலாணை -சீர்நாமும்

இட்டதைநீர் உள்விடாது நீர்மறவீர் இட்டாணை;
நட்டநடு அவ்வெளியில் நண்பர்கள் -இட்டனரே

கோவென்று பின்னியணைத் தாங்கழுதார் கோவின்சீர்
சோவென்ற அவ்வெளியோ விட்டமைதி -ஆவென்று

புள்பறக்க ஏனென்று புல்திகைக்க காட்டுள்ளே
அள்ளாது தீயென்றோ என்றிருக்க -மெள்ளவங்கு

காற்றதுவும் வீசியங்கு பின்னியணைத் திட்டவரைச்
சாற்றவுமே, விட்டவரும் சென்றனரே -மேற்றாணோ

அவ்வெளியில் தான்மறைந்து, யோனத்தான் அவ்வெளியூர்
அவ்வாண்கள் அவ்வாறு சென்று

I சாமு கலி 55

தாவீது தப்பிப் போய் காத் ஊரில் சேர்ந்து அங்கே தன்னை பைத்தியம்போல் காண்பித்தது.



ஆசன் அகிமெலெக் சீரிடம் சென்றனன்
தாசனாம் தாவீது தப்பியோடி -ஆசரியன்

பேசினான் ஊர்வெளியே தாவீதே இப்படி
தீசில் அறிவியாமல் வந்ததென்ன -வீசிப்போர்

தானோ இலைவே றெதுவும் பிழையதோ
மேனாள் தனித்து வருவதேன்? -மேனாள்

அறிவித்தான், மன்னன் ஒருசெயல் செய்வாய்
அறிவித்தார் ஏமச் செயலாம் -அறியவே

மற்றோர் அறிவிக்கா தேமகனே என்றவர்
நற்றார் விடுத்தார் எனையிங்கு -அற்றவேலை

இன்னயிடம் வாருமென சொல்லிவிட்டேன் என்றனன்
இன்றுமது கையிலிரும் அப்பங்கள் -நன்றது

எத்தனையோ என்றுகேட்க; இன்றெனது கையிலே
மத்தவூண் இல்லையே; தேவனார் -அத்தவர்

உண்ணும் முறைச்சீர் உணவாமே நற்சீரோய்;
உண்ணும் திருவவர் பெண்டிரை -எண்ணிப்

புணரா திருமாந்தர் உட்கொள்ள லாமூண்
புணரிலை மூன்றுநாளாய் யானோ, -புணரிலை

எம்வேலை யாட்களின் நல்மனதே ஆதலால்
அம்மாவூண் தாருமது உண்டிட; -உண்டியது

நற்சீர்முன் வேறாக இட்டாயிற் றேசீரோய்
நற்றதூண் அல்லவே தூயூணில் -நற்றாசா

வேலீட்டி ஏதேனும் உண்டோ உமதின்கண்
வேலவர் வேலையோ மிக்கடிதாய் -வேலையெடுக்

காதுவந்தேன் நானிங்கு; தாருமே ஏதேனும்;
வேதவா ஏலே பெயர்ப்பள்ளம் -மீதுநீர்

வீழ்த்திய கோலியாத்தின் வேல்தவிர வேறில்லை
வேழ்மகனே ஏபோத்தின் பின்சீலை -ஆழ்சுற்றி

ஆங்கிருக்கே கையெடும் வேண்டுமெனில் என்றிட
தீங்கிலா அவ்வேலைத் தாரும்நீர் -ஆங்கேயோ

தோவேக்கு என்னுமோர் ஏதோமின் வன்வழியான்
மேவாளால் வன்சிறை பட்டிருக்க -மேவியவன்

சென்றான் விரைந்தே சவுல்செவி கேட்டிடச்சொல்
அன்றியும் தாவீதோ சேர்ந்தான்காத் -அன்றவனே

அத்தூரார் கேட்டனர், பாடல் சிறப்புறு
அத்தவன் தாவீதோ ஈதென -அத்தூர்

அரசனாம் ஆகீசு வந்திட, காத்தின்
திருமக்கள் சொல்கேட்ட தாவீத் -திருமகன்

முன்னவன் சென்றான் மதிகெட்ட மாந்தன்போல்
முன்வாயில் வந்தநுரை யோடுகீழ் -அன்னான்

கதவு தனைக்கீறி நிற்க அதுபோல்
கதவுகீறும் இம்மாந்தன் செய்கை -யதைக்கண்டச்

பார்மன்னன் ஆகீசோ, ஏனிந்த சீர்மனதில்
நேர்வர இங்கே குறையாமோ -சீர்கெட்டான்

விட்டிடும் வீட்டில் வரலாகா சொல்லிட
விட்டங்கு தப்பினானே கேள்

I சாமு கலி 56

தாவீது காத்தூரில் பிடிபட்ட போது பாடிய சங்கீதம் 56, மற்றும் ஆகீசென்னும் அபிமெலெக் முன்னாக வேஷம் மாறி தப்பித்த போது பாடிய சங்கீதம் 34 கலிவெண்பாவில் படிக்க

தாவீது தன் பெற்றோரை மோவாப் அரண்மனையில் காப்பாற்ற விட்டு காட்டில் வாழ்தல்



காத்தூ ரிலிருந்து தாவீது தப்பித்து
மேத்தவன் சென்றான் கெபிஅதுல்லாம் -மேத்தவனின்

தாய்தந்தை சோதரர் சேதிகேட்டு சென்றாரே
சேய்சேர அக்கெபிக்கே நேராக -சேய்சேர்ந்தார்

மற்ற ஒடுக்கப் பெறும்மாந்தர் செல்வமிலார்
அற்ற கடன்பட்டோர் ஆங்கேதான்; -நற்றாண்

தலைவனாய் ஏற்றாரே நானூறு பேரும்
தலைவ னொடுசென்றார் மோவாப் -தலைவனோ

மோவாப் அரசனைக் கண்டவன் மோவாப்சீர்
ஏவா திருமக்கள் எந்தைத்தாய் -மோவாப்சீர்

மேவிச் சிறந்திருக்கட் டும்சீராய் ஆவிதிரு
தேவனார் என்செய்வார் நாள்வரை -மேவிபெற்றார்

நாட்டிலே காத்திடும் என்றவன் விட்டிடக்
கேட்டு விடுத்தனன் ஆங்கேதான் -நாட்டு

அரண்தனில் உள்ள வரையிலவர்; சீராய்
அரண்மனையில் வீட்டார் இருக்க -அரணில்

விரைவந்து காத்பெயரான் சொன்னான் வருவீர்
அரண்விட்டு என்றான் இறையோன் -மரக்காடு

யூதாவின் தேசத்தில் சீரோய் அரண்விட்டு
யூதாவின் தேசத்தின் காடாமே -யூதாவின்

ஆரேத்து சேர்ந்தனர் வந்தார்கள் சீராரும்
சீராக என்றுகேட்டான் கோன்

I சாமு கலி 57

தாவீது கெபியில் பாடிய சங்கீதங்களை கலிவெண்பாவில் படிக்க

தாவீதிற்கு அகிமேலேக்கு உதவினான் என்பதற்காக எல்லா கர்த்தருடைய ஆசாரியர்களையும் ஏதோமியானான தோவேக்கை விட்டு சவுல் கொல்லுதலும், அபியத்தார் தப்பித்து தாவீதிடம் போய் அடைக்கலம் புகுதலும்.



தன்மக்கள் கூடிவரச் செய்தவன் கேட்டானே
என்மக்காள் பென்யமீனே; ஈசாயின் -வன்னெட்டான்

உங்களுக்கு தோட்டந் துரவெலாம் ஈவானோ
உங்களுக்கு செல்வ மெலாமெடுத்துத் -தங்கமாய்த்

தந்திடு வானோசீர்? பின்னே எதற்காக
எந்தன் மகனோடு ஆணையிட்ட -அந்தசெயல்

தன்னைநீர் என்னிடத்தில் சொல்லாது வீணாக
என்றோ மறைத்தீரேன்? என்வேலை -என்மகன்

இவ்விருவர் என்னெதிரே செய்தனரே வன்னாக
அவ்விருவர் செய்ததை ஏனோநீர் -இவ்வா

றறிவியா விட்டீரோ ஏனோ? அறிவில்
அறிவித்தான் ஆங்கிரு ஏதோம் -சிறப்பிலான்

அக்கிதூபின் செல்வன் அகிமெலெக் தானவன்
தக்காது தந்திட்டான் அப்பங்கள் -தக்காதான்

கைப்பிடிக்க கோலியாத்தின் ஈட்டியொடு உண்டிட
கைப்பிடித்த அப்பங்கள் தந்தனன் -கைப்பிடி

வன்னிழைத்த அம்மாந்தர் கொண்டுவா என்றிட
வன்னாக கொண்டுவந்தார் ஆசரியர் -என்னநீர்

என்பகைஞன் தாவீத்திற் தந்தீரோ அப்பமும்
என்பகைக்கு கையீட்டி தந்துநீர் -என்பகைக்கு

சீரார்சொல் கேட்டறிவித் தவ்வகை ஏனோசொல்
சீராணும், அவ்வாணிற் இந்நாளோ -சீரார்சொல்

கேட்டுசொன்னேன்? அம்மாந்தன் மண்ணரசின் பிள்ளையாய்
நாட்டில் மருமகனாய் வாழ்ந்தாரே -நாட்டவர்

மன்னனின் வன்பகை என்றறியேன் என்றாலும்
மன்னனோ கொன்றிடும் இவ்வாசர் -அன்னவன்

என்பகைக்குத் தந்தாரே ஊணொடு ஈட்டியை
என்றதும் வீரரோ ஆசரியர் -வன்னாகக்

கொல்ல மனதின்றி பின்வாங்க, ஏதோமே
கொல்நீ சிறப்பார் எனவானை -அல்கேட்டு

கொன்றிட்டான் நோபின் திருவாசர் எல்லாரை
கொன்றிடும்ப்போ தோராளோ தப்பித்து -அன்றவன்

காட்டிலே சேர்ந்தனன் தாவீதோ டேசீராண்
காட்டில் அபியத்தார் பேராணும் -நாட்டில்

நடந்தவகை சொல்லிட தாவீதோ, என்னை
பிடித்திடத் தேடுவோரே உன்னைப் -பிடித்திடத்

தேடுகிறார் என்பதனால் என்னோடு தங்கியிரு
வேடனாம் ஏதோம் மகனவன் -நாடுசென்று

சொல்லிடுவான் என்றெனக்கு அன்றே தெரியுமே
அல்லான் செயலாலே பாழ்

I சாமு கலி 58

தோவேக்கு போய் சவுலிடம் சொன்னதை கேள்விப்பட்டபோது தாவீது பாடிய சங்கீதம் 52 கலிவெண்பாவில் படிக்க இங்கே செல்க

பெலித்தர் கேகிலாவை கொள்ளையிடுகிறார் என்று தாவீது கேள்விப்பட்டு அங்கே சென்று போரிட்டு அவர்களை மீட்குதல்

பெலித்தரார் கேகிலாவில் போரிட்டு கொள்ளை
வலியா ரிடவங்கே தாவீத் -வலியான்

செவிவர கேட்டான் திருவே பெலித்தர்
அவிசாவ போகட் டுமாநான்? -செவிகேட்டு

சீரிறை சொன்னார்; விரைந்துநீ சென்றங்கு
சீராரைக் காப்பாற்று; கேட்டாலும் -சீராணின்

மக்களோ, நோக்கி: இதோயாமோ யூதாவில்
தக்கதிலா தஞ்சுகிறோம், போர்புரிய -மக்களார்

ஊர்தனில் போனால் அதிகமாம் அச்சமே
ஊர்போக லாமே யெனதிரும்பி -சீர்கேட்க

ஊர்போய் இனத்தாரை மீட்டிடுவாய் என்றேசீர்
ஊர்போக நற்றாண் விரைந்தனன் -ஊர்வெளியே 

கேகிலாவில் போரிட்டு பல்லோர் பெலித்தரை
கேகிலாவில் வீழ்த்திவிட்டு ஆடுமாடு -கேகிலாவின்

மீட்டெடுத்துத் தந்தான் வளம்மெலாம் ஆனாலும்
மீட்டவர் நன்றி யிலார்

I சாமு கலி 59

கேகிலாவில் தாவீது வாழ்கிறான் என்றதும் சவுல் அவனை பிடிக்க வர செய்தி கேட்ட தாவீது கர்த்தரிடம் கேட்டு தப்பித்துச் செல்லுதல்

தீயோன் சவுலிடம் போய்ச்சொன்னார்; தீயோனோ
சேயோன் மதில்சூழ் கதவுள்ள -வாயில்

நகரடைந்த தாலே திருவவனை கையில்
இகழ்த்தந்தார் வாரும் விரைந்தே -நகரடைய

என்றனன் போர்வீரர் சேர்த்திட, ஆங்கேதான்
தன்கொலை தப்பி அபியத்தார் -வன்வனம்

வந்தபோது ஏபோத்து ஒன்றை எடுத்துவர
அந்தசீர் ஆடைபோட்டு தாவீதும் -அந்நாளில்

நேர்கேட்டான் வந்திடு வாரோ அரசரிங்கு
நேர்சொன்னார், ஆம்வருவான் இங்கவன்: -நேர்கேட்டான்

என்னையிந்த ஊரின் இனத்தார் தருவரோ
வன்செய் பெலித்தர்கை மீட்டேனே -வன்செய்வர்

உன்னையவர் தந்திடுவர் கோன்கையில் என்றார்சீர்;
நன்றியிலார் ஐயகோ என்செய்வேன் -இன்றுநான்

வன்னாராய் கைக்கொடுப்பார் என்றாரே சீரவர்
இன்றேநாம் சூழ்வனத்திற் போவோமே -அன்றே

விரைந்தாரே சூழ்வனத்தில் சீர்மக்கள் ஆங்கு
விரைந்திட்டான் என்றசேதி கேட்ட -வரைமன்னன்

நின்றிட்டான் தன்னூரில் தானே கறைமன்னன்
அன்றாடம் தேடியும் தாவீத்தை -நன்கர்த்தர்

தாராத தாலே பிடிபடாது தப்பிக்க
சேராது சீப்வனக் காட்டிலே -சீராணும்

மக்களும் சேர்ந்திருந்தார் பன்னாளாய் தக்கிலா
தக்கிலானின் தக்கதொரு ஆண்மைந்தன் -தக்கிருச்

சீப்பில் விரைந்துபோய்: கைப்பிடியார் சீர்மன்னன்,
மாப்பிள்ளை அஞ்சாதீர்; நீரொருநாள் -மாப்பேர்

அரசனாவீர் யானோ அடுத்திருப்பேன் என்றே
அரசன் அறிவார் இதைத்தான் -அரசமகன்

சொல்லி இருவரும் ஆணையிட்டார்; யோனத்தான்
சொல்லிவிட்டு வீடுசென் றான்

I சாமு கலி 60

சீப் ஊரார் தாவீது தங்கள் வனத்தில் வாழ்கிறான் என்றதும் சவுல் அவனை பிடிக்க வருதலும், பெலிஸ்தர் போரிட வருகிறார் என்ற செய்தி கேட்ட சவுல் விட்டு செல்லுதலும்

பூசி வனத்திலே தாவீத்; கிபியாவில்
தேச அரசனிடம் சீப்பினத்தார் -பேசவந்து

ஆகிலா காட்டிலே தாவீத் மறைந்துள்ளான்
ஆகவே வாருமெனச் சொல்லிட -மேமகன்

செல்லிடம் எல்லாம் விரைந்துநீர் பாருமே
அல்லிடம் தங்கிடம் எல்லாமே -செல்லிடம்

கண்டபின் சொல்லிவிட யான்வந்து என்பகைஞன்
அண்டானை சீராய் முறியடிப்பேன் -கண்டோம்

அவனையென சொன்னதாலே சீராரின் வாழ்த்து
அவனியில் உம்மேல் வரட்டும் -அவனோ

மிகுதந் திரஞ்செய்வோ னென்றறிந்தேன் மக்காள்
தகாரவர் கேட்டு விரைந்தனர் -தக்கான்

இருக்கிறான் என்றுகேட்டு மன்னன் விரைந்து
இருமிடம் வந்தவர்கள் தேட -இருக்கும்

வரையினது இக்கரையில் தாவீத் நடக்க
வரையினது அக்கரையில் தேட -அரசனார்

வந்து வளைந்திட்டார் ஆனாலும் ஏதேது
வந்தது வன்செய்தி, வன்பெலிசு -வந்திட்டார்

போர்செய்ய என்றே அரசனார் போனாரே
போர்செய்ய சூழ்விட்டே யாங்குதான் -பார்தன்னில்

சூழ்ந்துவந்தும் வன்பகைமேல் கைப்போட ஏலாதான்
சூழ்க்கல்லை சேலா அமாலிகோத் -பாழ்கல்

எனப்பேரிட் டார்மக்கள். சீப்விட்டு தாவீத் 
வனமது என்கேதி யில்சீர் -வனத்திலே

வாழ விரைந்தனர் தாவீதோ டேயிருந்த
வாழுமக்கள் எண்அறு நூறு

I சாமு கலி 61

சீப் ஊரார் தாவீது தங்கள் வனத்தில் வாழ்கிறான் என்று சவுலிடம் சொன்னார்கள் என்று கேட்ட தாவீது பாடிய சங்கீதம் 54 கலிவெண்பாவில் படிக்க இங்கே செல்க

என்கேதியில் ஒரு கெபியில் சவுல் மலங்கழிக்கச் செல்ல, தாவீது அவனை சாகடிக்காமல் விடுதலும், தாவீது சவுலின் வழியாரை சாகடிக்க மாட்டேன் என உடன்படிக்கை செய்தலும்.


பெலித்தர் துரத்திபின் வன்னவன் உள்ளான்
வலியவன் செல்வேன் அரசு -வலியிலான்

பின்தொடர் யென்பகை என்றுகோன் வந்திட
பின்குகை யொன்றில் கழித்திட; -இன்றே

அழித்திடும் நன்றாய் அளித்தார் திருவும்
அழித்துநீர் ஆவீர் அரசாய்; -அழித்திட

மாட்டேன் திருவவர் நெய்ச்சொரி, கொன்றிட
மாட்டேன்; திருச்சொரி மேனிரு -மேட்டிலே

பின்னவர் ஆடையின் தொங்கல் அறுத்தனன்
பின்னல்; அரசறி யாதவன் -பின்ஆ

எனவவன் விட்டெழுந் தேவர, கோனே
எனையாள் அரசரே கேளும் -இனக்கோ,

தரைவரை சீராண் குனிந்து பணிந்து,
வரையிலே வந்தீர் அரசே -வரையில்

அழித்திடும் இன்றே அளித்தார் திருவும்
அழித்துநீர் ஆவீர் அரசு; -அழித்திட

மாட்டேன் திருச்சொரி சீரவர் நல்லவர்;
மாட்டேன் திருச்சொரி மேனவர் -நாட்டின்

அரசனாம்; பாரும் கழிவிரும் போது
அரசனின் தொங்கல் அறுத்தேன் -அரசனே

இன்று இடையில் திருவவர் தீர்த்திட
நன்றுசெய் யும்மெனை ஏன்கொலை -வன்னே

அரசனே ஏனெனை நீர்தொடர் கின்றீர்
அரசன் தொடரப் புழுநான் -அரசே

எனைத்தீ யவனென சொல்சொல் கிறவர்
அனைத்துமே தீச்சொல் அறிவீர்; -இனக்கோன்

அடடா, எனைவிட நீதியுள் ளோனே
இடத்தே பகைவர விட்டு -இடத்தில்

எவருளர் சீர்சேய்? தவீத்தே, மகனே,
எவருளர் சீர்ச்செய என்றே -அவனழ

பின்னவன் நீதியுள் சேயோய் அரசனாய்
பின்வரு வாய்நீ அறிந்திட -என்மனம்

நன்மைசெய் தாயே; வழியார் எவரையும்
வன்னாய் கொளாது கொலைசெயாய் -என்வழி

என்றே சிறப்புசேய் ஆணையாய்க் கையிடு
என்றதும் செய்தான் மகன்

I சாமு கலி 62

சாமுவேலின் இறப்பும் இசுரவேலர் துக்கங் கொண்டாடுதலும்



சாமுவேல் சீராண் மரித்தான் முதிர்வயதில்
சாமுவேல் சாவை இசுரேலர் -சாமுவேலின்

ஊராம் இராமோத்தில் சேர்ந்து வருந்தினர்
ஊரதே போன தொளியிலா -ஊரதில்

சீராணின் பூவுடல் வைத்தனர் ஊராரோ
சீராணின் சாவாலே சீரிழந்தோம் -சீராய்த்

திருவின்பால் சேர்மாந்தன்; தாவீதோ செய்தி
திருமரித்தார் கேட்டங்கு ஐயோ -திருவினார்

போனார்; எனைகாத்த சீரார் திருமைந்தன்
போனாரே என்றழுது தாங்கொணா -மேனாண்

திருச்சாவால் போனான் அதிர்ந்தங்கு சீராண்
திருமுன்னே யாருளர் சீரார் -திருவினார்

மூப்பெய்து செத்தாரே சீரவர் என்செய்ய
மூப்பதுவே கூற்றாகி விட்டது -மூப்பனின்

சீர்சொல்லில் நானெப் படிவாழ்வேன்; சீரிறையே
நேர்போலே யாரிங் குளர்சீரார் –நேர்மகன்

ஆற்றொண்ணா தேயழுது பின்பாரான் காட்டிற்குள்
தேற்றேலாச் சென்றா னவன்

I சாமு கலி 63

தாவீது வீரர் வனாந்திர வெளியில் நாட்டு மக்களின் மந்தைகளை காத்தலும், அதற்காக மக்கள் நன்றியாக சீர் தரும் வழக்கமும்.



தாவீதும் சேர்மக்கள் நின்றார் வரைமேலே
தாவீதின் வீரர் வரைநின்று -மேவிசீர்

நாட்டார் வளம்காப்பர்; கள்ளர் வராதடுத்து
நாட்டார் இழக்காது காத்தனர் -நாட்டார்

விதம்காத்த வீரரை மக்களார் ஏற்றி
விதம்காத்த வீரர்க்கு நன்றி -யதைக்காட்ட

சீர்தருவர் ஈதே வழக்காமே; சீராக
சீரூன் சிறப்பூண் சுவைச்சாறு -சீர்மக்கள்

தந்திட, வீரர் அதைவைத்து வாழ்ந்திடுவர்
அந்தபடி ஆட்டின் மயிர்சிரைக்கும் -அந்நாளில்

பண்டிகையாய் செய்திடுவர் சீர்மக்கள் வீரரை
அண்டியிருப் போர்போற்ற ஆங்கவர் -பண்டிகையில்

வீரர்க்கை தந்திடுவர் சீரெல்லாம் சேர்த்தவர்
வீரர்த் திருநாளாய் அங்கு

I சாமு கலி 64

நாபால் என்ற காலேப் வழிவந்தவன் சீர் தராமல் தாவீதை ஏசி அனுப்புதல்



காலேபின் சீர்வழியன் நாபால் பெயர்மைந்தன்
ஆலவன் சீர்ப்பெரிது கர்மேலில் –சீலாணின்

ஆடுகள் மட்டுமே நாலா யிரம்மேலாம்
ஆடுகள் மேய்க்க வெளியிலே -ஆடுகள்

போகாத வண்ணம் திருவீரர் காத்தனர்
ஆகா திரவுபகல் கண்விழித்து -வேகும்

வெயில்தனில் காத்து, குளிரிலும் வீரர்
அயராது செய்தனர் காப்பு -அயராது

வீரர் மலைமேலே காத்திட, சீரவனோ
வீரர்க்கு ஏதும் தரவில்லை -வீரனவன்

தாவீது செய்திகேட்டான் ஆடு மயிர்சிரைக்க
மேவியோன் ஊர்வந்த ஆட்களாம் -ஏவி

பெயரெனதைச் சொல்லி நயமாய் நலமோ
வியனார் அமைதி உமக்கும் –வியன்வீட்டில்

உள்ளோர்க்கும் உண்டாவ தாகசீர் ஆடுசிரை
உள்ளனராம் என்றுகேட்டேன்; உம்மேய்ப்பர் –உள்ளாரே

கேளும் அவர்தம்மை, கர்மேலில் யாமிருந்த
வேளையெலாம் மேய்ப்பருக் கேதுமே –வேளையில்தீ

யாகாத வண்ணம் பலநாட்கள் நின்றோமே
சாகாது ஆடுகள் காணாமல் –போகாது

பார்த்தோம்; தயவாக வீரர்க்கை நல்லபண்டம்
பார்த்துநீர் தந்திடும் வீரர்க்கும் –பார்தன்னில்

உம்மகனாம் தாவீதின் கைக்கும் தரும்படி
உம்மகனாம் தாவீது கேட்கிறேன் –இம்மகனின்

சொல்லேந்திச் செல்லும்நீர் பத்துவீரர் கேளும்நீர்
சொல்லெனது நாபா லிடம்

I சாமு கலி 65

நாபால் வீரரை ஏசி அனுப்ப, தாவீது நாபாலின் சொல்கேட்டதும் சினங்கொண்டு அவனை அழிக்க புறப்படுதல்



வீரர் விரைந்து தலைவன் பெயராலே
வீரர் சொலவங்கு வன்னாக –வீரரை

சொல்லி விரட்டவே நாபாலும் ஏசிட
அல்லாணும் சொன்னான் மதிபிழன்று –கல்லாணின்

வீரர் தனைப்பார்த்து சொன்னசொல் யாதெனில்
“வீரரா, யாரவர்? தாவீதா -சீர்சேயோ?

ஈசாயோ நானறியேன்; இக்காலம் வெவ்வேறு
ஆசையால் வேலையாட்கள் தம்தலைவர் –பேசாது

விட்டோடி இப்படி குன்றின்மேல் செய்கின்றார்
இட்டநற்றூன் எந்தன் தரிப்பவர்க்காய் –இட்டதவை

இட்டீரே தாருமென்றால் என்னயிது வீண்சொல்லாம்
நட்டமாய் என்திருவை பேரறியா -நட்டவனென்

கிட்டிதர நான்மதி கெட்டவனோ? எட்டிப்போம்
எட்டிப்போம் என்றே விரட்டிட -எட்டியாய்

வீரர்க்குச் சொல்கசந்தே போனார் தலைவனிடம்
வீரர் பகன்றனர் எட்டிச்சொல் -வீரர்ச்சொல்

கேட்ட திருவாண் கொடுஞ்சினத் தோடெழுந்து
வேட்டையாய் அம்மனிதன் வீழ்த்திடுவோம் -நாட்டதற்கு

சீராய்நீர் உம்வாளைக் கட்டிவாரும் போவோமே
சீரில்லாண் தன்னை அழித்திட –சீரில்லாண்

கொல்லப் புறப்பட்டார் வீரர்; அறுநூறில்
நல்லா ரிருநூறு நின்றனர் –நல்லார்

பொருள்காக்க அவ்வனத்தில்; சென்றனர் சீரார்
அருளிலான் கொன்றிட ஆங்கு

I சாமு கலி 66

நாபாலின் வேலையாள் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் சொல்ல, அவள் தாவீதைக் காண விரைந்து போகுதல்.



நாபாலின் வேலையாள் சீரில் தலைச்சொல்லை
நாபாலின் நன்மனைக்குச் சொன்னானே -நாபாலின்

வேலையாள் யாம்கர்மேல் தன்னிலே நின்றிட
வேலையவர் காக்க மதில்போல -சீலாணின்

இல்லை அவர்ப்பங்கு தாராத இல்லாளே
இல்லையோர் ஆளிவர் முன்பேச -இல்லாளே

பொல்லாப்பு இவ்வீட்டின் மேல்வந்த தின்றுதான்
அல்லாமல் என்செய்ய வேண்டுமென -இல்லாளோ

நன்மனையாள் ஆண்டவனே தாவீது வீரர்கள்
நன்றுசெய மூடனாய் இம்மனிதர் -நன்றியிலா

ஏன்செய்தார் என்றவளோ பண்டிகைக்காய் செய்துவைத்த
மேன்சோறு சீர்ச்சாறு கையெடுத்து -மேன்செல்லும்

ஆண்டவனாம் தாவீது சேர்மலைக்கே; பின்னேநான்
ஆண்டவனின் சீரடியாள் வந்திடுவேன் -ஆண்மகன்

நாபால் அறியாமல் சென்றனள் மேம்மலைக்கு
நாபாலின் நன்மனையாள் சேர்ந்தங்கு -நாபாலின்

வேலைகள் வந்திடும் சாலைதனில் தாவீது
சீலவன் வெஞ்சினத்தோ டேயிறங்க -சீலவா

நில்லும்சீர் நாபால் மனைவியதோ கிட்டிவர
இல்லாள் எதற்காக வோ

I சாமு கலி 67

அபிகாயிலின் மன்றாட்டு



வழிபார்க்க ஏதேது வந்தவளோ பெண்ணோ
விழிபார்த்தால் ஆண்சாவர் என்றே -விழிமூட

மாற்றானின் நன்மனையாள் என்றே பிறன்மனை
நாற்றமும் என்மேல் படலாகா -சீற்றமாய்

காத்திடுவேன் என்றுநின்றான்; தாவீதோ சொன்னானே
காத்தோம்நாம் வீணாக நன்றியிலான் -காத்தோம்நாம்

வாடைக் குளிரிலும் வீசும் அணலிலும்
வேடனாய் செய்வேன் அவன்நாயும் -நாடிதில்

வாழாது நாளைதான் நாமே; திருவெனக்கு
வாழாது செய்யாமல் போனாலே -வாழெனக்கு

மேத்தார்செய் என்றாணை சொன்னானே வீரரிடம்;
காத்திருந்த சீராணின் கால்விழுந்து -மேத்தவனே

ஆண்டவா, என்மேல் வரட்டுமித் தீச்செயலோ
ஆண்டவா, பேசவிடும் உம்மடியாள் -ஆண்டவா

என்சொல்லைக் கேளும்நீர் சீரவா எண்ணாதீர்
இன்னிலா பேலியாள் சேயோனாம் -வன்னவன்

இம்மாந்தன் வன்சொல்லை கேளா திரும்சீரே
அம்மகன்சொல் பேராக எண்ணாதீர் -அம்மாந்தன்

செல்வங்கள் பல்லிருக்க ஆனாலும் நன்மதியில்
அல்லவனே பேர்போல; ஆண்டவா -அல்லாமல்

நும்வீரர் வந்ததை உம்மடியாள் காணவில்லை
நும்பழியைத் தீர்த்திட கர்த்தரோ -அம்வழி

தந்தாரில் என்று திருவாழ்வின் மேலுமாய்
தந்திடும் உம்மேலும் ஆணையிது -தந்திடான்போல்

நும்பகைவர் போகட்டும்; நும்மடியாள் கைத்தருஞ்சீர்
நும்சேர் இளைஞர்க்குத் தாருமே -நும்மின்

சிறப்பவர் நல்வீட்டைக் கட்டுவாரே; ஏனென்
சிறப்பவரின் போர்களை சீர்நீர் -சிறப்பாய்

நடத்துகிறீர்; ஆதலால் உம்கையில் வீணாய்
மடையரை வெட்டுபழி இல்லா -இடந்தன்னில்

சீராய் இருக்கட்டும்; நும்மை கெடுசெய்ய
சீரில்லார் வந்தால், திருவவரின் -சீராணே

சீராருள் உம்ஆன்மா சீரிருப்ப; சீர்தேச
சீருமை வன்பகையாய் எண்ணுவோரும் -சீரில்லார்

மேலிலார் கல்லாம் கவண்விட்டு; சோறுசாறும்
ஆலவா நீரெடும் ஏற்றிடும் -ஆலவா

மூடன்சொல் கேட்டு அலர்வீர் திருவானே
தேடிநான் வந்திட்டேன் சீர்சொல்ல -வீடுவிட்டு

நானே விரைவந்தேன் சீரெடுத்து மேனவர்
ஈனனை மன்னித்து விட்டுவிடும் -மேனானாம்

தாவீது, நல்லது பெண்ணவளே; கேட்டேனுன்
மேவிய சொல்தனை; விட்டேன்நான் -ஏவி

விரைவதை என்றவன் சொல்லித் திரும்ப
வரைமேலே ஏறினான் சீர்

I சாமு கலி 68

நாபாலின் மரணமும், தாவீது அபிகாயிலை மனைவியாக ஆக்கிக் கொள்ளுதலும்



நாபால் மனையாள் அபிகாயில் வந்தாளே
நாபாலோ அங்கே குடித்திருக்க -நாபால்

விடியலில் போதை விடுத்தெழவும் சீராள்
நடந்ததைச் சொல்லவும் கல்லாய் -கிடந்தனன்

கேட்டவன் ஐயோ முடிந்திருக்கும் என்வாழ்வு
கேட்டின் மதியாலே செய்தேனே -நாட்டில்

அழிந்திருப்பேன் என்றே மனமும் அலைய
கழித்தனன் அச்சத்தால் நாட்கள் -அழித்தாரே

சீர்கர்த்தர் வன்சொல்லோன் தன்னையங்கு பத்தாம்நாள்
சீர்கர்த்தர் செய்கையால் செத்திட்டான் -சீர்த்தாரா

வன்சொலைச் சொல்லியவன் செத்திட்ட சேதிகேட்டு
இன்மொழியாள் ஆனாளே கைம்பெண்ணாய் -வன்சொல்வோன்

செத்ததைக் கேட்ட தலைவனோ; இன்மொழியாள்
அத்தங்கு கைம்பெண்ணோ; அவ்வழகி -இத்தங்கி

விட்டாலே நல்லது, தூதரே சொல்லிடும்
நட்டவளே வந்திடுவாய் பெண்ணினியாள் -நட்டவளே

விட்டிங்கு தாவீதின் இன்மனையாய் என்றிடும்
விட்டெழுந்து வந்தாலே கூட்டிவாரும் -நட்டவளை;

நட்டவளோ நற்பணிந்து நற்றாணின் நன்மனையோ
நட்டவள்நான் நும்மடியை நீர்க்கழுவ -அட்டவளே

சென்றாள் அபிகாயில் தாவீதின் இன்மனையாய்
அன்றேதான் ஆனாள் அவள்

I சாமு கலி 69
நற்றவன் பாடினான் பாட்டு

சங்கீதம் 35

சவுல் தாவீதைத் தொடர்ந்து ஆகிலாவில் தங்க, தாவீது சவுலை கொல்லாமல் விட்டுவிடுதல்



ஆணையிட்ட தாலே சவுலரசன் பின்போகா
தாணை இனசீப்பின் ஊராரோ -ஆணையிட்ட

தாவீது ஆகிலாவில் தன்னை ஒளித்திருப்ப
ஏவலைக் கேட்டு விரைந்தனன் -ஏவலாட்கள்

மூவா யிரம்வீர ரோடு வனத்திற்கு
ஏவலாட்கள் கூட வெளியிலே -மேவியோர்

தங்கினர் மன்னனோடு ஆங்குதான்; தாவீதோ
தங்கினான் பாலையில், மன்னனோ -தங்களை

ஆங்கே துரத்திடலாம் செய்தி யறிந்தவன்
ஆங்கே செலவொற்றர் கண்டுவர -தாங்கியவர்

தங்கிய அவ்விடம் மெய்யென நேரறிந்து
தங்கிய அவ்விடம் போயினன் -தங்கியோர்

அங்கே உறங்கிட; தேரிருக்கும் அவ்விடத்தில்
தங்கிய மன்னனைக் கண்டவன் -தங்கினர்

சுற்றிலும் ஏவலாட்கள் தூங்கிட சுற்றம்பார்
நற்றவனும் யாரென் னுடன்வருவார், -நற்றூருள்

தங்கும் அபிசாய், வருகிறேன் நான்தலைவ
அங்கு எதிரியர் தங்கிடம் -அங்கேநாம்

போவோம்நாம், போனார் இருவரும் நள்ளிரவில்
ஏவாட்கள் எல்லாம் உறங்கிட -ஏவாட்கள்

தாண்டி இருவரும் போனாரே தேரருகே
மாண்பிலா மன்னனும் மாண்டான்போல் -ஆண்தூங்க

ஆணவன் ஈட்டி தலைமாட்டில் நேரிருக்க
ஆணவனின் வீரர்த் தளபதி -ஆணின்

அருகே உறங்கி யிருக்க மருவி
இருவர் அடைந்தார் சவுலின் -அருகே

இருவரில் ஓராள் அபிசாய் பகன்றான்
திருவுந்தன் கையில் எதிரி -திருவீந்தார்

மன்னனின் ஈட்டியை நானெடுத்து குத்திடவோ
அன்னவன் சீரில்லான் ஏனிரண்டு -மன்னன்

ஒருகுத்தில் செத்திடுவான் சொல்லும்நீர், என்க
திருவவர் நெய்ச்சொரி மன்னன் -திருவன்றோ

நம்கையால் சாக விரைச்செய்கை வேண்டாமே
எம்மன்னன் போர்தன்னில் செத்தாலோ -எம்மன்னன்

மூப்பெய்தி செத்தாலோ, ஏதின்றி என்கையை
மூப்பன்மேல் இட்டிடாமல் காப்பார்சீர் -மூப்பன்

திருச்சொரி மாந்தனல்லோ; கைப்போட்டு குற்றம்
இராதவன் உண்டோ? அதனால் -விரைந்து

விடுவோம்நாம், ஈட்டியையும் நீர்ச்சொம்பும் கையில்
எடுத்து; விரைந்தவர் கையில் -எடுத்தனர்

ஈட்டிசெம்பு, சென்றனர் அவ்விடம் விட்(டு)விரைந்து
நாட்டாரோ பார்த்தார் கனவு

I சாமு கலி 70

தாவீது கொஞ்சம் தூரம்போய் அப்னேருடன் உரையாட, சவுல் அவன் சத்தத்தை அறிந்து தன் தவறை அறிக்கையிடுதல்



ஆங்கவர் சென்றனர் காட்டில் இருமாந்தர்
தூங்கிடும் சீராணின் ஆட்தலையே -தூங்கிநீர்

மன்னனின் பக்கத்தில் யார்வந்தார் என்றறியா
மன்னனை காவாது விட்டீரேன் -மன்னன்நேர்

சொல்லிடும் மாந்தனே நீயாரோ? பேரென்ன
சொல்லும்நீ என்றவன் கேட்டிட -அல்லாமல்

மன்னனைக் கொல்லும் படியாக ஓராளான்
வன்செயலாய் வந்ததுமெய் பாரும்நீர் -மன்னனின்

ஈட்டியும் நீர்சொம்பும் எங்கே மறைந்ததாம்
நாட்டின் திருமன்னன் காக்காத -நாட்டின்சீர்

வீரரெல்லாம் செத்து மடியவே வேண்டுமன்றோ
வீரர்நீர் அல்லவா அப்னேரே -வீரன்சொல்

தானறிந்த மன்னன் சவுல்கேட்டான்; தாவீதே
மேனான் மகனேயுன் சத்தமன்றோ? -மேனானோ

மன்னா அதுநானே, மன்னன்யேன் என்னைத்தான்
பின்தொடர் கின்றாரோ? பொல்லாப்பு -என்செய்தேன்

நீர்சொல்லும் சீரே; திருவவர் சொல்லிநீர்
வேர்க்கொல்ல வந்திருந்தால் ஈதோநான் -நேர்சீரார்

காணிக்கை ஏற்கட்டும் சீர்மன்னா, அன்றியும்
காணிவன் பின்போ வெனச்சீரில் -காணினத்தார்

என்றாலே மன்னவா, பங்கில்லை நீபோபோ
நன்கர்த்தர் தந்த நிலம்விட்டு -வன்சிலைகள்

பின்னேபோ என்றவர் சொன்னதா; -நன்கர்த்தர்
முன்னே கெடுமொழி பெற்றவராம் -என்குருதி

நேரார்முன் சிந்தா திருப்பதாக மன்னவா;
தீராப் பசிக்காய் மலைப்புள்ளை -வீரன்போல்

வேட்டையாட தெள்ளுப்பூச் சித்தன்னை மன்னனார்
நாட்டை விடுத்து விரைந்ததென்ன? -நாட்டுமன்னன்

மேம்மகனே யானே தவறிழைத்தோன், வாமகனே
மேம்மானில் என்மதி யிங்கேனோ -ஆம்பிழன்றே

போன தறியேன்; உயிரெனது உன்கண்முன்
மேனான காரணத்தால் பொல்லாப்பு -மேனானே

செய்யேன் இனிநான், பெறுந்தவறு மெய்யாக
செய்திட்டேன் உன்னெதிராய் என்றனன்; -மெய்மன்னா

இங்குவந்து ஈட்டிசொம்பு கையெடுக்க ஓரிளைஞன்
அங்கிருந்து விட்டுவிடும், வாங்கியவன் -அங்(கு)வரட்டும்

நேர்கர்த்தர் மாந்தரின் நீதிபடி மெய்படியே
நேர்கர்த்தர் இங்கு பலனளிப்பார் -நேர்ச்சீரார்

நேர்ச்சொரிந்த மன்னன்மேல் கைநீட்ட இன்றுதான்
சீர்முன் மனதில்லா நானிருந்தேன் -சீர்மன்னா

உம்முயிர் என்கண்முன் மேன்மையாய் இன்றிருக்க
எம்முயிரும் சீரார்முன் மேன்மையே -எம்மான்

திருவவர் எல்லா இடுக்கண் விடுத்து
திருக்காப்பார் என்றான் மகனும்; -திருச்சொரி

மன்னன் பகன்றனன்: என்மகனே தாவீது
என்மகனே வாழ்த்துபெற்றோன்; செய்கைகள் -நன்றாய்ப்

பெரிதாக நீசெய்வாய்; மேன்மேலும் கைகள்
பெரிதாய் பெலன்பெற்று போவாய் -பெரியவன்

வாழ்த்தப் புறப்பட்டான் தாவீது; மன்னனும்
வாழ்த்திவிட்டுப் போனான் தலம்

I சாமு கலி 71

யூதேயாவை விட்டு காத்தூர் தன்னில் போய் சிக்லாகில் தாவீது வசித்தல்.


மனமடிவாய் தாவீது எண்ணினான் ஏதோ
நினைவிட்டு மன்னன் சவுலும் -எனையே

ஒருநாள் மடிந்திடச் செய்வார்கோன்; என்னை
திருநாட்டின் எல்லைகளில் கோன்காண் -திருவிலான்

நம்பிக்கை அற்றிட தப்பிப் பிழைக்கவே
நம்மைச்சேர் ஆட்களொடு போவோம்நாம் -நம்நிலமில்

அந்நியராம் வன்பெலித்தர் விட்டால் நமக்கிங்கு
எந்ததிசை தன்னிலே வேறிடமில் -அந்நாளில்

சென்றனர் காத்தூர், அறுநூறு ஆட்களோடு
மன்னனாம் ஆகீசு முன்னேதான் -அன்றியும்

மன்னன் இசுரேலர் ஒற்றர் இதைக்கூற
மன்னன் சவுல்கேட்டான் தாவீது -மன்னனை

விட்டோடி காத்சேர்ந்தான் என்றசொல் கேட்டவன்
விட்டனன் வன்தொடரா தேயங்கு -விட்டநேர்

கேட்டான் பெலித்தர் அரசே எமதுசேர்
நாட்டார் தலைநகரில் வாழாதார் -நாட்டிலே

நாட்டார் குடியிருக்க சொல்லுமே சீர்நகர்?
நாட்டார் இருக்க சிறப்பிலாவூர் -நாட்டிலே

தாருமெனக் கேட்டகோன், சிக்லாக்கை கைத்தர
வீரர் அடைந்தாரே சிக்லாகு -வீரர்

உடன்சேர் சிறப்பாண் இருந்தான் கடந்து
அடங்கியே ஓராண்டும் நான்கு -நடமாதம்

கோன்தந்த காரணத்தால் சிக்லாக் திருயூதா
கோன்தனையே சேர்ந்திருக் கின்றது. -மேன்வீரார்

போரிட கேசூர் கெசுரிர் அமலேக்கு
பாரில் எகிப்துவரை சூர்முதல் -பாரவர்

எல்லைகளாம்; போரிட்டுக் கொள்ளையாய் ஆவினம்
நல்லாடு, மேலாடை என்றவன் -அல்லாதான்

ஆகீசு பார்க்கத் திரும்பிவர, பார்த்தவன்
ஆகீசோ, எவ்விடம் இந்நாளில் -ஆகாதார்

ஆனார்கள் கொள்ளையிட என்கேட்க தாவீதோ
ஆனார் வடயூதா, கீழ்யூதா -மேனான்பொய்ச்

சொல்வான்; வதைநகரில் ஓராளும் விட்டிடாது
அல்லாரைக் கொல்வதால் ஆகீசு -நல்லவன்

யூதரை கொள்ளை யிடுவதால் தன்னினத்தார்
வீதமாய் வன்வெறுக்க செய்கின்றான்; -ஆதலால்

என்றென்றும் என்னூழி யன்னாய் இருப்பானே
நன்னாண்; அரசனவன் சொல்

I சாமு கலி 72

ஆகீசு தாவீதை இசுரேலரோடு போர்புரிய வேண்டும் எனச்சொல்லுதல்


பெலித்தர் இசுரெலெதிர் போர்புரியச் சென்றார்
பெலித்தரின ஆகீசு சொன்னான் -பெலித்தரில்

தாவீதே நீயும் ஒருவன்; சிறந்தவீரர்
தாவீதே வாநீ அழைத்தென -தாவீதோ

உம்மடியான் சொல்படி செய்வே னெனநீரும்
உம்மடியான் தன்னை அறிவீர்சீர் -அம்மானோ

இச்செயல் நீசெய்தால் என்றென்றும் ஆக்குவேன்
இச்செயலால் மெய்காவல் என்றுன்னை -இச்செய்கை

தாவீதிற் சீர்ச்செய்கை என்றுநினைந் தும்சீரில்
தாவீதே என்றுமனம் சொல்லவும் -தாவீதோ

இட்டவன் இக்கடன் தீர்த்திட என்செய்வேன்
இட்டதால் இக்கட்டில் உள்ளேனே -இட்டாணை

மேலேற்றுச் செய்வதே வீரர் அழகன்றோ
மேலவரே சீரோய் புலம்பினான் -மேலவன்

தன்னினத்தை தானே எதிர்த்திடப் போகவேண்டும்
இன்னா செயலது என்று

I சாமு கலி 73

சாமுவேல் இல்லாததால் அஞ்சனம் பார்க்கும் பெண்ணை தேடிப் பிடித்து சவுல் செல்லுதல்


சாமுவேல் முன்னே மரித்திட நாட்டிலே
சாமுவேல் போலொரு வாக்கனில் -சாமுவேல்

பூவுடல் தன்னை இராமாவில் செய்தாரே
பூவுடலை நல்லடக்கம் மக்களும் -மேயும்

அமைபெலித்தர் வந்தனர் சூனேமில் கூட
அமையிலார் கூடிவந்தார் கில்பா -அமைவில்

இவரெதிரி தான்கண்ட மன்னனோ போனான்
அவனிடம் கொஞ்சவீரர் என்றே -அவனோ

திருச்செயல் என்னென்று கேட்க திருவோ
திருவாய்ச்சொல் ஊரீமோ, வாக்கோ, -திருவால்

ஒருகனவோ வாராதே போயினன் மன்னன்
திருவவர் சாமுவேல் இங்கில் -திருவவர்

இங்கிருந்தால் நான்கேட்க சீரார்சொல் சொல்வரே
எங்கேநான் செல்வேன், புலம்பிட -அங்கொரு

தீச்சிந்தை வந்திட்டு கேட்டானே வீரனிடம்
தீச்செயல் அஞ்சனம்பார் யாருளர் -தீச்செயல்

நானழித்தேன் முன்னே, எனினும் செயலவரை
நானழைத்துப் பேச விரைவோம்வா -தானழித்த

அஞ்சனம்பார் மக்களைத் தேடியவன் போயிட
அஞ்சனம்பார் பெண்ணொருத்தி எந்தோரில் -அஞ்சனம்

பார்த்திடுவாள் என்கேட்டு தன்னரச ஆடைகள்
பார்த்தால் கரைவாளே என்றவன் -பார்மாந்தன்

போலங்கு ஆடையுடுத் திட்டுவிரைச் சென்றானே
ஆலவன் கீழ்ப்புல்லை தேடிவேர் -ஆலது

கேட்குமாப் போல அழன்று
I சாமு கலி 74

அஞ்சனம் பார்ப்பவள் சாமுவேலை எழுப்பி சவுல் சாமுவேலோடு உரையாடுதல்


பார்மாந்தர் வந்தார் இருவரங்கு மைப்பார்க்க
பார்த்திங்கு ஓராள் அழைத்திடு -பார்ப்பெண்ணோ

அண்ணா, திருமன்னன் பார்ப்பவரை கொன்றிட்டான்
அண்ணா, எனக்குவலை கண்ணியாய் -அண்ணாநீ

மைப்பார் எனக்கேட்ப தேனோ? சவுல்நோக்கி
மைப்பார், இதனால் ஒருத்தீங்கும் -மைப்பார்த்த

தாலே உனக்குவாரா என்றவன் சீரார்மேல்
மேலாணை யிட்டான் கறைமன்னன் -மேலவனே

நான்யாரை இங்குவர வைக்கவேண்டும்? மேனானோ
தான்சீராண் சாமுவேல் தன்னையழை -கோன்சீரில்

கேட்டிட, மைப்பார்த்த மாது அழன்றுகண்
வாட்டத்தால் மூடி; சவுலன்றோ -கேட்கவந்த

மாந்தன்நீர் என்றே அலறிட மாந்தனோ
மாந்தப்பெண் சொல்லுநீ என்னகாண்? -மாந்தப்பெண்

சொன்னாள், புவியினின்று வந்தால் பலதேவர்
மன்னா; எதுவகை மாந்தர்காண்? -மன்னா

கிழவன் ஒருவர் தனைப்போர்த்து வந்தார்
கிழவனே சாமுவேல் என்றே -அழன்றவன்

கீழே நெடுங்கிடை தொட்டிட ஆங்குவந்த
கீழாவி கேட்டது என்னையேன் -கீழின்று

மேலழைத்தாய் என்றே; அரசன்: வழியிலை
மேலே கறையவர் போர்புரிய -ஆலே

திருச்சொல் வராததால் வந்தேன் திருவை
இருமிடம் விட்டெழுப்ப என்றே -இரும்சாயல்

சொல்லிற்று: கர்த்தர் உனைநீக்கி கோவென
நல்லாணாம் தாவீத்கை தந்தாரே -சொல்கேள்

நடப்போரில் நீயுமுன் பிள்ளைகளும் செத்து
நடப்பீர்கள் என்னோடு இங்கு -நடப்பீர்கள்

என்றுகேட்ட மன்னன் சவுலோ நெடுங்கிடை
என்றே விழுந்திட; காலைமாலை -என்றவன்

ஊண்புசியா காரணத்தால் போனான் அழன்றவன்;
ஊண்தருவேன் கொஞ்சம் புசிக்கநான் -ஊண்தர

மைப்பார்ப்பெண் சொல்ல; உணவேதும் வேண்டாமே
தீப்பார்சொல் கேட்டேன் எனவங்கு -மைப்பார்ப்பெண்

கூடவந்தோன் ஆங்கே வருத்திட ஊணுண்ண
வேடவன் முன்வைக்க கன்றடித்து -மாடவள்

அப்பஞ்செய்த் தந்தனள் கோவிற்கு ஊணூன்தான்
அப்பம் புசித்துபின் சென்று

I சாமு கலி 75

ஆகீசு தாவீதை பெலித்தரின் பிரபுக்கள் பேச்சைகேட்டு திருப்பி அனுப்புதல்


பெலித்தர் படையெலாம் ஆபெக்கில் கூட
பெலித்தர் எதிராய் இசுரேல் -வலியில்

எசுரயேலில் கூடி யிறங்க, பெலித்தர்
திசைநடந்து போனார் அணியாய் -திசைதன்னில்

பின்போனார் ஆகீசு மன்னனொடு சீரவன்
பின்போக, வன்னாரின் சீராரோ -பின்னிந்த

மக்கள்யேன் வந்திருக்கின் றாரோ எபிரெயர்?
தக்கவன் ஆகீசோ, இத்தனைநாள் -தக்கானாய்

என்னிடம் ஊழியஞ் செய்தவனன் றோதாவீத்
என்னிடம் சேர்ந்திருந்த நாட்களில் -என்னெதிர்

ஏதும்நான் கண்டிலை என்றிடவும் ஏதேது
மேதாண் எதிரியர் மன்னனின் -ஓதனன்றோ

மேதாண் சிறப்பாக தன்மன்னன் எப்படி
மேதவொப்பு ஆவானோ: நம்தலைகள் -வீதவெட்டி

அன்றோ? இனமக்கள் பாடினரே அன்றுத்தான்
நன்றே சவுல்வெட்டு ஆயிரம் -என்றாலும்

இன்றோ சிறுவனாம் தாவீது வெட்டினான்
நன்றாகப் பத்தா யிரமென -அன்றவர்

பாடியது இன்னான் தனையன்றோ, ஆதலால்
நாடும் இனப்போர் அவன்வாரா -நாடுள்

குறித்தயிடம் நீரனுப்பும் என்றே சினமாய்
அறிவுறுத்த ஆகீசும், தாவீத் -அறிவாணே

சென்றிடு சிக்லாக் உனைச்சேர்ந்தோர் நல்லாணே
அன்றியும் ஊருள் இருப்பது -நன்றாமே

என்னிடம் வந்த முதல்நீ சிறப்பாணே
அன்றியும் வன்னாய் இனமெந்தன் -வன்சொல்

சொலவிங்கு; வேண்டாம்நீ போய்விடு சிக்லாக்
அலைமக்கள் கொண்டுநீ என்று; -நலமன்னா

உம்மெதிர் வந்தோர் எமக்கெதிரி யன்றோசீர்
எம்மையேன் விட்டுப்போ என்கின்றீர் -அம்மானே

நானதை நன்கறிவேன்; ஆனாலும் எந்தனினம்
நானழைத்து வந்தவுன்னை விட்டிடு -மேனழைத்தான்

என்றுசொன்ன தாலே, விடியலில் ஊழியரை
வன்களம் விட்டழைத்துப் போவாய்நீ -இன்னானோ

வன்களம் விட்டழைத்துப் போனான் விடியலில்
மன்னனைத் தட்டா தவன்போல -அன்றவன்

வந்தாலும் தன்மனதுள் மத்தாப்பு போல்நன்றாய்
வந்தானே புன்னகை யோடு

I சாமு கலி 76

சிக்கலாக்கை அமலேக்கியர் தாக்கி தாவீதுடைய மனைவியர் உட்பட எல்லாரையும் சிறையாக்கி கொண்டுபோகுதலும் தேவனிடம் தாவீது விசாரித்தலும்.


வந்தனர் தன்மனதுள் மத்தாப்பு போல்நன்றாய்
வந்தனர் புன்னகைத்து சிக்லாக்கில் -வந்தவர்

கண்டனர் மூன்றாம்நாள் சேர்ந்தபின் அவ்வூரை
கண்டனர் தீயால் எரியுண்டு -கண்டனர்

மேற்றிசையின் வன்மக்கள் மேன்வீரர் இல்லாத
காற்றடித்து தீபம் அணையுமாப்போல் -மேற்றார்

அமலேக் அழித்திட வந்தனர் சிக்லாக்
அமலேக் நகரதை போட்டார் -இமைப்பொழுதில்

தீயிட்டு, எல்லா வளமெலாம் பெண்டிரொடு
வேயமாய் கொள்ளையிட்டு போனாரே -தீயவர்;

தாவீதின் இன்மனைவி ஈராரும் போனாரே
தாவீ தொடுவீரர் ஆங்கழுதார் -மேவிலா

இச்செய்கை ஆனதால் அந்நகரார் சிந்தித்தார்
இச்செய்கை வன்னான் கறையாலே -இச்செய்கை

தன்னால் அவன்மேல் எறிவோம்கல் என்றவர்
தன்னுள்ளே பேசிட நேராணோ -அன்றிரு

ஆசன் அபியத்தார் நோக்கி எடுத்துவா
ஆசரிய ஏபோத்து; சீரார்சொல் -பேசவே

ஆசரியன் சென்றங்கு ஏபோத் எடுத்தவன்
ஆசரியன் கொண்டுவர தாவீதும் -பேசினான்

சீரிறைவா இப்போது வந்த இடும்புதனை
நேரவரே பின்சென்றால் மீட்பேனோ -சீரவரும்

சொன்னார், திருப்பிடுவாய் சீரேசெல் அன்றவர்ச்
சென்றார் அறுநூறு பேர்

I சாமு கலி 77

தாவீது அமலேக்கியரை துரத்தி சிக்லாக்கின் வளங்ககளை திரும்பப் பெறுதல்


வன்னார் தொடர்ந்தனர் ஆங்குதான் சென்றிட
சென்றவரில் பேசேராற் றைக்கடவா -அன்றவர்

நானூறு வீரர்கள்; பேசேறாற் றின்வெளியே
ஆனானேன் சொல்லேலா ஓராளை -அன்னவரும்

கண்டிட ஆங்கே உணவுதந்து கேட்டனர்
கண்டாயோ யாரேனும் என்கேட்க -கண்டேனோ

ஐயாகேள், நானுமொரு வீரனே, என்தலைவன்
ஐயா, விடுத்திட்டான் மேல்சரியில் -ஐயா

விரைந்தவன் கேட்டான், மகனே அவர்கள்
விரைச்சென்(ற) இடத்திற்கு எம்மை -விரையழைத்து

செல்வாயோ என்றதும் கேட்டனன் சொல்லாலே
வல்லவரே என்கையில் சீராணே -நல்லார்

எனக்கிங்கு ஆணையிடும் நீர்தேவன் முன்னே
எனையந்த வன்கையில் தாரா -தெனைக்கொல்லா

தேயிருப்பீர் என்றதை ஆணையிட்டுத் தந்தனன்
மேயவர் வெட்டவெளி தன்னிலே -வேயாது

தின்று குடித்திருக்க, தாவீதும் ஆட்களும்
அன்றுமுதல் நாளடுத்து வீழ்த்தினர் -அன்றியும்

எல்லா விதக்கொள்ளை தன்னைமீட்டு வந்தாரே
அல்லார் நதியின் கரை

I சாமு கலி 78

போரிட்ட மக்கள் நதி தாண்டி வாராதவர்கட்கு கொள்ளையில் பங்கில்லை என்று சொல்ல, தாவீது அதை மறுத்து பங்கு தருதலும் அதை போர் பிரமாணமாக வைத்தலும்


அல்லார் நதியின் கரைதனில் வந்திட
அல்லார் நதிதாண்டி நின்றார்காண் -நல்லாண்

சிறந்து நலமா எனக்கேட்க, வந்த
கறையாரில் வன்மக்கள், ஏது -சிறைமீட்க

யாம்போய் இவர்கொள்ளை பங்கிடவோ? பெண்மனைவி
மேம்மக்கள் மட்டும்தான் போகட்டும் -மேம்மானோ

கர்த்தர் நமதுகை வன்னார் தனையளிக்க
கர்த்தரின் கொள்ளையில் பங்கிதை -கர்த்தரின்

நல்லினத்தார் பங்கிடுதல் நன்றாமே; எவ்வகை
நல்லார் களப்போரில் பங்குண்டோ, -நல்லதிங்கு

நம்பொருட்கள் காவலர்க்கும் உண்டென்று தாவீது
தம்கொள்ளை தன்னில் சரிப்பங்கு -தம்வீரர்

பெற்றிட நேமமாய் செய்தனன் அன்றுதான்
நற்றின வீரர்க்கு கோன்

I சாமு கலி 79

கொள்ளையில் யூதா மூப்பருக்கு பரிசுகள் அனுப்புதல்


தம்கொள்ளை தன்னில் சரிப்பங்கு இட்டுவிட்டு
தம்வீரர் பெற்றிட நேமஞ்செய் -தம்மே

அமலேக்கின் கொள்ளை பலவாய் இருக்க
இமைப்பொழுதும் வீணாக்கா கோனோ -அமைந்திருந்த

யூதாவின் நல்மூப்பர் நண்பர்க்கு நற்பரிசாய்
யூதேயா வீரர்க்கை விட்டனன் -யூதாவில்

தான்தரித்த அவ்விடத்து மூப்பர்க்கு சென்றடைய
மேன்மக்காள் கர்த்தரின் கொள்ளையில் -நான்தரும்

நற்பங் கிதுவாழ்த்தே என்றவன் விட்டனன்
நற்பங்கு கையெடுத்துச் செல்லவே -நற்றாரும்

சென்றனர் யூதா நகர்கள் பதிமூன்று
அன்றுதான் சென்ற பரிசுகள் -நன்றெனக்

கொண்டாரே மூப்பர் சிறந்தங்கு வன்போரில்
கொண்டதை பங்காக அன்று

I சாமு கலி 80

சவுலின் மரணம்


பெலித்தருடன் போரில் இசுரெலர் தோற்று
பெலித்தர்முன் ஓடினர்கில் போவா -பெலித்தரின்

வில்லாட்கள் தன்னைச்சூழ்க் கண்ட சவுல்மன்னன்
வில்லாட்கள் கையில்வீழ் தூயற்றோர் -அல்லினத்தார்

அன்றோ, எனதுவீரா இப்போதே என்னைநீ
வன்வாளால் வெட்டென, அன்னானோ -மன்னனை

நான்வெட்ட லாமோயென் றஞ்சிட மன்னனோ
தான்செய்தான் தன்வாளை நட்டங்கு -தான்மேல்

விழுந்ததும், கண்ட கறைவீரன் தானும்
விழுந்தனன் தன்வாளின் மேலே -விழுந்தார்

எனக்கேட்ட வன்னார் அனைவரும் வந்து
இனத்தலைவன் மன்னன் அவனின் -இனமக்கள்

தன்னின் தலையறுத்து பூவுடலை போட்டாரே
தன்னிலம் பெத்சான் மதில்மேலே -தன்னினத்தார்

கண்டிட அற்றலைகள் கொண்டனுப்பி ஆயுதங்கள்
கண்டிட தன்னினத்தின் கோவிலில் -கண்பார்க்க

வைத்தனர் வன்பெலித்தர் ஆங்குதான்; மன்னனுடல்
வைத்தார் மதில்மேல் எனக்கேட்ட -மேத்தவர்

யாபேசு நன்னகரார் சென்றுவுடல் கையெடுத்து
யாபேசில் தீயிட் டெலும்புதனை -யாபேசில்

நல்லடக்கம் செய்தங்கு ஏழுநாட்கள் நோன்பிருந்தார்
நல்லூரார் மன்னனுக் காய்

I சாமு கலி 81

Comments

Popular posts from this blog

முழு வேதாகமம் வெண்பா வடிவில்