திருவிவிலியம் - நியாயாதிபதிகளின் நூல் - கலிவெண்பாவில்
திருவிவிலிய நீதித் தலைவர்களின் நூல்
- கலிவெண்பாவில்
வன்செயல் படலம்
யோசுவா மரித்தபின்னர் இசுரேல் இனத்தார் செய்த போர்களும் அவர்கள் அங்கு வாழ்ந்த பிற இனத்தாரை துரத்தாதிருந்த வரலாறும்.
அறனவன் யோசுவா செத்தபின் கேட்டார்
அறமிலார் கானான் இனத்தார் -புறம்போகச்
செய்திட யார்முன்னே செல்லவேண்டும்? கர்த்தரும்
மெய்யூதா செல்ல விடைதர -மெய்யவர்
சீரார்சென் றாலே விழுவர் எனக்கேட்டும்
வீரர் சிமியோனே கூடவாரும் -சீரார்
உமதுடைய போருக்கு யாம்வருவோம் சொல்ல
இமைக்காது போனசிமி யோனும் -அமைந்திட
யூதா எழுந்தபோது கானான் பெரிசியர்
வேதர் அவன்கை யிடவங்கு -யூதவீரர்
பேசேக்கில் வெட்டினர் பத்தா யிரம்பேரை
பேசேக் அரசனைக் கண்டனர் -வீசையாய்
பேசேக் அரசன் அதொனி பெசெக்கோடு
வீசிப் புரிந்தனர் போர்தனை -பேசேக்
அரசன் புறமுதுகிட் டோட, பிடித்து
அரசப் பெருவிரல்கள் வெட்ட -அரசன்
அதொனி பெசெக்கு அழுதனன் அன்று
இதுவோ எழுப தரசின் -இதுபோல்
பெருவிரல்கள் வெட்டி விழும்சோறு உண்டார்
பெருமை அழிந்ததே காண்பீர் -அரசன்
அதொனி பெசெக்கு எருசலே முக்கு
வதைநீங்கக் கொண்டுபோக ஆங்கே -வதைநீங்கா
செத்தான் அரசன் எனகேட்டு யூதமக்கள்
செத்தநகர் மேற்புரிந்தார் போர்தனை -அத்தார்
எருசலேம் பாழாக்கி வாளாலே வெட்டி
இரையாக் கினர்தீயால் யூதர் -இரும்மலை
தெற்கேயும், குன்றிடைப் பள்ளங் களிலேயும்
சிற்றார் அழித்திடப் போர்செய்து -நற்றவர்
அப்படியே யூத குலத்தார் எபிரோனில்
தப்பிக் குடியிருக்கும் கானானின் -தப்பாது
சேசாய், அகீமான், தலமாய் எனுமரசர்
வீசியே வெட்டினர் ஆங்கு
நீதி கலி 1
கேனியர் யூதாவுடன் வசித்தல் , யூதா செய்த போர்கள்
மோசேயின் மாமனாம் கேனியன் மக்களும்
தேசத்தார் யூதா வுடன்வசிக்க -தேசத்தின்
பேரீச்சம் சீர்மரங்கள் சேர்நகரை விட்டவர்
ஆராத்தின் தெற்கில் வசித்தனர். -சீரவன்
சொல்படி யூதா சிமியோ னுடன்சென்றான்
வல்லவர் சேப்பாத் குடியிரு -அல்லவர்
கானா னியரடித்து வீழ்த்திடப் பின்னராய்
மேனதின் ஓர்மா பெயரிட்டு -மேதவர்
யூதா குலத்தவர் காசாசேர் எல்லைகளும்
தோதாய் அசுகலோன்சேர் எல்லைகளும் -வீதமாய்
எக்ரோன்சேர் எல்லைகளும் சேரப் பிடித்தனர்
தக்க குலம்வாழ ஆங்குதான் -தக்கார்
திருகர்த்தர் யூதா வுடனிருந்த தாலே,
திருகுலம் குன்றுள்ள தேசம் -வரையில்வாழ்
மாந்தரை விட்டார் துரத்தி; மலையிடைவாழ்
மாந்தரின் தேர்களது எஃகாமே -மாந்தரால்
ஆதலால் கூடாமற் போயிற்றே குன்றிடைவாழ்
மேலாண் உரைத்தபடி காலேபு -மேதவன்
சொந்தமெனத் தந்தார் எபிரோனை; சீராணும்
அந்நாள் துரத்தினான் மூன்று
நீதி கலி 2
சில குடிகளை இசுரேலர் துரத்தாமல் விடுதல்
பென்யமீன் ஏனோ எருசலேம் வாழ்எபூசை
வன்செயலாய் விட்டுத் துரத்தவில்லை; -அன்னார்
எபூசியர் அந்நாள் வரையிலும் ஆங்கே
சபையோ டிருந்தார் குலத்தார் -சபையிலே
யோசேப் குடும்பத்தார் பெத்தேல் எதிராக
வீசுவா ளேந்தி விரட்டிடப்போய் -மாசுமறை
ஏதும் உளதோ யெனக்காண ஒற்றரை
தூதாக லூசிற் கனுப்பிட -வேதநகர்
பெத்தேல் பெயரப்போ லூசென் பராங்கதை
பெத்தேலை வேவுபார்க்க ஆளனுப்ப -பெத்தேலுள்
செல்பாதை கேட்டார் ஒருவனிடம் எம்தயை
சொல்லுனக்கு செய்வோம் எனச்சொல -அல்லவன்
செல்வழியை மாந்தன் அவர்களுக்குக் காண்பிக்க
வல்லார் கொணர்ந்து கருக்கினால் -அல்லாரை
வெட்டி, தயைசெய்தார் மாந்தன், வழியார்க்கு
விட்டுவிட்டார் கொல்லாமல் கேள்மின்னே -விட்டுவிட்ட
அம்மாந்தன் ஏத்தியரின் தேசத்திற் போயவன்
செம்மையாய் கட்டி நகரதை -அம்மாந்தன்
முன்வாழூர் தன்னின் பெயராமே லூசென
முன்னிட்டான் ஆங்கே கறையவன் -அன்னார்
நகரது பெத்செயான் தன்னை மனாசே
நகர்வெளி ஊரெல்லாம் சொந்த -நகராக்க
தானாக் நகரையும் தோரின் குடிகளையும்
போனார் பிடிக்க குலத்தவர் -போனவர்
தோரருகே இப்லெயாம் என்னும் நகரையும்
வீரர் மெகிதோ குடிகளையும் -ஊரருகே
உள்ள மனிதரையும் ஏனோ துரத்தவில்லை;
உள்ளவர் தானிருந்தார் ஆங்குதான் -உள்ளே
இசுரேல் இனத்தார் பலத்திட ஆங்கே
இசுரே லினம்கைப் பகுதி -திசைநகர்வாழ்
மாந்தரிடம் வாங்கத் துணிந்தார் இனத்தவர்
மாந்தர் துரத்தாது விட்டனர் -மாந்தரும்
கேசேர் குடியிருந்த கானான் மனிதரை
கேசேர் விடுத்துத் துரத்தவில்லை -கேசேரில்
எப்பிராயிம் மாந்தரோடு வாழ்ந்தாரே கானானி
தப்ப துணரா இனத்தவர் -தப்பி
செபுலோன் குலத்தார் கிதரோன் குடியை
செபுலோன் துரத்தவில்லை, நக்லோல் -சபையார்
துரத்தவில்லை ஆகையால் கானானி ஆங்கே
துரத்தப் படாதுவரி தந்து -துரத்திடாத
அக்கோஅக் லாப்எல்பா, ஆப்பீக், செகோப்நகர்
அக்சீப் நகரவற்றின் மாந்தரை -தக்கிலாது
விட்டார் துரத்தாது ஆசேர் குலத்தவர்
விட்டாரே ஆசெரியர் தப்பிட -விட்டவர்
பெத்சிமேசு பெத்தானாத் இந்நகர்கள் நப்தலியின்
பெத்சிமேசு பெத்தானாத் மாந்தரிடம் -மத்தவர்போல்
வாங்கினர் தீயாய்ப் பகுதி இனமவர்
தீங்கை யுணராக் கறையவர் -தீங்குணரா
தாண்வழியார் தன்னை எமோரிக் குடிகளோ
தாண்வாரா பள்ளம் நெருக்கிட -தாண்மலை
மேலே குடியிருக்க செல்லும் படிசெய்தார்
ஏலா குலத்தவர் தாண்குலம் -ஏலாதார்
ஏரேசு, ஆயலோன், சால்பீம் இவைஎமோரி
பாரீர் குடியிருக்க வேண்டியே -சீரில்
வரிதனைக் கட்டினர் யோசேப் வழியார்
வரிக்காய்த் துரத்தாது விட்டு -அரிசெல்
எமோரியரின் எல்லையோ அக்கராபீம் போகும்
எமோரியின் மேடுமுதல் அங்கே -எமோரியர்
வாழ்நகர் அப்புறமும் தானே இனமேனோ
வாழ்வோர்த் துரத்தாது விட்டு
நீதி கலி 3
கர்த்தருடைய தூதனானவர் கில்காலில் இருந்துவந்து போகீமின் இசுரேலின் தவறுகளை யோசுவா மரிக்கும் முன்னர் சொல்லுதல்.
கர்த்தரின் தூதனவர் கில்காலி விட்டவர்
கர்த்த ரினத்தார்வாழ் போகீமில் -கர்த்த
ரினத்தாரைக் கண்டுரைத்தார்: இங்குவரை உங்க
ளினஎகிப்தி னின்றழைத்தேன் நான்சீர் -இனமுந்தன்
தந்தையர்க்கு ஆணையிட்ட நற்றேசம் தன்னிலும்மை
விந்தைச் செயலாகக் கொண்டுவந்து -அந்நாளில்
இட்ட உடன்படிக்கைத் தன்னை முறியேன்நான்
இட்டிடாதீர் தேசத் துடனென்றேன் -நட்டாரே
இட்டிடாதீர் தேசத் துடனே உடன்படிக்கை
வெட்டும் பலிபீடம் என்றேனே -வெட்டாது
என்சொல்லைக் கேளாதே போனீர்கள்; ஏன்நீரோ
என்சொல்லை மீறினீர் வீண்மக்காள் -வன்மீற
லாகையால் நானினங்கள் உம்முக முன்துரத்தேன்
போகிலர் எங்குமென்றேன்; வன்னாரோ -போகாது
உம்மை நெருக்குவர்; கண்ணியாகும் வீண்தேவர்
உம்மெதிரே என்றார் திருவன்று -உம்குலத்தார்
கர்த்தரின் தூதனவர் சொல்லிய சொற்களை
கர்த்த ரினமக்கள் கேட்டதும் -கர்த்தர்முன்
சத்தமாக கூக்குரலிட் டாங்கே அழுதனர்
சத்தழுகை போகீம் நகரென -அத்தவர்
கர்த்தருக்கு ஆங்கே பலியிட்டார் நேர்செய்ய
கர்த்தரின் ஊழியனாம் யோசுவா -கர்த்த
ரினத்தாரை தேசம் கொளவங்கு நேராண்
அனுப்பிடச் சென்றார் இனத்தார் -அனுப்பிய
யோசுவாவின் நாட்களில் கர்த்தரின் செய்கைகள்
தேசத்தார் கண்டதாலே யோசுவா -பேசி
உயிர்ப்பிரிந்த பின்னும் இனமூப்பர் நாளில்
உயிர்வரைச் சேவித்தார் சீர்
நீதி கலி 4
யோசுவாவின் மரணமும் அவனை அடக்கம் செய்தலும்; இசுரேல் இனத்தார் கர்த்தரை விட்டு விலகுதலும்
நூனின் மகனாமே யோசுவா செத்தான்சீர்
வானாரின் ஊழியன் சீரவன் -வானங்கீழ்
வாழ்ந்த வயதது நூறொடுப் பத்தாண்டு
வேழ்தன்னை இட்டார் நிலம்சீராய் -வேழ்மகன்
யோசுவாவின் சொந்த மலைத்தேச நாட்டிலே
யோசுவாவின் பூவுடலை இட்டனர் -யோசுவாவை
நல்லடக்கம் செய்தது திம்னாத்து ஏரேசு;
நல்லினத்தார் போனார் மரித்தங்கு -அல்லினமோ
கர்த்தரையும், சீரார் இசுரேலுக் காய்ச்செய்த
கர்த்தர் வியன்செய் யறியாதோர் -கர்த்த
ரினத்தார் எழும்பினர் ஆங்கே திருசொல்
இனம்விட்டு போனார் தவறு -இனத்தவர்
சேவித்தார் பேய்ச்சிலைகள் தேவனென் றெண்ணியவர்
மேவி திருக்கர்த்தர் கொண்டுவந்தார் -சேவியாது
வேறே சிலைத்தேவர் என்றே விலகிட
சீறிச் சினங்கொண்டார் சீர்
நீதி கலி 5
கர்த்தர் மனதுருகி நீதித் தலைவர்களை ஏற்படுத்துதலும்.
கர்த்தரை விட்டவர் பாகால் அசுதரோத்கோல்
கர்த்தரெனப் போனார் பணிந்திட -கர்த்தரோ
கொண்ட சினத்தால் எதிரியர் முன்நிற்கா
வண்ணமாக தண்டித்தார் சீர்தானே -எண்ணமாய்
கொள்ளை யிடுங்கொள்ளைக் காரரிடம் மக்களை
கொள்ளை கொடுத்து எதிரியரைத் -தள்ளாது
சுற்றுமிரு வன்னெதிரி கையிலே போட்டாரே
விற்றார் சினத்தாலே சீர்தானே -நற்றவர்
கர்த்தர் உரைத்தபடி ஆணைப் படிசெல்லும்
கர்த்த ரினத்தின்மேல் கையது -கர்த்தரின்
தீமைக்காய் வன்னெதிராய் நிற்க இனத்தாரோ
தீமையால் போனார் நெருக்குண்டு -தீயாய்
நெருக்கப் படும்வேளை கர்த்தரை நோக்கித்
திருவினம் கேட்க தலைவர் -திருவெழுப்பிக்
கொள்ளையிடுங் கொள்ளையர்க் கைவிட்டு மீட்டிட
தள்ளாது மீட்டார் திருவவர் -மெள்ள
தலைவரின் சொல்கேளா தேபோனார் மக்கள்
இலாத சிலைகளே தேவன் -வலிய
விரைவாய் விலகி தலைச்சொல்லைக் கேளா
திருந்தனர் சீரில் இனத்தார் -திருந்தவந்
நீதித் தலைவர் களைக்கர்த்தர் நேரெழுப்பும்
நீதியின் காலத்தில் சீரவர் -நீதித்
தலைவரோ டேயிருந்தார் நாளெல்லாம் சீராய்
தலைவரும் மீட்டார் சிறந்து -அலையும்
கடலின துப்புநீர் ஆவியாய் மேலே
கடல்முகி லாகிப்போய் காற்றால் -கடல்விட்டு
சீர்நிலத்தில் அம்முகிலாற் பெய்தமழை பின்னரும்
நீர்நதியாய்ச் சேருங் கடல்தானே -நீர்சீர்
அதுபோல பேய்ப்பணியக் காற்றது வீச
வதைத்தாங்கா மெல்லினத்தார் என்றே -வதைநீக்க
கர்த்தர் மனதுருகி மேம்மழை போலங்கு
கர்த்தர் அளிப்பார் தலைவரை -கர்த்தரளி
அத்தலைவன் செத்தபின்னர் மீண்டுமவர் உப்பாகி
அத்தலைவன் சொல்வழியை விட்(டு)விலகி -மத்தயின
வீண்சிலைகள் தேவரெனப் போற்றி பணிந்திடுவர்
வீண்மக்கள் கேடாய் நடந்திடுவர் -வீண்சீரில்
ஒவ்வொரு சீர்தலைவர் சென்றபின்னர் ஈதேகாண்
அவ்வாறு கேடுசெய்தார் வீண்வழியோர் -அவ்வகை
மீறி உடன்படிக்கைக் கைக்கொள்ளா கேளார்மேல்
சீறினார் சீரார் சினந்தங்கு -மாறாதான்
யோசுவாபின் வாழ்வே றினத்தார் துரத்தேன்நான்
பேசும் இனமென் வழிசெய்தாற் -பேசி
வழியார்கள் செய்வரோ சோதிக்க செய்வேன்
வழியிசு ரேலினத்தை நான்தான் -அழியாத
ஆகவே யோசுவாவின் கையில் இனமற்றோர்
வாகையாய் வெல்ல விடாதவர் -தாகம்
உளதோ எனைத்தேட என்றவர் விட்டார்
களரினச் சிற்றார் விடுத்து
நீதி கலி 6
ஓத்னியேல் படலம்
ஓத்னியேல் அக்சாளை மணமுடித்தல்
அங்கிரு தேபீர் குடியெதிர்ப் போயினர்
அங்கிரு தேபீர் அழைப்பரே -மங்கா
நகரதாம் கீரியாத் செப்பெரு; காலேப்:
நகர்வெல் தருவேன் மடந்தை -நகரில்
திருமணம் செய்ய ஒருபெண் அழகி
திருவவன் காலேப் மகளை -திருவாண்
அனுகி பலரும் திருமணம் செய்ய
மனிதனோ சோதித் தனனே -மனிதன்
அழகியை ஆங்கவர் வைத்தார் பரிசாய்
அழகியின் கண்களோ கொள்ளை -அழகாம்
அழகர் பலரும் விழைந்தனர் பெண்ணை
அழகி அடைய திறம்சீர் -விழையும்
அழகியாம் அக்சாள் மணஞ்செயக் காத்தோர்
அழகியை தந்தை தருவேன் -விழைந்தே
அழகன் ஒதனியேல் ஆங்கே விரைந்தான்
அழகி அடையவே வென்று -அழகன்
ஒதனியேல் கீரியாத் செப்பெரை வீழ்த்தி
வதைத்து வரவும் மருமான் -ஒதனியேல்,
நானறி வேனே உனது திறம்தனை
மானார் எதிர்ப்பவர் இல்லையே -மானாள்
அழகியாம் அக்சாள் மணஞ்செயக் தந்தான்
அழகியை தந்தை தரவும் -விழைந்த
நிலமது சீராய் வராததால் அக்சாள்
நிலமதில் நீர்வளம் கேட்டு -நிலமிதில்
பெண்ணே உனக்கிலை என்று பகரவோ
மண்ணிரு தேச மெலாம்வளம் -பெண்ணே
விழைக்கேள் நிலத்தின் கிழக்குமாய் மேற்கும்
விழைப்படி கையெடுப் பாய்
நீதி கலி 7
கூசான் ரிசதாயீம் எனும் அரசனிடமிருந்து ஒத்னியேல் இசுரேலை மீட்டுத் தருதல்
கானான்போர் தன்னை அறியாதோர் சோதிக்க
கானானில் விட்டுவைத்தார் சிற்றாட்கள் -கானான்
இனத்தார் பெலிசுதர் ஐந்தரசர் சீதோன்
இனம்ஏவி போர்பழக்க விட்டு -இனத்தவரைச்
சோதிக்க விட்டுவைத்தார் நேரவர் சிற்றாட்கள்
சோதிக்க விட்டயினம் ஆறாமே -சோதனைக்காய்
விட்ட குடிகள் நடுவே குடியிருந்தார்
நட்டார்பெண் கொண்(டு)கொடுத்தார் வீணாக -நட்டவர்
வீண்சிலைகள் சேவித்தார் வீணர்கள் ஆங்கேதான்
வீண்மக்கள்; பொல்லாப்பாய் வீணவரும் -வீண்சிலைகள்
போற்ற, மறந்திட்டார் நேரவரை. நேரவர்க்கோ
போற்றா ததாலே சினம்கொண்டார் -ஆற்றா
சினமூட்ட, மேசெப்பொத் தாமியாவின் மன்னன்
இனத்தாரைக் கையில் விடுத்தார் -இனமவனை
சேவித்தார் எட்டு வருடங்கள் ஆங்கேதான்
சேவித்த பின்னர் அழுதனர் -சேவித்தார்
கூசான் ரிசதாயீம் மன்னன் பெயரது
கூசான் ரிசதாயீம் வாதிக்க -கூசி
இனத்தார் திருவே திருவே இரங்கும்
இனத்தாரின் மன்றாட்டைக் கேட்டு -இனந்தூயன்
காலேபின் தம்பியாம் கேனாசு மைந்தனவன்
காலேபின் மாப்பிள்ளை ஒத்னியேலை -சீலவர்
மீட்க எழுப்பிட கர்த்தரின் ஆவிவர
மீட்டான் இனத்தை சிறந்தங்கு -மீட்டிட
தேசத்தில் நாற்பதாண்டு நல்லமைதி உண்டாக
தேசத்தான் ஒத்னியேல் செத்தானே -தேசம்
திருவெதிராய் பொல்லாப்பு செய்திட எக்லோன்
கரைமோவாப் வந்தான் பலத்து
நீதி கலி 8
ஏகூத் படலம்
எக்லோன் எனும் மோவாப் மன்னின் கைவிட்டு ஏகூத் இசுரேலை மீட்டல்
கர்த்தர்கை வன்னெதிராய் நிற்க எதிர்மோவாப்
கர்த்தரே விட்டார் எனவறியா -கர்த்தர்செய்
போரிட்டு வீழ்ந்தார் வழியின்றி வீணினம்
பேரீச்ச பட்டிணத்தைத் தோற்றனர் -போரிட்ட
அப்படியாண் எக்லோன் எனும்மோவாப் கோனவனை
தப்பிப் பதினெட்டு ஆண்டுகள் -எப்படியோ
சேவித்த பின்கூனித் கர்த்தாவே மீட்டிடும்
சேவிப்போம் என்றார் இனம்த்தவர் -மேவியினக்
கேரா மகனவன் பென்யமீனன் தன்னையே
சீரார் எழுப்பினார் ஏகூத்தை -சீராண்
இடக்கை வழக்கமுள்ளோன் கையில் இசுரேல்
இடப்பகுதி தந்தார் கொடுத்து -அடக்கம்
ஒருமுழக் கத்தி இருபுறக் கூர்செய்(து),
அரத்தைத் தனதாடை வேய்த்து -தெரியா
வலப்புறம் சீருடைக் கட்டி பகுதி
செலுத்திட மன்னன் மனைக்கு -செலும்சீர்
செலுத்தியப் பின்பு, பகுதி சுமந்தோர்
அலையாது செல்லும்நீர் சீராய் -சிலையிடம்
விட்டுத் திரும்பிவந்து ஏமச்சொல் சொல்லிட
நட்டார் விடுத்துவந்தேன் என்றனன் -நட்டவன்
ஏமச்சொல் ஒற்றன் எடுத்துவந்த தாலங்கு
ஆமெனக்கு நீபொறுத்து சொல்லிடு -ஏமச்சொல்
என்றதும் வீரர் வெளியேற மன்னனோ
அன்று குளிரறையில் தங்கினான் -நன்றிங்கு
ஏகூத் அவன்கிட்டே போய்தேவச் சொல்லுளது
ஏகூத் உரைக்கவும் மன்னனோ -ஏகூத்தின்
தேவச்சொல் கேட்க அமர்ந்திருந்தோன் மேலெழ
மேவியரம் குத்தினான் சீர்மகன் -சீவ
இடக்கை எடுத்து வலச்சீர் உடையின்
இடத்தில் மறைத்த அரத்தை -இடையில்
உருவியவன் பாய்ச்ச பிடியலகு உள்ளே
உருவப் புகுந்ததும் செத்து; -உருவியே
போனகத்தி தன்னை வெளியிழுக்கக் கூடாமல்
ஈனன் நிணம்சுற்றி ஆங்கடைக்க -ஈனனின்
பின்புறத்தில் கத்தி வெளிவரவும் விட்டவனை
பின்புறமாய் போனான் விரைந்தனன் -அன்னவன்
போகும்முன் ஏகூத் அறையின் கதவதை
ஆகாதார் வாராத வண்ணமாய் -ஏகமாய்
தாழிட்டு பூட்டி விரைந்து கொலுக்கூடம்
வேழாண் வழியாகச் சென்றிட -வேழார்
அரசன் இருக்கும் அறையது பூட்டி
அரச கொலுவழிச் சென்றோன் -தெரியாது
மன்னன் அறைதனைப் பூட்டி வெளியிருப்பார்
அன்னாரே விட்டார் அமைந்து
நீதி கலி 9
எக்லோன் படைவீரர் சிலமணி நேரம் கழித்து அவன் செத்திருப்பதை காணுதல்; இசுரேலர் மோவாபியரை அழித்தல்; சம்கார் பெலித்தரில் அறுநூறு பேரை வீழ்த்தி இசுரேலை மீட்டல்
சிலமணி நேரம் கழித்தும் திறவார்
அலுத்துத் திறந்தார் கதவு -குலுக்கித்
திறக்க கதவும் திறக்கா ததினால்
திறவுகோல் கொண்டு திறக்க; -திறந்தால்
திறந்தவர்க் கண்டார் அரசன் தரையில்
திறந்தவர் போனார் மலைத்து -திறந்தவர்
தாமதம் செய்யுமவ் வேளையில் ஏகூத்தோ
தாமதிக்கா தேத்துறையைச் சேர்ந்தனர் -தாமோ
துறைசேர்ந்து தப்பித்து சேயிராத் சேர்ந்தோன்
கறையரசு செத்ததை சொல்ல -மறையவர்
தந்தநல் எக்காளம் ஊதிட வந்தனர்
அந்நாள் மலைவிட்டு ஆங்குதான் -செந்தோள்
அவர்களுக்கு முன்பாய் நடந்தனன் ஏகூத்;
தவரே தொடரும் எனைநீர் -தவனவர்
மோவா பியரவரை உங்களின் கைகளில்
தேவன் கொடுத்தாரே ஒப்பங்கு -மேவியே
மக்கள் அனைவரும் மோவாப் எதிரான
தக்கத் துறைகளை யோர்தானின் -பக்கக்
கரையில் பிடித்தார் ஒருவன் கடக்காக்
கரையில் அழித்தார் எதிரி -கரையிலே
வீரர் விழுந்தயெண் ணிக்கை இனமோவாப்
வீரர்கள் பத்தா யிரமாமே -வீரரவர்
நல்வலிமை மிக்கோர் அவர்களை தாழ்த்திட
நல்லார் அழித்தார் சிறந்தங்கு -நல்லபடி
தேசம் அமைதலாய் ஆயிற்று எண்பதாண்டு
தேசத்தார் காக்க திருவுமங்கு -தேசத்துள்
ஆனாத் மகனவன் சம்கார் எழும்பினான்;
மேனவன் மீட்டபின் ஆங்குதான் -மேனான்
ஒருசிறு தாற்றுக்கோல் தான்வைத்து சம்கார்
பெருமார் பெலிசுதர் வாழ்வோர் -இருமிடம்
தன்னில் அறுநூறு பேரை முறியடித்தான்
என்னே அவனின் திறம்
நீதி கலி 10
தெபோராள் படலம்
இசுரேல் இனம் மீண்டும் வழுவ தேவன் மோவாபிய அரசன் கீழ் விடுதல்; தேபோராள் பாராக்கை அழைத்து பேசுதல்.
ஏகூத் மரணம்பின் பின்னிட்டார் வன்னாராய்
மேகம் விலகி ஒளிமறைக்க -மேகமென்ன
ஞாயிறை வாயால் விழுங்குமோ கர்த்தரவர்
வேயினத்தார் தந்தார் எதிர்த்தங்கு -வேயவன்
கானான் அரசனாம் யாபீன் அழைத்துவந்து
கானா னிடமே அடிமையாய் -மானமிலார்
விற்றாரே சீரார் இனத்தை அடிபணிந்தார்
அற்றார் அரசனின் கீழ்விட -அற்றவன்
வன்னரசு யாபீன் தளபதி பேர்சிசேரா
வன்னாய் நடத்த இனத்தாரும் -என்னே
இதுவாழ் வெனத்துடித்தார் மக்கள் அழுதார்
வதைத்தாங்கா கர்த்த ரிடம்சீர் -இதமாண்
இலபிதோத் தின்மனைவி தேபோராள் வாக்கர்
இலபிதோத் வீட்டில் இருந்தே -அலரா
தவள்வாக் குரைப்பெயர் பெற்றபே ரீச்சம்
அவள்வீடு கீழென பேச்சு -அவளோ
இராமாவும் பெத்தேலும் இன்னிடை வீடே
இராப்பகல் பாராது வாக்கிற் -வருவர்
இனத்தாரும் ஆங்கே அவளோ அழைத்தாள்
இனநப் தலிகேசேர் ஆண்சீர் -இனவீரா
பாராக்கே வாரும் தெபோராள் மனைக்குநீர்
பாரவன் கேட்டு விரைந்தனன் -சீராணும்
வாக்குரைப் பெண்ணவள் வீட்டிற்கு; என்னமோ
வாக்கது என்றே மலைத்தனன் -வாக்கு
இருநாள்முன் கண்ட கனவை உரைக்க
திருப்பெண் அழைத்தாளோ என்றே -திருவாண்
திருதிரு என்றே அறியாது சென்றான்
திருவீட்டுள் வந்து வணங்க -திருநீ
செபுலோனும் நப்தலியும் சேர்த்தாட்கள் கொண்டு
எபிரேயர் வாட்டரசன் வீழ்த்து -தெபோராள்
உரைத்தனள் பத்தா யிரம்மக்கள் சேர்த்து
விரைவாய் எதிராகப் போசீர் -திருநான்
வரவழைப்பேன் யாபீன் தளபதியை கீசோன்
வருமவனை வீழ்த்த கொடுப்பேன் -இரும்பாமே
தொள்ளா யிரந்தேர்கள் சீசேரா வீழவே
தள்ளுவேன் சீர்கர்த்தர் யான்திரு -தள்ளிநான்
கண்ட கனவதை சொல்பிசகா சொன்னவளை
கண்டான் வியந்தவன் பாராக்கு -மண்ணிலே
தேவனிலை கர்த்தர்போல் பெண்தாயே என்னோடு
மேவிவந்தால் போவேன் சிறந்துநான் -தேவியே
நீர்வாரா தேவிட்டால் நான்போவ தில்லையங்கு
சீர்பெண்ணே வாரும் மெனக்கேட்டோன் -சீர்ப்பெண்ணும்
வீரன் எனஉன்னை போயென்றேன் மாந்தனே
வீரமில் என்னை அழைத்ததேன் -வீரமில்
ஆதலால் இப்போரில் மேன்மை உனக்கிலை
வேதர்சொல் ஈதெனக் கூடப்போய் -வேதர்சொல்
பத்தா யிரவீரர் கொண்டு மலைதாபோர்
அத்தவன் ஏற விரைந்து
நீதி கலி 11
தெபோராள் -பாராக் மோவாபிய தளபதியை துரத்தி, யாபீன் அரசனை சிறுக்கச் செய்தல்
சீசேரா கேட்டான் எதிராய் எதிரியர்
வீசிப் பகைகாட்ட ஏறினார் -சீசேரா
தேரெல்லாம் கீசோன் வரவழைத்து போர்செய்ய
தேரெல்லாம் ஆங்கே அழிந்திட -தேர்விட்டு
சீசேரா கால்நடையாய் தப்பித்துப் ஓடினான்
சீசேரா கேனியன் ஏபேரின் -மாசிலாக்
கூடாரம் வந்திட யாகேல் அவன்மனையாள்
கூடமுள் வாரும்சீர் என்றனள் -கூடமுன்
ஓடியோடி வந்ததால் கால்களைக்க வந்தனன்
வீடுள் புகுந்து படுத்திட -ஓடியவள்
போர்வை தனைப்போர்த்தி விட்டனள் சீசேரா
பார்காணா வண்ணம் மறைத்தனள் -தேர்விட்டு
ஓடிவந்த ஆணோ துடித்தனன் தாகத்தால்
வீடுள் குடிநீர் தருவாயா -ஓடியவள்
ஓடிவந்த வன்களைப்பால் நீர்குடிக்கக் கேட்கிறார்
நாடிவந்த ஆளும் களனவன் -தேடிவந்தார்
தந்திடுவேன் பால்பை குடித்து உறங்கவே
தந்திட்டாள் பால்குடிக்கப் பெண்ணவள் -தந்தவள்:
ஆண்டவனே நீரெதற்கு பால்குடியும் என்றவள்
ஆண்குடிக்கத் தந்தாள்பால் பைதனை -ஆண்சீராண்
பால்குடித்து நானுறங்கும் போழ்து எதிரியர்
வால்பிடித்து வந்திடலாம் ஆதலால், -வேல்விழி
யாளே விழித்துநில் வாயிலில், யாருங்கேள்
ஆளோ வரவிலைசொல், பொய்தனை -ஆளே
சரியுறங்கும் சீரே எனவப்பெண் சொல்லி
இருஇரு தூங்கியப்பின் கையால் -இருமுனை
செய்கிறேன்பார் என்றே உறங்கச் செலவவனை
நன்றாக போர்த்தினாள் பெண்ணவனை -நன்றென
சீசேரா பால்குடித்து ஓய்வெடுக்கத் தூங்கினான்
சீசேரா தூங்கவள் காத்திருந்து -சீசேரா
நெற்றியில் கூடார ஆணி கடாவினாள்
நெற்றியில் சுத்தி யடித்தனள் -நெற்றியில்
ஆணியது ஊடுருவ ஆங்கே மரித்தானே
ஆணவனும் சாக தொடர்ந்துவந்த -ஆணவன்
பாராக்கை யாகேல் அழைத்துவந்து நீர்த்தேடும்
தேராதான் இங்கே மரித்தனன் -தேராத்
தளபதியும் தேர்களும் வீழ அரசன்
தளபதியில் போனான் பலமில் -வளம்வாரா
தாழ்ந்தான் அரசனவன் மேன்மேலும் அங்கவன்
வீழ்ந்தழியும் மட்டும் சிறுத்தனன் -வாழ்ந்தகீழ்
சீசேரா வீழ்ந்தனன் என்றுகண்ட சீரரவர்
தேசத்தார் முன்பாட சீர்ப்பாட்டு -தேசத்தை
மீட்ட தெபோராளும் பாராக்கும் மெட்டுடன்
பாட்டதை பாடினார் சீர்
நீதி கலி 12
தெபோராளின் வெற்றிப் பாட்டு
இசுரேல் இனத்தின் இடுக்கண் எடுத்தார்
இசுரேல் இனத்தின் இறைவன் -இசைந்து
சரிகட் டினார்நேர் அவர்திரு நீதி
திரும்பித் துதிப்பீர் திருவை -கரியவர்
வீரர் விழைந்து எதிரி யெதிர்த்திட
சீராய் கருக்கேந் தியவரும் -நேராய்
வருகைப் புரிந்த ததனால் திருவைத்
திருவினம் செய்வீர்த் துதியை -திருவோர்
அரசரே கேள்மின் அதிபதி யாரே
சிரந்தாழ்த் திடுவீர் திருவை -திருப்பெண்
சிறப்பாய் துதித்து சிறப்பெனப் பாட்டை
அறமாய் திறம்பட பாடு -அறவார்
திருவே செயீரை விடுத்து வரவும்
திருவவர் ஏதோம் வெளியைத் -திருச்செல்
லடியி லதிர்ந்தது பூமி, மழையைக்
கடிதாய்க் கொடுத்த முகிலும் -அடியில்
திருமுன் மலைகள் கரைய, திருவின்
திருமலை சீனாய் கரைய -திருவவன்
சம்கா ரினவாழ் வெலாம்வழி பாழனெ
அம்மா வழியூர் அலர்ந்திட -எம்மவர்
அம்மா வழிநட அம்மணி யும்விடு
அம்மா வழிநடந் தாரவர் -அம்மா
வெனநான் தெபோரா ளெனும்பெண் எழச்சீர்
மனவலி மைபெற் றனவே -இனத்தார்
புதிது புதிதாய் சிலைகளைப் போற்ற
அதுயெதும் சீரார் இலையே -அதனால்
இரும்நகர் வாயில் இதுவரை வந்து
இருந்ததோ ஆயுதம் இங்கு? -வரையிலே
பேரினம் நாற்பதி னாயிரம் ஆயினும்
பேரினங் கையிலே ஆயுதம் -பேருக்
குமிலையாம் அந்நிலைக் கண்டோம்; தமரில்
அமைதி விழைந்தவர் வாழ்த்து -அமைந்துத்
திருவைத் துதியும் திருவே திருச்சீர்
திருவைத் தெருவெங் குமாய்செல் -திருவே
திருச்செவி கேட்கத் திருவிதைக் கூறும்
இரும்நீர் கிணற்றிலும் பேசு -இரும்நகர்
நீரெடு ஊரிலே நீரின் நிலைதனில்
வீரரின் சீர்வில் ஒலியிலை -சீரார்
விரைந்து சரியார் நியமம் பகிர்வீர்
சரியார் வருவரே வாயில் -சரிநீ
விழிவிழி தேபொராள் பெண்ணே விழிப்பாய்
விழித்து திருவைச் சிறந்து -அழகியப்
பாவாய் இசைந்து சிறப்பாய்ப் இசையெனப்
பாவை விழித்திடு நேர்மகள் -மேவியே
பாராக் எழும்பு, அகினொகாம் பெற்றவா
பாராக் எழும்பு; சிறையுளே -சீரில்
சிறைவைத் தவரை சிறைப்பிடி வீரர்
சிறையுள் சிறைவைத் திடுவாய் -சிறந்துநீ
போரிலே மீந்தவர் நேரெதிர் சீர்களை
நேரினம் ஆளப் புரிந்தவர் -நேரார்,
பலவான் பலர்மேல் எமையவர் ஆள
பலத்தை அளித்தார் திருவே -பலமே
இவர்வேர் துளிர்த்தே அமலேக் இடத்தில்
அவையவர் எப்ரா யிமில்தான் -அவையவர்
பென்யமீன் மக்கள் தொடர்ந்தனர் மாகிரெர்
நன்னகர் விட்டார்ச் சிறந்தவர் -அன்னார்
செபுலோன் இனத்தில் எழுதும் சிறப்பார்
செபுலோன் விடுத்து வரவும் -சபையார்
இசக்கார் இணைந்தார் இறையோர்த் திருப்போர்
திசைநடு குன்றில் நடந்து -திசையில்
பிரிவினை தானே முதலாண் திருவின்
பிரிந்துக் கிடையிற் கிடந்தார் -பிரிவினை
யாலே மனமிது ஏலா வலியது
வேலார் வராததே னோசொலும்? -ஆலவர்
கீலெயாத் மாந்தர் இருந்தார் இணைவரா
வேலையாய் கப்பலில் தாண்குலச் -சீலரும்
வாரா திருந்ததேன்? மற்றும் குடாவிலே
வாராத் தரித்தவா சேரெனோ -தேரா
செபுலோன் இனமொடு நப்தலி போரில்
சபையிதைக் காக்கத் துணிந்தார் -எபிரேய்
அரசரும் போரிட தானாக்; வளமோ
அரசரின் கைக்கிடை யாது -திருவின்
புவிதனில் போரிதை யாமோ புரிந்தோம்
புவிமேல் இருவிண் ஒளிமீன் -புவியார்
எதிராய்ப் புரிந்ததே இப்போர் சிசேரா
எதிர்த்து; வியனிது தானே -எதிரே
நெடிதாய்ப் பழகும் நதியது கீசோன்
அடித்து யெதிரியர்ச் சென்ற -நெடுங்கதை
சீரது; ஆத்துமா நீயோ பலம்பெறு
சீரதைப் போட்டு மிதித்திடு -தேரவன்
ஓடவோ டங்கு பரிகளின் கால்களில்
ஓடப் பிளந்தக் குளம்புகள் -ஓடும்
பரிகளை வீரர்ப் பிளக்கா திருக்க
பரியவை போனது செத்து -சரியில்
மெரொசு எதிராய்க் கெடுசொல் உரைப்பீர்
எரிக்கச் சபையெதிர்த் தன்னாள் -மெரொசு
வராதிருந் தாரே துணையாய், திருவின்
திருவினம் பக்கம் அவர்யேன் -திருவின
ஏபேர் மனையாள் தனைநீர் சிறந்தசொல்
தாபரி அந்நிலப் பெண்ணவள் -ஏபேர்
மனையாள் இரும்பெண் களிலே சிறப்பெண்
அனைவரும் வாழ்த்தும் அவளை -மனையில்
குடிநீர் தரவே தளபதிக் கேட்க
குடிக்க நறுபால் கொடுத்தாள் -அடியாள்
அரசரின் கிண்ணியில் வெண்ணெயை; ஆணி
விரைவாய் கடவச் சிறந்து -சரியவர்
மெல்லின மென்றே மகளிரின் கையிலே
அல்லார் தராயெடைச் சுத்தியல் -மெல்ல
நடந்து கடாவினாள் ஆணி; வலக்கை
எடையதாஞ் சுத்தி பிடித்து -எடையைக்
கடாவத் தளபதி தேர்மேல் திரிந்தோன்
கடாவியப் பெண்ணின் திருக்கால் -அடாவிச்
சுருண்டுக் கிடந்தனன் ஆங்கே; சுமந்தோள்
இருப்பாள் வழிமேல் விழித்து -திருவாண்
அடடா வராததன் காரண மேதோ
அடங்காத் திருவாண் திருத்தேர் -அடைவரா
தேனோ எனத்தாய்ப் புலம்ப மகளிரோ
ஏனோ அறியார் புலம்பிட -மேனவன்
கொள்ளையாய்க் கொண்டு வருவான்; சிறப்பதாம்
கொள்ளை யிடுத்ததை பெண்களும் -அள்ளி
எடுத்திட பங்கிடு வானே வராது
விடுத்தது யேனோ நரனும் -நடத்துவார்
கர்த்தர் திருவே எதிரார் அனைவரும்
கர்த்தா அழிவரே இவ்வகை -கர்த்தரில்
அன்பு செயுமவர் ஞாப்போல் ஒளிவிட
என்றும் இருப்பரே பாட்டது -நன்றாய்
தெபோராள் திருமகள் மீட்டிட தேசச்
சபையோர் அமைதியாய்ச் சீராய் -சபையின்
அமைதல் திருநாற் பதாண்டுகள் தானே
அமைதியாய் நின்றார் இனம்
நீதி கலி 13
கிதியன் படலம்
மிதியானியரிடம் இசுரேல் வதைபடுதலும் கிதியோனை தேவ தூதனாவர் வந்து சந்தித்தலும்.
திருவின் இனத்தார் விலகிக் கறையாய்
திருக்கண் இருந்தனர் முன்னே -திருவோ
மிதியான் இனத்திடம் ஒப்புக் கொடுக்க
மிதியான் வதைத்தார் இனத்தை -வதையால்
இனத்தார் மலைமேல் கெபிகளில் அஞ்சி
இனியும் இனம்வாழ் வதுவோ -இனமும்
கரைந்தார் அழுதுத் திருவே திருவே
விரையுமே மீட்க இனத்தை -விரையுமே
ஏனெனில் நாட்டில் விதைத்தால் அழிக்கவே
மானமில் சிற்றார் படைகளை -கோனவர்
விட்டு விதைக்களம் இல்லா திருக்கவே
நட்டார் அழித்தார் எதிர்த்தவர் -நட்டவர்
எல்லை யெதிலும் உணவிலா வன்னிலை
எல்லையுள் நன்வளம் இல்லையென் -றில்நிலை
எல்லையுள் ஆமே கழுதை இலாநிலை
வல்லார் வதைத்தார் இனத்ததை -வல்லார்
மிதியான் அமலேக் கிழக்கின் மகன்சேர்
மிதித்தார் இனத்தை வதைத்து -மிதியுன்
நிலையால் கறையார் அரணாய் மலைமேல்
அலைந்தார் இனமும் விடாய்த்து -அலையலை
வெட்டுக் கிளிபோல் வருவார் எதிரியர்
ஒட்டக மாக்களை எண்னியல் -நட்டார்
வளத்தைக் கெடுக்க விரைவார் மிதியான்
களிக்க இனமும் சிறுத்து -அளிசீர்
திருவே திருவே விடுத்தோம் உமையே
திருவே இரங்கும் எனவே -திருவும்
கனிவாய் இரங்கி இறைச்சொல் அறிவி
நனிநீ உரைப்பாய் சிறந்து -நனிசொல
வாக்குரை மாந்தன் வருகைத் தரவுமே
வாக்கது யென்ன வெனவினம் -வாக்கை
செவியிலே கேட்க வருகைப் புரிந்தார்
புவியில் உரைத்தனன் வாக்கு -அவிக்கும்
எகிப்தின் அடிமைத் தனத்தை எடுத்து
எகிப்தை விடுத்து வரச்செய் -எகிப்தியர்
போன்ற எதிரியர் வீழ்த்தி இனத்தவர்
மேன்கை கொடுத்தேன் நிலமிதை -கோன்யான்:
சிலைகள் எமோரி வழிபடீர் என்றேன்
சிலைகள் உரையெனச் சொன்னால் -சிலைகளுக்
கஞ்சா திருமெனச் சொன்னேன்; இருந்துமே
அஞ்சினீர் சொற்கேட் டிலையென -தஞ்சும்
இதுவகை வாக்கன் உரைத்தபின் ஆங்கே
மெதுவாண் கிதியோன் நிலத்தில் -மெதுவாய்த்
திருவும் அனுப்பியத் தூதர் ஒபரா
மரங்கீழ் அமர்ந்தார் சிறந்து
நீதி கலி 14
தேவ தூதனாவரிடம் கிதியோனின் உரையாடலும் அவன் ஒரு பலிபீடம் கட்டுதலும்.
கிதியோன் களத்தில் நிலத்தின் அறுப்பை
மிதித்து வடித்தால் எதிரி -மிதியான்
வருவர் எனவே மறைந்தவன் ஆலை
விரைந்து அடித்தனன் நெற்போர் -கரைந்து
திருவின் திருவார் திருவி னிடம்சொல்
திருப்பெலன் கொண்ட வலிமைத் -திருவே
திருவும் இருக்கிறார் உன்னுடன் சீரே
திருவின் திருவார் உரைத்து -உரைத்தான்,
அடடா திருவும் இனத்தோ டிருந்தால்
அடைப்பட் டிதுபோல் இருமோ? -அடைந்தோம்
நிலத்தை எனமுன் வழியார் செயலும்
இலாத நிலையேன் திருவே -இலையது
செய்த வியன்செய் மறைந்தே; நிலமிதில்
வெய்து இனத்தார் மிதியனர் -எய்யும்
விதத்தால் அழிந்தே சிறுத்தோம் விடுத்தார்
விதமாய் இனத்தைத் திருவே -அதற்கவர்
வல்லமை உள்ள மனிதனே வல்லமை
நல்லவர் தந்தார் சிறப்பின -நல்லவா
என்னினம் காக்க இரும்வலி யோடுநீ
என்சொல் புறப்படு நீதிரு -நன்றே
இசுரேல் இனத்தை மிதியான் விடுத்து
திசைதனில் மீட்டிடு வல்லே -இசுரேல்
இறைவன் அளித்தார் திருச்சொல் அனுப்பும்
இறைவன் நனியரே யான்தான் -இறையோய்
எளியோன் மனாசே தனிலே சிறியோன்
எளியோன் எதினால் இனத்தை -களித்திட
மீட்பேன் திருவே சிறியவன் தந்தையின்
நட்டா ருளரிலே யானென -நட்டவா
உன்னுடன் கர்த்தர் இருப்பேன், சிறந்தவர்
அன்றவர் சொன்னார், மிதியனின் -வன்னார்
முறியடிப் பாயே ஒருவனை வீழ்த்தி
முறியடிப் பாற்போல் களித்து -முறையே
தயையாய் இறைவனே சொல்லுதல் நீரென்
றியலான் வருவேம் இருமே -வியனும்
உரைத்தார் இருப்பேன் வரும்வரை; சென்றான்
உரைத்தவர்க் கூண்செய வங்கு -உரைத்து
கிதியோன் விரைந்தவன் ஊன்தனைச் செய்து
கிதியோன் வரவும் திருவோ -கிதியோன்
மகவே திருவூன் இடுவாய் இருக்கல்
மகனும் இடவவர் தொட்டார் -தகதக
கையிரு கோலால் உணவைத் தொடவுமே
ஐயமில் கோலது பட்டதும் -வேயமில்
தீயும் இருக்கல் எழும்பியே தீய்த்திட
வேயார் மறைந்தார்த் திருவினார் -ஆயனே,
அப்போ கிதியோன், திருவின் திருவென
தப்பினேன் என்றே திருமறை -தப்பினேன்
சீரே முகமுக மாகத் திருவவர்
சீரார் தனைக்கண் டவன்சொல -சீரார்
அதற்கு: அமைதி அமைதி மனிதா
விதம்நீ மரியாய் உரைத்தேன் -அதனால்
கிதியோன் திருவிற் கெனவே பலியாய்
அதனுள் பலிதரும் பீடம் -அதிலவன்
கட்டிய பீடம் திருப்பேர் அமைதியென்
கட்டியோன் பேரிட அங்குதான் -கட்டியச்
சீரிடம் ஒப்ரா தனிலுள தேயது
சீரார் உரைத்ததைக் கேட்டு
நீதி கலி 15
பாகால் தோப்பை கர்த்தர் அழிக்கச் சொல்ல கிதியோன் அழித்தல்
ஏறது ஏழு வயது தகப்பனின்
ஏறதை நீயெடு இன்றுதான் -ஏறு
இரண்டா வதேறு அதைநீ பலியாய்த்
தருவாய் சிலைமரம் வெட்டி -தருவாய்
அதுகன் மலையின் முகடிலே பாங்காய்
வதைப்பலி பீடம் நிறுத்தி -அதுபலி
கொண்டுவா சீர்பலி தந்திடு என்றதும்
கொண்டு வரஅஞ் சினான்திரு -அண்டைச்
சிலையது பாகால் அருகே மரங்கள்
சிலைக்காய் இனத்தார் வழியோர் -சிலைவழி
பாடு புரிந்ததால் சீரவன் அஞ்சினான்
தேடி யடிப்பரே வீணினம் -பேடியாய்
அஞ்சியும் வேலையாள் பத்துபேர் சேர்த்தவன்
அஞ்சிய சிற்றான் இரவிலே -அஞ்சி
மனிதர் உறங்கியப் பின்னர் எவரும்
நனியறி யாதே விரைந்து -கனியிலா
ஊரின் மனிதர் எழுந்தே திகைத்தனர்
ஊரின் சிலையது வெட்டியே -பாரில்
பலியாய் இரண்டா வதேறை கறையோர்
பலிசினம் ஓடினர் வீடு -பலியது
யோவா சிளைமகன் செய்தான் எனவவர்
யோவா சிளைக்கொடு உன்மகன் -போவான்
மரித்து சிலையை அழித்ததால் என்றே
மரண சினங்கொண் டவர்சொல் -விரைந்தவன்
யோவா சவனுரை பாகால் இறையெனப்
போவ தெனவரை மாந்தரே -மேவி
அதுவே வழக்கா டிடட்டும் எதற்கு
அதற்காய் வருகைப் புரிந்தீர் -அதனினால்
பாகால் சிலையே வழக்கா டிடுமுரை
பாகால் சிலையால் பெயரது -ஏகமாய்
இட்டார் யெருபகா லென்று கிதியனை;
நட்டார் விடுத்தார் மகன்
நீதி கலி 16
மீதியானியர் அழிக்க வருதலும் கிதியோன் படை சேர்த்தலும்
மிதியான் அமலேக் கிழக்கவர் எல்லாம்
மிதிக்க நதியைக் கடந்தார் -மிதியினர்
வெட்டுக் கிளிபோல் பரவி யிருந்தனர்
நட்டார் நடுங்க நடுவிலே -இட்டார்
இருந்த இடமோ யெசுரயெல் பள்ளம்
விரைந்தவர் வந்தார் எதிர்த்து -அருளாம்
திருவினார் ஆவி கிதியனின் மேலே
திருவின் உரைப்படி சங்கை -திருவாண்
எடுத்தொலித் திட்டான் இருமூர் இனமே
அடுத்து வரப்பின் அழைத்து -விடுத்தே
மனாசே இனத்தின் இடமெலாம் தூதர்
இனத்தான் அனுப்பினான் மூன்று -இனத்தார்
எதிர்வர ஆங்கே கிதியனோ கேட்டான்
மதிகாண் குறியைச் சிறந்து
நீதி கலி 17
கிதியோன் இரண்டு முறை அடையாளம் கேட்குதல்
மயிருளத் தோலைக் களத்திலே போட்டு
மயிரில் பனிவிழ வேண்ட -இயலில்
பனியது தோலிலே மட்டும் பொழிய
பனியது வேறு களத்தில் -மனிதர்
தொடவிலாச் செய்வீர்; அதனால் அறிவேன்
இடமெனைக் கொண்டுதான் மீட்பு -இடத்திலே
அப்படி ஆனது அந்நாள் தனிலது
அப்படி ஆனதை நேரவன் -அப்படிக்
கையால் மயிர்த்தோல் பிழிய நிறையவே
கையிலே கிண்ணம் எடுத்திட -கையவன்
இப்போ சினங்கொளா தீர்சீர் கரைந்தனன்
தப்பாண்: ஒருவிசைக் கேளுமே -அப்படி
யில்லாக் களமெலாம் பெய்து மயிரிலே
இல்லா திருக்க பனியது -நல்லது
அப்படி ஆனது அந்நாள் தனிலது
அப்படி ஆனதை நேரவன் -அப்படிக்
கையால் மயிர்த்தோல் எடுக்க துளியிலா
கையிலே வந்த மயிரது -பெய்யில்
களத்திலோ எங்கும் பனியது பெய்து
களத்தில் இருக்கும் மயிரில் -துளியும்
பனியிலா வண்ணம் வியன்செய் தவரே
நனியார் திருவின் அழைப்பு
நீதி கலி 18
முப்பத்திரண்டாயிரம் பேர் படையை முந்நூறாக கர்த்தர் குறைத்தல்.
கிதியனாம் பாஅல் வழக்கோன் எழுந்தான்
கிதியனு டன்சேர்ந் தினத்தார் -மிதியன்
எதிராய் விரைந்தனர் போர்போர் எனவே
எதிரிமுன் ஆராத் திலேசேர்த் -தெதிரி
மிதியன் படையோ இருந்தது மோரே
கிதியன் வடதிசை தானே -மிதியன்
இருந்தனர் குன்றிடைப் பள்ளம் நிறைந்து
திருவோ நிறையவுன் ஆட்கள் -திருவவர்:
இத்தனை மக்கள் மிதியனின் மேற்படை
இத்தனை தேவை யிலையென -மத்தவர்
வீட்டிற் கனுப்பிடு இல்லென் எமதுகை
நாட்டவர் மீட்டதென் பார்கறை -நாட்டவர்
அப்படிப் பட்ட தெதிர்ச்சொல்; உரைத்திடு
இப்போ திகிலதோ அச்சமோ -தப்பாய்
கறையாய் இருப்பின் இதோடு விரைமின்
அறனின் திருவுரை வாக்கு -கறையார்
திகிலால் இருபத் திரண்டா யிரம்பேர்
வகையதே என்றே கிலெயாத் -அகமலை
யோடவும் பத்தா யிரமே இருந்தனர்
ஓடா தவரெண் மறவராய் -வேடவா,
இத்தனை மக்கள் மிதியனின் மேற்படை
இத்தனை தேவை மிகுதியே -அத்தினர்
நீர்நிலைக் கொண்டுபோ ஆங்கே மனிதரை
சீர்த்தேர்ந் திடுவேன் இறையனார் -நேர்திரு
தேரா தவனோ விரைந்தே திரும்பிட
சீரார் எனநான் உரைப்பவர் -சீரவர்
கையிலே நீர்தனை நக்கிக் குடிப்பவர்
கையிலேந் தாதவர் இல்திரு -வையலில்
கையிலே நீர்க்குடி முந்நூ றிலக்கவர்
கையிலேந் தாதே விழுந்துநீர் -வையம்
குடித்தவர் மற்றோர்; இவரால் இனத்தை
கடிதுபோய் மீட்பேன் இறையான் -அடுத்து
இருப்பவர் ஊண்தனை கையெடு; மற்றோர்
விரைந்தகம் சேர்வீர்; மிதியன் -அருகில்
மலைகள் இடையில் இருந்தனர் சேனை
அலரே திருவாண் மகன்
நீதி கலி 19
கர்த்தர் மீதியான் பாளையம் சென்று அவர்களின் பேச்சை கேட்டுவரச் சொல்லுதல்
இரவிலே கர்த்தர் அவனிடம்: நீபோய்
இரவிலே அந்தப் படையுங் -கரத்திலே
தந்தேன் இருந்தும் மிதியருக் கஞ்சினால்
வந்துகேள் வேலை யொடுதிரு -வந்தனன்
வேலையாள் பூரா கிதியன் இருவரும்
மேலிருந் தோரை விடுத்தவர் -மேலார்
உரைப்படி சேனை யினிடம் விரைந்தார்
உரைதனைக் கேட்கவே வீரர் -உரக்கவே
பேசும் மறவரைக் கேளாய் மறவனே
பேசுவோர் பக்கம் செவியினால் -பேசுவோர்
கேட்டான் மறைந்தவன்; காப்பார் இருவரே
நாட்டான் கவிந்தவன் கேட்டனன் -வாட்ட
மிதியான் அமலேக் கிழக்கின் மகனார்
மிதியிடம் இல்லா மலையில் -அதுவகை
தூங்கி யிருந்தார் மணற்போல் இலக்கமாம்
ஆங்கே இருப்போர் படுத்திட -அங்கவர்
மாக்கள் இலக்கமே பேராம் படுத்தவர்
ஆக்க நிறைசீர் மறவரே -ஏக்க
நிலையில் ஒருகனாக் கண்டவன் கேட்டான்
அலர்முக மாகியே அங்கு -அலர்ந்தவன்
கேள்கனா என்னமோ ஏதோ நடப்பது
கேள்நான் உருண்டது ஊணது -ஆள்காண்
பொழுது உருண்டு மிதியனின் கூடம்
இழுத்துக் கவிழ்த்தது சோறு -வழக்கார்
கனவைச் செவிக்கேள் மறவன் உரைத்தான்
கனவிதில் வந்தது வேறில் -கனவில்
கிதியனின் வாளே; சிறப்பாண் கரத்தில்
கிதிய னிறைவனார் ஒப்பு -கிதியனோ
கனவையும் பேசி விளக்கமும் கேட்டு
இனியவன்: போவோ மென
நீதி கலி 20
கிதியோன் செய்கையில் மிதியானியர் ஒருவருக் கெதிராய் ஒருவரை அழித்தல்
திருப்படை நூறாய்ப் பிரித்தனர் மூன்று
திருப்படைப் பாருமே என்று -திருவினார்க்
கையில் வெறுங்கலம் தீக்கோல் குழலதும்
கையில் கொடுத்தனன் சீரவன் -கையில்
இருக்கும் இதைநீர் எனைப்போல் செயவே
தருவார் மிதிய னியரை -தருமிக்
குழலது நானும் உரக்கவே ஊத
குழலிதை கையில் எடுத்து -குழலவை
நீரூம் உரக்கவே ஊதி கிதியனின்
சீரது வாளிறை வாளென -வீரர்
இரவின் நடுவில் மறவரும் மாற
இரவின் நடுவில் மறவர் -இரவின்
அமைதியைக் கொன்று உரக்கக் கலத்தை
அமைதியிற் போட்டு உடைத்தே -அமையா
உரக்கக் குழலவை ஊதி இனத்தார்
உரக்கப் பகன்றார் கிதியன் -கரவாள்
இறைவனார் வாளென அச்சம் கவிந்தே
சிறப்படை மோதினர் உள்ளுள் -மறவரும்
உள்ளே எதிரியர் என்றே உளத்திலே
உள்ளோர் எதிரெனச் சண்டையில் -தள்ளியே
வீழ்ந்தனர் மாப்படை வீரர்; சிலரவர்
தாழ்விடம் ஓட விரைந்திட -வாழ்வோர்
விரைந்தே மறவரும் ஓடக் கரையில்
இருந்தார் இனத்தவர் மூன்று -விரைந்துத்
துறைகளைப் பற்றி ஒரேப்சேப் அழித்தார்
கறையார் மறவர்த் தலைவர் -கறையார்
இருவர்த் தலையை இனத்தார் அறுத்து
இருவர்த் தலையை கிதியன் -கரத்தில்
கொடுக்க இனத்தார் வருகைப் புரிந்தார்
நடுயிர வில்சீர் இனம்
நீதி கலி 21
சுக்கோத் மற்றும் பெனுவேல் ஊரார்க்கு புத்தி புகட்டுவேன் என கிதியோன் உரைத்தல்.
மறைந்தனர் சல்முனா சேபா இருவர்
மறவர்த் துரத்தல்; கிதியன் -மறவன்
விடாது இருவரை கிட்டித் துரத்த
இடத்தில் விடாய்த்தார் இனமோ -இனத்துளே
எப்ரயிம் வாதம்: கிதியோன் தலைவரே
எப்ரயிம் எம்மை எதற்கென -அப்போ
தழைக்கா விடுத்தீர் தலைவரே என்று
அழைக்கா தறுத்தீர் தலையோ -தழையது
எம்வளம் உம்மின் அறுவடைப் பின்வளம்
அம்மான் திருவே அழையிலை -எம்மான்
எனவும் அழைக்கா தறுத்தீர் தலைகள்
எனவே அமர்ந்தார் இனத்தார் -இனமே
இரவில் அயர்ந்த மறவர்க் குடியூண்
கரம்தா யெனவே; மிதியன் -தலையுன்
கரத்தில் உளதோ எமையாள் அரசோ
தரவே மறுத்தவோர் ஊரார் -அரமது
ஊர்ப்பெயர் சுக்கோத் இரும்வரும் போதுநான்
ஊர்மூப் பருக்கு மதிவர -ஊர்வெளி
முட்களால் தேய்ப்பேன்; பெனுவேல் தருவரே
நட்டார் எனவவன் கேட்டனன் -நட்டார்
பெனுவேற் றலைவர் தராது மறுக்க
பெனுவேல் சிறப்பு இருக்கும் -பெனுவேல்
உயர்ந்தவிக் கோபுரம் நான்வந் திடிப்பேன்
உயிரூண் தராதவர் பார்
நீதி கலி 22
சேபா சல்முனாவைப் பிடித்து வந்து சுக்கோத் பெனுவேல் இரண்டிற்கும் புத்தி புகட்டுதல்
ஊருள் மறைந்தவன் சல்முனா சேபவும்
வீரரை வீழ்த்திக் கொணர்ந்தனன் -சீராண்
பெனுவேல் உயர்ந்தவக் கோபுரம் தன்னை
மனிதன் இடித்தான் விரைந்து -இனிதிலா
சுக்கோத் திசையில் ஒருவன் வரவவன்
சுக்கோத் மனிதரில் மூப்பரை -சுக்கோத்
மனிதனைக் கொண்டே யெழுதி அவரை
மனிதரை விட்டுக் கொணர்ந்து -இனிதிலா
சுக்கோத் இனத்தினர் மூப்பர் தலைவரே
சுக்கோத் கரத்தில் மறவராம் -தக்கார்
பசிக்காய் விழைந்துநான் கேட்டேன் திருவூண்
பசித்தார் உணவிடார் வீணர் -வசையிலே
சொல்படி ஆங்கே வெளிமுள் எடுத்தவன்
சொல்படி முட்களால் தேய்த்தனன் -சொல்படி
செய்தான் இருவூர் இனத்தார் மதிவர
மெய்யாண்; விடிந்த திரவு
நீதி கலி 23
தோபார் ஊராரை என்ன செய்தீர்கள் எனக் கேட்டலும் சேபா சல்முனாவைக் கிதியோன் கொல்லுதலும்.
மறைந்தவர்த் தோபார் சிறப்பூர் அதிலே
மறையக் கொலைசெய் தவரோ -மறவர்
அரசர்க் குலவோர் எனவிரு வர்ச்சொல்
அரசெனச் சொன்னார் அரசு -வரையில்
அரசரின் சொல்கேள் இருவரே அம்மாண்
அரசர்க் குலமென நீர்சொல் -அரசரே
ஏனோ கொலையாய்ப் புரிந்தீர் எனவவன்
மானமில் ஈரிவர்க் கொல்லவோ -ஈனவர்
கொல்லா விடுத்திருப் பேனே மறையவர்
கொல்லா திருந்தால்; இருவரை -கொல்ல
பணித்தனன் சீராண் மகனவன் நோக்கி
பணித்தோன் சிறுவய தோனே -பணியது
கொல்ல மகனவன் யெத்தேர் பணித்திட
கொல்லவே அஞ்சினான் சிற்றவன் -கொல்லும்
உமதின் திருக்கை யதினால் எனக்கேள்
அமர்ந்தோர்த் தலையை யெடுத்து
நீதி கலி 24
கிதியோனை அரசனாக்க இசுரேல் இனத்தார் கேட்டலும் அவன் அதற்கு மறுத்து பொன்னினால் ஒரு ஏபோத்தை செய்ய, அதை வழிபட்டனர் இசுரேலர்.
இதைக்காண் இசுரேல் இனத்தார் திருவே
இதுவே நியதி எமைநீர் -இதுபோல்
நிதமும் அரசனாய் ஆளும் வழியார்
நிதமும் அரசராய் ஆண்டு -எதுசொல்
அரசனா யானோ வழியோ அரசில்
அரசர் திருவே இனமே -அரசராய்
நானோ வழியோ உமக்கிலை என்றனன்
வானார் அரசரென் றான்திரு -மானார்
ஒருசெயல் செய்யும் மிதியான் இனத்தார்
இருந்தக் கடுக்கண் தருவீர் -கரத்தில்
எழுநூ றெனவெடை பொன்வர மற்ற
பழம்பொன் சிறப்பும் தவிர்த்து -பழம்பொன்
கடுக்கண் பசும்பொன் அதைமகன் கொண்டு
வடித்தனன் ஏபோத் சிறப்பாய் -வடித்ததால்
சீரெனப் பற்றினார் வீணராய் மக்களும்
வீர மெனச்சிலை யாமதை -சீரிலாப்
பொன்னின் எபோத்தது கண்ணி; கிதியனும்
அன்னான் வழியும் சிலையென -வன்னாய்
புறம்போய் வழியார் விடுத்தார் தலைவர்
அறத்தை சினங்கொள் பிழன்று -அறனிலார்
ஏழாம் வதைத்தவர் ஆண்டுகள் கீதியோன்
வேழாண் விடுத்தே இறைவனார் -ஏழிலே
மீட்டார் இனத்தவர் நாற்பது ஆண்டுகள்
நாட்டார் இருந்தார் அமைந்து
நீதி கலி 25
அபிமெலெக்கின் பிறப்பும் இசுரேலர் மீண்டும் வழிதப்பி போதலும்
இருந்தான் கிதியன் தலைவனாய் ஆங்கே
கரம்தனை பற்றப் பலபெண் -வரவும்
கிதியன் பலபெண் மணஞ்செய ஆங்கே
கிதியன் வழியார் பலராம் -கிதியன்
மகனார் இலக்கம் எழுபது பேராம்
மகனொரு வேலையாள் பெற்று -மகனை
அபிமெலெக் என்றே பெயரிட சீகேம்
அபிமெலெக் ஊராம் சிறப்பே -அபிமெலெக்
தந்தை மரித்தான் இனமோ கிதியனின்
விந்தைச் செயலை மறந்தனர் -அந்தோ
இசுரேல் இனத்தார் இறையை விடுத்து
திசையில் பகால்பெரித் வீணை -இசுரேல்
தனக்கென சீரெனக் கொண்டே இறைவன்
இனத்தார் வழிவிட் டனர்
நீதி கலி 26
அபிமெலெக்கு சீகேமில் அரசனாகி ஆட்சி புரிதல்.
யெருபகால் வேலையாள் பிள்ளை சிகேமில்
இருந்தான் அபிமெலேக்; சென்றான் -இரும்தமர்
தாயின் சகோதரர் கேட்கவே: என்திருத்
தாயின் தகப்பனின் வீடிது -தாயோர்
யெருபகால் மைந்தர் எழுபதார் ஆள
இரும்சிகேம் தன்னிற் கதுவோ -ஒருமகன்
ஆள்வது நன்றோ செவியிலே ஓதிடும்
ஆள்திரு உம்மின் தமனென -ஆள்சிறுத்
தாயின் சகோதரம் சென்று உரைத்திட
வேயூர் சிகேமில் உரைத்திட -வேயூர்
சிகேமியர் உம்சோ தரனெனும் சொல்லால்
சிகேமியர் பற்றிப் பிழற -சிகேமில்
பகால்பெரீத் கோவிலில் வைத்தவக் காசு
முகமலர்ந் தந்தவர் வெள்ளி -மகறெண்
எழுபதாம் தந்தவவ் வெள்ளியின் காசும்
எழுபதே வைத்தனன் வீணர் -வழுவெனப்
பின்செல வீணர் பலரை இருத்தினான்
வன்செய் மகனவன் சீரிலான் -வன்கொலைச்
செய்ய புறப்பட ஒப்ரா தகப்பனில்;
செய்தான் கொலைகள் பிழன்றவன் -மெய்யவர்
ஒப்ரா விலிரும் தகப்பனின் வீட்டிலே
தப்பாய்க் கொலைதனைச் செய்தனன் -அப்போ
வெளியிலே வேலையாய்ச் சென்ற இளையோன்
வெளியிலே தப்பினான் சீராண் -வெளியே
எழுபதும் கொல்ல சிகேம்வாழ்ப் பெரியோர்
எழும்பித் திருவென மில்லோ -வழுநகர்ச்
சேர்த்து அரசனாய் ஆக்கினார் பாதகன்
நேர்மகன் கேட்டான் அதை
நீதி கலி 27
யோதாமின் சாபம்
வாழ்ச்சொல் கெரிசீம் மலைதனில் ஏறியே
வாழ்மகன் சொன்னான் கெடுமொழி -வாழ்வோர்
விடுகதை போட்டு உரைத்தனன் சீகேம்
நடுவாழ் பவர்செவி கேள்மின் -இடத்தின்
மரங்கள் அரசனைத் தேடி ஒலிவ
மரத்தை அரசனாய்க் கோர -மரமதோ
விண்மண் புகழும் சிறப்புநெய் விட்டுநான்
மண்ணில் அரசனா போம்கரை -மண்ணின்
மரங்கள் அரசனைத் தேடியே அத்தி
மரத்தை அரசனாய்க் கோர -மரமோ
சுவைநற் கனிவிடுத் திட்டே அரசோ?
சுவைக்கனி போதும் எனக்கு -அவையார்
மரங்கள் அரசனாய்க் கோரி திராட்சை
மரமில் செடியே எனினும் -வருவாய்
எனவே, சுவைமிகுச் சாறு விடுத்தோ?
எனக்கிது போதும் எனவே -இனிதில்
மரங்கள் அரசனிலா சோர்ந்து கிடக்க
மரமில் செடிமுள் தனைக்கேள் -வருவாய்
எனவும் நிழல்தனில் யாவரும் வாரும்
எனதின் எனவுரைத் தேமுள் -எனநறு
வாரா மரமதை முட்செடி விட்டதை
வாரா நெடுமரம் தீயிடும் -சீராம்
எனநெரு முள்போல் அபிமெலெக் ஆக்கி
மனம்படி செய்தீர் அரசாய் -இனத்தான்
யெருபகால் போர்செய்தார் தன்னுயிர் துச்சம்;
இருக்கும் கறையரோ கொன்றீர் -யெருபகால்
தன்னின் எழுபது மக்கள் கொலைப்புரி
வன்னாண் அரசனாய் செய்தனை -வன்னாண்
ஒரேயொருக் கல்லில் கொலையாய்ப் புரிந்த
கரம்செய் மகனை அரசன் -சிரம்தாழ்க்
கறையே யெருபகாற் செய்தது சீறென்
கறையோர் மகிழ இருப்பீர் -சிறப்பே
மகிழும் சகோதரன் தன்னில் கறையோர்
மகிழவும் மில்கறை இல்லென் -அகத்தின்
கறையே எனவுணர்ந் தீவரும் வேக
கறையோர் இருபுறம் செத்து -கறையார்
கெடுசொல் உரைத்தவன் சோதரன் அஞ்சி
விடுத்தவன் தப்பினான் ஓடி -விடுத்தவன்
பேயேர் விரைந்தவன் சென்று குடியிருந்தான்
வாயின் உரையும் நடந்து
நீதி கலி 28
யோதாமின் சாபம் நிறைவேறத் தொடங்குதல்
கறையோர் இருபுறம் சாகக் கெடுசொல்
கறையார்க் குரைப்படி ஆங்கே -கறையரை
தேவன் விடுத்தனர் மூன்றா வதாண்டுபின்
சேவியா வன்செயல் செய்யவே -தேவன்
குருதிக் கொலையை விடாதுப் பழியும்
குருதிக் கெனவியன் நீதி -அருகிப்
பலித்துக் கொடுமை; பலித்துக் கெடுசொல்
கொலையாய் எழுபது மக்கள் -வலிதே
அழித்த அபிமெலெக் மேலும் கறையார்
அழிக்க அளித்தவர் மேலும் -அழித்தனர்
சீகேம் மனிதர் பதிவாய்த் திருடிட
சீகேம் மலைகளின் மேலவர் -தாகமாய்
அவ்வழிச் சென்றவர்க் கொள்ளை யிடவவர்
அவ்வூர் அரச னிடம்
நீதி கலி 29
காகால் செய்த சூழ்ச்சி
ஏபேத் மகன்காகால் சீகேமுள் மூப்பரை
ஏபேத் மகன்வஞ்ச னையாக -ஏபெத்
மகனவன் கூடிக் குடித்தவர்க் கூத்து
அகத்திலே வஞ்சனை செய்தார் -அகத்தில்
குடித்துப் புசித்து, அபிமெலேக்கை மூப்பர்
குடிவெறி தன்னில் கெடுசொல் -கடிதாய்
உரைக்க அபிமெலேக்கு யாரோ? சிகெமோ?
சிரந்தாழ்த்த மேனாளோ கீழ்தான் -சிரந்தவன்
சீகேம் தகப்பனாம் ஏமோர் மனிதரே
சீகேம் சிரம்தாழ்த் திடுவரே -சீகேம்
திருவாண் உடனிருந் தாலே கறையாண்
இருக்கா தழிப்பேன் சிறந்து -இருப்பவர்
உன்படை பேர்செய்து வாநீ எனவவன்
வன்னரசு கேட்க அனுப்பினான் -வன்வேலை
சொன்னான் பதிவிரும் சீகேம் கெடுத்தனன்
வன்னாண் எபேத்தின் மகனவன் -வன்னவர்
சீகேம் நகரவாயில் தன்னிலே காகாலும்
சீகேம் திருசேபூல் நின்றிருக்க -சீகேம்
எதிராய் அபிமெலேக்கின் வன்படைக் கண்டான்
எதிரே வரும்படை என்று -அதுவோ
கிழக்கு வெளுக்க மலையின் நிழலும்
வழக்கம்; அதையேன் படையோ -வழக்கோ
எனவஞ்சத் தேவையோ; கண்ணால் மறவர்
இனவழி வந்தார் கவிந்து
நீதி கலி 30
காகாலை அபிமெலெக் முறியடித்தல்
நான்கு வழியாய்ப் படைவர காகலோ
நான்குப் படைக்காண் உரைத்திட -ஏன்உன்
உரைப்போல் அபிமெலெக் தாழ்த்துவர் யாரோ
உரைத்தனை செய்திடு போர்தான் -வரையின்
நகரியின் வாயில் தனில்எதிர் காகல்
நகரவர்ச் சேர்ந்தவப் போரில் -நகரிவிட்
டோட முடியா மனிதர் விழுந்தனர்
ஓடினான் காகால் பிரிந்தவன் -ஓடிய
காகா லொடுதமர் சேர்த்தவன் சேபுலோ
காகால் நகரில் இராபடி -சீகெமை
விட்டு விரட்ட அடுத்தநாள் மக்களோ
விட்டுவந் தார்வயல் வேலையாய் -விட்டதைக்
கேட்ட அபிமெலேக் மூன்று படையென
நாட்டார் புறப்படுங் கண்டவன் -நாட்டார்
எழும்பி, அவர்களை வெட்டிடும் என்றே
விழுந்து, அவர்களை வெட்ட -வழுவவர்
அந்நாள் முழுதும் நகர்மேல் விழுந்தனர்
அந்நாள் சிகேமைப் பிடித்தனர் -அந்நாள்
இருந்தவர் கொன்று நகரை இடித்து
கரிக்க விதைத்தனன் உப்பை -கரியெரி
சீகேம் மலையவர்க் கேட்டு பெரித்தெனும்
சீகேம் சிலையினக் கோவிலில் -சீகேம்
மலையவர் போனார்; அதையறிந் தாணோ
மலையிலே கோவிலுள்; சூழ்ந்தான் -மலையிலே
தன்கை அறுத்தனன் கொம்பது; நீர்செயும்
தன்தன் மரமறுச் சூழவே -வன்னவர்
கோவில் அரணை எரித்ததால் செத்தனர்
கோவிலுள் ஆயிரம் பேர்
நீதி கலி 31
தேபேசைப் போர்செய்து பிடிக்கப்போய் அபிமெலெக் மரணம் அடைதல்.
பின்னவன் தேபெசு சென்று பிடிக்கபோய்
அன்னவர் தேபெசு கிட்டிரும் -கன்மலை
ஒன்றில் புகவும் கதவை எரித்திட
வன்னான் வரையரு காய்ச்செல -கன்னி
மலைமேல் இருந்த ஒருபெண் குறியாய்
அலர்வரும் சீர்தலை மேலே -மலராள்
எரிந்தனள் கல்லுரல் தன்னின் பகுதி
சிரமேற் படவும் உடைய -மரமாய்
அருகே இருந்ததன் ஆயுத மேந்து,
சிரமென் உடைந்தது; பெண்ணால் -மரித்தான்
பெயர்வரா தேநீ உருவிடக் குத்து
பெயர்வாள் உடனே செருகு -இயல்பிலா
தப்படி ஆயுத மேந்துவோன் குத்தினான்,
அப்படிச் செத்தான் அபிமெலெக் -தப்பது
சீர்தமர்க் கொன்றதால் தேவன் திருப்பினார்
நேர்சீர் வழுவா தவரவர் -சீர்க்கெடு
சீகேம் மனிதரின் பாவச் செயலதாக்
சீகேம் நகரார் அழிந்தனர் -சீகேம்
அரசனும் செத்தான் கெடுமொழி யோதாம்
உரைத்தவை வந்து பலித்து
நீதி கலி 32
மற்றவர் படலம்
தோலா, யாவீர் எனும் நீதித்தலைவர்கள்
அபிமெலெக் பின்வந்த தோலா இசக்கார்
சபையினன் சீராய் இசுரேல் -சபைக்கவன்
செய்தானே நீதி தனைச்சிறந் தங்கவன்
மெய்ச்செயல் ஏதில் பதிவிலே -மெய்யாம்
இருபத்தி மூன்றாண்டு சீராணும் செய்தான்
திருமுன் நியாயம் பகன்றான் -திருவவன்
சாமீர் தனில்மரித்தான் எப்ராயிம் தேசத்தில்
சாமீர் தனிலடக்கம் செய்தனர் -தேமா
அவன்பின் கிலேயாத் மனிதனாம் யாவீர்
அவனும் இசுரேல் நடத்த -அவனின்சீர்
ஏறெனப் பிள்ளைகள் முப்பதே; அங்கவர்
ஏறக் கழுதை மரிகளாம் -ஏறு
சபையோன் கிலேயத்தின் யாவீர் சிறப்பாண்
சபையினன் சீராய் இசுரேல் -சபைக்கவன்
செய்தானே நீதி தனைச்சிறந் தங்கவன்
மெய்ச்செயல் ஏதில் பதிவிலே -மெய்யவன்
யாவீர் மரித்ததூஉம் காமோனில் சீருடல்
யாவீர் அடக்கம் புரிந்தனர் -யாவீர்
பெயரால் வழங்கிய முப்பது ஊர்கள்
பெயர்விளங்க நின்றன சீர்
நீதி கலி 33
பெலிசுதரிடம் இனத்தாரை கர்த்தர் ஒப்புக்கொடுத்தல்
இனத்தார் வழுவிப் பிழன்றார் திரும்ப
இனத்தார் இருக்கும் சிலைகள் -மனதில்
எதுவந்த தோயவைப் பின்சென்று பல்லோர்
வதைக்க பெலிசுதர்க் கையில் -வதையாய்
பெலிசுதர் அம்மோ னியரும் வதைக்க
வலிமை பெறவும் வலியால் -வலிமையிழந்
தோரென கண்ணோட்ட மின்றித் தவித்தனர்
யாரும் இறைமன்றா டாதுவிட -சீரிலார்
அவ்வாண்டு பின்னே பதினெட்டு ஆண்டுகள்
அவ்வாதை செய்ய கிலேயாத்தின் -அவ்வகை
ஒப்புக் கொடுத்ததாஅல் வாதை வரவுமே
தப்பென் றுணர்ந்தார் இனத்தவர் -தப்பார்
வலியாராம் அம்மோ னியரும் வதைக்க
வலிமை சிறுத்தோர் படையை -வலியோர்
நதிதாண்டி வந்தார் எபிராயிம் யூதா
நதிக்கரை பென்யமீனில் சேர்ந்து -வதைநீங்க
இப்போது கண்ணோட்டம் தாரும் இறையென
தப்பார் இறைஞ்ச இறையவர் -தப்பார்
சிலைகளை நாடும் கறையே விடுத்தேன்
சிலைவழி பாடுசெய்வோர்க் கையை -சிலையா!
அடடா இறையே பிழன்றோம் இனமே
நடந்த கறையை விடுத்து -நடப்போம்
இனிமேல் வழியும தென்று இனத்தார்
நனியவர் தன்னைப் பணிவோம் -இனியாம்;
நனியவர் தன்னைப் பணிவதைக் கண்டு
நனியவர் கண்ணோட்டம் கொண்டார் -நனியினம்
கூடிப் படையாய் மிசுபா எதிரியரும்
கூட கிலேயாத் படை
நீதி கலி 34
யெப்தா படலம்
யெப்தா எனும் நீதித்தலைவன்
அம்மோ னியரெதிர்ச் செல்வொன் முதற்றலை
அம்மோ னியரெதிர்ச் சென்றானே -அம்மாண்
சிறப்பாணாம் யெப்தா கிலேயாத் மகனாம்
சிறப்பாண் விரட்டினர் விட்டு -கறைமகள்
தாயவள் சோரப்பெண் என்றே கிலேயாத்தின்
சேயவனை விட்(டு)விரட்ட தொப்பெனும் -வேய
திருத்தேசம் வாழ்ந்தான் மறவனும் போர்செய்
திருந்தான் சிலவீணர்ச் சேர்த்து -திருவவன்
யெப்தாவை மக்கள் கிலெயாத் திலிருந்து
யெப்தாவே அம்மோன் எதிரியர் -தப்பாமல்
வந்தெமக்குப் போரிட்டுத் தாருமென யெப்தாவோ
வந்திடச் செய்தீர் விரட்டியே -இந்தவூர்
ஏன்வந்தீர் என்னிடம் விட்டுவிரட் டிட்டமகன்
ஏன்யெதிரி போரென ஆபத்து -ஏன்நீர்
சிறந்தநாள் ஒன்றிற்கும் என்னை அழையா
மறந்தீரே என்றுரைத்தான் நேராய் -மறவனே
நம்மிங்கு வந்ததே நீர்வந்து சீர்தலையாய்
எம்மை விடுவித்தால் எம்மேலே -நும்சீர்த்
தலைவனாஅம் என்றுரைக்க, மெய்யோ இதுசொல்
தலைவனாஅய் ஆக்குவீரோ நீரும் -அலர்வதை
நீக்கி விடுவித்தப் பின்னர் தலையாஅய்
நீக்கிய உம்மையஅம் ஆக்கிடாது -வாக்கிதை
மாற்றினால் தேவனே நம்மிடை நின்றுநம்
மாற்றிய வாக்கையவர்த் தீர்த்திடட்டும் -மாறா
மிசுபா விரைந்தார்; திருமுன்னே யெப்தா
மிசுபா இருக்கும் நனியார் -மிசுபா
வினத்தாரும் கேட்கப் பகன்றனன் சொல்லை
இனத்தார் செவிகேட்க சீர்ச்சொல் -இனத்தவர்
யெப்தாவை சீரார் தளபதியாய் வைத்தனர்
யெப்தா எதிரி அரசிற்கு -அப்போது
தூதனுப்பிச் சொன்னான்; இடையே பகையிலை
ஏதோ படைவந்தீர் என்றிட -மேதவனின்
தூதரிடம் அவ்வாண்: எகிப்தினின் வந்தயினம்
போது எமதுநிலம் கைப்பற்றி -வாதையாய்
அர்னோன் முதல்யாபோக் என்நிலம் தாருமே
கர்த்தரினம் சீரமைதி யாய்த்திரு -கர்த்தாவே!
எம்மினம் அம்மோன் இனத்தார் நிலமெதும்
அம்மாண் உரைப்பொய் எடுத்திலை -அம்மோனே
எம்மிறைத் தந்த நிலமட்டும் கையெடுத்தோம்
உம்மிறை தந்தால்மாட் டீரோசீர்? -உம்நிலம்
எம்மினம் வந்தோம் வனஞ்சுற்றி; உம்நிலம்
எம்மினம் கொள்ளவில்லை சீராணே -எம்மினம்
பாலாக் சிகோன்ஓக்கின் போரால் அழன்றதால்
சீலார் முறியடித்தோம் என்றனன் -சீலவர்
வாழ்நிலம் ஏமோரி சொத்தே இசுரெலினம்
வாழ்ந்தனர் கையெடுத்து என்றும்யாம் -வாழ்ந்திடவே
உம்நிலம் கையெடுக்க வில்லையென நீரறிய
எம்முரை சீரார் படித்திட -அம்மான்
உரைத்தவர் சொல்லையவன் கேளாதே அங்கு
விரைந்துப் படையனுப்ப ஆவித் -திருவினார்
யெப்தாமேல் வந்திட அம்மோன் எதிராக
யெப்தா விரைந்தனன் சீர்
நீதி கலி 35
யெப்தாவின் பொருத்தனையும் அதை அவன் நிறைவேற்றுதலும்
பொருத்தனைச் செய்தனன் சீரார்முன் யெப்தா
பொருத்தனை ஏதெனின் வெற்றி -அருளினால்
கர்த்தாவே நான்வர சீர்ப்பலியாய் என்வீட்டின்
கர்த்தா வருமுயிர் தந்திடுவேன் -கர்த்தர்
பொருத்தனை சொல்லா(து) எவருக்கும் சென்றான்
பொருத்தனை செய்தவன் வெற்றி -அருளப்
படவும் திரும்பிட யெப்தா மகளோ
நடந்துவந்தாள் யாழ்மீட்டி முன்னே -கடந்தவன்
வெற்றிபெற்று வந்தாலும் ஆடையைக் கீறினான்
வெற்றியிது வாயின் கசப்பிது -நெற்றி
அழகி ஒரேபெண்ணை தந்திடத்தான் இந்த
அழுகையின் வெற்றியோ கேள்மின் -அழையவன்
ஆபிரகாம் வந்தான் பலியிட சீர்கேட்டு
ஆபிரகா மிற்கிறை தந்தாரே -ஆபிரகாம்
ஆங்கே பலியிட ஓராடு; ஆனாலும்
தாங்கா வலித்திருக் கும்நேரே -நீங்காது
என்பெண்ணே என்பெண்ணே என்றே புலம்பிட
என்செல்வம் தன்னைப் பலியிட -என்வெற்றி
போனதே இங்கு கசப்பாக; பெண்ணவள்
ஆனது விட்டடுத்து பார்சீரோய் -ஆனாலும்
பார்தனில் ஆணறியா பெண்ணவள் கேட்டனள்
பார்தனில் ஆணறியா பெண்ணிற்கு -பார்பார்த்து
துக்கித்து தோழியர் சேர்ந்துபின் வந்திட
தக்கயிரு மாதங்கள் தாருமே -தக்கபின்
சொல்படி பின்செய்யும் சீரார்க்கு நேர்பலி
சொல்படி விட்டனுப்பச் சென்றனள் -சொல்படி
வந்ததும் சீராள் பலியிட்டான் அவ்வகை
எந்நாளும் பெண்டிர்துக் கித்திட -அந்நாளில்
பெண்டிர் மலைமேலே சென்றங்கு வீரமங்கை
பெண்ணிற்காய் துக்கித்து நாலுநாள் -பெண்டிர்
வருவது ஆங்கே இசுரெலில் துக்கத்
திருநாளாய் ஆனது கேள்
நீதி கலி 36
எப்பிராயீமர் யெப்தாவோடு போரிடுதல்
எப்பிராயீம் மாந்தரோ யெப்தா விடம்வந்து
தப்பாக ஏனோ அழைக்காது -எப்பிராயீம்
விட்டீர் எனக்கேட்க யெப்தா வழக்கது
நட்டார் செயவாரும் சொல்தனை -நட்டாரே
விட்டீர்கை நட்டாரே வாராது நீரெனக்கு
விட்டேன் எதிரி அழிக்கவே -இட்ட
உயிர்க்கை பிடித்துத் தனியாய்; திருவோ
உயிருள் ளவர்கொடுத்தார் ஒப்பு -அயலவனாய்
இப்போதோ தப்பாண் எனவந்தீர் போருக்கு
தப்பிது செல்லும் வழியாரே -அப்போது
சொல்லால் கிலெயாத் மனிதரைக் கூட்டியவன்
வல்லினம் மேற்போர் புரிந்தனன் -வல்லார்
முறியடித்தார் எப்பிராயீம் சொல்லினத்தை சீரும்
முறியடித்து பின்னிட சென்று -துறைகளை
கீலெயாத் மக்கள் பிடித்திட, ஓடிப்போம்
ஏலாதார் பேசும் மொழியாலே -ஏலாதார்
ஆள்பிடித்துக் ஆள்கேட்பர் எப்பிராயீம்? சொல்லும்நீர்
ஆள்சொல் ஷிபோலேத் எனவிங்கு -ஆள்சொல்வர்
ஆள்சொல் சிபோலேத்; எபிராயிம் வல்லார்க்கு
ஆள்மொழியில் இல்லையே ஷிஎழுத்து -ஆள்வல்லால்
நாற்பத் திரண்டா யிரம்பேர் விழுந்தனர்
நாற்றார் வழக்கை அறியிலா -மேற்றார்
வழக்குச்சொல் காரணி வெட்டினர் ஆட்கள்
வழக்காய் புரிந்த கறையில் -வழக்கை
நடத்தினான் யெப்தா இசுரெலா றாண்டு
நடத்தியப் பின்மரித்தான் ஆங்கே -இடமாம்
கிலெயாத்தின் சீர்நகர் தன்னில் அடக்கம்
கிலெயாத் தியர்செய்தார் அங்கு
நீதி கலி 37
இப்சான், ஏலோன், அப்தோன் எனும் நீதித்தலைவர்கள்
யெப்தா மரித்தபின் பெத்லகேம் ஊரானாம்
இப்சான் இசுரெல் நடத்திட -முப்பது
பிள்ளைகள் முப்பது பெண்களென பெண்கொடுத்து
பிள்ளைகட்கு பெண்ணெடுத்தான் சீர்மகன் -கிள்ளையார்
ஏழாண்டு சீரார் நடத்தினான் இப்சானும்
வேழாண்கள் பல்லூ ரிலிருந்து -வேழார்
மணக்க மருமகள்கள் கொண்டு பலரை
மணவுறவால் சேர்த்தான் சிறந்து -மணவாளன்
இப்சான் மரித்து, பெதலெகேமில் செய்தனர்
இப்சான் அடக்கம் புரிந்தார்சீர் -இப்சான்பின்
ஏலோன் செபுலோன் இனத்தோன் நடத்திட
ஏலோன் வருடங்கள் பத்தாமே -சீலவன்
ஏலோன்பின் இல்லேல் மகனாம் பிரத்தோனாம்
சீலாண் பெயரது அப்தோனே -சீலாண்
வழியார் எழுபது; நாற்பது பிள்ளை
வழிப்பெயரர் முப்பது பேராம் -விழைமகன்
அப்தோன் வழியவர் ஏற எழுபது
தப்பில் கழுதைகள் நின்றிட -அப்தோன்
இனத்தை நடத்தினான் எட்டாண்டு; பின்னர்
இனத்தான் மரித்தான் திருவும் -இனத்தவன்
அப்தோன் மரிக்க எபிரயீம் நாட்டிலே
அப்தோ திருவூர் பிரத்தொனில் -அப்தோன்
அடக்கம் புரிந்தனர் ஆங்கே அமலெக்
நடந்த இடமா மது
நீதி கலி 38
சிம்சோன் படலம்
சிம்சோனின் வரலாறு
சிம்சோனின் தாய்க்கு தேவ தூதனானவர் தரிசனம் ஆகுதல்
இசுரெலினம் போனார் வழுவியே வீணர்
இசுரெலின பொல்லாப்பைக் கண்டு -இசுரெலினம்
தன்னை பெலித்தரின் கையிலே நாற்பது
வன்னாண்டு ஒப்புக் கொடுத்தாரே -அன்னவன்
தாணின சோராவூர் சேரந்த மாந்தனாம்
தாணின் மனோவா மனைவியவள் -மாணார்
திருப்பெண்ணோ பிள்ளைப் பெறாத மலடி
திருவாண் திருவே தரிப்பாய் -திருவாண்
பெறும்வரை சாறோ ஒதுக்கியதோ உண்ணா
சிறப்பாய் இருப்பாய்நீ நோன்பு -மறந்தும்
சிறப்பாண் தலைமேல் மயிரதை வெட்டாய்
சிறப்பாண் நசரெயன் ஆக -சிறப்பாண்
இசுரெலை மீட்பான் பெலித்தரின் கைக்கு
இசுரெலின் தேவன் உரைக்க -திசையில்
திருப்பெண் கணவனிடம் ஓடி: திருவின்
திருவார் சிறப்புறக் கண்டேன் -திருவின்
முகமோ வியனாய் இருந்ததே; வந்தீர்
அகமிடம் கேட்கா தவள்யான் -இகத்தே
சிறப்பாண் பெறுவாய் தலைமயிர் வெட்டாய்
சிறப்பாண் நசரெயன் ஆக -சிறப்பாண்
இசுரெலை மீட்பான் பெலித்தரின் கைக்கு
இசுரெலின் பெண்ணாள் உரைத்து
நீதி கலி 39
மனோவா மறுபடியும் வந்து என்ன செய்யவேண்டும் என்று உரைத்திட மன்றாட்டும் தேவதூதனாவர் மீண்டும் வருதலும்.
மனோவா திருவே அனுப்பிய சீரார்
இனியும் ஒருமுறை வந்து -நனிமகன்
தன்னை வளர்க்கும் முறைகளை எங்களுக்கு
சொன்னால் நலமென் றுரைத்திட -சொன்ன
மனோவாவின் மன்றாட்டை கேட்டார் இறைவன்
மனோவா மனையாள் களத்தில் -மனோவா
இலையங்கு; சீர்வர பெண்ணொடி வந்தார்
மலைத்தவர் என்றறி வித்தாள் -மலைத்து
விரைந்தவன் வந்தான் மனோவா களத்தில்
இருந்தவர்க் கண்டுப் பகன்றான் -திருவே
மனையா ளிடம்பே சியசீரார் நீரோ
எனக்கூறும் என்றான் மனோவா -இனத்தவள்கேள்
பேசினேன் ஆம்நானே என்றவர் சொல்லிட
பேசியவர்க் கேட்டான் முறைகளை -பேசியவர்
சொன்னார் மகனவன் பெற்றவள் தீருமட்டும்
வன்சாறோ தீட்டோ விலக்கிடு -நன்னவரே
ஊன்சமைத்து வந்திடுவோம் சாப்பிடும் என்றனன்
ஊன்தந்தால் சாப்பிட மாட்டேன்நான் -ஏன்நீயும்
சீர்ப்பலி கர்த்தருக்கே என்றாலும் ஊன்சமைத்து
சீர்ப்பலியாய்த் தந்தார் சிறந்தங்கு -சீராண்
மனோவா திருவை: திருப்பெயர் சொல்லும்
இனமகன் பேற்றில் திருவை -இனமுன்
இனத்தவன் மேன்மை செயவே திருவோ
மனிதா பெயரும் எதற்கு -மனிதா
பெயர்வியன் என்பதே என்றார் திருவும்
இயலில் வியனது கண்டார் -வியனார்
பலியின் எரிதீ தனில்மேல் வியனாய்
பலித்தீ மறைந்தார் மறையார் -பலித்தீ
வியங்காண் மனோவா அதிர்ந்தான் திருவே
வியனார் அவரை கறையார் -இயல்பில்
திருக்காண் மரிப்போம் உரைக்க, மனைவி
திருநமை வாழவிட் டாரே -திருயாம்
மரிக்கவே வேண்டுமெனில் நம்கை கொடுத்தத்
திருப்பலி சீரார் எடுத்தார் -திருவின்
திருச்சித்தம் ஈதே திருவாழ்வு வாழ்ந்து
திருவாண் பெறுவோம் சிறந்து
நீதி கலி 40
சிம்சோன் பிறந்து பெலிஸ்தியப் பெண்ணை மணமுடிக்கச் செல்லுதல்
திருப்பெண் திருவாணைப் பெற்றவள் சிம்சோன்
திருப்பெயர் இட்டனள் சீராண் -திருவும்
வளர்ந்தான் எசுதோவேல் தோலா இடையே
அளித்தவர் ஆவியால் ஏவ -களித்தே
பெலித்தர் திருநாட்டை ஆண்டபோது சீராண்
பெலித்தர் நகரில் ஒருபெண் -வலிந்து
மணமுடிப்பீர் என்றே உரைத்தனன்; பெற்றோர்
மணமுடிப்போ சீரில் குலத்தில் -அணங்காம்
அவளே எனக்கு மணமுடியும் என்றான்
அவளழகில் காமமாய் நின்றான் -அவளை
மணமுடிக்கக் கேட்க வருகைப் புரிந்தார்
மணமகள் வாழும் நகர்க்கு -மணமகன்
சிம்சோன் வழியில் பிரிந்தவன் சென்றனன்
சிம்சோன் வழியிலே சிங்கத்தின் -அம்குட்டி
சீறி வரவும் திருவாவி மேலிறிங்க
கீறியதைப் போட்டானே கையாலே -கீறி
அதையவன் பெற்றோர்க்குச் சொல்லவில்லை ஆங்கே
இதுதெரியாப் போனார் மணவூர் -பதிசேர்ந்து
பெண்கண்டு பேசிவிட்டுச் சென்றாரே மூவரும்;
பெண்கண்டு நாட்கள் உருண்டோட -பெண்ணவளைக்
காண அலைந்தத் திருக்கண்கள் தன்னாலே
காணுவோம் சென்றுநகர் என்றவன் -காணச்செல்
போவோம் மணவூர் எனவுமே பெற்றோரும்
போவோ மெனவந்தார் சீரவர் -ஏவாது
சிம்சோன் வழியில் பிரிந்தவன் சென்றனன்
சிம்சோன் வழியிலே சிங்கவுடல் -அம்மான்காண்
சீறி வருந்தேனீ கண்டோன் எடுத்தான்தேன்
மீறிக் கொடுத்தான் சுவைத்திட -கீறியதேன்
எங்கிருந்து வந்ததெனக் கேளாமல் வன்பசியால்
தங்கியவர் தேனதனைப் பெற்றுசுவை -அங்கிருந்துச்
சென்றானே அவ்வூரில் சேரிளைஞர் சொன்னாரே
இன்செய்யும் இன்விருந்து இங்குநீர் -அன்னாரின்
நல்வழக்கம் அவ்வூரில் இன்விருந்து தந்திடுதல்
நல்லாணும் செய்தானே இன்விருந்து -நல்லாணின்
பக்கம்சேர் பெல்லித்தர் முப்பதுபேர் தோழர்கள்
பக்கத்தில் வைத்தனரே ஊர்
நீதி கலி 41
சிம்சோன் சொன்ன விடுகதையும் அவன் மனைவியின் நச்சரிப்பால் விடையை சொல்லிவிடுதலும்.
விடுகதை சொல்வேன் விருந்துசீர் தோழ
விடுகதை ஈதை விடுவி -விடத்தினம்
ஏழுநாள் உன்டே உமக்கு பகரவும்
ஏழுள் பகன்றால் பரிசென -தோழரே
ஏழுள் பகிரார் பரிசை எனக்குதான்
தோழர் தருவதே சீரது -தோழர்
செவிதனில் கேட்க விடுகதைச் சொன்னான்
செவிகேள் மலைத்தார் அவர்கள் -புவிபலம்
பீறிடும் வாய்விட் டுவந்த தினிப்பெது
கூறும் இதுதான் விடுகதை; -கூறவே
மக்களோ வீணராய் செல்வம் இழந்திட
தக்க திலையே விடையெதும் -தக்கார்
பரிசது முப்பது சீலை யொடாடை;
பரிசதை வெல்லா தவரோ -பரிசாய்
எமக்கிரு செல்வம் கெடுக்கவோ செய்தீர்
அமைந்த விருந்திதோ மாண்பு -அமைந்திலார்ச்
செல்வமும் வீணெனப் போகுமென் றார்க்களர்
சொல்லடி பெண்ணாள் விடுகதை -நல்லாள்
உனக்கவன் சொல்வான் அழகில் மயங்கி
உனையாம் எரிப்போ மிலையேல் -அமைந்தவப்
பெண்ணாள் விடுகதைச் சொல்லும் கணவனே
பெண்ணாள் விடுகதை பெற்றவர் -மண்ணில்
அவர்க்கும் விடுவியா தேனே உனக்கோ
அவர்விடச் சொல்வேன் அதையான்? -அவளழு
தேழுநாள் உண்ணும் பொழுதெலாம் பெண்ணவள்
தோழர் விடுகதை சொல்லுமே -வேழாண்
பகைக்கிறாய் நீயெனை சொல்லா ததாலே
பகையிலை பெற்றார் மறைத்து -இகத்திலே
ஏழுநாள் பெண்ணாள் அழுததைக் கண்டவன்
ஏழாம் விருந்துநாள் சொல்லிட -தோழர்
செவிக்கு மணமகள் சொல்ல அவரோ
புவிதனில் சொன்னார் விடையை -புவியில்
வலிமை விலங்கிலே சிங்கம் பெரிது
நலிதேன் அதுவே இனிப்பு -வலிய
விடுகதை நானும் உரையிலை என்றால்
விடுப்பிரோ ஈதைத் திறந்து -விடுத்தே
திருவினார் ஆவியார் சிம்சொனின் மேலே
திருவும் அசுகலோன் சென்று -இருக்கும்
பெலித்தரில் முப்பதாண் கொன்றவர் ஆடை
பெலித்த ரிடமாய்ப் பரிசு -மலைக்கும்
அழகியோ மாற்றான் மனைவியாய்த் தந்தார்
அழகியை விட்டுத் திருவாண் -வழக்கூர்
நடந்தனன் சென்று; அதுவும் திருச்செய்
அடடா வியனவர் கை
நீதி கலி 42
மனைவியை மாற்றானுக்குத் தந்ததால் சினத்தால் நரிகளைப் பிடித்து, வாலில் தீயை விட்டு, அதனால் அறுவடைக்குக் காத்திருக்கும் வயல்களை எரிய விடுதல்
அறுவடை வந்து நெருங்கவும் சிம்சோன்
அறுவடை நாளதில் வந்தான் -கறையூர்
மணவூர் அடைந்தவன் மாமனிடம் கேட்டான்
மணஞ்செய்த பெண்ணைக் கொடுமின் -அணங்கைப்
பகையாகிப் போனாய் எனநானும் உன்னின்
அகம்பிடித்தத் தோழனுக்குக் கட்டி -அகம்புகுந்தாள்
சீரவள் ஆதலால் நீவரப் பெண்ணாமே
சீரழகு தங்கையவள் மேல்தானே -சீரில்
பெலித்தருக்கு செய்வ தெதும்தகும் என்றே
பெலித்தரின் காட்டில் பிடித்தான் -வலைவீசி
முந்நூறாய் காட்டுநரி தன்னைப் பிடித்தவன்
அந்தவகை வாலில்தீ யிட்டவன் -அந்தூரில்
தீயிட்டு அந்நரிகள் விட்டான் வயல்தனில்
தீயது காட்டுத்தீப் போலங்கு -தீயோத்தீ
தீயால் கதிரது வேக இனமொத்தம்
தீயது யாராலோ கேட்டிட -தீயவன்
திம்னாத்தான் பெண்ணை மணமுடித்த மைந்தனே
திம்னாத்தான் பெண்மனைவி வேறொரு -திம்னாத்தான்
கைப்பிடிக்கச் செய்ததால் வெஞ்சினம் கொண்டவன்
கைப்பிடித் தந்தோ ரெரித்திட -கைப்பிடித்த
என்மனையாள் நீரெரித்த தாலே பழிவாங்க
தன்னின் சினமாறச் சங்காரம் -பின்னவன்
ஏத்தாமூர் கன்மலையின் பொந்தில் வசித்தனன்
ஏத்தாம் அருகேப்போர் போர்
நீதி கலி 43
யூதா மனிதர் சிம்சோனை ஒப்புக்கொடுத்தல்
யூதா மனிதர் எதற்காம் வருகையோ
யூதா மனிதர்க்கு சொன்னார்கள் -ஈதோ
எமதின்கை தன்னிலே சிம்சோன் கொடுத்தால்
இமைப்பொழுதில் போவோம் அழித்து -அவையவர்
மூவா யிரம்பேர் இனயூதா சென்றவர்
ஏவா வருகைத் தருவீரே -ஏவா
வருவேன் எனைநீர் அழிக்கா திருமே
வருகையொன் றேபோதும் சீரே -வரையிலே
கட்டியோனைச் சேர்த்தார் இனயூதா பெல்லித்தர்
கட்டியோனைக் கண்டோரோ ஆர்பரித்து -கிட்டவர
கர்த்தரின் ஆவி யிறங்க கயிரதோ
கர்த்தரால் தீப்பட்ட நூல்போல -கர்த்தரால்
பச்சைக் கழுதை யுடல்கிடக்க கையெடுத்தான்
அச்சமிலான் சீராண் எலும்பினால் -இச்சையாய்
ஆர்பரித்த மக்களில் ஆயிரம்பேர் கொன்றனன்
சீர்மகன் இட்டான் பெயரது -சீர்நகர்
ராமாத்து லேகியென பேரிட்டு பின்நடந்து
ஏமாந்தார் வீழ்க்கிடக்க சென்றனன் -தேமா
அவன்முன்னே நிற்கவும் கூடாதே போக
அவன்குடி நீரில் தவிக்க -புவியாளும்
தேவா இதுவரை பேர்மீட்பு யிட்டீர்சீர்
தேவா நுனித்தோல் அகற்றிலார் -ஈவர்முன்
தாகத்தால் வீழ்ந்திடச் செய்வீரோ என்றுகேட்க
தாகந்தீர் நீர்வந்த தங்குதான் -தாகநீர்
லேகியின் பள்ளம் பிளந்தங்கு நீர்வர
ஏகர்செய் தாரே குடிநீரை -லேகியிடம்
தன்னையோ எந்நக் கொரியென யிட்டனன்
அன்னான் னிருபது ஆண்டு
நீதி கலி 44
காசா நகரில் வேசியின் வீட்டில் உறங்கி நள்ளிரவில் நகரின் கதவைப் பெயர்த்துக்கொண்டு போகுதல்
திருவந்தான் காசா நகரதில் வேசி
திருவந்த செய்தீப்போல் செல்ல -விரைந்து
பெலித்தரும் வந்தனர் காசாவைச் சுற்றி
பெலித்தர் வளைத்தார் பிடிக்க -சலித்துத்
திருவாண் உறங்கிப்பின் நள்ளிரவில் சென்றான்
விரைந்தவன் சீரூர் கதவை -கரம்பெயர்த்து
டொட்டொடொய்ங் என்றே கதவுவர -நட்டமாய்
நட்டவர்க்கு செய்திட்டுப் போய்விட -நட்டத்தை
மக்களோ காலையில் கண்டார் நகர்க்கதவு
தக்கிலாப் பேர்ந்ததை ஊர்மக்கள் -வக்கிலார்
பேசா திருந்தோம் இரவெலாம் சுற்றீயோர்
பேசா திருக்க உறங்கினோமோ -ஏசும்
கறையவன் போனானே தப்பித்து என்றார்
கறையூர்வாழ் மக்கள் சினந்து
நீதி கலி 45
தெலீலாள் சிம்சோனை நச்சரிக்க அவள் அவனின் பலத்தின் இரகசியத்தை பெலித்தருக்கு சொல்லுதல்
அதன்பின் சொரேக்கின் நதிக்கரை தன்னில்
அதன்வளம் கண்டு தெலீலா -ளதிலிரு
மாது; அவனோ மயங்க, வலையது
ஏதும் அறியா தவனவன் -மாது
தெலீலாள் அலட்டிப் பலமுறைக் கேட்டாள்
தெலீலாள்; பகன்றான் திருவோ -இலாத
செயலதை ஏமம் எனச்சொல் கறையார்
வியனாய் விழுந்தார்க் கறையாய் -இயலாய்
அவளிடம் வஞ்சிநீ சொன்னார் பெலித்தர்
அவள்செயல் கேட்டுச் சிறப்பாய் -அவளும்
உரைத்திட, தந்திடு வோம்யாம் ஒருவர்
உரைத்ததை வெள்ளியாம் காசு -உரைத்தவர்
ஆயிரம் வெள்ளி ஒருவர் தருவரே
ஆயிர மாயிரம் பேரது -ஆயினள்
மாது உரைத்திட வஞ்சனை கேட்டனள்
மாதவள் ஏமம் உரைத்திடு -ஏதோ
இருவகைச் சொல்லக் கயிறவைத் தீயால்
எரிநூல் விரியுமாப் போல -வருமூர்
சிறப்பை யடித்து வெளியில் புறம்போய்
அறனும் திரும்பியே வந்து -கறையாய்
இளக்கரித் தென்னைநீ என்றவள் மாது
இளைஞனைச் சேரா தவளும் -இளைஞனோ
ஊடலோ இன்பமாம் என்றே உரைத்தனன்
ஊடெனப் பொய்யதை ஆங்கவன் -வேடனும்
ஒவ்வொரு சொல்முறை பொய்யென மாதவள்
ஒவ்வொரு சொல்முறை ஏன்செயல் -அவ்வழு
என்னையேன் ஏளனஞ் செய்ததேன் பொய்யவா
என்றவள் மூன்று முறைமடந் -தென்னை
கயிறால் அணைத்துப் பிடித்தெவர்க் கட்ட
கயிறோ பலம்விட மாந்தன் -கயிறால்
இயல்பாய் பலம்விட் டகன்றிடும் என்றான்
இயம்பினாள் பெண்ணாள் அவர்க்கு -இயலாள்
நெசவுசெய் பாவில் மயிரிதைப் பின்னி
நெசவுசெய் பாவிலேக் கட்ட -நெசவுசெய்
பாவது என்பலன் தன்னை எடுக்குமே
பாவையும் செய்தனள் அங்கவள் -ஏவியே
சொல்லால் நெருக்கி உயிர்வாழ் வதையென
அல்லாள் செயவும் உரைத்தனன் -அல்லாள்
மயிரை மழித்தால் பலனது போய்யான்
இயல்பு மனிதனாய் ஆக்கு -வியனை
அதுபடி செய்ய பெலித்தர் பிடித்தார்
வதைத்தே இருகண் களையோ -வதைத்தவர்
தாகோன் சிலையதை போற்றிப் பெலித்தரும்
ஆகாச் சிலைக்குப் பலி
நீதி கலி 46
வேடிக்கைக் காட்ட சிம்சோனை பிடித்து வருதலும், அவனோ அந்த மண்டபத்தையே விழச்செய்தலும்.
நோண்டி எடுத்தனர் ஆங்கே பலரவர்
காண்படி வந்திடச் செய்தனர் -காண்பீர்
பகைஞன் பிடிபட வங்கே மகிழ்ந்தார்
அகமுகம் ஊரார் மலர்ந்து -முகத்தில்
களிப்பாய் எதுவும் செயல்செய தீயோர்
களிக்காண் எமக்கு எனவே -களிப்பதைச்
செய்யவே கண்ணிலான் கொண்டு வரவுமே
மெய்யாண் அழைத்தவன் கேட்டிட -மெய்யிதில்
யார்யார் உளரோ திருவறைத் தன்னிலே
பேர்சொல் எனக்கென ஏளனம் -பேர்க்கேள்
செயலைப் புரிய இரண்டும் குருடு
இயல்பாய்ப் பகன்றார் பெயர்தான் -அயலூர்ச்
சிறையில் மழித்த மயிரும் வளர
சிறைவிட் டவனை களிக்காண் -கறையோர்
அறையில் நடுத்தூண் தனிலே எனைநீ
நிறுத்தி யெனைக்கட் டிடுவாய் -சிறையில்
மயிரும் வளர்ந்தால் பலனது மீண்டும்
இயல்பாய் வருமென ஊரார் -வியன்செய்
அறியார் அதனால் நடுத்தூண் தனிலே
அறியார் இழுத்தவர்க் கட்ட -சிறைச்செயல்
மூவா யிரம்பேர் சிறப்பாய்க் களிக்கவே
ஏவி விடுத்தார் பகைஞனை -மேவித்
திருவாண் திருவே திருவெனின் கண்கள்
இரண்டை எடுத்தார் அழிக்கத் -திருவே
பலம்தா திருவே ஒருமுறை தீயர்
பலம்தா திருவே பழியாய் -பலமெலாம்
தாங்கியத் தூணைப் பெயர்த்தான் திருவுடன்
தாங்கியத் தூணோ விழுந்தது -ஆங்கவர்
மூவா யிரம்பேர் உடன்சீர் திருவவன்
ஏவி இரும்தூண் தனைவிழ -ஆவி
திருவில் இறங்க இரண்டு கரத்தால்
திருவீழ்த் தினானே அறையை -திருவவன்
தாணின் இனத்தார் உடலை எடுத்தவர்
தாணின் திருவூர் அடக்கிட -தாணவன்
சீராய் இசுரெல் நடத்திய ஆண்டுகள்
சீரிரு பத்தாம் அறி
நீதி கலி 47
தாண்குலத்தார் படலம்
மீகா செய்த வெள்ளிச்சிலையும் தாண் இனத்தார் அதை எடுத்துக்கொண்டு செல்லுதலும்
களவுசென்ற காசை எடுத்தேன்நான் அம்மா
களவுகாசைத் தந்தான்; சிலையாய்க் -களவுகாசைச்
செய்யவே தந்தனள்; மீகா திரிலேவி
செய்ய வழிபாடு தானவன் -மெய்யாக
எந்தன் தகப்பனாய் நீரிரும் லேவியே
எந்நாளும் போற்று சிலைதனை -எந்நாளும்
ஆசரியன் என்றே நிலைத்திரு என்வீட்டில்
ஆசரியன் கூலியது பத்துகாசு -தேசத்தில்
ஆசரியன் ஓராள் திருத்தந்தார் என்பதால்
தேசத்தில் நான்வாழ்த்து பெற்றிருப்பேன் -தேசத்தில்
மக்கள் மனம்போன வீண்வழி செய்தனர்
தக்கிலார் போற்றினர் வீண்செயல் -தக்கிலார்
தாண்குலம் போந்த நிலமில் திரிந்தனர்
தாண்குல மக்கள் பிடித்திட -வீண்நிலம்
எங்கே எனக்காணச் சென்றனர் எப்ராயீம்
அங்கவர்க் கண்டார் சிலையொடு -ஆங்கிரு
ஆசரியா எம்வேலை கூடுமோ என்றுகேள்
ஆசரியன் சொன்னானே கூடும்போம் -ஆசரியன்
வாக்குபடி கூடிவரப் போயினர் தாண்குலத்தார்
வாக்கால் சிலையெடுக்க வந்தனர் -தாக்கிட
மீண்டும் அவர்வந்து அச்சிலை கையெடுக்க
வீண்மக்காள் ஏனெடுக்கின் றீர்ச்சிலை -தாண்குல
ஆசரியன் ஆகிடு லேவி; ஒருமனிதன்
ஆசரியன் மேலாம் அதுதானே -ஆகச்
சரியென்று ஆசரியன் பின்சென்றான்; வந்தான்
திருவென அச்சிலையைச் செய்தோன் -திருவெனது
விட்டுவிட்டுப் போம்சீரே என்றதும் வீரரோ
விட்டுவிடு இல்லையேல் சாவாயே -நட்டவர்
லாயீசு தன்னை பிடித்தனர் தாண்குலம்
லாயீசு சீதோன் இனம்வாழ்ந்தார் -லாயீசைப்
பேரிட்டார் தாண்நகர் என்றுதம் சீர்தந்தைப்
பேரை இடுவித்தார் ஆங்கவர் -பேரிறை
தேவனின் கோவிலது சீலோவில் சீரிருக்கும்
தேவனாய் செய்த சிலைதனை -தேவைத்தீர்
என்றே குலத்தாணும் வைத்திருந்தார் மீகாவின்
வன்னே இனத்தின் வழி
நீதி கலி 48
எப்பிராயிமர் படலம்
எப்பிராயீம் நாட்டு லேவியன் தன் மறுமனையாட்டியை அழைத்துவர பெத்லகேம் சென்று மாமன் வருத்தியதால் ஐந்துநாள் தங்குதல்
எப்பிராயிம் தேசம்வாழ் லேவியும் கொண்டனன்
எப்படியும் வாழ மறுமனையாள் -அப்படியே
பெத்லகேம் ஊராளைக் கொண்டவன்; கொண்டவளோ
பெத்லகேம் போயினள் வன்னாகி -அத்தூரார்
சொன்னார்கள் வேசி இழியவள் என்றங்கு
சொன்னதும் சில்லென் சினத்தாலே -அன்னவள்
ஊரார் சிலரவளை வேசியென்றுச் சொன்னதால்
ஊரைவிட்டுப் போயினள் தன்தந்தை -ஊருக்கு
ஊரார் தனைக்கேளா மாந்தனோ பெண்ணவள்
ஊரை அடைந்தனன் மீட்டுவர; -ஊரில்
சரியூண் தனையுண்ணும் சாறொடு நீரும்
இருமொரு நாளிங்கு உண்ண -இருக்கிறதே
ஊனும் பருகிடச் சாறும் எனவவனை
மேனாள் புறப்படவி டாது
நீதி கலி 49
ஐந்துநாட்கள் தங்கியபின் மாலையில் புறப்படுதல்
இருக்கவைத்தான் மாமன்தன் ஊரில் விருந்தை
இருந்தனன் அந்தநாள் சீராய் -விருந்துண்டோன்
செல்ல இரண்டாம்நாள் காலை புறப்பட
செல்லாதீர், ஊணுண்டு சாறுகுடி -அல்லான்
இருக்கவைத்தான் மாமன்தன் ஊரில் விருந்தை
இருந்தனன் மூன்றாம்நாள் போக -விருந்துண்டு
செல்வீரே நான்காம்நாள் காலை புறப்பட
செல்லாதீர் ஐந்தாம்நாள் காலையில் -நல்லூண்
இருக்கவைத்தான் மாமன்தன் ஊரில் விருந்தாய்
இருந்தனன் ஐந்துநாள் சீராய் -விருந்துண்டோன்
செல்லவே ஐந்தாம்நாள் மாலை புறப்பட
செல்லாதீர் ஞாப்போய் இருள்வரும் -செல்லாதீர்;
இல்லையில்லை போவோம்யாம் என்றே புறப்பட
அல்லவே நேரமது என்றாலும் -நில்லாது
சென்றான் மறுமனையாள் கூட்டியவன் வேலையோடு
சென்றதும் வந்த யிருள்
நீதி கலி 50
எபூசியர் வாழும் எருசலேம் சேராது பென்யமீனின் கிபியா சென்றடைதலும் அங்கே எப்பிராயீம் தேச கிழவன் அவர்களை விருந்தினராக அழைத்தலும்
ஊராம் எபூசியர்வாழ் கிட்டிவர வேலையாள்
ஊரிதில் தங்குவோம் வாருமே -ஊரிது
வேறினத்தார் வாழூரே; யாம்செல்வோம் கீபியா
வேறாம் இசுரேல் நகர்வரை -மாறியே
வேறினத்தார் வாழூரில் போகாது தன்னினத்தின்
வேறூரில் வந்தடைந்தார்; ஆங்கேயோ -மாறா
தெனநினைத்து போனவர்க்கு தங்க இடமில்
எனவே நடுவூரில் நின்று -இனமவர்
அப்போது வேலைவிட்டு வந்தார் ஒருகிழவர்
தப்பாது இங்கிவரைக் கண்டவர் -இப்போது
ஊருள் வருகைப் புரிந்தநீர் எவ்வூரோ
ஊரெமது எப்பிராயீம் நாடுதான் -ஊரானே
யானும் மலைதேச எப்பிராயீம் நாட்டானே
ஏனோ நகர்வெளியில் தங்குவதோ -மேனாள்
விருந்துண்ண வீடுவாரும் சீராரே மாக்கள்
இருக்கிறதே புல்லொடு நீர்
நீதி கலி 51
பேலியாளின் மக்கள் லேவியனை வன்புணர்வு செய்ய கொடு என்று கேட்டலும் கிழவன் மறுத்தலும்
இருவரும் உள்ளே கழுவினர் கைகால்
இருவரும் உண்ண அமர்ந்து -இருவரும்
நல்லூண் சிறப்பென உண்டனர் ஊரவர்
நல்லா ரிலைசிலை பேலியாள் -அல்வழி
கல்வியில் நேமநூல் கைக்கொளா வன்னவர்
கல்போல் மனதுள் மனிதரில் -கல்லார்
விருந்துண் கிறீரோ எமக்கு கொடும்கை
விருந்தாய் மனிதன் புணர -விருந்தைப்
புணரத் தருவாய் எனவே பெலியாள்
புணர்ந்திடக் கேட்டனர் ஆங்குதான் -வன்னிது
கூரைகீழ் வந்த மனிதனை விட்டிடல்
சீரில்; இதோவவன் பெண்ணொடு -கன்னி
இருக்கத் தகைச்செய் திடுமே விருப்பாய்
வருந்தியோன் மன்றா டினான்
நீதி கலி 52
மறுமனையாட்டியை பேலியாளின் மக்கள் வன்புணர்தலும் காலையில் அவளை லேவியன் பிணமாக கண்டு எடுத்து செல்லுதலும்
அயலான் உனையாம் அமரச் செவியில்
இயலா தவனே கொடுப்பாய் -அயலான்
கதவு உடைபடு மென்றவர்த் தட்ட
கதவைத் திறந்து மறுபெண் -விதமாய்
விடுத்தான் கிழவன்; பெலியவள் மக்கள்
அடங்கிலார்ச் சீரழித் தார்பெண் -இடையில்
இரவு முழுவதும் பெண்ணை புணர்ந்தார்
இரவு விடிய விடுத்தார் -இரவு
விடிய திரும்ப புறப்பட, கண்டான்
படியில் பிணமாய் மனைவி -அடியே
புறப்படு போவோம் எனவவன் கூற
புறமிரு பெண்ணால் உரையா -புறம்போய்
கழுதையின் மேலே உடலினை இட்டு
வழுவான் எபிரயீம் சேர்ந்து
நீதி கலி 53
மறுமனையாட்டியின் பிணத்தை பன்னிரெண்டாக வெட்டி இசுரேலினம் எல்லாருக்கும் லேவியன் அனுப்புதல்
பெண்ணவள் என்மனை என்றுநான் போயினேன்
பெண்ணவள் வன்னென ஊர்சொல -பெண்ணவள்
என்றுமே என்னினி யாளெனக் கைப்பிடித்
தென்றுமாய் வாழ்வோம் எனவர -வன்னிது
கண்களில் நீரொடு தன்னூர் உடலொடு
கண்களில் ஏனோ அழுகையும் -மண்ணிலே
நீர்மழை இல்லா திருச்செய் இதுவதோ
நீர்விழ வந்தனன் எப்ரயீம் -ஆர்த்தெழத்
தன்னூர் அடைந்ததும் பெண்ணவள் வெட்டினான்
தன்னினம் எண்பன் னிரெண்டெனத் -தன்னினம்
எல்லாம் திசைதனில் தந்துவா இப்பிணம்
அல்லவள் செத்த பிணமதை -நல்லார்
இசுரேல் இனத்தார் விரைந்து வினவி
இசுரேல் எகிப்தினின் வந்து -திசையில்
நடந்திலை; வாரும் அனுப்பியோன் சொல்லும்
நடந்த விடயமும் யாது
நீதி கலி 54
மூப்பரிடம் நடந்ததைச் சொல்ல பென்யமனீரை பேலியாள் மக்களை ஒப்புக்கொடுக்கச் சொல்லுதலும் அவர்கள் மறுத்தலும்
ஐயகோ என்சொல் லிடுவேன் மறுமனை
ஐயகோ செத்தவ ளின்னுடல் -ஐயகோ
பெண்ணவள் போயினள் தன்னூர் பெதலகேம்
பெண்ணவள் கொண்டு வரச்செல -பெண்ணவள்
என்றுமே என்னினி யாளெனக் கைப்பிடித்
தென்றுமாய் வாழ்வோம் எனவர -அன்னார்
இனமூப் பரவரின் முன்சொல் லிடவும்
இனமூப் பரவர் சினந்து -இனத்தவர்
சொன்னார் இதுசெயல் வீணர் எவரெனின்
வன்னாய் இதற்கெனத் தண்டனை -வன்னினம்
பென்யமீன் காணியுள் கீபியா ஊரது
பென்யமீன், ஒப்புக் கொடுமவர் -வன்செயல்
பென்யமீன் இல்லை விடோம்யாம் சகோதரர்
என்றார் திருவில் இனம்
நீதி கலி 55
இசுரேல் இனத்தார் பென்யமீனரோடு போரிட்டு இருமுறை தோற்று வருதல்
இதோயினி பேசிப் பயனிலை போவோம்
வதைப்போர் புரிய இனத்துள் -வதையார்
முதல்செய்ய வேண்டுமென கர்த்தரிடம் கேட்க
முதல்போக யூதா குலமே -அதுவகை
பென்யமீன் மாந்தரோ போரில் சிறவீரர்
பென்யமீன் பல்லோர் இடதுகை -வன்வீரர்
பென்யமீன் காணிதனை காக்கப் புரிந்தனர்
வன்போர் இசுரெலினம் தோற்றனர் -அன்றோ;
அடடா இசுரேல் இனம்தோற்ற தேனோ
விடைத்தெரிய கர்த்தர்முன் நின்று -இடமவர்
மீண்டும்யாம் போர்செல்ல வேண்டுமோ என்கேட்க
மீண்டும்போம் என்றார் திருவவர் -மீண்டுமாய்
பென்யமீன் காணிதனை காக்கப் புரிந்தனர்
வன்போர் இசுரெலினம் தோற்றிட -பென்யமீன்
ஏன்பெற்றார் வெற்றிதனை என்றே இசுரேலும்
வான்கர்த்தர் நோக்கி அழுது
நீதி கலி 56
இசுரேல் இனத்தார் பென்யமீனரோடு மூன்றாம் முறை போரில் வெல்லுதல்
ஐயகோ ஐயகோ பேலியாள் மக்களேன்
ஐயா எமைதோற் றிடச்செய -ஐயகோ
எம்முள் எதேனும் தவறுள தோயென
தம்முள் கருவி அமைந்தனர் -அம்மவர்
கர்த்தரின் முன்னே அமைதி பலியிட
கர்த்தரே வெற்றியைத் தாருமே -கர்த்தரே
பென்யமீன் வன்னெதிர் போகவா இன்றுயாம்
இன்றுபோம் வெற்றி உமதென -மேவியே
யோசுவா ஆயியை தோற்கடித் தவ்விதம்
தேசத் தினத்தை முறையெனச் -வீசியோர்
பென்யமீன் தோற்கவும் எல்லா நகரமும்
வன்னாய் அழித்தார் இனமெலாம் -அன்றே
இனத்துளப் பெண்டிரை வெட்டிக் களைந்தார்
இனத்தவர் தீயா ரென
நீதி கலி 57
தப்பிய சில பென்யமீனர் ரிம்மோன் மலையில் மறைந்து வாழ்தலும், இசுரேல் இனத்தார் பென்யமீன் குலமே அழிந்ததே என்று புலம்புதலும்
பென்யமீன் தோற்று விழுந்தனர் சீரிலார்
பென்யமீன் எல்லா இனத்தவர் -அன்றோ
சிலர்மட்டும் ஓடிப்போய் குன்றுகளில் சேர
சிலரவர்க்கு பெண்ணில்லை என்றே -பலவூரார்
செய்தாரே ஆணையை கர்த்தர்முன் ஆதலால்
செய்வதறி யாது விழித்தனர் -செய்வதேது
ஐயகோ கர்த்தரே செய்தோம் திருவினை
ஐயகோ எம்மினத்தில் ஓரினம் -ஐயகோ
போயிற்றே இன்றோ டழிந்திங்கே ஏனிது
ஆயவரே ஓரினம் போகவைத்தீர் -ஆயவா
கர்த்தாவே ஏனோ இனமொன்று போயிற்றே
கர்த்தாவே உம்முன் அழிந்திங்கு -கர்த்தாவே
என்செய்வோம் யாமே அழித்தோமே பெண்டிரை
வன்செயல் செய்தோமே வீண்
நீதி கலி 58
பென்யமீனர் அழியாதபடி இருவகையில் அவர்கட்கு பெண்கொள்ளுதல்
அப்போது வாராதோர் யாரென கேட்டிட
அப்போது எண்ணிக்கை தன்னிலே -தப்பித்து
வாராதோர் யாபேசு கீலெயாத் மக்களவர்
வாராதோர் கொல்ல படையனுப்பு -வாராதோர்
கண்காணும் எல்லாரும் வெட்டிடும் யாபேசில்
பெண்கன்னி மட்டும் விடுத்திடும் -பெண்ணவர்கள்
பென்யமீன் சேரவிடும் என்றுசெய்தார் மூப்பரும்
பென்யமீன் வாழ மனைவியர் -அன்றவர்
பெண்கன்னி கொண்டுவந்து பென்யமீனே வந்திடுவீர்
பெண்கொண்டு வாழும்நீர் எம்மோடு -பெண்கொள்ள
ரிம்மோன் மலையி லிருந்து புறப்பட்டார்
அம்மான் கறையோர் கொளவங்கு -அம்மகற்
வந்தவர்க்கு பெண்கன்னி எண்ணிக்கைப் போதாது
வந்தவரே என்செய்வோம் போதவில்லை -இந்நாளில்
பண்டிகை என்றே சிலோவினது கன்னியர்
பெண்போவர் நீர்பதிவாய் நின்றிடும் -மண்ணிலே
பெண்ணின் தகப்பன்மார் வந்தால் உரைப்போமே
பெண்ணைத் தரவில்லை நீரிங்கு -பெண்ணவர்க்கு
வேறில்லை என்றதால் விட்டுவிடும் என்றுயாம்
வேறுவழி பார்ப்போமே என்றனர் -தேறுதலாம்
சீலோவின் பண்டிகைக்காய் கன்னியர் அந்நாளில்
சீலோவில் ஆடிவர மாந்தரோ -சீலோவின்
தோட்டத்தில் நின்றார் மறைந்தங்கு; சீலோவின்
தோட்ட மருகே பதிவிருக்க -தோட்டத்தில்
பென்யமீன் பெண்கன்னி கொண்டுபோனார் ஆங்கேதான்
வன்னினம் விட்டழியா வன்வகையாய் -வன்னே
அரசனில்லா தேசம் அவனவன் செய்தான்
இருகண்கள் கண்டதீதைத் தான்
நீதி கலி 59
Comments
Post a Comment