திருவிவிலியத் திருப்பாடல்கள் - கலிவெண்பாவில்
| கீழ்கண்ட எண்களில் சொடுக்கினால் அந்தத் திருப்பாடலின் கலிவெண்பாவைப் படிக்கலாம் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 |
| 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 |
| 51 | 52 | 53 | 54 | 55 | 56 | 57 | 58 | 59 | 60 |
| 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | 68 | 69 | 70 |
| 71 | 72 | 73 | 74 | 75 | 76 | 77 | 78 | 79 | 80 |
| 81 | 82 | 83 | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 |
| 91 | 92 | 93 | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 |
| 101 | 102 | 103 | 104 | 105 | 106 | 107 | 108 | 109 | 110 |
| 111 | 112 | 113 | 114 | 115 | 116 | 117 | 118 | 119 | 120 |
| 121 | 122 | 123 | 124 | 125 | 126 | 127 | 128 | 129 | 130 |
| 131 | 132 | 133 | 134 | 135 | 136 | 137 | 138 | 139 | 140 |
| 141 | 142 | 143 | 144 | 145 | 146 | 147 | 148 | 149 | 150 |
வன்செய்வோர்ச் சொல்வழி தன்னில் நடவாது
வன்பாவி யோர்வழி தன்னிலே -வன்நில்லார்,
ஏளனம் செய்வோர் அமருமிடம் தானமரார்
வேளவர் கர்த்தரின் வேதத்தில் -கோளில்
விரும்பி இராப்பகல் பாராது வேதம்
சிரத்தினில் எண்ணிடும் மாந்தன் -வரையிலாப்
பேறுபெற்றோன் சீர்மாந்தன் நீர்க்கால் களினோரம்
வேறாய் நடப்பட்டு சீர்க்கனியைத் -பேறாகக்
காலத்தே தந்திடும் நல்லிலை தானுதிரா
சீல மரம்போ லிருப்பானே; -சீலவன்
செய்வதெலாம் வாய்க்குமே; காற்றுப் பறக்கடிக்கும்
செய்ப்பதரைப் போல்வன்னார் இங்கிருப்பர் -மெய்யாக
வன்செய்வோர் தீர்ப்பிலும் பாவியர் நீதிமான்கள்
நன்னவை தன்னிலும் நில்லாரே -நன்கர்த்தர்
சீரார் அறிந்துள்ளார் நீதிமானின் நல்வழிகள்
சீரழியும் வன்னார் வழி
தேசத்தின் மக்களும் கொந்தளிப்ப தேனோயேன்?
தேச இனத்தவர் வீணாக -வீசும்
செயல்தனை ஏனவர் எண்ணுகின்றார்? கர்த்தர்
அயலென் றெதிர்த்து அவரின் -இயற்றலை
நெய்ச்சொரிந்தார் வன்னெதிராய் பூமியின் மன்னர்கள்
செய்மேல் எழும்பிநின்று ஒன்றாக -செய்வித்தார்ர்
ஆலோ சனைகளை; கட்டுக்கள் தன்னறுத்து
ஏலாக் கயிறுகள் நாமெறிவோம் -ஏலாதார்
சொன்னார் எதிராக; விண்மேலே வீற்றிருக்கும்
அன்னார் இகழ்ந்து சிரிப்பாரே -அன்னாரோ
அப்போது தம்சினத்தில் பேசுவார் வன்னரொடு
அப்போது வெஞ்சினம் ஆம்கலக்கத் -தப்பாது
என்மலையாம் தூய்மலையாம் சீயோனின் என்னரசன்
என்கையால் நெய்ச்சொரிந்து வைத்தேன்நான் -என்றாரே
தீர்த்தவரின் செய்திசொல்வேன்; கர்த்தரெனை நோக்கியே
நீர்ரெந்தன் சீர்சேய்; உமைசேயாய் -நேர்பெற்றேன்
இன்றுதான்; என்னைநீர் கேளும்சேய், அப்போது
நன்றாக மக்களை உம்கையின் -நன்பங்காய்
பூமியின் எல்லைகளை உம்சொந்த மாகவும்
ஏமயிறை நான்கொடுப்பேன்; என்றாரே -பூமியிறை
கோலெஃகுக் கொண்டவரை நீர்நொறுக்கி, பானைப்போல்
ஆலிலார் தன்னை உடைப்பீர்நீர் -ஆலவர்ச்சொல்
மன்னர்காள் இப்போதும் நீருணரும் பூமியின்
நன்நியாயம் செய்நீ தியோர்நீரும் -அன்னவரே
எச்சரிக்கை யாயிருங்கள். அஞ்சிநீர் கர்த்தரை
மெச்சித்தான் சேவியுங்கள், நீர்நடுங்கி -உச்சி
களிகூரும். சீர்ச்சேய் சினங்கொள்ளா மல்தான்
வெளிநீங்கள் போம்வழியில் எல்லாம் -அளியழியா
வண்ணம் அவரைநீர் முத்தமிடும்; கொஞ்சநாளில்
எண்ணுஞ் சினம்பற்றி தீயெரியும் -வண்ணம்
அவரண்டும் யாவரும் பேறுபெற்றோர் நேரே
அவர்பாடச் சீராகப் பாட்டு.
சங்கீதம் 2
என்பகைஞர் எவ்வளவு பேராய் பெருகியுள்ளார்
நன்கர்த்தா! என்னெதிராய் வன்னெழும்பும் -வன்னார்
பலருளர். தேவனிடம் மீட்பெனக்கு இல்லென்
பலரெந்தன் ஆத்துமாவைச் சொல்வர் -பெலனாமே
சீரவா, நீர்என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
சீரவரே என்மேன்மை, என்தலையைச் -சீராய்
உயர்த்து கிறவரும்நீர். கர்த்தாவே நான்கூ
வுயர்த்தூய் மலையினின்று சொன்னார் -உயரார்
படுத்துறங்கி நான்விழித்தால் தாங்குகிறார் சீரார்
படையெடுத்து என்னெதிராய்ச் சூழ -நடப்போரை
நானஞ்சேன் பத்தா யிரம்பேர்க்கும். கர்த்தாவே,
தானே எழுந்தருளும்; என்தேவா, -மேனவா
என்னைநீர் மீட்டிடும். நீரென் பகைஞரெலாம்
வன்னாகத் தாடை யிலடித்து, -வன்னவரின்
பற்கள் தகர்த்திட்டீர். சீர்மீட்பு கர்த்தரின்;
நற்றவர் தேவரீரின் வாழ்த்துகள் -நற்றினம்
உம்மக்கள் மேலிருப்ப தாக எனமகன்
தம்பின் தொடர்ந்தும்சீர் பாட்டு.
சங்கீதம் 3
என்சீராம் நீதியின் தேவனே, நானழைக்க
நன்சீரோய் சீர்விடைத் தாருமே -என்நெருக்கம்
தன்னிலேநீர் பேராக்கி விட்டீர் நிலம்தனை
என்சீரோய் நீரெனக்கு சீரிரங்கி -என்சொல்லின்
விண்ணப்பத் தைக்கேளும் சீரவா. மண்மைந்தே
மண்ணிலே என்மேன்மை தன்னையேன் -மண்போல்
அவஞ்செய்து, வீண்விரும்பி, பொய்நாடு மேனோ.
அவர்சீரார் உள்ளத்தில் பக்தி -அமருளோனை
தேர்ந்தார் தமக்காக என்பதனை நீரறியும்
சீர்க்கர்த்தர் தன்னைநான் நோக்கியே -சார்ரழைக்க
என்னழைப்பை சீரவர் கேட்பாரே. நீங்களோ
வன்னாம் சினங்கொண்டா லும்பாவம் -வன்னே
அதைச்செய்யீர்; சீராய் படுக்கையின் மேலே
விதமமர்ந்து உள்ளத்தில் பேசி -விதநீதி
சீர்ப்பலியாம் மேன்துதியும் கர்த்தர்மேல் நம்பியே
சீர்ரெது என்றெமக்கு காண்பிக்கச் -சீர்ரில்லை
என்றுசொல்வொர் பல்லோரே; கர்த்தாவே நீரெமது
நன்மேலே உம்மொளியை வீசச்செய் -நன்சீராய்
மண்ணார்க்கு சீர்விளைச்சல் தானே மகிழ்வாமே
விண்ணவா, சீர்விடவும் மேலான -விண்மகிழ்ச்சி
என்னுள்ளம் தன்னிலே தந்தீரே; ஆதலால்
என்சீரோய் நல்லமைதி கொண்டுநான் -என்படுக்கை
தன்னிலே ஓய்திருப்பேன் ஏனென்றால் சீரவர்
என்னைநீர் நற்சுகமாய்த் தங்கிட -நன்கர்த்தர்
செய்பவர் நீரொருவர் தானே சிறப்பாகச்
செய்கிறீர் ஈதெனப் பாட்டு
சங்கீதம் 4
கர்த்தாவே, என்சொற்கள் தன்னைச் செவிகொடும்,
கர்த்தாவே, என்தியானம் சீர்கவனி. -கர்த்தாவே
நான்உம்மைச் சீராக நோக்கியே விண்ணப்பம்
நான்செய் கிறேன்சீரே; என்மன்னா, -மேன்தேவா,
என்வேண் டுதலின்சீர்ச் சத்தமதைக் கேட்டருளும்.
என்சத்தம் கேட்டருள்வீர் காலையில் -என்கர்த்தா
காலையிலே உம்நேரே ஆயத்தம் செய்துநான்
காலையில் காத்திருப்பேன் சீரவா. -மேலவர்
சீரில் வழிதனை நீர்விரும்பீர் சீரவா
சீரிலாத் தீதும்மில் சேராது -சீரிலார்
வீம்புசெய் மாந்தரும் கண்முன்னே நில்லாரே
ஆம்சீரில் எல்லாரை நீர்வெறுத்தீர் -தீம்பட
பொய்ப்பேசு மக்களை நீரழிப்பீர் சீரவா
வெய்க்குருதி பார்க்கத் துடிச்சூதை -மெய்யவர்நீர்
தானே அருவருப்பாய் எண்ணுகிறீர் சீரவா
நானோ உமது மிகுந்தசீர் மேனான
கண்ணோட்டம் கொண்டு உமதுசீர் கோவிலில்
மண்ணிலே உள்வந்து உம்முன்னே -மண்விழுந்து
சீராய்ப் பணிவேன்நான் சீரவா; கர்த்தாவே,
சீரிலார் என்பகைஞர் தன்நிமித்தம் -சீரவரின்
சீராமே உம்நீதி தன்னிலெனை சீர்நடத்தி
சீரவா என்முன்னே உம்வழியை -சீராக்கும்
தீயோர் அவர்வாயில் உண்மையிலை, சீரவா
தீயாம் அவருள்ளம் கேடுபாடு -தீயாரின்
தொண்டை திறவுண்ட மண்குழி; தம்நாவால்
அண்டை யெதிர்த்தீயாய்ப் பேசுகிறார். -விண்சீரோய்
குற்றமெனத் தீர்த்திடும் அம்மக்கள்; தங்களின்
அற்றதாம் ஆலோ சனையாலே -அற்றாய்
விழும்படி செய்திடும்; தீமையின் பேர்செய்
விழத்தள்ளும்; உம்மெதிராய்ச் செய்தார் -வழுக்கலகம்
சீரவா உம்மில் அடைக்கலம் வந்தயாவர்
சீராய் மகிழ்ந்துதான், எந்நாளும் -சீராக
ஆர்பரிப்பர்; நீர்காப்பீர் சீரவரை; உம்பெயரை
சீர்விரும்பும் மக்களும்மில் கூரட்டும் -சீர்களிப்பாய்.
கர்த்தாவே, சீரவன் நீதிமானை வாழ்த்திநீர்
கர்ததாவே கண்ணோட்டம் என்னும்சீர் -கர்த்தரும்
கேடகத்தால் சீரவனைச் சூழ்ந்துகொள்வீர் என்றங்கு
ஆடவன் பாடினான் பாட்டு.
சங்கீதம் 5
சங்கீதம் 6
நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
கர்த்தாவே, உம்சினத்தி லென்னைக் கடிந்திடாதீர்,
கர்த்தாவே உம்சீற்றத் தாலென்னை -கர்த்தாவே
நீரென்னை தண்டியா தேயும். இரக்கமாய்
நீரிரும் சீரோய்; பெலனற்றுச் -சீரிலாதுப்
போனேன்; எனைநீரோ சீராக்கும் கர்த்தாவே,
ஏனோயென் என்பும் நடுங்குதே. -ஏனோயென்
ஆத்துமா மிக்காய் வருத்துதே; கர்த்தாவே
மேத்தவா எந்நாள் வரையிது? -மேத்தவரே
கர்த்தாவே, என்ஆன்மா தன்னை விடுவியும்;
கர்த்தாவே, உம்மிரக்கத் தின்னிமித்தம் -கர்த்தாவே
என்னைநீர் மீட்டிடும். மாந்தன் மரணத்தில்
என்றும் நினைவுகொள்ள மாட்டானே -மன்னா
படுகுழியில் உம்மைத் துதிப்பவன் யாரோ?
அடியேன் பெருமூச் சிளைத்தேன்; -படுக்கையை
ஈரமாக்கி, கட்டிலைக் கண்ணீர் நனைக்கிறது.
சீரே இராமுழுதும் கன்ணீரே -சீரோ
துயரத் தினால்கண் குழிவிழுதல் சொல்லும்?
அயனே பகைவர் அனைவர் -இயலாலே
கண்களென் மங்கியது. ஊழல்செய் வோரேஎ
அண்டிடும் நீங்கள் அனைவரும் -கண்விட்டுப்
போங்கள் அகன்றிங்கு; கர்த்தரோ நானிடும்
தாங்காத என்னழுகை கேட்டார்சீர். -பாங்காய்ச்செய்
எந்தன்சீர் விண்ணப்பம் தன்னையே கேட்டாரே;
எந்தன்சீர் வேண்டுதல்கள் ஏற்பாரே. -எந்தன்
பகைஞர்கள் எல்லாரும் வெட்கி மிகவும்
பகைக்கலங்கிப் போவர்; அவர்கள் -வகையாகப்
பின்னாய்த் திரும்பிச் சடிதியிலே நாணத்தை
இன்னா தடைவரெனப் பாட்டு.
சங்கீதம் 6
என்தேவா கர்த்தாவே, உம்மில் அடைக்கலம்
நன்றாய்ப் புகுகிறேன்; சீரென்னைத் -துன்பப்
படுத்துவோர் எல்லார்க்கும் என்னை விலக்கி
நடத்திநீர் மீட்டிடும் சீரே -பிடித்திட
வன்பகைஞர் மண்ணின் அரிமாபோல் பீறாதே
இன்னா படும்நேரம் யாருமிலை -என்றில்லா
தென்னைநீர் தப்புவியும் சீர்நேரே. என்தேவா
என்கர்த்தா, நானிதைச் செய்ததும், -என்கையில்
கேடோ அமைதியாய் நின்றவ னுக்குத்தீக்
கேடெதும் செய்ததும், என்பகையை -கேடாக
வன்கொள்ளை யிட்டதும் உண்டானால், வன்பகைஞன்
என்ஆன்மா வைத்தொடர்ந்து என்னுயிரை -வன்னாய்த்
தரையிலே தள்ளிமிதித்(து), என்மேன்மை தன்னைத்
தரைப்புழுதி தன்னிலே தாழ்த்த -திருச்சீரோய்
நீருமது வஞ்சினத்தில் சீரெழுந்து, என்பகையின்
காருஞ் சினனிமித்தம் உம்மைநீர் -சீருயர்த்தி
நீர்விழியும் சீரோய் எனக்காக; நீதியின்
சீர்த்தீர்ப்பை வைத்துள்ளீர் சீரவா -சீரார்
திருமக்கள் உம்மைத்தான் சூழட்டும் சீரே;
திருவவர்க் காகத் திரும்பத் -திருவேநீர்
சீர்த்தலத்தில் தானே எழுந்தருளும். சீரவர்
சீர்மக்கள் தன்னிற்கு நீதிசெய்வார் -சீரவா
என்நீதி தன்படி என்மெய் படியெனக்கு
நன்றாய் நியாயத்தைச் செய்யும்சீர். -வன்னாரின்
பொல்லாங்கு தானொழிவ; நீதிமானை சீராக
நல்லுறுதிச் செய்யும்சீர்; நீதியுள்ள -நல்லவரே
தேவரீர் உள்ளங்கள் எண்ணங்கள் தன்னைநீர்
மேவியே சோதித் தறிகிறவர். -தேவன்நீர்
செம்மையான உள்ளங் களைமீட்பர் உம்மிடம்
அம்சீராம் கேடகம் எந்தனின் -அம்மிருக்கே.
தேவன்நீர் நீதியுள்ள நீதிபதி; நாள்தோறும்
பாவிமேல் வெஞ்சினங் கொள்ளுகிற -தேவனவர்.
பாவி மனந்திரும்பா விட்டாலோ தம்வாளைத்
தேவனவர் கூராக்கி தம்வில்லை -தேவனவர்
நாணேற்றி, ஆயத்தஞ் செய்திருக் கின்றார்சீர்.
வீணன் மரணிக்க ஆயுதங்கள் -வேணாரே
அம்புகளை தீயினது அம்புகளாய் ஆக்கினார்.
தம்தீதில் வேதனை யாகின்றான் -தம்தீக்
கருத்தரித்தோன் பொய்யைப் பெறுகிறான் தீயோன்.
கரியவன் வெட்டியே ஆழம் -சரியெனச்
தான்செய்த வன்குழியில் தானே விழுந்தனன்
தான்திரும்பும் வன்செய்த தீச்செயல்கள் -மேன்சிரசில்
வன்கொடுமை எல்லாமே தானே; அவர்நீதி
தன்னில்நான் கர்த்தர் தனைத்துதிப்பேன் -நன்சீராம்
சீரவர் நற்பெயரை பாவிலே பாடுவேன்;
சீராகப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 7
கித்தீத் தெனும்கருவி யில்லிசை மீட்டிட
அத்தாண் இராகத் தலைவனுக்கு -அத்தவன்
தாவீது ஒப்புவித்த சீராம் திருப்பாடல்.
எங்களின் ஆண்டவராம் கர்த்தாவே, உம்பெயர்
தங்கிடும் பூமியெங்கும் மேன்மேன்மை -மங்காதார்
உம்மேன்மை தன்னைநீர் வானங்கள் மேல்வைத்தீர்.
எம்பகையும் வீண்பழிச்சொல் மாந்தனும் -நிம்மடக்க
தேவரீர் உம்பகைவர் மேனிமித்தம் சீர்ப்பிள்ளை
மேவிக் குழந்தைகள் சிற்றார்கள் -ஏவாதே
வாயால் பெலனுண்டுப் பண்ணினீர். உம்விரல்கள்
ஆயச் செயல்களாம் உம்விண்கள் -வேயாதே
நீரிட்ட திங்களையும் விண்மீன்கள் தன்னையும்
சீராக நான்பாக்கும் போதுநான் -சீராக
மாந்தனை நீர்நினைக்க மாந்தமகன் தன்னைநீர்
ஏந்தி விசாரிக் கிறதற்கும் -மாந்தனவன்
எம்மாத் திரமோ? அவனைநீர் தூதரிலும்
அம்சிற்றாய்; மேன்மையாலும் மேனாலும் -அம்மானை
சூட்டினீர் நீர்முடியை; உம்கரத்தின் சீர்க்கிரியை
நாட்டினன் நீரவனுக் காளுகை -நாட்டனுக்குத்
தந்துநீர் ஆமே வளமெலாம் காட்டின
அந்தவகை எல்லா மிருகங்கள் -அந்தவகை
விண்புட்கள் நீர்க்கடல் மீன்களையும், நீர்க்கடலில்
அண்டிவாழு மெல்லாமே மாந்தனின் -மண்டிகால்
பாதங் களுக்குக்கீழ்ச் செய்தீர். திருவெங்கள்
மேதவராம் ஆண்டவராம் கர்த்தாவே -மேதவராம்
உம்பெயர்தான் பூமி யனைத்திலும் எவ்வளவு
அம்மேன்மை யுள்ளதே சீர்.
சங்கீதம் 8
வியனே, முழுமன தோடும் உமைநான்
வியத்துதிச் செய்வேன்; உமது -வியன்செய்
வியன்களை யெல்லாம் விளக்கி, மகிழ்ந்தே
வியனே களிகூ றிடுவேன் -வியனார்ப்
பெயரை துதியினால் பாடி இசைப்பேன்
வியனவர் முன்னென் பகைஞர் -அயர்ந்து
வியனாய் இடறி விழுவர்; வியனே
நியாயமும் எந்தன் வழக்கும் -வியனார்
நியாய அரியணை மேல்சீர் வியனார்
நியாயா திபதி அமர்ந்துள் -அயனே
வியனவர் தீயோர் தனைநீர் அழித்து
நியமில் பெயரை குலைத்தே -அயன்நீர்
நியமியும் என்றும் பகைஞரைப் பாழிற்
நியமில் நகரை அழியும் -இயலோய்
நியமில் நினைவும் அறுத்தீர் திருவோ
வியனே நிதமும் அரிமேல் -வியனாய்
நியாயந் தனைத்தீர்த் திடவே அரசாய்
வியனார் அரியணை வீற்று; -வியன்கு
வியனார் நியாயந் தனைத்தீர் திடுவார்
வியனார் சிறுமை உடையோர் -வியனாய்
வயமாய் அடைக்கலம்; தாழ்த்தப் படுவோர்
அயங்கால் திருத்தஞ் சமாவார் -வியனார்
வியனை அடையவே தேடும் மனிதர்
வியனார் விடுவதில் என்றும் -வியனார்ப்
பெயரையே நம்புவர் சீராய் அறிந்தோர்
பெயரை; மலையது சீயோன் -வியனாய்
வியனார் வசிக்கும் இடமாம்; வியனார்
பெயரை இசைத்தவர்ச் செய்கை -வியந்தே
உயரார் அறிவித் திடுங்கள்; குருதி
நியமில் இறைத்தோர் பழியை -நியாய
வியனவர் தண்டனைத் தந்திடக் கேட்பார்
வியனார் சிறுமை அடைந்தோர் -இயலார்
வியன்குரல் கேட்டு மறவார்; இறப்பின்
இயல்வாய் விடுத்தெனை தூக்கும் -வியனே
வியனார்த் துதியெலாம் சீயோன் மகளின்
வியன்வா யிலிலே விவரிப் -பயியல்
வியன்செயும் மீட்பால் களிக்க வியனே
வியனார் இரங்கிப் பகையால் -அயரப்
பயனில் இடுக்கணை நோக்கிநீர் பாரும்
பயனில் குழிதனை வெட்டி -பயனில்
இயல்நாட் டவர்தாம் விழுந்தனர் தானே
வியக்க மறைவாய் அவர்கை -இயன்ற
வியவலை தன்னில் அவரே விழுந்தார்
நியாயம் தனிலால் அறிவர் -வியனார்
இயலெனத் தீமைச் செயலவன் கையின்
செயலால் பிடிபட மாட்டி -வியனாய்
செயல்தீ வினையார், வியனார் மறப்போர்
வயல்தீ நரகம் தனிலே -உயர்சீர்
வியனார் விடுப்பார் எளியவர் என்றும்
வியன்முன் மறப்ப திலையே -வியனே
வியனார் சிறுமை அடைந்தவர் நம்ப
வியனே ஒருபோ துமது -இயலில்
அயங்கொல் எனவாய்த் திரியா திருக்கும்
வியனே எழும்பும் அருளும் -புயவல்
லியலில் மனிதனைச் செய்யும்; உலகார்
வியனார் நியாயந் தனைத்தீர்த் -தியலார்
இயலெனக் காட்டியே அச்சம் அறிய
வியனவா செய்யுமே சீர்
சங்கீதம் 9
கர்த்தாவே, ஏன்தானோ தூரத்தில் நிற்கிறீர்?
கர்த்தாவே, துன்பமது நேரிடும் -துர்வேளை
தன்னிலே நீர்ஏன் மறைந்திருக் கின்றீரோ?
வன்னவன் தன்பெருமை யாலேயே -வன்சிறுமைப்
பட்டவனை வன்கொடுமை யாகவே துன்பத்தை
நட்டவன்மேல் வைக்கிறான்; தான்செய்த -நட்டசெயல்
தன்னிலே தானே அகப்படுவர்; தீவழியோர்
தன்னுள்ளத் தின்னிச்சை தன்னிலே -வன்பெருமைப்
பாராட்டு கின்றான். பொருளை அபகரிப்போன்
சீரார் அசட்டைச்செய் கின்றான்வன் -சீராரைத்
தேடானே தீச்செய்வோன் தன்கர்வத் தாலேதான்;
ஆடவன் வன்நினைவில் தேவனில்லை -மேடாக
வீணனவன் எண்ணுகின்றான்; வீண்வழிகள் எப்போதும்
வீணனின் கேடுள் ளவைதானே -வீணனவன்
பார்வைக்கு எட்டாமல் உம்நியாயத் தீர்ப்புகள்
சீர்ருயர மாகயிருக் கின்றன; -சீர்ரில்லா
தன்னெதிரி எல்லாரின் மேலுமாய்ச் சீறுகின்றான்.
என்னையென்றும் தீங்கணு காதென -தன்மனதில்
நானசைக்கப் பட்(டு)விடுவ தில்லை, பரன்பரையாய்
தானென எண்ணினான் தீயவன் -தானவனின்
வாய்க்கெடுஞ் சொல்லாலும் வஞ்சனை யாலுந்தான்
தூய்யில் கொடுமை யினாலுமாம் -வேய்யில்
நிறைந்திருக் கின்றது; நாவின்கீழ் தீச்செய்
கறைவினையும் ஊழலும் உண்டு. -மறைந்தவன்
ஊரின் ஒளிப்பிடங் கள்தன்னில் தானிருந்து
சீருள்ள குற்றமற்றோன் வன்கொலைச் -சீரில்லான்
செய்கிறான்; திக்கற்றோர் தான்பிடிக்க வன்கண்கள்
மெய்யாக நோக்கியே காண்கின்ற -மெய்மறைத்து
தன்குகை தன்னிலிரும் சிங்கம்போல் வன்பதிவாய்
வன்நிற்கின் றானவன்; ஏழையை -வன்பிடிக்க
சீரில்லான் தான்பதிவாய் நின்று, அவனைத்தன்
சீரில் வலைக்குள் இழுத்தவன் -சீரில்
பிடித்துக்கொள் கின்றான்திக் கற்றோர் வலியோர்
பிடித்தே விழும்படி சீரில் -கிடக்கிறான்
வன்னாய்ப் பதுங்கியவன். தேவனதைத் -தன்னினைவு
விட்டகற்றி னாரென்றும் தம்முகத்தை -விட்டுமறைத்
தேவனார் காணார் ஒருபோதும் என்றுமே
மேவி மனதுள்ளே சொல்கிறான் -தேவனே
சீரே எழுந்தருளும்; தேவா உயர்த்திடும்
சீருமது கைதனை; சீரிலாது -சீரார்
சிறுமைப் படுமவரை என்றும் மறவீர்;
கறையோரோ வன்தீ அசட்டைக் -கறைச்சொன்னான்
“நீர்கேட்டு என்றும் விசாரிப்ப தில்லையே”
சீர்ரில்லான் தன்மனதில் சொல்வானேன்? -சீர்கர்த்தா
பார்த்திருக் கின்றீரே! வன்நினைவால் பாடுகளை
சீர்கவனித் துள்ளீரே; நீர்விடையை -சீர்நீரே
ஏழையானோன் தன்னை யுமக்குதனை ஒப்புவிக்க
ஏழையாம் திக்கற்ற பிள்ளைகட்குச் -ஊழவர்
சீருதவி செய்பவர் நீரேதான். வன்தீயாய்
சீரில்லாப் பொல்லா தவனுமாய் -சீரில்லான்
வன்புயத்தை நான்முறித்து விட்டிடும்; வன்வழி
இன்னாது காணாமற் போகுமட்டும் -அன்னவா
தேடியதை நீர்விசாரித் திட்டிடும். கர்த்தரவர்
நாடெல்லாம் எக்கா லமும்மன்னன் -மேடவர்
என்றே இருக்கின்றார்; தேசம் தனிலிருந்து
வன்புற இன்னா தினத்தாரோ -வன்னழிவர்
கர்த்தாவே, வன்சிறுமைப் பட்டவர் வேண்டுதலைக்
கர்த்தர்நீர் கேட்டுள்ளீர்; அன்னாரின் -கர்த்தாவே
இன்மனதை சீர்நிலைச் செய்வீர்நீர். மண்ணான
வன்மாந்தன் செய்த்தீமைச் செய்யாத -நன்வண்ணம்
தேவரீர் திக்கற்ற பிள்ளைகட்கும் சீரிலாது
தேவா ஒடுங்கியோர்க்கும் நீதிசெய்ய -மேவாது
உம்செவியைச் சாய்த்துநீர்க் கேட்ட ருளுவீர்சீர்.
அம்மான் இசைத்தாரே பாட்டு.
சங்கீதம் 10
கர்த்த ரிடத்தில் அடைக்கலம் நான்புக
கர்த்த ரிடத்தில் அடைக்கலம் -கர்த்தினம்
பார்த்தும் எதற்கிவர் ஆன்மா தனைச்சிறைப்
பார்புள் ளதுபோல் வரைவரை -நீர்பறப்
பாயெனச் சொல்வதேன்? தீச்செயோர் வில்வளைத்
தாயென செம்மைமேல் கோல்விட -வேயவர்
நாணிலே இட்டுத் தொடுக்க; அடித்தளம்
காணியில் போவது செவ்வையார் -காணியில்
என்செய? கர்த்தர் திருவவர் கோவிலில்
தன்சீர் அரியணை விண்உள -நன்றுள
தென்றவர் கண்களால் மாந்தனைக் காணுதே
நன்றவர் கண்ணிமை காண்கிறார் -மன்றவர்
நல்லவர் சோதிக் கிறார்சீர்; கொடுமையும்
அல்லதில் அல்லாய் விரும்புவோர் -அல்லெனத்
தீச்செய் வரைவெறுத் திட்ட தவருளம்
தீச்செய் வரின்மேல் வலைகளைத் -வேச்சொரிச்
செய்வரே; தீயும் எரிக்கங் குமாய்வளி
செய்த்தீ யவரது பங்கென; -மெய்யவர்
கர்த்தரார் நீதி யுளத்திரு, நீதிமேல்
கர்த்தர் விரும்புவார்; செம்மையார் -கர்த்தர்
அவர்முகம் நோக்கி யிரும்சீர் அவரே;
தவனவன் பாடினான் பாட்டு.
சங்கீதம் 11
மீட்டிடும் கர்த்தாவே, பக்தியுள்ளோன் அற்றானான்;
நாட்டிலே உண்மையுள்ளோர் இல்லையே. -நாட்டில்
அவரவர் தத்தமது தோழரோடே பொய்யை
அவரவர் பேசுகின்றார்; மண்ணில் அவரவர்
ஏளனமாய் தன்னுதட்டால் உள்ளொன்றும் அல்லாதே
கோளிலே கேட்க வெளியொன்றும் -ஆளவர்
பேசுகின்றார் தக்கில் இருமனதாய். ஏளனம்
பேசுகின்ற எல்லா உதடுமே -பேசும்
பெருமையாம் அந்நா அறுக்கட்டும் கர்த்தர்.
திருவவர்யார் எம்மேல்தான் நாவு -பெருமையால்
மேற்கொள்வோம் ஏனென்றால் நாவெம்மின் என்றவர்
சாற்றியே பேசுகின்றார் சீரிலார்; -போற்றாதார்
ஏழைகளை பாழ்ச்செய்தார்; சிற்றெளியோர் தன்னையவர்
பாழாய்ப் பெருமூச்சு விட்டிடச்செய் -பாழாக்கும்
வன்னெதிராய் நானெழுந்து ஏங்குகின்ற பாதுகாப்பில்
நன்னாரை வைப்பேன்நான் என்றுரைத்தார் -நன்கர்த்தர்;
நற்றாமே கர்த்தரின் சொற்களது; மண்ணுலையில்
நற்றாக்க ஏழுதரம் இட்டிட்ட -நற்றந்த
வெள்ளியைப் போலுள்ள நற்சொற்கள் தூயாமே;
தள்ளாது கர்த்தாவே நீரவரை -கள்ளமிலார்
காப்பாற்றி என்றைக்கும் இந்த வழியார்க்கை
காப்பாற்று கின்றீர் விலக்கிநீர் -காப்பாற்றா
விட்ட பதர்மனிதர் மேலுயர்ந்தால் தீச்செய்வோர்
மட்டிட் டிரிவரே மண்
சங்கீதம் 12
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
கர்த்தாவே, சீரே எதுவரைக்கும் நீரென்னைக்
கர்த்தாவே தான்நீர் மறந்திருப்பீர், -கர்த்தாவே
உம்முகத்தை என்கண் எதுவரைக்கும் நீர்மறைப்பீர்?
எம்மனதில் நித்தநித்தம் வேதனை -எம்மான்மா
தன்னில் எதுவரைக்கும் ஆலோ சனைச்செய்வேன்
என்பகைஞன் என்மேல் உயர்த்தும்நாள் -வன்னெதிராய்
எந்நாள் வரைக்குமோ? என்தேவா கர்த்தாவே,
இந்நாளே நீர்நோக்கிப் பார்த்தெனக்கு -இந்நாளில்
தானே விடையருளும்; நான்மரணத் தூக்கத்தை
தானாய் அடையாத வண்ணமாய் -மேனார்நீர்
என்கண்கள் தன்னைத் தெளிவாக்கும். மேற்கொண்டேன்
என்றெனது வன்பகைஞன் சொல்லாதே -என்பகைஞர்
நானிங்குத் தள்ளாடு கின்றதால் வன்னவர்
தானே களிகூரா வண்ணமாய் -மேனார்நீர்
இப்படிச் செய்தருளும். நான்உம்மின் சீர்க்கிருபை
எப்போதும் நம்பியுள்ளேன்; உம்மீட்பால் -எப்போதும்
என்சீர் மனம்களி கூரும். எனக்குசீர்
நன்மைசெய் தாரே அதனாலே -நன்கர்த்தர்
தன்னைநான் பாடுவேன் என்றே திருமகன்
நன்றாகப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 13
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
“தேவனில்லை” என்று மதிகேடன் தன்மனதில்
மேவியே சொல்லுகிறான். சீரில்லார் -மேவியே
தங்களைத் தாங்கள் கெடுத்து, அருவருப்பாம்
பங்கமாய்ச் செய்கைகளைச் செய்கிறார்கள்; -இங்கேயோ
நன்மைசெய் கின்றோன் ஒருவனும் இல்லையே.
நன்கர்த்தர் விண்ணின்று தேவனை -நன்றாகத்
தேடும் உணர்வுள்ளோன் உண்டோ எனப்பார்க்க,
தேடித் திருகர்த்தர் கண்ணோக் கினார்சீரார்.
எல்லாரும் இங்கே வழிவிலகிக் கெட்டார்கள்;
அல்லாமல் நன்மைசெய் மாந்தன் ஒருவனுமில்.
ஊழல்செய் மாந்தர் ஒருவனுக்கும் நன்மதி
பாழாகா வண்ணம் அறிவிலையோ? -பாழாக்க
அப்பத்தை உண்பதுபோல், என்மக்கள் தன்னையே
இப்போது பாழாக்கு கின்றாரே; -எப்போதும்
அம்மக்கள் கர்த்தரைத் அன்னார் தொழுவதில்லை.
அம்மக்கள் அங்கே மிகவுமாய் -தம்மஞ்சி
விட்டாரே; தேவனார் நீதிமானின் சந்ததி
நட்டாரைக் கைவிடாரே; நற்றிலா -விட்ட
சிறுமைமாந் தன்தன்னை கர்த்தர் திருவார்
சிறந்த அடைக்கலமே ஆக, -சிறுமையோனை
நீங்கள் அவனுடைய ஆலோ சனையைநீர்
பாங்கில் பொருட்படுத்தா தேயிருந்தீர் -தீங்கிலாத
சீயோ னிலிருந்து சீரிசுரெல் மீட்பது
ஆயே வருவதாக; கர்த்தரவர் -தீயரை
விட்டுத்தம் மக்கள் சிறையிருப்பைச் சீர்திருப்ப
நட்டார்க்குச் சீர்களிப்பும், நன்மகிழ்ச்சி -நட்டார்க்கே
என்றிங்கு உண்டாகும் தானே இசுரெலுக்கு
என்றவர்ப் பாடினான் பாட்டு.
சங்கீதம் 14
தாவீதின் சங்கீதம்
கர்த்தாவே, யார்உமது கூடாரம் தன்னிலே
கர்த்தாவே தங்குவான்? யார்உமது -கர்த்தரின்
தூய்மலையில் தானே வசிப்பானாம்? தூயோனாய்
தூய்முன் நடந்து, நடப்பித்தே -தூய்நீதி
மெய்யை, மனதாரப் பேசு கிறவன்தான்.
மெய்யவன் தன்நாவால் கோள்சொல்லா -வேய்மறைவாய்
தன்தோழர்த் தீங்கிழைக்கா தன்மாற்றான் மேற்சொல்லும்
இன்னாத பேச்சை எடுக்காமல் -நன்னான்
இருக்கிறான். ஆகாதான் பார்வைக்குத் அற்றாண்
திருக்கர்த்தர் அஞ்சினோரை சீராய்த் -திருக்கனம்
செய்கிறான்; ஆணையிட்ட தில்தனக்கு நட்டமென
மெய்வந்தும் ஆணை தவறானே. -மெய்யவன்
தன்பணத்தை வட்டிக்குக் தந்திடாதே குற்றமில்லான்
வன்னெதிராய் கையூட்டு வாங்காதே -அன்னாண்
இருக்கிறான். இப்படிசீர்ச் செய்கிறவன் என்றும்
திருவால் நிலைநிற்பான் சீரில் -திருவற்றார்
தன்னால் அசைக்கப் படுவதிலை சீராணே.
என்றவர்ப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 15
நம்பியுள்ளேன் காப்பாற்ற; தேவனே காப்பாற்றும்.
நம்பின சீரார்க்கு தான்என்செல் -வம்சீரோய்
நும்சீர்க்கு வேண்டிய தில்லையே; தூய்மக்கள்
நம்பியன்பு செய்யும்சீர் உள்ளத்தார்க் -கெம்செல்வம்
வேண்டுமென என்னுள்ளம் சொன்னதே; வீண்சிலைகள்
வேண்டிடப் பின்பற்றும் மக்களுக்கு -வேண்டாத
வேதனைகள் மிக்காய்ப் பெருகிடுமே; ஆதலினால்
வேதனே சீரிலார் தந்திடும் -ஈதலை
தந்திடாது வீண்பெயரும் என்நா விடுத்துவாரா
எந்நாளும் சீர்க்கர்த்தர் என்பங்கே -எந்நாளும்
காப்பாற்று கின்றாரே என்பங்கைச் சீரவரே
மேப்பங்கு எந்தனுக்கு தான்கிடைத்தே -மேப்பங்கு
ஆமெனக்கு உண்டிங்கு சீரே; எனக்குசீர்
மேமானார் ஆலோ சனைத்தந்தார் -மேமானார்
தன்னைநான் என்றும் துதிப்பேன்; இரவிலும்
என்னையென் உள்ளம் உணர்த்திடும் -என்முன்னே
சீரவரை என்றும்நான் வைத்துள்ளேன்; சீராரோ
சீரெந்தன் நேர்வலது சீர்க்கரத்தில் -சீரிருப்ப
தாலே அசைக்கப் படுவதிலை நானென்றும்;
ஆலோய் உளமெந்தன் பூரிப்பாய் -சீலவரே
என்மேன்மை சீர்க்களித்தே; என்னுடலும் நம்பிக்கை
தன்சேர்த்து தங்கியிருக் கும்சீரோய். -என்ஆன்மா
தன்னைநீர் பாதாளத் தில்விடீர்; உம்தூயர்
தன்னை அழிவுகாண வொட்டீர்சீர். -மன்னனே
வாழ்வழியை எந்தனுக்குக் காட்டிடுவீர்; உம்மண்டை
ஆழ்க்களிப்பும் உம்வலது சீர்க்கரத்தில் -வாழ்நிலைப்
பேரின்ப முண்டென்று நானறிவேன் என்றவர்
சீராணும் பாடினார் பாட்டு
சங்கீதம் 16
திருவே, நியாயத்தைக் கேட்டருளும், சீரே
கரைந்துநான் கூப்பிடநீர் கேளும்; -விரகிலா
சொல்லை உதடெனது சொல்கிறது; சொல்லிற்கு
சொல்லவரே நீர்சீர் செவிகொடும் -சொல்நியாயம்
உம்மிடத் தின்னின்று வந்திடட்டும் நற்சீரோய்
உம்கண்கள் சீர்நியாயம் நோக்கட்டும் -அம்சீரோ
என்றெனது உள்ளத்தை நீர்பார்த்து காரிரவில்
என்னுள்ளம் கண்டிடும் சீரிதுவோ -என்னை
புடமிட்டுப் பார்த்தும் இலைத்தீ தெனக்காண்
அடங்காத நாவைநான் மீறா -தடங்கிட
தீர்த்தேன் திருவே; உமதின் உதடுகளின்
சீர்ச்சொல்லால் தீச்செய் மனிதர்க்கு -நேர்விட்டு
நான்விலக்கி என்னைநான் காக்கிறேன் ஆண்டவரே
நான்வழுவா வண்ணமாய் என்நடை -மேன்சீர்
திருவே உறுதிசெய்யும் நீரென் அடியை
திருவே உமைநோக்கிக் கெஞ்ச -திருவெனக்கு
நீரே விடைதருவீர் சீரோய்; உமதுசெவி
சீரவர்ச் சாய்த்தெந்தன் சொல்லினை -நேரவா
கேட்டருளும். உம்மில் அடைக்கலமாய் வந்தோரை
கேட்டா யெழும்பும் எதிரியர் -வாட்ட
வலதுகரம் நீட்டிசீர் தப்புவித்து மீட்பீர்!
நலமிரக் கம்மும் வியனாம் -நலமாய்
விளங்கிடச் செய்யும் திருச்சீரோய்; கண்ணின்
வளமணி போலென்னைக் காத்து, -களத்திலே
தீயோர் வதையொடுக்கத் திற்கும் பகைச்சூழும்
தீயோர் எதிரியர்க்கும், என்னுயிர் -தீயென
வாங்கிடத் தேடும் மனிதர்க்கும் செட்டைகளில்
தாங்கி மறைவாகக் காப்பாற்றும் -பாங்கிலார்
வாயால் இறுமாப்பாய் பேசுகிறார், செல்லும்போ
தீயவர் எம்மை வளைத்தனர்; -தீயோரோ
எங்களைத் தள்ளும் படியவரின் கண்களோ
எங்களை நோக்கு கிறதாமே -அங்கவர்
பீறுதற்கு ஆவலாய் சீரரிமா போல்சீறு;
பீற மறைவிடங் கள்தன்னில் -சீற
மறைந்திருக்கும் குட்டியரி மாப்போல் யிருப்பர்.
மறையவா உம்வாளால் தீச்செய் -கறையோனின்
கைக்கென்னை தப்புவியும். கர்த்தாவே, மாந்தரின்
கைக்கும், உலகிலே பங்குநிறை -கைக்கும்
உமது கரத்தினால் தப்புவியும் என்னை;
உமது திருவால் அவரின் -அமைவயிற்றை
சீரோய் நிரப்புகிறீர்; சீராய் மகப்பேற்றால்
சீரென தானமர்ந்து மீதியை -சீராக
பிள்ளைகட்கு விட்டுச்செல் கின்றார்கள். சீரவரே
பிள்ளை உமதுமுகம் தன்னையே -வள்ளலே
நீதியில் காண்பேன்நேர்; நான்விழிக்கும் போதுமது
வேதவர் ஒப்பால் நிறைந்து.
சங்கீதம் 17
திருக்கர்த்தர் தாவீதை எல்லாப் பகைஞர்
கரத்தினின்று நீங்கலாக்கி மீட்டு -திருச்சொரி
மன்னன் சவுலுக்கும் நீங்கலாக்கி மீட்டபோது
அன்னவர் முன்பாட்டாய் பாடினது -என்திருவே
என்கன் மலையுமென் கோட்டையும், என்மீட்பர்.
என்தேவன் நான்நம்பி சீரிருக்கும் -என்மலையின்
உச்சியும், காக்கும்சீர் கேடகமும், என்மீட்பின்
உச்சிதக் கொம்பும் உயர்ந்தயென் -மெச்சும்
அடைக்கலமும், என்சீர்ப் புகலிடமும், மீட்பர்
நடக்கும்வல் செய்கைக்கு நீங்கி -அடிக்கெனை
மீட்பவர் சீரவரே; நன்துதிக்குப் பாத்திரராம்
நாட்டிலே மீட்பரை கூப்பிடுவேன் -காட்டிலும்
என்பகைஞர்க் கைவிடுவிப் பார்சீரே நீங்கலாக்கி;
என்னை மரண அலைச்சூழ -என்னையோ
அல்லாதார் பல்லோராய் அச்சப் படுத்தினர்
வல்குழியின் கட்டுகள் என்னைத்தான் -அல்ச்சூழ
சாவினது கண்ணிகள் என்மேல் விழுந்தன.
தேவனை என்நெருக்கத் தில்நானோ -மேவிநோக்கி
ஆலே அபயமெனச் சத்தமிட்டேன்; கோவிலினின்
சீலவர் என்சத்தம் கேட்டாரே -சீலாரின்
தன்செவியில் என்சத்தம் ஏறிற்று. அப்போது
வன்னாக பூமி அசைந்ததிர -நன்கர்த்தர்
வன்சினத்தால் வான அடிக்கற்கள் தானங்கு
வன்னாய்க் குலுங்கி அசைந்தது. -வன்சினத்தால்
அன்னாரின் நாசியில் வன்புகை வந்தது
அன்னாரின் வாயினின்று தீவர -இன்னாத
வெந்தழல் மூண்ட ததனாலே; விண்ணின்று
செந்தழல் தாழ்த்தி யிறங்கினார் -செந்தழற்கீழ்
காரிருள் சூழ்ந்திருக்க கேரூபீன் மேலேறி
சீரவர்ச் சென்றார் விரைவாக -சீரவர்
காற்றின் இறகுகள் மேலிருந்துக் கண்கண்டோம்;
மேற்றவர் விண்முகில் தன்சீர்க்காய் -மேற்குடிலாய்
நீர்த்துளிகள் கொண்ட யிருள்தம்மை ஆக்கினார்
சீர்க்கர்த்தர் சீரொளியால் செந்தழலும் -ஆர்த்தெரிய
சீர்க்கர்த்தர் வானத் தினின்று குமுறியவர்,
சீர்த்தமது சத்தம் தொனிக்கச்செய்ச் -சீர்தன்னே.
சீரவர் அம்புகளை எய்தவரைச் சீராரோ
சீரில் சிதறடித்து, மின்னல்கள் -சீரவர்
விட்டே அவர்களைக் சீரார் கலங்கசெய்தார்.
திட்டமாய்க் கண்டித்து நாசியின் -விட்டசீர்க்
காற்றினாலும் ஆழி மதகு திறவுண்டு,
ஏற்றமாம் பூமி அடிக்கற்கள் -சாற்றியது
கண்காண. சீரார் உயரத் திலிருந்து
மண்மே லிருமென்னை கைநீட்டி, -தண்ணீர்கள்
சூழ்ந்திருக்க என்னைப் பிடித்தவர், தூக்கிவிட்டார்.
சூழ்நிற்கும் என்னிலும் வல்லாராம் -பாழ்ப்பகைஞர்
எல்லார்க்கும் என்னை விடுவித்தார். ஆபத்து
வல்நாளில் என்னெ திரிட்டுவந்தார் -நல்லவர்
சீராரோ சீரெனக்கு ஆதரவாய் நின்றாரே.
சீரவர் என்மேலே அன்பாகச் -சீரிருந்த
காரணத்தால் நற்பரந்த சீரிடத்தில் என்னழைத்து
சீரவர் என்னைத்தான் தப்புவித்தார். -சீரவர்
என்நீதிக் குத்தக்காய் சீரளித்தார் நல்விடையே;
என்கைத்தூய்ப் பார்த்தக்கத் தந்தாரே -நன்சரியாய்;
சீர்கர்த்தர் சீர்வழிகள் சீராய் நடந்துவந்தேன்
சீர்திருவிற் அல்லாச் செயலைநான் -பார்தன்னில்
செய்ததில்லை நேராண்நான்; சீர்நேமம் எம்முன்னே
மெய்யாய் நிறுத்திநான் சீரவற்றை -செய்தேன்
விலகாமல் முன்மெய்யாய், தீச்செய்கை நானோ
விலக்கி வழியவரின் காத்தேன் -விலகியே
என்தேவா, என்நீதி தக்கதாய் தம்கண்ணின்
நன்தூய்தக் காகவே செய்தாரே -நன்பலனே;
சீரார் தயவுசெய் மாந்தனுக்கு சீர்த்தயவு
நேரவர் செய்கின்றார்; சீரார்க்கு -சீராராய்
தூயர்க்கு தூயராய் மாறுபாடுள் மாந்தனுக்கோ
வேயவர் மாறுபாடுள் ளோராய்த்தான் -தூயவர்
தோன்றுவீர் சீரவரே; மீட்பீரே தாழ்மக்கள்;
மேன்மை பெருமையுளோர் வன்னெதிராய் -மேன்கர்த்தர்
கண்களவர் மேலிருக்கே; கர்த்தராம் என்தேவப்
கண்காண் விளக்காமே; என்னிருளை -கண்காண
சீர்வெளிச்சம் செய்கின்றீர்; நேராய் ஒருபடைக்குள்
சீர்நானும் உம்மாலே பாய்ந்திடுவேன் -சீர்நானும்
என்தேவ னாலே மதிலைநான் தாண்டுவேன்
நன்றாமே சீர்வழிகள் மேன்மையே -நன்றாமே
சீரவரின் சீர்ச்சொற்கள் சீராய்ப் புடமிட்டே;
சீரவர் தம்நம்பும் எல்லார்க்கும் -சீரவர்
கேடக மாயிருக் கின்றார். திருவன்றி
நாடிதில் தேவன்யார்? நம்தேவன் -மாடல்லார்
கன்மலையும் யாருள்ளார்? என்தேவன் என்னரண்
என்வழியைச் செவ்வைப் படுத்துகின்ற -என்சீரார்
என்கால்கள் தன்னையவர் மான்கால்கள் போலாக்கி
என்னை உயர்ந்த இடங்களில் -நன்றாய்
நிறுத்துகின் றார்சீரார்; வெண்கல வில்லும்
சிறப்பிலா என்தோளால் பட்டு -அறனார்
வளையும் படிச்செய்து, என்கைகள் தன்னை
களப்போர்க்குச் சீரார் பழக்கி -வளர்க்கிறார்.
உம்மீட்பின் கேடகமும் என்கைக்குத் தந்தீரே
உம்மிரக்கம் என்னை பெரியவனாய் -அம்சீராய்
ஆக்குமே; என்கால்கள் சீரில் வழுவாது
ஆக்கமாய் நான்நடக்கும் சீர்வழியை -வாக்கர்
அகலமாக்கி னீர்சீரே. என்பகைஞர்ப் பின்னே
இகத்தில் தொடர்ந்தவரை கொல்வேன் -இகத்தில்
அவரில்லா போகுமட்டும் நான்திரும்பேன். சீரில்
அவர்கள் எழுந்திருக்க மாட்டா -தவராக
என்கால்கீழ் வீழ்ந்தார்கள்; சீரில்லார் நான்முறித்து
வன்னாரை வெட்டினேன் நான்சீரோய் -வன்போர்க்காய்
என்னைப் பலத்தா லிடைக்கட்டி நீரேசீர்
என்மேல் எழும்பினவர் தன்னையே -என்கீழ்
மடங்கிடச் செய்திட்டீர்; நான்என் பகைஞர்ச்
சடுதியாய் வெட்டிட சீரில் -பிடரியை
என்கைக்கு ஒப்புக் கொடுத்தீரே சீரவா;
நின்னையவர் நோக்கி அழைத்தாலும் -நின்சீரோய்
வன்னவர்க்கு தன்செவியால் கேட்டு விடையளியீர்
வன்னவரை மீட்கவோ யாருமிலை -வன்னாரை
பூமியின் தூளாக்கி சேற்றைப்போல் சீரில்லார்
பூமிமேல் செய்கிறேன் சீரற்றே -ஆமாம்சீர்
என்னினத்தின் சண்டை களுக்குநீர் தான்விலக்கி
என்னை புறவினத்தார் மேலாக -நன்தலைவன்
சீராக்கி வைக்கிறீர்; நானறியா மக்களென்னைச்
சீரவா சேவிக்க வைக்கின்றீர் -சீரிலார்
அந்நியர் பொய்ப்புரட்டுப் பேசி எனக்கடங்கி
இந்நாளில் என்பேச்சை கேட்டவுடன் -தந்தார்
செவிகொடுத்துக் கீழ்ப்படி கின்றாரே சீராய்;
புவியிலே அந்நியர் தன்னின் -அவிமுனை
வீழ்ந்துபோய், தங்கள் அரண்க ளிலிருந்து
ஆழ்த்தத் தளிப்பாய்ப் புறப்பட்டார் -வாழ்க்கர்த்தர்
சீராரே; என்கன் மலையார் துதிப்பெறுவார்
சீராரே மீட்பின்சீர் கன்மலையாம் -சீரார்
உயர்ந்திருப் பாராக. சீரார் எனக்காய்
இயல்பவர் தீப்பழிக்குத் தானே -அயலார்
பழிவாங்கி மக்களை என்கீழ்ப் படுத்தும்
வழிதேவன் சீராரே; சீரார் -அழிப்பகைஞர்
தன்னைவிட் டென்னை விலக்கி விடுவிப்பார்;
என்னை கொடுங்கோலர் விட்டுதப்ப -நன்சீரார்
என்னை உயர்த்தினார் என்னெதிர் வன்னெழும்பும்
வன்னார்மேல் மேலுயர்த்தி விட்டவர் -என்னேநின்
சீர்நீதி ஆகையால் கர்த்தாவே மக்களுள்
சீர்நேரார் உம்மைத் துதித்துநான் -சீர்பாட்டை
உம்பெயர்க்காய் பாடுவேன்நான். தாம்சொரிந்த மன்னனுக்கு
தம்மீட்பை தானளித்து தாம்சொரிந்த -தம்மடியான்
தாவீதும் அன்னவனின் சீர்வழிக்கென் றும்மிரக்கம்
தேவனவர் செய்கின்றார் சீர்.
சங்கீதம் 18
வானங்கள் தேவனின் மேன்மகிமை தன்னையே
மேனாய் வெளிப்படுத்து கின்றன -மேனிரும்
விண்விரிவு சீர்க்கரங்கள் செய்கை அறிவிக்கும்.
விண்மழைப்போல் சொற்கள் பகலுக்கு -நண்பகல்
இங்கே பொழிகிறது; நள்ளிரவிற் நள்ளிரவு
இங்கே அறிவைத் தெரிவித்தாம் -இங்கே
அவைகட்குப் பேச்சுமில்லை, சொல்லுமில்லை, சத்தம்
அவைகளின் சத்தங்கேள் யாரும் -அவையிலிலை
கேட்கா தவைச்சத்தம் பூமியெங்கும் சொற்களவை
நாட்டின் கடைவரைக்கும் செல்லுதே -நாட்டிலே
மட்டுமல்ல, பூமிக் கடைவரைச் செல்லுதே,
மட்டிலார் ஞாயிறுக்காய் கூடாரம் -இட்டார்
அவைகளில் சீரார். மணவறை விட்டு
அவைவரும் மாப்பிள்ளைப் போல -அவைதனில்
ஞாயிறு தானிருக் கின்றது, வல்லவன்போல்
ஞாயிறு ஓட மகிழ்கிறது. -ஞாயிறது
வானின் ஒருமுனைத் தன்னே புறப்பட்டு,
வானின் மறுமுனை சேர்வரைக்கும் -வானைத்தைச்
சுற்றியோடு கின்றது; வெம்மையதின் வெய்மறைவில்
அற்றிலை ஒன்றுமே; கர்த்தரின் -நற்சொல்லாம்
வேதம் குறைவற்று, ஆன்மா உயிர்ப்பிக்கும்;
வேதவர் கர்த்தரின் சான்றது -மேதினியில்
சீர்முழுமை யானதும், பேதையை ஞானியாக்க
சீர்வல்ல தாயும் இருக்கிறது. -சீர்நியாயம்
செம்மையும், நம்மனதை சீர்மகிழ்விக் கின்றவையே
அம்முள் ளதேயெல்லாம்; கற்பனை -செம்மையாய்த்
தூய்மையும், கண்தெளிவிக் கின்றதுமாய் சீரிருக்க.
தூய்தானே கர்த்தருக் கஞ்சுமச்சம் -தூய்நிலைக்கும்;
கர்த்தரின் சீர்நியாய மெல்லாமே மெய்யுமாய்
கர்த்தரின் சீர்நியாயம் நீதியுமாம் -கர்த்தரின்
சீர்நியாயம் எல்லாமே பொன்னை விடவிருப்பம்
சார்த்தேன்கூட் டைவிட்டு வந்திடும் -சீர்த்தேன்
விடநற் சுவையுள்ள தாமே; அதனால்
அடியவன்யான் எச்சரிக்கப் பட்டேன் -நடந்தாலே
கைக்கொண்டு நற்பலன் மிக்கே; பிழைகளை
தாக்கி யுணருவோன் யாருளர்? -தாக்க
மறைந்திருக்கும் என்பிழைகள் தன்னின் றெனைத்தூய்
இறைச்செய்யும் சீரே; துணிந்தே -இறையெதிராய்ப்
பாவங் களுக்குமது சீரடியேன் தன்னைநீர்
தேவா விலக்கிக்காப் பீரேசீர்; -தேவா
அவைகள் எனையாள ஒட்டா திரும்சீர்;
அவையாளா போழ்துநான் மேனாய் -அவையால்
வரும்பெருத் தீங்கிற்கு நீங்கி யிருப்பேன்,
திருவே மலையெனது மீட்பர் -திருவே
எனதுத் திருவாயின் சொற்களும், உள்ள
தெனது நியாமமும் நின்முன் -மனதின்
இறைவிருப்ப மாயிருக் கட்டும்சீர் என்றே
இறைவனைப் பாடினார் பா.
சங்கீதம் 19
கர்த்தரும் வேண்டுதலை ஆபத்து நாளிலே
கர்த்தரவர் கேட்கட்டும்; யாக்கோபின் -கர்த்தரின்
சீர்ப்பெயர் சீராக உம்மேன் அடைக்கலம்
சீர்ரா வதாக. திருமலைச் -சீரினின்று
சீருதவி தன்னை யுமக்கனுப்பி சீயோனில்
சீரவர் சீரிருந்து ஆதரிப்பார் -சீரார்நீர்
தந்திடும் காணிக்கை யெல்லாம் நினைத்தேற்று,
தந்திடும் தீப்பலியை சீர்விரும்பி -அந்நாளில்
ஏற்கட்டும் சீரவர். உம்மனது சீர்விருப்பம்
ஏற்றவரும் தந்திடட்டும்; உம்சொல்லை -ஏற்றவர்
ஆலோ சனைகள் நிறைவேற்று வாராக.
ஆலே மகிழ்வோம் உமதுமீட் -பாலேயாம்
சீர்ப்பெயரால் நாங்கள் கொடியேற் றினோம்சீராய்;
சீர்ருமது வேண்டுதல்கள் எல்லாமே -சீர்க்கர்த்தர்
தானே நிறைவேற்று வாராக. கர்த்தரவர்
தானே சொரிந்தவரை மீட்கிறார் -நானே
நலமிப்போ தானே அறிந்துள்ளேன்; சீரார்
வலக்கரம் செய்யுமம் மீட்பின் -நலவலியைக்
காண்பித்து, சீர்தமது தூய்விண்ணின் வீட்டிலே
ஆண்சீரார் வேண்டுதலைக் கேட்பார்சீர். -வீண்மக்கள்
தேர்குறித்தும், வீண்பரி கட்குறித்தும் மேன்மைபேச;
நேர்நாங்கள் எங்கள் திருத்தேவன் -சீர்ப்பேர்
குறித்தேயாம் மேன்மைபேசி பாராட் டுவோமே.
கறையவர் வீழ்ந்தார் முறிந்து -இறையினம்
நாங்களோ சீராய் எழுந்து நிமிர்ந்திங்கு
பாங்காக நிற்கிறோம். கர்த்தாவே, -தாங்கிநீர்
மீட்டிடும்; நாங்களுமைக் கூப்பிடும் நாளிலே
மீட்கும் அரசர் எமக்குதான் -மீட்கவே
சீரார் செவிகொடுப் பாராக; என்றுதான்
சீரவன் பாடினான் பாட்டு
சங்கீதம் 20
கர்த்தாவே, உம்முடைய வல்லமையில் மன்னன்தான்
கர்த்தா மகிழ்ச்சியாய் சீரிருப்ப; -கர்த்தாவே
உம்மீட்பில் எவ்வளவாய்ச் சீர்க்களி கூருகிறார்!
அம்சீர் மனவிருப்பம் நீர்தந்து -அம்சீராண்
இன்னுதட்டு விண்ணப்பம் தன்னைநீர்த் தள்ளீரே.
அன்னவன் சீரெதிராய் வந்துவாழ்த்தி -அன்னான்
சிரசிலே பொன்முடி தன்னை தரிப்பீர்.
அரசர் உமதிடத்தில் ஆயுள் -தருவீரென்
வாழ்க்கேட்க; நீரவர்க்கு என்றென்றும் உள்ளச்சீர்
வாழ்நாளாம் ஆயுள் அளித்தீர்சீர். -ஆழ்ழும்மின்
மீட்பினால் சீர்மேன்மை தானவரின் பேராமே;
நாட்டவர்க்கு மேன்மை வலிமையை -மீட்பர்நீர்
சீராய் அருளினீர். சீராரை நித்திய
சீராமே வாழ்த்துகள் உள்ளோராய் -சீராக்கி;
சீரவரை உம்முடைய சீர்முன் மகிழ்ச்சியால்
சீராகப் பூரிப்புச் செய்கிறீர். -சீரரசர்
நம்புகிறார் சீர்க்கர்த்தர் மேல்தானே; மேலாரின்
அம்தயையால் சீரார் அசைபடார். -அம்சீர்
உமது பகைஞராம் எல்லாரை எட்டி
உமது கரம்பிடிக்கும்; நன்றாய் -உமதுகை
உம்மைப் பகைப்போரைக் கண்டு பிடிக்கும்சீர்.
உம்சினத்தின் காலத்தில் சீரிலார் -அம்தீயில்
போடுவீர்; கர்த்தர்தம் வெஞ்சினத்தில் சீரிலார்
போடுவார் இங்கழித்து தீக்கிரையாய் -போடுவார்
சீரிலார் அற்கனியை பூமியில் இல்லாதே;
சீரிலார் அல்வழி ஓயுமே. -சீரிலார்
உம்மெதிராய் பொல்லாங்கை தான்நினைத்தார்; தீவினையை
உம்மெதிராய் எத்தனம் செய்தார்கள்; -அம்சீரில்
ஒன்றுமே வாய்க்காமற் போயிற்று. சீரிலார்
வன்முகம் நேரே இலக்காக்கி -வன்னம்பு
தன்னைநீர் நாணேற்றி விட்டிடுவீர் சீரவரே
என்றும்நீர் வல்லமையில் சீரெழும்பும் -நன்றாய்யாம்
உம்முடைய வல்லமையைப் பாடி இசைத்திங்கு
அம்சீர் துதிப்போமப் போது.
சங்கீதம் 21
தேவனே, தேவனே, எந்தனின் தேவனே
தேவனே ஏன்என்னைக் கைவிட்டீர்? -தேவா
எனக்குதவி செய்யா மலும்நான் கதறி
வினையாகச் சொல்லும் எனது -அனைச்சொற்கள்
கேளாதே ஏன்நீரும் தூரமாக உள்ளீரோ?
கேளீர் பகலிலே நானழைத்தால் -வேளை
இரவில் அழைத்தும் அமைதல் இலையே
பரனே இசுரெல் துதிக்குள் -இருப்பவரே
நீர்தூயர் தேவரீரே; எந்தையர் நம்பிட
சீர்நீரே விட்டு விடுவித்தீர் -சீர்மக்கள்
உம்மையே நோக்கி யழைத்தனர் எந்தையர்
உம்மையவர் நம்பியதால் நாணாது -உம்மாலே
சீராக மீட்பை ருசிபார்த்தார் சீரவரே
பாராப் புழுநானே; மாந்தனல்ல -சீரவா
மாந்தரால் ஏசப்பட் டும்தான் அவமதித்தார்
மாந்தரென்னை; என்னைக்காண் யாவரும் -மாந்தர்காள்
ஏளனம் செய்தார், உதட்டைப் பிதுக்கியே
ஏளனமாய் தன்தலை கள்துலுக்கி -ஏளனமாய்
கர்த்தர்மேல் நம்பிக்கை யாயிருந்தான், சீராராம்
கர்த்தர் இவனை விடுவிக்க -கர்த்தரே
வந்திடட்டும்; அன்பா யிருந்தாரே சீர்மேலே,
வந்தவர் இப்பொழுது மீட்கட்டும் -வந்தவர்
சொல்கிறார்கள். ஆண்டவா நீரே கருவினின்று
நல்லபடி என்னை எடுத்தவர் -நல்தாய்
முலைப்பால் குடியும்போழ் தேயென்னை உம்மேல்
நிலைநம்ப வைத்தீர்சீர்; நானோ -தலையெனது
பூமியில் வந்தபோதே உம்சார்பில் நான்விழுந்தேன்
ஏமயிறை ஏமமாய் நான்கருவில் -பூமியில்
வாராத போதே திருச்சீர் இறைவனாய்
சீரார் இருந்தீரே தேவனே -சீரவா
என்னைவிட்டு தூரம் இராதேயும் ஆபத்து
என்னை நெருங்கி யுளதேகாண் -என்பக்கம்
சீருதவி செய்திட யாருமில்லை சீரவரே
சீரான ஏறுகள் சூழ்ந்திருக்கே -சீராம்
பலத்த திருபாசான் ஏறுகள் சூழ்ந்தே
பலமரிமா போலென்மேல் வாயைப் -பலவான்கள்
ஏன்திறக்கின் றாரறியேன்; நீரைப்போல் ஊற்றுண்டேன்
ஏன்சீரான் என்புகளும் கட்டுவிட்டு -மேன்சீர்
உளமோ மெழுகுபோல் ஆகி குடலின்
உளத்தே உருகிற்று என்னின் -உளப்பெலன்
காய்ந்தது ஓட்டைப்போல்; என்நாவு மேல்வாயில்
காய்ந்ததால் ஒட்டிற்று; என்னையேன் -காய்ந்த
மரணத்தூள் போலநீர் போடுகிறீர். நாய்கள்
மரணிக்கக் காத்தென்னைச் சூழ -மரணிக்கப்
பொல்லாதோர் கூட்டம் எனைவளைந்து கொண்டது;
நல்லாணென் கைகளையும் கால்களையும் -அல்லா
துருவயேனோ குத்தினார்கள். என்என் பெலாமே
உருத்தெரிய எண்ணலாம்நான்; என்னை -குருகுருவென்
றேயவர் நோக்கினர். என்னாடை தன்னையோ
வேயவர் சீட்டுபோட்டுக் கொள்கிறார் -ஆயனே
ஆனாலும் கர்த்தாவே, நீரெனக்குத் தூரமாய்
மேனவரே ஆகாதீர்; என்பெலனே, -மேனார்
எனக்குதவ தீவிரித்து வாரும்சீர். ஆன்மா
எனதை அறுத்திடும் வாளிற் -கெனதின்
அருமைச் சிறப்பொருளை நாய்களின் வாய்க்கும்
திருநீரே தப்புவியும் சீரோய் -திருவே
அரிமாவின் வாயினின்று மீட்டிடும் சீரோய்
மிருகத்தின் கொம்புகளில் மாட்ட -திருநீர்
எனக்குச் செவிதருவீர் சீரோய்; உமது
வினைப்பெயரை என்தமர்க்குச் சொல்லி -அனைவர்
நடுவே உமைத்துதிப்பேன் சீர்த்திருவே; அஞ்சி
நடுங்குவோர் கர்த்தருக்கு, சீராய் -நடுங்கித்
துதியுங்கள் மேலவரை; யாக்கோப் வழியே
துதித்துக் கனம்செய்த் திருவை -துதித்து
இசுரெலின் சீர்வழியே அஞ்சியவர் பேரில்
திசையெங்கும் நீரிரும் சீரே; -திசைதன்னில்
வாதைகள் பட்டோனின் வாதைதனை அற்பமாய்
மேதவர் எண்ணாமல்; சீரவனின் -வாதை
அருவருக்கா மல்சீரார் தம்முகத்தைச் சீரார்
திருவிற் மறைக்காமல் சீராய் -இருப்பாரே
தன்னைநோக்கி கூப்பிடு கையிலவன் சத்தத்தை
அன்னாரே கேட்ட ருளினார்நேர். -அன்னவரே
பேரவையில் நான்செலுத்தும் நற்றுதி உம்மாலே
சீராக உண்டாகும்; அஞ்சுவோர்க்கு -நேராக
எந்தன் பொருத்தனைகள் தன்னைச் செலுத்துவேன்.
அந்நாளில் சிற்றாட்கள் அவ்வூணை -அந்நாளில்
சிற்றாள்கள் உண்டு களிப்பர்; திருவவரை
நற்றாகத் தேடுவோர் நேர்த்துதிப்பர் -நற்றவரின்
நல்லுள்ளம் என்றுமே வாழுமாம்; பூமியின்
எல்லைகள் எல்லாம் நினைந்திட்டு -நல்லவரின்
பக்கம் திரும்புமாம்; பல்லோர் வருகைதந்து
தக்கவரை சீராய்த் தொழுதிடுவர் -எக்காலம்
சீராரே பூமியின் சீரரசர்; எல்லார்மேல்
சீரவரே சீராய் அரசாள -சீரெலாம்
வந்(து)பணிவர் வாய்ப்புசிப்பர்; மண்ணிறங்கும் எல்லாரும்
வந்(து)பணிவர், ஏனென்றால் ஆன்மாவை -அந்நாளில்
காத்திடவே ஓராளில் ஆதலால் வந்திடுவர்
காத்திடும் சீரார் தனைநோக்கி -காத்து;
ஒருவழியார் சீரவரைச் சேவிக்கும்; சீரார்
நருவழியார் என்றென்றும் சீரே -நருச்சீரார்
ஆண்டவரின் சீர்வழியார் என்பராம். மேதவராம்
ஆண்டவரே செய்தா ரிதையென -ஆண்டவரை
பேறாய் வரப்போகும் மக்களுக்கு சொல்வரே
பேறாம் திருநீதிச் சீர்
சங்கீதம் 22
கர்த்தரெந்தன் மேய்ப்பராய்ச் சீரிருக் கின்றதாலே
கர்த்தருள் நான்தாழ்ச் சியடையேன். -கர்த்தரென்னைப்
புல்லுள்ள சீரிடங் கள்தன்னில் மேய்த்தவர்,
நல்லமர்ந்த நீரண்டை யில்லென்னை -நல்லவர்க்
கொண்டுபோய் சீர்விடு கின்றார். அவரெனது
மண்ணாகா ஆன்மாவைத் தேற்றியே -விண்ணவரே
தம்பெயரின் சீர்நிமித்தம் என்னைநீதி சீர்ப்பாதைத்
தம்மில் நடத்துகிறார். நான்மரணக் -கும்மிருளாய்ப்
பள்ளத்தாக் குள்ளே நடந்தாலும் பொல்லாப்பு
கள்ளத்திற் கஞ்சேன்நான்; ஏனெனில் -தள்ளாத
தேவரீர் என்னோடே கூடயிருக் கின்றீரே;
தேவா உமதுசீர்க் கோற்றடி -மேவியெனைத்
தேற்றும் இறைவனே. என்பகைஞர் முன்பாக
சாற்றுகின்றீர் நீரெனக்கு பந்தியை -தேற்றியெனை
எண்ணெயை என்தலைமேல் ஊற்றிச் சொரிந்திட்டீர்;
மண்குவளை நானோ நிரம்பினேன் -மண்ணிலே
என்னுயிர் உள்ளநாள் எல்லாமே நன்மையும்
நன்னிரக்க மும்மென்னைச் சீர்த்தொடரும் -என்கர்த்தர்
சீரவரின் வீட்டிலே நீடித்த நாட்களாய்
சீராண் நிலைத்திருப் பேன்.
சங்கீதம் 23
பூமியும் பூமி நிறைவும், உலகமும்
பூமிக் குடிகளும் கர்த்தரின் -பூமியை
ஆழ்க்கடலின் மேலாய் அடித்தளம் நாட்டினார்
தாழ்நதிகள் மேலாக நாட்டினார். -ஆழ்க்கணிதர்
சீரவர் கர்த்த ருடைய மலைமேலே
யாரவன் ஏறுவான்? தூயிடம் -யாரவரின்
தன்னில் நிலைத்திருப்பான்? கைகளில் தூய்மையும்
இன்னாது மாசில் மனதுள்ளோன் -தன்ஆன்மா
மாயைக்கு ஒப்புக் கொடாமல், கபடாக
வாயாலே ஆணை யிடாமலும் -தூயாய்
இருக்கிறவன் தானவன்; கர்த்தரால் வாழ்த்தை
இரட்சிப்பின் தேவனால் நீதி -திருப்பெறுவான்.
தேடி விசாரித்து, தேவ சமுகத்தை
நாடுகிற யாக்கோபு என்றவழி -நாடிதின்
வாயில் களேதலை தன்னை உயர்த்துங்கள்;
வேயில் அநாதி கதவுகளே, -வேயா
துயருங்கள்; மேன்மகிமை மன்னன் வருவார்.
உயர்மகிமை மன்னனவர் யாரோ? -உயர்வலி
மேன்வலி யுள்ள திருக்கர்த்தர்; சீராரே
மேன்வலி போரில் உடையவர் -மேன்சீரே;
வாயில் களேதலை தன்னை உயர்த்துங்கள்;
வேயில் அநாதி கதவுகளே, -வேயா
துயருங்கள்; மேன்மகிமை மன்னன் வருவார்.
உயர்மகிமை மன்னனவர் யாரோ? -உயரவர்
மேன்படை யுள்ள திருக்கர்த்தர்; சீராரே
மேன்மகிமை மன்னனவர் ஆம்.
சங்கீதம் 24
தாவீதின் சங்கீதம்.
கர்த்தாவே, உம்மிடத்தில் என்ஆன்மா சீர்உயர்த்தி.
கர்த்தாவே என்தேவா உம்மையே -கர்த்தாவே
நம்பி யிருக்கிறேன், நான்வெட்கிப் போகாதே
அம்வண்ணம் செய்யுமே; என்பகைஞர் -அம்மென்னை
மேற்கொண்டு சீரில் மகிழ விடாதேயும்.
மேற்றவா உம்மைநோக்கிக் காத்திருக்கும் -மேற்றார்
ஒருவரும் வெட்கப் படாதபடிச் செய்யும்;
அறனிலாத் தீங்கிழைப்போர் வெட்கி -தரைதனில்
வீழட்டும். கர்த்தாவே, உம்சீர் வழிகளை
கீழாண் எனக்குத் தெரிவியும்; -பாழாகா
உம்முடைய பாதைகளை நீர்எனக்குப் கற்பியும்.
உம்முடைய மெய்யிலே என்னைநீர் -தம்சீர்
நடத்தியே, என்னைநீர்க் கற்பித் தருளும்;
திடம்நீரே என்மீட்பின் தேவன், -இடத்திலே
உம்மைநோக்கி நாள்முழுதும் காத்திருக் கின்றேன்நான்.
உம்முடைய சீரிரக்கங் கள்தன்னை -எம்கர்த்தா
உம்முடைய செய்யிரக்கங் கள்தான் நினைத்தருளும்,
நும்செய் அநாதியாய் காலமுதல் -அம்மிருக்கே.
என்இளமை சீரில் வயதினவைப் பாவங்கள்
தன்னையும் என்மீறு தல்களையும் -அம்சீர்
நினையா திரும்சீரே; கர்த்தாவே, உம்மின்
தயைனிமித்தம் என்னை கிருபை -இயற்படியே
சீரார் நினைத்தருளும். கர்த்தரவர் நல்லவரும்
சீரவர் மேன்சீரு மாயுள்ளார்; -சீரதனால்
பாவிகட்க்கு தன்வழியைச் சீரார்த் தெரிவித்தே
மேவில் சிறுமைபட் டோரையவர் -தேவ
நியாயந் தனில்நடத்தி, நற்றில் சிறுமை
இயலார்க்குத் தன்வழியை கற்பித் -தயைச்செய்
கிறாரே; திருவின் உடன்படிக்கை தன்னை
அறச்சான்று தன்னைக்கைக் கொள்வோர் -அறனவர்க்கோ
சீராரின் பாதை களெல்லாம் கிருபையே
சீரான மெய்யுமா மேயவை. -சீரவரே
என்னூழல் மிப்பெரிது; உம்பெயர் தன்னிமித்தம்
என்னூழல் மன்னித் தருளுமே. -நன்னவர்
கர்த்தருக்கு அஞ்சும் மனிதனுக்குத் தாம்தெரியும்
கர்த்தரின் சீர்வழியைக் கற்பிப்பார். -கர்த்தரில்
ஆன்மா அவனினது நன்மையில் தங்குமே;
மேன்சீர் வழியார் புவிச்சொந்தம் -மேன்செய்வர்.
வேய்ச்சொல்லாம் கர்த்தரின் சீராக அஞ்சினோர்
வேய்யாய் உளதாமே; தம்முடைய -வேய்யிலே
தன்னின் உடன்படிக்கைத் தன்னையவர் தன்மக்கள்
தன்னிற் தெரியப் படுத்துவார். -என்கண்கள்
எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண் டேயிருக்கும்;
தப்பிக்க சீராரே என்கால்கள் -தப்பான
வன்வலைக்கு நீங்கலாக்கி சீர்விடுவார். என்மேலே
நன்னவரே நோக்கமாகி, நீரெனக்கு -நன்னிரங்கும்;
நான்தனித்தே கீழ்சிறுமைப் பட்டவனாய் தானிருக்கேன்
மேன்சீரில் என்மனதின் வேதனைகள் -ஏன்தானோ
என்னை இடுக்கண் களிலிருந்து நீங்கலாக்கும்.
என்சிறுமை யையுமென் துன்பத்தை -என்கர்த்தா
நீர்பார்த்து, என்பாவங் கள்ளெல்லாம் மன்னியும்.
சீர்ரென் பகைஞரைப் பாரும்நீர்; -சீர்ரில்
அவர்கள் பெருகி யிருந்து, வெறுப்பாய்
அவர்களென்னை ஏனோ வெறுத்தார் -தவனெனது
ஆன்மாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;
மேன்நானோ வெட்கப்பட் டுப்போகா தான்னாகச்
செய்யும்சீர்; உம்மில் அடைக்கலம் நான்புகுந்தேன்.
மெய்யதும் நேர்மையும் என்னைச்சீர்க் செய்க்காக்க
நான்உமக்குக் காத்திருக் கின்றேன்சீர். தேவனே,
மேன்னார் இசுரெலை சீராணின் -தான்னிடுக்கண்
எல்லாம் விடுத்துநீர் மீட்டுவிடும் சீரவா
நல்லாண் இசைத்தான்நல் பாட்டு
சங்கீதம் 25
தாவீதின் சங்கீதம்.
கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும்,
கர்த்தாவே நானெனது உத்தமத்தில் -கர்த்தாவே
தானடக் கின்றேன்; திருவைநான் நம்பியுள்ளேன்,
மேனதால் நான்தள்ளா டிப்போகேன். -மேனவரே
கர்த்தாவே, என்னைநீர் சோதித்துப் பாரும்நீர்;
கர்த்தாவே என்உள் மனதையும் -கர்த்தாவே
உள்நினைவு கள்தன்னை நீர்புட மிட்டுத்தான்
உள்பாரும் சீரவரே. உம்கிருபை -உள்ளவன்
என்கண்கள் முன்னிருக் கின்றது; உம்மெய்யில்
தன்னே நடக்கிறேன். வீணரோடே -வன்னாய்நான்
உட்கார வில்லையே, வஞ்சகர் வன்னிடத்தில்
நட்டான்நான் சேர்வதில்லை. பொல்லாதோர் -நட்பிலாது
அன்னாரின் கூட்டத்தை நான்பகைக் கின்றேனே;
வன்வழியோ ரோடுநான் உட்காரேன். -நன்கர்த்தா
நான்துதியின் சத்தத்தை தானே தொனிச்செய்து,
தான்னும்மின் சீர்வியன்கள் எல்லாமே -தான்விவரித்
தேயிசைப்பேன். நான்குற்ற மில்லாமை தான்விளங்க
வேயிலா தென்கைகள் தன்னைநான் -சேயோன்நான்
சீராய்க் கழுவி, உமதுசீர் பீடத்தைச்
சீராகச் சுற்றி வருகிறேன் -சீரே.
உமதுசீர் ஆலய மாகிய வீட்டை
உமது மகிமைதங்கும் வீட்டை -தமன்நானே
வாஞ்சிக் கிறேன்சீரே. என்ஆன்மா தன்னையே
வாஞ்சியாப் பாவி களோடுமே, -வாஞ்சித்தோர்
செந்நீரார் ரோடுங்சேர்த் தென்னைநீர் வாரிடாதீர்.
அந்ததமர்க் கைகளிலே தீவினை -அந்தபடி
தானிருக் கின்றது; கையூட்டால் வன்வலக்கை
தானிறைந்து உள்ளதே; நானோயென் -மேனான
உத்தமத்தில் தான்நடப்பேன்; என்னைமீட்டுக் கொண்டுநீர்
உத்தமரே என்மேல் இரக்கமாக அத்தவா
தானிரும். என்கால்கள் செம்மையான நல்லிடத்தில்
தானின்றே சீரவைத் தன்னிலே -மேனவரை
நான்துதிப்பேன் என்றவர்ப் பாடு.
சங்கீதம் 26
தாவீதின் சங்கீதம்.
கர்த்தர் எனது வெளிச்சமும் என்மீட்பும்,
கர்த்தாவே யாருக்கு அஞ்சுவேன்? -கர்த்தரென்
இன்னுயிரின் சீரரணாம், யாருக்கு அஞ்சுவேன்?
என்பகைஞர் பொல்லா தவர்களென் -நன்னுடலை
தான்புசிக்க, என்னை நெருங்குகையில் வன்பகைஞர்
தான்னிடறி தானே விழுந்தார்கள். -மேன்னார்
எனக்கு எதிராய் ஒருபடை வந்தும்,
எனது மனதது அஞ்சா -தெனது;
எனதின்மேல் போரெழும்பி னாலும், இதிலே
மனதுவைத்து நான்நம்பிக் கையாய் -யினியிருப்பேன்.
கர்த்தரிடம் ஒன்றைநான் கேட்டேன், அதையேதான்
கர்த்தரிடம் நாடுவேன்; மேன்மகிமை -கர்த்தரின்
நான்பார்க்க, சீரவரின் ஆலயத்தில் ஆராய்ச்சி
நான்செய்ய என்னுயிருள் நாளெல்லாம் -நான்சீரார்
ஆலயத்தில் தங்கி யிருப்பதையே நாடுவேன்.
ஆலேநீர் தீங்குநாளில் என்னைத்தம் -சீலான
கூடாரத் தில்மறைத்து, என்னை யவருடைய
கூடாரச் சீர்மறைவில் நீர்ஒளித்து -நாடதின்
கன்மலைமேல் சீர்நீர் உயர்த்துவீர் சீரவரே.
என்தலை யிப்பொழுது சுற்றிலும் -என்பகைஞர்
மேலாய் உயர்த்தப் படுமே; அதினிமித்தம்
மேலாரின் கூடாரத் தில்நான்சீர் -மேலார்க்கு
நன்மகிழ்ச்சி யாக பலியிட்டு, கர்த்தரை
நன்றாய்நான் பாடியே, இன்னிசையால் -தன்போற்று.
கர்த்தாவே, நானழைக்கும் சத்தத்தை நீர்கேட்டு,
கர்த்தாவே நீரெனக்கு தானிரங்கி -கர்த்தர்தான்
சீராய் பதிலருளும். என்முகத்தைத் தேடுமென்று
சீரார்நீர்ச் சொன்னீரே, உம்முகத்தைச் -சீராரே
தேடுவேன் கர்த்தாவே, என்றென் மனதது
நாடியே உம்மிடத்தில் சொல்லிற்று. -தேடிடும்
சீரெனக்கு உம்முகத்தை நீர்மறை யாதிரும்.
சீரில் சினத்துடன் உம்மடியேன் -சீரற்று
சீரார் விலக்காதீர்; நீரே உதவிசெய்வர்
சீரே எனதுமீட்பின் தேவனே -சீரென்னை
கைவிடா தேயிரும். எந்தையும் என்தாயும்
கைவிட்டா லும்கர்த்தர் என்னைசேர்த்துக் -கைவிடார்.
கர்த்தாவே, உம்வழியை நீரெனக்குக் கற்பியும்,
கர்த்தாவே என்எதிரார் வன்னிமித்தம் -கர்த்தாவே
செவ்வையான பாதையில் என்னை நடத்தும்நீர்.
அவ்வாறாய் எம்பகைஞர்க் கையிலே -செவ்விலாது
என்னைநீர் ஒப்புக் கொடாதேயும்; பொய்ச்சாட்சி
வன்னாராய்ச் சீறுவோர் என்னெதிராய் -வன்எழும்பி
நிற்கிறார்கள். நானோ, உயிருள்ளோர் தேசத்தில்
நற்றவராம் கர்த்தரின் நன்மையை -நற்றாண்நான்
காண்பேன் எனநம்பா தேயிருந்தால் கெட்டுத்தான்
காண்சீரில் போயிருப்பேன். சீராராம் -காண்காப்பீர்
கர்த்தருக்கு, நல்ல திடமன தாயிரு,
கர்த்தரேயுன் சீர்மனதை சீர்நிலையாய் -கர்த்தரே
செய்வாரே; கர்த்தருக்கே காத்திரு என்மனமே.
மெய்யவர் பாடினார் பாட்டு.
சங்கீதம் 27
என்கன் மலையான கர்த்தாவே, உம்மைநோக்கி
தன்னழைக் கின்றேன்நான் கூப்பிட்டு; -என்கூச்சல்
தன்னைநீர் கேளா தவர்போல நீரிராதீர்;
அன்னவர் பேசா திருந்தால்நான் -வன்குழியில்
வீணாய் இறங்கு கிறவர் களுக்கொப்பாய்
வீணாவேன். நானும்மை நோக்கித்தான் -காணுமெனை
என்றேதான் சத்தமிட்டு, உம்மேன்தூய் சந்நிதிக்கு
நன்நேராய்க் கையெடுக் கையிலென் -நன்சீராம்
விண்ணப்பங் கள்தன் ஒலிதனைக் கேட்டருளும்.
மண்ணயல் மக்களொடு வாழ்த்துதனை -மண்சொல்லி
தன்மனதில் பொல்லாப்பை வைத்துள்ள தீயரொடும்
வன்னூழல் காரரோடும் வாரிடாதீர் -என்னைநீர்.
செய்கையவர் தன்னின் அவர்நடத்தைக் கண்டுநீர்
செய்யும் அவர்கட்குத் தக்கதாய்; -செய்கை
அவர்க்குச் சரிக்குச் சரிக்கட்டும். கர்த்த
ரவரினது செய்கை யுணரா -தவரைத்
திருவார் இடித்திடுவார், கட்டமாட்டார் சீரார்.
திருக்கர்த்தர் சீரார்க் கெமது -திருத்துதி
சீரவரென் விண்ணப்பங் கள்தன்னைக் கேட்டார்சீர்.
சீரவர் கர்த்தரவர் என்பெலனும் -சீரெந்தன்
கேட கமுமாய் இருக்கிறார்; என்மனம்
மேடவரை நம்பி யிருந்தது; -மேடவர்
கையில் உதவியைப் பெற்றேன்நான்; ஆகையால்
ஐயா மனமென் களிக்கிறது; -ஐயா
உமையெந்தன் பாட்டால் அவரைத் துதிப்பேன்.
அமைதிகர்த்தர் தானே பெலனாம் -அமைதிகர்த்தர்
தாம்நெய்ச் சொரிந்த மனிதனுக்குச் சீராரே
ஆம்அரணாய் சீராம் அடைக்கலம் -ஆம்சீரார்
தேவரீர் நீருமது மக்களை மீட்டிட்டு,
தேவரீர் நீருமது சொந்தத்தை -தேவன்தாம்
வாழ்த்திடு; நீரவர்க்கு ஊண்கொடுத்து என்றென்றும்
வாழ்ச்சீர் உயர்த்தியருட் செய்து.
சங்கீதம் 28
தேவனின் பிள்ளைகளே, கர்த்தருக்கு மேன்மகிமை
மேவும் வலியைச் செலுத்துங்கள்; -தேவனாம்
கர்த்தருக் கேயதை நீர்ச்செலுத்தும். சீர்பெயர்க்கு
கர்த்தர்க்கு மேன்மகிமைத் தன்னையே -கர்த்தர்க்கு
நீர்செலுத்துங் கள்சீராய்; தூய அலங்காரம்
நீர்க்கொண்டு சீர்க்கர்த்தர் தன்னையே -சீர்த்தொழுதுக்
கொள்ளுங்கள். கர்த்தரின் சீரொலி தண்ணீர்மேல்
அள்ளித் தொனிக்கிறது; மேன்மகிமை -யுள்ளவர்
தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான
மேவிடும் தண்ணீர் களின்மேலே -தேவனுள்ளார்.
கர்த்தரின் சத்தம் வலியுளது; சத்தமாம்
கர்த்தரின் மேன்மை யுளதாமே -கர்த்தரின்
சத்தமது கேது ருமரங்கள் தன்னையே
சத்தம் முறிக்கிறது; கர்த்தர்தம் -சத்தத்தால்
லீபனோனின் கேது ருமரங்கள் தன்னையே
லீபனோனில் சீரார் முறிக்கிறார். -லீபனோனின்
நீளமரங் கட்கன்றைப் போலவும், லீபனோனை,
வேளார் சிரியனை மூக்கொம்பின் -ஆளும்சீர்
குட்டிகளைப் போலவும் துள்ளச்செய் கின்றாரே.
வெட்டிப் பிளக்குமே தீப்பிழம்பை -வெட்டித்தான்
கர்த்தரின் சத்தமது; சத்தமது பாலைவனம்
கர்த்தரின் சத்தத்தால் தானதிரும் -கர்த்தரவர்
காதேசு பாலையை தானதிரச் செய்கிறார்.
மேதவர் இன்சத்தம் பெண்மான்கள் -மேதினில்
ஈனும் படிச்செய்து, காட்டை வெளியாக்கும்;
மேனவரின் ஆலயத்தி லுள்யாவர் -மேனவராம்
கர்த்தருக்கே மேன்மகிமை என்றார்ப் பரிக்கிறார்கள்.
கர்த்தரவர் நீர்வெள்ளம் மேல்வீற்றே -கர்த்தர்
இருந்தார்; திருக்கர்த்தர் என்றும் அரசன்
இருக்கிறார் வீற்றிருக் கின்றார். -திருக்கர்த்தர்
தம்மக்கள் தன்னிற் பெலன்கொடுப்பார்; கர்த்தரவர்
தம்மக்கள் தன்னிற் அமைதியருள் -அம்செய்து
சீரார் அவர்களை வாழ்த்துவார் என்றங்கு
சீராண் இசைத்தாரே பா.
சங்கீதம் 29
கர்த்தாவே, என்பகைஞர் என்னைமேற் கொண்டவர்
கர்த்தாவே கீழ்மகிழ வொட்டாமல், -கர்த்தாவே
நீர்என்னைக் கைத்தூக்கி நீரெடுத்த தாலேநான்
சீர்உம்மைப் போற்றுவேன். என்தேவா -சீர்க்கர்த்தா
உம்மைநோக்கிக் கூப்பிட்டேன், என்னை குணம்செய்தீர்.
எம்கர்த்தா நீரெந்தன் ஆன்மாவை -வெம்குழி
விட்டென்னை ஏறச்செய் தேயென்னை வன்குழியில்
விட்டிடாது காத்தீர் உயிரோடு -மட்டிலாக்
தூயரே கர்த்தரின் சீரவரைப் பாடிடும்
தூய நினைவுசீர் கூருதலை -தூயரே
கொண்டாடும் சீராக; சீரார் சினமது
கண்ணிமைக்கும் நேரமே; சீரவர் -பண்ணிடும்
சீர்த்தயவோ ஆயுள் வரைநிற்கும்; மாலையில்
நீர்ச்சிந்தும் கண்கள்; விடியலில் -சீர்க்களிப்பே
என்வாழ்வில் என்றும் அசைக்கப் படுவதில்லை
என்றேன் திசையில் ஒருக்காலும் -நன்கர்த்தா
உம்தயவால் நீரென் மலையைத் திடமாக
அம்நிற்கச் செய்திருந்தீர்; நீர்மறைத்தீர் -உம்முகத்தை
அப்போதோ நான்கலங்கிப் போனேனே; செத்துநான்
தப்பாது வன்குழியில் நானிறங்கும் -அப்போது
என்ன பயனெனது செந்நீர்? புழுதியது
என்றும் துதிக்குமோ உம்மையே? -அன்றியும்
மெய்யதை அப்புழுதி நின்றறி வித்திடுமோ?
மெய்யவா, நீரே செவிகொடுத்து -மெய்யென்மேல்
சீரவா நீரிரக்க மாயிரும்; கர்த்தாவே
நீரே யெனக்குதவி செய்பவராய் -நீரிரும்
கர்த்தாவே, உம்மைநோக்கிக் கூப்பிட்டேன்; நோக்கிநான்
கர்த்தரைக் கெஞ்சினேன். என்புலம்பல் -கர்த்தாவே
நீரே மகிழ்க்களிப்பாய் மாறிடப் பண்ணினீர்
நீரே இரட்டைக் களைந்திட்டு -சீரெந்தன்
மேன்மகிமை பாழமைதி கொண்டிராமல் உம்மையே
மேன்மைசெய்து பாடும் படியாக -மேன்மகிழ்ச்சி
தன்னினால் என்னை உடுத்தினீர். என்தேவா
என்றென்றைக் கும்மும்மை நான்துதிப்பேன் -என்றவர்
தேவனைப் பாடினார் தேவா லயநிலம்
மேவியாண் வாங்கின போழ்து.
சங்கீதம் 30
கர்த்தாவே, உம்மைநான் நம்பி யிருக்கிறேன்;
கர்த்தாவே உம்நீதி யின்நிமித்தம் -கர்த்தாவே
நானொருப் போதுமே நாணாத வண்ணமாய்
மேனார் விடுவியும் என்னைச்சீர் -மேனவரே
உம்செவியை என்சொல்லிற் சாய்த்து விரைவாக
உம்மடியான் என்னைநீர் தப்புவியும்; -எம்சீரே
நீரே எனக்கு வலியமலை, நேரவா
நீரே எனக்கு வலியமலை -சீரார்
எனக்கு அடைக்கலமாய் சீரரணாய் நீரே
எனக்கிரும் சீரோய். எனது -இனச்சீரோய்
கன்மலையும் என்கோட்டை யும்நீரே; மன்னவா
கன்மலையும் என்கோட்டை யும்நீரே; மின்னும்
உமது பெயரினி மித்தம் எனக்கு
உமது வழிகாட்டி, என்னை -உமது
வழியில் நடத்தி யருளும் அறனே;
வழியில் அவர்கள் எனக்கு -விழிபடா
வைத்த வலைக்கு எனைநீக்கித் தப்புவியும்
வைத்தார்க்கை; என்சீர் அரணவா -வைத்தேன்நான்
உம்கையில் என்ஆவி ஒப்புவித்தேன்; எம்மெய்யும்
உம்கையில் என்ஆவி ஒப்புவித்தேன் -எம்மெய்யே
கர்த்தாவே, நீரென்னை மீட்டீர்சீர். வீணாக,
கர்த்தாவே, மாயையை பற்றுவோரை -கர்த்தாவே
நான்வெறுத்து, கர்த்தரையே நம்பி யிருக்கிறேன்.
மேன்சீரார் சீரிரக்கம் தன்னிலே -நான்களிப்பேன்
நீரென் இடுக்கண்ணைப் பார்த்து, எனான்மாவின்
சீரில் அலையச்சம் நீரறிவீர். -சீரவரே
என்பகையின் கைக்கென்னை ஒப்புக் கொடாமல்நீர்
என்பாதங் கள்நேர் விரிநிலத்தில் -நன்றாய்
நிறுத்தினீர். கர்த்தாவே நீரெனக்கு சீரே
நறுவிரங்கும், நானோ நெருக்கி -கறையவரால்
கண்வருந்தி என்ஆன்மா வோடென் வயிறுந்தான்
மண்போல் கருகிப்போ யிற்றதிங்கு. -மண்ணிலே
என்னுயிரும் வேட்டை அலைப்பினால் வன்னாக
என்சீரில் ஆண்டுகளும் போயிற்றே -என்குறையால்
என்வலியும் போய்குறைந்து, என்எலும்பும் போயுலராய்
என்பகைஞர் யாவர் நிமித்தமும், -என்அயலார்
ஏசிடவும், என்னை தெரிந்தோர்க்கு ஏளனமும்
தேசவீதி தன்னிலே கண்டவர்கள் -பேசாது
என்னை விடுத்தோடி போனார்கள்; என்னையிவர்
அன்னான் எனவறியா திங்கிவர் -என்னை
மறந்தார் முழுமையாய்; மண்பாண்டம் கீழே
அறுபட்டு விட்டதுபோல் தூளாய் -சிறப்பிலாது
போனேன்நான்; பல்லோர்சொல் சீரில்சொல் கேட்டேன்நான்
ஆனேன் திகில்சூழ்ந்து மக்களார் -போனார்
எதிரியென, என்னுயிரை வாங்கிடத் தேடும்
எதிரால் அலர்ந்து. திருவே -அதிரா
துமைநம்பி யுள்ளேன்நான்; நீரேயென் தேவன்
உமது கரத்திலென் நேரம் -இமைக்காது
என்பகைஞர் கைவிட்டு என்னைநீர் தப்புவியும்
என்னை இடுக்கண் இழைப்போரை -என்னைவிட்டு
நீக்கிவிடும்; நீருமது ஊழியர்மேல் உம்முகத்தை
நீக்கா தொளிரச்செய்(து); உம்மிரக்கம் -நீக்கா
தெனைமீட்டுக் கொள்ளும்; உமைநோக்கி சீரே
எனது குரலால் அழைத்தேன் -இனியனை
நாணாத வண்ணம்நீர் செய்யும்சீர் தீயோரோ
நாணிக் குழியிலே பேச்சிலார் -நாணி
யிருக்கட்டும்; சீரவனாம் நீதிமான் வன்னாய்
யிருமெதிர் பேச்சார் இகழ்வாய் -பெருமையோடு
அவ்வாய் உதடெலாம் கட்டப்பட் டுப்போக
அவ்வாறே சீராரை அஞ்சினோர்க்கும் -மெவ்வி
மனிதர்முன் நம்புவோர்க்கும், சீர்செய்யும் நன்மை
இனியதோ எவ்வளவு பேராய் -இனியவரே
செய்திருக் கின்றீர்சீர்; உம்முன்னே சீராரைச்
செய்வீர் மறைத்தங்கு, நாவுகளின் சண்டைக்கு
செய்வீர் அவரை விலக்கியே, -மெய்யுமது
செய்வீர் திருவே உமதுதிரு -மெய்யாரை
கூடாரத் தில்தான் ஒளித்துவைத்துக் காப்பீர்சீர்.
நாடதில் சீரார் அரணது -மேடாம்
நகரில் எனக்குத் தமது யிரக்கம்
நகருள் வியனார் விளங்க -அகத்துள்ளே
செய்த படியால், அவர்க்கே துதிசெய்தேன்.
செய்தேன் பிழையாய் புலம்பலாய் -செய்தேன்
அறிவிலான்நான் உம்முன் அழிந்தேன்நான் என்றே
அறிவிலிநான் உம்மை அழைக்க -அறிவிலான்
சொல்கேட்டீர் சீரோய்நீர்; சீரவரின் தூயரே
எல்லாரும் அன்புகூரும் சீராராம் -சொல்லாரை;
உண்மையான சீராரைத் தற்காத்து, தீச்செய்வோர்
தண்டிப்பார் சீரார் முழுமையாய். -அண்டியவர்
காத்திருக்கும் சீரே; திடமனது கொள்ளுங்கள்
மேத்தவரே உள்ளத்தை சீராக்கி -மேத்தவர்தான்
செய்வார் நிலைக்கொள்ள உள்ளங்கள் உம்முடைய;
மெய்யாரைப் பாடினான் பாட்டு
சங்கீதம் 31
சங்கீதம் 31 சவுலினால் வாதிக்கப்பட்டு தாவீது பாடிய சங்கீதம்
சங்கீதம் 32
மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம்.
எவன்மீ றுதல்மன்னிக் கப்பட் டதோஒ
எவன்பாவம் மூடப்பட் டத்தோ, -அவன்சீராய்ப்
பேறுபெற்றோன் கேள்மின். எவனூழல் தன்னைச்சீர்
வேறென எண்ணா திருக்கிறாரோ, -வேரில்
எவனாவி கள்ளமிலா துள்ள தெவனோ,
அவன்பேறு பெற்றோனே. நானோ -தவனாகிச்
சீராய் அடக்கிவைத்த மட்டுமாய், நித்தமும்
சீராண் கதறுத லாலேதான் -சீரிலாதென்
என்பும் உலர்ந்ததே. காலைமாலை என்றேதான்
என்மேலே உம்முடைய கைப்பாரம் -அன்னவா
நின்றிருந்த தாலேதான், என்சாரம் கோடையின்
வன்வறட்சி போல வறண்டதே -என்னூழல்
தன்னை மறைக்காமல், என்பாவத் தையுமக்கு
நின்றறிவித் தேன்சீரே; கர்த்தருக்கு -என்மீறு
தல்கள் அறிக்கை யிடுவேன்நான் என்றேனே;
அல்லாதென் பாவத்தின் தீமையை -நல்லார்நீர்
மன்னித்தீர் சீரவா நன்றிநன்றி. நன்றிநன்றி
நன்றிநன்றி நன்றிநன்றி நன்றிநன்றி -நன்றே
இதற்கா யுதவி கிடைக்குமக் காலம்
விதமாக பக்தியுள்ளோ யாரும் -வதைநீங்க
உம்மைநோக்கி விண்ணப்பஞ் செய்வானே; அப்பொழுது
அம்சீரில் நீர்வெள்ளம் வந்தாலும் -அம்மானை
நீரது சீரில் அணுகாது. நீர்சீரே
நீரெனக்கு சீராய் மறைவிடமாம் -நீரெனது
இக்கட்டு விட்டுவிலக் கிக்காத்து, மீட்பின்சீர்
திக்கெங்கும் பாடல்கள் சூழவே -தக்கதாய்ச்
செய்வீர்சீர். நன்றிநன்றி, நன்றிநன்றி, நன்றிநன்றி
நன்றிநன்றி, நன்றிநன்றி, நன்றிநன்றி -நன்றாக
சீருனக்குக் கற்பித்து, நீநடக்க வேண்டிய
சீராம் வழியை உனக்குநான் -சீராகக்
காட்டுவேன்; உன்மேல்என் கண்வைத்து, சொல்லுவேன்
நாட்டிலே ஆலோ சனையுனக்கு -நாட்டு
மதியில் பரிகழுதை போல இராதீர்.
மதியிலாத் தீயவன் பல்லாம் -அதுபாடு
கர்த்தரை நம்பி யிருக்கும் மனிதனையோ
கர்த்தரின் சீரிரக்கம் சூழ்ந்திடும். -கர்த்தருக்குள்
நீதிமான்கள் எல்லாரும் சீராய், மகிழ்வீரே
வேதவரின் நல்லுள்ளம், கொண்டோரே -மேதவர்க்காய்
நீங்களோ எல்லாரும் ஆர்த்து முழக்கமிடும்.
ஏங்கியே பாடினான் பாட்டு
சங்கீதம் 32
நீதிமா னோரே, களிகூரும் கர்த்தருக்குள்;
வேதர்த் துதித்தல் தகுமாமே -மேதினி
செம்மையா னோருக்குத் தானிங்கு. யாழாலே
செம்மையானோர் கர்த்தரைப் பாடி(து)தித்து, -செம்மையாய்
பத்து நரம்புகொண்ட வீணைகளால் சீரவரை
பத்து நரம்புகளை மீட்டிநீர் -சத்தமாய்ப்
பாடுங்கள். நல்ல புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பாடி மகிழ்வான ஆர்ப்பரித்து -பாட்டிற்கு
நேர்த்தியாய் சீராம் கருவிகளை மீட்டுங்கள்.
சீர்க்கர்த்தர் சொல்லது மேன்மையாம் -சீர்ச்செய்கை
எல்லாமே மெய்யாய் இருக்கிறது; நீதியிலும்
நல்ல நியாயத் திலும்விரும்பி -நல்லவர்
சீரார் இருக்கின்றார்; பூமி திருவவரின்
சீரான கண்ணோட்டத் தாலேதான் -சீராய்
நிறைந்திருக் கின்றது கேள்மின்னே. சீரார்
நிறைச்சொல்லால் வானமும், வாயின் -திறமூச்சால்
வானத்தின் சீர்ப்படையும் உண்டான தாமேகேள்
மேனாரோ ஆழியின் நீர்தனை -ஏனோ
புதையலாய்ச் சேர்க்கிறார் வைத்து. உலகின்
விதகுடிகள் எல்லாம் அவருக் -கதின்மக்கள்
அஞ்சி யிருப்பதாக; சீர்பூமி உள்ளனைத்தும்
அஞ்சி யிருப்பதாக கர்த்தருக்கு; -துஞ்சாதார்
சீரவர்ச் சொல்லிட ஆகுமே கேள்மின்னே,
சீரவர்க் கட்டளைக்கு நிற்குமே. -சீரவர்
மக்களின் ஆலோ சனையைதான் வீணாக்கி,
மக்களின் வீண்நினைவு தன்னையே -தக்கவர்
சீரார் அவமாக்கு கின்றாரே. கர்த்தராம்
சீராரின் ஆலோ சனைநித்தம் -சீராரின்
உள்ள நினைவுகள் நிற்கும் வழிவழியாய்
தள்ளாரைத் தெய்வமாகக் கொண்டவர் -தள்ளாராம்
சீரிறைவன் தன்னைத் தெரிந்தவர் மக்களும்
சீராக பேறுபெற்றார். கர்த்தரோ -சீரவர்
வானத் திலிருந்து நோக்கி, மனிதரெலாம்
வானவர் காண்கிறார். தம்வாசம் -வானத்
தினின்றவர் கண்ணோக் கமாயிருக் கின்றார்.
நனியவர் சீருள்ளம் எல்லாம் -நனியாய்
உருவாக்கி செய்யும்சீர்ச் செய்கைகள் எல்லாம்
திருவார் கவனித் திருக்க -திருமன்னன்
தன்படையின் மிக்காலே மீட்கப் படானேசீர்
தன்வலி மிக்கால் வலியவன் -வன்தப்பான்
மீட்க பரியது வீண்தானே; தப்புவித்து
மீட்காதே தன்சீற்றத் தாலது -மீட்பரின்
சீரிரக்கம் தன்னஞ்சி காத்திருக்கும் ஆத்துமாக்கள்
சீரார் மரணம் விலக்கியே -சீராரைச்
சீரார் விடுவிக்க, பஞ்சத்தில் காக்கவும்,
சீராராம் விண்ணவரின் கண்மேலாய்ச் -சீராக
நோக்கமாக நிற்கிறது. நம்முடைய ஆத்துமா
நோக்கமாக கர்த்தருக்குக் காத்திருக்கே -ஆக்கமவர்
தாமே நமக்குத் துணையும்நம் கேடகமும்
தாமோ அவர்த்தூய்ப் பெயர்நம்பும் -மேமான்
அவருள் களிகூரும் நம்முள்ளம் தானே;
தவனவா, உம்மையாம் நம்ப -தவனே
அதுபடியே உம்மிரக்கம் எங்கள்மேல் சீராய்
இதமாய் இருப்பதாக ஆம்.
சங்கீதம் 33
கர்த்தரை எக்கால மும்துதிப்பேன்; அத்துதி
கர்த்தருக்காய் எப்போதும் என்வாயில் -கர்த்தருள்ளே
என்ஆன்மா மேன்மையை பாராட்டும் சிற்றாரோ
என்ஆன்ம மேன்பாட்டை கேட்டவர் -இன்மகிழ்வாய்
நற்றாரே என்னோடு சீரார் துதியுங்கள்
நற்றாரே எல்லாம் ஒருமித்து -நற்றவரின்
சீர்ப்பெயரை நன்றாய் உயர்த்துவோம் நேரான்நான்
சீர்த்திருவை தேடினேன் சீர்நேரார் -நேர்த்திருவோ
என்சொல் செவிகேட்டார் அச்சங்கள் தன்னைநீக்கி
என்னையவர் மீட்டார் திருகர்த்தர் -அங்கே
அவர்நோக்கிப் பார்த்தோர் ஒளிபெற் றனரே
அவர்முகங்கள் நாணா திரச்செய் -தவரையான்
ஏழை அழைக்க திருக்கேட் டெனையவர்
பாழெல்லாம் நீக்கியே மீட்டாரே -வாழும்நற்
கர்த்தரின் தூதன் அவரஞ் சினோர்சூழ
கர்த்தரின் காப்பானாய் வேலியடை -கர்த்தரே
நல்லவர் என்பதை நாவிட்டு நீர்சுவையும்
நல்லவர்மேல் நம்பிக்கைக் கொண்டோரே -நல்லதாய்ப்
பேறுபெற்றோர் நீர்தானே; தூயரைப் போற்றிடும்
பேறுள்தூய் மக்களே அஞ்சிட -வேறே
குறைவின்றி நிற்பீர் உலகிலே; காட்டில்
குறைப்பசியால் சிங்கத்தின் குட்டி -அறற்றும்
திருதன்னை தேடுவோர்க்கோ எந்நாளும் ஒன்றும்
திருக்குறையா தேயிருக்கும் பிள்ளாய் -திருவெந்தன்
சொல்கேள்மின் நல்லவரை அஞ்சுதல் எப்படிகேள்
சொல்லித் தருவேன்நான்; நாடியிங்கு -நல்வாழ்வை
தேடிவரும் மாந்தர்யார்?; நாகாப்பீர் பொய்ச்சொல்லீர்
நாடிதில் தீமைவிட்டு நன்மைசெய் -நாடிவரு
வோர்க்கமைதி செய்து அதைத்தொடர்க நேர்சீரார்
நேர்நீதி யோர்க்காக கர்த்தரின்கண் -நேர்நோக்கம்
நீதியோர் பேச்சை செவிதிறந்து கேட்டிடுவார்;
ஆதியிறை; தீமைச்செய் அற்றாரை -நீதி
முகம்விலக்கி, கேட்டிடுவார் நீதிமானை மீட்க
முகம்காட்டி நேரவனை மீட்டிடுவார் -கேட்டிடுக்கண்
ஆவி நறுங்குண்ட மக்களை மீட்கிறார்
மேவி நொறுங்குண்ட உள்ளத்தார் -தேவனவர்
கிட்டே இருக்கிறார்; நீதிமானிற் குப்பலவாய்
கெட்டிடுக்கண் வந்திடும்; நின்றுதிரு -கெட்டிடுக்கண்
எல்லாம் விடுத்தவனை மீட்டிடுவார்; நேராணின்
எல்லா எலும்புகளைக் காக்கிறார் -அல்லாமல்
ஒன்றும் முறிபடுவ தில்லையே தீமையோ
வன்னாரைக் கொன்றிடும் கூற்றாமே; -வன்பகையாய்
நீதியோரைச் செய்வோரோ குற்றவாளி ஆவரே
நீதிபரர்க் கூழியஞ் செய்வோரின் -நீதியுள்ள
ஆன்மாவை தான்மீட்டு, நேர்தன்னை நம்பிடுவோர்
மேன்வீழ் ஒருவரின் மேலுமாய் -தான்குற்றம்
அங்கே சுமராது கேள்மின்னே என்றவன்
தங்கிப் பகன்றான்சீர்ப் பாட்டு
சங்கீதம் 34
கர்த்தாவே, நீரென் வழக்குசெய் மாந்தரோடு
கர்த்தாவே நீரே வழக்காடி, -கர்த்தாவே
நீரேசீர் என்னோடு போர்செயும் மாந்தரோடு
போரைப் புரியும்சீர் நீரிங்கு -நீரிங்கு
நீரே எனக்கென கேடகத்தை நீர்பிடித்து
நீரே பரிசையையும் நீர்பிடியும் -சீரே
எழுந்துநீர் நில்லுமே சீரே எழுந்து
வழுவாய் வதைபோர்க்கு நீரே -வழுவார்
எதிர்த்திடும் ஈட்டியை யோங்கி எதிர்த்த
எதிரியை நீர்மறித்து, நானே -நிதமுமுன்
மீட்பென என்னான்மா விற்கென சொல்லிடும்
மீட்பரே; என்னுயிரை வாங்கிட -நாட்டிலே
தேடுவோர் வெட்கப்பட் டேயவர் போகட்டும்
தேடுவோர் ஆங்கு கலங்கியே; -தேடியெனை
தீங்குசெய உள்ளம் நினைப்பவரோ நாணமே
தீங்குசெய்வோர்க் கிங்கே அடையட்டும் -தீங்குசெய்வோர்
காற்(று)முகத்தில் தூளாய்ப் பறந்திடும் நெற்பதராய்
தேற்றா தவரைச்சீர்த் தூதனார் -ஏற்கா
துரத்தட்டும்; மாந்தர் வழியுங்கார்ப் பாதை
விரைந்தே அவர்களைத் தூதன் -நரரை
சறுக்கல் வழியினூடே பின்தொடரட் டும்கீழ்
தறிக்க குழியில் வலையை -மறைத்தனர்
எவ்வித காரணமும் இல்லாமல் இங்குயேன்
எவ்வித காரணமில் ஆன்மாவிற் -மெவ்விகுழி
வெட்டினார்கள்; செய்தார் நினையா தழிவேதான்
நட்டமாய் வந்து, மறைவலை -நட்டவனை
மாட்டட்டும் அக்குழியில் தானே விழுந்தவன்
மாட்டி அழியட்டும். என்ஆன்மா -மீட்டவர்
கர்த்தரில் தானே களிகூர்ந்து, மீட்பராம்
கர்த்தரின் சீரான மீட்பிலே -கர்த்தாவே
என்மனது மீட்பில் மகிழ்ந்திருக் கும்சீரே.
என்னே, சிறுமைப்பட் டோனவனை -அன்னான்
விடவலியோன் கைக்கும், சிறுமையெளி மையோர்
இடத்தே பொருள்தனைக் கொள்ளை -யிடுகிறவர்
தன்னைவிட்டு தப்புவிக்கும் உம்மைப்போல் ஒப்பானோர்
என்றென்றும் யாரோ திருவேசீர், -என்றெந்தன்
என்புகளெல் லாம்சொல்லும். என்னே கொடுமையாய்
என்னெதிரே வீணர் எழும்பியே -என்னறியா
சான்றுகள் கேட்கின்றார்; நான்செய்த நன்மைக்கு
தான்சீரில் தீமையைச் செய்கிறார் -சான்றவர்
என்ஆன்மா திக்கற்றுப் போக விரும்புகின்றார்;
அன்னாரின் நோயிலே என்னுடுப்பு -மென்னிரட்டு;
நோன்பிருந்தேன் என்ஆன்மா தன்னிற் கொடுமையாய்
நோன்பிருக்க; மன்றாட்டு எந்தனின் -என்னின்
மடிதன்னில் வந்ததே; நானோ அவனை
அடியவனோ நண்பன் தமனாய் -நடத்தினேன்
தாய்க்காய்ப் புரண்டழும் சேயோன்போல் மென்னிரட்டு
சேய்நான் அணிந்து தலைகவிழ்த்து -வாய்மூடி
இங்கே நடந்தேன்; எனினெனக்கு ஆபத்து
மங்கிவர இங்கவரோ கூட்டமாய்த் -தங்கி
மகிழ்ந்தார்; அறிவிலியர், நானறியார் சேர்ந்து
இகழ எதிராகக் கூடி -அகமகிழ்ந்தார்
சோறுண்ன வீணாய் எதிராகப் பேசியவர்
வேறாக ஏளனம் பேசிட -மாறியவர்
ஏனோ கடித்தனர் பற்களைச் சீரில்லார்
மேனார், எதுவரை காண்பீரோ -மேனாரே
என்ஆன்மா தன்னை அழிவுக்கும், என்னருமை
என்சீர் அரிமாவின் குட்டிகட்கும் -என்நேரே
தப்புவியும்; தேவனே பேரவையில் உம்மையே
எப்போதும் சீராய்த் துதிப்பேனே -எப்போதும்
பேர்மக்கள் உள்ளே புகழ்வேனே உம்மைநான்
நேர்மீது வீணாய் எனதுபகை -நேர்நிமித்தம்
சீராய் மகிழாமல் காரணி யேதுமின்றி
தீரப் பகைப்போர் இமைச்சிமிட்டா -சீரில்
இருப்பார் களாக; அவர்கள் அமைதி
இருப்பாய் பகராமல் தேசத் -திரும்பல
நல்லமைந்து விட்டோர் எதிராக செய்கைகள்
அல்லாத எத்த நினைக்கின்றார் -அல்லாதார்
என்னெதிராய் தங்களின் வாயை விரிவாக
அன்னார் திறந்தவர்ஆ ஆஆஆ -இன்னபடி
எங்களின் கண்களே கண்டதென சொல்கிறார்
இங்கே யிதைக்கண்டீர் சீரோய்நீர் -தங்கிநீர்
வாய்திறவா தேயிராதீர்; தூரமாய் நீர்இராதீர்
தூய்கோவே என்தேவா, ஆண்டவரே -வேய்ந்திரா
என்வழக்கில் இந்நாள் அறஞ்செய்ய கண்களைத்
தன்விழித்து இங்கெழுந்தே சீரருளும் -நன்னவா
நீர்தான் உமதுடைய நீதியில் நீர்சீராய்
நேர்நியாயம் கேளும்; எனைக்குறித்து -நேர்பிழன்றோர்
இங்கே மகிழவொட்டா தேயிரும் சீரிலார்
தங்கள் மனதில்ஆ ஆஇதுதான் -இங்கே
விரும்பிய தென்றுரையா வண்ணமும், இங்கே
அரும்பவனை நாங்கள் விழுங்கி -அரைத்தோம்
எனவுமவர் பேசாத வண்ணமாய்ச் செய்யும்
மனதுநிறை வீண்மகிழ்வோர் நாணி -எனதெதிராய்
மேன்மைசெய் வோரெல்லாம் நாணத்தால் கூனிடவே
மேன்சீரார் மூடுமே, என்னெதிரார் -ஏன்மகிழ்வோ
வன்னிடுக்கண் கண்டவர்க்கு; என்நீதி வந்(து)விளங்க
இன்(று)விரும்பும் மக்களோ ஆர்பரித்து -என்றும்
மகிழ்ந்து தமதூ ழியரின் மகிழ்வை
மகிழ்ந்து விரும்பும் திருச்சீர் -இகத்திலே
மேன்மைபெற எப்போதும் சொல்லட்டும் சீராரை;
மேன்சீரார் தன்னின்சீர் நீதியும் -மேன்சீரார்
நற்றுதியும் என்நாவு என்றென்றும் தான்சொல்லும்
நற்றவன் பாடினான் பாட்டு
சங்கீதம் 35
கர்த்தருடைய தாசனாகிய தாவீது இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த சங்கீதம்.
தீயவனின் வன்பேச்சு என்உளத்திற் குத்தெரியும்;
தீயவனின் கண்கள்முன் தெய்வச்ச -மேயில்லை.
தீயவன், தன்னூழல் சீரில் அருவருப்பே
வேயாதே காணப் படுமளவும், -தீயவன்
தன்பார்வைக் கேற்றபடி தாந்தானே ஏமாற்ற
வன்பேச்சு பேசுகிறான். தீயவன் -வன்வாயின்
சொற்களது வஞ்சகமும் ஊழலுமாம்; நற்செய்கை
நற்றறிவில் நன்னடக்கை விட்டுவிட்டான்; -நற்றில்லா
தன்படுக்கை தன்னிலவன் ஊழலை யெண்ணியவன்
நன்றல்லா தன்வழியில் தானிலைத்து -வன்னாகப்
பொல்லாப்பை தான்வெறுக்கா தேயிருக் கின்றானே.
நல்லவராம் கர்த்தரின் கண்ணோட்டம் -நல்வானம்
தன்வரை யெட்ட விளங்கிற்றே, மெய்யவரின்
நன்முகில் சீரிரும் நல்லுயரம் -தன்னெட்டு;
சீர்நீதி மேலாமே மேன்மலைப்போல் உம்நியாயம்
வேர்விட ஆழமாம்; கர்த்தாவே -பார்மாந்தர்
சீர்விலங்கு எல்லாமே காப்பாற்று கின்றீர்நீர்;
சீர்தேவா, நும்சீரின் கண்ணோட்டம் -சீர்ரருமை!
கண்ணோட்டத் தின்கா ரணமே மனிதரவர்
மண்ணிலே விண்ணவர்ச் செட்டைகட் -கண்கீழ்
நிழலிலே வந்தடை கின்றார்கள். சீராம்
விழலார் நிலைக்கோவில் தன்னில் -பழநிறைவால்
உண்டு களிப்பர்; உமதுசீர் பேரின்ப
மாண்பாறால் சீர்நீரே தாகத்தைத் -மாண்பவர்க்குத்
தீர்க்கிறீர். வற்றாத ஊற்று உமதிடத்தில்
சீர்கர்த்தா உள்ளதே; உம்மொளியில் -சீர்ரொளியைக்
காண்கிறோம் சீர்த்திருவே. உம்மை அறிந்தார்மேல்
காண்சீரார்க் கண்ணோட்டம் காட்டிநீர் -மாண்பாகச்
செம்மை மனதுள்ளோர் மேல்உமது நீதியையும்
தம்மே அருளும்நீர் பாராட்டி. -தம்மில்
பெருமைச் செயலரின் கால்என்மேல் வாரா
திருக்கவும், வன்வழியார்க் கையும் -சிறியன்னை
சீரிற் பறக்கடி யாமலும் சீரிருப்ப.
சீரிலா தூழற்செய் மாந்தரார்ச் -சீரற்றே
தான்விழுந்தார்; மீண்டெழ மாட்டாமல் வன்னாகத்
தான்போனார் தள்ளுண் டவர்.
சங்கீதம் 36
சங்கீதம் 37
தாவீதின் சங்கீதம்.
பொல்லா தவர்க்குறித்து நீயெரிச்சல் தானடையாய்;
அல்லா வழுநியாயக் கேடுசெய்வோர் -அல்லார்மேல்
சீரே பொறாமையும் கொள்ளாதே. புல்லைப்போல்
சீரில் விரைவாய் அறுப்புண்டு, -சீரில்
பசும்பூண்டைப் போல்தானே வாடிடுவர். சீரார்
திசைதன்னில் நம்பிச்செய் நன்மை; -திசைதேசம்
தன்னில் குடியிருந்து மெய்யதை மேய்வாய்நீ
அன்னவர் கர்த்தரிடம் நீமனதில் -நன்மகிழ்ச்சி
யாயிரு; உன்மனதில் வேண்டுதல்கள் சீருனக்கு
ஆயவர் தானே அருள்செய்வார். -ஆயவர்
கர்த்தருக்கு உன்வழியை ஒப்புவித்து, சீராராம்
கர்த்தர்மேல் நம்பிக்கை யாயிரு; -கர்த்தரே
வாய்த்திடச் செய்வார் செயலெலாம். உன்நீதி
தூய்யொளிப்போல் மாற்றி நியாமமுன் -வேய்ப்பகலைப்
போலவும் சீரார் விளங்கச்செய் வாருனக்கு.
ஆலவர் கர்த்தரை நோக்கியமர் -சீலார்க்குக்
காத்திரு; செய்கைகள் வெற்றியடை வோன்மேலோ
மேத்திலாத் தீவினைச் செய்வமேலும் -மேத்தவா
நீயெரிச்சல் ஆகாதே; வஞ்சினம் ரௌத்திரம்
நீயடையா விட்டுவிடு; பொல்லாப்பை -வேயாய்ச்
செயல்புரிய வன்னெரிச்சல் வேண்டாமே; பொல்லார்
இயல்பாய் அறுப்புண்டுப் போவர் -இயலே
திருக்கர்த்தர் தன்னிற்குக் காத்திருப்போர் சீராய்
திருவினம் பூமிதனைக் காணி -திருவாக்கி
ஆள்வரே சீராக; இன்னும் சிலகாலம்
ஆள்தீயான் இல்லாதே போவானே; -ஆள்தன்னின்
உற்றுநோக்கி பார்த்திட்டால் இல்லையவன்; நல்லமைதி
பெற்றோரோ பூமியைச் சொந்தமாக்கி -பெற்ற
அமைதியி னாலே மனமகிழ்வர்; வன்னான்
அமைதியில் வன்செய்தே பற்கள் -வினைக்கடித்தான்
நீதிமானிற் தீமைச்செய் வன்னினைத்து; ஆண்டவர்
வேதவர் கண்டவனை சீர்நகைத்தார் -நீதி
சரிகட்டும் காலம் வருமென்றே சீரார்
சரியாய்க்காண் கின்றாரே; சிற்றார் -சரியெளியார்
சாகவும் செம்மை வழியார் விழவுமாய்
சாகவீச வாளை யுருவியவர் -வேகமாய்
வில்லவரின் நாணேற்று கின்றாரே தீயவர்;
வில்முறிந்தே தன்வாளால் தான்வீழ்வர் -அல்லாதார்;
வன்செயலார்ச் செல்வமது பேராம், அதைவிட
இன்நீதிச் செய்வோரின் கொஞ்சமே -நன்றாமே
வன்வழியார் தன்தோள்கள் நான்முறியும்; நீதிமான்
தன்னையோ கர்த்தரவர் தாங்குகிறார். -நன்னவரின்
நாட்களைக் கர்த்தர் அறிந்துள்ளார்; நன்னாரின்
மேற்சொந்தம் என்றுமிரும். ஆபத்து -மேற்கொள்ளா
பஞ்சத்தில் நெல்லால் உணவுன்பர் சீரவரே.
அஞ்சி அழிவரே வன்வழியார்; -அஞ்சாதார்
கர்த்தரின் வன்பகைஞர் ஆட்டின் நிணம்போல
கர்த்தர்முன் தீப்புகையாய் போவரே -கர்த்தாவே
வன்வழியான் காசுகடன் வாங்கிச் செலுத்தாமற்
வன்னாகப் போகிறான்; நீதிமானோ -என்றும்
இரங்கிக் கொடுக்கிறான். மேனவரால் வாழ்த்தைக்
கரம்பெற்றார்க் கோபூமி சொந்தம்; -கரம்பெறா
வன்சொல் பெறுவோரோ போவார் அறுப்புண்டு
நன்றாய் நலமாந்தன் நன்னடைகள் -நன்கர்த்த
ராலே உறுதிப் படுமாம், வழிச்சீர்மேல்
சீலவர் அன்பா யிருக்கிறார். -சீலவன்
தற்செயலாய் தானே விழுந்தாலும் தள்ளுண்டு
நற்றாணோ போவதில்லை; கர்த்தரவர் -நற்றாணை
தம்கையால் தாங்குகிறார். என்னெல்லா நாட்களிலும்
தம்கையை ஏந்திநிற்கும் நீதிமானை -அம்காண
வில்லைநான் என்னிளமை என்மூப்பில் என்றென்றும்
அல்லாதே அப்பத்திற் காய்யிரந்து -நல்லாண்
வழியாரும் போவதைக் காணவில்லை என்றும்;
வழியார்க் குணவளிப்பார் சீரார் -வழுவாது;
நாடோறும் சீரிரங்கிக் காசுகடன் தந்திடுவான்,
மேடவனின் சீர்வழியார் வாழ்த்துதனை -நாடிதிலே
பெற்றிடுவர். தீமையை விட்டு விலகிநீ
நற்றாணாய், நன்மைசெய்; என்றென்றும் -நற்றார்
நிலைப்பாய். நியாயத்தை மேலார் விரும்ப
தலைத்தூயர் தான்விட மாட்டார் -நிலைக்கர்த்தர்
கையென்றும்; என்றைக்கும் காக்கப் படுவார்கள்;
தீயவரின் வன்வழியோ போகுமே. -வேயாய்
அறுப்புண்டு; நீதிமான்கள் பூமியைத் காணி
சிறப்பாக்கிக் கொண்டு, அதிலே -சிறப்பாக
என்றும் வசிப்பார்கள் சீர்மக்கள் வாய்தானே
நன்றாமே ஞானத்தைச் சொல்லுமே; -நம்றாய்
நியாயத்தை சீர்மக்கள் நாவுபேசும் சீராய்;
தயவாக தேவன் அருட்செய் -வயவேதம்
சீராண் மனதுள் ளிருக்கிறது; சீர்நடையில்
சீரற்று ஒன்றும் பிசகாது; -சீரார்மேல்
வன்செய்வோர் கண்வைத்து கொல்ல வகைத்தேட
நன்கர்த்தர் கையில் விடுவதிலை -நன்னவரை;
சீரார் நியாயம் விசாரிக்கும் நாளிலே
சீராரை குற்றமெனத் தீர்ப்பதிலை -சீரவர்.
சீரவராம் கர்த்தருக்குக் காத்திருந்து, சீராரின்
சீராமே சீர்வழியைக் கைக்கொள்வாய்; -சீருனக்கு
அப்பொழுது பூமியைச் சொந்தமாக்க சீராரே
அப்பொழுது உன்னை உயர்த்துவார்; -தப்புசெய்
வன்வழியார் தானே அறுப்புண்டு போவதை
நின்கண்ணால் காண்பாய். கொடியதாய் -வன்தீயன்
ஓராளைக் கண்டேன்நான்; சீர்க்கேற்ற தாய்நிலத்தில்
சீராய் முளைத்துள்ள பச்சைமரம் -நேரைப்போல்
ஆங்கே தழைத்தவ னாயிருந்தான். ஆனாலும்
ஆங்கவன் சீரில் ஒழிந்திட்டான்; -ஆங்கேதான்
பாரும், அவனில்லை; தேடினேன், காணவில்லை.
பாரிலே நல்லவனை நோக்கிநீ -சீரவனைப்
பார்த்திரு; அம்மாந்தன் தன்னின் முடிவது
பார்தன்னில் நல்லமைதி; ஊழற்செய் -வோர்சீரில்
தானழிவார் கேள்மின்னே; சீரில் அறுப்புண்டு
தானவர்ப் போவதே தீமுடிவு; -மேனாராம்
கர்த்தரால் நீதிமானின் மீட்பு வருமிங்கே;
கர்த்தரே நீதிமானைக் காத்திடும் -கர்த்தரே
இக்கட்டு காலத்திற் சீராம் அடைக்கலம்;
தக்கவர்க்கு நல்லுதவிச் செய்திட்டு -தக்கார்
விடுவிப்பார் நீதிமானை; நீதிமான் சீரார்
இடம்நம்பி உள்ளதால் வன்னார் -இடம்விடாது
தப்புவித்து மீட்பார் திருவவர் என்றேதான்
அப்போது பாடினார் பாட்டு.
சங்கீதம் 37
கர்த்தாவே, உம்சினத்தில் என்னைக் கடிந்திடாதீர்;
கர்த்தாவே, உம்வெஞ் சினத்திலே -கர்த்தாவே
என்னைநீர்த் தண்டியா தேயும். திருவும்மின்
வன்னம்பு என்னுள்ளே தைக்த்ததே; -என்னை
உமது திருக்கை இருத்து கிறது.
உமது சினத்தினால் என்னில் -அமைதி
நலமில்லை; என்பாவத் தாலேயென் என்பில்
நலமில்லை; எந்தனின் வன்செய் -தலையெனதின்
மேலாய்ப் பெருகிற்று, பாரச் சுமைப்போல
மேலெந்தன் நின்றிட தாங்கேலா -சீலாரே
பாரமா யிற்றேசீர். என்மதி கேட்டினால்
சீரிலா தென்புண்கள் நாற்றமாய்ச் -சீரில்;
ஒடுங்கினேன் வேதனைப் பட்டுநான் ; நாளின்
நடுமட்டு மல்ல, முழுதும் -அடைந்திட்டே
துக்கித்து நான்திரி கின்றேனே. என்குடல்கள்
தக்கில் எரிபந்த மாயெரிய -தக்கிலா
என்னுடலில் சீர்நல மில்லை. இறைவனே
இன்பெலனற் றேமிக்காய் ஏன்நொறுக்கி -தன்பட்டேன்;
என்மனதின் கொந்தளிப் பாலே கதறுகிறேன்.
என்னேக்க மெல்லாமே உம்முன்னே -நன்னிருக்கே
ஆண்டவரே, என்தவிப்பு நும்சீர்க்கு தான்மறைவாய்
ஆண்டவா தானிருக்க வில்லையே. -வீண்ணாய்க்
குழம்பி அலைகிறது உள்ளமெந்தன்; விட்டே
அழன்றதே என்பெலன் என்னை -அழற்சியாய்
என்கண்கள் தன்னொளி இல்லாமற் போயிற்று.
என்நண்பர் என்தோழர் என்வாதைக் -தன்கண்டு
ஏனோ விலகு கிறார்கள்; இனத்தாரென்
ஏனோயேன் தூரத் திலேநின்றார். -ஏனோயென்
இன்னுயிரை வாங்கிடத் தேடு கிறவர்கள்
என்மறைவாய் கண்ணிகளை வைக்கிறார்கள்; -இன்னா
தெனக்குத்தான் பொல்லாங்கு தேடு கிறவர்
எனதெதிராய்க் கேடான வைகள் -தினம்பேசி,
நாள்முழுதும் வஞ்சனைகள் எண்ணு கிறார்களேன்.
ஆள்நானோ கேளாச் செவிடனாய் -ஆள்வாயும்
பேசாத ஊமை யனைப்போல வாய்த்திறவா
பேசா திருக்கிறேன். கேளாதான் -பேசாதான்
மாந்தனைப் போலானேன். கர்த்தாவே, நும்சீர்க்கு
மாந்தன்நான் காத்திருக் கின்றேன்சீர்; -மாந்தனுக்கு
என்தே வனாகிய ஆண்டவரே, நீர்விடை
நன்றாகத் தந்திடுவீர் சீரவா. -என்னிமித்தம்
சீரில் மகிழாத வண்ணம் இதைச்சொன்னேன்;
சீரவா என்கால் தவறிடும் -சீரிலாத
போதென்மேல் சீரில் பெருமைக்கொள் வார்களே.
ஏதேது நானோத் தடுமாறி -மீதுவிழ
ஏதுவாய் நானிருக் கின்றேனே; என்துக்கம்
ஏதேது எப்பொழுதும் என்முன்பாய் -ஏதோ
இருக்கிறது. என்பிழையை நானறிக்கை யிட்டு,
தரமிலான் பாவத் தினாலே -திருமனதில்
அல்லா திருக்கிறேன், என்பகைஞர் வாழ்ந்திட்டு
அல்லார் பலத்திருக் கின்றார்கள்; -நல்லிலாது
காரண மில்லாமல் என்னைப் பகைக்கிறோர்
சீரில் பெருகியிருக் கின்றார்கள். -சீரவா
நான்நன்மை தன்னையே பின்பற்று கின்றதால்,
தான்நன்மைக் குத்தீமைச் செய்வோரோ -தானென்னை
சீரில் எதிர்க்கிறார். கர்த்தாவே, என்னைநீர்
சீரவரே கைவிடா தேயும்நீர்; -சீரேயென்
தேவா, எனக்குநீர் தூரமாய் சீரிராதீர்.
தேவனே, என்மீட்பே ஆண்டவரே, -மேவி
யெனக்குதவத் தீவிரி யும்சீர்த் திருவே
எனப்பா டினார்தாவீத் பாட்டு.
சங்கீதம் 38
எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.
என்நாவால் பாவஞ்செய் யாதபடி நானோயென்
நன்வழிகள் தன்னைகாத்து, தீயவன் -என்முன்
இருக்குமட்டும் என்வாயை நான்கடி வாளம்
திருக்கி அடக்கிநான் வைப்பேன் -திருவென்றேன்.
நான்பேசா ஊமைய னாயிருந்தேன், மேன்நலமும்
நானிங்குப் பேசா தமர்ந்திருந்தேன்; -ஆனாலும்
என்துக்கம் மிக்காய் அதிகரித்தே; என்மனம்
என்னுள் அனல்கொண்டே; நான்தியானம் -தன்செய்ய
மூண்டது தீயும்தான்; அப்பொழுது என்நாவால்
வீண்ணில்லா விண்ணப்பம் செய்தேன்நான். -மாண்புடைய
கர்த்தாவே, நானெவ் வளவாய் நிலையற்றோன்
கர்த்தா இதைநான் உணரவே -கர்த்தாவே
என்முடி வையுமென் நாட்களின் சீரளவு
இன்னதென்றும் சீரெனக்குத் தான்தெரிய -இன்செய்
திதோயெனது நாட்களை நாலு விரல்போல்
அதின்கடை ஆக்கினீர்; ஆயுள் -எதோஉமது
பார்வைக்கு இல்லா ததுபோ லிருக்கிறது;
பார்த்தாலே மாந்தரெலாம் மாயையே -பார்த்தன்னில்
மாந்தன் அரிதாரம் இட்டுத் திரிகிறான்;
மாந்தன் அலையுண்கின் றான்விருதா -மாந்தவன்
சொத்துக்கள் சேர்க்கிறான். யாரோ கவருவான்
நித்தமறி யாதிருக்கின் றானவன். -நித்தமும்
ஆண்டவரே, நான்எதற்கு கண்ணோக் குகின்றேனாம்?
ஆண்டவரே, நீரேயென் நம்பிக்கை. -ஆண்டவரே
என்மீறு தல்களெல்லா வற்றி லுமிருந்து
என்னை விடுதலை யாக்கும்நீர், -என்னை
அறிவிலார்க் கையிலே நிந்தனைக்கு ஒப்புத்
தராதீரே. நீரிதைச் செய்தீர் -திருவென்று
நானெனது வாயைத் திறவா திருந்தேனே.
மேனவா என்னினின்று உம்வாதை -மேனார்
எடுத்தேநீர்ப் போடும்; உமது கரத்தின்
அடிகளால் நான்சோர்ந்து போனேன். -கடிந்தீரே
மாந்தனை ஊழலின் நேர்நிமித்தம், தண்டித்தால்
மாந்தனுரு பொட்டரிப்போல் வீணாகி -மாந்தன்
அழிந்திடப் பண்ணுகிறீர்; எம்மாந்தன் சீரில்
அழிந்திடும் மாயையே. கர்த்தா -விழிதிறந்து
வேண்டுதல் எந்தனின் கேட்டிடும், நானழைக்க
மாண்புடையார் தானே செவிகொடும்; -என்கண்
சொரிந்திடும் கண்ணீர்க்குப் பேசா திராதீர்;
இருந்தவர் எந்தையர்ப் போல -இருக்கின்றேன்
நாடோடி அந்நியனாய் உம்முன்னே நான்தானே
நாடிதில் நான்னினி இல்லாமற் -மாடிலாப்
போகுமுன்னே, தேறு தலடைய என்னிடத்தில்
வாகையார் சீரே பொறுத்து.
சங்கீதம் 39
சங்கீதம் எண் 40
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
கர்த்தருக் காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
கர்த்தரவர் என்னிடமாய்ச் சாய்ந்தெந்தன் -கர்த்தரவர்
நானழைக்கக் கேட்டார். குழியிலும் கீழுளை
யானசேற்றில் வீழ்ந்தென்னைத் தூக்கியெடும், -மேனவர்
என்கால் களைக்கன் மலையினது மேல்நிறுத்தி,
என்அடிகள் தன்னை உறுதியாய் -தன்படுத்தி,
தேவனை நாம்துதிக்கும் சீராம் புதுப்பாட்டை
மேவியவர் என்வாயில் தந்தாரே -தேவன்
அளித்த புதுப்பாட்டைக் கண்டுபலர் சீரார்
அளிகர்த்தர் நம்புவர். மெய்யில் -அளிசார்ந்தோர்
மேட்டிமைக் கொண்டோர் எவரையும் நோக்காமல்
மேட்டிருக் கர்த்தரை தன்நம்பும் -நாட்டவன்
மாந்தனே பேறுபெற்றோன்; என்தேவா சீரவரே
ஏந்தி எமதின் நிமித்தமாய் -மாந்தருக்குச்
செய்த உமது வியன்செயல்கள் எண்ணங்கள்
செய்கைகள் பற்பலவாம்; சீருமக்குச் -செய்கைகள்
சொல்லி முடியுமோ சீரவா? சொல்லவே
சொல்லிட வேண்டுமென்றால் எண்ணிக்கைச் -சொல்ல
அவையடங்கா சீரோய்; பலியையும் கைச்செய்
தவர்காணிக் கையை விரும்பா தவனெந்தன்
மெய்ச்செவியை நீர்த்திறந்தீர்; தீப்பலியை பாவந்தீர்
மெய்ப்பலியை நீர்கேட்க வில்லையே -மெய்யவரே;
அப்பொழுது நான்சொன்னேன்: ஈதோ, வருகிறேன்,
இப்போதும் நூற்கட்டில் என்னைகுறித் -தெப்பாரும்
சீர்நூலில் காண்பீர் எழுதி யிருக்கிறது;
சீர்த்தேவா, உம்விருப்பம் தன்செய்ய -நேர்விருப்பம்;
சீர்நேமச் சொற்கள் எனதுள்ளத் தில்லுளதே
நேர்சொன்னேன் அவ்வண்ணம்; பேரவையில் -சீர்நீதி
தன்னைநான் சொன்னேன்; உதடுகளை நான்மூடேன்;
என்கர்த்தா நீரதை நன்கறிவீர் -என்மனதுள்
உம்நீதி தன்னைநான் என்றும் மறைக்கவில்லை;
உம்மெய்யும் உம்மீட்பும் சொன்னேன்நான் -உம்மிரக்கம்
உம்முண்மை பேரவைக்கு சொல்லாமல் நான்மறையாய்
அம்வைக்க வில்லையே; கர்த்தாவே -உம்மிரக்கம்
தன்னை எனக்குக் கிடையாமற் போகவிடீர்;
நன்னார் உமது கிருபையும் -நன்மெய்யும்
எப்பொழுதும் என்னைத்தான் காக்கக் கடவது.
அப்பனே, எண்ணிக்கைக் கும்மடங்கா -தப்பானத்
தீமைகள் என்னைத்தான் சூழ்ந்தனவே, என்னூழல்
தீமையாய் என்னைத் தொடர்ந்ததே; -ஆமாம்
நிமிர்ந்துநான் பார்க்கவும் என்னாலே கூடா
இமையிருக் கின்றது, சீரில் -அவச்செயல்
என்மயிர் எண்ணிக்கை தன்னைவிட மிக்காமே,
என்மனம் சோர்ந்திடுதே. கர்த்தாவே, -என்னை
விடுவித் தருளும்; திருவே, எனக்கு
உதவிட வேத்தீ விரியும். -அடங்காதே
யென்னுயிரை வன்னழிக்கத் தேடு கிறவர்கள்
அன்னார் எலாருமே வெட்கிநாணி, -பின்னிட்டு
தீங்குசெய்ய இன்னா விரும்பு கிறவர்கள்
தீங்காக நாணட்டும் சீரவா -தீங்காக
என்பேரில் ஆ!ஆ!ஆ! என்றுசொல்லும் மக்களோ
என்றுமே தங்களின் வெட்கத்தின் -இன்னாப்
பலனை யடைந்தவர்கள் கைவிடப் பட்டே
அலர்வார் களாக. உமைத்தான் -நிலத்தினில்
தேடும் அனைவரும் உம்முள் மகிழட்டும்;
நாடி உமதுசீர் மீட்புதனை -நாடிதில்
சீராய் விரும்பு கிறவர் திருவிற்கே
சீராம் மகிமையென்றும் என்றவர் -சீரவர்
எப்பொழுதும் சொல்வார் களாக. சிறுமையும்
அப்பா எளிமை யுமானவன், -தப்பாது
கர்த்தரோ என்மேல் நினைவா யிருக்கிறார்;
கர்த்தாவே தேவரீர் என்துணையும் -கர்த்தாவே
என்னை விடுவிக் கிறவரு மாமேசீர்;
என்தேவா நீர்விரை யும்.
சங்கீதம் 40
சங்கீதம் எண் 41
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
சிறுமைப் படுவோன்மேல் எண்ணமுள்ளோன் சீரார்ப்
பெறுவான் திருப்பேறே; தீங்கில் -பெறுவான்
விடுதலையை கர்த்தரால் தானே; அவனை
விடுவித்தே பாதுகாத்து நன்னாண் -அடையுயிர்
தன்னோடு வைப்பாரே; பூமியில் பேறுபெற்று
நன்னாண் இருப்பானே; வன்பகைஞர் -வன்செய்ய
நீரவனை ஒப்புக் கொடீர்சீர். படுக்கையின்மேல்
சீரிலா நோயாய்க் கிடக்கிற -சீராக்க
சீராணைக் கர்த்தரவர் தாங்குவார்; நோய்தன்னைச்
சீராக்கி முற்றிலும் மாற்றிடுவீர். -சீரவா
கர்த்தாவே, என்மேல் இரக்கமாய் சீரிரும்;
கர்த்தாவே உம்மெதிராய் பாவமதை -கர்த்தாவே
நான்செய்தேன், என்ஆன்மா தன்னைக் குணமாக்கும்
நான்சொன்னேன் சீரவரே. எப்பொழுது -நான்சாவேன்
எப்பொழுது என்பெயர் இல்லா தழியுமென
தப்பாய் பகைஞரெந்தன் என்னெதிராய் -எப்போதும்
சொல்லு கிறார்கள். ஒருவன் எனைப்பார்க்க
நல்லதென வந்தா னெனநினைத்தால் -அல்லாணோ
வஞ்சனையாய்ப் பேசுகிறான்; தன்மனதில் தீயெண்ணம்
வஞ்சனையாய்க் கொண்டு, தெருவிலே -அஞ்சா
ததைத்தூற்று கின்றான். பகைஞரெந்தன் எல்லாம்
அதையெதிராய் சீரில் அவரோ -வதையாய்
முணுமுணுத்து, என்னெதிராய்த் தானிருந்து, அல்லார்
முணுமுணுப்போர் பொல்லாங்காய்த் தானே -முணுமுணுப்பார்
தீராநோய் சீரில்லான் தன்னைப் பிடித்தது;
சீரிலான் வன்நோய்ப் படுக்கையை -சீராகி
வன்னாண் இனியெழுவ தில்லையெனச் சொல்கிறார்.
என்னுயிர் நண்பனும், நம்பின -என்னாளும்
அப்பம் புசித்தவனாம் மாந்தனும், என்மேலே
தப்பாகத் தன்குதிகால் தூக்கினான் -அப்போதோ
கர்த்தாவே, நீரெனக்கு சீரிரங்கி, நானவர்க்கு
கர்த்தா சரிக்கட்ட என்னைநீர் -கர்த்தா
எழும்பச்செய் திட்டு பகையெனதின் மேலே
வழுவாக வெற்றி கொளாதே -வழுயென்னை
மன்னித்தே என்மேல்நீர் அன்பாய் யிருக்கின்றீர்.
என்நேரில் என்னைநீர்த் தாங்கியே, -என்றென்றும்
உம்முன்னே என்னை நிலைநிறுத்து வீர்சீரோய்.
அம்மிசுரேல் தேவனாம் கர்த்தரவர் -அம்சீரார்
என்றென்றும் சீர்துதிக்கப் பாத்திரர் ஆமென்ஆ
மென்னென்றே பாடினார் பாட்டு
சங்கீதம் 41
மானது நீரோடை தன்னையே வாஞ்சித்து
மேனவர் நோக்கிக் கதறும்போல், -மேனவராம்
தேவனே, என்ஆன்மா உம்மைத்தான் வாஞ்சித்துக்
மேவிக் கதறுதே சீரவா -தேவன்மேல்
என்ஆன்மா சீருயிரோய் தேவனின் மேலேதான்
நன்தாக மாயிருக் கின்றது; -என்தேவா
நானெப் பொழுதும்மின் சந்நிதியில் வந்துநிற்பேன்?
மானமிலார்: உன்தேவன் எங்கேசொல்? -கானகத்தில்
நாள்தோறும் என்னிடத்தில் சொல்கின் றபடியால்,
நாள்தோறும் என்கண்ணீர் என்னூணாய் -வேள்சீரே
மாறியதேன் காலைமாலை நானதை உண்டேனேன்.
மாறாதார் பண்டிகையை ஆசரிக்க -வேறிலாது
அம்மக்க ளோடேநான் கூடவே சென்றுதான்
எம்மிறையின் கோவிலுக்குச் போய்வந்தேன் -அம்மா
இதைநினைக்க என்னுள்ளம் என்னுள் உருகு
வதையுணர் கின்றேனே; சீரார் -மதிமுன்னே
நோக்கிநீ காத்திருப்பாய் நீமனதில் எக்கலக்கம்
தாக்கிடாது சீராரின் மீட்பினார் -நோக்கியவர்
தன்னைத் துதிப்பேன்நான்; என்தேவா என்ஆன்மா
தன்னுள் கலங்குதே; ஆதலால் -என்சீரோய்
யோர்தான் நதிபாயும் தேசத் திலும்எர்மோன்
சீர்மலை தன்னிலும் மேலிருந்து -சீர்நேரே
உம்மை நினைக்கிறேன் சீர்த்தேவா; என்தேவா
உம்மதகு கள்தன்னின் பேரிரைச்சல் -தம்மாலே
ஆழத்தை ஆழம் அழைக்கிறது; உம்மலைகள்
ஆழியின் சீர்திரைகள் எல்லாமே -வாழென்மேல்
ஏனோ புரண்டுபோ கின்றது. ஆகிலும்
மேனவர் கர்த்தர் பகலில்தம் -மேனாம்
இரக்கத்தைக் கட்டளைச் செய்கிறார் சீரார்;
இரவி லவரைநான் போற்றி -தரமாகப்
பாடும்நற் பாட்டுயென் வாயி லிருக்கிறது;
நாடியே என்னுயிரின் தேவனை -ஆடவன்
நோக்கிநான் விண்ணப்பஞ் செய்கிறேன். சீரவரோ
நோக்கிடும் என்கன் மலையன்றோ, -தாக்குபோல்
ஏனென்னை நீர்மறந்தீர்? வன்பகையால் கீழாகி
ஏனோ வருந்தித் திரியவேண்டும், -மேனவரே?
என்றுநான் சொல்லுகிறேன். உன்தேவன் எங்கென்று
என்பகைஞர் நாள்தோறும் என்னோடே -வன்னாகச்
சொல்லி, எனைநிந்தித் தல்லென் எலும்புகளை
வல்லாய் உருவியே குத்துகின்ற -வல்வலிபோல்
உள்ளதே; ஆன்மாவே, நீயேன் கலங்குகிறாய்?
உள்ளேனோ நீதியங்கு கின்றாயோ? -தள்ளாதத்
தேவனை நோக்கிநீ காத்திரு; என்மீட்பும்
தேவனுமாம் சீரவரை நானின்னும் -மேவித்
துதிப்பேனே என்றென்றும் என்றவன் சீராய்த்
துதித்தவர் பாடினார் பாட்டு.
சங்கீதம் 42
தேவனே, நீரென் நியாயத்தைக் கேட்டுநீர்
தேவனே பக்தியிலா மக்களோடு -மேவி
எனக்காய் வழக்காடி, சூதுசெய் தீயோன்
மனிதனுக்கு என்னைநீர்த் தப்ப -நனிவையும்.
என்அரணாம் தேவன்நீர்; ஏனென்னைத் தள்ளுகிறீர்?
என்பகையால் நானொடுங்கி நான்வருந்தி -வன்னாக
ஏன்திரிய வேண்டுமோ? உம்மொளி தன்னையும்
மேன்மெய்யை யும்சீர் அனுப்பிடும் -மேன்தேவா
என்னை நடத்தியவை தூய்ச்சீரின் குன்றிற்கும்
என்னை உமது வசிப்பிடம் -தன்னிற்கும்
என்னையவைக் கொண்டுபோ கட்டுமே. அப்பொழுது
நன்னவர் தேவநின் பீடம -தின்னண்டை
நான்வந்து தேவ னிடத்திற்கும் சேருவேன்.
மேன்சீராம் தேவனே, என்தேவா, -மேன்சீரே
உம்மைச் சுரமண் டலத்தால் துதிப்பேன்நான்
எம்ஆன்ம, நீயேன் கலங்குகிறாய்? -எம்முளத்தில்
உள்ளேனோ நீதியங்கு கின்றாயோ? நல்லவராம்
தள்ளாதார் நோக்கிநீ காத்திரு; -தள்ளாதார்
என்மீட்பும் தேவனுமாம் சீரவரை -மேவித்
துதிப்பேனே; பாடினார் பாட்டு.
சங்கீதம் 43
தேவனே, எந்தையர் நாட்களாம் அந்நாளில்
தேவனே, நீர்நடப்பித் தச்செய்கை -தேவனே
சீரவர்கள் எங்களுக்குத் தானறிவித் தார்களே;
சீரவைத் தன்னையே எம்செவியாற் -சீராகக்
கேட்டோம்யாம் தேவனே. தேவரீர் உம்கையால்
நாட்டினீர் வன்னார் துரத்திவிட்டு -நாட்டிலே
சீரிலார் தானழித்து சீரினத்தைச் செய்தீரே
நேரவா நீர்ப்பரவ; வாளாலே -சீரிந்த
தேசத்தைச் சொந்தமாக்க வில்லையவர்; சீர்த்தோளும்
வீசிவரை மீட்டிட வில்லையே; -பாசமாய்
நேசமாய் நீரிருந்தீர் சீரதினால் உம்வலக்கை
பாசத்தோள் சேர்த்தே முகத்தினும் வீசிடும்
சீரொளிதான் நேசத்தார் மீட்டது. தேவனே,
நீரென் அரசன்; திருயாக்கோப் -சீரவர்க்குச்
சீரந்த மீட்பைநீர் கட்டளைத் தாருமே.
சீரில்லார் எம்பகைவர் தன்கீழே -சீரோய்
விழத்தாக்கி எங்களுக்கு வன்னெதிராய் தானே
யெழும்பிடும் வன்னாரை யாமோ -வழுமிதிப்போம்
சீரார் பெயராலே தானே. வழுவதம்பை
சீரவா நான்நம்பேன்; -என்வாளும் -சீரவா
என்னைமீட்கா தேசீரே; நீரே எமதுடைய
வன்பகைஞர் விட்டுமீட்டு வன்பகைஞர் -தன்னைநீர்
நாணச்செய் கின்றீரே; தேவனுக்குள் நித்தம்யாம்
நாணாது மேன்மைபா ராட்டுவோம்; -மாணார்
உமது பெயரையாம் என்றும் துதிப்போம்.
எமது திருவே எதற்காய் -உமதுசீர்
மக்களாம் எங்களைத் தள்ளிவிட்டு, நாணச்செய்
தக்கபடி எங்கள் படைகளோ டுக்கூட
ஏன்செல்லா தேயிருக் கின்றீரோ. வன்பகைஞர்
மேன்னடைந்து எம்மையேன் பின்னிட்டுத் தான்திரும்பப்
பண்ணுகிறீர்; எங்கள் பகைஞரோ தங்களுக்
கென்றெம்மைக் கொள்ளை யிடுகிறார்கள். -அன்னவா
நீரெம்மை ஆடுகளைப் போல இரையாக
சீரில்லா தொப்புக் கொடுத்தெம்மை, -சீரில்லார்
மக்களுக் குள்ளே எமைச்சிதற டிக்கிறீர்.
தக்கிலார் உம்மக்கள் தன்னைநீர் -தக்கவிலை
யில்லாதே விற்கிறீர்; சீரிலார் செய்கையால்
இல்லை பலனுமே; எம்மாற்றான் -இல்சொல்லாய்
பேசிடவும், எம்சுற்றார் ஏளனம் பேசிடவும்
தேசத்தார் விட்டுக் கொடுத்தீரேன்? -தேசயிடை
யாமோ பழமொழியாய் மக்கள் எமைநோக்கத்
தாமே தலைத்தூக்க வும்செய்தீர் -தீமைச்சொல்
சத்தம தாலே, பகைஞர் நிமித்தமும்,
அத்தார் பழிவாங்கு கின்றார்நி -மித்தமும்,
என்நாணம் நித்தம் எனக்குமுன் பாய்இருக்
கின்றது; என்முகத்தின் வெட்கமெனை -வன்மூடு.
ஈதெலாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மையாம்
வேதா மறக்கவும் இல்லையே, -வேத
உடன்படிக்கைத் தன்னிற்குக் கேடேதும் செய்யில்.
இடமதில் பேரரவு எம்மை -இடுவித்து
நீர்நொறுக்கிப் போட, மரண இருளினால்
சீரில் லெமைமூடித் தானிருந்தும் -சீரெமுள்ளம்
பின்வாங்க வும்இல்லை, எம்கால்கள் உம்பாதை
நன்விட்டுத் தான்விலக வும்இல்லை. -நன்னாராம்
எம்தேவன் விட்டுயாம் வேறே சிலைநோக்கி
எம்கையை தானெடுத் தேசேவித் -தம்வன்னாய்
என்றாலே தேவனதை ஆராய்ந்து, சீராக
வன்செயலை கேட்டு விசாரித்தே -வன்செயற்காய்
தூற்றாரோ? எம்மனதின் வேயவை சீரறிவார்.
மேற்றவா, உம்நிமித்தம் எந்நேரம் -மாற்றாரால்
கொல்லப் படுகிறோம்; சீரிலா வெட்டுபட்டுக்
கொல்லப் படும்ஆடு கள்போல - அல்லாதார்
எண்ணப் படுகிறோம். ஆண்டவரே, நீர்விழியும்;
மாண்பார் உறங்குவ தேனோசீர்? -மாண்பாரே
நீரெழுந் தேயருளும், எங்களை என்றைக்கும்
சீரவா தள்ளி விடாதிரும். -சீரவா
ஏனோவும் சீர்முகத்தை நீர்மறைத்து, எம்சிறுமை
ஏனோதான் எம்நெருக்கத் தையும்நீர் -மேனார்
மறந்து விடுகிறீர்யேன்? எம்ஆன்மா வன்னாய்
அறனில் புழுதிமட்டும் தாழ்ந்தே -திறனற்றே
எங்கள் வயிறு தரையோடு ஒட்டினது.
எங்களுக்கு சீருதவ சீரெழுவீர் -பங்கவா
உம்முடைய கண்ணோட்டம் தன்னிமித்தம் எங்களை
நும்சீரே மீட்டு விடும்.
சங்கீதம் 44
என்னுள்ளம் நன்மகிழ்வால் பொங்குகின்ற தேநானே
மன்னன் குறித்துக் கவிதைதனை -என்நாவு
சீர்விரைவாய் நேரெழுதும் சீர்கோலாம் நேர்மக்காள்
சீர்த்திருவே நல்லழகே மற்றாரைச் -சீர்விட
நல்லழகர் நீர்தானே; உம்முதட்டில் சீரருள்
நல்லாய் பொழிகிறது; ஆகவே -நல்லழகே
தேவன் உமையென்றைக் கும்வாழ்த்து கின்றார்சீர்.
மேவிநீர் மேன்மைச்சீர் உம்மின்வாள் -மேவி
உமது அரைதனில் கட்டிக்கொண்(டு); உண்மை
உமது திருநீதி சேர்த்து -அமைதியொடு
மேன்மை உமதிலே வெற்றியோடு ஏறிவாரும்
நன்வலது சீர்க்கரத்தால் மேன்மையான -மேன்செயல்கள்
தன்னை உமக்கு விளங்கச் செயலாகும்
என்னேகூர் உம்மம்பு! மன்னரின் -வன்பகைஞர்
நெஞ்சினில் அம்புகள் பாயுமே; வீணர்கள்
நெஞ்சிலே பட்டு விழுவாரே -வஞ்சத்தார்;
தேவா, அரியணை உம்முடைய தென்றென்றும்
தேவனே உள்ளது, உம்மரசின் -மேவும்சீர்
செங்கோலோ நீதியுள்ள செங்கோலாய் சீரிருக்கே;
மங்கா தவரேநீர் சீரவரே -எங்கும்நீர்
நீதி விரும்பி செயல்வன்னை நீர்வெறுத்தீர்
ஆதலால் தேவனவர் உம்தோழர் -வேதரைப்
பார்க்கிலும் சீர்மகிழ் நெய்யால் சொரிந்தாரே
பார்க்கின்றோம் தந்தத்தால் செய்யரண் -பார்பார்க்க
நீர்விடும் போழ்து மகிழவே சேண்நாறு
நேர்ப்போளம் சந்தனம் சீர்க்கிராம்பு -நேர்சீரோய்
உம்மாடை தன்னின்று வீசுகின்றே நாற்றமது
உம்மக்கள் தன்னில் அரசரின் -அம்மகள்கள்
சீருண்(டு); அரசனின் சீர்மனைவி ஒப்பீரின்
சீரணிப் பொன்னணிந்து நிற்கிறாள் -சீரவள்
உம்வலக்கை தன்னில் அவளிருக்க; சீரவளே
எம்சொல்கேள் உன்செவி சாய்த்துநீ -எம்சொல்லை
எண்ணிநீ உன்மக்கள் தந்தையின் வீட்டையும்
எண்ணாது நீமறப்பாய்; அப்போது -விண்ணரசர்
உன்னழகில் அன்பா யிருப்பார்நேர்; ஆண்டவர்
உன்னுடையச் சீரதால் நீபணிவாய் -அன்னவரை
தீரு மகள்வருவாள் காணிக்கைக் கையேந்தி
சீராம் திருவுடையோர் சேர்ந்துன்னை -சீராரோ
உன்தயவை நாடி வணங்குவர்; சீரரசி
தன்னுள் முழுமகிமை உள்ளவள் -அன்னவள்
ஆடையே பொற்சரிகை தானன்றோ; கண்கவர்
ஆடைதனை போட்டவளாய் மன்னனிடம் -ஆடியங்கு
தோழியர் கன்னிகைகள் பின்வர சீரவள்
தோழியர் முன்னர் அரசரிடம் -தோழியர்
விட்டிட வந்திடுவர் சீர்க்களிப்பாய் சீரரணில்
மட்டிலார் தந்தையர் விட்டுநீர் -நட்டராம்
உம்தனையர் பூமிமேல் நீர்வைப்பீர் ஆளவே
உம்பெயரை எல்லாத் தலைமுறைக் -கும்சொல்வேன்
சீரதினால் சீர்மக்கள் சீரும்மைச் சீரென்றும்
சீராய் விடாது துதித்து.
சங்கீதம் 45
சங்கீதம் எண் 46
அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டு.
தேவன் நமக்கு அடைக்கலமும் நற்பெலனும்,
மேவிவரும் ஆபத்துக் காலத்தில் -தேவனே
சீரனு கூலத் துணையுமானார் சீரவர்.
நேரிலாதே பூமி நிலைமாறின் -சீரிலாதே
கன்மலைகள் நீர்க்கடலில் சாய்ந்தாலும், நீரதின்
வன்பொங்கி மேன்மலைகள் சீரற்றே -வன்னதிர்ந்தா
லும்மே திருமக்கள் யாமஞ்சோம் சீரவரே;
தம்மாறு உண்டங்கு நீரதின் -அம்தேவ
சீர்நகரை, சீரார் வசிக்கும்சீர் தூயிடத்தை
சீர்நீ ரதுச்செய்யும் இன்மகிழ்வே -சீர்தேவன்
சீராய் நடுவிலே தானிருக்க, மேலிடம்
சீரில் அசையாது; ஞாவிடியல் -சீரார்
உதவுவார் சீரிற்கு; சத்தமிட்டார் மக்கள்
அதமானார்; மன்னர் முழங்கும் -விதத்திலே
பூமி உருகிப்போ யிற்று. படைச்சீரார்
ஆமே இருக்கிறார் நம்மோடு -மேமானாம்
தேவனார் யாக்கோபின், தேவன் நமக்குயர்ந்த
மேவும் அடைக்கலமே; பூமியிலே -சாவியே
பாழ்க்கடிப்பை தானடப்பிக் கின்றதிருச் செய்கைகள்
வாழ்மக்காள் வந்துபாரும். சீராரோ -வாழ்ப்பூமி
தன்னின் கடைமட்டும் போர்களை ஓயச்செய்
கின்றாரே; வில்லை யொடித்தவர் -வன்னீட்டி
தன்முறித்து; தேர்களை சுட்டெரித்தார்; ஆதனால்
நன்றாய் அமர்ந்திருந்து சீர்நானே -உன்தேவன்
என்றறிவீர்; மக்களுள் சீராய் உயர்ந்திருப்பேன்
என்றும்நான் பூமியில் மேனுயர்ந்து -தன்னிருப்பேன்
என்றார் திருவவர் தாமே, படைச்சீரார்
என்றும் இருக்கிறார் நம்மோடு -மேமானாம்
தேவனார் யாக்கோபின், தேவன் நமக்குயர்ந்த
மேவும் அடைக்கலமே சீர்.
சங்கீதம் 46
கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
மக்களே எல்லாரும் கைகொட்டி, தேவனார்
தக்கார்முன் ஆர்ப்பரியும் நல்லொலியாய் -தக்காரே.
மேனவர் கர்த்தர் திகைப்பூட்டும் சீரவர்
மேனாரே பூமியின் மீதெங்கும் -மேனரசர்.
மக்களை யேநமக்கு நேர்த்தந்து, நம்கால்கீழ்
மக்களை கீழ்ப்படுத்து வார்சீரார். -தக்காராம்
அன்பா யிருக்கும்நல் யாக்கோபின் சீர்சிறப்பாம்
நன்தேசம் சீர்நமக்குச் சொந்தமாக -நன்றாய்த்
தெரிந்தளிப்பார். சீலவா இன்னிசையால் போற்றி;
பெரிதான எக்காளச் சத்தம் -வரவங்கே
தேவனார் ஆர்ப்பரிப் போடே எழுந்தருள
தேவனைப் போற்றிநீர்ப் பாடுங்கள், -தேவனை
மேவிநீர்ப் பாடுங்கள்; நம்மரசர் போற்றிநீர்
தேவனைப் பாடுங்கள், பாடுங்கள். -தேவனே
பூமி யனைத்திற்கும் சீரரசன்; போற்றிநீர்
தாமே கருத்துடன் பாடுங்கள். -பூமியின்
மக்கள்மேல் தேவன் அரசாளு கின்றாரே;
தக்க அரியணைமேல் வீற்றுள்ளார் -தக்கதூய்.
மக்களின் சீர்த்தலைவர் ஆபிரகாம் தன்னினது
தக்காராம் தேவனின் மக்களாக -தக்கபடி
சேர்க்கப் படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள்
நேர்சீரார் தேவனின் சொத்தாமே; -சீர்க்கர்த்தர்
தானே பெரியவரும் உன்னதமும் ஆனவர்
மேனாரைப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 47
கோராகின் புத்திரருக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு.
கர்த்தர் பெரியவர், தேவனின் சீர்நகரில்,
கர்த்தர் தமதுதூய் கன்மலையில் -கர்த்தரவர்
மிக்காய்த் துதிக்கப் படத்தக் கவர்சீரார்.
பக்கமலை சீயோன் வடக்கிலே -தக்கதலம்
எல்லாம் மகிழ்ச்சியு மாயிருக் கின்றது,
நல்லதுவே பேரரச ரின்நகரம் -நல்சீராம்.
அந்நகரச் சீராம் அரமனைகள் தன்னிலே
அந்நகர தேவன் உயர்ந்ததான -அந்தூர்
அடைக்கலமாய் தேவன் அறியப் படும்சீர்;
கடந்து ஒருமனப் பட்டே -நடந்துவந்தார்
மன்னர்கள் கூடி; அடைக்கலமாம் தேவனை
மன்னர்கள் கண்டபோது கண்திகைத்து -மன்னரவர்
பேர்சீர்க் கலங்கி விரைந்தோடி னார்களே;
சீர்க்கர்த்தர் கண்டவர் பேறுபெண்போல் -சீர்வலிப்
பெற்றங்கு வேதனைப் பட்டனர் மன்னரவர்;
நற்றவரே கீழ்க்காற்றால் தர்சீசு -நற்கப்பல்
நீருடைக் கின்றீரே; நாம்கேட்ட நல்படியே
சீரது நன்னகராம் தேவனின் -சீராம்
நகரமதில் கேட்டபடி கண்டோமே; தேவன்
நகரத்தை என்றென்றும் செய்வார் -நகர்நிலையே;
தேவனே உம்கோவி லின்நடுவே உம்கிருபை
மேவியாம் எண்ணுகிறோம் சீரவா; -தேவனே
உம்பெயர் சீராய் விளங்கும்போல் பூமியில்
உம்புகழும் சீராய் விளங்குகின்ற -தம்கடையில்;
உம்வலக்கை நீதியால் தானிறைந் துள்ளதே.
உம்நியாயத் தீர்ப்புகளால் சீராக -எம்சீயோன்
தான்மகிழட் டும்சீரோய்; யூதாவின் பெண்மக்கள்
தான்களி கூரட்டும் சீரவா; -மேன்நகராம்
சீயோனைச் சுற்றி உலாவி, அதினுள்ள
சீயோனின் கொத்தளங்கள் எண்ணிடுங்கள் -சீயோனை.
பின்வரும் சீர்வழியார் தன்னிற்குச் சொல்லவே
நன்மதிலை சீர்ப்பார்த்து ஆங்குள்ள -நன்சீர்
அரமனைகள் உற்றுப்பார்த் தேகவனிப் பீரே.
பரத்தின் திருவவர் சீரார் -மரணம்
வரைநம்மை சீராய் நடத்துவார் என்றே
திருவையவர் தான்போற் றினர்.
சங்கீதம் 48
கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
மக்களே, நீங்களெல்லாம் கேளுங்கள். பூமியின்
மக்காள், சிறியர் பெரியவர் -தக்கசெல்வர்
ஏழையென நீங்களெல்லாம் வந்து செவிகொடுங்கள்;
ஆழமான ஞானத்தை என்வாய்தான் -ஆழமாய்ப்
பேசும்; மனமெந்தன் சீர்ருணர்வை தான்தியானம்
தீசிலே செய்திடும்; என்செவியை -பேசும்
உவமை மொழிக்குநான் சாய்த்துவேய்ச் சொல்லை
தவமாக வீணையில் மீட்டி -யவைதான்
வெளிப்படுத்து வேன்நானே. என்னைத் தொடர்வோர்
இழிஊழல் என்னைச்சூழ்த் தீங்கு -இழிநாளில்,
நானச்சம் கொள்ளவேண்டு மோயிங்கு? தன்செல்வம்
மேனாக நம்பி பொருளையே -மேனெனக்
கொள்வோரில் தன்தமன் வீணழிவைக் காணாமல்
அள்ளியதில் மீட்கும் பொருளதை -தள்ளாதார்க்
கைதன்னில் தந்திடக் கூடாதே. சீரிலார்
மெய்யுலகு சேர்வ தரிதாமே; -மெய்யே
ஒருபோதும் வீடு வரயேலாச் சீரால்.
அருமையான ஞானியரும் செத்து -கரச்செல்வம்
சேர்த்தந்த மூடரும் அஞ்ஞானி கள்சேர்ந்து
பார்தன்னில் மற்றார்க்குத் தன்செல்வம் -சேர்த்துவைத்துப்
போவதைக் காண்கிறான் செல்வந்தன்; தன்வீடு
மேவி வசிக்கும் இடமெலாம் -ஏவாப்
பரன்பரையாய் சீராய் இருக்குமென உள்ளம்
வரைநினைவு என்றே பெயர்தம் -வரைகட்கு
இட்டிடு கின்றாரே செல்வந்தர்; ஆகிலும்
நட்டாரில் மேன்மாந்தன் தான்நிலைக்கான் -மட்டில்
வனவிலங்கிற் கொப்பா யழிகிறான் மாந்தன்;
இனமவரின் சீரில் வழிதான் -மனமயக்கம்;
ஆகிலும் சீரென்றே அன்னார் வழியாரோ
வாகைச்சொல் மெச்சுகின்றார் ஏனவரோ -ஆகககா;
ஆட்டுமந்தை யைப்போல பாதாளத் தில்செல்வர்
நாட்டில் மரிக்க கிடத்தினார்கள்; -நாட்டில்
மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மைக்
கரவழியோர் தானே விடியல் -வரவும்
அவர்களை ஆண்டுகொள் வார்களாமே; வீட்டில்
அவர்கள் நிலைத்திருக்க யேலா -தவரின்
உருவத்தைப் பாதாளம் தானழிக்கும். ஆயின்
திருவவர் என்ஆன்மா தன்னை -கரைமீட்பார்
பாதாள வல்லமைக்குத் தப்புவித்து; சீரவர்
வேதவர் என்னையேற்றுக் கொள்வாரே. -மேதினில்
சீர்பெற்றுச் செல்வந்தன் ஆகியவன் வீட்டினது
சீர்மகிமை பேராகும் போழ்தங்கு -சீர்நீயும்
அஞ்சாதே; சீர்பெற்றோன் தான்மரிக்கும் போழ்தவன்
மிஞ்சியொன்றும் கொண்டுபோவ தில்லையே; -எஞ்சி
யவன்மகிமை பின்பற்றிச் செல்வது மில்லை.
அவன்உயிரோ டேயிரும் போது -அவன்தனது
ஆன்மாவை வாழ்த்தினாலும்: நீயுனக்கு நன்மையை
மேன்வாழ்வை நாடினாய் என்றுமாந்தர் -மேன்சீரே
என்றங்கு சீரைப் புகழ்ந்தாலும், என்றென்றும்
நன்னொளியைக் காணாதத் தன்முன்னோர் -வன்வழியேச்
சேர்கின்றான்; ஒப்பாமே வன்விலங்கிற் மேன்மைகள்
சேர்ப்பொருந்தித் தானிருந்தும் தன்னிலே -சீர்ரறிவு
இல்லாதான் இவ்வுலகில் என்றவர்ப் பாடினார்
நல்லாரும் சீராகப் பாட்டு
சங்கீதம் 49
கிழக்கு முதலாக மேற்குவரை கர்த்தர்
அழகாக பூமிதனைச் சொல்லால் -அழைக்கிறார்;
மிக்கழகாம் சீயோனில் தான்தேவன் பட்டொளியாய்
தக்கார் ஒளிவீசு கின்றாரே; -தக்காராம்
நம்தேவன் வந்திடுவார், பேசா திரார்சீரார்;
நம்தேவன் சீர்முன் எரியும்தீ -நம்தேவன்
சுற்றிலும் பேராய்ப் புயலது கொந்தளிக்கும்;
நற்றவர் தம்மக்கள் தன்னையே -நற்றாய்
நியாயந்தீர்க் கும்செயலாய் விண்புவி தன்னை
இயலார் அழைப்பாரே; சீரார் -வயபலியால்
என்னோடே சீராய் உடன்படிக்கைச் செய்ததூயர்
தன்னை வரக்கூட்டும் என்னிடத்தில் -என்பாரே.
வானங்கள் சீரவரின் நீதி அறிவிக்கும்;
வானவர் தேவனே நீதிபதி -தானவர்;
என்மக்காள், கேள்மின்னே, பேசுவேன்; என்னினமே
உன்னெதிராய்ச் சான்றாய் இசுரேலே -வன்சொல்வேன்,
நானே திருத்தேவன், உன்தேவன் நானேதான்.
மேனாம் பலிகளுக்காய் உன்னைநான் -தானே
கடிந்திடேன் சீரவா; உன்தீப் பலிகள்
தடையிலா தென்முன் உளதே; -கடையரே
உன்வீட்டுக் காளைகள் உன்தொழுவ ஆடுகள்
தன்னையுன் கையினின்று வாங்குவதில் -என்மக்காள்;
எல்லா வனவிலங்கும், கன்மலைமேல் தான்திரியும்
எல்லா மிருகங் களும்எந்தன் -நல்சொத்தே.
மேம்மலை வாழ்ப்பறவை யெல்லாம் அறிவேன்நான்;
ஆம்நடக்கும் எல்லாமே எந்தனின் -மேம்மேசீர்.
மக்களே, நான்பசியில் வாடப் பகரமாட்டேன்;
தக்கிந்த பூமியும் சீர்நிறைவும் -தக்காரென்
சீர்ச்சொத்தே. ஏறு நினம்தின்று ஆட்டினது
நீர்ச்செந்நீர் தன்னைக் குடிப்பேனோ? -சீர்மகனே
தேவனுக்கு நீதுதியாய்ச் சீர்ப்பலி யிட்டிடு,
தேவனே உன்னத மானவர் -தேவனுக்கு
உன்சீர் பொருத்தனைகள் தன்னைச் செலுத்திவிடு;
உன்வாழ்வில் ஆபத்து நேரத்தில் -என்னைநோக்கி
நீயழை; உன்னை விடுவிப்பேன், சீராக
நீயென்னை செய்வாய் மகிமையே -தீயவரை.
தேவனவர் நோக்கி: எனதுசீர் நேமங்கள்
மேவி எடுத்துரைக்கம் சீரெனது -தேவ
உடன்படிக்கைத் தன்னையுன் வாயினால் சொல்ல
அடேய்யுன் நியாயமென்ன இங்கே? -மடையனே
கற்பித் தலைநீ பகைத்தெனது சொற்களை
அற்றாதே பின்னாய் எறிந்திட்டாய். -அற்றவனாம்
கள்ளனைக் காணும் பொழுதவ னோடுநீ
கள்ளமாய்ச் சேருகிறாய்; பங்குண்டு -தள்ளிவிடும்
மாண்பிலார் சேர்க்கை யவரோடே கீழுனக்கு.
மாண்பிலாப் பேச்சிற்கு உன்வாயை -மாண்பற்றே
பொல்லாப்பாய்த் தானே திறக்கிறாய், உன்நாவு
பொல்லாத சூழ்ச்சிகளை ஏன்தானோ -அல்லாய்ப்
பிணைக்கிறது! நீயமர்ந்து உன்தமன் தன்னின்
துணைச்செய்யா வன்னெதிராய்ப் பேசி -பிணைக்காது
தாயின் மகனுக்(கு) அவதூறாய்ச் செய்கிறாய்.
வேயாய் யிவைதன்னை நீசெய்ய -ஆயன்யான்
பேசா திருந்தேன்; உனைப்போல நானுமிங்கே
தீசிலிருப் பேனென் நினைத்தாயே; -தேசத்தில்
நான்உன்னைத் தானே கடிந்துகொண்டு, குற்றங்கள்
தான்சீரில் உன்கண் களுக்குமுன்பாய் -நான்நிறுத்தி
ஒவ்வொன்றாய் கண்காணக் காட்டுவேன். தேவனை
எவ்வாறோ சீரில் மறப்போரே -இவ்வகையை
உள்ளத்தில் எண்ணுங்கள்; எண்ணா விடின்நானே
வெள்ளமாய்ப் பீறிடுவேன் உம்மைத்தான் -தள்ளி
விடுவிக்க ஆளிருப்ப தில்லையும்மை. மேனாய்
நடந்து துதிபலிச் செய்வோன் -நடையாலே
என்னை மகிமைப் படுத்துகிறான்; செவ்வையாய்த்
தன்வழியைச் செய்கின்ற மாந்தனுக்கு -தன்மீட்பைத்
தேவன் வெளிப்படுத்து வேன்நென்று சொல்கிறார்
மேவிப் புவிதனில் சீர்.
சங்கீதம் 50
தேவனே, உம்மிரக்கத் தின்படி நீரெனக்குத்
தேவா யிரங்கும், உமதுடைய -மேவும்
மிகுந்த இரக்கங் களின்படி எந்தன்
வகைமீறு தல்களை நீங்க -அகமெந்தன்
தூய்ப்படுத்தும் சீரவா; எந்தனின் ஊழலை
தூய்த்தேவா நீர்க்கழுவி பாவமற -தூய்மையாக்கும்
என்மீறு தல்களை நானறிந்தேன்; என்பாவம்
என்முன்னே எப்பொழுதும் நிற்கிறது. -வன்னாக
தேவரீர் உம்மெதிராய் நான்பாவஞ் செய்தேனே,
தேவா உமதுடைய கண்களுக்கு -மேவிலா
பொல்லாங்கை நான்நடப்பித் தேனய்யா; நீர்பேசும்
நல்நீதி தான்விளங்க தீர்க்கும்போ -நல்தூய்மை
உம்முடைய தான்விளங்க செய்தேன் அறிக்கையை.
நும்மறிவீர் தீச்செயலில் நானுரு -வம்மானேன்
என்தாய் எனைப்பாவத் தில்தரித்தாள். உள்ளத்தே
வன்னிலா மெய்யிருக்க வேண்டுமென -அன்னார்
விரும்புகிறீர்; அந்த மறைவிடத்தில் ஞானம்
தெரியப் படுத்துவீர் சீரோய். -திருவே
எனைநீரோ ஈசோப்பால் தூய்ச்செய்யும், அப்போ
வினைவிட்டு நான்தூய்மை யாவேன் -எனைக்கழுவும்,
அப்போ(து) உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
அப்பா மகிழ்ச்சியும் ஆர்ப்பரிப்பும் -தப்பாண்நான்
கேட்கும் படிசெய்யும், அப்பொழுது நீர்நொறுக்கி
நாட்டானின் என்பும் களித்திடும் -வாட்டமாம்
என்பாவங் கள்தன்னைக் காணாது உம்முகத்தை
தன்மறைத்து என்னூழல் எல்லாமே -இன்னீக்கும்
தேவனே, தூயுள்ளம் என்னில் படைத்திடும்
தேவா, நிலைவர ஆவியை; -மேவிப்
புதுப்பியும் என்உள்ளம். உம்முன் தனையே
எதுவகையும் தள்ளாதூ யாவி -வதையாய்
எடுக்கா திரும்நீர்; உமதின்சீர் மீட்பிற்
கடுத்த மகிழ்வை திரும்பக் -கொடும்சீரே
துள்ளலான ஆவி எனைத்தாங்கச் செய்யும்நீர்.
கள்ளருக்கு அப்போது உம்வழிகள் -அள்ளிநான்
கற்பிப்பேன் சீரவா; பாவிகள் உம்மிடத்தில்
கற்றதால் மீண்டு மனந்திரும்பி -நற்றாவர்.
தேவனே, மீட்பரென் தேவா, குருதியின்
ஏவு பழிக்கென்னை நீங்கலாக்கும்; -தேவனே
அப்பொழுது என்நாவு உம்நீதி தன்னையே
தப்பாது ஆர்பரித்துப் பாடுமே. -தப்பாமல்
ஆண்டவரே, என்னுதடு கள்தான் திறந்தருளும்;
ஆண்டவரே அப்பொழுது என்வாயும் -ஆண்டவராம்
உம்புகழை நன்கறி விக்கும்சீர். தீப்பலியோ
வெம்பலியோ சீர்க்கு விருப்பமிலை -எம்கர்த்தா
நீர்விரும்பி னாலதை நான்தருவேன் சீரவா;
நீர்விரும்பும் சீர்ப்பலிகள் ஏதென்று -சீர்ச்சொன்னீர்
தேவனுக் கேற்ற பலிகள் நொறுங்குண்ட
மேவிலா ஆவி; நொறுங்குண்ட, -தேவா,
நருங்குண்ட உள்ளத்தை நீர்தள்ளீர் சீரோய்.
அருமைநகர் சீயோன் தனையும் -விருப்பப்
படிசெய்யும் சீரே; திருச்சீரோய் நீர்தான்
அடிநகரின் சீர்மதில்கள் தன்னை -எடுப்பித்துக்
கட்டும்சீர். அப்பொழுது தீப்பலி நீர்விரும்ப
நட்டாரோ உம்பீடத் தின்மேலே -மட்டிலா
ஏறுகளைக் கொண்டுவந்து சீரார்ப் பலியிடுவர்.
சாறாக உள்ளமூற்றி பாட்டு
சங்கீதம் 51
'வலியுள்ள மாந்தனே பொல்லாப்பில் ஏனோ
வலியோய் பெருமையாய் உள்ளாய் -வலியவரின்
சீரிரக்கம் என்றென்று முள்ளதே; சீரில்லா
சீரிலானே கேடுசெய்ய எத்தனிக்க -சீரில்லாக்
கேடுசெய்யும் உன்நாவோ தீட்டியக் கத்தியது
கேடுதனை நீவிரும்பி, நன்மையையோ -கேடென்
வெறுத்தாய்நீ; உண்மையை பேசாத பொய்யன்
அறுக்குமுன் நாவது சாவின் -அறுசொற்கள்
தன்னை விரும்புவ தேனோ உனைத்தேவன்
உன்னிடத்தி னின்றகற்றி நற்றுயிரார் -நன்தேசம்
விட்டுன்னை சீரழிப்பார் கேள்கேடே விட்டுன்னை
நட்டயிடம் பேரும்போ நீதிமான்கள் -இட்டதஞ்சி
உன்னையவர் கண்டுசிரிப் பாரேனென் நன்கர்த்தர்
தன்னை வலியெண்ணா தேயிவன் -தன்சீரை
தன்வலியென் றெண்ணி யவன்தானே தீவினையால்
தன்வலியைப் பேராக்கி யோனிவனே -அன்றவர்
சொல்வார் உனைக்குறித்து ஆங்கே நகைத்தவர்;
சொல்தேவன் கோவிலில்நான் பச்சைமரம் -நல்லவரின்
சீரிரக்கம் தன்னையே நம்பியுள்ளேன் என்றென்றும்;
சீரோய் இதைச்செய்தீர் என்றும்மை -சீராண்நான்
என்றென்றும் போற்றி பெயருந்தன் வந்திடவே
நன்றாக காத்திருப்பேன்; தூயராம் -நன்றடியார்
முன்பாக சீரே பெயருமதின்' என்றுதன்
நன்றில்லா போதும்சீர் பாட்டு
சங்கீதம் 52
“தேவனில்லை” என்று மதிகேடன் தன்மனதில்
மேவியே சொல்லுகிறான். சீரில்லார் -மேவியே
தங்களைத் தாங்கள் கெடுத்து, அருவருப்பாம்
பங்கமாய்ச் செய்கைகளைச் செய்கிறார்கள்; -இங்கேயோ
நன்மைசெய் கின்றோன் ஒருவனும் இல்லையே.
நன்கர்த்தர் விண்ணின்று தேவனை -நன்றாகத்
தேடும் உணர்வுள்ளோன் உண்டோ எனப்பார்க்க,
தேடித் திருகர்த்தர் கண்ணோக் கினார்சீரார்.
எல்லாரும் இங்கே வழிவிலகிக் கெட்டார்கள்;
அல்லாமல் நன்மைசெய் மாந்தன் ஒருவனுமில்.
ஊழல்செய் மாந்தர் ஒருவனுக்கும் நன்மதி
பாழாகா வண்ணம் அறிவிலையோ? -பாழாக்க
அப்பத்தை உண்பதுபோல், என்மக்கள் தன்னையே
இப்போது பாழாக்கு கின்றாரே; -எப்போதும்
அம்மக்கள் கர்த்தரைத் அன்னார் தொழுவதில்லை.
அம்மக்கள் அங்கே எதிராக -தம்வந்தார்
விட்டாரே தேவன் அவரென்பைத் தான்நொறுக்கி
நட்டாரைக் கண்டவர் வீணாக -மட்டஞ்சி
விட்டனரே அச்சமில்லா நன்னிடம் தன்னிலும்!
வெட்கியவர் நாணவே செய்தனை -நட்டார்க்குச்
சீயோ னிலிருந்து சீரிசுரெல் மீட்பது
ஆயே வருவதாக; கர்த்தரவர் -தீயரை
விட்டுத்தம் மக்கள் சிறையிருப்பைச் சீர்திருப்ப
நட்டார்க்குச் சீர்களிப்பும், நன்மகிழ்ச்சி -நட்டார்க்கே
என்றிங்கு உண்டாகும் தானே இசுரெலுக்கு
என்றவர்ப் பாடினான் பாட்டு.
சங்கீதம் 53
தேவனே, சீரோய் பெயருமதிற் காகயென்னை
தேவனே மீட்டிடும், உம்முடைய -மேவுதிரு
வல்லமையால் செய்யும் நியாயமெனக் காகசீரோய்
வல்லவரே என்திரு விண்ணப்பம் -வல்கேட்டு,
என்வாயின் சொற்களைக் கேளும்சீர். அந்நியர்
என்னெதிர்த்து வந்தே எழும்புகிறார்; -என்னுயிரை
தீயர் எடுக்கவே தேடுகின்றார்; தேவனைத்
தீயரோ தம்முன் நிறுத்திநோக்கார். -தூயரே
தேவா உதவுபவர் நீரேசீர்; ஆதரிப்போர்
மேவியென் ஆன்மாவை கூடயிரும்; -ஏவி
எதிரியர் தீமைக்குத் தீமைச் சரிக்கட்
டெதிரியர் உம்சீராம் மெய்யால் -எதிரவரை
விட்டொழி யும்சீர். துதிப்பலி நானுமக்கு
இட்டிடுவேன்; பேர்துதித்தல் நன்னலமே -விட்டு
இடுக்கணெலாம் நற்றார் விடுவி -திடச்சீர்
இடுக்கண்கள் போனதே சீரோய் -இடத்திலே
என்னெதிரி யர்தன்னின் நீதி சரிகட்ட
என்கண்கள் கண்டதே சீராக -என்றவனை
சீப்பூரார் காட்டிக் கொடுத்தாலும் சீரிறையை
மேப்பிள்ளை பாடினான் பாட்டு
சங்கீதம் 54
தேவனே, எந்தனின் வேண்டுதல் கள்தன்னை
தேவாநீர் கேட்டருளும்; நான்செய்யும் -மேவுஞ்சீர்
விண்ணப்பங் கள்தனிற்கு நீர்மறைந்தி ராதேயும்.
விண்ணவா, சொல்லிற் செவிகொடுத்து -மண்ணெனக்கு
சீர்விடைத் தாரும் அருளிநீர்; என்பகையின்
நேர்ரிலா கூக்குரலால் தீயோன்செய் -சீரில்
இடும்பைக்காய் என்தியானத் தில்நான் முறையிட்
டடுக்குகின்றேன் சீரவா; தீயோர் -கிடந்தென்மேல்
சாட்டுபழி வீண்வன்மம் கொண்டே பகைக்கின்றார்
காட்டிலே என்மனதோ வெம்மையாய் -வேட்டை
மரணத் திகில்லென்மேல் வந்தது. அச்சம்
கரநடுக்கம் என்னைப் பிடித்து -அருக்களிப்பு
என்னைத்தான் மூடிற்று சீரவா; அப்பொழுது
என்கரத்தில் நன்புறாபோல் நல்லிறக்கை -இன்றிருந்தால்
நான்பறந்து போய்த்தான் இளைப்பாறு வேன்சீரே.
நான்தொலை தூர மலைந்திரிந்து -நான்வனத்தில்
தங்கிடுவேன் சீரே. பெருங்காற்று வீசுபுயல்
இங்குவர நான்தப்பத் தீவிரிப்பேன் -இங்கென்றேன்.
ஆண்டவரே, நீரவரைத் தானழித்து, பேசுமொழி
தாண்டிப் பிரிந்துபோகச் செய்வீர்சீர்; -மாண்பில்
கொடுமையும் சண்டையும் சீர்நகரில் கண்டேன்;
அடிக்க நகர்மதில்மேல் சுற்ற -நடுவிலே
ஊழலும் வாதையும் உள்ளது; கேடுபாடும்
ஆழநகர் தன்நடுவில் உள்ளது; -கீழாம்
கொடுமையும் வன்கபடும் வீதியை விட்டு
அடங்கி விலகுகின்ற தில்லை. -அடடா
எனைவசைச் சொன்னோன் பகைஞனில் சீரே
எனைவசைந்தோன் தன்னை சகிப்பேன் -வினைப்பகை
யென்றால்தான்; என்னெதிராய் வீண்பெருமைச் சொன்னவன்
என்பகையில்; என்பகை யென்றாலோ -வன்னவன்
கண்படாது நான்மறைந்தே நின்றிருப்பேன் சீரவா
மண்தனில் என்னீடாம் மாந்தனும் -மண்நிலத்தில்
என்வழி காட்டியும் தோழனுமாம் நீயுரைத்தாய்;
நன்றாய் ஒருமித்து, இன்பமாக -என்தோழ
ஆலோ சனைச்செய்து, கூட்டமாய் கோவிலுள்
சீலர்நாம் போனோம். மரணமது -சீலா
தொடர்ந்து பிடிப்பதாக; இன்னு யிரோடே
அடையட்டும் வன்குழியுள் சீலில்; -நடுவீட்டில்
உள்ளத்தில் பொல்லாங்கு உள்ள தவரினுள்.
தள்ளாத தேவனை நோக்கிநான் -உள்ளழைப்பேன்
கர்த்தர் எனைமீட்பார். மாலை மதியமென
கர்த்தரை நான்தியானஞ் செய்தவரை -கர்த்தரிடம்
நான்முறைச் சொல்ல அவரெனது சத்தத்தைக்
மேன்சீராய்க் கேட்பார். திரண்டுபலர் -தானெதிர்க்க
சீரவரோ நேரிட்ட போரையவர் நீக்கிவிட்டு
சீராக என்ஆன்மா மீட்டுவிட்டார் -சீரமைந்து;
ஆதி முதலாக வீற்றுள்ள தேவனவர்
வேதரே கேட்டு, அவர்களுக்கு -வேதர்
விடையளிப்பார்; மாறுதல்கள் நேரிடாத தாலே,
கடையரஞ்சாப் போனாரே சீரில் - நடுவே
அமைதலொடு நின்றார் எதிராகத் தன்கை
தனைநீட் டுடன்படிக்கை தன்னை -வினைமீறி
சீரில் நடந்தான். அவன்வாயின் சொற்களோ
பார்வெண்ணெய்ப் போல மெதுவாமே, -சீர்ரில்
மனமோ அழித்திடும் போர்தானே; சொற்கள்
அனைத்தெண்ணெய் போலச் சிறப்பாம் -வினையவைதன்
வாளாம் உருவினதாய்க் கொல்லுமாம். கர்த்தராம்
வேளவர்மேல் உன்பளுவை வைத்திடு -வேளவரே
உன்னைச்சீர் ஆதரிப்பார்; நீதிமானை சீரவர்
என்னாளும் தள்ளாட வொட்டாரே. -என்தேவா
நீரவரை கீழழிவின் வன்குழியில் செய்இறங்க
நீரேதான் செய்திடுவீர்; செந்நீரை -சீரிலாது
வன்விரும்பி சூதுள்ளோர் ஆயுளின் நாட்களில்
நன்பாதி சீர்வரையி லாகிலும் -தன்னே
பிழைத்திருக்க மாட்டார்கள்; நானோசீ ரும்மில்
பிழைத்திருக்க உம்மைநம்பி னேன்.
சங்கீதம் 55
தேவா, யெனக்கு இரங்கும்; மனிதனோ
தேவா யெனைவிழுங்கப் பார்க்கின்றான் -தேவனே
நாடோறும் போர்செய் தெனையொடுக்க; என்பகைஞர்
நாடோ றுமெனை விழுங்கப்பார்; -வேடவராய்
என்னை எதிர்த்துப்போர் செய்வோர் பலராமே.
என்மனம் அஞ்சிடும் நாளிலே -என்தேவா
உம்மைநான் நம்புவேன்; தேவனை முன்னிட்டு
உம்சொல்லை நான்புகழ்வேன்; தேவனை -நம்பியிருக்
கின்றேன்நான் அஞ்சிடேன்; கீழ்மாந்தன் என்செய்வான்?
என்சொல்லை நித்தம் புரட்டுகின்றார் -வன்தீயர்
என்சீர்க்குத் தீங்குசெய் ஒன்றே முழுஎண்ணம்
என்றவர் உள்ளார்; அவர்களோ -என்னெதிராய்க்
கூடி, ஒருமித்து நின்றார் பதிவொளிந்து;
கூடி உயிரெனதைக் கொல்லவே -ஓடி
எனதுடைய காலடியை வந்தார் தொடர்ந்து
வினைச்சீரில் லாதோர் அதனால் -வினைத்தப்பிப்
போவரோ? தேவனே நீர்சினங் கொண்டவரை
மேவிக்கீழ்த் தள்ளிவிடும் சீர்மேலோய் -தாவிடும்
எந்தன் அலைச்சல்கள் தன்னை அறிந்துள்ளீர்
எந்தன் விழும்கண்ணீர் உந்தனின் -சிந்தையில்
என்றென்றும் உள்ளதே நற்கணக்காய் என்னெதிரே
என்பகைஞர் வந்தால் உமையழைக்க -என்பகைஞர்
பின்னிட்டுப் போவரே அந்நாளில்; நீரென்றும்
என்பக்கம் என்பதை நானறிவேன் -என்தேவா
உம்மையே முன்னிட்டு உம்சொல்லை நான்புகழ்வேன்
எம்கர்த்தர் முன்னிட்டு நான்புகழ்வேன் -உம்சொல்லை
தேவனை நம்பியுள்ளேன், நானஞ்சேன்; மாந்தனோ
மேவியென் செய்திடக் கூடுமோ -தேவனே
நானுமக்குச் செய்த பொருத்தனைகள் என்மேலே
தானுள்ள தாமே; துதித்திடுவேன் -நானும்மை
தேவனே, நானுமக்கு முன்பாய் உயிருள்ளோர்
மேவு ஒளிதன்னில் நான்நடக்க -தேவனே
என்கால் தனையிடரா வண்ணமும் ஆன்மாவை
வன்சாவா வண்ணமும் சீராரே -நன்றாகத்
தப்புவியா தேயிருப்பீ ரோ?யென்றே சீராணும்
அப்போது பாடினான் பாட்டு
சங்கீதம் 56
எனக்கிரங்கும், தேவா எனக்கிரங்கும்; உம்மை
எனதான்மா அண்டிக்கொள் கின்ற(து); -எனது
இடுக்கண்கள் தீருமட்டும் உம்செட்டை கள்தன்
இடும்நிழலில் வந்தடைவேன். மேன்மை -உடைதேவா
யாவும் எனக்காக செய்து முடிக்கப்போம்
தேவனை நோக்கிநான் கூப்பிடுவேன். -ஏவி
எனைவிழுங்கப் பார்க்கிறவன் நிந்திக்க, சீரார்
எனைமீட்க விண்ணிலிருந் தேசீர் -அனுப்பி
உதவினார். தேவனின் கண்ணோட்டம் மெய்யை
உதவ அனுப்புவார். எந்தன் -விதமான
ஆன்மாவோ சிங்கங்கள் தன்னின் நடுவிருக்க
ஏன்தீயை விட்டிறைக்கும் மாந்தருள்ளே -ஏன்நான்
கிடப்போ; அவர்பற்கள் ஈட்டியம்பு நாவு
வெடுக்கென வெட்டும்வாள். தேவா -மிடிவானம்
மேலாய் உயர்ந்தருளும்; உம்மேன்மை பூமியின்
மேலும் உயர்ந்திருப்ப. கண்ணியை -வேலைபோல்
வைத்திருக் கின்றார்கள்; என்ஆன்மா தொய்ந்தது;
வைத்த குழியிலே வெட்டியோர், வைத்தோரே
தான்விழுந்தார் என்முன்னே கண்டேன்நான் மேன்மனம்
தான்சீராய் ஆயத்தம்; ஆயத்தம் -மேன்மனம்
உம்மைநான் பாடி யிசைத்து துதிப்பேன்சீர்
உம்மைநான் மக்களுள்; என்மேன்மை -அம்விழிப்பீர்
யாழே திருவீணை; ஞாவருமுன் நான்விழிப்பேன்
வாழும் திருத்தேசங் கள்ளுள்ளே -வாழைப்பாடி
மேன்மை படுத்துவேன்; வானுயர் சீரிரக்கம்
மேன்முகில் எட்டுமும் மெய்யாமே -மேன்சீரோய்
வானங்கள் மேலாய் உயர்ந்தருளும்; பூமியெலாம்
வானாரின் மேன்மை உயரட்டும் -மேனாண்
கெபிதனில் வாழ்ந்தாலும் போற்றித் துதித்தான்
சபைநடுவே பாடுவது போல்
சங்கீதம் 57
பேசா திருப்பவரே மெய்நீதி பேசுவீரோ
தீசில் நியாயமாய் தீர்ப்பீரோ? -மாசாய்
மனதாரக் கேட்டைப் புரிகின்றீர்; கையின்
வினைக்கொடுமை தந்திடுவீர் நீரே -வினைமாந்தர்
தாய்வயிற்றில் ஆன கருமுதல் நீர்பிழன்று
தாய்வயிறு விட்டுவந்த நாள்முதல் -சேய்சீரில்
பொய்ச்சொல்லி தப்பினர் சீர்வழி பொய்யவர்;
அய்யோ திருவில்லார் ஏனவர் -மெய்யாய்
அரவினது நஞ்சைப்போல் உள்ள தவருள்
அரவது ஊதுவனைக் கேளா -அரவுதன்
காதடைக்கும் போலவர் சீரில்லார் மேதவா
காதடைத்தார் ஏனென் றறிகிலேன் -மேதவா
தீயோரின் வாயிலிரும் பற்களை நீருடைத்து
தீய அரிமாவின் குட்டிகளின் -தீய
கடைப்பற்கள் தன்னை நொறுக்கிடும்; நீர்போல்
கடந்தவர் போகட்டும்; அம்பு -அடைந்தவர்
வில்லேற்றும் போழ்து இலாதது அல்லாகி
வில்முறியப் போகட்டும்; நத்தைபோல் -அல்லார்
கரைந்தே அழிவார் களாக; முதிரா
சிரவுடல் போலவர் ஞாவை -திரவம்
தனைவிட்டுக் காணாது போகட்டும்; முட்டீ
வனைபானை சூடாகு முன்னே -வினையாய்
சுழற்காற்றால் எல்லாம் பறக்கடித்து போவார்
பழிவாங்கு தல்தன்னை சீராண் -விழிகாண,
தானே மகிழ்வான்; அவன்தனது பாதங்கள்
தானே வழுச்சீரில் செந்நீரில் -மேனாண்
கழுவுவான். அப்பொழுது, மெய்யாக யிங்கு
வழுவிலானிற் சீர்ப்பல னுண்டென் -வழுவிலார்
பூமியிலே நீதிசெய் சீர்த்தேவன் உண்டென
பூமியிலே சொல்வான் மனு
சங்கீதம் 58
தேவனே, என்பகைஞர் கைகளுக்கு தப்புவியும்;
தேவனே என்மேல் எழும்புவோர் -ஏவாட்கள்
தன்னிற்கு என்னை விலக்கி உயர்ந்ததாய்
என்னை அடைக்கலத் தில்வையும். -என்னைநீர்
தீயோர்க்குத் தப்புவித்து, என்குருதி இச்சையாய்
மாய மனிதருக்கு என்னைநீர் -ஆய
விலக்கியே மீட்டிடும்; என்னுயிரைக் கொல்ல
அலைந்தே பதிவிருக்க, கர்த்தா -இலையென்மேல்
எப்பாவம் மீறுதல் என்றாலும் வன்வலியோர்
அப்பாவி என்னெதிர்த்து கூடுகின்றார் -எப்பாவம்
இல்லா திருந்தும் படைவிட்டு போர்செய்ய
அல்லா தவர்வரு கின்றாரே -வல்லவரே
என்பக்கச் சீர்துணையாய் நீர்விழித்து நோக்குமே
வன்செய்வோர் எல்லார்க்கும் செய்யாதீர் -நன்தயை
சேனை களின்தேவா கர்த்தரே தேசங்கள்
ஏனையோர் காக்க எழும்பிடும் -மேனரோ
மாலைத் திரும்பியோர் நாய்போல ஊளையிட்டு
மாலையில் ஊர்சுற்றி காத்திருக்க -சீலில்லார்
சொற்களைக் கக்குகின்றார் வாளாமே நாவதில்
சொற்களால் தண்டிப்பார் இல்லென்று -அற்றிரிந்தார்
ஆனாலும் கர்த்தாவே காண்நகைப்பீர் சீரில்லார்;
மேனாரில் மாந்தர் வெளியினர் -கோனவரைக்
கண்டிகழ்வீர் எல்லாரை சீராஅர் -கண்டுநானே
கண்விழித்துக் காத்திருப்பேன் காண்பகையின் -கண்வலிமை
தேவனே நீரென் உயர்ந்த அடைக்கலம்
தேவனார் தன்னிரங்கிச் சந்திப்பார் -தேவனார்
என்பகைஞர் மீதுவரும் நீதி சரிகட்டல்
என்னைக்காண் செய்வார் திருவேநீர் -என்பகைஞர்
கொன்றிடா தேயும்வீண் கொன்றாலோ என்மக்கள்
கொன்ற பகைஞர் மறந்திடுவார் -அன்றியும்
கேடகமாம் எங்கள் திருவே பகைஞரை
நாடாதார் செய்ப்போல் சிதறடித்து -நாடிதில்
தாழ்த்திடும்; வன்னுதட்டின் பேச்சது பாவமே
தாழ்க்கெடு சொல்பொய்யால் அப்பகைஞர் -ஆழ்மாட்டி
தங்கள் பெருமைகளால் போகட்டும் கீழ்பிடித்து
எங்களின் தேவனே யாக்கோபில் -தங்கி
அரசாளும் தேவனென அன்னார் அறிய
அரசே அவரையும் சீற்றா -லிராதவாறு
வன்னார் அழியும்சீர்; மாலையில் நாய்போல
அன்னாரின் ஊளையாமே; ஊர்சுற்றி -அன்னாரும்
காத்திருக்க; ஊணின்றிப் போவர் முறுமுறுத்து
காத்திருக்கும் நானோ உமதுடைய -மேத்தகு
வல்லமையைப் பாடுவேன் காலையிலே உம்மிரக்கம்
நல்லென் மகிழ்ந்துப் புகழ்வேனே -வல்லார்
நெருக்க, உயர்ந்த அடைக்கலமும் தஞ்சம்,
திருசீரார் தானே; எனதின் -திருவே
பெலனாமே; பாடுவேன் உம்மைநான்; சீரார்
மலைபோல் உயர்ந்த அடையாம் -அலைபோல்
இரக்கம் தரும்திருச் சீரார் திருவே
இரக்கத்திற் காகயென் பாட்டு
சங்கீதம் 59
எம்மைநீர் கைவிட்டீர், சீரவர்த் தேவனேநீர்
எம்மைச் சிதறடித்தீர், வெஞ்சினம் -எங்கள்மேல்
உம்முடைய தேனோ யிருந்தது; மீண்டுமாய்
உம்சினம் விட்டெங் களிடமாய் -அம்சீரே
நீர்தான் திரும்பி யருளும். புவிதனை
நீர்ரதிரச் செய்து வெடிப்பாக்கி -நீர்ரதின்
சீரில் வெடிப்புகளை செய்யும் பொருந்திட
சீரில் புவியசை கின்றதே -சீரினம்
தன்னிற்கு காட்டினீர் செய்கைக் கடினத்தை
தன்னின வாய்க்குநீர் தந்தீரே -வன்கள்
அதுவன்றோ தத்தளிப்பின் வன்கள்ளே; மெய்யால்
அதுவகை ஏற்றுமக் கஞ்சும் -அதுவகை
மாந்தரிடம் சீர்க்கொடி ஒன்றைக் கொடுத்தீரே
மாந்தராம் நேசர் விடுவிக்க -ஏந்துவீர்
சீர்வலது சீர்கரத்தால் சீர்வேண்ட சீர்ச்செவி
சீர்ச்சாயும் சீரவா நீர்தானே -சீர்தலத்தில்
சீர்நின்று சீர்விளம்ப, சீர்நானும் சீர்களித்து
சீர்சீகேம் சீர்ப்பங்காய், சீர்சுக்கோத் -சீர்ரளப்பேன்
சீரிடம் கீலேயாத் என்நிலம்; சீர்மனாசே
சீரினம் எந்தனின்; எப்பிராயிம் -சீராயென்
சீர்யூதா எந்தன் நியாயஞ்செய் மாந்தனாம்.
சீர்ரிலா மோவாபென் கால்கழுவும் -நீர்ச்சட்டி
சீர்ரிலான் ஏதோமின் மேலெந்தன் காலணியை
சீர்ராண் எறிந்திடுவேன்; சீரிலா -சார்பெலித்தே,
என்னிமித்தம் ஆர்ப்பரித்துக் கொள்வாய்நீ. மேலரண்
என்னை வழிநடத்திப் போவார்யார்? -என்வழியை
ஏதோம் செலக்காட்ட வந்திடுவார் யார்தானோ?
வேதவர் எம்படைகள் சேராத -ஏதேது
நீர்கர்த்தர் தானன்றோ சீராரே? ஏனெமை
நீர்த்தள்ளி விட்டிருந்தீர்? சீராரே -நீர்தானே
இக்கட்டில் எங்களுக்கு சீருதவி செய்யும்நீர்;
தக்கிலார் மாந்தர் உதவிவீண் -எக்காலம்
தேவனாலே மேன்செய்வோம்; சீரவரே எம்பகைவர்
மேவி மிதித்திடுவார் ஆம்.
சங்கீதம் 60
தேவனே, என்கூப் பிடுதலைக் கேட்டுநீர்
தேவனே என்விண்ணப் பத்தைநீர் -தேவா
கவனியும். என்மனம் தொய்திடும் போது
அவனியின் மூலை யினின்று -தவனான்
உமைநோக்கிக் கூப்பிடுவேன்; எட்டா துயர
அவனிமேற் கன்மலையில் என்னை -அமைதியாய்க்
கொண்டுபோய் விட்டிடும் சீரவா. நீரெனக்கு
அண்டும் அடைக்கலமும், என்பகைக்கு -மண்டி
எதிரே பெலத்த துருகமுமாய் சீர்நீர்
அதிர இருந்தீர். உமது -நிதந்தூயக்
கூடாரத் தில்எந்நா ளும்நானோ தங்குவேன்;
மேடவராம் உம்செட்டை கள்தன்னில் -நாடி
மறைவிலே வந்தடைவேன். தேவனே, நீரென்
பொருத்தனைகள் தன்னைநீர்க் கேட்டீர்; -அருளே
உமது பெயருக்கு அஞ்சுவோர்க் காணி
எமதுகை நீர்த்தந்தீர். சீரே -அமையரசர்
நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; சீராரின்
நாட்களோ ஆண்டாண்டாய் தானிருக்கும் -மேட்டாரோ
தேவனுக்கு முன்பாக என்றென்றும் சீர்நிலைப்பார்;
மேவி தயையும்மெய் யும்மவரை -தேவனே
காத்திடக் கட்டளைச் செய்வீரே. இப்படியே
மேத்தவா, நாடோரும் நான்எந்தன் -மேத்தவர்க்கு
காணிக்கை தந்திட உம்பெயரை என்றைக்கும்
காணிதனில் பாடிடுவேன் நான்.
சங்கீதம் 61
தேவனையே நோக்கியென் ஆன்மா அமர்ந்துளது;
தேவனால் என்மீட்பு வந்திடும். -தேவனே
என்கன் மலையும்சீர் என்மீட்பும், என்னுயர்ந்த
நன்றாம் அடைக்கலமு மானவர்; -வன்பேராய்
நானோ அசைக்கப் படுவதிலை. மாந்தனுக்கு
ஏனோயேன் தீங்குசெய்ய நீங்களோ -ஏனோ
எதுவரை நீர்நினைப்பீர்? நீங்களெல்லாம் சாவீர்
மதிற்ச்சாய்ந்தாற்ப் போலொப்பாய் ஆவீர் -வதைவகை
தள்ளவே மேன்மையி னின்றுதள்ள சீரிலார்
கள்ளமாய் ஆலோ சனைச்செய்து -கள்ளர்
அபத்தமதைப் பேச விரும்புகின்றார்; தங்கள்
அபத்தமான வாயினால் வாழ்த்தி -சபிக்கின்றார்
தங்களின் உள்ளத்தில் சீரிலார். என்ஆன்மா,
மங்காத தேவனையே நோக்கியமர்; -மங்காதார்
நான்நம்பு கின்ற தவராலே வந்திடும்.
மேன்சீரார் என்கன் மலையுமாய் -மேன்சீரார்
என்மீட்பும் மேனாய் அடைக்கலமாம் சீரவர்
என்றும் அசைக்கப் படுவதிலை -நன்நானோ
என்மீட்பும், என்மேன்மை யும்சீரார் தேவனில்
என்று மிருக்கிறது; என்பெலனாம் -கன்மலையும்
என்சீர் அடைக்கலமும் தேவனுக்குள் தானிருக்கு.
என்மக்காள் எக்காலம் சீராரை -நன்றாக
நம்புங்கள்; முன்னவர் உங்கள் மனதினை
அம்மூற்றி விட்டிடுங்கள்; தேவனமக்(கு) -அம்சீர்
அடைக்கலமாய் நிற்கிறார். கீழ்மக்கள் மாயை
அடர்மேனார் மக்களோ பொய்யாம்; -அடைத்திரண்டை
வைத்தால் தராசிலே, மாயையது கீழிறங்கும்
வைத்திராதே வன்கொடுமை நம்பாதீர் -மேத்திலா
கொள்ளையினால் நீர்ப்பெருமை பாராட்டா தீர்சீரில்;
அள்ளக் குறையாத செல்வமது -வெள்ளமாய்ச்
சேர்ந்தாலும் உம்மனதை சீரின்மேல் வைக்காதீர்.
நேர்ச்சீரார் தேவன் ஒருதரம் -சீர்ச்சொல்லைச்
சொன்னார்; எதிரொலித்தே சீர்ச்சொல் இருதரம்
சொன்னதை நான்கேட்டேன்; வல்லமை -நன்தேவ
னின்னென் பதேசொல்லாம். கண்ணோட்டம் உம்மின்தான்
நன்சீரோய் ஆண்டவரே! தேவரீர் -நன்றாய்
அவனவன் செய்கைக்குத் தக்கதாகச் சீராய்
தவனார்ப் பலனளிக்கின் றீர்.
சங்கீதம் 62
தேவனே, நீரேயென் தேவன்; வெளுக்கும்முன்
தேவனே உம்மைநான் தேடுகிறேன்; -தேவா
வறண்ட புனலற்ற தாக நிலத்தில்
அறவா உமைநோக்கி ஆன்மா -அறற்றல்
நிறைய உளதே; உடலும் அறவா
நிறைய அழன்றும் திருவே -அறவா
உமைநான் நினைந்து; அடியேன் இணையில்
உமைதூய் இடத்திலே காண -உமதின்
சிறியோன் விரும்ப, இறையே வலியைச்
சிறியவன் கண்டேன் திருவே -சிறியன்
உயிரை விடமேல் இரக்கம் உமதின்
உயரே உமையே துதிக்கும் -உயிருள்
உதடுகள் எந்தன் உயிருள்ள மட்டும்
இதுபோல் உமைத்துதித்து உம்பேர் -இதுபோல
சொல்லி யெடுப்பேன்நான் என்கைவிண் நேராக
நல்ல நிணமுணவு உண்டாற்போல் -நல்ஆன்மா
உம்மால் நிறைப்பெற்று இங்கே மகிழ்ந்திட
உம்மை களிப்புடன் போற்றும்வாய் -அம்மானே
நானுறங்கும் கல்லின்மேல் உம்மையெண்ணி இங்கேநான்
நானுறங்கா உம்மை நினைந்துள்ளேன் -நானுமது
செட்டை களின்நிழல் தன்னில் களிகூர
எட்டியிரீர் நீர்துணை யெந்தனின் -கிட்டியுமை
என்ஆன்மா பற்றிடு கின்றது; உம்வலக்கை
என்னைத்தான் தாங்குதே சீர்நேரோய் -என்னுயிரை
வன்னாய் அழித்திடத் தேடுவோர் மண்ணிலே
வன்கீழ் இடங்களில் போவர்கீழ் -வன்வாளால்
தான்விழுந்து ஊளைநரி உண்ண உணவாகி
ஊன்சேர்த் திரையாவர் வன்னவர் -கோன்சீரோ
தேவனில் தானே களிகூர்வார்; பேரவரில்
மேவியாணை இட்டிடுவோர் மேன்மைச்சொல் -சாவிபொய்
பேசுவோரின் வாயடைக்கப் பட்டுப்போம் காட்டிலே
மாசிலான் பாடினான் பாட்டு
சங்கீதம் 63
தேவனே, எந்தனின் விண்ணப்ப சத்தத்தை
தேவனே கேட்டருளும்; என்பகையார் -மேவிவர
அச்சத்தை நீக்கி, உயிரெனதைக் காத்தருளும்.
அச்சமிலார் செய்யும் மறைச்சொற்கள் -அச்சமின்றிச்
செய்யும் கலகங்கள் விட்டென்னை மெய்யாரே
மெய்யாய் மறைத்தருளும் சீர்நேரே; -மெய்யாய்
அவர்கள்தம் நாவைக்கூர் வாளாக்கி பாரா
தவர்நின்று நல்லாண்மேல் வீட -அவர்ச்சொல்
கசப்பான அம்புகளாய் வில்லின்மேல் நாணாய்
மிசையேற்றி அச்சமின்றி எய்ய -திசையில்
நிலையாக பொல்லாப்புச் செய்யத் திரிந்து
வலையாகக் கண்ணிகளை வைத்து -வலையிதை
காண்பார்யார் என்கின்றார்; சீரில்லா வன்செய்கை
காண்தேடி எத்தனிப்பார் எத்தரவர் -காண்பதற்கு
எல்லாரின் உட்கருத்தும் ஆழிபோல் ஆழமாமே
நல்லவர் தேவனார் அம்பெய்வார் -அல்லார்மேல்
அல்லார் சடுதியாய்ப் புண்பட்டு தள்ளுண்டு
அல்லாராய் ஆக சொலும்சொற்கள் -அல்லவோ
அல்லாரைக் காணெவரும் ஓடுவரே; நல்லார்ச்செய்
எல்லா மனிதர் அறிவித்து -நல்லார்
திருவின் செயலென் றுணர்வர்; திருவின்
திருநீதி மக்கள் மகிழ்வர் -திருவுள்
திருவுளம் செம்மையாய் உள்ளோர் திருவாய்
திருச்செய்வர் யாவரும் நேர்
சங்கீதம் 64
தேவனே, சீயோனில் நும்சீர்த் துதியது
தேவா அமைந்தங்குக் காத்திருந்தே -மேவி
பொருத்தனை ஆங்கே செலுத்தப் படும்சீர்.
அருளவே வேண்டுதலைக் கேட்கும் -அருள்தேவா
யாவரும் உம்மிடத்தில் வந்திடுவர். சீரில்லா
மேவிடும் அல்லாத செய்கைகள் -தேவனே
என்மேலே மிஞ்சியே வல்லமைக் கொண்டது;
நன்தேவா நீரோ எமதல்லா -இன்னா
தவைமீறல் தன்னைநீர் போக்குகிறீர் சீரே;
அவையும்மில் வாசம் செயவே -இவர்களுள்
நீர்த்தெரிந்து சேர்க்கிற ஆளவர் பேறுபெற்றோர்;
சீர்க்கோவில் தூய்க்கோவில் நன்மையால் -சீர்யாம்
திருப்தியா வோம்நேர்த் திருவே. புவியின்
வரைக்கடல் தாண்டியுளோர் எல்லாம் -திருவும்மை
நம்பும் திருமீட்பின் தேவனே, நீர்திகைக்
கும்செய்கை கள்ளென்ப தாலெமக்கு -நும்நீதி
யுள்ள விடையருளு கின்றீர்சீர். வல்லமையை
உள்ளிடைக் கட்டி, உமதுசீர் -வெள்ள
பலத்தினால் கன்மலைகள் தன்னை உறுதி
நலப்படுத்தி, நீர்க்கடல் தன்னின் -அலைகளின்
வெற்றிரைச் சல்சேர், அமளிசெய் மக்களையும்
வெற்றா யமர்த்தி கடைக்கோடி -நற்குடிகள்
உம்மின் அடையாளங் கள்நிமித்தம் அஞ்சுகிறார்
நும்சீரோய் காலையையும் மாலையையும் -அம்சீர்
களிகூரப் பண்ணுகிறீர். பூமியை தேவா
வெளிவிசா ரித்துநீர்ப் பாய்ச்சி -வெளிதன்னை
தண்ணீர் நிறைந்தநல் தேவ நதியினது
தண்ணீரால் நன்றாய் செழிப்பாக்க -மண்மேல்
விடுகிறீர்; இப்படிநீர் மண்ணைத் திருத்தி,
நடுசெய் அவர்களுக்கு நெல்லை -அடையாய்
விளைவிக் கிறீர்சீரே. மண்ணின் வரப்பு
அளித்தே தணியத் தகுதின் -வெளிப்படைச்சால்
தன்னிற்குத் தண்ணீர் இறைத்து, அதைமழையால்
நன்கரையப் பண்ணி, அதின்பயிரை -நன்றாக
வாழ்த்து கிறீர்சீரே. ஆண்டினையும் நன்மையால்
வாழ்த்தி முடிசூட்டி, உம்பாதை -வாழ்சீராய்
நெய்யாய்ப் பொழிகிறது; காட்டினதின் தாவரங்கள்
நெய்பொழிவைப் பெற்றன; மேடுகள் -வெய்யாதே
சீர்ப்பூரிப் பாய்யுளது; மேய்ச்சலுள் வெட்டவெளி
சீர்தன்னில் ஆடுகள் ஆம்நிறைய -சீர்ருள்ள;
காண்பள்ளத் தாக்குகள் நெல்லாலே மூடியுள
காண்பள்ளத் தாக்குகள் ஆர்ப்பரித்து -காண்நெல்
திருவைத்தான் போற்றியங்கு பாடுதே சீராய்
திருதாவீத் பாடினார் பாட்டு.
சங்கீதம் 65
சங்கீதம் எண் 66
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.
புவிவாழ்வோர், நீங்களெலாம் தேவனுக்கு முன்பாய்
புவிதனில் பாடுங்கள் ஆர்த்து. -புவியில்
அவர்பெயரின் மேன்மையை இன்னிசையால் பாடி,
அவர்த்துதி மேன்மையைக் கொண்டா -டுவீர்நீரே
தேவனை நோக்கிநான்: உம்செய்கைத் தன்னிலே
தேவன்நீர் மேன்திகைப்பாய்த் தானுள்ளீர் -தேவனே
மேனாமும் வல்லமை யின்னிமித்தம் உம்பகைஞர்
மேனவர் வன்னெதிராய் ஏளனமாய் -தானேசொல்
பேசி அடங்குவார்கள். பூமியின் மீதெங்கும்
வாசம்செய் மக்கள் உமைப்பணிந்து -பேசி
உமைத்துதித்துப் பாடுவார்கள்; உம்பேர் துதித்து
உமைப்பாட என்றுசொல்லுங் கள்சீ -ரமைமக்காள்
தேவனின் செய்கைகளை வந்துபாரும்; மாந்தரிடம்
தேவன்செய் செய்கைகளில் மேன்திகைப்பு -தேவ;
கடலை உலர்ந்த தரையாக மாற்றி;
நடந்தனர் ஆறதைக் காலால் -கடந்தார்கள்;
அங்கே அவரில் களிகூர்ந்தோம். சீரவர்
இங்கெங்கும் தம்வலியால் ஆளுகின்றார் -தங்கவர்மேல்
உள்ள தவரினது கண்களவை நோக்கமாக
தள்ளாத மக்கள்மேல் தானிங்கு -தள்ளிவிடும்
வன்செய்வோர் தன்னை உயர்த்தா திருக்கட்டும்;
நன்மக்காள், நம்முடைய தேவனை -நன்துதித்து
நல்லொலியாய் சீர்த்துதி கேட்கவே பண்ணுங்கள்.
நல்லவர் நம்கால்கள் தள்ளாடா -நல்வண்ணம்
நம்ஆன்மா தன்னை உயிரோடே வைக்கிறார்.
எம்தேவா, எங்களைச் சோதித்தீர்; -என்தேவா
வெள்ளி புடமிடுமாப் போல புடமிட்டீர்.
தள்ளி வலைதன்னில் எம்மேலே -கொள்ளாப்
பளுவைத்தீர் ஏற்றி; மனிதரை எங்கள்
தலையின்மேல் ஏறிடச் செய்தீர்; -அலைநீரும்
தீயையும் நாங்கள் கடந்துவந்தோம்; நன்வளமாய்
தீயில் செழிப்பிடத்தில் கொண்டுவந்தீர் -ஆயவா.
ஆலயத்திற் குள்வருவேன் தீப்பலி யோடேநான்.
மேலவா, இக்கட்டில் என்உதடு -சீலாய்த்
திறந்துநான், வாய்ச்சொல் பொருத்தனைகள் தன்னை
சிறப்பாய் உமக்குச் செலுத்தி -அறனவா
ஆட்டின் நிணப்புகை யோடே கொழுமையை
நாட்டிலே தீப்பலியாய் நானிடுவேன்; -நாட்டினது
காளைகள் செம்மறி யாடுகள் சீராக
வேளவர்க்கு நான்பலித் தந்திடுவேன் -வேளவா.
தேவனுக்கு அஞ்சியோரே, நீங்களெலாம் வந்துகேளும்;
தேவனென் ஆன்மாவுக் குச்செய்த -மேவுசெயல்
நான்சொல்வேன். சீராரை என்வாயால் கூப்பிட்டேன்
நான்யெனது நாவினால் சீர்ப்புகழ்ந்தேன் -மேன்னில்லா
ஊழலாய் யென்னெண்ணம் என்றாலே ஆண்டவர்
ஊழலுக்காய் என்சத்தம் கேளாரே; -ஊழலிலா
காரணமே, மெய்யாக தேவன் செவிகொடுத்தார்,
ஆரவார வேண்டுதலைக் கேட்டாரென். -ஆரவார
வேண்டுதலைத் தள்ளா மலும்தமது மேன்கிருபை
என்னைவிட்டு சீர்விலக்கா தேயிருந்த -மேன்தேவ
சீருமக்கே என்றும் துதியுண்டா கட்டுமே;
சீராகப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 66
தேவனே, பூமியில் உம்வழியும், மக்களெலாம்
தேவனே உம்மீட்பும் சீர்விளங்க -தேவனே,
தேவரீர் எங்களுக்கு நீரிரங்கி, எங்களை
தேவரீர் வாழ்த்தி, உமதுமுகம் -தேவரீர்
எங்கள்மேல் நீரொளிரச் செய்யுமேச்சீர்த் தேவனே.
எங்களின் தேவனே, மக்களும்மை -பங்கவரைச்
சீராய்த் துதிக்கட்டும்; மக்களெலாம் உம்மையே
சீராய்த் துதிக்கட்டும். தேவரீர் -சீராக
மக்களை நீர்நியாயந் தீர்த்து, புவியுள
மக்களை சீராய் நடத்துவீர்; -தக்கவரை
ஆதலால் மக்கள் மகிழ்ந்திங்கு ஆர்பரித்து
மேதவர் சீராய் மகிழட்டும் -வேதவராம்
தேவனே, மக்கள் உமைத்துதிப் பார்களாக;
தேவனே மக்களெலாம் உம்மைத்தான் -தேவா
துதிப்பார் களாக. பலன்தன்னின் பூமி
யதுதரும், தேவனே எங்கள் -துதியவரே
எங்களை வாழ்த்துவார்; தேவனவர் வாழ்த்துவார்
எங்களை; பூமியில் எல்லையெலாம் -இங்கவர்க்கு
அஞ்சியிருக் கும்சீராய்த் தானென்றே பாடினார்
அஞ்சினோர் திருவவரைப் பாட்டு.
சங்கீதம் 67
சீர்த்தேவன் சீராரே சீரெழுந்து சீரருள
சீர்கர்த்த ரின்பகைவர் ஓடிடுவார் -சீர்முன்னே
தீப்புகை போலவர் போவார் பறந்தங்கு
தீப்பார் மெழுகுரு மாப்போல, -தீப்பணிச்
செய்வோர் திருமுன் அழிவரே; நீதியைச்
செய்நீதி மான்கள் திருமுன்னே -செய்வார்
மகிழ்ந்து களித்தவர் தேவனைப் பாடி
வகையாய் பெயரவரின் பாட்டாய் -அகமகிழ்வர்
பாலையில் ஏறி வரும்சீரார்ச் சீரவர்க்கு
பாலரே ஆயத்தம் செய்வழி -ஆலரின்
பேராமே யாவே; அவர்முன் களிகூர்வீர்
பேரின்மேல் வாசம்செய்ச் சீரவரே -பேரிலார்
பிள்ளைக்குத் தந்தையாம்; கைம்பெண்கள் தன்னிற்கு
தள்ளாது காப்பவர் சீர்தானே -தள்ளி
தனிமையாய் விட்டோர்க்கு வீடுவாசல் செய்து
மனிதரால் கட்டுண் டவரை -நனியார்
விடுதலைச் செய்கிறார்; வன்னார் வறண்ட
நடுநிலத்தே தங்குவர்; தேவா -நடந்தீர்
இனமுமதின் முன்னராய் வெட்டவெளி தன்னில்
நனிவர ஆங்கேதான் பூமி -தனுமதிர
விண்முகில் நீர்ப்பொழிய சீரினத்தார் தேவன்முன்
மண்சீனாய் குன்ற ததசைந்து -விண்ணின்று
சீர்மழையைப் பெய்யச்செய் தீர்இளைத்த உம்காணி
சீர்த்திடமாய் செய்தீர்சீர்; உம்மந்தை -சீர்க்காணி
தன்னிலே தங்கிட, ஏழைகள் தன்னைநீர்
நன்தயவால் சீராய்ப் பராமரித்து -நன்செய்தீர்
சொல்தந்தார் ஆண்டவர், அச்சொல்லை நன்பரப்பும்
நல்லார் பலராம்; படையுளோர் -அல்மன்னர்
தத்தளித்து ஓடிட, வீட்டிலிரும் பெண்ணவளோ
தத்தமாம் கொள்ளையைப் பங்கிட்டாள் -வெத்திட்டுக்
கார்க்கரி என்றாலும் மாடப் புறாயிறகு
பார்ப்பொன்போல் சீரிருப்பீர் சீரினமே -பார்மன்னர்
தன்னையதில் விட்டுச் சிதறடித்தப் போதுதான்
மென்பனி வெண்மையாய் ஆயிற்றே -மென்னிறகு
மேன்திருவின் குன்றது பாசான்கோ டைப்போல;
மேன்மலை பாசான் உயரமிகு -மேன்கோடு
மேன்மலைகாள் துள்ளுவ தேனோயேன்? மேன்கர்த்தர்
மேன்மலைமேல் வாசம் செயவிரும்ப -மேன்கர்த்தர்
மேன்மலைமேல் தானே வசிப்பாரே மேன்சீரார்
தேர்களோ ஆயிர மாயிரமாம்; -சீர்கர்த்தர்
நேர்த்தூயாம் சீனாய் மலையிருந்துத் தேர்களுள்
நேர்கர்த்தர் வாசம்செய் கின்றாரே -நேர்சீரார்
வாசம்செய் விண்ணிற்கு ஏறியவர் வீசுசிறை
வாசம்செய் வோரைச் சிறையாக்கி -வாசம்விண்
கொண்டுசென்று நட்டவருள் வாசம் செயவரங்கள்
கொண்டுவந்தீர் தக்கிலார்க்காய் பெற்றீர்சீர்; -கொண்டுவந்த
தக்கவர் கர்த்தருக்கே மேன்மைசீர் நம்மேலே
இக்கட்டாம் சிற்றாய் பளுவைத்தும் -இக்கட்டை
நீக்கி நமைமீட்கும் தேவன் அவர்தானே
ஆக்கமாம் மீட்பைத் தரும்தேவன் -தாக்கிடும்
வன்மரணம் விட்டெம்மை நீக்குவழி உண்டவரில்
வன்பகைஞர் தன்தலையும் தன்தவறில் -வன்னாய்
நடப்பவரின் உச்சந் தலையை உடைப்பார்;
நடக்குமினக் கால்கள் பகைஞர் -விடுக்குருதி
தன்னை மிதித்திடவும் நாயதை நக்கவும்
என்சீர் அழைத்து வருவேன்நான் -நன்பாசான்
என்மலையின் னின்றுதான்; ஆழியின் தன்னாழம்
என்மக்கள் கொண்டு வருவேன்சீர் -என்றாரே
நட்டார் நடைக ளுமதின் இனங்கண்டார்
நட்டார்சீர் கர்த்தர் நடைகளையே -நாட்டார்காண்
பாடுவோர் முன்னாக வாசிப்போர் வீணைகளைப்
பாடுவோர் பின்னாக; தம்புருவோ -டாடும்
மடந்தையர் பெட்டியின் சுற்றிலுமாய்ச் சென்றார்;
திடனிசுரேல் ஊற்றின் துளிகாள் -அடைந்திங்கு
ஆண்டவராம் தேவனைப் போற்றும் அவையோடு
ஆண்டவர் முன்நான் குலத்தலைவர் -ஆண்டவர்முன்
மக்களின் கூட்டமும் உண்டு; திடப்படுத்த
மக்களே உங்களுக்கு கட்டளையாய் -தக்கவலி
இட்டாரே; தேவா திடப்படுத்தும் உண்டுசெய்த
நட்டார்க்காய் எல்லாம்நீர்; சீரவரே -திட்டமாய்
சீரார்த் திருநகர்க்கு மன்னர்கள் காணிக்கை
சீராய்க் கொணருவர்; நாணலில் -சீரவரே
உள்ளவிலங் கின்திரளை, கன்(று)களுடன் ஆடுகள்
உள்ள சனத்தை அதட்டவவர் -உள்ளங்கை
வெள்ளிப் பணம்கொண்டு வந்து பணிவரே
உள்ளத்தில் போர்விரும்பும் மக்களை -தள்ளிச்
சிதறடிப்பார்; நாடாம் எகிப்தின் தலைவர்
பதறியே எத்தியோப்பின் வந்து; -இதரவர்
நாட்டாரும் வந்திடுவார் கையெடுத்துச் சீரவராம்
நாட்டெம்மின் போற்றவே தீவிரித்து -நாட்டின்சீர்
போற்றி புவியரசே பாடுங்கள்; விண்மே
லிரும்சீரை நீர்பாடப் பாட -பரனவர்
சத்தம் தனைவீடு விட்டு விளங்கிட
அத்தவர் செய்கின்றார்; தேவ நறுசீர்
வலிமையை சீராய் விவரி; இசுரேல்
நலவார் திருமேன்மை மேல்சீர்; -வலிதிருவின்
உள்ளது மேம்முகிலில்; மேதூயர் தன்னிடம்
உள்ளிருந்து தேவா விளங்குகிறீர் -உள்ளிருந்து
தேவன் இசுரேலின் மக்கட்கு சீர்பெலனும்
தேவனின் வல்லமையும் சீரவர் -மேவி
அருளி பெலன்கொளச் செய்த்திரு விற்கு
திருமக்கள் செய்வோம் துதி
சங்கீதம் 68
சங்கீதம் எண் 69
சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
தேவனே, என்னைநீர் மீட்டிடும்; வெள்ளங்கள்
தேவனே என்ஆன்மா மட்டுமாய் -தேவா
பெருகி வருகிறது. ஆழமான சேற்றில்
அருகி அமிழ்ந்திருக் கின்றேன், -கரம்பிடித்து
நிற்க நிலையில்லை, ஆழ்ந்துள்ளேன் இல்நிலை
அற்றநீரில்; வெள்ளங்கள் என்மேலே -அற்றாய்ப்
புரள்கிறது. நானழைக் கின்றதால் இன்னா
வரையிளைத்தேன்; என்தொண்டை நீரில் -கரகரவென்
போயிற்று தான்வறண்டு; என்சீர்க்கு காப்பதால்,
போயிற்று என்கண்கள் பூத்துத்தான். -ஆயே
நிமித்த மிலாதென்னை வன்பகைப்போர் எண்கள்
அமைமயிர் தன்னிலும் மிக்காய் -அமைந்ததேன்;
வீணா யெனக்குப் பகைஞராகி கொன்றிட
வேணுமென வல்செய்தார்; நானெடுக்கா - ஆணையிட்டார்
நான்கொடுக்க வேண்டிய தாயிற்று சீர்தனை.
மேன்சீரே நீரெனது புத்தியீனம் -தான்நீர்
அறிவீரே; குற்றங்கள் எந்தன் உமக்கு
மறைந்திருக்க வில்லை. திருவே - அறனார்
உமைத்தேடும் சீரார்க்கு நாண மடையா
அமைந்திருக்க என்னிமித்தம் செய்வீர் -உமக்காகக்
காத்திருப்போர் என்னிமித்தம் நாண மடையாதே
மேத்தின சீரிசுரேல் தேவனே -மேத்தவரை
சீர்ப்படையார்க் கொண்ட திருக்கர்த்தா வைத்திடும்;
சீர்ருமது தன்னிமித்தம் நிந்தையை -நேர்சகித்தேன்;
என்முகத்தை நாணமது மூடிற்று. என்தமர்க்கோ
வன்வேற்றாண் என்தாயின் பிள்ளைகட்கு -வன்செய்யும்
அந்நியனு மானேன். உமதுடைய வீடுகுறித்(து)
எந்தநாளும் உண்டான சீர்பக்தி -சிந்தையது
வைராக்யம் என்னை யெரித்தது; உம்மையற்
சீரில்சொல் நிந்தனைகள் என்மேலே -நேரே
விழுந்தன. என்ஆன்மா வாடவே நோம்புற்
றழுதேன்; அதுவுமே நிந்தை -வழுவாய்
முடிந்தது. சீரில் இரட்டை உடுக்கை
உடுத்தினாலும் சீரிலாத் தீச்சொல் -அடையானேன்
வாயிலில் உட்கார்ந் திருக்கிறவர் வன்னெதிராய்
வேயாகிப் பேசு கிறார்களே; -ஆயே
மதுபானம் பண்ணுகிற வர்களின் பாடல்
வதைவரிகள் ஆனேன் பிழையாய் -வதைத்தாரே.
ஆனாலும் கர்த்தாவே, சீரிரக்கக் காலத்தில்
மேனவராம் உம்மைநோக்கி விண்ணப்பம் -நானிங்குச்
செய்கிறேன்; தேவனே, உ,ம்மிகுந்த சீர்க்கிருபை
மெய்யான உம்மீட்ப்பால் தானெனக்கு -அய்யா
எனக்குச் செவிகொடுத்தே சீரருளும். சீரே
எனைசேற்றி னின்றுநீர் தூக்கி -எனையலைகள்
நீர்விட்டு நீங்கும் படிசெய்யும், சீரவா,
பார்ப்பகைவர் விட்டென்னைத் தான்சீரே -நீர்வெள்ளம்
என்மேல் புரளா மலுமாழம் என்னைத்தான்
வன்விழுங் காமலும், பாதாளம் -என்மேலே
தன்வா யடைத்திடா தேப்போக. கர்த்தாவே,
என்நிலை விண்ணப்பத் தைக்கேளும், -என்சீரோய்
உம்தயை நன்றா யிருக்கிறது; உம்முடைய
அம்மிரக்கங் கள்படி கண்ணோட்டம் -அம்செய்யும்.
உம்முகத்தை உம்அடி யான்கண் மறையாதீர்;
வெம்மன மாகிறேன், அன்னவா -அம்சீரே
தீவிரமாய் நீரே செவிகொடுத் தேயருளும்.
மேவிய ஆன்மா வினிடத்தில் -தேவா
அதைவிடுவித் தேச்செய்யும்; என்பகைஞர் வன்னார்
விதமவர் விட்டென்னை மீட்டு -விதமாக்கும்.
தேவரீர் என்நிந்தை யையுமென் வெட்கமும்
மேவிலா இன்னா அவமானம் -தேவா
அறிந்துள்ளீர்; என்பகைஞர் எல்லாரும் உம்முன்
இருக்கிறார்கள். நிந்தையும் வெட்டி -அரிந்ததே
என்மனதை; நான்மிகவும் வேதனையாய் நின்றேனே;
என்பக்கம் கண்ணோட்டம் செய்கின்ற -என்நண்பன்
உண்டோ எனநானும் காத்திருந்தேன், இல்லையே;
மண்ணிலே தேற்று கிறவர்க்குக் -மண்ணவன்
காத்திருந்தேன், காணேன் ஒருவனையும். என்னூணில்
தீத்தாய் கசப்பைக் கலந்துதந்தார் -தீத்தவர்
என்தாகத் துக்குகாகக் காடியைத் தந்தாரே.
வன்னவரின் பந்தி அவர்களுக்குக் -கண்ணி;
அவர்களின் செல்வம் வலையாய் யிருக்க
வவர்க்குக் கடவது. கண்கள் -அவர்தம்மின்
காணா தபடியே போகட்டும்; மேனவரே
ஆணின் இடுப்புதனைத் தள்ளாடி -வீணாகப்
போகவே பண்ணும்சீர். உம்மெரிச்சல் தன்னையவர்
வேகவே ஊற்றும்; உமதுசினம் -வேகத்
தொடர்ந்து பிடிப்பதாக. வாழிடம் தானே
விடப்படட்டும் பாழாக; போகும் -குடியிலாதே
அவ்வீடு தானே. திருநீர் அடித்தவனை
அவ்வா றவர்துன்பஞ் செய்தவர் -அவ்வாணை
நீர்காயஞ் செய்தவர் தன்னையோ நோகவே
சீர்ரிலாது பேசு கிறார்களே. -நேரிலாச்
செய்கைமேல் செய்கை தனையவர் மேற்சுமத்தும்
மெய்நீதி உம்மினது வந்தெட்டாச் -செய்யும்நீர்
உம்மின் உயிர்நூலில் சீரில்லார் பேர்முதலாய்
அம்கிறுக்கிப் பட்டுக் கரைவதாக; -அம்சீரார்
நீதிமான்கள் பேரோ டவர்ப்பேர் எழுதாதீர்
வேதா; சிறுமை துயரமுளோன் -வேதனே
நானோ, திருத்தேவா, உம்மீட்பே என்சீராம்
மேனாம் அடைக்கல மாவதாக. - மேனவர்
தேவனின் சீர்ப்பெயரைப் பாட்டால் துதித்துநான்
தேவனைத் தான்துதித்து மேன்மகிமை -மேவிநான்
தந்திடுவேன். கோடுள்ள ஏறுதனைக் காட்டுலும்
இந்தபலி தன்னே விருப்பமாம் -தந்திடும்
சீர்ப்பலியில் கர்த்தருக்கு; சாந்தமான மாந்தர்க்கு
சீர்மகிழ்ச்சி ஈதைக்கண் டாலேதான்; -நேரவரைத்
தேடுகிற மக்களே, உம்மனம் வாழட்டும்;
மேடவர் கர்த்தர் எளியோரின் -நாடும்சீர்
விண்ணப்பம் தன்னையே கேட்கிறார்; கட்டுண்டோர்
விண்ணவர்த் தன்னின் புறக்கணியார் -விண்ணும்
புவியும் கடல்களும் இத்தரணி தன்னில்
அவைவாழ் எலாம்துதிக் கட்டும் -இவைச்செய்த
தேவனவர் சீயோனை மீட்டவர், யூதாவின்
மேவுநகர் கள்தன்னை கட்டுவார்; -தேவயினம்
அப்பொழுது அங்கே குடியிருந்து தான்மகிழ்வர்.
அப்பொழுது சீராரின் ஊழியர்தன் -னிப்போதோ
நன்வழியார் தான்மகிழ்வர் காணிதனில்; மேனவரின்
நன்பெயரை அன்புகூரும் மக்களவர் -நன்றாய்
அதில்வாச மாயிருப்பார் கள்.
சங்கீதம் 69
என்தேவா, என்னை விடுவியும், கர்த்தாவே,
என்னுதவிக் காகநீர் தீவிரியும். -என்னுயிரை
வாங்கிடத் தேடுவோர்கள் வெட்கியவர் நாணட்டும்
தீங்கெனக்கு வந்திட தீவிரும்பும் -தீங்கவர்
பின்னிட்டுத் தான்திரும்பி நாணட்டும் சீரிலார்.
என்முன்பாய் ஆஆஆ என்போரொ -பின்னிட்டு
போவாராம் நாணத்தால்; உம்மைச்சீர்த் தேடுவோர்
போவார் மகிழ்ந்தும்மில்; உம்மீட்பில் -மேவி
விரும்புவோர்கள் தேவனுக்கு மேன்மையுண் டாக
அருமையாய் ஆர்ப்பரிப்பர் சீரார் -திருத்தேவா
நானோ சிறுமையும் தாழ்வெளிமை யும்மானோன்;
மேனவா தேவனே, என்னிடம் -மேனவரே
தீவிரமாய் வாரும்சீர்: நீரேயென் சீர்த்துணையும்
மேவியெனை சீராய் விடுவிப்பார், -தீவிரியும்
கர்த்தாவே, தாமதியா தேயும்சீர். என்றவன்
கர்த்தரைப் பாடினான் பாட்டு.
சங்கீதம் 70
கர்த்தாவே, உம்மைநான் நம்பி யிருக்கிறேன்;
கர்த்தாவே நானொரு போதுமய்யா -கர்த்தாவே
வெட்கம் அடையாத வாறுநீர் செய்யுமே.
மட்டிலா உம்நீதி தன்னிமித்தம் -நட்டான்
எனைவிடுவித் தென்னைநீர்க் காத்தருளும் சீரோய்;
எனக்குமது சீர்ச்செவியைச் சாய்த்து, -எனைநீரே
மீட்டிடும். நானெப் பொழுதும் வரத்தக்க
மேட்டாமே கன்மலை யாயிரும்; -மீட்டிடவே
கட்டளை யிட்டீரே; நீரேயென் கன்மலையும்
திட்டமான என்கோட்டை சீரோய்நீர். -மட்டமான
தீயவரின் கைகட்கும், நீதியிலாக் கேடுள்ளோன்
தீயவரின் கைக்குமெனைத் தப்புவியும். -வேயவராம்
நீரேயென் நோக்கமாம் சீரோய், சிறுவயது
சீராய்த் தொடங்கியென் நம்பிக்கை -நீரேசீர்
கர்ப்பத்தில் நான்தோன்றும் சீர்முதல் உம்மாலே
கர்த்தாவே ஆதரிக்கப் பட்டேனே; -கர்த்தாவே
என்தாய் வயிற்றி லிருந்தென்னை நீரெடுத்தீர்;
என்சீரே உம்மையேநான் எப்பொழுதும் -நன்றாய்த்
துதிப்பேன். பலருக்கு நானொரு புத்தம்
புதுமைப்போ லானேன்; திருவே -அதுவகை
நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமே.
சீரே எனதுவாய் உம்துதி -சீராலும்,
நாள்தோறும் உம்மேன்மை யாலும் நிறைந்திருப்ப.
ஆள்முதிர்ந் தென்வயதில் என்னைநீர்த் -வேள்தள்ளா
தேயிருந்து, என்பெலன் சீரொடுங்கும் போதெனை
வேயவர்க் கைவிடாமல் சீரிரும். -ஆயவா
என்பகைஞர் வன்னெதிராய்ப் பேசியென் ஆன்மாவை
வன்னெடுக்கக் காத்திருக்கும் ஏகமாய் -வன்னாக
ஆலோ சனைச்செய்து தேவனார் கைவிட்டார்,
மேலவனை நீர்த்தொடர்ந்து கைப்பிடியும்; -ஆலன்
அவனை விடுவிப்பார் இல்லையென் கின்றார்.
தவனெனக்கு தேவனே, நீரோ -அவர்நினைப்போல்
தூரமாக நீரிராதீர்; என்தேவா, இன்னுதவத்
சீரவாத் தீவிரியும். என்ஆன்மா -சீரிலாது
வன்னெதிர்ப்போர் வெட்கி அழிய, எனக்குத்தீ
வன்னாகப் பொல்லாப்புத் தேடுகின்றோர் -தன்னையே
நிந்தையும் நாணமும் மூடட்டும் சீரிலாரை.
எந்நாளும் நானோமேன் எப்பொழுதும் -விந்தையவர்
மேலேதான் நம்பிக்கைக் கொண்டிருந்து, மேன்மேலும்
மேலவரே உம்மைத் துதிப்பேன்சீர். -மேலவரே
என்வாய் உமதுசீர் நீதியையும் உம்சீராம்
நன்மீட்பை நாள்தோறும் சொல்லுமே; -அன்னவற்றின்
சீர்த்தொகையை நானறியேன் சீரவா. கர்த்தரா,
சீர்த்தேவ னின்வலியை முன்னிட்டு -சீர்நடப்பேன்;
உம்முடைய நீதியைப் பற்றியே மேன்மைசொல்வேன்.
உம்முடைய மேன்வியன்கள் நானறிவித் -தும்வந்தேன்
தேவா சிறுவயது சீர்முதலாய் போதித்தீர்;
தேவனே, இவ்வழிக்கு உம்வலியும், -தேவா
வரப்போகும் யாவர்க்கும் உம்மேன்மை சொல்ல
நரைமயிரு முள்ளவனாய் ஆகும் -வரைக்கும்
எனைக்கைவி டீராக. தேவனே, உம்சீர்
வினைநீதி மேன்மையே, பேராய் -வினைச்செய்தீர்;
தேவா, உமக்கு நிகரானோர் யாருளர்?
தேவா இடுக்கண் களையெனை -தேவனே
நீர்காணச் செய்து திரும்ப உயிர்ப்பித்து,
சீர்நீரே என்னைக் குழிகளில் -நீர்விட்டு
ஏறச்செய் கின்றீர்சீர். என்மேன்மை தன்னைநீர்
ஆறாய்ப் பெருகச்செய் தேசீரே -தேறுதல்
செய்திடுவீர் நீரேசீர். என்தேவா, வீணையைக்
செய்யெடுத்தே உம்மையும் உம்மெய்யும் -செய்த்துதிப்பேன்;
சீரிசுரெல் தூயா, சுரமண் டலத்தைநான்
சீரெடுத்துக் கொண்டும்மைப் பாடுவேன். -சீராக
நான்பாட என்னுதடும் நீர்மீட்ட என்ஆன்மா
தான்சீராய் ஆர்ப்பரித்து சீராகத் -தான்மகிழும்.
பொல்லாப்பைத் தேடுவோர் வெட்கமடைந் தாரவரே
நல்லவரே நாள்தோறும் என்நாவு -நல்ல
உமதுசீர் நீதியைக் கொண்டாடும். என்றே
தமதுசீர் வாயாலே பாட்டு.
சங்கீதம் 71
தேவனே, உம்சீர் நியாயமானத் தீர்ப்புகளை
தேவனே மன்னன் மகன்கையில் -தேவனே
தந்தருளும். மக்களை நீதியோடும் உம்மெளியோர்
அந்தநியா யத்தோடே சீராக -எந்நாளும்
மன்னன் விசாரிப்பார். மேன்மலைகள் மக்களுக்கு
என்றும் அமைதிதரும்; மேடுகள் -நன்நீதி
தன்னின் விளைச்சலைக் கொண்டிருக்கும்; மக்களில்
வன்னாய்ச் சிறுமைப் படுகின்றோர் -மன்னிடம்
வந்திட, சீராய் நியாயம் விசாரித்து
அந்நியாயம் சீர்ச்செய்து ஏழைகள் -செந்நியாயம்
செய்வார்; இடுக்கண்கள் செய்கிற மாந்தனை
மெய்யாய் நொறுக்குவார் சீர்மன்னன். -மெய்வெளியே
விண்ணிலே ஞாயிறும் திங்களும் உள்ளமட்டும்
மண்ணிலே அச்சத்தோ டேநிற்பார் -மண்ணார்
பரன்பரையாய்; புல்லறுப் புண்டவெளி யின்மேல்
பரந்து சொரியும் மழைப்போல் -தரைநனைக்கும்
சீர்மழையின் தூறலைப் போல யிறங்குவார்;
சீர்நாட் களில்நீதி மான்செழிப்பான் -சீர்மண்ணில்
திங்களுள்ள நாள்வரைக்கும் மிக்காய் அமைதியும்
இங்கே கடல்தொடங்கி எல்லையாய் -அங்கே
இரும்கடல் எல்லையாய், ஆ(று)தொடங்கி மண்ணில்
திருவவர் ஆளுவார் மன்னர் -திருமுன்னே
பாலையில் உள்ளோர் குனிந்து வணங்குவர்
ஆலவரின் வன்பகைஞர் மண்திண்பர் -சீலவர்க்காய்
தீவுகளின் மன்னரும் தர்சீசின் மன்னரும்
மேவிக் கொணர்வரே காணிக்கை -ஏவாதே
கொண்டு வருவார் இருசேபா மன்னரும்
மண்ணின் வெகுமானங் கள்தன்னை -மண்ணிலே
வாழெல்லா மன்னரும் சீரவரைப் மெய்ப்பணிய
வாழெல்லா தேசத்தார் மெய்ப்பணிவர் -தாழயிரும்
சீரில் எளியவனை, சீருதவி யற்றசிறு
சீரில் மனிதனை சீர்விடுவித் -தீருவார்
சீர்வல்லில் ஏழைக் கவரிரங்கி, சீரில்லா
சீரெளி யோர்களின் ஆன்மாக்கள் -சீரவர்
மீட்பார். அவர்களின் ஆன்மாக்கள் தன்னையே
மீட்பாரே வஞ்சகத்திற் கும்கொடுமை -மீட்டவர்
தப்புவிப்பார்; செந்நீர் அவரின் அவருடைய
தப்பாத பார்வைக்கு சீரருமை -அப்போ
திருக்கும்; பிழைத்திருப்பார் சீரவர்; ஃசேபா
இரும்சீராம் பொன்னவர்க்கு தந்தே -இருமவர்
சீர்நிமித்தம் வேண்டுதல் செய்யப் படுமிடை
சீர்விடாமல்; எந்நாளும் சீர்த்துதி -சீர்நில்லா
சீரவரைச் சேரும்; புவியின் மலைகளின்
சீருச்சி தன்னிலொரு சீர்ப்பிடி -சீர்நெல்லே
சீர்மலைமேல் ஆங்கே விதைக்கப்பட் டந்தநெல்
சீர்விளைச்சல் லீபனோன் போலசையும் -சீர்ப்புவியின்
புல்லைப்போல் சீர்நகரார் சீர்செழித்து ஓங்குவார்கள்;
நல்லவரின் சீர்ப்பெயர் என்றென்றும் -நல்லபடி
சீரிருக்கும்; ஞாயிறு உள்ளவரை சீர்ப்பெயர்
சீராய்ப் பரன்பரைக்கும் சீர்நிலைக்கும் -சீர்மாந்தர்
சீரவருக் குள்வாழ்த்து பெற்றிடுவர், தேசமெல்லார்
சீரவரை பேறுபெற்றோர் வாழ்த்துவர். -சீரினமாம்
சீரிசுரெல் தேவனாக சீரிருக்கும் கர்த்தராம்
சீரவர் தேவனுக்கே என்றுமே -சீராய்த்
துதிகளெள்ளாம் சேரட்டும்; சீரவரே செய்யும்
மதிபேர் வியன்செய்கை கள்மேன் -துதியது
சீரார்ப் பெயர்க்கே அவருடைய மேனவர்க்கே
சீரார்ப் புவியெல்லாம் சீர்மகிமை -சீர்நிறைந்தே
சீர்ரிருப்ப, ஆமெனாமென்; ஈசாய் மகனவன்
சீர்மகன் தாவீதின் கேள்முடிந்தே -சீர்மன்னன்
தன்மகனுக் காய்பாடி னான்
சங்கீதம் 72
தூய்மன முள்ள இசுரெலர் தன்னிற்குத்
தூய்த்தேவன் நல்ல வராகவே -தூய்யுள்ளார்.
ஆனாலும் என்கால்கள் தள்ளாடு தேயதற்கும்,
தானென் அடிகள் சறுக்குதற்கும் -தானவைச்
சற்றுதான் தப்பிற்று. தீயோரின் வாழ்வைநான்
சற்றேதான் காண்கையில் வீம்புளோர் -அற்றவரின்
மேல்பொறாமை நான்கொண்டேன்; சாகும் வரையவர்
மேல்தான் இடுக்கண்கள் இல்லையே; -மேல்லற்றார்
மேல்லுறுதி யாய்பலன் தானிருக் கின்றது;
நால்வர் படும்வருத்தத் தில்லகப்ப -டால்தான்
மனிதர் அடையும்தீப் பாடு அடையார்.
மனிதரவர் மேல்பெருமை சுற்ற -மனிதரவர்
மேற்கொடுமை ஆடையைப் போலவே மூடிடும்
சாற்றியவர் கண்கள் கொழுப்பினால் -மேற்றாகப்
பார்க்கிறது; தீமனம் தான்விரும்பு மிக்காக
பார்தன்னில் தானடக்க, சீர்கெட்டுப் -பார்தன்னில்
போயே, அகந்தையாய்ச் சீரில் கொடுமையை
வேயிலாப் பேசுகிறார்; பேசுகிறார் -தீய
இறுமாப்பாய் சீரில் மனிதரவர் தானே.
இறுமாப்பில் எம்வாயோ விண்ணைச் -சிறப்பெட்டப்
பேசிகிறார்; நாவவரின் பூமியெங்கும் வீசியுலா;
பேசுவதால் அன்னாரின் மக்களும் -பேசுவழிப்
போகின்றார்; நீர்களோ வீணர்க்கு நன்னிறைவாய்
ஆகப் பெருகிச் சுரக்குமே; -வாகையோ
தேவனுக்கு எப்படித்தான் அஃது தெரியுமோ?
தேவனாம் உன்னத மானார்க்கு -மேவியிதில்
நல்லறிவு உண்டோ? எனச்சொல் கிறாரவர்.
நல்லபடி வாழ்ந்தவர்கள் தீவழியோர் -அல்லாரோ
பூமி தனில்பேராய்ச் சொத்துகள் சேர்க்கின்றார்
தாமே பயனில்லா தென்மனதை -மேமானாய்த்
தூய்யாக்கிக் குற்றமில்லா மையினாலே என்கைகள்
தூய்யாக்க நான்கழுவி னேன்சீராய் -வேய்யாக
நாள்தோறும் நான்வாதிக் கப்பட்டும், காலைதோறும்
ஆள்தண்டிக் கப்பட்டும் நானிருக்க -ஆள்நானோ
இவ்விதமாய்ப் பேசுவேன் என்றுநான் சொன்னாலே,
அவ்விதத்தால் உம்சேய் வழியார்க்கு -அவ்வகைச்சொல்
சொன்னாலே வன்னெதிராய் ஆவேன். இதையறிய
நன்றாக எண்ணிநான் பார்த்தேனே -நன்னவராம்
தேவனின் தூய்த்தலத்துள் உட்சென்று, சீரில்லார்
தேவன்முன் சீரில் முடிவைநான் -தேவனார்
காட்டக் கவனித் துணருமட்டும், என்பார்வைக்
காட்டமாகத் தானே யிருந்தது. -காட்டாரை
நீரோ உறுதியாய் சீரில் சறுக்கலான
பாரின் இடத்தில் நிறுத்திவிட்டு, -பாரினது
பாழான சீரில் இடங்களில் சீரில்லார்
பாழாய் விழச்செய்கின் றீர்சீரோய். -பாழானார்
சீரில்லார் சீரில் ஒருநிமிடத் தில்தானே
சீரில் திகைப்புகளால் தீயவர் -சீரில்
அழிந்தவர் பாழா கிறார்கள். உறக்கம்
விழித்தெளிந்து கண்காண் கனாவும் -ஒழிவதுபோல்
ஆண்டவரே, நீர்விழிக்கும் போதவரின் சீரில்லா
மாண்பரி தாரத்தை சீரவா -மாண்பார்
இகழுவீர். இப்படியாய் என்மனம் தானே
புகழில் கசந்தது, என்னுள் -இகழ்ச்சியால்
குத்துண்டேன். நான்செயலைத் தானிறியா மூடனாய்
அத்தவர்முன் சீரில் விலங்கைப்போல் -பித்தானேன்.
ஆனாலும் சீரேநான் எப்பொழுதும் உம்மோடே
மேனான் இருக்கிறேன்; என்வலக்கை -மேனார்
பிடித்துத்தான் தாங்குகிறீர். ஆலோ சனையும்
படியேநீர் என்னை நடத்தி, -முடிவிலே
என்னை மகிமையில் ஏற்றிடுவீர். விண்ணுலகில்
நன்னெனக்கு உம்மையல் லாமல்யார் -அன்னவா
உண்டங்கு? பூவுலகில் உம்மைத் தவிரவே
உண்டிலை வேறே விருப்பந்தான் -மண்ணவன்
என்னுடலும் என்மனமும் மாண்டுபோ கின்றதே;
நன்னாரே தேவனார் என்றென்றும் -என்மனதின்
கன்மலையும் என்பங்கு மாயிருக் கின்றாரே.
அன்னவா, உம்மைவிட்டுத் தூரமாய் -வன்போவோர்
நாசமடை வார்கள்; உமைவிட்டுச் சோரம்போம்
வீசை அனைவரையும் கொல்லுவீரே. -பேசும்
எனக்கோ, திருத்தேவன் தன்னையே அண்டி
வினைக்கொண் டிருப்பதே நன்னே; -எனதுசீர்
நம்பிக்கை ஆண்டவர் மேல்வைத்துள் ளேனது
அம்சீரின் சீர்ச்செயல்கள் சொல்லிட -எம்கர்த்தர்
மேலேதான் நம்பிக்கை வைத்தேன்நான் என்றங்கு
மேலவன் ஆசாப்பின் பாட்டு
சங்கீதம் 73
சங்கீதம் எண் 74
மஸ்கீல் என்னும் ஆசாபின் போதக சங்கீதம்.
தேவனே, என்றென்றும் தள்ளி விடுவதேன்
தேவனே நீரெம்மை? உம்சொந்த -மேயாமே
எங்களின் மேலுமது வஞ்சினம் ஏன்புகைந்தோ?
எங்களை, முன்னாளில் நீர்மீட்ட -எங்களையும்,
உம்சொந்த சீர்க்குடிகள் தன்னையும், சீர்வசித்த
நும்சீயோன் மேம்மலைத் தன்னையும் -அம்சீரோய்
நன்றாய் நினைத்தருளும். பேராண்டாய் பாழாகி
ஒன்றில் கிடக்கும் தலங்களில் -நன்னவரே
உம்பாதங் கள்தான் எழுந்தருளச் செய்திடும்;
உம்தூய நல்லிடத்தை வன்பகைஞன் -அம்சீரில்
எல்லாம் கெடுத்திட்டான். உம்முடைய வன்பகைஞர்
எல்லாரும் உம்முடைய ஆலயத்துள் -அல்லாதார்
சீறி உருமியே தங்கள் கொடிகளை
மீறி அடையாளங் கள்ளென -வேறாட்கள்
நாட்டுகிறார். கோடரி தன்னோங்கிச் சோலையிலே
நாட்டின் மரங்களை வெட்டுவோன் -நாட்டிலே
பேர்பெற் றவனானான். இப்பொழுதோ சீரில்லார்
பேர்வேலை ஓவியங்கள் எல்லாமே -பேர்வலியாய்
போடுகின்றார் சீரில் தகர்த்து. உமதுதூய்
வீடுதனை தீக்கிரை யாக்கியவர் -போடுகின்றார்
உம்பெயர்க் கொண்ட தலத்தை தரைமட்டும்
அம்மார் இடித்திட்டு மிக்காக -அம்மார்
அசுத்தப் படுத்தினார்கள். ஏகமாய் சீரில்
அசுத்தம் செயற்புரிந்தார் தூளாய் -மிசைதனில்
தேசத் திலுள்ள திருக்கோவில் எல்லாமே
வீசியவர் தீயாலே சுட்டெரித்தார். -தேசத்தில்
எங்களுக் கென்றிருந்த சீரடை யாளங்கள்
எங்கேயும் காணோம்; இறைவாக்கன் -எங்குமில்லை;
இந்நிலை எந்நாள் வரைக்குமென்று தன்னறியு
மந்த அறிவுடை மாந்தனவர் -இந்நாளில்
எங்களிடத் தில்லில்லை. தேவனே, மேதவா
எங்களின், எந்நாள் வரைக்குமாம் -எங்கள்
பகைஞன் எமைவன்சொல் நிந்திப்பான் வன்னாய்?
பகைவன் உமது பெயரை -பகையாக
எப்பொழுதும் வன்கெடுசொல் லாலே உரைத்திடுவான்?
இப்போதோ நின்வலக்கை யும்மேனோ -தப்புவிக்கா
வண்ணமாய் ஏன்நீர் முடக்கினீரோ? தேவனே
விண்ணவா நின்மடி யின்னின்று -விண்ணோங்கி
வன்னாரை நீரழியும்; பூமியின் சீர்நடுவில்
தன்மீட்பைச்ச் செய்துவரும் தேவனே -என்னுடைய
மன்னனாய் ஆதி முதலுள்ளார் சீரரசர்.
அன்னவா, உம்வலியால் நீர்க்கடலை -ஈராய்ப்
பிளந்தீரே; பேரரவந் தன்னின் தலையைப்
பிளந்துடைத்தீர் நீரிலே தேவா; -அளந்தே
முதலைக ளின்தலைகள் தன்னை நருக்கிப்
முதலையின் ஊனதை பாலை -விதமக்கள்
தன்னிற்கு உண்ண உணவாய்க் கொடுத்தீர்நீர்.
நன்னீராம் ஊற்றையும் ஆற்றையும் -நன்பிளந்தீர்
பேர்நதி கள்தன்னை வற்றிடச் செய்தீரே.
சீர்ப்பகலும் உம்மின்; இரவுமது -சீர்ரும்மின்;
தேவரீர் சீரொளி தன்னையும் ஞாயிறையும்
தேவரீர் சீராய்ப் படைத்தீரே. -தேவரீர்
பூமியின் எல்லைகளை யெல்லாமே திட்டமாய்
ஆமேநீர்ச் செய்தீர்சீர்; கோடைமாரி -மேமானே
காலங்கள் உண்டாக் கினீர்சீரே. கர்த்தாவே,
சீலிலான் வன்னவன் உம்மைத்தான் -சீலிலாது
நிந்தித் ததையும், அறிவில்லா மக்களவர்
சிந்தியா தும்பெயரை வன்பேச்சை -சிந்தியும்
சீரோய்; உமதுசீர் காட்டுப் புறாவினது
சீரான ஆன்மாவைத் தீயரின் -சீரில்லாக்
கூட்டத்திற் கொப்புக் கொடாதீர்; உமதேழைக்
கூட்டத்தை என்றும் மறவாதீர். -மேட்டவா
உம்மின் உடன்படிக்கைத் தன்னை நினைத்தருளும்;
அம்பூமி தன்னின் இருளான -தம்மிடங்கள்
வன்கொடுமை யுள்ள குடியிருப்பு கள்தன்னால்
வன்நிறைந் துள்ளதே. துன்பமுடை -வன்சீரில்
நாணத்தோ டேதிரும்ப வொட்டா திரும்சீரோய்;
மாணில் சிறுமை எளிமையோன் -மாணமிகு
சீரவா உம்பெயரைத் தான்துதிக்கச் செய்திடும்;
சீரவரே, தேவா, எழுந்தருளும், -நீரே
உமக்காக சீராய் வழக்காடும்; சீரோய்
உமக்கந்த சீரில்லா ராலே -உமக்கு
வரும்நிந்தை தன்னை நினைத்திடும் சீரோய்.
கரங்கொட்டி வன்பகைஞர் செய்த -கரவொலியை
சீரே மறவாதீர்; உம்மெதிராய் தானெழும்பும்
சீரில் அமளியோ எப்பொழுதும் -சீரில்
பெருகுகின்ற தேசீரில் என்றே சிறப்பாய்
அருமை இசையாலே பாட்டு
சங்கீதம் 74
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.
தேவனே, உம்மைத் துதிக்கிறோம், சீரவா
தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; -தேவனே
உம்பெயர் நன்றாய் அருகிலே உள்ளதென
உம்வியன் செய்கைகள் தானறிவிக் -கும்சீரோய்
சீராய் நியாயந்தீர்ப் பேன்சீராம் நேரத்தில்;
சீரிலாதே பூமியது மக்களொடு -சீரில்
கரைந்துபோ கின்ற; ததின்தூண்கள் தன்னை
நிலைநிறுத்து கின்றேன்நான். வீம்பாய் -அலைந்துபேசும்
வீம்பாட்கள் நோக்கி, அலைந்துவீம்பு பேசாதீர்
நிம்மென்றும்; தீயோரை தானோக்கி -கொம்பை
உயர்த்தா திருங்களென்றும் சொன்னேன்நான். கொம்பை
உயர உயர்த்தா திரும்மும்; -வியனிறுமாப்
புள்ள கழுத்துடைய வர்களாய்ப் பேசாதீர்.
தள்ளி கிழக்கிலோ மேற்கிலோ -தள்ளியிரும்
பாலையினின் றோவெற்றி வாராது; தேவனே
சீலார் நியாயா திபதிதானே; -சீலார்
ஒருவனைத் தாழ்த்தி, உயர்த்துகிறார் வேறாள்.
திருவினது கையிலே பார்க்காய் -திரைக்கள்
கலங்கியே பொங்குகிற பாத்திரம் ஈதோ,
கலங்குமது ஊற்றினால் தீயார் -கலங்கிட
வண்டல் களைஉறிஞ்சிக் கள்குடிப்பர் சீரிலார்.
வின்ணவரை என்றும் அறிவித்து -மண்ணிலே
யாக்கோபின் தேவனை யின்னிசைப் பாடுவேன்.
தீக்கிரையாய் தீயரின் கொன்புவெட்டி -தாக்கிடுவேன்;
நீதிமானின் கொம்புகளோ சீராய் உயர்ந்திருக்கும்.
வேதவரைப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 75
சங்கீதம் எண் 76
நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.
தேவன் அறியப்பட் டுள்ளாரே யூதாவில்;
தேவன் பெயரோ இசுரேலில் -மேவுபேரே
சாலேமில் சீராகக் கூடா ரமும்சீயோன்
மேலவரின் வீடும் இருக்கிறது. -மேலவர்
அங்கே யிருந்துவில்லின் அம்புகள் தன்னையும்
அங்கே யிருந்துகேட கத்தையும், -அங்கே
யிருந்துகூர் வாளையும், சீர்முறித்தார் போரை.
திருவே மகிமையுள்ள சீரோய் -வரைமேலுள்
கொள்ளைகள் தன்னை விடவும் திருவவர்
அள்ளும் ஒளிவீசு கின்றவரே -கள்ளமிலார்
அஞ்சாதார் கொள்ளை யிடப்பட்டு கண்ணயர்ந்தார்;
மிஞ்சும் வலியுள்ளோர் சீரார்க்கு -அஞ்சி
உதவாதே போனார்கள்; யாக்கோபின் தேவா
விதமாக கண்டித்த தாலே -அதமாகி
தேர்களொடு சீர்ப்பரிகள் தூங்கி விழுந்தன;
நீர்நீரே, உள்ளீர் திகைப்பாக -சீர்த்தீச்
சினம்மூளும் போதுமக்கு முன்நிற் பவன்யார்?
சினத்தால் நியாயம் விசாரித் -தனைவரையும்
பூமியில் சீச்சிறு மைப்பட் டவரையவர்
பூமியில் மீட்கவும், தேவரீர் -பூமியில்
சீராய் எழுந்தருளு மத்தருணம், விண்ணின்று
சீராய் நியாயத்தீர்ப் புக்கேட்கச் -சீர்ச்செய்தீர்
பூமியது அஞ்சி யமர்ந்தது. மாந்தனின்
தீமைச் சினமது உம்மகிமை -ஏமம்
விளங்கச்செய் யும்சீரோய்; மிஞ்சும் சினத்தை
இளக்கி அடக்குவீர்நீர்; சீராய் -களத்தினது
காணிக்கை கொண்டு வருவீர் இறைமக்காள்;
காணிக்கை செய்த பொருத்தனை -காணினின்று
உங்களின் தேவனாம் கர்த்தருக்கு சீராக
பங்கை நிறைவேற்றுங் கள்மக்காள்; -இங்கே
இளவல்கள் ஆவியை சீரார் அடக்க,
அளவிலார் சீரவரே பூமி -அளம்பும்
அரசர் களுக்கவர் மேன்திகைப்பாய் உள்ளார்
தரைமீது சீரார் சிறந்து.
சங்கீதம் 76
சங்கீதம் எண் 77
எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
தேவனை நான்நோக்கிக் கூக்குரலாய்க் கெஞ்சினேன்,
தேவ னிடத்தில் உயர்த்தினேன் -தேவனே
தேவனே என்றெனது சத்தத்தை, சீரவர்
தேவன் எனக்குச் செவிகொடுத்தார். -தேவனை
ஆண்டவரைத் தேடினேன் என்தீங்கு நாளதில்;
ஆண்டவரே யென்றே இரவிலும் -ஆண்என்கை
விண்ணாரை நோக்கித் தளரா விரித்திருந்தேன்;
விண்ணவரே என்ஆன்மா போயிற்று -மண்மீது
ஆறு தலடையாமல்; தேவனை நான்நினைத்தால்
வேறாய் அலறினேன்; என்னாவி -ஆற
தியானித்தால் தொய்ந்திற்று ஆவியது. தேவா
இயலாதே கண்மூடா வண்ண -வியனேநீர்
என்கண் ணிமைகளைச் சீரார் பிடித்துள்ளீர்;
என்வாயும் பேசமாட்டா வண்ணமாய் -வன்னிருக்க
முன்னாட்கள் முன்னாண்டு கள்தன்னை எண்ணுகிறேன்.
இன்னிசையைக் காரிரவில் எண்ணியே -என்மனதில்
பேசினேன் சீரவா; ஆய்ந்தது ஆவியென்.
வீசியே ஆண்டவர் எந்நேரம் -பேசாது
தள்ளி விடுவாரோ? சீரார் ஒருபோதும்
தள்ளி தயைச்செய்யா தேவிட்டோ? -தள்ளினாரே
சீர்கிருபை முற்றிலும் அற்றதா யிற்றோஒ?
சீர்கர்த்தர் வாக்கதும் போயிற்றோ -சீர்மக்கள்
எல்லா தலைமுறைக்கும் தானே ஒழிந்திங்கு?
நல்லவராம் தேவன் இரங்கிட -அல்லா
மறந்தாரோ? தன்சினத்தால் தன்னுருக்கச் சீராம்
அறனார் இரக்கங் களைவிட் -டறவே
அடைத்துக்கொண் டாரோஒ? என்றேன்நான் சீரோ
அடடடா என்னயிது என்றே -கடையெண்ண
அப்பொழுது நானோ: இதுயென் பலவீனம்;
எப்பொழுதும் மேனார் வலக்கையின் -தப்பாத
ஆண்டுகளை நான்நினைப்பேன் சீரோய்ச் சிறந்திங்கு.
ஆண்டுகளில் கர்த்தர் செயல்களை -மாண்பு
நினைந்திடுவேன், உம்முன்னாள் செய்வியன்கள் தன்னே
நினைந்திடுவேன்; உம்செய்கை யெல்லாம் -நினைந்து
தியானித்து, உம்செயல்கள் தன்னைநான் எண்ணினேன்;
வேயவா, தேவனே, உம்வழி -தூயிடமாம்
கூடாரத் தில்லுள்ள தேஆமே; நம்தேவன்
மேடவர்ப் போலப் பெரியதேவன் -நாடெல்லாம்
யாருளரோ? மேன்வியன்கள் செய்கிற தேவநீரே;
சீரவா மக்களுள்ளே உம்வலியைச் சீராய்
விளங்கச்செய் தீர்சீரே. யாக்கோபு யோசேப்
திளைவழியார் உம்மக்கள் தன்னை -அளவிலா
உம்தோளின் நல்வலியால் மீட்டீர் திருச்சீரே.
உம்மைக்காண் நீருமங்கு தத்தளித்து -உம்மைக்காண்
விண்முகில்கள் நீர்ச்சொரிந்து ஆழம் கலங்கிற்று;
விண்மண் டலமோ முழக்கமிட்டு -விண்ணவரின்
அம்பு தெறிப்புண்டு நேராய்ப் பறந்தது.
உம்சத்தம் காற்றில் முழங்கினது; -அம்மின்னல்
பூமியில் வீசொளி வீச; குலுங்கியே
பூமி அதிர்ந்தது. உம்வழி -ஆமே
கடலிலும், உம்பாதை நீரிலும் தானே
அடியுமது காணாதே போயிற் -றடியார்
திருமோசே ஆரோன் எனத்தூயர்க் கையால்,
திருஉமது மக்களை ஆட்டின் -ஒருமந்தைப்
போல வழிநடத்தி னீர்சீரே என்றவர்
ஆலவரைப் போற்றியே பாட்டு.
சங்கீதம் 77
சங்கீதம் எண் 78
ஆசாப் எழுதின மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.
என்மக்காள் கற்பிக்கும் என்உப தேசத்தை
நன்றாகக் கேளுங்கள்; என்வாயின் -நன்வசன
மெல்லாமே உங்கள் செவிகளைச் சாயுங்கள்.
நல்வாய் உவமைகளால் நான்திறப்பேன் -அல்லாதே
முன்னாள் இருந்த மறைபொருளை தானேநான்
நன்றாய் வெளிப்படுத்து வேன்சீராய்; -நன்றே
அவைகளை நாங்களோ கேள்விப்பட் டோமே
யவைகள் அறிந்திட்டோம்; எங்கள் -வயமுன்னோர்
எங்களுக்குத் நன்றாய்த் தெரிவித்தார். பின்வரும்
எங்கள் வழியாராம் பிள்ளைகட்கு -இங்கவை
நாங்கள் மறைக்காமல், கர்த்தரின் சீத்துதிகள்
நாங்கள் அவரின் பலத்தையும், -நாங்கள்
அவர்செய்த மேன்வியன் கள்சொல்வோம் தாமே.
அவர்சீராய் யாக்கோபில் சான்றை -அவர்தானே
ஏற்படுத்தி, வேதத்தை சீரிசுரேல் தன்னிலே
ஏற்படுத்தி தங்களின் பிள்ளைகட்கு -மேற்றார்
அறிவிக்க முன்னோர்க்குக் கட்டளை யிட்டார்.
பிறக்கயிரும் பிள்ளைகளாம் பின்னார் -அறிந்ததை
தங்களின் பிள்ளைகட்குச் சொல்லவே தேவன்மேல்
தங்களின் நம்பிக்கை தான்வைத்து -தங்களின்
தேவனின் நற்செயல்கள் தன்னை மறவாமல்
தேவனின் கற்பனைகள் தன்னையே -மேவியவர்
கற்பனைகள் தன்னையே கைக்கொள்ளத் தானங்கு.
அற்றவழி போல்மனதைச் செவ்வையாக்கா -பற்றாதே
தேவனை விட்டுவிட்டு தன்முரட்டாட் டம்கலகம்
மேவுமவர் தந்தையர்க்கு ஒப்பாகா -தேவனர்
சீராய் இவைகளை கட்டளை யிட்டாரே;
வீரராம் வில்லேந்துன் எப்பிராயிம் -வீரமிலா
போர்நாளில் காட்டினாரே சீரில் புறமுதுகு.
சீர்த்தேவன் தன்னின் உடன்படிக்கை -சீர்ரில்லார்க்
கைக்கொள்ளார், கட்டளை கள்படி சீர்நடக்க
தக்கிலார் சம்மதியா தேயிருந்தார் -தக்கில்
செயல்களையும், தங்களுக்குக் காண்பித்த சீராம்
செயல்வியன்கள் தன்னை மறந்தார். -செயலாக
முன்னோரின் முன்பாய், எகிப்தினது சோவானின்
நன்வெளியில், மேன்வியன்கள் செய்தாரே -அன்னார்
கடலைப் பிளந்து, அவரைத்தான் சீரார்க்
கடந்திடச் செய்திடவே நீரை -கடல்குவிந்து
நிற்கும் படிச்செய்தார். காலையில் தூண்முகிலால்
நற்றார் இரவிலே தீத்தூணாய் -நற்றவர்
சீரினத்தைத் தன்னே வழிநடத்தி னார்சீராய்.
சீரற்ற பாலையிலே கன்மலைகள் -நீரதைத்
தந்திடவே சீரார்ப் பிளந்திட்டார்; ஆழங்கள்
தந்திட்ட தண்ணீரை சீரினம் -வந்தவர்
நீர்குடித்தார் சீரே; மலையினின்று நீரோட்டம்
நீர்நதி போலவே ஓடிவரச் -சீர்ச்செய்தார்
என்றாலும், சீரில்லார் பின்னும் அவருக்கு
வன்னெதிராய் பாவஞ்செய் தாரவர், -அன்வறண்ட
காட்டு வெளியிலே மேனார்ச் சினமூட்டி
நாட்டினது ஊன்தாரும் என்றுகேட்டு -வேட்டாகச்
சோதித்தார் தேவனை வன்னா யவர்தன்னே;
சோதித்தே - பாலையிலே ஊன்பந்தி -வேதவரால்
ஆயத்தஞ் செய்க்கூடு மோவென்றே வன்பேச்சு;
தூயநீர் கன்மலை யின்னின்று -ஆயத்தஞ்
செய்க்கூடும் மேனாரால் சீராக அப்பமும்
பெய்த்தரக் கூடுமோ? தம்மின் -வயமக்கள்
தான்புசிக்க ஊனையும் தான்தரக் கூடுமோ
மேன்சீரார்? என்றார்கள் சீரில்லார் -மேன்சீரார்
அம்சொல் தனைகேட்டு வஞ்சினங் கொண்டாரே;
நம்பாமல் நல்லவரை, மீட்பவரின் -நம்பாமல்
போனதினால் யாக்கோபின் வன்னெதிராய் தீயெரிய;
வீணர் இசுரெலின் வன்னெதிராய் -மேனார்ச்
சினம்மூள, மேனுயர வான்முகிற்கு ஆணை;
இனமுண்ண விண்ணின் கதவு -தனைத்திறந்து
மன்னாவை வீணர்க்கு ஊணாய் சொரிந்திடவே
மன்னவர் விண்சோற்றைச் சீரில்லார் -அன்றுண்ணத்
தந்தாரே; தூதரின் சோற்றை மனிதனவன்
அந்நாளில் உண்டானே; ஊணது -அந்நாளில்
சற்றும் குறைவிலா தேசீர் அனுப்பினார்.
மற்றுமங்கே விண்ணிலே கீழ்க்காற்றை -நற்றார்
வரப்பண்ணி, தம்வலியால் தென்றலையும் வீசத்
தரைதனில் ஊனதை தூள்போல் -சிறகுள்ள
புள்ளோ கடற்கரை தூள்மணல் போலங்கு
புள்சொரிந் திட்டாரே மேனவர் -புள்ளோ
அவரினது பாளை நடுவேச் சொரிந்தே
அவர்களின் கூடாரங் கள்சுற் -றவரே
இறங்கச்செய் தாரே. அவர்கள் புசித்துத்
சிறப்பென ஊனுன்ன ஆசைச் சிறப்பூனை
சீரில்லார்க் கைத்தந்தார். சீரில்லார் தங்களின்
சீரில்லா இச்சை வெறுத்திலை -சீரில்லார்
ஊனது வாயில் இரும்போதே தேவசினம்
மேனாரின் வீண்மேல் எழும்பிற்று -மேனார்
அவரில் கொழுத்தவர் கொன்றதால், சீரில்
அவரில் சிறப்பானோர் செத்தார் -அவரோ.
இவையெலாம் தான்நடந்தும், செய்த வியனை
அவர்களோ நம்பாமல், பின்னும் -அவர்களங்குப்
பாவஞ்செய் தார்களே. ஆதலால் நாட்களை
மேவா விருதாவாய், ஆண்டுகளை -ஏவா
திகைப்பால் கழியச்செய் தாரே திருவார்.
வகையாய் அவர்கொல்ல சீரார் -வகையாய்
அவர்குறித்து கேட்டறிந்து சீராய் அவர்கள்
அவரிற் றிரும்பிவந்து தானே -அவர்கள்
அதிகாலம் சீராரைத் தேடி; திருவே
இதுமுதல் எம்கன் மலையே -விதமென்றும்
மேனவரே தங்களின் மீட்பரென் றும்சீராய்
மேனவரை மக்கள் நினைந்தாலும் -மேனவரைத்
தத்தமது வாயாலே இச்சகம் பேசினாரே;
தத்தமது நாவாலே பொய்ப்பேசி -அத்தாரின்
வன்மனது சீரா ரிடம்நிலை யாகவில்லை;
வன்னாகச் சீரார் உடன்படிக்கை -வன்னவர்
உண்மையாக வேயிருக்க வில்லையே. சீரவரோ
மண்ணவரை விட்டழிக்கா தேயிரங்கி -விண்ணார்
அவர்செய்த இன்னாச் செயக்லளை மன்னித்
தவர்தமது வஞ்சினம் எல்லாம் -அவரெழுப்பா
விட்டார் சினமதை . மக்கள் வெறுமூனே
விட்டகலும் காற்றே யெனநினைவு -நட்டாரைச்
செய்தாரே சீரவர்; எத்தனை யோதரம்
மெய்யவரை பாலையிலே வன்சினத்தை -மெய்யிலார்
மூட்டி, அவாந்தர காட்டு வெளியிலே
வேட்டார் அவரை விசனஞ்செய் -நாட்டாரோ
சீரில்லார் தான்திரும்பி தேவனைச் சோதித்து,
சீரார் இசுரெலின் தூயரை -சீரில்லா
மட்டுப் படுத்தினார்கள். நாட்டாரோ சீரவர்
மட்டிலாத் தன்பகைஞர் விட்(டு)விலக்கி -நட்டவரை
மீட்டநாளை யும்நினையா மற்போனார். சீரார்செய்
நாட்டாம் எகிப்திலே சோவானின் -நாட்டுவெளி
தம்வியன்கள் செய்தார். நதியவரின் செந்நீராய்
அம்மே மகனார் குடிக்கவும் -அம்மோ
இராதேபோய் நீரது வாட்டிடச் செய்தார்;
இராதழிக்க வண்டு தவளை -தரைமேல்
திருவவர் விட்டு கெடுக்க அனுப்பி
திருவவர் வெட்டுக் கிளியும் -தரைப்புழுவும்
விட்டே விளைச்சல்கள் கையிட்டுச் செய்தசெயல்
நட்டமாய்ப் போக அனுப்பினார் -இட்டாரே
கல்மழை யங்கே செடிகளையும், அத்திமரம்
எல்லாம் அழித்து, அவர்களின் -நல்ல
மிருகங் களைக்கல் மழைக்கும், அவரின்
இரும்கால் நடைகளை விண்ணின் -குரலிடிக்கும்
ஒப்புக் கொடுத்தார். தமதுடைய வன்சினத்தால்
தப்பா தவர்மேலே தீங்குசெய் -தப்பானத்
தூதரையும் சீரார் அவர்க்குள் ளனுப்பினார்.
மேதவர் தம்சினத்திற் சீர்வழி -வேதர்த்
திறந்து, அவர்களின் ஆன்மாவை சாவை
அறவே விலக்கியவர்க் காவா -தறுக்குமாம்
கொள்ளைநோய்க்கு ஒப்புக் கொடுத்தார். எகிப்திலே
அள்ளி தலைச்சன் அனைத்தையும், -ஒள்ளகாம்
கூடாரங் கள்ளுள் அவர்ப்பெலனில் முன்பலனாம்
ஆடவர் யாவரையும் சீராரே -வேடனாய்
மக்கள் அழித்தவர்: தம்மக்கள் தன்னையோ
தக்கவர் ஆடுபோல் செல்புறம் தக்கபடிச்
செய்து, அவர்களை பாலையிலே மந்தைப்போல்
மெய்யவர் கூட்டிப்போய்; அஞ்சாத -மெய்வண்ணம்
மக்கள் வழிநடத்தி வன்பகையை நீர்க்கடல்
தக்கிலார் மூடச்செய் தார்வீழ்த்த. -தக்கவர்
சீரினத்தை தம்தூய இல்லத்தின் எல்லைவரை
சீராக தன்கரத்தால் வீழ்த்திய -சீராமே
கன்மலை மட்டும் அழைத்துவந்து, சீரினமுன்
கன்மலைவாழ் மக்களைச் சீரவர்த் -தன்துரத்தி,
தேசத்தை நூல்போட்டுப் பங்கிட் டவரைத்தான்
தேசத்தார் தன்னை இசுரெலில் -பாசமாய்
தானே குடியேற்றி னார்சீரார். ஆனாலும்
மேனவரைச் சோதித்து சீரார்க்கு -தானே
சினமூட்டி, சாட்சிகளைக் கைக்கொள்ளா மற்போய்,
இனமுன்னோர் போல வழியை -இனம்விலகி
மோசம்போக் கும்வில்லைப் போல்துவண்டு, தங்களின்
மோசமான மேடைகளால் மேனாரை -மோசமாய்
சீரில் மறுதலித்தார் வன்னாய்ச் சிலையாலே.
சீரவர் தேவன் அதைக்கேட்டு -சீராரோ
வஞ்சினத்தால் தேசம் இசுரேல் மிகவுமாய்
துஞ்சார் வெறுத்தவர், தம்மினத்துள் -விஞ்சியிட்ட
கூடார மாகிய சீலோவை விட்(டு)விலகி,
நாடதின் சீர்ப்பலத்தை வன்சிறையாய் -மேடாமே
தன்மகிமை வன்பகைஞர்க் கைக்கும் கொடுத்தவர்,
தம்மக்கள் வாளற் கிரையாக்கி, -தன்சொந்தம்
மேலே சினங்கொண்டார்; சீரிளைஞர் தன்னையோ
தாளா தெரித்ததுதீ; கன்னியரோ -ஆளில்லா
வாழ்வற்றார் ஆனார்கள். ஆசரியர் வாளாலே
வீழ்ந்தார்கள்; கைம்பெண் அழவில்லை. -வாழ்க்கர்த்தர்
அப்பொழுது தூக்கம் தெளிந்தவனைப் போலவும்,
தப்பாக ஆர்ப்பரிக்கும் கள்ளுண்டோன் -எப்போதும்
போலவும் தானே விழித்தங்கு தம்பகையைப்
சீலவர் பின்புற மாயடித்து, -சீலிலார்க்கு
நித்திய நிந்தை வரச்செய்தார். யோசேப்பாம்
அத்தவனின் கூடாரம் தன்னையோ -அத்தார்
புறக்கணித்தார்; எப்பிராயீம் சீர்க்குலத்தை சீரார்
அறிந்தெரியா யூதா குலத்தை -அறிந்தன்பாம்
சீயோன் மலையையும் சீரார்த் தெரிந்துகொண்டார்.
வேயவர்தன் தூய தலமதாம் -சீயோனை
மேன்மலைகள் போலவும், என்றைக்கும் நிற்கவே
தாம்நிலைச்செய் பூமியைப் போலவும் -மேன்சீரார்
கட்டினார். தம்தாசன் தாவீதைச் சீராரே
நட்டாண் தெரிந்துகொண்டு, சீராரே -நட்டாணை
ஆட்டுத் தொழுவங் களிலிருந்து சீர்மகன்
மேட்டாண் எடுத்தார். கறவலாடு -நாட்டிலே
பின்திரிந்த நல்லாணை, தம்மக்கள் யாக்கோபு
தன்சொந்தம் சீரிசுரேல் மேய்யென்றே -அன்னான்
அழைத்தவர்க் கொண்டுவந்தார். மேனானும் சீரார்
அழைத்தபடி தன்மனதின் உண்மை -விழைப்படியே
மேய்த்தவனும், தன்கை களின்திறமை யாலவரை
மேய்த்து நடத்தினான் சீர்.
சங்கீதம் 78
சங்கீதம் எண் 79
ஆசாபின் சங்கீதம்.
தேவனே, சீரில் புறவினத்தார் உம்சொந்த
மேவிடம் வந்தவர் உம்தூயக் -கோவிலைத்
தீட்டாக்கி சீரூர் எருசலேமை மண்மேடாய்
நாட்டிலே போட்டார்கள்! ஊழியரை -வேட்டைச்செய்
தேசத்தில் அன்னார் உடல்களை விண்புள்ளும்
தேச வெளிவிலங் கிற்குணவாய் -வீசிவிட்டார்
சீரில் புறவினத்தார்; சீருர் எருசலேமைச்
சீரிலார் சுற்றிலும் தூயற்று -சீர்நகரார்ச்
செந்நீரை தண்ணீரைப் போற்சிந்தி னார்களே;
அந்நாளில் அவ்வுடலை கல்லறையில் -அந்நாளிட்
டங்கே அடக்கம்செய் வாருமில்லை. எங்களின்
நட்டார் அயலார்க்கு நிந்தையும், -நட்டிலார்
சுற்றார்க்கும் ஏளனப் பேச்சானோம்; கர்த்தாவே
நற்றவரே, எந்நாள் வரைக்குமாம்? -நற்றவர்நீர்
என்றைக்கும் எம்மேல் சினமா யிருப்பீரோ?
என்றைக்கும் உம்மெரிச்சல் தீப்போல -நின்றெரியும்?
உம்மை அறியாத மக்களின் மேலுமாய்,
உம்பெயர்ச் சீர்தொழா நாடுகளில் -உம்சினத்தை
ஊற்றிவிடும். யாக்கோபை வீணரவர் தின்றாரே,
மேற்றவனின் வீடதைப் பாழாக்கி -தூற்றினாரே.
முன்னாளின் பாவங்கள் தன்னை யெமதெதிராய்
தன்னே நினையாதீர்; உம்மிரக்கம் -தன்னே
விரைந்தெமக்கு நேரிடட்டும்; நாங்கள் மிகவும்
தரைவரைத் தாழ்த்தப்பட் டோமே. -திருநல்
இறைவா, எமைமீட்கும் தேவா, உமது
இறைப்பெயரின் மேன்மை நிமித்தம் -இறையினம்
எங்களுக்கு சீரோய் உதவி விடுவித்து,
எங்களின் பாவங் களைபோக்கும். -உங்களின்
தேவனார் எங்கே எனபுற மக்களார்
ஏவியே சொல்வானேன்? சிந்திய -தேவனின்
ஊழியர் தம்குருதிக் காய்ப்பழி வாங்குதல்
தாழாரெம் கண்கள்முன் தான்விளங்க -ஆழாரே
செய்யும். பெருமூச்சு கட்டுண்ட உம்மக்கள்
மெய்யாரே உம்முன் வரட்டுமே; -மெய்யாரே
வன்கொலைக்கு வன்னார் நியமத்த உம்மக்கள்
தன்னைநீர் உம்தோள் வலியாலே -நன்றே
திருவேநீர் காத்திடுவீர்; ஆண்டவரே, எங்கள்
திருவில் அயலாரார் உம்மைத் -திருயிலையென்
நிந்தித்த நிந்தையை, ஏழத் தனையாக
அந்தீயார் தன்மடியில் தான்திரும்ப -அந்தவரே
செய்யும்நீர். அப்பொழுது, உம்மக்கள் உம்மந்தை
செய்யாடு போலிரும் சீர்நாங்கள் -மெய்யவரே
உம்மைத்தான் என்றென்றும் சீரார்ப் புகழுவோம்;
உம்துதியை எங்கள் தலைமுறைகள் -அம்சீராய்ச்
சொல்லி வருவோம்யாம் சீரவா. நல்லாரைச்
சொல்லி இசைத்தார்நல் பாட்டு.
சங்கீதம் 79
சங்கீதம் எண் 80
சாட்சி விளங்கும்படி சோஷானீம் எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
இசுரேலின் மேய்ப்பரே, யோசேப்பை சீரார்
திசைதன்னில் ஆட்டுமந்தைப் போல -திசையில்
நடத்து கிறவரே, சீர்ச்சொல் செவியில்
கொடும்சீரே; கேருபீன்கள் தன்னின் -இடையே
வசிப்பவரே, வீசி ஒளிருமே. மூன்று
வசிப்பினம் முன்பாக நீரே -திசைதன்னில்
உம்வலியை நீரெழுப்பி, எங்களை மீட்கவே
அம்நீரே வந்தருளும். தேவனே, -நும்சீரார்
எங்களை நீர்திருப்பிக் கொண்டுவாரும், உம்முகத்தை
எங்கள்மேல் வீசொளியாற் சீர்நிறப்பும் -அங்கப்போ
மீட்கப் படுவோமே. சீர்ப்படைகள் தேவனே
மீட்பரே உம்மக்கள் வன்னெதிராய் -மீட்பரே
எந்நாள் வரைநீர் சினங்கொள்வீர்? கண்ணீரை
அந்த இனத்தார் புசித்திட -அந்தவகை
அப்பமாக சோறாய் வருந்தியுண்ணச் செய்தீரே;
அப்பமட்டு மல்லவே, நீரும்தான் -இப்போது
மிக்கான தாலேதான் கண்ணீரே யாம்குடிக்க
தக்கிலாதே தந்தீரே சீரேனோ? -தக்கிலார்
எம்மயலார்க் கெங்களை ஏனோ வழக்காக
எம்மைத்தான் வைக்கிறீர்; எம்பகைவர் -எம்மைத்தான்
ஏளனம் செய்கின்றார்; சீர்படைக் கொண்டவராம்
வேளே, இறைவனே, எங்களை -வேளே
திருப்பிடும் எம்மைச்சீர், உம்முகத்தை சீரார்
திருமேலே வீசொளிக்கச் செய்யும்; -திருவேயாம்
அப்பொழுது மீட்கப் படுவோம். எகிப்தினின்று
அப்போ தொருதிராட்சை நன்கொடியை -அப்போநீர்
கொண்டுவந்து, மக்களை நீர்துரத்தி நாட்டினீர்.
கொண்டுவந்து நாட்ட இடத்தைத்தன் -ஆண்டவரே
ஆயத்தம் செய்தீர்; கொடியது வேரூன்றி,
ஆயவா தேசமெங்கும் சீர்ப்படர்ந்து. -வேயநிழல்
கன்மலைகள் தன்னையதின் நற்கிளைக கொண்டது
நன்கே துருக்களும் மூடியது. -நன்னது
தன்கொடி தன்னைக் கடல்மட்டும், ஆறுவரை
தன்கிளை கள்வரைச் சீர்படர -நன்றாக
விட்டதானால், இப்பொழுதோ அங்கே வழிநடக்கும்
நட்டிலார் யாவரும் வன்பறிக்க -விட்டீர்
அதினடைப்பு தன்னையேன் போட்டீர் தகர்த்து?
அதனையேன் காட்டினது பன்றி -விதமுழுதுப்
போடு கிறதுவெளி யின்மிருக மெல்லாமே
போடு கிறதுபன்றி மேய்ந்துதான்; -நாடதை
சீர்ப்படைகள் கொண்ட இறைவனே, விண்ணின்று
சீர்ராகக் கண்ணோக்கிப் பார்த்துநீர் -சீர்நெர்
விசாரித் தருளும்; வலக்கையும் வைத்த
மிசைக்கொடியை நீர்சீராய் வைத்த -கிளையையும்
கண்ணோட்டம் செய்தருளும். தீயெரித்து வெட்டுண்டு
மண்ணாகிப் போயிற்று; உம்முகத்தின் -விண்ணவா
அன்திகைப்பால் சீரிலார் போகிறார் வன்னழிந்து.
நன்னார் வலக்கை தனிலிரும் -நன்னாண்மேல்
நீர்திடம் செய்த மனிதசேய் மீதிலும்
சீர்ரிருப்ப தாகவே. அப்பொழுது -சீர்விட்டுப்
பின்வாங்க மாட்டோம்; எமைஉயிர்ப் பித்திடும்,
நன்னவரே அப்பொழுது உம்பெயரை -நன்யாம்
தொழுதுகொள்வோம். சீர்ப்படைகள் கொண்ட இறையே
வழுவெம்மைச் சீராய்த் திருப்பி -அழைத்துவாரும்
உம்முகத்தை சீரொளி வீசச்செய் தேசீரே
அம்மானே சீர்நாங்கள் அப்பொழுது -நும்மீட்பால்
மீட்கப் படுவோமே சீர்நாங்கள் என்றங்கு
நாட்டவர் ஆசாபின் பாட்டு.
சங்கீதம் 80
சங்கீதம் எண் 81
கித்தீத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
நம்பெலனாம் தேவனை ஆர்பரித் துப்பாடி,
நம்சீராம் யாக்கோபின் தேவனை -அம்குறித்து
ஆர்ப்பரி யுங்களேன். தம்புரு வாசித்து,
சீர்வீணை யையும்நல் இன்னிசைக்கும் -சீர்யாழை
நீர்தன்னே சீர்க்கை எடுத்துநீர்ப் பாடுங்கள்
சீர்ப்பாட்டு. மாதப் பிறப்பிலும், -சீர்நமக்குச்
சீர்நிய மித்தந்த காலத் திலும்நம்மின்
சீர்விழா நாட்களிலும், எக்காளம் -நீர்ஊதும்.
நேமம் இதுசீர் இசுரெலுக்கு, யாக்கோபு
மேமகனார்க் கிந்த நியாமாமே; -மேமானார்ச்
செய்யென்று சொன்னதாம்; நாமறியா பேச்சினை
வெய்கேட்ட நாடாம் எகிப்துவிட்டு -செய்யாம்
புறப்படுகை யில்லிதை யோசேப்பில் சான்றாய்
சிறப்பாக ஏற்படுத்தி னார்சீர். -சிறப்பவன்
தோளைச் சுமைக்கு விலக்கினேன்; கைகளை
ஆளவரின் கூடைக்கு நீங்கலாக்கி -வேளவர்நான்
நீயழைக்க அந்நெருக்கம் தன்னிலே உன்னைத்தான்
வேயவதைத் தப்புவித்தேன்; மின்னலிடி -வேயிடமாம்
உண்டாகும் சீராம் மறைவிடம் தன்னின்று
மண்ணுனக்கு நான்விடைத் தந்தேனே; -மண்ணிலே
மேரிபாவின் தண்ணீர் களிடத்தில் உன்னைநான்
நேரிட்டுச் சோதித் தறிந்தேனே. -சீரினம்கேள்
நானே உனக்காகச் சான்றிட்டுச் சொல்லுவேன்;
மேனார் இசுரேலே, நீயெனக்குத் -தானே
செவிகொடுத்தால் நன்னலமே. வேறு சிலைகள்
அவிந்தேநீர் தேவனாய்ச் செய்யீர் -அவிந்தேநீர்
வேற்றாரின் தெய்வங்கள் தன்னையே போற்றாதீர்;
வேற்றூர் எகிப்தினின்று உன்னைநான் -வேற்றாய்ப்
புறப்படச் செய்தஉன் தேவனாம் கர்த்தர்
அறிநானே; உன்வாய் விரிவாய்த் -திறந்திடு,
நான்சீர் அதைநிரப்பு வேன்தானே. என்மக்கள்
ஏன்யென் உரைக்குச் செவித்தர -ஏன்மறுத்தார்
என்னை இசுரெல் விரும்பவில்லை. ஆகையால்
வன்னவரை வன்மனதின் வன்கடினம் -தன்னிற்கு
விட்டுவிட்டேன்; தங்களின் சிந்தைப் படியவர்கள்
எட்டி நடந்தார்கள். ஆயெனது -நட்டார்
எனக்குச் செவிகொடுத்து, என்வழி தன்னில்
நனிநடந்தால் சீர்நல மாமே! -நனிவிரைந்து
வன்னெதிரார்த் தாழ்த்தியே, என்கையை வன்பகைஞர்
வன்னெதிராய் நானே திருப்புவேன். -வன்னாய்
திருவைப் பகைப்போரோ வன்பேச்சு விட்டே
திருவிலா தேயடங்கி ஓய்வர்; -திருவுடையார்
காலமோ என்றென்றும் நல்லிருக்கும். நற்பயிரால்
மேலவர்தான் உண்ணத் தருவாரே -மேலாமே
கன்மலையின் நற்றேனை தந்து களிப்பினால்
உன்மனதை சீர்நிறைவு செய்து
சங்கீதம் 81
சங்கீதம் எண் 82
ஆசாபின் சங்கீதம்.
தேவன் அவையில் எழுந்தருளி யுள்ளார்சீர்;
தேவர் களின்நடுவில் சீரவர்த் -தேவன்
நியாயம் விசாரிக் கிறார்சீராய். நீங்கள்
நியாமிலாதே செய்திடுவீர் தீர்ப்பை -வயமாக
வன்னார் முகத்திற்காய் செய்வீர் எதுவரை?
நன்றாக ஏழைக்கும் திக்கற்ற -சீர்ப்பிள்ளைக்
கும்நியாயஞ் செய்து, சிறுமைப்பட் டோரவர்க்
கும்திக்கற் றோனுக்கும் நீதியை -அம்செய்வீர்;
வன்னார்க்கை யின்னின்று சீரில் பலவீனர்
நன்னெளியோன் தன்னை விடுவித்து, -நன்றாகத்
தப்புவியும் சீரே. அறியா துணராமல்
தப்பாய் இருக்கிறார்கள், காரிருளில் -இப்போ
நடக்கிறார்கள்; தேசத் தடித்தள மெல்லாம்
கிடந்தே அசைகிறது. நீங்கள் -கடையரோ
தேவர்கள் என்றும், எலாருமே உன்னதரின்
தேவமக்கள் என்றும்நான் சொன்னேனே. -தேவமக்கள்
ஆனாலும் நீங்கள் மனிதரைப்போல் செத்துத்தான்,
மேனார் உலகார்ப்போல் நீவில் விழுந்துபோவீர்.
தேவா, எழுந்தருளும், பூமிக்கு சீராக
மேவி நியாயந்தீர்ச் செய்யும்நீர்; -தேவனே
நீர்தன்னே மக்களவர் எல்லாரை சொந்தமாக
சீர்திருவார்க் கொண்டுள் ளவர்.
சங்கீதம் 82
சங்கீதம் எண் 83
ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.
தேவனே, பேசாதே கூறாதே செய்யாதே
தேவனே நீரிரா தேயுமே -தேவா
இதோஉம்மின், வன்பகைஞர் கொந்தளித்து, உம்மின்
வதைப்பகைஞர் தானே தலையாற் -எதிர்த்தனர்;
உம்மக்கள் தன்னிற்கோ வன்னெதிராய்த் தந்திரங்கள்
அம்மவர் என்ணியவர் உம்மறைவில் -தம்மிருப்போர்
வன்னெதிராய் ஆலோ சனைச்செய் கிறார்களே.
என்சீர் இனமது தேசமாய் -என்றுமிரா
பேர்இனி எண்ணப் படாமலும் போவதற்காய்
சீர்ரற் றழிப்போமே வாருங்கள் -சார்பென்றார்.
இப்படியே, ஏதோமின் கூடாரத் தாரவரும்,
தப்பார் இசுமவேல், மோவாபு -அப்படியே
ஆகரியர், கேபாலர், அம்மோன், அமலேக்கர்,
வாகையார் தீரு குடிசேர -ஆகவே
கூடும் பெலித்தர் ஒருசேர, செய்தாரே
கூடியவர் ஆலோ சனைச்செய்து -கூடினார்
நும்சீர்க்கு வன்னெதிராய் ஒப்பந்தம் செய்கிறார்கள்.
நும்சீர் எதிராய் அசீரியர் -தம்மே
கலந்திடுவர் கூடசேர்ந்து லோத்மகனார்க் காக
அலர்ந்தவர்த் தோள்வலி யானார் - தலைவராய்.
மீதியனின் மக்களுக்குச் செய்தது போலவும்,
வாதையாய் கீசோன் நதியண்டை -வாத்தித்து
எந்தோரில் வன்னாய் அழிக்கப்பட் டேநிலத்திற்
அந்நாள் எருவாய் விழுந்தவன் -அந்தாள்
சிசெராசேர் யாபீன்போல் நீரவர்க்குச் செய்யும்.
திசைதனில் ஓரேபு சேபு -மிசைமேளாள்
சல்முனாக்கும் சேபாக்கும் நேர்ச்சமனாய் நீர்வையும்.
அல்லாதார் தேவனின் இல்லங்கள் -அல்லாதே
எம்சொந்தம் ஆக்குவோம் என்றுசொல் கின்றாரே
எம்தேவா சீரில்லார் தன்னைநீர் -அம்காற்றில்
தானகப் பட்டப் புழுதிபோல் ஆக்கும்நீர்;
மேனவா காட்டைக் கொளுத்துமாப்போல் -மேனாம்
மலைகளை தீப்பிழம்பு தானெரிக்கு மாப்போல்
அலரப் புயலாலே, காற்றால் - கலங்கிடச்
செய்யும்சீர். கர்த்தாவே, உம்பெயரை சீரில்லார்,
மெய்யவா, தேடும் படிக்கவர்கள் -மெய்முகங்கள்
தன்னை அவமானத் தால்மூடும். யேகோவா
என்னும் பெயர்கொண்ட தேவரீர் -நின்னொருவர்
தன்னே புவியனைத்தின் மேலும்சீர் உன்னதமாய்
நன்தேவர் என்று மனிதரார் -நின்றுணர
சீரில்லார் என்றைக்கும் வெட்கிக் கலங்கிட்டுச்,
சீரிலாதார் நாண மடைந்திட்டு -சீரிலார்
தானே அழிந்திடு வார்களாக என்றவர்
மேனாரைப் பாடினார் பாட்டு
சங்கீதம் 83
சங்கீதம் எண் 84
கித்தீத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
சீர்ப்படைத் தன்னுடைய கர்த்தாவே, உம்மில்கள்
சீராமே எவ்வளவு இன்பமாய்ச் -சீருள்ளே
என்ஆன்மா கர்த்தரின் ஆலயத்தின் சுற்றுவழி
தன்னிலே வாஞ்சையும் தாகமுமாய் -தன்னுளதே;
என்மனமும் என்னுடலும் சீராராம் தேவனை,
நன்றாக நோக்கியே ஆர்ப்பரிக் -கின்றது.
என்னரடும் என்தேவா சீரவரே சீர்ப்படைகள்
தன்னுள கர்த்தாவே, உம்பீடம் -தன்னண்டை
ஆங்கே அடைக்கலான் சீர்க்குருவி வீடொடு
ஆங்கே, தகைவிலான் சீர்குருவிக் காங்குள
தன்குஞ்சு கள்வைக்கும் கூடும் கிடைத்ததே.
அன்னார் திருவும்மின் வீட்டிலே -நன்றாய்
வசிப்போரே பேறுபெற்றோர்; எப்பொழுதும் உம்மை
வசிப்போர் துதித்திருப்பர் சீரார் -திசைதனில்.
உம்மில் பெலன்கொள்ளு கின்ற மனிதனும்,
தம்மனதில் செவ்வை வழிகளைத் -தம்கொண்ட
சீரவர்ப் பேறுபெற்றோர்; கண்ணீர்ச் சொரிந்தவர்
நேராய் கெடுபள்ளம் தானடந்து -நீரூற்றாய்
ஆக்கிக்கொள் கின்றார்கள்; வான்மழை யும்குளங்கள்
ஆக்கம் நிரப்பும். அவர்பலமேல் -ஆக்கபலம்
தானடைந்து, சீயோனில் தேவன்முன் வந்திடுவர்
தானவர். சீர்ப்படைகள் தன்தேவா -மேனவரே
கர்த்தாவே, என்சீராம் விண்ணப்பப் கள்தன்னைக்
கர்த்தாவே, கேளும்நீர்; யாக்கோபின் -கர்த்தாவே,
தேவா, செவிகொடும் சீரவா. எங்களின்
தேவனே கேடகமே , கண்ணோக்கம் -மேவிதாரும்;
நீர்ச்சொரிந்த நன்னார் முகமதை நீர்பாரும்.
நேர்பேராம் ஆயிரம் நாட்களை -சீர்வாழ்வைப்
பார்க்கிலும் உம்மில்லச் சுற்றிலே சென்றிடும்
சீர்நாள் ஒருநாளே நல்லது; -சீரில்லார்க்
கூடாரங் கள்தன்னில் வாசமாக உள்ளதை
மேடாக எண்ணாமல் என்தேவன் -மேடவரின்
ஆலயத்தின் வாசற் படியிலே காத்திரும்
சீலதையே நான்தெரிவேன். தேவனாம் -சீலவர்
கர்த்தரவர் ஞாயிறும் கேடகமு மானவர்;
கர்த்தர் கிருபையும் மேன்மகிமை -கர்த்தரவர்
சீரார் அருளுவார்; உத்தமமாய் சீர்நடக்கும்
சீரார்க்கு நன்மை வழங்காதே -சீரிரார்.
சீர்ப்படைகள் தன்னுள்ள கர்த்தாவே, உம்மைத்தான்
சீர்நம்பி யுள்ள மனிதனவன் -சீரவரின்
பேறுபெற்றோன் என்றங்கு சீர்நம்ப சீராரும்
பேறுபெற பாடினார் பாட்டு.
சங்கீதம் 84
சங்கீதம் எண் 85
கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்
கர்த்தாவே, உம்தேசத் தின்மேலே அன்புவைத்து,
கர்த்தாவே, சீரில் சிறையிருப்பைத் -கர்த்தா
திருப்பினீர் யாக்கோபின்; உம்மக்கள் தன்னின்
திருவிலாத ஊழலதை மன்னித் திருவற்ற
சீரிலா பாவத்தை யெல்லாம்நீர் மூடினீர்;
சீரவரே உம்சின தானடக்கி -சீரவரே
உம்சினத்தின் வன்னெரிச்சல் விட்டுத் திரும்பினீர்.
எம்மீட்பின் தேவனே, நீரெம்மை -அம்திருப்பிக்
கொண்டுவாரும், எங்களின் மேலுள்ள உம்சினத்தை
தாண்டியாறச் செய்யும்சீர்; என்றைக்கும் -தாண்டாது
எங்கள்மேல் நீர்சினமாய் தானிருப்பீர்? அன்றியும்
எங்கள் தலைமுறைக்கும் உம்சினத்தை -தங்கித்தான்
நீடித் திருந்திடச் செய்வீரோ? உம்மக்கள்
நாடியே உம்மில் மகிழ்ந்திருக்க -மேடவரே
நீரெம்மைத் தானே உயிர்ப்பிக்க மாட்டீரோ
சீராக? கர்த்தாவே, உம்கிருபை -சீரவரே
எங்களுக்குக் காண்பித்து, உம்மீட்பை தந்திடும்
எங்களுக்கு சீராய் அருளியே. -எங்கள்
திருக்கர்த்தர் தேவன் விளம்புவதைக் கேட்பேன்;
திருவவர் தம்மக்கள் சேர்த்துத் -திருத்தூயர்
என்பார்க்கும் நல்லமைதி கூறுவார்; வன்னாகி
என்றும் அறிவில் திரும்பாது -நன்னிருப்ப;
நம்தேசம் தன்னில் மகிமை வசித்திட,
தம்மீட்பு தம்மஞ்சும் சீரார்க்கு -அம்மருகே
உள்ளதே; நன்கிருபை யும்மெய்யும் ஒன்றையொன்று
உள்ளத்தே சந்திக்கும், ஒன்றையொன்று -நல்லபடி
நீதி அமைதி இரண்டுமே முத்தமிடும்.
நீதியது விண்ணின்று பார்க்குமே -வேதவரின்
மெய்யதும் பூமியி னின்று முளைக்குமே;
மெய்யவர் நன்மைத் தருவாரே; -நம்தேசம்
தன்பலனைத் தந்திடும். நீதியவர் முன்னாகச்
சென்று, அவரின் அடிச்சுவடு -தன்வழியில்
நம்மை நிறுத்தும் எனவங்கு சீர்செய்ய
தம்மே இசைத்தாரே பாட்டு
சங்கீதம் 85
சங்கீதம் எண் 86
தாவீதின் விண்ணப்பம்.
கர்த்தாவே, உம்செவியைச் சாய்த்தெனது விண்ணப்பம்
கர்த்தாவே நீரதைக் கேட்டருளும்; -கர்த்தாவே
நான்சிறு மையும் எளிமையு மானவன்.
ஆன்மா யெனதினதைக் காத்தருளும்; -நான்பக்தி
யுள்ளவன்; என்தேவா, உம்மைநம்பித் தானடியேன்
உள்ளேனே, நீர்மீட்டி டும்சீரோய் -உள்ளவனை;
ஆண்டவரே, நீரிரங்கும், நாடோறும் உம்மைநோக்கி
ஆண்டவரே, கூப்பிடு கின்றேனே. -ஆண்டவரே
உம்மடி யேனுடைய ஆன்மாவை நீர்மகிழ
அம்சீரார்ச் செய்திடும்; ஆண்டவரே, -உம்மிடத்தில்
என்ஆன்மா தன்னை உயர்த்து கிறேன்சீரோய்.
என்தேவா, மன்னிக் கிறவரும் -நன்னாரும்
உம்மைநோக்கிக் கூப்பிடு கின்றோறாம் யார்மேலும்
நும்கிருபை மிக்காய் பொழிவராம் -அம்சீரோய்
கர்த்தாவே, வேண்டுதல் எந்தன் செவிகொடுத்து,
கர்த்தாவே விண்ணப்பங் கள்யென்னின் -கர்த்தாவே
சத்தத்தை நீர்கவனிப் பீரோ. கெடுந்துயரம்,
அத்தவா, அந்நாளில் உம்மைநோக்கி -அத்தவா
என்றேநான் கூப்பிடுவேன்; நீர்என்னைக் கேட்டருள்வீர்.
என்தேவா, ஆண்டவரே, தேவருள்ளே -என்தேவா
உம்மைப்போல் யாருமிலை; உம்செய்கைக் கொப்புமிலை
அம்சீரார் உண்டாக்கி விட்டமக்கள் -நும்முன்னே
வந்து பணிந்து உமது பெயரதை
அந்நாளில் மேன்மைப் படுத்துவர் -எந்நாளும்
சீரவா தேவரீர் மேன்மை யுளவராமே,
சீராய் வியன்செய்கை கள்செய்வீர் -சீரவா
நீரொருவர் தானே திருத்தேவன். கர்த்தாவே
சீராம் வழியுமதை போதியும் -நீரெனக்கு;
உம்மெய்யில் நான்நடப்பேன்; உம்பெயர்க் கஞ்சிடவே
எம்மனதை நீர்தான் ஒருமுகம்செய் -தெம்காப்பீர்
என்சீரார் தேவனாம் ஆண்டவரே; உம்மையே
என்முழு சீர்மன தோடும்நான் -என்றும்
துதித்து, உமதுபெயர் தன்னைத்தான் என்றும்
மதியாலே மேன்மைப் படுத்த -விதம்செய்வேன்.
நீரெனக்குப் பாராட் டினவுமது சீர்க்கிருபை
பேராமே; என்ஆன்மா வைத்தாழ்ந்த -வேர்க்கொளா
பாதாளத் திற்குத்தான் தப்புவித்தீர். தேவனே,
மேதவரில் வன்மனதோர் என்னெதிராய் -சேதமாக
ஏன்எழும்பு கின்றார்கள், வன்கொடுமைக் காரராம்
ஏன்எனது இன்னுயிரை வாங்கவே, -ஏன்தேடு
கின்றார்கள், உம்மையவர்த் தங்களுக்கு முன்பாக
அன்னார் நிறுத்திநோக்கா தேயிருக்கார் -மன்னவா.
ஆனாலும் ஆண்டவரே, நீர்மனதில் சீர்ருருக்கம்,
மேனிரக்கம், நீடிய நன்பொறுமை, -மேனாம்
நிறைந்த கிருபையென, மெய்யுமுள்ள தேவன்.
இறைவனே, என்மேல்நீர் நோக்கி, -இறைவா
எனக்கிரங்கும்; உம்வல் லமையை உமது
தனினடி யானுக் கருளி, -தனதடியான்
சீர்மகனை மீட்டிடும் சீரோய்நீர். கர்த்தாவே,
நீர்எனக்கு சீர்த்துணைச் செய்தென்னை -சீர்த்தேற்றும்
சீர்வகைத் தன்னை பகைஞரார்க் கண்டவர்
சீர்கெட்டு வெட்கிடவே, சீரெனக்கு -சீருதவிச்
செய்திடுவீர் என்றே அடையாளம் ஒன்றைநீர்
மெய்யாகக் காண்பித் தருளு.
சங்கீதம் 86
சங்கீதம் எண் 87
கோராகின் புத்திரருக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய சங்கீதம்.
சீரவர் தன்னடிக்கல் தூயமலை தன்னிலே.
சீரவர் கர்த்தரவர் யாக்கோபின் -சீரில்லங்
கள்தன்னைப் பார்க்கிலும் சீயோனின் வாயில்கள்
தள்ளாதார்க் கன்பாமே. தேவனின் -தள்ளாதச்
சீர்நகரே! உன்னைக் குறித்து மகிமையான
சீர்ச்செய்தி சொல்லப் படுமாமே -சீராக
என்னை அறிந்தவர்க் குள்ளேநான் ராகாபை
அன்னூராம் பாபிலோனைப் பேசுவேன்; -அன்னார்
பெலித்தியர் தீரியர், எத்தியோப் கூட,
நலியின்னான் அங்கே பிறந்தான் -நலியுண்டே;
சீயோனின் சீர்குறித்து, இன்னான் அதிற்பிறந்தான்
வேயிலை என்றுசொல் நிற்குமே; -வேயவர்
உன்னத மானவர் தாமே அதைநிலையாய்
நன்செய்வார். கர்த்தரவர் மக்களின் -நம்பெயர்
தானெழுதும் போதுதான், இன்னான் அதில்பிறந்தான்
மேனென்று சீரார்த் தொகையிடுவார். -மேனகரே
எங்களின் ஊற்று களெல்லாமே உன்னிலே
தங்கி இருக்கிறது என்றுதான் -அங்கிருப்போர்
பாடியாடிச் சொல்வார் ஒருமித்து நன்றாக;
பாடினார் சீராகப் பாட்டு
சங்கீதம் 87
என்மீட்பின் தேவனாம் கர்த்தாவே, உம்மைநான்
என்னிரவு என்பகலாய் நோக்கியே -என்சீரைக்
கூப்பிட்டு; என்விண்ணப் பம்உம்முன் சீர்வருவ;
கூப்பிடுதல் கேட்க உமதுசெவி -கூப்பிடும்
என்சொல்லை கேட்டருள நீர்திறந்து சாய்த்தருளும்.
என்ஆன்மா ஏலா வருத்தநிறை -என்னுயிரோ
சாவிற் கருகாய் இருக்கிறது. சாவரோ
சாவில் இறங்குவோ ரோடுநான் -சாவிலே
எண்ணப்பட்(டு), இங்கே வலயிலா மாந்தனாய்.
எண்ணினார் செத்தார் ஒருவனைப்போல் -எண்ணநீர்
ஆகாத வண்ணமாய் செத்தகுழி தன்னிறங்கிப்
போகுவண் போலானேன்; செத்தகுழி -ஆகாதக்
காரிருளில், ஆழத்தில் வைத்தனை; சீர்சினத்தால்
கோரினவன் தாங்கயேலா தேசீரோய் -சீரலைகள்
உந்தனின் என்னைச்சூழ்ந் துள்ளதே. மண்ணிலே
எந்தன் அறிமுகம் ஆனோரை -இந்தயிடம்
விட்(டு)விலக்கி அம்கண்முன் ஆனேன் அருவருப்பு
விட்டுப் புறப்படா வண்ணமிங்கு -இட்டுச்
சிறையாய் அடைபட்டு நிற்கிறேன் சீரே
கறுப்பாகி என்கண்கள் தொய்ந்து -இறையவா
உம்மையே நான்நோக்கிக் கூப்பிட்டு, நேராக
உம்முன்னே என்கைகள் நான்விரித்தேன். -அம்செத்தோர்
தன்னிற்கு நீர்வியன் செய்வீரோ செத்தவர்
தன்னே எழுந்தும்மை செய்வரோ -இன்துதி?
சாக்குழியில் உம்மிரக்கம், தீயழிவில் உம்மெய்யும்
ஆக்க நிறைவிவரம் செய்வரோ? -ஆக்கில்
இருளிலே உம்வியனும் பூவில் மறந்தார்
தெரியவும் நீதியறி விப்பார் -இருப்பரோ?
நானோ திருவே, உமைநோக்கிக் கூப்பிட;
வானங்கீழ் காலையிலே விண்ணப்பம் -நான்செய்ய
வானிலே உம்முன்பாய் சீர்வரும். -ஏனோ
திருவே எனதான்மா தன்னைநீர் தள்ளி
திருச்சீரே ஏனோ முகத்தை -திருவெனக்குக்
காட்டாது ஏனோ மறைக்கிறீர்? சிற்றனாய்
வாட்டமுதல் நான்சிறுமைப் பட்டவனும் -வாட்டிநிலம்
மாண்டுபோ கின்றவனு மாயிருந்தேன்; ஆண்டவா
ஆண்டவா உம்மால் வருந்திகில்கள் -ஆண்டவா
என்மேல் சுமந்திருக்க, நான்கலங்கு கின்றேனே.
என்மேல் உமதெரிச்சல் தான்புரள -என்னை
அலகையால் ஏனோ வதைக்கிறீர் சீரே;
அலைப்போல் எனையலகைச் சூழ்ந்து -அலையாய்
வளைந்திட விட்டீரே; ஏனோ -களையிலா
நண்பனையும் தோழனையும் சேண்விடுத்து எந்தனின்
மண்ணன்பர் போனார் மறைந்து.
சங்கீதம் 88
சங்கீதம் எண் 89
எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.
கர்த்தரின் சீர்க்கிருபை கள்தன்னே என்றென்றும்
கர்த்தாவே நான்சீராய்ப் பாடுவேன்; -கர்த்தாவே
உம்மெய்யை நான்நேர் தலைமுறையாய் என்வாயால்
அம்நான் அறிவிப்பேன் சீரவரே. உம்கிருபை
என்றென்றும் மேனாய் நிலைப்பட்டுச் சீரிருக்கும்;
நன்றாமே உம்மெய்யை விண்ணிலே -தன்னே
நிலைப்படுத்து வீர்என்றேன்; என்னால் தெரிந்த
நலவா ளுடனேநான் சீராய் -நலமாய்
உடன்படிக்கைச் செய்துயென் தாசனாம் தாவீத்
இடம்நான்சொல்: என்றென்றும் உன்சீர் -அடிவழியார்
தன்னை நிலைப்படுத்தி, நன்றாய் தலைமுறையாய்
உன்சீர் அரியணையை நன்றாக -நன்நிலையாய்
கர்த்தர்நான் வைப்பேனென் றாணையிட்டேன் என்றீர்நீர்.
கர்த்தாவே, வானங்கள் உம்வியனைக் -கர்த்தாவே
தன்துதிக்கும், தூயர் களினவையில் உம்மெய்யும்
நன்விளங்கும். விண்ணக மண்டலத்தில் -நன்கர்த்தர்
நேர்நிகர்யார்? மேன்வலியோர் நன்வழியுள் கர்த்தருக்கு
சீர்ஒப்பாம் ஆள்யாரோ? தேவனவர் -சீர்த்தூயர்
ஆலோ சனையவையில் மிக்காக அஞ்சிட
ஆலவரே சீரவர்; தம்மைச்சூழ்ச் -சீலர்
அனைவராலும் அஞ்சப் படத்தக்க சீரார்.
வினைப்படையின் தேவனாம் கர்த்தா -வினைவலி
உம்மைப்போல் உள்ளவன் யார்கர்த்தா? உம்சீர்மெய்
உம்மைச்சூழ்ந் துள்ளது சீரவரே. -நும்சீர்
கடலின் பெருமையை ஆள்கிறவர்; மேலாய்க்
கடலலைகள் ஏற, அலையும் -கடலை
அடங்கச்செய் கின்றீர்சீர். நீர்ராகாப் தன்னை
அடிபட்டு வெட்டுண்ட ஓராள் -அடிபோல்
நொறுக்கினீர்; உம்வலித் தோளாலே உம்மின்
அறுபகைவர் நீர்ச்சிதறத் தானே -தறிப்பீர்சீர்.
வானங்கள் உம்சொந்தம், பூமியும் உம்சொந்தம்,
வானங்கீழ் பூமியும் உள்ளதாம் -மேனாட்கள்
யாவர்க்கும் நீரே அடிக்கற்கள் நாட்டினீர்.
மேவும் வடக்கையும் தெற்கையும் -தேவாநீர்
உண்டாக் கினீர்சீரோய்; தாபோரும் எர்மோனும்
விண்ணவரே உம்பெயரை நன்விளங்க -மண்மீது
ஆர்ப்பரிக்கும். உம்வலி தோளுள்ள தேசீரோய்;
சீர்க்கரம் மேன்செயல் செய்திடுமே; -சீர்வலக்கை
உம்முடைய துன்னத மானது. நீதியும்
உம்நியாய மும்உம் அரியணை -தம்அடிக்கல்;
நன்கிருபை யும்மெய்யும் உம்முன்பாய் தானடக்கும்.
நன்மக்கள் நன்றறிந்து ஆர்ப்பரிப்பின் -நன்கேட்கும்
பேறுபெற்றோர்; கர்த்தாவே சீரும் ஒளிதன்னில்
பேறுபெற்றுத் தானடப்பர் சீரவர்; -பேறுபெற்றோர்
உம்பெயரில் நாடோறும் தன்னே களிகூர்ந்து,
உம்முடைய நீதியால் மேனுயர்ந்தே -தம்மிருப்பார்.
நீரே அவர்கள் பலத்தின் மகிமையாய்
சீரிருக் கின்றீரே; உம்தயவால் -சீரவரே
எங்களின் கொம்பு உயரும்சீர். கர்த்தரால்
எங்களுக்குக் கேடகமும், சீரிசுரேல் -இங்குள்ள
தூயரால் எங்களின் மன்னனும் உண்டிங்கு.
தூயரே அப்பொழுது நீர்உம்மின் -வேயிடம்
விட்டுநீர் பக்தனுக்கு காணத் தெரிந்தங்கு:
நட்டார் உதவிசெய நல்வலியை -இட்டேன்
வலியோன்மேல், மக்களில் தேர்ந்தோனை தன்னே
நலமாய் உயர்த்தினேன்; தாசன் -நலவாணாம்
தாவீதைக் கண்டுபிடித் தேன்நானே; என்தூய
மேவும் திருயெண்ணெய் யாலேதான் -மேவுன்னை
நெய்ச்சொரிந்தேன் நானே. அவனோடே என்கரம்
மெய்யுறுதி யாயிருக்கும்; என்தோள்தான் -மெய்யவனின்
சீராய்ப் பலப்படுத்தும். வன்பகைஞர் சீராணை
சீரில் நெருக்குவ தில்லையே; -சீரிலாண்
நீதிக்கேட் டின்மகன் சீராண் ஒடுக்குவதில்;
நீதியோன் முன்பாய்ப் பகைஞரை -நீதியாய்
சீர்நீர் மடங்கடித்து, சீரண் பகைக்கிற
சீர்ரில்லார் வெட்டுவேன். என்மெய்யும் -சீர்ரென்
கிருபையும் சீரவ னோடிருமென்; பேரால்
திருவவன் கொம்பு உயரும். -திருக்கையை
நீள்கடல்மேல் சீர்வலக்கை தன்னை நதிகள்மேல்
ஆள்சீரை ஆளும் படிவைப்பேன்; -ஆள்ளென்னை
நோக்கி: திருநீரே என்தந்தை, என்தேவன்,
தாக்கேலா மீட்பின் மலையென்று -நோக்கியவன்
சொல்லுவான். நானவனை எம்முதற்சேய், பூமியின்
நல்லார்கோ பார்க்கிலும் மேனாக -நல்லுயர்ந்த
ஆளாக்கு வேன்நானே. என்கிருபை என்றென்றும்
ஆளுக்காய்க் காப்பேன்; உடன்படிக்கை -ஆளுக்காய்
எந்தன் உறுதிப் படுத்தி. அவன்வழி
எந்நாளும் சீராய் நிலைத்திருக்க -உந்தன்
அரியணை வானங் களுள்ளமட்டும் சீராய்
திருவாய் நிலைநிற்கச் செய்வேன். -திருவவன்
பிள்ளைகள் என்நியாயம் கைக்கொள்ளா விட்(டு)விலகி
பிள்ளைகள் என்வேதம், கட்டளைகள் -தள்ளியவர்
மீறியிங்குக் கைக்கொள்ளா நேமங்கள் தன்னடந்தால்
மீறுதலை சாட்டையாலும், சீராக்க -வேறுவாதை
மேலிட்டுத் தண்டிப்பேன். ஆனாலும் என்கிருபை
மேலிருந்து விட்(டு)விலக்கா தென்மெய்யில் -மேலார்ப்
பிசகா மலுமிருப்பேன். எந்தனின் சீராம்
அசையா உடன்படிக்கை தன்னை -திசையிலே
மீறா மலுமென் உதடுகள் சொன்னதில்
மாறா மலுமிருப்பேன். என்தூய்மை -வேறின்மேல்
ஆணையிட்டேன், தாவீது தாசனுக்குப் பொய்யுரையேன்.
ஆணையது சீரவனின் நன்வழியார் -ஆணைபடி
என்றென்றும் சீரிருப்பர்; சீராண் அரியணை
என்றுமென் முன்ஞாப்போல் தான்நிலைக்கும் -நன்றாமே
திங்களைப் போலது என்றென்றும் சீருறுதி
தங்கிடும் விண்ணக மண்டலத்து -மங்காத
சான்றைப்ப்போல் உண்மையாயும் தானிருக்கும் என்றுநீர்
தான்விளம்பி னீர்சீரே. ஆனாலும் -ஏன்சீரே
எங்களை நீர்வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர்ச்சொரிந்த
எங்கள்மேல் ஏன்சினங் கொண்டீரோ? -இங்கே
உமதடியான் சேர்த்த உடன்படிக்கை தன்னை
அமையா தொழித்துவிட்டு, மேனாம் -தமன்முடியை
வன்னாய்த் தரையிலே தள்ளி சிறுமையாய்
வன்செய்தீர். நீரவன் மேன்மதில்கள் -வன்தகர்த்து
மேனரணாய் நில்லிடங்கள் பாழாக்கி னீர்சீரில்.
ஏனோ வழிநடக்கும் யாவரும் -தானவனைக்
கொள்ளை யிடுகிறார்கள்; தன்னயலார் கண்ணிற்கு
தள்ளியே நிந்தையானான். வன்பகைஞர் -தள்ளாது
நீரவனின் சீரில் வலக்கையை மேனுயர்த்தி,
நீரவன் வன்னெதிரி யாவரும் -சீரில்
மகிழவே செய்தீர். கருக்கான வாளை
இகத்தில் மழுக்கிவிட்டு, போரில் -தகைநில்லாச்
செய்தீர். அவன்மேன்மை தன்னையோ அற்றிடச்
செய்துநீர் சீரில் அரியணையை -மெய்யாய்த்
தரையிலே தள்ளினீர். சீரிளமை நாட்கள்
தரையில் குறுக்கியே, நாணம் -வரைமூடச்
செய்தீரே; எந்நாள் வரைக்கும் திருகர்த்தா?
மெய்யவரே என்றைக்கும் சீரவா -வெய்திருப்
பீரோ? உமதுசினம் தீப்போ லெரியுமோ?
சீரிலா தென்னுயிர் எவ்வளவு -சீர்நிலை
யற்றதென சீரே நினைத்தருளும்; மாந்தரை
அற்றாய் படைத்திடக் காரணம் -மற்றோ?
மரணத்தைக் காணாது வாழ்வோன்யார் இங்கே?
மரணமாம் பாதாள வல்லிற் -திரைவிலக்கி
ஆன்மா விலக்கி விடுவிப்போன் யாரிங்கே?
மேன்சீரார் ஆண்டவரே, நீர்சீராண் -மேன்சீராய்
உம்மெய்யைக் கொண்டுரைத்த உம்முதற் சீர்கிருபை
தம்முமெங்கே சீரவா? ஆண்டவரே, -உம்முடைய
வன்பகைஞர் உம்முடைய ஊழியரை, நீர்ச்சொரிந்த
நன்னவனின் காலடிகள் நிந்தித்தார் -நன்றிலாதே
என்றதனால், கர்த்தாவே, உம்மடியார் மேற்சுமக்கும்
நன்றிலா நிந்தையையும், சீரிலா -வன்மக்கள்
நான்என் மடியில் சுமக்குமென் நிந்தையையும்
மேன்சீர் நினைத்தருளும். கர்த்தருக்கு -தான்என்றும்
மேன்சீர்த் துதியுண்டா கட்டுமே ஆமெனாமென்.
மேன்சீராய் இன்னிசையால் பாட்டு
சங்கீதம் 89
ஆண்டவரே தேவரீரே எம்மின் வழிவழியாய்
ஆண்டவரே நீர்தான் அடைக்கலமாம் -ஆண்டவரே
எம்மலைகள் தோன்றும்முன், நீர்புவியைத் தோற்றும்முன்
எம்மாண்பார் நீரேசீர் தேவனாமே -இம்மனிதர்
விட்டழித்து மீண்டும்வா என்கிறீர்சீர்; சீருமது
விட்டபேர் ஆயிரமாய் ஆண்டுகளும் -விட்டநாளோ
விட்டயிர வொன்றோ அதுபோல உள்ளதேசீர்
விட்டே அலைகள் இழுக்குமாப்போல் -நட்டவரை
வாரிக்கொள் கின்றீரே; வெற்றுரக்கம் போலயிவர்
சீரில்லா புல்லிற்கு ஒப்பானார் -சீரில்லா
புல்லதுவோ காலையிலே நற்றலை விட்டதுவும்
புல்பூத்து மாலையிலே போகும்வேர் -அல்லறுந்து
சீரோய் சினமுமதால் நாங்கள் கலங்குகிறொம்
நேரே வினைபாவ மெல்லாமே -சீரார்முன்
காணா தெனநினைந்த பாவமெலாம் உம்முன்னே
காணொளிபோல் நிற்கின்ற தேநேரே -காணாது
போயினவே எம்நாட்கள் இங்கே சினமுமதால்
ஆயிற் றெனகணக்கு போல்கழித்தோம் -ஆயுளோ
எம்மின் வெறுமெழு பத்தாமே; மிக்கதானால்
எம்மின் வெறுஎண் பதுதானே -எம்மாயுள்
தாமே விரைவாகப் போக, பறந்துகாணா
யாமோ மறைகிறோம் சீருமது -மேமார்மேல்
உள்ள சினத்தின் வலியை அறிவார்யார்?
உள்ளத்தின் சீற்றை அறிவார்யார்? -உள்ளத்தின்
ஞானியாய் ஆகும் படியெமக்கு நாட்களின்
மேனிரு எண்ணிக்கை எண்ணிட -மேனவரே
கற்றுத்தா ரும்நீர்சீர்; கர்த்தாவே மீண்டுமாய்
நற்றவரே வாரும்; எதுவரை -நற்றவரே
எம்மேல் சினங்கொள்வீர் சீரோய் அடியவர்க்கு
உம்மிரக்கத் தாலே பரிதபியும் -உம்மிரக்கம்
எங்கள்மேல் காலையிலே வாழ்நாளெல் லாம்வரட்டும்
தங்கி நிறைந்து மகிழவர -இங்குயாம்
பெற்ற சிறுமைகள் பட்டதுன்பங் கள்சரியாய்
நற்ற மகிழ்ச்சியைத் தாரும்நீர் -நற்றவராம்
ஊழியர்க்கும் பிள்ளைகட்கும் உம்செய்கை மற்றுமதின்
ஆழமான மேன்மையும் சீர்விளங்க -ஆழன்பார்
தன்னின்சீர் அன்பது எம்மேல் இருப்பதாக;
இன்செய்கை எங்களின் எல்லாமே -நின்றெம்மில்
நீர்செய்யும் சீருறுதி; ஆம்செய்யும் சீருறுதி;
நேர்மகன் மோசேயின் பாட்டு
சங்கீதம் 90
மேன்மையான சீரார் மறைவி லிருக்கிறவன்
மேன்வல்லார் எல்லாம் செயவல்ல -மேன்சீர்
நிழலிலே தங்குவான். நான்கர்த் தரிடம்:
கழலும் அடைக்கலம், மேனார் -நிழலவரே
என்கோட்டை, என்தேவன், நான்நம்பி யுள்ளவர்
என்றுசொல்வேன். சீரவர் உன்னையே -இன்னாத
வேடனின் கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
நாடிதில் தப்புவிப்பார். சீராரே -மூடுவார்
தம்சிறகால் உன்னை; அவர்செட்டை சீர்க்கீழே
அம்நீ அடைக்கலம் சேர்வாயே; -அம்சீரார்
மெய்யாய் உனக்குப் பரிசையும் கேடகமாம்.
வெய்யிரவில் உண்டாகும் இன்னாதே -வெய்த்திகைப்பும்
வெய்யில் தனில்பறக்கும் அம்புக்கும் வெய்யிருளில்
வெய்நடக்கும் கொள்ளைநோய்க்கும், வெய்யிலில் -வெய்பாழ்ச்செய்
சங்காரம் தன்னிற்கும் அஞ்சாதே நீயிருப்பாய்.
அங்குந்தன் பக்கத்தில் ஆயிரமும் அங்கே
வலப்புறத்தில் பத்தா யிரம்பேரும் அல்லார்
நிலத்தில் விழுந்தாலும் உன்னை -கலையா
தணுகாது. கண்களால் மட்டுமதைக் கண்டு
கணையவர் தீயோர்ப் பலனை -இணைக்காண்பாய்.
எந்தன் அடைக்கல மாயிருக்கும் சீரவர்
உந்தனின் சீர்நிழலாய் ஆக்கினாய் -எந்நாளும்
பொல்லாப்பு உந்தனக்கு நேரிடாது, வாதையுன்
நல்லகூடம் தன்னை அணுகாது. -நல்லார்
வழியுனதி லெல்லாம் உனைக்காக்க தூதர்
வழிகாக்க கட்டளைச் செய்வார் -வழியிலே
உன்பாதம் கல்லில் இடறாத வண்ணமாய்
உன்னையவர்த் தம்கை களிலேந்தி -உன்னைத்தான்
கொண்டுபோவர். சிங்கம்மேல் சீறரவம் மேலும்நீ
மண்நடக்கும் குட்டிகளை போடுவாய் -மண்டிமிதித்(து)
என்னிடத்தில் வாஞ்சையாய் சீரிருக்கும் நற்படியால்
அன்னவனை நான்விடுவிப் பேன்சீராண் -என்பெயரை
சீராண் அறிந்திருக்கும் சீரதால் சீராணை
சீராய் உயர்ந்த அடைக்கலத்தில் -சீராய்வைப்
பேன்நான். எனைநோக்கிக் கூப்பிட நானவனுக்
கேன்நீ அழைத்தனை என்றுவிடை -மேன்நானும்
செய்வேன் அருளிடுவேன்; ஆபத்தில் சீர்நானே
மெய்யவனோ டேயிருந்து, சீரவனைச் -செய்வேனே
தப்புவித்துச் சீரவனைக் சீர்மேன்மைச் செய்திடுவேன்.
தப்பித்தோன் நீட்டித் திருநாட்கள் -எப்போதும்
சீராய் நிறைவாக்கி, என்மீட்பை சீராணாம்
சீரவனுக் குக்காண்பிப் பேன்.
சங்கீதம் 91
சங்கீதம் எண் 92
ஓய்வுநாளின் பாட்டாகிய சங்கீதம்.
கர்த்தரைச் சீராய்த் துதிப்பதும், உன்னதரே,
கர்த்தரின் சீர்ப்பெயரை இன்னிசைத்து -கர்த்தரை
பத்(து)நரம்பு வீணையால், தம்புருவால், மேன்தியான
அத்தோடு வாசிக்கும் சீர்யாழால் -அத்தவரே
காலையிலே உம்கிருபை சீரவா உம்மெய்யை
மாலையிலே சீராய் அறிவிக்க -சீலாம்
நலமா யிருக்குமே. கர்த்தாவே, செய்கை
நலத்தால் மகிழ்ச்சியாக்கி னீர்சீர், -நலதுமது
சீர்கரத்தின் செய்கைகள் தன்னிமித்தம் சீராய்நான்
ஆர்பரிப்பேன் சீரவா. கர்த்தாவே, -சீர்ருமது
செய்கைகள் எவ்வளவு மேன்மையாய் உள்ளது!
மெய்யுமது சிந்தனைகள் ஆழமே -மெய்யவரே.
சீரில் விலங்கின் குணமுள்ள மாந்தனதை
சீரறியான்; மூடன் அதையுணரான். -சீரில்லார்
வன்செய்வோர் புல்போற் தழைத்தாரேன், ஊழல்செய்
வன்னார் எவரும் செழிக்கும்போ -தன்னே
அதுஅவர்கள் என்றென்றும் வன்னாய் அழிய
அதுவங்கே ஏதுவாகும். கர்த்தா -நிதம்நீரே
என்றென்றும் உன்னதராய் சீரிருக் கின்றீரே.
நன்கர்த்தா, உம்பகைஞர் வன்வழிவர்; -வன்னழிந்தே
போவரே உம்பகைஞர்; ஊழற்செய் எல்லாரும்
போவார் சிதறுண்டு. என்கொம்பை -மேவிநீர்
காண்டா மிருகத்தின் கொம்பைப்போல் சீருயர்த்தி
ஆண்யென்னை எண்ணெயால் நீர்சொரிந்தீர் -ஆண்தலைமேல்.
என்பகைஞர் தன்னிற்கு நேரிடும் தண்டனையை
என்கண்கள் காணும்; எனக்கெதிராய் -வன்னெழும்பும்
வன்னார்க்கு நேரிடும் தீதையென் காதுகள்
நன்கேட்கும். நீதிமான் நன்பனைபோல் -நன்றாய்
செழித்துதான், லீபனோனி லுள்ளசீர் சேடார்
தழைப்பது போல்வளர்வான். நன்னார் -செழித்திருப்பர்
கர்த்தரின் ஆலயத்தில் நாட்டப்பட் டோரெங்கள்
கர்த்தராம் தேவனின் சீர்ச்சுற்றில் -கர்த்தரினம்;
கர்த்தரவர் உத்தம ரென்றுமென் கன்மலையாம்
கர்த்தரிடம் சீரில் அநீதியிலை, -கர்த்தரினம்
சீராய் விளங்கிடப் பண்ணும் படியவரோ,
சீரவர் மூப்பிலும் சீர்க்கனி -சீரவர்த்
தந்து, கொழுத்து பசுமையுமாய் தானிருப்பர்.
அந்தபடி பாடினார் பாட்டு
சங்கீதம் 92
கர்த்தரவர் ஆள்கிறார், மேன்மை அணிந்துள்ளார்
கர்த்தர் வலியை யணிந்தவரே -கர்த்தர்
இடைக்கச்சை யாகவே கட்டியுள்ளார்; ஆதல்
இடம்புவி தானசையா வண்ணம் இடத்தில்
நிலைபெற் றிருக்கிறது. நும்சீராய் வீற்ற
நிலைத்தே அரியணை சீரே -நிலையுறுதி
யானது; நீரே தொடக்கமிலார் சீரவரே
தானேசீர் கர்த்தா, நதிகளெழும் -தானே
நதிகள் இரைச்சலிட் டேயெழும்; ஆமே
நதிகள் அலைதிரண் டேசீர் -நதியெழும்.
நீரின் இரைச்சலைப் பார்க்கிலும், நீர்கடல்
நீரலைகள் தன்னின் வலிபார்க்கின், சீரவர்
கர்த்தரவர் உன்னதத்தில் வல்லமை யுள்ளவர்.
கர்த்தாவே உம்சான்று மெய்மிக்கே -கர்த்தாவே
தூய்வேறோ நித்திய நாளாக உம்கோவில்
தூய்ச்சீர் அணியாய் யுளது.
சங்கீதம் 93
நீதி தனைச்சரிக் கட்டுகிற தேவனாம்
நீதிபரர் தேவனே, சீரொளியாய் -மீதுவீசும்
பூமியின் நீதி பதியெழுந்து, சீரிலார்
மேமார் பெருமையை பேசிட -ஆமவர்க்கு
சீரவா நீரே பதிலளியும், கர்த்தாவே,
சீரிலா வன்வழி யார்எந்நாள் -சீரில்
வரைத்தான் மகிழ்ந்து களிப்பரோ? எந்நாள்
வரைக்குமாம் ஊழலார் யாவர் -தரைதனில்
வாயாடி, மிக்கடினப் பேச்சால், பெருமையாய்
வாயாலே பேசுவர்? கர்த்தாவே, -தூயே
அவர்கள் உமதுசீர் மக்களை சீரில்
லவர்நொறுக்கி, உம்சொந்த மக்கள் -ளவரொடுக்கி
நாடோடி கைம்பெண் எனச்சிறியோர் கொன்றாரே
நாடிதில் திக்கற்ற பிள்ளைகளைக் -வேடனவர்
கொன்றுபோட்டு: கர்த்தரவர் பாராரே, சீர்யாக்கோ
பின்தேவன் தானே கவனியார் -என்றவர்
சொல்கிறார்கள். மக்காள் மிருக குணமுடையோர்
நல்மனதில் சீராய் உணர்வடையும்; -அல்மதியார்
நன்மதி எப்பொழுது நீர்பெறுவீர்? காதுகளை
நன்றாக உண்டாக் கினவரிங்கே -நன்கர்த்தர்
கேளாரோ? கண்கள் உருவாக் கினசீரார்
வேளவர் காணாரோ? நாடுகளை -வேளவர்
தண்டிக்க, உம்மைக் கடிந்திடாரோ? மாந்தனுக்கு
மண்ணிலே கற்பிப் பவர்சீரார் -விண்ணார்
அறியாரோ? "மாந்தனின் சிந்தனைகள் வீணே."
அறிந்திருக் கின்றார் திருச்சீர். -அறனிலான்
வீழக் குழிவெட்டும் நாள்வரைக்கும் அத்தீங்கு
பாழாகும் நாட்களில் மாந்தரில் -பாழாகா
தேர்ந்தமர்ச் செய்துநீர் கற்பித்து, உம்வேதச்
சீர்வழியில் சீர்ச்செய்வோன் பேறுபெற்றோன்; -சீர்நேரார்
தம்மக்கள் சீரார் நெகிழவிடார்; கைவிடார்
தம்சொந்த மக்களைச் சீரவர்; -அம்நியாயம்
நீதி யினிடம் திரும்புமே சீராக;
நீதியை செம்மை மனதோரார் -மீதிங்கு
பின்பற் றுவர்சீராய்; வன்வழியார், ஊழலார்,
வன்னெதிராய் என்பக்கம் தானெழும்பும் -நன்னவன்யார்?
கர்த்தர் எனக்குத் துணையா யிராதிருந்தால்
கர்த்தாவே என்ஆன்மா வன்விரைவாய் -கர்த்தாவே
பேச முடியாத வன்னிடத்தில் சேர்ந்திருக்கும்;
வீசியே என்கால் சறுக்குகின்ற -தேசும்போ
கர்த்தாவே உம்கிருபை சீர்என்னைத் தாங்குதே;
கர்த்தாவே, என்னுள்ளத் தில்கவலை -கர்த்தாவே
மிக்காய்ப் பெருகுகையில் உம்முடைய ஆறுதல்கள்
தக்காய் எனதான்மா தேற்றுதே. -தக்கவரே
தீமையைக் கட்டளையால் செய்து பிறப்பிக்கும்
தீமைக் கொடுங்கோலார் வீற்றிரும் -தீமை
அரியணை நும்சீர்க் கிசைந்திருமோ? சீரே
திருவார்க் கெதிராகக் கூடி -திருவிலார்
குற்றமிகா செந்நீரைக் குற்றப் படுத்துகின்றார்.
நற்றவர் கர்த்தரோ சீராரே -நற்றார்
எனக்கு அடைக்கலமும், என்தேவன் சீரே
எனக்குநீர் நம்பும் மலையாம் -இனத்தாரே
சீரில்லார் ஊழலவர் வன்னெதிராய் தான்திருப்பி
சீரில்லார் சங்கரிப்பார் நேர்
சங்கீதம் 94
சங்கீதம் 95
கர்த்தரைக் ஆர்பரித்துப் பாடி, நமதுமீட்பின்
கர்த்தராம் கன்மலையைச் இன்னிசையால் -கர்த்தரைப்
பாடுவோம் வாருங்கள். மேன்துதித்தல் கூடவே
பாடியவ்ர் சந்நிதிக்கு முன்வந்து, -பாடுமிசை
ஆர்ப்பரித்துப் பாடக் கடவோம். திருக்கர்த்தர்
பேர்தேவன், தேவர் களுக்குமே -பேர்ரரசன்
பூமியின் ஆழங்கள் சீரவர்க் கையிலுள்ளாம்;
பூமிமேல் கன்மலைகள் சீருயரம் -ஆமாமே
சீரும். கடலும் அவரின்தான், சீராகச்
சீரார் அதையும் படைத்தாரே -சீராரே
வெட்டாந் தரையையும் சீர்க்கை உருச்செய்தார்
நட்டாரே உண்டாக் கினத்திருமுன் -நட்டாரே
நாம்பணிந்து தான்குனிந்து நம்முழங் காற்படி
நாம்மிடுவோம் வாருங்கள். நம்தேவன் -ஆம்சீரார்;
நாமவர் மேய்ச்சலின் மக்களும், கைக்குள்மே
நாமேதான்; இன்றவரின் சத்தத்தை -தேமாநீர்
கேட்பீர் களாகில், வனாந்தரத்தில் வஞ்சினம்
மூட்டின போதும் திருவைநீர் -நாட்டவரே
சோதனைச்செய் நாளிலும் நீர்நடந்தாற் போலவே
வேதனையாய் உங்கள் மனதைநீர் -வேதரெதிர்
மெய்யார் கடினப் படுத்தாதீர் சீரினிமே.
செய்தார்கள் நுந்தையர் என்னைத்தான் -மெய்யாகச்
சோதித்து, என்னைப் பரீட்சையாய்ச் செய்தாரே,
வேதவராம் என்செய்கை கண்டார்கள். -வீதமாய்
நாற்பது ஆண்டுகளாய் நானந்தச் சந்ததியை
ஆற்றா தரோசித்து, சீரிலார் -மாற்றா
வழுவிடும் வன்மனமுள் மக்களென்றும், எந்தன்
வழியறியார் கள்ளென்றும் சொல்லி, -வழுவியோர்
என்சீர் இளைப்பாறு தல்தன்னில் சீரில்லார்
என்நிலம் வந்திடார் என்றேநான் -என்சினத்தில்
ஆணையிட்டேன் என்றவரின் பாட்டு.
சங்கீதம் 95
சங்கீதம் 95
பாடுங்கள் மக்காள் புதுப்பாட்டை கர்த்தருக்கு;
பாடுங்கள் பூமியின் வாழ்க்குடிகாள், -பாடுங்கள்
எல்லாரும் கர்த்தரைப் போற்றியே; கர்த்தரவர்
நல்லாரைப் பாடி அவர்ப்பெயரை -எல்லாரும்
போற்றி அவர்மீட்பை நாள்பின்நாள் நற்செய்திச்
சாற்றிப் புகழறிவி யுங்கள்சீர் -போற்றியவர்
மேன்மை தனைமக்க ளுள்ளே, வியன்களை
தான்நீரும் சொல்லும் விவரித்து; -மேன்கர்த்தர்
மாப்பேரார் மிக்காக போற்றுதலுக் காயுரியார்
மாப்பேர் இறைவரஞ்சும் சீரவரே -மாப்பேர்
எனப்போற்றும் மக்களின் தேவரோ வெற்றாம்
அனைத்தும் சிலைகளன்றோ; சீரார் -வினையாக
விண்ணைப் படைத்தவ ராமே; அவர்முன்னே
விண்போன்ற மேன்மையும் மாட்சியும் -விண்ணாரின்
தூய்த்தலத்தில் உள்ளது; மக்காள் வழியாரே
தூய்க்கர்த்தர் தன்னிற்கே மேன்மையும் -தூய்வல்லும்
தந்திடுங்கள் கர்த்தர் பெயருக் குரியதாக
தந்திடுங்கள் நற்பலி; உட்செல -தந்திடுங்கள்
மேலாரின் சுற்றிடத்தில்; மேல்தூய் அணியோடு
மேலவரைச் செய்வீர் தொழுகையே -சீலராம்
கர்த்தரின் முன்னாய் நடுங்குவீர் பூவாழ்வோர்;
கர்த்தர் அரசாளு கின்றாரே, -கர்த்தர்
அரசாள் வதாலே புவியும் நிலையாய்
அரசாட்சி தன்னிலே நிற்கும் -அரசவர்
மக்களை சீர்மெதுவாய் தீர்ப்பார் எனநீரும்
மக்களுள் சொல்லுங்கள்; தக்கவர்செய் -தக்கவிண்ணும்
சீராய் மகிழ்ந்து, புவியிதும் பூரிப்பாய்
சீராழி தன்னிரும் சீர்நிறைவும் -சீராய்
முழங்கட்டும்; நாடும் அதிலுள்ள யாவும்
முழங்கிக் களிகூ ருவாஅம்; -முழங்கியே
அப்பொழுது கர்த்தர்முன் காட்டிம் மரமெலாம்
தப்பாது ஆர்ப்பரிக்கும். சீரவர் -எப்போதும்
வந்திடுவார்; பூமியைத் தீர்க்க வருகிறார்;
அந்நாளில் பூமியை நீதியோடும், -அந்நாளில்
மக்களை மெய்யோடும் தீர்ப்பார் திருவவர்
தக்கபடி என்றதே பாட்டு
சங்கீதம் 96
கர்த்தர் அரசாளு கின்றாரே; பூமியது
கர்த்தரின் ஆளுகையில் சீராகக் -கர்த்தா
மகிழ்ந்து, திரளான தீவுகள் சீராய்
மகிழக் கடவது. விண்ணின் -முகிலுமங்கே
காரிருளும் சீரவரைச் சூழ்ந்துளது; நீதியும்
நேராம் நியாயமும் சீரவனின் -சீரணையின்
ஆதாரங் கள்தானே; தீயது தானங்கிச்
சேதாரம் வன்பகைஞர்ச் செய்திட -வேதர்க்கு
முன்சென்று சுற்றிலும் சுட்டெரிக் கின்றது;
அன்னவரின் மின்னல்கள் பூச்சுழலை -நன்றாய்
ஒளியூட்டி நின்றது; பூமியதைக் கண்டு
வெளிய ததிர்ந்தது; சீரார் -ஒளியிருப்பால்
மேன்மலைகள் நீர்மெழுகாய் தானுரு கிற்றிங்கு;
மேன்வானங் கள்ளவரின் நீதிதனை -மேன்சீர்
வெளிப்படுத்து கின்றது; எல்லா மனிதர்
களுமவரின் மேன்மகிமைத் தன்னை -வெளிக்காண்
கிறார்கள். உருவங்கள் சீரில் வணங்கி
சிறப்பென வன்சிலைப் பாராட் -டறனிலார்
நாணியே போகட்டும்; சீராரே நீங்களெலாம்
மாணசீர் கர்த்தர் தொழுதிடும்; -கோணலிலா
சீயோனோ கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே,
தூயரே உம்முடைய தீர்ப்புகளால் -வேயவா
யூதாவின் பெண்ணார் களிகூர்ந்தார். கர்த்தாவே,
வேதவரே பூமி முழுதிற்கும் உன்னதரே;
எல்லா விதசிலைகள் பார்க்கின் மிகவும்நீர்
வல்லாய் உயர்ந்தவரே. கர்த்தரில், -நல்லாரின்
அன்புகூரும் மக்களே, தீமை வெறுத்துவிடும்;
நன்னார் அவர்தம்மின் தூயரின் -நன்னான்மா
காப்பாற்றி, வன்வழியார்க் கைக்கு அவர்களைத்
தப்புவிக் கின்றாரே. நீதிமானுக் காக
வெளிச்சமும், செம்மையான சீர்மனதுள் ளோர்க்காய்
களிப்பும் விதைக்கப்பட் டுள்ளது. நீதியோரே,
கர்த்தருக்குள் சீரார் மகிழ்ந்து, அவருடைய
வேறுதூய்மை தன்னின் நினைத்தலைக் கொண்டாடும்
சீரவர் பாடினார் பாட்டு.
சங்கீதம் 97
கர்த்தருக்குச் சீரார் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
கர்த்தர் வியன்களைச் செய்துள்ளார்; -கர்த்தரின்
சீர்வலக்கை யும்சீரார் தூயதோளும், மீட்பதை
சீர்உண்டு செய்தது. கர்த்தரின் -சீர்மீட்பை
எல்லார்க்கும் செய்துநீர், தம்நீதி மக்களின்
கண்களுக்கு முன்பாய் விளங்கிடச் செய்தாரே.
சீரிசுரேல் நற்றில்லிற் காய்த்தமது சீர்க்கிருபை
சீருண்மை தன்னை நினைவது கூர்ந்தாரே;
பூமியின் எல்லை களெல்லாமே நம்தேவன்
சீர்மிட்பைக் கண்டது. பூமியின் சீர்குடிகாள்,
நீங்களெல் லாரும் திருவவரை நோக்கி
மகிழ்ந்துநீர் ஆர்ப்பரி யுங்கள்; முழக்கமிட்டுக்
ஆர்ப்பரித்துப் பாடுங்கள். யாழாலே கர்த்தரை
சீர்மக்காள் பாட்டிசைத்துப் பாடுங்கள்; -சீர்யாழால்
இன்னிசையால் நீரிசைத்துப் பாடுங்கள்; கர்த்தராம்
மன்னரின் முன்னே இசைக்கருவி கொண்டுநீர்
ஆர்ப்பரியும். நீர்க்கடலும் சீரதன் நன்னிறைவும்
ஆர்த்ததின் சீர்குடிகள் எல்லாம் முழங்கட்டும்.
கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி,
மேன்மலைகள் ஏகமாய் ஆர்ப்பரித்து பாடட்டும்.
சீரவர் பூமியை நீதியாய்த் தீர்க்க
வருகிறார்; பூமியை நீதியோடும் மக்களை
சீராய் ஒழுங்கோடும் சீர்நியாயந் தீர்ப்பாரே.
சீரவர்ப் பாடினார் பாட்டு
சங்கீதம் 98
கர்த்தர் அரசாளு கின்றாரே; மக்களார்
கர்த்தர்முன் தத்தளிக்கட் டும்மவர்; -கர்த்தரவர்
கேருபீன்கள் நன்னடுவே வீற்றுள்ளார், பாங்காக
சீரிலா பூமி யசைவதாக. -சீரவர்
சீயோனில் நேர்பெரியார், எல்லா இனத்தார்மேக்
தூயர் உயர்ந்தவர். மேன்மகிமை -தூயதிகைப்(பு)
சீரும்மின் சீர்ப்பெயரை சீராய்த் துதிக்கட்டும்;
சீரும்மின் சீர்ப்பெயர் தூய்ப்பெயரே; சீரரசின்
வல்லமை நீதியில் அன்பா யிருக்கிறது;
நல்ல நியாயம் நிலைநிறுத்தும் -நல்லவரே
நீர்சீரோய் யாக்கோபில் சீராய் நியாயமும்
நேர்நீதிச் செய்கிறீர். நம்முடைய -சீர்நேராம்
தேவனாம் கர்த்தரை நீருயர்த்தி, சீரவரே
மேவிநீர் பாதபடி யில்பணியும்; -தேவனார்
தூயுளர். சீராரின் ஆசரியர் தன்னிலே
ஆயனாம் மோசேயும் ஆரோனும், -தூயர்ப்
பெயர்ப்பற்றி சீரழைப்போர் தன்னிலே சாம்வேல்,
அயராது கர்த்தரை நோக்கி; -வயனழைக்க
சீராய் மறுஉத் தரவருளி னார்சீரார்.
சீர்முகிற் றூணின்று பேசினார்; -சீர்ராமே
நேரவர்ச் சீராரின் சான்றுகள் நேமங்கள்
சீரவர்க்குத் தந்தசீர்க் கட்டளைகள் -சீராகச்
செய்தாரே. தேவனே நீரவர்க்கு நல்விடை
செய்தீர்சீர்; நீரவர்கள் செய்கைகள் -செய்நிமித்தம்
நீதி சரிக்கட் டினபோதும், மன்னிக்கும்
மேதவர் தேவனாக நீருருந்தீர். மேதவராம்
நம்முடைய தேவனாம் கர்த்தரை நாமுயர்த்தி,
அம்சீரார் தூயமலை நேராய்ப் பணிவோம்நான்;
நம்முடைய தேவனாம் கர்த்தர்தூ யர்சீரே
அம்மானார் பாடினார் பாட்டு.
சங்கீதம் 99
புவிக்குடிகாள், எல்லாரும் கர்த்தரைப் பாடும்
செவிகேட்க ஆர்பரித்துப் பாட்டு -புவியில்
மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆரா தனைச்செய்(து)
அகமவர் முன்வாரும் மக்காள் -இகத்தாரே
கர்த்தரே தேவனென்று நீரறியும்; சீரவர்
கர்த்தரே நம்மைப் படைத்தவர் -கர்த்தரை
நாம்படைக்க வில்லைகேள்; நாமவரின் மேக்களாம்
நாம்மக்கள் தானவரின் சீராமே -ஆம்நாம்சீர்
வாயில் தனில்துதி யோடும் அவர்கோவில்
வேயாத சுற்றுள்ளே வாரும்நீர் -வாயால்
புகழ்ப்பாடி நேரவரை நீர்துதிப்பீர் சீர்ப்பேர்
புகழ்தன்னை போற்றுவோம் நேரார் -புகழ்நேரார்
நல்லவர்; என்றென்றும் நல்லிரக்கம் நிற்குமாம்
நல்லவரின் உண்மை தலைமுறைக்கும் -நல்லபடி
உள்ளது சீராரின் மெய்தானே என்றவர்
உள்ளத்தால் செய்தார் துதி
சங்கீதம் 100
சங்கீதம் எண் 101
தாவீதின் சங்கீதம்.
சீரே இரக்கமும், உம்சீர் நியாயமும்
சீராய்க் குறித்துநான் பாடுவேன் -சீர்கர்த்தா,
உம்மைநான் இன்னிசையால் பாடுவேன். மெய்யான
உம்வழியில் சீராய் நடப்பேன்நான்; -அம்சீரே
எப்பொழுது என்னிடத்தில் நீர்வருவீர்! என்வீட்டில்
எப்பொழுதும் சீர்மனதாய் நான்நடப்பேன். -எப்பொழுதும்
தீங்கானச் செய்கைகள் என்கண்முன் வைக்கமாட்டேன்;
தீங்காய் வழிவிலகும் மாந்தர்செய் -ஆங்கே
வெறுக்கிறேன்; என்னையது பற்றாது. மாறும்
தறிகெட்ட வன்மனம் என்னில் -தறித்தகல
வேண்டுமே; பொல்லாதோன் நாறிய மாட்டேனே.
வேண்டுமென மாற்றான் மறைவாக -வீண்பேசி
வீணனை கொல்லுவேன்; மேட்டிமைக் கண்ணனையும்
வீணாய்ப் பெருநெஞ்சு உள்ளோனும் -வீணே
பொறுத்திடேன் வன்னவரை. தேசத்தில் மெய்யார்
சிறப்பாக யென்னோடே தானே -அறமாக
வாசம் செயவெந்தன் கண்கள் அவர்கள்மேல்
நேசமாய் நோக்கமாய்த் தானிருக்கும்; -நேசமாய்
நேர்வழியில் தானடப்போன் என்னைத்தான் சேவிப்பான்.
நேர்ரில்லான் சீரற்றோன் என்வீட்டுள் -வேர்க்கொள்ளான்;
பொய்சொல்லும் வன்னவன் என்கண்முன் நில்லானே.
மெய்யிலார் கர்த்தரின் சீர்நகரில் -மெய்யிரா
வண்ணமாய் வேரறுப் புண்டுபோக, தேசத்தின்
மண்பொய்யர் யாவரையும் கொன்றிடுவேன் -வண்ணமாய்
வந்திடும் காலை விடியலில் தானென
வந்தங்குப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 101
துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி, கர்த்தரிடத்தில் தன் வியாகுலத்தைத் தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்.
கர்த்தாவே, எந்தனின் விண்ணப்பம் தன்னையே
கர்த்தாவே நீர்கேளும்; சீரவரே -கர்த்தாவே
என்கூப் பிடுதல்கள் உம்மிடத்தில் சேரட்டும்.
என்சீரில் ஆபத்து நாளில் முகமுமதை
எந்தனுக்கு நீர்மறைக்கா தேயிரும் சீரவா;
எந்தனிடம் உம்செவியைச் சாயுமே; -எந்நாளும்
கர்த்தாவே, உம்மைநான் கூப்பிடும் நாளிலே
கர்த்தாவே தீவிர மாய்ச்சீராய் -கர்த்தா
விடையருளிச் செய்யும்சீர். தீப்புகைப் போல
விடுத்தே ஒழிந்ததுயிர் எந்தன் -விடுத்தே
எலும்புகள் சீரிலொருக் கொள்ளியைப்போல் போயிற்
றலர்ந்தெரிந்து; என்மனமோ புற்போல் -உலர்ந்தது
வெட்டுண்டு; என்னுணவை வாய்ப்புசிக்க நான்மறந்தேன்.
ஒட்டியதே என்னுட லோடென்பும் -நட்டானென்
சீரில் பெருமூச்சின் சத்தத்தால், காட்டினது
நாரைக்கு ஒப்பானேன்; பாழான -சீரிலா
காட்டில்வாழ் ஆந்தையைப் போலானேன்; தூங்காத,
வீட்டின்மேல், வாழ்க்குருவிப் போலானேன்; -நாட்டிலோ
நாடோறும் என்பகைஞர் நிந்திக் கிறார்களே;
வேடவராய் என்மேல் வெறிகொண்டு -நாடதில்
என்னெதிராய் வன்சொல் இடுகிறார்கள். நீரென்னை
நன்றாய் உயரமாய்த் தூக்கிபின் -வன்தாழத்
தள்ளினீர்; உம்சினத்திற் கும்கடும் சீற்றத்திற்
குள்ளானேன்; ஆதலால், சாம்பலே -உள்வாயில்
போட்டு புசித்துநான், கண்ணீ ருடன்கலந்தேன்
வேட்டாய் பருகும்நீர் தன்னையே. -நாட்களென்
சாய்ந்திடும் கார்நிழலைப் போலுளது; புல்லைப்போல்
சாய்ந்து, உலர்ந்துநான் போகிறேன். -வேய்ச்சீரோய்
கர்த்தராம் நீரோயென் றென்றைக்கும் உள்ளீர்சீர்;
கர்த்தாவே உம்பெயர் நன்றாகக் -கர்த்தாவே
சீராய்த் தலைமுறைகள் தாண்டியது நிற்குமே.
சீரார் எழுந்தருளி சீயோனிற் -சீரிரங்கும்
சீயோன் அதற்குத் தயைசெய்யுங் காலமும்,
சீயோன் அதற்காய்க் குறித்தநல் -வேயநேர
மும்வந்தே. உம்முடைய ஊழியர் சீயோனின்
மேம்கல்மேல் வாஞ்சைவைத்து, மண்ணுக்கு -அம்சீரார்
தானே பரிதபிக் கின்றார்கள். கர்த்தரவர்
தானேசீர் சீயோனைக் கட்டித்தம் -மேனாம்
மகிமையில் சீரார் வெளிப்படுவார். திக்கில்
அகஞ்செய்யும் வேண்டுதலைச் சீரார் -அகச்சீராய்
ஏற்றிடுவார் தள்ளிடாது; அப்பொழுது தேசங்கள்
மேற்றாராம் பூமியின் மன்னர்கள் -சாற்றும்சீர்
மேன்மகிமைக் கும்முமது சீர்ப்பெயர்க்கும் அஞ்சுவர்;
மேன்சீராய் பின்வரும் நற்றார்க்குத் -தான்சீர்
எழுதப் படுமாமே; பின்வரும் சீரார்
வழுவாத சீர்ப்படைப்பு சீரார்த் -தொழுதிடும்
கர்த்தரவர் கட்டுண்டோர் தன்னின் பெருமூச்சைக்
கர்த்தரவர் கேட்கவும், வன்கொலைக்கு -கர்த்தர்
நியமிக்கப் பட்டவர்கள் தன்னை சிறைவிட்
டியலாய் விடுதலை யாக்க -உயர்ந்தம்
சிறப்புதூய் நல்லிடம் தன்னின்று பார்த்து
அறவியனார் கண்ணோக்கம் பூமேல் -சிறப்பாய்த்
தரலானார்; கர்த்தருக்கு போற்றுதலைச் செய்ய,
வரையிலே மக்களும் தேச -வரையிலார்
ஏகமாய்க் கூடி வருகையில், சீயோனில்
வாகையார்ச் சீர்பெயரை, சீர்நகரில் -ஏகமாய்
சீரார்த் துதியையும் சீர்மக்கள் பாடியே
சீராய் விவரிப்பார் சீர்ப்பெருமை; -சீரேனோ
என்பெலனை என்வழியில் சீரொடுக்கி சீர்த்தன்னே
என்நாட்கள் தன்னைக் குறுகவே -வன்செய்தார்;
அப்பொழுது நான்கேட்டேன்: என்தேவா பாதியாயுள்
அப்பா யெனையெடுத்துக் கொள்ளாதீர்; -தப்பாதே
உம்முடைய ஆண்டுகள் சீராய்த் தலைமுறையாய்
அம்மிருக்கும். சீரவரே, ஆதியிலே -இம்மையாம்
பூமியை சீர்நீர் உறுதி படுத்தினீர்;
மேமானே வானங்கள் சீரும்மின் -ஆமேசீர்
செய்கைகள் தன்னே; அவைகள் அழிந்துபோகும்,
செய்தவர் நீரோ நிலைத்திருப்பீர்; -மெய்யே
அவைகளெல்லாம் ஆடைபோல் நைந்து பழசாய்
அவைப்போகும்; சால்வையைப் போலே -அவைதன்னை
நீர்மாற்று வீரேசீர், அப்பொழுது மாறிடும்.
நீர்சீரோ மாறா தவராமே; -சீர்ருமது
ஆண்டுகள் என்றும் முடிந்துபோவ தில்லையே.
மாண்பார் உமதடியார் தன்னினது -மாண்வழியார்
சீராக வாழ்வரே; சீரவரின் நன்வழியார்
சீருமக்கு முன்பாக சீரவா -சீராய்
நிலைப்பெற் றிருக்குமென்றேன் நான்தானே என்று
நிலைப்பெற்றோர் சீர்குறித்துப் பாட்டு
சங்கீதம் 102
என்சிறு ஆத்துமாவே, கர்த்தரை மேன்மைபடுத்(து);
என்முழு உள்ளமே, சீர்தூய -நன்பெயரை
மேன்மைபடுத்(து). என்சிறு ஆத்துமாவே, கர்த்தரை
மேன்மையாக்கு; சீர்ச்செய்த எல்லாமே -மேன்மனமே
ஏதும் மறவாதே. சீரவரும் ஊழலெலாம்
மேவாது மன்னித்து, உன்நோய்கள் -தேவனவர்
சீராக்கி உன்னுயிரை மீட்டார் அழிவினின்று
சீராய் விலக்கியே, உன்னையவர் -சீராம்
இரக்கத் தினாலும்சீர் கண்ணோட்டம் தந்தே
சிரத்தை முடிசூட்டி, நன்மை -கரந்தந்து
உன்வாயைச் சீராய்த் திருப்தியாக் கும்சீரார்;
உன்வயது புள்கழுகின் ஒத்ததாய் -உன்னிளமை
வந்திடும் சீராய்த் திரும்பியிங்கு. கர்த்தவர்
அந்தோ ஒடுக்கப் படும்நல்லார் -அந்தவர்க்கு
நீதியையும் சீர்நியாயத் தையும்செய் கின்றார்சீர்.
வேதனாம் மோசேக்கு தன்வழி -வேதவர்
தேசத்தார்க் காணத்தன் செய்கைத் தெரியசெய்தார்
தேசமே கர்த்தர் உருக்கமும், -பாச
இரக்கமும், நீடிய நல்லமைதி, மிக்காய்
தரமாமே கண்ணோட்டம் உள்ளார். -இரங்கும்
அவரெப் பொழுதும் கடிந்துகொள் ளார்சீர்;
அவரென்றென் றுஞ்சினங் கொள்ளார். -அவர்நம்மின்
பாவங் களுக்குத் தகுதியாய்ச் செய்யாமல்,
பாவமாம் ஊழல் தகுதியாய்த் -தேவன்
நமக்குச் சரிக்கட்டா மல்சீர் இருப்பார்.
தமரவரே பூமிக்கு விண்மேன் -அமைந்துளச்
சீருயரம் போலேதான் தன்னையஞ்சும் சீரார்க்கு
பேருயரம் கண்ணோட்டம் தானவரின் -பேராமே
மேற்றிசைக்கும் கீழ்த்திசைக்கும் எவ்வளவு தூரமோ,
மேற்றவர் நம்பாவங் கள்தன்னை -தூற்றி
நமைவிட்டு சீரார் விலக்கினார். தந்தை
தமது வழியார்க்கு செய்யும் -அமையிரங்கிச்
செய்வது போல, திருவார்த் தமக்கஞ்சும்
மெய்யார்க் கிரங்குகிறார். சீரவர் -மெய்தனின்
சீருருவம் இன்னதென்று தானறிவார்; நாம்மண்தான்
சீரார் நினைவுசெய் கின்றார். -இரும்மாந்தன்
நாட்களோ புல்லுக்கு ஒப்பாமே; பூப்போல
நாட்டுவெளி பூக்கிறான். காற்றது -வாட்டவே
வீசி னவுடனே இல்லாமற் போயிற்று;
தேசத்தில் பூத்ததோ என்றறியார். -பாசமாய்
அஞ்சியவர் மேல்சீர் இரக்கமும் கண்ணோட்டம்
அஞ்சினோர்க்கு நீதி அவர்தம்மின் -அஞ்சும்
வழிவழியார் மேல்தானே என்றென்றும் நிற்கும்.
வழுவா உடன்படிக்கை கைக்கொள் -வழுவார்மேல்
சீரார்க்கண் உள்ளதே; விண்ணிலே சீரவர்
சீராம் அரியணை கொண்டுள்ளார் -சீரவரின்
ஆளுமை எல்லாமே ஆள்கிறது; ஆளுமவர்
வேளவரின் சொல்கேட்டு செய்கின்ற -வேளதூதர்
நீர்த்துதியும் கர்த்தரை ; கர்த்தருக்கு செய்விருப்பம்
சீர்ச்செய்யும் எல்லா படைகளே -சீராரை
நீர்த்துதியும்; சீராளும் எவ்விடமும் உள்ளதவர்
சீர்ச்செய்கை யோரே துதியுங்கள் -ஆர்த்தவரை
என்னிலுள்ள ஆத்துமாவே, கர்த்தரை நீதுதி.
என்றவர் பாடினார் பாட்டு
சங்கீதம் 103
எந்தனின் ஆன்மாவே, கர்த்தரை நீதுதி;
எந்தனின் தேவனாம் கர்த்தாவே, -எந்நாளும்
நீர்மிகவும் நேர்ப்பெரியார்; மேன்மகிமை பேராண்மை
நீர்தான் அணிந்துகொண் டுள்ளீர்சீர். -சீர்ரொளியை
ஆடையாய் நீர்த்தரித்து வானத்தைச் சீர்த்திரையாய்
மேடவர் தான்விரித்து வைத்துள்ளீர் -நாடதோ
மேல்வீடு தன்னையே தண்ணீரால் மச்சுபாவி,
மேல்முகில்கள் தன்னையவர்த் தேராக்கி, -மேல்காற்றின்
செட்டை களின்மேலே செல்லுகிறார். தம்முடைய
செட்டையுள்ள தூதரைக் காற்றாக -நட்டாராம்
தம்முடைய ஊழியக் காரரைத் தீப்பிழம்பாய்
அம்செய் கிறார்சீரார். தம்செய்கை -தம்கையால்
பூமி ஒருபோதும் தன்னிலை பேராது
பூமியின் ஆதாரங் கள்மேலே -பூமியை
நாட்டினார். ஆடையால் மூடுமாற்போல் ஆழத்தால்
மேட்டிலே மூடினீர்; கன்மலைமேல் -மேட்டிலே
தண்ணீர்கள் நின்றதே; சீரும்மின் கண்டிதத்தால்
தண்ணீர்கள் உம்குமுறல் தன்னாலே -மண்டா
விரைந்தனவே; கன்மலைமேல் பள்ளத்தாக் கில்தான்
விரைந்திறங்க நீரேற் படுத்த -திரும்பவும்
வந்துபூமி தன்னைநீர் மூடிக் கொளாதபடி
அந்தநீர் மீறா திருக்கவே -அந்தநீர்க்
கெல்லையை ஏற்படுத்தி விட்டீர்சீர். நீரூற்றை
பள்ளத்தாக் கில்வர விட்டவர்; -நல்லநீர்
கன்மலைகள் தன்நடுவே ஓடுதே. அந்நீரோ
இன்வெளியில் வாழுயிர்கட் கெல்லாமே -நன்னீராய்
நீர்த்தந்து தாகந்தீர் நீராகப் பாய்ந்திடும்
சீர்புள்ளும் நீரோரம் வாழ்ந்திட்டே -நீர்குடிக்கும்
நல்மரத்தின் அக்கிளையின் மேலிருந்து புள்பாடும்
நல்லார் தமதுமேல் வீடுனின்று -நல்லநீர்
தன்னை மலைகள்மேல் தானிறைக் கின்றாரே;
நன்றாக பூமியிது உம்செய்கை -தன்னாலே
பூரித் திருக்கிறது; பூமி யிலிருந்து
சீரூண்தான் உண்டாக புல்லையும், -சீராக
மாந்தர்க்கு நெல்வகைகள் தன்னை முளையச்செய்
தந்தமாந்தன் தன்னின் மனதைநீர் -தந்தே
மகிழ்வாக்கும் சாறை, அவனின் முகத்தில்
மகிழ்க்களையை உண்டுபண்ணும் எண்ணெய் -மகிழுணவும்
தன்சேர்த்தே சீரார் விளைவிக் கிறார்நேராய்.
நன்கர்த்தர் தன்னின் மரங்களும் -அன்னவர்
நாட்டின லீபனோனின் கேதுருவும் சாரத்தால்
காட்டில் நிறைந்திருக்கும். ஆங்கேதான் -காட்டிலே
அக்குருவி கூடுகட்டும்; தேவதாரு நீள்மரங்கள்
கொக்குகளின் சீர்குடி வீடாகும். -தக்கமலை
ஆடுகளின் கன்மலையோ ஓடுமுயல் தன்னிற்கே
மேடவை வீடாம் அடைக்கலமே -நாடவர்
நாட்குறிக்கத் திங்களை சீர்ப்படைத்தார்; ஞாயிறோ
நாட்கடையில் தான்மறைவ தையறியும் -நாட்கடையில்
நீர்ரிருளைக் கட்டளை யிட்டீர், இராக்காலச்
சீர்வனத்தில் மால்விலங்கு கள்நடக்கும். -சீர்வனத்தின்
சிங்கங்கள் தன்னிரைக்காய் கெர்ச்சித்து, தேவனால்
அங்கே தமக்கு உணவையவை -சிங்கங்கள்
தேடுமே. ஞாயிறு காலையில் மேல்வர
காடுதனில் சீரமைதிக் கொண்டவை -காடுகளில்
தன்னிடத்தில் தானுறங்கும். அப்போதோ மாந்தனவன்
தன்வேலைச் செய்திட பண்ணைக்கு -நன்றாய்
தரையில் புறப்படு கின்றானே. கர்த்தாவே,
திரளா யுளதே திருச்செய்; -திரளவை
ஞானமாய் நீர்படைத்தீர்; பூமி உமதினது
மேனாம் பொருட்களால் தான்நிறைந்தே -மேனாம்
பெரிதும் பரந்தது மான கடலும்
நிறைந்திருக் கின்றது; நீர்வாழ் -சிறிய
பெரியதென எண்ணிறந்த நன்னுயிர்கள் தானே
பெருகி யுளதே திருவே. -பெரியதாய்க்
கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடத்
தப்பிலார்ச் செய்த திமிங்கிலங்கள் -அப்பிலே
உண்டாமே; ஏற்றவேளை யில்லுணவைத் தந்திடுவீர்
உண்ணவென அப்படைப் பெல்லாமே -உண்ணவே
உம்மைநோக்கிக் காத்திருக்கும் நீர்கொடுக்க, வாங்கியவை
உம்கை திறந்திட, உண்டவை -நும்சீர்க்கை
யால்களிக்கும். நீருமது நன்முகத் தைமறைக்க,
மால்திகைக்கும்; நீரவையின் மூச்சதை -ஆல்வாங்க
மாண்டவை, தங்களின் மண்திரும்பும். நீரும்மின்
மாண்பாவி தன்னனுப்ப சீர்படைக்கும்; -மாண்பாரே
நீர்பூமி தன்னுருவை சீராய்ப் புதிதாக்க
சீர்கர்த்தர் தன்னின்மேன் சீர்மகிமை -சீர்விளங்கும்;
என்றென்றும்; கர்த்தர் தமதுடைய செய்கைகளில்
நன்றாய் மகிழுவார் சீரவர் -நன்பூமி
தன்னையே நோக்கியவர்ப் பார்க்க, அதுஅதிரும்;
கன்மலையை சீர்த்தொட தீப்புகையும். -என்றென்றும்
நானோ உயிரோ டிருக்குமட்டும் என்கர்த்தர்
மேனவரைப் பாடுவேன்; நான்உள் ளளவும்
எனதுசீர் தேவனைக் இன்னிசைத்துப் பாடி
இனிதாமே சீரார் தியானம் -இனிதினிது;
கர்த்தருக்குள் நான்மகிழ்வேன். பாவிகள் பூமினின்று
நிர்மூல மாகி, செயல்வன்னார் -நிர்மூல
மாவார். எனதுடைய ஆன்மாவே, கர்த்தரை
தேவனை சீர்த்துதி; அல்லெலூயா. -தேவனை
சீரவர் சீரினத்தார் போற்றியே பாடினார்
சீரிசையில் சீராகப் பாட்டு.
சங்கீதம் 104
நாம்துதிப்போம் கர்த்தரை, சீரார் அவர்பெயரை
நாம்செய்வோம் பல்லோர் செவிகேட்க -நாம்செய்வோம்
சீரவரின் செய்கைகள் மக்கள் அறிந்திட;
சீரவரைப் பாடிநாம் பாக்களால் -சீரவரின்
சீராம் வியன்செய்கை கள்தன்னை எண்ணிநாம்
சீராரைப் பேசுவோம் போற்றியிங்கு -சீராரின்
தூய்ப்பெயர் தன்னைநாம் மேன்மையாய்ப் பேசுவோம்
தூய்ச்சீரார் தேடுவோர் உள்ளம்தான் -தூய்மகிழும்;
சீராரின் வல்லமை தன்னைநீர் நாடுங்கள்
சீரார் நிலையிருப்பை தேடுங்கள் -நேராம்
வழியாரே ஆபிரகாம் தன்னின்! தெரிந்த
வழியாரே யாக்கோபின் மக்காள்! -வழியாரே
சீரார்ச்செய் செய்கைகள் தன்னின் வியனைநீர்
சீராரின் சொல்நியாயம் தன்னையும் -சீராய்
நினைவுகொள்ளும் சீர்மக்காள்; நம்தேவன் கர்த்தர்
நினைவுகொள்ளும் சீர்நியாயம் பூமி -அனைத்திலும்
சீர்விளங்கும்; ஆயிரமாய் சீர்வழியார் கட்டளைச்சொல்
சீர்மகனார் ஆபிரகாம் யாக்கோபு -சீர்செய்த
சீரான ஆணை உடன்படிக்கை தன்னையும்
சீரார் நினைந்துள்ளார்; சீர்மக்கள் -சீராகப்
பின்பற்ற நேமமாக என்றென்றும் செய்யவேண்டி
பின்மாறா சீருடன்ப டிக்கையாக -நன்றாகச்
சீரவர் செய்திட்டு சீர்மக்காள் நேர்கானான்
சீராமே அத்தேசம் தந்திடுவேன் -சீருனக்கு
என்றே திருவாணை யிட்டாரே நன்கர்த்தர்;
அன்றவரோ நாடோடி யாகவும் -அன்றியும்
கொஞ்ச சனமாவும் நின்றனர் அம்மக்கள்
அஞ்சியவர் ஓரிடம் விட்டுவேறாய் -பஞ்சம்
பிழைக்கவும் சென்றார் மறுதேசம் நில்லார்
குழைக்க யெவரையும் சீரார் -அழைத்தவரை
விட்டிடாது மன்னரைச் சொல்கடிந்தார் நேரவர்
நட்டவரென் வாக்குரைப்போர் தீங்குசெய்யீர் -நட்டவரை
என்றவரும் சொல்லிடத்தின் நாட்டதில் சோறென்னும்
நன்னாம்கோல் தன்னை முறித்தவர் -அன்றவரே
ஆணொருவன் விட்டாரே யோசேப், சிறையாக்கி
ஆணவனின் கால்களில் சங்கிலிகள் -ஆணவன்
இன்னுயிர் எஃகில் அடைப்பட்டு கர்த்தரின்
இன்சொல் நிறைவேறும் நன்வரையில் -இன்னாணை
சொல்லவரின் தீயாய்ப் புடமிட; சொல்நிறைய,
சொல்வர மன்னனும் ஆளனுப்பி -சொல்வந்த
சொல்கேட்க செல்லரசின் செல்லாண்கள் கட்டவும்
சொல்தரும் ஞானியரை மூப்பராக்க -அல்லரசன்
நல்லாணை வீட்டிற்கு மேலாணாய் யிட்டனன்
நல்லாணை கட்டவிழ்த்தான் ஆங்குதான் -நல்லாண்
இசுரேலோ வந்தனன் காம்தேசம் தன்னில்
இசுரேலார் நாடோடி வாழ -இசுரேலார்
பல்லோராய் பேர்ப்பெருகி எல்லாரை மிஞ்சியவர்
வல்லோராய் ஆக்கினார்; அல்லாமல் -நில்லாரை
வஞ்சித்து தம்ஊழி யர்தன்னை வன்பகைக்க
வஞ்சித்தோர் உள்ளம் தனைமாற்றி -அஞ்சிட
தாசனாம் மோசேயை; தான்தேர்ந்த ஆரோனை
தேசத்தில் செய்வியன் என்றனுப்பி -தேசத்தில்
காரிருளை ஆட்செய்து சொல்லவரின் சீர்ச்சொல்லை
சீரில்லார் சொல்லெதிர்க்க யாருமில்லை -சீரிலாறில்
நீரெலாம் செந்நீரால் மீன்களெலாம் செத்தன;
நீரினின்று வந்த தவளைகள் -சீரில்லார்
நாட்டினில் பேராக வந்து அரசனாம்
நாட்டின் அரண்மனைக் குள்ளுமாய் -வாட்டினது
கட்டளையால் வண்டுகளும் பேன்களும் எல்லையெங்கும்
அட்டவரின் பெய்மழை கல்மழையாய் -இட்டவர்
நாட்டதில் தீவரச் செய்திட்டார் சீரவர்;
நாட்டதில் அத்திமுதல் நன்மரம் -நாட்டில்
முறித்திட்டார்; சொல்கேட்டு வெட்டுக் கிளிகள்
அறிந்தன பச்சைப் புழுக்கள் -தறிக்கவந்து
நாட்டின் வளமெலாம் தின்றழித்த தாமவை
நாட்டில் தலைப்பேற்றை சங்கரித்தார் -நாட்டில்
அழிக்காத முன்பேறு இல்லையாம் வேறே
அழிவாலே பொன்வெள்ளி கொண்டு -வழிபோக
சீர்நேர் புறப்படச் செய்தாரே சீர்மக்கள்
சீர்மக்கள் சென்றபோது நாட்டவர் -ஆர்மகிழ்ந்தார்
சீர்மக்கள் காலையில் செல்ல; நிழலாக
நீர்முகிலை ஆங்கே மறைவாக்கி -நேர்சீர்
இரவில் வழுவாத வண்ணமாய்த் தீத்தூண்
இரவை ஒளியாக்கத் தந்தார் -மரக்கறி
வேண்டாம் எனக்கேட்கக் காடைகள் தந்திட்டார்
வீண்மக்கள் உண்ணவே விண்ணின்று -மேண்மையாய்
சீரூண் விழச்செய்தார் உண்டனர் சீர்மக்கள்
சீரூண் தனைமட்டில் சீராக -சீரவர்
குன்றினைத் தட்டத் திறந்தங்கு நீர்வந்து
நன்றாக ஆறாகி ஓடியதே -வன்பாலை
நீராகி ஆங்குதான்; ஆபிரகாம் கையிட்ட
நேராணை தன்னை நினைந்தவர் -நேராண்
நினைந்தருளி தம்மக்கள் மேம்மகிழ விட்ட
தனைவரும் ஆர்பரித்து வந்த -அனைவர்க்கும்
கட்டளைகள் தந்திட்டு நேமங்கள் தந்திட்டு
கட்டளைகள் கைக்கொண்டு செய்வீரே -அட்டாதார்
வேறாம் இனத்தாரின் நாட்டையே தந்திட்டார்
வேறினத்தின் கைப்பலனை உண்டனர் -வேறின
நாட்டில்சேர்ந் தார்மக்கள் காணியாகக் கொண்டனர்
நாட்டவர் சீராய்ச் சிறந்தங்கு -நாட்டவரே
அல்லெலூயா என்றேநீர் சீராரைப் போற்றிடும்
நல்லவரை என்றது பாட்டு
சங்கீதம் 105
அலேலூயா, கர்த்தரைத் நாம்துதிப்போம்; சீரார்
நலம்செய்தார், சீரிரக்கம் என்றும் -நலமுளதே.
கர்த்தரின் வல்செய்கை தன்னையே சொல்லியிங்கு
கர்த்தர் துதியை யெலாம்விளக்க -கர்த்தரின
மக்களுள் யாருளர்? நேம நியாயத்தை
தக்கப் படிகைக்கொள் பேறுபெற்றோர் -மக்களவர்
எக்காலம் நீதிசெய்வோர் பேறுபெற்றோர் சீரவர்
தக்கவர் தேர்ந்தோரின் நன்மையை -இக்கணம்
நான்கண்டு, உம்மக்கள் நன்மகிழ்வால் நான்மகிழ்ந்து
மேன்மையார் கூடநான் மேன்மைசெய்வேன் -மேன்மக்கள்
தன்னிற்கு நீர்செய்யும் சீரிரக்கம் என்மேலும்
என்னை உமதின்சீர் மீட்பாலும் -நன்றாகச்
சந்தித் தருளும்சீர்; எங்களின் முன்னரோடு
இந்நாளில் செய்தோமே வன்பாவம் -இந்நாள்
அடங்காது செய்தோம்யாம் வன்பாவம் தானே;
நடத்திய பல்வியன் நாட்டில் -இடறி
உணராதார் செங்கடல் ஓரத்தில் செய்தார்
உணராதே வன்கலகம் செய்தார் -உணரா
திருப்பினும் தம்வலி காட்டும் படியாய்
திருவவர் மீட்டாரே தீதாய் -திருப்பெயர்
ஆகாத வண்ணமாய் ஆங்குதான் மக்களை;
ஆகா கடலதை கால்கடக்க -ஆகககா
நீர்ப்பிளந்தார் தானதட்டி வற்றிடவே சீர்மக்கள்
நீர்க்கடந்தார் வற்றிய அந்நிலத்தில் -நீர்தன்னின்
ஆழத்தில் நின்று நடந்தாரே சீர்மக்கள்
ஆழியில் பின்வந்த வீரரை -ஆழிமூடி
அப்பகைஞர் கைகளினின் மீட்டார் திருவவர்
அப்பகைஞர் தன்னில் ஒருவனிலை -அப்போது
மீந்தவர் ஆங்கே ஒருவனிலை; ஏந்தியே
சேந்தவர் பாடினர் பாட்டாக -மேந்தவர்
தன்னையே ஆராதித் தாஅர் திருவினம்
அன்னவர் தன்னைத் துதித்தனர் -அன்றவர்
சொற்களை நம்பியே சீரினம் பாடியும்
நற்றவர்ச் செய்கைகள் தன்னையோ -அற்றாய்
மறந்தார் விரைவாக மக்களார் ஏனோ
மறந்தவர் ஆலோ சனைக்காய் -சிறந்தவர்
காத்திராமல் செய்தாரே சோதனை தன்னையங்கு
மேத்தவரை இச்சையாலே பாலையில் -காத்திரார்
கேட்டதைக் கைக்கொடுத்தார்; ஆனாலும் ஆன்மாவில்
கேட்டாம் இளைப்பையும் தந்திட்டார் -கேட்டினமோ
பாளயத்தில் மோசேயை சீர்த்தெரிந்த ஆரோனை
பாளையத்துள் கொண்டார் அழுக்காறு -பாளையத்தில்
சொல்லியங்கு ஏளனம் செய்திருவர் தன்னைபுவி
சொல்கேட்டு மூடியதே ஆங்குதான் -சொல்லவரின்
தீயது பற்றியெரிந் தங்கழித்து வன்னாரை
தீயதும் போட்டதே; தீயாரோ -தீயதாய்
கன்றொன்றை ஓரேபில் உண்டுசெய்து தம்மேன்மை
கன்றிற்கு வொப்பாக்கி போற்றினர் -நன்றியிலார்
நாட்டதில் செய்திட்ட மேன்செய்கை காமினது
நாட்டதில் கண்ட வியன்செய்கை -நாட்டுவெளி
செங்கடலில் செய்த வியனெலாம் கீழ்மறந்தார்
அங்கவர்கள் மீட்பராம் தேவனை. -மங்கியோரை
வெட்டிடுவேன் என்றவரை தேர்ந்தவனாம் மோசேயோ
வெட்டிடாதீர் சீராரே என்றவரின் -வெட்டுசினம்
ஆற்றிடவே ஆங்கு திறப்பினது வாயிலே
மேற்றாணும் நின்றனன் சீராணும் -மேற்றவர்சொல்
நம்பாது நற்றேசம் தன்னை அசட்டையாய்
வம்பாகச் செய்தார் முறுமுறுப்பு -அம்கூடம்
தன்னில் தரித்தவர்; பாலையில் செத்திட
வன்னார் வழியார் அழிந்திட -வன்னார்
பலநிலத்தில் ஓடிட தம்கையை மக்கள்
பலரெதிராய் இட்டார் திருவும் -பலரவர்
பாஅல் பெயோரை இனத்தவர் பின்பற்றி
பாஅல் சிலைகட்கு இட்டபலி -நாஅள்
புசித்திட்டு தங்கள் செயலினால் சீரார்
திசைச்சினம் மூட்டிட வாதை -திசையிலே
வந்தவருள். அப்போ பினெகாசு தானெழுந்து
அந்நாளில் நின்று நியாயஞ்செய் -தந்நாளில்
வாதையது நின்ற ததனால் தலைமுறைக்கும்
வேதநீதி என்றவனுக் கெண்ணினார். -பேதையர்
தண்ணீர்கள் மேரிபாவில் சீரார்ச் சினமூட்ட
தண்ணீரால் மோசேக்கும் பொல்லாப்பு -தண்ணீரை
கேட்கவாய்ப் பேசா ததாலேஎ வந்தது.
கேட்டவர்கள் செய்தார் நெருக்கியவர் -நாட்டவர்
ஆதலால் சீராண் பதறிட்டுப் பேசினான்.
மேதவர் சொல்படி நாட்டினம் -ஏதுமிலா
வன்னழிக்கா விட்டார் சிலரையங்கு; வன்னாக
வன்னாரின் பெண்கொண்டு பெண்கொடுத்து -வன்செய்கை
கற்று சிலைகளைப் பின்பற்ற கற்றதே
அற்றதாய் கண்ணியாகி தம்பிள்ளை -பெற்றாரே
இட்டனரே பேய்கட்கு வீண்பலியாய்; இட்டனரே
நட்டவரென் கானான் இருத்தேச -அட்டசிலை
மக்களின் செந்நீரால் தீட்டாகி நற்றேசம்
மக்களின் செந்நீரால் வன்னிறைந்தே -தக்கிலார்
செய்கைகளால் தூயற்று போனார் பிழன்றவரும்
செய்கைகளால் கர்த்தர் சினங்கொண்டு -செய்தவரை
சீரார் அருவருத்தே மற்றார்கை தந்திட்டார்
சீரினத்தை வன்பகைஞர் ஆண்டனர் -சீரினத்தை
வன்பகைஞர் செய்தார் ஒடுக்கமே; கையின்கீழ்
வன்னாகத் தாழ்த்தினார்; மீட்டாரே -வன்விட்டு
பல்முறைகள் என்றாலும் வன்னெண்ணம் கொண்டயினம்
அல்லாது அற்செய்கைச் செய்ததால் -அல்லார்
சிறுமைப் படுத்தப்பட் டாரே இனத்தார்
சிறுவர் அழைத்தபோது சீரார் -சிறுவரின்
கேட்டின் இடுக்கத்தைக் கண்ணோக்கி தாம்செய்த
நாட்டவர்க்கு தாம்செய்த ஆணையை -கேட்டுவிட்டே
மிக்காமே தம்மிரக்கம் தன்னால் மனதுருகி
தக்கார் சிறைப்போய் சிறையிரங்க -தக்கவர்
செய்தார் திருவவர்; எங்களின் தேவனாம்
மெய்த்தேவன் கர்த்தாவே, உம்தூய -மெய்ப்பெயரை
போற்றி உமைத்துதித்து மேன்மையாய் பாராட்ட
வேற்றார் விடுத்தெம்மை மீட்டிடும் -போற்றுவோம்
சீரவர் கர்த்தரையே சீரவரே என்றென்றும்
சீர்த்துதிக்கத் தக்கவராம் சீர்மக்காள் -நீர்சொல்லும்
ஆமென் எனவும் அலெலூயா என்றிங்கு
மேமக்கள் பாடினார் பாட்டு
சங்கீதம் 106
கர்த்தரை மக்காள் துதியுங்கள்; சீரவர்
கர்த்தரவர் நல்லவர், சீராராம் -கர்த்தர்
கிருபையது என்று முளதே. திருவால்
எரிபகைஞர்க் கைக்குத்தான் நீக்கி -திருமீட்டு
நாற்றிசை தேசங் களிலு மிரும்சேர்த்தோர்
சாற்றட்டும் அங்ஙணமே; தங்குமூர் -ஏற்றிடக்
காணாது பாலை வழியாய் பசியாக
காணலைக் கண்டோடும் தாகமாக -ஏனோ
அலைந்து திரிந்தார்கள். ஆபத்து நாளில்
அலைந்தவர் கர்த்தரை நோக்கி -அலர்ந்தவர்க்
கூப்பிட்டார், இக்கட்டு கள்ளினின்று சீரவர்
கூப்பிட்டோர் தன்னை விடுவித்தார். -கூப்பிட்டோர்
தங்குமூர்ப் போய்ச்சேர, செவ்வைவழி தன்னிலே
அங்கே நடத்தினார். தாகமுள்ள -மங்காத
ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, நன்பசியுள்
ஆத்துமாவை நன்மையினால் சீர்நிரப்பு -மேத்தவர்
சீர்கிருபை தன்னிமித் தம்மும், மனிதர்க்குச்
சீரவவர் செய்கிற மேன்வியன்கள் -சீரவை
தன்னே நிமித்தமும் சீரவரை சீர்மக்கள்
தன்னே துதிப்பார் களாகவே. -நன்னவர்
தேவனின் சொற்களுக்கு வன்கலகம் செய்தவர்
மேவியே, உன்னத மானவரின் -தேவனின்
ஆலோ சனையை அசட்டைச்செய் தார்களே,
சீலில் இருளிலும் மையிருட்டும் -சீலிலாதே
வைத்தார், ஒடுக்கத் திலுமிரும்பால் கட்டுண்டு
வைத்தார் கிடந்தார்கள் ஏன்தானோ -வைத்தார்
மனதை வருத்தத்தால் தாழ்த்தினார் தேவன்;
இனத்தார் உதவிசெய்வார் இல்லா -தனையர்
விழுந்தனர். தங்களின் ஆபத்தில் மக்கள்
அழுதனர் கர்த்தரை நோக்கி -விழுந்தவர்க்
கூப்பிட்டார்; இக்கட்டு கள்ளினின்று சீர்மக்கள்
கூப்பிட்டார் தன்னைமீட்டார் நீக்கியவர் -கூப்பிட்டார்
சீலில் இருளிலும் மையிருட்டும் சீலிலாதே
சீலாரார் தன்னை வெளிப்பட -சீலவர்
தன்னே அறுத்தார் இனத்தவர் கட்டுகளை
நன்கர்த்தர் வெண்கலத்தா லானமேன் -நன்கதவு
சீரார் உடைத்து, இரும்பிலான தாழ்ப்பாள்கள்
நேரார் முறித்திட்டா ரென்றவரின் -சீராம்
கிருபை நிமித்தமும், மாந்தர்க்குச் சீரார்
திருவவர் செய்கிற மேன்செய் -திருவியன்
சீர்நிமித்தம் தன்னே அவரைத் துதிக்கட்டும்.
சீரிலா நிர்மூடர் தங்களின் -சீரிலாச்
செய்வழியி னாலும்தம் தீதாலும் நோய்க்கொண்டே
மெய்யாய் ஒடுங்கியே போகிறார்கள்; -அய்யோ
அவரான்மா எல்லா உணவை வெறுக்க
அவரோ மரணத்தின் வாயில் -அவரருகாய்
போயுள்ளார்; தங்களின் ஆபத்தில் கர்த்தரை
போயவர் நோக்கியே கூப்பிட -வேயவர்
இக்கட்டு கள்தன்னிற் நீங்கலாக்கி மீட்டாரே
தக்கவர் சீராரை தம்சொல்லை -தக்காக
சீரனுப்பிச் சீராக்கி, சீரார் அழிவுக்குத்
நேரவர் விட்டுதப்பு விக்கிறார். -நேரார்
அவரின் கிருபை நிமித்தமும், மாந்தர்க்
கவர்செய் கிறவியன் கட்காய் -அவரைத்
துதித்து, துதிபலிகள் தன்னைச் செலுத்தி
இதுவகை சீராரின் செய்கை -மதிகொண்டு
மேன்மகிழ்வாய்ச் சத்தத் துடனே விவரிப்பர்.
தான்சீராய்க் கப்பலேறிப் போவாரோ -மேன்நீர்க்
கடல்தன்னில் தானே பயணித்து நன்றாய்
இடம்பல சென்று தொழில்செய் -இடத்தாரோ
கர்த்தரின் செய்கைகள் தன்னையும், ஆழத்தில்
கர்த்தராம் சீர்வியன்கள் தன்னையும் -கர்த்தரால்
காண்கிறார்கள் கப்பல் பயணியர். சீரவா
காண்சிற்றார் காண அலையெழுப்பி -காண்கடல்
தன்னையே கட்டளையிட் டேபேராய்க் காற்றனுப்பி
அன்னவரே கொந்தளிக்கச் செய்யும்நீர். -தன்னே
அவர்வின்ணில் ஏறி, இறங்குகிறார் ஆழம்,
அவர்களின் ஆத்துமா மண்போல் -அவரின்
கரைகிறது. கள்ளால் வெறித்தவன்போல் சீரில்
தரையில் அலைந்தடு மாற -கரைந்தவரின்
ஞானமெலாம் தானே முழுகினது. அப்பொழுது
மேனவர்கள் தங்களின் ஆபத்தில் -மேனவராம்
கர்த்தரை நோக்கி யழைக்கிறார்கள், சீரவர்
கர்த்தரே இக்கட்டு கட்கவரை -கர்த்தவர்
நீங்கலாக்கித் தானே விடுவிக் கிறார்த்திருவார்.
ஆங்கே அமர்த்துகின்றார் கொந்தளிப்பை -ஆங்கே
அமைதலுண் டாக, அவர்கள் மகிழ
அமைந்தவர் நாடியே நாவாய் -தமரார்
துறைமுகத்தில் கொண்டுவந்து சேர்க்கிறார். கர்த்தர்
துறைமுகத்தில் சீரார் கிருபை -சிறப்பவரை
மாந்தர்க் கவர்செய்யும் நன்வியன்கள் தன்னையே
மாந்தரவர் தானே துதித்தவர் -மாந்தரின்
சீரவையில் தன்னே உயர்த்தினர், மூப்பர்கள்
சீரவைச் சங்கத்தி லேயவரைச் -சீராகப்
போற்றுவா ராக. அவராறு கள்தன்னை
சாற்றி வறண்டிடச் செய்தேநீர் -ஊற்றினது
நீரை வறளவே செய்து, குடிகளின்
சீரிலா பொல்லாப்பு தன்னிமித்தம் -சீராய்ச்
செழிப்பான தேசத்தை சீரிலுவர் வெற்றாய்
செழிப்பில் நிலமாய்த் திருவார் -அழித்தங்கு
மாற்றுகிறார். ஆனால் வறண்ட நிலத்தையோ
மாற்றுகிறார் ஊற்றாக்கி நீர்வர -ஏற்றுகிறார்
ஆங்கே பசித்தவரை, ஆங்கிருப்போர் சீராக
ஆங்கே நகர்கட்டி சீர்வயல்கள் -ஆங்கே
விதைத்தனர் சாறுதரும் நற்செடிகள் நாட்டி
விதைத்தவை நாட்டில் பலனை -அதுதரும்.
சீரவர் வாழ்த்துகிறார், மிக்காய்ப் பெருகுகிறார்;
சீரவரின் கால்நடைகள் தன்னையே -சீராய்க்
குறையா திருக்கவே செய்கிறார் சீரார்.
குறைவுபட்டுத் தாழ்வடை கின்றார் -குறைத்துயரம்
வன்னிடுக்கன் ஆபத்து தன்னாலே மன்னரவர்
வன்மேல் இகழ்ச்சிவரச் செய்தவர் -அன்னார்
வழியில்லா பாலை வெளியிலே சீரார்
அழிதிரியச் செய்து, எளியோன் -விழுச்சிறுமை
தன்னின் றெடுத்து, உயர்ந்த அடைக்கலத்தில்
நன்றாக வைத்து, அவன்வழியார் -தன்னையே
மந்தையைப் போலாக்கு கின்றார்சீர். உத்தமர்கள்
அந்த உயர்க்காண் மகிழ்வார்கள்; -இந்த
நியாயக்கே டெல்லாம்தன் வாய்மூடும். ஞானி
வயனவன் தானே கவனித் -தயனானே;
ஞானவான்கள் கர்த்தரின் சீர்கிருபை தன்னையே
மேனார் உணர்ந்துகொள் வார்.
சங்கீதம் 107
தேவனே, என்னுள்ளம் ஆயத்த மாயுளது;
தேவனே நான்பாடி நானிசைப்பேன் -தேவனே
என்மேன்மை யும்பாடும் சீரவரை. மூலையுள
என்வீணை, இன்னிசைத் தந்திடும் -என்யாழே
கண்விழியுங்; நான்விடியல் முன்னெழுந்து பாடுவேன்
கண்விழித்து; கர்த்தாவே, மக்களுள்ளே -விண்ணவரே
உம்மைத் துதிப்பேன்நான்; மக்களுள்ளே சீரவரே
உம்மைக் இசைத்துநான் பாடுவேன். -உம்முடைய
சீரிரக்கம் வானங்கள் மேலாவும், உம்மெய்யோ
சீரில் முகில்மேலாய் எட்டுகின்ற. -சீரவரே
தேவனே, வானங்கள் மேலாய் உயர்ந்திரும்;
தேவனே பூமி யனைத்தின்மேல் -தேவனே
உம்மேன்மை சீராம் உயர்ந்திருக் கட்டுமே.
உம்சீரார் நேசர் விடுவிக்க -ஏந்துவீர்
சீர்த்தேவா உம்சீரார் நேசர் விடுவிக்க
சீர்வலது சீர்கரத்தால் சீர்வேண்ட சீர்ச்செவி
சீர்தூயால் சீர்விளம்ப, நானோ களிப்பேனே
சீர்ச்சீகேம் பங்காக்கி, சீர்சுக்கோத் -சீர்ரளப்பேன்
சீரிடம் கீலேயாத் என்நிலம்; சீர்மனாசே
சீரினம் எந்தனின்; எப்பிராயிம் -சீராவாம்
சீர்யூதா எந்தன் நியாயஞ்செய் மாந்தனாம்.
சீர்ரிலா மோவாபென் கால்கழுவும் -நீர்ச்சட்டி
சீர்ரிலான் ஏதோமின் மேலெந்தன் காலணியை
சீர்ராண் எறிந்திடுவேன்; சீரிலா -சார்பெலித்தின்,
என்கீழாம் ஆர்ப்பரித்துக் கொள்வேன்நான். மேலரண்
என்னை வழிநடத்திப் போவான்யார்? -என்வழியை
ஏதோம் செலக்காட்ட வந்திடுவான் யார்தானோ?
வேதவர் எம்படைகள் சேராத -ஏதேது
சீர்க்கர்த்தர் தானன்றோ? ஏனெமைச் சீராரே
நீர்த்தள்ளி விட்டிருந்தீர்? சீராரே -நீர்தானே
இக்கட்டில் எங்களுக்கு சீருதவி செய்யும்நீர்;
தக்கிலார் மாந்தர் உதவிவீண் -எக்காலம்
தேவனாலே மேன்செய்வோம்; சீரவரே எம்பகைவர்
மேவி மிதித்திடுவார் ஆம்.
சங்கீதம் 108
சங்கீதம் 108 னது பிற்பகுதியும் சங்கீதம் 60 னது பிற்பகுதியும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக வருகிறது. ஆனாலும் இந்த 108ம் சங்கீதம் தேவனுடைய பெட்டி எருசலேம் நகருக்குள் கொண்டுவரும் போது பாடப்பட்டதாக நம்பப்படுகிறது.
நான்துதிக்கும் நல்தேவா வாய்பேசா தேயிராதீர்
மேன்மையிலார் வாயும் புரட்டுவாயும் -ஏன்திறந்தோ
என்னெதிராய், கள்ளநாவால் என்னோடு பேசுகின்றார்
என்னெதிர்த்து வன்பகைச்சொல் சூழ்ந்தென்னை -வன்போர்
தனையெதியார் செய்கின்றார் ஏனோ? இகத்தில்
வினையாமென் நன்மைச் செயலிற் -வினையது
தீமைச் செயல்புரி கின்றார்யேன்? அன்பிற்கு
தாமே பகைவிடையாய் தந்தாரேன்? -பாமரன்நான்
தேவனை நோக்கி செபம்செய, ஏனவர்
மேவி எதிர்த்தாரோ வன்னார்கொல்? -மேவியர்
மேல்வையும்; வன்சாத்தான் நிற்கட்டும் அம்வலதில்
மேல்வந்த எவ்வழக்கும் தீர்க்கட்டும் -மேல்குற்றம்
செய்த செபமெல்லாம் ஆகட்டும் பாவமாக
மெய்யிரு நாட்கள் குறைந்திடட்டும் -செய்வேலை
வேறொருவன் செய்ய எடுக்கட்டும்; திக்கற்று
மாறானின் பிள்ளைகள் போகட்டும், -மாறானின்
இன்மனையாள் கைம்பெண்ணாய் ஆகட்டும் பிள்ளைகள்
வன்னாய்த் திரிந்து இரந்துண்ண -வன்வீடு
விட்டுவரட் டும்சீரோய்; தண்டலாக எல்லாமே
நட்டவன் தந்த கடனிற்காய் -இட்டவன்
கொண்டுபோக, செய்வேலை நற்பலன்கள் சேரட்டும்
அண்டிலார் அந்நியர்க்கை; யாருமே -அண்டி
இரங்காத வண்ணமும், திக்கற்ற சேயோர்க்(கு)
இரங்கிடா வண்ணமே ஆக -இரக்கமில்
அல்வழியார் சேரா தழியுண்டு, அல்லாரின்
அல்லார் இரண்டாம் பரன்பரை -இல்லாமல்
போகட்டும் பேரற்று; வன்தாயின் பாவங்கள்
போகட்டும் நீங்காது; வன்தந்தை -ஆகச்செய்
துர்ச்செயல்கள் கர்த்தர்முன் வந்திட, சீரவர்
துர்ச்செயல்கள் தன்னை நினைக்கட்டும் -துர்மாந்தர்
பேரும் புவியிலே இல்லாதே போகட்டும்
வேராம் அவர்ச்செய்கை உம்முன்னே -நேரில்லாண்
தானோ எளியோரை சீர்த்தயைச் செய்திட
ஏனோ நினையா(து) இடுக்கண்கள் -ஏனோ
புரிந்து, மனமுறிந் தோனைக் கொலைச்செய்ப்
புரிய விரும்பினான் வாழ்ச்சொல் -தெரியா
கெடுசொல் விரும்பினான்; தூரம் விடுத்து
கடிதே விலகிடும் வாழ்த்து -கெடுசொல்லைத்
தன்னையவன் ஆடையாகப் போர்த்திட்டு வன்னவன்
தன்னில் உளத்திலே நீர்போலும் -வன்னவன்
என்புதனில் எண்ணெய்ப்போல் பாய்கிறது; வன்னெதிர்த்து
என்ஆன்மா விற்கெதிர்ச்சொல் பேசியவர் -அன்னார்க்கு
கர்த்தரால் வந்திடும் சீர்பலனாம்; ஆண்டவராம்
கர்த்தாவே உம்பெயர் தன்நிமித்தம் -கர்த்தாவே
என்னைநீர் ஆதரித்து உம்மிரக்கம் சீராமே
நன்றென் பதாலே எனைவிடுயும் -எம்மனம்
என்னுள்ளே குத்துண் டுளதேசீர் அன்றியும்
அன்னான் சிறுமை எளிமையுளோன் -என்னயிது
சாயும் நிழற்போல நானகன்றேன்; வேயாது
மேயுஞ்செய் வெட்டுக் கிளிபோலே -தேயாரால்
நான்விரட்டப் பட்டே பறக்கிறேன் ஏனிங்கு;
நான்நோன்பில் தொய்ந்து முழங்கால்கள் -தான்சீரில்
போன தழன்று; உடலெந்தன் போயிற்றே
மேனில் உலர்ந்து வலியிலாது -ஏனோ
அவர்கள் எனைக்கண்டு தன்தலையை ஆட்டி
அவரெனை ஏளனம் செய்தார் -தவனே
எனையுமது சீரிரக்கத் தின்படியே மீட்க
எனக்குதவும் சீரே; திருவே -எனவே
இதுவுமது சீர்க்கரம் தேவரீர் தானே
இதையவர் தானறியச் செய்வீர் -மதியிலார்
சீரில் கெடுசொல் மொழிந்தாலும் சீராரே
சீராக என்னைநீர் வாழ்த்திடும் -சீரில்லார்
வந்திட காலெழும்ப, போகட்டும் வெட்கப்பட்(டு)
அந்த இழிவார்; அடியனோ -எந்தன்
உளத்தில் மகிழ்ந்திட வையும் திருச்சீர்
அளையார் எதிரியார் நாணம் -களைந்திடாப்
போர்வையாய் மூடத் தரிக்கட்டும்; கர்த்தரை
ஆர்த்துத் துதித்திடுவேன் என்வாயால், -சீர்த்திருவை
பல்லோர் நடுவே புகழ்வேன்நான்; கெட்டசெயல்
அல்லார் செயுமவர் விட்டிந்த -வல்லில்
எளியவன் ஆன்மா தனைமீட்க கர்த்தர்
எளியோன் வலப்புறம் நின்று
சங்கீதம் 109
ஆக்கமில் வன்பகைப்போர் தன்னைநான் பாதபடி
ஆக்கும் வரையென் வலக்கையில் -தானிரும்
என்றேசீர் கர்த்தரென் ஆண்டவரை நோக்கியே
சொன்னார்சீர்; கர்த்தரவர் சீயோனில் -தன்னிருந்து
உம்வலியின் செங்கோலை சீரனுப்ப; நீர்சீரோய்
உம்பகைஞர் வன்னடுவே ஆளும்நீர் -உம்வலியின்
நாளிலே உம்மக்கள் சீர்மனத் தோடும்சீர்
நாளில் களித்தூய் அணியாக -வேளை
திருநிற்பர் காலைப் பனிபோல் இளைஞர்
திருவுமக்குப் பேறாவர் சீர்நேர் -திருவேநீர்
என்றென்றும் மெல்கிசெதேக் சீர்முறையில் ஆசரியர்
என்றிருப்பீர் என்றுமக்கு ஆணையிட்ட -அன்னார்
மனம்மாறாச் சீரிருப்பார்; உம்வலைக்கை நிற்கும்
நனியார், சினந்தனது நாளில் -நனியில்
அரசரை வெட்டிடுவார்; மக்களை தீர்த்து
கரையெலாம் ஊனுடல் செத்து -கரந்தலையாய்
நிற்பவரை சீரார் நொறுக்கிடுவார்; தாகத்தால்
நிற்பவரோ நீர்ச்சுனை தானருந்தி -நற்றவரும்
தன்தலையை மேற்பட்டு நிற்பாரே சீரவர்
என்றரசன் பாடினான் பாட்டு
சங்கீதம் 110
சங்கீதம் 111
அல்லெலூயா, செம்மையானோர் சங்கமதி லும்சீரார்
நல்லார் சபையிலும் கர்த்தரை -நல்முழு
சீர்மன தோடும் துதிப்பேன்நான். கர்த்தரின்
சீர்ச்செய்கை மிப்பெரிய வைகளும், -நேர்அவை
தன்னில் விரும்புமெல் லாராலும் ஆராயத்
தன்னே தகுதியுடை யாயுளது. -நம்சீரார்
செய்கை மகிமையும் சீர்மேன்மை யும்முளது;
மெய்யவரின் நீதியோ என்றென்றும் -மெய்நிற்கும்.
தம்முடைய மேன்வியன் செய்கைகளை சீர்நினைவு
அம்கூரச் செய்தாரே, கர்த்தரவர் -அம்மிரக்கம்
சீர்மனதுள் நல்லுருக்கம் உள்ளவர். சீர்தமக்கு
நேர்சீராய் அஞ்சினோர்க் காகவேயூண் -சீர்த்தந்தார்;
சீர்தம் உடன்படிக்கை தன்னையே என்றென்றும்
சீர்நினைப்பார். தேசங்கள் சொந்தத்தை -சீர்த்தமது
மக்கட்குத் தந்ததினால் சீர்தமது செய்கைகள்
தக்கபலன் தன்னையவர் சீராக -தக்கார்
தெரியப் படுத்தினார் சீரவர்; சீரார்
கரத்தினது சீர்ச்செய்கை மெய்யும் -தரைதன்னில்
நன்றாய் நியாயமும் ஆனவை; சீரவரின்
நன்கட் டளைகளெலாம் மெய்யாமே -நன்றவை
என்றென்றைக் கும்முள்ள நாளெல்லாம் சீருறுதி
நன்றாம், அவைமெய்யும் செம்மையுமாய் -நன்றாகச்
செய்திடப் பட்டவைகள். சீர்த்தமது மக்கட்கு
மெய்மீட்பை தானனுப்பி தன்மெய்யாய்ச் -செய்த
உடன்படிக்கை தன்னையே நித்தியச்சீர் மெய்யாம்
உடன்படிக்கை யாகவே ஆணை -யிடுவித்தார்;
சீரார்ப் பெயரது தூய்வேறும் மேன்திகைப்பும்
சீருளது; கர்த்தருக்கு அஞ்சுவதே -சீரறிவாம்
ஞானத்தின் சீர்த்தொடக்கம். சீரவரின் கற்பனைகள்
தானவைச் சீர்ப்படி செய்கிற -மேனவர்
யாவர்க்கும் நற்றறிவு உண்டாமே; சீரவரின்
மேவுபுகழ் நிற்கும் நிலைத்து.
சங்கீதம் 111
அல்லெலூயா, கர்த்தருக்கு அஞ்சி, அவரினது
நல்லசீர் கட்டளைகள் தன்னிலே -நல்மிகவும்
சீராய் விரும்புகிற மாந்தவன் பேறுபெற்றோன்.
சீரவன் நன்வழியார் பூமிதனில் -சீராய்ப்
பலத்திருக்கும், செம்மையானச் சீர்வழியார் தன்னே
நலமாக வாழ்த்துபெற்று நன்றாய் -நலமிருக்கும்.
சீர்ச்சொத்தும் சீர்த்திருவும் சீரவன் வீட்டிலே
சீரிருக்கும்; சீரவனின் நீதியோ -சீரென்றும்
சீராக நிற்குமாம். செம்மையான சீரவர்க்கு
சீராய் இருளில் ஒளியுதிக்கும்; -சீரவன்
சீரிரக்கம் சீர்மன தின்னுருக்கம் சேர்நீதி
சீருள்ளோன். சீரிரங்கி தன்பணத்தைச் -சீர்க்கொடுப்பான்
சீராண் கடனாக, தன்செய்கை தன்னையே
சீராய் நியாயமாய் சீர்நடக்கும் -சீரவனே
பேறுபெற்றோன். சீரவன் என்றென்றும் சீராக
பேறா தசைக்கப் படாதிருப்பான்; -பேறவன்
நீதிமான் நித்திய கீர்த்தியுள மாந்தனவன்.
நீதிமான் கெட்டசெய்தி கேட்டாலும் -நீதியால்
அஞ்சிடான்; நன்மனதில் கர்த்தரை நம்புளதால்
அஞ்சாமல் சீர்த்திடனாய் சீரிருப்பான்; -அஞ்சாமல்
தன்மனதில் சீருறுதி கொண்டிருப்பான்; சீரவன்
தன்மனதில் வன்பகைஞர் தன்னினது -வன்சரிக்
கட்டுதலைக் காணுமட்டும் அஞ்சிடா தேயிருப்பான்;
நட்டவர்க்கு வாரியிறை வள்ளலாக -நட்டானோ
ஏழையர்க்கைத் தந்தான்; அவனினது சீர்நீதி
பாழாகா என்றென்றும் நிற்குமே; -தாழாது
சீராணின் சீர்க்கொம்பு மேன்மையாய் சீருயர்த்தி
சீராக்கிச் செய்வரே; வன்வழியான் -சீரிலாது
நன்னீதி மானைத்தான் கண்டு மனமடிவாய்
தன்பற்கள் தான்கடித்தே வீண்கரைந்து -வன்போவான்;
வன்வழியார் தன்னினது ஆசை அழிந்திடும்;
என்றங்குப் பாடினார் பா.
சங்கீதம் 112
அல்லெலூயா, கர்த்தரின் ஊழியரே, சீராராம்
நல்லாரைச் சீராய்த் துதியுங்கள்; நல்லவர்
கர்த்தரின் நாமத்தைச் சீரார்த் துதியுங்கள்.
கர்த்தரின் சீர்ப்பெயர் இன்றுமுதல் -கர்த்தர்த்
திருப்பெயரே போற்றப் படட்டுமே; ஆமாம்
திருவவரின் சீர்ப்பெயர் பேராய் -விரைந்திடும்
ஞாயிறு கீழ்த்தொடங்கி மேல்வரைக்கும் யாவரும்
தூயவரைச் சீரார் துதிக்கட்டும் -தூயவரோ
எல்லா விததேசங் கள்மேலும் சீருயர்ந்தார்;
நல்லார் மகிமையது விண்மேலாம் -வல்லார்
திருவாசம் விண்ணினது உன்னதங்கள் தன்னில்
திருவவரைப் போலயார் இங்கே? -திருவவர்
கண்தாழ்த்திக் காண்கின்றார் விண்ணுள் புவியுள
மண்ணாமே எல்லாம்; சிறியவனை -மண்புழுதி
தன்னின்று தூக்கி விடுகிறார்; குப்பையினின்
றன்னெளி யோனை உயர்த்துகிறார் -அன்னவனை
மன்னரோடும் தம்மக்கள் சீரமைச்ச ரோடுமவர்
நன்றாய் அமரச்செய் கின்றார்நேர். -அன்னவரே
பிள்ளையிலா இன்னா தழும்மலடி தன்னையே
பிள்ளை கருத்தரிக்கச் செய்தவர் -கள்ளமிலா
வீட்டில் குடியிருக்கச் செய்கிறார். அல்லெலூயா.
நாட்டவர் பாடினார் பாட்டு.
சங்கீதம் 113
சீரார் இசுரேல் எகிப்திலும், யாக்கோபின்
சீரவரின் நம்வழியார் அந்நியர் -சாரா
மொழியரி னின்று புறப்பட்ட போது,
வழியவன் யூதா அவர்க்கு -வழுவிலா
தூய தலமும், இசுரெலோ சீராளத்
தூயவர்க் காயிற்று; ஆங்கேதான் -ஆழகடல்
கண்டு விலகியோ டிற்றே; நதியோர்தான்
மண்ணிலே பின்னிட் டதேதிரும்பி. -மண்ணின்
மலைகளோ ஆட்டுக் கடாக்களைப் போல,
மலைகுன்றொ ஆட்டு மரிபோல் -நலமாகத்
துள்ளினது. ஆழ்கடலே, நீவிலகி யோடவும்
வெள்ளநீர் யோர்தானே, நீபின்னே -வெள்ளம்
திரும்பவும்; மேன்மலைகாள், ஆட்டுக் கடாப்போல்
வரைக்குன்றே ஆட்டு மரிபோல் -வரைத்துள்ள
உங்களுக்கு என்னாயிற் றோவந்து? பூமியே,
உங்களின் ஆண்டவர்க்கு முன்பாக -இங்குநீர்
யாக்கோபின் தேவனுக்கு முன்பாய் அதிர்ந்திடு.
ஆக்குகிறார் கன்மலையை நீர்த்தடாகம் -ஆக்கியே
கற்பாறை தன்னையே நீரூற்றாய் மாற்றுகிறார்.
நற்றவரைப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 114
எங்களுக் கல்ல, திருச்சீரே, உம்கிருபைக்
கிங்கே உமது பெயருக்கே -மங்கா
மகிமை வரப்பண்ணும். சீரில் புறவார்
இகத்திலே சொல்வானேன், எங்கே -இகத்திலே
சீரார் திருவெங்கே என்றேதான்? நம்தேவன்
சீரவர் விண்ணுலகில் தானுள்ளார் -சீரவர்
தம்விருப்ப மெல்லாமே செய்கிறார்; சீரிலார்த்
தம்சிலைகள் வெள்ளிபொன் தானவை -எம்மாந்தர்
செய்தவையே; வாயிருந்தும் பேசாது கண்ணிருந்தும்
மெய்யாகக் காணாது; காதுகள் -மெய்போல்
இருந்துமவை கேளாது, மூக்கிருந்தும் நாற்றம்
விரைந்து நுகராதே; கைகள் -இரண்டுமேல்
மெய்போல் இருந்தாலும் அக்கை தொடமாட்டா;
செய்தபல கால்கள் இருந்துமவை -மெய்யாய்
நடக்கயேலா; தொண்டையால் சத்தமிட யேலா;
இடத்தில் அவைகளைச் செய்வோர் -நடப்பிலே
வீண்சிலை நம்புவோர் யாவரும் வீண்சிலை
வீண்போலத் தானிருக்கின் றாரவர்; -வீண்விட்டு
சீரினமே கர்த்தரை நம்பு; அவர்தானே
சீரான கேடகமாய் உள்ளாரே -சீரவர்க்கு
ஆரோன் வழியாரே, கர்த்தரை நம்புங்கள்;
ஆரோன் வழியார்க்கு நற்றுணையாய் -சீரவரே
சீரான கேடகமாய் உள்ளார்; திருவவர்
சீராராம் கர்த்தருக் கஞ்சுவோரே, -சீரவராம்
கர்த்தரை நம்புங்கள்; சீரார் துணையுமாய்
கர்த்தரே சீரான கேடகமாய் -கர்த்தரஞ்சும்
சீரார்க்கு உள்ளாரே; கர்த்தரவர் நம்மைத்தான்
சீராய் நினைத்துள்ளார், வாழ்த்துவார் -சீரவர்;
சீராம் இசுரேல் வழியாரை வாழ்த்துவார்
சீரவன் ஆரோன் வழியாரை -சீரவர்
வாழ்த்துவார். கர்த்தருக் கஞ்சும் பெரியோரை
வாழ்ச்சிறியர் எல்லாரை வாழ்த்துவார் -வாழ்க்கர்த்தர்.
கர்த்தரே உங்களையும் உங்கள் வழியாரை
கர்த்தவரே பேராய்ப் பெருகச்செய் - வர்த்திக்க.
விண்புவியைத் சீர்ப்படைத்த கர்த்தராலே நீங்களிங்கு
மண்ணவரே வாழ்த்துபெற்றோர். சீரவரின் -விண்ணுலகு
பூமியையோ மாந்தர்க்குச் சீரார்க் கொடுத்தாரே.
ஆமாம் மரித்தாரும் பேசாதே -ஏமாந்
திறங்குகிற யாவரும் கர்த்தரைத் போற்றார்.
அறனாரை யாம்வாழ்நாள் என்றும் -சிறப்பாகக்
கர்த்தரை போற்றுவோம். அல்லெலூயா. என்றங்கு
கர்த்தரைப் போற்றினார் பாட்டு
சங்கீதம் 115
கர்த்தரென் சத்தத்தை விண்ணப்பத் தையுஞ்சேர்
கர்த்தரவர் கேட்டதினால், சீராராம் கர்த்தரில்
அன்புசெய் கின்றேன். அவர்தமது சீர்ச்செவியை
அன்பன் எனக்குச்சாய்த் தாரதனால் -அன்பன்
உயிரோ டிருக்கு மளவும் அவரை
வயநான் தொழுதுகொள்ளு வேன்சீர். -இயலா
மரணத்தின் கட்டுகள் என்னைச்சூழ் சுற்றி
மரணமாம் பாதாளச் சீரில் -எரிஇடுக்கண்
என்னைப் பிடித்ததிக் கட்டு மனதுளைச்சல்
வன்னாய் அடைந்தேன்நான். அப்பொழுது -என்சீராம்
கர்த்தரின் சீர்ப்பெயரை நான்தொழுது கொண்டுயென்
கர்த்தாவே, என்ஆன்மா தன்னையே -கர்த்தா
விடுவியும் என்றுநான் கெஞ்சினேன். கர்த்தர்
இடுக்கணழி மேன்கிருபை மேனார் -திடநீதி
யுள்ளவர்; நம்தேவன் சீரார் மனதுருக்க
முள்ளவர்; கள்ளமிலார்க் காப்பவர் -தள்ளாதார்
நான்மெலிந்தேன், சீரென்னை மீட்டாரே; என்ஆன்ம
மேன்கர்த்தர் சீருனக்கு நன்மைகள் -தான்செய்தார்
சீரதனால் நீயுன் இளைப்பாறு தல்லிற்கு
சீராய்த் திரும்பிடு; சீராரே -சீராக
என்ஆன்மா தன்னை மரணத்திற் கும்கண்ணை
என்கீழாம் கண்ணீர்க்கும் காலிடறா -தென்னைநீர்
தப்புவித்தீர் சீரவரே; நானோ திருமுன்னர்
தப்பித் துயிருள்ளோர் தேசத்தில் -தப்பிலாது
நான்நடப்பேன்; மேனாரை நம்பினேன், பேசுகிறேன்;
நான்மிகுதி யாய்வருந்தி, மாந்தரெலாம் -தான்பொய்யர்
என்றே மனக்கலக்கம் தன்னிலே சொன்னேன்நான்;
என்னத்தை நான்தருவேன் கர்த்தரவர் -என்சீர்க்குச்
செய்தநல் நன்மைகள் தன்னிற்கே? என்மீட்பால்
செய்வேன் துதியினது காணிக்கை -மெய்யவரின்
சீர்ப்பெயரை நானே தொழுதிடுவேன் கைத்தந்து
சீர்த்திருவின் மேன்மீட்பிற் காகவே -சீரார்க்கு
நேர்ந்திட்ட சீராம் பொருத்தனைகள் சீராரின்
நேர்மக்கள் முன்பாய் செலுத்துவேன்நான் -நேர்ச்சீரார்
கர்த்தரின் தூயர் மரணமோ சீரவராம்
கர்த்தரின் பார்வைக்கு மிக்கருமை; -கர்த்தாவே
நானோ உமதடியேன்; நானோ உமதடியாள்
மேனவளின் மைந்தனும், சீராமே -மேனாரின்
ஊழியனே; கட்டுக்கள் எந்தன் அவிழ்த்திட்டீர்;
ஊழியன்நான் என்துதியின் சீர்ப்பலி -தாழப்
அணிச்சீராம் சீர்ப்பெயரைத் தானே பணிவேன்;
அணிச்சீரார்க் கென்பலியை தன்னே -அணிமக்கள்
முன்பாக, நன்சீர் நகராம் எருசலேம்
முன்பாக, ஆலயத்தின் சீர்சுற்றில் -தன்னே
செலுத்துவேன் சீரவரே; அல்லெலூயா. என்றே
நலமாகப் பாடினார் பாட்டு
சங்கீதம் 116
சங்கீதம் எண் 117 மற்றும் சங்கீதம் 118
தேசத்து மக்களே எல்லாரும் கர்த்தரை
தேசமே நீங்கள் துதியுங்கள்; -பாசமிகு
தேசத்து மக்களே எல்லாரும் கர்த்தரை
பாசமாய்ப் போற்றுங்கள்; சீரவரின் -தேசம்மேல்
பாசமாம் கண்ணோட்டம் மிப்பெரிதே தேசமே
தேசமே கேள்நீயும் கர்த்தரின் -தீசிலே
மெய்யது என்றென்றும் உள்ளது; அல்லெலூயா;
மெய்யவரைப் பாடினார் பாட்டதை -மெய்யாரோ
நல்லவர்; கர்த்தரை நீர்த்துதியும்; சீரிரக்கம்
நல்லதாய் என்றென்றும் உள்ளதென -நல்லினம்
சொல்வராக; சீரிரக்கம் என்றென்றும் உள்ளதென
சொல்வராக ஆரோன் வழியவர் -சொல்வராக
கர்த்தரை அஞ்சுவோர் சீரிரக்கம் உள்ளவர்சீர்
கர்த்தரை என்நெருக்கத் தில்நானோ -கர்த்தாவே
என்றழைத்தேன் சீரை; செவிகேட்டு சீரருளி
என்னை பெரும்வெளியில் வைத்தாரே -என்கர்த்தர்
நானஞ்சேன், ஏனெனில் என்பக்கம் சீரிருக்க;
நானஞ்சேன், மாந்தனென்ன செய்வானோ -மானெனக்கு
நல்லுதவி செய்வோர் நடுவிலே கர்த்தரென்
நல்லவனென் பக்கம் இருக்கிறார் -அல்பகைக்கு
நீதி சரிகட்டு தல்களை காண்பேன்நான்;
நீதியார் சீராரை நம்புவதே -நீதியில்
மாந்தனை நம்புவதைக் காட்டிலும் சீராமே;
மாந்தன் தலைவரைப் பார்க்கிலும் -வேந்தராம்
கர்த்தரின் பேரில் சிறப்பாமே பற்றுதல்;
கர்த்தரின் பேரில்நான் சங்கரிப்பேன் -கர்த்தரெதிர்
வந்திடும் எல்லா இனத்தாரும் தான்வளைந்து
வந்தாரே சீரிலார்; சங்கரிப்பேன் -வந்தவரை;
தேனீக்கள் போல வளைந்துகொள் கின்றாரே
மேனவரே, முட்டீபோல் தீயணையும் -மேனவரின்
பேரில்நான் சங்கரிப்பேன் அல்லாரை; நான்விழ
சீரிலானே நீயென்னை தள்ளிட -சீரவர்
எந்தனுக்கு செய்தார் உதவிதனை; கர்த்தரே
எந்தனுக்கு மிப்பெலனும் என்பாட்டும் -எந்தனுக்கு
சீர்மீட்பும் ஆனவர்; நீதிமானின் கூடத்தில்
சீர்மீட்பின் சத்தம் பெருந்தொனி -சீர்ருண்டு
சீர்வலது சீர்க்கரம் கர்த்தரின் மேன்செய்யும்.
சீர்வலது சீர்க்கரம் கர்த்தரின் -சீர்ருயர்ந்தே
சீர்வலது சீர்க்கரம் கர்த்தரின் மேன்செய்யும்.
சீர்நானோ சாவாமல் கர்த்தரின் -சீர்ச்செய்கை
தன்னை விவரிப்பேன் நானெல்லாம். தண்டித்தார்
என்னை வெகுவாய், எனினும்சீர் -என்னை
மரணத்திற் கொப்புக் கொடுக்கவில்லை; சீர்நான்
வரத்திறவும் நீதியின் வாயில் -வருகைதந்து
கர்த்தரைத் நான்துதிப்பேன். நீதிமான்கள் வந்திடுவர்,
கர்த்தரின் வாயிலிது; சீரவராம் -கர்த்தாவே
நீரெனக்கு சீராய்ச் செவிகொடுத்து, என்மீட்பாய்
நீரிருந்த காரணத்தால் நான்துதிப்பேன். -சீரிலென
வீடுகட்டு வோராகா தென்றிங்கு தள்ளின
மாடக்கல் தானிங்கே மூலைக்கு -வீடுதலைக்
கல்லாயிற்(று). கர்த்தராலே ஆனதது; நம்கண்கள்
கல்லதை கண்ட வியனாமே -நல்லாரே
கர்த்தரவர் உண்டுசெய்த நாளிதிலே நாமெல்லாம்
கர்த்தருள் சீராய்க் களிமகிழ்வோம். -கர்த்தாவே,
மீட்டிடும்; கர்த்தாவே, வாய்த்திடச் செய்திடும்
நாட்டவர் செய்கைகள் தன்னைநீர்; -நாட்டாரே
சீர்க்கர்த்தர் சீர்ப்பெயரால் வந்திடும் சீரவர்
சீர்த்துதி பெற்றவர்; சீர்கர்த்தர் -சீர்க்கோவில்
தன்னினின்று வாழ்த்துகிறொம் உங்களை; கர்த்தவர்
நன்றாய் நமையொளிரச் செய்பவர் -அன்றியும்
பண்டிகைச் சீர்ப்பலியைக் கொண்டுபோய் பீடத்தில்
பண்டிகையில் கட்டுங்கள் சீர்க்கயிறால். -அண்டினேன்
நீரேயென் தேவன், உமைநான் துதிப்பேன்சீர்;
நீரேயென் தேவன், உயர்த்துவேன் -சீருமை.
கர்த்தரைச் சீரார் துதியுங்கள், நற்சீரார்;
கர்த்த ரிரக்கமென் றும்முளது கேள்மின்.
திருப்பாடல் பாடினார் சீரார் திருவைத்
சங்கீதம் 117
திருவிரண்டு பாடலால் ஆங்கு
மற்றும் சங்கீதம் 118
சங்கீதம் 119 எபிரேயுவில் ஆலெப் முதல் தவ் வரை முதலெழுத்து கொண்டு ஒவ்வொரு எழுத்திற்கும் எட்டு வசனங்களாக எழுதப்பட்ட சங்கீதம்.
கீழ்கண்ட எபிரேயு எழுத்துகளில் சொடுக்கினால்
119ம் திருப்பாடலில் அந்தப் பகுதியின் கலிவெண்பாவைப் படிக்கலாம்
אஆலெப்
בபேத்
גகிம்மேல்
ד டாலெத்
ה எ
ו வௌ
ז சாயீன்
ח கேத்
ט தேத்
י யோட்
כ கப்
ל லாமேட்
מ மேம்
נ நூன்
ס சாமெக்
ע ஆயின்
פ பே
צ த்சாடே
ק கோப்
ר ரேஷ்
ש ஷீன்
ת தௌ
அன்னவராம் ஆண்டவரின் வேதத்தின் சீர்ப்படி
அன்றாடம் சீர்நடப்போர் பேறுபெற்றோர் -மன்னவராம்
அன்னவரின் சான்றுகளைக் கைக்கொண்டு சீராராம்
அன்னவரை சீர்முழுதாய் நன்மனது -தன்தேடும்
அன்னவரே பேறுபெற்றோர்; நன்செய்வார் நீதியிலா
அன்செய்கை செய்வதில்லை; மன்னவரின் -நன்வழியில்
அன்னார் நடக்கிறாரே; உம்சீராம் கட்டளைகள்
அன்னவாநீர் கற்பித்தீர் கைக்கொள்ள -மன்னவா
அன்ன வராகயாம் சீர்க்கருத்தாய்ச் செய்யதந்தீர்;
அன்னவரே உம்நேமம் கைக்கொள்ள -நன்றீந்தீர்
அன்னவரே என்நடைகள் சீருறுதி நன்கொளயா
அன்சீராய்ச் செய்யும்சீர்; கற்பனைகள் -அன்சீர்நா
அன்நோக்கும் போதென்றும் நாணுவதில் நன்னேநா
அன்கற்கும் போதும்மின் நீதியும் -நன்நியாயம்
அன்னவா உம்மை துதிப்பேன்நான் மன்னனே
அன்னவரே உம்நேமம் கைக்கொள்வேன் -தன்னையே;
அன்னவரே முற்றிலும் கைவிடாதீர் நீர்சீரோய்
அன்னான் அகரத்தில் பா.
ஆலெப் א
சங்கீதம் 119 : 1-8
பண்படுத்தும் வாலிபன் தன்வழியை என்னத்தால்
பண்படுத்தித் தூய்ச்செய்வான்? சீரவரே -பண்படுத்தும்
பல்லாமே உம்சொற்கள் தன்னையவன் காப்பதால்
பல்சீராய்த் தூயாகச் செய்வானே -நல்லவரே
பற்றியுமை யென்மனதின் சீர்முழுதாய்த் தேடுகிறேன்,
பற்றா வழிதப்ப என்னையும் -கற்பனைகள்
பற்றுதலை விட்டுவிடா தேயும்சீர் நற்றவா.
பற்றியும் சொல்தனை என்மனதில் -பற்றினேன்நான்
பற்றாது நற்றவர் வன்னெதிராய் அற்றாது
பற்றிநான் பாவம்செய் யாதபடித் -பற்றினேன்சொல்;
பற்றிடவே எந்தனுக்கு உம்நேமம் நற்றவா
பற்றிநீர் போதியும் சீரும்மை, -நற்றுதிக்கப்
பட்டவர் நீர்சீரே; உம்சொல்லின் நற்றீர்ப்பு
பட்டெனயென் நன்வாய் விவரித்தேன். -நட்டவர்
பட்டவர் செல்வத்தால் செய்க்களிப்போல் திட்டமாய்
பட்டிலாட் சான்றுகளின் சீர்வழியில் -நட்களிப்பேன்;
பல்லாமே சீரவா, நல்லவரே பல்லாமே
பல்லாமே சீரும்மின் கட்டளைகள் -நல்லவனாய்
பற்றிநான் சீராய்த் தியானித்து கண்ணோக்கி
பற்றும்சீர் நேர்வழிகள் தன்னைக்காண் -நற்றவா
பற்றிடும் உம்நேமம் தன்னில் மகிழ்ந்துள்ளேன்
பற்றுமுன் சொல்மற வேன்
பேத் ב
சங்கீதம் 119 : 8-16
கர்த்தாவே சீராம் உமதுநல் வேதத்தில்
கர்த்தாவே நான்மகிழ்ச்சி யாயிருக்கேன்; -கர்த்தாவே
கண்டிக்கும் உம்சொல்லை நான்மறவேன்; உம்மடியேன்
கண்காண் எனக்குதவி யாயிரும் -மண்ணிலே
கர்த்தாவே நான்பிழைத்து உம்சொல்லை நான்சீராய்க்
கர்த்தாவே கைக்கொள்வேன்; சொல்லுந்தன் -கர்த்தாவே
கண்காணும் உம்வேதத் தில்லுள்ள மேன்வியன்கள்
கண்காண என்கண்கள் தன்னைநீர் -மண்ணெனக்கு
கண்களை நீர்ச்சீர்த் திறந்தருளும் சீரவரே;
கண்காணா வண்ணமாய் கட்டளைகள் -மண்மேலே
கர்த்தாவே நீர்மறையா தேயிரும்; பூமியிலே
கர்த்தாவே நானிங்கு நாடோடி -கர்த்தாவே
கண்டிக்கும் உம்நியாயம் மேலெந்தன் ஆன்மாவும்
கண்வைத்தே வாஞ்சையினால் தொய்ந்திடுதே -மண்ணாகக்
கற்பனைகள் விட்டுவில கிட்ட வழிதப்பிக்
கற்றறிந்தோர் அற்சொல் பெறுமாந்தர் -அற்றார்
கடிந்துகொள் கின்றீர்சீர்; நிந்தை யவச்சொல்
கடந்தகற்றும் சீரவா; சான்று -திடமாமே
கைக்கொள்ளு கின்றேனே உம்சான்றை நானிங்கு;
கைக்கூலி வைக்க அதிகாரர் -தாக்கிடவே
கர்த்தாவே பேசுகின்றார்; ஆனாலும் உம்சொல்லைக்
கர்த்தா தியானம்செய் கின்றேன்சீர் -கர்த்தா;
ககர வரிசையில் பாட்டு.
கிம்மேல் ג
சங்கீதம் 119 : 17-24
தேவனே என்ஆன்மா மண்ணோடு ஒட்டியுள;
தேவனே உம்சொற் படியென்னை -மேவியே
தேவா உயிர்ப்பியும். என்வழிகள் தன்னைநான்
தேவா உமக்கு விவரிக்க -மேவியே
தேவா எனக்குச் செவிகொடுத்தீர் சீரவா;
தேவனே நும்நேமம் தன்னையே -மேவியே
தேவனே கற்பியும். உம்கட் டளைகளின்
தேவ வழியை எனக்குத்தான் -மேவியே
தேவா உணர்த்தி யருளும்சீர்; அப்பொழுது
தேவா உமது வியன்களை -மேவியே
தேவனே நான்தியானம் செய்திடுன். துன்பத்தால்
தேவனே என்ஆன்மா போகிறதே -மேவியே
தேவா கரைந்துதான்; உம்சொல் படியென்னை
தேவா எடுத்(து)நிறுத்தும்; பொய்வழியை -ஏவியே
தேவா எனைவிட்டு நீர்விலக்கி; வேதமே
தேவனே உம்மினதை என்கையில் -மேவியே
தேவா அருள்செய்யும். மெய்வழியை நான்தெரிந்து
தேவா உமது நியாயங்கள் -மேவியே
தேவா எனக்குமுன்பாய் நான்நிறுத்தி னேன்சீராய்.
தேவா உமதுசீர் சான்றுகள்மேல் -மேவிபற்றி
தேவனே, கர்த்தாவே, என்னைநீர் வெட்கத்தில்
தேவனே உட்படப் பண்ணாதீர். -தேவனேசீர்,
தேவனே என்மனதை நீர்பரவச் செய்யும்போ
தேவனே, நானுமது கற்பனைகள் -மேவுவழி
தேவாநான் ஓடுவேன் சீராய் எனவங்கு
தேவன்பா டாலெத் எழுத்து
டாலெத் ד
சங்கீதம் 119 : 25-32
என்சீரே கர்த்தாவே, உம்பிர மாணங்கள்
என்வழியை நீரெனக்குக் கற்பியும்; -இங்கே
எனது முடிவுமட்டும் நானதைக் காப்பேன்.
எனக்கு உணர்வைநீர்த் தாரும்; -எனவே
எனக்களித்தால் அப்பொழுது நானுமது வேதம்
எனது மனதிலே பற்றி, -மனது
எனது முழுமையாய் கைக்கொள்வேன் நானே.
எனைநீர் உமதுடைய சீர்கற் -பனைப்பாதை
என்னை நடத்தும்; விருப்பமாக கற்பனையில்
என்னுள்ளே நானிருக் கின்றேனே -நன்மனது
என்னின் பொருளாசை யைச்சாரா மல்லுமது
என்றும்நற் சான்றுகளைச் சார்ந்திட -நன்செய்யும்.
என்கண்கள் மாயையைக் காணாத வண்ணமாய்
என்சீரே நீர்விலக்கி, உம்வழிகள் -தன்னிலே
என்னை உயிர்ப்பியும். நும்சீர்க்கு அஞ்சியேற்ற
என்றென்றும் சீராமே உம்வாக்கை -நன்றாக
என்மனதில் சீராய் உறுதிப் படுத்தும்சீர்.
என்மனதிற் கச்சத்தைத் தந்திடும் -நன்றிலா
என்நிந்தை தன்னை விலக்கி யருளும்சீர்;
என்சீரே உம்நியாயத் தீர்ப்புகள் -நன்றாமே
என்றென்றும்; உம்சீராம் கட்டளைகள் மீதிதோ
என்றும்நான் வாஞ்சையாய் உள்ளேனே. -நன்னவரே
என்னையும் நீதியால் தன்னே உயிர்ப்பியும்.
என்றே எமோனையில் பாட்டு.
எ ה
சங்கீதம் 119 : 33 - 40
வாக்குமதின் சீர்ப்படி கர்த்தாவே, நின்தயவும்
வாக்குமதின் மீட்புமெனக் கேவருவ -ஆக்கமில்
வாக்காலே நிந்திக்கும் மாந்தனுக்கு அப்போது
வாக்காலே நான்விடைச் சொல்லுவேன் -ஆக்கமாம்
வாக்குமதை நான்நம்பி யுள்ளேனே சீரவா;
வாக்குமெய் உம்முடைய நற்சொல்லே -நாக்கெந்தன்
வாக்குவாய் விட்டதை நீங்க விடாதேயும்;
வாக்கவரே, உம்நியாயத் தீர்ப்பிற்காய் -ஆக்கமாய்
வாக்கிற்காய் காத்துள்ளேன் சீரவா; வேதமாம்
வாக்குமதை என்றைக்கும் காத்திடுவேன் -வாக்கவரே
வாக்கைநான் எப்போதும்; உம்கட் டளைகளை
வாக்கன்நான் ஆராய் வதாலேதான் -ஆக்கமாம்
வாக்குபடி நற்பரந்த நன்னிலத்தில் நான்நடப்பேன்;
வாக்கால்நான் மன்னரின் முன்பாக -ஆக்கமாம்
வாக்கினது சான்றுகள் நன்குறித்து நான்பேசி
வாக்குரைப்பேன் சீரே; விரும்பியே -ஆக்கமாம்
வாக்குமது கற்பனைகள் பேரில் மனமகிழ்வை
வாக்கால் உரைப்பேன் மகிழ்ந்துநான் -வாக்கவரின்
வாக்காமே கற்பனைகள் தன்னிற்குக் கையெடுப்பேன்,
வாக்காம் பிரமாணங் கள்தியானம் -ஆக்கமாய்
வாக்கைநான் செய்திடுவேன்; சீராகப் பாடினார்
வௌ ו
வாக்கவரை வாமோனைப் பாட்டு
வௌ ו
சங்கீதம் 119 : 41 - 48
சீரவா நீரென்னை நம்பிடச் செய்திட்ட
சீரது வாக்கை உமதடியேன் -நேருக்காய்
சீரோய் நினைந்தருளும்; வாக்கே சிறுமையெந்தன்
சீராறு தல்லன்றோ; உம்வாக்கே -சீரென்னை
சீராய் உயிர்ப்பித் ததுநேராய்; சீரில்லா
சீயிகழும் மேட்டிமைக் காரரெனை -சீயென்றே
சீரிலாச் சொற்களால் பேசியும் நானுமது
சீரது வேதத்தை விட்(டு)விடாதே -சீரிருந்தேன்
சீரவரே, கர்த்தாவே, ஆதி முதலான
சீராம் உமது நியாயந்தீர்ச் -சீரவைச்
சீராமே நான்நினைத்து என்னைத்தான் தேற்றுகிறேன்;
சீரிலார் வன்வழியார் உம்வேதம் -சீரதை
சீரிலாது விட்(டு)விலக அச்சீரில் மாந்தரின்
சீரில் நிமித்தமாய் நான்நடுங்கி -சீரற்று
சீரிழந்தேன் சீரவரே; நாடோடி யென்றுநான்
சீரிலாதே தங்குமென் வீட்டிலே -சீராமே
சீரவரின் சீர்ப்பிர மாணங்கள் ஆயிற்றே
சீரான பாட்டாக நான்பாட; -காரிரவில்
சீரவரே கர்த்தாவே உம்பெயரை நான்நினைத்து
சீராமே உம்வேதம் தன்னைநான் -சீராகச்
சீரவரே நானேகைக் கொள்ளுகிறேன்; நானுமது
சீரானக் கட்டளைகள் தன்னைக்கைச் -சீராகச்
சீராண்நான் கைக்கொண்ட தாலேதான் எந்தனுக்கு
சீரிது கிட்டிற்று என்றேதான் -சீரவரும்
சீமோனை தன்னிலே பாட்டு
சாயீன் ז
சங்கீதம் 119 : 49 - 56
ஏகனே திருக்கர்த்தா நீரேயென் சீர்ப்பங்கு
ஏகனே உம்சொற்கள் தன்னையே -தேகத்தால்
ஏகனே கைக்கொள்வேன் நானென்றேன்; ஆகவே
ஏகமாய் சீர்மன தோடேநான் -ஆகுமுந்தன்
ஏகனே உம்தயவிற் காகவே கெஞ்சுகிறேன்;
ஏகனே உம்சொற் படியெனக்கு -ஏகமாய்
ஏகனே நீரிரங்கும். என்வழிகள் நானெண்ணி
ஏகனே உம்சான்று கள்தன்னின் -ஆகுநேராய்
ஏகமாய் என்கால்கள் தன்னைத் திருப்பினேன்;
ஏகனே, உம்சீராம் கற்பனைகள் -ஏகமாய்
ஏகனே கைக்கொள்ள தாமதியா தேநானும்
ஏகமாய்த் தீவிரித்தேன் சீரவா; -ஆகிலார்
ஏகமாய்க் கூடியெனைக் கொள்ளை யிடுவித்தும்
ஏகனே வேதம் மறக்கவில்லை -ஏகனே;
ஏகனே உம்நீதி சீர்த்தீர்ப்பு கள்நிமித்தம்
ஏகனே உம்மைத் துதித்திட -தாகமனம்
ஏக நடுயிரவில் நானெழுவேன் சீரவரே;
ஏகனே சீருமக்கு அஞ்சி -ஏகனே
ஏகி யுமதுசீர்க் கட்டளைகள் கைக்கொள்ளும்
ஏகுவோர் சீரனைவர் என்தோழர் -பூகுலம்
ஏகனே உம்கிருபை தன்னால் நிறைந்துளது;
ஏகனே உம்பிர மாணங்கள் -தாகமாய்
ஏகிநான் கேட்கிறேன், சீரோய் நீரெனக்கு
ஏகந்தீர் போதியும் நேர்
கேத் ח
சங்கீதம் 119 : 57 - 64
திருக்கர்த்தா, உம்சொற் படியும் அடியேன்
திருச்சீர் நடத்தினீர் நன்றாய். -திருவே
திருவாமே சீராம் நிதானிப்பை நீரே
திருவாய் மலர்ந்தெனக்குக் கற்பித் -தருளும்
திருவே உமதுசீர் கற்பனைகள் பேரில்
திருநானோ நம்புகின்றேன் சீரோய்; -திருவே
திருவுமை விட்டு வழிதப்பிச் சென்றேன்
திருவே அதனால் இடுக்கண் -தெரிந்தேன்;
திருச்சீரோய், இப்போதோ உம்சொல் தனைநான்
திருப்போலக் காக்கிறேன் சீராய் -திருவே
திருநன்மை செய்கிறவர்; சீருமது நற்சொல்
திருப்பிர மாணங்கள் கற்பித் -தருளும்;
திருவிலா மேட்டிமை உள்ளத்தோர் வன்னாய்த்
திருவே எனக்கெதிராய் பொய்கள் -அரவ
திருவிலார் தானே பிணைக்கிறார்; நானோ
திருவுமது கட்டளைகள் தன்னை -இரும்சீர்
திருமனது கைக்கொள்வேன் சீராய் -திருவே
திருவிலார் வன்மனம் பாரில் நிணத்தால்
திருவிலார் சீரில் கொழுத்தார் -திருவே
திருவுமது வேதத்தில் நானோ மகிழ்ந்தேன்;
திருவென எந்தன் இடுக்கண்கள் தன்னை
திருவே கருதுகிறேன்; ஏனோ -திருவே
திருவும் பிரமாணங் கள்தன்னை நானே
திருவாக்கக் கற்கிறேன் அந்நாள் -திருவே
திருவென மாந்தர்க் கருதும் திருப்பொன்
திருவெள்ளி மிக்காய்க் கொடுத்தும் -திருவே
திருநீர் விளம்பிய வேதம் எனக்குத்
திருவே நலமே எனச்சீர்த் -திருவை
திருத்தமாய் பாடினார் பாட்டு
தேத் ט
சங்கீதம் 119 : 65 - 72
யாவே, உமது கரங்களென்னை உண்டாக்கி,
யாவே எனையுரு வாக்கிற்று; -தேவனே
யாவே, உமதுசீர் கற்பனைகள் தன்னையே,
யாவே உணர்வுள்ளோ னாய்க்கற்க -தேவனே
யாவேசீர், ஆக்கும்நீர். உம்சொல்லிற் குக்காத்தேன்,
யாவே, அதனால் உமக்கஞ்சி -மேவுசீர்
யாவேயின் நேரடியார் கண்டென்னை தான்மகிழ்வர்.
யாவே, உமது நியாயமாய் -மேவுதீர்ப்பு
யாவேநீர் நீதியுள்ள தாமேநேர், உண்மைபடி
யாவே எனையிடுக்கண் ணில்லிட்டீர் -சீரவா,
யாவே உமது அடியேனுக் குக்கொடுத்த,
யாவே, உமதுடைய வாக்குபடி, -மேவியே
யாவே உமது கிருபை எனைத்தேற்றும்.
யாவே, பிழைக்கநான் உம்மிரக்கம் -மேவியே
யாவே எனக்குக் கிடைப்பதாக; உம்வேதம்
யாவே எனது மனமகிழ்ச்சி. -தேவையிலா
யாரவர் மேட்டிமைக் கொண்டவர்ப் பொய்களால்
யேயே எனயெனை கேடாக்க -தீயெண்ணம்
யார்ச்செய்ய, நாணிடட்டும் தீயெண்ணம் கொண்டோரே
யார்ச்சீரில்; நானோ உமதுநேர் -சீர்ராணை
யாவே தியானிப்பேன்; உம்மையஞ்சி உம்சான்றை,
யாவே இறைவா, அறிந்துள்ளோர் -மேவியே
யார்ச்சீரார் என்னண்டைத் தான்திரும்பு வாராக;
யார்முன்னும் நாணாத வண்ணமாய் -சீர்கர்த்தா
யாவே, உமது பிரமாணங் கள்தன்னில்,
யாவே, எனது மனம்உண்மை -மேவியே
யாவே, இருக்கட்டும் என்றே அவர்பாடு
யாவென்ற மோனையில் பாட்டு
யோட் י
சங்கீதம் 119 : 73 - 80
காப்பவரே, உம்மீட்பிற் காய்யெனது ஆத்துமா
காப்பவரே நின்று தவிக்கிறதே; -காப்பவரே
காத்திருக் கின்றேன் உமதுசீர் சொல்லிற்காய்;
காத்துகாத்து என்கண்கள் பூத்ததே -காத்ததால்
காப்பவரே எப்பொழுது நீர்தேற்று வீரென்றே ,
காப்பவரின் வாக்கின்மேல் நோக்கமாய் -காப்பவரே
காத்திருந்தேன் சீரவா; தீப்புகையில் வீழ்த்துருத்தி
காத்திடக் கூடுமோ, ஆனேன்போல் - காத்திருந்தே
காப்பவரின் சீராம் பிரமாணங் கள்தன்னை
காப்பவரே நான்மறவேன் சீரவரே; -காப்பவரே
காத்திருக்கும் உம்மடியேன் தன்னினது நாட்களோ,
காத்திட எம்மாத் திரம்கொல்லோ; -மேத்தாக
காத்திருப்போன் துன்ப, கொடுத்திடும் மக்கட்கு
காத்திருக்கும் நீரெப்போ தீர்ப்பீரோ -மேத்தவரே?
காத்திருந்தே உம்சீராம் வேதம் விரோதமாய்
காத்திருக்கும் மேட்டிமை வன்னாரோ -காத்திருந்தே
காத்திருக்கும் சீரெனக்கு வன்குழிகள் வெட்டினார்கள்.
காத்திடுவேன் உண்மையாம் கற்பனைகள் -காத்திருந்தே
காத்திருக்கும் என்னையோ துன்பப் படுத்துகிறார்;
காத்திருக்கும் சீராமே நீரெனக்கு -மேத்தவரே
காத்தே உதவிடும் சீரவா. பூவிலிரா
காத்திருக்கும் என்னை விரட்டினர் -காத்திருப்போன்
காத்திருந் தாலும் விடுத்தப்பி விட்டாலும்
காத்திருந் தாலும் உமதுசொல் -காத்திருக்கும்
காத்திருப்போன் விட்டு விடவில்லை சீரவரே;
காத்திருக்கும் என்னை உயிர்ப்பியும்; -மேத்தவரே
காப்பவரே நும்சீர் கிருபையினால் சீராக;
காப்பவரே, சீரோய் உயிர்ப்பித்தீர் -மேப்பாரில்
காத்திடுவேன் நும்வாக்கின் சீர்ச்சான்றை என்றென்றும்
காத்திருப்போன்; காமோனைப் பாட்டு
கப் כ
சங்கீதம் 119 : 81 - 88
நிலைத்துள்ள தேயும்சொல் வானங்கள் தன்னில்
நிலையாய் புவியிருக்கச் செய்தீர் -தலையாய்
நிலையுண்மை உம்மினது சீரிருக்கும்; நேமம்
இலன்நான் நிறைவேற்ற இந்நாள் -நிலையாய்
அலையாதே நிற்கிறது சீரவா; தேவா
இலாதே அழிந்திருப்பேன் வேதம் -இலனென்
நிலைமகிழ்வாய் இல்லா திருந்தால், வருத்தம்
இலனாக ஆக்கி யிருக்கும் -நிலையோய்
நலமாமே உம்சீராம் கட்டளைகள் தன்னை
இலன்நான் மறவேன் திருவே; -நலமாய்
நலம்பெற என்னை உயிர்ப்பித்தீர் நீர்தான்;
நிலையவரே நான்உம்மின் சொத்து; -நலமாய்
இலனெனை மீட்டிடும்; கட்டளைகள் உம்மின்
இலன்நானோ ஆராய் கிறேன்சீர்; -நிலையில்
நிலையிலார் வன்வழியார் என்னை யழிக்க
அலைக்காத்தார்; சான்றுகள் உம்மின் -இலன்நான்
நிலையென்றே எண்ணினேன் சீரவரே; எல்லா
நிலைமுழுதின் எல்கையைக் கண்டேன்; -நிலையாம்
நிலையவர் கற்பனையோ பேராம் திருவே
நிலையவரைப் பாட்டு நலம்.
லாமேட் ל
சங்கீதம் 119 : 89 - 96
மன்னா, உமது திருவேதம் தன்னிலே
மன்னா விரும்புகிறேன் மிக்காக -அன்னவரே
மண்மீது வேதமே என்தியானம் நாள்முழுதும்;
மண்மீது என்பகைஞர் தன்னிலும் -விண்ணவர்நீர்
மண்யென்னை ஞானமுள்ளோன் ஆக்குகிறீர் சீரவரே;
மண்மேலே கற்பனைகள் நன்னவாகைக் -கொண்டேன்நான்-
மண்மே லவையென்றும் என்னுடனே தானுளதே.
மண்வேளோய் நன்னவராம் சான்றுகள்மேல் -மண்யென்
மனதின் தியானமா யுள்ளபடி யாலே
மனதறிவு எல்லாரைப் பார்க்கின் -இனத்துள்ளே
மண்மேலே கற்றவரில் எல்லா ரிலும்மேலாய்;
மண்மேலே உம்சீராம் கட்டளைகள் -மண்யான்
மனமுழுதாய் கைக்கொண் டிருக்கும் படியால்
மனதறிவு மூப்பரைப் பார்க்கின் -இனத்துள்ளே
மண்மேலே ஞானமுள்ளோ னாயிருக் கின்றேன்நான்.
மண்மீது சொல்லைகாத்து நான்நடக்க -மண்வாழ்நான்
மன்னவரே பொல்லாத சீரில் வழிகட்கும்
மன்னவா என்கால்கள் நான்விலக்கு -கின்றேனே
மன்னவா நீரெனக்குக் கற்பிக்கும் சீர்ப்படியால்
மன்னவரின் சீர்நியாயம் விட்(டு)விலகேன் -என்நாவில்
மன்னவரே உம்சொற்கள் இன்னினிமை மிக்காமே;
மன்னவரே தேனைவிட சொல்லுமது -இன்னினிமை;
மன்னவரே நும்சீராம் கட்டளைகள் தன்னாலே
மன்னா உணர்வடைந்தேன்; ஆதலால் -என்காலை
மன்னவா எல்லா வழிப்பொய்கள் விட்டுத்தான்
மன்னவரே நான்வெறுத்தேன் நேரவா -அன்னவரே
மன்னா; மமோனையில் பாட்டு.
மேம் מ
சங்கீதம் 119 : 97 - 104
நின்சொல்லே என்கால்கள் தன்னின் ஒளிதீபம்
நின்சொல்லே பாதைக்கு சீர்வெளிச்சம் -நன்றாமே
நின்நீதி நன்நியாயம் காத்து நடந்தாணை
நன்றாக இட்டேன் நிறைவேற்ற -நன்றாமே;
நன்றிலாக் கேட்டாலே நான்வதைப் பட்டிட
நன்னவரே நின்சொல்லால் என்னைத்தான் -நன்னுயிர்த்து;
நன்றாமே என்வாயின் சீர்ப்பலிகள் நீரேற்று
நன்றாக உம்நியாயம் தன்னைகற்பித் -தன்னருளும்
நன்னவரே என்னுயிர் எப்பொழுதும் என்கையில்
நன்றாய் இருக்கிறது; ஆனாலும் -நன்னவரே
நன்றாமே உம்முடைய வேதத்தை நான்மறவேன்.
நன்றிலா வன்வழியார் வைத்தாரே -என்மறைவாய்
நன்றிலாக் கன்ணிகளை; ஆனாலும் சீரவரே
நின்கட் டளைகளை விட்டென்றும் -வன்னாக
நின்வழி தன்னை விலகேன்நான்; உம்சான்று
நன்றாமே என்வாழ்வின் நித்திய -நன்சொத்தாய்
நன்சான்றை வைத்தேன்நான்; சான்றவை என்மனதின்
நன்மகிழ்ச்சி; நன்றாய்க் கடைவரை -நன்னவரே
நின்பிர மாணங்கள் நன்படியே செய்யயென்
நன்மனதைச் சாய்த்தேன்நான் என்றங்கு -நன்றாய்
நமோனையில் பாடினார் பாட்டு.
சங்கீதம் 119 : 105 - 112
சாவிய வீணெண்ணங் கள்தன்னை நான்வெறுத்து
சாவாமை உள்ளவும் வேதத்தில் -மேவியே
சான்றோனாய் ஆக விரும்புகிறேன் சீரவரே;
சான்றாமும் சொல்லிற்குக் காத்துள்ளேன் -மேன்சீரோய்
சாகா திருக்கயெந்தன் கேடகமே, சீரவரே
சாகா திருமறைச் சீரிடமே -ஆகாதார்
சாகவே போம்மகன்று என்னைவிட்டுச் சீரிலார்;
சாகா தவனவர் கற்பனைகள் -ஏகியே
சாகா மலிருக்கக் கைக்கொள்வேன் சீரவா;
சாகா பிழைத்திருக்க சொற்படி -ஆகவே
சாகா தவனவர் ஆதரியும்; ஏகனே
சாகாது நம்பிக்கை அற்றிங்குப் -போகவே
சாகும் படியென்னை நாணத்திற் வேகவிடீர்
சாகாதச் சான்றவரே ஆதரியும்; -ஆகச்சீர்
சான்றோனாய் நான்மீட்கப் பட்டுத்தான், யானுமிங்கே
சான்றாம் பிரமாணங் கள்பேரில் -மேன்நோக்கம்
சான்றா யிருப்பேன்நான் சீர்வரே, சீராமே
சான்றாம் பிரமாணங் கள்தன்னே -ஏன்விட்டு
சாக விலகுவோரை நீர்மிதிப்பீர் சீரவரே;
சாகவே செய்தார்வீண் திட்டமவர் -ஆகவே
சாவர், அவரினது திட்டம் வெறும்பொய்யே.
சாவிடும் நீர்க்களிம்பு போலவே -சாவழியார்
சாக அகற்றி விடுகிறீரே; ஆகையால்
சாகாத உம்சான்று கள்தன்னில் -ஏகனே
சான்றாய்ப் பிரியப் படுகிறேன் சீரவரே.
சான்றவரே நும்சீர்க்கே அஞ்சிடும் -மேன்னச்சம்
சான்றெனது இன்னுடலும் சில்லென ஆனதே;
சான்றாமே நின்தீர்ப்பு கள்தன்னில் -மேன்சீரோய்
சான்றாம்நான் அஞ்சுகிறென் நேரவரே என்றங்கு
சான்றாக சாமோனைப் பாட்டு
சாமெக் ס
சங்கீதம் 119 : 113 - 120
ஐயா நியாயமும் நீதியும் செய்கிறேன்;
ஐயா எனையொடுக்கும் மக்கட்கு -வேயவரே
ஐயா எனையொப்புத் தந்திடா தேயும்நீர்.
ஐயா உமது அடியனுக்கு -சேயநன்னாய்
ஐயா திருநீர்த் துணைநில்லும்; மேட்டிமையோர்,
ஐயா, அவர்க்கையில் என்னைநீர் -சீயொடுக்க
ஐயாநீர் விட்டிடாதீர். சீர்மீட்பும் உம்நீதி
ஐயரே சொல்லிற்கும் காப்பதால் -ஆயவரே
ஐயாயென் கண்களும் பூத்தன; நும்மடியேன்
ஐயா, திருக்கிருபை சீர்ப்படியே -ஆயவரே
ஐயா நடத்திடும்; உம்சீர் பிரமாணம்
ஐயாநீர் கற்பியும் சீரவரே; -ஆயவரே
ஐயா அடியனுக் கும்சான்று சீரறிய
ஐயா உணர்வுள்ளோன் ஆக்குமே -ஆயவரே
ஐயா திருநீதிச் செய்திட வேளையிது;
ஐயா திருவிலார் மீறினார்கள் -தீயோரே;
ஐயா, அதனால்தான் பொன்னோ பசும்பொன்னோ
ஐயன்நான் மேனாய் விழையாது -ஆயவரே
ஐயாவும் சீர்கற் பனைகளில் என்றுமே
ஐயன் விரும்பினேன் சீரவரே -ஆயவரே
ஐயாநீர் தந்தருளும் எல்லாமே சீரென்றே
ஐயாநான் எண்ணியே நல்லிலா -வேயவழு
ஐயா வழிகளை நான்வெறுக் கின்றேன்சீர்;
ஐயரை ஐமோனைப் பாட்டு
ஆயின் ע
சங்கீதம் 119 : 121 - 128
பெரியவரின் சான்றுகள் சீர்வியன னன்றோ
பெரியவரே, என்னான்மா கைக்கொள் -திருவே;
பெரியவரே, உம்சொல்லின் சீர்நல் லொளியே;
பெரியவரே, அச்சொல்லால் பேதைத் -திருவாய்;
பெரியவரே, உம்கற் பனைவாஞ்சித் தேன்நான்,
பெரியவரே, ஆகையால் வாயைத் -திறந்தே
பெரியவரின் கற்பனைக்காய் ஏங்குகிறேன் சீரோய்;
பெரியவரின் சீர்ப்பெயரை அன்பாய் -திருச்செய்
பெரியவர் சீர்வழங்கும் நேர்ப்படியே என்னை
பெரியவர் நோக்கிப்பார்த் தேநீர் -இரங்கும்
பெரிதாம் திருச்சொல்லில் காலடிகள் எந்தன்
பெரியவரே, நன்னிலைச் செய்து -கரையில்
பெரியவரே, வன்னேதும் ஆள விடாதீர்;
பெரியவரே, மாந்தர்செய் வன்செய் -பிரித்தே
பெரியவரே, நன்விலக்கி சீர்விடு வித்தே
பெரியவரே, நீரருளும்; சீர்ச்சொல் -அருளோ
பெரிதாமே அப்போது காத்திடுவேன் சீராய்;
பெரியவரே, உம்மடியான் என்மேல் -திருச்சீர்
பெரிதே முகவொளியைக் காட்டிநீர் நின்சொல்
பெரியவரே, கற்பியும்; மாந்தர் -திரிந்தார்
பெரியவரே, காத்து நடவாதே வேதம்
பெரியவரே, இங்கதனால் கண்ணீர் -பெருக்காய்
பெருக்கெடுத்து ஓடுகின்ற தேகாணும்; என்றே
பெருச்சீர் பெமோனையில் பாட்டு
பே פ
சங்கீதம் 119 : 129 - 136
நீதிபரர் நீர்ச்சீரோய் கர்த்தாவே, தீர்ப்புகள்
நீதியும் செம்மையு மானவைகள். -வேதவரே
நீதியே நீர்க்கட்ட ளையிட்ட சான்றுகள்
நீதியவைச் பேர்மெய்யாம் சீரவரே -வேதர்சொல்
நீதியிலார் என்பகைஞர் நில்லா மறந்ததாலே
நீதியால் என்மனது தீயெரிந்தே -வேதவரே
நீதியாம் உம்சொல் புடமிடப் பட்டதாமே;
நீதியதில் உம்மடியேன் நன்விருப்பம்; -வேதவரே
நீரறிவீர் நான்சிறிய னாய்யாரும் பாராதே
நீரதுபோல் தானிருந்தா லும்மேநான் -சீரதாம்
நீதிபரர் கட்டளைகள் தன்னை மறவேனே;
நீதியும்மின் நித்திய நீதியே -வேதவரே
நீதிபரா, நின்வேதம் மெய்வேதம்; இக்கட்டும்
நீதியில் வன்நெருக்கம் வன்பிடித்தும் -வேதவரே
நீதியாம் உம்கற் பனைகள் மனமகிழ்ச்சி;
நீதியது உம்சான்றின் நிற்குமென்றும் -வேதவரே
நீதியால் என்னை உணர்வுள்ளோ னாக்கும்நீர்;
நீதியால் நான்பிழைப்பேன் அப்போது -வேதவரே
நீதி குறித்து இசைத்தாரே வேதவரின்
நீமோனைப் பாட்டினை கேள்.
த்சாடே צ
சங்கீதம் 119 : 137 - 144
கோனே உமைமுழுச் சீர்மனதாய் கூப்பிட்டேன்,
கோனே திருக்கர்த்தா, கேளுமே -மேனாமே
கோனும்மின் சீர்நேமம் கைக்கொள்வேன் சீரவரே;
கோனே உமையழைத்தேன்; மீட்டிடும் -மேனவரே;
கோனுமதின் சான்றுகள் காத்திடுவேன் அப்பொழுது;
கோனே உமதுசொல்லிற் காத்திருந்தேன் -மேனவரே
கோனே விடியலில் நானெழுந்து சத்தமிட்டேன்;
கோனே உமதுசொல்லை எண்ணிடவே -மேனவரே
கோனே, குறித்தநேரம் முன்பேயென் கண்களது
கோனே விழித்திடுதே சீரவரே; -மேனவரே
கோனே, கிருபையும்மின் சீர்ப்படி என்சத்தம்
கோனவர் நீர்கேளும் சீரவரே; -மேனவரே
கோன்சீரோய் கர்த்தாவே, உம்தீர்ப்பின் சீர்ப்படி
கோன்நீரே என்னை உயிர்ப்பியும். -மேனவரே,
கோனவரே, உம்வேதத் திற்தொலைவாய் தீவினையோர்
கோணலாக்கி கிட்டிவந் தேயுள்ளார்; -மேனவரே
கோன்சீரோய் கர்த்தாவே நீர்கிட்டி யுள்ளீரே;
கோன்னுமது கற்பனைகள் எல்லாமே -மேனுண்மை;
கோன்நீரே உம்சான்று கள்தன்னை என்றென்றும்
கோன்நீரே நின்றிட நாட்டினீர் -மேன்னென்றே
கோனவரே நான்நெடு நாளாகத் தானறிந்தேன்
கோனவரே; கோமோனைப் பாட்டு.
கோப் ק
சங்கீதம் 119 : 145 - 152
இறைவனே என்னிடுக்கண் தன்னைநீர் பார்த்து
இறைவா விடுவியும் சீரோய் -மறவேன்
இறைவனே உம்வேதம் தன்னைநான்; சீரோய்
இறைவனே நீரெனக்காய் தானே -சிறப்பாய்
இறங்கி வழக்காடி மீட்டிடும் சீராய்;
இறைவனே உம்சொல் படியே -சிறப்பாய்
இறையே உயிர்ப்பியும் என்னைநீர் சீரோய்;
இறைவா இரட்சிப்பு வன்னார் -அறனில்
இறைவா அவர்களோ உம்நேமம் தேடார்.
இறைவா இரக்கங்கள் உம்மில் -சிறப்பேர்
இறைவா, உமது நியாயங்கள் சீராம்
இறைவா உயிர்ப்பியும் என்னை -சிறப்பாய்;
இரக்கமிலார் வன்னாகத் துன்பப் படுத்த
இறைவா உமதுசான்றை நானோ -திருவே
இறைவா விலகேனே விட்டுநான்; சீராம்
இறைவன்சொல் காக்காத வன்னார் -கறையார்
இருப்பதை நான்கண்ட போதெனக்கு சீசீ;
இறைவாவும் கற்பனைகள் உம்மின் -விருப்பம்,
இறைவா கிருபையும்மின் சீர்ப்படி என்னை
இறைவா உயிர்ப்பியும்; சீரே; -சிறப்பாம்
இறைச்சொல் அதுமெய்யாம்; சீராமே நீதி
இறைநியாயம் நித்தியமே கேளென் -சிறப்பாய்
இறஇர மோனையில் பாட்டு.
ரேஷ் ר
சங்கீதம் 119 : 153 - 160
சீரிலார் மன்னர்கள் காரணமில் என்னையோ
சீரிலாது துன்பப் படுத்தினார்கள்; -சீரவரின்
சீர்ச்சொல்லிற் கேயென் மனதஞ்சு கின்றதே;
சீர்க்கண்ட போர்வீரன் போலவே -சீர்ச்சொல்லின்
சீர்ப்பேரில் நான்மகிழ் கின்றேன் திருச்சீரோய்;
சீரில்பொய் தன்னைப் பகைக்கிறேன் -நேரவரே
சீரில்பொய் தன்னை யருவருக் கின்றேன்நான்;
சீரவரின் வேதத்தை அன்புசெய் -சீராண்நான்
சீரவரே உம்நீதி நேமங்கள் சீர்நிமித்தம்
சீரவரே உம்மை துதித்தேனே -சீரேழு
சீர்முறை நாளொன்றில்; உம்வேதம் அன்புசெய்
சீர்மக்கள் சீர்மிக்காய் சீரமைதி -சீர்மக்கள்
சீரில் இடறாரே; சீரவா உம்மீட்பிற்
சீராண்நான் காத்திருந்து கற்பனைகள் -சீரும்மின்
சீர்ப்படி செய்கிறேன் நானே திருச்சீரோய்;
சீர்ச்சான்றாம் உம்மினதை என்ஆன்மா -சீர்க்காக்கும்;
சீர்சொற்கள் சீரவா சீராண்நான் அன்புசெய்;
சீர்நேராம் கட்டளைகள் உம்சான்றை -சீர்க்காத்து
சீராண் நடக்கிறேன்; என்வழி யெல்லாமெ
சீரவரே உம்முன்பாய் தானிருக்கே; -என்றவர்
சீமோனை தன்னிலே பாட்டு.
ஷீன் ש
சங்கீதம் 119 : 161 - 168
திருவே, திருவெனது கூக்குரல் உம்முன்;
திருவுமதுச் சொல்லின் படியே -திருவே
திருவாய் எனையுணர் வுள்ளோனாய் ஆக்கும்;
திருவெனது விண்ணப்பம் சீரார் -நனிமுன்
திருவே வரவம் திருச்சீர்த் திருச்சொல்
திருப்படி யென்னை விடுவித் -தருளும்.
திருவே, உமதுசீர் நேமங்கள் தன்னைத்
திருவே எனக்குநீர்க் கற்றுத் -தரும்போ
திருத்துதியை என்னுதடு செய்திடும் சீராய்;
திருவுமது கற்பனை எல்லாம் -திருவே
திருநீதி; ஆதலால், என்நாவு சொல்லை
திருச்சீரோய் சொல்லும் விவரித் -திரும்சீர்;
திருவே உமதுசீர்க் கட்டளைகள் தன்னைத்
திருவேநான் சீராய்த் தெரிந்தேன் -திருவே
திருக்கரம் சீரெனக்குச் சீர்த்துணையாய் சீராய்
திருவிருக் கட்டும் கரம்நின் -திருவே;
திருவே, உமதுசீர் மீட்பிலே ஆவல்
திருவாக நானிருக் கின்றேன்; -திருவே
திருவும்மின் சீர்வேதம் சீரென் மகிழ்ச்சி.
திருவே துதிக்கட்டும் உம்மைத் -திருவே
திருவவா என்தான்மா; உம்நியாயத் தீர்ப்பு
திருவெனக்கு சீருதவி செய்ய -திருச்சொல்;
திருவேநான் காணாமற் போன ஒருமே,
திருவே வழிதப்பி னேனே -திருவே,
திருவே எனைச்சீரோய்த் தேடுவீ ராக;
திருவுமது கற்பனைகள் தன்னை -தரையில்
திருவே மறவேனே நானென்றும் தானே;
திருவையவர் தௌபாட் டிசைத்து.
தௌ ת
சங்கீதம் 119 : 169-176
என்நெருக்கத் தில்திருவை நோக்கி யழைத்தேன்நான்;
என்சத்தத் திற்கு செவிகொடுத்தார். -வன்னுதட்டின்
பொய்கட்கும் சூதான நாவிற்கும் என்ஆன்மா
வெய்தென்னை தப்புவியும் சீரவா -வெய்ச்சூது
நாவே உனக்கென்ன இங்கே கிடைக்குமோ?
நாவே உனக்கென்ன செய்வது? -நாவுனக்கு
வல்லோனின் கூரம்பும் சூரைச் செடிகளை
அல்லழிக்கும் தீயும் வருமாமே -அல்லாது
மேசேக்கில் வாசம்செய் நாட்களும் போதுமே
தீசையாம் கேதாரின் கூடத்தில் -தேசத்தார்
அண்டி குடியிருந்த நாட்களும் போதுமே
மண்டி அமைதி பகைப்போரை -அண்டி
யெனதான்மா அங்கிருநாள் போதும் அமைதி
தனைநாடி நான்பேசும் போழ்தோ -இனிப்போர்
எனஆயத் தம்செய் கிறார்யேன் அறியேன்
எனப்பாடி னர்சீராய்ப் பாட்டு.
சங்கீதம் 120
ஆரோகண சங்கீதம்.
எனக்குதவி வந்திடும் மேன்மலைக்கு மேலாய்
எனதுகண் கள்நானே ஏறெடுப்பேன் சீரவா.
வானமும் பூமியும் உண்டுசெய்த சீர்கர்த்தர்
மேனா ரிடத்தி லிருந்தெனக்கு சீருதவி
தானே வருமே. உனதுகாலைத் தள்ளாட
மேனா ரவர்விடாரே; உன்னைச்சீர் காப்பவர்
மேனார் உறங்கிடாரே; சீரிசுரேல் காப்பவர்
மேனார் உறங்குவ தில்லையே கண்களை
மேனவர் மூடுகின்ற தும்மில்லை. கர்த்தரே
மேனவர் சீருன்னைக் காக்கிறவர்; கர்த்தரவர்
தானுன் வலப்பக்கம் இன்னிழலாய் நிற்கிறார்.
மேனிபடும் வெய்யிலோ, காரிரவின் திங்களோ
மேனவன் உன்னையோ சேதப் படுத்துவதில்.
மேனவர்க் கர்த்தருன்னை எல்லா விதத்தீங்கும்
மேனார் விலக்கியே காப்பார்; அவருந்தன்
மேனான ஆன்மாவைக் காப்பாரே; கர்த்தரே
மேனவன்உன் போக்கையும் உன்வரத்தை யும்சீராய்
மேனார் இதுமுதற் கொண்டெயென் றென்றைக்கும்
மேனவனே காப்பாரே என்றவன் பாடினான்
மேனவன் தாவீது ஆரோ கணமாக
மேனார் துதித்துட்டுப் பாட்டு.
சங்கீதம் 121
தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.
கர்த்தரின் ஆலயம் போவோம்நாம் வாருங்கள்
கர்த்த ரினமெனக்கு சொன்னபோது -கர்த்தரின்
ஆலயம் செல்ல மகிழ்ச்சியாய் நானிருந்தேன்.
ஆலாம் எருசலேமின், வாயிலிலே -மேலவராம்
எங்களின் கால்கள் நகரமே நின்றதே.
பங்குநகர் சீர்நகராம் இன்னிசை -தங்குமிடம்
என்றே எருசலேம் கட்டப்பட் டுள்ளது.
என்றும் இசுரெலின் சான்றாக -நன்கர்த்தர்
மக்களின் சீர்க்குடிகள் கர்த்தரின் சீர்ப்பெயரை
தக்க துதிப்பாடப் போகுமே. -தக்கநகர்
தன்னிலே தாவீதின் நன்வழியார் தன்னின்சீர்
நன்னரி சீரணையும் நன்செய்யும் -நன்நியாய
சீரிருக்கை கள்தானே வைக்கப்பட் டுள்ளது.
சீராம் எருசலேமின் நன்னமைதிச் -சீராக
வேண்டிடும் சீரவரே; நன்னகரை நேசித்து
வேண்டுவோர் இன்மகிழ்வாய் வாழட்டும் -வேண்டுமே
நின்மதிலுள் சீரமைதி நின்னரன் சீர்மனையுள்
என்றும் நலமிருக்கட் டும்சீராய்; -என்தமர்க்காய்
என்நண்பர்க் காயுன்னில் சீரமைதி நிற்கட்டும்
என்பேன்நான். எங்களின் தேவனாம் -என்கர்த்தர்
நன்சீராம் ஆலயத்தின் சீர்நிமித்தம் நானுனக்கு
நன்னகரே நன்மையுண் டாகவே -என்றுமே
தேடுவேன் என்றுதான் ஆரோ கணமாக
பாடினார் தாவீது பாட்டு.
சங்கீதம் 122
ஆரோகண சங்கீதம்.
பரத்திலே வாசம்செய் சீரவா, உம்சீர்
பரம்நோக்கி என்கண்கள் சீராய் -பரனேநான்
ஏறெடுக் கின்றேனே. வேலையாளின் கண்களோ
ஏறெடுத்துத் தங்கள் முதலாட் -கரத்தையே
நோக்கி யிருமாப்போல் எங்களின் தேவனை
நோக்கி எமக்கு இரக்கஞ்செய் -ஆக்கம்
வரைக்குமாய், எங்களின் கண்கள் அவரை
பரனையே நோக்கியுள் ளாமே. -பரனே
எமக்கு இரங்கும்சீர் கர்த்தாவே; மிக்காய்
அமைதியில் நிந்தனையால் உள்ளோம் -அமைதியாய்
வாழ்வோரின் நிந்தனையும், வன்புகழ்க் கொண்டோரின்
பாழ்ச்செய் இகழ்ச்சி யினாலும்தான் -வாழ்ந்திடும்
எங்களின் ஆன்மா மிகவும் நிறைந்துளது.
அங்கவர் பாடினார் பாட்டு.
சங்கீதம் 123
சங்கீதம் எண் 124
தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.
மனிதர் நமக்கு எதிராய் எழும்ப
நனிகர்த்தர் நம்பக்கம் இல்லென் -நனிகர்த்தர்
தாமே நமதினது பக்கத்தில் இல்லென்றால்,
வேமாச் சினம்நம்மேல் பற்றியெரித் -தீமையாய்
எம்மை உயிரோடே தான்விழுங்கி வன்செய்வர்.
நம்மேலே தண்ணீர்கள் பாய்ந்தங்கு -வெம்வெள்ளம்
ஆன்மாவின் மேல்பெருகி, கொந்தளிக்கும் நீர்தானே
ஆன்மாவின் மேல்புரண்டு போயிருக்கும் -மேன்னாடார்
சீரிசுரேல் இப்பொழுது சொல்வதாக. நம்மையவர்
சீரில்லார் பற்களுக்கு வன்னிரையாய் -சீரற்று
ஒப்புக் கொடாதிருக்கும் கர்த்தருக்கு என்துதி.
தப்பித்தே கண்ணிவிட்ட சீர்க்குருவி -யைப்போல
நம்ஆன்மா தப்பிற்று, கண்ணி தெறித்தது,
அம்தப்பி னோமே. புவிவிண்ணை -அம்படைத்த
கர்த்தரின் சீர்ப்பெயரில் உள்ளது நன்னுதவி;
கர்த்தரை பாடினார் பாட்டு.
சங்கீதம் 124
சங்கீதம் எண் 125
ஆரோகண சங்கீதம்.
திருகர்த்தர் நம்புவோர் என்றென் றசையா
திருநிலைத்தே சீரிருக்கும் சீயோன் -திருமலைப்போல்
சீரார் இருப்பார். மலைகள் எருசலெமைத்
சீராய் யிருச்சுற்றும் போல்சீரார் -சீராய்
இதுமுதல் என்றென்றும் தம்மக்கள் சுற்றி
விதம்கர்த்தர் நின்றிடுவார். நீதி -விதஞ்செய்வோர்
தங்களின் கைகளை தீதாக நீட்டாதே
தங்கிட, தீயோர் கொடுங்கோலோ -மங்காத
நீதிமான் காணிமேல் நில்லாதே; நல்லவர்
நீதியுள்ளோர் சீர்மனதில் செம்மையானோர் -நீதிநன்மை
செய்யும்சீர். தன்கோணல் சீரில் வழிகட்கு
வெய்ச்சாயும் வன்னவரைக் கர்த்தரவர் -வெய்யூழ
லாரோடு போயென்றார்; சீரார் இசுரெலுக்கோ
சீரமைதி உண்டிங்கு; கேள்
சங்கீதம் 125
சங்கீதம் எண் 126
ஆரோகண சங்கீதம்.
சீயோன் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போ,
வேயார் கனாக்காணும் மக்கள்போல் -ஆயே
இருந்தோம்யாம். அப்பொழுது நம்வாய் நகைப்பால்,
திருநிறை நம்நாவு நன்றாய்த் -திருமகிழ்ந்து
தானே நிறைந்ததே; கர்த்தர் இவர்களுக்கு
மேனார்ப் பெரியச் செயல்களை -மேனவர்ச்
செய்தா ரெனப்புற மக்களுள்ளே சொன்னார்கள்.
செய்தார் பெருஞ்செயல்கள் நன்றாக -மெய்யவர்
நாம்மகிழ்ந் துள்ளோம் அதனாலே. கர்த்தாவே
ஆம்தெற்கில் வெள்ளந் திருப்புமாப் -போம்போல
எங்கள் சிறையிருப்பைச் சீரோய்த் திருப்பும்நீர்.
இங்கே நிலத்தில் அழுதுதான் -இங்கேதான்
சீராக மேன்மையாய் நெல்லறுப்பர்; அள்ளியே
சீர்நெல்லைத் தூவிடச் செல்பவன் -ஏர்தன்னில்
தானழுதுச் செல்கிறான்; ஆனாலும் தானறுத்த
மேனாம் கதிர்களை தான்சுமந்து -மேனவன்
வந்திடும் போதோ அவன்சிரித்து ஆர்பரித்து
வந்திடுவான் நன்மகிழ்ந்தே தான்.
சங்கீதம் 126
திருக்கர்த்தர் வீட்டையவர் கட்டாரா கில்லோ,
பிரயாசப் பட்டுகட்டு வீணே; -திருக்கர்த்தர்
சீர்நகரைக் காவாரா கில்காவல் கண்விழித்தல்
சீர்ரில்வீண். நீங்கள் விடியலில் -நேர்ரெழுந்து,
நேரப் படவேலை தன்னில் தரித்துநீர்,
சீரில் வருத்தத்தின் அப்பத்தைச் -நேருணவும்
வீணே; அவரே தமக்குப் பிரியமான
ஆணிற்குத் தூக்க மளிக்கிறார். -மாணவர்
பிள்ளைகள் கர்த்தரால் வந்திடும் சொத்தாமே;
பிள்ளைகள் கர்ப்பக் கனியவரால் -அள்ளுபலன்
பிள்ளை இளைய வயதிலே அம்பொப்பு
பிள்ளையெனும் அம்பாலே தூணியை -அள்ளிட்டே
சீர்நிரப்பும் மாந்தனவன் பேறுபெற்றோன்; நாணிடாதே
சீர்மக்கள் ஆங்கே ஒலிமுகச் -சீர்வாயில்
தன்னிலே வன்பகைஞர் தன்னோடே பேசுவார்கள்
என்றுபாட்டை சாலொமோன் பாடு.
சங்கீதம் 127
அஞ்சியே கர்த்தரின் சீர்வழி கள்தன்னில்
அஞ்சி நடக்கிறவன் பேறுபெற்றோன்; -அஞ்சியோன்
உன்கைகள் தன்னின் பலனைநீ உண்பாயே;
உன்வாழ்வில் நற்பேறும் உண்டாமே - நன்றாக
உன்மனைவி உன்வீட்டோ ரங்களில் நற்கனிகள்
நன்றாய்த் தரும்திராட்சைச் சீர்க்கொடிப்போல் -என்றும்
இருப்பாள்; வழியாருன் பந்தியைச் சுற்றி
திருஒலிவ நன்மரக் கன்றாய் -இருப்பர்.
இதோயிங்கே, கர்த்தருக்கு அஞ்சும் மனிதன்
யிதோவாழ்த்தைப் பெற்றிடு வானே - மதில்நிறை
சீயோ னிலிருந்து கர்த்தருன்னை வாழ்த்துவார்;
சேயோன் உயிருள்ள நாளெல்லாம் -சீயோன்
எருசலெமின் வாழ்வைநீ கண்டிடுவாய். நீயுன்
திருவழியார் சேர்த்து இரண்டாம் -திருவழிக்கு
உண்டாகும் சீரமைதி தன்னைநீ கண்டிடுவாய்.
என்றவர் பாடினார் பாட்டு
சங்கீதம் 128
எந்தன் சிறுவயது தன்முதலாய் என்னைத்தான்
அந்தோ நெருக்கினார்கள். ஆனாலும் -அந்நாளில்
என்னைமேற் கொள்ளாமற் போனார்கள். ஏருழ
என்முதுகின் மேல்உழுது, தங்களின் -நன்படைச்சால்
தன்னையவர் நீளமாக்கி னார்கள் கறையவர்;
நன்கர்த்தர் நீதியுள்ளார்; வன்வழியார் -தன்கயிற்றை
சீரவர் தானறுத்தார் என்றிசுரேல் இப்பொழுது
சீராகச் சொல்வதாக. சீயோனைச் சீரின்றி
வன்பகைக்கும் யாவரும் வெட்கியே பின்னிட்டுத்
தன்திரும்பட் டும்மவரே. வீட்டின்மேல் -இன்னா
முளைத்திடும் புல்லுக்(கு) அவர்களொப்பா கட்டும்;
முளைத்து வளருமுன் புல்லே -உலர்ந்திடும்.
அப்புல்லால் கைவெறுமை, எப்பயனும் இல்லையே.
எப்போதும் கர்த்தரின் சீர்வாழ்த்து -தப்பாதே
உங்களுக்கு உண்டா வதாகவே; கர்த்தரின்
மங்காத சீர்ப்பெயரால் உங்களை -இங்கேதான்
வாழ்த்துகிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதில்லை.
வாழ்ச்சீரார் பாடினார் பாட்டு
சங்கீதம் 129
கர்த்தாவே, ஆழங் களிலிருந்து உம்மையே
கர்த்தாவே நோக்கிக் அழைக்கிறேன். -கர்த்தாவே,
ஆண்டவரே, என்சத்தத் தைக்கேளும்; உம்செவிகள்
ஆண்டவரே என்சீராம் விண்ணப்பம் -மாண்சீரோய்
சீர்திறவும் சீரவரே தன்னே கவனிக்க;
சீர்கர்த்தா, நீர்ஊழல் தன்னையே -சீரவரே
உற்று கவனித்தே நின்றாலோ, யார்நிலைப்பான்,
நற்றவரே ஆண்டவரே. அஞ்சிடவே -நற்றாமே
உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. திருநானோ
நும்சீர்க்காய் காத்திருக் கின்றேனே; -அம்மெனது
நன்னான்மா காத்துளது; சீரவரின் சொல்தன்னை
நன்றாக நம்பியுள்ளேன். எப்பொழுது -தன்னே
விடியுமென்று காலை எதிர்நோக்கும் காவல்
அடியவன்போல் என்னான்மா தானே -மிடியாக
ஆண்டவர்க்குக் காத்துளது. சீரிசுரேல் கர்த்தராம்
ஆண்டவரை நம்பி யிருப்பதாக -ஆண்டவர்
சீரவர் சீர்க்கிருபை சேர்த்தே திரளாகச்
சீராக மீட்பும் உளதாமே; -சீரவரே
சீரினமாம் சீரிசுரேல் தன்னையதின் சீரற்ற
சீரின்மை எல்லாமே விட்டுமீட்பார் -சீரவரே
என்றங்குப் பாடினார் பாட்டு.
சங்கீதம் 130
தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.
கர்த்தாவே, இல்லை இறுமாப்பென் உள்ளத்தில்,
கர்த்தாவே என்கண்கள் பாருமே -கர்த்தாவே
மேட்டிமை யுள்ளவை யல்ல; பெரியசெய்கை
மேட்டாக மிஞ்சினச் செய்கையிலும் -நாட்டான்நான்
ஆங்கே தலையிடுவ தில்லையே. இங்கேநான்
பாங்காக தாயின் முலைப்பாலை -ஏங்கு
மறந்த குழந்தையைப் போலநானோ ஆன்மா
சிறப்பாய் அடக்கி அமர -இருத்தினேனே
என்ஆன்மா பால்மறந்த பிள்ளையைப்போல் தானிருக்கே.
என்றும் இதுமுதல் சீரிசுரேல் -நன்கர்த்தர்
தன்னையே நம்பி யிருப்பதாக என்றேதான்
நன்கர்த்தர் தன்னையினம் நம்பிட -அன்னவன்
தாவீது பாடினான் ஆரோ கணமாக
மேவி இசைத்தானே பாட்டு.
சங்கீதம் 131
கர்த்தாவே தாவீதை யும்மவனின் பாடுகளைக்
கர்த்தாவே நீர்நினைப்பீர் சீரவரே -கர்த்தருக்கு
ஓரிடத்தை வாசம்செய் சீரிடம் செய்வரை
சீரவன் வீட்டுள்ளோ கூடாரம் -நேருள்ளோ
போவதில்லை; என்கண்கள் மூடிடவே கட்டில்மேல்
போவதில்லை ஏறியிங்கு கண்ணிமையும் -போவதில்லை
மூடியிங்கு என்றாணை சீரார்முன் கோனவன்
ஆடவன் செய்தான் பொருத்தனை -மாடமாம்
எப்பிராத்தா வில்செய்தி தன்னைக்கேள் காட்டிலே
அப்பாலை தன்னிலே கண்டோம்நாம் -தப்பாது
சீரவரின் வாசம்செய் வீடுள்ளே போய்நாமே
சீரவரின் பாதம் பணிந்திடுவோம் -சீரவரே
உம்வலி தான்விளங்கும் பெட்டியுடன் சீரெழுவீர்
உம்குருவார் நீதியை தானுடுத்தி -உம்தூயர்
ஆர்பரிப்பர்; நீர்நெய்ச் சொரிந்தான் முகத்தையும்
நேர்தாசன் தாவீதின் பட்சமாய் -நேர்மாந்தன்
சீர்நீர் புறக்கணியா தேயும்நீர் சீரவரே
சீர்மன்னர் ஆவர் வழியாருன் -சீர்நேராய்
சீர்மகனின் பிள்ளைக் கனியவர் உன்னணைமேல்
சீர்நேமம் காத்து நடந்தாலே -சீர்நேரார்
நேர்மகன் தன்னிற்கு மெய்யாக ஆணையிட்டார்
நேர்தவறார்; கர்த்தரவர் சீயோனைத் -தேர்ந்து
அதுதமக்கு வாசம் திருவில்லம் ஆக
அதைவிரும்பி னார்சீரார்; என்றும் -இதுதானே
இங்கே வசிப்பேன்; அதின்சோற்றை வாழ்த்திட்டு
அங்கே எளியேழை கட்சோறு -அங்கே
அளித்திடுவேன்; ஆசரியர் தன்னிற்கு சீராய்
களிப்பாமே மீட்பை உடுத்த -களிநகரில்
தூயர் மிகவுமாய் ஆர்ப்பரிப்பர் சீராக
தூயனாம் தாவீதிற் காகவொரு -தூய்க்கொம்பை
தூயவர் நெய்ச்சொரிந்த மன்னனிற்காய் தூயர்நான்
தூய்விளக்கை ஆயத்தம் செய்தேன்நேர் -தூய்ச்சேய்
விளக்கவன் சீரில் பகைவர்க்கு நாணம்
அளிப்பேன் உடுப்பாக; சீராண் -வெளித்தலையில்
மெய்ப்பூக்கும் சீராய் முடிதன்னே சீரவர்தான்
மெய்ச்சொல் இதுதானே கேள்
சங்கீதம் 132
இதோநற் றமரொன்றாய் வாசம்செய் கின்ற
ததுயெத் தனைநன்மை இன்ப -மதுசீர்?
அதுஆரோன் நன்சிரமேல் ஊற்றியதும், நற்றாண்
அதுமுகம் மேன்மயிர்மேல் ஓடும் -இதநெய்போல்
தானிருக்கும் நன்னுடுப்பில் மேல்சீராம் தைலமாம்
மேனிருக்கும் எர்மோன்மேல் சீயோன்மேல் -மேனிறங்கும்
சீர்பனிக்கும் ஒப்பா யிருக்கிறது; அங்கேதான்
சீர்கர்த்தர் என்றென்றும் வாழ்த்தையும் -சீர்ருயிரும்
கட்டளைச் செய்கிறார் சீர்கர்த்தர். காணிதோ
நட்டவரே காரிருள்சூழ் நள்ளிரவில் -நட்டவரே
தேவனின் ஆலயத்தில் நிற்கும்சீர் ஊழியரே
தேவனின், நீங்கள் அனைவரும் -மேவி
திருக்கர்த்தர் தன்னை துதியுங்கள்; இங்கள்
கரங்களைத் தூயிடம் நேராய் -கரந்தூக்கி
கர்த்தரை நீர்த்துதியும் சீர்மக்காள்; விண்மண்ணை
கர்த்தரவர் உண்டாக் கியச்சீரார் -கர்த்தரே
சீயோனி னின்று துதித்திடும் நேராக
ஆயவரை என்றும் சிறந்து.
சங்கீதம் 133, சங்கீதம் 134
அல்லெலூயா, கர்த்தரின் சீர்ப்பெயரை நீர்த்துதியும்;
நல்லவராம் கர்த்தரின் ஊழியரே, -நல்லவரைச்
சீர்துதியும். கர்த்தரின் வீட்டிலும், தேவனின்
சீர்க்கோவில் சுற்றிலும் நிற்போரே -சீர்கர்த்தர்
தன்னைத் துதியுங்கள். கர்த்தரவர் நல்லவர்;
தன்னே அவர்பெயரை நீரிசைத்து -நன்றாகப்
பாடுங்கள்; சீர்ப்பெயரின் சீரிசை இன்பமாமே.
நாடிதாம் யாக்கோபை சீரினத்தை -தேடியே
தேர்ந்தாரே சொந்தமாக; கர்த்தர் பெரியவர்
சீர்ரென்றும், நம்முடைய ஆண்டவர் -சீர்மேலாய்
மேலா னவரென் றறிவேன்நான். விண்ணது
மேலாமே, பூமியில் சீரவரோ -மேலாழம்
எல்லா இடத்திலும் தன்சித்தம் எல்லாமே
நல்லவர் செய்கிறார் சீரவரே; -அல்லிடத்தில்
விண்முகில்கள், காற்றை களஞ்சியங்கள் தன்னினது
விண்ணவர் விட்டு புறப்படவே -மண்மீது
செய்கின்றார், விண்மழை யோடு ஒளிமின்னல்
செய்தவர் உண்டாக்கி நன்றாகச் -செய்விட்டார்;
மேனாட்டில் மாந்தர் தலைப்பிள்ளை தான்சேர்த்து
மேனாட்டின் வாழ்விலங்கின் முன்னீற்றை -தானடித்தார்;
மேனாடே உன்நடுவில் பார்வோன் அரசன்மேல்
மேனென்றே எண்ணிய ஊழியர்மேல் -மேனார்
அடையாளங் கள்வியன்கள் கைவிட் டனுப்பி
அடித்தாரே பற்பல்லோர், மன்னர் -அடித்தார்
எமோரி அரசனாம் சீகோனை, பாசான்
அமையரசன் ஓகையும், கானான் -அமைந்த
அரசரெலாம் சீரார் அழித்து, நிலத்தை
திருமக்கள் சொந்தமெனத் தந்தார் -திருக்கர்த்தர்;
கர்த்தாவே, உம்பெயர் என்றைக்கும் முள்ளது;
கர்த்தாவே, உம்புகழோ மேன்வழியார் -கர்த்தா
தலைமுறைக்கும் தானிருக்கும். கர்த்தர்தம் மக்கள்
நிலைநியாயம் தான்கேட்டி, தம்மின் -நலமான
ஊழ்ழியர்மேல் தானிரங்கு வாரேசீர். மாண்பிலார்
தாழ்ச்சிலைகள் வெள்ளிபொன் தானவை -ஊழ்வேலை
தானவையே; வாயிருந்தும் பேசாது, கண்ணிருந்தும்
தானவைக் காணாதே; காதிருந்தும் -தானவைக்
கேளாதே உள்ளுயிர் மூச்சில்லா வெற்றாமே
ஆளவர்கள் செய்பவரும் நம்புவோரும் -கேளாரே
காணாரே, பேசாரே தானவைப் போலவே
மாணினமே, சீரிசுரேல், ஆரோனின் -மாணவழி
லேவி வழியாரே, கர்த்தருக்கு அஞ்சியோரே
மேவியே கர்த்தரை நீர்த்துதியும் -மேவூர்
எருசலேமில் வாசம்செய் கர்த்தருக்கு சீயோன்
திருவினின்று சீர்த்துதி ஆகத் -திருவவர்
அல்லெலூயா பாடினார் பாட்டு.
சங்கீதம் 135
கர்த்தரை நீர்த்துதியும்; சீரவர் நல்லவர்,
கர்த்தரின் சீர்க்கிருபை உள்ளதென்றும். -கர்த்தரவர்
தேவாதி தேவனை நீர்த்துதியும்; சீரவர்
மேவு கிருபை உளதென்றும். -தேவனாம்
கர்த்தாதி கர்த்தரைத் நீர்துதியும்; சீரவர்
கர்த்தர் கிருபை உளதென்றும். -கர்த்தர்
ஒருவராய் மிப்பெரிய மேன்வியன் செய்யும்
பெரியவரை நீர்த்துதியும்; சீரார் -பெரியவரின்
சீர்க்கிருபை என்று முளதாமே. விண்ணையவர்
சீர்ஞானம் கொண்டுசெய்த சீரவரை -நீர்த்துதியும்
நேர்ச்சீரார் சீர்க்கிருபை என்று முளதாமே.
நீர்மேலே பூமியை தான்பரப்பி -சீர்வைத்தச்
சீரவரை நீர்துதியும்; சீர்க்கிருபை என்றுமுள.
சீராய்ப் பெரியவொளித் தந்திடும் -சீராமே
ஞாயிறொடு திங்களை உண்டுசெய்தச் நீர்த்துதியும்;
ஆயவரின் சீர்க்கிருபை உள்ளதென்றும். -ஞாயிறை
காலையிலே ஆளப் படைத்தவரை நீர்த்துதியும்
மேலவரின் சீர்க்கிருபை உள்ளதென்றும்; -மேலே
இரவிலே ஆளவே திங்களொடு விண்மீன்
திரளாய்ப் படைத்தார்த் துதியும்; -கிருபையவ்ர்
என்றுமே உள்ளது. மேனாடாம் கீழெகிப்தில்
அன்னார் தலைச்சன்கள் கொன்றாரே -நன்றியொடு
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
சீர்மக்கள் சீரினத்தை விட்டுவரச் -சீர்ச்செய்தார்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
சேர்த்தோளால் சீர்க்கையால் செய்தாரே -சீர்கர்த்தர்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
நீர்க்கடலாம் செங்கடலை ஈராக -நீர்ப்பிரித்தார்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
நீர்நடுவே சீரினத்தார் தான்கடக்க -சீர்வைத்தார்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
சீர்ரிலான் பார்வோனை சேனைகள் -ஆர்ச்சேர்த்தே
நீர்க்கடலில் தான்கழித்தார் சீராரே அன்றுதான்,
நீர்த்துதியும் சீர்க்கிருபை உள்ளதென்றும். -சீர்மக்கள்
தன்னையே பாலையில் கொண்டுவந்தார் சீராக
அன்னவரை நீர்த்துதியும் உள்ளதென்றும் -நன்கிருபை.
மன்னர்கள் பேரரசர் கொன்றவரை நீர்த்துதியும்
நன்னவரின் நன்கிருபை உள்ளதென்றும்; -நன்புகழ்வாழ்
மன்னர்கள் பேரரசர் விட்டழித்தார் நீர்த்துதியும்
நன்னவரின் நன்கிருபை உள்ளதென்றும்; -அன்றியும்
ஏம்மோரி மன்னனாம் சீகோனை விட்டழித்தார்
ஆம்மவரை நீர்த்துதியும்; உள்ளதென்றும் -ஆம்கிருபை
பாசானின் மன்னனாம் ஓகை அழித்தவரைத்
தேசத்தார் நீர்த்துதியும்; உள்ளதென்றும் -தேசம்மேல்
சீர்க்கிருபை. சீரினத்தின் சொந்தமாக தேசமதை
நேர்த்தந்த சீரவரை நீர்த்துதியும் -சீர்கர்த்தர்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
நேர்தாசன் சீரிசுரேல் சொந்தமாக -சீர்த்தந்தார்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
சீர்ரில்லா தாழ்வில் நினைத்தாரே -சீர்க்கர்த்தர்
நீர்த்துதியும் சீர்க்கிருபை என்றுமே உள்ளது.
பார்தன்னில் நம்பகைஞர் கைவிட்டு -சீர்தன்னே
நம்மை விடுதலைச் செய்தாரே நீர்த்துதியும்
அம்கிருபை என்றுமே உள்ளது. -அம்மானே
எல்லா உயிர்கட்கும் ஊணளிப் பவர்த்துதியும்;
நல்லார்த் கிருபை உளதென்றும்.-நல்லவராம்
விண்ணகத்தின் தேவனை நீர்த்துதியும்; சீர்க்கிருபை
விண்ணவரின் என்று முளது.
சங்கீதம் 136
ஆறுகள் தன்னருகே பாபிலோனில் யாமமர்ந்து
பாறைமலை சீயோனை யாம்நினைத் -தேறழ
எங்கள்சீர் கின்னரமும் வீணையையும் தூக்கியாம்
அங்கிரு நல்லலறி மேல்வைத்தோம். -எங்களை
வன்னாய்ச் சிறைபிடித்த மாந்தரவர்க் அங்கெமது
நன்பாடல் தன்னையும் சீயோனின் -நன்பாடல்
தன்னையும் எங்களை பாழாக்கி யோர்ரிசை
தன்னை விரும்பியே பாடுமென்றார் -வன்னன்றோ!
கர்த்தரின் பாட்டையாம் அந்நிய தேசத்தில்
கர்த்தரினம் நாங்களங்கு பாடுவ தெப்படி?
சீர்ரூர் எருசலேமே, நான்உன்னை தான்மறந்தால்
சீர்விட்டு என்வலக்கை தன்தொழிலை -பார்மறக்கும்.
நான்உன்னை தானினையா தேயிருந்து சீர்நகரே
மேன்னெருச லேமையென் முன்மகிழ்ச்சி -மேன்னிலும்
மேன்பேராய் எண்ணா மலும்போனால், என்நாவு
தான்னெனது மேல்வாயோ டேயொட்டித் -தான்போவ.
கர்த்தாவே, சீர்ருர் எருசலேமின் நாளில்நீர்
கர்த்தாவே, ஏதோமின் வன்வழியார் -கர்த்தா
நினையும்நீர்; வன்னார்: அதையிடித்துப் போடும்,
மனையடிக்கல் மட்டும் இடித்து -வினைசெய்யச்
சொன்னார் களேசீரில். பாபிலோன் வன்பெண்ணே
மேன்னில்லா பாழாகப் போகிற -மேன்னில்லூர்
நீயெமக்குச் செய்த படியுனக்குத் தான்செய்யும்
வேயவன் பேறுபெற்றோன். உன்பிள்ளை -வேயாரே
தான்பிடித்து, கல்லின்மேல் மோதி யடிக்கிறவன்
தான்சீராய்ப் பேறுபெற் றோன்.
சங்கீதம் 137
சங்கீதம் எண் 138
தாவீதின் சங்கீதம்.
உம்மையென் சீர்மன தோடும் துதிப்பேன்நான்;
உம்மைநான் மேனார்முன் இன்னிசைப்பேன். -தம்மே
உமதுதூய் ஆலயத்தின் நேராய்ப் பணிந்து,
உமது கிருபை யினாலும் -உமதுசீர்
உண்மை யினிமித் தமும்உம் பெயரைநான்
உண்மை யொடுதுதிப்பேன்; உம்மெல்லா -உண்மைபுகழ்
தன்னையே பார்க்கிலும் உம்சொல்லை நீர்மகிமை
நன்செய்துள் ளீர்சீரே. நானழைத்த -நன்னாளில்
மேன்சீர் எனக்கு மறுசொல் அருளினீர்;
தான்எனது ஆன்மாவில் நற்பெலன் -மேன்தந்து
என்னைச்சீர் ஊக்கப் படுத்தினீர். கர்த்தாவே,
தன்னேகாண் பூமியின் மன்னரெலாம் -நின்வாயின்
சொற்களைக் கேட்கும்போ தும்மைத் துதிப்பார்கள்.
நற்றவர் கர்த்தரின் சீர்மகிமை -நற்றே
பெரிதா யிருப்பதினால், மன்னர்கள் கர்த்தர்
திருவழிகள் தன்னையே பாடு. -திருவவர்
கர்த்தர் உயர்ந்த வராயிருந்தும், தாழ்மையுளோன்
கர்த்தவர் நோக்கிக்காண் கின்றாரே; -கர்த்தரவர்
மேட்டிமை யானவனை மிக்காய் தொலைவிலேயே
மேட்டிமை தன்னை அறிகிறார். -நாட்டான்நான்
துன்பத்தின் வன்நடுவில் தானடந் தாலும்நீர்
என்னை உயிர்ப்பிப்பீர்; என்பகைஞர் -வன்சினத்தில்
வன்னெதிராய் உம்கையை நீட்டுவீர்; உம்வலக்கை
என்னைத்தான் மீட்கும். திருக்கர்த்தர் -என்சீர்க்காய்
யாவையும் செய்து முடிப்பார்; திருக்கர்த்தா,
மேவுமது சீர்கிருபை உள்ளதென்றும்; -தேவா
உமது கரத்தின் செயல்களை சீரோய்
அமைந்து நெகிழவிடா தீர்.
சங்கீதம் 138
சீரவாநீர் ஆராய்ந் தறிந்துள்ளீர் என்னைத்தான்
சீரென் அமரெழுதல் தன்னைநீர் -சீரறிவீர்
சீரெஎண் ணங்கள்என் நீரறிவீர் தூரத்தே
சீராண்நான் மண்ணில் படுத்திருக்க -நேராண்நான்
சீர்நடந்தா லும்சூழ்ந்துள் ளீர்சீரோய் என்வழிகள்
சீர்நேர் நடக்குமுன் நீரறிவீர் -சீர்த்திருவே
சீர்நாவில் சொல்பிறவா முன்னே அறிந்துள்ளீர்
சீர்ரெந்தன் முன்பின் நெருக்கிநீர் -சீர்கரம்மேல்
சீர்வைக்கின் றீர்சீரே; இந்தறிவு எந்தனுக்கு
சீர்வியனே எட்டா ததாம்மேலாம் -சீர்ராவி
சீர்விட்டு நான்மறைவாய் எங்குபோவேன் சீரவரே
சீர்விட்டும் ஓடுவேன் எங்கேதான்? -சீர்நானும்
சீர்விண்ணை ஏறிவந்தா லும்முள்ளீர் சீரவரே
சீர்நானும் மண்தோண்டி கீழ்படுக்க -சீர்ருள்ளீர்
சீர்விடியல் செட்டைகள் நானெடுத்து ஆழியின்
சீர்க்கடைக்குப் போய்த்தங்கி னாலும்தான் -சீர்கடையாம்
சீர்திருவின் உம்கரம் என்னை நடத்தும்சீர்,
சீர்நேர் வலது கரம்பிடிக்கும் -சீர்க்கையை.
சீரென்னை வேயிருள் மூடினாலும் சீர்நீரோ
சீரிரவைச் சுற்றி ஒளியாக -சீரொளிரும்
சீரிருளும் உம்மறைக்கக் கூடாது; வெய்யிரவின்
சீரிருளும் சீர்க்காலைச் சீரென்றும் -சீரொளியாம்
சீரிருளும் சீரொளியும் சீரார்ச் சரியாமே
சீராரோ என்னுள்ளம் கைவைத்து -சீரார்தான்
சீரெந்தன் தாயின் கருவிலே காப்பாற்றி
சீராணைச் சீர்வியனாய்ச் செய்தீரென் -சீர்ஆன்மா
சீரிதை நன்கறியும்; சீரே மறைவிலே
சீரென்னை உண்டாக்கி; கீழிடத்தில் -சீரவண்நான்
சீராக உண்டான போழ்துமக்கு என்னென்பும்
சீரார் மறைவாய் இலைதானே -சீரார்நீர்
சீர்க்கருவைக் கண்டீர்; எனது அவயவம்
சீர்த்தாயின் நன்வயிற்றில் ஆகும்முன் -சீர்த்தேவ
சீருந்தன் நூலில் எழுதி யிருந்ததே
சீரவரின் ஆலோ சனைகளெலாம் -சீரருமை
சீரதின் எண்ணிக்கை பேராமே சீரவா
சீரவற்றை எண்ணிட்டால் மண்போலே -பேராமே
சீரவா; நான்விழிக்கும் போழ்துமது சீரண்டை
சீரிருக்கின் றேன்சீரே; சீரில்லான் -சீரவரே
சீரோய்நீர் இங்கழியும்; செந்நீர்மேல் சீரில்லார்
சீரற்று தாகமாய் நிற்போரே -சீரென்னை
சீரில்லார் விட்டகலும்; சீரில்லார் -சீரவரே
சீராரைச் சீசீயென் பேசுகின்றார் -சீர்ப்பிழன்று
சீரவரின் பேரையவர் வீணிலே -சீர்க்குலைத்து
சீரின்றிப் பேசுகின்றார்; உம்பகைஞர் -சீரவரே
சீரவன் நான்பகைக்கா தேயிரேனே சீரவரே
சீரெதிராய் வன்னெழுவார் நான்கழிவாய் -சீரிலை
சீரிலை என்றிருப்பே னன்றொசீர் சீரிலார்
சீராண் பகைக்கின்றேன் அவ்வகைச் -சீரில்லார்
சீரிலார் என்பகைஞர் என்னெண்ணம் -சீரவரே
சீரெனதுள் ளம்மாராய்ந் தேயறியும் -சீரவரேச்
சீராய் எனதெண்ணம் சீரறியும். சீர்கெட
சீரில்லா வேதனையின் கீழ்வழி -சீரென்னுள்
சீர்தேவா உள்ளதோ என்றுகண்டு சீர்மகனை
சீர்நிலையின் சீர்வழியில் சீரவா -சீர்நடத்தும்
சீர்மகன் பாடினான் பாட்டுதனை பாடியவன்
சீர்த்துதித்தான் நேர்மகன் தான்
சங்கீதம் 139
திருவே எனைப்பொல்லாங் கர்விட்டுச் சீரோய்
திருவென்னை தப்புவியும்; என்னைத் -திருவே
கொடுமையுள் மாந்தனுக்கு நீரும் விலக்கி
எடுத்தெனை மீட்டிடும் சீரோய் -எடுத்தவர்
நாவை எதற்கவர்கள் கூராக்கு கின்றாரோ
ஏவுமரப் போல்யேன் அவருள்ளே -சீவனை
கொல்லும் விரியனின் நஞ்சது; கர்த்தாவே
அல்லானின் கைகட்கு என்னைநீக்கி -அல்லானை
என்னைவிட்டு நீர்விலக்கி மீட்பீர்சீர் கர்த்தாவே
என்நடைகள் தன்னை யவர்களோ -என்நடை
விட்டுக் கவிழ்த்திடப் பார்க்கின்றார். கீழ்மனதால்
நட்டனர் கண்ணி கயிறுகள் -எட்டி
மறைவாக வைக்கின்றார்; ஏனோ வழியில்
மறையோரம் தன்னில் வலையை -மறைத்து
எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள்; நானோ
எனதுசீர் தேவனே என்றேன் -எனதின்
திருக்கர்த்தர் தன்னைநோக்கி; என்திருவே நீரே
திருவெந்தன் விண்ணப்பம் கேட்கத் -திருவெந்தன்
சத்தத்திற் நீர்செவி தாரும். திருகர்த்தா
அத்தவா ஆண்டவா என்மீட்பின் -நத்தவ
சீர்ப்பலனே, போர்நாளின் என்தலையை நீர்காத்தீர்
சீர்க்கர்த்தா, தீயவனின் வன்னாசை -சீரில்லா
காதபடி தன்னைத்தான் வன்னுயர்த்தா வண்ணமாய்
ஏதும் வினையாக்க வொட்டாதீர் -மேதவா
என்னை வளைந்திட வந்திடுவோர் வன்தலைமேல்
வன்னுதட்டின் தீவினைகள் அம்தலையில் -அன்னாரின்
மேல்மூடட் டும்சீரோய்; வன்தலைமேல் தீப்பற்றி
சால்பிலார் தீயினுள், வன்குழியுள் -மால்புடையோர்
தானே எழும்பேலா வண்ணமாய் தள்ளிடுவீர்
தானே புவியில் நிலையாது -மானிலா
பொல்லாத நாவுள்ளோன்; பொல்லாப்பு தானவனை
அல்லாமல் வேட்டைசெயும்; அன்றியும் -நல்லாரோ
சிற்றார் வழக்கையும் உள்ளத் தெளியோரின்
நற்றாமே நீதியையும் கர்த்தர்தாம் -நற்றவர்
நானறிவேன் காப்பாரே; நீதிமான்கள் உம்மைத்தான்
தானே துதித்திடுவர், செம்மையானோர் -தானவர்
உம்முன் வசிப்பார்கள் சீரோய் எனதாவீத்
அம்மானும் பாடினான் பாட்டு
சங்கீதம் 140
கர்த்தாவே, நானும்மை நோக்கியே கூப்பிட
கர்த்தாவே, என்னிடம் நீர்வரவே -கர்த்தாவே
தீவிரியும்; என்சத்தம் தன்னைநீர் கேட்டிடும்
மேவியெந்தன் விண்ணப்பம் நாறுபுகை -மேவிய
மாலையின் நற்பலி போல யிருப்பதாக
சீலவா, என்வாய்க்குக் காவலை -மேலவா
நீர்வையும்; இன்னுதட்டின் வாயிலை காத்திடும்
நீர்சீரோய் சீரில்லார் சிந்தைக்கு -வேர்ச்சிறிதும்
நானிணங்க வைக்காதீர்; வீணரொடு உண்ணாமல்
மேனவா காத்திடும்; நீதிமான் -மேனவன்
என்தலையில் சீராண் தயவாகக் குட்டவது
என்தலைக்கு எண்ணெய்போல் சீராணின் -என்தலை
தட்டாது அச்செய்கை; நீதியோர் இக்கட்டில்
நட்டவன் செய்வேன்நான் விண்ணப்பம் -நட்டாரின்
நீதிபதி கன்மலை விட்டு பிழன்றபோது
நீதியின் சொல்லென கேட்பரே -ஏதேது
பூமியில் காய்ந்த மரத்தை அறுக்குமாப்போல்
மேமான் எலும்புகள் வன்குழிக்கு -பூமியில்
உள்ளதே இங்கு சிதறி; எனினும்நான்
உள்ளத்தே உம்மைத்தான் நோக்கினேன் -கள்ளமிலா
என்கண்கள் உம்மைநோக்கி யுள்ளதே; கர்த்தாவே
என்ஆன்மா வெற்றாய் விடாதேயும்; -நன்றிலார்
வைத்தவன் கண்ணியின் தீச்சிக்கல் விட்டென்னை
வைத்த சுருக்குகள் விட்டென்னை -வைத்திடும்
சீரே விலக்கியென்னை மீட்டிடும்; சீரில்லா
வேரற்றோர் தான்வைத்த வன்வலையில் -சீரிலார்
தானே அகப்பட; நானோ கடந்திடுவேன்
தானே வலைதப்பித் தேன்
சங்கீதம் 141
சத்தமாய் கர்த்தரை நானழைத்துக் கெஞ்சுகிறேன்
அத்தவர் முன்னெம் மனதூற்றி -அத்தவரே
உம்முன் இடுக்கண் களையறிக்கைச் செய்கிறேன்
நும்சீர் எனதாவி தள்ளாடு -மம்சீரில்
நேரத்தே நீரறிவீ ரென்பாதை; நற்சீரோய்
சீரில்லா கண்ணிகள் வைத்தார்கள் -நேர்வழியில்
பாரும் வலதிலே என்னை அறிவாரோ
யாருமில்லை; சீரே அடைக்கலமில் -பாரில்
திரிகிறேன் சீர்ஐயா! உள்ளதோ அற்ற
தெரிந்ததோ என்றெந்தன் ஆன்மா -தெரிந்தன்பு
செய்திட யாருமிலை காண்சீரோய் மெய்யாரே
மெய்யான நீரென் அடைக்கலமும் -மெய்யாரின்
மெய்த்தேசத் தில்பங்கும் சீரதனால் மெய்யாரே
மெய்யாக உம்மையே நோக்கிநான் -மெய்யழைத்தேன்
தாழ்த்திடப் பட்டயென் கூக்குரலை நீர்கேட்டு
தீழ்த்தொடர்வோர் விட்டென்னை தப்புவியும் -தீழ்ச்செய்வோர்
என்னை விடவலியுள் மாந்தரே; ஆண்டவரே
நின்றும்மைத் நான்துதிக்க என்காவல் -தன்னைநீர்
விட்டகற்றும்; உம்சீர் தயவென்மேல் வந்திடவும்
நட்டநீதி யோரென்னைச் சூழ்ந்திடுவர் -நட்டான்
குகையில் ஒளிந்திருந்தும் பாடினான் சீரார்
அகத்திலே வைத்திந்த பாட்டு
சங்கீதம் 142
கர்த்தாவே, எந்தனின் வேண்டுதல்கள் தன்னைநீர்
கர்த்தாவே கேட்டருளும் விண்ணப்பம் -கர்த்தாவே
நீர்தான் செவிகொடும் நற்சீரோய்; உம்மெய்யின்
சீர்படியும் உம்நீதி யின்படியும் -சீர்த்தேவா
என்கேள்வி தன்னிற் விடையருளும் சீரவா;.
இன்னுயிர்க் கொண்டோர் எவருமே -அன்னவர்முன்
நீதிமான் இல்லையென்று நானறிந்த காரணத்தால்
நீதிபரர் என்னை நியாயந்தீர் -ஆதியே
உள்வரா தேயிரும் சீரவா; என்பகைஞர்
கள்ளமாய் என்ஆன்மா வன்தொடர்ந்து -தள்ளித்
தரையோடு என்னை நசுக்கி இறந்தார்
நரையார்ப்போல் காரிருளில் விட்டு -இருக்கச்செய்
கின்றாரே; என்னாவி என்னுள் தியங்குதே;
என்னுள்ளம் என்னுள்ளே சோர்ந்ததே -மன்னவா
ஆதிநாட்கள் தன்னை நினைக்கின்றேன்; உம்செய்கை
ஆதியில் செய்தவை நான்தியானம் -மேதவா
செய்கின்றேன்; உம்கையின் செய்கைகள் தன்னைநான்
மெய்யாக எண்ணுகின்றேன்; என்கைகள் -மெய்யவர்
முன்பாக நான்விரிக்க என்ஆன்மா நீரில்லா
வன்னிலம்போல் தாகமாய் நிற்கிறது -மன்னவா
கர்த்தாவே, நீர்விரைந்து சொல்லிற் செவிகொடும்,
கர்த்தாவே, என்ஆவி தொய்ந்திடுதே; -கர்த்தாவே
வன்குழியில் சீரில் இறங்குவோர்க் கொப்பாக்கா
நின்முகத்தை சீரே மறையாதீர் -என்கண்ணிற்.
மன்னா, அதிகாலை நின்னிரக்கம் கேட்கவேண்டும்,
மன்னவா உம்மைநான் நம்பியுள்ளேன், -மன்னவா
நான்நடக்கச் சீர்வழியைக் காண்பியும்; -நான்னும்மில்
என்ஆன்மா தன்னை உயர்த்துகிறேன். கர்த்தாவே,
என்பகைஞர் கைக்கென்னைத் தப்புவியும்; -என்சீரே
உம்மைப் புகலிடமாய்க் கொள்ளுகிறேன் சீரவா;
நும்சீர் விருப்பத்தைச் செய்ய எனக்குநீர்
அம்கற்பித் தேயருளும், சீரவ -அம்நீரே
என்தேவன்; உம்நல்ல ஆவி எனைச்செம்மை
நன்வழியில் சீராய் நடத்தட்டும். -என்கர்த்தா
உம்பெயர்க்காய் என்னை உயிர்ப்பியும்; உம்நீதி
அம்படி என்ஆன்மா தன்னையே -வம்பிடுக்கம்
விட்டதை நீங்கலாக்கி விட்டிடும் சீரவா.
நட்டமாக்கி வன்பகைஞர் உம்மிரக்கம் -விட்டேசீர்
வன்னழியும், என்ஆன்மா தன்னை யொடுக்கிடும்
வன்னார் எவரையும் கொல்லுமே -மன்றாடும்
உம்மடியேன் சொல்கேளும் என்றவர் பாடினார்
தம்மிறை நோக்கியே பாட்டு.
சங்கீதம் 143
எந்தனின் கைகளைப் போருக்கும் என்விரல்கள்
எந்நாளும் சண்டைக்கும் கற்பிக்கும் -எந்தனின்
கன்மலை கர்த்தருக்கே சீர்த்துதிப்பேன் நானிங்கே;
என்தயைச்செய், சீர்கோட்டை, என்னுயர்ந்த -நன்சீர்
அடைக்கலமும், என்னை விடுவிக் கிறச்சீர்,
இடமதிலென் கேடகம்நான் நம்பி -நடக்குமென்
சீரவரும், என்மக்கள் தன்னையவர் கீழ்ப்படுத்தும்
சீரவராய் சீரிருக் கின்றாரே. -சீரவா
கர்த்தாவே, மாந்தனை நீர்கவனிக் கின்றதற்கும்,
கர்த்தாவே மாந்தர் மகனையெண்ண -கர்த்தாவே
எம்மாத் திரம்சீரில்? மாந்தனோ மாயைக்கு
அம்மொப்பாம்; நாட்களவன் விட்டிடும் -அம்நிழலாம்
கர்த்தாவே, நீருமது வானங் களைத்தாழ்த்தி
கர்த்தாவே நீரிறங்கி, மேன்மலைகள் -கர்த்தா
புகையும் படிதொடும் சீரவா. மின்னல்
வகைவிட்டு வன்பகையை நீர்தான் -இகம்சிதற
சீரடியும்; அம்புகளாம் உம்மின தெய்துதான்
சீரே கலங்கடியும் வன்பகைஞர் -சீரே
உயரம் தனினின்றே நான்தப்ப சீரார்
அயனே கரமுமதை நீட்டி -வியன்வெள்ளம்
விட்டென்னைக் காத்தருளும் மீட்டென்னை; நற்றவரே,
விட்டென்னைக் காத்திடும் மாயைபேசும் -நட்டவரல்
அந்நிய மாந்தர்க்கை நீர்விலக்கி; கர்த்தாவே
அந்நாளில் பாட்டாம் புதுப்பாட்டை -நிந்தைத்தீர்
சீரவர்க்கு நான்யாழும் வீணையும் மீட்டிட்டு
சீரவரை இன்னிசையால் பாடுவேன் -சீரவா
நீர்தானே மன்னர்க்கு போர்வெற்றி தந்திட்டு
சீர்மகன் தாவீதைப் பொல்லாப்பு -நீர்தப்ப
வைத்தீரே வாளெல்லாம்; மாயைபேசும் வன்வாயும்,
மெய்யிலாக் கள்ளத் தனவலக்கை -வைத்திருக்கும்
அந்நிய மக்களின் கைக்கென்னை தப்புவியும்
அந்நாளில் எம்மக்கள் சீரோங்கி -மந்தமிலா
மாந்தராய், சீர்மரம்போல், சீரமனை மூலைக்கல்
மாந்தராய் நின்றுவளர் வர்சீராய் -மாந்தர்
வளங்களால் எம்மின் களஞ்சியங்கள் மிக்காய்
வளமெலாம் பெற்றிருக்கும்; எம்மின் -வளமாமே
ஆடுகள் ஆயிரம் மாயிரமாய்ப் பல்லாகும்.
கோடுள்ள ஏறுகள் சீர்ப்பலமாய் -நாடதில்
நிற்குமே; வன்பகைவர் வந்திடாரே, வீணராய்
அற்றாகிப் போகாரே எம்மக்கள் -அற்றதாய்
எங்களின் வீதிகளில் கூக்குரலும் உண்டாகா.
மங்கா தருட்சீரைப் பெற்றமக்கள் -தங்களுக்குள்
பேறுபெற்றோர்; கர்த்தரை தெய்வமாகக் கொண்டுள்ளோர்
பேறுபெற்றோர் அம்மக்கள் தான்.
சங்கீதம் 144
என்தேவா என்மன்னா உம்மை உயர்த்திநான்
நின்சீர்ப் பெயரதை நான்துதிப்பேன் -என்றென்றும்
எப்போதும்; நாடோறும் உம்மை துதித்துநான்,
எப்போதும் என்றென்றும் உம்பெயரை -எப்போதும்
நான்துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிக்காக
மேன்புகழ்ச்சி பெற்றிடத் தக்கவரே; -மேன்சீர்
அவரின் மகத்துவம் ஆராய்ந் திடேலா.
அவர்ச்செய் பரன்பரையாய்ச் சொல்லி -அவருடைய
வல்செய் யறிவிப்பார். நும்சீர் தனைநானே
நல்லச் செயல்களை பேசுவேன் -நல்லாரோ
உம்திகைப்பாய்ச் செய்கைகள் தன்வலியை மக்களார்
அம்சொல்வர்; உம்மேன்மை சீரைநான் -அம்விவரிப்
பேன்சீரே; சீரார் மிகுந்தவும் சீர்தயவை
மேன்நினைத்து சீராய் வெளிப்படுத்தி -மேன்நீதி
தன்னை உயர்த்தொனியில் பாடுவர்சீர்; மேன்கர்த்தர்
தன்னே இரக்கமும் சீர்மன -நன்னுருக்கம்
நீடிய சாந்தமும் மிக்கக் கிருபையும்
வாடாதே உள்ளவர் சீர்கர்த்தர் -கேடகம்
எல்லாரின் மேலும் தயவுள்ளார்; சீரிரக்கம்
எல்லாம் அவர்ச்செய்கை கள்மேலுள் -ளெல்லாமே.
கர்த்தாவே, உம்செய்கை எல்லாம் துதிக்குமும்மை;
கர்த்தரின் தூயரும்மை செய்த்துதி -கர்த்தா
மனுமகற்கு உம்வலிச் செய்கைகள் தன்னை
இனிதாம் உமதரசின் சீராம் -நனிச்சிறந்த
மேன்மையை சீராய்த் தெரிவிக்கும் சீர்படிக்கு;
மேன்மக்கள் மேன்னரசை சீரறிவி -மேன்வலியை
பேசுவார்கள். உம்மரசு எக்காலம் உள்ளரசு
தீசிலே ஆளுகை உள்ளதே -பேசும்
தலைமுறையாய் உள்ளது. கர்த்தர் விழுவோர்
தலைப்பிடித்துத் தாங்கி, மடங்கி -நிலையாவர்
தூக்கி விடுகிறார் சீரவர். சீரவா
நோக்குகின்ற தேயெல்லா ஆருயிரும் -தாக்குபசிக்
கேற்றதாய் வேளையிலே நீர்தானே ஊன்தந்து
ஏற்றபடி உம்கையை நீர்திறந்து -ஆற்றுகிறீர்
எல்லாப் பிராணிகளின் வாஞ்சையையும் சீரவா.
எல்லா வழிகளில் கர்த்தவர் -வல்லாரே
நீதியுள்ள சீராமே, தம்செய்கை தன்னிலெல்லாம்
நீதிக் கிருபையுள்ள சீராக -மேதார்
இருக்கிறார். தம்மைநோக்கிக் கூப்பிடும் யார்க்கும்,
திருமெய்யார் நிற்கிறார் ஆங்கே -திருத்தமக்கு
அஞ்சியவர் சீர்விருப்பத் தின்படி செய்தவர்கள்
அஞ்சியோர்க் கூப்பிடுதல் கள்மீட்பார் -துஞ்சிலார்.
கர்த்தரவர் தம்மிலே அன்புகூரும் யாரையும்
கர்த்தவர் காத்தவர், தீச்செய்வோர் -கர்த்தவர்
யாவரையும் சீரழிப்பார். என்வாய் துதிச்சொல்வ;
யாவும் அவருடைய தூய்ப்பெயரை -மேவியே
எப்போதும் என்றென்றும் ஊனெல்லாம் சீராரை
எப்போதும் செய்யும் துதி.
சங்கீதம் 145
அல்லெலூயா, கர்த்தரையென் ஆன்மா துதித்திடு.
நல்லவர் கர்த்தரை நானுயிருள் -அன்னாளின்
மட்டும் துதிப்பேன்நான் உள்ளளவும் தேவனைக்
மெட்டிசைத்துப் பாட்டாலே பாடுவேன். -நட்டாராம்
மேன்மக்கள் மீட்டிட ஏலாத மாந்தரை
தான்மக்காள் நம்பாதீர். ஆவியவன் -தான்பிரியும்,
தன்மண்ணில் தான்திரும்பிப் போவானே; அந்நாளில்
வன்திட்டம் எல்லாம் அழிந்திடும். -நன்னவராம்
தேவனார் யாக்கோபின் தன்துணையாய்க் கொண்டிருந்து,
தேவனாம் கர்த்தர்மேல் நம்பிக்கை -மேவிவைத்
துள்ளோனே பேறுபெற்றோன். சீரவர் விண்பூமி
துள்ளலைநீர் உள்ளதெல்லாம் உண்டாக்கி -அள்ளக்
குறையாத உண்மையைக் காப்பவர் சீரார்;
குறையாய் ஒடுக்கப்பட் டோர்க்கு -நிறைநியாயஞ்
செய்கிறார்; வன்பசி யாயிருக் கின்றவர்க்கு
மெய்யவர் ஊண்கொடுக் கின்றாரே; -மெய்யவர்
கட்டுண் டவர்கள் விடுவிக் கிறார்சீரார்.
நட்டார் குருடரின் கண்களைக் -இட்டுகர்த்தர்
சீரார் திறக்கிறார்; வீழ்ந்தவரைக் கர்த்தரவர்
சீராகத் தூக்கி விடுகிறார். -சீரவராம்
நீதிமான்கள் தன்மேலே அன்புசெய்தார் கர்த்தரவர்
வீதியில் சுற்றிடும் நாடோடி -வேதவர்
கர்த்தரவர் காப்பாற்று கின்றார்; திருவவர்
கர்த்தரவர் திக்கற்றப் பிள்ளையையும் -கர்த்தரவர்
கைம்பெண்ணை யும்சீரார் ஆதரிக் கின்றாரே;
அம்சீரில் வன்வழியார் தன்னினது -அம்வழி
சீரார் கவிழ்த்திடு கின்றாரே. கர்த்தரவர்
சீரவரே எல்லா விதகாலம் -சீராய்
அரசாளு கின்றாரே; சீயோனே, உந்தன்
அரசனாம் தேவனவர் தானே -அரசராய்
சீராய்த் தலைமுறை யாக அரசாட்சி
சீரவர்ச் செய்கின்றார் அல்லெலூயா. -சீரவரை
வாழ்த்தி இசைத்தாரே பாட்டு
சங்கீதம் 146
கர்த்தரை மக்காள் துதியுங்கள்; நம்முடைய
கர்த்தராம் தேவனைக் இன்னிசைத்து -கர்த்தரை
பாடல்கள் பாடுவது நல்லதாமே; சீராரைப்
பாடித் துதித்தலே இன்பமும் -நாடிதிலே
ஏற்றது மாயுள் ளதாமே. எருசலெமை
மேற்றார் திருகர்த்தர் கட்டுகிறார் -தேற்றியே
சீரில் துரத்துண்ட தம்மினத்தைக் கூட்டியே
சீரவர் சேர்க்கிறார்; தன்மனதில் -சீரில்
நொறுங்குண்ட மக்களைச் சீராக்கு கின்றார்.
திறம்படவே காயங் களையே -அறனவர்
கட்டுகிறார். விண்மீன்கள் தன்னையவர் எண்ணியவர்
இட்டுபெயர் மீனவைகள் தன்னழைத்தார் -மட்டிலார்
பேரவர் ஆண்டவர். மிப்பெல முள்ளவரே;
பேரவர் சீரறிவிற் தானளவில் -பேராம்;
அமைதி குணமுடையோர் தன்னை உயர்த்தி
அமைதியில் வன்வழியார் தன்னை -தரைமட்டும்
தாழ்த்துகிறார் கர்த்தரவர். சீரார் துதியுடன்
வாழ்நீவிர்ப் பாடியே கொண்டாடும் -வாழ்கர்த்தர்
வீணையால் இன்னிசைப் பாடிநீர் போற்றுங்கள்.
மேனவர் விண்ணை முகில்களால் -தானவர்
மூடி, புவிக்கு மழையைப் பொழிந்திட
மேடவர் தானாயத் தப்படுத்தி -மேடுகளில்
புல்லை முளைப்பித்தே கூப்பிடும் மாக்களுக்கு
நல்லபடு ஊண்தந்தே காகத்தை -நல்லவர்
தானே பிழைக்கவைக் கின்றார்; பரிபலம்
மேனார் விரும்பிடார், வீரன்கால் -மேனார்க்கு
இல்விருப்பே; சீராரை அஞ்சி கிருபைக்கு
நல்லபடி காத்திருக்கும் சீர்மக்கள் -நல்லவர்
தன்னின் விருப்பம்; எருசலெமே, சீர்த்துதி;
நன்சீயோன் நீதுதி உன்தேவன் -தன்னைநீ;
உன்வாயில் மூடு கதவுகளின் தாழ்ப்பாள்கள்
தன்னை பலப்படுத்து உன்பிள்ளை -தன்னையவர்
வாழ்த்துகிறார்; உந்தனின் எல்லைகளை நல்லமைதி
வாழ்ச்சிறப்பாய் ஆக்கி, பயிர்த்தேர்ந்த -தூய்நெல்லால்
சீரவர் உன்னை திருப்தியாய் ஆக்குகிறார்;
சீரவர் தம்சொல்லை பூமியிலே -சீரனுப்ப
சீரவர் சொல்லே விரைந்துசெல் கின்றதே;
சீராய் உறைந்த மழைத்தந்து -சீரவர்
சீராய் உறைந்த பனியையே தூவுகிறார்;
சீரவர் கல்மழையை கட்டியே -சீரனுப்ப,
சீரார்க் குளிர்முன்னே நிற்தக்கோன் யாருண்டு?
சீரார்ச்சொல் தன்னை அனுப்பியே -சீரவை
சீரார் உருகவே செய்கிறார்; சீர்க்காற்றை
சீரவர் வீசவிட, தண்ணீர்கள் -சீரோடும்;
யாக்கோ(பு)க்குத் தம்சொல்லை சீரிசுரேல் தன்னிற்கு
ஆக்க பிரமாணங் கள்தன்சேர்த் -தாக்கமாம்
தம்நியாயங் கள்தன்னைச் சீரார் அறிவிப்பார்.
தம்செய்கை இங்ஙணம் வேறெந்த -அம்தேச
மக்களுக்கும் இப்படிச் செய்ததில்லை; தக்கிலார்
தக்கவர்ச் சீர்நியாயங் கள்ளையோ -தக்கில்
அறியாமற் போகிறார்கள். அல்லெலூயா. என்றே
அறிந்தவர் பாடினார் பாட்டு
சங்கீதம் 147
அல்லெலூயா, வானங்களில் உள்ளவையே, கர்த்தரவர்
நல்லார்த் துதியுங்கள்; உன்னதங்கள் -ளில்சீர்த்
துதியுங்கள். சீரவரின் தூதர்களே, நீங்கள்
துதியுங்கள் யாவரும் சீராய் ; -துதியுங்கள்
சீராரின் சீர்ப்படையே நீங்கள் யாவரும்
சீராய்; துதியுங்கள் ஞாயிறே -சீர்மதியே
சீரொளி விட்டுமினுக் கும்விண்மீன் காள்துதியும்
சீரவரைச் சீராக நீங்களெலாம். -சீராரை
வானாதி வானங்காள், சீரார்த் துதியுங்கள்;
வானமேல் உள்ளநீர்காள் சீர்த்துதியும் -மேனவரை
சீராரின் சீர்ப்பெயரை சீர்த்துதியும் சீரெல்லாம்;
சீரார்ச்சொல் சீர்கேட்டு சீரவைச் -சீராக
சீராகச் சீர்ப்படைக்கச் சீர்ப்பட்டதே; சீரவரே
சீரவைகள் சீரென்றும் சீர்நிலைக்கச் -சீர்ச்செய்தார்;
சீர்மாறா சீர்நேமம் சீர்நியமம் சீர்ச்செய்தார்;
சீருள்ள சீர்ருயிர்காள் சீராரைச் -சீர்த்துதியும்;
சீர்க்கடலின் நீர்மீன்காள் சீராரை நீர்த்துதியும்
சீர்ராழங் காள்தீயே கல்மழையே -சீர்ருறைந்த
நீர்மழையே, மூடுபனியே, சீர்ச்சொல் படிசெய்யும்
பேர்க்காற்றே, கன்மலைகாள், மேடுகாள், -பேர்மரங்காள்
கேதுருக்காள், காட்டு மிருகங்காள், நாட்டுவாழ்
மீதி மிருகங்காள், ஊர்வனவே, -மீதே
இறகுள்ள புட்களே, பூமியின் கோவே,
சிறப்பார் இனங்காள், மேலார் -திறபூமி
தன்னுள்ள சீரார் நியாயா திபதிகளே,
நன்னிளைஞார், கன்னியரே, நன்நரையோர் -நன்பிள்ளாய்
கர்த்தரை நீர்த்துதியும்; எல்லாரும் சீராகக்
கர்த்தரின் சீர்ப்பெயரை சீர்துதியும் -கர்த்தரவர்
சீர்ப்பெயர் மட்டும் உயர்ந்தது; சீராமே
சீர்மகிமை பூமிக்கும் விண்ணிற்கும் -சீர்மேலாம்.
சீரார்த்தம் தூயவர் யாவருக்கும், தம்மைச்சேர்
சீரினமாம் சீரிசுரேல் மக்கட்கும் -சீர்விழாவாய்
தம்மக்கள் சீரார்க் கெனவொரு சீர்க்கொம்பை
அம்உயர்த்தி னார்சீரார் அல்லெலூயா. -தம்மே
திருவையவர் பாடினார் பாட்டு
சங்கீதம் 148
அல்லெலூயா, கர்த்தருக்குச் சீராய்ப் புதுப்பாட்டை
நல்லவர்காள் பாடுங்கள்; தூயராம் -நல்லவரின்
சீர்ச்சபையில் சீராரின் சீர்த்துதி சீர்விளங்க.
சீர்ரினம் தன்னைப் படைத்தவரின் -சீர்மகிழ
சீயோன் புதல்வர்கள் மன்னரில் தான்களிப்பாய்
தூயவரின் சீர்ப்பெயரை ஆடியவர் -தூயர்த்
துதித்தங்கே, தம்புருசேர் கின்னரத்தால் மீட்டி
துதிப்பாட்டைப் பாடட்டும் சீராய்; -நிதம்கர்த்தர்
தம்மக்கள் மேல்பிரியம் வைக்கிறார்; சீரவர்
அம்மமைதி நற்குணத்தார் மீட்பினால் -அம்சீர்
அலங்கரிப்பார். தூயவர்கள் மேன்மகிமை யோடே
களிகூர்ந்து, தங்கள் படுக்கை -நலமவர்மேல்
ஆர்ப்பரிப்பர்; தேசங்கள் மேன்வன் பழிவாங்க
பார்மக்கள் தண்டிக்க, மன்னரவர் -சேர்த்தங்கே
சங்கிலியால், மேன்மக்கள் தன்னை யிரும்பினது
சங்கிலியாற் கட்டவும், சீரவர் -தங்கி
எழுதியத் தீர்ப்பை அவர்பேரில் வீச
வழுவிலார் வாயில் துதியும் -வழுவிலார்க்
கையில் இருபுறமும் கூருள்ள வாளும்தான்
கையிருக்கும். இந்தக் கனமவரின் -வேயதூயர்
யாவருக்கும் உண்டாகும். அல்லெலூயா. என்றங்கு
மேவியே பாடினார் பாட்டு
சங்கீதம் 149
அல்லெலூயா, தேவனை தூய்தலத்தில் நீர்துதியும்;
வல்லமை சீராய் விளங்குமே -நல்லவரின்
விண்விரிவைப் பார்த்து அவரைத் துதியுங்கள்.
விண்ணவரின் வல்ல செயக்கட்காய் -மண்ணவரே
நீரவரைச் சீராய்த் துதியுங்கள்; மேனாமே
சீரவரின் சீர்மேன்மை நீரதற்காய் -சீரார்த்
துதியுங்கள் சீர்மக்காள்; எக்காளம் ஊதித்
துதியுங்கள் சீரவரை; வீணை -விதமாம்
சுரமண் டலத்தோடும் சீரார்த் துதியும்.
சுரஞ்சேர்க்கும் தம்புரு வோடு -தரைமீது
ஆட்டமாடி சீரவரை நீர்துதியும் சீர்மக்காள்;
ஆட்டமாடி யாழோடும் தீங்குழலை -நாட்டவரே
நீரிசைத்துச் சீரவரை நீர்த்துதியும் சீர்மக்காள்;
சீராக ஓசையுள்ள கைத்தாளங் கள்ளோடும்
சீரவரை நீர்த்துதியும்; பேரோசை யுள்ளதானா
சீரானக் கைத்தாளங் கள்ளோடும் -சீரவரை
நீர்துதியும். இங்கே உயிருள்ள யாவுமே
சீர்கர்த்தர் தன்னைத் துதிப்பதாக. அல்லெலூயா.
சீர்கர்த்தர்த் மேன்துதித்தார் பாட்டு
சங்கீதம் 150
திருவிவிலியத் திருப்பாடல்கள் கலிவெண்பா முற்றிற்று
சங்கீதம் எண் 86
தாவீதின் விண்ணப்பம்.
சங்கீதம் எண் 87
கோராகின் புத்திரருக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய சங்கீதம்.
சங்கீதம் எண் 89
எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.
சங்கீதம் எண் 92
ஓய்வுநாளின் பாட்டாகிய சங்கீதம்.
சங்கீதம் 95
சங்கீதம் 95
சங்கீதம் எண் 101
தாவீதின் சங்கீதம்.
சங்கீதம் 108 னது பிற்பகுதியும் சங்கீதம் 60 னது பிற்பகுதியும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக வருகிறது. ஆனாலும் இந்த 108ம் சங்கீதம் தேவனுடைய பெட்டி எருசலேம் நகருக்குள் கொண்டுவரும் போது பாடப்பட்டதாக நம்பப்படுகிறது.
அல்லெலூயா, கர்த்தரின் ஊழியரே, சீராராம்
சீரார் இசுரேல் எகிப்திலும், யாக்கோபின்
எங்களுக் கல்ல, திருச்சீரே, உம்கிருபைக்
கர்த்தரென் சத்தத்தை விண்ணப்பத் தையுஞ்சேர்
சங்கீதம் எண் 117 மற்றும் சங்கீதம் 118
சங்கீதம் 119 எபிரேயுவில் ஆலெப் முதல் தவ் வரை முதலெழுத்து கொண்டு ஒவ்வொரு எழுத்திற்கும் எட்டு வசனங்களாக எழுதப்பட்ட சங்கீதம்.
| கீழ்கண்ட எபிரேயு எழுத்துகளில் சொடுக்கினால் 119ம் திருப்பாடலில் அந்தப் பகுதியின் கலிவெண்பாவைப் படிக்கலாம் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| אஆலெப் | בபேத் | גகிம்மேல் | ד டாலெத் | ה எ | |||||
| ו வௌ | ז சாயீன் | ח கேத் | ט தேத் | י யோட் | |||||
| כ கப் | ל லாமேட் | מ மேம் | נ நூன் | ס சாமெக் | |||||
| ע ஆயின் | פ பே | צ த்சாடே | ק கோப் | ר ரேஷ் | |||||
| ש ஷீன் | ת தௌ | ||||||||
சங்கீதம் 119 : 1-8
சங்கீதம் 119 : 8-16
சங்கீதம் 119 : 17-24
சங்கீதம் 119 : 25-32
சங்கீதம் 119 : 33 - 40
சங்கீதம் 119 : 41 - 48
சங்கீதம் 119 : 49 - 56
சங்கீதம் 119 : 57 - 64
சங்கீதம் 119 : 65 - 72
சங்கீதம் 119 : 73 - 80
சங்கீதம் 119 : 81 - 88
சங்கீதம் 119 : 89 - 96
சங்கீதம் 119 : 97 - 104
சங்கீதம் 119 : 113 - 120
சங்கீதம் 119 : 121 - 128
சங்கீதம் 119 : 129 - 136
சங்கீதம் 119 : 137 - 144
சங்கீதம் 119 : 145 - 152
சங்கீதம் 119 : 153 - 160
சங்கீதம் 119 : 161 - 168
சங்கீதம் 119 : 169-176
ஆரோகண சங்கீதம்.
தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.
ஆரோகண சங்கீதம்.
சங்கீதம் எண் 124
தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.
மனிதர் நமக்கு எதிராய் எழும்ப
நனிகர்த்தர் நம்பக்கம் இல்லென் -நனிகர்த்தர்
தாமே நமதினது பக்கத்தில் இல்லென்றால்,
வேமாச் சினம்நம்மேல் பற்றியெரித் -தீமையாய்
எம்மை உயிரோடே தான்விழுங்கி வன்செய்வர்.
நம்மேலே தண்ணீர்கள் பாய்ந்தங்கு -வெம்வெள்ளம்
ஆன்மாவின் மேல்பெருகி, கொந்தளிக்கும் நீர்தானே
ஆன்மாவின் மேல்புரண்டு போயிருக்கும் -மேன்னாடார்
சீரிசுரேல் இப்பொழுது சொல்வதாக. நம்மையவர்
சீரில்லார் பற்களுக்கு வன்னிரையாய் -சீரற்று
ஒப்புக் கொடாதிருக்கும் கர்த்தருக்கு என்துதி.
தப்பித்தே கண்ணிவிட்ட சீர்க்குருவி -யைப்போல
நம்ஆன்மா தப்பிற்று, கண்ணி தெறித்தது,
அம்தப்பி னோமே. புவிவிண்ணை -அம்படைத்த
கர்த்தரின் சீர்ப்பெயரில் உள்ளது நன்னுதவி;
கர்த்தரை பாடினார் பாட்டு.
சங்கீதம் 124