திருவிவிலியம் - யோசுவாவின் நூல் கலிவெண்பாவில்
திருவிவிலிய யோசுவாவின் வரலாற்று நூல்
கலிவெண்பா வடிவில்
யோர்தான் படலம்
யோசுவாவை கர்த்தர் திடன்கொள் என்று சொல்லுதல்
அறனவன் மோசே மரித்தபின்பு, கர்த்தர்
அறனவர் மோசேயின் ஊழியன் -அறனவனை
நோக்கியவர் நூன்மைந்தன் யோசுவாவே கேள்நீயே
ஆக்கவன் மோசே மரித்தனன் -ஊக்கமாய்
இம்மக்க ளோடுசெல்வாய் யோர்தான் நதிகடந்து
இம்மக்கள் கைக்கு தரும்தேசம் -அம்மானே
செல்நீயும் மோசேக்கு நான்சொன்ன சொல்படி
செல்லெங்கும் பெற்றிடுவீர் நீர்சீராய் -நல்லார்
திருவினத்தார் கால்மிதிக்கும் எவ்விடமும் தந்தேன்.
திருவின எல்லைகள் கீழே -பெரியநதி
மேலே பெருங்கடலாம் உன்னுயிர் நாளெல்லாம்
சீலவனே இல்லை எதிரியர் -ஆலாய்
திடமனம் கொண்டிரு சீலாண் தருமவ்
விடமதை பங்கிடுவாய் நீசீர் -திடமகன்
மோசே உடனிருந்த நானிருப்பேன் சீராணே
தேசத்துள் உன்னோடு என்றென்றும் -தாசனாம்
மோசே கொடுத்த பிரமாணம் சீரெனவே
மாசில் அதைக்கைக்கொள் சீராணே -தேசத்துள்
செல்லிட மெல்லாம் அறிவாளி யாகநீ
நல்லபடி கைக்கொள்வாய் சீர்நியதி -நல்லாணாம்
மோசே அளித்த பிரமாண நூலது
தாசா பிரியா திருக்கட்டும் -தேசத்துள்
செய்யக் கவனம், இரவும் பகலுமாய்
செய்யெண்ணம் சீரே அதுவுனக்கு -சீராண்
அறிவாளி ஆவாய் அளிநூலைக் கொண்டால்
நெறியாய் வழிவாய்க்கும் சீராய் -அறிவாயே
என்னாணை நீதான், பலங்கொள் திடமனங்கொள்
உன்தேவன் உள்ளார்உன் னோடென்றும் -அன்னான்
இதுகேட்டு யோசுவா: மக்கள் தலைகாள்
இதுகேளும் பாளையம் உள்போய் -அதுதேசம்
சீராம் நதிகடந்து உட்போவீர் மூன்றாம்நாள்
சீரூணை ஆயத்தம் செய்திடுவீர் -சீராராம்
பின்னங்கே கீழ்த்திசை தன்னில் இடங்கொண்ட
அன்னார் இரண்டரை சீராரை: -முன்னே
திருமோசே சொல்நினைந்து வாரும் இனத்தார்
திருதேசம் கைக்கொள் வரைநீர் -இருக்கும்
இருமிடத்தில் பெண்டிரும் பிள்ளைகள் விட்டு
திருதேசம் கைக்கொள் வரையில் -திருவினம்
சேர்த்து படைமுன்செல் வோமென்றீர் சீராரே
சேர்ந்தபின் செல்வீர் கிழக்குநாடு -நேர்சீர்
இனத்தார் பகன்றார் இனத்தலைவன் மோசே
மனமுவந்து சொன்னபடி நாங்கள் -இனமுன்னே
போவோம் இளைப்பாற எம்தமர் பின்வருவோம்
ஏவா திருவினத்தார் யாம்சீராய் -மேவாணாம்
மோசே திருவாண்சொல் கேட்டு நடந்ததுபோல்
தேசத்தில் நாங்கள் செவிசாய்ப்போம் -தேசத்துள்
போவோம் அனுப்பும் இடமெங்கும் கட்டளை
ஏவும் திருவே சிறந்துநீர் -மேவிசீர்
உம்முடைய தேவன் திருமோசே யோடிருந்தார்
உம்மோடும் சீரார் இருக்கட்டும் -உம்மாணை
சொல்கேளா போமெவனும் செய்வோம் கொலையிங்கு
நல்லாண் திடமனம்கொள் வீர்
யோசுவா கலி 1
யோசுவா வேவு பார்க்க ஒற்றரை அனுப்புதல்
நூனின் மகனவன் யோசுவா வேவுபார்க்க
மேனாள் இருவரிடம் செல்வீரே -மேனாட்கள்
சித்தீம் இடம்விட்டு ஆற்றைக் கடந்துநீர்
அத்தூர் எரிகோவைப் பார்த்திடும் -அத்தவன்
சொல்படி அவ்விரு ஒற்றர் அடைந்தாரே
செல்லூர் எரிகோவின் உள்ளவர் -நல்லாட்கள்
செல்வழி கேட்டறிந்து சென்றார் அலங்கமுள்
எல்லை விடுத்து அலைந்தனர் -நல்லதொரு
சந்தை பெருவழி எல்லாம் அலைந்தனர்
அந்நாளில் ஒற்றர் மறைந்தவர் -அந்நாளில்
கண்டார் இனத்தவர் அஞ்சி யிருப்பதை
கண்டு மனதுள்ளே தீர்த்தனர் -மண்ணில்
இருட்டும் பொழுததில் ஈராண் அலைய
திருமக்கள் தன்னைக்காண் வேசி -இருசீர்
அலங்கம்மேல் வீடுள்ள ராகாப் எனும்பெண்
நலமா யெனக்கேட்டாள் ஆங்கு
யோசுவா கலி 2
எரிகோ படலம்
ராகாப் ஒற்றரை காட்டிக் கொடுக்காமல் தப்புவித்தல்
அலைந்த இருவரை தேசத்தின் காவல்
சிலரங்கு பின்தொடர்ந்து உட்செல் -அலைந்தோரைக்
கண்டங்கு சொன்னார் எரிகோவின் மன்னனிடம்
கண்டிட வந்தனரே ஒற்றரும் -கண்டாரோ,
எப்போ? எரிகோவின் மன்னன் சினத்தோடு
தப்பாளாம் பெண்ணவளின் வீட்டிற்கு -தப்பாது
ஒற்றர் பிடிக்கவே ஆளனுப்ப, வந்தவர்:
ஒற்றரைக் கொண்டுவா நீரிங்கு -நற்றாள்,
அனுப்பிய ஆட்கள் வருவதைக் கண்டு
மினுமினுக்கும் ஆடை அணிந்த -இனப்பெண்
இருவரைக் கொண்டுபோய் வைத்தாள் ஒளித்து
இருவர் வருகை சரியே -இருவரை
மாடியில் ஆங்கே சணல்தட்டை காய்ந்திட
மாடியில் ஈராண் ஒளித்திட -மாடிசணல்
கீழே அவள்சேர்த்து வைத்தாள் ஒளித்திருவர்
கீழே அனுப்பியஆள் வந்துசேர -கூழாக்கி
ஏதோ சமையல் செயக்கதவு தட்டிட
ஈதோ வருகிறேன் சொல்லியவள் -ஏதோ
அழைத்தீரே ஏனோ எனக்கேட்க; வந்த
அழிமாந்தர் எங்கே உரைப்பாய் -வழியிலே
வந்தார் இருவர், அழிமாந்தர் என்றறியேன்;
வந்தவர் சென்றுவிட்டார், வந்தவுடன் -அந்தவழி
செல்லும்நீர் கோட்டை அரண்கதவு மூடும்முன்
அல்லார் பிடித்திடும் நீர்சீரோய். -இல்லை,
அடடா புறப்பட்டு விட்டனரே ஈராண்;
இடம்விட்டு செல்லா திருக்க -அடையும்
அரண்கதவு, என்றவர்கள் சத்தமிட்டு கூற;
அரண்கதவை பூட்டினர் ஆங்கு. -அரணுள்
அடடா இருவர் சணலுக்குள் இங்கே
இடம்விட் டிருவரும் போக -இடமில்லை
எங்கும்; அதனால் அலங்கம்மேல் வீட்டினுள்
தங்கின பெண்ணாள் மலைத்திட -அங்கவரை
பின்னுஞ் சணல்நீக்கி சீராண் இருவரிடம்:
பின்வந்தார் காவலர் தேடியிங்கு -அன்னாரே
உம்தேவன் செய்த வியன்செய்கை வந்தசேதி
எம்மக்கள் கேட்டு அலர்ந்தனர் -அம்மான்
எகிப்து விடுத்து வரும்வழியில் பேராம்
வகைக்கடல் செங்கடல் தானே -திகைத்தோம்
கடல்பிளந்து வெட்டாந் தரைதனில் வந்தீர்
கடல்கடந்து வந்த வியன்செய் -நடப்புப்
பெருமன்னர் ஓக்சீகோன் செய்த வகையை
இருமக்கள் இங்கே அறிந்து -பெருமரசர்
வீழ எமது திருநாடோ சிற்றூரே
வீழ அடிப்பார் எமை
யோசுவா கலி 3
ராகாபிடம் ஒற்றர் அவளின் குடும்பத்தாரைக் காப்பாற்றுவோம் என ஆணையிடுதல்
உங்களின் தேவனாம் கர்த்தர் உயர்வானில்
தங்கும் புவிமீது தேவனாமே -இங்குநான்
உங்களுக்கு செய்த உதவிதனை நீர்மறக்கா
எங்களுக்கு செய்யும் தயைதானே -இங்கிருக்கும்
என்மக்கள் சோதரர் சோதரி எல்லார்க்கும்
வன்தீங்கு வாரா திருக்கவே -என்கையில்
ஆணையிடு வீரே இருவர்நீர் கேட்டுநாளில்
ஆணையிடச் சொன்னாள் அவளங்கு -ஆணார்
தயைசெய்ய கர்த்தர்மேல் ஆணையிட்டு ஆங்கே
தயைசெய்வோம் பெண்ணே உமக்கு -தயைசெய்ய
ஆணையிட்டார் மாந்தர்; இடத்துள்ளே சேர்த்திடு
ஆணெல்லாம் பெண்ணே சிறந்துநீ -ஆணைபடி
வீட்டில் இருமக்கள் மேலே விழமாட்டோம்
நாட்டில் அலைவோர்க்கு இவ்வாணை -கேட்டில்
பொருந்தாது கேள்பெண்ணே; நாட்டில் இருமிவ்
வரும்வீடு தானறிய நூலாம் -இரும்வீட்டுள்
யாரேனும் உள்ளிருக்க எம்முயிர் ஈடாகும்
யாரும் வெளியே அலைந்தாலே -சீரார்
விழுந்திட்டால் எம்தவறு இல்லை; இதுவே
வழுவிலார் மேலாணை என்றார் -விழையார்
மதில்மேல் இரும்வீட்டின் சாளரம் கண்டு
மதில்விட்டு எம்மை இறக்கி -அதன்மேல்
கயிறுதனை கட்டிவை பெண்ணடை யாளம்;
கயிறில்லா வீடு அழிப்போம் -அயலார்
மதில்விட்டு வந்தோ ரிடம்சொன்னாள் ஒற்றர்
எதிர்காணா மூன்றுநாள் குன்றில் -எதிர்படாது
நீங்கள் ஒளிந்திருந்து செல்லும் நதிகடந்து
ஆங்கே இனத்திடம் சீர்
யோசுவா கலி 4
ஒற்றர் திரும்பி செய்தி அறிவித்தல்
இருவர் ஒளிந்தார்கள் மூன்றுநாள் குன்றில்
திரும்பி இறங்கி, இருவர் -சிரம்காட்டா
காரிருள் நேரத்தில் வந்தனர் யோர்தானின்
காரிருள்சூழ் நீர்த்துறைக்கு; அப்புறம் -காரிருளில்
நூன்மகன் யோசுவா சேர்ந்துரைத்தார் நற்செய்தி
மேன்கர்த்தர் தந்தார்கை நாடுதனை -மேன்செல்வர்
தேசக் குடிகளெல்லாம் நம்முன்னே சோர்ந்துபோய்
தேசத்தார் பேசி திகைத்தாரே -தேசத்துள்
கேட்டதை சொன்னார்கள் சீரொற்றர் ஆங்குத்தான்
நாட்டவரும் அஞ்சி சிறுத்தனர் -காட்டில்
அதிகாலை யோசுவா வோடு இனத்தார்
நதியோர்தான் மட்டும் பயணம் -நதிகடந்து
யோசுவா கலி 5
யோர்தானின் நீர் அகன்று வெட்டாந்தரையில் இசுரேல் இனத்தார் யோர்தானைக் கடத்தல்
மூன்றுநாள் சென்றபின்பு, பாளயம் சுற்றிதலை
மேன்கர்த்தர் பெட்டி புறப்பட -மேன்மக்கள்
ஆசரியர் பின்நீரோ ஈரா யிரமுழம்
தேசத்தார் விட்டுத் தொடர்வீரே -தேசத்தார்,
இவ்வழி நீவிர் செலாவழி என்பதால்
அவ்வழி நீவிர் அறிந்திட -அவ்வழி
முன்செல்லும் ஆசரியர் பின்செல்வீர் சீராக
பின்செல் லிடைவிட்டுப் போம்சீராய்; -அன்னவன்
யோசுவா மக்களை நோக்கி: இனமக்காள்
தேசத்துள் செல்ல உமைநீங்கள் -மாசிலாது
தூயராய் ஆக்குங்கள்; செய்வார் வியன்செய்கை
தூயரவர் நாளைக்குக் காண்பீரே -ஆயனாம்
யோசுவா ஆசரியர் நோக்கியவன்: ஆசரிய
தேசமுன் பெட்டி எடுத்துசெலும் -யோசுவா
சொல்படி பெட்டி எடுத்து இனமுன்னே
நல்லாண்கள் போனார் சிறந்து
யோசுவா கலி 6
யோர்தான் நதி குவியலாகி இசுரேல் இனத்தார் வெட்டாந்தரையில் நதியைக் கடந்து செல்லுதல்
கர்த்தரவர் யோசுவாவை நோக்கியவர்: உன்னோடும்
கர்த்தர் இருக்கிறேன் என்பதை -கர்த்தரின்
மக்கள் இசுரேல் இனமறிய இன்றுநான்
மக்கள்கண் முன்மேன்மை செய்வேன்சீர் -தக்கார்
உடன்படிக்கைப் பெட்டி சுமக்கிற சீரை
உடன்படிக்கைப் பெட்டியோடு யோர்தான் -கடைநீரில்
நில்லுங்கள் என்றாணை தந்திடு என்றாரே
நல்லாண் இனமறி வித்தனன் -நல்லார்
இனத்தாரே நீங்களிங்கு சேர்திருசொல் கேட்பீர்
இனம்நடுவே தேவன் இருக்கும் -இனமிதே
என்றறிய, ஐந்தினத்தார் தூர துரத்துவார்
என்றறிய ஈதடையா ளம்கேள்மின் -இன்று
புவியில் திருவின் உடன்படிக்கைப் பெட்டி
தவனாசர் காலிட முன்னே -புவியிலே
யோர்தானின் தண்ணீர் குவியலாக நிற்கும்கேள்
சீர்கர்த்தர் சொன்னார் இதையெனக்கு -சீராய்
விடியலில் எக்காளம் ஊதிட மக்கள்
நடந்தார் நதிநோக்கி ஆங்கே -இடைவிட்டு
பெட்டிமுன் செல்ல சுமப்போரின் கால்களது
இட்டதும் நீர்க்குவிந்து போனவியன் -விட்டது
மேலிருந்து ஓடிவரும் நீர்நின்று சார்தான்சேர்
மேலாண்பேர் ஆதாமூர் நிற்கவும்; -சாலநீர்
உப்புக் கடல்வரை நீர்பிரிந் தோடிட
அப்போது மக்கள் கடந்தனர் -தப்பியோர்
மக்கள் அனைவரும் யோர்தானை விட்டுவர
தக்கார் உடன்படிக்கைப் பெட்டியை -எக்காலம்
நின்று சுமக்கிற ஆசரியர் யோர்தானில்
நின்றார்நீ ரில்லாத் தரைமேலே -அன்றோ
கரைபுரண்டு ஓடும் நதிநீர் அறுப்பின்
திருக்காலம் எல்லாம்; நதியோ -திருவாசர்
நின்றதும் ஆனதே நீர்க்குவியல் மேன்மக்கள்
அன்றே கடந்தார் நதியன்றோ -அன்றியும்
மேனின்ற நீர்க்குவியல் கீழே தரையாமே
தானவர் நீரில்லா காய்த்தரை -போனார்
இனத்தாரும் சீராய்க் கடந்திட ஆசர்
இனம்கடக்க நின்றார் தரைமேல் -இனத்தான்
திருமோசே யோடிருந்த கர்த்தர் திருவாண்
இருப்பாரென் காண இனத்தார் -திருச்செய்த
இவ்வியன் செய்கையது செங்கடல் போனதுபோல்
அவ்வாண்சொற் கீழ்படிந்த நீர்
யோசுவா கலி 7
பன்னிரண்டு கற்களை யோர்தானில் இருந்து எடுத்து வந்து நடுதல்
மக்களின் கண்முன்னே மேன்மைப் படுத்திடுவேன்
தக்கார்சொல் அன்று நிறைவேற -மக்களவர்
நீர்க்குவியல் கண்டு, திருவாணோ டேகர்த்தர்
சீர்நல் லிருப்ப தறிந்தனர் -சீர்நேரார்
மக்கள் அனைவரும் யோர்தான் கடந்தபின்
தக்கார் திருவா ணிடம்சொன்னார் -மக்களின
சீர்தலைவர் பன்னிரண்டு பேரை நதிதன்னில்
சீர்லேவி நில்லிடக் கல்தனை -சீர்தலைவர்
கையெடுத்து வந்து இனம்சேர் கரைதன்னில்
கையெடுத்த கற்களை நாட்டுவீர் -கையெடுக்கச்
சொல்படியே யோசுவா பன்னிரண்டு பேரழைத்து,
சொல்கேட்டு தோளின்மேல் கல்லெடுத்து -நல்லாரே
கொண்டுவாரும் நாளை இவையென்ன என்றேநும்
கொண்டவழி கேட்டால் உரைப்பீரே -மண்டியர்ச்
சீராம் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக
யோரதான் தண்ணீர் பிரிந்துபோன -சீரதினால்
வைத்துள்ளோம் கற்களை ஈதே அடையாளம்
வைத்திடுவீர் நீரும் நினைவென்றும் -வைத்தனர்
யோசுவா கட்டளை யிட்டபடி பன்னிரண்டு
தேசத் தலைவர்கள் கற்களை -யோசுவா
சொல்படி யோர்தானில் நின்றயிடம் தன்னின்று
கல்லெடுத்தார் நாட்டவே அங்கவர் -கல்லெடுத்து
தாங்கள் இராத்தங்கும் அவ்விடத்தில் வைத்தார்கள்.
ஆங்கே நதியோர்தான் நீர்நடுவே -பாங்காக
ஆசரியர் பெட்டி சுமந்த இடத்திலும்
மாசிலாண் நாட்டினான் கற்களை -மாசிலோர்
காண்பீர் அவைகற்கள் யோர்தான் நடுநிற்ப
ஆண்மோசே யோசுவா வுக்கிட்ட -மாண்பாமே
கட்டளைகள் எல்லாமே செய்து முடியுமட்டும்,
பெட்டியை யேந்துவோர் நின்றனர் -எட்டியே
தலைவர்கள் ஆங்கவர் போபோபோ என்று
இலைவேறு என்றே இனமும் -தலைகேட்டுப்
போனார் நதியைக் கடந்தங்கு; ஆசரியர்
மானப் பிறப்பார் தரித்து
யோசுவா கலி 8
ஆசரியர் கடந்ததும் யோர்தான் மீண்டும் கரைபுரண்டு ஓடுதல்
மக்களெல்லாம் போனபின்பு, கர்த்தரின் பெட்டியும்
தக்கபடி சென்று கடந்தது; -தக்கரவர்
ஆசரியர் மக்கள்முன் சென்றார் கிழக்குதிசைத்
தேச இரண்டரையும் சேர்ந்துதான் -தேசத்தார்
ஏறக் குறையாண்கள் நாற்பதி னாயிரம்பேர்
மாறாத ஆணைபடி வீரராய் -ஏறிக்
கடந்தனர் கர்த்தர்முன் காத்மனாசே ரூபன்
நடந்தார் எரிகோ வெளியில் -கடக்கத்
திருகர்த்தர் யோசுவாவை அந்நாளில் தானே
திருவினத்தார் கண்கள்முன் மேன்மை -திருச்செய்து
மோசேக்கு அஞ்சினாற்போல், ஊழியன் யோசுவாவை
தேசத்தார் அஞ்சினர் ஆங்குசிறந்து -தீசுசேர்
தேசத்தார் நீர்விட்டு வந்திட கர்த்தரும்
தேசத்தின் ஆசரியர் வந்திட -பேசியாணை
என்றுரைக்க யோசுவா வாரும்சீர் ஆசரியர்
என்றானை யிட்டான் சிறந்தங்கு -அன்றே
உடன்படிக்கைப் பெட்டி சுமக்கிற ஆசர்
உடன்யோர்தான் விட்டேற ஆங்கே -இடத்திலே
காலூன்ற யோர்தானின் தண்ணீர் திரும்பிமுன்போல்
சீலாய்க் கரைபுரண்டு ஓடவியன்; -சீலார்
முதல்மாதம் பத்தாம் திருத்தேதி தன்னில்
அதுவகை மக்களும் யோர்தான் -நதிவிட்டு
ஏறி, எரிகோவின் கீழெல்லை கில்காலில்
வேறாகப் பாளயம் போட்டனர் -வேறாக
யோர்தா னிலிருந் தெடுத்தவப் பன்னிரண்டு
சீர்கற்கள் தன்னையவன் யோசுவா -சீர்நகர்
கில்காலில் நாட்டி, இனமே வழியுமது
கல்லெதற்கு என்றால் உரைத்திடும் -நல்லார்செய்
வெட்டாந் தரைவழியாய் இந்நதி யோர்தானை
கிட்டிக் கடந்தோம் இனம்யாமே -மட்டிலா
தேவன் பெரியவர் என்றறிய நீங்களும்
தேவனை அஞ்சி நடப்பீர் -தேவயினம்
செங்கடலின் நீர்ப்பிளந்து வந்ததுபோல் யோர்தானும்
இங்கே குவிந்திட்டு காய்ந்தநிலம் -பங்கடைய
வந்தோம் எனவழியார் கேட்டதற்கு சொல்லுவீர்
அந்தபடி நல்ல விடைதனை -அந்நாள்
எமோரி அரசர்கள் சேதிகேட்டு அங்கே
இமைக்கொட்டா தஞ்சிக் கரைந்தார் -தமரோ
நுனித்தோல் கடைநீக்கக் கட்டளை யிட்டான்
வனம்பிறந்த மக்களுக்கு ஆங்கு
யோசுவா கலி 9
கில்கால் என கானானில் உள்வந்த இடத்திற்கு பெயரிடுதல்
எகிப்ததை விட்டவரெல் லாரும் நுனித்தோல்
எகிப்திலே தானே எடுத்தார் -வகைவனம்
தன்னில் பிறந்தோராம் அவ்வாண்கள் தன்னினது
இன்செயல் விட்டார் இனத்தாரே -அன்றே
சரிதேவன் கட்டளை யிட்டார் நுனித்தோல்
கருக்கான கத்திகளால் வெட்ட -சரியங்கு
நாட்டுள்ளே போகுமுன் செய்திட கட்டளை
நாட்டவர்க்கு தந்தான் திருவாண்சீர் -நாட்டார்
நுனித்தோல் எடுத்திட்ட ஆண்களெல்லாம் வீட்டில்
நுனிகுணம் ஆகும் வரையில் -இனத்தாருள்
தங்கி யிருக்க; எகிப்தினது நிந்தைபோன
திங்கென கில்கால் பெயரிட்டான் -அங்கே
திருநாள் பசுகா யெனும்பண் டிகையை
திருவினம் ஆசரித் தார்
யோசுவா கலி 10
யோர்தானின் மேற்குக் கரையில் வந்து சேர்ந்த பின்னர் மன்னா பொழிவு நின்று போகுதல் மற்றும் தேவ தூதனை யோசுவா சந்தித்தல்
பசுகா திருப்பண் டிகையில் பயிர்கள்
பசுகாவிற் காக சமைக்க -பசுகா
புளிப்பில்லா அப்பங்கள் செய்த மறுநாள்
அளிமன்னா வாராது நிற்க -களித்தவர்
கானான் திருத்தேச நற்கனி யோடுபயிர்
மானார் திருமக்கள் உண்ணவும் -கானான்
வெளிதன்னில் சுட்ட கதிர்களை உண்ண
வெளிவிழும்விண் ஊண்நின் றதங்கு -களித்திருக்க,
பின்திருவாண் யோசுவா ஆங்கே வெளியிலே
தன்கண்கள் ஏறெடுத்துப் பார்த்திட -வன்னெரிகோ
நேரே உருவியவாள் கொண்ட ஒருவரை
சீராணும் கண்டுகேட் டான்தூதர் -சீரார்,
எதிரியர் பக்கமோ நீர்எம் முடையோ?
எதிரே எரிகோமுன் நிற்பார் -அதுகேட்க
வந்தேனே சீராரின் சேனை அதிபதி
இந்நாளில்; ஆணும் பணிந்தனன் -வந்தார்ப்
பணிந்துகொண்டு, யோசுவா கேட்டான் அடியேன்
பணிவாகக் கேட்கின்றேன் சொல்லும் -பணியாது
என்றவனை காலணிகள் நீகழற்று தூயிடம்
என்றதும் செய்தான்சீர் அன்று
யோசுவா கலி 11
எரிகோ மதிலை ஆறுநாட்கள் ஒருமுறை சுற்றுதலும், ஏழாம்நாள் ஏழுமுறை சுற்றியபின் இசுரேலர் ஆரவாரம் செய்ய மதில் விழுதலும்
எரிகோ அரசில் அனைவரும் அஞ்சி
எரிகோ அரணை அடைக்க -எரிகோவின்
உள்ளேயோ விட்டு வெளியேயோ போகாது
உள்ளே கிடந்தார் இடத்தில்தான் -தள்ளித்
திருகர்த்தர் ஆசரியர் சுற்ற, எரிகோ
திருவாசர் ஆறுநாள் சுற்றி -ஒருமுறை
ஏழாம்நாள் ஏழுமுறை சுற்றி ஒலித்திடும்
வேழார் திருயெக்கா ளம்சீராய் -வேழாரின்
எக்காளம் சீராய் ஒலிக்க இனமக்கள்
எக்காள சத்தம் தனைகேட்டு -தக்காரும்
ஆர்பரிக்க ஆங்கே எரிகோ மதில்விழும்
ஆர்பரித்தோர் உட்செல ஏழாம்நாள் -சீர்ப்படையாய்
அப்படியே பெட்டிமுன் போர்வீரர் போங்கள்நீர்
தப்பாது ஆசரியர் எக்காளம் -அப்படியே
கொண்டுசென்று ஊதிடுவீர் என்றான் திருவங்கு
கொண்டு ஒருமுறை சுற்றிநீர் -கொண்டவர்
ஆறுநாட் கள்சொல் படிசென்றார் மக்களவர்
ஆறாம் திருநாள் முடிந்ததும் -ஆறாம்
இரவிலே மக்களிடம் யோசுவா நாளை
திருசத்தம் போடும் உரத்துத் -திருமக்கள்
எப்போது ஆர்பரிக்க வேண்டுமென சொல்வேன்நான்
தப்பாது ஆர்பரிப்பீர் மக்களே -எப்போதென்
றால்கேள்மின் எக்காள சத்தம் ஒலித்ததும்
மேல்செல்ல ஆர்ப்பரி யும்ஓஓ -சால்பவர்
ஏழாம் திருநாளில் ஏழு தரம்சுற்றி
வேழார் திருவாசர் எக்காளம் -ஏழாம்
முறைக்குப்பின் சத்தமிட, ஆர்ப்பரித்தார் மக்கள்
இறைச்சொல் படியே சிறந்தே -கறையார்
மதில்விழுந்து போக இனத்தாரும் ஆங்கே
மதில்பக்கம் நின்றோர் விரைய -மதிலேறி
உட்சென்று கண்டதெலாம் சுட்டெரித்தார் ஆணைபடி
நட்டாரும் தப்புவித்தார் பெண்தனை -நட்டாரோ
ராகாப் தகப்பனின் வீட்டார் அனைவரும்
வாகை எரிவிட்டு தப்புவித்தார் -ராகாப்
இடம்சென்ற ஒற்றர் திருமக்கள் சொல்லின்
திடம்செய்தார் கோனும் சிறந்து
யோசுவா கலி 12
எரிகோவின் சங்காரம் மற்றும் பொன், வெள்ளி, உலோகம் தவிர எல்லாவற்றையும் தீயிட்டு கொளுத்துதல்.
இரும்பதும் பொன்வெள்ளி வெங்கலம் எல்லாம்
திருவினது ஆலயத் திற்கே -இருமற்ற
தெல்லாம் எரிப்பீர் ஒருவரும் விட்டுவிடா
தெல்லாரைக் கொல்வீர் இனத்தாரே -எல்லாரும்
சொல்படியே சென்றவர் செய்தார் சிறந்துபோர்
சொல்படி பொன்வெள்ளி வெண்கலம் -நல்லிரும்பு
பண்டங்கள் மட்டும் திருவா லயத்திற்காய்
எண்ணி எடுத்தார் இனத்தவர் -மண்ணூரை
அன்றுத்தான் யோசுவா சொன்னான் கெடுசொல்லாய்
என்றிந்த கேடு நகர்தன்னை -வன்னான்
எடுப்பித்து கட்டுவோன் பிள்ளைகள் தன்னை
கொடுப்பான் பலியாகக் கேடாய் -அடுத்து
அடிக்கல் செதுக்கும்நாள் மூத்தோனை தந்து
நடக்கும் நகர்வாயில் வைக்கும் -இடிநாளில்
கேடாய் இளையோன் பலிதந்து பின்கட்ட
கேடுசொல் சொன்னான் திருவாணும் -ஆடவர்
சொல்படி யெல்லாம் திருவவர் நிற்கவும்
சொல்படி ஆங்கெ வியன்செய்கை -நல்லாணின்
பேர்சீராய் தேச மெலாம்பரவச் செய்தாரே
சீர்கர்த்தர் யோசுவாவை ஆங்கு
யோசுவா கலி 13
ஆயிநகர்ப் படலம்
ஆயிக்கு ஒற்றர் அனுப்பி அவர் வந்து சிலர் போதும் என சொல்லுதல், இசுரேல் தோற்று ஓடிவர, யோசுவா கர்த்தரிடம் ஏனிந்த தோல்வி என வினவுதல்
பெத்தாவேன் பக்க நகராமே ஆயிநகர்
அத்தவனும் ஒற்றரை அங்கனுப்பி -எத்தனை
போர்வீரர் வேண்டும் எனப்பார்த்து, போனதமர்
போர்வீரர் மூவா யிரம்போதும் -போர்செய்து
ஆயியை கைப்பற்ற போனதமர் போனாரே
ஆயியில் தோற்று தமரோட -ஆயிவாயில்
தன்னின்று போனார் இனவீரர் ஆங்குதோற்று
என்ன தவற றியாவிழித்தார் -அன்றங்கு
தப்பித்த மற்றவர் கற்குடையும் குன்றுவரை
தப்பித்துப் போனார் விரைந்தங்கு -தப்பாது
முப்பத்தா றாமே விழுந்த தமரன்று
தப்பேதோ உள்ள துணர்ந்தனன் -அப்போது
யோசுவா தன்னாடை தன்னை கிழித்தங்கு
தேசத்தார் முன்னே கிடந்தானே -பேசும்
திருகர்த்தர் ஏனோ வகைநிலை வன்னார்
கரையாம் முறிந்தோமே ஏனோ -கரைப்புரண்ட
யோர்தான் கடந்துவந்து கீழார் இனமுன்னே
சீர்மக்கள் வீழவோ கொண்டுவந்தீர் -யோர்தானின்
கீழ்பக்கம் நின்றிருப்போம் ஈதென்றால் என்றவன்
வாழ்ப்புலம்பல் கேட்பார்மற் றோரிங்கு -வாழ்மக்கள்
கானினியர் மற்றும் பிறவினம் கேட்டிதை
மேனார் இனம்கைக் கொடுத்தாரே -வானங்கீழ்
இவ்வினத்தை முற்றிலும் நாமழிப்போம் என்றுசொல்லி
அவ்வாறே செய்வார் எதிர்த்து
யோசுவா கலி 14
ஆகானின் பாவமும் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் கொல்லுதல்
வாழ்மகனின் இப்புலம்பல் கேட்ட திருகர்த்தர்
பாழ்போன தேவீண் எனவிழுந்து -கீழ்மாந்தன்
போலிருப்ப தேனோ முகங்கவிழ்ந்து சீராணே
சீலாரில் உன்னினம் கேள்மகனே -சீலாரில்
பாவம் புரிந்தாரே உன்னின மக்களிங்கு
பாவ எரிகோ பொருளிலே -பாவமில்
என்றே எடுத்து எரிக்காமல் விட்டாரே
வன்னார் இனத்தில்சீ ரில்மண்ணில் -வன்னார்
இதுவே எதிரிமுன் நிற்க முடியா
வதைக்கா ரணிமகனே நீயும் -அதுகண்டு
சீரில் பொருளழிக்கா விட்டால் எதிரியர்முன்
போரில் விழுவீர் இனமெல்லாம் -சீராண்
அதனால் இனத்தாரை தூய்ப்படுத்தி பாவம்
எதனால் எனவறிய நீயும் -வதைவிட
கண்டுபிடி சீராக; கண்ட பொருள்தனை
மண்ணிலெரி சீரே சிறந்துநீ -மண்ணில்
குலத்தார் குலம்குலமாய் வாரும் விலக்க
குலமொன்றை கர்த்தர் குறிக்க -குலத்தார்
குடும்பம் குடும்பமாய் வாரும்; குடும்பம்
குடும்பமாய் பார்ப்பார் திருவார் -கடைசியில்
எந்த குடும்பத்தை கர்த்தர் குறிப்பாரோ
அந்த குடும்பத்தின் ஆணெல்லாம் -வந்திடட்டும்
யாரை திருக்குறித்துச் சொல்கிறாரோ அந்தாளே
சீரில் அறிந்தார் செயல்தனை -சீரவர்
கர்த்தர் குறித்த கரையாணை தீயிட்டு
கர்த்தர் அழித்திட சொல்கிறார் -கர்த்தரிடம்
கன்னமிட்ட அப்பொரு ளெல்லாம் எரிதீயில்
அன்றே எரிக்கப் பகன்றாரே -அன்றியும்
கர்த்தரின் நல்ல உடன்படிக்கை தன்னைமீறி
கர்த்தர் எதிராகப் பாவஞ்செய் -கர்த்தர்
எதிரியாண் கையுள்ள தெல்லாம் எரித்து
எதிரியை கொல்வீர் களைந்து -எதிரே
வரவழைத்தான் சொல்கேட்டு யோசுவா அங்கே
வரகுலங்கள் தன்னிலே யூதா -கரையென
கர்த்தர் குறிக்க; குடும்பம் குடும்பமாக
கர்த்தர்முன் யூதர் நடந்திட -கர்த்தர்
வழியானாம் ஆகான் தனைத்திருவும் காட்ட
வழியிலை மானம் கரைய -வழியோனை
யோசுவா: சொல்மகனே செய்தபாவம் என்னவோ
தேசத்தார் போனார் கரைந்தங்கு -தேசம்முன்
ஆகானோ ஆங்கே வழியின்றி சொன்னானே
ஆகாத பொன்வெள்ளி நானெடுத்தேன் -போகாத
பாபிலோன் நற்சால்வை யோடே விழைந்துநான்
ஆபத்து என்றாலும் வீண்செயல் -தாபரிடம்
யார்பார்ப்பார் என்றே பொருட்கவர்ந்து கூடத்துள்
பார்பார்க்கா விட்டேன் குழிவெட்டி -சீர்பாரும்
என்கூடா ரங்கீழ் பொருளவை யங்கிருக்கும்
என்பாவச் செய்கை யிதுதன்னே -வன்சொல்கேள்
யோசுவா ஆண்சிலரை சென்றுபார்க்க விட்டிட
யோசுவா கண்கலங்கி நின்றானே -தேசத்தார்
முன்வந்து அப்பொருட்கள் காட்டிட தேசத்தார்
முன்சொல் இலாது மலைத்தனர் -என்னநீ
வன்பாவம் செய்தாயே ஆகானே தேசத்துள்
என்னே இனிசெய்வேன் யானிங்கு -அன்னவன்
ஆகானின் தந்தை அழுதிட தாயவள்
ஆகானே போநீ மரித்திடு -ஆகவே
குன்றுகள் தன்னிடைப் பள்ளத்திற் போயவர்
வன்செய்கை செய்தவன் ஆகானை -அன்றேதான்
கல்லெறிந்தார் மக்களங்கு; ஆகானின் மக்களோடு
கொல்ல எரித்தார் அழித்து
யோசுவா கலி 15
ஆயியைக் கைப்பற்ற திட்டமிடல்
திருகர்த்தர் யோசுவாவை நோக்கிப் பகன்றார்
திருமக்கள் போர்வீரர் யாவர் -தெரிந்துநீ
ஆயிநகர் போர்செய்ய போமகனே நீயஞ்சா
தேயிரு நீகலங் காதிருசீர் -தீயார்
இதோநகர் ஆயி அரசனையும் மக்கள்
வதைசெய்ய நாட்டையும் கையில் -இதோதந்தேன்
செய்தாய் எரிகோ செயல்படி ஆயிக்கும்
செய்வாய் அரசன் அழிப்பாய்நீ -மெய்யிலே
ஆயியில் கொள்ளையிட்ட கொள்ளைப் பொருட்களையும்
தீயிட் டழிக்காமால் கொள்ளையாக -வேயிடா
கொள்ளலாம், ஆக நகர்பின்னால் இட்டிடு
கொள்பதிவாய் வைத்திடுஆட் கள்சீராய் -மெள்ளவே
அப்பொழுது ஆயி எதிர்த்து இனத்தாரும்
தப்பா தெழுந்து புறப்பட -அப்போரில்
போரிட யோசுவா முப்பதி னாயிரம்
வீரரைத் தேர்ந்தான் எடுத்தவனும் -சீராண்
இரவிலே வீரரை செல்லென் றனுப்பி,
இரவில் நகர்பின் பதிவாய் -விரைவாய்
பிடிதூரம் மட்டும் ஒளிந்திடு வீரே
பிடித்திட ஆயத்த மாக -நடிப்போமே
மற்றவர் யாமோ நகர்கிட்டிப் போயங்கு
மற்றநாள் போலே வரும்போது -அற்றார்
விழுந்ததுபோல் ஆங்கே நடித்தே புறமாய்
விழுந்தோட பின்தொடரு வர்தீ -விழுவீர்
நகர்விட்டு அப்பாலே போனதும் செய்வேன்
நகர்பிடியும் என்றே அடையாய் -நகர்சூழ்ந்து
அப்போ பதிவிட்டு வந்து பிடித்திடுவீர்
ஒப்புத் தருவார் திருவவர் -ஒப்பில்
நகரைப் பிடித்து வதைத்தீக் கொளுத்தி
நகரிலே கர்த்தரின் சொற்செய் -நகர்பிடிக்கும்
மக்கள் பதிவிருக்கச் சொன்னான் திருவாண்சொல்
மக்களும் கீழ்படிந்தார் அங்கு
யோசுவா கலி 16
ஆயியைக் கைப்பற்றுதல்
மக்கள்போய், பெத்தேல் நகர்ஆயி யின்நடுவே,
தக்காரும் ஆயியின் மேற்கிலே -தக்கபதி
நிற்கவும்; யோசுவா மற்றா ருடனிரவு
நிற்க தரித்தான் மறைந்தவர் -நிற்க
விடியவும் யோசுவா மக்களை எண்ணி
விடுவிடு என்றவன் மூப்பர் -ரொடுங்கூட
மக்களின் முன்னால் நடந்தனன், ஆயியின்
தக்கமேல் போனான் படையொடு -தக்கார்
அவனோ டிருந்த சிறவீரர் எல்லாம்
தவனுடன் போய்நகர் முன்னாக -ஆயி
வடக்கே இறங்கினர் பாளயம் ஆங்கு
நடுவே ஒருபள்ளத் தாக்கு -அடிக்கவே
ஐயா யிரம்பேரை யோசுவா தேர்ந்தெடுத்து,
ஐயா அவன்வைத்தான் பெத்தேலின் -ஆயி
நடுவே நகர்மேற்கில் சீராய்ப் பதிவாய்
இடமொளித்து தாக்க நகரை -இடத்தே
நகரின் வடக்கே இருந்த படையும்
நகரின் நிலமேற்கே சீராய் -நகர்பதிவும்
திட்டம் புரிந்தபின்பு, யோசுவா அன்றிரவு
திட்டம்போல் பள்ளந் தரித்திட்டு -எட்டியோர்
ஆயி அரசன் அதைக்காண் பொழுதவன்
ஆயி நகரத்தார் வந்தாரே -ஆயி
அரசன் குறித்ததவ் வேளையில் போர்போர்
விரைந்தார் பதிவறி யாது -விரைவாக
யோசுவாவும் சேர்ந்த இனத்தாரும் முன்முறிந்து
பேசியது போல, வனம்போகும் -ஏசிவழி
ஓடிப்போ னார்கள் இனத்தார் நடிப்பாக;
ஓடுகிறார் பின்போய் அழிப்போமே -ஓடி
நகர்மக்கள் பின்சென்றார் திட்ட மறியா
நகர்மக்கள் விட்டுவர ஆங்கே -நகரில்
ஒருஆணும் இல்லை; நகர்விட்டு அப்பால்
விரைந்தார் இனத்தை தொடர்ந்து -விரைந்தங்கு
ஆயிபெத்தேல் பின்தொ டராத மனிதனில்லை
ஐயா நகரைத் திறந்துவைத்து -பையவரப்
போனார் இனத்தார் துரத்தி; பதிவறியா
மானார் விரைவிட்டார் ஊர்தனை -மேனவர்
அப்பொழுது கர்த்தரவர் யோசுவாவை நோக்கிசொல்:
இப்போது உன்கையில் உள்ளதே -தப்பாது
ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டிடு;
ஈட்டிநீட்ட உன்கையில் ஒப்பின்று -நாட்டவன்
அப்படியே யோசுவா தன்கையின் ஈட்டியை
அப்பட் டணத்துக்கு நேராக -தப்பாது
நீட்ட பதிவிருந்த வீரர்கள் தீவிரத்தீ
மூட்ட விரைந்தாரே சூழ்ந்தங்கு -நாட்டவர்
ஆயியின் வீரரோ பின்னிட்டுப் பார்த்தபோது,
ஆயிநகர் தீயின் புகைவானில் -ஐயோ
எழும்புவதைக் கண்டு; வழியிலை எங்கும்
வழிசென்றார் தாக்க எதிர்த்து -வழியில்
பதிவிருந்த வீரர் நகரைப் பிடித்து,
பதியின்தீ மூட்ட புகையும் -அதைக்கண்ட
யோசுவாவும் சேரினத்தார் ஆயியின் மாந்தரை
வீசி முறியடித்தார் சீராக -வீசு
நடுவே அகப்பட்டுக் கொண்டார் நகரார்
விடுத்து எவர்போகா வெட்டி -பிடித்தார்
அரசனாம் ஆயியின்; யோசுவா ஆண்கை
அரசனைக் கொண்டுவந் தார்சீர் -விரைந்தவர்
ஆயி குடிகளை யெல்லாம் விழவெட்ட
ஐயா திருவாணாம் யோசுவா -ஆயியெதிர்
நீட்டிய ஈட்டியை நீட்டி யிருந்தனன்
நீட்டிய கைமடக் காதங்கு -நாட்டார்
திருகர்த்தர் யோசுவாவிற் கட்டளை யிட்ட
திருச்சொல் படிகொள்ளை கையில் -திருவினத்தார்
சேர்த்தார்; திருவாணோ ஆயியை சுட்டெரித்து
சேர்த்திரா மண்மேடு செய்தனர் -வேர்செருக்காண்
ஆயி அரசை மரத்திலே போடுவித்து,
ஆயிற்று மாலைவரை தொங்கவிட்டு -ஆயிகோன்
ஆதவன் சென்றபின் வாயிலில் போட்டவன்
மீது குவித்தார்கற் கள்
யோசுவா கலி 17
ஏபால் கெரீசீம் மலைகளின் மேல் வாழ்த்தும் கெடுசொல்லும் வாசித்தல்
கர்த்தரின் தாசனாம் மோசே அளித்திட்ட
கர்த்த ரினயிசுரேல் கைக்கொள்ள -கர்த்தர்சொல்
பீடத்தை ஏபால் மலைமேலே கர்த்தருக்கு
நாடதில் கட்டினான் ஆங்கவன் -நாடன்
பலிபல யிட்டு இனமுன்னர் மோசே
கலையெழுதித் தந்த சிறப்பு -நலநேமச்
சொற்களை கற்கள்மேல் யோசுவா தானெழுதி
சொற்படி வாசித்தான் ஆங்கவன் -சொற்படி
பாதிபேர் ஏபாலில்; கெர்சீமில் பாதிபேர்
சோதி யவர்தந்த நேமத்தை -வீதம்
படித்தனன் வாழ்த்தும் கெடுசொல்லும் சேர்த்து
படிக்காத சொல்லேது மில்லை -அடிபடவே
யோர்தானின் மேற்கிலே ஆறினத்தின் வன்னரசர்
சீர்மக்கள் ஆயிக்கு செய்ததை -பார்த்து
ஒருமனமாய் சேர்ந்து இனமெதிர்க்க வந்தார்
ஒருநகர் மட்டும்வா ராது
யோசுவா கலி 18
வஞ்சனைப் படலம்
கிபியோன் மனிதர் இசுரேலரை வஞ்சித்தல்
ஏவியர் வாழும் கிபியோன் குடிகளோ
ஏவினர் மாந்தர் சிலரையவர் -மேவி
இசுரேல் இனத்தோடு ஒப்பந்தம் செய்ய
இசுரேல் இடம்வந்தார் வீணர் -இசுரேல்
இவரிடம் ஒப்பந்தம் செய்ய இடமில்
இவரைநாம் வஞ்சித்துச் செய்வோம் -அவர்கள்
அதுபடி மேற்பூசி சோறுபாழ் சேர்த்தார்
விதச்சாறு பைப்பொத்தல் காண -முகமேல்
அரிதாரம் பூசினர் அம்மக்கள் ஆங்கே
சரியாக ஏமாற்றி விட்டார் -விரைந்தோம்யாம்
சீர்கர்த்தர் ஓக்சீகோன் செய்தவைக் கேட்டிங்கு
நீர்செய்யும் ஒப்பந்தம் என்றனர் -சீர்கெட்டு
சோறுபாழ் சாறுபைகள் கண்டு விழுந்தாரே
மீறித் திருச்சொற்கே ளாதவர் -மாறியே
யோசுவா வோடே இனத்தலைவர் செய்தனர்
பேசி அமைதியாணை ஆங்கு
யோசுவா கலி 19
கிபியோன் மனிதரின் வஞ்சனை வெளியாகியும் ஆணையால் ஒன்றும் செய்ய முடியாது விடல்
மூன்றுநாள் போனபின்னே பூச்சகல யோசுவா
ஏன்நீர் அரிதார மிட்டெம்மை -ஏன்வஞ்சித்
தீரோ? திருவும்மின் கைக்கீழ் அழிக்கவே
சீரவர் செய்ததால் தானங்கு -சீரார்
உயிர்காக்கச் செய்தோம் அரிதாரம் பூசி
உயிர்காப்பீர் என்றுமது ஆணை -உயர்முன்னே
செய்தும் அவையார் அடங்காதுப் பொங்கிட
செய்சீர் அமைந்தார் தலைவர்கள் -செய்தோமே
நான்கு நகர்மக் களிடம் புரிந்தாணை
வான்கர்த்தர் முன்செய்த காரணி -மேன்முன்செய்
விட்(டு)விலகக் கூடாது; செய்தாலே கைநீட்ட
விட்டழிவோம் நாமே விழுந்திங்கு -நட்டாரே
என்செய்வோம் இந்த கிபியோன் இனமெம்மை
வன்னாக வஞ்சித்தார் ஏமாந்தோம் -முன்னாணை
செய்தோமே மீறி நடக்க வழியில்லை
செய்தவர் நின்றார் திகைத்தவர் -செய்யில்
அழித்திட மாட்டோம் எனவே அமைதி
வழியாணை மீறாது மூப்பர் -வழிசெய்வோம்
என்றே திருகர்த்தர் பீடத்தின் தீமூட்ட
நன்றே மரம்நீர்சேர் விட்டுவிட்டு -அன்றியும்
கூடாரத் தேவை மரமொடு நன்னீரும்
கூடாரச் சேவை செயவங்கு -கூடிவந்த
மக்கள் சினம்போக யோசுவா ஏற்படுத்த
தக்க திருவினமும் ஏற்று
யோசுவா கலி 20
ஐந்து அரசர்கள் கிபியோனுக்கு எதிராகக் கூடி வருதலும் கிபியோன் இசுரேலரிடம் உதவி கேட்டலும்
ஆயி எரிகோ அரசர் அழிவிதம்
மாய கிபியோன் இணைந்ததை -வேய
செயலை அரசன் எருச லெமினம்
தயங்கி அடைந்தான் திகைப்பு -வியந்தே
கிபியோன் பெருநகர் என்றே திகைத்தான்
கிபியோன் இனத்தார் பலத்தார் -கிபியோன்
அழிக்க எபிரோன் இயர்மூத் அபீராம்
அழிலா கிசுஎக் லொனும்சேர் -வழுவிலாத்
தூதர் அனுப்பி அதொனி செதெக்பெயர்
ஏதோ கிபியோன் செயலினால் -வாதை
யினமாம் இசுரே லினத்தவர்; தீதே
இனநம் எனவவன் சொல்ல -இனத்தார்
எருச லெமரசும் எப்ரோன் அரசும்
எருமூத் தரசும் இலகீ -சரசும்
எகலொன் அரசும் எமோரியர் ஐவர்
வகைப்போர் இடவந் தனரே -இகத்தின்
கிபியோன் மனிதர் விடுத்தனர் தூதர்
கிபியோன் அழிக்க படைகள் -கிபியோன்
அருகே வருதே; அடியார் விடாமல்,
விரைவீர் எமக்கு துணை
யோசுவா கலி 21
ஐந்து அரசர்களை தோற்கடித்தல், ஆதவனும் திங்களும் நின்றிட யோசுவா உரைக்க அவை ஒரு நாள் முழுதும் தரித்து நிற்றல்
இசுரெலர் சென்றனர் கில்கால் விடுத்து
திசைநகர் நோக்கி விரைந்து -இசுரெல்
திருவும் உரைத்தார் உனக்குமுன் நில்லார்
ஒருவரும் என்றார் சிறந்து -விருவிருவென்
கில்கால் விடுத்து இரவில் இனமவர்
நல்லார் நடந்தார் திகைக்கவே -அல்லார்
கிபியோன் அருகே விழுந்தனர் முற்றும்
கிபியோன் எதிர்வந் தவர்தீ -கிபியொனில்
முன்பாய் திருவும் கலங்கிடப் பண்ணினார்;
வன்னார் விழுந்தார் கிபியொனில் -வன்னரோ
பெத்தொரோன் போனாட் அசெக்கா விடம்சேர்ந்து
அத்தூராம் மக்கெத் வரையிலே -செத்தார்கள்
அவ்வழி செல்ல மழைகற் களும்விழ
அவ்வழி தன்னில் விழுந்திட -அவ்வூர்
கரையவர் வாள்விட கல்மழை யாலே
சிரமேல் இறந்தவர் பேராம் -அரசர்
எமோரியர் போரில் இசுரேல் இனமுன்
அமர்த்திரு சீரார்முன் பேசி -தமர்முன்
திருநாள் தனிலவன் ஆதவன், திங்கள்
இரண்டும் நிறுத்தினான் சீர்நேர் -அரண்டு
கிபியோனில் ஆதவனே நில்லாணை யிட்டு
கிபியோன்மேல் திங்களே நில்லென் -கிபியோனின்
மேற்றிடை ஆயலோன்மேல் நிற்க முழுதுமாக
மேற்றான்சொற் கீழ்படிந்த தங்குத்தான் -சாற்றினர்
அப்பொழுது மக்கள் எதிரி விழும்வரை
தப்பாது ஆதவன் திங்களும் -அப்பாவி
மக்கள் வியக்க தரித்தன அந்நிகழ்வு
தக்கானாம் யாசேர் எழுத்துதனில் -மக்களிலே
இப்படி கர்த்தரவர் மாந்தனின் சொல்கேட்ட
அப்படி நாளை அதன்முன்னில் -அப்படியே
பின்னுமில் கேள்மின்னே; சீரார் இசுரெலுக்காய்
நன்கர்த்தர் செய்தாரே போர்தனை -அன்னவன்
யோசுவா பின்னர் இசுரேல் அனைவரோடு
தேசெல்லை கில்கால் திரும்பினான் -மாசுள்ள
ஐந்தரசர் ஓடிப்போய், மக்கெதா பாறைகெபி
மைந்தரவர் தம்மை ஒளித்து
யோசுவா கலி 22
ஐந்து அரசர்களை ஒளிப்பிடத்தில் இருந்து அழைத்து வந்து கொல்லுதல்
ஐந்தரசர் மக்கெதா பாறைகெபி உள்ளாரே
ஐந்தரசர் தன்னை பிடிக்கவே -மைந்தரோடு
வாருமென யோசுவா கேட்க உரைத்திட
வாருமுன் பின்தொடர் வீர்தீயோர் -சீராரும்
பாறைகெபி வாயில் பெரும்கற்கள் போட்டுவிட்டு
பாறைவிட் டாங்கு வெளிவாரா -பாறைக்குள்
ஐந்தரசர் தானிருக்க வைத்திட்டு பின்செல்வீர்
ஐந்த ரசரின் படைதன்னை -ஐந்தார்
படைபின்னே போயவர் தத்தம் நகருள்
படைவீரர் போகாத வண்ணம் -படைபின்னே
செல்வீர் இனத்தாரே; கர்த்தரும் கைக்கொடுத்தார்
செல்வீர் பெருஞ்சங்கா ரம்செய்வீர் -அல்லா
தவர்கள் அழியும் வரையில் இனத்தார்
அவர்களை சங்கரிக்க ஆங்கே -அவர்களில்
மீதிபேர் தப்பி அரண்நகருள் சேர்ந்தனர்
ஆதலால் மக்கள் திரும்பினர் -மேதார்
இசுரேல் வழியார் எதிராக யாரும்
அசைக்கவும் அஞ்சினர் நாவை -திசைவந்தார்
பின்னரந்த ஐந்தரசர் கொண்டுவாரும் என்றனன்.
அன்னார் கொணர்ந்தார் அரசரை -வன்னார்
இடம்வந்த பின்னே அரசரை கீழே
படையின் தலைவர் அழைத்து -படைத்தலையே
கிட்டவந்து கால்களை இவ்வரசர் தொண்டைகளில்
எட்டிவையும் என்றான் திருவவன் -மட்டிலா
தெல்லா எதிரிகளை செய்வாரே இப்படியே
நல்லார் திருகர்த்தர் ஆதலால் -நல்லாரே
நீர்கலங்கா நீரஞ்சா தேயிரும் என்றனன்
சீர்தலைவர் போற்றித் திருவாண்சொல் -சீர்வழி
ஐந்தரசர் வெட்டிவீழ்த்தி ஐந்துமரம் தன்னிலே
ஐந்தரசர் போட்டனன் மாலைவரை -ஐந்தரசர்
மாலைவரைத் தொங்க பொழுதுபோம் நேரத்தில்
சீலவன் போட்டான் கெபிதனில் -சீரில்
ஒளிந்திருந்த பாறைகெபி கல்லறையாய் ஆக்கி
அளித்தானே கட்டளை சீரார் -விளித்து
கெபிமுன்னே போடும் ஒளியிடம் தன்னில்
கெபியா னதுகல் லறை
யோசுவா கலி 23
ஐந்தரசர் நகர்களை பிடித்தல்
அந்நாளில் யோசுவா மக்கெதா வைப்பிடித்து,
அந்நாளில் வாளால் விழச்செய்து -அந்நாளில்
தானே அதினரசும் மாந்தரும் மீதியில்லா
வான எரிகோபோல் செய்தனர் -மேனவர்
மக்கெதா விட்டு இனத்தார்சேர் யோசுவா
தக்கா ருடன்லிப்னா சென்றவன் -அக்காலம்,
லிப்னாமேல் போர்செய்தான். கர்த்தர் அவன்கையில்
லிப்னா அழிக்கக் கொடுத்திட -அப்போ
எரிகோபோல் ஆங்கே அனைத்தும் அழித்தான்
திருவவன் பின்இலா கீசு -திருச்சென்று
பாளயம் மிட்டு, அதின்மேலே போர்செய்து
ஆள இரண்டாம்நாள் வென்றனர் -வேளோ
எரிகோபோல் ஆங்கே நரரை அழித்தான்
திருவெதிர்க்க கேசேர் இணைய -திருச்சென்று
மீதியாக இல்லா தபடியழி கேசேரை
வாதையாக வெட்டினான் சீர்நேராண் -வேதர்
இசுரேல் அனைவரும் லாகீசு விட்டு
திசைஎக்லோன் சென்று எதிர்த்து -திசைநகரை
சீரார் பிடித்து, அதைவாளால் வெட்டினர்
சீரில்லா கீசுபோல் செய்தனர் -சீரவர்
பின்னரவர் எக்லொனை விட்டு எபிரொனுக்கு
பின்சென்று போர்புரிந்து எக்லொனுக்கு -முன்செய்தாற்
போல, அதையும் அதினரசும் எல்லாரும்
சீலார் அழித்தார் நகர்தனை -சாலவர்
எப்ரோன் அருகே நகரெலாம் மீதியாய்
தப்ப ஒருவரும் வைக்காமல் -தப்பா
தழித்தார்கள் வாளால்; அதின்நரர் சேர்த்து
அழித்தனர் சீரார் இனம்.
யோசுவா கலி 24
பங்குபிரிப்புப் படலம்
மற்ற நகர்களை பிடித்தல்
பின்னர் எபிரொனை விட்டு தெபீர்நகர்
பின்சென்று போரில் எபிரொனுக்கு -முன்செய்தாற்
போல, அதையும் அதினரசும் எல்லாரும்
சீலார் அழித்தார் நகர்தனை -சீலவர்
தேபீர் அருகே நகரெலாம் மீதியாய்
தாபரிக்க ஆளும்வைக் காமலே -தேபீர்
அழித்தார்கள் வாளால்; அதின்நரர் சேர்த்து
அழித்தனர் சீரார் இனத்தை -அழித்தான்
மலைத்தேசம் எல்லாமே யோசுவா சேர்த்து
மலையரசர் யாவரையும் வெட்டி -மலைநகர்கள்
தென்தேச பூமியெல்லாம் நீர்பாயும் எல்லாமே
தன்வசம் சேர்த்தான் திருவவன் -அன்னாரின்
எல்லைகள் காதேசு பர்னேயா காத்சாவும்
அல்லாமல் கோசேனின் தேசங்கள் -நல்லாண்
வரைகிபியோன் வெட்டி அழித்தங்கு ஆண்ட
அரசரை நாட்டோ டெடுத்து -அரசரை
வெற்றிகொண்டே யோசுவா பின்னர் இசுரேலர்
வெற்றியோடு கில்கால் இருக்கின்ற -மற்றங்கே
பாளயம் சென்றான் திரும்பி அமைதலோடு
பாளயம் சேர்ந்தனன் சீர்
யோசுவா கலி 25
மற்ற அரசர்களை தோற்கடித்தல்
இவைக்கேட்ட ஆத்சோர் அரசனாம் யாபீன்
அவன்மாதோன் சிம்ரோன் அகசாப் -இவைகளின்
ஆளும் அரசரையும் மற்றும் வடக்கரசர்
ஆளுவோர் தூதர் அனுப்பினான் -ஆளும்
எமோரிய ஏத்தியர் பெர்சி, எபூசு
அமையெரு மோனின் அடியில் -அமைந்திருந்த
ஆளுனர் எல்லாரும் வந்திட ஆளனுப்ப
ஆளுவோர் வந்தனர் சேர்ந்தங்கு -ஆளுனர்
மேரோம் எனும்ஏரி யண்டையில் சேர்ந்தனர்
சீரணியாய் தேர்கள் பரிகளோடு -சீரணி
காண கடல்மணல் போலிருக்க ஆங்கரசர்
பேணி மலைக்காதே நீசீராண் -காணவர்
நாளை இதுநேரம் முன்பாக வெட்டுபட்டு
வேளை அவரொப்புத் தந்திடுவேன்; -நாளைநீ
தேர்களை தீயிடு வாழ்பரிகள் காலறு
சீர்சொன்னார் யோசுவா கேட்டனன் -சீரவர்
யோசுவாவும் கூடவந்தோர் எல்லாம் வியன்வகை
தேசத்தார் மேரோமின் ஏரியண்டை -வீசியழி
கர்த்தர் அவர்களை ஒப்புக் கொடுத்தாரே;
கர்த்த ரினமடித்தார் சீராக -கர்த்தவர்
யோசுவா விற்கு உரைத்தபடி அந்தபடை
தேசப் பரிகளின் காலறுத்து -தேசத்தார்
தேர்களெல்லாம் தீயிட் டழித்தான் சிறப்பாக
நேர்சொல்லை மீறா தவனவன் -சீர்நேர்
இனத்தாரும் ஆத்சோரைச் சேர்ந்த அனைத்தும்
இனமுன்னோன் மோசே உரைத்த -இனவாக்கை
மீறாது எல்லா நகரையும் சேர்த்தழித்தார்
மீறாது நல்ல இனத்தவர் -மாறாக,
ஆனாலும் தங்கள் அரண்நகர் சிற்றூரை
மானார் அழிக்காது விட்டிட -ஆனாலும்
ஆத்சோர் நகரதை தீயிட் டழித்தபின்
ஆத்சோரைக் கொள்ளையிட் டார்நேரார் -ஆத்சோரில்
எல்லா மனிதர் அழியுமட்டும் வாளாலே
எல்லாரும் வெட்டினர் ஆங்கேதான் -அல்லாமல்
யாரையும் மீதியாக வைக்கவில்லை சீரவரும்
சேரா திருந்தனர் நேர்மக்கள் -நேராணும்
மோசே இடுவித்த கட்டளை ஒன்றையும்
தேசம் நுழைந்தபின் யோசுவா -தேசத்துள்
மீறாது நேமம் படிநடந்தான் சீராணும்
மீறா தவனே அவன்நேராண் -மாறாது
கானான் திருநாட்டின் ஆளும் அரசரை
மேனாள் திருவாண் பிடித்தானே -வானங்கீழ்
சீராண் பலநாட்கள் போரிட்டு வென்றனன்
பாரக் கிபியோன் தவிர்த்தங்கு -பாரிலே
போர்செய்ய அவ்வரசர் தன்னின் மனதினை
நேர்கர்த்தர் செய்தார் எதிராக -சீரில்
மனக்கடினம் கொண்டரசர் தன்னை இரக்க
மனதின்றி கொல்லவைத் தார்நேர் -அனைவரும்
மோசேக்குக் கட்டளை யிட்டபடி கானானின்
தேசத்தார் ஆங்கே அழிவதே -பேசும்
திருகர்த்தர் சித்தம் எனவே திருவும்
திருச்செயல் செய்தார் சிறந்து -திருவவன்
யோசுவா ஆங்கே மலைத்தேச எப்ரோனும்
தேச தெபீர்சேர்த்து ஆனாபும் -தேசமலை
தன்னில் இருந்தோராம் ஏனாக் வழியோரை
வன்கொன்றான் சீரும் சிறந்தவன் -வன்னவர்
தேசத்தில் ஏனாக் கியர்யாரும் மீதியில்லை
தேச அசுதோத்து காசாகாத் -வீசசிலர்
மீதியாக தப்பி யிருந்தார்கள். சீராணும்
வீதமாய் பங்கிட்டான் நேர்
யோசுவா கலி 26
யோசுவா நிலங்களை பங்கிடுதல்
குலம்குலமாய் பங்குகளை தந்தானே நேராண்
குலத்தார் இறைமுன்னர் பங்கை -நலமென்று
தந்ததை கொண்டார்; திருதேசம் போரின்றி
அந்நாள் அமைதி நிலவிற்று -அந்நாள்
அறிவோம் இரண்டரை நற்குலம் பெற்றார்
சிறப்பாய் கிழக்கிலே தன்னின் -மறவர்
சிறப்பாய் குலத்தார் புரிந்தனர் போரை
அறனும் கொடுத்தான் நிலம்தான் -அறவார்
இசுரேல் இணைந்து கடந்தனர் யோர்தான்
இசுரேல் அளிநாட் டதில்வாழ் -அசுரர்
குலவர் எனமுன் நடுங்கிய தேசம்
குலமும் அழித்தார் சிறந்து -குலத்தவன்
யோசுவா நற்றாண் இசுரேல் இணைந்தவர்
தேச அரசர் பிடித்தனர் -வீசி
அழித்தனர் முப்பத் தியொருவர் தன்னை
அழிந்தவர் பேர்பேர் அரசு -அழித்தோர்
பெயர்பெயராய் ஆறுகுலம் யோசுவாவும் ஆங்கே
பெயர்தெரிய சீர்பன்னி ரெண்டாம் -பெயர்நூலின்
நற்றதி காரம் தனைபடித்தால் காண்பீரே
நற்றவன் சீராய் எழுதிட்டான் -அற்றவராம்
ஒன்பதரை நற்குலங்கள் பங்குதனை யோசுவாவே
நன்றாக பங்கிடு சீட்டுபோட்டு -நன்கர்த்தர்
முன்நின்ற ஆசரியன் சீட்டுபோடா தேபங்கு
முன்யூதா பேர்குலம திற்கு
யோசுவா கலி 27
காலேப் தனக்கென தனிநிலம் கேட்டலும் யோசுவா அளித்தலும்.
யூதா குலமவன் காலேப் திருவிடம்
வேதவர் முன்நின் றுரைத்தநாம் -வேதவர்
சீராய் நமைக்காத் தவரே வனமதில்
சீரே மிதிநிலம் பங்கென -சீரார்
உமக்கும் எனக்கும் மிதிநிலம் தந்தேன்
எமது திருவும் உரைத்தார் -உமக்குத்
தெரியும் திருநாட் டிலேகாண் பெருமாள்
தெரிந்தே திருவே துணையாய் -விரிநாட்டில்
ஒற்றனாய் வந்தேன் இளைஞனாய் நாற்பது
நற்றே எனக்கு வயதது -நற்றணே
என்பதும் ஐந்தாய் இருந்தும் பலமதே
நன்னிலம் போரிட் டெடுத்தேனே -அன்னான்
திருவாண் சிறப்பாய் எபிரோன் தனையே
திருமகன் கைத்தர அங்கே -திருவாண்
மலைதனை சென்று பிடித்தனன் பங்காய்
மலையசுரர் ஏனாக் அழித்து
யோசுவா கலி 28
கீரியாத் செப்பேரை பிடிப்பவனுக்கு காலேப் தன் மகளை மணம்செய்ய கொடுப்பேன் என சொல்ல, ஒத்னியேல் போரிட்டுப் பிடித்தலும், அக்சாள் தனக்கு நீருள்ள காணியைக் கேட்டுப்பெருதலும்
காலேப் எபிரோன் பிடித்தபின் கண்டனன்
மேலே கிரியாத் செபெர்தெபீர் -சீலிதை
போரில் பிடிப்போன் தருவேன் மகளைநான்
போரிலே வென்றான் மகன்சீராய் -நேரவன்
அண்ணன் மகனாம் ஒதனியேல் வெல்லவும்
அண்ணன் மகனிடம் சொல்படி -தண்ணீர்
இலாத திருநாட் டதைத்தர அக்சாள்
மலரவள் கேட்டனள் ஊற்று -நிலமதை
நற்றே மகளே தருவேன் நறுநிலம்
மற்ற நிலமும் சிறப்பது -நற்றாண்
மகளுரை ஊற்றதை தந்தான் மகளும்
அகமலர்ந் திட்டாள் திருப்பெண் -தகைத்தவர்
போரிட்டு பட்டணங்கள் சீர்பிடித்தார் யூதர்கள்
போரிட்டும் ஆங்கே எருசலேம் -சீரவரால்
வீழ்த்த முடியாது போனது ஆதலால்
கீழ்எபூசு நின்றார் நகர்
யோசுவா கலி 29
சீட்டுபோட்டு யோசேப்பின் குமாரர் பங்கு பெறுதல்
அதுவரை சீரார் பிடித்த நிலத்தை
விதமாக பங்குபோட சீராண் -அதனாலே
பின்வந்த எட்டரை நற்குலத்தின் சீட்டுபோட்டு
நன்கர்த்தர் முன்னே நிலமெடுத்தார் -நன்யோசேப்
நற்குலத்தார் முன்வந்த சீட்டது ஆங்கவர்க்கு
நற்றாணும் தந்தான் நிலம்தனை -நற்றாராம்
நன்மனாசே பாதிமக்கள் கைத்தந்தார் சீரவரும்
முன்வந்த யோர்தான்கீழ் எல்லையாகி -மேன்கடலின்
சீர்வரையில் கேட்டெடுத்தார் பங்குதனை ஆங்குத்தான்
நேர்த்தந்தான் பங்குதனை ஆங்கவன் -சீரார்
மனாசே நடுவாக எப்பிராயீம் பெற்றார்
மனிதரவர் காசேர் குடியின் -மனிதரை
விட்டு விரட்டா திருந்திட கானானி
கட்டினார் சீர்வரி யங்கு
யோசுவா கலி 30
மனாசே மேற்கு திசை பங்கு காடாக உள்ளதென கூறுதலும் யோசுவா அதுவே பங்கென உரைத்து காடுகளைத் திருத்திட சொல்லுதலும்
மனாசே குலத்தவர் பெற்றார் திருமுன்
அனைவரும் சென்று நிலத்தை -மனாசே
குலத்தவர் காணவும் சொன்னார் குலத்தின்
நிலமது காடு நிறைந்தே -நலவாண்கை
தன்னிடம் பெற்றநல் யோசேப் குலத்தவர்
நன்னில மில்லை மரவனம் -நன்பேர்
திருக்குல எண்கள் எனவும் திருவோ
திருவின் சிறப்பது சீட்டே -திருத்தி
மரவனம் வெட்டி வளநில மாக்கும்
திருக்குலம் நீவிர் சிறந்து -மரவனம்
வெட்டி யவர்சீர் படுத்தினர் சீர்குல
நட்டார் நிலத்தில் வளம்பெற -நட்டார்
உழைத்து நிலத்தை படுத்தினார் சீராய்
விழைநில மில்லையே காடு
யோசுவா கலி 31
மற்ற ஏழு கோத்திரத்தார் பங்கை பெறாமல் இருக்க கோத்திரத்திற்கு மூன்றுபேர் நிலம் பார்த்து வர அனுப்புதல்
இசுரேலர் சீலோவில் கூடாரம் போட்டார்
இசுரே லினவிறை ஆசர் -இசுரேல்கை
தேசம் வயமாக ஏழு குலத்தாரோ
தேசத்தில் பங்குபிரிக் காதுநிற்க -பேசி
எதுவரை நிற்பீர் பிரிக்காது பங்கை
அதுநல்ல தல்ல குலரே -மதிசெய்யும்
நல்லார் குலத்தினின்று மூன்றாய் அனுப்புமே
வல்லார் வரட்டும் எடுத்திங்கு -வல்லே
குடியிலார் கண்டு குறித்துநீர்க் கொண்டு
குடிபுக வாரும் எழுதி -குடிபுக
நானும் திருமுன் இடுவேன் சிறப்பது
மேனார் தருவரே சீட்டுதனை -மேனவர்
வந்தனர் மூவர் குலமொன்றின் மூப்பரும்
வந்து திருமுன்னே இட்டனர் -வந்தோர்க்கு
சீட்டுபோட்டு நன்னிலம் தந்தனர் சீராண்கள்
வீட்டாக்க நல்ல நிலம்
யோசுவா கலி 32
சீட்டுபோட்டு ஏழு கோத்திரத்தார் பங்கு பிரித்தல்
பார்த்து நிலமெங்கே உள்ளதென வந்தனர்
பார்த்தவர் தந்தார் திருவிடம் -நேர்மக்கள்
யூதா இடையே சிமியோன் நிலம்விழ
யூதர் நடுவே இருந்தனர் -மேதவர்
மற்றார் வடக்கிலே சீட்டுவிழ வீடாக்க
மற்றார் பெயர்ந்தார் சிறந்தங்கு -நற்றவர்
தாணின் திருக்குலமோ சிற்றே எமதுபங்கு
தாணவர் சொன்னார் திருவேயாம் -தாணே
இரும்லேசேக் தேசம் பிடித்தல் நலமே
திருச்சொல் செவிகேளாப் போனார் -திருவவன்
பங்கிட்ட பின்னர் திருவாணாம் யோசுவா
பங்கிட்ட தாலே மலைத்தேசப் -பங்கில்
ஒருநகர் தந்தார் அவன்பெற்று வாழ்ந்தான்
திருநகர் திம்னாத்சே ரா
யோசுவா கலி 33
லேவிநகர்கள் படலம்
மேற்கு திசையில் மூன்று அடைக்கலப் பட்டிணங்களை நியமித்தல்
அறிவாய் திருமகன் மோசே அளித்தான்
அறிகிழக்கு நாட்டிலே மூன்று -சிறப்பாக
யோசுவா சொல்கேள் சிறப்பே நனியதில்
வீசி பிசகாய் கொலைவிழ -மாசில்
ஒளிந்திட செய்நகர்ப் பட்டிணம் ஆறு
ஒளியவே ஓடி விரைய -ஒளிநகர்கள்
யோர்தான் கிழக்கில் திருவவன் செய்தனன்
சீர்நகர் மூன்று; கரையிதில் -சீர்நகர்
மூன்றைத் தெரிந்தார் சிறந்தே இனமவர்
மூன்றின் பெயரது கேள்மின்னே -மேன்னகர்
நப்தலி நாட்டின் கலிலெயா கேதெசு
எப்ரா யிமின்நில சீகெமும் -தப்பி
பிழைத்தவன் மாசிலான் ஓடிட யூதா
விழையெப் ரொனொடுவம் மூன்று
யோசுவா கலி 34
லேவியர் தனக்கென பட்டிணங்களை கேட்க, சீட்டுபோட்டு பெற்றுக் கொள்ளுதல்
திருலேவி நற்குலத்தின் சீர்தலைவர் வந்து
திருவாணாம் யோசுவா கேட்டார் -திருமோசே
எங்களுக்கு பட்டிணங்கள் மற்றும் வயல்களை
தங்கக் கொடுயென்றா ரேசீரே -அங்கே
திருவாணும் சீர்குலத்தார் தன்னிற்கு சீட்டு
திருமுன்னே போட்டு அளித்தான் -திருக்குல
லேவியர் வாழ பதினெட்டுப் பட்டிணங்கள்
மேவி இனத்தாருள் தானவன் -மேவியே
லேவியர்க்கு யூதா சிமியோனின் சீட்டுவந்த
லேவிய பட்டிணங்கள் தந்தனர் -தேவன்முன்
ஊழியஞ்செய் ஆரோன் வழியாராம் கோகாத்து
வாழநகர் ஒன்பதை ஆங்கவர் -வேழாராம்
யூதா சிமியோன் இனப்பங்கில் தந்தவற்றில்
வேதர் உரைத்த அடைக்கலம்சேர் -வேதார்முன்
வாழத் திருநகர் ஒன்று எபிரோனே
வாழக் கொடுத்தனர் ஆங்கவர் -வேழவர்
ஆரோன் வழியார் பெறபதின் மூன்றுநகர்
சீராராம் கோகாத் இனமற்றோர் -சாரந்த
பட்டிணங்கள் பத்தாமே; கெர்சோன் பதின்மூன்று
பட்டிணங்கள் பெற்றாரே சீட்டுதனை -நட்டாராம்
நப்தலியின் நற்குலத்தில் மட்டும் நகர்மூன்று
அப்படித்தான் சீட்டு விழவுமங்கு -அப்படியே
தந்தனர் லேவிக்கு; மற்றயினம் எல்லாரும்
தந்தனர் நான்கு நகர்களை -அந்நல்
மெராரி பெறபன் னிரண்டு நகர்கள்
தரசீட்டு வந்திட, தந்தார் -நரர்வாழ
சீர்நகர்கள் ரூபன்காத் செப்லோன் இனப்பங்கில்
நேர்சொல்ல மக்கள் அளித்தனர் -சீர்க்குல
எப்பிராயிம் பங்கில் நகர்சீகேம் நான்கிலே
தப்பித்தோன் ஓடி அடைக்கலம் -அப்படி
பெற்றிட சீர்நகராம் கேதேசு நப்தலியில்
பெற்றநகர் தப்பிட வேவிட்டு -நற்றூராம்
பாசானில் கோலான் நகரை மனாசெகுலம்
தேசத்தில் தந்தார் அடைக்கலமாய் -மாசில்
பழிவாங்கா தோன்போக; கீலெயாத்தின் ராமோத்
அழிக்கா நகராம்காத் தில்தான் -வழியவர்
ரூபன் குலப்பங்கில் நான்குநகர் தந்தனர்
ரூபன் அளித்த நகர்களில் -ரூபனியர்
மற்றோர் அடைக்கலமாய் பேசேர் எனும்நகர்
நற்றவன் மோசே உரைத்ததுபோல் -நற்றார்
நகர்களின் எண்ணிக்கை சீட்டுபோட்டு லேவி
நகரவை நாற்பதும் எட்டும்; -நகர
அடைக்கல சீர்நகர்கள் ஆறாமே; நீரால்
இடைபிரித்து மூன்றுமூன்றாய் ஆறு -இடவங்கே
இவ்விதம் கர்த்தர் இசுரேல் இனம்தருவேன்
அவ்வாறே ஆணையிட்ட தேசத்தை -செவ்வனே
தந்தார் திருவாணும் சீராக; மக்களும்
தந்தயிடம் பெற்றுவாழ்ந் தார்
யோசுவா கலி 35
கிழக்கார் படலம்
கிழக்கு திசையில் பங்குபெற்ற இரண்டரை கோத்திரங்களை யோசுவா வாழ்த்தி அனுப்புதல்
தந்தையர்க் கிட்டநல் லாணை அனைத்துமே
அந்நாள் நிறைவாய்ச் சிறப்பென -செந்நீர்
விழாது அமைதலாய் நிற்கும் எதிரி
விழுந்தனர் சீர்குல முன்னர் -வழுவா
இரண்டரை நற்குல ரூபனும் காத்தும்
அரைசீர் மனாசே உரைச்சொல் -இருந்துநீர்
போரிட் டினமமைந் தீர்சீர் நலநிலம்
பேராம் கிழக்கு திரும்பிடும் -நேரவர்
தேவனவர் கர்த்தர்சீர் தந்திட்ட நேமங்கள்
மேவிநீரும் கைக்கொள்வீர் என்றென்றும் -தேவனையே
உம்ஆன்மா உம்மனது எல்லாம்சேர் போற்றிடவே
உம்கவனம் வேண்டுமங்கு சீரேகேள் -அம்மகனாம்
யோசுவா வாழ்த்தி மனாசே அனுப்பிட
நேசர் பலவாய்த் திருவதை -தேசம்
வளர இரும்பொடு வெங்கலம் பொன்னும்
வளமிகு வெள்ளியும் பங்கை -வளவர்
நனியார் மனாசே இனமே பகிரும்
இனத்துள் சிறப்பாய் திருவை -இனமவர்
எல்லாம் பகிர திரும்பினார் கீலெயாத்
இல்லம் கிழக்கிலே நாடு
யோசுவா கலி 36
யோர்தானைக் கடந்த இரண்டரை கோத்திரத்தார் தனியாக பலிபீடம் அமைத்தலும் மற்ற இசுரேலினத்தார் சினங்கொண்டு தூதரை அனுப்புதலும்
இரண்டரை நற்குலம் சென்றார் கிழக்கு
வரையில் நதிக்கரை தன்னில் -கரையாய்
புரிந்தார் ஒருசெயல்; பீடம் தனைக்காண்
கரையிலே மக்கள் சினமாய் -சரியிலை
ஐயகோ ஐயகோ தக்கில் சிறப்பிலை
ஐயகோ ஏன்செயல் என்றவர் -ஐயம்
தெளிய விடுத்தார் இனத்தார் தமரை
வெளியே கிழக்கு திசையில் -களித்திடா
தேனோ பிரிந்திட பீடம் அமைத்தனர்
வானார் சினமது பேயொரின் -ஏனது
போதா தெனவோ பிழன்றார் இனமவர்
வாதை தவிர்க்கவே போர்செய -ஆதலால்
மேற்றிசை தேச குலத்திலே பத்துபேர்
ஏற்றிலா ஏன்செயல் கேட்கவே -மேற்றிசை
விட்டுக் கிழக்கிலே வந்தனர் சீரவர்
நட்டாண் பினெகா சொடுகரை -நட்டவர்
கீலெயாத் தேச இரண்டரை மக்களை
கீலெயாத் வந்து வினவினர் -மேலே
இரும்குல மூப்பர் எதற்காய் கரையாய்
அருளவர் பீடம் எதிர்த்து -அருளிலா
பேயொரின் வீண்செய் விடுத்துநாம் மீண்டிலை
பேயொர் செயல்போல் தனியென -வேய
பலிதர பீடம் எதற்காய் அமைத்தீர்
இலையது சீரே அறியும் -இலாதவர்
கர்த்தரைத் பின்தொட ராவீண் புரளவோ
கர்த்தரின் வன்னெதிர் செய்கையேன்? -கர்த்தர்
எதிராய்க் கலகச் செயலால் அவையோர்
அதிர சினம்வரும் வீணாய் -எதிரிது
காணி நிலந்தீட் டெனயினம் எண்ணிட
காணி பெறும்மேற் றிசையிலே -காணவர்
நேமம் திருவார் பலியை செலுத்துவ
நாமிட வொன்றே சிறப்பது -ஆமவர்
தேவனாம் கர்த்தர் எதிர்க்கா திருமினம்
தேவையோ வேறொரு பீடமும் -மேவியே
சேரா வழியான் கரையவன் ஆகனின்
சீரில் செயலால் வதையது -சீரில்
வதையது வந்த நிலையறிந் தீர்நீர்
எதற்காம் தனியாய் பலிக்கு -வதைக்கவே
கட்டிய தேனோ? கிழக்கிலே வாழ்பவர்
கட்டிய காரணம் சொல்லு
யோசுவா கலி 37
தாங்கள் பலிக்காக கட்டவில்லை, சான்றாகவே கட்டினோம் என இரண்டரை கோத்திரத்தார் சொல்லுதல்
அரைமனாசே காத்தோடு ரூபன் வழியார்
விரைந்து வருகைப் புரிந்த -வரையாராம்
மேற்றிசை தேசத்தின் மூப்ப ரிடம்சொன்னார்
ஏற்றார் அறிவார் மனம்தனை -ஏற்றுவோம்
தேவாதி தேவனாமே கர்த்தரவர் தேவாதி
தேவனவர், எம்மனதை சீரறிவார்; -தேவயினம்
நீரும்தான் நேரறிவீர்; கட்டளைக்கு நேரெதிரில்
நீரினது பக்கத்தில் அஃதாமே -சீராம்
எதிரெனின் கர்த்தர் எமையினி காக்கார்
எதிரியின் கையில் விழுவோம் -எதிரில்
இருக்கும் அதுயேன் ஒருமைக் கெனவே
விரைந்த செயலே அதுகேள் -கரையிலே
கர்த்தரைப் பற்றா விடுக்கவோ சீரவர்
கர்த்தர் பலிக்கோ இலையது -கர்த்தர்
அளித்தார் இருதிசை தன்னில் நிலத்தை
களிப்புடன் பெற்றோம் நிலம்தான் -களியாய்
பலியோ உணவோ படைத்தால் சினமே
பலியோ உணவோ இலையே -வலிவழி
மேற்றார் மறந்து இலையும் குலமென
மாற்றா திருக்கவே செய்தோம்யாம் -மாற்று
வழியார் செயாத படியே ஒருமை
வழியார் சிறக்க கரையில் -அழியா
இதையாம் புரிந்தோம் இனம்யாம் இணைந்து
அதின்மேல் பலியிட யில்லை -அதனாலே
பேச்சால் வழியும தெம்வழி தாக்கினால்
பேச்சால் வழியெம் விலகுமே -பேச்சு
செவிகேள் உடனே வழியார் கரையில்
புவிமேல் இருப்பது சான்று -புவியில்
பலியிட கர்த்தர் வசிக்கும் திருவாம்
பலிதர யாமும் வருவோம் -பலியிதில்
யாமிடோம் என்றும் இதுசொல் லதைசெவி
மேமக் களவர் சிறப்பென -தாமோ
பலியிட கட்டா ததினால் அவையோர்
பலியாய் வதைக்கா ததினால் -நலந்திரு
கர்த்தர் நடுவில் இருக்கிறார் என்றுநாம்
கர்த்தரை நம்பு கிறோம்சீரே -கர்த்தர்;
வகைவிடை கேட்ட இனத்தார் திரும்பி
வகைவிடை சொன்னார் இனம்கேள் -அகத்திலே
மாசில் சிறப்பாய் அமைத்தனர் சான்றென
பேசினர் மக்கள் கிழக்குதிசை -பேசியே
சான்றென சொன்னார் வழியார்; அழிவிலாச்
சான்றென சொல்வதை நம்பினர் -சான்றென
சொன்னதால் ஏத்தென பேரிட, சான்றதை
அன்னார் அழைத்தார் சிறந்து
யோசுவா கலி 38
எச்சரிக்கைப் படலம்
யோசுவா இசுரேலினத்தை எச்சரிக்கை செய்தல்
நியாயப்பிரமாணத்தை விட்டு விலகாதிருக்க எச்சரிக்கை
இசுரெலை சுற்றி அமைதியாய் கர்த்தர்
திசையிலே செய்தபின் சீராண் -திசையிலே
எல்லா இனத்தார் தனையழைத் தான்திரு
நல்லாண் பகன்றனன் சீர்சொல -இல்லவன்
நானோ கிழவனாய் மூப்பெய் திவிட்டவன்
வானார் இறைவனின் செய்கைகள் -மேனவர்க்
கண்டீர் திசைப்போர் வகையுமாய் மேற்றிசை
கண்டீர் இனமழித் தேன்வகை -கண்டவர்
மேற்கே நிலமதை சீட்டாய் யிடுத்துநான்;
மேற்றிசை நற்குலம் தக்கதாய், -ஏற்ற
நிலமதின் பங்கை கரம்தர காணி;
நிலமெதெர் தானழிப் பார்சீர் -நிலத்தில்
அனைவரும் மோசே எழுத்தாம் நியமம்
மனம்விட் டிடதோ வலதோ -இனம்செலா
தீரே; விலகா ததைவிடாக் கைக்கொள
சீராய் நினைப்பீர் சிறந்து
யோசுவா கலி 39
தேசத்தாரோடு இசுரவேலர் கலவாதிருக்க யோசுவாவின் எச்சரிக்கை
தேசத் தினுள்ளே இருக்கும் கரையினம்
தேசத் தவர்க்கல வாதிரும் -தேச
இனத்தார் இறைபொய் அதனால் அவரின்
இனம்செய் செயலை விடும்நீர் -இனப்பொய்ப்
பெயரும் நினையா திரும்பொய் யிறைவர்
வியர்த்த மவைகளைக் கொண்டு -பெயரால்
இனத்தார் இடாதிரும் ஆணை; சிலையை
இனத்தவர் போற்றா திருமே -இனத்தவர்
இந்நாள் உமதின் செயல்போல் தளும்பிடா
திந்த படியிறை பற்றிடும் -தந்தார்
இறைவன் உமக்குமுன் பேரினர் தன்னை
சிறப்பாய் விரட்டி நிலத்தை -சிறப்புற
இந்நாள் வரையில் ஒருவரும் முன்னிலா
அந்த வகைசெய் திறைவனார். -வந்தவர்
உம்மில் ஒருவனாய் ஆயிரம் பேர்துரத்
தும்செவி கேள்போர் புரியிறை -எம்சீர்
எனவே இறைவனில் அன்பா யிருக்க
மனதும் உளமும் திரியா -தினமே
மிகவுமாய் எச்சரிக் கையா யிருமே
அகங்காண் திருநம் இறைவன் -இகத்திலே
நீவிரொ பின்னிட மீந்திரும் மக்களுள்
நீவிர் மணஞ்செய் துறவுற -நீங்கள்
பிடிநிலம் விட்டு விரட்டா கறைமுள்
பிடிவலை கண்ணி சவுக்கே -அடியனோ
வாழும் அனைவரும் போகும் வழியிலே
வாழப் பிரிகிறேன்; தேவனார் -வாழவே
நற்சொல் நிறையாய் ஒருசொல் விழாதுசீர்
அற்றித் தவறாய் இலையமே -நற்றார்
அதையும் முழுமன தான்மா வொடுதான்
விதமறிந் தீரே நலசொற் -றெதும்தவ
றாக்கண் நிறைவே றியதென சீரவர்
ஆக்க மனதுள் அறிந்து
யோசுவா கலி 40
இசுரேல் இனவரலாறை நினைவு படுத்துதல்
சீர்சொல் நிறைவே றியதுவும் தீர்ந்ததே
சீர்சொற் படியிறைச் சொல்லதைச் -சீர்சொலக்
கைக்கொளா மீறி சிலைகளைப் போற்றிட
கைக்கொளும் மேனிலம் விட்டவர் -தாக்கத்
திருவின் சினமது பற்றி எரிய
திருவினம் போவீர் அழிந்து -திருவாண்
இனத்தலை கூடி வரச்செய் திறைமுன்
இனத்தலை வந்தார் பணிந்து -இனத்தவன்
யோசுவா எல்லா தலைவரும் நோக்கியே
தேச யிறைவனார் சொல்லிது -தேசமே
முன்னவன் ஆபிராம் நாகோர் தகப்பனோ
முன்னே சிலைபோற் றினர்கிழ -வன்னவன்
பேர்நதி அப்புறம் நின்றவன் ஆபிராம்
பேர்சொல் லிவாயென் றழைத்தவன் -பேர்மகன்
ஈசாக் கொடுத்தேன்; வழியவர் பெற்றனர்
ஏசா குலத்தார் மலைநிலம் -ஏசா
பெறுமது சேயீர் நிலமாம் பெறாத
திருவாண் இசுரேல் எகிப்தில் -தரிக்க
திருவாண் வழியவர் மோசே திருவவன்
ஆரோன் அனுப்பி எகிப்தியர் -சீரழி
விட்டேன் வதைத்து; எகிப்தின் நடுவிலே
இட்ட வியனதுச் செய்தனர் -மட்டில்;
புறப்படப் பண்ண கடற்கரைப் பின்னே
அறனில் தொடர்ந்தார் கறையார் -அறனவர்
கர்த்தரை நோக்கிக் கரைந்தார் இனத்தவர்
கர்த்தர் உமக்கும் கறையவர் -கர்த்தரின்
காரிருள் சூழ்ச்செய்(து), கடலைப் புரட்டியே
பாருள் அடித்தேன் முழுகவே -பாரில்
எகிப்திலே செய்ததை கண்டவர் நீரும்;
வகைவனம் வாழ்ந்தீர் இனம்நீர் -வகைபின்
நதியது யோர்தான் கிழக்கில் எமோரி
அதிலே வருகைச் சிறந்து -அதிலே
அவர்கள் வகைப்போர் புரிய இறையான்,
அவர்களை கையில் கொடுத்தேன்; -அவர்களின்
தேசம் எடுத்தீர் கறைமுன் இனத்தவர்
வீசி அழித்தேன் இறையவன் -பேசிடும்
சிப்போர் தனையனாம் பாலாக் வழுவின
தப்பாண் வகைப்போர் புரிந்திட -தப்பவண்
மோவா பியரின் அரசன் கெடுசொல
மேவி பிலேயாம் அழைத்தனன் -மேவி
பிலேயாம் உரைக்குச் செவிதரா நானே
பிலேயாம் உமைவாழ்த் திடச்செய் -வலைவிழா
தப்புவித் தேன்சீர்; நதியோர் தனைப்பிளந்
தப்பின் எரிகோ அடைந்தனை -அப்பவர்
ஏழினம் உங்கள் எதிர்ப்போர் செயவர
ஏழினம் தந்தேன் கரங்களில் -ஏழின்
இருவர் எமோரி அரசரை வாள்போர்
இராது குளவி துரத்த -வருகை
இனமே உழாநிலம் கட்டா நகரில்
இனம்குடி உள்ளீர் நடாத -அனைத்தும்
சிறப்பாய் வளநிலத் தின்கனி உண்டீர்
சிறப்பாய் இறைவனுக் கஞ்சி -அறனார்
அவரை மனதொடு உண்மையாய்ப் போற்றும்
அவரில் இனமுன் சிலைபொய் -அவரில்
புறத்தில் எகிப்திலே போற்றிய மாற்றார்
கறைச்சிலை விட்டு விடும்
யோசுவா கலி 41
கர்த்தரை விட்டு வேறு யாரைப் போற்றுவீர் என யோசுவா கேட்குதல்
கர்த்தரை போற்று வதாகா தெனவினம்
கர்த்தரை விட்டெவர் போற்றுவீர் -கர்த்தரை
விட்டு நதிப்புற வீண்சிலை? வந்தயிந்
நட்டா ரினவீண் இறையையோ? -நட்டான்
திருவாண் பகன்றான் இனியும் எனது
திருமனம் சேர்வழி எல்லாம் -திருவிறை
மட்டுமே போற்றுவோம். மக்கள் பகன்றனர்
மட்டிலார் போற்றுவோம் யாமுமே -நட்டவர்
வேறே இறைவர் இனம்போற் றிடுஞ்செயல்
மாறா திறைவனை; முன்னவர் -பாறை
எனசுமைக் கீழாம் எகிப்தது நாட்டை
இனம்விட வைத்த யிறைவன் இனமவர்
போற்றுவீர் கண்களின் முன்னே பெரியதாய்
சாற்றி அடையா ளமிறையுஞ் -சாற்ற
நடந்த வழியில், கடந்த இனமும்
அடைத்தே நமைகாத் தவர்சீர் -இடத்தே
அவரொரு வர்தான் இறைவன்; எமோரி
அவையவர் ஏழினம் முன்பாய் -அவரே
விடுத்துத் துரத்தினார்; ஆகையால் நாங்கள்
விடுத்திறை கர்த்தரைப் போற்றி -அடைவமே;
யோசுவா மக்களை நோக்கி திருவினம்
நேச யிறையை வழிபட -தேச
யினம்விடு வீரே; இனமீ றுதல்கள்
யினத்தவர் பாவங் களையே -யினமிறை
மன்னியார் மாறா யிறைவனார் என்றுமே
தூயர்; உமக்கவர் நன்மைசெய் -தூயரை
நீங்கள் விடுத்தமைந் தூயரில் அந்நியர்
தாங்கமைந் தேவர் களைபிழை -தாங்கிட
அந்நாள் உமக்கு அழிவுதான் மக்களே
இந்நாள் உரைத்தேன் இதை
யோசுவா கலி 42
இனமக்கள் கர்த்தரையே போற்றி சேவிப்போம் என்று ஆணையிட, ஒரு கல்லை எடுத்து, சாட்சியாக கர்வாலி மரத்தின் கீழ் யோசுவா நாட்டுதல்.
மக்களோ யோசுவாவை நோக்கி: இறைவனார்
தக்காரை மட்டுமே போற்றுவோம் -மக்களிடம்
யோசுவா: கர்த்தரைப் போற்ற தெரிந்ததற்கு
தேசத்தா ரேசான்று தான்இன்று -தேசத்தில்
யோசுவாசொல் கேட்டு இனத்தாரும் சொன்னார்கள்
தேசத்தார் யாம்தானே சான்றென -இப்பொழுதும்
உங்கள் நடுவே இருக்கும் சிலையகற்றி
உங்கள் மனதை திருப்புவீர் -தங்கமாய்
அப்பொழுது மக்களவர் யோசுவாவை நோக்கியவர்:
எப்பொழுதும் தேவனாம் கர்த்தரையே -தப்பாது
போற்றுவோம் சேவித்(து), அவர்சத்தத் திற்கேயாம்
போற்றிப் படிவோமே கீழ்யாமே -சாற்றியே
யோசுவா அந்நாளில் சீகேமில் மக்களோடு
பேசி உடன்படிக்கை செய்துவிட்டு -பேசியதை
ஏற்படுத்தி நேமமாக நூலி லெழுதிபின்,
மேற்றவண் கல்லெடுத்து நாட்டுவித்தான் -ஏற்படுத்தி
கர்த்தரின் கூட மருகே மரத்தின்கீழ்
கர்த்தரின் சான்றாக கல்நாட்டி, -கர்த்தர்
நமக்குரைத்த சொல்லெல்லாம் கேட்டதிக்கல் தானே
நமதிடை சான்றிது என்று
யோசுவா கலி 43
யோசுவா மற்றும் எலெயேசரின் மரணமும் அடக்கமும்
நூனின் மகனாம் திருவவன் யோசுவா
வானாரின் ஊழியன் செத்தான்நேர் -வானங்கீழ்
நூறும்சேர் பத்து வயதிலே சீராணும்
வேறுலகம் சென்றான் மரித்தவன் -வேறில்லா
எப்பிராயீம் தேசத்தில் காயா(சு) மலைவடக்கே
எப்பிராயீம் தேசத் திலிருக்கும் -தப்பிலாதான்
ஊராமே திம்னாத்து சேராவில் பண்ணினார்
ஊரார் அடக்கம் உடல்தனை -சீராண்
எடுத்துவந்த யோசேப் எலும்புகளை ஆங்கே
அடக்கம் புரிந்தனர் சீகேம் -அடைந்தனர்
யோசேப் வழியாரும் சீகேமை காணியாக
பேசிவாங்கிக் கொண்ட நிலத்திலே -தாசன்
உயிரோ டிருந்தபோது யோசுவாவின் நாளில்,
உயிரோ டிருந்த வழியார் -உயிர்பின்
திருவவர் சேவித்தார் நல்லினத்தார் மக்கள்
திருவவர் வாழ்த்தினார் சீரே -திருமகன்
ஆரோன் மகனாம் எலெயாசார் செத்திட
ஆரோன் வழியான் பினெகாசு -சீராணின்
எப்பிராயீம் குன்றினது மேட்டில் புரிந்தனர்
அப்போ தடக்கத்தைத் தான்
யோசுவா கலி 44
Comments
Post a Comment