திருவிவிலியம் - மோசே எழுதிய ஐந்தாகமங்கள் - கலிவெண்பாவில்

ஆதிநூல் முன்னுரை


அன்பனாம் மோசேக்கு அன்றளித்தார் ஐந்துநூல்
அன்பர் அருள்நாதர் வெண்பாவில் -இன்சொல்லென்

கீழ்படிந்து இங்குநீ வாழ்வேதம் இட்டிடுவாய்,
கீழ்யானும் கொண்டேன் தலைமேலே -வாழ்வாம்

இயேசுவின் வாழ்க்கை இயற்றினேன் வெண்பா
இயற்றிய பின்னர் இயேசு -இயற்றிடு

வெண்பா விவிலியம், விண்ணார்ப் பணித்திட
விண்ணார்த் திருச்சொல் தலைமேலே -மண்ணேற்று

அன்பின் உருவாம் திருஇயேசு அன்பளித்த
இன்வேதம் வெண்பாவில் அன்பெழுத, -இன்னலெலாம்

நீக்கும் இறைவன்தம் நீக்கமற வேதத்தைத்
தேக்க முடியா மலைத்தேன்நான் -ஆக்க

எனினும் தலையேற்றேன் என்மேல்; இனிசொல்
இனிது; எழுத இனிதே; -எனவே

நனிசொல் தலைமேல் இனியார் உடன்தான்
இனிசொல்வேன் வெண்பாவில் நான்


முன்னுரை

விண்மண், மிருகம், மனிதர் அனைத்தின் படைப்பு (ஆதியாகமம் 1, 2, 3)


விண்பூமி தேவனவர் முன்செய்தார் மண்ணது
தண்ணே ஒழுங்கில் வெறுமையாய் -விண்ணராவி

ஆழிமேல் ஆடசைய, ஆழத் திலிருளாம்;
சேழார் படைத்தார் ஒளிதனை -ஆழி

ஒளிதனை நன்றெனக் கண்டார் ஒளிச்சீர்
ஒளிமிகு நன்பகல் பேரிட்(டு); -ஒளிவீழ்

ஒளியிலா வேளை இரவெனப் பேரிட்(டு)
ஒளியினின்று வேறு பிரித்து -ஒளியிருள்

மாலையும் காலையும் நாள்முதல் ஆகிட
வேலை இரண்டா வதுநாளின் -கோலவர்

வேலைத் தொடர்ந்தார் வியன்விண் படைத்தவர்
சேலையென நெய்தார் கரத்தினால் -வேலையாய்

நீர்நடுவே விண்படைத்து வானாகு என்சொல்ல
சீர்தேவன் சொல்படி ஆயிற்றே -நேர்மாலைக்

காலையென நாளும் இரண்டாகக் கர்த்தரவர்
சாலாக வேலைத் தொடர்ந்தவர் -சீலவர்

கீழ்நீர்ப் பிரித்தவர் ஓரிடம் நீர்சேரென்
கீழ்நீரும் சொல்படி ஆயிற்றே -வாழ்உயிர்

வாழ்மரம் பல்பூண்டு வாழ்சொல் படைத்தவர்
வாழ்மரம் நன்றெனக் கண்டாரே -வாழ்நாளாம்

மாலையும் காலையும் நாள்மூன்று ஆகிட
வேலையை நான்கா வதுநாளில் -கோலாகக்

காலைக்கு ஆதவன் மாலைக்கு விண்மதியைக்
கோலவர் செவ்விப் படைத்திட்டார் -சீலவர்

நன்றெனக் கண்டாரே ஆதவன் விண்மதி,
நன்றாகக் காலையில் ஆதவன் -நின்றாள

என்றென்றும் மாலையில் விண்மதி ஆளுகை
நன்வேளை நாட்களுக் காகவே -அன்றியும்

மாலையும் காலையும் நாள்நான்கு ஆகிட
வேலையை ஐந்தா வதுநாளில் -சோலைவாழ்

நீர்வாழ் வனவாழ் மிருகங்கள் சாலவர்
சீர்ப்படைத்து சொன்னார் பெருகவே -சீர்க்கர்த்தர்

நன்றெனக் கண்டார் மிருகங்கள் மீன்வகை
நன்றாக ஆளவே மானுடன் -தன்உருவில்

என்றெம்மை ஆண்பெண் எனத்தேவன் செய்தவர்,
நன்றாய்ப் பலுகிப் பெருகிடு -வன்பசிக்கு

புல்பூண்டு உண்ணக் கொடுத்தவர், மானுடனை
எல்லா உயிர்க்கும் வலிமேலாய் -வல்வைத்தார்

நல்லதெனக் கண்டார், படைப்பிலே எல்லாமே
அல்லதிலை நன்றே உலகிது -நல்லதாய்

மாலையும் காலையும் நாள்ஆறு ஆகிட
வேலையில்லா ஏழாம் திருநாளில் -வேலைசெய்ய

வேலை யிலையினி ஓய்ந்திருப்போம் யாமென
வேலவர் செய்தாரே வாழ்த்துகள் -சீலவர்

தூயநாள் ஏழா வதெனப் பகன்றாரே
தூயவர் ஓய்ந்திருந்த காரணத்தால் -மாய

உலகில்வாழ் நுண்ணுயிர் எல்லாம் படைத்தார்
உலகின் திருக்கர்த்தர் நன்று


ஆதி கலி 1

மனிதனை மண்ணிலிருந்து படைத்து ஏதேன் தோட்டத்தை காவல் புரிய கொடுத்தல்


மனிதனை மண்ணால் செதுக்கி மனிதன்
நுனிமூக்கில் தன்மூச்சை ஊதி -மனிதன்

உயிர்ப்பித் தவரே உயரார் இறையின்
உயர்வடிவில் செய்தார் இறைவன் -உயர்வாமே

ஏதேன் பெயர்தோட்டந் தன்னைக் கிழக்கிலே
ஆதாமிற் காக உருவாக்கி -ஆதாம்

கரத்தினி லிட்டு, படைத்தவர் சொன்னார்
வரைகாவல் செய்வாய் மகனே -வரையதில்

பார்த்திட நல்லழகும் உண்ணச் சிறந்ததுமாய்,
பார்தனில் நற்கனிகள் ஏதேனில் -வேர்மரம்

இட்டவர் சோலையில் நீர்ப்பாய்ச்ச ஆறோட
திட்டமாய்ச் செய்தார் நிலத்திலே -வட்டமாய்

ஆறுமுதல் பைசோனே ஆவிலா ஓடியது
ஆறிரண்டு கீகோனே எத்தியோப்பில் -சீறியோட

ஆறுமூன்றாம் இத்தக்கேல் சீரியா கீழோட
ஆறது ஐபிராத்து நான்கது -ஆறுகள்

நான்காக ஓடியது நான்குதிசை ஏதேனின்
வான்சோலை வாழ்விக்க, தேசத்தில் -கோன்வளம்

பெற்றவை வெற்று நிலத்தில் வளமிகவே
நற்றவராம் தேவன் படைத்தவர் -நற்றிலம்

பண்படுத்திக் காவல் புரிவாய் மனிதனே
மண்தோட்டம் உள்ளேதான் என்றழைத்து -விண்ணவர்

மேலும் பகன்றார் ஒருவிதியே உண்ணாதே
சோலை நடுவின் கனியதை -சோலையில்

நன்றெது, தீதறியும் அந்த நடுக்கனி
என்றும் புசியாதே அக்கனியை -அன்றவர்

சொன்னார், கனிபுசித்தால் சாகவே சாவாய்நீ
வான்மெய்யார் கர்த்தர் உரைத்தவர் -தான்செய்

படைத்த மிருகம் பறவை அனைத்தும்
படைத்தவர் ஆதாம் கரத்தில் -விடுத்து,

பெயரிடச் சொன்னார் வகைவகை மாக்கள்
பெயர்கள் நிலத்தில் நிலைத்து


ஆதி கலி 2

மனிதனுக்கு ஏற்றத் துணையாக மனைவியைப் படைத்தல்


ஆதாம் பெயருடையோன் ஏற்றத் துணையிலை
ஆதாம் தனித்திருக்க மாக்களோ -ஏதேன்

களிக்க, திருக்கண்டார் ஆதாம் தனிமை,
அளித்தாரே கர்த்தர் துணையாய் -களியாம்

தனிமை மனிதனுக்கு நன்றன்று என்று
தனிமை விலக்கிட ஆழாய் -நனியுறக்கம்

செய்து விலாவெடுத்து நன்றாய் மனைவியைச்
செய்தாரே கர்த்தர் துணையாக -செய்தீரே

என்ஊன் இவளென் எலும்பே அதனாலே
என்பேர் மனிதன், துணைமனைவி -என்எலும்பு

என்றுரைத்து ஏவாள் பெயரிட்டான் ஆதாமும்
நன்றெனக் கண்டார் இறைவனார் -என்றும்

உடையணியா நாணில் நடைபழகச் சோலை
உடையணி நாணம் அறியார் -கொடுவன்

விடுவனோ சாத்தானும் தானே உருவாய்
எடுத்தனன் சூழ்ச்சியுருப் பாம்பு


ஆதி கலி 3

சர்ப்பத்தின் சூழ்ச்சியால் ஏவாள் கனிபுசித்து, கணவனுக்கும் கொடுத்தல்


சூழ்ச்சியாய் வஞ்சித்து வீழ்த்திட, சூழ்ச்சியுருக்
கீழ்ப்பாம்பு: தோட்டக் குறையுளதோ -வாழ்சோலை

ஆழ்வேர் மரக்கனி யேதும் புசித்திட
வாழ்விதி யுண்டோசொல் லிங்குதான் -ஆழ்வேர்

நடுக்கனி மட்டும் புசிக்காதீர் என்று
விடுத்தார் ஒருவிதி எம்மைப் -படைத்தவர்

சட்டெனப் பொய்யுரைத்தான் சாவதில்லை பார்ப்பீரே
பட்டெனக் கண்கள் திறந்திடும் -சட்டென

நன்மை யெதுதீமை நீரறிவீர்; தேவர்போல்
நன்றா யிருக்கக் கனியதுவே -நன்னவர்

தேவன் உருப்போல் இருப்பீர் உலகிலே
தேவராய், பொய்யன் உரைத்திட்டான் -தேவை

புசித்திட நன்றெனக் கண்டனள் ஏவாள்
பசிபோக்க நன்சுவை யூற, -திசையேதும்

காணாப் பறந்த விதியும், புசித்தாளே
மாணாப் பிறந்த மனையவள் -மாணவள்

தான்கெட்டுத் தன்கணவன் கெட்டிடக் கைக்கொடுத்தாள்
தான்புசித்த அக்கனியைக் கைமேலே -தான்கேட்ட

ஓர்விதியும் ஆதாம் மறந்தான் மனைக்கொடுத்த
சோர்கனியைக் கையில் புசித்திட்டான் -வேர்க்கனியால்

நாணம் தலைக்கேற அத்தி யிலையாடை
நாண மறைக்க அணிந்தனர் -கோணலிரு

காணவர் நன்பகல் வேளையில் வந்திட
நாணி இருவர் மறைந்தனர் -மாணவர்

எங்கே இருவர்? இதோஇங்கே பங்கமாய்
எங்கள்மேல் ஆடையில்லா நிற்கின்றோம் -பங்கமா

என்சொன்னாய்? நாண, மறைக்க உடையிலரா!,
என்சொல் விழவே வழுவாகி -சென்றாய்?

மனையாளாம் ஏவாள் கனிகொடுத்தாள், உண்டேன்
கனிபுசித்து நாணம் தலையில் -கனிபுசிக்கச்

சொன்னது யாரிங்கு? என்றதும் கேட்டிலே
சொன்னது வஞ்சித்த பாம்பு


ஆதி கலி 4

கீழ்படியாமையால் ஏதேனில் இருந்து துரத்தப்பட்ட ஆதாமும், இயேசுவைக் குறித்த முன்னுரையும்


பொய்யுரைத்து வஞ்சித்தாய், பாம்பேநீ மெய்யூர்ந்துச்
செய்வழி மண்ணே உனதூணாம் -மெய்சொல்கேள்

உன்வித்தும் ஏவாளின் வித்தும் பகைதானே
உன்தலைக் கொய்வாரே வித்துனது -அன்றியும்

நீயோ அவரின் குதிங்கால் நசுக்குவாய்
வாயாலே பொய்யுரைத் தாய்அதனால் -சேயவர்

வெல்வாரே, கன்னி மரியின் முதல்மகன்
வெல்லப் பிறந்தார் இயேசுபிரான் -நல்ல

முதன்முதல் முன்னுரை யேசு குறித்தும்
வதைப்படுதற் பற்றியுஞ் சென்றே -சிதைந்தழிவார்

வன்சிலுவை மேலென்று கர்த்தர் உரைத்தார்சொல்
என்னே உரைதன்னின் மாண்பது -நன்றென

நான்கொடுத்த ஓர்விதியை மீறி நடந்ததாலே
நான்படைத்த இந்நிலமோ முள்கொடுக்கும் -தான்நீ

வியர்வையைச் சிந்தியுழை; பெண்ணே வலியால்
அயர்வாய் மகப்பேறில் தானே -உயர்தோட்டம்

மண்சரிசெய் வோமெனவும், ஆதாம் கனிபலநன்
மண்ணில் புசியா திருக்கவும் -விண்ணவர்

ஏதேன் அடைத்தாரே விண்தூதர்க் காவலிட்டு
ஆதாம் வராதொளி வாள்


ஆதி கலி 5

ஆதாமின் வழித்தோன்றல்கள் (ஆதியாகமம் 4, 5)


ஆதாம் மனைவியைச் சேர்ந்தவன் பெற்றானே
ஏதேன் விடுத்ததும் காயீனை -ஆதாம்

இரண்டாம் மகனின் பெயரது ஆபேல்
இருவர் வளர்ந்தனர் ஆங்கு -இருமகவு

காயீனோ காய்கறியைச் செய்யில் வளர்த்தனன்
சேயோன் களித்தே வளர்ந்தனன் -வாயுள்

சுவைமிகுக் காய்கனியைக் கர்த்தருக்குத் தந்தே
சுவைத்து மகிழவே இங்கு -அவையன்றி

ஆபேல் களந்தன்னில் மேமேய்த்தான் நின்றவன்
ஆபேல் களித்தே வளர்ந்தனன் -ஆபேல்

இறைவன் நுகர்ந்திட நல்பலியாய்த் தந்து
இறைவன் துதித்திட்டான் ஆங்கு -இறைவனார்

ஏற்றாரே ஆபேலின் ஆடு
ஆதி கலி 6

காயீன், ஆபேல் இருவரின் காணிக்கையும், ஆபேல் கொலையும்


காணிக்கைக் கொண்டுவந்தார் காணியில் காளையர்;
காணியின் காயீன் கொடுத்தனன் -காணிகனி;

காணிவளர் மேத்தலையைக் காணிளையோன் கொன்றிட,
காணவர் மேமட்டும் ஏற்றவர் -காணவன்

காயீன் முகத்தில் சினங்கொள்ளத் தேவனோ
காயீன் முகச்சினம் ஏனோகேள் -வாயிலில்

பாவம் படுத்திருக்கும் நன்மைப் புரியவில்லை
பாவி, தவிப்பாய்க் கிடந்திருக்கும் -பாவியோ

காழ்ப்பால் நிறைந்தனன் காயீன் சினங்கொண்டு
வீழ்த்தினன் சோதரன் ஆபேலை -வீழ்ந்த

உதிரம் உரக்கத் திருவின் சமூகம்
கதறச் செவிமடுத் தாரே -பதறி

திருவும் உலகில் இறங்கி வரவும்
திருவிடம் சொல்பதில் ஏதில் -திருமுன்

திருடனைப் போலே விழித்தனன் காயீன்
திருவோ வினாப்பலக் கேட்டு -திருயிறைவா

சோதரன் தானே அவன்காவல் யானோஏன்?
சோதரன் கொன்றாயோ, வேதனும் -வாதையாற்

சோதரனின் பார்ப்புக் கதறியதே எங்கேசொல்
சோதரன்? என்றே வினவிட -வீதமாய்க்

கொன்றாயே சோதரன் காயீனே; பூமியில்
கொன்றதால் செய்யும் பலன்கொடா, -சென்றிடு

பூமியில் நீயும் நிலையிலா, தேவனும்
பூமியில் காயீன் சபித்தாரே -சாமி

சிறுவனின் குற்றம் பெரிதே திருவே
சிறுவனுக்குத் தண்டம் பெரிதே -சிறுவனால்

ஏலாதே தாங்கிட, யாரும் கொலைபுரிவர்
ஏலாதான் கண்டால் நிலமிதில் -ஏலாதான்

காயீன் கொலைபுரிவோன் மேலே பழியேழு,
காயீன் நுதல்மேல் அடையாளம்; -தூயரிட,

தூயர் இடம்விட்டுப் போனான் வளர்காயீன்
சேயாக ஏனோக்கைப் பெற்று


ஆதி கலி 7

மனிதர்கள் பலுகிப் பெருகி, முதன்முதலில் கர்த்தரின் நாமத்தை மனிதர்கள் தொழுதுக் கொள்ளுதல்


காயீன் விடுத்தனன் வேறாக, காயீனின்
தாயவள் ஏவாள் கொலையுண்டச் -சேயோன்

துயர்நீங்கிப் பெற்றாள் கருவுற்று ஓராண்
பெயர்சேத் எனயிட்டாள் பெண்ணும் -உயர்ந்தே

பலுகிப் பெருகினர் காயீனும் சேத்தும்
பலமக்கள் கொண்டவர் ஆண்டுப் -பலவாய்

வலம்வந்து வாழ்ந்தனர் மக்கள் பிறந்து
நிலம்முழுதும் ஆண்ட இனமோ -நிலத்தில்

தொழுகை முதலில் மனிதருஞ் செய்து,
தொழுதனர் கர்த்தர் பெயரைத் -தொழும்நல்

வழக்கம் தொடங்கியது சேத்தின் பிறப்பாம்
இழந்ததை மீட்டிடப் போர்செய் -வழியோர்

வழிவந்தான் ஏனோக்கும் சேத்தின் விதையாய்
வழிவாழ்ந்தான் கர்த்தருடன் நாளும் -பழியில்லா

வாழ்க்கையை வாழ்ந்தவனைத் தேவனும் கொண்டாரே
வாழ்ந்தவரில் சேர்ந்த முதல்


ஆதி கலி 8

பெருவெள்ளப் படலம் (ஆதியாகமம் 6,7,8,9,10,11)


தேவ மைந்தர்களோட மனிதர் உறவுக் கொள்ளுதலும் தேவன் மனிதரை அழிக்க முடிவெடுத்தலும்


நோவா வரைப்பிறந்த மக்கள் பலநூறாய்;
மேவி யிறங்கி இறைமக்கள் -போவோம்நாம்

சாவுடை மக்களிடம் பெண்கொள்வோம் பூமியில்,
சாவிலா மக்கள் பிறந்திட்டார் - பாவியென

நோவா பிறப்பித்தான் மூன்று குமாரர்கள்
நோவாவின் காலத்தில் தேவனோ -நோவுற்றார்

இவ்வுலகில் மானுடனை ஏன்செய்தோம் செய்கின்றார்
எவ்வகை மீறுதல் கள்தன்னை -அவ்வாறு

சொல்லொணா மீறுதல்கள் மானுடருஞ் செய்திட
அல்லல் பலதீர வந்தழிப்பேன் -இல்லல்செய்

மானுடரை என்றே உளத்தில் பகன்றவர்
மானுடர் நீக்கவே தீர்த்தனரே -ஏனை

இருப்பானே நூறும் இருமுறை பத்தே
திருவும் மனிதனின் ஆயுள் -இருக்கின்றான்

இத்துனை நாட்களோ மிச்சிறிதே ஆதலால்
இத்தவன் போர்வேண்டாம் இங்கு


ஆதி கலி 9

நோவாவை பேழையைச் செய்ய பணித்தல்


திருவுடன் நோவாவும் ஏனோக்கைப் போலே
திருவுடன் வாழ்ந்தான் சிறந்து; -திருவும்

வழித்தோன்றல் எல்லாரில் தூயன் எனவே
வழிநிற்பான் கீழ்படிந்து சொல்லை -அழியான்

படைத்தவர் கண்களில் பெற்றான் இரக்கம்;
படைப்பெலாம் யானழிக்கத் தீர்த்தேன் -படைப்பிதைக்

காத்திடவே கொப்பேர் மரப்பேழை நீசெய்வாய்
நீத்தே நிறையும் அழிவுலகு -காத்து

முழநீளம் முந்நூறு ஐம்பதக லம்தான்
முழமுப் பதேஉயரம் என்று -முழக்கணக்கைச்

சொல்லி முறைசெய் விதம்தட்டு மூன்றாமே,
செல்சாள ரம்ஒன்றே செய்திடு -வல்லாண்நீ

பேழை அளவைக் குறித்த படிசெய்தே
பேழையின் உள்ளும் புறம்புங்கீல் -பேழையில்

பூசி அறைபல செய்யென் விளக்கினார்,
பேசும் இறைவன் சிறந்து


ஆதி கலி 10

பேழையில் மிருகங்களோடு பறவைகள் எல்லாம் சேர்க்க கட்டளையிட, நோவா குடும்பத்தோடே மற்ற மிருகங்கள் சென்றதும் கர்த்தர் பேழையை அடைத்தல்


வான்கீழ் உயிரெலாம் கொன்றிட என்உளம்
வான்மதகு எல்லாம் திறப்பேன்நான் -வான்மழைப்

பெய்யெனப் பெய்தழிக்கும் மானுட னோடேநான்
செய்த மிருகங்கள் சேர்த்திங்கு -மெய்யாண்

உனக்கோ இரங்கினேன் நோவா, வழியார்
தனைச்சேர்த்து உன்குடும்பம் விட்டேன் -வினையழித்

தப்பிக்கச் செய்வாயே பேழைதான்; செய்திடுத்
தப்ப மழைஅழிவைத் தான்நீயும் -அப்போ

பறவை மிருகம் இணையிணையாய்ச் சேர்த்தே
திறந்தந்தப் பேழையில் வைப்பாய் -திறனே;

மறவாதே சேர்ப்பாய் உணவை மிருகங்கள்
சேர்ந்துண்ண நேர்இறைவன் சொன்னாரே -சேர்ந்திருக்க

செய்வாய் மரப்பேழை நோவா, மழைபொழியும்
செய்யிலே நாற்பது நாட்களுக்கு -செய்தழிப்பேன்

மண்ணில் படைப்பெலாம் விண்ணார் சினத்தாலே
மண்ணின் செழிப்பெலாம் வீணாகும் -மண்ணினத்

தூய்மிருகம் ஏழாக ஈர்பாலைத் ஆய்ந்தேர்வாய்,
தூய்இல்லா ஒன்றாக ஈர்பாலை -ஆய்ந்தேர்வாய்,

தூய்கர்த்தர் சொல்ல, தெளிவாகப் பேழையுள்
தூய்நோவா கீழ்படிந் தான்சீராண் -தூய்கர்த்தர்

கீழ்படிந்து நோவா மரப்பேழைச் செய்தனன்
கீழ்பூமி வாழ்மிருகம் வான்பறவை -வாழ்ந்திடப்

பேழைக்குள் வந்தனர் யாவரும் தப்பிக்கப்
பேழையில் கர்த்தர் அடைத்து


ஆதி கலி 11

பெய்யெனப் பெய்த மழையும், நீரில் மிதந்த பேழையும், பின்னர் நீர் வடிதலும் நோவா வெளியே வருதலும்.


ஏழுநாள் பின்னர் மதகுத் திறந்திட,
பேழையுட் பட்டனன் சேழாணும் -சேழாள்

மகன்மூவர் மற்றும் மருமக்கள் எல்லாம்
தகைத்தே அடைத்தார் கதவு -இகத்திலோ

விண்மதகும் கீழாழம் நீரோட்டம் ஓடிட
விண்கீழே உள்ள உயிரெலாம் -மண்ணாக,

கோன்செய்தப் பேழை உயிர்செழித்துத் தப்பிக்க,
கோன்நோவா சுற்றார்தப் பித்திட -வான்தன்னின்

பெய்யனப் பெய்மழை நாற்பது நாளாகப்
பெய்து அழித்திட; நீர்பெருக்கு -மெய்யாக,

பெய்மழையால் ஏற்பட்டு நீரேர, பெய்மழையால்
செய்சொல் படிநடவார் செத்தனர் -வெய்ந்தவப்

பேழை மழைநீரின் மேல்மிதக்க வெள்ளமோ
பேழை வெளியே புரண்டோட -பேழைக்குள்

கீழ்படிந்த மாக்களும் மக்களும் தப்பிக்கக்
கீழ்படியா யாவர் அழிந்திட -கீழ்படிந்தோர்

பேழைக்குள் வாழ்மக்கள் மாக்கள் நினைந்தருளி,
பேழை வெளியே வளிகொண்டு -வாழவைக்க

நீர்வற்ற தேவனும் ஆணையிட; ஆணையேற்று
நீர்வெள்ளம் மெல்லக் குறைந்திட -நீர்மேலே

நூற்றைம் பதுநாட்கள் தண்ணீர்ப் புரண்டோட
சீற்றம் சிறிதாய் அளவிலே -கூற்றமது

வெள்ளம் வடிந்தோட பேழையின் சாளரம்
மெள்ளத் திறந்தான் மகனவன் -தள்ளி

அராராத் மலையிலே பேழைத் தரைமேல்
விரைவாக வெள்ளம் வடியாத் -திரைகடல்

போல்காட்சி எங்கும் நிலைத்திருக்க நோவாவோ
கீல்பேழை உள்ளே யிருந்தனன் -கால்வேய்

ஒருகாகம் விட்டான் வெளியில் பறக்க
இருக்க இடமில் வரவும் -திரும்பி

ஒருபுறா விட்டான் வெளியில் பறக்க
இருக்க இடமில் திரும்ப -இருந்தவன்

ஏழுநாள் பின்னர் விடுத்தனன் ஓர்புறா
ஏழாம்நாள் மாலைத் திரும்பியது -பேழைக்கு;

நல்லொலிவம் ஓரிலைக் கொத்திப் புறாவர
மெல்லக் குறைந்தது நீரது -செல்லவே

ஏழுநாள் பின்னர் விடுத்தனன் ஓர்புறா,
பேழைக்கு வாராதே போனதும் -பேழை

வெளியேநீர்ப் போன தறிந்தானே நோவா
வெளிவர நேர மிது


ஆதி கலி 12

கர்த்தர் உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வைத்தலும்


வெளிவந்தான் நோவா, களிப்புடன் நன்றி
வெளிவருவித் தீர்நீர்த் திருவே -வெளிமிருகம்

கொன்றே பலியிட்டான் கர்த்தரும் ஏற்றாரே
கொன்றப் பலியை முகர்ந்தவர் -அன்றியும்

கோடையும் மாரியும் நன்விதைப்பு மீள்அறுப்பு
வாடும் குளிர்வெப்பம் ஞாமதியும் -கூடாதே

நின்றிட என்றவர் உள்ளம் உரைத்தாரே
நன்கர்த்தர் சித்தம் சிறந்தவர் -என்னே

மனித நினைவுச் சிறுவயதி னின்றே
இனிதிலை, பொல்லாப்பே ஆயின் -இனிநான்

அழிப்பதில்லை பூமியை நீர்கொண்டு; ஆள்வாய்,
செழித்து வளர்வாய் உலகு -அழியடை

வானவில்லை வானிலே இட்டார் அடையாளம்
வானையும் மண்ணையும் சேர்த்திணைக்க -வானில்

ஒளிர்ந்ததே அங்கே உடன்படிக்கை, கர்த்தர்
வெளிப்படையாய் வானிலே வைத்து


ஆதி கலி 13

ஊன்புசிக்க கட்டளையிட்டார் கர்த்தர்


மண்ணிலே வெள்ளம் வளமெலாம் கொண்டுபோக
மண்ணின் வளத்தை அதுவரை -எண்ணிப்

புசித்த மனிதனுக்குக் கர்த்தர் கொடுத்தார்
புசிக்க மிருகங்கள் ஊனை -புசித்திடும்

ஊனோ டுதிரம் புசியாதே என்றும்நீர்
ஊனைப் புசிப்பீர்ப் பசிபோக்க -ஊனோடு

மாந்தரே சிந்தீர் உயிராமே செந்நீரை
மாந்தரிடம் செய்வேன் வழக்கதை -மாந்தரிடம்

கேட்பேன் பழிநான் உதிரத்தைச் சிந்தினால்
கேட்டைத் திரைப்பின்னே போடாதே -கேட்டின்

பழிதன்னை வாங்குவேன் என்றே உரைத்தார்
பழிதீர்க்கும் தேவன் உரைத்து -வழியோன்

மனிதனோ தேவ உருவாம் எனவே,
மனிதன் குருதியைச் சிந்தும் -வினையை

மனிதனிடம் கேட்பேன் பழியே உரைத்தார்
மனிதன் உருச்செய் தவரே -மனிதரை

நீரா லினிநான் அழியேன் உயிரெலாம்;
தீராதே காப்பேன் அதற்காக -ஓராய்

அடையாளம் வைத்தேன்நான் விண்ணிலே காண்பீர்
இடையிலே வானவில் தன்னை -கடையோன்

மனிதனின் மீறுதல்கள் எப்போ பெரிதாய்
நனியெந்தன் கண்ணில் வருமோ -மனிதனை

நீரால் அழித்திடேன் என்றே புரிந்திந்த
நேராணைக் கூற நினைவு


ஆதி கலி 14

நோவா திராட்சரசம் குடித்து ஆடை நீங்கி இருக்க, காம் கேலி செய்தலும் அவனை நோவா சபித்தலும்


பயிர்செய்தான் நோவா திராட்சைக் கொடியை,
பயிர்பலன் நன்பழச் சாறை -உயர்வாண்

உயிர்தெரியாக் கண்மயக்கத் தோடிருக்கத் தேவை
உயிருடைகள் இல்லா விடுத்து -அயனை

இரண்டாம் குமாரன் வெறித்த உடையில்
தரங்கெட்டத் தன்தகப்பன் கண்டு -தரங்கெட்டு

வீழ்ந்து கிடக்கின்றார் நம்தகப்பன் என்றவனும்
வாழ்தமர்க் கூறி இகழ்ந்திட -வாழ்வாண்

தமையரோ நேர்நோக்காப் பின்சென்று ஆடைத்
தமதின்கை யேந்தி விரைந்தார், -தமையன்சொல்

கேட்டவர் கள்மயக்கக் கண்திறக்கக் காத்தனர்
நாட்டவர் காணா மறைத்தனர் -நாட்டவன்

கண்விழித்துக் கண்டான் தகப்பன் செயலறிந்து
மண்ணில் விருத்தியிலாப் போவாய்நீ -கண்டாயே

கண்ணால் தரங்கெட்ட வன்நிலை, எள்ளியதால்
கொண்டேன்நான் உன்மேலே வன்சினம் -மண்ணிலே

மூவரும் பூமியில் வாழ்ந்தனர் சோதரர்,
தேவனின் எல்லையிலா அன்பினால் -மூவர்

பலுகிப் பெருகினர் பல்வேறு சாதி
நலுகினர் இவ்வுலகில் தான்


ஆதி கலி 15

பாபேல் கோபுரமும் கர்த்தர் மொழிகளைப் பிரித்தலும்


புவியிலே கற்களை மேல்வைத்துக் கட்ட,
புவிவசித்த மக்கள் அறிந்தார் -புவிமண்ணால்

செங்கலைச் சுட்டெடுக்க; மற்றும் புவிதன்னில்
அங்கே அறிந்தனர் கீல்தனை -அங்கே

ஒருமொழி ஓரினமாய் வாழ்ந்தனர் மக்கள்
ஒருவிதி நம்பேர் விளங்கிடச் -சேர்ந்தே

ஒருகோவில் கோபுரம் தன்னைநாம் ஆக்கி
ஒருநகரில் வாழ்வோம் சிறந்து -ஒருநாள்

மனிதர் மலைசேர்க் களிநிகரில் கோவில்
மனிதர் விரைந்தார் மனிதர் -நனிசொல்

வினையாய், குரல்கேள் மனுபடைத்தோர்: ஏனோ
மனிதர் மலைக்கு விரைந்து? -மனிதரார்

கட்டத் தொடங்கினர் பாபேல் எனுமிடத்தில்
கட்டிடம் காண இறங்கினார், -கட்டுகின்றார்

பேர்விளங்க இங்கு, இறங்கினோம் கண்டதிர்ந்தோம்
தீர்பலவாய்ச் செய்வோம் மொழிதனை -தீர்த்து

மொழிகளை வெவ்வேறாய் பார்மனிதன் பேசும்
மொழிதனை மற்றோன் அறியா -மொழிமாற்றிக்

கட்டிடம் நின்றிடச் செய்தார் திருத்தெய்வம்,
விட்டனர் ஊரதைத் தான்


ஆதி கலி 16

நம்பிக்கைப் படலம்


ஆபிராமின் மூதாதையர்


மொழிமாற்றிப் பேச அவர்கள் புரியா
மொழிபேசும் மக்கள் விடுத்து -மொழிப்பல

ஆனதால் மக்கள் சிதறவைத்தார் நேரங்கே,
போயினர் மக்கள் பிரிந்தங்கு -ஆயவன்

தேராகு சேம்வழி வந்தவன்; ஆரானாம்
தேராகின் மைந்தன், சிறுவயதில் -சேரவங்கு;

தேராகு: போவோம்நாம் இவ்வூர் விடுத்திட்டு,
நேராகச் சென்றனர் ஊர்தனை -சீராணின்

வந்தது தேவனின் நல்லுரை ஆபிராம்
வந்திடு ஊர்விட்டு நேர்தேசம்; -வந்தனன்

கானான் இடம்நோக்கி, தேராகும் பிள்ளையால்
போனான் வழியில் நிலைத்தனன் -ஏனோகேள்

எங்கேசொல் போகிறாய் என்மகனே பாலையில்
எங்கேநாம் கண்டாலும் மண்மண்மண் -இங்கே

தரித்திரு யென்சொல்தன் தந்தையை, இல்லை
திருவின்சொல் கீழ்படி வேன்யான் -அருளவர்

பாதி வழியிலே நின்றனர் கூட்டமாய்,
மீதி வழிச்செல்லா நின்றாங்கே -பாதியில்

ஆரானில் போனான் மரித்து, திருவிலாத்
தேராகும் கல்தேயா வில்


ஆதி கலி 17

ஆபிராம் சாராயை மணத்தல்


நாகோரும் ஆபிராம் ஈர்தமராம்; வாழ்ந்திட
நாகோர் பிறப்பவள் சாராயை -வாகை

முடியிலே சூடிட ஆபிராம் நல்ல
முடிவெடுத்தே செய்தான் மணமே -அடியான்

மணமுடித்துச் சென்றன பல்வருடம் ஆயின்
மணத்தாலே பிள்ளை யிலாதே -குணவதியாள்

சாராய் மலடியென ஊர்பேச, தன்மனையாள்
சாராய் மனம்நோகப் பார்த்தனன் -பாரார்

விடுவீண்சொல் மக்கள் உரைப்பரே வீணர்,
சுடுசொல் செவிக்கேளாய், கண்ணே -வடுவாக

நிற்கும் சுடுசொல்லே; நீயோ நறுயின்ப
வற்றாத பேரூற்றே கேள்மகளே -நற்றவர்க்கு

பல்லாண்டும் போயிற்று நல்மணம் செய்திட்டு
எல்லாரும் சாராயை நொந்தனர் -வில்லம்பாய்

வல்லார் இறைசெயல் என்றெண்ணாத் தந்தைத்தாய்
கொல்சொல் பலபேசி னர்பல்லாய் -அல்லாமல்

வாழும்ஊர் வெம்பாலை யின்நடுவே சோலையாம்
வாழும்ஊர் எட்டுத் திசையிலும் -வாழவேறு

ஊரில்லை என்பதால்தான் தந்தை தனையருடன்
ஊரில் தரித்தான் கிடந்து


ஆதி கலி 18

ஊர் விட்டுக் கானான் வா என்று கர்த்தர் ஆபிராமை அழைத்தல்


பலவாகப் பாடு படுத்தவே ஓர்நாள்
கலவா வழிவந்தி டென்றோர் -நிலைவாக்கு

வந்திடவும் கீழ்ப்படிந்தான் ஆபிராம், சென்றிட
அந்நாள் எடுத்தான் முடிவதை -இந்நாளே

வந்திடுவாய் ஊர்விட்டு உன்னைநான் வாழ்த்திடுவேன்
வந்துச்சேர், காண்பிக்கும் தேசத்தில் -வந்தாலே

நம்பி, பெருங்குலமாய்ச் செய்வேன் பெருமையாய்
நம்பு உருவாக்கு வேன்நானே -நம்பும்

உனைவாழ்த்தும் யாவரையும் நான்வாழ்த் துவேன்கேள்
உனைக்கெடுசொல் பேசின் கெடுத்து -வினைக்கேள்

உனைபெரும் மாகுலமாய் மாற்றிடுவேன் வாழ்த்து
உனக்குள்ளே பெற்ற துலகு -இனம்விட்டு

ஊரினின்று வந்தான் வெளிதன் தமர்விட்டுச்
சேரத்தான் கானா யெனுந்தேசம் -தேராகின்

பிள்ளை வழிவந்தோன், நாகோர் அவன்பாட்டன்
பிள்ளைச் செவிமடுத்தான் சொல்தனை -கள்ளமிலாள்

கூடவே வந்தனள் சாராய், கணவனின்
நாடதுயென் நாடே யெனவந்தாள் -காடுமலைச்

சூழ்நில மாயினும் கர்த்தரை நம்பித்தான்
வாழ்ந்திட ஆழ்நம்பி னான்சீராண் -வாழ்மாந்தன்

தேராகின் முன்பிள்ளை ஆரானின் பிள்ளையாம்
பேரனவன் லோத்து உடன்வந்தான் -சேருவேன்

உம்மோடே அப்பா வழிமுழுதும் என்றுரைத்தான்
தம்தமர் விட்டு முடிவுதனை -அம்மான்கள்

மூவரும் சென்றனர் தம்வழியே ஊர்விட்டுத்
தேவனின் சொல்கீழ் படிந்தங்கு, -தேவனின்

திட்டமோ வேறாக மேன்மகனாய் ஆபிராம்
இட்டக்கை யெல்லாமே வாய்த்து


ஆதி கலி 19

கானானில் பஞ்சம் உண்டாக எகிப்திற்குச் செல்லுதல் – ஆபிராம் சாராயைத் தன் சகோதரி என்று உரைத்தல்


நாடதில் பஞ்சம் தலைவிரிக்கக் கேடுவரா
நாடை விடுத்து எகிப்திலே -பாடிலா

நாடுள் உணவுதேடிச் சென்றால், மனையாளை
நாடுவர் பேர ழகியுனை -நாடதில்

ஆதலினால் ஒன்றுசெய்வோம் சாராயென் சோதரி
மோதல் வராதே உணவுக்கொள் -சாதலினும்

சீராக எந்தன் அழகி மனையாளால்
சேரா மறைக்க முடிவுதனை -சீரவர்

வந்தனர் நாடு எகிப்து வளம்கொள்ள
வந்தவர் பேசு எபிரேயர் -அந்நாட்டின்

கோமகன் பல்லோர் மயங்கினர் சாராய்ஓ
மேமகள் என்னே அழகணங்கு -மேமகளாம்

மன்ன னிடஞ்சொல்ல மன்னன் கொணர்கவே
என்ன அழகென்று யாம்காண்போம் -சென்றனர்

மாதை அழைத்து வரவே உரைத்தப்பொய்
வாதை அழைத்ததே ஆங்குதான் -மேதிலான்

மன்னனோ மாது மயக்கம் மிகக்கொண்டோன்
மன்னனும் சாராயைக் கொண்டுவா -மன்னன்

மயங்கினான் என்னே அழகவள் என்றே
மயக்கத்தால் செய்தான் இழிந்து -அயனவள்

சேர்ந்திடும் நாள்வரை காத்திடுவீர் என்னழகி,
சோர்ந்துள்ளாள் தூரப் பயணத்தால் -சேர்ந்திடவே

திட்டஞ்செய்க் கோலன் மயங்கியோன் மண்ணாளும்
எட்டிப் பிறன்மனை நோக்கினான் -மட்டிப்

பிறன்மனை நோக்காதே யென்றறச் சொல்லை
அறவழி மன்னன் மறவான் -பிறன்மனையாள்

என்றறியாக் கொண்டான் உடல்பாற் மயக்கமும்
சென்றவள் சாராய் இடம்வர -அன்றியும்

சாராய் இரவுபகல் கண்ணீர் மணையுள்ளே
தேரா மயக்கங்கொள் மன்னனிடம் -சோரம்

விலைபோக மாட்டேன்நான் என்கதற, கர்த்தர்
நிலைமாறச் செய்தார் முடிவு -கலைமகள்

சாராயின் கற்பிற்காய் வாதைகள் பற்பல,
சாராய் அடைத்தவன்மேல் கொண்டுவர, -தேராதோன்

கண்டானே தன்வன் செயல்தன்னை ஆபிராம்
கொண்டுவா நீதியைச் சொல்லிடு -கொண்டவா

ஏனெனக்குப் பொய்சொன்னாய்? மாக்களும் வேலையும்
கோனுனக்குத் தந்தேன், மனையாளை -ஏனோ

உடன்பிறப்பென் சொன்னாய் உடனே இவளை
விடுப்பேன், அரசன் உரைத்து -விடுத்தவுடன்

நாடுவிட்டுச் சென்றிடுவாய் இப்போதே உன்குணம்
நாடிதுத் தாங்காதே பொய்சொன்னோர் -நாடுனது

சென்றிடுவாய் என்றே பிறப்பித்தான் ஆணைதனை,
சென்றான் எகிப்து விடுத்து


ஆதி கலி 20

ஆபிராம் மீண்டும் கானானிற்கு வருகையும் வளவன் ஆகுதலும், லோத்து ஆபிராமை விட்டுப் பிரிந்துச் செல்லுதலும்


வந்தனர் கானானில் தென்திசைக்கு எல்லாரும்
நிந்தனைப் பஞ்சமும் நீங்கிடவே -எந்தன்

இறைவா! கரைசேர்த்தீர் நட்டமிலா யென்று
குறைக்களைக் கர்த்தரைப் போற்று -குறைபோய்

வளர வளம்பெருக வேலைப் பலவாய்
வளத்தினுள்ளே காணிப் பிரிக்கக் -களத்திலே

சண்டையிட்டார் ஆபிராம் கண்டு சலித்தனன்
சண்டை நிறுத்துவீர்சொல் கேட்டுநீர் -மண்ணிலே

தன்மகன் கண்ணோக்கி எந்தன் உதிரம்நீ
வன்சண்டை வேண்டாம் நமக்குள்ளே -என்சொல்கேள்

சென்றால் இடப்புறம் நாஞ்செல் வலப்புறம்
சென்றுவாழ் வோமே பிரிந்துநாம் -சென்று

மலைமேலே ஏறியவன் கண்ணோ கினானே
நிலத்தினுள்ளே சோதோம் நகரில் -பலவளம்

உண்டெனக் கண்டவன் சென்றனன் சோதோமிற்
கண்டது காணல் அறிவு


ஆதி கலி 21

தேசத்தின் நீளமும் அகலமும் நடக்கக் கர்த்தர் ஆபிராமைப் பணித்தல்


விட்டுப் பிரிந்தப்பின் கர்த்தர் உரைத்தாரே
விட்டுப் பிரிந்தனன் லோத்தவன் -எட்ட

வடதெற்கு மேற்கிழக்கில் எங்கும்பார், பார்க்கும்
இடத்தைத் தருவேன் வழிக்கு -இடமதில்

நாடோடி வாழ்க்கையாய் அங்குமிங்கு மென்திரிந்தான்
நாடைத் தருவேன்நான் என்சொல்லைக் -கேட்டவன்

நாடதின் நீள அகலம் நடந்திரிந்தான்
காடுமலை ஏறி மகனவன் -நாடில்

நடந்திரிந்தான் ஆபிரகாம் நம்பிக்கைத் தந்தை;
நடக்கும் பொழுது, நிலத்தைக் -கொடுத்தார்,

அடடா அழகே இறைவாக்கின் தேசம்,
நடந்தால் அடைவர் வழியார் -நடப்பேன்

நடப்பேன் நடப்பேன் சிறந்து
ஆதி கலி 22

சோதோம் கொமொராவின் மீது படையெடுத்த மன்னர்கள் லோத்தைப் பிடித்துச் செல்லுதல். மற்றும் ஆபிராம் லோத்தைக் காப்பாற்றுதலும்


சோதோம் கொமொராவின் மன்னர் பலவாக
வாதைப் புரிதற்குப் போரிட -வாதை

முறிந்தங்கு ஈராறு ஆண்டுகள் பின்னர்
நெறித்த கலகம் புரிந்து -சிறந்தவர்

பின்னரும் போரிட வந்தனர் வல்லவர்
மன்னர்கள் ஆங்கே முறிந்தோட -வன்செயலாய்ச்

சின்னவன் லோத்தின் உடைமையும் கொள்ளையாய்
மன்னர்கள் போயினர் கொண்டங்கு -அன்னாண்

சிறைபட்ட சேதியை ஆபிராம் கேட்டு,
குறைபல ஆயினும் எந்தன் -உறைக்கீழ்

இருந்தவன் சோதரன், போவேன்நான் கொண்டு
வரவே தமரவன் லோத்து -விரைந்தவன்

பின்சென்றான் மன்னர்கள் மண்ணிறை மக்களை
என்தமையன் நான்மீட்க வீழ்த்துவேன் -வன்படைகள்

என்றவன் சொல்லி இராநேரம் வீழ்த்தினான்
வன்படைகள் மீது பவிஞ்சாக -அன்னவன்

தன்சோ தரனின் வலிநீக்கி வந்தவனை
என்னே உமதின் வலியெனப் -பின்னிட்டச்

சோதோமின் மன்னவன் வந்தான் எதிர்கொண்டு
வாதை விடுத்தோனைக் கண்டு


ஆதி கலி 23

மெல்கிசெதேக்கின் வருகையும், ஆபிராம் தசமபாகம் கொடுத்தலும்


விண்ணார்முன் மேலூராம் சாலேமின் மன்னவன்
விண்ணவர் தெய்வத்தின் ஊழியன் -மண்ணிலே

விண்ணவன் மெல்கி செதேக்கு வரவங்கு
மண்ணப்பம் ஊணொடு சாறதை -மண்வீட்டில்

வந்தவனை உள்ளமர்த்தி ஆபிராமும் தன்னுடைமை
வந்தனன் கொண்டங்கு, சீர்சீர்சீர் -வந்தனன்

பற்பல முத்துகள் பொன்னணி வெள்ளியொடு
பற்பல ஆடையும் சேர்த்தவன் -நற்றவனும்

தந்திடக் கொண்டுவந்தான் சீர்சீர்சீர் வந்ததும்
தந்தானே பத்திலோர்ப் பங்குதனை -வந்தோன்சொல்:

விண்ணவரின் முன்நான் திருவூழி யஞ்செய்வோன்
மண்வளத்தின் பங்கை எடுத்தனன் -மண்ணிலே

பத்திலொரு பங்கு முதல்
ஆதி கலி 24

சோதோமின் மன்னன் வளத்தில் பங்குக் கொடுக்க முனைதலும் ஆபிராம் வேண்டாம் எனத் தவிர்த்தலும்


சோதோமின் மன்னனும் வந்தடைந்தான் ஆபிராம்
சோதோமின் மன்னனிடம் ஒப்படைக்கச் -சோதோமின்

மன்னனவன் கொண்டுசெல் என்வளங்கள் யாதெனினும்
மன்னவன் கூலியைப் பேசிட -மன்னா

வெறுங்கூலிக் காய்நானும் செய்திலன் செய்கைப்
பெறுவது வன்னே இழிவு, -சிறியர்

உணவுண்டப் பின்னர் மறவரின் பங்குத்
திணைமட்டும் தந்திடு வீர்நீர் -உணவு;

இவைநடந்த பின்னர்ப் பிரிந்துவந்தான் கோனும்
அவைதன்னில் எந்தவோர் பங்குஞ் -சுவைக்காதே

ஆபிராம் தன்கை உழைப்பையே நம்பினான்
ஆபிராமை நல்லிறைவன் வாழ்த்தியதால் -ஆபிராம்

சென்றுசேர்ந்தான் வீடிருக்கும் நாடு
ஆதி கலி 25

பிள்ளை வேண்டி ஆபிராமின் மன்றாட்டு, கர்த்தர் அவனை வாழ்த்துதல்


அஞ்சாதே ஆபிராம் நானேயுன் கேடகம்
அஞ்சாதே நானுக்குப் பேர்பலனே -எஞ்சி

எனக்கென்ன உள்ளது தேவனே பிள்ளை
எனக்கிலை என்றே புலம்பி -இனியிங்கு

என்வீட்டு வேலைப் புரிவோனே பின்னடைவான்
என்றவன் சொல்ல, உளராதே -என்சொல்கேள்

விண்ணைப்பார் விண்மீன்கள் எண்ணிப்பார் உன்வித்து
விண்மீன்போல் பல்லோர் நிறைத்திடுவர் -விண்ணில்

தலைமேலே உள்ளமீன் நான்கணக்குச் செய்வேன்
சிலநேரம் எண்ணிக்கைச் செய்தான் -தலைமேல்

வலையில் விழாவிண்மீன் ஒன்று இரண்டு
தலைவன் கிடைபார்க்கும் நாளில் -தலைவனாம்

ஆபிராம் தேவனை நம்ப அதுவேதான்
ஆபிராமின் தேவனும் நீதியாமே -ஆபிராமை

நோக்கியவன் தேவன் பலிமிருகங் கொண்டுவா
வாக்கெனது நானுரைப் பேனென -வாக்குகேள்

துண்டித்த ஊண்சதைப் பிண்டங்கள் மேடையிலே
கண்பட வைத்தனன் ஆபிராம் -துண்டுபலி

மீதினிலே வான்புட்கள் கீழிறங்க ஆபிராமோ
வேதபலிச் சீர்செய்தான் ஆணவன் -வேதர்சொல்;

ஆதவன் மேற்கே இறங்க மயங்கினான்
வேதவன் பீடம்முன் சற்றேதான் -வீதம்

திகிலும் இருள்சூழ்ந் திடவும் உரைகேள்
தகைமுன்சொல் வேதவர் வாக்கு -அகத்திலே

நானூறு ஆண்டுகள் மண்பிறனில் உன்வித்து
வானின்கீழ் வாழ்வர் அடிமையாய் -வானுலகந்

தன்னைப் படைத்தவர் யானே நியாயந்தீர்த்(து)
உன்வித்தைக் கொண்டுவரு வேன்கேளாய் -அன்றியும்

காரிருளை வென்றூ டுருவி நெருப்புவரச்
சேரந்த ஊன்பலி வெந்திட, -தேராகு

வித்தவன் கேட்டான் உரைச்சொல் இறைவனின்
சித்தம் அறிந்தான் கிழம்


ஆதி கலி 26

நாட்டின் எல்லைகள் குறித்து சொல்லுதல்


எகிப்தின் வரையெல்லை ஐபிராத்து உந்தன்
சுகமாய் இருக்குமே வித்து -வகைகுலத்தோர்

வாழும் நிலமிதை உன்வித்தோர் வந்தடைவர்
வாழத்தான் என்றார் உரைத்தவர் -வாழ

அடிமை விடுத்து வரும்போது மக்கள்
அடிச்செய்தோர் நன்வளம் தன்னை, -கடையிலே

கொள்ளை எடுத்து வருவர் திருப்பகன்றார்
அள்ளி வருவர் வளமதின் -தள்ளித்

தலைமுறை நான்கிலே வித்தோர் வருவர்
தலைமுறை நான்கு வரையில் -வலையில்

அடிமை எனயிருப்பர் என்றார் இறைவன்
அடிமை நிலையைக் குறித்து -கடையார்

எமோரியர் வன்செய் நிறைவாகிப் போகும்
எமோரியர் வாழ்தேசம் மக்கள் -அமைதல்

திரும்பி வருவரே வித்தோருன் தேசம்
திருவும் உரைத்தாரே வாக்கு -சரியோய்

இதுநடக்கும் முன்னரே நீசாவாய் ஆனால்
முதிர்வயது வாழ்வாய் மகனே -இதினாலே

என்சொல் மறையாது செய்தேன் உடன்படிக்கை
உன்னுடன் நானும் சிறந்து


ஆதி கலி 27

சாராய் தன் அடிமைப்பெண் ஆகாரை ஆபிராமிற்குக் கொடுத்தல்


வாழ்ந்தனர் கேன்கத்மோன் ஏத்கெனிசி நான்குலம்
வாழ்ந்தனர் ஏத்பெர்சு ரெப்பியாமின் -வாழ்மூன்றும்

வாழ்ந்தனர் கானான் எமோரி கிருகாசி
வாழ்த்தேவன் கைகொடுப்பேன் நானுனக்கு -வாழ்த்தேவன்

இந்த உடன்படிக்கைச் செய்ததும் சாராயோ
வந்தனள் ஒர்முடிவு, தன்னுடன் -வந்த

எகிப்தியப் பெண்ணடிமை ஆகார் மடியில்
தகைக்கொடுத்தாள் பிள்ளைப் பெறவே -தகையவள்

ஆகார் தரித்தனள் கர்ப்பம் உடனேயே
ஆகார் அவமதித்தாள் சாராயை -ஆகார்செய்

வன்செயல் சாராயும் தாங்காப் புலம்பினாள்
என்செய்வீர் ஆண்டவனே என்றவள் -வன்னாக

இப்போது ஆகாரின் பக்கம்நீர் என்றாலே
எப்போதும் பந்தமிலை, கேள்கணவா, -தப்பாதே

நம்மிருவ ரின்னிடையே கர்த்தர்தான் செய்வாரே
தம்நீதி யென்றென்றும் தானவர் -அம்மாடி

உன்னடிமை உன்கைக்கீழ் உள்ளாள் எதுசெய்வாய்
உன்பாடு என்னை விடுவாயே -என்செய்தால்

உன்சினம் தானடங்கும் செய்திடு நீசாராய்
என்றவன் விட்டானே கை


ஆதி கலி 28

ஆகார் சாராயை விட்டு ஓடுதல், தேவதூதனைச் சந்தித்தல் மற்றும் இசுமவேலின் பிறப்பு


வதைத்தனள் வேலைப் பலதந்து ஆகார்
வதைத்தாங்கா ஓடினாள் ஆகார் -வதைக்காண்நல்

தேவன் அனுப்பினார் நல்தூதன், கேட்டானே
தேவதூதன்: செல்கிறாய் எங்குநீ -தேவதூதே

நாச்சியார் வன்கொடுமைத் தாளாதே செல்கிறேன்
பேச்சைகேள் செல்திரும்பி நீயங்கு -நாச்சியார்

கீழ்வாழ்வாய் உன்புலம்பல் தன்னைச் செவிகொடுத்து
வாழ்சேய் இறைவன் கொடுத்திட்டார் -வாழ்த்தேவன்

உன்புலம்பல் கர்த்தரும் ஊன்பிறவி நன்கேட்டார்,
உன்மகனைப் பேர்சொல் இசுமவேல் -உன்பிறவி

வன்வலிமைக் கொண்டோனாய் தன்தமர் எல்லார்க்கும்
வன்னெதிராய் நின்றிருப்பான் கேள்நீயே -அன்றியும்

என்னைக்காண் தேவனை நான்கண்டேன் என்றவள்
தன்னோடு பேசியதால் தேவனுக்கு -என்னைக்காண்

தேவனென்று பேரிட்டாள் ஆகார், லகாய்ரோயீ
தேவன் எபிரேயு வில்தானே -மேவியாள்

பெற்றாள் இசுமவேல் கைப்பிள்ளை ஆகாரும்
சிற்றாளாய், சாராயின் கீழ்படிந்தே -சிற்றாளின்

பிள்ளையே தன்பிள்ளை என்வாழ்ந்தான் தந்தையும்
பிள்ளையிவன் இல்லை திரு


ஆதி கலி 29

கர்த்தர் ஆபிராம், சாராய் இருவரின் பெயரை மாற்றுதல்


ஆண்டுகள் பத்தொடு மூன்றாக, பின்கர்த்தர்
ஆண்டவர் என்முன்னே நீநடப்பாய் -வேண்டும்

உடன்படிக்கை உன்னோடே செய்ய, புரிவேன்
தடையில்லை, கர்த்தர் தொடர்ந்து -அடையும்

திரளாம் குலங்களுக்குத் தந்தையென்று உன்னை
வரையிலா வாழ்த்தினேன் கேளாய் -வரையுன்

பெயர்தன்னே ஆபிராம், ஆபிரகாம் என்றே
பெயர்மாற்றி னேன்நான் உனக்கு -பெயராணே

நாடோடி வாழ்க்கை யிதுயென் கலங்காதே
நாடிதை உன்வித்தோர்க் கைக்கொடுப்பேன் -நாடிதை

உன்வித்தோர் ஆண்டுகொள்ளப் பல்லரசர் வந்திடுவர்
என்சொல்லை ஆபிரகாம் கேட்டனன் -அன்றே;

உடன்படிக்கை ஓன்றே, விருத்தசேதம் செய்வாய்
இடம்பிறக்கும் ஆண்மக்கள் எல்லாம் -இடையே

உடன்படிக்கை எந்நாளும்; வித்தோர் அழைத்தே
இடம்சொல்வாய் நீமற வாது -இடம்வாழ்

இடைக்கீழ் நுனித்தோல் இடுமுறை ஆணின்
எடுத்தலோ ஆபிராம் ஆணை -எடுக்குந்

தலைமுறைகள் ஏனெடுக் கின்றீர், தலைக்கேள்
தலைமுறைக்குச் சொல்வீர் விடையாய் -தலைமுறையில்

செய்யா மனிதனோ செல்வான் அறுப்புண்டு,
செய்வீர் விருத்தசேதம் நீநினைவாய் -மெய்யாள்

மனையவள் சாராய் இனிநீயும் சாராள்
எனவழைப்பாய் என்றார் இறைவன் -நனியாய்த்

திரளாய்ப் பெருமக்கள் வந்திடுவர் ஈங்கே
வருவர் பலமன்னர் தானே -திருவும்

பகன்றார் மொழிமுன் னுரையாக, அன்று
பகன்றச்சொல் பின்னே நிறைந்து -மகனாய்

ஒருவனைப் பெற்றெடுப்பாள் சாராள் எனுஞ்சொல்
திருமகன் கேட்டுக் கவிழ்ந்து, -செருவயதில்

தேர்மகனா இந்நேரம் என்று நகைத்தனன்
நேர்சேர் இசுமவேல் வாழ்ந்திடட்டும் -நேர்மகன்

நூறு வயதென் மனையாளின் தொண்ணூறு;
பேறு எமக்குத் தகைக்குமோ -பேறென்

இசுமவேல் உம்முன் பிழைக்கவே செய்வீர்,
திசையெனக்கு நீரும் அருள்வீர் -இசைந்தவள்

சாராள் பெறுவாள் ஒருபிள்ளை என்சொல்கேள்
பேரது ஈசாக்கு வைத்திடு, -பேராணாம்

சாராள் கணவனே ஆபிரகாம், நீசேர்வாய்
நேராள், மகனைப் பெறவிங்கு -சீராண்

இசுமவேல் வாழநீ விண்ணப்பம் செய்தாய்
இசுமவேல் பேர்குலம் ஆவான் -இசுமவேல்

பன்னிரு மன்னர்கள் பெற்றிடுவான் பேர்குலமாய்
என்சொல்கேள் ஆபிராம் நீயிங்கு -அன்னாணும்

தேவன்சொல் கீழ்படிந்து ஆபிரகாம் தன்மக்கள்
தேவன்செய் நல்விருத்த சேதனம் -கோவை

நுனித்தோல் எடுத்தான் இசுமவேல், தன்னின்
நனிதாகக் கீழ்ப்படிந்து ஆங்கு


ஆதி கலி 30

மம்ரேயில் கர்த்தர் ஆபிரகாமை மூவராகச் சென்று சந்தித்தல்


மம்ரே சமபூமி வாழ்வோனை மூவராய்,
தம்சித்தம் சொல்வருகை; வந்தோரே -நும்மருள்

எம்வீட்டில் நல்விருந் துண்ணும், தருவேன்நான்
உம்கால் கழுவிட நீர்தனை -எம்பசிக்குச்

செய்வாய் விருந்து எமக்காக; சொல்படியே
செய்யவே சாராள் இடமோடி, -செய்யப்பம்

என்றவனும் காளைத் தெரிந்தெடுத்து வந்தவன்
தன்மனையாள் கையிட்டான் ஆங்கவன் -தன்னாட்டின்

தேர்பாலும் வெண்ணெயும் தான்தெரிந்தான் கன்றொன்று
நேர்மகன் கைவிருந்து வைக்கவும் -சேர்உணவை

மூவர் புசித்ததும், எங்கே மனைசாராள்
மூவர் வினவினர் ஆங்கவர் -தேவன்செய்

பேறுகாலம் ஒன்றிற்குள் பிள்ளை அவள்கையில்
பேறிருப்பான் என்சொல்கேள் என்றதும் -பேறெனக்கா

மூதாட்டி யானன்றோ உள்ளத்தி னுள்ளேதான்
மூதாட்டி எண்ணி நகைத்தனள் -ஏதோ

வழிபாடு நின்றப்பின் பேறுண்டோ என்று
வழிவழியாய் மக்கள் நிலையைக் -கிழவி

மனதில் நினைத்தவள் எண்ணி உளத்தின்
கனத்தால் நகைத்தாள் மகளோ -இனத்திறை

கர்த்தர் உளமறிந்து, சாராளே ஏன்நகைத்தாய்?
கர்த்தரால் கூடாத தொன்றுன்டோ -கர்த்தர்யாம்

வந்திடுவோம் பேறுகாலம் ஒன்றுள் மகனைநீ
வந்திடுவாய், கைகளிலே கொண்டுநீ -வந்து,

நகைத்தேனோ யானோ எனக்கேட்டாள் சாராய்
நகைத்தாய்நீ, கேட்டோம்யாம் சத்தம் -நகைத்தோளே

உன்கையில் ஓர்பிள்ளை நன்கர்த்தர் நம்பிடுவாய்,
அன்று நகைப்பாய்ச் சிறந்துநீ -அன்னார்

வழிசென்றார் ஈர்நகரம் சோதோம் கொமொரா
வழிசெல்ல ஆபிரகாம் சென்றான் -வழிசேர்

வழிசென்றார் ஈர்தூதர் ஈர்நகர், வேதர்
வழிவிட்டோன் தன்னோ டுரைத்து


ஆதி கலி 31

சோதோம் கொமொரா அழிப்பேன் எனக்கர்த்தர் முன்னுரைத்தல், ஆபிரகாமின் மன்றாட்டு வேண்டுதல்


வழிவிட் டனுப்பவே வந்த திருவை
வழியெனது நிற்பாய், குலமும் -வழிநிற்கச்

செய்வாய்நீ நானறிவேன்; செல்கின்றார் அந்நகரின்
செய்கைகள் யாமறிவோம் இன்றுதான் -செய்கையாம்

என்செய்கை நானும் மறைப்பேனோ உன்னிடம்
சென்றார், கொடிசோதோம் கொம்மொரா -வன்னழிக்க

என்தூதர், ஆபிரகாம் உன்செவிக்கு மெய்சொன்னேன்
என்றவரும் முன்மொழிந் தார்திரு -மன்னவா,

பேசத் துணிந்தனன் ஆபிரகாம் மன்றாட்டு,
வீசுவீ ரோஉம்வாள் நீதியின்மேல்? -வீசீர்

இருநகரை ஐம்பது பேரிருந்தால் தேவா
இருநகரை விட்டிடும் நேர்சீர் -சரிசரி

நீதிமான் ஐம்பத் திருந்தால் அழிப்பதிலை
நீதியார் கர்த்தர் உரைத்திட -நீதிமான்கள்

ஐந்து குறையென்றால் நீரழிப்பீ ரோதேவா
ஐந்து குறையென்றால் விட்டிடுவேன் -ஐந்துகுறை

நீதிமான் நாற்பதும் ஐந்தும் சரிவிட்டு
நீதியார் கர்த்தர் உரைத்திட -நீதிமான்கள்

நாற்பது பேரிருந்தால் நீரழிப்பீ ரோதேவா
நாற்பது பேருக்காய் விட்டிடுவேன் -நாற்பதே

நீதிமான் நாற்பது பேரிருந்தால் விட்டிடுவேன்
நீதியார் கர்த்தர் உரைத்திட -நீதிமான்கள்

முப்பது பேரிருந்தால் நீரழிப்பீ ரோதேவா
முப்பது பேருக்காய் விட்டிடுவேன் -தப்பாது

நீதிமான் முப்பது பேரிருந்தால் விட்டிடுவேன்
நீதியார் கர்த்தர் உரைத்திட -நீதி

இருபது பேர்செய்தால் நீரழிப்பீ ரோயென்?
இருபது பேருக்காய் விட்டு -திருநானே

நீதி இருபது பேர்செய்தால் விட்டிடுவேன்
நீதியார் கர்த்தர் உரைத்திட -நீதிமான்கள்

பத்துக் குறைந்திருப்பின் நீரழிப்பீ ரோதேவா?
பத்துக் குறைந்தாலும் விட்டிடுவேன் -பத்துபேர்

நீதிமான் பத்தே குறைபேர் இருந்தாலும்
நீதிமான் சேர்த்தழிக்கா விட்டிடுவேன் -நீதியார்

சொல்லிவிட்டுச் சென்றாரே ஆபிரகாம் வந்திட்டான்
சொல்கேட்டோன் கோனும் கலங்கு


ஆதி கலி 32

சோதோம் கொமொராவின் அழிவும், லோத்தின் குடும்பத்தை இருதூதர்கள் காப்பாற்றுதல்


சேர்ந்தனர் ஈர்தூதர், சோதோம் கொமொராவில்
சோர்ந்தவர் கண்டான்லோத் கண்டவுடன் -சேர்ந்திடும்

என்வீட்டில் இன்றிரவு தங்கி விருந்துண்வீர்
என்றனன் லோத்து அழைத்ததும் -என்ன?

இலைநாங்கள் இந்நகரின் சத்திரம் தங்க
விலைகொள்வோம் எங்கள் வழியில் -நிலையில்லை

சோதோமில் விண்ணவர் எங்களுக்குக் கண்வைத்தாய்;
பேதையோ வாரீர் விருந்துண்ண -பேதை

வருந்தியவன் கேட்க இருவரும் வீடு
வரவும் நகரமே சேர்ந்து -இருவர்

விடுவெளியே நாங்கள் சயனிக்க; ஐயோ
விடுவேன் இருபுதல்வி யர்நான் -விடுத்திடும்

வந்தவர் என்விருந்து, விட்டால் வெளியிலே
அந்தக் கொடிபாவம் வேண்டாமே -இந்தா

இருபுதல்வி யர்உள்ளார் ஆணறியாப் பெண்டிர்
இருவருக்குச் செய்வீர்வன் னாய்நீர் -இருமகள்கள்

எங்களுக்கு வேண்டாம்உன் பேடிப் புதல்வியர்
தங்குமிரு தூதரைக் கொண்டுவா -எங்களுக்கு

வேண்டும் அவர்போலே மேலழகு ஒப்பிலை
வீண்புதல்வி ஆணறியா தோரவர் -வீண்மகனே

நாடோடி உன்பேச்சு வீண்பேச்சு எங்களுக்கு
நாடோறும் வேண்டும் புதிதாகத் -தேடினோம்

உன்வீட்டில் வந்தனரென் யாமறிந்தோம் விட்டிடு
இன்றிரவு போவாய் விழுந்திடும் -என்றார்

கதறக் கதறும் மொழிகேளா மக்கள்
கதவை உடைக்க நகரம் -விதமாய்க்

கதவுள்ளே தூதரும் சேர்த்திழுத்தார் லோத்தை;
கதவடைத்துச் சொன்னார் மொழியை -கதவுகள்

கண்காணாச் சென்றார் நகரத்தார் கைத்தடவி,
கண்முன் இருந்த கதவெங்கே -கண்மூட்டம்

கொண்டவரும் தேடவே வந்த குருட்டாட்டம்
கொண்டவர் போனார் அலுத்தங்கு -மண்ணிலே

செல்லாதே காலம் இருள்நகரம் இவ்விரண்டும்
எல்லா விதத்திலும் சோரம்போய் -மெல்ல

எமக்கு விருந்துசெய்தாய் உன்மக்கள் கூட்டி,
சுமைவிட்டு ஓடிடுவாய் லோத்து


ஆதி கலி 33

லோத்தின் மருமகன்கள் வர மறுத்தலும் லோத்தின் ஓட்டமும்


மருமகன்கள் யாருளரோ உன்நிமித்தம் தப்பி
வரட்டுமே உன்னோடே காப்போம் -திருக்கர்த்தர்

சித்தம் அழிக்க அனுப்பினார் ஈர்நகரச்
சத்தம் அடைந்தது விண்தனை -சித்தம்

நியந்த மருமக்கள் தான்கேட்டான் லோத்து
வியந்தனர் ஏனழியும் என்று -நியந்தவர்

ஏளனம் ஏனோ நிறையவே நன்றாக
வேளை நகர வளமிது -ஆளார்யாம்

விட்டு வரமாட்டோம் என்றுரைத்த பேதைகள்
விட்டுச் செலமனமில் லோத்துமே -எட்டிச்செல்

குன்றின்மேல் உன்மனையாள் உன்புதல்வி யோடேதான்
வன்னழிவு வந்திடும் இன்றுதான் -என்னாலே

குன்றிற்கு ஏறிச் செலயெனக்கு ஆகாதே
சென்றிடுவோம் நேரே சிறுநகரம் -என்றவனும்

கேட்கவும், சென்றிடு, பார்க்காதே வன்நகரம்
கேட்பாய்சொல் என்றார் இறைதூது -ஆட்கள்நீர்

அந்நகரம் சேரும் வரையாம் அழிக்காதே
இந்நகரம் காத்திடுவோம் ஆதலால் -அந்நகரம்

சென்றிடுவீர் நால்வர் விரைந்தே, பகன்றவரும்
நன்நான்குக் கைப்பிடித்து விட்டிட -நன்றே

திரும்பி நகரத்தைக் காணாதீர் சொல்லை
விரைசெல்லும் யாவரும் கேட்டும் -திரும்பினாள்

விண்ணின்று வீழ்ந்த எரிநெருப்பின் சத்தத்தைக்
கண்காணப் போனாள்தூண் உப்பாகி -கண்காண

உப்புத்தூண் தன்மனைவி ஆனாலும் ஓடினான்
தப்பியே லோத்தும் புதல்வியரும் -அப்பாடா!

தப்பித்தோம் என்றிருக்க, சென்றிடத்தில் தீயோரால்
தப்பித்து ஓடினான் குன்று


ஆதி கலி 34
ஆபிரகாம் சோதோம் அழிந்து புகை எழுவதைக் காணுதல்; லோத்தின் மகள்கள் மூலம் வழியார் பிறத்தல்


விடியலில் வந்தனன் ஆபிரகாம், வந்து
கொடிநகரம் நோக்கியவன் கண்டான் -நெடிப்புகை

மேலெழும்ப ஈர்நகரம் சொல்படியே கண்டானே
காலைவேளை யில்தான் அழிந்திருக்க -சீலார்

இதோகாண் மணமுடிக்க ஆளில்லை காண்பாய்
அதோநம் தகப்பன் அவனால் -இதோகன்னி

நாமிருவர் பெற்றிடுவோம் பிள்ளை எனச்சொல்லி,
தாமிருவர் ஊற்றினர் கள்தனை -ஆமவன்

கள்வெறியால் லோத்தும் படுத்திருக்க வந்தனள்
கள்ளாய் மகள்மூத்தாள் சேரவே -மெள்ள,

தகப்பன் அறியாதே; பின்மற்ற நாளில்,
தகப்பனுக்கு ஊற்றினர் கள்ளை -தகப்பன்

அறியா தறிந்தனள் மற்ற இளையோள்
கறையாகப் பெற்றனர் மக்கள் -அறியான்

அறிந்தவர்ப் பெற்றனர் மோவாபு அம்மோன்
அறியும்நீர் இக்குலங்கள் உண்டு


ஆதி கலி 35

கேராரூரில் ஆபிரகாம் சாராளைத் தன் சகோதரி என்று சொல்லுதல்


பின்வந்தான் ஆபிரகாம் கேராரூர் வாழ்ந்திட
வன்செய் நகரத்தார் உன்னிமித்தம் -என்றவனும்

சாராளைச் சோதரி என்றுரைத்தான் ஆபிரகாம்
பாராளும் மன்னன் அழைத்தவன் -பார்த்தேன்

இரவில் கனவொன்றைக் கண்டேன் அரசன்
திருமகளைக் கொண்டதினால் செத்தாய் -விரைவாக

விட்டிடுவாய், சாராள் மனைவி ஒருமகனின்
விட்டிடு வாக்கன் மனைவியை -தட்டியே

சோதரன் என்றவளும் சொன்னாளே என்னிடம்
சோதரி என்றவனும் சொன்னதால் -வேதவர்

நீரோ அழிக்காதீர், கேட்டிடுவீர் என்சொல்லை
நேராகக் கூறும் நினைவுதனை -நேராண்

அழைப்பித்தேன் என்னின் அமைச்சர்ப் பெருமார்,
தழைக்காதே நம்மக்கள் கர்ப்பம் -நுழையா(து)

அடைத்தாரே கர்த்தர் இவள்நிமித்தம் வன்னாய்
அடைத்தார், பகன்றேன் கனவு -அடையாது

விட்டிடுவோம் நாமிவளை இன்றே அழைப்பித்து
எட்டிடுவோம் கோமான் உடன்படிக்கை, -கிட்டிச்சேர்

முன்னுரைப்போன் வேண்டிட, கர்த்தரும் கண்வைப்பார்
நன்றாக நம்மேல் நிலைத்திங்கு -என்றே

இருவர் அழைப்பித்தேன் நாடாள் அரசன்
விரைந்துநீர் வந்தீர் அழைத்துத் -திருவின்பால்

கேட்டேன் அரசனும், ஏன்செய்தீர் இங்ஙனம்
மீட்டாரே கர்த்தர் எனை


ஆதி கலி 36

அபிமெலெக்கோடு ஆபிரகாம் உடன்படிக்கை செய்தல்


இறையச்சம் இங்கில்லை என்றேதான் செய்தேன்
நிறையவள் சோதரி மெய்யே -முறையில்

தகப்பன் இருவருக்கும் ஒன்றேதான் தாயோ
வகைவேறு தானே மணம்செய் -வகையாய்

பலவெள்ளிக் காசுதனைக் கைக்கொடுத்த மன்னன்
நிலைக்கர்த்தர் முன்னே எமக்காய் -அலைபோல்

நிலத்திலுள்ள மாந்தரின் நன்மைக்காய் நீரும்
தலஞ்செழிக்க மன்றாடு வீர்நீர் -அலரவள்

சாராள் அவனோக்கி: பாராய், பெருமகளே
பாராளும் என்னைநீ வஞ்சித்து -நேராண்மை

நான்வழுவச் செய்ததால் இட்டிடுவேன் முக்காடு
நான்கடிந்தேன் இங்ஙனம் தானுனை -மேன்சீராண்

நின்றனன் ஆபிரகாம் மன்றாடத் தேவனிடம்
மன்றாட்டைக் கர்த்தர் செவிமடுக்க -மன்னவன்

மக்கள் தனைகுணம் செய்து விடுவித்தார்
தக்கார்க் கருவைத் திறந்து


ஆதி கலி 37

ஈசாக்கின் பிறப்பும், இசுமவேல் ஈசாக்கை இகழ்தலும், இசுமவேலை ஆகாரோடு துரத்திவிடச் சாராள் கேட்டுக்கொள்ளுதல்


சொல்படியே சாராளும் பெற்றெடுத்தாள் ஈசாக்கை,
சொல்கேட்டு ஆபிரகாம் செய்தானே -நல்நுனித்தோல்

சேதத்தை எட்டா வதுநாளில்; பால்மறந்தான்
வேதர்ச்சொல் பிள்ளை சிறந்தங்கு -பிள்ளையவன்

பால்மறந்த நாளதில் பார்வியக்கச் செய்வித்தான்
பால்மறந்த பிள்ளைக்காய் ஓர்விருந்து, -கோல்கொடுத்துச்

சேயவனைக் காத்தனன் தந்தையும், ஆகாரின்
சேயவனோ செய்தான் இழுக்காக -சேயவன்மேல்

சாராள் சினங்கொண்டாள் ஏளனம் செய்பிள்ளை
வேராள் மகனிவன் என்பிள்ளை; -தாரை

அழச்செய்தான் நீரும் அதனாலே வேறாய்
இழந்திடும் பிள்ளை முதலோன் -வழக்கில்

பதின்மூன்று ஆண்டுகளாய் என்மகன் என்று
கதைசொல்லி நான்வளர்த் தேனே -இதுசொல்லி

என்பிள்ளை விட்டிடச் சொன்னாள் மனைவியும்
என்னுள்ளம் போனதே வெந்திங்கு -என்செய்வேன்,

மன்றாடக் கர்த்தர் இடம்சென்றான் ஆபிரகாம்
என்சித்தம் சாராளின் சொல்படிகேள் -என்சொல்மெய்,

பேர்குலம் ஆவான் இசுமவேல்; விட்டிடு,
பேர்மகனைத் தாயோடு தான்நீயும் -சீர்கோன்

விடிகாலை அப்பம் சிலகொண்டு நீரும்
குடிகொடுத்து ஆகார் மகனைக் -குடியூர்

விடுத்து வழியனுப்ப, போக்கிடம் இல்லா
விடைக்கொடுத்தான் சேயுடன் தாய்


ஆதி கலி 38

பெயர்செபாவில் கர்த்தரின் தூதனை ஆகார் காணுதல்


பெயர்செபாப் பாலை அலைந்திரிந்தாள் தாயும்
செயல்புரியாப் பேதையாள் சேயோ -இயல்நீரும்

போனது வன்வெயிலில் சேயவன் தாகமெனப்
போனாளே தாயும் விடாய்த்தங்கு -ஏனேனோ

என்பிள்ளை என்கண்முன் சாவதைக் காணவோ
வன்வெயிலில் தாகமென நிற்கின்றான் -என்செய்வேன்

என்றவளும் கூவிக் கதறவும், விண்ணவர்
என்னா னதுனக்கு என்றுகேட்க -நன்பெண்

எழுந்துச்செல், பிள்ளையின் கைப்பிடித்துப் போவாய்,
செழுமையாய் ஆவான் மகனும் -வழிசெய்வார்

கர்த்தரும் பிள்ளைச் செழிப்பாய் வளர்செய்வார்
கர்த்தரை நம்பிடு வாய்நீதான் -கர்த்தரவர்

கண்திறக்க நோக்கினாள் ஆகார் வெளிநிலத்தில்
தண்ணீர்த் துரவதைக் கண்டவள் -தண்ணீர்க்

கொடுத்தாள் மகனுக்கு; கர்த்தர் அருளால்
தடையின்றிச் சேயும் வளர்ந்தான் -படைவீரன்

வில்வித்தைத் தேர்ந்தானே கற்றவனும் தாயவள்
நல்லதெனக் கண்டோர் மனைவியை -எல்லை

எகிப்தியப் பெண்ணைக் கொணர்ந்தாள்; மனைவி
தகைத்துச் செழித்தானே வேல்

ஆதி கலி 39

அபிமெலெக்கோடு ஆபிரகாம் உடன்படிக்கைச் செய்தல்


அரசன் அபிமெலெக்கு ஆபிரகாம் நோக்கி
விருந்தாக வந்தனயே உன்னை -விரைவாகக்

கர்த்தர் செழிப்பாக்கி உள்ளாரே ஆதலால்
கர்த்தர்முன் ஆணையிடு வாய்நீயே -கர்த்தர்முன்

என்தேசம் என்மக்கள் தீங்கேதும் வாராதே
நின்மக்கள் காத்திட வேண்டுமென்று -தன்பக்கம்

கோன்நீயும் செய்வாய் அரசனவன் கேட்டானே
வான்கர்த்தர் முன்னாணை அன்றுதான் -ஏன்சொல்லும்

உன்வேலை ஆட்கள் அபகரித்த என்துரவை
உன்கையால் மீட்டிட்டுத் தந்திடுவாய் -என்ன

அபகரித்தா ரோஉன் துரவை எனக்கு
அபயமிட்டால் தந்திருப்பேன் நானே -சபையோரே

கர்த்தரின் முன்னராய் ஆணை யிடுவேன்நான்
கர்த்தரே நம்மிடையே சான்றாகக் -கர்த்தரின்பேர்

வைத்து யிடுவித்தான் ஆணை அதனாலூர்
வைத்தனர் ஊர்பெயர்சே பாவென -வைத்தவன்

ஏழெண்ணிப் பெண்ணாட்டுக் குட்டி அவனிறுத்த
ஏழெண்ணிக் கையெதற்கு மன்னன்கேள் -வாழுமிவ்

ஏழுகுட்டிப் பெண்ணாடு என்னிடம் வாங்கினால்
ஏழிது நம்மிடைச் சான்றுதான் -ஏழிதை

வாங்கிடும் என்கையால் ஏழெண்ணி ஆடுகள்
வாங்கினால் தானே துரவுகள் -நாங்களிங்கு

வெட்டியதை ஒப்புக்கொள் கின்றீர் அரசரே
பட்டார்கள் எம்மக்கள் பாடுதான் -இட்டார்

உடன்படிக்கைச் செய்தனர் ஆபிரகாம் அந்நாள்
உடனிருந்தான் சேனைத் தலைவன் -உடன்படிக்கைச்

செய்தவுடன் சென்றனர் அம்மக்கள் நாட்டிற்குச்
செய்த அரசனும் தானங்கு -செய்தவர்

செய்த உடன்படிக்கை யாலே இடம்தன்னின்
மெய்பெயர் மாறி, பெயர்சேபா -எய்தனன்

நல்லமைதி ஆபிரகாம் ஆங்கே, வழிபட்டான்
நல்லிறைவன் தன்னின் பெயர்


ஆதி கலி 40

ஈசாக்கைப் பலிகொடு என்று கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தல்


வளர்ந்தனன் கோமகன் நன்றாக ஆங்கு
வளர்த்திறைவன் கோமகனைப் பார்த்து -வளர்ந்தோனே

வாமகனே நீமலை யேறி இடம்சேர்ந்துப்
பூமகன் தன்னைப் பலிதர -ஆமாம்,

ஒருமகன் தானே எனக்கென ஆங்கே
திருமகன் கேளாதே கீழாய் -வரைமேல்,

திருமகன் கொண்டவன் சென்றனன் நேரே
ஒருமகன் பிண்டப் பலியாய் -திருவாண்

மலையடி வாரம் நிறுத்தினன் வேலை
மலைமேல் இருவராய் நாங்கள் -பலிசெலுத்தி

விட்டு வருவோம் எனக்கூறி ஆபிரகாம்
எட்ட நடந்தனன் விட்டங்கு -கட்டித்

தலைமேல் விறகுண்டு, தீநெருப்பும் உண்டே
பலிசெலுத்த எங்கே மிருகம் -தலைவா

மிருகம் எடுக்க மறந்தோமே? என்று
ஒருமகன் கேட்டான் வினாவை -திருவோ

ஒருமகன் நீதான் பலியென எந்தன்
திருவாயால் சொல்லத் திருவே -வரும்நிலைமைக்

கண்டு மனம்நொந்து உள்ளே வருந்தினாலும்
கண்டான் மகன்முகம் பூவெனக் -கண்டநான்

எப்படிச் சொல்வேன் இவன்தானே ஈசாக்கு
இப்படிச் சோதனையா என்வாழ்வில் -செப்புவேனோ

என்மகன் தானே பலியென நானிங்கு
என்வாயால் சொல்லேன் துணிந்துநான் -அன்றியும்

வாய்திறந்து சொன்னான் இறைவனார் நம்பலி
வாய்க்கவே செய்திடுவார் வாமகனே -மேய்மிருகம்

இல்லை எனக்கூறி, தன்னிறைவன் மீதுள்ள
எல்லை யிலாநம்பிக் கையால்தான் -எல்லார்

முதல்படியாம் நம்பிக்கை ஆயுதங் கொண்டு
நிதம்தொழும் நல்லிறைவன் பார்ப்பார் -இதழ்வாயால்

செய்தனன் வித்தாக வெற்றிக்குக் கோமகன்
எய்தனன் சொல்லா யுதம்தனை -மெய்யவர்

சென்றார் மலைமேல் சிகரம் பயணித்து
நின்றனர் தேர்செய்து நல்லிடம் -என்றே

பலிகொடுக்கத் தம்மொரே பிள்ளையைக் கட்டிப்
பலிசெலுத்த ஓங்கினான் கையை -பலியெனக்

கொல்லாதே நீயென்று வான்மொழி வந்திட
நில்லாது உந்தன் ஒருமகன் -வல்பலியாய்த்

தந்திட நீதுணிந்தாய் ஆபிரகாம் நீயின்று
வந்தாயே மேமலையின் மேல்நீசீர் -வந்தாய்

இறைவனுக்கு அஞ்சும் திருமகன் நீயே
இறைவனின் சோதனையில் வென்றாய், -சிறுவனை

இன்று பலிவேண்டாம்; செல்வாய்த் திரும்பிநீ
என்றுரைத்த விண்ணின் மொழி


ஆதி கலி 41

கர்த்தர் தந்த ஆட்டை பலியிட்டு யேகோவா யீரே என்று பெயரிடுதல்


வழிபாடுச் செய்யவே வந்தோமே ஆயின்
வழிபட ஓர்பலி இல்லை -விழிமேலே

நோக்க ஒருஆடு பின்னால் புதரிலே
ஏக்கமாய் நின்றதைக் கண்டவன் -தாக்கி

பலியிட்டான் தன்னிறைவன் பேர்விளங்க ஆங்கே
பலிசெய்து அவ்விடம் தானே -பலியை

இறைகொடுத்தார் என்று பெயரிட்டான் ஆங்கு
இறைவனார் கொள்வாரே பார்த்து -இறைப்பீடம்

யேகோவா யீரே பெயரது இட்டனன்
யேகோவா என்ற பெயரறியார் -வாகையார்

யேகோவா என்ற பெயரைக் கொடுத்தாரே
யேகோவா என்பெயரைப் பின்னராய் -ஆகவே

விண்ணார் பெயரறியாப் போதே அவன்மொழியில்
விண்ணார் பெயர்வைத்துச் சென்றனன் -விண்ணவர்

மேல்நம்பி மேமலைமேல் தன்மகன் கட்டியே
சால்மகன் சோதனை வென்றனன் -சால்பினான்

வென்றதால் இன்றுன்னை வாழ்த்தினோம் யாம்தானே
என்றார் இறைவன் செவிகேட்க -என்சொல்லிற்

கீழ்படிந்தக் காரணத்தால் இப்புவியில் உள்ளெல்லா
வாழ்மக்கள் வாழ்த்துப் பெறவுமே -கீழ்படிந்த

உன்னிலே எல்லாக் குலமுமிங்கு வாழ்த்துபெற்று
நன்கீழ் படிந்த வழித்தோன்றல் -என்வாழ்த்தால்

விண்மீன்கள் போலெண்ணிக் கைக்கொண்டு வாழ்வரிம்
மண்ணில் எதிரி யிலாது


ஆதி கலி 42

சாராளின் இறப்பும் அடக்கமும்


வளர்ந்தனன் கோமகன் நன்றாக நேரே
வளர்த்தொழில் செய்தே மகனைக் -களையிலா

நேர்வழியில் நின்று வளர்த்தனள் தாய்சாராள்
சேர்ந்தனள் நேர்பதம் எய்தினள் -சேர்ந்திடச்

சாராள் இறந்தப்போ ஆபிரகாம் நாடோடி,
சாராள் சடலம் அடக்கஞ்செய் -நேராணும்

ஏத்தியர் மக்கள்முன் கேட்டான் நிலம்தருவீர்
ஏத்தியர் சொன்னார் விடையது -மேத்தாண்

திருவே எமக்குள் திருக்கோநீர் ஆதல்
திருவே எடுத்துக் கொளவே -திருதேர்ந்த

நன்னிலம் யாம்கொடுப்போம் கையிலே சொல்லும்நீர்
நன்னிலம் இப்போது தேர்ந்திடும் -என்னே

அதன்விலை நானிங்கே கையிட்டு வாங்கி
அதனுள்ளே என்மனைவிப் பூவை -இதமாகத்

தந்திடுவீர் மக்காள்; எபிரோனின் கல்லறைத்
தந்தால் அடக்கஞ்செய் வேன்விரைந்து -அந்தாண்

எபிரோன்: நிலமெந்தன் கைக்கொள்ளும் கோவே
எபிரொன்நான் கைக்கொடுப்பேன் பேசும் -சபையோரே

நான்வாங்க மாட்டேன் விலையேதும் கல்லறைக்கு
நான்வாழும் ஊரிலே கோநீரே -ஏனோ,

அதன்விலை என்னவென்று வாங்கிடும் என்கை
அதனுள்ளே என்மனைவிப் பூவை -இதமாய்

அடக்கஞ்செய் வேன்நான்; எபிரோன்சொல்: பத்தீர்
எடைவெள்ளி யீதும் தடையோ -எடுத்தவன்

பத்தீர் எடைவெள்ளி கையிட்டான் ஆபிரகாம்
அத்தவனும் கைவாங்கிக் கல்லறையில் -செத்தவள்

சாராள் அடக்கஞ்செய் வித்தனன் ஆபிரகாம்
நேராணும் சீராக ஆங்குதான் -சீரவன்;

மம்ரே எதிரான மக்பேலா பூமிபெயர்
அம்மனிதர் வாங்கிய பூமியே -அம்மானும்

சேர்வித்த அப்பூமி பின்னே பலரடக்கம்
சேர்வித்தார் கல்லறை யில்தானே -சேர்ந்தவள்

தன்தாய் மரித்தனளே என்றுமகன் சோகமாய்
என்னைக் கருவில் சுமந்தவளே -என்றுருகித்

தன்நிலை விட்டே இருக்கத் திருச்செய்தான்
தன்மகன் தக்க துணை


ஆதி கலி 43

ஈசாக்கிற்கு பெண்ணெடுக்க வேலையாளை ஆபிரகாம் விடுத்தலும்


தாமரையின் நல்லிலைமேல் நீர்போல் மணியாகக்
கோமகனும் கானான் குடியிருக்கச் -கோமகன்

ஈசாக்கு இவ்விடம் வீண்பெண்டிர் கொள்ளாதே
தேசத்தில் தேட விழைந்தனன் -தேசத்தில்

தன்வேலை யாளை நிறுத்தி இதோயிங்கே
வன்னவர் கானா னியராமே -என்மகன்

தக்க துணையிலை யிங்கேதான்; நீயெனக்கு
இக்கணம் ஆணை யிடுவாயே -தக்காராம்

என்மக்கள் என்இனம் சென்று மகனுக்கு
நன்றாகப் பெண்ணெடுப்பாய் நீயென -உன்கையை

என்தொடையின் கீழ்வைத்துச் செய்திடுவாய் ஆணையே
நன்றெனச் செய்தான் அவனங்கு -அன்றியும்

அவ்விடம் நான்சென்று உம்மக்கள் தன்னிலே
அவ்வாறு நானுரைக்க எப்பெண்ணும் -இவ்விடம்

வந்திட ஏலா தெனின்நானும் கொள்ளிடம்
அந்திடம் போவேனோ சேய்க்கொண்டு? -அந்தியூர்

செல்லாதே என்மகன் அவ்விடம் எந்நேரம்
செல்லாதுப் போகும் நமதாணை -எல்லாபெண்

ஏலா வரயென்றால், வல்லிறைவன் தம்தூதன்
வேலைமுன் செல்வாரே ஆங்குதான் -வேலை

பயணிக்க ஆயத்தம் பல்பொருள் கொண்டான்
பயணிக்க அல்ல பொருளே -வியன்பொருட்கள்

பெண்ணின் பரிசாகக் கொண்டவன் போயினன்
விண்ணவர் நம்பிச் சிறந்தவன் -மண்ணிலே

நாகோர்வாழ் ஊர்சேர்ந்து ஊர்வெளியே நீர்கிணறு,
தேகம் பயணத்தால் சோர்ந்திட்டு -வேகம்

குறைந்தே களைத்தவன் ஏறிட்டான் விண்ணை
இறைவா உதவும் எனக்கு -இறைவனே

இக்கிணறில் நீர்கொள்ள வந்திடும் பெண்ணைநான்
விக்குதே தாகமெனக் கேட்டவுடன் -விக்கல்தீர்

இக்கணமே நீர்பருகும் பின்கொடுப்பேன் நானிங்கு
அக்கறை மாக்களுக்கு நீர்தனை -தக்கவள்

அப்பெண்ணே எந்தன் முதல்மகனின் பெண்ணென
அப்படியே நானும் பயணிப்பேன் -எப்படியோ

வாய்க்கச் செயும்தேவன் நீரே யெனக்கூறி
வாய்ச்சொல் அமர்ந்தான் கிணறு


ஆதி கலி 44

ரெபக்காளை வேலையாள் சந்தித்தலும் அழைத்துச் செல்லுதலும்


மாலையின் வேளையில் வந்தனள் கன்னிகை
மாலையைக் கண்டு மலர்ச்செண்டும் -மாலையோ?,

சேலையின் மேல்படத் தென்றல் விழைந்திட,
சோலைமகள் வந்தாள் நடந்தங்கு -காலிலே

கால்சதங்கைச் சில்சில் லெனவோசைச் செய்திட
மேல்இதுவே யாழ்களும் நாணிட, -கோல்கோனின்

வேலை அமர்ந்தக் கிணற்றிலே நீர்கொளச்
சோலைமகள் வந்தாள் நடந்துமெல்ல -வேலையாள்,

யாரிவளோ பக்கம் வருகிறாள் கன்னிகை,
பேரென்ன நானும் அறியாதே -சேரெந்தன்

கோனெனதின் பிள்ளைக்குச் சீரிவளே என்றவன்
தானிட்டச் சொல்படி கேட்டிட -மானவள்

கால்சதங்கைக் கேட்டதிர்ந்தே புள்ளும் புறம்போட
மேல்மகளின் நன்சதங்கைக் கேட்டவன் -கால்நடையாய்

வந்தேனே தாராயோ நீரெனக்குத் தாகம்தீர்,
சிந்தனைச் செய்வாய்ப் பிறகென -எந்நாளும்

எம்மக்கள் நன்மக்கள் கேளீரோ சீராரே,
எம்கேளிர் நீரன்றோ நீர்கொடுப்பேன் -உம்தாகம்

தீர்ந்திடவே என்றே விருந்தமரச் செய்தவள்
சேர்மாக்கள் தாகமும் தீர்த்திடுவேன் -சேர்ந்தவளை

யார்மகளே நீயெனக் கேட்டனன் வேலையாள்
சோர்ந்தவன் தாகம்தீர்த் தாய்மகளே -வேர்வழி

எம்பாட்டன் நாகோர் எனச்சொல்ல வேலையாள்:
செம்மை இறையின் வழிதானே -எம்மானின்;

என்வேலை வாய்த்ததே என்று தொழுதனன்
என்கையில் வாங்குவாய் நல்பரிசு -உன்கையால்

என்தாகம் தீர்த்தனயே கன்னியே என்றவளின்
பொன்கையில் இட்டான் பரிசுதனை -என்னயிது

கண்பார்த்துப் பொன்பரிசை ஏற்றவள் சொன்னாளே
பெண்ணெனக்குப் பொன்பரிசோ என்றவள் -விண்பரிசு

ஈதெனக் கொள்வேன்நான் வாரும்நீர் என்வீடு,
கோதையாள் சொன்னாள் விருந்தென -வேதவர்

உண்ண விருந்தும் இராத்தங்க நல்லிடமும்
உண்டிங்கு எம்வீட்டில் என்றனள் -கண்டனன்

பொன்மகள் வாய்ச்சொல்ல வேலை வழிநடத்து
உன்வீடு என்றனன் வாய்த்தவன் -தன்வீடு

போனாள் ரெபெக்காளும் ஓடி வழிசென்றாள்
போனவள் பின்கண்டுத் தான்தொழுதான் -மேனிச்

சிலிர்க்க இறைவனின் நல்சித்தம் வாய்க்க
வலிவந்து தீர்ப்பார்ச் சிறந்து


ஆதி கலி 45

லாபான் வேலையாளை வரவேற்றலும் ரெபெக்காளை பெண்கேட்குதலும்


நீர்கொள்ளச் சென்றனளே என்தமக்கை என்றேதான்
சேர்வாளோ நன்றாக என்தமையன் -கூர்நோக்கி

வாயில் விழிவைத்துக் காத்திருந்தான் லாபானும்
சேயவள் வந்தாள் விரைந்துள்ளே -தாயேது

பொன்பரிசைக் கண்டவன் கண்வியப்பில் விண்பரிசாய்ப்
பொன்கொடுத்தார் யாரென்று கேட்கவும் -பொன்பரிசு

என்கையில் இட்டார் இறைவிடுத் தூதரென்று
தன்தமையன் கேள்விக்குத் தான்விடை -நன்னீர்க்குப்

பொன்பரிசா என்வியந்தான் பெண்ணின் தனையனும்
தன்தமக்கைக் கையிட்ட தாரறிய, -பொன்கொடுத்தோன்

கண்காண்பேன் என்றே கிணற்றருகே மண்போனான்
மண்தமையன் சென்றான் கிணறருகே -அன்னாணோ

தன்னுடன் வந்தோர் வழிப்பயணம் வாய்த்தது
பொன்கொடுத்த வேலை விருந்தினனாய் -என்கூட

வாருங்கள் போவோம்நாம் என்றவன் கூறச்செய்
தாரங்கு வேலையாள் சென்றிட -பாரிலே

செய்வதைக் காண்தமையன், சொல்மெய்யே வாரும்நீர்,
செய்தேன் இடமுமக்கு உம்மாக்கள் -செய்வேன்

இளைப்பாற நல்லிடம் என்றே அழைத்தான்
திளைப்பரிசு லாபானும் கண்டான் -களிப்பாக:

கர்த்தரால் வாழ்த்துபெற்ற நல்லவரே வாருமுள்ளே
வர்த்தகன் போலேன் வெளிநின்றீர், -கர்த்தரே

செய்தார் பயணத்தை என்றான் அறிக்கையைச்
செய்தான் அழைத்தனன் உள்ளேதான் -செய்தனன்

உள்ளே இளைப்பாறும் அப்பம் புசியுமென
உள்வந்து தன்பயணக் காரணம் -உள்கூறாச்

செல்லாதுள் அப்பம்ஊன் தானெனவும் கூறிடும்
எல்லார்முன் நோக்கமது யாதென -நல்லவன்:

தன்பயணக் காரணம் சொன்னவன் தான்கிணறில்
நன்றாகப் பெண்ணவளைக் கண்டவழி -என்றவனும்

சொல்கேட்டு லாபானின் தந்தையார் வாயடைத்து,
சொல்லிது ஆயிற் றிறையினது -நன்றே

இறைவன் செயலிது யாமென்ன சொல்வோம்
இறைவன் பயணத்தை வாய்க்க, -குறையேதும்

யாம்சொல்லோம் என்றவர்கள் சொல்ல ரெபெக்காளை
யாம்கொடுப்போம் நின்கையில் தான்


ஆதி கலி 46

ஈசாக்கை மணமுடிக்க வேலையாளோடு ரெபெக்காள் செல்லுதல்.


கள்மயக்கம் கொண்டான் விழிபோலே அங்கேதான்
உள்ளிருந்துச் சொல்கேள் சிவந்திட, -கொள்ளையாய்

உள்ளுக்குள் மத்தாப்புத் தானே வெடித்திடத்
துள்ளிக் குதித்தனள் மாதவள் -அள்ளிட

மின்னல் வரும்போலே ஓராணும் வந்திடுவான்
கன்னிகைக்கு சீர்கணவன் நானுமிங்கு -என்றே

சிவந்திடக் கேட்டனள் வாய்மொழி, திண்ணம்
இவளே உலகில் அழகு -அவளின்

சிவந்திட்ட இன்முகத்தைக் கண்டவள் தாயும்
இவளெந்தன் பிள்ளைப் பிறப்பே -சிவந்திவளின்

இன்முகம் கண்டே இவள்விருப்பம் நானறிந்தேன்
என்றாள் மனதுள் மகிழ்ந்தவள் -அன்று

இராத்தங்கிப் பின்னர்ப் புறப்பட்டார் ஊர்செல்,
திருவேலைக் கண்டனன் லாபான் -இருப்பீரே

பத்துநாள் எம்கூடப் பின்செல்வீர் என்தமக்கை
வித்தகன் கைப்பிடிக்க நீரிங்கு -அத்தவர்

நல்லிறைவன் என்பயணம் வாய்க்கச் செயவிங்கு
நில்லாதீர் நீர்தடையாய் வேலையாள் -சொல்கேட்டு

நில்லோம்யாம் என்தமக்கை வாய்மொழிக் கேட்போமே
நல்லாளை உள்ளே அழைத்தனர் -நல்லாளோ

கால்சதங்கைச் சில்சில் லெனவோசை எட்டுரைக்கக்
கால்வழியே வந்தாள் ரெபெக்காளோ -கோல்வேலை

நான்செல்வேன் இன்றே வழிப்பயணம் என்சொல்லத்
தான்வாழூர்ச் சொன்னாள் விடைதனை -ஏன்செல்லும்

போகப் பயணம் சிலரங்கே கண்ணழவும்
போகிறாள் என்றே வியன்நோக்க, -போகட்டும்

போகட்டும் நன்றெனக்கு, யாழென் னிசைக்கேட்பர்,
போகட்டும் பெண்ணவள் விட்டவள் -ஆக

வெளிமரமும் ஆழ்கிணறும் துக்கம் தனிலாழ்,
துளிநீரை வீணாக்காப் பெண்ணே -களிபோக

இன்றிவள் போலே எமக்கிங்கே பெண்வேறு
இன்முகம் காண்போமோ யிங்குநாம் -என்னவோ

தென்றல் தழைத்தோங்கு வானுயர் நன்மரம்
என்னே கலங்குகின்றாய் வானுயர் -நன்மரமே

பெண்ணிவள் எங்கே இருந்தாலும் நான்போவேன்
பெண்ணிவளின் சேதி உரைத்திடுவேன் -கண்ணால்

வெளிமரமும் ஆழ்கிணறும் தென்றலின் சொல்கேள்
களிப்புடன் யாமனுப்பச் செல்வாய் -வெளியேநீ,

பெண்ணேசெல் வாழ்வாங்கு வாழ்வாயே என்றதே
விண்ணுயர் ஓங்கு மரமதும் -பெண்ணும்

பிரியா விடைதந்து வந்தாள் ரெபெக்காள்
பிரியா விடைதந்து விட்டார், -திருச்சொல்

வருங்காலம் நன்றெனவே கண்கண்டாள் பெண்ணும்
திருத்தேசம் வந்தார் அடைந்து

ஈசாக்கு ரெபெக்காளை கண்டு மனைவியாக ஏற்றல்


மாலையின் வேளையிலே நேர்மகனும் விண்ணோக்க
மாலையில் காண விழைத்தென்றல் -சாலையில்,

பேர்மகள் மாலையின் நாற்றம் கலைத்தது
நேர்ஆண் தியானம் விடுத்தனன் -நேர்சாலை

யாரோ வருகின்றார் என்றவனும் கண்ணோக்க
நேராய் வருவதுயார் பெண்கேட்க, -நேராளும்

சாராள் தனையனே தான்வருகின் றாரவேறு
சீராள் இலையிங்கு என்றிட -சீரவளின்

நாணம் தலைக்கேற நாணித் தலைக்குனிய,
சேணம் இறங்கியவள் முக்காடு -நாணியிட,

காணப் பொருந்தினாள் நல்லாள் ரெபெக்காளைக்
காணவன் வந்தான் இடம்தன்னில் -காணியில்

மண்சேர்ந்த தாயின் பிரிவால் தனையனும்
கண்சோர்ந்துப் போன மணவாளன் -கண்கண்டான்

தன்வாழ்வில் வந்த மடந்தையின் நல்லழகு
என்சொல்வேன் கன்னி அழகுதான் -நன்றியொடு

தன்சோகம் விட்டுத் தனையனும் மீண்டனன்
வன்சாவால் தன்தாய் இழந்தோனும் -இன்னாளில்

பெண்ணிவள் செய்தாள் அழகால் நிறைவெனப்
பெண்ணையவன் சென்றான் அழைத்து


ஆதி கலி 47

ஆபிரகாம் கேத்தூராள் மூலம் பிள்ளைகள் பெறுதல் மற்றும் ஆபிரகாமின் இறப்பு


கிழவன்நான் என்றிருந்த ஆபிரகாம் சாராள்
கிழவியாம் கேத்தூராள் என்றோர் -அழகி

மணமுடித்துப் பெற்றான் கருப்பிள்ளை ஆறு
அணங்கவள் மூலமாய் ஆங்கு -அணங்கொடு

தான்பெற்ற பிள்ளைகள் கையில் பலபரிசைத்
தான்கொடுத்து விட்டான் வழிசெல்ல, -கோன்சொல்லித்

தான்பெற்ற பிள்ளையிலே ஈசாக்கை மேலுயர்த்தித்
தான்செய்தான் கோமகன் அன்றேதான் -மேன்மகன்

தன்னகவை நூற்றெழுபத் தைந்தில் இறந்தனன்
தன்வாழ் விடுத்து, பரவாழ்வை -நன்றாக

வாழ்ந்திட ஆபிர காமின் உடல்தனை
வாழ்ந்தத்தன் தாயுடன் வைத்தனர் -வாழ்மக்கள்

ஆபிரகாம் மைந்தர் இசுமவேல் ஈசாக்கு
ஆபிரகாம் பூவுடலை வைத்தனர் -ஆபிரகாம்

வாங்கிய கல்லறைத் தன்னிலே சாராளும்
தூங்கிய கல்லறை யில்


ஆதி கலி 48

தலைமுறை படலம் (ஆதியாகமம் 25-28)


ரெபெக்காளின் மலடியாய் இருத்தலும் ஈசாக்கின் வேண்டுதலும் - ஏசா, யாக்கோபு என இருபிள்ளைகளை ரெபெக்காள் ஈன்றெடுத்தல்


நல்லழகுக் கொண்டவள் சாராளைப் போலேதான்
நல்லழகி ஈசாக்கும் தான்மணந்த -நல்மனைவி

மாமியார் போலே மருமகளும் பிள்ளையிலா
ஏமம் வதைத்தார் இறைவனார் -ஆமாம்

வதைபட்டுச் சொல்லடிப் பற்பலவாய்ப் பட்டு,
வதையினிமேல் தாங்கா இறையே -வதைநீக்க

ஓர்பிள்ளைத் தாருமே என்று கதறினான்
நேர்மகன் கர்த்த ரிடம்கேட்க -நேராரோ

விண்ணப்பம் கேட்பவர் விண்ணப்பம் கேட்டவர்
விண்ணார் கொடுத்தார் கருவிலே -எண்ணம்

ஒருபிள்ளைக் கேட்டும், இரண்டாய்க் கருவில்
இருகருவுள் இட்டாரே போர்தான் -இரண்டும்

கருமுதல் சண்டை; திருவே! கருப்பிள்ளை
மோதல் எதற்கோ? திருக்கேட்டாள் -மோதலேன்

வேதர் விடைதந்தார் ஈர்வருவர், ஆதியோன்
வேதன் கடையோன் பணிந்திடுவான் -ஆதலின்

முன்வந்தோன் ஏசா முதல்பெயர் என்றிட்டு,
பின்வந்த பிள்ளையோ கால்பிடித்து -அன்றே

பெயர்ப்பெற்றான் யாக்கோப்; பெயரோ, குதிங்கால்
உயர்ப்பிடிப்போன் உண்மைப் பொருளாம் -அயராது

ஏசா வெளிநிலத்தில் வேட்டையாடும் வல்லவன்
பேசாத யாக்கோபோ உள்ளிருந்து, -கூசுமே

கண்களெனக் கூடாரம் தன்னில் வசித்தனன்
பெண்ரெபெக்காள் தாயுடன் ஆங்கவன் -மண்ணின்

வெளிநிலம் வேட்டைக் கொணர்வதைத் தந்தை
களித்துண்டு ஏசாமேல் பட்சம் -வெளிசெலா

இன்முகன் கூடாரத் தில்தானே நல்லுதவி
என்றும் ரெபெக்காளும் பெற்று


ஆதி கலி 49

முதல்பிள்ளை நிலையை ஏசா விற்றுப் போடுதல்


வேட்டைத் திரும்ப ஒருநாள் தமையனின்
வேட்கை அறிந்தனன் யாக்கோபு -வேட்டைப்

பசியாலே வந்திட, கண்காண் சிவப்பாய்,
பசியேற்றும் இன்சுவைக் கூழ்க்காண் -பசியோ

பசியால் துவண்டனன் ஏசா சிவப்பாய்,
பசியேற்றும் இன்சுவைக் கூழ்க்காண் -பசிதீர்க்க

என்னிடம் நீகொடு, கேள்வேண்டும் யாதெனினும்
என்னிடம் நான்தரு வேனென -என்னிடம்

உன்முதற் பிள்ளை நிலைதன்னை விற்றிடு
இன்சுவைக் கூழ்தருவேன் அப்போது -என்றனன்

யாக்கோபு சூழ்ச்சியாய் வீழ்பசியால் விற்றனன்
யாக்கோ பிடம்தன் நிலைதனை -வாக்கது

என்முதற் பிள்ளை நிலையென்னைக் காக்குமோ
என்பசி இன்னுயிர் தான்பிரிய -என்றவன்

தன்னிலையைக் கீழெண்ணி விற்றான் தமையனிடம்
தன்னிலைக்கு இன்சுவைக் கூழ்


ஆதி கலி 50

பஞ்சம் பிழைக்கப் பெலிசுதர் நாட்டிற்குச் செல்லுதல், ரெபெக்காளை ஈசாக்கு தன்சகோதரி எனச்சொல்லுதல்


விசும்பின் மழைநீ ரதுபொய்க்க ஆங்கே
பசுவோடு மாக்கள் பசிதீர்த் -திசைதனில்

எங்கும் மழையிலை, நீர்கொடுக்க வேண்டின
அங்கவன் மாக்களும் தான்நீரில் -அங்கேதான்

வாழ்நிலத்தில் வன்பஞ்சம் உண்டாக ஈசாக்கு
வாழ்ந்திடவே தன்னுடைமைச் சேர்த்தெடுத்து -வாழ்அ

பெலிசுதர் தேசத்தில் வேலையைத் தேட,
வலிபொல்லாங் கென்றவன் அஞ்சி -வலியார்

இறைவழிச் செல்லார், பெலிசுதர், தன்னைச்
சிறைவைப்பர், கொன்றிடுவர் தன்னின் -நிறையழகி

இல்லாள் கவரவே என்றவன் அஞ்சினான்
நல்லாள் குறைசொன்னான் பொய்யாக -சல்லி

மனைவி ரெபெக்காள் மனையென் பகன்றால்
மனைவி பெலித்தர் கவர்வர் -நினைத்தே

மனைவியால் சாகாது எஞ்சவே, அஞ்சி
மனைவியைச் சோதரி என்றே -மனையிலாது

கூடாரம் தன்னிலே வாழ்ந்தனர் மக்களோடு
கூடாரம் மக்களுக்கு வேறாகக் -கூடாரம்

விட்டக் கணவன் வரும்வழி மேல்விழி,
சிட்டவள் நின்றாள் நிலத்தினில் -நட்டார்

கிடையில் கிடையாய்க் கிடந்தான் இரவில்
இடையில் வராதிருப்பர் மேய்ப்பர் -நடைபழகி

நல்லாள் பிரிவாற்றா ஏங்கியே நின்றனள்
இல்லாள் பசப்புற்று ஆங்கவள் -நல்லார்

வருவரோ இன்றிவர் என்றவள் நல்லாள்
திருவருகை நோக்கியவள் காக்க -இருமைந்தர்த்

தோளில் விளையாட, பல்வேலைத் தன்னிலே
சாளரச் சீலை மறந்திட -வேளை

பலநாட்கள் செல்லாதே காத்தவன் நேராள்
சிலமணியே சென்று வருவேன் -நிலத்தினது

ஆடுகளைப் பார்ப்பீர் விழிவிடா யென்றவன்
ஆடுகளம் விட்டுத் திரும்பினான் -ஆடன்

வருகையைக் கண்டு பசல்போய், கணவன்
திருக்கரம் பற்றி யணைத்தாள் -திருவும்

கரம்பற்றித் தன்மனையாள் கட்டி யணைத்து,
சிரம்தூக்கி முத்தமிட்டான் மாது


ஆதி கலி 51

அபிமேலேக்கு ஈசாக்கு ரேபெக்காள் உறவாடும் விளையாட்டை காணுதல்


பிரிவுதனை ஆற்றாதே இல்லாள், அணைத்த
திருவின் கரமே லிடவும் -வராதந்த

நாணம் மறக்க, முலைமேல் கரம்வைத்தான்
நாணலவள் மேல்விளை யாட்டாக -நாணாதச்

சாளரச் சீலை அலைக்காற்றால் மேல்விலகத்
தூளாளும் மன்னவன் நற்பவனி -வேளாக

வந்தனன் வந்தவன் கண்டான் இருவரின்
அந்தப் புறவிளை யாட்டுதனை -இந்த

அபிமெலெக்கு நல்லரசன் ஆண்டுவந்த நாடாம்
அபிமெலெக்கு வந்தான் பவனி -அபிமெலெக்கும்

கண்ணோக்க, ஈசாக்கு தன்மனையாள் கையிடக்
கண்டவன் போனான் அதிர்ந்தவன் -அண்டை

விளையாடக் கண்ட அபிமெலெக்கும் வந்து
விளையாடும் இப்பெண் மனைவி -களைபோல்

விளையாட்டாய் ஏனோ பகன்றாய், மனைவி
களித்தால் பழிமக்கள் மீது -வெளியாய்

இறைமுன்னர் எம்மக்கள் நிற்பரோ வன்செய்,
குறையிலா மேமகனேன் பொய்ச்சொல் -சிறைகுற்றம்

ஏதிலை மக்கள் மனைவியைத் தான்கவரின்,
சேதி அறிந்தோமே யாமிங்கு -வேதவன்

இம்மனிதன் தந்தை அறிவேன்நான் என்றவன்
அம்மக்கள் கட்டளைச் செய்தானே -இம்மனிதன்

மேலோ மனையாளின் மேலோ கரம்வைப்போன்
கோலெந்தன் கையால் மரித்து


ஆதி கலி 52

ஈசாக்கு வளமடைதலும் அபிமெலேக்கு ஊரார் கலகம் செய்தலும்


விருத்தி யடைந்தனன் ஈசாக்கு நாட்டில்
கரத்தினால் செய்யுமெச் செய்கை -விருத்தியாய்

நன்செய் நிலத்தில் விதைத்த விதைநூறு
நன்மடங்காய் வந்தது ஆங்குதான் -நன்றாய்

விருத்தி யடைந்த வளமகன் கண்டு
வருத்தம் சிலமனிதர்க் கொண்டு -திருமகன்

மேல்காழ்ப்புக் கொண்டு துரவுகள் தூர்த்தனர்
கோல்வழுவத் தென்னரசன் கேட்டவன் -கோலாண்

அபிமெலேக்குக் கண்டான் வளவிருத்தித் தன்னை
அபிமெலேக்குச் சொன்னான் வளங்கள் -சபைவிட

மேலாகப் பெற்றாய்நீ ஆதலால் விட்டுச்செல்
கோலெனது ஆணை யிதுதானே -கோலே

வளம்பெரிதாய்ப் பெற்றால் வளம்பார்த்துக் காழ்ப்பிற்
களமனிதர், கொண்ட களையார் -களையாது,

கோல்வழுவிச் சென்றனன் மேல்மனிதன் நட்பின்பம்
கோல்தானே போனான் இழந்திட்டான் -ஆல்மேலே

காழ்ப்புணர்ச்சிக் கொண்டோர் எதிர்நில்லா நேர்மகன்
கீழ்தேசம் பற்றித் துரவெல்லாம் -பாழ்போகா

மீண்டும் துரவெட்டி, தன்தகப்பன் சொல்பெயரைக்
காண்வைத்தான் நன்றாய் மகனவன் -ஆண்களும்

கேராரூர் வந்து துரவெட்டித் தண்ணீர்காண்,
கேராரூர் மக்கள் தமதெனக் -கோரிட,

கேராரூர் தன்னில் துரவுப் பெயரிட்டான்
சேராதான் ஏசேக்கு என்றுதான் -சேராவூர்

கேராரூர் மீண்டும் துரவெட்டித் தண்ணீர்காண்,
கேராரூர் மக்கள் தமதெனக் -கோரிட,

கேராரூர் தன்னில் துரவுப் பெயரிட்டான்
தேராவூர் சித்னா எனப்பெயர் -சேராவூர்

கேராரூர் மீண்டும் துரவெட்டித் தண்ணீர்க்காண்
கேராரூர் மக்கள் தமதெனக் -கோராது,

கேராரூர் மூன்றாம் துரவின் பெயர்தனை
நேராண் ரெகொபோத் எனப்பெயர் -நேராண்

பெயர்செபா மீண்டுமாய்ச் சென்றனன் ஈசாக்
உயர்தேவன் அன்றிரவு தோன்றி -அயராதே

உன்தகப்பன் தேவன்நான் அஞ்சாதே ஈசாக்கே
உன்னோடே நானிருப்பேன் என்றவர் -சொன்னாரே

உன்வழித் தோன்றல்கள் பன்மடங்காய்த் தானிருக்கும்
என்னூ ழியன்தானே ஆபிரகாம் -உன்தகப்பன்

நன்செயல் கள்நிமித்தம் உன்னைநான் வாழ்த்திடுவேன்
என்றார் இறைவனும் வாழ்த்து


ஆதி கலி 53

அபிமேலேக்கு ஈசாக்கோடு உடன்படிக்கை செய்தல்


வளமடைந்த நேர்மகனைக் கண்டுசெல்வோம் என்றே
திளையரசன் நண்பனோடு வந்தான் -வளவனோ

ஏன்வந்தீர் என்னைத் துரத்தியோரே என்செய்யத்
தான்வந்தீ ரோயிங்கு என்றவன் -வான்சீர்

உமதோடு தானே இருக்கிறார் கர்த்தர்
உமைநாங்கள் தீச்செய்யா விட்டோம் -அமைந்தே

எமைநீரும் தீச்செய்யா விட்டிட ஆணை
உமக்கும் எமக்குமிடு வோம்நாம் -அமைதி

விருந்தினர் தானே விருந்துண்ண வைப்போம்,
விருந்துண்டப் பின்னர்ச் சிறப்பாய் -வரைக்கல்

திருச்செய்தான் கோலரச னோடாணைச் செய்யக்
கரமிட்டான் தீச்செய் விடுக்க -கரமிட்ட

அன்றே அவன்வேலை நீர்கண்டு வந்தனர்
நன்றாம் துரவெட்டி நீர்கண்டோம் -இன்றே

யெனமகிழ்ந்துச் சொல்ல எனைவாழ்த்த நீர்தான்
எனவே பெயர்சேபா என்று


ஆதி கலி 54

ரெபெக்காளுக்கு ஏசாவின் மனைவியர் மனநோவாய் இருத்தல், ஈசாக்கு ஏசாவை வாழ்த்த மனம்


ஏத்திய பெண்ணிருவர் ஏசா மணம்செய்ய
ஏத்திய பெண்கள் மருமகள்கள் -போத்து

மனநோவாய் ஈர்பெண்கள் மட்டிலா வன்னே
தினமொரு சண்டை யிடவும் -தினம்தினம்

ஈசாக்கின் கண்கள் இருளடைந்து, பார்வைபோய்
ஈசாக்கு தன்முதல் பேர்மகன் -ஏசாவே,

தேசத்தில் இன்னும் உயிரோடு எத்துணை
வாசமாய் நானிருப்பே னோஅறியேன் -பாசமாய்

நீசெல்வாய் வில்லம்புங் கொண்டு கொணர்வாயே
தேசத்தை விட்டு வனத்திலே -வாசம்செய்

நல்மிருகம் கொண்டுவா என்வாய் ருசிக்கவே
நல்லாசித் தந்திடுவேன் நானுனக்கு -நல்லாள்

இதுசொல்லும் போழ்து ரெபெக்காள் இருக்க
அதைக்கேட்டுத் தன்மனதின் சேய்சென் -றிதைக்கேள்

மகனே உனது தகப்பனின் சொல்லை
மகன்முதல் வாழ்த்த முடிவு


ஆதி கலி 55

சூதாக வாழ்த்தைப் பெறு யாக்கோபிடம் ரேபெக்காள் சொல்லுதல்


வேதவர் வேத உரையை மறவாது
வேதன்தாய் வேதமகன் சூதாக -வேதர்சொல்

போல்நடக்க வாழ்த்தைப் பெறவங்கு, சூதாகச்
சால்மகன் மாற்றினாள் தாயவள் -சால்பினாள்:

வெள்ளாடு ஈர்கொண்டு வாவிரைந்து; நானுக்கு
வெள்ளாட்டை இன்சமைப்பேன் உட்புசிப்பார் -உள்மகிழ்

நுந்தைதின் நல்வாழ்த்தைப் பெற்றிடு, சிற்றிளையோய்
இந்தா வழியென்சொல் கேள்மகனே -வந்தவன்

மூத்தோனாம் ஏசா உடல்மயிர் உள்ளோனே
மூத்தவரோ கண்தெரியார், மூத்தவர் -வேத்தவா,

என்முன்வா உன்னுடல் பார்ப்பேன்நான் என்றாலே
வன்னாய் கெடுசொல் வரும்என்மேல் -என்ன

ஒருவழிநான் செய்வேன் மயிர்காக, சீரே
திருமீறி வந்தென்னைச் சேரும் -திருமொழி

இவ்வாழ்த்தை நீபெறச் செல்மகனே அவ்வாழ்த்து
இவ்வுலகில் வேண்டும் உனக்கிங்கு -அவ்வாறே

சூது விழையாதே சொற்பிள்ளாய் என்கூறா,
சூதாகப் பெற்றிடுவாய் வாழ்த்திதை; -சூதில்லை

வேதவர் முன்சொல் அறிந்தவள் வேதத்தாய்
வேதமகன் விட்டாள் விரைந்து


ஆதி கலி 56

யாக்கோபு சூதாக தகப்பனின் ஆசிகளைப் பெறுதல்


சென்றனன் யாக்கோபு ஏசாவை ஏய்த்திட,
பின்தந்தான் யாக்கோபு ஈராட்டைத் -தன்தாய்க்கை;

நன்றாக நாசுவை யூறச் சமைத்ததைத்
தன்தந்தை உண்ணக் கொடுத்திட -அன்னவனோ

தந்தாய் வனவிலங்கை நான்பிடித்து வந்துள்ளேன்
தந்திடுவீர் நல்லாசி யென்கூற, -தந்தையோ

வாய்சொல் குரலிது என்னிளையப் பேரன்றோ
வாய்சொல் தனைநம்பேன் யான்தானே -சேய்மேலே

கைவைக் கழுத்திலவன் ஆட்டினத் தோலுடுத்தி,
கைவைத்துப் பாரும் தகப்பனே -கைவைத்துப்

பார்க்கையில் ஏசாவைப் போலே மயிரிருக்கப்
பார்வை யிலாதோன் அதிர்ந்தனன் -பார்மேல்

விரைவாக வந்தோ வனவிலங்கு இன்று?
விரைவாக வாய்க்கச் செயலாம் -திருவின்

விரைவாக உம்வாழ்த்தைக் கூறிடுவீர் நீரும்
விரைவாக்கிப் பேசினான் சூது -விரைவேனோ

கிட்டே வருவாயே உன்குரல் என்னிளையோன்
சட்டென நான்தர மாட்டேனே -கிட்டவா,

கிட்டச்சேர் நானுன்னை நாசி நுகர்ந்திடுவேன்
எட்டநின்றால் ஆகாது வாழ்த்தென -நட்டவன்

மேலாடை தன்னையே தாயெடுத்துச் சூதாக
மேலுடுத்திக் கொண்டே வரையாடை; -சாலிலோன்

மேலவனும் சென்றனன் தந்தையின் கிட்டச்சேர்
மேலாகத் தந்தை நுகர்ந்திட -சாலவன்

என்மகனின் மேல்நாற்றம் பார்வெளியின் நாற்றம்போல்
நன்றிது என்மகனே என்றவனும் -குன்றாமல்

நல்வாழ்த்தைச் சொல்லி யமர்ந்தனன் ஈசாக்கு
நல்வாழ்த்தைப் பெற்றனன்யாக் கோபங்கு -நல்லாணே

வான்பனி, பூகொழுமை எல்லாம் உனக்கென்றேன்,
வான்மழை நெல்ரசமும் உன்கையில் -வான்கீழே

நன்றாய் அளித்திடுவார் நல்லார், சகோதரர்
உன்னைப் பணிவார் சிறந்திங்கு -என்மகனே

உன்னைநல் வாழ்த்தும் இனமக்கள் வாழ்வரே
உன்னைக் கெடுமொழிப் பேசினோர் -வன்மொழி

என்றும் பெறுவர் தனையனே ஆள்வாய்
தமரெல்லாம் நீயே சிறந்து


ஆதி கலி 57
ஏசா திரும்பி வந்து சூதாக யாக்கோபால் வஞ்சிக்கப் பட்டதை அறிந்து அழுதல்


ஏசாவோ காடுமலை மேலலைந்து வந்தனன்
தேசத்தில் தந்தையின் நல்வாழ்த்தைப் -பேசிபெற,

பாசமிகுத் தந்தையின் முன்வைத்தான் கொண்டுவந்த
மீசத்தின் பங்கை முதல்மகன் -மீசமோ

யாரது வந்தது இப்போது என்றதிர்ந்தான்
தேராகின் நன்வழி வந்தவன் -யாரதுகேள்,

யாரவர் வந்திடுவார் என்தந்தாய் இங்கேதான்
சேரவன் ஏசாநான் என்றனன் -யாரது

வந்தது யார்குரல் ஏசாதான் என்றறிவேன்
வந்தானே முன்னே விரைந்தொருவன் -தந்தேனே

வாழ்த்தெல்லாம் கையிட் டவன்மேலே நானிங்கு
வாழ்த்திலை வேறு உனக்கிங்கு -வாழ்த்திட

பூமியில் வாழ்த்தா யிலையிங்கே தந்தையே
பூமியில் நான்வாழ வாழ்த்திடும் -தேமா

யிராதே தமையனும் வஞ்சித்துப் பெற்றான்
விரைவில் உமதுடைய வாழ்த்தை -சிரமேல்

ஒருவாழ்த்து மில்லை திருவாய் மொழியைத்
தரவில்லை ஈசாக்கு மாங்கு -ஒருவாழ்த்தும்

பெற்றிடா ஏசாவோ வைத்தான் கொலைவெறி,
பெற்றாள் செவிக்கேட் டதிர்ந்தனள் -அற்றவன்

சூதினால் என்முதல் பங்கை அவனெடுத்தான்
சூதே அவன்வேலை நானறிவேன் -போதே

அவனைநான் கொன்றுக் களைவேனே காணீர்
அவன்சினத்தால் பொங்கினான் ஆங்கு -அவனோ

கிழவன் இருக்கும் வரையிலே யானும்
கிழவன் மனநோவார், காப்பேன் -வழுவா;

கிழவன் வெகுவிரைவில் சென்றிடுவார் செத்து
விழவெட்டிப் போடுவேன் நானே -வழுவவன்

ஏசா சினத்தை ரெபெக்காள் அறிந்திடவும்
தேசத்தில் மைந்தர் மரித்திட, -பேசுக்கேள்

பாசத்தால் சூதாக வாழ்த்திதைப் பெற்றவள்நான்
ஏசா சினங்கண் டவளஞ்சி -ஏசா

ஒருநாள் சினந்தணிந்து ஏற்பான் தமையன்
திருநாள் வரும்வரை ஓடு -வரும்நாள்

வரவை எதிர்ப்பார்த்துச் சோதரன் எந்தன்
விரைவாகச் சேர்வாய் நகர்நீ -விரைவாய்

இருவர் ஒருநாளில் நானிழக்க வேண்டாம்
இருவரில் தப்பித்துச் செல்வாய் -விரைந்திட்டுச்

சொல்கிறேன் என்மகனே போய்விடு தப்பித்துச்
சொல்கேட்டு நீயும் விரைந்துசீர் -செல்செல்

பதான்அராம் செல்வாய்நீ மாமன் நகராம்
இதையுனக்குச் சொன்னேன்தாய் நானே -அதுநன்று

ஆங்கேபெண் கொள்வாய் உனக்காக என்றாள்தாய்,
தாங்காப் பிரியா விடை


ஆதி கலி 58

பதான்அராம் படலம் (ஆதியாகமம் 28-38)


யாக்கோபு பதான்அராம் செல்லுதல்


முதல்மகன் ஏசாவின் ஈர்மனைவி யோடே
நிதம்வருத்தம் என்னிளையோன் நன்றாய் -இதமாகப்

பெண்கொண்டு வாழ்ந்திட நீர்வாழ்த்தி விட்டிடும்
பெண்கொள்வான் எந்தன் குலத்திலே -பெண்ணாளின்

சொல்கேட்டு ஈசாக்கு நன்று ரெபெக்காளே
சொல்போக நம்மிளையோன் உன்நாட்டில் -சொல்கேட்கும்

பெண்டிர் மணமுடித்துக் கொண்டுவர உன்தமையன்
பெண்கள் இருப்பர் விரைந்திடு -பெண்களாம்

என்பெற்றோர் கண்ணில் மனைவி இருவரும்
வன்கண் இருக்கின்றார் ஆதலால் -என்குலத்தில்

பெண்ணெடுத்தால் பெற்றோர் மனங்குளிரும் என்றேசா
பெண்கொண்டான் தன்குலத் தில்சீராண் -பெண்களை

தன்தகப்பன் சோதரனாம் ஆபிரகாம் மைந்தனும்
என்குலமே என்றே இசுமவேல் -தன்னின்

குலத்தில் இருபெண்டிர் கொண்டனன் ஏசா
குலவிருத்தி ஆனது ஆங்கு -கலந்தீயும்

தீயெரிய மேலே அவியணல் மேலிட,
தீயுமிச் சட்டியைப் பார்க்கினும் -தீயேமேல்

என்றது, தீயுள் விழுந்துக் கருகுமாம்
வன்மதி ஏசா வினதுதான் -அன்றே

தமையனவன் தப்பிச் செலக்கண்ட ஏசா
சுமைமனை மக்கள் நினைத்தான் -சுமைபல

ஏற்றினான் தன்மேல் விழைந்தவன் மேன்மேலும்
தேற்ற விடாய்த்த மனமது -ஆற்றா

இருவரும் தந்தையால் கைவிடப் பட்டோர்
இருவரும் ஒன்றுசேர்ந்துக் கூட்டாய், -திருயிறைவன்

சித்தமதை மாற்றத் துணிந்தால், திருவவர்
எத்தனாம் யாக்கோ புடன்


ஆதி கலி 59

பெத்தேலில் யாக்கோபு கண்ட வியக்காட்சி


பதான்அராம் நாட்டிற்குப் போக வழியில்
வதைவனம் தன்னிலோர் ராத்தங் -கிதுசரி

என்றே இடம்பார்த்து ஓர்கல் எடுத்தவன்
தன்தலைக்கு வைத்தான் அனையாக -அன்றவன்

கண்டான் கனவுத் தெளிவாகத் தூக்கத்தில்
கண்டான் ஒருயேணி விண்ணின்று -மண்ணினைக்க;

கண்டான் இறங்கேறத் தூதர்கள் சேனையை;
கண்டான் இறைவனை மேலவன் -மண்ணினது

மேலிருந்த கர்த்தர் அவன்நோக்கி வாழ்த்தினார்,
சாலவன் ஆபிரகாம் ஈசாக்கின் -சாலிறைவன்

யானே படுத்திருக்கும் இந்நிலத்தைக் கைக்கொடுப்பேன்
நானே உனக்குச் சிறந்துனக்கு -வானங்கீழ்

உன்வழி மக்கள் உலகினது தூள்போல
நன்றாய்ப் பெருகி இருப்பரே -சென்றுலகு

நான்றிசையும் நீபரம்பி உன்னுள்ளும் உன்வழியைத்
தான்பெற்று வாழும் உலகிது -மேன்சீராண்

போகு மிடமெல்லாம் நானிருப்பேன் உன்னோடு
போகு முனைநான் வருவிப்பேன் -ஈகையாய்த்

தந்திடுவேன் இத்தேசம் உன்கை, தலைமுறை
இந்நாளில் சொன்னேன் சிறந்து


ஆதி கலி 60

யாக்கோபு தசமபாகம் கொடுக்கப் பொருத்தனை செய்தல்


உறக்கம் கலைந்து எழுந்தனன் அஞ்சி,
சிறப்பிது மண்ணே இறைவன் -உறைவிடம்

கல்லை எடுத்தவன் எண்ணெயை வார்த்தங்கு
எல்பெத்தேல் என்று பெயரிட்டு -நல்லூராம்

லூசு பெயரது அந்நாள் வரையிலே
லூசு பெயர்முன்னே பெத்தேலே -லூசின்

பெயரா னதுநாள் வரையில் அழைத்தார்
பெயரை அவர்பெத்தேல் என்று -வியனார்

இதுவரை தேவனைக் காணா திருந்தேன்
இதுமுதல் கர்த்தரே தேவன் -வதைபோம்

இடமெலாம் உண்ண உணவும் உடையை
இடைக்கவர் தந்தால் சிறந்து -கடையன்நான்

தந்தை இடம்விட்டு ஓடுகிறேன் நானிங்கு
இந்த யிடத்திற்கு நான்திரும்ப -விந்தை

இறைவன் அருட்செய்தால் நானும் ஒழுங்காய்
இறைவன் தொழுவேன் சிறந்து -திறனவரே

தூணாய் நிறுத்திய இக்கல் இறைவீடு
வீணாகப் போகா தெனைக்காப்பார், -காணும்

பொருளெலாம் பத்திலோர்ப் பங்கைக் கொடுப்பேன்
திருவிற்குக் காணிக்கை நான்


ஆதி கலி 61

யாக்கோபு ராகேலை பதான் அராமில் சந்தித்தலும், மாமனாகிய லாபான் வேலைக்கு அமர்த்தலும்


கீழ்திசைச் சென்று பதான்அராம் சென்றடைந்தான்
வாழ்ந்தனன் லாபான் புதல்வியர் -கீழ்திசை

வாழ்நகர வாயி லடைந்தவன் வாழ்மக்கள்
கீழ்நகரத் தாரை வினவினான் -வாழ்சீர்

பெயரென்ன ஊரின்? கிடைமரிக்கும் மேய்ப்பர்:
பெயராம் அராமெனக் கேட்டோன், -பெயர்மாமன்

லாபானின் நல்வாழ்வைக் கேட்டான் மருமகன்
லாபான் மகளதோ காண்சீரே -லாபானின்

ஆடுகள் மேய்த்து வரும்கன்னி ராகேலை
ஆடுமேய்க்கும் மாந்தரும் கைக்காட்ட, -காடுதிரிந்

தோனோ கிணற்றின்மேற் கல்லெடுத்து நீர்காட்டி
னானே ரெபெக்காள் மகனவன் -மானவள்

பெண்ணணங்கே யானே ரெபக்காள் மகன்கேளாய்
பெண்கொடுத்தார் உன்தந்தை ஆபிரகாம் -மண்மைந்தன்

என்தகப்பன், நானிளையோன், நற்செய்திச் சொல்நீயும்
உன்தகப்பன் லாபானைக் கண்டுசீர் -அன்னவன்

லாபானும் ராகேலின் சொல்கேட்டு வந்தனன்
லாபானும் கட்டி யணைத்தனன் -லாபானின்

ஊன்உதிரம் நீமகனே, தாயுன் சகோதரியென்
தேன்போன்ற நல்ல உறவன்றோ -இன்னாளாம்

உன்தாயின் நல்வருகைக் காயிந்த நாடுள்ள
நன்மரம் காத்திருக்கும் கேளாயோ -என்மகனே

நீயெந்தன் அன்புத் தமக்கை மகனாயின்
நீயெனக்கு வேலைசெய் வாய்


ஆதி கலி 62

கூலியாக ராகேலை மணமுடிக்க யாக்கோபு கேட்டல்


மருமகன் என்றாலும் நானுக்குக் கூலித்
தருவேனே கேளாயோ கூலி, -சரியெனக்

கேட்டான் மருமகன் ராகேல் மனைவியாகக்
கேட்டதும் லாபான் மகிழ்ந்தனன் -கேட்டநீ

ஏழாண்டு ராகேல் மனையாக்கச் செய்வேலை,
ஏழாண்டும் போயிற்றுக் கண்ணிமைக் -கீழாம்

பொழுதுபோல் வாழ்ந்தவித்தான் யாக்கோப்பு ராகேல்
அழகி அடையத் தவித்து -அழகிக்காய்

ஏழாண்டு ராகேல் மனையாக்கச் செய்கின்றான்
ஏழாண்டில் மூத்தவள் லேயாளின் -சேழாளை

வாழிந்தப் பூவுலகில் கண்டுயாம் வாழ்மணம்
வீழா முடிப்போம் விரைந்துயாம் -வாழிருந்தே

ஆறாண்டு ஓடவும் கண்ணிமை மேலெழ
ஆறாப் பிரிவினால் கண்நோக்க -வேறாய்

பிரித்த கிடைநோக்கி யாக்கோபும் ஆண்டில்
சிரித்திருப்பேன் ராகேல் உடன்


ஆதி கலி 63

லாபான் மூத்தவளுக்கு வரன் கிடைக்காததால் சூதாக அவளை மணமுடிக்க முடிவு செய்தல்


ஆறுமாம் ஓடியது கண்ணிமை மேலெழ
ஆறாப் பிரிவினால் கண்நோக்க, -பாறை

மலைநோக்கி ஆடின் கிடைநோக்கி நாளே
நிலையா விரைந்திடு வாய்நீ -அலையழகே

ஏழாண்டு ராகேல் அடைய முடியும்நாள்
வாழும் நொடிப்போலச் சென்றதே -பேழை

மகள்தன்னை இன்றிரவு சென்றால்நான் சேர்வேன்
தகைமனையாள் ஆக்கி மகிழ்ந்து -இகத்திலே

ஏழாண்டில் மூத்தவள் லேயாள் மணமுடிக்க
வாழிந்தப் பூவில் வரவில்லை -வாழிந்த

ஏழாண்டில் என்னால் முடியாத வேலையைக்
கோழை முடித்திடுவேன் சூதென -வாழுமூரின்

சீரிது என்பேன் சிறந்து
ஆதி கலி 64

தென்றல் விடுதூது

ராகேலும் ஏங்கித் தவித்திருக்க வான்நோக்கி
ராகேலும் நோக்கி விடுதூதாய் -ஆகவே

தென்றலைக் கேட்டாளே சென்றிடுவாய் என்தலைவன்
நன்றா யுளரோ அறிந்துவா -அன்றியும்

தென்றலும் வீசிக் கிடைமறிக்கும் அங்கண்ணில்
என்றறிவோம் யாக்கோபு கண்ணுறங்கா -வன்னுறக்கம்

இன்றியே வாடும் நிலைக்கண்டு வந்தது
அன்றே அழகியின் கண்சேர -என்னயிது

இன்னிசையும் இன்னிசையில் வன்னாய் செவியுள்ளே
என்செய் கிறாரோ தலைமகன் -என்றவள்

தன்தலைவன் நற்செய்திக் கேட்டுப்போய் வாவென்றத்
தென்றலும் போயிற்றா மெங்குதான் -வன்னே

இலைமரம் நெட்டாய் அசையாமல் நிற்க
இலையசையா தேயிருக்கின் றாயே -இலையுனக்குக்

காதல் தலைவலி என்றே குலைநடுங்கும்
காதலால் வாடும் மகளவள் -காதலில்

தென்றலுக்கு வாடைத் தலைவனோ தென்றலும்
என்சொல்கேள் சென்றதே? வாடையைத் -தென்றலும்

கண்டே மகிழ்ந்திருக்கக் கேள்சொல் மறந்திட்டுக்
கண்ணோடு கண்சேர்ந்த தோவங்கே -கண்ணாள்

பிரிவினால் வாடும் மடந்தையை நோக்காப்
பிரிதொரு நாளதில் பார்ப்போம் -விரைந்தது

தென்றல் தலைவனாம் வாடை விடுத்தங்கு,
தென்றலின் தூதே தலையாமே -அன்றியும்

வாடையைக் கண்டும்நான் வாடும் உனைநினைத்து
ஆடை விலகா மகளேநான் -வாடை

விடுத்து விரைந்தேன் உனைக்காண யிங்கே
படுகிறாய் நீபெரும் பாடு -அடடடா

ஆனால் எனைபற்றி நீள்நெடுப் புல்லிடம்
தேனாய் இனிக்கும் மொழியுடைத் -தேனே

தலைவன் நலமே கிடைநடுவே கண்ணே
நிலைவருவான் சேர்நாளைத் தானே -அலையழகன்

நாளை வருவான் தலைவன் எனக்கேட்டோ,
காளை வரும்திசை நோக்கியாள் -வேளையாம்

காலை விடியுமெப்போ தென்றவளும் காத்திருந்தாள்
காலை வருமே பொழுதிற்காய் -ஏலா

இரவினில் கண்ணுறங்காக் கண்விழித்த ராகேல்
இரவினில் சொல்கேட்டு யாரோ -இரவினில்

பேசுகின்றார் என்றவள் கேள்திசையில் லேயாளும்
வீசை மனங்கொதிக்க நின்று


ஆதி கலி 65

லேயாளின் ஆற்றாமை


உன்தலைவன் வந்திடுவான் இன்றே எனநீயும்
நன்றிரவு சென்றாலும் கண்விழிக்க -என்னவனோ

எங்கிருக்கின் றானோ யெனநானும் காத்திருக்கேன்
தங்காய், தலைவருவா னோஎனக்கு? -தங்கமகள்

கண்கள் விழித்திருக்கும் கண்ணே தமக்காய்நீ
மண்ணில் வருவானே உன்தலைவன் -விண்ணார்

தருவாரே நல்மைந்தன் உன்தலையாய் மண்ணில்
விரைந்திட நான்செய்வேன் வாழ்த்து -கரையில்

அழகில் உனைப்போல நானிருந்தால் தானே
விழைமகளாய்ச் செய்வர் மணமே -அழகில்லை

கண்களென்னின் கூச்சம் உடையதென்று அத்தானும்
கண்ணால் மணம்செய் விழைந்தாரே -மண்ணிலே

என்சொல்லி நான்செய்வேன் ஆறுதல் என்தமக்கை
நின்றழும் காட்சியை நான்கேட்டும் -என்சொல்லால்

ஆறா தவள்பாடு ஆண்டவனே ஏன்நீரும்
வேறாய்ப் படைத்தீர் அழகுதான் -மீற

அழகெதும் கண்ணோக்கும் ஆள்கண்ணில் தானே
அழகியே உன்நகை நன்றே -அழகில்

மயங்கியே வந்திடுவர் பல்லோர்பார் என்றே
வயதமக்கை ஆறுதல் செய்து -தயங்கிச்

சிலையென் றிருந்த தமக்கையின் ஆற்றா
நிலைக்கண்டுப் போனாள் நிலத்து -விலையேதும்

உண்டோ இதைபோக்க என்றே பிரிவாற்றாக்
கண்ணாளும் போனாள் மறந்து


ஆதி கலி 66

லாபான் சூதாய் லேயாளை முதலில் மனைவியாகக் கொடுத்தல்


இருவரின் சொல்கேட்ட லாபான் முடிவு
இருவரும் ஒன்றாய் நலமே -இருத்தலென்று

சூதாய்ச் செயல்புரியச் செய்தான் நிலைமுடிவு,
தோதாய் இருக்கும் இரவுதான் -வேதனோ

காலைப் பொழுதினில் ஆடு கிடைவிடுத்துப்
பாலை வனத்திலே ஓடிவந்தான் -வேலைக்

கொடுமாமன் இல்லம் விரைந்தவன் வந்தான்
கொடும்மகளைச் சொல்லின் படிநீர் -நடப்பூர்

வழக்கம் திருமணம் நல்விருந் துண்டு
இழையவள் தன்னைத் தருவேன் -விழைந்தே

கழல்கழுவி வாரும் விருந்துண்டுப் பின்னர்
விழையாள் தருவேன் விருந்து -விழைந்து

விருந்துண்டு நன்பழச் சாறருந்திப் போனான்
விருந்தாம் மகளை மறந்து -விருந்தின்பின்

நள்ளிரவில் விட்டானே லேயாளை, சேர்மகளே
கள்ளமாய் அத்தா னுடன்நீயே -கள்ளம்

ஒளியில்லாச் சேர்வறையில் சாறின் மயக்கம்
ஒளியிழக்கச் சேர்ந்தனன் லேயாள் -ஒளிஞா

யிறுவந்து காலை எழுப்பவும் கண்டான்
சிறுமகள் அல்லவே சூது -திறந்தே

சினங்கொண்டு யாக்கோபு சென்றனன் வீடு
இனமென்று வந்தேனே நாடு -மனைசூதாய்

ஏன்கொடுத்தீர் லேயாள்? பகன்றிடுவீர் மாமாவே
ஏன்செய்தீர் இங்ஙனம் சூதாக -வான்கீழே

காத்திருந்த கன்னிகை மூத்தவள் தானிருக்கக்
காத்திருக்க வைத்து இளையோளை -மேத்தூரில்

காத்திருக்கும் கன்னியை யார்முடிப்பார், கைபிடித்துக்
காத்திருக்காச் செய்தேன் மணம்தானே -மேத்திலா

மாமா, இருளில் அறிந்தேனே மூத்தவள்
மாமா, இளையோளே கூலியென -மாமா:

திருநாட்கள் லேயாள் நிறைவேற்றும் எட்டு,
தருவேன் இளையோள் துணையாய் -சரியோய்

அதுசரி ஏழாண்டு காத்திருக்க வேண்டாம்
வதைநீங்க; பொன்மகளைத் தந்தால் -வதைநீங்கிச்

சேர்ந்திருப்பேன் பொன்மகள் மார்பினில் சாய்ந்துறங்க
வேர்பற்றிக் காத்திருந்தேன் நான்தானே -சீர்மகன்

உன்பேரில் நம்பிக்கை உண்டே மருமகனே
உன்கையில் எட்டாம்நாள் ராகேலை -நன்மணம்

செய்யக் கொடுத்திடுவேன் லாபான்நான், செய்வாயே
செய்படி ஏழுநாட் கள்தானே -வெய்தே

இருதலைக் கொள்ளி எறும்பாய் இருந்தாள்
விருந்துண்டுத் தன்தலைவன் வந்தால் -விருந்தாக

என்னைத் தருவேனே என்றுதவித் தாள்ராகேல்
என்மூத்தாள் போவாள் கசந்துதான் -என்ன?

விருந்தின் முடிவில் தலைவன் அறைபோய்
விருந்தினர் போகவும் லாபான் -விருந்தளிக்க

மூத்தவள் லேயாள் அறைசேர்க்கச் சென்றதை,
காத்தவள் கண்டு அதிர்ந்தனள் -மேத்தவள்

போனாள் அதிர்ந்து, தலைமகளைச் சேரச்செல்
போன தகப்பனைக் கண்டவள் -போனானே

வஞ்சகத்தில் ஏமாந்தே என்தலைவன் எந்தனின்
நெஞ்சே வலிபொறுப்பாய் நீ


ஆதி கலி 67

ராகேல் லேயாளோடு சண்டையிடுதல், பின்னர் எட்டுநாள் காத்திருத்தல்


இருதலையில் ஒன்றின் வலிபோக, ஆயின்
இருந்தேனே ஏழாண்டு என்னாண் -வருகைக்குச்

சேரும்முன் கண்டால் சினத்தாலே என்னையும்
சேருதகை என்பான் தலைவனே -வேராய்

ஒருவலி நீங்க மறுவலி ஓங்க
ஒருவழியாய் யாக்கோ பறியா, -செருமகிழ்க்

காலை வரையிலே காத்திருந்த கன்னிகைக்
கோலை எடுத்தாள் சினந்தவள் -வேலவள்

ஏழாண்டு நான்காக்க நீகொண்டு போனாயே
சேழாள் கணவனைக் கோழையாய் -ஆழ

நினைமகிழ்ந்துப் போவாய் மகனவனின் காதல்
நினைவில்கொள் யானே முதலாம் -சினமே

முதல்காதல் நீயென்றால் முன்மனைவி யானே
நிதமெந்தன் நல்கணவன் சேர்ந்து -விதவிதமாய்

நன்மக்கள் பெற்றிடுவேன் காணாய், தமக்கையே
சென்றுவா எட்டுநாள் பின்நீயும் -நன்றே

விடுமனமே ஏழாண்டாய்க் காத்தோம் இருப்போம்
விடலெட்டு நாள்தானே என்று -விடமாட்டா

என்மனமே கொல்கின்றாய், வன்வலியால் என்தலைவன்
என்னுயிரே இன்வருவான் எட்டுநாளில் -அன்றியும்

ஏழாண்டு போனது ஏழுநொடிப் போலேதான்
சேழாள் மணம்பின் நொடியாண்டே -ஆழிமனம்,

கூழைக்கூத் தாட, மனமேஓ எட்டேநாள்
வாழக் கணவனடை வேன்சீராண் -வாழும்சீர்

அத்தான் நிறைவேற்ற எட்டுநாள் ஆங்கேதான்
எத்தன் தகப்பனே, திட்டித்தீர்த் -தத்தையும்:

எத்தனை ஆண்டுகள் என்துணைக்காய்க் காத்திருந்தேன்!
எத்திக் கொடுத்தான் முதல்மகள் -அத்தவன்

என்முதல் காதலை நானைடய எட்டுநாள்
இன்மொழியாள் மார்பிலே எட்டாம்நாள் -பின்வரும்;

என்மனைவி லேயாளை ஏற்பேன்நான் எட்டுநாள்
என்றனன் நோக்கியெட்டு நாள்தனை -அன்னவளை

முத்தமிட்ட முன்முதல் நாளேநான் சொக்கினேன்
முத்தமிட்ட கன்னி மனையேற்க -எத்தனவன்

மாமன் முதல்பெண்ணைச் சூதாய்க் கொடுத்தானே
சீமை வழக்கம் எனச்சொல்லி -மாமனோ

எட்டாம்நாள் இன்முகத் தோடே நிறைவாக்க
எட்டாக் கனியைப் பறித்திட -வட்டநுதல்

இன்மொழியாள் ராகேல் அடைந்தனன் கூலியாய்
வன்வழக்கம் தன்னை நிறைவேற்றி -இன்றுநான்

எட்டிப் பறித்த கனியான ராகேலும்
எட்டப் பிரித்தனள் லேயாளை -எட்டுமோ!

இட்டக் குரல்கேட்ட கர்த்தர், கருத்தரித்து
மெட்டுப்பா டென்றார் மகிழ்ந்து


ஆதி கலி 68

யாக்கோபின் மனைவிகளும் பிள்ளைகளும்


பெற்றெடுத்தாள் பிள்ளையை லேயாள் சிறந்தங்கு,
பெற்றெடுத்து ரூபன் பெயரிட, -சிற்றாளாம்,

பெற்றவள் சொன்னாள், கணவனெனை நேசிப்பான்
அற்றவள் தன்னை விடுத்தவன் -நற்றாள்

இரண்டாம் முறையாய்க் கருத்தரித்து லேயாள்
இரண்டாம் மகனைப் பெறவும் -இரண்டாம்

மகனால் நிலைமாறக் கர்த்தர் அளித்த
மகனை சிமியோன் பெயராம் -மகளவள்

மூன்றாம் முறையாய்க் கருத்தரித்து லேயாளும்
மூன்றாம் மகனைப் பெறவங்கு -மூன்றாம்

மகனால் கணவன் நிலைப்பானே என்று
மகன்பெயர் லேவி எனவே -மகளவள்

நான்காம் முறையாய்க் கருத்தரித்து லேயாளும்
நான்காம் மகனைப் பெறவங்கு -நான்காம்

மகனால் துதிக்கின்றேன் கர்த்தரை என்று
மகன்பெயர் யூதா எனவே -மகற்கு

கிழக்கு நகர வழக்கின் படியே
விழைபெண்டிர் கூடவே லாபான் -விழலோடு

சேர்வளர்ந்த ஈர்பெண்டிர் வேலைமகள் கைக்கொடுத்தான்
பார்வழக்கம் போகாதே ஆங்குதான் -பார்சீர்

முதல்மனைவி நான்காகப் பிள்ளைகள் தந்தீர்
முதல்காதல் யானே இலையே -நுதல்முத்தம்

நான்கொடுக்க ஓர்மகனை இங்கு, திருதாரும்
நான்பால் கொடுக்க மகன்தனை -நான்செய்தோ

உன்கருவைக் கர்த்தர் அடைத்திருக்க என்செய்வேன்
உன்வீட்டைக் கட்ட இறைவனார் -நன்னருள்

கேட்டிடு என்சொல்கேள், பிள்ளையைத் தந்திட
வாட்டுகிறாய் நானோ இறையிங்கு -வாட்டம்

அழகி அழுதிருக்க ஆங்கே வருகை
அழகியின் வேலையாள் பில்க்காள் -அழகி

இவளாலே என்வீட்டைக் கட்டுவேன் என்றே
அவளைக் கொடுத்தாள் மடியில் -அவனின்

மடிமேல் கொடுத்தனள் ராகேலும் பில்க்காள்
மடிபேறுப் பெற்றவள் பிள்ளை -நடைமாற

எந்தன் வழக்கை இறைத்தீர்த்தார் இன்றுத்தான்
தந்தாள் மகன்பெயர் தாண்என -தந்தே

மடிமேல் கொடுத்தனள் ராகேலும் பில்க்காள்
மடியிரண்டாம் பெற்றவள் பிள்ளைத் -தடைநீக்கிப்

போராட்டம் என்தமக்கை வென்றேன்நான் இன்றுத்தான்
பேராக நப்தலி என்றிட்டு -பேரே

அடடா! கருப்பிள்ளை ஆங்கே மிகுதி
இடையில் வராமலே போனார்; -தடையாய்க்

கருவடைத்த நானோ சிறுவேலைக் கையிட்(டு)
இருளா யிருக்க ஒளிதா -அருளென

சில்ப்பாள் மடிகொடுத்த லேயாளும் போட்டியிட,
சில்ப்பாளும் பெற்றெடுத்தாள் ஓர்பிள்ளை -எல்லார்

மனதையும் ஏராளம் ஆக்கினானே என்று
மனைவி பெயரிட்டாள் காத்

இரண்டாம் முறையாய்க் கருத்தரித்துச் சில்ப்பாள்
இரண்டாம் மகனைப் பெறவும் -இரண்டாம்

மகனாலே பெண்களில் ஆசிபெற்றேன் நானே
மகன்பெயர் ஆசேர் எனவே -மகனாம்

முதல்மகன் ரூபன் வயல்வெளிச் சென்று
முதற்கனிகள் தூதாயீம் கொண்டு -முதல்சுவை

என்றும் நலமே கொடுயெனக்கு என்றாளே
தன்தமக்கை லேயா ளிடம்கேட்க -அன்றேதான்

என்கணவன் நீயெடுத்தாய் வேறாய், தமக்கையே,
என்மகன் தந்தக் கனிவேண்டும் -என்றுரைத்தாய்,

நன்றோ அனைத்தும் கவர்தல், சரியின்று
என்கணவன் கொள்வாய் இரவுதனில் -தன்கணவன்

சேர்ந்தனள் லேயாள் இரவில் களிப்பாக,
சேர்ந்தவள் பெற்றாள் கருத்தரித்துச் -சேர்மகனைப்

பேரிட்டாள் லேயாள் இசக்கார் எனவங்கு,
நேரிறைவன் தந்தார் பலன்தனை -நேரவனைப்

பேரிட்டாள் லேயாள் செபுலோன் கணவனென்னைச்
சேருவார் இன்றி லிருந்துதான் -நேரார்

இறைவனார் முன்னர் அழுதழுது, கண்ணீர்
நிறைவாக்கும் என்னை நிலத்தில் -சிறைவிட்டு,

தாயாய்க் கருத்தரிக்க வைத்தார் இறையருள்
சேயாயாண் பிள்ளைக் கருப்பெற -சேயாக

ஆறுபிள்ளைப் பெற்றாள் தமக்கை எனக்காகத்
தேறுதல் செய்ய ஒருபிள்ளை, -தாறறுக்கப்

போதா முதல்பிள்ளை யோசேப்பு என்றவள்
கோதைப் பெயரிட்டாள் சேய்தனை -மாதவள்

தன்காதல் பிள்ளையை ஈன்று நிறைவாகத்
தன்னூர்ச் செலவே விழைந்தவன் -தன்மாமன்

சென்றுகேட்டான் போகவிடும் நீரே மனைமக்கள்
சென்றிடுவேன் செய்வேலைக் காய்


ஆதி கலி 69

தன்னூருக்குச் செல்ல யாக்கோபு கேட்டலும், லாபான் அவனை மீண்டும் வேலைக்கு அமர்த்தலும், யாக்கோபு புள்ளியுள்ள ஆடுகளைத் தந்திரமாகக் கருத்தரிக்க வைத்தலும்


மருமகனே நீயிருப்பாய் இன்னும் சிலநாள்
மருமகனே கூலிகேள் என்ன -திருச்சொன்னான்

புள்ளி உடையது ஆடுகள் எல்லாமே
தள்ளிடும் கூலி யதுதானே -அள்ளச்

சரியென்று சொன்னவுடன் மாமனின் ஆடு
பிரித்தெடுத்தான் புள்ளி உடைமே -பிரித்தவன்

மூன்றுநாள் தூரமாய் வைத்தனன் தன்மக்கள்
கூன்கிடை ஆங்கு மறியுமே -வான்கீழே

எத்தன் குணமது மாறாதே யாக்கோப்பின்
எத்த நினைத்தான் உறவிலே -இத்தனைநாள்

வேலை! சிலஎண்கள் ஆடுகள் தானோயேன்
வேலைப் புரிந்தான் செயல்தனை -சோலையில்

நீர்காட்டும் நேரத்தில் புள்ளியில்லா ஆடுகளை
நீர்பருகி நிற்க இளைப்பாறிச் -சேர்வதுண்டு,

சேர்ந்திடம் தன்னில் மரம்வெட்டிப் புள்ளியிட்டு
நீர்பருகும் மேகண்கள் பட்டிட -நீர்செல்

வலிமை மிகுமேக்கள் செய்தான் படியே
வலியிலா மேக்கள் விடுத்தான் -வலிமிகு

மேக்கள் கருத்தரித்து ஈன்றன புள்ளியாய்
மேக்கள் பெருகியது காணங்கு -தாக்கமே

என்னயிது மேக்கள் குறைகிறதே எண்ணிக்கை
என்றே முதலாளாம் லாபானின் -சின்னவர்கள்

பின்வந்த யாக்கோபே கள்ளாய் எடுத்திட்டான்
என்றனர் லாபா னிடம்சேய்கள் -அன்றவன்

சந்தித்த மாமனின் நாடி முகம்வேறாய்,
தந்தை முகம்போலே சேவித்தேன் -எந்தனை

வேறாகப் பார்க்கின்றார் மாமன் விடுப்போமே
வேறாகச் சென்றிடுவோம் நாடு


ஆதி கலி 70

கானான் செல்ல கர்த்தர் யாக்கோபைப் பணித்தலும், யாக்கோபு லாபானுக்குச் சொல்லாமல் ஓடுதலும், லாபான் தன் சிலைகளைக் காணாமல் துரத்துதலும்.


இறைவனார் அன்றிரவே செல்நாடு என்றே
இறைமொழி வந்திட மக்கள் -நிறைவளம்

கொண்டோடிப் போனான் விடுத்தவன் மாமனிடம்
கொண்ட வளத்தை எடுத்தவன் -கொண்டோர்

அறிய மனைவி இருவரும் கேட்க,
தறித்திடும் எம்தகப்பன் வேண்டாம் -வெறுக்கிறோம்

எங்களை விற்றார் விலைக்கு மறுபடியும்
தங்க மறுத்தோமே வீடிதில் -எங்கோ

புறப்படுவோம் உம்மோடு என்றவர்ச் சொல்லி
புறப்படும் வேளையில் லாபான் -புறச்சிலை

சிற்றை எடுத்தனள் ராகேலும் -அற்றவள்
செய்கை அறியா திருந்தனன் யாக்கோபு

செய்ச்சிலைப் பற்ற துரத்தினான் -மெய்மாமன்
மூன்றாம்நாள் யாக்கோபு ஓடிச்சென் றானென்றும்

நான்கு மனைவி வளமெடுத்து -மூன்றுநாள்முன்
ஓடினான் உன்மருமான் என்கூற லாபானும்

ஓடினான் பின்னே தொடர்ந்தங்கு -ஓடவோட
ஏழாம்நாள் கீலேயாத் என்ற மலைமேலே

கோழை ஒளிந்துள்ளான் என்றேகேள் -கோழையார்
சேழாண் மனைவியர் என்மக்கள் ஏதேனும்

கீழாகச் செய்யீர்ச் செயலென -வேழார்
இராத்தங்கி, காலை அறிவிப்போம் நாமும்

இராவிலே மக்கள் உறங்க -இரவில்
கனாக்கண்டான் லாபானும், விண்தூதர் வந்து

கனாவிலே எச்சரித் தாரே -இனியும்
ஒருசொல் அவனெதிர்சொல் பேசாதே லாபான்

வருவித்தேன் தேசம் செலயான் -திருவாக்கைத்
தானறிந்த லாபான் இருள்நீங்கக் காலையிலே

தானே தெரிவித் தனன்


லாபானும் யாக்கோபும் உடன்படிக்கை செய்தல்


லாபான் அறிவியாமல் நீர்விட்டுப் போனதென்ன
லாபானின் மக்கள் மனைவியாய் -லாபானின்

இன்னுதிரம் உன்மக்கள் தானே, விடுத்தாயே
இன்முகம் காணாதே ஓடியதேன் -இன்முகம்

முத்தம் செயவும் விடாது அழைச்சென்றீர்,
எத்தாய்ச் சிலைக்களவுச் செய்ததேன் -நித்தம்

நினைவால் சிலைகள் நினைத்துநான் வாட
மனையுள் எடுத்தது ஏனாம்? -நினைப்பீரோ

யாரெடுப்பர் உன்சிலை? யாரெனினும் சாவார்கள்
யாரென நீநினைத்தாய் நீதிமான் -பாரிலே

காண்பாயோ என்போல் சிலைகள் எடுத்திட,
காண்கள்வர் யாருமிலை யிங்குதான் -காண்பீரே

உன்தமையர் முன்நீரே சோதித்து நன்றாக
என்னிடம் ஏதுமிலை, காண்பீரே -என்னிடம்

உன்சிலை யேதும் இருந்தாலே தீர்க்கட்டும்
உன்என் நடுவே அவர்தரிக்க -தன்கையால்

கூடாரம் யாவையும் சோதித்துத் தன்சிலைத்
தேடினான் லாபான் விடாய்த்தவன் -தேடவந்த

லாபானின் முன்னாலே ராகேல் எழும்பாது
லாபான் மகளமர்ந் தாள்சீராள் -லாபானே

என்தந்தாய், பாரும் வழிபாடாம் பெண்ணினத்தின்
என்காலம் இங்கே, அதனாலே -என்தந்தை

முன்னர் எழும்பாது இங்கமர்ந்தேன் மன்னியும்
என்செயல் என்றாள் மகளங்கு -வன்சிலைகள்

சேணத்தின் கீழ்வைத் தமர்ந்திருந்தாள் வன்சிலைகட்
சேணம்கீழ் பாராரே தந்தையென -வீணையாள்

சேணம்மேல் குந்தி அமர்ந்திருந்தாள், வன்சிலைகள்
வீணே, திருடினாள் பெண்ணவள் -வீணாய்ச்

சிலையேதும் இல்லாதே கைவெறுமைக் கண்டோன்
சிலையுண்டோ, மாமாமெய்க் கூறும் -சிலையில்

சிலைபோல நிற்கின்றீர் ஏனோ கலையாம்
சிலைதன்னை யார்கொள்ளை யிட்டார்? -சிலையில்லை

கள்ளர் இலையிங்கு மக்கள் பெயரனே
கள்ளர் நினைத்தேன் தவறெனது -பிள்ளை

இவர்களை முத்தஞ்செய் தேநானும் செல்வேன்
இவர்விட்டு நாடு திரும்ப -அவனங்கு

பத்து முறைகூலி மாற்றினீர் எந்தனுக்கு
எத்தனெனப் பேர்கொடுத்த மக்களால் -செத்துப்

பிழைத்தேன் வெயில்குளிர் வாட்டி வதைக்க
விழைந்தென்னைச் சொன்னீர்கள் வன்சொல் -குழைந்து

இதுநாள் அறிந்தேனே கள்வர் இலையென்
இதமாய் வழிசெல்வீர் மக்காள் -அதுபோல்

இதுமலைத் தாண்டி வராதிரும் என்றே
அதுமலை ஆணையிட் டார்


ஆதி கலி 72

இசுரேல் படலம்


யாக்கோபு கர்த்தரின் தூதரை மேற்கொண்டு இசுரவேல் என்ற பெயரடைதல்


வழிவிட்ட மாமனை நல்விருந்து செய்து
வழிசென்றான் யாக்கோபு நாடு -செழித்தவன்

செல்லவும் விண்தூதர் கண்டனன் ஓரிடத்தில்
சொல்லூரை மக்னாயீம் என்றனன் -செல்லூரில்

ஏசா சினந்தனிந்துப் போனானோ இல்லையோ
ஏசா எனைவெறுத்துக் கொல்வானே -பேச

இருவரைச் சென்றுவர யாக்கோபு விட்டான்
சிரம்தாழ்த்திச் சொல்லும் தமனே -கரம்விடுத்

தூதர்த் திரும்பி மகிழ்வாய் வருகின்றார்
மேதினில் ஆட்கள் பலரோடு -தூதர்சொல்

கேட்டவன் போனான் விடாய்த்தவன் என்தமையன்
வேட்டையாய் ஆடுவான் ஏன்தானோ -காட்டில்

இருகூட்டம் தன்னைப் பிரித்தனன் சேர்க்கா
இருகூட்டம் என்கை வளமாய்த் -திரும்பிடச்

செய்தீர் இறைவா, வளம்பலவாய்த் தந்தென்னைச்
செய்தீர் வளவனாய் இன்றுதான் -மெய்யே

ஒருகோலைக் கொண்டு கடந்தேன்நான் யோர்தான்
திருவென்னோ டேயிருந்த தாலே -திருபலவாய்ச்

சேர்த்து இருகூட்டம் போற்ற வளவனாய்ச்
சேர்ந்தேன் தமர்நாடு இன்றுநான் -சேர்ந்திட்டேன்

சொல்லுரைப் போலே தமர்நாட்டுள் காப்பேனென்
சொல்லவர் நீர்தான் இறைவனாரே -சொல்போலக்

காப்பீர் மனைமக்கள் தம்மைச் சிறந்திங்கு
காப்பதும் போல்யார் உளரிங்கு -காப்பவர்த்

தூதன் இறங்கினார் போரிட யாக்கோபு
தூதனை நேரிட்டுப் போர்புரிய, -தூதனோ

வென்றாய் விடுபோக ஞாவருதே, மாட்டேன்நான்
என்னைநீர் வாழ்த்தும் வரையிலே -உன்னின்

பெயரென்ன என்கேள் விடையாய்ப் பகன்றான்
பெயரெந்தன் யாக்கோபு என்று -பெயருனது

இன்றுமுதல் மாற்றம் இசுரேல் எனவங்குச்
சொன்னார் இறைவன் பெயரது -அன்னார்

தொடையூன் தொடவங்கு ஊன்மாறிப் போகத்
தொடையிலே ஊன்மாற விந்தி -நடந்தனன்

அன்றதனால் இன்றும் இசுரேலில் ஊன்புசியார்
மென்தொடைத் தன்னையே கேள்


ஆதி கலி 73

ஏசாவிற்குக் காணிக்கை அனுப்புதலும் ஏசாவைச் சந்தித்தலும்


தமையன் மனங்குளிரக் காணிக்கைத் தன்னைத்
தமையன்பால் போக விடவும் -தமையனோ

ஏற்காதே விட்டான் சிறுமாக்கள், ஏனோயென்
ஏற்காத் தமையனை அஞ்சிட -ஏற்காத

ஏசாவை நம்பாதே யாக்கோபு தன்மனைவி
ஏசாவின் கண்களில் பட்டாலே -ஏசா

சினங்கொண்டு வெட்டிடுவான் என்றவன் அஞ்சி
இனமூன்றாய் வேறு பிரித்து -இனமவர்

முன்முதலில் வேலையாள் பிள்ளைகள் சென்றிட,
பின்னராய் லேயாள் இருமக்கள் -பின்செல்ல

பின்கடையில் தன்மனையாள் ராகேலும் பிள்ளையெனத்
தன்மக்கள் வேறு பிரித்தனன் -தன்மேல்

சினத்தாலே மூத்தவன் ஏசா விழுந்தால்
இனத்தில் சிலரா வதோட -மனதிலே

அச்சத்தால் செய்தனன் மூன்று பிரிவுகளாய்
அச்சம் தலைக்கேற ஆங்குதான் -அச்சமாய்க்

கண்ணோக்கிப் பார்த்தனன் யாக்கோபு ஏசாவோ
மண்மைந்தர் நானூறு மக்களோடே -மண்வரவும்

மண்மைந்தர்க் காண, தலையைப் பணிந்தனன்
மண்நிலத்தில் ஏழு முறையாக -மண்ணிலே

கட்டி யணைத்துத் தமையன் அழுதனன்
எட்டியங்கு நிற்பது யாரெனச் -சுட்டியவன்

கேட்க, இறைவனார் ஈந்தாரே இம்மக்கள்
நாட்டில் எனக்குச் சிறந்துதான் -நாட்டிலே

எல்லா மனைவியர் மக்களோடே தான்பணிய
நல்லார் இறைவன் உயர்த்தினார் -எல்லாமே

வல்லார்ச் செயலே செயலாம் எதற்காகச்
சொல்லி யனுப்புப் பொருளது? -அல்ல,

பொருளது காணிக்கை ஆண்டவன் இன்று
பொருளேற்பீர்ச் சின்னஞ் சிறுகை; -பொருளேதும்

வேண்டாம் தமர்நாம், எனினும்நீர் ஏற்றிட
வேண்டும் தகைத்துச் சிறந்ததை -வேண்டாத

ஏசா: வருக! தமரே திருநாட்டுள்,
ஏசா அழைக்கின்றேன் வாய்மொழிப் -பேசி

விரைவோமா நம்நாட்டுள் என்றனன் ஏசா
கருத்தாகத் தன்தமையன் ஏற்க -விரைவாக

நீர்செல்லும் முன்னே வருவோம்யாம் பின்னராய்
நீர்விரைவாய்ச் செல்ல, மெதுவாகச் -சேர்ந்திடுவோம்

சேர்பிள்ளை வேளை சிறியர்காண் ஆதலால்
சேர்மாக்கள் மாண்டிடும் இங்குதான் -சீர்ச்சொல்

சிறியர் தகைத்துயான் மாக்களை நாட்டுள்
சிறிது நிலைத்து வரவே -இறையின்

சிறியன் எனக்கு அருளும்நீர், கோவே,
சிறியன்நான் செய்தேன் மனுவாய் -சிஸியவன்

வந்தான் மெதுவாக யாக்கோபு நாட்டுள்ளே
வந்தப்பின் ஆங்கே வழிக்காத்து -வந்த

இறைவனை வேண்டித் தொழுதவன் கட்டி
நிறைபலிகள் செய்தான் குறையோன் -சிறப்பாக

வீழ்பலியின் பீடத்தை ஏலெல்லோ ஏஇசுரேல்
வாழ்மகன் ஆங்கே பெயரிட்டான் -வாழ்ந்தான்

பலியிட்ட நாட்டில் வசிக்க நிலத்தைச்
சிலநூறு காசிற்குப் பெற்று


ஆதி கலி 74

தீனாள் சீகேமியனால் கற்பழிக்கப் படுதலும் திரும்பி வந்து அவள் அழுதலும்.


வீட்டிலே தீனாள் அடைந்துக் கிடந்தவள்
வீட்டின் வெளிசென்றாள் பெண்ணவள் -நாட்டின்

மகளிரைக் காணப் புறப்பட்டாள் மாது
நகையாய்ச் சிரிப்பை அணிந்து -அகம்விட்டு

தீனாள் நடந்துசெல்ல ஆங்கே வனத்திலே
தேனீ மருண்டோட, கூடெது? -தீனாளின்

தேனின் இனியச்சொல் வந்திடும் வாய்தானோ?
தேனீயும் ரீரீயென் சுற்றிட -ஏனோ

கயல்விழிகள் தன்னையே நீர்விட்டு வந்து
கயல்குலம் காணக் குளத்தின் -இயல்விட்டுப்

பேரிரைச்சல் கேட்டங்கு மக்கள் இதோகாண்பீர்!
பேரிறைவன் செய்தச் செயலாமே -பேராமே

அம்பெனக் கூர்பார்வை வில்லாய்ப் புருவமும்
எம்மிடம் உண்டே உமக்கிங்கு -எம்போல

ஏதுண்டு என்றே சதங்கை ஒலியெழுப்பி
வேதா வருகை அறிவிக்க -ஈதோ

வனமுயல் ஓடிக் குழிபதுங்கும் மேடு,
இனமெங்கள் மெல்லினமே என்றே -தினைபோல்

இடைசிறுக எங்கே படர்வதாம் என்றே
இடைகட்டுச் சேலைத் தவிக்க -இடையாளே

வேலை யெனதுசெய்யா யானிருந்தால் குற்றமே
வேலை யெனதுசெய்ய வேண்டுமே -சேலையதும்

திண்டாட வந்தனவே கைகள் உதவிடவே
பெண்ணவள் கற்பினைக் காத்திட -மண்ணில்

நடந்த மடந்தை இளவரசன் கண்டு
நடக்குமிந்த மாதே மனைவி -அடடா

நடைபழகும் மாதை அழைத்திங்கு வாரும்
இடைகட்டி நானும் மகிழ -அடையக்

கொணர்ந்தக் கொடியிடையாள் தன்னையே மாந்தன்
புணர்ந்தான் நெடிநேரம் வன்னாய் -திணையில்லா

மாந்தனாய் சிற்றின்பம் ஓங்க இளவரசன்
வேந்தத் திருமகன் ஆங்குதான் -போந்திப்

பிழிந்ததால் சாறிழந்தச் சக்கையாய்ச் சென்றாள்
இழிந்தவன் வன்செயல் தந்தாய் -விழித்துப்பார்

என்சோ தரர்வந்தால் சொல்வேன்நான் கற்பிழந்த
என்சோகம் என்னவென்று தான்நீரும் -என்னை

இழிவேசி யில்லையென்றா என்மேலே கைவைத்
திழிபிறப்பின் நல்லெலும்பைக் கேட்டு -விழிதமையர்

என்றேநான் சொல்வேன்கேள் வந்தால், புலம்புவோளே
என்சொல்வேன் ஆறுதல் யான்


ஆதி கலி 75
லேவி சிமியோன் தீனாளுக்காக இருவரும் செய்த எதிர்வினை


தன்மகளின் வன்னிலைக் கண்டங்கு லேயாளும்
என்செய்வேன் சோதரர் இங்கிலையே -வன்செயல்

தன்னைப் புரிந்தோர்க்கு யாமே விடைக்கொடுப்போம்
என்பிள்ளை வந்தப்பின் னர்செல்வோம் -அன்னான்

இளவரசன் வன்செயல் தன்னை நிலைக்க
வளவரசன் கொண்டுகேட்டான் பெண்தா -இளவன்

அழகியிவள் தன்னை மணமுடிக்க கேட்க
அழகி மனைவியாய்க் கொள்வோம் -அழகியின்

சோதரர் வந்தனர், வன்செயல் சேதிகேட்டு
சோதரியின் வன்பாடைக் கேள்வியுற்று, -சோதரியின்

கற்பைப் பறித்தோனை வஞ்சித்து வாங்குவோம்
கற்கப் புகட்டிப் பழியென -அற்றார்

நுனித்தோல் உடையோர்த் தமராகார் இன்றே
நுனித்தோல் எடுமின் தமர்செய் -நுனித்தோல்

எடுத்திட ஆண்மக்கள் யாவர் நகரே
கொடுக்கவும் வெட்டி வலியாய் -துடிக்கவே

சூதே நுனித்தோல் எடுமின் எனுஞ்சொல்லாம்
வாதை மகளின் பகுதியில் -பாதியேனும்

மக்கள் செயவே சகோதரர் கண்பார்த்து
மக்கள் வலிக்கிறதோ ஏன்சீரே -மக்களார்

மூன்றாம்நாள் சென்றவர் மக்கள் வலிகண்டு
ஏன்வலிக் கின்றதோ மாக்கள்போல் -ஏன்நடத்த

எம்சோ தரியென்ன வேசியோ பார்நாமே
உம்மக்கள் கொல்வோம் குவித்தின்று -அம்மான்

அரசன் இளவன் எனஎல்லா ஆண்கள்
விரைந்தவர் வெட்டிக் குவித்துத் -திருவெலாம்

கொள்ளை யிடச்செய்து, பெண்டிர் சிறைபிடித்து
அள்ளியே சென்றனர் அன்றவர் -தள்ளியோன்

ஐயகோ என்செய்வேன் கானானில் நாடோடி
ஐயகோ என்செய்வேன் மக்களின் -ஐயமென்மேல்

ஐயகோ மைந்தரிவர் லேவி சிமியோனே
ஐயமின்றிச் செய்தார் பழியிங்கே -ஐயாவே

சோதரி மேல்நாங்கள் வைத்துள்ள அன்பினால்
சோதரியின் கற்பை நிலமகனும் -வாதித்தான்

வேசிபோல் ஏன்நடத்தி வன்புணர்ந்தான்? கேளீரோ
பேசும் இதுவே செயல்


ஆதி கலி 76

பெத்தேலில் யாக்கோபு பலியிடுதல்


பின்கர்த்தர் யாக்கோபை நோக்கி வருவாய்நீ
முன்னென்னைக் கண்ட இடத்திற்கு -என்றதும்

யாக்கோபு: மாந்தரே வன்சிலை விட்டிட,
யாக்கோபு ஆணையிட் டேன்நானே -ஆக்கமுடன்

பெத்தேல் இடத்திற்கு வந்தனர் யாவரும்
பெத்தேலை லூசென் றழைத்தனர் -பெத்தேலார்;

பெத்தேல் இடத்தில் பலிபீடம் கட்டியவன்
பெத்தேலில் இட்டான் பலிதனை -அத்தான்

பெயரிட்டான் ஏல்பெத்தேல் என்ற பெயரே
பெயரின் பொருளது யாது? -பெயரின்

பொருளது தேவன் பொருந்தியுறை இங்கே,
பொருள்பெயர் நாமறி வோமே -அருளாலே

ராகேல் கருதரித்துப் பிள்ளைப் பெறுங்காலம்
ராகேல் மிகவாக வேதனை -ஆகப்பேர்,

ராகேல் குரலிட, தாதியும் தேற்றினாள்
ராகேலே பிள்ளை மகன்பிறந்தான் -ராகேலோ

பிள்ளைப் பெறும்போது வந்த பெருவலி,
பிள்ளையைப் பெற்றப்பின் போவதியல் -அள்ளழகன்

பிள்ளையைப் பெற்றாலும் ராகேலின் வேதனையோ,
சுள்ளெனச் சுட்டு எரித்ததே -மெள்ள

மரணம் தனைத்தழுவ, பிள்ளையைக் கையில்
வரவும் பெனொனி பெயரே -கரத்தில்

கருப்பிள்ளை என்றே அவள்கூறி விட்டாள்
திருவிடம் இன்னுயிர் ஈந்தாள் -திருவவள்

ராகேல் மரித்திட எப்பிராத்தா போம்வழியில்
ராகேல் உடலை அடக்கஞ்செய்த் -தோகையாள்

ராகேல் நினைவாக அங்கே ஒருதூணைப்
போகும் வழியில் நிறுத்திட -ஆகி

மரிக்கும்முன் ராகேல் அழைத்தாள் பெனொனி,
திருச்சொன்னான் பென்யமீன், பிள்ளைத் -திருவின்

தரித்த தகப்பனார் இட்டப் பெயரே,
சிரித்த மகனின் நிலைத்து


ஆதி கலி 77

ரூபன் பில்க்காளோடே சயனித்தல், இசுரவேலின் பதின்மூன்று பிள்ளைகளின் பெயர்ப்பட்டியல்


முதல்மகன் ரூபன் தகப்பன் மனைவி
நிதம்காணும் பில்காள் அழகில் -மதிகெட்டுச்

செய்தான் தகாவன் புணர்ச்சி; புரிந்தனன்
செய்நாடாம் ஏதேர் தனில்தானே -மெய்யாண்

அமைமகன் ரூபன், இரண்டாம் மகன்தான்
சிமியோன். மகன்மூன்றாம் லேவி, -தமன்பின்னே

யூதா, இசக்கார், செபுலோன்தான் லேயாள்சேய்;
போதாதோ மக்களும் ஆறுதானே -வேதாள்

முதல்காதல் ராகேல் தனின்பேர் முதலாய்;
முதல்யோசேப், பென்யமீன் ஈற்றாம் -முதலாள்

பதிக்குநற் பிள்ளைகள் வேண்டி, பதிச்சேர்,
பதிவேலை நான்குப்பிள் ளைகள் -பதிச்சேய்

பெயர்தாணும் நப்தலியும் பில்காள் மகன்கள்
பெயர்காத்தும் ஆசேரும் சில்பாள் -பெயர்மகவு

லேயாளின் பெண்சேயாம் தீனாள் பதின்மூன்று,
சேயோனாம் யாக்கோபின் சேய்


ஆதி கலி 78

ஈசாக்கின் மரணமும், ஏசா சேயீர் மலைக்கு இடம் பெயர்தலும்


மம்ரே சமபூமி யாக்கோபு வந்தனன்
மம்ரே தனிலேதான் ஆபிரகாம் -தம்கையால்

நம்நிலம் என்வாக்குப் பெற்ற நிலமது
மம்ரேயில் தங்கி வசித்தனர் -அம்மகன்

ஈசாக்கு நீத்தான் உயிரை முதிர்வயதில்
தேசத்தில் ஏசாவும் யாக்கோபும் -வீசனாம்

ஈசாக்கை நல்லடக்கம் செய்தார்; முதிர்வயது
ஈசாக்கு நூற்றெண் பதுதானே -ஏசா

நிலம்கொள்ளா தேயென்று போகப் பிரிந்தான்
நிலம்விட்டுச் சேயீர் மலைக்கு -நிலமதில்

ஈர்மைந்தர் மந்தைகள் மேய்க்க இயலாதென்
சேர்ந்தான் மலைதேசம் சென்றவன் -சேர்ந்தவன்

ஏசா மறுபெயர் ஏதோம் பெயருண்டு
வீசை வளர்ந்தான் குலத்தோரும் -ஏசாவும்

வாசம் மலையிலே செய்தத் திருக்குலத்தில்
தேசம் பலராள் பிரபுக்கள் -தேசத்தான்

யாக்கோபு மக்களிலே யோசேப்பை நேசிக்க
யாக்கோபு மக்களிலே மற்றோர்கள் -யாக்கோபின்

நேசம் கிடைத்திட ஏங்கிப் பகைத்தனர்
வீசையாய் யோசேப்பை ஆங்கு


ஆதி கலி 79

யோசேப்பின் கனவுகள்


யோசேப்பு சென்றனன் மேமேய்க்க ஆங்கேதான்
யோசேப்பு தன்தமர் வன்செய்கை -வாசித்தான்

யோசிக்க, தந்தை செவிகேட்க, அன்னாரின்
பேசின மக்கள் வெறுத்தனர் -பேசவன்

மூப்பில் பிறந்தோன் தனையன் எனவங்கு
மூப்பன் பிறந்தோனை நேசிக்க -மூப்பன்

பலநிற ஆடை உடுத்த, இதைக்காண்
பலசோ தரர்அழுக் காறு -பலமுறை

யோசேப்பு காண்கனவை மேத்தவன் தன்னுள்ளே,
பேசும்சொல் யாக்கோபும் வைத்தனன் -யோசேப்பின்

சொல்லாலே காழ்ப்புவெறிக் கொண்டனர் நல்லாணின்
சொல்கேட்ட வன்னார்த் தமரவர் -நல்லவன்

யோசேப்போ இன்னுறங்க முன்னறிவிப் பாகவே
யோசேப்பின் இன்னுறக்கம் தன்னிலே -தேசத்தில்

செய்நிலத்தின் கட்டுக் கதிரில் பதினோரும்
மெய்க்கட்டைச் சுற்றி வணங்கவும் -மெய்யாகத்

தன்கனவைத் தன்தமையர்க் காதில் பகன்றிட
உன்கனவை உன்னோடு வைத்துக்கொள் -என்ன

யிதுயாமோ உன்னைச் சிரம்தாழ்த்தி இங்கே
அதுபோல் வணங்குவோமோ? போடா -அதுபோல

யோசேப்போ இன்னுறங்க முன்னறிவிப் பாகவே
யோசேப்பின் இன்னுறக்கம் தன்னிலே -தீசு

வெளியிலே விண்மதியும் ஞாயிறும் விண்மீன்
வெளிபதி னொன்றும் வணங்க -வெளியின்

கனவிதை யாக்கோபு கேட்டே மகனே,
கனவு நனவாமோ வாழ்வின் -கனவில்

உனையானும் என்மனையாள் சேர்ந்து வணங்கும்
கனவிது ஆகுமோ வீண்


ஆதி கலி 80

சகோதரர் கண்டு சுகச்செய்தியைக் கேட்டுவர யோசேப்பை அனுப்புதலும், அவர்கள் யோசேப்பை விற்றுப் போடுதலும்


சீகேமில் சோதரர் மேமேய்க்கச் சென்றிட,
சீகேமில் சோதரர் நன்நலம் -போகண்ணே

கேட்டுவா என்றவன் யோசேப்பை விட்டனுப்பிக்
கேட்டுவரச் சென்றனன் செய்தனில் -நாட்டவன்

சீகேமில் சோதரர் இல்லா ததைக்கண்டு,
சீகேமூர் மக்கள் சிலர்கேட்க, -சீகேமை

விட்டவர்கள் தோத்தான்செல் செய்தார் முடிவெனக்
கிட்டநின்ற நானொருவன் கேட்டேனே -நட்டாரை

தோத்தானில் தேடியோடி யோசேப்பும் தன்தமரைத்
தோத்தானில் கண்டு பிடித்திட, -தோத்தானில்

மேமேய்த்த மக்கள் பதினொருவர் தூரத்தில்
சீமான் மகன்வருகைப் பார்த்தவர் -சீமான்

வருகிறான் இன்னுறக்கம் தன்னில் கனாக்காண்
திருமகன் என்றே நினைக்கும் -கருத்தமன்

ஈங்கிவனைக் கொன்றிடுவோம் நாமே யெனக்கூறி,
தேங்கவைத்தார் அங்கே குழியிலே -ஆங்கே

சதிகேட்டு வேண்டாம் தமரிலே ரூபன்
சதிவேண்டாம் நம்தமையன் தானே -சதிசெய்து

இங்குதிரம் சிந்தினால் உம்மேல் பழிவருமே
இங்கிவனைப் போடும் குழியிலே -அங்கேதான்

யோசேப்பு வந்ததும் போட்டிருந்த ஆடையை,
தேசத்தில் போய்க்காட்டத் தானெடுத்தார் -வீசினார்

நீரில்லா ஓர்குழியில் சீமகனே என்றவர்கள்
நேராதே உந்தன் கனவினியும் -சீராண்

நகரத்துள் வேலையாய்ச் சென்றனன் ரூபன்
நகரத்தின் செல்வழி யூதா: -தகைக்காண்பீர்

இந்த இசுமவேல் விற்பவர், விற்றிடுவோம்
சந்தைப் பொருளோ தமனவன் -அந்தபடி

வெள்ளாடு ஒன்றின் உதிரத்தை ஆடைமேல்
அள்ளித் தெளித்தவர் சூதாகக் -கொள்ளி

அலகையோ வேறெதுவோ பீறியதோ என்று
கலங்குகிறோம் யாமே கிடந்தே -அலங்கம்

நகர்விட்டு வந்தனன் ரூபன் திகைக்க,
நகைக்கும் தமரவரைக் கண்டு -வகையாய்

நகைக்கின்றார் யேனோ அறியா திருந்தான்,
குகைக்குள்ளே சேயோ னிலையே -நகைக்காது

தன்னாடை மேல்கிழித்து எங்கேசென் றான்தமையன்
உன்னாடை மேல்கிழித்தாய் எம்சொல்கேள் -உன்தமையன்

வன்மிருகம் வந்துபீறச் செத்தானே யோசேப்பும்
பொன்னாடை மேலுதிரம் காண்பீரே -அன்னான்

அழுதழுது ராவின் அலகையோ வேறோ
தழுதழுக்கச் சென்றான் தகப்பன் -அழுதுவரும்

பிள்ளையைக் கண்டான் தகப்பன் வருமழுகைப்
பிள்ளை மரணமறி யாது


ஆதி கலி 81

யோசேப்பின் பிரிவால் யாக்கோபு தேற்ற மாட்டாது அழுதல்


அழுதழுது நீவர என்ன விழும்சொல்?
அழுதழுது வந்தேன்நான் எல்லோர் -அழவே

இதைப்பாரும் ஆடை, இதுநம் தமராம்
சதையிளையோன் யோசேப் உடையோ? -அதுவோ

உதிரம் நனைந்த வரையாடைக் கண்டு
உதிரம் விழச்செய் அலகை -உதிரம்

நனைந்த வரையாடை என்மகனின் தானே
தினைத்துணை வேண்டாம் உயிரே -எனவே

புதல்வன் உயிர்நீத்தான் இன்னுயிரை நீப்பேன்
புதல்வன் தகைச்சேர்ந்துப் போவேன் -புதல்வன்பால்

என்றே அழுதழுதான் யாக்கோபும் துக்கித்து
என்சொல்வோம் ஆற்றாப் பிரிவுதான் -இன்சொல்லால்

மக்கள் அனைவரும் வந்தனர் ஆற்றிட
மக்கள் முகங்கண்டு ஆறுவான் -மக்கள்

நினைத்திட ஆனால் பிரிவாற்றா தோனோ
நினைந்து நினைந்து அழுதான் -வினையாக

யோசேப்பை வாங்கிய மீதியான் தேசத்தார்
யோசேப்பை விற்றார் எகிப்திலே -யோசேப்பை

வாங்கினான் போத்திப்பார் என்றோர் படைத்தலைவன்
வாங்கியோன் வேலைக்கு வைத்து


ஆதி கலி 82

யூதா தன்பிள்ளைக்கு தாமாரை மணமுடித்து இரண்டு பிள்ளைகள் இறந்ததால் அவளை மூன்றாவது பிள்ளை வளரும் வரையில் பொறுக்கச் சொல்லுதல்


நகர்விட்டு யூதா அதுல்லாம் அடைந்து
நகரில் மனைவியைக் கொண்டான் -நகைக்கக்

கருப்பிள்ளை மூன்றாமே; ஏர்ஓனான் சேலா
திரிமக்கள் தன்னின் பெயர்தான் -இரும்சீர்

நகரிலே மூத்தவன் ஏருக்குத் தாமார்
நகைத்து மணம்முடித்தான் யூதா -வகைமுதலோ

கர்த்தரின் பார்வையில் வன்செய்வோன் என்பதால்
கர்த்தர் அடித்தார் கறையோனை -அர்ச்சேய்

கறைஏரும் செத்திட, தாமார் வழியைச்
சிறுதமையன் ஓனான் தரவும், -கறையவன்

வித்தை விடுத்தான் இவள்மகன் என்வழிச்
சித்தமிலை என்மன திற்கென -அத்தமனின்

வாழ்வளிக்கா விட்டால் இலைக்குற்றம் ஆனாலும்
வாழ்வளிப்பேன் என்கூறி வித்தையே -வாழ்பிள்ளை

வேண்டாம் எனக்கூறி மண்தரையில் விட்டவன்
வேண்டாம் உலகின் பழியென -மீண்டுமாய்

நீதியுள்ள கர்த்தரின் பார்வைக்கு நீதியில்லா
வாதைச் செயல்தானே; போட்டாரே -வாதித்து,

ஓனான் மரித்தான் இறைவன் அடித்ததால்
கோனவன் யூதா அதிர்ந்தனன் -ஈனனாய்

மூன்றா வதுபிள்ளைச் சேர்ந்தால் இழப்பேன்நான்
தோன்றினோரைச் சேர்ந்திழக்க வேண்டாமே -நான்சொல்வேன்

தாமார், தகப்பனின் இல்லம் தரித்திரு
கோமான் வளரும் வரைப்பொறு -கோமானும்

ஏனேனோ சொன்னாரேன் என்மாமன் என்றவளும்
தானாகக் கேட்காதே கீழ்படிந்தே -போனாள்பெண்

தாமாரும் தந்தைத்தாய் இல்லத்தில் வாழ்ந்திட,
கோமானின் அச்சமறி யாதபெண் -ஆமாம்

பலவருடம் போக, மலைபோலே நம்பி,
இலையுதிர் செல்லும் மரத்தின் -இலைத்தளிர்க்கும்

என்றே தலைதாழ்த்திக் காத்தாள் தலைவியும்
அன்றாண் தலைமாமன் வேறுவிதம் -நன்றாய்க்

கவிநடைக் கேட்டால் அவையில் செவிக்கேள்
கவிமொழியில் போவர் மகிழ்ந்து; -இவளோ

கவிதை, செவியிசை வன்னாய் தகிக்கக்
கவையிலா வஞ்சித்தார் கோனே -தவத்தால்

அழிசிலநாள் நாம்பொறுப்போம் மாமன் மனம்போல்
வழிவர யாம்பொறுப்போம் என்று -கழிமகள்

போனாள் தகப்பனின் இல்லம் திருயூதா
போனானே சொல்லை மறந்து

தாமார் தன் கைம்பெண் ஆடைகளை களைந்து வழியருகே நிற்க, யூதா வேசிஎன நினைத்து அவளோடு புணர்தல்


பலநாள் விரைந்தோட தான்சொன்னச் சொல்லைச்
சிலநாளில் போனான் மறந்து -நிலையில்லா

வாழ்க்கை மரணித்தாள் என்மனைவி வேண்டும்பெண்
வாழ்விலே யூதா அழுதனன் -வாழ்சீராள்

மாமியார் சாவு அறிவியாத மாமனார்,
தாமார் இதுகேள் தவறினாரேன் -மாமா

அவர்துக்கம் தேற்ற அவர்மனைவிச் சாவை,
செவிச்செய்தி யாகயான் கேட்டு -புவியில்

சிலஊரார்ச் சென்றுக்கேள், யூதா சிலர்கேள்
இலைசொன்னால் வந்து இருப்பாள் -சிலநாள்;

சிலநாளே துக்கம், சிலைமகள்பின் கேட்பாள்
கொலைசெய்ய மூன்றாம் மகன்தான் -கலையவள்

தாமார் செவிகேட்டு ஏனிந்த வன்கொடுமை
மாமன் மகன்தரா விட்டாரே -போமகளே

தாமார் தகப்பனின் வீடுசெல் என்றாரே
மாமன் மகன்தராச் சூதாக -தேமான்

சிலநாள் கழித்து அழுகை நிறுத்தி
நிலத்திலே ஆட்டின் மயிரை -விலைவிற்கப்

போனான் மயிர்தறிக்க, தாமாரும் மாமனார்
போனார் எனக்கேட்டாள் மாதவள் -ஆமங்கு

மேமேமே மாக்கள் குரலெழுப்பிப் போகவும்
மாமா வரும்பாதைத் தன்னிலே -மாமா

வழிசெய்யக் கேட்போமே சுள்ளெனக் கேள்வி
வழிசெய்ய மூன்றாம் மகன்மார் -கழியின்

வதைகுளிர் இன்முகம் தாக்க அதனால்
வதைவேண்டாம் முக்காடுப் போட்டு -இதுகண்ட

யூதா மதிகெட்டுப் பெண்வேசி யென்நினைத்து
வாதை விடுவிப்பாய் நீவந்து -ஏதேதோ

முக்காடுப் போட்டு அமர்ந்திருந்த பெண்மகளை
இக்காட்டில் வேசியெனத் தன்மனதின் -வெக்காடு

போகப் புணர்ந்திடுவேன் என்றுகூறி, பெண்ணேவா,
போகலாம் வேசியோ நீயென -ஆக,

மருமகள் என்றறியாக் கேட்டான் புணர
மருமகள் போனாள் அதிர்ந்து; -திருவென்னை

வேசி யெனநினைத்து வாபுணர்வோம் என்றுரைத்தார்
பேசா திருப்பேனோ நான்தானே -ஏசிப்

பலஎண்ணம் தன்மனதில் தீயாய் அலைய,
சிலநாளில் தந்திடுவான் மாமன் -குலஞ்செழிக்க

என்றிருந்தேன் ஆனால் அவர்சூதாய்ப் பேசிவிட்டு
தன்மனையாள் போனதும்பெண் வேண்டுவதோ -என்னையே

தன்மாமன் என்று அறிந்தாலும் தாமாரோ
தன்மாமன் மூலம் வழிசேர்க்க -இன்னாச்

செயலில்லை மூன்றாம் மகனைக் கொடாது
நயமாகப் பேசி யவர்தான் -நயனோ

சரிவேசி என்றென்னைக் கூப்பிட்டார் மாமன்
தெரிந்தே புணர்வேன் விழித்து -வரையில்

தருவார் வழியெனக்கு மாமனின் மூலம்
விரைவாய் வினவினாள் பெண்ணாள் -அரைகுறை

வேசிக்குக் கூலியென்ன என்று வினவிடப்
பேசினான் கூலி ஒருவெள்ளை, -பேசு

தரும்வரையில் என்ன தருவீராம் நீரே
தரைமண் அடையாளம் கேட்டு -தரைவர

என்ன அடையாளம் கேள்மகளே என்றனன்
உன்கோலும் மாலை, கணையாழி -என்கையில்

தந்திடும் நீரே; அடையாளம் நான்திரும்பத்
தந்திடுவேன் மேவந்த பின்னராய் -அந்நாள்

புணர்ந்தனள் மாமனோடே காரிருளில் தானே
புணர்ந்தது தன்மருமாள் என்றே -புணர்ந்தோன்

உணர்விலா தேயிருந்தான் யூதாவும் வீழ்ந்தான்
உணர்வை அடக்கா தவன்தான் -உணரா

வினைமுடித்து மேய்ப்பர்கை வெள்ளாடு விட்டால்
கனவுதான் கண்டாரோ இங்கே -தினையளவும்

வேசியில்லை என்றே நகரத்தார் கூறிட
வேசியில்லை என்றே திரும்பு


ஆதி கலி 83

தாமார் கருவுற்று பிள்ளைகள் பெறுதல்


சிலநாட்கள் போனதும் அப்புணர்வால் தாமார்
குலக்கரு வாக, குலத்தைக் -குலைத்து,

குலங்கெடத் தாமார் கருத்தரித்தாள் என்றே
நிலமெலாம் பேசிக் குறைச்சொல் -நிலைமகன்

தாமார் கருத்தரித்த செய்தி அறிந்ததும்
தாமார் வெளிகொணர்வீர் என்முன்னே -மாமா

எறிவேன் முதல்கல்லை; கெட்டாள் மகளே
தறிகெட்டுச் சோரமாய்த் தானே -அறியாது

சொல்கேட்டு வேசியென என்னை நினைத்தாரே
சொல்மறந்த தாரோ யெனக்கேட்டால் -சொல்நிற்பார்,

காண்போம் விடுகோலும் மாலை, கணையாழி;
காண்வித்து இம்மனிதன் தான்தகப்பன் -காண்பீரே

யூதா கணையாழி மாலைக்கோல் கண்டதும்
யூதா மருமகள்மேல் குற்றமிலை -யூதாயென்

மேல்தானே வன்குற்றம் நீதி மருமகள்
சால்புடையோள் என்றான் அதிர்ந்தவன் -சால்பிலாது

மூன்றாம் மகனைக் கொடாது விடுத்தேன்நான்
தேன்போல் தெளிவுடைப் பெண்ணையான் -வான்குறைச்

சொன்னது என்தவறே பெண்ணவள் சால்புடையோள்
என்வித்துத் தானே கருவிலே -அன்றியும்

பேறுகாலம் தன்னில் இரட்டைக் குழந்தைகள்
பேறுபெற்றோள் பெற்றெடுக்க ஆங்கேதான் -பேறில்

முதலிலே கைவரக் கட்டினாள் கையில்
முதலென் மருத்துவச்சி நூலை -முதற்பிள்ளை

கையிலே நூல்கட்ட, கையிழுத்துக் கொண்டசேய்,
சேயோன்யான் வந்திடுவேன் மும்முதலாய் -வாயேன்பின்

சேயோன் வரவங்கு, தாதி விரைவந்த
சேயோனைப் பாரேசு என்றனள் -சேயாகப்

பின்வந்த பிள்ளைக்கு, சேரா பெயரிட்டு
முன்வந்தோன் என்றாலும் தம்பியே -இன்னுலகம்

கேள்கூறும்; பாரேசு என்றாலே மீறிவந்தோன்
கேள்பொருளாம் அந்தப் பெயர்க்கு


ஆதி கலி 84

எகிப்துப் படலம் (ஆதியாகமம் 39-50)


எகிப்தில் போத்திபாரின் மனைவி யோசேப்பைப் புணர வற்புறுத்துதலும் யோசேப்பைச் சிறையடைத்தலும்


யோசேப்பும் சேர்ந்தான் எகிப்திலே போத்திப்பார்
யோசேப்பின் நல்லிறைவன் வாழ்த்தினார் -யோசேப்பை,

பேசியவன் தன்வீட்டின் எல்லாப் பொறுப்பையும்
தேசத்தில் தானே கொடுத்தனன் -பேசிட

தேசத்தில் கர்த்தர் முதலாளை வாழ்த்தினார்
வீசைப் பெருகியது காண்வளமே -வீசைப்

பொருளெலாம் யோசேப்பின் கையிட்டான் மண்ணின்
பொருளதைக் காக்கச் சிறந்து -அருளால்

பணம்பொருள் எல்லாம் இருந்தும் பயனில்
குணவதி நல்மனையாள் இல்லை -குணங்கெட,

பெண்ணவள் வாபுணர் என்னோடே என்றங்கு
மண்போலச் செய்தாள் வறுத்தவனை -மண்ணவள்

நித்தம் புணர்வாய், தலைவன் மனைகேட்க
எத்தன் எனைப்போல் எவரில்லை -இத்துனைச்

செல்வத்தை என்கை யளித்தவரை எத்தினால்
சொல்லொணா நானே பகைஞனே -சில்லென்ற

வீட்டில் இலையாரும் என்றே அணங்கவள்
காட்டுவேன் மேனி அழகிலவன் -நாட்டமாய்

மாட்டுவான் என்றே குணமிலாப் பெண்ணவள்
காட்டத் தனிமையைத் தேடிநிற்க -வாட்டந்தீர்

சில்லெனச் சாரல் மழைவந்து செய்வேலைக்
கெல்லாரும் செய்போக; யோசேப்போ -இல்லம்

வருகைப் புரிந்தனன் வேலைச் செயவே
வருகைக்குக் காத்திருந்த மாது -அருகாகச்

சில்லெனச் சாரலின் ஓசைத் தவிரங்கு
எல்லா இனத்தவர் செய்போனார் -இல்லம்

வெறிச்செனக் கண்டவன் போவோம்செய் நாமும்
சிறிதுகாலம் தாழ்த்தி நிலத்தில் -வறியவன்

கால்சதங்கை இன்னொலிக் கேட்டவன் மேல்நிமிர,
கால்சதங்கை மட்டும் அணிந்தவளாய், -கால்கழுத்தின்

ஆடையை விட்டவள் வாபுணர்வாய் என்சேயே
வாடை விரகத்தைத் தீர்த்திடு -வாடைத்

தனிமையில் வந்திட்ட வன்னெதிரி, போநீ!
இனிமை யிதுவல்ல என்றே -கனிமொழிப்

பேசியோள் நஞ்செனக் கண்டோடி னான்மகன்,
பேசியோள் ஆடை இழுத்தங்கு -வீசியே

ஆடையென் போனாலும் வன்புணர்ச்சி மாட்டேன்நான்
ஆடையாம் நல்லெண்ணம் தானேமெய் -யாடையென்று

ஆடையும் விட்டுப் பறந்தனன் வீடுவிட்டு
ஆடையில்லா தேயவன் ஓடவும் -வாடையில்

மேலாடை விட்டுப்போம் வேலையைக் கண்டனர்
மேலாடைக் கையெடுத்து வந்தனள் -மேலாடை

விட்டு விரைந்தவன் போகிறான் பாரீரோ
கெட்டவன் வன்புணர இங்குதான் -நட்டார்

அடிமை யிவனைத் தலையாக்கி னாரே
அடிமைப் புணரத் துணிவு -அடிமை

இவனைச் சிறைபோட வேண்டுமெனக் கூறி
அவனைச் சிறையிட்டாள் மாது


ஆதி கலி 85

சிறையில் அரச வேலைக்காரரின் கனவிற்குப் பொருள் கர்த்தரே தருவார் எனக் கூறுதல்


சிறையிலே போட்டனர் குற்றமிலா தோனைச்
சிறையிலும் கர்த்தர் அவனைக் -குறைவிலா

வாழ்த்தி, சிறைத்தலைவன் கண்ணில் தயைசெய்தார்
வாழ்விக்கும் தேவன் அவர்தானே -வாழ்சீர்

சிறைத்தலைவன் யோசேப்பின் கையில் கொடுத்தான்
சிறைதன்னில் உள்ளோர் நலனை; -சிறைபோட்டான்

மன்னன் இருவேலைக் குற்றம் புரிந்ததால்
அன்னான் இருவரைச்சந் தித்திட -அன்னார்

ஒருநாள் முகவாட்டம் ஈர்மக்கள் கண்டு
இருக்கின்றீர் வன்முகம் வாடி -இருவர்,

இருவரும் வெவ்வேறாய் வந்த கனவால்
இருக்கின்றோம் வாடி முகமே -இருவர்

கனாக்கண்டோம் ஆனால் பொருள்புரியாப் போனோம்
கனாவின் அதனால் திகைத்தே -கனாவின்

பொருள்கூற யாருண்டு வன்சிறையில் என்றே
வரும்செயல் யாரறி வாரோ? -இருவர்

மனிதன் கனாவிற்குச் சொல்வான் பொருளென்
மனிதர் இருவர் நினைத்தீர்; -இனிதில்

மனிதரின் செய்கையில், தேவன் செயலே
மனிதர்க்கு முன்னறிவிப் பார்


ஆதி கலி 86

யோசேப்பு கனாக்களின் பொருளை கூறுதலும் அவை நிறைவேறுதலும்


முன்னவன் தன்கனவைச் சொன்னான் விவரித்து
முன்னவன் மன்னன் சிறைபோடும் -முன்னே

இருந்தேன் அரசனின் பாத்திரம் ஏந்தி
அரசனுக்குப் பானம் கொடுக்க -அரசனின்

தோட்டத்தில் மூன்று கொடிகளைக் கண்டேனே
தோட்டப் பழம்நன்றே என்றுநான் -தோட்டத்

துளிர்விடும் நற்செடியில் பூக்கள் குலுங்க,
துளியும் புளிக்காப் பழத்தைக் -களிப்பாய்ப்

பிழிய எடுத்துக் கொணர்ந்தேன்நான் கையில்
பிழிந்தப் புதுச்சாறை யிட்டு -வழியவர்

மன்னன்கை யிட்டேன் நலமாய்க் கலத்தைநான்
மன்னன் கலம்பருக நானங்கு -இன்முகமாய்

மன்னன் அருகில் நகைத்துத் தரித்திருந்தேன்
என்ன பொருளோ கனவிது -என்னே

திருவின்சொல் கேளாயோ மூன்று கொடிகள்
வரும்மூன்று நாளாமே; நாளில் -அரசன்

திருவாய் மலர்ந்தும்மைப் பானம் பிழிய
அருள்வார் திருமொழியும், காண்சீர் -அருளியே

மன்னன் திருவை உயர்த்தும் பொழுதென்னை
மன்னனின் முன்னர் நினைந்தருளும் -என்னை;

அடைத்தார் சிறைதன்னில் குற்றமிலை என்மேல்,
விடுவியும் என்னை நினைந்து -அடுத்தோன்

அடடாஉன் வாய்மொழி நன்றே எனவே
அடைமனிதன் வந்தான் இரண்டு -அடைப்பட்டேன்

வன்சிறையில் நான்முன்னர் பந்தி விசாரித்தேன்
மன்னன் சிறையிடு முன்தானே -அன்றியும்

என்கனவில் வந்தது யாதென்றால் என்தலைமேல்
மன்னன் விருந்துசெல் கூடைகள் -நன்மூன்று

என்தலைமேல் வந்தமர்ந்து வான்பறவை அப்பத்தைத்
தின்னக் கனாக்கண்டேன் கேள்மகனே -அன்னார்

திருவின்சொல் கேளாயோ மூன்றெண்ணுங் கூடை
வரும்மூன்று நாளாமே; நாளில் -அரசன்

எருவாக உம்மை மரம்மேல் உயர்த்தி
விரைந்தவரும் செய்வார் கொலையே -சிரம்போய்க்

கலங்கினான் மாந்தனும் இங்ஙனம் ஆனால்
தலையிலே எல்லாப் பறவை -விலங்கினம்

தின்று புசிக்கக் கொலையாவேன் யானோயேன்
என்றே அவனும் கலங்கிட -அன்றோ

திருவாய் மொழிமூன்றாம் நாளில் நிறைவே
திருமன்னன் போட்டான் ஒருவன் -மரத்தில்

ஒருவனை மீண்டுமாய் வேலைக் கொடுத்துத்
திருநாள் பிறந்தநாளில் தான்சீர் -திருவும்

மகிழ்வாகப் பின்வேலை வாங்கியோன் போனான்
மகிழ்ச்சியில் தன்னை மறந்து -இகழ்நிலைத்

தன்னில் அறிவித் தவனை நினைவிலாச்
சென்றானே அன்றே மறந்து


ஆதி கலி 87

எகிப்திய மன்னனின் கனவுகள்


இரண்டாண்டு ஆங்கே உருண்டோட மன்னன்
இரண்டா வதாண்டில் கனவு -இருகனவைச்

செய்விளக்கம் என்றே பகர அமைச்சர்கள்
செய்முடியாப் போனார்த் திகைத்தங்கு -மெய்யவன்

ஆற்றங் கரையிலே ஆற்றா தரசனும்
ஆற்றங் கரையேழு ஆநன்றாய் -நாற்றம்

மிகுயேழு ஆமேய், மிகையிலை ஆங்கே
வகைநாற்றம் நன்றைப் புசித்து -வகையாய்

நிலத்திலே மன்னன் நிலைத்திருக்க ஏழு
நிலமணிக் கட்டுகள் கண்டான்; -நிலத்திலே

வேறேழுச் சாவியக் கட்டுகள் மற்றேழை
நாற விழுங்கியதைக் கண்டனன் -வேறு

கனவிரண்டு சொன்னான் திருமன்னன் ஆங்கே
கனவிரண்டின் நல்விளக்கம் இல்லாக் -கனவான்கள்

போயினர் என்செய்வோம் மன்னன் திருக்கனா
ஆயிற்றே என்ன பொருள்சொல்லும் -வேயக்

கலங்கிய மன்னன் திருமுகம் வாட,
கலங்குத் திருமுகம் கண்டு -சிலையான்

கலமேந்தும் வேலை மறந்தேனோ ஏனோ,
கலக்கம்தீர் ஓர்வழி உண்டு -கலங்காதீர்

மன்னா எனையாளும் கோவே மறந்தேன்நான்
மன்னா இறைவாக்கன் சீர்மனிதன் -என்சொல்ல,

யாரவன்? சொல்வாய், கனவை விளக்கிடப்
பாரிலே உண்டோ மகனிங்கு? -பாரில்

சிறுகுற்றம் செய்யச் சிறையிட்டீர் என்னை;
சிறையில் விசாரிக்கும் வேலை; -சிறுவர்

சிறையில் இருவர் கனாக்கண்டோம் அன்று
சிறையில் பொருளறி யாது -சிறையிலே

வாடிய எம்முகம் கண்டவன் இச்சிறுவன்
வாடியதேன் நின்முகங்கள் கேட்டிட -வாடியக்

காரணத்தை யாமுரைக்கச் சொன்னான் பொருள்கனாவின்
சேரவன் சொல்லும் நடந்து


ஆதி கலி 88

பார்வோன் முன் யோசேப்பு


வரவழையும் அச்சிறுவன் இங்கே அரணில்
வருகை அரசனும் காத்தான் -இரவில்

திருவருகை நோக்கி நொடிகளும் ஆண்டாய்,
திருமன்னன் எண்ணினான் ஆங்கு -திருவே

இரவின் இருள்வேளை தன்னிலே யாரும்
திரைசிறை விட்டு வராரே -திருச்சொல்

தரைதனில் ஏற்றே சிறைக்காவல் சென்றார்,
கரைவேளின் ஆணை யினால்தான் -அரணாம்

சிறைதன்னில் கண்ணுறங்கா வாடினான் சீமான்
சிறைவிட்டுச் சீராக்கும், ஏனோ? -சிறுவா,

சிறைதன்னில் நீவிளக்கம் தந்தாயாம் அன்று
சிறைவாசிச் சொன்னார்ச் சிறந்து -சிறந்தே

கனாவிளக்கம் சொல்வது யானல்ல, தேவன்;
கனாவினைக் கூறும் அரசே -கனாவின்

விளக்கத்தைத் தேவனின் சொல்படியே நானும்
விளக்கிடுவேன் இங்கே சிறந்து -விளங்கக்

கனாக்கேள் சிறுவா, கனவிரண்டு கண்டேன்,
கனாக்கேட்ட யோசேப்பை நோக்கி -வினவ,

கனவின் விளக்கம் அறியார் கனவான்
கனாவிளக்கம் தந்திடு வாய்நீ -கனவொன்று

ஆற்றங் கரையிலே ஆற்றா தரசன்யான்
ஆற்றங் கரையேழு ஆநன்றாய் -நாற்றம்

மிகுயேழு ஆமேய், மிகையிலைக் கண்டேன்
வகைநாற்றம் நன்றைப் புசித்து -வகையாய்

நிலத்தில் நிலைத்திருக்க யான்கண்டேன் ஏழு
நிலமணிக் கட்டுகள் நன்றாய் -நிலத்திலே;

வேறேழுச் சாவிப்போய் மற்றேழுக் கட்டுகள்
நாற விழுங்க விழித்தேனே -ஆறும்

இருகனவும் முன்னுரையாம், தேவன் உரைத்தார்
இருபொருள் என்று நினைத்தீர்! -கரையாள்

திருமன்னா, கேளீர்! பசுக்கதிர் ஏழும்
வரையாண்டே பூமிக் கணக்கு -வரையில்

விரைவில் இதுநடக்கும் என்றே திருவும்
இரண்டு முறையாய்க் கனவு, -விரைந்தே

செயல்படுவீர் மன்னா, நிலத்தின் மணிசேர்ச்
செயல்வகை மண்ணில் நிலைத்து -செயலாம்

முதல்பசு ஏழாண்டு முன்கதிரே ழாண்டு
முதல்வரும் ஏழாண்டு நன்றே -அதுகுறிக்கும்

பின்பசு ஏழாண்டு, பின்கதிர் ஏழாண்டு,
பின்வரும் பஞ்சம் அதுதானே -வன்னிடர்ப்

பஞ்சம் வருமென்றும் வீழ்மழையும் பொய்க்குமெனப்
பஞ்சம் வரும்காலம் நீர்பிழைக்க -அஞ்சுதேவன்

எஞ்சிய ஏழாண்டில் பஞ்சத் தினைக்காக்க
எஞ்சி யுமக்கறிவித் தார்சீரே -வெஞ்சி

வரும்நாட்கள் பஞ்சத்தில் நாடே அழியும்
வரும்நாட்கள் பஞ்சத்தில் காக்க -விரைந்தே

செயல்பட்டுக் காத்திடுவீர், செய்மணிகள் இன்றே
செயலிலை என்றால் அழிந்து


ஆதி கலி 89

பார்வோன் யோசேப்பை அதிகாரியாக நியமித்தல்


அடடா! சிறுவனின் ஞானம் பெரிதே
அடைமழையாய்ப் பெய்யுமிவ் ஏழில் -அடைக்காக்க

ஞானம் கரையிலாத் தேவை எனவேதான்
ஞானியை வைத்தான் அரசனும் -ஞானிலம்

செய்வித்தான் மன்னன் பெருவிழா, சூட்டினான்
செய்மக்கள் எல்லாம் அறிந்திட, -மெய்ப்பெயர்

மாற்றினான் சாப்நாத் பனேயா எனயிட்டு
ஆற்றனன் பார்வோன் அரசனவன் -தேற்ற

வழிபாடுச் செய்யும் மனிதனின் பெண்ணை,
செழித்தாளும் பார்வோன் மணஞ்செய் -வழியே

தலைமுறை வந்தார் இருபிள்ளை யாங்கே
தலைமுறை நன்கு செழித்து -தலையாண்

வயதவன் முப்பதே ஆண்டுகள் ஆகி
வயதில் சிறியோனை மன்னன் -வியனாய்

நியந்ததை மக்களும் கண்டார் வெகுவாய்
வியந்தவர் போனார் அதிர்ந்து -வியக்கக்

கடல்மணல் போலே தினைசேர்த்தான் ஆங்கே
இடப்பணிய வைத்தான் அரசன் -கடையேழு

ஆண்டுகள் வந்த கொடிதானப் பஞ்சமும்
ஆண்டதில் விற்றான் தினைதனை -ஆண்டில்

வரவரப் பஞ்சம் கொடிதாக மற்றோர்
வரைவிட்டு வந்தார் தினைக்காய் -வரையில்

வளம்பெற்ற யாக்கோபோ பஞ்சத்தால் வாட்டி
வளங்குறுக நின்றான் நிலத்து


ஆதி கலி 90

யோசேப்பின் சகோதரர் தானியங் கொள்ள எகிப்து வருதலும் யோசேப்பின் விளையாட்டும்


பத்துப்பேர் ஆங்கே எகிப்தில் தினைகொள்ள
அத்தனை பட்டும் மகனிளையோன் -வித்தகனும்

அத்தினைக் கொள்ளவே பென்யமீனை விட்டிடாது,
பத்துப்பேர் செல்மின் எகிப்துநாடு -அத்தார்

தினைகொள்ள வந்தார் தமையர், தமன்முன்
தினையில் எபிரேயர் பஞ்சம் -தினைசெய்

தினையழிந்துப் போயிற்றே யாம்வாழத் தாரும்
தினைசிறிதாய் நீரும் இரங்கு -தினைக்கொள்

தமரென் றறிந்தும் தமனோ கடுப்பாய்,
தமரிலை நீர்வஞ்சம் செய்வோர் -எமதுடை

நாட்டின் வளம்பார்த்துக் கொள்ளை யிடவந்தீர்
நாட்டுள்ளே வேவுக்காய் நீர்வந்தீர் -நாட்டாரோ

இல்லையில்லை ஐயரே கேளீர்யாம் பன்னிருவர்
எல்லைக் கடந்து தினைக்கொள்ள -இல்லை

எனக்கூறின் மாண்டிடுவோம் சேர்மக்கள் பன்னீர்
எனச்சொன்னார் ஆங்கே தமர்தான் -வினையாக

எண்ணிக்கைப் பத்தே இருக்கின்றீர்? பன்னிருவர்
எண்ணிக்கைப் பொய்யென உம்சொல்லால் -எண்ணம்

வளங்கொள்ளை யிட்டிடவே செய்தீரே சூது
இளையோன் இருவர் இலையேன் -இளையோன்

ஒருவன் வனத்திலே காணாமல் போக
ஒருவன் தகப்பனிடம் உள்ளான் -திருவே

பசிநீங்கி வாழச் சிறுதினை வேண்டும்
பசிநீக்கத் தாரும் தினையை -பசியினால்

இல்லை பதினொருவர் எண்ணிக்கை யிப்போது,
இல்லை சரிமக்கள் நீரேயென் -இல்லை

எனக்கிங்கு நம்பிக்கை உம்மேல் அதனால்
தினைக்கொள்ள நீரும் வராது -அனைவரைப்

போடும் சிறையிலே பத்துப்பேர் எல்லோரும்
வாடியயெம் தேசத்தை நோட்டமிடப் -போடுகின்றார்

நாடகம் யாம்தினைக் கொள்வந்தோம் என்றிளையோன்
வீடுள் இருக்கிறானாம் காண்பீரே -நாடிதில்

இப்பழி நம்மீது வந்ததே யோசேப்பும்
அப்போதே கெஞ்சினான் விட்டுவிடும் -அப்போது

கேளாமல் விற்றதால் தானே சிறைவாசம்
கேளீர், தமரும் உரைத்திட -ஆளாம்

முதல்மகன் ரூபன் உடனே, தமனை
அதுவகை வேண்டாம் விடுமே -இதுபழி

நம்மீது ஏனென்றால் பார்ப்பழி வந்ததே
உம்மால் சிறைவாசம் இன்றுவந்தே -அம்மானோ

ஐயகோ என்தமரை இங்ஙனம் சொல்லிட
ஐயகோ நேர்ந்ததே ஏனிங்கே -ஐயமாய்ப்

பேசவே நேர்ந்ததே ஏனிந்த வன்கொடுமை?
பேசியவன் உள்ளே அழுதனன் -பேசி

மொழிபெயர்க்க மாந்தர்கள் கொண்டுபேசும் சீமான்
மொழிபேசா தேயிருந்து வாயால் -மொழிபேசாச்

சீமானை வேறா ளெனவே நினைத்தனர்
சீமான் சிறையடைத் தான்


ஆதி கலி 91

தமரை மூன்றுநாள் பின்னர் விடுவித்து தானியம் கொடுத்து அவர்களின் பணத்தையும் போடுதல்


மூன்றுநாள் வாடினர் வன்சிறையில் பத்துப்பேர்
மூன்றுநாள் விட்டே வெளிக்கொணர்ந்தான் -தேன்தேச

வான்தேவன் அஞ்சுகிறேன் ஆதலால் நீர்மெய்யென்,
கோன்யென்னை நம்பிடச் செய்வீரே -சான்றாய்

ஒருவன் இருக்கச் சிறையிலே மற்றோர்
ஒருவன் இளையோனைக் கொண்டு -வரவே

திரும்பும் தகப்பனின் நாட்டிற்கு இன்று
திரும்பினால் மெய்யரென் நம்ப -இருப்பேன்நான்

சீமான் சிமியோனை வைத்தான் சிறையிலே
சீமான் தினைசில மூட்டைகள் -கோமகன்

தந்தை யிடம்சேர்க்கத் தந்து விடுத்தனன்
தந்தை யிடம்போய்த் திரும்பவே -தந்தையிடம்

ஒன்பது பேரே தமரங்குச் சென்றனர்
அன்னார் இடம்சேர்ந்துச் சொல்லிட -அன்னார்

இடம்சேரு முன்னால் சிறிதுத் தினையை
எடுத்தான் தமரொ ருவன்தான் -எடுத்துக்

கழுதைப் பசிக்குத் தினைதன்னைப் போட
கொழுநன் எடுக்க அதிர்ந்து


ஆதி கலி 92

தானியம் மூட்டையில் தங்களின் பணத்தைக் கண்டு தமர் அஞ்சுதல்.


மூட்டையின் மேலே பணம்தன்னின் மொத்தமும்
மூட்டையின் உள்ளே இருந்தது -நாட்டான்

அடடா! பணமெந்தன் மூட்டையில் உள்ள
இடையிலே யாரிட்டார் உள்ளே -கடையிலே

தந்தோமே நம்பணம், வந்தது எங்ஙனம்
இந்தப்பை உள்ளே? அழுதவன் -அந்தபடி

கள்வனெனப் பேர்வாங்கி எப்படிச் செல்வேனோ
சுள்ளென் றிருக்கிறதே என்சொல்வேன் -கள்வன்

இலையானும் என்றே புலம்பிடக் கண்டார்
நிலைதமரும் ஏனோ புலம்பு? -அலையே

நிலைதமரே காணீர்! பணமெந்தன் இங்கே
இலைநானும் கள்வன் பணமிங் -கிலையென்றால்

இப்போதோ என்னை எகிப்திலே கள்வனென்று
தப்பாகச் சொல்வர் இகழ்ந்தென்னை -அப்போ

இதுகேட்ட எட்டுதமர்ப் போயினர் சோர்ந்து
இதுயேன் நமக்கு வதைமேல் -வதையே

வதைபெயர்த் தங்கும் தமரின்மேல் என்றும்
இதுயார் செயலோ அதிர்ந்து -வதைந்தவர்ச்

சோர்ந்தத் தமரும் தகப்பனிடம் சென்றனர்
சோர்ந்தத் தமரின் முகவாட்டம் -சேர்ந்த

தகப்பன் படித்துச் சிமியோன் இலையே
தகையிங்கே, என்னா னதுசொல்? -வகையாகச்

செய்தியைச் சொன்னார்கள் வாடித் தமரங்கு,
செய்தியைக் கேட்டவன் ஐயகோ -செய்தீரே

மெய்யாகப் பிள்ளை யிலாதோனாய் நான்விடேன்
மெய்யிளையோன் தன்னை எகிப்திற்கே -வெய்துதான்

போனானே யோசேப்பு இப்போ சிமியோனும்
போனானே ஆதலால் என்றென்றும் -தானே

இளையோனை விட்டிட மாட்டேன்நான் என்றே
இளையோனைக் கட்டிப் புலம்ப -களையோர்

தமரும் தினைமூட்டைக் கொட்ட, வியந்தார்
தமரவர்கள் மூட்டையில் காசு -தமரவர்

பார்த்தார்கள் என்ன யிதுமோசம் நாம்போனோம்,
நேர்மையிலாக் கள்வரென் பார்நம்மை -சீராண்

தகப்பன் இளையோனைப் போகவிட மாட்டேன்,
தகைத்தவனை நானிழக்கச் செய்வீர்; -தகப்பன்நான்

என்மூப்பில் பிள்ளை யிலாதே நரையெந்தன்
வன்குழியில் போகச்செய் வீர்


ஆதி கலி 93

கொண்டு வந்த தானியம் தீர்ந்து போக தன்மக்களை மீண்டும் எகிப்திற்கு போகச் சொல்லுதல்;


கொண்டுவந்த மூட்டை தினையெல்லாம் தீர்ந்திட,
கொண்டுவர யாம்செல்ல வேண்டுமே -கொண்டிளையோன்

தன்னைத் தகைத்து, இலையென்றால் சீமானோ
என்சொல்மெய், பொய்யரே நீரென்பார் -தன்னே

தகப்பன் இடம்சேர்ந்து ரூபன் பகன்றான்
தகையனுப்பும் பென்யமீன் தன்னை -இகத்திலே

யாவரும் மாள்வோம்; தினையிலை, காண்பீரே
போவோம் கொளயாம் எகிப்திற்கு -போவோம்

இளையோனை என்கையில் ஒப்புவியும் கோவே
இளையோனின் இன்னுயிர்க்கு இங்கு -இளையோர்,

தனையரை விட்டுப்போ வேன்யான் உயிர்க்குத்
தனையரின் வெட்டும் உயிர்நீர் -இனியன்

விடேன்யான் இளையோனைப் போக எகிப்து;
கடையோனை நானிழக்கச் செய்வீர், -கடையோனில்

என்மூப்பில் பிள்ளை யிலாதே நரையெந்தன்
வன்குழியில் போகச்செய் வீர்நீரே -அன்றோ

வறட்சி விசும்பின் துளியிலாப் போக
வறட்சி விரைவாய் வலையைச் -சறுக்கி

யுலகம், வெடித்த நிலமும் வறண்டு
இலைதிணை வாழ்விற்காய் ஆங்கு -அலையவன்

யாக்கோபு: என்பிறப்பே சென்று தினைகொள்வீர்!
சேக்கல் பணமெடுத்துப் போயங்கு -ஆக்கம்

பெறுவீர்; தினைகொள்ளா வாரா திருப்பீர்
வறட்சிக் கொடிதாய் உளது


ஆதி கலி 94

பென்யமீனை கொண்டுசெல்ல யோசேப்பு அவர்களை விருந்துண்ண அழைத்துச் செல்ல வைத்தல்


எம்முகம் கொண்டு தமர்யாமே சென்றிடுவோம்
எம்முகம் பார்ப்ப திலையிளையோன் -எம்முன்னே

வாரா திருந்தாலே, சீமான் உரைத்ததைத்
தாரை விடுத்துச்சொன் னோம்யாமே -பாரிலே

ஐயகோ மெய்யேன் பகன்றீரோ ஆங்கேதான்
ஐயகோ நீங்கள் பதினொருவர் -ஐயமிலை

மெய்தான் இருந்தாலும் மெய்சொன்ன தால்தானே
எய்தினீர் அம்பெந்தன் மேல்தானே -மெய்யவர்

மெய்சொன்னால் மெய்யேன்சொல் என்ற தகப்பனை
மெய்கேளும் சீமான் முகங்காண -மெய்யிளையோன்

மெய்யில் கொணராத் திரும்பினால் சீமானும்
மெய்யாய்ச் சிறையிடு வார்தானே -அய்யனோ

யூதாவின் சொல்கேட்டு யாக்கோபு என்செய்வேன்
சேதாரம் ஆகிடும் என்றஞ்சி, -கோதை

முதிர்வயதில் ஈன்றெடுத்த பிள்ளையைக் கொண்டு
இதுசெய்தீர் என்செய்வேன் யான்தான் -அதுவே

சரிபோவீர், கூட்டி யிளையோனை நீரும்,
விரைந்திட்டுச் சீமானுக் காகத் -தரும்பரிசைக்

கொண்டுசெல் வீரே பிசின்தைலம் சேண்நாறுச்
செண்டும், வளமிங் கிருந்தெடுத்து -அண்டைக்கு

பத்துபேர் போனார் வளங்கொண்டு கானானின்
பத்துபேர் வந்த விதங்கண்டு -அத்தவன்

மக்கள் நிறைவேற்ற வந்தார் சரிமெய்யர்
இக்கட்டில் உண்பார் உணவுதனை -அக்கட்டு

வீட்டில் விருந்துச்செய் மக்கள் நிறைந்துண்ண,
வீட்டிற் கழைத்துச்செல் வந்தோரை -வீட்டில்

அமர்த்திடுக எம்விருந்தை; ஆயத்தம் செய்து
இமைப்பொழுதும் தாமதி யாது -அமைந்தவர்

யாரிவரோ சீமானின் வீட்டிற்குச் செல்லவே
பாரிவரும் செல்கின்றார் என்றாங்கே -பாராளும்

சீமானின் கைவேலைச் செய்வோரும் போயினர்
சீமான்சொல் கேட்டு வியந்தனர் -ஏமம்

சரிநம்மின் வேலை யெதுவோ அதையே
விரைந்துயாம் செய்வோமே யென்று -கரையிலா

வேந்தனின் கைவேலைச் செய்வோரும் கொண்டங்கு
வேந்தன் அரண்மனைக்குப் போயினர் -மாந்தர்

இதுயென்ன வேந்தன் அரண்மனைக்கு எம்மை
விதமாய் அழைத்திவரும் செல்ல -அதுவேதான்

நம்மூட்டை யுள்ளே பணமிருந்த தேயெனத்
தம்முன் உதவியைக் கேட்டனர் -அம்மான்

உதவி அதிர்ந்துப்போய் இல்லை உமக்கு
உதவிட உம்தேவன் தந்த -இதமாய்ப்

பொருளது கொள்ளைதான் சீமான் அழைப்போ
திருவிருந்துத் தந்திடத் தானே -திருவார்

அரசவைத் தன்னில் அமைச்சர், அவையில்
அரசனின் ஈடாகச் சீமான் -அரியணை

தன்மே லமர்ந்திருக்க, வேண்டாம் எனக்கூறின்
வன்மொழிச் சொல்வார் நமக்கு


ஆதி கலி 95

அரண்மனை செழிப்பை கண்ட தமர் வியத்தல்


பொன்னால் வனைந்த விசுப்பலகை, தென்னாரின்
பொன்சீலை வேய்ந்தத் திரையாமே, -பொன்னிழைத்த

கால்மிதி; பொன்பொன் யெனயெங்குக் காணினும்
சால்பவர் பொன்னால் இழைத்ததே -மேல்கீழ்

இதுவரை பொன்னால் இழைத்த அரணை
இதுப்போலக் கண்டதில்லை யாரும் -இதைக்காண்

இசுரேலின் பிள்ளைகள் யாம்காண் கனவோ
திசையெங்கும் கண்ட திலையாம் -இசுரேல்

திரைக்குள்ளே உள்ளடக்கிப் போனார் அறையில்,
திரைக்குள்ளே காண்கூடும் சீமான் -திரைவெளியே

நின்று எனும்நிலை மக்கள் அறியாதுள்
நின்றார் வளங்காண் வியந்தங்கு -அன்னார்

திரைக்குள்ளே உள்ளோர் வியந்து மலைக்கத்
திரைக்குள்ளே உள்ளோரைக் கண்ட -வரைமக்கள்

என்னயிது இம்மக்கள் காணாப் பொருள்கண்டச்
சின்னவர் போலே மலைத்தனர் -அன்னார்

திரைக்குள்ளே உள்ள இடமே அவர்தம்
திரைக்கூடா ரம்விடப் பேராம் -திரையுள்

தரையில் முகங்கண்டு போனார் இதுவே
வரையில்லா வாழ்வு எனச்சொல் -இருக்குமக்

கைக்கொணர்ந்தக் காணிக்கை இங்கே வளங்கண்டு,
கைக்கொணர்ந்தக் காணிக்கை வீணோயென் -கைக்கட்டித்

தன்மனதில் ஐயம் வரவங்கு, காணிக்கை
நன்றிலையெஞ் சீமான் இகழ்வரே -என்றாலும்

தந்தைசொல் தட்டாதே கைக்கொடுப்போம் நாமிங்கு;
தந்தை விடுத்தாரே நம்நிலத்தின் -விந்தைப்

பொருள்தன்னைக் காணிக்கை யாக, கொணர்ந்தப்
பொருள்கொடுப்போம் கையில் சிறிது -அருளாராம்

சீமான் வருகை எதிர்நோக்கி: என்னயிது,
சீமான் விருந்தளிக்கின் றாறேனோ? -சீமானும்

வந்திட, கைகொண்டு வந்திட்டக் காணிக்கைத்
தந்தார்கள் சீமானின் கை


ஆதி கலி 96

யோசேப்பு விருந்துண்ண அனைவரையும் சீராக அமரவைத்தல்


நலபுலம் கேட்டவன் பத்துப்பேர் வந்தார்
நலமாய்ச் சிமியோனும் சேர -நலமே

எனக்கூறிக் கீழ்பணிந்தார் எல்லாரு மாங்கே
தினைகொள்ள வந்தோம் பணிந்து -அனைத்தும்

கடையோனைக் கண்டதும் யோசேப்பு தாளா
விடைகொள்ளா உள்ளே அறைசென்(று) -இடிதாங்கும்

என்னுள்ளம் ஆனால் தமரைப் பணிசெய்யும்
என்செயல் ஏனோ கலங்குகிறார் -அன்னவன்

பின்னரவன் தன்னுள் பெலனடைந்து, தேவனின்
நன்செயல் ஈதே யெனவறிந்து -நன்வேறு

பந்தியில் பேர்கடைக் கொள்சரிப் பந்தியிட,
சிந்தித்தார் மக்கள் அதிர்ந்தங்கு -அந்தபடி

எம்முள் பெரியோன் இளையோன் எவரென
இம்மிப் பிசகா தமர்த்திய -செம்மை

விதத்தினைக் கண்டு தமரும் வியந்தார்
விதமெப் படியோ அறிந்தார் -அதுபோல்

சிரம்தாழ்த்திச் செல்ல உணவினது பந்திக்
கரம்நீட்டித் தந்தாரே தட்டில் -திருவும்

சுவைபத்து நல்லுணவுப் பாகம் சமமே,
சுவைப்பாகம் ஐந்து கடைக்காய் -சுவையூன்

சுவைப்பாகம் ஐந்து கடைப்பிள்ளைத் தட்டில்
சுவைநல் உணவின் பகுத்தார் -சுவையூண்

மிகவும் இடவும் தெரியா விழித்தார்
தகையவர், காரணம் யாது


ஆதி கலி 97

யோசேப்பு கடைசியாக வெள்ளி பாத்திரத்தை போடுதல்


தினைமூட்டைக் கட்டும் கழுதைச் சுமக்க,
தினைமூட்டைத் தன்னில் பணத்தைத் -தினையோடே

போட்டு இளையோனின் மூட்டையில் என்வெள்ளிப்
போட்டிடும் பாத்திரத்தை என்றவன் -போட்டு

தமரிவர்கள் கொஞ்சம் விளையாட்டாய்ச் செய்வோம்
தமர்தான் அறிவிக்கும் முன்னே -தமரின்

சுமைமூட்டைத் தன்னில் பணமிட்டுப் பின்னர்த்
தமர்கடையுள் போட்டார்க் கலத்தை -தமரார்

சிறிதே நகர்விட்டுச் செல்லத் தமரைச்
சிறையோர்த் துரத்திட்டுச் சென்று -சிறியோர்

இதுயென்ன செய்தீர் விருந்துசெய் மாந்தர்க்
கிதுசெய்ய லாமோ திருட்டு -எதேதுநீர்

எம்சீமான் தேவ மனிதன் அவர்சொல்லி
உம்பின்னே வந்தோம்யாம் சொல்வீரே -உம்முள்

திருடி எவரேனும் வைத்தீரோ வெள்ளி
வரைதாண்டா உம்மைப் பிடித்து -திருட்டா?

இதுயென்ன நல்விருந்து உண்டப்பின் யாமோ
இதுபழியை எம்மேல் சுமத்தி -வதைக்கின்றீர்

எம்மூட்டை உம்கையில் உள்ளதே காணீர்நீர்
உம்கலம் உள்ளதோ யிங்குதான் -அம்மான்கள்

மூட்டையைக் காவலர்ச் சோதனை யிட்டிட,
மூட்டைத் தமர்பத்தில் இல்லையே -மூட்டைப்

பதினொன்றாம் பென்யமீன் தன்னில் கலத்தை
அதினின்று காவ லெடுக்க -விதியே

சிறைசெல்வோம் எல்லாரும் என்றவரும் ஆடைக்
குறைக்கிழித்துச் சென்றார் நகருள் -குறைகண்டீர்,

சீமானே, உம்கலத்தை யாமடிமை இங்குதான்
சீமானே சொல்படிசெய் வோம்யாமே -சீமானோ

எல்லாரும் இங்கே அடிமையாய் ஆக்கிட
வல்லார் இறைவன்பால் அஞ்சுகிறேன் -அல்ல

அதுயெனக்கு நீதி யதனால் எவரின்
விதம்கண்டோம் அம்மாந்தன் பற்று -விதஞ்சீமான்

சொல்கேட்டு யூதாவும் சீமான் அருகாகச்
சொல்கேளும் சீமான் துணிந்தேன்நான்; -நல்லவரே

சொல்லுமதைக் கேட்டுத் தமர்ச்சென்றோம் தந்தையிடம்
சொல்கேள் அடைந்தார் துயர்தானே -செல்லம்

இளையோன் முதிர்வயதில் வந்தான் மகனாய்
இளையோன் முதிர்தகப்பன் வைத்தார் -இளைமேல்

இளையோன் இலையென்றால் தந்தை உயிரைக்
களைவாரே என்செய்வோம் யாமே -விளைவாய்

இளையோன் அனுப்பிட மூப்பர் இணங்கார்
இளையோன் பொறுப்பெனது என்றே -களைந்தேன்

களையை மனதில், களிப்பில்லா இந்த
வளக்கலம் வந்ததறி யோம்


ஆதி கலி 98

யோசேப்பு தன்னை தன் தமருக்கு அறிவித்தல்


இதுசொல்கேள் யோசேப்புத் தன்னை அடக்கும்
வதைவிட்டு மற்றோர் வெளிசெல் -அதுகேட்டு

மற்றோர் செலவம் அறையிலே யோசேப்பு
மற்றோர்கேள் கண்ணீரை விட்டனன் -அற்றார்

பதினொருவர் கண்ணீர் விடக்கண்டு ஆங்கே
இதுயென்ன வீணர் அழுகை -எதுவேனும்

செய்தோமோ நாம்தவறு, என்றே வதைபட்டுச்
செய்நோக்கி நின்றார் மலைத்தங்கு -மெய்யாண்

வெளிப்படையாய்ச் சொன்னான் தமரே அறிவீர்
வெளிவிற்ற யோசேப்பு யானே -ஒளிந்து

களிப்பில்லாப் போகாதீர் வீண்மனதில் குற்றம்
வளவனாய் வைத்தார் இறைவன் -வளமில்

வரும்பஞ்சம் முன்னறிந் தெம்மைச் சிறந்தே
திருக்காக்கச் செய்தார் எனவே -திருசெய்க்

கருதுகிறேன் என்தமரே கேளும், புவிக்கு
விரைந்தென்னைச் செய்தார் அரசு -விரைந்து

வரும்பஞ்சம் ஏழாண்டு என்றறிவித் தாரே
திருமன்னன் சீறுரக்கம் தன்னில் -இராக்கனா

ஒன்றின் பொருளறிவித் தென்னை உயர்த்தினார்
மன்னனு மென்னைச் சிறந்திங்கு -அன்னார்

இதுமெய்யோ என்றங்கு வாயடைத்து நிற்க
இதுமெய்யே காணும் தமரே -வதைநீக்க

வல்லிறைவன் முன்செய்தார் திட்டம் வறட்சியில்
எல்லாரைக் காக்கச் சிறந்துசெய்தார் -அல்லாரோ

கண்கண் டதுமெய்யோ இல்லை கனாக்கண்டு
கண்விழித்துப் பார்ப்போமோ வன்தமரும் -கண்டாரே

கிள்ளி யிதோதன் தமராம் இளையோனே
எள்ளி நகைத்தோம் இவனைநாம் -எள்ளி

விளையாட்டாய்ச் செய்தக் களியாட்டம் எல்லாம்
திளைக்கா நிறுத்தினேன் மெய்சொல் -களியாட்டம்

தன்னைத் தமரேநீர் மன்னியும் என்நின்றத்
தன்தமன் கட்டி அழுது


ஆதி கலி 99

எல்லோரையும் எகிப்திற்கு வர யோசேப்பு அழைத்தல்


இரண்டாண்டுச் சென்ற வறட்சிக் கொடிதாய்
இருமடங்கும் ஓராகச் செல்லும் -திருகர்த்தர்

நம்மெல்லார் மீட்க வருவித்தார் எந்தனை
நம்காக்க முன்னே எகிப்துநாடு -அம்மான்

எகிப்தின் அரசனாம் பார்வோன் செவிகேள்
எகிப்தில் தகைத்தமர் வந்தார் -நகைத்த

எகிப்தின் அரசனாம் பார்வோன், அனைவர்
எகிப்திற்கு வாரும் அழைத்து -அகத்தே

எகிப்தின் சிறந்த பொருள்பரிசைத் தந்து
எகிப்திற்கு வாரும் தகப்பன் -நகைச்சொல்

வகைப்பல வண்டிகளில் மேலோன் பொருளை
எகிப்தினது போக விடுத்து -இகச்சீர்

வளமெல்லாம் இங்குளது ஆதலால் வாரும்
களம்விட்டு, தந்தாய்! எனுஞ்சொல் -வளமாய்

வளதேசம் நம்முன்னே உண்டிங்கே காணீர்
வளமுண்போம் வாரீரோ நாடு -களத்தின்

வழிக்காக நல்லுணவும் ஆடைகளும் தந்து,
வழிச்செலவுக் காசும் அளித்தான் -கழிக்கோல்

வழிக்காகத் தன்னிளையோன் ஆடைகள் ஐந்து
வழிச்செலவு முந்நூறு காசு -விழித்து

வழிவந்தார் காணிக்கைக் கொண்டு தனையர்
வழிவகையைச் சொன்னார்; தகப்பன்: -இழிபேசீர்,

செத்தான் மகனே எதற்காகப் பொய்சொல்லிச்
செத்தவனைச் செய்தீர் உயிர்த்ததாய் -அத்தவரோ

இல்லை திருவே இழிபேச்சு இல்லையே
வல்லார் இறைவன் திருத்திட்டம் -எல்லைக்

கடந்து தமையனை வாழ்வித்து நம்மைக்
கடக்கச்செய் கின்றார் இறைவன் -அடநீர்

இதோபாரும் வண்டியில் காணிக்கைக் காண்பீர்
இதையாமோ பொய்யாய் எடுத்து -விதம்சொல்ல

எங்களிடம் ஏது பணமாம், களிப்பீரே
தங்கள் மகனேதான் ஆங்கு


ஆதி கலி 100

யாக்கோபு மகிழ்ந்து இறைவனுக்கு பலி தருதல்


இதுகேட்ட யாக்கோபு கண்காண் பதுமெய்
விதமிங்கே கண்டேன் வளத்தை -அதனால்

வதைநீங்கிப் போயிற்றே எம்மகனை நானோ
இதுகாரும் செத்தான் நினைத்தேன் -இதோகாண்

உயிர்த்தானே யாக்கோபு அந்நாள் விழித்து
உயிரவனின் போயிற்றே என்றே -உயிர்போன

நாளில் புலம்பி அதுவரை ஏதோபொய்
வேளைக்கு வாழ்ந்தான் கிடந்தங்கு -ஆளோ

மரணிக்கும் முன்னர்த் தனையனைக் காண்பேன்
மரணித்தான் என்றே நினைத்தேன் -மரணிப்பேன்

நல்லமைதிக் கொண்டே இனிமேல் அவன்முகத்தை,
கல்லாவேன் கண்டப்பின் நானங்கு -நல்லவன்

தன்மக்கள் மாக்கள் ஒருசேரக் கூட்டினான்
தன்தேவன் பேச, பெயர்சேபா -தன்னிலே

வீசைநிணம் யிட்டான் பலியாக, என்னிறையே
பேசிநீர் தாரும் அருள்


ஆதி கலி 101

யாக்கோபு எகிப்திற்குச் செல்லுதல்


கர்த்தர் திருமகனின் சொல்செவிக் கேட்டிட,
கர்த்தர் உரைத்தார் திருமொழி: -கர்த்தர்யான்

உன்தகப்பன் ஆபிரகாம் ஈசாக்கின் தேவனே
என்தேவா நின்றேன் அடியேன்நான் -என்றென்றும்

அஞ்சாதே நீஎகிப்துட் செல்ல வளவனே
அஞ்சும் இனத்தார் பெருகுவர் -தஞ்சம்செல்

அஞ்சாதே உன்னைநான் இத்தேசம் தன்னிலே
எஞ்சி அழைத்துவரு வேன்நானே -துஞ்சாதே

உன்மகனாம் யோசேப்பு உன்னருகே நிற்பானே
உன்கண்கள் தன்னை யவன்மூடி -உன்னுடல்

நல்லடக்கம் செய்வானே; கேளாய் எனதுசொல்
நல்மெய்யே போவாய் எகிப்துநாடு -நல்லாண்

புறப்பட்டான் சேர்ந்து எகிப்தென்னும் நாடு
கறைபடா நெஞ்சன் இசுரேல் -திறைகட்டா

வாழ்ந்தோர் வருகைப் புரிந்தார் எகிப்தென்னும்
வாழ்நாட்டில் சேர்ந்தார் சிறந்தங்கு -வேழ்சீர்

எகிப்து அருகிலே யூதா அழைத்து
எகிப்து வருகிறோம் என்றே -தகைதமன்

யோசேப்பைக் கண்டுச்சொல் நீயும் வரச்சொல்வாய்
யோசேப்பை, கோசேனின் நாட்டிற்கு -ஆசைமகன்

யோசேப்பு சொல்கேட்டு வந்தான் தகப்பனைக்காண்
யோசேப்பும் கண்ணீர்ச் சொரிந்தழுதான் -யோசேப்பைக்

கண்டவன் யாக்கோபோ: ஆறுதல் நானடைந்தேன்,
கண்டேன் உயிராய் மகனுனை -கண்தேர்ந்து

ஐவர் அரசன்முன் யோசேப்பு கொண்டுசென்று,
தேவன் அளித்த தமரிவர் -தேவை

இவர்க்கு நிலம்மேய்க்க என்று; அரசன்
இவர்க்கு நிலம்கொடும் நன்று -அவர்செய்வ

என்ன தொழிலாம் இவர்க்கு எனக்கேட்க
அன்னார் பிறப்புமுதல் மேய்ப்பர்தாம் -மன்னவா

இன்சொல் படியே கொடுப்பீரோ கோசேனை
நன்றெ தறிந்துக் கொடுத்திடு -அன்னவர்க்கு

முன்னராய் யோசேப்பு சொல்லி வருவித்தான்
சென்றவையில் பேசும் முறைதனை; -இன்சொல்லும்

மேய்ப்பர்; எனச்சொன்னால் நாட்டுள்ளோர் நாடாதே
மேய்ப்பரைச் சேரார் நிலத்துள்ளே -ஆய்சேயோன்

பின்கூட்டி வந்தான் தகப்பனை யோசேப்பு
முன்வந்த யாக்கோபு பார்வோனை -முன்வாழ்த்த

ஏறு; வயது உமதென்ன கோன்கேட்க
நூறும் இணைமுப் பதுதானே -மாறாத

பார்வோனின் ஆணைப் படியே தமர்கண்டார்,
பார்வையில் நன்றாமே நைல்நதி, -சேர்நாடாம்

கோசேனின் மாகாணம் ராமசேசைச் சேர்ந்தவர்
வீசைக் குலம்வாழ்ப் பெருகிட -தேசம்

பதினேழு ஆண்டு எகிப்திலே வாழ்ந்தான்
பதினொருவர் கூடப் பிழைத்து -வதைநீங்கிப்

பல்லோராய் மேன்மை அடைந்தான் இசுரேலன்
வல்லவனாய் ஆனான் வளர்ந்து


ஆதி கலி 102

மரணிக்கும் முன் யோசேப்பை பார்த்து ஆணை யிடுவித்தாலும் இருமைந்தரை தன்மைந்தராக எடுத்தலும்


தன்னிறுதி நாட்கள் இதுவெனத் தானறிந்தோன்
தன்மகன் சீமானாம் யோசேப்பை, -தன்னிடம்

வாவென் றழைத்தனன் யாக்கோபு, செய்வாயே
தேவனின் மேலாணை நீயிடு -சீவனில்

என்னுடலை இங்கே அடக்கம் புரியாதே
என்னுடலை ஆபிரகாம் ஈசாக்கு -இன்நிலத்தில்

தானே புரிவாய் யெனநீயும் என்மகனே
கோனேநீ ஆணை யிடுமகனே -கோனவன்

ஆணையிட்டான் தன்தகப்பன் முன்தொடைகீழ் கைவைத்து
ஆணையிட்டான் தன்தகப்பன் இன்னுடலை -வீணாக்காச்

சேர்த்திடவே ஆபிரகாம் ஈசாக்கின் கல்லறை;
கோர்த்தான் கரம்பற்றி ஆங்குதான் -சேர்ந்தே

தகப்பன் மரிக்கும்முன் தன்தனையர் வாழ்த்த,
தகப்பனின் முன்னர்த் தனையர் -தகைவிட்டு

என்தந்தை நீரே மகனிரண்டு பேர்வாழ்த்தி
என்குலம் தான்செழிக்கக் கூறுவீர் -அன்னான்

மனாசே முதல்மகன் தன்னிடது வைத்து
மனம்செய்து இன்வலதில் வைத்தான் -மனம்போல்

இனமிரண்டு எப்பிராயீம் தன்வலதில் வைத்தான்
இனத்தகப்பன் தன்னின் இடது -இனத்தின்

தகப்பன் வலதுகையை எப்பிராயீம் மேலே
தகைவைத் ததைக்காண் தகப்பன் -திகைத்தான்

தகப்பனே என்மூத்தோன் உம்வலம் வையும்
வகைசரி என்றான் மகனே -அகமே

தமரில் இளையோனே பேராய் வளர்வான்
தமரிவர் என்மக்கள் தானே -தமரிருவர்

போகப் பெறும்பிள்ளை யெல்லாம் உமதுடையோர்;
சாகும் எனது விருப்பென -ஏகி

இருவரையும் தன்மக்கள் ஈடாக்கிச் சொன்னான்
இருவரும் பன்னிருவர் சேரத் -திருவாய்

மொழியை உரைத்தே இருவரைச் சேர்த்தான்
வழியிவர் யாக்கோபின் சொல்


ஆதி கலி 103

யாக்கோபு தன் மகன்களுக்கு மரணிக்கும் முன் சொன்ன வாழ்த்து


தன்தனையர்க் கூப்பிட்டு வாழ்த்துப் பகன்றனன்
தன்னுடலை விட்டு உயிர்பிரியும் -முன்னராய்,

பேர்பேராய் வாழ்த்தினோன் செய்வித்தான் ஆணையே,
சேர்ப்பீர் உடலை நிலம்தன்னில் -சேர்த்தனன்தன்

பிள்ளைகள் கிட்டி வரச்செய்து யாக்கோபு,
பிள்ளைகாள் எந்தன் உயிர்போகும் -பிள்ளைகாள்

யாக்கோபைக் கிட்டி வருவீர் உரைப்பேன்நான்
போக்கில் வரும்சொல் உரைத்திட -ஆக்கம்

செவிகொடுப்பீர், பிள்ளைகாள் என்றென்றும் என்சொல்
புவிதன்னில் பிள்ளைகாள் வாழ்த்துச் -செவிகேள்மின்

மூத்தோனே நீர்தளும்பு மாப்போலே ஆனாயே
மூத்தோன் வளரா திருப்பாயே -ஆத்தாள்

தகப்பனின் மஞ்சத்தைத் தீட்டாக ரூபன்
தகப்பன் இழிசெய்தோன் நல்ல -இகச்சொல்

இழந்தான் நிலத்தே புணரிச்சை வாழ்வை
விழக்கெடுக்கும் என்றும்தான் கேள்மின் -அழுகைச்

சிமியோன் தகைலேவி, சோதரர் ஒன்றே
சுமைவாளைப் போல்கூராய்ப் பேச்சுத் -திமிர்கொண்டு

ஆண்மகனைக் கொன்றார்கள் தானே இருமக்கள்
காண்இருவர் போவார் சிதறியே -ஆண்சீரில்

என்மனமே மைந்தரிவர் தன்னின் மதிகேட்டை
என்றென்றும் தள்ளு, சினத்தாலே -தன்மதிக்

கெட்டுப்போய் வீழ்த்தினர் ஆணை அரணிலே
வெட்டி எடுத்தார் உயிர்களை -நட்டானாம்

யூதா வனமிருக்கும் சிங்கத்தின் குட்டிநீ
யூதாவே கொண்டிடுவாய்ச் சேர்புகழ் -வேதனே

யூதா எதிரி பிடரி பிடித்துநீ,
சோதரர் உன்முன் பணிந்திடுவர் -வேதவர்

செங்கோல் உனைவிட்டுப் போவதில்லை சோதரருள்
இங்கே நிலைத்திருப்பாய் நீதிசெய் -எங்கும்செல்

செங்கமலப் பாதம்; அமைதியின் கர்த்தரின்
செங்கோல் வருமள வும்நீயே -பங்காய்க்

கடல்துறையின் பக்கம் செபுலோன் வசித்துக்
கடற்கப்பல் வந்துநிற்கும் சீதோன் -அடடா!

கடல்மட்டும் எல்லை இருக்கும் மகனின்
கடலாற்றல் தன்னைக் குறித்து -அடைவான்

இசக்கார் பகுதியைக் கட்டும் மனிதன்
திசைவணிகர் ஏற்கும்மாப் போலே -இசக்கார்

திசையில் கழுதைப் பொதிநடுவே குந்தும்
திசைநாட்டான் நல்வளத் தானே -திசைதனில்

தாண்மகனே எம்பெயர்சொல் கோத்திரத்தில் நீயொருவன்
தாண்ணே, பரிமேல் வருவோனே -தாண்குதிங்கால்

காண்கடித்து வீழ்த்தும் விரிபாம்பு; கர்த்தாவே
காண்மீட்பைக் காணவே காத்திடுவீர் -காண்மகன்

காத்தே, பலர்சேனை வீழ்த்தப்போய் மேல்மகன்
காத்தோ அழித்து முறியடிப்பான் -காத்தமையன்

ஆசேர் வளமாய்ச் சுவையுண்பாய், கோத்திரம்
வாசம்செய் வோரில் சிறந்துநீ -ஆசைமகன்

நப்தலி பெண்மான், விடுதலைப் பெற்றாப்போல்
நப்தலி இன்சொல்லைக் கூறுவான் -எப்போதும்

யோசேப்பு நற்கனி ஈனுஞ் செடியாமே
யோசேப் வளர்நல் கொடியாமே -ஆசைமகன்

வில்வீரர் நின்றார் எதிர்த்துப் பகைத்தாரே
வில்லுனது நின்று நிலைத்ததே -எல்லாம்

இறைச்செயல் வல்லார்க் கரச்செயல் தானே
இறைவன் அருள்பெற்றாய் நீயே -இறைவனார்

தேவன் துணையிருப்பார் வல்லார் உயர்வானில்
தேவைகள் யாவையும் கீழ்மண்ணில் -தேவைகள்

சந்தித்து வாழ்த்தி முலைப்பால் கருப்பையில்
எந்தக் குறையிலா வாழ்த்திது -எந்நாளும்

பென்யமீன் பீறுகிற ஓநாய்நீ; காலையில்
பென்யமீன் தன்இரையைப் பட்சிப்பான் -தென்றலின்

மாலையில் பென்யமீன் கொள்ளையைப் பங்கிடுவான்
ஆலன் பகன்றார்நல் வாழ்த்ததை -ஆலன்

நிலமிது எந்தன் நிலமிலையே என்றும்
நிலமது முன்னோரின் பூமி; -நிலத்தில்

நலமாக என்னை அடக்கஞ்செய் வீரே
நிலத்தில் அமைதியாய்ச் சேர்ந்து


ஆதி கலி 104

யாக்கோப்பின் மரணம்


உயிர்விட்டான் யாக்கோபு, தன்நரை மூப்பில்
உயிர்பிரிந்த இன்னுடலை ஆணை -உயிருள்ள

வாழ்நாளில் செய்தது போலே தகப்பனை
ஆழ்புதைத்தான் மக்பேலா வில்தானே -வாழ்ந்தவர்

கானானில் ஆபிரகாம் ஈசாக்கின் பூமியில்
போனார்கள் எல்லாத் தமர்கூடிப் -போனவர்

இன்னுடலைக் கல்லறை யிட்டே அழுதனர்
வன்சாவு எம்மைப் பிரித்ததேன் -அன்றியும்

ஏழுநாள் கல்லறையின் மீது குரலிட்டு
வீழ, இசுரேல் எகிப்தின் -அழுகையை

வாழும் நிலத்தோர் நிலைக்கண்டுப் போனார்கள்
வாழெகிப்தின் மீளாத் துயரிது -வாழுநகர்

ஆபேல் மிசுராயீம் என்ற பெயர்வழங்க
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு -தீபம்

உயிர்பிரிந்த இன்னுடல் இட்ட யிடத்தின்
பெயர்வழங்கிப் போயிற்று அன்று -பெயரனாம்

யாக்கோபு செத்தப்பின் யாக்கோபின் பிள்ளைகள்
யாக்கோபு போனப்பின் பொல்லாப்பு -மாக்கள்சேர்

யாக்கோபை நீர்வறட்சி நீங்க வருவித்தோன்
போக்கிடுவான் தீர்க்கப் பழிதானே -ஆக்கியவர்

யோசேப்பு முன்வந்து எல்லாரும் கீழ்வணங்கி
யோசேப்பே யாமோ அடியாரே -யோசேப்பின்

கண்களில் நன்தயைக் கிட்டுமோ எங்களுக்கு
மண்பழி வாங்காதே சால்புடையோய் -எண்ணினீர்

என்தமரே ஏனோ வகைநினைவு நாட்டிலே
என்தமர்நீர் நன்றாய்ப் பிழைத்திருக்க -என்னிறைவன்

செய்தார் இதுபோலே என்றே உரைத்தேனே
செய்நன்றி நம்பாதே விட்டுவிடும் -செய்யுளதே

நாடுளதே உம்முன்னே நல்விதமாய் நீரிங்கு
நாடிதில் பல்லோர்ப் பெருகுவீர் -நாடிதை

விட்டு, தகப்பன் நிறையாணை அன்றுத்தான்
விட்டிடாமற் செல்லும் எலும்பு


ஆதி கலி 105

யோசேப்பின் மரணம்


இறந்தான் எகிப்திலே யோசேப்பு மூப்பில்
இறக்கும்முன் தன்தமரின் கையில் -இறந்தால்

எலும்பை எகிப்தில் புதைத்து விடாதீர்
எலும்பெனதைக் கொண்டுச்செல் வீரே -வலச்சீராண்

யோசேப்பின் ஆயுளது நூறு வயதுபத்து
யோசேப்பு எப்பிராயீம் பேரனையும் -பேசியணை

மூத்தோன் மனாசே மகனையும் தேசத்தில்
மேத்தக்கோன் கொஞ்சி வளர்த்தனன் -யோசேப்பின்

நட்டாரும் ஆங்கே வளர்ந்தனர் சீராக
நட்டார் அனைவரும் மேய்த்தவர் -நட்டாரின்

தேசமது கோசேனே; ராமசேசு நாடதில்
தேசத்தார் வாழ்ந்தனர் சீராக -தேசத்தை

அன்னார் நிரப்பிச் சிறந்து
ஆதி கலி 106

திருவிவிலிய ஆதிநூலின் கலிவெண்பா முற்றிற்று



திருவிவிலிய திருப்பயண நூலின் கலிவெண்பா


அடிமைப் படலம்


ஆபிரகாமுக்கு அவனின் வழித்தோன்றல் அடிமைகளாக இருப்பர் என இறைவன் சொன்ன முன்னுரை நிறைவேறுதல்


ஆபிரகாம் தன்னின் செவிகேட்க ஆயவர்,
ஆபிரகா மேயுன் வழித்தோன்றல் -சாபமாய்

நாட்டில் நடுங்கி அடிமையெனப் பல்லாண்டு
வாட்டி வதைப்பான் அரசுரை -நாட்டார்

இசுரவேல் மக்களோடு பஞ்சம் பிழைக்கத்
திசைநல்லூர்ச் சென்றான் எகிப்து -இசுரவேல்,

யோசேப்பு, மற்றும் தமர்பதி னொன்றென,
கோசேன் நிறைத்தார் இனமங்கு -வீசைப்

பலுகிப் பெருகினர் யாக்கோபின் தோன்றல்
சிலரே வருகைப் புரிந்தார் -அலர்ப்பஞ்சம்

நாட்டில் பிழைத்திட, வந்தார் எழுபதே,
நாட்டில் வளர்ந்தார் நிறைத்தங்கு -நாட்டில்

இசுரவேலர் இல்லா இடமிலை; நாட்டில்
திசையெங்கும் தூள்போல் பரவ -இசைந்தங்கு

முன்வந்த மக்கள் இறக்க, அரசனோ
முன்வந்த நல்லாண் மறந்தனன் -முன்னாண்

அரசன் இறக்க, வருமரசன் வன்னாண்,
இருக்க இயற்றினான் வன்னாய் -தரங்கெட்ட

மன்னன்: இதோயிந்த மண்ணில் இசுரேலர்
என்னே பெருகி உளரிவர் -வன்னெதிரிப்

போரொன்று வந்தால் அவர்போய் எதிரிடஞ்
சேருவர் சேர்ந்தால் பெருமக்கள் -சேரெதிரி

யோடே புறப்படா வண்ணம் ஒருசெயல்
நாடுவேன் என்றான் அரசனவன் -நாடதில்

வன்னாண் ஒடுக்கவே வன்வேலை யிட்டனன்
அன்னார் இறைச்சொல் நிறைந்தது -மன்னன்

நிறைநகரம் கட்டக் கறையெண்ணி மக்கட்
குறைய வழிதேடி னானே -குறையவன்;

சேற்றில் பிறந்தாலும் செந்தா மரைமலர்
நாற்றம் பிறப்பிக்கும், நாட்டிலே -வேற்றாக

வேலை ஒடுக்கி வறுத்தாலும் நாட்டாரோ
சேலைவான் மீன்போல் பெருகு
திருப்பயண கலி 1

மருத்துவச்சிகளை ஆண்பிள்ளைகள் பிறக்கும் போதே கொலைச் செய்ய ஆணையிடுதல், அவர்கள் தேவனுக்கு அஞ்சியதால் கொல்லாது விடுதல்


அடடா! பெருக்கம் குறையாப் பெருகும்
இடையர் இவரை இடுக்க -நடக்கும்

மருத்துவர் சிப்பிராள் பூவாள் பெயருள்
இருவரைக் கொண்டான் அரசு -திருவும்

பணம்பல உண்டே பலுகும் இனத்தார்
மணைமேல் அமர்பிறப்பு மண்ணே -கணவாண்

எனத்தெரிந்தால் கொன்றிடுவீர் எல்லார் எனவே,
இனமழியும் இவ்வகை வன்னே -இனத்தார்

இருக்கட்டும் பெண்பிள்ளை நன்றாய்க் களிப்போம்
திரைப்பின்னே செய்வீர்ச் செயலை; -கரைமன்னன்

கேட்ட மருத்துவரோ சொல்கேட்டுப் போயினர்
நாட்டில் இறைவனார் அஞ்சினர் -வாட்டி

இறைமுன்நேர் இல்லை சிறுபிள்ளைக் கொன்றால்
இறைமுன்னர் அஞ்சும் மருத்து; -கறைமன்னன்

சொல்லைச் செவிமடுக்கா விட்டார்; கறையாணைச்
சொல்கேட்காப் பெண்டிர் அழைத்தனன் -அல்லாது

ஏன்விட்டீர் ஆண்மக்கள் என்கேட்டான் வன்னரசன்
கோன்கேட்பீர் அப்பெண்டிர் நாட்டிலே -மேன்மிக்கோர்

வல்லோரே, யாம்போகும் முன்னர்ப் பிறப்பித்தார்
நல்லரசே யாமென்செய் வோம்சொல்மின் -அல்லங்கு

பொய்மையும் வாய்மை யிடத்து இறைவனினம்
பொய்க்காது நன்மைப் பயத்ததால் -மெய்யிறைவன்

வாழ்த்தினார், பொய்யுரைத்து வாழ்விடுதல் நன்றென
வாழ்மண்ணில் தந்தார் வளம்
திருப்பயண கலி 2

பிறக்கும் ஆண்பிள்ளைகளைப் பிடித்து நைல்நதியில் இட ஆணை அரசன் யிடுவித்தலும், இசுரேல் இனப்பெண்கள் ஆண்பிள்ளைகளை மறைத்து வைத்தலும்.


வன்ணானை இட்டனன் மன்னன்: பிறப்பிக்கும்
நன்னாணை நைல்தன்னில் போட்டிடும்; -வன்செய்க்

கறைவீரர்ச் செய்தார் கறைச்செயல், ஆற்றில்
கறைகீழாய் ஆண்பிள்ளை இட்டு -கறையரசு

இவ்வாணை சொல்ல இனத்தார் இசுரெலினம்
அவ்வாணைக் கீழ்ப்படியா தாண்பிள்ளை -அவ்வாறே

பெண்கள் பிறப்பித்தால் வைத்தார் மறைத்தங்கு
எண்ணம் இனமழிப்பே என்றுணர்ந்தார் -வண்ணம்

பலபெண்டிர் பிள்ளை பிரசவித்த பின்னும்
பலநாட்கள் காத்தார் கறையோர் -நிலத்தினங்

கண்படா வண்ணம், கறையோரோ வீரர்கள்
கண்டெடுக்க ஏவினர் வீடுதனில் -மண்ணில்

ஒளித்துவைத்தார் சிற்றாரும் சேய்

நைல் படலம்


மோசே பிறப்பும் அவன் தாய் அவனை நைலில் விட நாணற் கூடை பின்னுதலும்.


லேவியின் தோன்றல் இனத்துள்ளே பெண்கொண்டு
லேவியின் தோன்றல்கள் பெற்றெடுத்தாள் -தீவிரித்த

மன்னனின் வன்னாணை, பெண்ணாள் கருவிலே
அன்னார் கருவுற்றார் மீட்பவன் -நன்னாள்

பிறப்பித்தாள் மூன்றா வதாயோர் மகனே
பிறப்பெனது வைப்பேன் மறைத்தே -பிறப்பின்

அழகில் மயங்கினோள் ஆண்மகவை இட்டாள்
வழுச்செய்வோர் காணா மறைத்து -அழகனுக்கு

முன்பிறந்த பெண்ணும் ஒருஆண் மகனோடு
அன்னார் பிறந்தார் இறைவனின் -இன்மீட்பன்

வன்னார் எகிப்தின் அரசன் கொடுங்கோலே
என்றே வரச்செய்தார் மீட்பனை -வன்னரோ

மூன்றா வதுபிறப்பை வன்னாணை மேற்கொள்ளா
மூன்றுமாதம் அன்னை மறைவித்தாள் -மூன்றுமாதம்

சென்றப்பின் ஏலா மறைக்க இனிமேலும்
என்றே இறைவா இரங்குவீர் -என்றே

சரிசெய்வோம் ஆற்றில் விடவே கரைவேள்
கரைதன்னில் சென்றவள் நாணல் -நிரைகொண்டு

கூடையாய்ச் செய்வித்தாள் கீல்பிசினைப் பூசியே
கூடைக்குள் இட்டாள் மகன்தனை -மாடனே

என்பிறப்பே என்னால் முடியா மறைத்திட
வன்னாணை வன்னாராம் வீரர்கள் -உன்னழுகைக்

கேட்டாலே வெட்டிப் பலியிடுவர் கண்ணேயென்
கேட்பாயோ? தாயின் குரல்தனை -நட்டாள்

அழுதழுது நெய்தனள் நாணலால் கூடை;
தழுதழுக்க இட்டனள் பிள்ளை -அழகனைக்

கர்த்தர் விரைக்காப்பார் நம்பி கரைவிட்டாள்
கர்த்தர் கொடுத்த பிறப்பு
திருப்பயண கலி 4

மோசே பார்வோன் குமாரத்தியிடம் சேருதலும் மிரியாம் அந்த குழந்தையின் தாயையே பால்கொடுக்க அழைத்து வருதலும்


அழகன் தமையன் சிரிப்பு அழகு,
அழகில் அழகி மலைத்து -அழுதாள்

அழுதாள் வினைப்பெண் புரியா, அழகன்
அழுதால் பிடிப்பரே வன்னார் -வழுமக்கள்

போகும் வழிநாணல் கூடையைக் காண்பேனே
போகும் வழியேதும் கூடையும் -ஆகா

வழிப்போகா என்நானும் நிற்பேனே காவல்
வழிப்போகும் கூடையின் பின்னே -அழகி

மிரியம் பெயராம் தமக்கயும் காக்க
சரிநான் அயராது காப்பேன் -சிரிப்பால்

மிரியம் எனைக்கவர் ஆணே மகனே
கரைதனில் கூடையின் பின்னே -வரையின்

அரசன் பிறப்பெண் புனலில் மகிழ
தரைகண்டாள் கூடை அரச -அரண்வளர்

செல்ல அழுதான் மகனும், அழுகைக்கேள்
மெல்ல எடுத்தாள் மகளவள் -செல்லம்

அடடா! அழகே அழகன் மகனே
அடடா! புனலில் எடுத்தேன் -அடைந்தேன்

மகிழ்ச்சி, சிறுமகன் கண்டேன் அழகி
மகிழ்வாய் முகிழ்ந்தாள் மகனை -மகிழ்ந்தவள்

மோசே எனும்பெயர் இட்டாள் பொருளது
வீசு புனல்வந்தோன், பின்வந்தோள் -ஆசை

மகனுக்குப் பால்கொடுக்க எம்மினப் பெண்ணை
மகன்வளர்க்கக் கொள்வீர் அணங்கு -மகனால்

அழுதழுதக் கண்கள் சிவக்க அழுகைத்
தழுதழுக்க நின்றனள் தாயுன் -அழுகை

அடக்க முடியா, இனத்திலே ஏனோ
கொடுமைப் பிறப்போ விடுமே -அடியாள்

பலநேரம் சென்றும் மனைவாராப் பெண்ணால்
அலைநீரில் பின்னராய்ச் சென்றாள் -இலைப்போல்

உதிர்ந்த மகனின் நினைவில் மலைத்தே
அதிர்ந்தனள் தாயும் கிடந்து -எதிரியாள்

பெண்ணாள் அழகன் சிரிப்பில் மயங்கினாள்
மண்ணின் அரசனின் ஆணையை, -கண்ணே,

முடியாது மீற எனச்சொல்லி விட்டேன்
அடிமைக் குழந்தையை விட்டு -அடியாள்

மிரியம் விரைவாய் வரக்கண்டாள் தாயும்
விரைந்தாய் மகன்கூடைப் பின்னால் -சரிச்சொல்

விரைவாய்; நடந்ததைக் கூறினாள் பெண்ணும்
விரைவாய் அழுகின்றான் கோமான் -விரைந்தே

அரசிளங் கன்னியின் பிள்ளையாய் மோசே
அரண்மனையில் நன்றாய் வளர்ந்தான் -அரண்விட்டுச்

சென்றான் பவனி, கொடுங்கோலர் வன்கண்டான்
என்ன இனமெந்தன் வீழ்
திருப்பயண கலி 5

மீதியான் படலம்


மோசே எகிப்தை விட்டு ஓடுதல்


ஒருநாள் திருவும் வலம்வர ஆங்கே
ஒருவன் அடிமை அடிக்க, -திருவும்

அடித்தோன் அடித்தான் அடியில் அடித்தோன்
அடிதாங்கா வீழ்ந்தான் மரித்து -அடிமை

மறுநாள் திருவும் வலம்வர ஆங்கே
சிறுவர் அடிமை இருவர் -கறுவிச்

சினத்தால் எடுத்தார் இனத்துள்ளே ஏனோ
சினமே எனக்கேள் திருவே -சினமா?

அடடா! புவியிலே என்றடைந்தீர் ஆள?
விடுவாய் மகனே அறிவோம் -அடித்தே

கொலைச்செய்தீர் நாட்டான் எனக்கேட்டு மன்னன்
கொலைசெய்யத் தேடுகின்றார் செல்வாய் -கொலைக்காக

மன்னன் வகைத்தேடும் சொல்லைச் செவிகேட்டோன்
மன்னன் இடம்விட்டுச் சென்று
திருப்பயண கலி 6

மீதியானில் மோசே தஞ்சமடைந்து மணமுடித்தல்


மன்னன் வகைத்தேடும் சொல்லைச் செவிகேட்டோன்
மன்னன் இடம்விட்டுச் சென்றானே -வன்பாலை

மீதியான்; கண்டான் அணங்கேழு நீர்க்கொள்ள
மீதியான் மேய்ப்பர் விடாதுநிற்க -மீதியர்

ஏழுபெண் மேய்பரோடே நீர்சண்டைப் போடவும்
ஆழிலா மாந்தரை ஓட்டினான் -வேழாணும்;

ஏழுபெண்டிர் சென்றே அறிவித்தார் தந்தைக்கு
வேழாணின் வீரத்தைக் கேட்டவன் -ஏழுபெண்காள்

ஏன்விட்டீர் நல்லாண் களத்திலே பெண்களே
கோன்சென்றான் அக்கிணறு, சென்றவன் -ஏன்வந்தீர்

இங்கே நிறையானே என்கேட்டு, கோன்சொல்ல
இங்கே இருப்பீரே வேள்நீரும் -மங்கையாள்

சிப்போராள் பேர்கொண்ட பெண்ணை மணமுடித்து
அப்பாவி மோசே வளர்விட்டான் -சிப்போராள்

ஆணைப் பெறவங்கு வீணாய் இருக்கின்றேன்
ஆணின் பெயர்கெர்சோம் என்றிட்டான்; -ஆணோ

எகிப்தின் அரசன் மரித்தான், இருப்பின்
எகிப்தின் அரசமைந்தன் வந்தான் -எகிப்தின்

அரசனாய், வந்தோன் பெருக்கினான் வன்னாய்
இருப்பின மக்கள் கொடிதாய் -இருக்க

இசுரேல் இனத்தார் அழுதார் அழுகை
இசுரேல் இனத்தார் அழவும் -திசைக்கேள்

இறைவன் நினைந்தார் உடன்படிக்கை முன்னோர்,
சிறப்பாய் அழைத்திடுவோம் மீட்டு
திருப்பயண கலி 7

தேர்வுப் படலம்


ஓரேப் மலையின் இறைத்தூதனை மோசே சந்தித்தல்


ஓரேப் மலையருகே மேய்த்தனன் ஆடுகள்
சேரந்த ஆடுகள் மேய்த்தவன் -வேரூன்றி

நின்றச் செடிமுட்கள் தீயெரியக் கண்டனன்
அன்னார் இறைதூதன் கண்டனன் -அன்னாணும்

கண்காண் பதுமெய்யோ கண்காண் கனவோயென்
மண்ணிலே தீயில் கருகாதே -கண்கண்டேன்

இச்செடிப் போலில்லை இவ்வுலகில், எப்படியென்
அச்செடிக் காணகிட்டிச் சேர்ந்தனன் -அச்செடியைக்

கிட்ட வரும்நேராண் கண்டு இறைத்தூதன்
கிட்ட வரும்மோசே மோசேயென் -இட்டக்

குரல்கேட்டோன்: வந்தேன் அடியேன் எனுஞ்சொல்
குரல்கீழ் படிந்தனன் நேர்சீர் -குரலது

வாராதே கிட்ட, அவிழ்ப்பாயுன் காலணி
வாருமிப் பூமியோ தூயதே -வேராட்கள்

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன்யான்
மாபெருந் தேவன் உரைத்தனர் -ஆபிரகாம்

தந்தையர் முன்னோரின் தேவன் எனக்கேட்ட
அந்தாளும் அஞ்சி முகம்மூட -இந்நாளில்

என்மக்கள் வன்னிலைப் போக்க நினைந்தேன்நான்
என்மக்கள் மீட்பேன் விரைந்துநான் -என்றென்றும்

பாலுந் தெளிதேனும் ஓடும்நல் தேசமாம்
காலம் இதுவரை ஏத்கானான் -ஆலே

பலவல்லார் வீற்றிருக்கும் தேசத்தில் சேர்க்க,
பலமோடு நானிறங்கி னேன்கேள் -அலராய்

இசுரேல் இனமக்கள் பாட்டை அறிந்தேன்
இசுரேல் விடுதலைக்கு இன்னாத் -திசைநாடாம்

செல்வாய் எகிப்து அரசனிடம், தேர்ந்தேனே
செல்மகனே நேராய் எகிப்துநாடு -செல்லென்கேள்

நான்மண்ணே என்னையேன் தேர்ந்தீரோ என்சொல்கேள்
நான்இருப்பேன் உன்னோடே அஞ்சாதே -வான்கர்த்தர்

சேர்த்தழைத்த இன்மக்கள் குன்றில் தொழுவீர்கள்
ஆர்த்தழைத்தேன் நன்அடையா ளம்
திருப்பயண கலி 8

மோசே இறைவனின் பெயரைக் கேட்டலும் அவனுக்கு யேகோவா என்னும் பெயரை அறிவித்தலும்


என்சொல்வேன் என்னினம் கேட்டாலே, வந்தவர்
என்ன பெயரோ இனதேவன் -என்றவர்கேள்

என்னவாம் சொல்லுவேன் என்னின மக்களிடம்
என்ன இறையின் பெயரென -இன்று

இருக்கும் படியே இருக்கும் இறைவன்
இருக்கிறேன் தேவன் அனுப்பி -இருக்கிறார்

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன்யான்
மாபெருந் தேவன் உணர்த்துவாய் -மாபேர்

இருக்கும் படியே இருக்கும் இறைவன்
இருக்கிறேன் என்ற பெயரே -இருக்கும்

இனியெல்லாக் காலமும் என்பெயர் என்றார்
நனிகர்த்தர் அன்றே சிறந்து -நனிசொன்னார்

யேகோவா என்ற திருப்பெயர் அம்மொழியில்
யேகோவா என்றால் இருக்கிறேன் -யேகோவா

என்னும் திருப்பெயர் வந்த முதன்முறை
என்னே இறைவன் பெயர்
திருப்பயண கலி 9

எகிப்தின் அரசன் வாதைகளைக் கண்டாலொழிய அனுப்ப மாட்டான் எனமுன்னுரை


இறைவனார் என்றென்றும் மாறாத நல்லார்
இறைவனார் யேகோவா சொன்னார் -இறைச்சொல்லைக்

கேள்மகனே கேட்பர் இனமூப்பர் உன்பேச்சை
வேள்காண்பான் வல்லிறைவன் கைதனை -ஆள்தன்னை

நானறிவேன் வேளவன் வன்மனம், கைநீட்டிக்
கோனவன் தேசம் புடைப்பேன்நான் -கோனவன்

காண்பான் பலவாய் அடையாளம் வாதைகள்
வேண்டாம் நிலன்விடுமென் பான்மன்னன் -தாண்டி

வெறுங்கையாய் வாரீர் இடம்விடும் போது
நறுநங்கை யாவர் இடுவீர்ச் -செறுசெல்வம்

கொள்ளையாய், பொன்வெள்ளி, பட்டாடை எல்லாமே
அள்ளி வருவீரே நாடுவளம் -எள்ளியோர்

நம்புவரோ என்னின மக்கள்? எனைநம்பார்
எம்தேவன் உன்முன்னே வந்ததில்லை -அம்பாக

எய்வர்சொல், சொல்லைச் செவிகொடாப் போவரினம்
மெய்தேவா என்னை விடும்சீரே -மெய்யாணே

உன்கையில் என்ன இருக்கிறது என்கேட்க
என்கையில் கோலே இருக்கிறது -உன்கைக்கோல்

கீழே இடுவாய் மகனே இறைச்சொல்ல,
கீழே விடுத்ததும் பாம்பாக -வேழாணோ

பாம்பது ஊற விரிநாகம் என்றவன்
பாம்பினைக் கண்டோட ஓடுகின்ற -பாம்பினது

வாலைப் பிடியென்று சொல்வர, பாம்பினது
வாலைப் பிடித்ததும் கோலாகி -சீலவரோ

போதுமோ பாம்பின் அடையாளம் செய்திட
வேதவர் சொல்லி முகங்காண, -போதாதோ,

கைவைப்பாய் உன்மடியில்; கைவைத்தான் மோசேயும்
தேவன் உரைத்த படிதானே -தேவன்சொல்

விட்டக்கை வந்தால் வெளிரித் தொழுநோயாய்
விட்டவன் போனான் அதிர்ந்தங்கு -விட்டிடு

மீண்டும் ஒருமுறை கையை மடியிடுவாய்,
மீண்டும் மடிவைக்கச் சீராக -மாண்டிடுவோர்க்

கிவ்வீர் அடையாளங் கள்போதும் கேட்பரினம்
இவ்வீர் அடையாளங் கள்கண்டும் -அவ்வினத்தார்

கேளாதே போனால் புனலாற்றின் மொண்டங்குக்
கேளாரின் முன்கீழ் குருதியாகும் -தாளாது

கேட்டோன் நடுங்கி: இறைவா அனுப்புமே
நாட்டிற்கு வேறொருவர் கேட்கின்றேன் -நாட்டிலே

வேறொருவர் இல்லையோ, செம்மொழி பேசாதோன்;
சீறினார் கர்த்தர் சினம்கொண்டு -வேறாணே

யார்கொடுத்தார் நாவண்மை? ஊமை பிறப்பித்தார்
யார்சொல்? செவிடர் படைத்தவர் -யார்சொல்?

விரைச்செல்வாய் உன்னோடு நானிருப்பேன் மோசே
உரைச்சொல்லைப் போதிப்பேன் நான்
திருப்பயண கலி 10

ஆரோனை மோசேயின் வாயாகக் கர்த்தர் அனுப்புதல்


வேறொருவன் நீரனுப்பும் கர்த்தாவே என்றவனை
வேறாணோ? கர்த்தர் சினமூண்டுச் -சீறி

இதோவருவான் ஆரோன் தமையன் இனத்தின்
வதைநீக்கப் போவீர் இருவர் -நதிபோல

சோதரன் ஆரோனோ நன்றாகப் பேசுவானே
சோதரன் சேர்ந்துச்செல் நாட்டிற்கு; -சோதரன்

வந்திடுவான் மிச்சிறு வேளையிலே வந்தவன்
அந்தணன்கண் கண்டு மகிழ்ந்தனன் -வந்தோன்

மகிழ்ந்தவன் கேட்க மகிழ்சொல்லைச் சொல்வாய்
அகநகைச் சோதரன் உந்தன் -முகங்காண்

மகிழ்வதைக் காண்பாய் நிலத்தே வகையை
அகங்காணும் கர்த்தர் உரைத்து -முகமுன்

செவிகேட்போன் நாவண்மை யானறிவேன் மோசே
செவிக்குள்ளே போட்டிடு என்சொல் -அவைதன்னில்

பேசும் உரையை, உனக்கும் அவனுக்கும்,
பேச உணர்த்துவேன் நேர்சீரே -பேசியே

ஆரோன் இனத்தாரைக் கண்டுரைப்பான் இன்சொல்லை
ஆரோன் உனக்கங்கே நாவாகி -ஆரோனின்

தேவனாய் நீயிருப்பாய் ஆங்கே, நிறைக்கர்த்தர்
தேவன் உரைத்தார் உரைதன்னை -தேவனின்

இக்கோலைக் கைப்பிடித்துச் செல்வாய் அடையாளம்
இக்கோலால் கைவேலை செய்வாயே -அக்கோலைக்

கண்டோன் வியந்தான் இதுவரை மேமேய்த்தேன்
மண்ணில் இதுவன்றோ கோல்
திருப்பயண கலி 11

மாமனிடம் எகிப்திற்குச் செல்லவேண்டும் என்று சொல்லுதல்


வீடுவந்து இன்மனையாள் கண்டுரைத்தான் காண்காட்சி
வீடதிலே மாமனைக் கேட்டனன் -நாடுவிட்டுச்

செல்வேன்நான் சோதரர் கண்டுவர, என்கேட்டோன்,
செல்வழியே நன்றாய் மகன்நீயும் -செல்செல்செல்

வீட்டினில் கர்த்தர் உரைத்தவர் கூறினார்
நாட்டாரைக் காண்பாய் எகிப்திலே -நாட்டில்

உயிர்வாங்கத் தேடின மன்னன் மரித்தான்
உயிர்போகா அஞ்சாதே நீயும் -உயராண்

அறிந்தே பயணம் புரிந்தான் மனையாள்,
பிறந்த மகனோடு நாடு -அறிந்தவக்

கோல்கொண்டு போனான் கடல்கடந்து நாட்டிற்கு
ஆல்போல் தழைத்த இனத்தாரை -வேல்கொண்டோ

இல்லை தரித்தா யுதங்களோ இல்லையே
வல்லார் இறைச்சொல்லைக் கேட்டு
திருப்பயண கலி 12

பார்வோன் மனக்கடினம் குறித்த முன்னுரை


பார்வோன், எகிப்தின் அரசனே போகவிடான்
பார்ப்பான் பலவாய் அதிசயங்கள் -பார்வோனின்

முன்செய்ய எச்சரிக்கை யாயிருப்பாய்; கொள்வானே
என்னால் மனக்கடி னம்தானே -என்னாண்

இசுரவேல் எந்தன் தலைபிள்ளை; எந்தன்
திசைமலையில் வந்து தொழுவே -இசுரேல்

திசையனுப்பும் கர்த்தர் இறைவனின் சொல்லே,
திசையனுப்பாப் போனால் வினையாய் -திசையின்

தலைப்பிள்ளை விட்டிடு எந்தனின்; இல்லென்
தலைப்பிள்ளை உம்மின் பிறப்பின் -தலையெடுப்பேன்

சொல்கேட்டுச் சென்றான் வனத்திலே மோசேயும்
வல்லார் இறைவன் எதிர்த்தங்கு -அல்லாண்

கறையான் அரசன் இருந்தான் நதியில்
சிறப்பாய் மனிதன் மகிழ்ந்து
திருப்பயண கலி 13

இறைவன் உடன்படிக்கை மீறியதால் மோசேவைக் கொலைப் புரிய முனைதல்


எதிர்ப்பட்டு வந்த இறைத்தூதன் மோசே
எதிர்த்துக் கொலைசெய்யப் பார்க்க -எதிர்த்தாளே

சிப்போராள் தன்மகன் முன்தோல் எடுத்தவள்
அப்புறம் கால்களின் கீழ்போட -சிப்போராள்:

என்னுதிரம் நீரே கணவனே என்சொல்கேள்
அன்னார் கொலைபுரியாச் சென்றவர் -வன்னாய்

திருவின் உடன்படிக்கைக் கைக்கொள்ளாப் போனான்;
திருவின் மனையாள் புரிந்து -திருவே

நடந்துவா ஆரோனே சோதரனைக் காண
நடந்தே வனம்வழியே போய்ப்பார் -நடந்தனன்

சொல்கேட்டு ஆரோனும் ஓரேப் மலையிலே
சொல்படி சந்தித்தான் ஆண்தானே -சொல்லைச்

செவிகேட்க ஆரோ னிடம்மோசே சொன்னான்
இவைக்கேள் மலையிலே கண்டேன் -புவியில்

அதுபோலே யான்கண்ட தில்லை தமனே
இதுவே அடையாளம் கேளாய் -மதித்து

எகிப்திற்குச் சென்றார் இருவர் நடந்து
எகிப்துவாழ் என்இனத்தின் மூப்பே -வகைக்கேளும்

கர்த்தர் பகன்றதைச் சொன்னார் இருதமர்,
கர்த்தர் அடையாளம் செய்தனர் -கர்த்தரின

மக்கள் குறிகளைக் கண்டு மலைத்தனர்
மக்கள் தொழுதார் முகங்கவிழ்ந்து -மக்கள்

படும்இன்னல் கண்ணோக்கிச் சந்தித்தார் மைந்தர்
நடந்தார் அரசன் அரண்
திருப்பயண கலி 14

வாதைப் படலம்


பார்வோனை மோசேயும் ஆரோனும் முதலில் சந்தித்தல்


மோசேயும் ஆரோனும் சென்றார் அரண்மனை
மோசேயோ வாழ்ந்த அரண்மனை -மோசே

மலர்ந்தனன் பின்னாள் நினைவுகள் வந்து
மலர்போல் வளர்த்தநல் தாய்சேர் -நலமானத்

தூண்களோ பொற்றகடால் மின்மினுக்க, தூயவன்
ஆண்மகன் அன்னையைத் தேடிட -ஆண்கண்

படாதே அரணுள்ளே வீற்றிருப்பாள் எண்ணி
நடுக்கூடம் நின்றான் மகனும் -அடடா

நடுக்கூடம் தன்னில் வளவன் வரவே
நடுநிற்ப தாரோ தமனோ -நடுவே

நடந்து வருவது யாரவன் வேறோ?
கிடந்து உருகினான் கோன்சீர் -மிடுக்காக

மின்னல்போல் கண்கள் பளபளக்க மன்னனும்
அன்னா ருடன்விளை யாடிய -இன்காலம்

மன்னனின் கண்களில் வந்துபோக, தூண்களின்
மின்னும் ஒளியால் கலைந்தது -என்னே

இதோஇவனே என்தமனே மன்னன் விழியில்
அதோகண்ணீர் வந்திடவும் ஆனால் -இதோகாண்பீர்

மன்னா இவனோ எபிரேயன் ஆதலால்
மன்னவா, கேளும் வினாவது -மன்னவன்

என்னவேண்டும் வந்தீர் எபிரேயர் மக்களே
இன்னபடி வேலையைச் செய்யாதே -வன்னே

கழித்தால் நகரம் முடிக்க முடியா;
சுழித்தான் முகத்தை அரசு
திருப்பயண கலி 15

பார்வோன் இசுரவேலின் வேலையைக் கடினப்படுத்துதல்


வனத்திலே எம்மக்கள் போகவிட்டால் நன்றே,
இனமக்கள் தேவன் உரைத்தார் -வனத்திலே

சென்றவர் பண்டிகையைக் கொண்டாட விட்டுவிடு
என்றார் இருதமையர் ஆங்கவர் -என்ன?

சுமைசுமக்கும் வேளையில் வீணாகப் பேச்சேன்
இமைப்பொழுதும் வீணாக்காச் செய்வீர்; -சுமையில்லை

வீணாய்த் திரிகின்றீர் மக்காள், விரைவாக்கும்
வீணர் இடும்வேலை வீண்மக்காள் -காணா

திருவர் மனம்நொந்துச் சென்றப்பின் பார்வோன்
இருக்கின்றார் சும்மா இசுரேல் -இருப்போர்க்

கடுமைசுமை ஆக்கிடுவீர், வீணாக இல்லென்
கொடுமாணைச் செல்வோம் வனமே? -அடுக்கடுக்காய்ச்

செங்கல் அறுப்பதற்கு வைக்கோல் எரிபொருள்
செங்கல் அறுப்பதற்கு வைக்கோலை -இங்கே

கொடாதிரும் மக்கள் சுமையோ எளிதாய்
எடுப்பீர் அதேஎண்கள் கல்லை -கொடுத்தவர்

மன்னா அறுத்திட வைக்கோல் நிதம்வேண்டும்
என்னயிது வன்னே கடினமே -என்றவர்சொல்

கேட்டோன் அரசன்: சுமையெளிது என்பதால்
கேட்டீர் வனம்செல்வோம் யாமென -பாட்டிற்கு

வீணரே மக்களே! வீணரே மக்களே
வீணராய்ப் போனதால் கேட்டீரே -வீணரெம்மை

விட்டிடும் போவோம் வனத்தில் தொழுதிடுவோம்;
எட்டிப்போம் விட்டு அரண்தனை -நட்டார்

அரண்விட்டுச் செல்லும் பொழுதில் இருவர்
அரண்வெளியே கண்டவர்: ஏனோ -முரணாய்க்

கெடுத்தீர் இருவர், வருகையால் வாளால்
அடிபட்டோம் என்றார் வசையாய் -அடியேன்

இதுகுறித்து நம்மிடையே கர்த்தர், விதியை
வதையாக்கி விட்டீரே, செய்வார் -விதியே

வதைப்பொருக்காச் சொன்னார் இனமக்கள் ஏங்கி
வதையோ விடுதலை யோஏன்? -வதையால்

விரைந்தனன் மோசே இறைவன்முன் செல்ல
விரையழைத்தீர் ஏனோ? இனத்தைக் -கரையாண்

விரைவாக்கி வன்னாகச் செய்தனன் தீங்கே
அரைக்கட்டி நின்றேன் அடியேன் -கரைவிட்டு

எம்மினத்தார் போக விடவில்லை பார்வோனும்
எம்மிறையே ஏனோ யிவை
திருப்பயண கலி 16

வாதைகளால் வாதிப்பேன் என்று கர்த்தர் முன்னுரைத்தல்


இறைவனார் மோசேயை நோக்கிப் பகன்றார்
இறைவனால் இந்த அரசன் -கறைமன்னன்

போகும் வழிகாண்பாய், தோள்பலம் கண்டவன்
போக விடுவான் வனத்திற்கு -சாகாப்

பெயரெந்தன் யேகோவா, இப்பெயரால் முன்னாள்
பெயராண்கள் தந்தையர்ப் போனார்; -பெயரறியா

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு எல்லாரும்
மாபெரும் தேவன் அறிந்தனர் -மாபெரும்

எல்லா வினைவல்லார் என்றறிந்தார் முந்தையர்
இல்லாத நாடோடி மூவர்க்கும் -எல்லா

வினைவல்லார் யானே உறுதியாய்ச் சொன்னேன்
இனம்தருவேன் கானான் நிலம்தான் -இனத்தார்

இதோகேட்டேன் கூக்குரல் மைந்தன் இசுரேல்
வதைநீக்க வந்தேன் உலகு -வதைநீக்கி

எல்லா இனத்தாரைக் கொண்டுசெல்வேன் நல்தேசம்
நல்லார் இனத்தைச் சிறந்துநான் -நல்லார்

நினைந்தேன் உடன்படிக்கை முந்தையர்கண் செய்தேன்
வனைந்தேன் திருத்தேசம் கானான் -வினைச்சுமை

நீக்கி எகிப்தியர் முட்டி யடித்திடுவேன்
காக்கும் இறைவன் திருவேநான் -தாக்கியே

மிப்பெரிய தண்டனைகள் மிப்பெரிய வாதைகள்
மிப்பெரிய தோள்வலிமைக் கொண்டேதான் -இப்பெரும்

இக்கட்டைத் தீர்ப்பேன் இசுரேலே என்னினமே
அக்கறை தேவன் இறைவனார் -இன்றுகேள்

இவ்வாறு சொல்கிறார் யேகோவா என்றுசொல்
அவ்வாறே மோசேயும் போய்ச்சொல்ல -அவ்வினமோ

வேலை பளுவினால் நொந்துப்போய்ச் சோர்ந்தவர்
வேலையிலை வீணன் இவன்
திருப்பயண கலி 17

இசுரேல் இனத்தாரே கேட்காத போது அரசன் கேட்பானோ என்று தேவனிடம் மோசே கூறுதல்


போய்ச்சொல் அரசே விடுவீர் இனத்தாரை,
போய்யாம் வனத்திலே கொண்டாட, -சேய்ச்சொல்

இனத்தாரே கேட்கவில்லை என்சொல்லை எங்கே
வினையரசன் கேட்பானோ சொல்தான் -இனத்தான்

இதோகாண் விருத்தசேதம் இல்லாத நாவு
அதனால் இனத்தாரே கேளார் -இதுபோல்

அரசனும் கேளான் அதனால் விடுமே
மரமே மனிதனும் யான்தான் -தரவாணே

மோசே விரைச்செல் அரசனைக் காணவே
மோசே இதுமுதல் தேவனே -வீசரசன்

ஆரோன் இறைவாக்கன் உந்தன் எனப்பகன்றார்
நேரிறை நேராண் நிறுத்தியே -சீராண்

மனக்கடினம் யான்செய்வேன் இன்னா அரசன்
மனக்கடினம் ஆக விடானே -வினைச்செய்வேன்

பற்பலச் செய்கைகள் மண்ணிலே காணாதே
நிற்பேன் நிலையாய் இறையானே -நற்றெந்தன்

தோள்பலத்தால் நீங்க புறப்பட்டுப் போகையில்
தோள்வலிமைக் கண்டு எகிப்தியர் -வேள்கர்த்தர்

என்றறிவார் நல்லார் இசுரேலே என்சேனை,
சொன்னார் இறையின்சொல் சீர்சொல்லே -அன்னவன்

மோசே வயதப்போ எண்பது; மூன்றாண்டு
மோசே விடஆரோன் மூத்தவன் -வீசரசன்

பேசும்போ ஈர்மக்கள் தன்னின் நிலவயது
பேசினர் வாக்கைச் சிறந்து
திருப்பயண கலி 18

மோசே ஆரோன் செய்யும் வியச்செய்கைகளை எகிப்தின் வித்தைக்காரர்கள் செய்தலும் பார்வோனின் மனக்கடினமும்


என்ன அடையாளம் என்றரசன் கேட்டாலே
உன்கோலைக் கீழே இடுவாய்நீ -உன்கோல்

உடனாகும் பாம்பு; இதுகேட்டுச் சென்றார்
இடம்விடும் என்றுரைக்க ஈரார் -இடம்விட

என்ன அடையாளம் என்றரசன் கேட்கவும்
தன்கோலைக் கீழே விடுத்தனன் -மென்கோல்

உடனூரும் பாம்பாக; கண்டோன் அழைத்தான்
இடம்வாரும் வித்தையார் ஈரார் -இடம்வந்த

யன்னேயும் யம்பிரேயும் மன்னனின் வித்தையார்
அன்னார் விடுத்தனர் தன்கோல்கள் -என்னே!

வியப்பு அதுயிரண்டும் பாம்பாக, மன்னன்
வியந்தனன் வித்தையைக் கண்டு -வியந்தாரே

கண்கண்டப் பாம்பிரண்டு கண்காணும் போழ்தேதான்
மண்விட்ட ஆரோனின் கோல்விழுங்க, -மண்கண்டார்

விண்ணார் வியச்செய்கை மண்ணிலே கூடுமோ
மண்கடினம் மன்னன் மனம்
திருப்பயண கலி 19

நைல் நதி இரத்தமாக மாறுதல்


முன்னுரை விண்ணார் பகன்ற நிறையாகி
மன்னன் மனக்கடினம் கொண்டிட -இன்னா

அரசன் வருவானே நீராட ஆறு
வரும்போது கோலை அடிக்க -கரத்தால்

அடித்தநதி நீர்க்குருதி யாகிடும் சொல்வாய்
அடித்தக்கோல் ஆரோனே நீட்டு -அடிநீர்

முழுவதும் கோலாலே நீர்நிலைகள் நோக்கி
முழுநீர் நிலையும் குருதி -வழுவாது

மண்மரம் எவ்விதப் பாண்டமாய் ஆயினும்
மண்மேலே நீரும் குருதியாகி -விண்செய்கை

மன்னன் அறிவதற்காய்ச் செய்வீரே மண்ணிலே
தன்னே உரைத்தார் இறைவனார் -தன்னில

ஆறிலே வாழ்மீன்கள் யாவும் மரித்ததும்
நாறிப்போய் ஆறது போனது -நாறிய

நீர்க்குடிக்க ஏலா எகிப்தியர் நீர்க்கிணற்றை
நீர்கொள்ளத் தோண்டினார் மண்ணிலே -சீர்பேர்

இறையின் வியச்செய்கை போலே எகிப்தின்
கறைவித்தைச் செய்தாரே வித்தை -இறைச்சொல்லைக்

கேளா அரசன் மனக்கடினம் ஆகியே
கோளில் தவிர்த்தான் விட
திருப்பயண கலி 20

தவளைகளால் வாதை


வித்தைகள் கண்டு விடுவேனோ என்னடிமை
வித்தைசெய் யன்னேவும் யம்பிரேவும் -எத்தாதே

வித்தைகள் காண்பித்து, உன்னை அழைதாரில்
எத்துகிறாய் வீணாய் அரசெனை -சித்தம்

இறைவனார் ஆற்றை அடித்தேழு நாட்கள்
கறைமன்னன் கேளான் நடப்பீர் -இறைசொல்

கறைமன்னா என்னினம் விட்டிடு என்றார்
இறைவன் கறையோனே கேள்மின் -கறைவிடு

செல்ல விடுவாய், குலமெந்தன், இல்லையேல்
செல்வழி யெங்கும் தவளைகள் -எல்லா

மனைகளிலும், மஞ்சங் களிலும் இருக்கும்
வினையைப் பிறப்பிக்கும் ஆறு -மனையில்

உணவுசெய்யத் தீமூட்ட உன்மக்கள் போனால்
உணவைச் சமைக்கும் அடுப்பில் -கிணற்றின்

தவளைகள் வீற்றிருக்கும் நாற்றம் எடுக்கும்
தவளையால் உம்வீட்டில் கேள்மின் -அவனங்கே

ஆரோன் கரக்கோலை நீட்ட அரங்கேற்றம்
ஆரோன் கரக்கோலால் ஆற்றினின்று -நேரிறைவன்

சொல்படியே வந்தது செல்வழி வீடுநிலம்
எல்லாம் தவளை நிறைத்ததே -வல்லே;

அடடா! தவளை பிறப்பித்து நாட்டில்
விடுவோம், இருவித்தைக் காரர் -எடுத்தார்

தவளைகள் வித்தையினால் தற்குறிகள், விட்டத்
தவளைகள் நாட்டில் நிலைக்க -அவணி

நிலத்தில் தவளைகள் வாதிக்க மன்னன்
நிலத்தின் தவளைகள் விட்டு -நிலைநீராம்

ஆற்றிலே போகும் வகைவேண்டும் கர்த்தரை,
சேற்றரசன் கேட்டான் இறைதனை -மாற்றார்

தவளைகள் ஆற்றிலே போனால் விடுவேன்
தவளைகள் ஆற்றிலே போகும் -குவிவேளை

யாதென நீர்சொல்லும் என்றனன் மோசேயும்
மீதுவிட்டு நாளையே என்றனன் -வேதவர்

ஒப்பிலார் எம்தேவன் என்பதை நீரறியா
அப்போதே விட்டிடும், நீரறீவீர் -அப்போது

ஒப்பிலார் எம்தேவன் என்றே உரைத்தவன்
ஒப்பிலார் தேவனை வேண்டிடு -ஒப்பில்

செவிமடுத்தார் நேரிறைவன் வேண்டுதலை நேராண்
புவிமீது வந்த தவளை, -புவிவிட்டுச்

சென்றன ஆற்றில், களமேட்டில் நின்றவை
சென்றன யாவும் மரித்ததங்கு -சென்ற

தவளைகள் யாவும் நிலத்தில் மரிக்க,
தவளை நிணன்நாற ஆங்கே -தவளைகள்

செத்ததும் மக்கள் உயிர்த்ததைக் கண்டனன்
எத்தன் அரசன் மனம்
திருப்பயண கலி 21

பேன்களால் வாதித்தலும் வித்தைக்காரர்கள் பேன்களை உருவாக்க முடியாமல் தேவனுடைய விரல் என்று கூறுதலும்


மனமில்லை போக விடவே இனத்தார்
மனக்கடினம் கொண்டான் அரசன் -மனக்கடினம்

கொண்டோன் அரசன்வாழ் தேசம் அடிப்பேன்நான்
உண்டாகும் மண்ணாலே பேன்களால் -உண்டாக்க

ஆரோனை நோக்கி உரைப்பாய் உனதுகோல்
ஆரோனே மண்ணில் புழுதியின்மேல் -சேரடி,

சொல்படி ஆரோன் அடிக்க மிகுபேன்கள்
சொல்படி வந்து நிறைத்தது -சொல்படியே

தேசமெங்கும் பேன்கள் நிறைந்து மிருகங்கள்
பேசும் மனிதர்கள் யாவர்மேல் -வீசைப்பேன்

வந்தேற மண்ணின் புழுதியெல்லாம் பேன்களாய்
அந்நாளில் போனது கண்டவர் -அந்நாளில்

யன்னேவும் யம்பிரேவும் செய்கையைச் செய்யேலா
யன்னேவும் யம்பிரேவும் மற்றோரும் -மன்னா

இதுதேவன் கைவிரல் எம்மால் இயலா
அதுபோலே பேன்கள் இலை
திருப்பயண கலி 22

வண்டுகளால் வாதை


பார்வோன் அரசன் மனக்கடினம் ஆனானே
பார்வோன் வருவான் புனலாறு, -பார்வோனும்

கேட்க வழிச்செல், தொழுதிட என்மக்கள்
கேட்டின் விடுவாய் வனம்செல -நாட்டவன்

போக விடமன தில்லை யெனில்நானும்
வேகமாக வண்டுகள் வந்தேறும் -மேகநிற

வண்டுகளோ வாராதே கோசேன்மேல் இப்படி
வண்டால் நிறையும் எகிப்துநாடு -வண்டுகளால்

இவ்வாறு உம்மக்கள் என்மக்கள் நான்பிரிப்பேன்
இவ்வகை நீயறிவாய் நான்கர்த்தர் -எவ்விதமும்

மன்னன் செவிகொடாப் போக நிறைந்தது
இன்னாக் கருவண்டால் நாடது -அன்னவன்

சொல்படியே வண்டுகள் வந்தேற நாறியது
சொல்படியே கோசேனில் வண்டுகள் -இல்லையே

சொல்கேளா மன்னனோ வாதை விடுத்திட,
சொல்கேளும் நாட்டில் பலியிடும் -அல்ல,

எகிப்தில் உணவு அருவருப்பு இங்கே
எகிப்தில் பலியிட்டால் தேவன் -வகைப்பலி

நாட்டார் அருவருப்பை இட்டாலே போடுவர்
நாட்டாரும் கற்கள் எறிந்திடுவர் -நாட்டாரோ

வண்டுகள் பாரீர் நிறைந்தது நாடெல்லாம்
வண்டுகள் விட்டிட வேண்டுவீர், -கொண்டாடப்

பாலையில் தூரத்தில் போகாதீர் விட்டிடுவேன்
பாலை வழிசெல்ல யான்தானே -காலையில்

வேண்டியதும் வீணாய் மனமாற்றம் கொள்ளாதீர்
வேண்டியப்பின், வஞ்சகமாய், போகவிடா -வீண்செய்யீர்

வேண்டினான் தேவனை நோக்கி இறைவனே
வேண்டுகிறேன் வாதை எடும்நீரே -வேண்டவும்

வேண்டுதல் கேட்டார் இறைவனும் மோசேயின்
வேண்டியோன் வேண்டுதல் வண்டுகள் -காண்போக

வேண்டியப்பின் மன்னனோ போனான் மனமில்லா
வேண்டிய வாதை விட
திருப்பயண கலி 23

மிருகங்கள் கொள்ளைநோயால் அழித்து வாதை


செல்வாய் மகனே அரசன் இடம்போவாய்,
சொல்வாய் இறைவன் உரைக்கின்றார் -சொல்ல

விரைந்தனர் மோசேயும் ஆரோனும் ஆங்குக்
கரம்கர்த்தர் ஆமே விழுமே -சிரம்தாழ்க்

கறையரசே விட்டிடு மக்கள் தொழவே
சிறைவாசம் விட்டிட மாட்டேன் -கறைசொன்னால்

கொள்ளைநோய்ப் பற்றும் சுமைமிருகம் ஆமேமேல்
அள்ளிப்போம் எல்லாம் மரித்திங்கு -தள்ளியே

வேறாய்ப் பிரிப்பார் இசுரேல் எகிப்திடையே
வேறாய் அரசே விதங்காண்பீர் -நாறும்

நிணத்தால் எகிப்து, இசுரேலின் ஆமே
குணமாக மேயும் களம்தான் -நிணத்தாலே

தேவன் எருப்போல் சுமைமாக்கள் ஆக்கிட
மேவிக் குறித்தார் ஒருகாலம் -ஆவியுரு

தேவன் தொடுப்பார் கருநோய், சுமைமிருகம்
சீவிப்போம் மாக்கள் மரித்திங்கு -தேவனின்

சொல்படியே போயிற்று மாக்கள் எகிப்தியர்
சொல்படியே தப்பித்து நின்றதே -சொல்லுருவர்

மக்களின் ஆமே சுமைமிருகம், ஆனாலும்
மக்களை மன்னன் விடாதுயேனோ -தக்கவன்

கேட்டறிந்தான் மக்கள் இசுரேலர் மாக்களோ
வேட்டைநோய்த் தாக்காதே தப்பித்து, -கேட்டும்

அவன்மனம் மேலும் கடினமாக எத்தன்
அவனோ விடாதே இருந்து
திருப்பயண கலி 24

கொப்புளப் புண்களால் மக்கள் மேல் வாதை


சொன்னார் திருக்கர்த்தர் சூளையின் சாம்பலெடு
வன்னாண் வரும்போது வானோக்கி -நின்றே

இறைத்திட, கைப்பிடிச் சாம்பலோ தேசம்
நிறைக்கும் புழுதியால் புண்ணாய் -நிறத்ததால்

மக்களும் மாக்களும் நோயாம் எரிபுண்ணால்
அக்கணம் நீயும் உணர்வாயோ -இக்கட்டால்

எள்ளி அரசவையில் வித்தைசெய் தற்குறிகள்
தள்ளா டினர்வதைப் புண்ணாலே -தள்ளியே

கர்த்தர் மனக்கடினம் செய்தார் அரசனின்
கர்த்தரின் மக்கள் விடானிடம் -கர்த்தரின்

சொல்வந்து சொல்ல இருதமர் மன்னனிடம்
செல்ல, விடியல் பொழுதினில் -செல்ல

விடுமேஏ மன்னா இனத்தை விடாது
அடம்பிடிப்ப தேனோ கறை
திருப்பயண கலி 25

கல்மழையால் வாதை


என்னைத் தொழுவதற்கு என்மக்கள் விட்டிடு
என்சொல்லைக் கேளாயென் என்சொல்லின் -வன்னாய்

மழைபொழியும் கல்லாக, வீட்டிலே சேரா
அழிந்துபோம் எல்லாம் வெளியில் -அழிவாய்ப்

புவித்தலைவா, கொண்டாய் தலைக்கனம், உன்னைப்
புவிமேல் நிலைநிறுத்தி மேலாய் -அவியாக்

கொடுத்தது யாரோ? திருக்கர்த்தர் யானே!
கொடுத்த தெடுப்பேன் வளம்தான் -அடுத்து

புவிமேல் இராதபடி உன்னை அழிப்பேன்
புவியாள் அரசனே கொண்டாய், -புவித்தலைவன்

என்ற தலைக்கனம், சொல்கேட்டு வேலையாள்
இன்றுசேர்ப்பாய்க் கூரையின் கீழ்நீயே -அன்று

வெளிமிருகம் மாந்தர் அழிவர் வெளியில்
வெளியில் விடாமிருகம் மாந்தர் -அளித்தேன்

உயிர்பிச்சை என்றார் இறைவனார், சொன்னான்
துயர்வந் திடுமே அரசே -வியனது

பார்த்திரா வண்ணம் மழைபொழியும் காண்பீர்கள்
பார்தனில் இன்னும் திருமக்கள் -பார்உயர்த்திக்

கண்டீரோ? நீகாண், வெளிமிருகம் மக்களும்
கொண்டு மரிப்பர் மழையாலே -மாண்டிலர்

சொல்கேட்டு யாரெல்லாம் உள்சேர்த்தார் வேலைகள்
சொல்லவாய் இல்லா மிருகங்கள் -எல்லாம்

புவிதனில் தப்பித்து, சொல்கேளா வேலை,
புவிமிருகம் எல்லாம் மடிய -புவியினது

தேவன் எபிரேயர் தன்னின் இறைச்சொல்லை
மேவியே ஏற்றோர் புவியிலே -சாவாமைப்

பெற்றார் மழைக்கல் பொழியும்நாள் போனதே
அற்றே நிலத்தின் வளம்போக -வற்றவே

கல்மழைக் கூட எரிநெருப்பும் வீழ்ந்திட,
கல்மழையால் மக்கள் வளங்களும் -எல்லா

உயிர்களும் வாட, குடிமைநாள் கொண்டு
உயிர்கள் வதையிலைப் போல -உயரினம்

கோசேன்வாழ் மக்கள் இசுரவேல் நாட்டிலே
வீசை மழையில்லை என்றறிந்தோன் -பேசினான்

மோசே இறைவன்முன் செய்தேன் கொடிபாவம்
மோசம்போய் நானே குறையவன் -தேசத்தின்

துன்மார்க்கன் எந்தன் துணிகர வேலையால்
இன்னாத செய்கை இதுமுறை -மன்னன்

இதுபோதும், நீதி இறைவனார் நல்லார்
அதனால் திருவேண்டும் போய்
திருப்பயண கலி 26

பார்வோன் இசுரவேலரைப் போவீர் என்று சொல்லியும் போக விடாது ஏமாற்றுதல்


போவீர் வனத்திற்கு ஏதும் தடையில்லை
போவீர் இறைமுன்னே வேண்டிட, -போவீர்

உரைக்கேட்டோன் சொன்னான், புவிமேலாம் விண்ணார்
உரைகேட்பேன் நிற்கும் மழைதான் -உரைப்படி

போகும் மழைநின்று, பூமி திருவினதே,
போக விடீரே அறிவேன்நான் -வேகிப்

பயிர்போய் மழையால் அழிந்தது, மண்ணில்
பயிர்சில தப்பியது ஆங்கு -உயரவன்

கைநீட்டி விண்ணின்று பெய்க்கல் மழைநிற்பாய்,
கைநீட்டிக் கோலை உயர்த்தினோன் -கைநீட்டி,

தேவனே போட்டீர் அழித்திங்கு, விண்ணவரே
தேவா உயர்ந்திருப்பீர் நீர்தானே -மேவியே

போவீர் வனத்திற்கு ஏதும் தடையில்லை
போவீர் இறைமுன்னே வேண்டிட, -சாவிப்பொய்

சொன்னோன் அரசன் மனமோ கடினமாக,
சொன்னசொல் போனான் மறந்து
திருப்பயண கலி 27

வெட்டுக்கிளி வாதை


என்னைத் தொழுவதற்கு என்மக்கள் விட்டிடு
என்சொல்லால் வெட்டுக் கிளிகளின் -வன்படை

ஆம்வரும் தேசத்தில் எல்லா மரக்கனிகள்
போம்அழிந்து எல்லாம் இலைகளும் -போம்ஆம்;

புவித்தலைவா, ஏனோ விடவொட்டீர் வன்னார்
புவிமேல் நிலையழிவு காணும் -அவர்களை

போகவிடும் மன்னா சிறப்பூழி யர்களோ
ஆகச் செவிகொடுத்தான் மன்னனும் -போக

விடுகின்றேன்; யார்யார் வனம்பொவீர் என்கேள்
எடுப்போம் அனைவரும் சேர்ந்து -நடப்போம்

வனத்தினை நோக்கி சிறியவ ரோடே
இனத்தின் நலமூப்பர் பெண்டிர் -வனம்வருவர்

தேவனைப் பாடிப் பணியச் சிறந்தவர்
மேவி அனைவரும் போவோமே -ஏவி

சிறியோரும் போவீரோ பெண்டிரொடு வன்னே
அறிகிலேன் தீதேதும் வந்தோ -சிறியோரும்

பெண்டிரும் இங்கிருக்க மூப்பர்கள் செல்லுமே
மண்ணிலே ஈதென்றோ கோரிக்கை, -எண்ணிப்

புரிவீர் செயல்தனை சீரே அறியும்
புரிவோம்யாம் கர்த்தருக்காய் ஆங்கே -திருவிழா

தானே அதனால் அனைவரும் போவோமே
ஏனோ தடுக்கின்றீர் கோன்சீரே -மானார்

இனிவாரா தேயும் எனவிரட்ட ஆங்கே
நனிகர்த்தர் சொன்னார்கோல் நீட்டு -நனியாமே

கீழ்க்காற்று; ஆனால் அதுகொண்டு வந்ததே
பாழ்செய்யும் வெட்டுக் கிளிகளை -பாழ்செய்தே

கல்மழை விட்ட சிலகளங்கள் தன்னையே
அல்லாத வெட்டுக் கிளிகளும் -வல்லாரின்

வன்கோல் செயலது கண்டனன் வன்னரசு
வந்திடு வெட்டுக் கிளிக்களை -அந்நாளில்

வந்தவன் வேண்டவே வந்தது மேற்காற்று
வந்ததும் செங்கடலில் வீழ்ந்து
திருப்பயண கலி 28

காரிருளால் வாதை


கைநீட்டு நாட்டின்மேல் வந்திடுமே காரிருளும்
கைநீட்ட வந்ததங்கு நாட்டினுள்ளே -கைநீட்டக்

காரிருளும் வந்துமூட நாட்டினுள்ளே யாவருமே
காரிருளால் கைத்தடவி பார்த்திடவே -காரிருளோ

கோசேனின் நாட்டிலிலை நன்றாக வெள்ளொளியாம்
கோசேனை வே(று)பிரித்து காண்பித்தார் -தேசத்தில்

மாசேனை விட்டிடுமே போகட்டும் என்றிடவே
கோசேனின் மோசேயை இட்டுவாரும் -கோசேனின்

மக்களைநீ கொண்டுபோவாய்; மாக்களோநீ -தக்கபடி
தக்கவர்கள் பார்க்கவிடு என்றனங்கு -தக்கிலானின்

அப்பேச்சு கேட்டவனோ தப்பிதுவே இப்பேச்சு
எப்போது போனாலும் பின்வைத்து -அப்போதும்

போகமாட்டோம் எம்குளம்பும் பின்னில்லா போவோமே
ஆகவேநீர் விட்டிடுமே எங்களைதான் -வேகமாக

மோசேயே வந்திடாதே என்கண்முன் நீயினிமேல்
வீசிநீயும் போவாயே காண்நிலத்து -மோசேயோ

மன்னவனே நீர்சொல்லும் சொல்சரியே; என்னையினி
மன்னவன்நீர் காணமாட்டீர் தான்
திருப்பயண கலி 29

பசுகா பலியின் முறையை கர்த்தர் சொல்லுதல்


புறப்படச் செய்திடும் மாதம் முதலே
புறப்படும் யாவர் செவிக்கேள் -புறம்சென்று

வீட்டிற்கு ஓராடாய்த் தேர்ந்திடுவீர்; வீட்டார்கள்
வீட்டுள் புசித்திடுவீர் ஆடுதனை -வீட்டுள்ளே

வீட்டில் வசிப்போர்க் குறைவென் அயல்சேர்ந்தே
வீட்டுள் புசித்திடுவீர் ஆட்டுநிணம் -நாட்டுள்ளே

நான்போகும் போது அறைவீட்டுள் சேர்ந்திருப்பீர்
வான்சொல் படிகேட்பீர் அன்றுதான் -வான்சொல்லே

ஆடுவகை, செம்மறியோ வெள்ளாடோ தேர்ந்திடுவீர்
ஆடுவய(து) ஒன்றே; பழுதற்ற -ஆடாகத்

தேர்ந்திடுவீர், நாட்டின் இனத்தாரே எல்லாரும்
தேர்ந்திடுவீர், சீரான ஆடுதனைத் -தேர்ந்தோர்

நிணம்பச்சை உண்ணாதீர்; நீரால் அவியீர்;
உணவாக்கி உண்பீரே ஆடு -நிணத்தைச்

சமைக்கும் வழிதனைக் கேட்பீர் இசுரேல்,
சமைப்பீர் நெருப்பிலே சுட்டு -சமைத்தபின்

துண்டாக்கா ஆட்டின் நிணமாய்ப் புசித்திடுவீர்
உண்டாகும் விண்ணெட்டும் ஓலமே -விண்ணார்

கடந்திடுவார் மண்மேலே அன்று, சிலைமேல்
விடுத்திடுவார் நீதி இறைவன் -அடுத்து

அரைக்கச்சை கட்டியே, காலணி யோடே
விரைந்துண்பீர், கோல்பிடித்து நின்று -விரைவாக

ஆட்டின் உதிரம் எடுத்துத் தெளிப்பீரே
வீட்டின் நிலைக்கால்கள் மேல்சீராய் -நாட்டில்

நடக்கும் பதிநான்காம் நாளில் கடப்பேன்
நடந்தே மரணத்தின் தூது -விடுத்தே

விதமே குருதியைப் பூசிய வாயில்
இதமாய்க் கடப்பேன் நினைந்து -அதுவே

புளிப்பில்லா அப்பம் நிணத்தோடு உண்பீர்;
புளிப்பான மாவை அகற்று; -புளியப்பம்

உண்போன் அகற்றப் படுவான் இனத்தினின்று
உண்பீர் வகையேழு நாட்களில் -உண்ணும்

நிணமப்பம் சேர்ந்து, கசப்பான கீரை
நிணமப்பத் தோடு புசிப்பீர், -திணையினத்தார்

யாவரும் செய்வீர் நினைவாக, ஆண்டுதோறும்
மேவிப் புரிவீர் நினைவாக -மேவி

முதல்நாளும் ஏழா வதுநாளும் கூட்டாய்
விதம்சேர்வீர் மக்களே ஒய்ந்து -இதுபோலே

ஆண்டுதோறும் செய்வீர் நினைவாய் பசுகாவை
வேண்டுவீர், சீராகச் சேர்ந்துசீர் -வேண்டும்

முதல்நாளும் ஏழா வதுநாளும் ஓய்ந்து
விதம்செய்வீர், பண்டிகை நாட்டுள் -அதம்செய்

இறைவன் விடுதலையைச் செய்த விதத்தை
நிறைச்செய்வீர் நாட்டுள் நினைந்து
திருப்பயண கலி 30

பசுகா இசுரேலர் கடைப்பிடிக்க, அன்றிரவு சங்காரத் தூதன் எகிப்தின் மிருகங்களின் தலையீற்று மற்றும் பார்வோன் முதல் வேலையாட்களின் தலைச்சன் பிள்ளைகளை அழித்தல்


இதுவகைக் கேட்டதும் மோசே இசுரேல்
அதுவகைச் செய்ய உரைத்தான் -வதைக்க

வருவார் இறைவன் இறங்கி, வரும்போ
வருகைக்குத் தப்பும் இனமே -அருகிலே

ஈசோப்புக் கீரைக் கொழுந்தை எடுத்திட்டு
ஈசோப்பைப் தோய்க்குருதி ஆட்டினது -ஈசோப்பால்

வீட்டில் நிலைக்கால்மேல், வாயில்மேல் பூசிடு
நாட்டிலே அன்றே நினைந்துநீர் -நாட்டுள்

இரவினில் யாரும் வெளிசெல்லீர் மக்காள்
இரவினில் கர்த்தர் வதைக்க -வருவார்

அதனால் அறைக்குள் தரித்திருப்பீர், காலை
விதம்விடியும் நாளை வரைதான் -அதம்செய்

வதைத்தூதன் காண்பார் குருதி; கடப்பார்;
இதைக்கேளும் என்னினமே கேட்டு -இதன்படியே

செய்வீர் நிலஞ்சேர்ந்து, மக்கள் வழியோர்தாம்
செய்பொருள் கேட்டால் உரைத்திடும் -மெய்யே

உரைத்திடுவீர், கர்த்தர் பசுகா பலியே;
கரத்தினால் ஓங்கி வதைத்தார் -உரைத்தபடி

எம்மினம்வாழ் வீடைக் கடந்தவர் சென்றாரே
எம்மிறைவன், நாட்டார் தொழுதிடுவோம் -அம்மானின்

சொல்கேட்டுச் சென்றார் இசுரேலர் செய்வித்தார்
சொல்படி எல்லா மனையிலும் -சொல்படியே

தேவன் இறங்கி அழித்தார் தலையீற்று,
சீவினார் வாளை எடுத்தங்கு -மேவும்

அரச அரண்மனை கொண்டு கடையோன்
வரையில் தலையீற்று சாக, -கரையில்

இழவு விழாவீடொன்(று) இல்லையே நாட்டில்
அழுதார் அனைவர் விழுந்து -விழுந்தவம்

மக்களோடு மாக்கள் தலையீற்றும் வாரிப்போய்
மக்களின் கூக்குரல் தாங்காதே -அக்கணமே

விட்டுப்போம் நாட்டை விரைவாக என்றவன்
விட்டான் விரைவாய் அரசு
திருப்பயண கலி 31

செங்கடல் படலம்


இசுரேலர் யாவரும் விரைவாக நாட்டை விட்டு எகிப்தியர் வெளியேற்றுதல்


பிசைந்தமா வீட்டில் புளிக்கும்முன் போவீர்
இசைவே தொழுதிட மக்கள் -அசையிடும்

மாக்கள் தகைத்துப் புறப்படும் நாடுவிட்டு
ஆக்கினர் நாட்டார் விரைந்தின்று -தாக்குவோர்

இவ்வினத்தால் நாங்கள் மடிந்திங்கு சாகிறோம்
இவ்வினத்தைப் போகவிடு நாட்டுவிட்டு -அவ்வாறே

மக்கள் புறப்பட்டார் நாடுவிட்டு அன்றேதான்
மக்கள் திருக்கொள்ளை சேர்த்தனர் -தக்கத்

திருப்பயணம் அன்றிரவு மக்கள் தொடங்க,
திருநிறைவாய்க் கொள்ளை எடுத்துத் -திருசேர்த்தார்

மக்கள், அடிமையின் கூலியாக நேர்கர்த்தர்
மக்களை வாழ்த்தினார் அன்றுதான் -மக்களவர்

நானூறும் ஐம்பதும் ஆண்டிருந்தார் நாடெகிப்து
போனாரே கானான் திருப்பயணம் -போனார்

திருக்கர்த்தர் சேனையாய் மக்கள், விடுத்தார்
இரவில் பயணம் விரைந்தார் -அருமைத்

திருக்கர்த்தர் சொன்னார் இருவர் செவிக்கேள்
இரவிது ஆசரிப்பீர் நன்றாய்; -திருவோடு

வந்த இரவை மறவாதுச் செய்திடுவீர்
அந்நாட்டுள் மக்கள் நினைந்துநீர் -அந்நாள்

பசுகா புரிவீர் வகையாய் முதலில்
பசுகா புசிப்பீர் இனத்தார் -பசுகா

புசிக்கக் கொடாதீர் அயலான்; அடிமை
இசைந்து விருந்தாய்க் கொடாதீர் -திசையிலே

அந்நியர் கூலியாள் உண்ணக் கொடாதீரே
அந்நாட்டில் வீட்டுள் பலிபுசிப்பீர் -அந்நாளில்

ஆட்டின் நிணத்தை வெளியெடுத்துச் செல்லாதீர்
நாட்டில் புரிவீர் நினைந்துநீர் -நீட்டம்

அணியணியாச் சென்றார் எகிப்தை விடுத்தே
அணியணியாய் கர்த்தரின் சேனை -அணிசேர்

மணிமக்கள் கானான் இடம்நோக்கிச் செல்ல
அணிந்தாரே கொள்ளை அணியை -பணிந்தான்

தலையீற் றடித்து விடுதலை பெற்றீர்
தலையீற்று ஆண்கள் திருவின் -தலையீற்றின்

ஈடாக வேறு சிறுமிருகம் தந்திட்டு
ஈடாய் தலைக்கொள்வீர் மீட்டுநீர் -மீட்ட

தலைமுறை மக்கள் உனைக்கேட்டால் சொல்வாய்
தலைமுறை நாட்டில் அடிமை -தலையீற்றை

வாதித்து கர்த்தர் முடிவுபெறச் செய்தாரே
வாதை நினைவாய் புரிந்திடும் -வேதர்

பலத்த கரத்தினால் உங்களை கர்த்தர்
தலைச்சன் வதைத்து வரச்செய் -அலையென

பால்தேன் புறம்போடும் நாடதாம் கானானென்
சால்தேசம்; விட்டீர் எகிப்து
திருப்பயண கலி 32

கைகளில் கண்களின் நடுவே அடையாளமாக நினைவுகூற கட்டளை


கையிலே ஓரடை யாளமாய் வைத்திடு
சேயோன் தலையீற்றும் மண்ணிலே -மேயும்

வெளிமாக்கள் யாவும் தலைச்சன் இழந்த
களிநாளைக் கூறும் நினைவு -களித்தேநீர்

கண்களிடை ஓரடை யாளமாய் வைத்திடு
கண்காண் தலையீற்றுப் பிள்ளைகள் -மண்ணின்

வெளிமாக்கள் யாவும் தலைச்சன் இழந்த
களிநாளைக் கூறும் நினைவு -களித்துநீர்;

பார்வோன் விடுதலை செய்தப்பின் பார்கர்த்தர்
பார்மக்கள் வந்தார் வெளியிலே -நேர்மக்கள்

வந்ததும் போரென்றால் போவர் மனமடிவு
இந்நாள் வழிசெங் கடல்தன்னே -அந்நாள்

கறையவன் கொண்டான் வரையறி யாது
கறையவன் வந்தனன் பின்
திருப்பயண கலி 33

யோசேப்பின் எலும்புகளை மோசே எடுத்து செல்லுதல், மக்கள் பார்வோன் தூரத்துவதைக் கண்டு புலம்புதல்


அணியணியாய் சென்றார் திருமக்கள் விட்டு
அணிகளின் நேராண் தலைவன் -குணவாணாம்

மோசே எலும்புகள் கையெடுத்துச் சென்றானே
யோசேப்பின் ஆணைப் படிதானே -வீசர்

இரவிலே கண்காணாப் போகுமென கர்த்தர்
இருள்நீக்கு வீசொளியாய்த் தீத்தூண் -எரிஞாக்

கருகா முகிலும் வெளிர்க்காலைத் தூணாய்
வரும்வழி காட்டிய தாங்கு -அருமை

இறைவனார் சொன்னார் இறங்குவீர் பாளை
சிறைவைத்த மன்னன் மனதை -குறைவாக்கி

மக்கள் தவிக்கின்றார், போவேன் வனத்திலே
மக்கள் அழைவருவேன் நாடென -வக்கில்

மனக்கடினம் ஆனதால் மன்னன் வருவான்
தனக்குவமை இல்லென் மனதில் -வினைச்சிந்தை

இங்ஙனம் மேன்மை பெருவேன் அரசனை
செங்கடலில் வீழ்த்தி மடிந்திட -ஆங்கோ

எகிப்தின் அரசனும் ஊழியரும் கண்டார்
எகிப்திலே வேலை புரிய -வகையாள்

இலையென்றுக் கண்டு மனக்கடினம் ஆனார்
வலிவிரைவாய் போவோம் வனத்தில் -அலையாய்

விரைவந்தார் வீரர் விழலாக ஆங்கே
விரைவந்த வீரர் இசுரேல் -கரைதன்னில்

கண்டு திருவே எதற்காக செய்தீராம்
கண்காண் கிறோமே இறப்புதனை -மண்ணால்

சவக்குழி நாட்டிலே இல்லென்றோ வந்தோம்
சவக்குழியாய் இவ்வனம் மாறும் -இவைதானோ

மீட்பு விடைதாரும் மோசே, இதுவிடவும்
நாட்டில் அடிமைநிலை மேல்
திருப்பயண கலி 34

செங்கடல் இரண்டாகி இசுரேலிய மக்கள் வெட்டாந்தரைமேல் நடந்து கடத்தலும், பார்வோனின் சேனையை செங்கடல் மூழ்கடித்தலும்


காணீர் இசுரேலே கர்த்தரின் மீட்புதனை
வீணன் தொடர்ந்தான் இசுரேலை -வீணன்

கரந்தப்பி மக்கள் கரைச்சேர்ப்பார் விண்ணார்
விரைவினை மீட்பு வருமே -கரையிலே

மக்கள் குரல்கேட்டு கர்த்தர் பகன்றாரே
மக்கள் குரலிடுவ தேனோயேன் -மக்கள்

குரலிட்டார் என்செய்வேன் தேவா? கரக்கோல்
தரைமேல் பிளப்பாய் கடல்நீர் -கரையில்

கரக்கோலை நீட்டிப் பிளப்பாய் கடலை
தரைமேல் நடப்பதுபோல் போவர் -கரைக்கோன்

தொடர்வான் இசுரேல், தொடர்ந்தோனை மூடும்
கடையோன் கடலும் விழுந்து -மடையன்

மனக்கடினம் ஆனதால் மன்னனின் சேனை
இனத்தோடே ஆழியுள் போகும் -இனத்தார்

அழிவதால் பெற்றிடுவேன் மேன்மை திருச்சொல்
அழியாதே என்றென்றும் காண்சீர் -வழியில்

இசுரேல் திருமக்கள் நோக்கினான் மோசே
இசுரேலே இன்றுவரும் மீட்பு -திசையெங்கும்

பேசுவர் மீட்பை வழிவழியாய், தேசத்தின்
வீசுவீரர் போவார் அமிழ்ந்திங்கு -தேசங்காண்

சொல்படி மோசே கரக்கோலை நீட்டிட
சொல்படி செங்கடல் ஈராக -வல்கரம்

கொண்டு திருக்கர்த்தர் தந்தாரே நல்மீட்பு
எண்ணுவீர் எத்தகைய மீட்பென -வண்ணம்

எகிப்தினது சேனை கலவாது போகும்
வகையில் நடந்துவந்த தூதன் -எகிப்தினர்

மற்றும் இசுரேல் நடுவே வரவங்கு
சுற்றம் முகிற்றூண் நடுவேதான் -அற்றார்

எகிப்தின் விரைசேனை மேலே முகிலால்
வகையானக் காரிருள் சூழ -மிகையோர்

இசுரேல் இனத்தார்மேல் தீத்தூண் ஒளியாய்த்
திசைக்காட்ட ஆங்கே மிளிர்ந்து -அசைந்தே

இறைத்தூதன் செய்தார் முகிற்றூணால் சேரா
இறையச்சம் இல்லாதோன் சேனை -கறையாணி

இல்லாமல் ஓடுமோ தேரும்? எடுத்தாரே
வல்லார் உருளை விழவங்கே -நல்லவன்

மோசே கடல்மேல் கரம்நீட்ட கீழ்காற்று
வீச, கடலிரண் டாய்ப்பிளக்க -கோசேன்

விடுத்தவர் வெட்டாந் தரைமேல் நடக்க
அடைந்தனர் அக்கரை யில்சீர் -நடந்தார்

இடவலம் நீரது தூணாக நிற்க;
விடுவிடு என்றே நடந்தார் -கடைமனிதன்

வந்தடைய விட்ட முகிற்றூண் எகிப்தியரும்
வெந்து வயிறும் எரிந்திட -இந்தபடை

போவீர் கடல்நடுவே வெட்டாந் தரையது
போவீர் தொடர்ந்துப்பின் என்றேதான் -கோவேள்

உரைக்க, வழிசென்றார் வீரர் கடலில்
விரைநடக்க, நீரும் அமிழ்ந்தார் -திருவார்

பரிதேர் முழுதும் கடலில் அமிழ்த்த,
சரியே தொடர்ந்தோர்மேல் தீர்ப்பு -பரிதேர்

கடலடியில் வீழ்த்த, ஒருவனும் இல்லை
இடந்தப்ப, என்னே இறைவன் -அடுத்தார்

விதங்கண்ட மக்கள் இறைவன்பால் அஞ்சி
விதம்செய்த மோசே இடத்தில் -விதம்வைத்தார்

நம்பிக்கை, தன்னினத்தார் கொண்டு கரைவிட்டு
நம்பி நடந்தான் வனம்
திருப்பயண கலி 35

இசுரேல் மக்கள் பாடி கர்த்தரை மகிமை செய்தல்


கரைசேர்ந்த மக்களும் மோசேயும் பாடி
கரைசேர்த்த கர்த்தர் புகழ்ந்து -கரைசேர்த்தீர்

கர்த்தாவே உம்மையே பாடுவோம்; தேவனாம்
கர்த்தரே வென்றார் சிறந்திங்கு -கர்த்தர்

பரியும் பரிமேல் சிறந்தவர் வீரர்
பரிசேர்த்து வீழ்த்தினார் ஆழி -தெரியா

இறையே பெலனும் இசையானார் நேரே
இறைமீட்பர் தேவன் அவரே -இறைவன்

அவர்வாழ ஓரில்லம் செய்வேன் அறிவேன்
அவரே தகப்பனின் தேவன் -அவரை

உயர்த்துவேன்; கர்த்தரே யுத்தத்தில் வல்லார்
உயர்ந்தவர் கர்த்தர் பெயர்தான் -அயலான்

மிடிபார்வோன் சேனையை ஆழியில் வீழ்த்தி
அடியாரைக் காத்தீர் இறைவா -அடிபோனார்

கல்லைப்போல் செங்கடலுள் வீழ்ந்தனர் மாவீரர்
அல்லரே மேன்மை இலரவர் -நல்ல

பலத்தால் வலக்கை சிறந்தே பகைஞர்
இலையென் நொறுக்கி இறைமுன் -அலையால்

கொலையுண்டார் வீம்பாய் எதிர்த்தோர்; நெருப்பே
தலையே அனுப்பினீர் மேல்சீர் -தலைவரே

தாளடியைத் தீக்கருக்கும் போலே சினமும்மின்
கோளாளும் மன்னன் படைகளை -மீளாத

ஆழியுள் போட்டதே; உம்மக்கள் மீட்டிட
ஆழியோ போன(து) உறைந்திங்கு -ஆழியது

நாசியின் காற்றால் அலையாழி நின்றது
வீசாக் குவிந்தது செங்கடல் -பேசினான்

பார்வோன் தொடர்ந்து பிடிப்பேன் எனச்சொல்லி
பார்வீரர் போவீர் கடல்தன்னில் -பார்மக்கள்

என்விருப்பம் மக்களால் ஆகும் மனம்போலே
என்வாளால் மக்களை வீழ்த்துவேன் -என்றானே

பாராளும் மன்னன் பகைஞன்; கடல்நடுவே
சேரந்த வீரரும் வீழ்ந்தனர் -பாரிலே

போயினர் தண்ணீரில் ஈயம்போல் வீழ்ந்தவர்
தூயரே ஒப்பிலா தேவனே -தூயரே

மேன்மை உடையவரே மேன்மையில் அஞ்சிட
மேன்செயல் செய்பவர் நீர்தானே -ஏன்சீர்

வியச்செயல் செய்திட ஒப்பானோர் உண்டோ?
உயர்த்தினீர் உம்மின் வலக்கை -உயர்வீரர்

ஆழியில் போயினர் வீழ்ந்து, புவியுள்ளே
வாழாதே போனார் மடிந்தின்று -வாழவே

நீர்மீட்ட மக்கள் இரக்கத்தால் கொண்டுவந்தீர்
சேர்வித்தீர் உம்மில்லம் தூயவரே -நேர்வழியாய்

மக்களை உம்பலத்தால் கொண்டுவந்தீர் கர்த்தாவே
மக்கள் பிறர்தத் தளிக்கச்செய் -தக்கில்

இதைக்கேள் பெலித்தர் திகிலால் மடிவர்
இதைக்கேள் எதோமின் அரசர் -விதங்கலங்க

மோவாபின் மேன்வீரர் போவார் நடுநடுங்கி
போவரஞ்சி கானா னியர்தாமே -போவரே

அச்சம் திகிலால் திருமக்கள் போகுவரை
அச்சுறு மக்கள் அசையாதே -இச்சகம்

பேசாதே கல்போல் இருப்பர் கடந்துபோம்
ஏசார் புயமேன்மை யால்தானே -பேசிடும்

கர்த்தராம் தேவரீர் வாசம் புரிதற்கு
கர்த்தர் நியந்திடம் நாட்டுவீர் -கர்த்தரின்

காணிமலை தன்னிலும் ஆண்டவராம் தேவனின்
காணுங்கை செய்தூய் இடம்தனில் -காணீர்

இறைவனார் ஆள்கிறார் என்றென் றுமவர்
இறையே பரிதேர் பரிமேல் -சிறப்படை

எல்லாம் விழத்தள்ளி விட்டார்; திருமக்கள்
எல்லாம் தரைமேல் நடந்திட -நல்லாள்

துதிப்பாட்டை கேட்ட மிரியாம் எனும்பெண்
துதித்திட்டாள் தம்புருவைக் கொண்டு -துதித்தனர்

பெண்டிர் இசையால் நடனத்தால் பின்செல்ல
பெண்ணவள் சொன்னாள் உரைதனை -மண்ணில்

இறைவனார் கர்த்தரைப் பாடுங்கள் வெற்றி
இறைவன் சிறந்தார்; பரியை -சிறுவீரர்

ஆழியில் போட்டாரே தள்ளி; எனப்பாட்டு
ஆழிக் கரைமேல் உரைத்து
திருப்பயண கலி 36

கசந்த மாராவின் நீர் மதுரமாகுதல்


செங்கடல் விட்டு திருப்பயணம் சென்றனர்
செங்கடல் கிட்டே வனமாம்சூர் -அங்கவர்

மூன்றுநாள் நீரின்றி தாகமாய் வந்தடைந்தூர்
ஏன்தானோ நீரும் கசந்தது -ஏன்சீர்

கசப்பான நீராலே பேரிட்டார் மாரா
கசப்பான நீரை அருந்த -இசைவில்லை

என்றே முறுமுறுத்தார் மோசே எதிராக
என்செய்வேன் சொல்லும் இறைவனே -மன்னன்

ஒருமரம் காண்பித்தார் நல்லிறைவன் ஆங்கே
தருவினை வெட்டி வரும்நீர் -தருப்போட

போனதே ஆங்கே கசந்திட்ட தண்ணீரும்
ஆனதே நல்ல இனிப்பாக -தேனாய்

இனிப்பான நீராக்கி இன்னிறைவன் இட்டார்
இனிநீங்கள் என்சத்தம் கேட்டு -இனிதாக

பார்வைக்கு நன்றாகச் செய்வீர் அவர்தமது
நேர்மக்கள் சோதித்தார் நேர்சீரார் -நீர்தான்

நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நேரே
வியக்கொடுமை ஏதும் வராதே -அயர்வாக்கும்

நோயேதும் வாராதே கண்டீர் எகிப்திலே
நோயை வருவித்தேன் நான்கண்டீர் -வேயார்

இறைவன் உரைத்தார் பரிகாரி நானே
இறைமக்கள் போனார் வனத்தில் -சிறப்பாக

பன்னிரு நீரூற்று கொண்டவூர் ஏலீமில்
அன்னாரும் சேர்ந்தார் நடந்துசீர் -அன்றவர்

பன்னிரு ஊற்று எழுபது பேரீச்ச
நன்மரம் கொண்டது ஏலீமூர் -நன்னார்

நடந்துவந்து சேர்ந்தார்த் திருவூரில், நின்றார்
நடந்தக் களைப்பால் உறங்கு
திருப்பயண கலி 37

உணவு இறைச்சியின்றி மக்கள் முறுமுறுத்தலும், காடை மன்னா பொழிதலும்


இசுரேல் இனத்தார் அனைவரும் ஏலீம்
திசைவிட்டுச் சென்றார் வனமே -திசைதன்னில்

சீனாய் எலீமின் நடுவே நிலைநின்று
ஏனோ முறுத்தார் முகம்தனை -ஈனர்

முறுமுறுத்தார் மோசேக்கும் ஆரோன் எதிரே
கறுமை எகிப்தில் வயிறு -நிறைய

புசித்தோம் இறைச்சி, இறைவனின் கையால்
திசையெகிப்தில் செத்தாலே மேல்தான் -அசைவில்

வறுபட் டினியாய் இருக்கவே நீவிர்
சிறியோராம் எம்மை அழைத்து -நறுசுவை

விண்ணின்று வந்திடும் விண்ணப்பம் வீணரே
விண்ணார் இறைவன் உரைத்தனர் -விண்முன்

முறுமுறுத்துப் பேசீர்; சிறியர் இருவர்
முறுமுறுப்பு தேவன் எதிராய் -முறுமுறுப்பைக்

கேட்டார் இறைவனார் காண்பீர் இறைமகிமை
நாட்டாரே கீழ்படி யும்சீராய் -நட்டாரே

வந்திடும் விண்ணின்று ஆறுநாள் விண்ணப்பம்
வந்திடாது ஏழா வதுநாளில் -வந்திடும்

ஆறா வதுநாளில் ஈரளவு, ஏழாம்நாள்
ஆறுவீர் ஓய்ந்து விடுப்பது -மாறாதே

சோதிப்பேன் கைக்கொள் வரோமக்கள் என்நியமம்
சோதனை ஏழாம்நாள் ஓய்ந்திருக்க -வேதனை

பின்பற்றி இம்மக்கள் செய்வரோ என்றவர்
நன்செய்தார் நல்லார் இறைவனார் -நன்றாகக்

காலையில் காண்பீர் இறைவனின் நல்மகிமை
காலை விடியலில் வந்திடும் -வேலை

ஒருசெயலும் செய்யாதே வந்திடும் ஊனூண்
திருக்கர்த்தர் மேன்மையைக் காண்பீர் -அருமையாய்

மாலையில் ஊன்கறி காலையில் அப்பமென
வேலைசெய்யா உண்பீர் இனத்தாரே -ஏலாச்

செயலிலை தேவனின் என்ப தறிவீர்
இயல்பினார் கர்த்தர் இறைவன் -வயலிலே

காடை நிணம்வந்து மூடியது பாளையில்
காடை நிணம்பின்னே காலையில் -வீடில்லா

மக்கள் இருப்பிடம் முன்னே பனிபோலே
அக்காரம் விண்ணின்று வந்தது -தக்கவரோ

என்னயிது மல்லி அளவில் இனிக்கிறதே
தன்மக்கள் உண்ண உணவது -மின்னல்

விழும்வானம் கண்டிருக் கின்றோம் விடியல்
விழுந்ததே மல்லி இனிப்பு -விழுந்தது

தேனிட்ட பண்டம்போல் நன்சுவைக் கொத்துமல்லி
வானின்று வீழ்ந்திருக்க மோசேயும் -வானின்று

வீழ்ந்ததே அப்பம் இதுவே, இனமக்காள்
சூழ்நின்று சேர்ப்பீர் உணவைநீர் -வாழ்மக்கள்

இல்லத்தார் பார்ப்பீர் இலக்கம் அதுவகை
நல்லாரே சேர்ப்பீர் படியிலே -கொல்லை

புறத்தில் விடியலில் வீழும் பனியில்
அறனார் கொடுத்த உணவு -மறந்துமே

வைக்காதீர் மீந்த உணவை இரவிலே
வைக்காதீர் கேட்டும் இனத்தவர் -வைக்க,

இரவிலே மீந்தமல்லி காலையில் கண்டால்
கருப்பூச்சி அப்பம் கெடுத்து -கருவியவன்

மோசே சினத்தாலே வைதனன் மக்களை
பேசும் எதுவரை கைக்கொள்ளீர் -ஏசினான்

மக்களின் மீறுதலை, காலையில் வந்தது
அக்கார மல்லி உணவுதான் -தக்கார்

சிலரெடுத்தார் மல்லி நிறைய; சிலரோ
சிலவாய் எடுத்திட, பின்னே -கலந்தே

அளந்திட, எல்லார் படியளவும் ஒன்றே
அளந்தவர் போனார் வியந்து -அளந்து

விடியலில் சேர்த்தார் இனத்தாரும் மல்லி
விடியலில் சேர்க்காத மல்லி -விடிந்ததும்

போனதே நீராய் விழுந்தங்கு அக்காரம்
ஆனதே ஆவியாய் ஆங்குகாண -மேனவர்

ஓமர் படியளவாய்ச் சேர்த்தார் இனத்தவர்;
ஓமரது எப்பாவில் பத்திலோர் -ஓமர்

ஒருத்தருக்கு சேர்த்திட ஆறாம்நாள் சேர்த்தார்
ஒருத்தருக்கு ஓமர் இரண்டு -அருமையாய்

ஆறாம்நாள் சேருங்கள் ஈர்ஓமர் மக்களே
ஆறாம்நாள் ஈர்ஓமர் கொண்டுநீர் -வேறாமே

ஏழாம்நாள் உண்டுகளிப் பீரே, இராச்சென்றும்
ஏழாம்நாள் மல்லி நிலைத்திருக்கும் -வேழாரே

ஆறாம்நாள் தானே சமைப்பீர் இருமடங்காய்
ஆறாம்நாள் வந்த சுவைமல்லி -ஆறாம்நாள்

செய்த உணவிலே மீதியை வைத்திடுவீர்
மெய்யாரின் ஓய்வுநாள் ஊண்தனை -அய்யோ

இருந்தும் சிலரோ வெளிசென்றார் ஏழில்
வருந்தி இறைவன் உரைத்தார் -இருக்கின்றார்

மக்கள் இறைவனின் கட்டளை கைக்கொள்ளா
அக்காரம் தேடினார் ஏழாம்நாள் -தக்கிலார்

மக்களே ஏழாம் திருநாளோ ஓய்வுநாளே
மிக்கவர் தேவன் உரைத்தவர் -அக்கறையாய்

சொன்னார் மனதில்லா மக்களிடம் கர்த்தரும்
என்னே இறைவன் அருளிது -அன்றியும்

மக்கள் இனத்தாரும் ஓய்ந்திருந்தார் ஏழாம்நாள்
அக்காரை மன்னா எனப்பெயர் -மக்களிட்டார்

விண்ணின்று நாற்பது ஆண்டுகள் வந்தது
மண்கானான் சேரும் வரையிலே -அண்ணனாம்

மோசே தமனவன் ஆரோனை நோக்கிச்சொல்
தேசம் அடைந்தவுடன் நின்றிடும் -பேசி

உரைத்திட மன்னாவை சேர்கலயம் வைப்பாய்
உரைக்கீழ் படிந்தான் தமன்
திருப்பயண கலி 38

ரெவிதீமில் நீரின்றி மக்கள் முறுமுறுப்பும், கன்மலையினின்று நீர் வருதலும்


கர்த்தர் உரைத்த படியே இனத்தவர்
கர்த்தருக்குக் கீழ்படிந்து சீன்விட்டு -கர்த்தர்

உரைத்த படியே ரெவிதீமில் வந்தார்
விரைந்தங்கு மக்களும் சேர்ந்து -தரையில்

ரெவிதீமில் நீரின்றி தாகத்தால் வாட
ரெவிதீமில் மக்கள் எதிராய் -ரெவிதீமில்

இல்லைநீர் தாகம் உளைநீங்க நீர்தாரும்
அல்லோனே என்றார் இனமவர் -நல்லவரே

ஏன்தானோ வாதாடு கின்றீர்நீர் மக்களே
ஏன்தானோ கர்த்தரை சோதிக்க -ஏன்நீர்

முறுமுறுப்பு செய்கின்றீர் என்றுரைத்தான் மோசே
முறுமுறுத்த மக்க ளிடம்தான் -முறுத்து

சிலர்சேர்ந்தார் கூட்டத்தில் கல்லெறிய ஆங்கே
கலயம்நீர் இல்லா நிலையால் -சிலமக்கள்

செய்கை அறிந்தவனோ கர்த்தரை நோக்க்கிச்சொல்
செய்கின்றார் கல்லெறிய ஏன்தானோ -மெய்யாரே

என்செய்வேன் இம்மக்கள் வன்செய்கை என்றவனை
நன்கர்த்தர் சொன்னார், இனமூப்பர் -உன்னோடே

கூட்டிச்செல், ஓரேபில் கன்மலையை கோலடிக்க
வாட்டியநீர் வந்திடும் ஆங்குதான் -நீட்டி

இனத்தார் முறுமுறுத்த அவ்விடப்பேர் மாசா
இனத்தார் இறைசோ தனையால் -வனத்தில்

பெயரிரண்டாய் மேரிபா என்றிட்டான் மோசே
பெயர்கள் விதமிரண்டு கேள்
திருப்பயண கலி 39

அமலேக்கியர் இசுரேல் மேல் போரிடுதல்


அமலேக்கார் போரிட வந்தார் ரெவிதீம்
அமலேக்கார் போர்புரிய மோசே -தமனேநீ

பேர்பிரித்து போர்புரியச் சென்றிடுவாய் யோசுவா
போர்பார்ப்பேன் குன்றிது மேல்நானே -போர்க்கண்டு

கோல்பிடித்து கைநீட்டி செய்ய மலைமேலே
கோல்பிடிக்கும் மோசே உடனிருவர் -ஆல்ஆரோன்

ஊர்பெயர் கொண்டவன் சென்றனர் குன்றின்மேல்
போர்க்கண்டு கைப்பிடித்தான் கோல்தனை -சீர்மகன்

மேற்பிடித்த கைமேல் இருக்க இசுரேலோ
மேற்கொண்டார்; கைக்கீழ் இடுவித்தால் -மேற்றார்

அமலேக்கார் மேற்கொள்ள, போன பொழுதில்
அமலேக்கை மேற்கொள்ள தீர்த்து -அமர

ஒருகல்லின் மேலமர்த்தி மோசே இருகை
ஒருபக்கம் ஊர்நின்று ஆரோன் -ஒருபக்கம்

தாங்கிட மோசேயின் கோலோ உயர்நிலைக்க
தாங்கிப் பிடித்தனர் கைதனை -தாங்க

அமலேக்கை மேற்கொண்டான் யோசுவா போரில்
அமலேக்கை மேற்கொண்ட குன்றின் -தமனவன்

கேட்கும் படிவாசி, நூலில் எழுதிடு
நாட்டான் படித்திட ஏடுதனை -நாட்டிலே

வான்கீழ் அமலேக்கை இல்லாமல் போகுமட்டும்
நான்அழிப்பேன் என்றுரைத்தார் கர்த்தரும் -தான்தெரிந்த

மக்கள் எதிர்கொண்டு போரிட்ட காரணத்தால்
அக்கறை கர்த்தர் எதிர்த்தனர் -தக்கவர்

வெற்றியைத் தந்திட்ட கர்த்தரைப் போற்றிட
வெற்றிபெற்ற மக்களின் முன்னராய் -வெற்றிதரும்

கர்த்தருக்கு ஊன்பலி இட்டனன், பீடத்தில்
கர்த்தருக்கு ஏற்ற பலியிட -கர்த்தர்

பெயரிட பீடத்தை யாவே நிசியென்
பெயர்யாவே வெற்றிக் கொடியே -பெயரது

இட்டதும் சொன்னான் அமலேக்கு தேவனெதிர்
இட்டதால் போர்செய் வழி
திருப்பயண கலி 40

சீனாய் படலம்


சிப்போராளும், அவள் தந்தை எத்திரோவும் சீனாய் அருகே மோசேவை சந்தித்தல்


மோசே மனையாளாம் சிப்போராள் செல்நாடு
ஆசை மனைவியே, தேசமிது -வீசைப்

படுமென்ப தாலே, மனைவி அனுப்ப
அடைக்குஞ்சு மக்கள் இரண்டு -இடுத்தார்

முதலாண் பெயரது கெர்சோம்; இதமாய்
முதலாகத் தந்தார் இறைவன் -அதனால்

இரண்டாம் மகன்பெயர் எல்யேசர்; பார்வோன்
இரட்டை எடுப்பார் இறைவன் -கரையில்

இசுரெலிய மக்களுக்கு செய்வியச் செய்தி
திசையெங்கும் சென்றிட, மாமன் -திசையில்

அறிந்தவன் சென்றான் மருமகனைக் காண
அறிந்தாண் மனையா ளுடனே -அறிவாண்

மனைவியோடே மக்களும் சென்றாரே சீனாய்
மனைவியின் தந்தை வழியே -வினையறிவி

சொல்லுக மாமன் மனைமக்கள் நால்வரோடு
கல்லருகே வந்தார் உரைப்பீரே -நல்லார்

உரைவந்து மோசே எதிர்சென்று மாமா
வரும்வழி எல்லாம் நலமா? -தரைதன்னில்

கூடாரத் துள்ளே அழைப்பித்தான் தன்மக்கள்
ஆடவன் மோசே விருந்துதர -நாடவன்

எத்திரோ மாமன் உரைத்தான் மகிழ்ச்சியாய்
எத்துனை செய்கைகள் செய்தனர் -அத்துனை

செய்கையால் யானறிந்தேன் கர்த்தர் ஒருவரே
மெய்தேவன் வல்லார் அவர்தானே -அய்யவன்

தன்வழக்கம் மாறாது சென்றளித்தான் கொல்பலி
பின்மக்கள் மூப்பர் அனைவரோடு -அன்றே

இறைமுன்னர் சாப்பிட்டப் பின்னர் வழிமேல்
குறைமக்கள் சென்றார் அயர்ந்து
திருப்பயண கலி 41

குறைகளைக் களைய, ஆளுகை செய்ய இனத்தாருள் மூப்பர்களை ஏற்படுத்த எத்திரோவின் ஆலோசனை


மறுநாள் இசுரேல் இனத்தார் குறைகள்
சிறியோனாம் மோசே அமர்க்கேள் -சிறியோன்

வருந்தி அமர்க்கேள் முறைமையை மாமன்
மருமகன் கேளும் உரைநீர் -இருந்தீர்

இதுயேன் விடியல் முதலாய் இரவின்
அதுவரை நீரொருவன் கேட்டு -அதுயேன்

இறைச்சொல்லைக் கேட்க இசுரேல் இனத்தார்
குறைக்கொண்டு வந்தார் இடம்தான் -சிறப்பவர்

மண்போல் மிகுந்த இனமக்கள் யாவரின்
மண்மேல் குறைகளைக் கேட்டிட -மண்மனிதன்

உன்னாலே மட்டும் முடியுமோ கேள்மகனே
அன்னார் உரைத்தார் நிலைதனை -என்னே

பளுவானச் செய்கை யிதுவன்றோ மோசே
பளுவினை சொல்படி கேட்டு -களைவீர்

அளிப்பீர்நீர் ஆளுகை எண்ணிக்கை செய்தே
வெளிப்படை ஆசையற் றோர்பால் -அளியும்

இறைமுன்னர் செய்தவம் கட்டளைகள் கொண்டு
இறைச்சொல்லை சொல்வீர் இனத்தார் -குறைகேட்க

ஆயிரம், நூறெனப் பத்துவரை ஆளுகை
ஆயரை வைப்பீர் நலமென -ஆயரால்

இம்மக்கள் தீர்க்க முடியாத பேர்க்குறை
அம்மானே உம்மிடம் வந்திட -அம்மானே

எம்சொல் படிகேளும் மோசே, இறைவனார்
உம்மோ டிருக்கின்றார் என்றவர் -தம்மாமன்

சொல்படி செய்தனன் மோசே இனத்தாரில்
சொல்லடியார் தேர்ந்தவன் ஆளுகை -சொல்கேட்க

வல்லார் பலரைத் தெரிந்து இருப்பித்தான்
நல்லார் எனநம்பி னோன்தானே -நல்லாண்

மகிழ்வாக மாமனும் மீதியான் செல்ல
இகத்தினில் வேலை பளுவில் -நகைத்தவன்

பேர்குறை மட்டுமே கேட்டுரைத்தான் ஈதேகாண்
பேர்மூப்பர் வந்த விதம்
திருப்பயண கலி 42

சீனாயில் கர்த்தரை இசுரேல் மக்கள் காணுதல்


இசுரேல் இனத்தார் அடைந்தனர் சீனாய்
இசுரேல் இனத்தார் தரிக்க -இசுரேல்

இனத்தார் இறைவாக்கு பெற்றிடச் சென்றான்
வனமலை சீனாயின் மேல்சீர் -வனத்தில்

இறைவன் அழைத்தார் மலைமேலே வாநீ
இறைவன் பகன்றார் உரைப்பாய் -இறைவாக்கு

யாக்கோபின் மக்கள் செவிகேட்க; உங்களின்
யாக்கையைக் காத்த இறைவன்நான் -ஆக்கமாய்

நீள்வானின் வன்கழுகின் செட்டைமேல் என்னண்டை
ஆள்பவனின் வன்கொடுமை தப்பிக்க -கோள்மேலே

ஆள்பவரென் காட்ட எகிப்தியரை வன்செய்தேன்
வேள்விட்டான் கண்டீர் வழிவிட்டான் -ஆள்சீரே

கேள்புவி எம்முடைய தாதலால் என்மக்கள்
கேள்சொல் படிநடந்தால் என்சொந்தம் -வேள்தவ

தூய்மக்கள் ஆவீர்; இனமூப்பர் கேட்கச்சொல்
தூய்கேட்டு செய்வோம் இறைவனே -தூய்முன்

ஒரேசொல்லாய்ச் சொன்னார் இனமக்கள் ஆங்கே
ஒரேசொல்லைக் கேட்டவன் சென்றான் -ஒரேசொல்லாய்ச்

சொன்னர் இனத்தார், அறிவித்தான் ஆண்டவரின்
இன்செவி மேல்மலை சென்றனன் -தன்னே

இருநாட்கள் தூய்மை படுத்து இனத்தை;
இருநாள்பின் கார்முகில்மேல் நானே -வருவேன்;

உனைக்கண்டுப் பேசும் விதம்காண்பர் அப்போ
உனைநம்பிக் கீழ்படி வர்சீர் -தினத்திலே

இம்மலையை யாரும் தொடலாகா; மீறியோன்
இம்மலையை தொட்டதால் சாகவேண்டும் -இம்மலையில்

மாக்கள் வரலாகா வந்தால் அதைக்கொல்வீர்
தாக்கி; வருவேன் மலைதனில் -ஆக்கமாய்

எக்காள ஓசையைக் கேட்டு இனமக்கள்
அக்காலம் வந்திடட்டும் நோக்கிட -அக்காலம்

குன்றின்மேல் வந்திறங்கும் என்னையவர் காண்பரே
அன்னார் உரைத்தார் உரைதனை -மன்னராம்

தூய்தேவன் சொல்கேட்டு மோசே இனமக்கள்
தூய்படுத்தி சொன்னான் இருநாட்கள் -தூய்மையைக்

காத்திடுவீர் மக்காள் கலவி விடுத்திடுவீர்
காத்திடுவீர் நாளது மூன்றுதான் -காத்திருந்த

மூன்றாம் விடியலில் மின்னல் இடிமுழக்கம்
தோன்றிட கார்மேகம் ஓசையும் -தோன்றிட

மக்கள் நடுங்கினர்; தேவனைச் சந்திக்க
மக்களைக் கொண்டுபோனான் சீராணும் -தக்கவர்

சீனாய் மலைமேல் நெருப்பால் கருகிட
சீனாய் புகைக்காடாய்த் தோன்றிட -சீனாய்

மலைமேல் இறைவன் இறங்கியதால் தீயால்
மலைவெந்துப் போன ததிர்ந்து -அலைப்போல

எக்காள ஓசைபல மாகிட மோசேயோ
எக்காளம் கேட்டு இறைப்பேச -திக்கில்

கொடுமுடியில் வாநீ எனக்கூற, மேலே
கொடுமுடிக்குச் சென்றான் மகனும் -அடுத்தார்

தவனாரும் குன்றில் வராத படிக்கு
அவரிடம் எச்சரிப்பாய் மோசே -அவர்கள்

எவரும் வராத படியே இறைவா
இவர்கள் செவிக்கேட்டார் அன்று -அவரோ

இறங்கிப்போ வந்திடு ஆரோ னுடன்மேல்
இறங்கினான் மோசே மலையின் -இறங்கியோன்

சொன்னான் இறைச்சொல்லை மக்கள் செவிகேட்க
சொன்னதைக் கேட்டார் இனம்
திருப்பயண கலி 43

தேவன் அளித்த பத்து கட்டளைகள் - முதல் நான்கு கட்டளைகள்


பேசினார் தேவன் இறைவனார் கட்டளை
மோச எகிப்தினின் உங்களை -தீசிற்

கழைத்து வரச்செய் இறைவனார் யானே
பிழையாய் செயாதீர் இறைவன் -வழுவி

எனைவிட வேறே இறையிலை இங்கே
இனிவான் புவிமேல் இரும்நீர் -இனியுருச்

செய்யீர்; செயலாய்த் தொழாதிரும் மன்னவர்
மெய்யார் பகன்றார் முதலது -அய்யார்

எரிச்சல் உடைய இறைவனார்; எந்தன்
எரிச்சல் கொடுப்போர் பகைப்போர் -எரிச்சலை

வாங்குவேன் மூன்றுநான் காய்பழி; அன்புசெய்
தாங்குவேன் ஓரா யிரமென -தாங்குவேன்

கர்த்தர் பெயரதை வீண்வழக் கம்அழி
கர்த்தர் பெயரதை வீண்சொல -கர்த்தரார்

தண்டித் திடுவார் உரைவீண் வழங்கிடீர்
விண்ணவர் கட்டளை தான்தமர் -மண்ணிலே

கர்த்தர் பெயரதை வீண்வழக் கம்தறி
கர்த்தர் பெயரதை வீண்சொல -கர்த்தரார்

தண்டித் திடுவரே; ஈதே வழங்கினார்
விண்ணவர் கட்டளை அன்றவர் -மண்ணிலே

ஏழா வதுநாள் நலமென ஓய்வுநாள்
ஆழி மனதில் நினைந்திடு -ஏழா

வதுநாள் அதுமறு நாட்களில் வேலை
மதியவர் ஓய்ந்திரும் ஏழு -அதுவவர்

விண்மண் திருவார் படைத்தபின் விண்ணவர்
அண்ணார் இருந்தார் சிறந்ததால் -விண்ணவர்

கட்டளை ஓய்ந்திரு வேலையை விட்டுநீர்
கட்டளை பின்பற் றுவீர்
திருப்பயண கலி 44

தேவன் அளித்த பத்து கட்டளைகள் - அடுத்த ஆறு கட்டளைகள்


பெற்றோராம் மண்ணில்சீர் தந்தையும்தாய் சீரவர்காள்
உற்றதாக மண்நாட்கள் நீடிக்கப் -பெற்றோரை

செய்வீரே நற்கனம்தான் கட்டளைசீர் என்றென்றும்
செய்திடுவீர் பெற்றோரின் வாழ்த்துகள்தான் -செய்யாதீர்

வன்கொலையை, வேசியென, வீண்களவு வன்நாவால்
என்றென்றும் பொய்ச்சான்று சொல்லாதீர் -வன்னாக

மாற்றாணின் சீர்பொருளை நீர்கவரா தீர்சீரே
மாற்றாணின் நல்மனைவி நீர்கவரீர் -ஆற்றலாமே

சீர்பத்து கட்டளைகள் தந்தாரே சீரவர்கோன்
சீர்மக்கள் ஆங்கேதான் கேட்டவரும் -சீர்மோசே

கேட்கின்றோம் வன்னிடியும் மின்னல்கள் பார்க்கின்றொம்
கேட்டயாமோ அஞ்சுகிறோம் யாம்மடிவோம் -கேட்கவிங்கு

அச்சமாக உள்ளதுசீர் ஆதலினால் கர்த்தரோசை
அச்சத்தால் கேட்டாரே சீர்மக்கள் -அச்சமோசீர்

மக்களேநீர் கொள்ளாதீர்; சோதித்து உம்மைத்தான்
தக்கவரென் காணவேசீர் வந்திட்டார் -தக்கபடி

சீரவரே இம்முறையின் தான்

மோசே மக்களின் கணபார்க்க மலைமேல் செல்லுதலும் பலிபீடம் குறித்த நியமும்


தூரத்தில் மக்களவர் நின்றிருக்க மோசேயோ
பாரவர்முன் சென்றானே கன்மலைமேல் -சீரங்கு

சீரிறைவன் சொன்னாரே எந்நாளும் பொன்வெள்ளி
சீரில்லை வன்சிலைகள் செய்யாதீர் -சீரவரே

ஓரிறைவன் என்றவரே சொன்னாரே -சீரவர்க்கு
மண்ணாலே செய்வீரே நற்பலிக்கு பீடத்தை

மண்மேலே செய்பலிக்குக் கல்செய்தால் -எண்ணம்கொள்
கையுளிமேல் பட்டாலே ஆகுமது வீணாக

கையளித்தார் தேவன்சீர் நன்முறையே -கையளித்த
பீடமதே தூய்மையென்ப தாலேதான் பீடத்தில்

மாடவரே ஏறாதீர் ஏனென்றால் -பீடமதில்
உந்தன்கீழ் அம்மணமாம் கோலத்தை காட்டாதே

எந்நாளும் என்றாரே சீர்

தேவன் அளித்த அடிமைகள் குறித்த நியதி


மண்வழக்கம் அக்காலம், தன்வேலை செய்திட
கொண்டார் மனித அடிமைகள் -கொண்டோர்

இறைவன் அளித்தார் நியதி, எபிரேய்
இறைமக்கள் ஏழில் விடுப்பு -சிறையடிமை

ஒன்றியாய் பட்டிருக்க ஒன்றியாய்; நல்மணம்
முன்னே புரிந்தப்பின் வந்திருந்தால் -ஒன்றியிலை

நல்மணம் செய்ப்பெண்ணோ டேயவன் போகட்டும்
நல்மணம் முன்செய்த தால்தானே -நல்லடிமை

ஒன்றியாய் பட்டும் முதலாளே நல்மணம்
ஒன்றனுக்குச் செய்தால் முதலாளுக் -கன்னானின்

பெண்மனைவி சொந்தமாம்; நல்மனை மக்களை
கொண்டவன் விட்டுப்போ ஏழாண்டில் -கொண்டவன்

ஐயோ மனைமக்கள் நேசிக்க ஒன்றனாய்
ஐயா மனதில்லை என்றாலே -ஐயனும்

மூப்பர்முன் சென்றங்கு காதிலே குத்தட்டும்
மூப்பர் நிலைக்கதவின் முன்னரே -மூப்பர்முன்

குத்துண்டப் பின்னர் அடிமையோ எந்நாளும்
குத்தியோன் சேவிப்பான் என்றுரைத்தார் -பெத்தவன்

தான்பெற்ற பெண்மகவை விற்றாலே ஆண்போலே
தான்விடீர்; ஆனால் முதலாளே -தான்விட்டுப்

போவென் றுரைத்தால் மகள்மீட்பீர் ஏனென்றால்
போவாகா அந்நியர் கைதன்னில் -மேவி

அடிமையென வந்தப்பெண் தன்மகனிற் காக
அடிமைப்பெண் நல்மணம் செய்ய -அடிமைக்கொள்

ஆளவன் செய்முடிவென், தன்மகள் போலவன்
கோளில் நிறைவேற் றுகசீராய் -ஆளிற்குத்

தான்நியந்த பெண்ணை மணமுடிக்கா போனாலே
தான்நியந்த பெண்ணின் உணவாடை -மேன்மை

மணம்புரிதல் எல்லாம் முதலாளே செய்க
உணவாடை நல்மணம் மூன்றில் -அணங்கிற்கு

செய்தால் குறையேதும் அப்பெண்ணோ சென்றிடுவாள்
செய்ததால் வீட்டைவிட்டு அன்றுதான் -செய்யில்

ஒருமனிதன் சாக அடித்தவனை கொல்க
ஒருவன் பதிவிருந்து கொல்லா -திருச்செயலென்

ஓடிச் செலயானே செய்வேன் தலத்தினை
ஓடிடட்டும் கொன்றோன் தலம்தானே -நாடர்

சதிசெய்து கொன்றாலோ கொன்றிடுவீர் வன்னாண்
சதியோன் பலிபீடம் முன்னே -விதித்தும்

சதிக்கொலை என்பதால் கொண்டுபோய்க் கொல்க
சதிக்கொலை ஆகாதும் முள்
திருப்பயண கலி 47

பெற்றோரை அடித்தாலோ கெடுமொழி பேசினாலோ கொல்லப்பட தேவனின் நியதி, மற்றும் சில நியதிகள்


பெற்றோர் எவனும் அடித்தால் அவனைக்கொல்
பெற்றோர்மேல் வீசுக் கெடுமொழி -சுற்றார்முன்

பேசின் கொலைசெய்வீர் என்றுரைத்தார் கர்த்தரவர்
ஏசிமாந்தன் கள்ளமாய் விற்றோனை -வீசிக்கொல்;

மாந்தரை வன்னாய்க் களவைத் தவிர்த்திடு
மாந்தர்க்கு நன்றே உரைத்தாரே -மாந்தரின்

சண்டையால் கட்டிலில் வீழக் கிடந்தோனை
சண்டைபின் கட்டில் விடுத்தவன் -அண்மையில்

சென்றால் கிடையாக் கினோன்மேல் பழிநில்லா
வன்நட்டம் பெற்று விடுத்திடும் -வன்நேர்

அடிமை எவரேனும் கோலடியால் செத்தால்
அடிமை உயிருக்கு ஈடாய் -அடிமை

முதலாள் உயிரெடுப்பீர்; ஓரிரு நாட்கள்
விதமுயிர் நின்றால் விடுவீர் -விதமாய்

மனிதருள் சண்டையால் கர்ப்பம் தரித்தோள்
மனிதரால் கர்ப்பம் அழிந்தால் -மனிதரவர்

கர்ப்பம் விழுந்தோள் கணவன் விதித்திடும்
கர்ப்பத்தின் ஈடைக் கொடுக்கச்சொல் -கர்ப்பம்

உயிருக் குயிராமே கண்ணுக்குக் கண்ணாம்
வயப்பல்லென் பல்லாமே கைக்கு -வயக்கையே

காலுக்குக் காலே, தழும்பும் எரிசூடும்
வேலாலே காயமென்றால் ஈடு
திருப்பயண கலி 48

தண்டனையால் அடிமையின் உறுப்போ உயிரோ போனால் நியதி, மாக்களால் உயிர்சேதம் நிகழ்ந்தால் செய்ய வேண்டிய நியதி


அடிமையைக் கோலடித்து கண்கெட்டால் கண்ணுக்
கடிமையை விட்டிடுவீர்; பல்லென் -அடிமையை

விட்டிடுவீர்; என்றுரைத்தார் நன்கர்த்தர் மேன்நியதி
கட்டளை அன்றே கொடுத்தாரே -கட்டாத

ஆவினால் முட்டி மரித்தாலே கல்லெறிவீர்
ஆவை நிலத்து; நிணம்புசிக்கா -ஆவை

எரிப்பீரே; ஆமாடு முட்டும் குணமென்
தெரிந்திருந்தும் கட்டான் பழியே -தெரிந்ததென

மூப்பர் விதம்தீர்த்தால் ஆவின் முதலாளி
மூப்பர் விதச்சொல் படிக்காசு -மூப்பர்முன்

தந்திட்டு மாட்டையோ கல்லெறிந்துக் கொன்றிடுக
தந்தார் நியதி இறைவனார் -அந்நாளில்

முட்டி இறந்தது ஓரடிமை என்றாலே
முட்டிய ஆவின் முதலாளி -முட்டி

இறந்தோன் முதலுக்கு முப்பது சேக்கல்
இறப்பீடு வெள்ளிக் கொடு
திருப்பயண கலி 49

மனிதராலோ மாக்களாலோ மாக்கள் சேதமென்றால் செய்ய வேண்டிய நியதிகள்


நிலத்தில் குழிவெட்டி மூடா நிலத்தில்
வலம்வந்த ஆமேக்கள் மூடா -நிலத்தில்

விழுந்து மரித்தால் நிலக்குழி செய்தோன்
விழுந்ததற்க்(கு) ஈடாக் குவீர்சீர் -விழுந்ததை

ஈடாக்கிப் பின்னர் நிணமது சேருமே
ஈடாக் கியோன்வயம் ஏனென்றால் -ஈடாக்கிக்

காசுப் பணம்தந்தான் மாக்களைக் கொண்டதுபோல்
காசுகொடுத் தோன்நிணந்தோல் பெற்றிடட்டும் -தீசிலே

ஆக்களிடை சண்டையிட்டு ஆவெதும் செத்தாலே
ஆக்களில் சாகாத ஆவிற்று -ஆக்களின்

சொந்தம் முதலாளி பங்கிட்டுக் கொள்கவே
சொந்தம் அறிந்தவன் ஆகுணம் -சொந்தமவன்

கட்டாத காரணத்தால் ஈடாய்ஆ -கட்டாதான்
செத்ததின் தோல்நிணம் சொந்தமாய்க் கொண்டபோல்

செத்ததை கொள்ளட்டும் வீண்

மாக்கள் திருடினாலோ, திருடும்போது கள்வன் அகப்பட்டாலோ செய்ய வேண்டிய நியதி


ஆமேத் திருடி நிணத்திற்க்காய் கொன்றாலோ
ஆமேத் திருடி பணங்கொண்டால் -ஆமே

திருப்பிடுக ஆவிற்கு ஐந்துமாய் மேநன்
திரும்பிப் பெருக நிலத்தில் -திருடனாம்

கள்ளன் திருடிடக் கன்னமிடும் வேளையில்
கள்ளன் அடிபட்டுச் செத்தாலே -கள்ளன்

களவுச் செயலால் பழிசுமரா தென்று
களவுத் தவிர்க்க நியமம் -களவிடக்

கள்ளன் திருடிடக் கன்னமிட்டு ஆதவன்
சுள்ளெனச் சுட்டிட மேலுதித்தால் -கள்ளனின்

சாவிற் சுமந்திடும் மக்கள்மேல் வன்பழி
சாவா திருந்தால் களவிற்காய் -சாகாத

கள்வன் அடிமையாய்; கள்வன் களவாண்ட
கள்வன்கை மேமாக்கள் கொண்டாலே -கள்வனவன்

நேராய் இரண்டாய்த் திருப்பிட வேண்டுமே
சீரார் அளித்தார் திருநியதி -சீரிலா

மாக்களால் உண்டான நட்டத்தின் மேன்நியதி
மாக்கள் பிறன்வயலில் மேய்ந்திட -மாக்களால்

தாக்கிப் பயிர்போனால் மாக்கள் முதலாளி
தாக்கிய மாக்கள்செய் சேதத்திற் -தாக்கீடு

மேன்பயிரை தந்திட்டு சேதம் சரிகட்டும்
மேன்சீரார் நட்டம் சரிகட்ட -தான்சீர்

வனமுள் எரிதீ பயிரெரித்தால் ஆங்கே
வனமுள் எரிதீ எரித்தோன் -இனத்தாரின்

நட்டத்தை ஈடாக்கி வெள்ளிப் பணம்கொடுத்து
நட்டம் சரிசெய்வீர் சீர்
திருப்பயண கலி 51

பிறனுடைய சொத்து களவு போனால் நியதி


பிறனில் உடைமை அடைக்கலம் வைத்து
பிறனில் களவுபட; கள்ளன் -பிறனில்

களவிற்க்காய் மக்கள் பிடித்தால் இரண்டாய்க்
களவிட்டோன் தந்தி டுகசீர் -களவிட்டக்

கள்ளன் பிடிபடாமல் போனால் களவுநிலை
எள்ளளவும் தீர்க்கவே மூப்பர்முன் -ஒள்ளரி

நற்பொருள் போயினச் செய்தியைக் கூறுக
நற்றார் புரிவரே தீர்ப்புதான் -நற்றிலே

மாக்களில் ஏதேனும் காணாமல் வேறொருவன்
மாக்களுள் கண்டறிந்து சொன்னாலே -மாக்களின்

சேதியை சென்றிடுவீர் தீர்த்திட மூப்பரிடம்
வேதனை தீர்ப்பா ரவர்தானே -வேதவர்

குற்றமெனத் தீர்ப்பின் படியே இரண்டாக
குற்றம் புரிந்தோன் கொடுக்கட்டும் -மற்றபடி

மாக்கள் பிறனில் களவானால் இட்டிடுக
மாக்கள் கவராதா ணைதனை -ஆக்கமுறு

மாக்கள் வனமிருகம் பீறி மரித்ததால்
மாக்கள் நிணங்காட்டிச் சொல்லிடுக -மாக்கள்

வனமிருகம் பீறிற்றே; என்தவறு ஏதில்
இனத்தில் புரிவீர் வகைசீர் -இனத்தாரோ

கள்வன் திருடிய மாக்களுக்கு வேறாக
அள்ளிக் கொடுத்திடுக மாக்களை -தெள்ளிய

தீர்ப்பு மிருகங்கள் மற்றும் உடைமைகள்
சேர்விடம் கள்வனால் போய்
திருப்பயண கலி 52

இரவல் பொருட்சேதம் அடைந்தால் அதனின் நியதி, திருமண நியதி


இரவல் பொருளிலே சேதம் விழுந்தால்
இரவல் பொருளுக்கு சேதம் -இரவல்

கொடுத்தோனின் கைக்குத் திருப்பிடுக; வீழ்ம்போ
கொடுத்தோன் இருப்பின் விடுத்து -அடுத்துநீ

வாடகைக்கு வாங்கப் படும்பொருள் வீழ்ந்தாலே
வாடகையே ஈடு முதலிற்கு -வாடகைக்கு

விட்டப் பொருட்சேதம் வாடகை வாங்கியதால்
திட்டம் இழப்பு இலைகேள்மின் -கட்டத்

திருமணம் நேராத கன்னிகையை மோசம்
திருமண மில்லாதே சேர்ந்தால் -திருமணம்

செய்யக் கடவன் பரிசம் கொடுத்தவனே
மெய்யார் இறைவன் உரைத்திட்டார் -அய்யனவன்

பெண்தகப்பன் தந்திட மாட்டேன் எனப்பகன்றால்
பெண்தகப்பன் கையில் பணம்நிறுத்து -பெண்ணின்

முறைப்படியே காசுக் கொடுத்து விடுக
முறைதன்னை தேவன் உரைத்து
திருப்பயண கலி 53

சூனியம், மந்திரம், வெற்றிறை வழிபடுவோர் கொல்ல நியதி; கைம்பெண்களை தேசத்தார் கடைபிடிக்க வேண்டிய நியதி.


மந்திரம் செய்யும் வழுபிறப்பைக் கொன்றிடுக
எந்தவோர் மாக்களை வன்புணர்வோன் -அந்தமாந்தன்

கொன்றிடுக; கர்த்தர் தவிர இறையிலை
வன்னாய்நீர் போற்றாதீர் வேறிறை -வன்னாக

மாற்று இறைவன் பலிசெய்வோன் வெட்டிடுக
தேற்றா அயலான் சிறுமையாய் -ஆற்றாதீர்

கைம்பெண்ணும் திக்கில்லா பிள்ளை எவரையும்
தேம்ப விடாதீர் நிலத்திடையில் -தேம்ப

ஒடுக்கினால் கைம்பெண்ணோ திக்கில்லோர் வந்து
ஒடுக்கினார் என்றே முறைசெய் -ஒடுக்கினோர்

தன்னின் முறையிடுதல் காதில் விழுந்ததும்
என்வாளால் செய்வேன்நான் போர்உம்மேல் -அன்றியும்

போரிலே போவர் மனைவியர் கைம்பெண்ணாய்
போரிலே உன்மக்கள் திக்கற்று -வேரிலே

யாரையும் மோசமாய் செய்யாதீர் என்றாரே
சீராய் நியதி இறை
திருப்பயண கலி 54

மேலும் பல நியதிகள்


சிறுமையாய் உள்ள இனத்தவர்க்குக் காசு
திறம்மேம் படக்கொடுத்தால் வேண்டாம் -சிறுவட்டி;

மேலாடை ஈடைத் திருப்புக ஞாவீழ்முன்
மேலாடை போர்வை யதுதானே -மேலாரோ

மேலாடை ஈடைத் திருப்பாதே போனாலே
மேலாடை இன்றித் தவிப்போனின் -மேலோங்குச்

சத்தம் செவிக்கேட்பேன் நல்லிரக்கம் கொண்டவர்
எத்திக்கும் ஆள்வோர் கெடுமொழி -மெத்தனமாய்

பேசாதீர்; வேள்மூப்பர் வையாதீர்; முன்கனியும்
தேசத்தில் முன்சாறும் தந்திடுக -தேசத்தின்

பிள்ளை முதற்பேறு காணிக்கை எட்டாம்நாள்
பிள்ளை முதற்பேறை மீட்டெடுக்க -பிள்ளைக்காய்

சீர்பலி செய்திடுக சீரில் வெளிப்பீற
நேர்புசியீர் நாய்க்கு இடு
திருப்பயண கலி 55

நீதி வழங்க கையூட்டு பெறக்கூடாது என்றும்; வேறு சில நியதிகளும்


சொல்லது தீதென் றறிந்ததுஞ்சொல் லேற்காதே
சொல்லாதே தீயோன் கொடுங்கோலாய்ச் -சொல்சான்று;

சொல்லால் பெருமினம் நீதி புரட்டிட
சொல்லாதீர் நீதிப் புறம்பாக -சொல்லிடு

ஏழைக்கும் நீதி திருநீதி; ஏழையெனும்
பாழைக் கெனமுகம் பாராய்நீ -வேழாண்

பகைவனின் ஏறு வனஞ்சென்றால் சேர்ப்பாய்
பகைவனின் கையில் திருப்பு -பகையால்

பகைப்போன் கரப்பளு தாங்கா விழுந்தால்
பகைப்போன் கரம்சேர் இழுப்பாய் -வகையே;

எளியோனின் நீதியில் நேர்நிற்பாய்; கள்ளம்
துளியும் புரியாதே; குற்றம் -துளியில்லா

நீதிமானைக் கொல்லாதே; தீர்க்கேன்யான் வன்வழியோன்
நீதியென, என்றார் இறைவனார் -நீதியிலாக்

கையூட்டு பெற்றிடாதே; பார்வை குருடாக்கும்
கையூட்டு; நீதியோர் சொல்புரட்டும் -கையூட்டு;

அந்நியன் தன்னை ஒடுக்காய்; எகிப்திலே
அந்நியராய் வாழ்ந்தீர் இனம்நீரே -அந்நாளில்

ஆறாண்டு செய்நிலத்தில் வித்திட் டறுவடைசெய்
ஆறாண்டின் பின்னேழில் விட்டிடு -ஆறாதோர்

சிற்றார் வனமிருகம் நற்கனியைத் தின்றிட
வெற்றாய் விடுவாய் நிலம்தன்னை -நற்றாய்

கொடிமுந் திரித்தோட்டம் மற்றும் ஒலிவம்
படிசெய்வாய் சிற்றெளியோர் விட்டு -அடியாரே

ஆறுநாள் வேலைசெய்வீர் ஓய்ந்திருப்பீர் ஏழாம்நாள்
ஆறுநாள் பின்வேலை ஓய்வுநாள் -தேறிட

ஆக்கள் கரிபரி பிள்ளைகள் எல்லாரும்
ஆக்கம் தவிர்த்தேழில் ஓய்ந்திருப்பீர் -ஆக்கமாய்

ஆறுநாள் செய்தவேலைக் காக ஒருநாளாம்
தேறுதற்கு ஏழாம்நாள் ஓய்வுநாள் -மாறாது

சொன்ன படிசெய்ய நீவிர் கவனிப்பீர்
சொன்னசொல் மாறாதே; மற்றவர் -என்ன

தொழுதாலும் அத்தேவர் பேர்கூடச் சொல்லி
விழுந்துப்போ காதீர் இனம்
திருப்பயண கலி 56

திருவினம் கொண்டாட வேண்டிய பண்டிகைகள்


மூன்றுமுறை பண்டிகை ஓராண்டில் ஆசரி
மூன்றில் புளிப்பில்லா பண்டிகை -மேன்மையாம்

வீடாம் எகிப்தினின்று வந்திட்ட நாளது
வீடுள் களிப்பீர் சிறந்துநீர் -நாடுள்ளே

என்முன்னர் கைவெறுமை வாரீர்; அறுவடை
தன்னை புரிந்து அறுவடை -நன்னாள்

இரண்டாமே; ஆண்டின் இறுதியில் சேர்க்கும்
தரமூன்று பண்டிகை மூன்று -திருவவர்:

மூன்றுமுறை மக்களில் ஆண்மக்கள் என்முன்னே
தோன்றிட வேண்டும் உரைத்தவர் -தோன்றும்போ

எப்பலியும் அப்பம் புளிமாவில் இட்டிடாதீர்
எப்பலியும் வையீர் இரவுபின் -அப்போ

முதற்கனியை ஆலயத்தில் என்முன்னே தந்து
நுதற்வியர்வை சிந்தி உழைத்த -முதலே

இறைவனார் காணிக்கை; குட்டிநிணம் தாயின்
நிறைப்பால் சமையீர் நிலத்து
திருப்பயண கலி 57

கர்த்தரின் தூதர் முனசெல்வார் என்று இறைவன் சொல்லுதல்


வழியிலே உன்காவல் செய்திட; உன்னை
வழிநடத்தி கொண்டுசேர்க்க தூதன் -வழிசெல்லப்

போவார்; அவர்வாக்கைக் கேட்டு சினமூட்டா
போவீர்; கொடுஞ்செய்த் தவிர்த்திடுவீர் -தாமவர்

என்நாமம் உள்ளத்தில் கொண்டுள்ளார் தூதனவர்
உன்கொடுஞ் செய்கைப் பொறுக்காரே -உன்செவியை

சொல்லுக்குச் சாய்த்து படிசெய்தால் உன்பகைவர்
சொல்லாரின் என்றும் பகைவராம் -அல்லாதார்

யாரும் எதிர்த்தால் எதிரியாம் கர்த்தரின்
சேரும் நிலத்தின் குடிநாடு -சேரச்

செயல்புரிவார்; ஆறு குடிகள் துடைத்து
வியன்புரிவேன் கர்த்தர் இறைவன் -அயலாட்கள்

ஆறு குடிகள் துடைத்திட; நீவிரோ
ஆறின் சிலைகளைப் போற்றாதீர் -ஆறின்

வழிகளை பின்பற்றா தேயிருப்பீர்; அன்றே
கிழிப்பீர் சிலைகள் உடைத்து -வழியவர்

கர்த்தரே தேவன்; தொழுதிடுவீர் நன்றாக
கர்த்தரே ஊண்நீர் தனைவாழ்த்தி -கர்த்தரே

வாதை விலக்கி, மலடில்லா பெண்டிரும்
வேதனைத் தீர்வாழ்வும் தந்திடுவார் -வேதவர்

என்னச்சம் உன்முன்னே சென்று இனத்தாரை
என்னச்சம் மெய்க்கலக்கும்; பின்முதுகு -உன்முன்னே

காட்டி விலகியோடிப் போவர்; இனமூன்று
காட்டின் குளவி துரத்திடும் -நாட்டுமது

பாழாக தேசமது போகாமல்; காட்டினது
வாழந்த வன்மிருகம் மிக்காகா -வேழாறு

வன்னினங்கள் உன்முன் துரத்திடேன் ஓராண்டுள்;
என்னினம் நீரும் பெருகுவீர் -என்னினமே

செங்கடல் நன்னிலம் நன்றே பெலித்தரின்
அங்கடல் ஊடுள் நிலமெல்லாம் -இங்கும்மின்

எல்லைகள் என்றிருக்க; வாழும் குடிகளை
இல்லென்று செய்வீர் இனத்தாரே -நல்லாரே

சேரும் இனத்தினோடே செய்யீர் உடன்படிக்கை
சேரும் இனத்தின் இறைவனைச் -சேராதீர்

தேராதார் உம்மை கொடிபாவம் செய்திட
கோருவர் ஆதலால் விட்டுடிசும் -சீராரே

சேரும் இனத்தாரை வாழவிட்டால் தானவர்
சேரச்செய் வர்தம்மின் தேவரை -சேரந்த

வன்சிலைகள் உம்மினத்தின் கண்ணியாய்ச் சேருமே;
வன்குடிகள் ஓட்டிடு சீர்
திருப்பயண கலி 58

எழுபது மூப்பரை மலைமேல் ஏறி வந்து தொழச்சொல்லுதல்


இறைவன் அழைத்தார் மலைமேல் வருவீர்
இறைமுன்னே நால்வர் இணைந்து -இறைமூப்பர்

சேர்ந்தே எழுபது; ஏறிவந்து தூரத்தே
சேர்ந்தொழுவீர் என்னைச் சிறந்துசீர் -நேர்சீராண்

மோசே வரட்டும் மலையுச்சி யின்மேலே
மோசே தவிர வராதீரே -மோசே

இதைக்கேட்டுச் சொன்னான்; இறைமக்கள் கேட்டு
அதன்படியே செய்வோம் இனியாம் -அதற்கென

மோசே அனைத்து இறைவாக்கும் வைத்தெழுதி
மோசே விடியல் பலிக்காக -மோசே

இசுரேல் இனப்படி பன்னிருத் தூண்கள்
விசைநிறுத்தி இட்டான் பலியை -மிசைமேல்

பலிக்குருதி தன்னை எடுத்து அதிலே
பலிக்குருதி பாதியை ஏனம் -பலிக்குருதி

இட்டு பலிபீடம் மேல்தெளித்து நூல்தன்னை
நட்டார் செவிக்கேள் படித்தனன் -நட்டார்

நறுசேர்க் குருதியை மக்களின் மேலே
சிறுகுருதி மேல்தெளித்து சொன்னான் -சிறுமக்காள்

நல்கர்த்தர் உம்மோடுச் செய்திட்ட சீரான
நல்ல உடன்படிக்கை பார்ப்பீரே -நல்லார்

மலைமேலே சென்றார் எழுபத்து நால்வர்
மலைமேலே சென்றோர் இறைவன் -மலைமேலேக்

கண்டார் இறையோன், இழைத்திட்ட நீலக்கல்
விண்போலே ஒப்பாமே காலடி -விண்ணவரைக்

கண்ட எழுபத்து நால்வரின் மேலவர்
தண்டிக்கக் கையை விடவில்லை -கண்டவர்

பின்னர் புசித்தார் குடித்தார் இறைவனார்
பின்னழைத்தார் மோசேவை வாநீமேல் -அன்னவா

கிட்டிச்சேர்; நானுக்கு தந்திடுவேன் கற்பலகை
எட்டிப்போய் மக்கள் செவிச்சொல்ல -சட்டெனப்

போனான் அடியாளாம் யோசுவா பின்வர,
சீனாய்மேல் சென்றா னடியவன் -மேனாள்

தலைவர் செவிக்கேளும் நான்மலைமேல் போக
தலைவருள் ஏதேனும் உண்டென் -தலைவருள்

ஆரோனும் ஊரும் இருக்கின்றார் உம்மிடையே
சீராக்க என்றான் அடி
திருப்பயண கலி 59

மோசே மலைமேல் ஏறிச் செல்லுதலும், ஆசரிப்புக் கூடாரம் செய்ய கர்த்தர் மலைமேல் காட்டுதலும்.


ஆசரிப்பு கூடாரம் செய்ய பொருட்களை மக்களிடம் கொடையாக வாங்கு என கர்த்தர் சொல்லுதல்


மலைமேல் செலவும் மலையினை மூட
மலைமேல் இறைவனொளி வீச -மலைநோக்கும்

மக்கள் எரிநெருப்பு குன்றின்மேல் கண்டிட
தக்கான் இருந்தானே ஆறுநாள் -தக்கவர்

ஏழாம்நாள் மோசே வருவாய் அழைத்திட
ஏழாம்நாள் சென்றான் முகிலிலே -வேழாண்

இருந்தான் இராப்பகல் நாற்பது நாளாய்
திருவொளியில் மோசே சிறந்து -திருவார்

இறைவனார் மோசேயை நோக்கி: இனத்தார்
நிறையினின் காணிக்கை சேர்ப்பாய் -நிறைமனம்

கொண்டவன் மட்டும் கொடுக்கட்டும் பொன்பணம்
கொண்டுவந்து உன்னிடம் சீர்த்தர -கொண்டுவர

பொன்வெள்ளி வெண்கலம் நீல இளநூலும்
மென்நூல் சிவப்பும், பளப்பட்டு -நன்னூலும்

மென்பஞ்சு நூலும் மயிரது வெள்ளாட்டின்
கொன்ற கடாத்தோல் தகசென -அன்றியும்

சித்தீம் மரமும் விளக்கெண்ணெய் நாறெண்ணெய்
அத்தோடு நாற்ற வருக்கங்கள் -வித்தகர்

மார்பதக்கத் தின்மேல் பதித்திட மேனுயர்
பார்வியன் கற்களை வாங்குவாய் -சீர்கர்த்தர்

மக்கள் நடுவே வசித்திட தூயதாய்
தக்கதலம் உண்டாக்கி இத்தலம் -தக்கோன்

மலைமேலே காண்கின்ற மாதிரி போலே
தலையேற்றுச் செய்வீர் தலம்
திருப்பயண கலி 60

உடன்படிக்கை பெட்டி


சித்திம் மரத்திலே பெட்டியைச் செய்திடு
சித்திமின் நீளம் இரண்டரை -சித்திம்

அகலமோ ஒன்றரை மற்றும் உயரம்
அகலம் இணையாய் முழமாம் -தகதக

பெட்டியை மூடுவீர் பொற்றகடு தூயதால்
பெட்டியின் உட்புறம் மற்றாங்கே -பெட்டி

வெளிப்பிறம் பொற்றகடால் மூடி அதின்மேல்
வெளியில் திரணையைச் செய்வாய் -வெளியின்

திரணைக்குப் பொன்வளையம் நான்கை வணைந்து
திரணைக் கொருபக்கம் ஈராய்த் -திரணை

மறுபக்கம் ஈராய் வணைந்திட்டு சித்திம்
நறுமரக்கோல் பொற்றகடால் மூடு -அறுத்திடு

கோலிரண்டை; கொண்டு வளையத்துள் இட்டிடுவீர்
கோலிரண்டால் பெட்டியைத் தூக்கிட -கோலிரண்டும்

எக்காலம் பெட்டியோடே வைத்திடுவீர் நான்தரும்
தக்க நியமமிது தக்கவர்த் -தக்கார்

இரக்க மிருக்கை பசும்பொன்னால் செய்வாய்
தரப்பசும் பொன்னால் இழைத்து -இரண்டரை

நீளமடி ஒன்றைக் கழித்தகலம் செய்விப்பாய்
ஆளைப்போல் கேரூபீன் செய்வீரே -வேளார்

ஒருபுறம் ஒன்றும் மறுபுறம் மற்றும்
இரக்க மிருக்கையின் ஓரம் -இருக்க

இரண்டும் ஒரேவேலைப் பாடாகச் செய்து
விரித்திருக்கும் செட்டைகள் செய்வீர் -விரித்து

எதிர்முகம் உள்ளவையாய் கேரூபீன் நிற்க
எதிரெதிர் செட்டைகள் மூட -அதிலே

நியமத்தை வைத்திடு; அவ்விடத்தில் வந்து
வியனிறைவன் சந்திப்பேன் கேள்
திருப்பயண கலி 61

சமூகத்து அப்பங்கள் வைக்க மேசை


சீத்திம் மரத்தால் விசுப்பலகை செய்திடு
சீத்திம் பலகை இரண்டுமுழம் -சீத்திம்

அகலம் ஒருமுழம் என்றும் உயரம்
அகலம் விடஅரைக் கூட்டி -வகையது

பொற்றகடால் மூடி திரணையைச் செய்வித்து
பொற்றகடால் மூடுக நான்விரல் -சுற்றளவு

பொன்வளையம் மூலைகளில் தைப்பாய்; பலகையை
பொன்வளையம் சீத்திம்கோல் ஏந்தவே -பொன்னால்

பலகைமேல் வைத்திட தட்டுக்கள் சேர்செய்
நலமானப் பொன்னால் கரண்டி -பலிபான

நன்கலங்கள் செய்திடுவாய் பொன்னால் இழைத்திட்டு
என்றும் பலகைமேல் ஊணப்பம் -நன்றாக

வைக்கச்சொல் மக்களை கூடத்துள் சீராக
வைக்க விசுப்பலகை தான்
திருப்பயண கலி 62

குத்து விளக்கு


அடிப்புவேலை பொன்னாலே குத்து விளக்கும்
அடித்தண்டும் மொக்குக் கிளைகள் -வடிப்பாய்

கனிகள் மலர்களைப் பொன்னால் அடித்து
நனியாறாய் செய்வாய் கிளைகள் -நனியது

ஆறில் ஒருபக்கம் மூன்றும் மறுபக்கம்
ஆறில் மறுமூன்றும் செய்திடு -ஆறிலும்

வாதுமைக் கொப்பாக மூன்றுமொக்கு, பூபழம்
வேதவர் சொன்னார் விதம்தனை -மீது

விளக்கினதின் தண்டிலோ, வாதுமைக் கொப்பாய்
விளக்கதைப் போலல்லால் நான்காய் -வளமொக்கும்

பூபழங்கள் செய்வி, இரண்டிரண்டு நன்கிளைகள்
பூபழங்கள் ஏந்திடச் செய்திடு -தீபமாக்க

ஏழு அகல்களைச் செய்திடு நேரெதிராய்
ஏழும் எரியும் படியேற்றி -ஏழிற்கு

கத்தரிகள் சாம்பற் கலமதை தூய்பொன்னால்
அத்தனையும் செய்திடு வாய்சீராய் -அத்தார்

ஒருதாலம் பொன்னாலே செய்திடுவாய் மூட்டு
ஒருவகையும் மாறாகச் செய்யா -திருந்திடு

குன்றின்மேல் காண்பித்த மாதிரி போலேயே
நன்றாகச் செய்திடு வாய்
திருப்பயண கலி 63

கூடாரம்


நீலநூல், பஞ்சு, சிவப்புநூல், பட்டுமாக
நாலுநூல் கொண்டுதிரை செய்வாய்நீ -சேலையாய்

மூடுதிரை பத்து; வியன்வேலை சித்திரமாம்
மாடுயர் கேரூபீன் செய்சீரே -மூடவே

மூடுதிரை நீளம் இருபதும் எட்டுமாக
மூடகலம் நான்கு முழமாமே -மூடுதிரை

பத்தும் ஒரளவாய் தானே யிருந்திட
பத்துதிரை ஐந்தைந்தாய்ச் சேர்த்திட்டு -பத்தும்

இணைத்தத் திரையின தோரத்தில் நீல
இணைநூலால் காதாக்கிச் செய்வாய் -இணைத்திட

ஐம்பதுக் காதுகளைச் செய்வாய் இருதிரை
ஐம்பது பொன்கொக்கிச் செய்திடு -ஐம்பது

பொன்கொக்கி சீராய் திரைகள் இணைத்திட
பின்பார் அதுவே மதிலாகும் -பின்செய்வாய்

கூரைக்கு ஆட்டு மயிரால் பதினொன்று
கூரை திரையளவு முப்பதடி -கூரைத்

திரையகலம் நான்கே; பதினொன்று; ஆறாம்
திரைஐந்தாய் வைப்பாய்நேர் காது -திரைசேர்க்க

ஆறாம் திரையின் ஒருதிரை தன்னையே
வேறாய் முகப்பில் மடித்திட்டு -ஆறைந்தை

வெங்கலக் கொக்கிகள் செய்வித் திணைத்திடு
அங்கே இணைத்தாலே கூடமாம் -அங்கேசீர்

உள்ளதில் மீதித் திரையது பின்புறம்
உள்ளிடந் தொங்கிட, கூடார -தெள்திரை

நீளத்தின் மீதி முழமிரு பக்கமாய்
நீளத்தில் தொங்க விடுசீரே -நீளம்பின்

கூடாரம் மேலே கடாத்தோலால் மூடியப்பின்
கூடாரம் மேலே தகசுத்தோல் -கூடாரம்

வாயிற் கதவாக சீத்திம் மரப்பலகை
வாயிற் முழமளவு பத்தடி -சேயோனே

வாயிற் அகலமுழம் ஒன்றரை வைத்திட்டு
வாயிற் பலகைகள் ஒன்றோடு -வாயிலைச்

செய்வாய் இருபது வெள்ளியால் காலிரண்டு
செய்திடு தெற்கு திசைக்கென -செய்வாய்

வடக்கிற்கும்; செய்வாய் கதவு இருப(து)
இடப்புறம் மேற்கிலே ஆறு -இடமிரண்டில்

ஈரென் றிசைத்துச்செய் மேல்வளையம் மூலைக்கு
சீராகச் சொன்னார் இறைவனார் -சீராக

எட்டுப் பலகைகள் செய்வி பதினாறு
எட்டுப் பலகைக்கு வெள்ளியில் -தட்டி

மரச்சித்திம் தாழ்ப்பாள் பதினைந்தைச் செய்து
தரப்பலகை பாய்ச்சு நடுவே -மரங்களை

பொற்றகடால் மூடு பலகை, வளையங்கள்
பொற்றகடால் செய்த்தாழ்ப்பாள் நல்விதம் -பொற்றகடு

போர்த்திட்ட சீத்திம் மரத்தூண்கள் தாங்கிடும்
போர்த்திரை பட்டு வியனாய்ச்செய் -போர்த்தி

திரைச்சீலை உள்ளே இருக்குமிந்த பெட்டி
திரைச்சீலை தானே தலத்தில் -திரைக்கு

வெளியிடம் தூயதாம் உள்ளிரும் பெட்டி
தெளிதூய் இடமே சிறப்பு -அளிநல்

தெளிதூய் இடத்தில் இரக்கப் பலகை
தெளிதூய் இடத்தில் திரைப்பின் -வெளிப்பலகை

தென்புறம் குத்து விளக்கும் எதிர்வடக்கே
நன்பலகை வைப்பாய் நனியவா -நன்றது

நீலநூல், பஞ்சு, சிவப்புநூல், பட்டுமாக
நாலுநூல் கொண்டுதிரை செய்வாய்நீ -சேலையில்

சித்திரம் செய்வித்து சித்திம்மால் ஐந்துத்தூண்
அத்தனை வெங்கலக் கால்செய்வாய் -அத்தவா

எல்லா மரத்தையும் பொற்றகடால் மூடுவாய்
வல்லார் இறைவனார் காண்பித்தார் -எல்லாமே

செய்வாய் படியேநீ கீழிறங்கி என்றுரைத்தார்
மெய்யார் இறைவன் உரை
திருப்பயண கலி 64

பலிபீடம்


சீத்திம் மரத்தால் பலிபீடம் செய்திடு
சீத்திம் முழமைந்து நீளகலம் -சீத்திம்

மரத்தினை மூடிடுவாய் வெண்கலத்தால் நீயும்
மரத்தில் உயரமடி மூன்று -மரத்தின்

பலிபீட நான்மூலை வெண்கலமேற் கொம்பு
பலிபீடத் தோடே இசைத்து -பலியின்

எரிசாம்பல் நீயெடுக்க வெண்கலச் சட்டி
கரண்டிகள் முட்துறடு செய்வாய் -கரத்தால்

வலைப்பின்னி வெண்கலச் சல்லடையைச் செய்து
வலைதன்னை பீடத்தின் பாதி -நிலைஉயரம்

தாழச்செய்; பீடத்தின் சுற்றினுள் வைத்திடு
தாழ வகைச்சொன்னார் வேள்சீரார் -வேழார்

பலிபீடம் தூக்கிட சீத்திம் மரத்தால்
பலிபீடத் தண்டுகள் செய்து -பலிபீடத்

தண்டுகள் வெண்கல மேற்றகடால் மூடுவாய்;
தண்டை வளையத்தில் பாய்ச்சு
திருப்பயண கலி 65

பிரகாரம்


செய்வாய் இடைவெளி விட்டு பலிபீடம்
செய்வாய் மலைமேலே கண்டபடி -செய்வாய்

தலத்திற்கு சுற்று நடைவெளி; தெற்கே
தலத்தின் வெளித்திரை பஞ்சு -தலமது

நூறு முழவகலம் அந்த வெளித்திரை
நூறு முழமும் வெளித்தொங்க -நூறுமுழம்

தாங்க இருபது தூண்களும்; தூண்களைத்
தாங்க இருபதுகால் செய்திடு -தாங்கிடும்

தூண்களை வெண்கலம் கொண்டுச்செய் தூண்களின்
பூண்களும் கொக்கிகளும் வெள்ளியாம் -தூண்கள்

வடதிரை நூறு முழவகலம் செய்து
வடக்கில் இருபது தூண்வை -வடதென்

இருதுருவம் ஒன்றேப்போல் செய்வாய் தலத்தில்
திரைத்தூண்கள்; கீழ்திசை யில்நீ -திரைச்செய்வாய்

ஐம்பது நீளமுழம்; மூன்றாய்ப் பிரித்திடு
ஐம்பதை மூவைந்(து) இரண்டாமே -ஆம்நீயும்

ஐம்பதை மூவைந்(து) இரண்டு, இருபது
ஐம்பதின் மூன்றில் வலப்புறம் -ஐம்மூன்றும்

பின்னர் இடப்புறம் ஐம்மூன்றும் பத்திரு
நன்நடுவே செய்வாய் திரைதனை -அன்னவா

கீழ்திசை வாயிலை நீலநூல் பட்டுநூல்
ஆழ்கலை வேலையாய் செய்திடு -கீழ்வாயில்

தூண்களாம் நான்குந் திரையேந்தி நின்றிட
தூண்களின் கால்களும் நான்காக -தூண்சீர்

நடைவெளியின் தூண்களெல்லாம் வெள்ளியால் பூண்செய்
நடைவெளியின் கொக்கிகள் வெள்ளி -நடைவெளியின்

தூண்களின் கால்களோ வெண்கலம் என்றிருக்க
தூண்சேர் திரைமுழம் நூறு
திருப்பயண கலி 66

கூடார விதிகள்


தூய்தலத்தின் குத்து விளக்கு எரிவதற்கு
தூய்மக்கள் காணிக்கை பெற்றிடு -தூய்விளக்கின்

எண்ணெய் ஒலிவத்தால் செக்கிடித்து பின்தெளிந்த
எண்ணெய் கொடுத்திடச் சொல்வாய்நீ -எண்ணியே

தூய்தலத்தில் தூய்விளக்கு ஆரோன் வழித்தோன்றல்
தூய்வழியாய் நின்றிருந்து செய்யட்டும் -சாய்ஞா

தொடங்கி விடியல் வரையில் எரிய
விடவேண்டும் குத்து விளக்கு -அடுத்தார்

தலைமுறை தோரும் நியமம் இதுவே
தலைமுறை ஆரோன் புரிய -தலைமுறை

மாறாது இந்நியதி என்றுரைத்தார் நன்கர்த்தர்
மாறாத நன்னியதி ஈந்தவர் -மாறாது

ஆரோன் தலைமுறை என்முன் இருப்பாரே
சீராண் குலத்தவர் என்று
திருப்பயண கலி 67

ஆரோனின் ஆசாரிய ஆடை


கர்த்தர் உரைத்தார் பிரித்தெடு ஆரோனை;
கர்த்தருக்கு ஆசரிய ஊழியம் -கர்த்தர்

தலத்தில் புரிந்திட ஆரோன் புதல்வர்
தலைநால்வர் தன்னைப் பிரித்து -தலைமகன்

மேன்மை அலங்காரம் என்றிருக்க ஆரோனின்
மேன்போர்த்தும் நல்லுடை செய்வாய்நீ -மேன்போர்த்தும்

நல்லுடை செய்விக்க நல்மதி கொண்டோர்சொல்
நல்லுடை செய்வீர் சிறந்துநீர் -நல்லாணின்

மார்ப்பதக்கம், ஏபோத்து, அங்கியும், உள்சட்டை
நேர்ப்பாகை கச்சையிடை இவ்வாறும் -நேர்மகன்

ஆரோனின் ஆசரிய ஊழிய ஆடைகள்
நேராண்கள் சேர்கட்டும் நூலால்செய் -சீரவர்க்கு

பொன்னூல் இளநீல நூலாலும் ஏபோத்து
மென்சிவப்பு நூலும் திரிபஞ்சும் -பின்னிடுவீர்

மேன்வியன் வேலையாய் செய்திடுவீர் ஏபோத்து
மேன்தோள் இணைப்பீர் முனைகளை -மேன்சீராய்

மேல்கச்சை செய்வீர் வியன்வேலை நூல்நெய்து
மேல்கச்சை ஏபோத்து ஒன்றாக -மேல்நெய்து

மேல்கச்சை நூல்கள் இளநீலம் பட்டுநூல்
நூல்சிவப்பும் மற்றது பஞ்சாலே -மேல்செய்வாய்

கோமே தகக்கற்கள் ஈரெடுத்து பன்னிருப்பேர்
கோமே தகக்கற்கள் மேல்வெட்டு -கோமே

தகக்கற்கள் ஒன்றின்மேல் ஆறுபெயர் கோமே
தகக்கல் இரண்டின்மேல் ஆறு -அகத்தார்

பிறப்பின் வரிசைப் படிகல்மேல் வெட்டு
சிறப்பினம் கோமே தகக்கல் -சிறப்பாய்

இரத்தின வெட்டுவேலை ஒப்பாகச் செய்வாய்
இரண்டுகல் தன்னில் பெயர்சீர் -இருக்கநல்

பொற்குவளை தன்னில் பதிப்பாய் பெயர்கற்கள்
பொற்குவளை கற்களை தோளேந்தி -கற்கள்

இரண்டும் நினைவுக் குறியாய்ச் சுமந்து
வரவந்த ஏபோத்தில் வைப்பாய் -நரனேநீ

பொன்னால் வளையங்கள் செய்து அளவாக்கி
பொன்னால் இரண்டாகச் சங்கிலிசெய் -பொன்வளையில்

சங்கிலிகள் பூட்டி நியாய விதிமார்மேல்
தங்கப் பதக்கத்தை செய்திடு -தங்கும்

நியாய விதிமார்மேல் தங்கப் பதக்கம்
வியன்வேலை ஏபோத்தைப் போலே -வியநூல்

சிவப்பும் இளநீலம் பட்டும்மென் பஞ்சு
இவைவைத்துச் செய்வாய் சிறந்து -அவன்சீர்

நியாய விதிமார்மேல் தங்கப் பதக்கம்
வியன்வேலை ஈராய்ச் சதுரம் -நியனளவு

சாண்நீளம் சாண்அகலம்; நான்குபத்தி கற்களை
ஆண்பதிப்பாய் பல்விலையக் கல்தனை -ஆண்சீராய்

முன்பத்தி பத்மராகம், புட்பராகம் மாணிக்கம்
பின்னிரண்டில் நீலம் மரகதம் -என்றுவைத்து

வச்சிரம் கொண்டு இரண்டாக்கி மூன்றிலே
கச்சையில் கெம்பு முதலாமே -கச்சையில்

மூன்றிலே மற்றது வைடுரியம் நாறுக்கல்
நான்படிகப் பச்சை நிறக்கல்லாம் -நான்கில்

இரண்டது கோமே தகயசுபி கற்கள்
நரன்மேலே போர்த்த அதுதான் -நரன்சீராய்

பன்னிரு கற்களும் நல்இசுரேல் பேர்பதித்து
பன்னிரு நற்குல பேர்களும் -பன்னிரு

கற்கள்; இலச்சினை வெட்டாக வெட்டிடு
கற்கள் பெயர்கள் சிறந்துநீ -கற்கள்சேர்

மார்பதக்க பக்கங்கள் பின்னிடு பொன்னாலே
மார்சுற்று சங்கிலிகள் பொன்வளையம் -மார்மேல்

இரண்டாக வைத்து இசைத்திடு ஏபோத்
இரண்டு நுனிகளை முன்சேர் -திருவாய்

இருபொன் வளையங்கள் செய்து பதக்கம்
இருபக்க மற்றதில் ஓரம் -இருவளையம்

தைத்திட்டு வேறே இருவளையம் செய்திட்டு
வைத்திடு கச்சையின் மேல்சீராய் -தைத்தவம்

மார்ப்பதக்கம் ஏபோத் வியன்கச்சை மேலாக
மார்ப்பதக்கம் ஏபோத் வழுநீங்கா -சேர்க்கட்டு

நீலநிற நாடாவால் பொன்வளையம் தன்னையே
சீலன் நினைவாய் புகச்செய்வாய் -ஆலனே

மார்பதக்கம் தன்னில்வை ஊரீமும் தும்மீமும்
மார்பதக்கம் ஆரோன் தரித்தேதான் -பார்தூய்

தலத்துள்ளே வந்திடச்சொல் தூய்முன்னே நாளும்
தலத்துள் நினைவு இனத்தின் -மலரவன்

ஏபோத்தின் கீழ்அங்கி நீலநூலால் நெய்திடு
ஏபோத் தலைநுழைவு மார்பதக்கத் -தைபோலே

ஏபோத்தின் கீழோரம் மாதளம் பொன்மணி
ஏபோத்தில் தொங்கிட வைத்திடு -ஏபோத்து

ஓரங்கள் சுற்றியும் மாதளம் பொன்மணி
ஓரத்தில் தொங்கிட ஆரோனும் -சீராக

ஆசரிய ஊழியம் செய்திட வந்தாலே
ஆசரியன் ஆடை ஒலிக்கவே -ஆசரியன்

ஆரோன் ஒலியிட சாகான் தலத்திலே
சீராணின் பாகை இலச்சினையாய் -நேராண்

இறைவனுக்குத் தூய்மை எழுதிட்டு நேராண்
இறைமுன்னர் நெற்றியில் போட்டு -இறைக்கு

பலிசெய்யும் போதும் இறைமுன்னர் பாகை
பலிதன்னை ஆரோன் சுமக்க -பலிதன்னை

நேராய் இறைவனும் ஏற்க அணிந்திடுக
நேராண் வியன்பாகை தானதை -சீராகக்

கட்டிடு நீலநூலால் பாகையில் பொற்றகடை
சட்டையை மென்பஞ்சு நூலாலே -திட்டமாய்ச்

செய்திடு உள்ளணிய; பஞ்சாலே பாகையும்
செய்வாய் வியன்வேலை யாயங்கு -செய்திட்ட

இவ்விதம் ஆரோன் புதல்வர் தகைச்சேர்த்து
அவ்வாறே செய்திடு அங்கியுன் -அவ்விதம்

மேன்மை அலங்காரம் கச்சைகள் குல்லாக்கள்
மேன்மை அணியச் சிறந்து
திருப்பயண கலி 68

ஆசாரிய ஊழியத்திற்கு ஆரோன் குமாரரை அழைத்தல்


உன்தமையன் ஆரோன் தகைப்புதல்வர் சேர்ந்தெனக்கு
நன்றாக ஆசரிய ஊழியம் -நன்செய்ய

செய்திட்ட ஆடைகள் போட்டு திருக்குளியல்
செய்வித்து செய்தூய் நிலையாணை -செய்திடு

சேர்வேளை அம்மணம் தன்னை மறைத்திட
சேர்சணலால் சல்லடம் செய்வித்து -சேர்சணல்

ஆடை தொடைவரை மூடவே நெய்திடு
ஆடை அணிந்திடச் சொல்வாய்நீ -ஆடைகள்

ஆசரிப்புக் கூடாரம் உள்ளே வரும்போது
ஆசரியர் செய்பலி போதுமிவ் -ஆசரிய

ஆடை அணிந்திருக்க ஆரோன் தலைமுறை
நாடட்டும் இல்லையேல் சாவரே -நாடதில்

ஆரோன் வழித்தோன்றல் ஆசரிய ஊழியம்
நேராகச் செய்ய நடத்து
திருப்பயண கலி 69

ஆரோனின் பிரதிஷ்டை


பலிகொடு காளையும் ஈராடும் தேர்ந்து
பலியாய் புளிப்பிலா அப்பம், -பலியிலே

எண்ணெய் புளிப்பில்லா நல்லடைகள் கோதுமை
எண்ணெய்சேர் மாவினால் செய்வித்து -எண்ணியே

செல்கூடை தன்னிலே வைத்திடு சீரவனாம்
அல்லாண் திருக்குளியல் செய்வாய்நீ -எல்லா

புதல்வர் தகைத்து; திருதமையன் ஆரோன்
அதிலே திருவாடை ஏபோத் -அதுகூட

மார்பதக்கம் கச்சையும் பாகையும் செய்ததை
சேர்தமையன் மேலே உடுத்துவி -நேர்சீர்

தலைமேலே நாறெண்ணெய் வார்த்திடு சீராண்
நலப்புதல்வர்க் அங்கி உடுத்தி -நிலைப்படுத்து

ஆரோன் தகைப்புதல்வர் தன்னை நிலையிலே
காளை தலைமேல் புதல்வர் -நிலைவைக்க

ஆரோன் புதல்வர் தனின்பாவம் நீங்கிட
சேரந்த காளை பலியிடு -நேராம்

குருதிச் சிறிதளவு பீடக்கோல் இட்டு
குருதியின் மீதியை பீடம்கீழ் -சேர்ஊற்று

தீயால் பலிபீடம் காளை நிணமெரித்து
தீயால் வெளித்தோல் எரித்திடு -தீயில்

உடலை பலிபீடம் மேலேதான் காளை
குடல்கள் கொழுப்பும் இரண்டும் -உடலது

குண்டிக் கொழுப்புஞ்சேர்க் கல்லீரல் சவ்வையும்
அண்டி எரிப்பீர் பலிதனை -மண்டிய

மற்ற நிணமெல்லாம் சேர்த்து வெளியிலே
அற்றதாய் தீயிட்டு சேர்த்தெரிப்பீர் -கற்றிடுவீர்

பாவநீக்கும் நேர்பலி யீதே; கடாவிரண்டில்
தீவைப்பீர் ஒன்றை யெரிபலி -தீயால்

கடாமுழுதும் பீடம்மேல் போட்டெரிப்பீர் வேக
கடாயெரிக்கும் முன்னாகக் கைகள் -கடாமேலே

ஆரோன், புதல்வர்கள் கைவை; இதுதானே
சீராய் எரிபலி கேள்சீரோய் -சீரான்

எரிபலி நாற்றம் நுகர்வேன் இறையான்
எரிபலி செய்யும் விதத்தை -சரியாய்

செவிகொடு மோசே; தமையனாம் ஆரோன்
செவிகேட்க சொல்வாய் சிறந்து -புவியிலே

ஆரோன் புதல்வர்கள் கைவைத்து மற்றாட்டின்
சீராம் குருதியை வைப்பாயே -சீராணின்

காதுமடல் சீராண் புதல்வரின் காதுமடல்
காது வலதிலே வைத்திடு -காது

வலதுக்கை கட்டை விரலிலும் மற்றும்
வலதுக்கால் கட்டை விரலில் -நலபார்ப்பை

வைத்து பலிபீடம் சுற்றி தெளிபார்ப்பு;
வைத்த தெடுத்து இடுவாயே -வைத்த

பலிபீடம் மேலிருக்கும் எண்ணெய் குருதி
பலிபீடம் மேலிருந்து வந்த -நலக்குழம்பை

ஆரோன் புதல்வர்மேல் நீதெளித்து தூய்ப்படுத்து
நேரால் புதல்வர் சிறப்பது -சீராய்

கொழுப்பையும் வாலையும் கல்லீரல் சவ்வு
கொழுப்பு மறைத்த குடல்கள் -கொழுப்பினது

குண்டிக்காய் முன்னந் தொடைவலது அப்பமும்
எண்ணெயிட்ட அப்பமும் சேர்த்துநீ -எண்ணெயொடு

சேர்த்தந்த நல்லுணவை என்வீட்டில் தானசைக்க
நேர்மக்கள் கைக்கொடுத்து உள்ளங்கை -நேர்சேர்த்து

சேர்ந்தோர் அசைத்து, எரிபலி யோடேதான்
சேர்த்து எரிப்பீர் இவைதனை -நேர்சீர்

நிலைப்படுத்த செய்த பலியாமே ஆக
நிலைப்படுத்தும் உன்பங்கு மார்பு -நிலைபடுத்தும்

எப்பலியும் இவ்வாறே மார்பும் தொடைமுன்னும்
எப்போதும் தூயதே கேள்சீரே -அப்பண்டம்

ஏறெடுத்து செய்வதால் அப்பங்கு சேர்ந்திடும்
ஏறெடுக்கும் ஆரோன், புதல்வர்க்கு -ஏறெடுக்கும்

ஆரோனின் ஆடைகள் சேரும் புதல்வர்க்கு
ஆரோன்போல் செய்யச் சிறந்துநீ -சீராணாம்

ஏழுநாள் ஆரோன் நிலைப்படுத்த மாக்களை
ஏழுநாள் செய்வாய் பலிதனை -ஏழுநாள்

காளை பலிசெய்து பாவம் மறைநீங்க
வேளை புதல்வர் புசிக்கச்சொல் -வேளைப்பின்

மீந்த நிணத்தை புசியா எரிப்பீரே
மீந்த நிணமது தூயதே -ஈந்த

இனத்தாரில் ஆரோன் புதல்வர் புசிக்க
இனத்தாரில் மற்றோர் விடுத்து
திருப்பயண கலி 70

பலிகளுக்கு அடுத்த நியமங்கள்


பலிபீடம் மேல்படும் யாவும் மிகத்தூய்
பலிபீடம் மேல்பலி நாளில் -பலியிரண்டு

ஆட்டினது குட்டி ஒருவயது காலையில்
ஆட்டின் மறுவொன்(று) இரவுபலி -ஆட்டின்

பலிநேரம் பத்திலொரு பங்கு சிறுமா
பலிவகை காற்படி எண்ணெய் -பலிபிசைந்து

நன்சாறு காற்படி ஆட்டுடன் சேர்கொடுத்து
நன்நாற்றம் மாலை எரித்திடுவீர் -நன்கர்த்தர்

நான்பேச வந்திறங்கும் வீட்டினது வாயிலில்
நான்வாசம் செய்திடும் மக்களிடை -மேன்பலிகள்

கேளிவை; அங்கே இசுரேலைச் சந்திப்பேன்;
கோளிலே ஓரிடம் தான்சீரே -கோளிலே

என்மேன்மை அவ்விடத்தில் வீசிட; அவ்விடத்தில்
என்மக்கள் சந்திப்பேன்; என்மக்கள் -என்னை

அறிந்திடுவர் தங்கள் நடுவே வசிக்கும்
அறிதேவன் நன்றாய் இறை
திருப்பயண கலி 71

தூப பீடம்


சித்திம் மரத்தினால் நாறுபுகை பீடம்செய்
சித்திம் மரநீளம் ஒன்றாகி -சீத்திம்

மரவகலம் ஒன்றே சதுரமாய்ச் செய்வாய்
மரவுயரம் பீடம் இரண்டு -மரத்தினால்

கோடது சித்திமின் கோலாம் பசும்பொன்னால்
கோடில் உடுத்தி பலகைமுன் -கேடிலிர

வீடுதன்னின் மாதூய் தலத்திரை முன்னராய்
பீடத்தில் நாற்றம் எழுப்பவே -ஆடவன்

சேன்நாறு பீடப் புகைதன்னை நாள்தோறும்
மேன்மகன் ஆரோன் புகைக்காட்ட -மேன்வேளை

மேன்மகன் காலையும் மாலையும் மற்றுமாய்
மேன்விளக்கு தேய்வேளை தான்சீராய் -மேன்சீர்

தலைமுறையாய் செய்வீர் புகைப்பீடம் மேலே
நிலைநியமம் ஈதே இனத்தார் -நிலைச்செய்ய

பீடம்மேல் வேறு புகைகாட்ட வேண்டாமே
பீடம் பலியிடாதீர் வேறாக -பீடத்தின்

நாறுபுகை கொம்பின்மேல் ஆண்டுதோறும் பாவபலி
கீறுபார்ப்பை ஆரோன் தெளித்திட -நாறுபுகை

பீடத்தை தூய்மையாக்கி ஆண்டுதோறும் செய்திட்டு
பீடமது மாதூய் சிறப்பு
திருப்பயண கலி 72

மற்றவர்களை மீட்க பொன் வாங்குதல்


இறைவனார் கர்த்தர் தொடர்ந்து பகன்றார்
நிறைமக்கள் எண்ணும் வகையே -இறைமுன்னே

தூய்மையாய் நின்றிட மீள்பொருளை மக்களவர்
தூய்கர்த்தர் காணிக்கை வாங்கிடு -தூய்பொன்

அரைசேக்கல் தந்திடட்டும் தூய்வீட்டில் தானே
அரைசேக்கல் தன்னது கேரா -இருபது

தந்திடுவர் மக்கள் வயது இருபதிற்கு
அந்த வகைச்செய்வர் மீட்பையவர் -வந்த

வளவன் அதிகமாய் தாராது இல்லோன்
வளங்குறை தாராது நிற்க -வளமோ

இனமக்கள் பாவநீக்கு காணிக்கை, வைப்பாய்
நினைக்குறியாய் கூடாரத் துள்நீ -அனைத்துமே

கூடாரத் துள்ளப் பணத்தை செலவிடுவீர்
கூடாரத் தேவைக்காய்; பாவபலி -தேடுமக்கள்

செய்விதம் தன்னை இறைவனார் சொன்னாரே
செய்திடக் கூடாரத் துள்
திருப்பயண கலி 73

ஆசாரியர் கழுவ வெண்கல தொட்டி


கழுவிட வெண்கலத்தால் தொட்டியை வைப்பாய்
கழுவிடம் பீடம் அருகே -கழுவிடநீர்

ஆரோன் புதல்வர்கள் கால்கைகள் தன்னையே
சீராய் கழுவிடச் சொல்லிடு -சீரவர்

கூடத்துள் வந்திடும் முன்னர்ல் பலியாக
பீடம்மேல் சேர்த்தெரிக்கும் முன்னாக -நாடனை

நீரால் கழுவிப்பின் வந்திடச் சொல்லிது
நேராண் தலைமுறையாய்ச் செய்யச்சொல் -நேராம்

தலைமுறை தோறுமவர் சாகாத வண்ணம்
நிலைவரும் முன்னராய் கைக்கால் -தலையாய்க்

கழுவிடச் சொல்வாய் நியமமிது என்றும்
கழுவாது வாராதே உள்ளே -கழுவவே

வெண்கலத்தால் நீர்தொட்டி வைத்திடச் சொன்னாரே
அண்ணன், வழியோர்க்கு நீர்
திருப்பயண கலி 74

அபிஷேக தைலம் செய்முறை


மேன்நாறு வர்க்கமாம் வெள்ளையான போளத்தில்
மேன்சேக்கல் ஐந்நூறைக் கொண்டெடுத்து -சேன்நாறு

பட்டை இருநூற்று ஐம்பதை கொண்டெடுத்து
பட்டை எடைக்கொள் வசம்பது -மட்டில்

இலவங்கம் ஐந்நூறு சேக்கல் எடுத்து
ஒலிவெண்ணெய் நன்றாய் குடமாம் -கலந்திவை

செய்குவீர் தூய்க்குளியல் எண்ணெய் அரசருக்கு
நெய்வர்க்கம் போலிதைச் செய்திடு -நெய்யது

செய்தந்த நாறுதைலம் மாதூய எண்ணெயாமே
செய்த அனைத்தும் இதனாலே -நெய்தெளித்து

ஆரோன் புதல்வர் குளிப்பாட்டு; எண்ணெயிது
சீராய்த் தொடுமெல்லாம் தூயதாகும் -சீரிதைச்

செய்முறை தூய்முறை ஆதலால் பின்வழி
செய்யாதீர் வேறொரு எண்ணெயை -செய்யெண்ணெய்

ஊற்றாதீர் மக்கள்மேல் ஏனென்றால் ஈதேதூய்
நாற்றெண்ணெய் உங்களுக்கு தூயதாம் -நாற்றெண்ணெய்

இவ்விதம் தன்னுடல் நாறச்செய் மானுடன்
இவ்விதம் செய்தால் அறுப்புண்டு -அவ்வாறு

செய்யா திருந்திடச் சொல்வீர் இனமக்கள்
செய்யாது பின்பற் றிட
திருப்பயண கலி 75

தூப தூள் செய்யும் முறை


தூய்வெள்ளைப் போளமும் குங்கிலியம் அல்பானும்
தூய்சாம் பிராணியும் ஓரெடை -தூய்பொடித்து

தூய்வீட்டில் வைத்திடு; இப்பொடியும் தூயதே
தூய்மக்கள் சந்திப்பேன் வீடுதனில் -தூய்புகைச்

செய்முறை தூய்முறை ஆதலால் பின்வழி
செய்யாதீர் வேறு பொடிதன்னை -செய்ப்பொடி

மக்கள் நுகராதீர் என்றென்றும் ஈதேதூய்
மக்களிடம் சொல்லிது தூய்செய்சீர் -தக்காது

இவ்விதம் தன்நாசி நாறச்செய் மானுடன்
இவ்விதம் செய்தால் அறுப்புண்டு -அவ்வாறு

செய்யா திருந்திடச் சொல்வீர் இனமக்கள்
செய்யாது பின்பற் றிடசொல்வாய் -செய்யாதீர்

எண்ணெய் புகைத்தூள் முறைபோல என்றென்றும்
எண்ணி விடுவீர் சிறந்து
திருப்பயண கலி 76

பேசலெயேல் அகோலிபாம் இருவரையும் கர்த்தர் பெயர்சொல்லி அவர்களுக்கு ஞானம் தந்தேன் எனக் கூறுதல்.


அழைத்தேன் பெசலெயேல் யூதா குலத்தான்
விழைமுன்னோர் ஊர்பாட்டன் ஊரி -விழைமகன்

வேலை வியன்செய்ய, பொன்வெள்ளி வெண்கலம்
வேலை இலச்சினை வெட்டவே -வேலையிம்

ஞானமும் நற்புத்தி தந்தேன் அவன்மேலே
ஞானம் நிறையாவி தந்தேன்நான் -ஞானம்

அளித்தேன் குலத்தாண் அகோலியாப் தன்னே
களிப்பாகச் செய்வர் சிறந்து -அளிசீராம்

கூடாரம் பெட்டி இரக்கப் பலகையும்
கூடப் பணிமூட்டு எல்லாமே -கூடார

குத்து விளக்கு, புகைப்பீடம் மற்றுமாய்
அத்தவர் பீடம்செய் வர்சீராய் -அத்தாண்

வழிபாட்டு ஆடைகள் ஆசரியன் ஆரோன்
வழிபட ஆரோன் புதல்வர் -வழிமேல்

வழிந்தோடும் நாறெண்ணெய், தூபத்தின் வர்க்கம்
வழிப்பாடு செய்திடச்செய் வர்சீர் -வழியார்

இனமக்கள் தன்னின் செவிகேட்கச் சொல்வாய்
இனத்தாரை ஓய்வுநாள் கைக்கொள் -இனத்தார்

தலைமுறை தோறும் அடையாளம் தூய்செய்
தலைக்கர்த்தர் யானே இறை
திருப்பயண கலி 77

ஓய்வுநாளை உடன்படிக்கையாக சொல்லுதல்


இதனாலே ஓய்வுநாட்கள் கைக்கொள்வீர் மக்காள்
அதுதூய்நாள் அந்நாளில் வேலை -விதம்செய்வோன்

போவான் அறுப்புண்டு ஏனென்றால் வேலைசெய்து
மேவிக் குலைத்தான்நாள் ஓய்வுதனை -மேவியே

வாரத்தில் ஆறுநாள் செய்வேலை ஏழாம்நாள்
வாரத்தின் ஓய்வுநாள் ஆதலால் -சேராது

வேலைப் புரிவோனைக் கொல்வாய், வழிவழியாய்
வேலையோய்வு ஈதே முறையிங்கு -சீலார்

உடன்படிக்கை கைக்கொள்வீர் ஓய்வுநாள் தன்னை
அடையாளம் நம்மிடையே ஏனென் -நடைப்படுத்த

கர்த்தரவர் செய்தார்விண் மண்ணுலகு ஏழாம்நாள்
கர்த்தரவர் பூரித்து ஓய்ந்ததால் -கர்த்தர்

மலைதன்னில் பேசி முடித்து திருக்கை
பலகைக்கல் தந்தார் இரண்டு -பலகையில்

சான்றாய் விரலால் எழுதி திருமகன்கை
கோன்தந்தார் விண்ணார் இறை
திருப்பயண கலி 78

இசுரேல் இனமக்கள் மோசே திரும்பி வராததைக் கண்டு தங்களுக்கு முன்செல்ல தெய்வம் செய் என்று ஆரோனிடம் கேட்க; அவன் கன்றுக்குட்டி சிலையை வடித்தல்.


மோசே மலைமேலே போனதும் மூப்பரவர்
மோசே வருவாரென் காத்திருக்க -மோசே

வரநாட்கள் ஆனதும் போயினர் சோர்ந்து
திரைமுகில் தீயெரி கண்டு -சிரமதைத்

தீயால் மலைமூடி குன்றாப் புகையெழும்ப
தீயேதும் ஆயிற்றோ என்றவர் -சேயோனாம்

மோசே மரித்தானோ இல்லையோ என்றறியோம்
மோசேறு குன்றின்மேல் தீயாமே -மோசமாய்

மூப்பர் இதைக்கண்டு சென்றார் தமையனிடம்
மூப்பே நிலையறியோம் மோசேயின் -தீப்போர்

பலவரும் நாடு வழியில் அதனால்
நிலைதெய்வம் செய்வீர் தமனே -அலையாது

முன்செல்லும் தெய்வம் நிலைவேண்டும் என்றழுத்த
முன்மனைவி மக்கள் அணிசேர்த்து -முன்செல்ல

வன்சிலையை வார்ப்பித்தான் ஆரோன், கலைசெய்யும்
மென்சிற்பி யின்கருவி கன்றுசிலை -அன்றியும்

முன்செல்லும் தெய்வங்கள் என்றுரைத்தார் தீதாக
முன்செய்தார் வன்பாவம் அன்றுதான் -வன்னவன்

ஆரோன் அதன்முன்னர் வன்பலி செய்திட்டு
ஆரோன் உரைத்தான் திருநாளை -நேராகச்

செய்வீர் உரைக்கேட்டோர் போனார் மகிழ்வாக
செய்தாரே வன்னாய் குடித்துகெட்டு -செய்தனர்

மக்கள் நிலைக்கெட்டுப் போயினர் வன்னாக
மக்கள் திருநாளைக் கொண்டாடி -தக்கில்

தகவிலார் செய்தார் குடிபோதை தன்னில்
தகைத்தார் விளையாட வன்னே -இகத்திலே

கீழ்நடக்கும் வன்செய்கை மேலிருக்கும் கர்த்தருக்கு
சீழ்கெட்ட இச்செயல்கள் கண்மறைவோ -கீழ்குலத்தோர்

சீழ்கெட்டார் போகீழே நீவிரைவாய் உன்மக்கள்
ஆழ்கடலுள் மூழ்கா தவர்
திருப்பயண கலி 79

கர்த்தர் கடுங்கோபம் கொள்ள மோசேயின் ஜெபம்


நான்விதித்த நல்வழியை இவ்வகையில் விட்டாரே
தான்செய்த பொற்கன்று தெய்வமென -தான்தோன்றி

வன்மக்கள் செய்தார்கள் கன்றை வழிபட்டு
கன்றைத் தொழுதார் களரிவர் -நன்றில்

வணங்காக் கழுத்துள்ள வன்னார் இனத்தார்
பணிவில்லா மக்கள் அழிக்க -வணங்குன்னை

பேரினமாய் மாற்றுவேன் என்றார் சினங்கொண்டு
பேராணோ செய்தான்மன் றாட்டுதான் -சீராரே

பேர்தோள் வலிமையால் கொண்டுவந்தீர் இம்மக்கள்
பேர்போக இம்மலையில் கொன்றாலே -பேர்பழிப்பர்

அங்கே எகிப்திலே வன்னார்; சினங்கொள்ளீர்
இங்கே பரிதபிப்பீர் நீர்தானே -இங்குமக்குள்

பற்றி எரியும் சினந்தன்னை மன்றாடி
சற்றே நினைப்பீர் தலைமுன்னோர் -வெற்றாக

உம்சொல் வழிபோகா; தந்திடுவேன் உன்வழியோர்
நம்பிக்கை செய்வீர் நினைவுதானே -அம்மாந்தன்

மன்றாட்டை கேட்ட இறைவன் சினம்மாறி
மன்றாட்டால் போனார் தணிந்தவர் -நன்கர்த்தர்

கற்பலகைக் கொண்டு வழியிறங்க கூடவந்தான்
நற்றாணாம் யோசுவா குன்று
திருப்பயண கலி 80

மோசே கீழே வந்து மக்களை தண்டித்தல்


தேவன் கொடுத்த பலகைகள் சீராக
தேவனால் செய்திரு கல்லெழுதி -மேவாண்கை

தேவ பலகைகள், நேர்மோசே அன்றேதான்
தேவ மலைவிட் டனன்சீராய் -மேவியோர்

குன்றின்கீழ் இட்ட புயல்கடல்மேல் வீசும்போல்
கன்றாலே செய்த ஒலிதன்னை -குன்றிறங்கும்

யோசுவா கேட்டபோது; போரின் இரைச்சலோ
வீசுகின்ற தேகுன்றின் கீழ்தானே -பேசினான்

மோசே அதுகேட்டு, போரின் இரைச்சலோ
வீசுவாள் வெற்றியோ அல்லது -வீசுபட்ட

தோல்வியோ வந்திடும்; ஈதில் ஒலிவேறு
தோல்களிப் பாட்டின் ஒலிதானே -ஆல்மகன்

பாளையம் வந்தனன் நேராண் நடனத்தை
ஆளவர் செய்த விதங்கண்டோன் -கோளிலே

இவ்வகை யார்செய்வார் என்றே சினந்தனன்
அவ்விரு கைப்பலகை போட்டவன் -அவ்விரண்டும்

போட்ட பலகை உடைந்திட பொற்கன்றை
போட்டுடைத்து கற்பொடி யாக்கினான் -போட்டுடைத்த

பொற்பொடியை நீரின்மேல் தூவி இனமக்கள்
பொற்பொடிநீர் வைத்தான் அருந்துவீர் -பொற்சிலைசெய்

ஆரோன் தனைநோக்கி ஏனண்ணா இப்படி
சீரில்லாச் செய்தாய் பெரும்பாவம் -நேரிம்

முறையை வழிசெய்ய செய்த பழிபோ
கறையாக்கி விட்டாய் இனமே -கறையவன்

ஆரோன் தமன்நோக்கி இம்மக்கள் தீமக்கள்
ஆரோன் தமனே சினன்வேண்டாம் -நேராக

எம்மை நடத்திட தெய்வம் உருவாக்கும்
எம்மோசே என்னானான் சொல்லேலா -அம்மான்

வறுத்திட்ட இம்மக்கள் பொன்னுடைமை தன்னை
சிறியன்யான் போட்டேன் நெருப்பில் -நிறைப்பொன்

பசுங்கன்று தீவிட்டு வந்து; நிலையை
வசைகேட்டுச் சொன்னான் தமன்
திருப்பயண கலி 81

லேவி இனத்தாரின் பக்தி வைராக்கியம்


இனமக்கள் அம்மணமாய் ஆடை உரிந்து
இனப்பகைவர் முன்னே தலைக்கீழ் -இனமக்கள்

யாரோஎன் பக்கம்? தொனிகேட்டு லேவியின்
நேராண்கள் வந்தார் அறம்பின்னே -நேராண்கள்

வெட்டிடுவீர் காண்கின்ற பாளையச் சோதரர்
வெட்டிடுவீர் சீரில்லா மக்களை -வெட்டிடுவீர்

வெட்டிக் கொலைசெய்வீர் வன்செய் இனத்தாரை
வெட்டியோர் லேவியர்க் கண்டசீர் -வெட்டியோர்

கர்த்தரவர் உங்களை வாழ்த்தும் படியாக
கர்த்தர் இனத்தாரே வந்திட்டீர் -கர்த்தர்சொல்

போலே நிலைப்பெற்றுச் செய்திடுவீர் இந்தாளில்
வேலால் தமரை கொலைதானே -வேல்கொண்ட

லேவியின் மக்கள் இறைச்சொல்லை கேட்டனர்
லேவியின் மக்கள் இறைச்சொல்லை -மேவிப்

புரிந்தார் கொலைவாளால் மூன்றா யிரம்பேர்
புரிந்தார் கொலைதானே நாளில் -வரிந்து

மறுநாள் விடியலில் மோசே இனத்தார்
மறுபடி போவேன் மலைமேல் -சிறுவர்

புரிந்த கொடிபாவம் தன்னை இறைவன்
திருவுளம் மன்னிக்க வேண்டு
திருப்பயண கலி 82

மோசேயின் வேண்டுதலும் தேவன் மக்களை சுற்றிவர முடிவெடுத்தலும்


மலைமேலே சென்று மனிதர்செய் பாவம்
சிலைவடித்தார் மக்கள் அறியா -நிலையிதை

மன்னிப்பீர் இல்லென்றால் போடும் கிறுக்கியெந்தன்
நன்னூலில்; மன்றா டினான்சீராண் -நன்னூலில்

யாரை கிறுக்கி விடவேண்டும் நானறிவேன்
நேரில்லா பாவம் புரிந்தோனே -சேராதோன்

நானே கிறுக்குவேன் நன்னூல் தனைவிட்டு
நானே நினைந்தீர்ப்பேன் வன்செய்கை -மானனே

சென்றிடுவாய் இப்போது நீபெயர்ந்து தூதனை
முன்செல்லச் சொல்வேன் இனத்தார்முன் -வன்சிலை

செய்ததால் தம்மின மக்களை வாதித்தார்
மெய்கர்த்தர் மெய்யா னவரங்கு -மெய்யாராம்

உன்முன்னோர் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு
உன்வழிக்கு நான்கொடுப்பேன் என்றுரைத்த -நன்தேசம்

சென்றிடுவீர் நீயும் அழைத்துவந்த மக்களும்
என்தூதன் செல்வாரே முன்னாக -என்றென்றும்

பாலுந் தெளிதேனும் ஓடுகின்ற தேசமது
ஆலாய் வளர்ந்திட்ட ஆறினம் -வேலால்

விரட்டுவேன் ஏத்கானான் ஏவி எமோரி
பெரிசியர் மற்றும் எபூசு -தெரியா

வழிதன்னின் உங்களை நானழிக்கா வண்ணம்
வழிமுழுதும் உம்நடுவே செல்லேன் -கழுத்து

வணங்காத மக்களே நீவிர், நிமிடம்
அணிகலன் போட்டால் அறிவேன் -வணங்காக்

கழுத்து இனமக்காள் இவ்வண்ணம் செய்வீர்
விழுசோகம் என்றார் இறைவன் -அழைத்த

இறைச்சொல் தனைக்கேட்டு மக்கள் அணிகள்
கறையாகப் போடாது வீசி -எறிந்தார்

பெயர்த்தனன் நேர்மோசே கூடாரம்; வைத்தான்
பெயர்த்துப் புறம்பாக தூரம் -பெயரிட்டான்

ஆசரிப்புக் கூடாரம், கர்த்தரைத் தேடுவோர்
தேசத்தார் வந்தார் வெளியிலே -தேசத்தார்

மோசே வழிசெல்ல காண்பார் இனத்தவர்
மோசே வழிசென்று உள்நுழைய -மோசேயின்

பின்னே அவர்கண்கள் தானிலைக்கும் கூடாரம்
தன்னுடை வாயிலில் நின்றுதான் -அன்னவன்

கூடார வாயிலுள் மோசே நுழைந்திட
கூடம் வெளியே முகிற்றூணும் -கூடாரத்

துள்ளே இறைவன் உரையாட நல்லினப்
பிள்ளைகள் வாயிலில் மண்டினர் -பிள்ளையான்

மோசேயோ, நண்பன் தனைபார்த்து பேசும்போல்
மோசே உரையாடிப் பேசினார் -மோசே

உரையாடிப் பின்சென்றான் பாளையம் உள்ளே
பிரியாதோன் யோசுவா தான்
திருப்பயண கலி 83

மோசே இறைவன் தன்னை வழிநடத்த வேண்டுதல்


மோசே இறைவனிடம்: தேவரீர் இவ்வினத்தை
தேசம் அழைத்துச்செல் என்றுரைத்தீர் -தேசம்

வழிசெல்ல இன்னார் அனுப்புவேன் என்ற
வழிதூதன் யாரறி யேனே -வழியார்சொல்

உன்னைப் பெயர்சொல்லி நானழைத்தேன் என்றீர்சீர்
உன்னை அறிந்திருக் கின்றேன்நான் -என்றே

நனிச்சொல் லுரைத்தீரே கண்ணோட்டம் கொண்டேன்
நனிச்சொற் பகன்றீர் இறைவா -நனிசொற்போல்

கண்ணோட்டம் உண்டென்றால் உம்மை அறிந்திட
கண்களில் என்மேல் இரக்கமுன்டென் -கண்ணோட்ட

உம்வழியை காட்டி அறிவியும்; இம்மக்கள்
உம்மக்கள் என்நினைப் பீர்சீரே -அம்மான்

இறைவன் திருவுளம் பற்றி உரைத்தார்
நிறைச்சமூகம் உன்முன்னே செல்லும் -இறையான்

இளைப்பாற் றுவேன்உன்னை; சொல்வரவும் ஆங்கே
இளையோன் உரைத்தான் தொடர்ந்து -திளைத்தவன்

ஐயா திருச்சமூகம் முன்செல்லா தேபோனால்
ஐயா விடுமெம்மை இவ்விடமே -ஐயாநீர்

கண்ணோட்டம் கொண்டு வருவதாலே மற்றோர்க்கும்
கண்னெமக்கும் வேறுபாடு தான்செய்வீர் -மண்ணார்

இனத்தாரே விண்ணாரின் மக்கள் அறிய
இனத்தோடு விண்ணாரும் வந்தால் -இனையில்

இனத்தாராம் எல்லாரில் என்தகை மக்கள்
இனமேற் சிறந்தவ ராமே -இனத்தின்மேல்

உன்சொல் படியேயான் கண்ணோட்டம் கொண்டேனே
உன்னை பெயர்சொல்லி நானறிந்தேன் -என்றார்

திருவே மகிமையைக் காண்பியும் என்றான்
திருவும் உளம்பற் றினார்சீர் -திருவவர்:

என்தயை எல்லாமே போகும் கடந்துன்முன்
என்பெயர் தன்னை பகன்றிடுவேன் -உன்முன்னே

யார்மேல் இரங்கிட சித்தமோ நானிரங்கி
சேர்தயை காட்டுவேன் நான்
திருப்பயண கலி 84

மோசே கர்த்தரின் மகிமையை பின்னே காணுதல்; மீண்டும் கற்பலகைகள் கொண்டுவா என்று உரைத்தல்


முகங்காணாய் மானுடா; இன்முகம் கண்டால்
தகைஉயிர் போகும்; தகைத்து -வகைக்கேள்

மலையிலே நில்லு மகிமை கடக்கும்
மலைவெடிப்பில் நானுன்னை வைத்தே -மலையாமே

கன்மலையின் சேர்வெடிப்பு மூடுவேன் என்கரத்தால்
என்மகிமை நேர்கடக்க பின்னெடுப்பேன் -என்பின்

புறம்காண்பாய் ஆனால் முகங்காணாய் என்றார்
புறம்காட்ட கர்த்தர் உளமாம் -புறம்காட்டி,

முன்நான் கொடுத்த பலகைகள் போலிரண்டு
என்முன் எடுத்திழைத்து வாயிங்கே -என்பலகை

போலே நியச்சொற்கள் நானெழுதித் தந்தசீர்
ஆலே உடைத்தாயே கல்தனை -சீலாண்

விடியலில் ஆயத்தம் ஆகி மலைமேல்
விடிகாலம் வந்திடு எந்தன் -கடிசமூகம்

யாரும் வரவேண்டாம் குன்றின்மேல் குன்றருகே
சேரா திருமாக்கள் மேய்க்கவே -சீராணும்

சேர்த்திழைத்தான் ஒப்பாய் இருபலகை காலமே
நேர்தனியாய்ப் போனான் மலைமேலே -நேர்சீர்

இறைவனார் சொன்னார் கடந்திடும் போது
இறைவன் இரக்கம், கிருபை -நிறைதயை

நீள்சாந்தம் மெய்நிறைத் தெய்வம், இறைவனார்
ஆள்மேல் இரக்கம் உடைத்தவர் -கோள்மேல்

இரக்கத்தை காத்திடுவார் ஆயிரமாய் நல்லார்
திருவழிக்கு; மன்னிப்பார் பாவம் -திருவவர்

குற்றவாளி குற்றமில்லோ னாக விடாதவர்
குற்றத்தை மூன்றுநான்காய் கேட்பாரே -அற்றவன்

மோசே தரைகுனிந்து கர்த்தர் தொழுதனன்
மோசேக்கு ஆண்டவர் கண்களில் -வீசை

தயைகிட்டின் நீரே எழுந்தருளி மக்கள்
கயமையெலாம் மன்னித்து ஏற்பீர் -அயனே

வணங்காக் கழுத்துள்ள மக்கள் இனத்தார்
பணிகின்றேன் மக்கள் நலத்திற் -கணிவாய்

புரிந்தருளும் எம்மிறையே உன்சொந்தம் ஆக்கி
சரிசெய்வீர் என்றான்மன் றாட்டு
திருப்பயண கலி 85

ஆறின மக்களோடு உடன்படிக்கை செய்யாதீர் என்று சொல்லுதல்


இறைவன் உரைத்தார் உடன்படிக்கை செய்வேன்
சிறப்பூமி மேலெந்த மக்கள் -திறங்காணா

கேளா வியச்செய்கை உன்மக்கள் முன்செய்வேன்
வேளார் இறைச்செய்கை தான்நேரே -வேளாம்நான்

உன்னோடே தானிருந்து செய்வேலை அஞ்சுவரே
இன்றுநான் சொல்லிடும் கட்டளைகள் -நன்கைக்கொள்

ஏத்கானான் ஏவி எமோரி பெரிசியர்
மேத்தான் எபூசும் துரத்திடுவேன் -மேத்தங்கு

செய்யீர் உடன்படிக்கை ஆறின மக்களோடு
செய்தாலே கண்ணியாய் மாறிடும் -செய்படிக்கை

செய்வீர் பலிபீடம் தன்னை இடித்திட்டு
செய்சிலைகள் தன்னை களைந்திடுவீர் -மெய்யில்

களைவெட்டு தோப்புகள் தேசத்தார் தன்னின்
களிப்பேர் எரிச்சல் உடையார் -களையாய்

அளையீர் பிறதேவர் தன்னை பணிந்து
விளைவாய் புரியீர் அறிவு -களையாய்

உடன்படிக்கை செய்தாலே தேசத்தார் சோரம்
உடன்போகச் செய்வார் தொழுகை -இடப்பலி

செய்திட்டு உன்னை அழைத்து பலியுண்ண
செய்வார் அதனால் விடுத்திடும் -பொய்யார்

உடன்படிக்கை செய்தாலே தேசத்தார் பெண்கள்
உடன்மணம் செய்வீர்; மனைவி -உடன்கொண்டு

வந்திடுவர் தன்சிலைகள், சோரம் விழச்செய்வர்
அந்தோ உனதின் வழி
திருப்பயண கலி 86

புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் நேமம், தலையீற்றை மீட்க நேமம் மற்றும் சில நேமங்கள்


வார்ப்பித் துருவமேதும் செய்யாதீர் வன்சிலைகள்;
சேர்ந்து புளிப்பில்லா அப்பத்தின் -சேர்திருநாள்

உங்களுக்குக் கட்டளை யிட்டபடிச் செய்வீரே
தங்கேழு நாட்கள் புசித்திடும் -அங்கே

திருநாள் புளிப்பில்லா பண்டிகை ஆபீப்
திருமாதம் தன்னில்கைக் கொள்வீர் -திருமாதம்

ஏனென் எகிப்தினின்று வந்தீரே அம்மாதம்
தேனோடும் தேசம் விழைந்துநீர் -மேவியே

கர்ப்பம் திறந்து பிறக்கிறவை என்னுடை
கர்ப்பத் தலையீற்று ஆமேயும் -கர்ப்பம்

திறப்பிறக்கும் ஆண்மகவும் என்னுடை என்றேன்
சிறப்பென் கழுதைமீள் ஆடு -பிறக்கும்

கழுதையை மீட்காதே போனால் நெரித்து
கழுப்போடு; ஆண்மக்கள் தன்னை -விழிமீட்பாய்

யாரும் திருமுன்னே வாரீர் வெறுங்கையாய்
நேரே திருச்சொன்னார் சொல்தனை -சீரவர்

ஆறுநாள் வேலைசெய்து ஏழாம்நாள் ஓய்ந்திரும்
சேறில் விதைப்பறுப்பின் காலத்தில் -வேறல்ல

ஏழாம்நாள் ஓய்ந்து; மணியறுப்புப் பண்டிகை
ஏழுவாரம் கைக்கொள் சிறந்துநீர் -வேழாரே

ஆண்டு முடிவிலே சேர்ப்புகால பண்டிகை
ஆண்டுதோறும் ஆசரிப்பாய் ஆண்மக்கள் -ஆண்டிலே

மூன்றுதரம் தேவனின் சந்நிதிக்கு வந்திடச்சொல்
தேன்பால் விழும்தேசத் தில்சீரே -நான்கு

புறமக்கள் தன்னை விரட்டி நிலத்தின்
புறயெல்லை தன்னை விரித்து -புறமாக

ஆண்டிலே மூன்றுமுறை வந்திடும்போ உன்பகைஞர்
தீண்ட வருவதில்லை கேள்மின்னே -வேண்டும்

இடும்பலியின் செந்நீர் புளித்தமா சேரீர்
விடுபசுகா ஆட்டின் நிணத்தை -விடியல்

வரைவைக்க வேண்டாம்; நிலமுன் கனிகள்
விரைந்தெடுத்து கோயிலுக்கு வாசீர் -கரையிலே

தாயினது பாலிலே வெள்ளாட்டுக் குட்டியை
தீயாய்ச் சமைக்காதீர் நேராணே -போயிந்த

சொற்களை நீயெழுது; இச்சொல்லின் நற்படியே
நற்றார் உடன்படிக்கை செய்து
திருப்பயண கலி 87

மோசே மீண்டும் நாற்பது நாள் நோன்பிருந்து கட்டளைகளை கீழே கொண்டுவருதல்


மலைமேல் புசிகுடிக்கா நாற்பது நாளாய்
மலைமேல் பலகை யிரண்டில் -நிலைநேமம்

கற்பனைகள் பத்து எழுதி இறங்கினான்
கற்பலகை கைக்கொண்டு ஆண்தானே -கற்கொண்டு

தேவன் உடன்பேசி கீழிறங்க இன்முகம்
தேவொளி வீச அவனறியா -மேவாண்மேல்

தேவொளி வீசுவதால் அஞ்சினர் எல்லோரும்
தேவொளி சேரவர் அஞ்சிட -தேவமாந்தன்

மோசே அழைப்பித்தான் மக்காள் இனிவாரும்
தேசத்தார் வந்தார் அழைக்கேட்டு -மோசே

இனத்தார் செவிகேட்க பேசினான் நேமம்
இனத்தார்முன் முக்காடு போட்டு -இனம்விட்டு

உள்சென்று பேசும்போ முக்கா டெடுப்பித்து
உள்விட்டு வந்தாலே முக்காடு -உள்விட்டு

வந்ததும் வீசொளி தன்னை இனங்கண்டு
வந்ததும் முக்காடிட் டான்சீராண் -வந்தவன்

மோசே இனமக்கள் முன்பாகச் சொன்னான்நற்
தேசத்தார் கேளுங்கள் கட்டளை -வீசொளி

தன்முகம் முக்காடில், கேட்டவை சொல்லிவிட்டான்
தன்னார் செவிகேட்க ஆங்குதான் -மன்னரின்

ஓய்வின் நியமமும், காணிக்கை செய்நியமம்
வேய்நூல் மயிர்தாரும் மேன்கற்கள் -தூய்மக்காள்

தூயருக்குக் கூடாரம் செய்திடுவோம், சொல்கேட்டு
நேய இனமக்கள் சென்று
திருப்பயண கலி 88

மக்கள் ஆசரிப்பு கூடாரம் செய்ய பொருட்களை தருதல்


எவரெவர் தன்மனதில் ஏவக் கொடுத்தான்
எவளெவள் தன்னுள்ளே ஏவ -அவளெல்லார்

தந்தார் பலவருண நூல்களை கூடாரம்
வந்தார் நலமாய்ச் சிறந்தங்கு -வந்ததே

பொன்வெள்ளி வெண்கலம் பட்டுநூல் நீலநூல்
தன்னிடம் உள்ள மரமெல்லாம் -தன்கை

கொடுத்தார் திருப்பணிக்கு வந்தன சீத்திம்
அடைந்தன கூடாரம் செய்ய -திடத்தார்

பெசலெயேல் மற்றும் அகோலியாப் நேராண்
திசைதன்னில் பேர்சொல்லி கர்த்தர் -விசைவேலை

செய்திடவே சீராய் அழைத்திட்டார் கேளீரோ
செய்ய மனதில் அறிவுதனை -மெய்யவர்

தந்திட்டார் நல்ஞானம் சீரார்க்கு மெய்யிரண்டு
வந்திட்டார் கூடம் செய
திருப்பயண கலி 89

பேசலேயேல் அகோலியாம் இருவரை கர்த்தர் ஞானத்தால் நிறைத்து அவர்கள் ஆசரிப்புக் கூடார வேலை செய்தல்


ஞானம் தெளிபுத்தி கொண்டோர் பெசலயேல்
ஞானி அகோலியாம் இவ்விருவர் -வானங்கீழ்

ஞானத்தார் சீராக சேர்த்தார் பொருட்களை
தானம் பெரிதாய் சிறப்பாக -மேனாளோ

சீர்மக்கள் தந்தார் திருமோசே வந்ததே
சீர்பொருள் எல்லாமே மிக்காக -சீர்மக்கள்

சொல்லிடும் வேண்டாம் பொருளினி என்சொல்ல
சொல்லிடச் சொன்னான் திருவங்கே -நல்லாண்

மலைமேலே கண்டபடி கீழே கலைஞர்
கலைவேலை செய்தனர் தானே -கலையால்

நலப்பணி செய்தனர் யார்யார் மனதில்
நலமாகத் தோன்றியதோ ஆங்கு -நலமாக

ஞானம் அருளினார் தேவன் சிறப்பாக
ஞானம் அறிந்தவர் செய்தாரே -வானுயர்

குன்றின்மேல் கண்டதைப் போலே மலைக்கீழே
நன்றாக ஆசரிப்பு வீடு
திருப்பயண கலி 90

முடிந்த ஆசரிப்புக் கூடாரத்தை மோசே பார்வையிட்டு இருவரை ஆசீர்வதித்தல், கூடார பிரதிஷ்டை


முடித்ததும் மோசே நலக்கூடம் கண்டான்
முடித்தனர் கர்த்தரவர் கற்பி -படியே

அதைச்செய்த நல்விதம் கண்டவன் மோசே
அதைச்செய்தோர் ஆசீர் வதித்து. -அதையே

முதற்றிங்கள் முன்முதல் நாளிலே வீடு
முதன்முதலாய் செய்வாய் நிலைநீ -அதனுள்ளே

சான்றுபெட்டி தன்னை நிறுத்தி திரைமூடி
மேன்பலகை குத்து விளக்கேற்றி -மேன்நாற்ற

பொற்றூபப் பீடத்தை முன்வைத்து வீட்டினது
நற்றிரையை தூக்கி நிறுத்திடு -நற்றிறைவன்

சொல்படியே செய்திடு காண்பித்த நல்விதம்
சொல்படியே தூய்படுத்து ஆரோனை -சொல்படியே

ஆரோன் புதல்வரை தூய்படுத்தி எல்லாரும்
நேராகச் செய்வாய் பலிதனை -நேராண்

சிறப்பாக எல்லாமே செய்முடித்தான் மோசே
நிறமுகில் மூடியது கூடம் -நிறமுகில்

மூடியதால் உள்ளே செலமுடியா மோசேதான்
மூடுமுகில் மேன்மகிமை யால்தானே -ஆடை

முகில்மூட வந்திறங்க நல்லினத்தார் போகா
தகைத்திருப்பர் அந்நிலத்தே மூடு -முகிலெழும்பு

காலம் வரையில் தரிப்பர், இனதேசம்
காலம் வரைசெய்தார் கேள்மின்னே -சீலவர்

மேகமாய் காலையில் தீநெருப்பாய் மாலையில்
ஏகமாய்க் கண்டார் இனத்தாரும் -மேகயெரி

கூடாரம் முன்னராய்க் கண்டார் திருமக்கள்
வீடதே கர்த்தர் இறை
திருப்பயண கலி 91

திருவிவிலிய திருப்பயண நூலின் கலிவெண்பா முற்றிற்று



திருவிவிலிய லேவியர் நூலின் கலிவெண்பா


ஏறுதனை எரிபலியாகக் கொடுத்தால் நியமம்

சந்திப்பு வீட்டில் இருந்திறை பேசினார்
சந்திப்பு வீட்டில் இறைவனை -சந்திக்க

வந்தால் பலியெடுத்து வந்திடட்டும் சந்திக்க
மந்தை களமாமே ஒன்றுயெடு - அந்த

எரிபலி யென்றால் பழுதில்லா ஆணை
எரிபலி செய்திட வந்து -எரிபலிமேல்

வைத்திடச் சொல்கை தலையேறு வைத்திட
வைத்திட்ட ஏறுதனைக் கொல்நிலத்தில் -தைத்திடச்

செய்திட்ட வன்பாவம் ஏறின்மேல் வந்திடும்
செய்திட்ட நன்பலியாம் ஏறுதனை -செய்பீடம்

கூடார ஊழியராம் ஆரோன் புதல்வருள்
நாடித் தெளிக்கட்டும் பார்ப்புதனை -நாடியவர்

கொன்ற விலங்கின் உதிரத்தை கூடாரம்
முன்நிற்கும் பீடத்தை சுற்றிலும் -நன்தெளித்து

தோலுரித்து பாகமாக துண்டித்து பீடத்தின்
மேலிட்டு சேர்ப்பர் தழல்இடுவர் -மேலே

நிணமதை ஊழியர் பீடம்மேல் வைத்து
நிணமெறிய நன்றாய் தழலும் -கணல்தர

கட்டை, நிணங்கால் குடலைக் கழுவிட்டு
கட்டைமேல் வைப்பர் நெருப்புதழல் -நட்டாண்

நறுமணமாய் மேலெழும்பும் நாற்றம் இறைவன்
நறுநாசி தன்னில் நுகர்ந்து -வெறுபாவம்

மன்னிப்பார் கூடார வாசி இறைவனார்
என்றென்றும் செய்வீர் இதை


லேவி 1

ஆடுதனை எரிபலியாகக் கொடுத்தால் நியமம்



சீர்மக்கள் கையில் பணமில்லை ஏறிட
சீர்பலியாய் தந்திடட்டும் மேதனை -சீர்பலி

இல்லார்க்கும் நல்லாரே எம்மிறைவன் என்றென்றும்
வல்லார் வறியாரென் செய்யாரே -நல்மந்தை

ஆடென்றால் ஆணே பழுதில்லா நேர்பலி
ஆடாது வெள்ளாடோ செம்மறி -ஆடோ

எதுவாயின் தேர்ந்தெடுத்து சந்திப்புக் கூடம்
அதைக்கொணர்க நேராய் பலியாம் -அதையே

பலிபீடம் தன்னின் வடக்கில் பலியாய்
பலியிட்ட ஆட்டின் உதிரம் -நிலையாண்

புதல்வர் குருமார் தெளிப்பர் நிலைமேல்
புதல்வர் எரிப்பர் நிணம்சேர் -புதல்வர்

நிணத்தோடு காற்குடல்கள் நீர்கழுவி ஆங்கே
நிணமெல்லாம் தீவைத்து சேர்த்து -நிணமெரிக்க

மேலெழும் நாற்றத்தை மேலவர் தன்நாசி
கோலவர் செய்வார் முகர்ந்து


லேவி 2

பறவையை பலியாகக் கொடுத்தால் நியமம்



ஆடும் கொடுக்க முடியா இனத்தாரோ
நாடிக் கொடுக்கட்டும் வான்புள்ளே -நாடுவீர்

இல்லார்க்கும் நல்லாரே எம்மிறைவன் என்றென்றும்
வல்லார் வறியாரென் செய்யாரே -இல்லார்

பறவை எரிபலி என்றால் தெரிவீர்
பறவையில் மாடப் புறாவோ -பறவையாம்

காட்டுப் புறாவோ தெரிவீர், தெரிந்தவர்
நாட்டார் குருவிடம் சேர்த்திட -நாட்டார்

தலைதனை கிள்ளி உதிரம் பலிக்கீழ்
தலைகுரு சிந்திட தீயால் -கொலைப்புள்

இறக்கை  இரண்டாக்கா சேரக் கிழித்து
இறக்கை  இரைப்பை அகற்று -சிறப்பில்

இரைப்பை இறக்கை அகற்றி குருமார்
எரிவர் எரிசாம்பல் கீழே -எரிப்பர்

எழும்புகை நாற்றம் தனையே இறைவன்
வழுவிலார் செய்வார் முகர்ந்து


லேவி 3

உணவுப்படையலின் நெறிமுறை



ஒருவன் உணவை பலியாய்க் கொணர
திருமுன் கொணர்கவே மாவு -வருக்கம்

ஒருக்கையிட, மெல்லிய மாவுதனை ஆரோன்
திருக்கை எடுப்பர் சிறிது -குருமார்

எடுத்த சிறிதை எரிக்கட்டும் பீடம்
படையல் இதுவே நுகர்வார் -கடையோர்

வறியோர் தருமந்த காணிக்கை ஏற்பார்
இறைவன் மனமுவந்து ஆங்கு -சிறியோர்

படையல் எரித்த பிறகு குருக்கள்
படையலில் மீந்த உணவு -எடுத்தெரித்த

ஆரோன் தனையர் வசமாகும் நேராணின்
சேரவரின் தூய்ப்படை யல்உணவு -ஆரோனின்

மக்கள் வசமாகும் நேராய் தரவங்கே
மக்கள் அடைசெலுத்த வந்தாலே -தக்கதாய்

மெல்லிய மாவினில் எண்ணெயைச் சேர்த்திடுவிர்
அல்ல தடைபொரிப்பீர் சேர்த்தவரும் -நல்ல

புளிப்பில்லா அப்பம் அதிரசம் சேர்த்து
அளிப்பீர் குருவிடம் சேர்த்து -அளித்திட்ட

நல்லடைகள் பீடம்மேல் போட உடைக்கட்டும்
நல்லெண்ணெய் மேலிட்டு வைத்திடு -நல்லடை

தட்டையானச் சட்டியில் சுட்ட அடையென்றால்
சட்டியில் மெல்மாவு எண்ணெயிட்டு -சுட்டிடு

சட்டியில் எண்ணெய் பொரித்தெடுபீர் என்றாலே
சட்டியில் மாவெண்ணெய் சேர்த்தவர் -இட்டிட

எந்த உணவுப் பலியையும் ஆரோனின்
சொந்தம் வழியோர் சிறிதெடுத்து -அந்தப்

படையல் எரித்த பிறகு குருக்கை
படையலில் மீந்த உணவு -எடுத்தெரித்த

ஆரோன் தனையர் வசமாகும் நேராணின்
சேரவரின் தூய்ப்படை யல்எரித்த -நேரவர்

தானே நுகர்வார் பலிநாற்றம் ஊண்பலி
தானே நனிதூய் அறிவீரே -தேனும்

புளிப்பான தொன்றும் படைக்காதீர் சேர்த்து
புளிப்பு முதற்கனி தந்தால் -புளிப்பை

பலிபீடம் மேலே எரியாதீர் என்று
பலிகுறித்து சொன்னார் இறைவன் -பலியெதிலும்

உப்பாலே சாரம்சேர் தேவன் உடன்படிக்கை
அப்பலியில் எல்லாமே உப்பிட்டு -எப்பண்டம்

முன்கனிகள் தன்னை கொணர்ந்தால்நீர் தீச்சுட்டு
முன்பிரிப்பிர் வாட்டி உதிர்ந்திட -முன்னோடு

நாறு வருக்கம் தனைச்சேர்த்து தீயிடு
நாறெழும் அப்படையல் நன்கர்த்தர் -நாறுபுகை

நாசி நுகர்வார் இறைவனார், முன்கனிகள்
தேசத்தார் நேராய் படைத்து


லேவி 4

சமாதான பலியின் முறை



நேர்ச்சை பலியோ அமைதிப் பலியென்றால்
நேர்மக்கள் ஆமேக்கள் மந்தையில் -நேர்பழுதில்

ஏறோ பசுவோ நலவெள்ளா டென்றால்தேர்
வேறாக்கி செய்வீர் பலிதன்னை -வேறான

அவ்விலங்கை சந்திப்புக் கூடாரம் முன்னராய்
அவ்விலங்கின் மேல்தலை கையிட்டு -அவ்விலங்கை

கொன்றிடுவீர் வாயிலில் நேர்பலியாய், ஆரோனின்
நன்புதல்வர் பார்ப்பை தெளித்திடுவர் -நன்பலி

பீடத்தை சுற்றிலும் பார்ப்பை தெளித்திட்டு
பீடத்தின் தீநெருப்பில் அவ்விலங்கை -பாடம்

கொழுப்பு குடல்கள் தகைச்சேர்த்து குண்டி
எழும்பெரிப்பர் கல்லீரல் சவ்வு -எழும்பிடும்

நாறு புகையே விழைப்பலி கர்த்தருக்கு
வேறே மறியாட்டில் தேர்ந்தாலே -வேறுமுறை

சொன்னார் இறைவனார் செய்முறை தன்னையே
என்னே முறையினது மாண்பு


லேவி 5
செம்மறியின் நன்கிடாயோ பெண்ணாடோ நேர்தேர்வீர்
நும்வேறாய்ச் செய்வீர் பலிதன்னை -வேறான

அவ்விலங்கை சந்திப்புக் கூடாரம் முன்னராய்
அவ்விலங்கின் மேல்தலை கையிட்டு -அவ்விலங்கை

கொன்றிடுவீர் வாயிலில் நேர்பலியாய், ஆரோனின்
நன்புதல்வர் பார்ப்பை தெளித்திடுவர் -நன்பலி

பீடத்தை சுற்றிலும் பார்ப்பை தெளித்திட்டு
பீடத்தின் தீநெருப்பில் அவ்விலங்கை -பாடம்

கொழுப்பு குடல்கள் தகைச்சேர்த்து குண்டி
எழும்பெரிப்பீர் நாறு புகையை -விழைத்தகைத்து

கல்லீரல் மேல்சவ்வும் மூடு கொழுப்பையும்
நல்முதுகின் வால்முழுதும் சேர்த்தெரிப்பீர் -நல்பீடம்

நாறு புகையே விழைப்பலி கர்த்தருக்கு
தோறும் முறைதனை மக்களுக்கு -வேறுமுறை

சொன்னார் இறைவனார் செய்முறை தன்னையே
என்னே முறையினது மாண்பதுவே -சொன்னார்பின்

கேட்பீரே எந்நாளும் உண்ணீர் நிணங்கொழுப்பு
வீட்டாரும் பார்ப்பையும் உண்ணீரே -நாட்டார்

அறிந்திடச் சொல்வீர் இதுநியமம் என்றே
சிறந்துரைத்தார் கர்த்தர் இறை


லேவி 6

பாவ நிவாரண பலி - ஆசரியன் செய்த பாவத்திற்கு நிவாரண பலி



அறியாமை யாலே இனத்தார் ஒருவன்
நெறிதவறி பாவம் புரிந்தால் -நெறியுடைத்த

காரணத்தால் தந்திடட்டும் வன்பலி செய்தோனே
சீராகச் சொன்னார் இறைவனார் -சீராணாம்

ஆசரியன் செய்தாலே செய்திடுவீர் இம்முறை
ஆசரியன் பாவம் திருக்கர்த்தர் -தேசத்தில்

மன்னிக்க கொண்டுவா போக்கிட ஓர்விலங்கு
வன்பலிச் செய்திட கூடாரம் -வன்னாய்

அருள்பொழிவு பெற்றவனாம் ஆசரியன் செய்தால்
திருக்கட் டளைமீறிப் பாவம் -திருமுன்னே

ஏறில் இளவயதாய் ஒன்றை நனிபலியாய்
ஏறைக் கொலைசெய் திடுவீரே -வேறான

ஏறின் தலைமேல் திருக்கையை வைத்திட்டு
ஏறைக் கொலைச்செய்து பார்ப்பெடுத்து -வேறறை

தூய்த்திரை முன்னராய் ஏழுமுறை தோய்த்தெளித்து,
தூய்ப்பீடக் கொம்பிலே பூசிட்டு -தூய்மகனே

பீடத்தின் கீழூற்றும் எஞ்சிய பார்ப்புதனை
பீடம்மேல் நல்லுறவு வன்பலிபோல் -பீடத்தின்

தீயால் எரித்திடுவீர், பின்னரங்கு எஞ்சியதை
தீயால் எரிப்பீர் வெளி


லேவி 7

இசுரேல் இனத்தாரோ, தலைவனோ, பொதுமக்களோ அறியாமல் செய்த பாவத்திற்கு நிவாரண பலி



இசுரேல் இனத்தார் அறியாதே பாவம்
திசைதனில் செய்தால் புரிவீர் -இசுரேல்

சபையார் புரிபாவம் போக்கிட நேராண்
சபையா சரியனைப் போலே -சபைமுன்

இனத்தாரில் மூப்பர் தலைமேல் திருக்கை
இனஞ்செய்த பாவம் தனையே -இனம்விட்டுப்

போகவே ஏறின்மேல் வைத்திட்டு ஆசரியன்
ஏகமாய் செய்வான் பலிதனை -போக

இனத்தார் தலைவன் புரிந்த வினையென்
இனத்தார் தலைவன் வளத்தின் -இனக்கிடாய்

வெள்ளாட்டின் தந்து தலைமேல்தன் கையிட்டு
வெள்ளாட்டை வன்பலி செய்திடுவீர் -கொள்ளும்

இனமக்கள் யாதேனும் செய்த வினையென்
இனமக்கள் பெண்ணாடோ குட்டி -இனத்துள்

தலைமேலே கைவைத்து நல்லுறவு வன்போல்
தலையடிப்பான் ஆசரியன் ஆங்கு -தலைவர்க்கும்

சிற்றார்க்கும் மற்றார்க்கும் பாவநீக்கு வன்பலி
குற்றம்செய் தார்யார்க்கும் போகுமே -நற்றார்

இறைவனின் வீடது ஆசரிப்புக் கூடம்
முறைகளைச் சொன்னார் இறை


லேவி 8

ஆணையை தெரிந்தும் சான்று சொல்லாததாலோ, தீட்டான விலங்கைத் தொட்டாலோ, பதறி ஆணையிட்டாலோ செய்ய வேண்டியவை



ஒருவன் செவியாலே ஆணையைக் கேட்டும்
தெரிவியாதே போனால் அதுவே -தெரிவியாத

காரணியால் பாவமாகும்; செய்கை சுமப்பானே
நேரத்தே சொல்லா ததால்கேள்மின் -காரணமீர்

தூயில்லா காட்டு விலங்கினை தொட்டாலோ
தூயில்லா நாட்டு விலங்கினை -தூயில்லா

தொட்டும் அறியேனே என்றாலும் தீட்டுகுற்றம்
தொட்டவனைச் சேரும் நிலத்தேகேள் -எட்டியும்

தூயின்மை மாக்களால் தீட்டோன் அறியாமல்
தூயினை கெட்டோனும் தீட்டுகுற்றம் -தூயில்லா

எவ்வித மாக்கள் தொடாதிரும் என்றவரும்
அவ்வாறே தந்தார் இறைவனார் -எவ்வாறு

வாய்ச்சொல்லால் ஆணை பதறி யிடுமெந்த
வாய்ச்சொல்லை கட்டுப் படுத்தோனோ -வாய்ச்சொல்

பதறி யிடுமந்த ஆணையினால் தீமை
இதநன்மை ஆயினும் தீது -இதனை

அறிக்கை யிடுவித்து அப்பாவம் போக்க
அறியாமல் செய்தேனே பாவம் -அறிந்தவனும்

தேர்ந்திட வெள்ளாடோ செம்மறியோ பெண்ணாட்டை
நேர்ந்தவன் போக்க பலியிட்டு -சேர்கிடாய்

ஆடு பலியிட ஆகாதோன் கொண்டுவர
காடுவாழ் புள்ளாம் புறாவினையோ -தேடி

புறாக்குஞ்சோ சோடியாய் சேர்த்து குருக்கை
புறாயிடச் சொல்வீர் பலியாய் -புறாவில்

ஒருபுறா வின்தலை ஆசரியன் கிள்ளி
இரத்தம் வடியவிட்டு பின்னை -இரண்டாக்கா

பார்ப்பில் சிறிதெடுத்து பீடத்தின் கோடதில்
பார்ப்பினைப் பூசட்டும் ஆங்குக்கேள் -நேர்மகன்

ஆசரியன் மற்ற தலைக்கிள்ளி பாவத்தின்
வீசை எரிபலியாய்ச் செய்வித்து  -ஆசரியன்

செய்திடட்டும் பாவந்தீர் வன்பலியே நேராக
மெய்யாரும் மன்னிப்பார் கோன்கேள்மின் -செய்யில்

புறாவும் எடுத்துவர கைப்பணமில் மாவை
புறாவிற்கு ஈடாகக் கொண்டு -புறாயீடே

இம்மாவென் ஆசரியன் கையிட ஆசரியன்
அம்மா சிறிதெரிப்பான் சேர்த்தங்கு -செம்மாவாம்

மாவிலே மீந்தது ஆசரியன் கைச்சேரும்
மாவெரித்த காரணத்தால் மன்னிப்பார் -மாவேளும்

செய்தோனின் பாவம் தனைமறந்து மன்னிப்பார்
செய்வீர் இதுவே முறையென்றார் -செய்முறையில்

குற்றந்தீர் வன்பாவம் நீக்கும் பலியதில்
சிற்றளவும் எண்ணெய் இடாதிரும் -சிற்றளவும்

நாறு வருக்கம் இடாதிரும் ஏனென்றால்
நாறுபுகை வேண்டா மிதில்


லேவி 9

கர்த்தரின் கட்டளையை மீறியோ, விலக்கான செய்கைகளையோச் செய்தால் செலுத்த வேண்டிய குற்ற நிவாரண பலி



தூய்க்கர்த்தர் கட்டளையில் தூய்நேமம் ஏதேனும்
தூய்விட்டு பாவம் அறியாதே -வேய்வினை

செய்திட்டால் தூய்நட்டம் கொண்டுவந்து மேலைந்தில்
செய்யொரு பங்கைக் கொடுத்திட்டு -செய்தோன்

வினைப்பாவம் தீர்க்க கிடயொன்றை கொண்டு
வினைப்பாவம் போக்க குருமார் -நினைவாக

போக்கிடச் செய்பலியால் பாவம்ந்தீர் போவானே
தேக்க வினைபாவம் தீர்ந்திட்டு -வாக்கில்

விலக்கெனக் கர்த்தர் உரைத்ததை செய்து
விலக்கினால் தீட்டு அறியா -விலக்கைச்செய்

குற்றம் புரிந்தோனே ஆதலால் செய்யட்டும்
குற்றந்தீர் வன்பலி தான்செய்து -குற்றத்திற்

உன்சொல் படியே கிடாயாடு தேர்ந்திட்டு
வன்பாவம் செய்ததை போக்கிட -வன்பலி

ஆசரியன் செய்திட்டால் பாவம் நினைவிடுத்து
தேசத்தில் வாழ நலம்


லேவி 10

ஒப்புவித்த பொருளை கவர்தல், மாறாட்டம் செய்தல், ஏமாற்றி பறித்தல் இச்செய்கைகளைச் செய்தால் செய்ய வேண்டியவை



அயலான் பொருளைக் கவர்ந்தோ பறித்தோ
அயலான் எதிராக அல்ல -நியனார்

எதிராகச் செய்தான் அதனை அதனால்
எதிர்ச்செய்தோன் தந்து திருப்பு -அதல்லாது

காணாப் பொருளை திரும்பப் பெறினுமவன்
காணாப் பொருளை இலையேயான் -காணவில்லை

என்றாணை யிட்டாலே கர்த்தர் எதிராக
வன்னாகச் செய்தான் வழக்கதனால் -வன்செய்

கவர்ச்செல்வந் தன்னிலே ஐந்திலொருப் பங்கை
கவர்ச்செல்வங் கூட்டித் திருப்பி -அவன்செய்த

வன்செயலுக் காக நியமம் முறைதனை
நன்கர்த்தர் சொன்னார் உரைத்தாரே -வன்பாவம்

குற்றப் பழியின் பலியாக சொல்படி
குற்றமில்லா ஆட்டு கிடாய்கொணர்ந்து -குற்றபலி

ஆசரியன் கையில் கொடுத்து செலுத்திட
ஆசரியன் செய்வான் சரி


லேவி 11

ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் சொன்ன நியமங்கள்



பின்னும் திருஇறைவன் மோசேக்கு சொன்னது
உன்தமையன் ஆரோன் அவன்வழியோர் -நன்நேமம்

என்றும் எரிபலி வன்பலி பீடம்மேல்
நன்றாய் யெரியவேண்டும் கேள்மின்னே -வன்தீ

இராமுதல் ஞாவரும் வேளை வரையில்
இராமுழுதும் நின்றெரிய வேண்டும் -நெருப்பு

குருமார்கள் மேலே சணல்நூலால் ஆடை
தரித்து நிணங்கள் எரித்து -பிரியா

சணல்நூலால் ஆடை தரித்து எரித்த
நிணங்களின் சாம்பலை பீடம் -திணையருகே

கொட்டி, உடைதனை மாற்றியவன் சாம்பலை
கொட்டட்டும் ஊரின் வெளிச்சென்று -விட்ட

குருமார் நிணஞ்சாம்பல் ஊரின் வெளியே
திருக்கொட்ட, தூயிடம் கண்டு -குருக்கொட்ட

பீடம்மேல் தீஎரிந்து கொண்டிருக்க வேண்டும்கே
பீடம் நிணமெரிப்பர் சேர்த்து


லேவி 12

அமைதி நல்லுறவு பலிக்கான ஆரோன் செய்ய வேண்டிய நியமம்



எரிபலியின் பின்நல் லுறவின் அமைதி
எரிபலி செய்ய வரிசை -வரிசையாய்

வைத்திட்டு தீநெருப்பு வைத்து எரித்திட
வைத்திடுவீர் தீஅணை யாதிருக்க -வைத்து

திருமுன் பலிபீடம் தன்னின் எதிராய்
திருப்புதல்வர் செய்ய உணவின் -திருப்படையல்

மாவெடுத்து கைப்பிடி பீடம்மேல் தீயெரிக்க
மாவொடு வர்க்கமதைச் சேர்த்திட்டு -மாவின்

நினைவாய் எரித்த உணவுப் படையல்
நினைப்பீர் மிகத்தூய்மை அஃது -அனைத்தும்

திருமுன் புளிப்பில்லா அப்பம் தகைச்சேர்
திருஉண்பர் தூயின் வெளியில் -திருவட்டம்

ஆரோன் வழியாரில் ஆண்கள் புசிக்கலாம்
ஆரோன் தலைமுறைகள் யாவருக்கும் -சீராய்

எரிபலிமேல் கைவைப்போர் தூயராவர் யாவர்
எரிபலி நேமம் பகன்று


லேவி 13

ஆரோனின் அருள்பொழிவு நாளில் அவனுக்காகச் செய்ய வேண்டிய உணவுப் பலி



திருக்கர்த்தர் மோசே யிடம்பகன்றார் நேமம்
திருமகன் ஆரோன், வழியோர் -திருப்பொழிவு

நாளதில் எப்பா அளவிலே மாவெடுத்து
வேளையிரு பத்திலொரு பங்கெடுத்து -நாளுமே

காலையும் மாலையும் தீயெரித்து மெல்மாவு
காலையில் பத்திலொருப் பாதியும் -மாலையில்

பத்திலொருப் பாதியும் எந்நாளும் ஊண்படையல்
அத்துனை என்றார் இறைவனார் -அத்திணைச்

சுட்டிடுவீர் தட்டையான சட்டியில் எண்ணெயிட்டு
சுட்டதை தூன்டுகளாய் பிட்டுபிரிச் -சுட்டெரிப்பீர்

ஊண்பலியை நாறுமிக்க நாசி நுகர்ந்திட
ஊண்பலி ஆரோன் வழியார்கு -காண்கேளீர்

ஆசரியன் ஊண்படையல் தீயெரிப்பீர் மொத்தமாக
ஆசரியன் ஊண்படையல் உண்ணாதீர் -ஆசரிய

ஊழியம்செய் ஆரோன் புதல்வர் கடைப்பிடிக்க
வேழாஅர் சொன்ன விதி


லேவி 14

பாவநிவாரண பலி, குற்ற நிவாரண பலிக்கான ஆரோன் புதல்வர்க்கு கர்த்தர் கொடுத்த நியமம்



பாவப் பலியதை உண்ணவேண்டும் தூய்முன்னே
பாவப் பலிமிகத் தூயென்றார் -பாவந்தீர்

குற்றப் பலியதும் உண்ணவேண்டும் தூய்முன்னே
குற்ற பலியிதும் தூய்தானே -சுற்றம்

எரிபலி கொல்லும் இடத்தே கொலைசெய்
தெரிவீர் பலியது தூய்ஊன் -சரியாண்கள்

தூயறையில் நின்று புசிக்க, பலிமேலே
தூயதாகும் பட்டாலே கேள்மின்னே -தூயோன்

துணிமேல் அதின்பார்ப்பு பட்டால் வெளுப்பீர்
துணியதை தூயறையில் தானே -நிணஞ்செய்த

மண்பாண்டம் வேறாய் உடைத்தெரிவீர் அன்றேநீர்
திண்பண்டம் செய்த கலமென்றால் -பண்டம்செய்

செப்புகலம் என்றாலே தூயறையில் நீர்விட்டு
செப்புகலம் தன்னைக் கழுவிடுவீர் -செப்புள்ளே

நன்றாகத் தேய்த்து கலம்கழுவி விட்டிடுவீர்
என்றார் இறைவன் விதியென்றார் -அன்றளித்த

பாவந்தீர் எப்பலியின் பார்ப்பில் சிறிதளவு
பாவந்தீர் தூயறையுள் வந்ததோ -பாவந்தீர்

அப்பலியை யாரும் புசியாதீர் என்றென்றும்
அப்பலியை தீயில் எரித்து


லேவி 15

குற்ற நிவாரண, பாவ நிவாரண பலிகள் குறித்த மேலும் சில நியமங்கள்



குற்றந்தீர் வன்பலியின் நேமம் எதுவென்றால்
குற்றந்தீர் வன்பலியை கொன்றிடுவீர் -சுற்றத்தில்

அங்கே எரிபலி கொல்லுமிடம் தன்னில்தான்
அங்கு உதிரம் எடுத்தந்த -மங்கா

பலிபீடம் சுற்றித் தெளித்திடட்டும் பார்ப்பு
பலிபீடம் மேலே கொழுப்பை -பலியெரித்து

வால்குடல்கள் குண்டிக் கொழுப்போடு கல்லீரல்
மேல்சவ்வு சேர்த்தெரிக்கச் சொல்லிடு -மேல்வீடின்

தூயறையில் ஆசரியர் ஆண்மக்கள் உண்ணட்டும்
தூயாக்கும் குற்றபலி, பாவபலி -தூயவை

நேமம் ஒருநேமம், பாவந்தீர் ஆசரியன்
நேமம் அதுசேரும் ஆங்குணர் -நேமம்

எரிபலியின் தோலும் சமைத்த படையல்
எரிபடாத இவ்விரண்டும் சேரும் -சரியாசன்

செய்தவனை, எண்ணெய் பிசைந்த பிசையாத
மெய்மா பலியது பங்கு


லேவி 16

சமாதானபலிகளின் வகைகளும் அதன் நியமங்களும்



நன்றிக்காய் நல்லுறவு வன்பலி கொண்டுவந்தால்
நன்றிபலி கூட புளிப்பில்லா -நன்னப்பம்

எண்ணெய் பிசைந்து சமைத்திட்டு, சீரடை
எண்ணெய் சமைத்துப்பின் பூசுவீர் -பண்டம்

அதுசேர் புளித்தமா நன்னப்பம் சேர்த்து
இதனோடு நன்றிபலிக் கென்ற -சிதைவிலங்கு

கொண்டு வரச்சொல் இனத்தாரை என்பகன்றார்
கொண்டு வரும்முறையை நேர்அவர் -கொண்ட

படையல் முறையே வகைக்கொன்றாய் கையில்
படைக்கட்டும் ஏறெடுத்து பண்டம் -படைத்தெளித்த

ஆசரியன் பங்கது; நன்றிபலி தன்னையே
ஆசரியர் அன்றே புசித்துவிட -ஆசரியர்

உண்பீரே நன்றிபலி நாள்விடியல் வைக்காது
உண்ணலாம் உற்சாக மேன்பலி -உண்பீர்

இரண்டாம் திருநாள் பொருத்தனை செய்த
வரைமூன்றில் மிச்சம் எரித்து -சரியில்லை

நல்லுறவு பண்டத்தை மூன்றில் புசித்தாலே
நல்லுறவு கெட்டுப்போம் செய்தோனின் -நல்லுறவு

பண்டம் கறைத்தீட்டில் பட்டால் எரிப்பீர்நீர்
பண்டமது மற்றதை உண்பீரே -உண்ணுணவு

தீட்டுள்ளோன் நல்லுறவு பண்டத்தை உட்கொண்டால்
தீட்டினால் செய்தானே தீங்குச்செய் -தீட்டோடு

நல்லுறவு பண்டத்தை உட்கொண்ட காரணத்தால்
வல்லாகப் போவான் அறுத்துப்போய் -நல்லில்லை

ஊன்கொழுப்பு தானே இறந்ததும், பீறுண்ட
ஊன்கொழுப்பும் வேலைக்குத் தந்திடுவீர் -ஊன்கொழுப்பை

மேன்இசுரேல் கேள்மின் கொழுப்பெதுவும் ஆமேயின்
ஊன்புசிக்கா விட்டிடும் மாண்புக்கேள் -ஊன்தன்

எரிபலி யென்வந்த மாக்கள் கொழுப்பை
சரியில்லா உண்போர் அறுத்து -வரைதன்னில்

புள்மாக்கள் பார்ப்பதை உண்ணாதீர், பார்ப்புதனை
அள்ளுண்ணும் மாந்தர் அறுத்துப்போய் -புள்மாக்கள்

நல்லுறவு வன்பலியை இட்டிட வந்திடுவோன்
நல்லுறவு வன்பலியை தன்கையால் - நல்லதாய்

கொண்டுவந்து மார்பும் கொழுப்பும் அசைவாட்ட
கொண்டுகொடு ஆசரி யன்கையில் -பண்டத்தின்

கொண்டக் கொழுப்பை பலிபீடம் மேலெரித்து
கொண்டுகொடு மார்பினை ஆசரியன் -கண்டெடுத்து

கொண்டுகொடு முன்தொடை இன்வலது ஏறெடுக்க
கொண்டிடுவான் ஆசரியன் பங்கது -மண்ணிலே

ஐந்து பலிகளை சீனாயில் நல்லிறைவன்
ஈந்தார் இசுரேலர் பின்பற்ற -ஐந்துபலி

நல்லெரி, ஊண்படையல், பாவபலி, குற்றந்தீர்
நல்லுறவும் நன்நிலை ஐந்து


லேவி 17

ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்தி ஆடை அணிவித்தல்



ஆரோன், வழியார் திருவின்நல் ஊழியம்
சேரவர்ச் செய்ய நிலைப்பலி -நேராணாம்

மோசே புரிவாயே சொன்னார் இறைவனார்
மோசே செவிகேட்க நன்றதை -மோசேயும்

கர்த்தர்சொல் கேட்ட திருமகன் சேரழைத்தான்
கர்த்தர்சொல் கேட்டு படியவன் -கர்த்தரின்

கட்டளை நல்படியே காளையும் ஈராடும்
நட்டான் கொணர்ந்தனன் ஆங்குதான் -கட்டளை

கர்த்தர் உரைத்தார்: இனத்தார் அனைவரும்
கர்த்தரின் வீடுமுன் கூடிடச்செய் -கர்த்தர்

உரைத்த படியே இனத்தார் அனைவர்
விரைச்சேர்த்தான் நேராண் சிறந்து -விரைந்த

இனத்தரை நோக்கி: இறைவனார் செய்ய
இனத்தாரே கேள்மின் இதுவே -இனத்தாரே

ஆரோன், வழியார் நிலைசெய் குருக்களாக
நேராண் நிலைசெய்வித் தான்கேள்மின் -நேராணும்

ஆரோன், வழியாரை நீரால் குளிப்பாட்டி
நேராண் நலமான ஆடைகள் -ஆரோன்

அணிய இடைக்கச்சை ஏபோத்து கச்சை
அணிவித்தான் மார்பதக்கம் சேர்த்து -அணிவித்த

மார்பதக்கம் மேலாக ஊரீம்தும் மீமைபோட்டு
சேர்தலையில் தங்கத்தால் தூய்பட்டம் -நேர்போட்டு

சேர்தலையில் பாகை அணிவித்து நேராணும்
சேர்வைத்தான் ஆடை வியனாக -நேர்வேள்

திருக்குளியல் செய்ய விதஞ்செய்த எண்ணெய்
திருக்கூடம் தன்பலி பீடம் -திருக்கூட

மற்ற பணிமூட்டு எல்லாமே எண்ணெயால்
அற்றது நீக்கித்தூய் செய்தங்கு -நற்றாணாம்

ஆரோன் தலைமேல் சிறிதாக எண்ணெயூற்றி
நேராணாய் செய்தான்தூய் ஆரோனின் -சேராண்கள்

ஆடை அணிவித்து கச்சையிடைக் குல்லாக்கள்
ஆடை அணிவித்தான் நேர்


லேவி 18

ஆரோன் அவன் புதல்வருக்காக இடப்பட்ட பலிகள்



நேர்பலியாம் ஏறினைக் பாவந்தீர் கொண்டுவந்து
சேர்மக்கள் ஆரோனும் கைவைக்க -பாவந்தீர்

ஏறினை நேமம் புரிந்தான் சரியாக
ஏறுமிச்சம் சுட்டான் வெளியிலே -மாறா

எரிபலியாய் ஆட்டினை நேமம் படியே
எரிபலிச் செய்திட்டான் நேராண் -எரித்தனன்

ஆடு இறைவன் நுகரவே நாறுபுகை
தேடி பழிதில்லா ஆடுதனை -வீடில்

திருநிலை நல்பலியாம் ஆட்டுக் கிடாயை
திருமக்கள் ஆரோன் கரன்வைத் -திருமுன்னே

கொன்றிட்டான் பார்ப்பு, வலப்பெருக் கைக்காலின்
நன்விரல்மேல் காதும் வலதினில் -நன்பூசி

அப்பம்சேர் ஆரோன் வழியார்கை சேர்கொடுத்து
அப்பமும் முன்னந் தொடையையும் -தப்பாது

ஏறெடுத்து ஊன்அசைத்து சுட்டெரித்தான் பீடம்மேல்
வேறான மார்க்கண்டம் சேர்ந்தது -வேறான

மார்க்கண்டம் தன்னை அசைத்தனன் மோசேயும்
மார்க்கண்டம் சேர்ந்தது மோசேக்கு -நேர்மகன்

ஆட்டினது பார்ப்பில் தெளித்தனன் ஆடைமேல்
நாட்டாரும் ஆயினர் தூய்மக்கள் -ஆட்டின்

நிணமாம் நிலைப்பலியின் மிச்சம் வழியார்
நிணத்தை நிலைவ்வீட்டின் வாயில் -அணலிட்டு

வேவித்து உண்ணுவீர் உண்டப்பின் சேர்த்திட்டு
வேவுணவை போட்டு எரித்திட்டு -சேவை

நிலைநாட்கள் ஏழு நிறைவேற நீரே
நிலைத்திரும் கூடாரம் தன்னில் -நிலைநேமம்

சாகா உயிர்த்திருக்கச் செய்வீரே ஏழுநாள்;
ஆக இதுபோல்செய் வீர்மக்காள் -ஏகமாய்

கீழ்படிந்தார் ஆரோன் வழிமக்கள் மோசேசொல்
கீழ்படிந்து எல்லா விதபலியும் -வேழ்கர்த்தர்

சொன்ன படியே புரிந்தனர் நன்மக்கள்
அன்னாரின் சொல்தனைக் கேட்டு


லேவி 19

ஆரோனின் எரிபலி, பாவபலியும் மக்களின் நல்லுறவு பலியும்



ஏழுநாள் போனபின் எட்டாம்நாள் மோசேயும்
வேழார்வாழ் கூடாரம் சேர்ந்தனன் -ஏழுநாள்

ஆங்கே தரித்திருந்த ஆரோன், புதல்வரை
பாங்காகச் சொன்னான் மகனன்று -தீங்குதீர்

தேர்ந்திடு பாவபலி சேர்த்து எரிபலி
தேர்ந்திட்டு நேமம் படிபலி -சார்மக்கள்

தேர்ந்திடும் பாவபலி நல்லுறவின் வன்பலியென்
சேர்த்திடுவாய் பீடம்மேல் இட்டிடு -சேர்த்தோன்

இனத்தாரே வாரும் உறவுப் பலியை
வினைதீர பீடம்மேல் சேர்க்க -இனத்தாரே

இன்றே வியன்காண்பீர் மேன்மை இறைவனின்
நன்றாக, மோசே உரைத்தவன் -நல்சொல்லின்

நேமம் படியே பலியிட்டான் தன்பலியில்
நேமம் தவறாது ஊன்மீதம் -சீமை

வெளியில் எரித்து, எரிபலி எல்லாம்
அளித்தான் பலியை மகனும் -அளித்தான்

இனத்தாரின் நல்லுறவு தன்னின் கொழுப்பை
வினையெடுத்து பீடம் எரித்து -இனத்தார்

விலங்கினது மார்கண்டம் தன்னை அசைத்து
நிலத்தில் புரிந்தான் மகனும் -நிலத்தில்

இவைபுரிந்த பின்வெளி வந்து இனத்தார்
அவைமக்கள் ஆசீர் வதித்து -அவையோரின்

கண்காண கர்த்தரின் சந்நிதி யின்கணல்
மண்பீடம் ஊனெரித்துப் போட்டு


லேவி 20

நாதாப் அபியு அந்நிய தீ எடுத்து வந்து மரித்தலும், ஆரோனும் புதல்வரும் பாவ பலியை உண்ணாது விடுதலும்



புதல்வராம் ஆரோனின் நாதாப் அபியு
விதம்செய்தார் வேறே வருக்கம் -விதஞ்சேர்த்து

நாறுபுகை கொண்டுவந்தார் சந்நிதி வேறாக
ஆறாத தீயைக் கொணர்ந்ததும் -நாறுபுகை

வேறுதீயை ஏற்காதே தீவந்து சுட்டெரிக்க
வேறு கொணர்ந்த இருவரும் -பீறிப்போய்

சாக, இறைவன் பகன்ற இறைத்தூய்மை
சாகாத வண்ணம் நிலைப்பீரே -ஏக

திருநிலை எண்ணெயும் மேலிருக்க கூடம்
திருவிட்டு போகா திருமே -இருவர்

திருமக்கள் எஞ்சியோர் சொன்னான் இறைவன்
திருமுன்னே ஊழியர் சேர்த்தொன் -திருவவன்

ஆரோன் சிறுதகப்பன் பிள்ளை இருவரை
நேராண் அழைப்பித்து பீறுடல் -சீராய்

வெளிச்சென்று மண்ணில் புதைத்து விடுமே
வெளியில் புதைத்தார் அவர்கள் -அளித்தவர்

ஆரோனை கர்த்தர் அழைப்பித்து சொன்னாரே
ஆரோனே நீயும் புதல்வரும்- நேரான

ஊழியர் கூடாரத் தின்னுள்ளே வந்திடுமுன்
வேழாரே உண்ணீரே கள்தனை -கீழாமே

கள்ளெதுவும் உண்ணா திருமே திருமக்காள்
கள்ளுண்டு உள்வாரீர் வந்தாலே -கள்ளாலே

செத்திடுவீர், தூய்தூயில் வேறாகக் காட்டிட
அத்தாணே செய்யா திரும்மென்றார் -அத்தவரே

மக்களின் பாவபலி உண்பீர் எனமோசே
மக்கள் எலெயாசார் இத்தாமார் -தக்கதாய்

ஊன்புசிக்கச் சொல்ல, விலங்கினது ஊன்தேட
ஊன்பீடம் மேலெரியக் கண்டதிர்ந்து -ஊன்அது

மாதூய் பலியது ஏனோ புசியாமல்
மாதூய் பலியதை சேர்த்தெரித்தீர் -மாதூய்

கெடநீர் இருந்தீர் சரியோ சினத்தால்
கடுகடுத்தான் மோசே திருவாண் -சிடுசிடுத்தோன்

ஆரோன் அவையாரின் நன்பலி யிட்டநாளில்
சேராத தீயாலே மாண்டாரே -சேரார்

பலியெடுத்து நானும் புசிப்பது நன்றோ
இலையான் புசியேனே ஊன்தான் -நிலைச்சொல்லை

மோசே பகர்ச்சொல் தனைக்கேட் டமைந்தனன்
வீசை புரிபாவம் ஆனதால் -தேசன்

புசியாமல் விட்ட தறிந்ததும் ஆற்றி
அசையாது நின்றான் தமன்


லேவி 21

உண்ணத் தகுந்த மிருகங்கள் மற்றும் உண்ணத் தகாத மிருகங்கள்



கர்த்தர் தமரிருவர் நோக்கிப் பகன்றாரே
கர்த்தர் மிகத்தூயர் ஆதலால் -கர்த்தரை

போன்றே மிகத்தூய ராக இருந்திடுவீர்
சான்றோராய் இந்த இனம்வாழ -ஆன்றோர்

இனத்தாரே கேட்பீர் நினைவாக உண்பீர்
இனத்தாரே நேமம் சிறப்பே -அனைத்து

விரிகுளம்பும் தன்னூண் அசைபோடும் யாவும்
சரியான தென்பதால் உண்பீர் -வரையிலே

உண்டே விரிகுளம்பு தன்னூண் அசைபோடா
மண்ணுயிர் தன்னை தவிர்ப்பீரே -மண்ணில்

உடல்தன்னைக் கொண்டு தவழ்ந்தூறும் யாவும்
உடல்மேலே பட்டாலே தீட்டு -உடலிலே

உள்ளங்கால் தன்னை தரையூன்றி மண்நடக்கும்
எள்ளளவும் உண்ணாதீர்; விண்பறக்கும் -புள்ளினத்தில்

வான்கழுகும், வல்லூறும், காகங்கள் கோட்டானும்
கோன்புசியீர் சொன்னார் சிறந்தவர் -வான்கீழே

நீர்தன்னில் வாழும் செதில்சிறகு உள்ளவை
நீர்புசிக்க ஏற்றவை என்பகன்று -நீர்தன்னில்

வாழும் வழுவான தொன்றை புசிக்காதீர்
வேழார் உரைத்தார் விதியென -வாழ்விற்கு

பற்பல நேமம் கொடுத்தார் இறைவனார்
சற்றே புசித்து இனமவர் -அற்றாக

போகாமல் நேராக வாழ்ந்திட, என்றென்றும்
ஏகமாய் பற்றிடுவீர் சீர்நீரே -வேகாதே

செத்தது மேல்வீழ்ந்தால் தீட்டது, பாண்டமுள்
செத்தது வீழ்ந்தால் உடைத்திடு -செத்தது

நீரிலென்றால் கொட்டிடு, செத்தது நல்மணிமேல்
சீரது போகாது காண்பீரே -சீரில்லா

செத்தது நீர்மிகு நற்கிணறென் தீட்டாகா
செத்தது நீர்பட்ட நல்மணியும் -செத்ததுபோல்

ஊர்ந்துச்செல் எப்பிராணி கொள்க விதியிதுவே
நேராய்ப் பகன்றார் விதிதனை -நேர்சொல்லி

இங்ஙனம் பற்பல நல்விதிகள் இட்டாரே
தங்கினத்தார் பின்பற்ற நல்கர்த்தர் -அங்கினத்தார்

தீட்டெது நேரெது சொன்னார் இருதமர்
கேட்கப் பகன்றார் இறை


லேவி 22

கர்ப்பவதி பிள்ளைப் பெற்றபின் செய்ய வேண்டிய நியமம்



கர்ப்பம் தரித்து மகன்பெற்றால் ஏழுநாள்
கர்ப்பம் விடுத்துப் பிறந்தோனை -கர்த்தர்

இடுவித்த கட்டளை முன்தோல் எடுத்து
அடுத்தநாள் தன்னிலே எட்டு -அடுத்தவள்

பின்னர் இருப்பாளே முப்பத்து மூன்றுநாள்
பின்சென்று பெண்ணவள் நற்பலி -நன்கொடுக்க

கர்ப்பப் பிறப்பால் பெறுந்தீட்டு விட்டிடும்
கர்த்தர் பகன்றார் விதிதன்னை -கர்த்தரீந்த

கர்ப்பப் பிறப்பு மகளென் இருமடங்கு
கர்ப்பம் பிறந்த மகளுக்காய் -கர்ப்பந்தாய்

முப்பத்து மூன்றில் இருமடங்கு நாட்களே
தப்பா திருக்கவே தாயவள் -அப்பாலே

பின்னர் அவள்செல்ல நேரவர் கூடாரம்
பின்சென்று பெண்ணவள் நற்பலி -நன்கொடுக்க

கர்ப்பப் பிறப்பால் பெறுந்தீட்டு விட்டிடும்
கர்த்தர் பகன்றார் விதியிது -கர்த்தருக்காய்

ஆடும் புறாவும் எரிபலி நல்லுறவு
ஆடு கொடுக்க பணமில்லாள் -ஆடு

பதிலாய் இருபுறா தந்திடச் சொல்வீர்
அதிலோர் எரிநல் லுறவு


லேவி 23
இறைவனார் மோசே தகைத்தமன் ஆரோன்
நிறைச்சொல் சொறிசிரங்கு வந்தால் -குறைநோய்

சிறங்கோ தொழுநோயோ ஐயந்தீர்ச் செய்வீர்
அறனார் மகனிடம் சேர்ப்பீர் -அறனார்

சிரங்கிருக்கும் மேல்தோல் குழிந்து உரோமம்
சிரங்கிலே வெண்மை யெனக்காண் -சிரங்கது

தீர்ப்பர் தொழுநோய் மனிதனும் தீட்டாவான்
தீர்ப்பது சொல்வான் குருவவர் -தீர்ப்பு

குழியாது மேல்முடி வெண்மையாய் மாறா
அழிநோய் இதுவென ஐயம் -வழிச்செல்லா

ஈரேழு நாள்வைத்து பார்க்க குறைந்திருப்பின்
ஈரேழு நாள்பின் விடுத்திட -தீரா

விடுத்தோனை மீண்டும் தொழுப்பற்ற ஆங்கே
விடுத்தோனை ஆரோன் மகனார் -விடுத்தேன்

எனினும் தொழுநோய் வரைப்பற்ற போவாய்
இனிமேல் குறைதீட்டே நீயென் -நனிதீர்

உடலின் முழுவதும் வெண்மை பரவி
உடலே முழுவெண்மை என்றால் -உடலில்

தொழுப்போலே வெண்மை அடைந்தவன் தீட்டில்
வழிச்செல்ல சொல்வார் குருமார் -தொழுப்புண்

திறந்தபுண் ஆங்கே இருந்தாலே தீட்டு
சிறைவக்க சொல்வார் குருவும் -திறந்தபுண்

மூடி தொழுவில்லாப் போனால் குருமாரை
நாடி புரிவீரே தீர்ப்பதை -நாடி

குருமாரும் சோதித்து செய்வாரே தீர்ப்பு
சிரங்கோ உடலின் கறையாய் -வரைக்கட்டி

என்றாலும் நேமம் குருபார்த்து தீர்த்திடட்டும்
என்றார் இறைவன் சிறந்தவர் -என்றாலும்

கட்டி இருந்த இடத்திலே புள்ளியாய்
சுட்ட இருந்தால் அதுதொழு -கட்டி

இருந்த இடத்தில் வெறும்வெண்மை என்றால்
சிரங்கின் தழும்பது தீர்த்து -திருமக்கள்

தீயால் உடலது புண்ணாய் தொழுப்போலே
வேயாள் குருதன்னை பார்த்திடு -தீயால்

உருதொழு நோயை குருபார்த்து தீர்க்க
சிரங்கா தொழுநோயா என்று -சிரங்கால்

தலைதாடை புண்ணாக ஆங்கே தொழுப்போல்
தலைவர் குருதன்னை பார்க்க -தலைவன்

உருதொழு நோயை குருபார்த்து தீர்ப்பான்
சிரங்கா தொழுநோயா என்று


லேவி 24
ஆடையோ பாவோ மயிரது ஆடினதோ
ஆடைமேல் நோயால் நிறமது -ஆடையின்

பச்சையோ இல்லை சிவப்பாக மாறினால்
அச்சத்தால் சேர்ப்பீர் குருவிடம் -அச்சாடை

நோயதனை சோதிக்க ஏழுநாள் வைத்திருப்பர்
நோயும் படரா நிலைக்கண்டால் -நோயிலை

என்றே குருதீர்ப்பார், நோயது மேல்படர
அன்றே எரிப்பீர் பகுத்திட்டு -நன்றென

நோயிலை தீர்த்தப்பின் அவ்வாடை ஏழுநாள்
நோயதின் பாகம் கழுவிட்டு -நோயது

தேயா திருப்பின் அதுதீட்டு என்தீர்ப்பார்
நோயாடை தீயெரிப் பீர்நன்றே -நோயும்

குறைநோய் பரவாதே தேய்ந்தால் கழுவி
குறைநோய் அதுநீங்க தீட்டில் -கறைநீங்கி

மக்கள் எடுத்துப் பயன்செய்ய சொல்வாரே
மக்களிடை தேர்ந்த குரு


லேவி 25

தொழுநோய் குணமானோன் செய்ய வேண்டிய நேமம்



தொழுநோய் குணமானோன் சொல்ல குருவும்
தொழுநோய் குணமோ இலையோ -அழையூர்

வெளிவந்து பார்த்திட, நோய்போய் குணமென்
களிப்பலி கொண்டுவரச் சொல்லு -களிப்பலி

ஈராய்க் குருவிகள் கேதுருக் கட்டையும்
சீராய் சிவப்புநூல் ஈசோப்பு -நேராண்

இடங்கொண்டு வாவெனச் சொல்ல தொழவே
இடந்தன்னில் நேராணைச் சேர்ந்து -குடமெடுத்து

ஈரில் ஒருகுருவி பார்ப்பிடிக்க கொன்றவன்
ஈரில் மறுகுருவி நூல்மேலே -நேராணும்

தோய்த்து தொழுநோயோன் மேலேழு சொட்டிட்டு
தூய்மையாக தாடி சிரைத்தவன் -தூய்நிறை

வீட்டின் வெளித்தங்க ஏழுநாள் பின்னராய்
வீட்டுள் வரட்டும் சிரைத்தவனே -நாட்டிலே

எட்டாம்நாள் கொண்டே பழுதற்ற ஆடொன்றும்
நட்டார்முன் ஈராடு ஆணாடு -குட்டிகளை

கொண்டுவந்து கூடவே ஆறுபடி மாவும்சேர்க்
கொண்டுவந்து ஆசரியன் சேர்த்திட -கொண்டுவந்த

நன்பொருட்கள் தன்னையே பாவபலி மற்றுமாய்
நன்னசை வாட்டுபலி செய்வித்து -நன்றே

அமைதி பலியும் இடவும் குருமார்
அமைதலாய் நோய்கறை நீக்க -சுமைபாவ

பார்ப்பதில் சிற்றளவு காதின் வலதுமடல்
பார்ப்பை வலதுபெருக் கைவிரல் -பார்ப்பூசி

எண்ணெய் இடக்கை சிறிதெடுத்து தன்வலக்கை
எண்ணெய் தனைதோய்த்து ஆசரியன் -எண்ணெயை

ஏழுமுறை ஆண்டவர்முன் சொட்டிப்பின் பார்ப்பின்மேல்
வாழுமவன் பார்ப்பினது மேல்பூசி -வேழாணும்

வாழுமவன் மேற்றலையில் எண்ணெயை பூசுவான்
வாழாசன் முப்பலியால் தூய்மையே -வாழவன்

தேசத்தான் வன்பலிக்கு கொண்டுவரா ஏழையோ
ஆசனிடம் ஈராய்ப் புறா.


லேவி 26

வீட்டில் தொழுநோய் வந்தால் செய்ய வேண்டிய நேமம்



வீட்டிலே ஆண்டவர் நோய்வரச் செய்தாலே
வீட்டுமுதல் ஆசரியன் வீடுவந்து -வீட்டைபார்

என்சொல்ல, ஆசரியன் வீடுசேர் முன்னரே
நன்பொருட்கள் வீட்டுவெளி வைத்திட -நன்னாசன்

வீட்டின் சுவர்சிவப்பு பச்சைக் குழிக்கறையென்
வீட்டை அடைத்திடனும் ஏழுநாள், -வீட்டையவன்

எட்டாம்நாள் பார்வையிட, நோய்படரா வீடுதூய்
எட்டாம்நாள் நோய்பரவி கண்டாலே -நட்டாணும்

நோய்க்கற்கள் பேர்த்தெடுத்து வீட்டினது சுற்றத்தின்
வேய்மணல் தன்னை செதுக்கிட -தூய்மைசெய

ஊர்வெளியே போடுமின்னே என்றுரைத்து கற்கொண்டு
சேர்ப்பூசி பின்னுமாய் நோய்ப்பட்டால் -சேர்வீட்டை

மட்டம் இடித்திட்டு பாழ்ப்பொருளை ஊர்வெளி
இட்டிடக் கட்டளை இட்டிட -கட்டிடம்

நோய்நீங்கின் நோய்நீக்கம் தூய்செய்ய போயந்த
நோய்வீட்டாள் ஆசரியன் கையிலே -தூய்செய்ய

ஈராய்க் குருவிகள் கேதுருக் கட்டையும்
சீராய் சிவப்புநூல் ஈசோப்பு -நேராண்

இடங்கொண்டு வாவெனச் சொல்ல தொழவே
இடந்தன்னில் நேராணைச் சேர்ந்து -குடமெடுத்து

ஈரில் ஒருகுருவி பார்ப்பிடிக்க கொன்றவன்
ஈரில் மறுகுருவி நூல்மேலே -நேரான

நேராணும் பார்ப்பதை தோய்த்தெளி நோய்வீடு
சீரே; கறைவீடு உள்ளடைக்க -சேரார்

கறைவீட்டுள் யாரும்; அடைவீட்டுள் சென்றோன்
கறையாவான் மாலைவரை; வீட்டில் -உறங்கியோன்

ஊனுன்டோன் நீரால் வெளுக்கட்டும் மேலாடை
தானே சொறிசிரங்கு நோய்வந்தால் -மேனியில்

செய்திட நேமம், பகன்றாரே தேவனும்
மெய்யார் இருதமர் கேட்டு


லேவி 27

வெட்டைநோய், புண்ணால் வரும் நீர்போக்கு தீட்டு குறித்த நேமம்



இறைவன் இருதமர் நோக்கிப் பகன்றார்
நிறைதேச மக்களிடம் சொல்வீர் -குறையாய்

உடலில் திரவம் வடியும் எவனும்
விடுவீரே தீட்டு முடிவு -விடும்வரை

அவ்வாள் தனியே படுத்திடச் சொல்வீரே
அவ்வாள் தொடுமேதும் தீட்டாகும் -அவ்வாள்

படுக்கையும் தீட்டே; படுக்கை தொடுவோன்
படுக்கையை தொட்டதால் தீட்டு -விடும்திரவம்

நின்றாலும் புண்ணாலே தீட்டே அவன்செல்ல
அன்றாட வண்டியும் தீட்டேகாண் -நின்றவனும்

துப்ப ஒருவன்மேல் பட்டாலும் பட்டவன்
அப்போதே ஆவானே தீட்டவனும் -அப்படியாள்

தொட்டவன் தீட்டு கழிந்திட நீராடி
தொட்டதால் மாலை வரைதீட்டே -தொட்டபொருள்

எல்லாமே தீட்டு; மனிதனும் தீட்டகல
வல்லார் தொழப்பலி செய்திடட்டும் -நல்ல

உறுநீரால் தன்னுடல் நீராடி பின்னர்
நறுதெய்வம் தன்னைத் தொழவே -சிறுபுறாவோ

காட்டுப் புறாவோ இரண்டாகக் கொண்டுவந்து
நாட்டு குருக்களைச் சேர்ந்திட -நாட்டவன்

தந்ததில் ஒன்று எரிபலியாம் மற்றது
தந்த அமைதிக் கிடுவித்து -அந்தப்

படியே பகன்றார் இறைவனார் வெட்ட
படிந்தோன் குறித்தவர் தீட்டு


லேவி 28

விந்து வெளியேற்றம், மாதவிடாய், மகளிரின் உதிரப்போக்கு குறித்த நேமம்



விந்து வெளியேற தீட்டாவான் ஆங்கவனும்
விந்து படயிருந்த பெண்ணுமே -விந்துபட்ட

காரணத்தால் தீட்டாவாள்; மேலாடை தோய்த்துப்பின்
காரணம் மாலை வரையிலே -சேராப்பெண்

மாத விலக்காய் மகளிர் இருக்கட்டும்
மாதத்தில் ஏழுநாள்; காலமதில் -மாதர்

படுக்கையும் தீட்டே; படுக்கை தொடுவோன்
படுக்கையை தொட்டதால் தீட்டு -படுத்தவளை

சேர்ந்தாலே ஆண்மகனும் தீட்டாவான் மாலைவரை
சேர்ந்திட்ட காரணத்தால் ஏழுநாள் -சேர்த்தீட்டே

ஆண்படுக்கை தீட்டாகும்; தொட்ட பொருளெல்லாம்
வீண்தீட்டு ஆகிடும் நேமமிது -காண்பெண்ணின்

நாள்பின்னும் பார்ப்புவந்தால் நிற்கும் வரைத்தீட்டு
நாள்நின்ற நாள்பின்னே ஏழெண்ணி -நாள்விட்டு

ஈராய் புறாக்கொடுக்க ஆசரியன் செய்திடுவான்
சீராய் பலியிரண்டே இட்டிட -நேராக

வாழ்க்கைதனை வாழச்சொல் மக்களை; கூடாரம்
வாழ்தேசத் தில்தானே உள்ளதே; -வாழ்கர்த்தர்

நேமம் கொடுத்துரைத்தார் மோசேயும் ஆரோனும்
நேமம் செவிகேட்டார் ஆங்கு


லேவி 29

ஆரோனின் இரு குமாரர் இறந்தபோது ஆரோனுக்கு செய்யக் கட்டளையிட்டவை



வெளித்தீ கொணர்ந்தே மரித்தார் இருவர்
வெளியார் வராதே இருக்க -அளிகர்த்தர்

நேமம் தமனாம் இவன்மோசே தந்திட்டார்
நேமம் இதுவே பகன்றவர் -நேமமாம்

மாதூய் தலத்தில் இரக்க இருக்கைமேல்
மாதூய் இறைவன் இருப்பாரே -மாதூய்

தலத்திலே எந்நேரம் சொல்லாய் வரவே
தலத்திலே வந்தால் மரித்து -தலமுன்

ஒருகாளை ஆரோனும் தன்குடும்ப பாவம்
திருமுன் அறிக்கை புரிவான் -ஒருமே

எரிபலியாய் கொண்டுவர ஆரோன் குளித்தே
திருமுன்னர் வந்திடச் சொல்வாய் -திருமுன்

முழுதும் சணலால் இடையாடை பாகை
வழுவில்லா தூயாடை ஈதே -வழுக்காக

ஈராடு கொண்டிடச்சொல் மற்றும் எரிபலிக்கு
சீரான வெள்ளைக் கிடாய்செலுத்த -சீரான

ஈராட்டை சீட்டுபோட்டு ஈராட்டில் ஓராடு
சீராக்கும் வன்பலியே மற்றாடோ -நேரில்லோர்

பாவமேந்தி விட்டிடச்சொல் ஆளில் வனத்திலே
பாவபலி செய்தப்பின் ஆங்குத்தான் -பாவ

பலியிட்ட காளையின் பார்ப்புதனை மாதூய்
நலமாக ஏழுமுறை சொட்ட -பலிசெய்யும்

வேளையில் வேறெவரும் கூடாரம் உள்செல்லீர்
காளை பலிப்பின் நுழையச்சொல் -வேளையில்

காளை பலிப்பின்னே வர்க்கம் புகையெழுப்பி
ஆளை வரச்சொல்வாய் மாதூயுள் -ஆளை

இரண்டுக்கை வர்க்கம் புகைப்போட்டு ஆங்கே
திருமுன்னர் வந்திடச் சொல்வாய் -திருப்பலி

காளையின் பார்ப்புதனை பீடத்தின் கொம்புமேல்
ஆளவனை பூசச்சொல்; ஆடுபலி -வேளையிலே

மக்களின் பாவம் அறிக்கைசெய்தே பின்னராய்
தக்க எரிபலி செய்தவனும் -மக்கள்காண்

காளை பலிபின்னே ஆடை அவிழ்த்தவன்
ஆளவன் நீராடி கண்கவர் -கோளாடை

மேலுடுத்தி வந்திடச்சொல் மக்களும் கண்டிட
காலத்தே செய்வீர் பலிதன்னை -சீல

பலிபின்னே காளையும் ஆட்டின் நிணமும்
நலமக்கள் வாழ்நகரம் விட்டு -பலிநிணம்

எல்லாமே சேர்த்தெரிக்கச் சொல்வாய் எரித்தோனும்
நல்குளியல் செய்திடச் சொல்வாயே -அல்லாது

நேமித்த ஆளை விடச்சொல்வாய் ஆடதை
நேமித்தோன் கொண்டு வனம்விட -நேமித்தோன்

நல்குளியல் செய்தே வரச்சொல்வாய் உள்நகரில்
நல்நேமம் தேவன் கொடுத்தவர் -நல்நேமம்

மக்களுக்கு ஏழாம் திருமாதம் பத்தாம்நாள்
தக்கதாய் இப்படியே செய்ச்சொல்வாய் -மக்கள்

இதனை தலைமுறை தோறும் புரிய
அதுவே பெருஓய்வு நாளே -இதனாலே

மக்கள் அனைவரும் வேலை விடுத்தன்று
மக்கள் மனதை குறுக்கியே -மக்களும்

சொல்படியே ஓய்ந்திருக்க கட்டளை தந்திடு;
வல்லார் இறைவன் உரைத்து


லேவி 30

பலிசெலுத்தினல் ஆசரிப்பு கூடாரம் கொண்டுவர நியமம். அந்நிய தேவர்களுக்கு பலி செலுத்தா திருக்க எச்சரிக்கை



இறைவனார் மோசேயை நோக்கிப் பகன்றார்
இறைமக்கள் எல்லாரும் கேட்க -இறைவாக்கு

சொல்லிடு, மாடோ மறியாடோ வெள்ளாடோ
கொல்பாவம் மேல்சுமறும் ஆதலால் -சொல்வாய்

நகரினுள்ளோ அல்வெளியோ கொன்றால் இரத்தம்
நகரினுள்ளோ அல்வெளியோ சிந்த -பகைப்பழி

மேல்சுமரும், அம்மனிதன் போவான் அறுப்புண்டு
கோல்பகன்றார் கொல்லாதீர் வீணாக -கோல்பின்

ஒருவேளை மாக்கள் பலியானால் ஆங்கே
திருமுன்னர் கொண்டுவரச் சொல்வாய் -திருஆசன்

பார்பதனை பீடம்மேல் சொட்டித் தெளித்தப்பின்
பார்க்கொழுப்பை பீடம் எரித்திடட்டும் -சேர்சொல்லாய்

சோரமாய் வேறே கறையுருவம் யாருக்கும்
கோரபலி செய்யா திருமின்னே -சீராக

வாழ்ந்திட ஈதே தலைமுறை தோருமாய்
வாழ்நேமம் தேவன் பகன்று


லேவி 31

தகனபலி வேறெங்கும் செலுத்தக் கூடாத நியமம், உதிரம் உண்ணாதீர் என்ற நேமம், தானாய் இறந்ததை உண்டால் தீட்டு என்ற நேமம்



தகனபலி ஏதேனும் செய்தாலே மக்கள்
தகனபலி கொண்டுவராப் போனால் -இகத்தில்

இனத்தினின்று போவான் அறுப்புண்டு வேறாய்
மனமுவந்து இட்டான் பலியே -அனைவரும்

தேசத்தில் வாழ்மக்கள் யாருமே பார்ப்புசியீர்
தேசத்தில் வாழ்இனத்தார், வேறினத்தார் -வீசிப்

புசித்தால் எதிராய் முகம்திருப்பி போவேன்
புசித்தோர் அறுப்புண் டழிவீர் -திசையில்

நிணத்தின் உயிரது பார்ப்பிலே ஆதல்
நிணத்தினோடு பார்ப்பதை உண்ணீர் -நிணத்தின்

உதிரம் கொடுத்தேன்யான் கட்டளையாய் பீடம்
உதிரம் தெளிக்கவே மீட்பு -அதுதானே

ஆத்துமா செய்பாவம் நீக்க உதிரமே
ஆத்தும பாவம் எடுக்கிறது -ஆத்தும

நேசர் பகன்றாரே நல்நேமம் மக்களின்
நேசத்தால் மீட்பது பார்ப்பதுவே -தேசவெளி

வேட்டை மிருகம் அனைத்தின் உதிரமும்
வேட்டை புசிப்போர் உதிரத்தை -வேட்டை

இடத்திலே சிந்தி மணலாலே மூடி
கடந்தப்பின் உண்பீர் நிணத்தை -கடுமையால்

தானாய் இறந்ததோ பீறுண்ட மாக்களோ
ஈனன் புசித்தாலே மாலைவரை -ஈனன்

புசித்ததால் தீட்டாவான்; நீர்க்குளியல் பின்னர்
புசித்தோனை விட்டகலும் தீட்டு -புசித்தோனோ

நீர்குளியல் செய்யாமல் ஆடைதனைத் தோய்க்காமல்
நேர்நியதி ஆகாதே அவ்வாளும் -நேர்நியதி

செய்யாத காரணத்தால் தன்மேல் பழிசுமப்பான்
செய்யாதோன் என்றார் இறை


லேவி 32

நெருக்க இனத்தாரோடு கலவி கூடாது என்ற நியமம்



இறைவனார் மோசே யிடம்பகன்றார் நீபோய்
நிறைமக்கள் தன்னிடம் போய்ச்சொல் –இறைவன்

நிறைக்கர்த்தர் யானே; எகிப்தினின்று கானான்
நிறைத்தேசம் செல்வழி செய்தேன் –குறையாம்

எகிப்திலே செய்துவந்த வன்செய்கை செய்யீர்
வகைக்கானான் வாழினம் செய்யும் –தகைச்செய்கை

செய்யாதீர் கீழ்படிந்து தேவனெந்தன் கோட்பாடு
செய்து நடப்பீர் இனத்தாரே –செய்த்தந்த

கட்டளைகள் பின்பற்றும் எவ்வாளும் நன்றாகக்
கட்டளைகள் பின்பற்ற வாழ்ப்பிழைப்பான் –கட்டளைகள்

கோட்பாடு தந்திட்ட தேவனாம் யான்கர்த்தர்
மீட்பர் பகன்றார் உரைத்தவரும் –நாட்டில்

நெருக்கம் இனத்திலே சேராய் கலவி
நெருக்கமே தாய்தந்தை நல்லார் –நெருக்கமே

தந்தைவழி வந்த சகோதரர் ஆண்பெண்கள்
தந்தை உடன்பிறந்தோர் விட்டிடுவீர் –தந்தைப்போல்

தாய்வழி வந்தோர் நெருக்கமாம் கூடாதே
தாய்வழி வந்தோர்க் கலவியும் –சேய்மக்கள்

சோதரர் வந்தோர்க் கலவியும் வேண்டாமே
சோதரி பெற்றோர் விடுத்திடுவீர் –ஆதலால்

பெற்றோர் சகோதர ஆண்பெண் துணையையுன்
நற்றாள் கலவாதீர்; நீயுலகில் –பெற்றபிள்ளை

யாரும் கலவாதீர்; பிள்ளை மருமக்கள்
யாரும் கலவாதீர் இங்குத்தான் –சேராயே

தாய்மகள் ஒன்றாய்க் கலவீர்; நிலத்தினிலே
சேய்தாய் கலத்தல் விடுவீரே –சேய்தாய்

இனத்தில் நெருக்கம் விடுப்பீர் கலவி
இனமே நெருக்கம் விடுத்து –நனியுன்

மனையாள் உயிரோ டிருக்க தமையாள்
மனைவியாய் கொள்ளாதீர் துன்பம் –மனைவிக்கு

ஏற்படு மாதலால் விட்டிடுவீர் நல்லாளின்
ஆற்றாமை கூடா துலகிலே –ஆற்றாது

பெண்ணின் விலக்கான நாட்களில் சேராதீர்
மண்ணின் மிருகத்தைச் சேராதீர் –மண்ணின்

இனத்தார் புரிந்தார் இவையெல்லாம் ஆங்கே
இனத்தாரை கக்குமே நாடு –இனத்தாரே

ஆணோடு ஆண்கலவீர் கானான் இனத்தார்கள்
மாணாச்செய் செய்கைகள் பின்பற்றீர் –வீணாக

பின்பற்றி னாலே செயல்களை கேட்பேன்நான்
நன்கர்த்தர் யானே உணர்


லேவி 33

இசுரவேலர் பின்பற்ற வேண்டிய வேறுசில நியமங்கள்



அறுவடைக் காலம் அறுவடை நாளில்
சிறியோர் அறுக்க விடுமின் –அறுகடை

மூலை சிதறல் எடுக்காதீர் சிற்றாட்கள்
மூலை அறுக்கவே விட்டுவிடு –சோலைப்

பயிரும் திராட்சைக் கொடியது எல்லாம்
உயிர்பிழைக்க விட்டிடும் சிற்றாள் –பயணியர்

போக்கர் வழிசெல்வோர் தன்னின் பசிநீங்க
ஆக்க நிறைதேவன் கூற்றுச்சொல் –போக்கமாய்

அண்டை இருப்போர்க்கு தீமைப் புரியாதீர்
மண்ணிலே வேலைக்கு கூலியை –கொண்டுவாழ்

மக்களுக்கு அன்றாடம் தந்திடுமின் அஃதன்றோ
மக்களின் வாழ்நிலை காண்பீரே – மக்கள்

செவிடர் செவிக்கேளார் என்பதால் வாய்ச்சொல்
செவிக்கேளார் தீச்சொல் உரைக்கா –அவைமக்காள்

கண்தெரியோன் காலிடற முன்னே தடைக்கல்லை
மண்ணிலே வைத்தல் விடுத்திடுவீர் –மண்ணிலே

கோள்சொல்லி வன்னாய்த் திரியாதீர் மக்களே
கோள்சொன்னால் மாற்றானின் வாழ்வது –கோள்தன்னால்

போகுமே வீணாய்; இனத்தார்கேள் சொல்வாயே
போகாதீர் கோள்சொல்லிப் பொய்யாக –ஆகவே

சுற்றார் அயலார் எவரும் மனதாலே
அற்றாக எண்ணாதீர் மக்களே –சுற்றார்

தவறென்றால் சொல்தவறை; அற்றாள் தவறை
தவறினால் உன்மேல் பழியாம் –தவறென்

பழிக்குப் பழிவேண்டாம் உம்மினத்துள் ஆங்கே
வழிவந்த நற்பிறனை நீயும் –அழியாத

அன்புகூறு; நான்கர்த்தர் ஆதலால் பின்பற்றி
அன்புகூறு என்பகன்றார் நேர்கர்த்தர் –என்றும்

இருவகை மாக்கள் கலவீர் பெருக்க
இருவித்து சேர்த்து விதைக்கா –திருமே

இருவகை நூலாலே ஆடைநெய்யீர் என்றார்
திருக்கர்த்தர் நேமம் சிறந்து –திருக்காய்

நியமித்த பெண்ணடிமை ஆளவன் சேர்ந்தால்
நயமில்லை என்றே குருமார் –கயவனும்

பாவபலி ஆட்டுக் கிடாய்கொண்டு தந்திட
பாவபலி செய்வான் குருஆசன் –பாவநிறை

கானானைச் சேர்ந்து மரம்நட்டு அற்கனிகள்
கானானில் வந்திட விட்டிடும் –கானானின்

ஆண்டு நுனித்தோலில் அற்கனிகள் மூன்றாக
ஆண்டது நான்கில் இறைக்காக –ஆண்டவர்க்கு

நான்கா வதுஆண்டில் தந்திடுவீர் நல்லிறைக்கு
தேன்சுவை நற்கனிகள் எல்லாமே –தேன்சுவை

நற்கனிகள் உண்ணலாம் ஐந்தா வதுஆண்டில்
நற்கர்த்தர் சொன்னார் சிறந்தங்கு – அற்றாய்க்

குறிகேட்க போகா திருப்பீரே; கள்ளம்
நெறியில்லா மாயங்கள் வேண்டாம் –தறிகெட்டு

மேல்முடியை வெட்டாதீர் வீண்சடங்காய்; தாடியும்
சால்முடியே வெட்டாதீர் என்றுமே – மேல்சேர்

அடையாளம் செய்திட உம்முடலில் பச்சை
இடுவியாதீர்; செத்தோர் நினைவில் –அடையாள

ஏதும் அணியாதீர் நான்கர்த்தர் என்பகன்றார்
வேதம் உரைத்தார் இறைவனார் – மாது

மகளவளைப் பேணுதல் நல்லொழுக்கம்; பேணா
மகளவள் வேசியானால் நாடே –மகளிரால்

கெட்டுப்போம்; ஆதலால் பேணு மகளிரை
கெட்டுப்போ காதபடி நாடதும் –கெட்டதே

மந்திரம் செய்வோர் அகற்றிடுவீர் போகாதீர்
மந்திரம் செய்வோர் குறிகேட்க –எந்நாளும்

நான்கர்த்தர் என்சொல் மறவாதீர் சொன்னாரே
மேன்மை மிகுந்தவர் நல்லாரும் –மேன்மை

நரைமுடி நல்லார்முன் நீயெழும்பச் செய்வாய்
நரையாள் பணிந்து சரியாய் –நரைமுகன்

நன்றாக சேவித்தல் நன்றாமே அஞ்சிச்செய்
நன்கர்த்தர் யானே உணர்வாயே –அன்றி

அயல்நாட்டு மக்கள் பயணித்தால் நீவிர்
அயலானென் கூறி கெடுதல் –அயலார்க்கு

எண்ணாதீர்; மக்காள் அயலாய் எகிப்தென்னும்
மண்ணில் உழன்றீர் இனத்தாரே – மண்ணில்

திருநாட்டில் அந்நியர் வாழ விரும்ப
திருநாட்டில் அந்நியரை தேச –திருமக்கள்

போலே மதித்திடுவீர்; தன்னைத்தான் அன்புகூறுப்
போலே புரிவீர்நல் அன்புத்தான் –சீலாய்

எடைக்கல் நிறைக்கல் அளவுச்செய் ஏதும்
கடைதன்னில் சீராக வைப்பீர் –எடைக்கல்

எதிலும் களவுச்செய் யாதீர் இறைவன்
அதனைப் பகன்றார் சிறந்து


லேவி 34

பாலியல் வன்புணர்விற்கு தண்டனை



பிறன்மனையாள் வன்னாய் உறவுகொண்டால் சாவர்
அறமிதுவே கேள்மின் தகாதே -பிறன்மனை

நோக்கல் அதனாலே சாகடிப்பீர் சேர்த்திருவர்
தேக்காதே தேசமும் கக்கிடும் -நோக்கியே

தந்தை மனையாளைச் சேர்தல் கொடும்பாவம்
அந்தபடி சேர்ந்தால் கொலைசெய்வீர் -அந்திருவர்

தந்தையை அம்மணம் செய்ததற்கு ஒப்பாமே
அந்தபடி செய்வீர் கொலையைத்தான் -பந்தம்

மருமகளை சேர்ந்துப் புணர்ந்தால் இருவர்
திருச்சொல்லைக் கேட்காத தாலே -இருவரைக்

கொன்றிடுவீர் மோசமான பாவமதால் சாவிற்கு
வன்செய்தோர் மீதே பழியாகும் -வன்னாக

ஓரின வன்புணர்வோர் கொன்றிடுவீர் பாவமே
ஓரினப் வன்புணர்வு; சேதமும் -சேராப்

பழியது கொல்வோர்மேல், ஓரினச் சேர்க்கை
பழியது தத்தமதின் மேல்தான் -பழிதானே

தாயோடு சேர்த்து மகளைப் புணர்தலும்
தீயவை தானே அதனாலே -தீயவைச்

செய்தோராம் மூவரும் கொன்றிடுவீர் கொல்வதால்
வெய்ப்பாவம் போகுமே நாடதும் -செய்தோரை

ஆண்பெண் எவரேனும் வன்னாய் புணர்ந்தலை
மாண்பற்று மாக்களோடுச் செய்தாலே -மாண்பதை

விட்டு விலகியதால் கொன்றிடுவீர் அக்கொலைக்கு
விட்ட பழிவிலகி யோர்மேலே -நட்டமாய்ச்

சொல்விலகி சோதரன் சோதரியை நாட்டிலே
அல்லாய் மணம்புரிந்தால் தண்டனை -அல்லார்க்கு

தந்திட வேண்டுமே; மாதர் விலக்கின்கால்
சிந்தப் புணர்ந்தால் பழியாகும் -அந்தபடி

சோதரன் கட்டிய மாதை புணர்ந்தால்காண்
சோதரனின் அம்மணத்திற் கீடாமே -சோதரன்

கட்டிய மாதைப் புணர்வோனும் அம்மாதும்
திட்டமாய் தண்டியும் சேர்த்து


லேவி 35

ஆசரியர் கடைபிடிக்க வேண்டிய சில நியமங்கள்



மக்களுள் யாரேனும் சாக, திருவாசன்
தக்கான் பிணம்தொடான் ஏனென்றால் -தக்கான்

நிறையோன் திருவிற்காய்; ஆசரியன் சொந்த
உறவென்றால் மட்டும் தொடலாம் -உறவது

தந்தைதாய் சோதரன் தத்தமது மக்களும்
தந்தை வழிப்பிறப்பு கன்னியும் -அந்தபடி

ஆசரியன் தொட்டங்கு தீட்டும் சரியாமே
தேசத்தில் இவ்வகை யாய்ச்செய்வீர் -தேசத்தின்

ஆசரியன் தன்தாடி மேல்மயிர் ஏதுமே
தாசன் மழிக்கா திருக்கச்சொல் -வேசியின்

வன்புணர்வும் கற்பிழந்த பெண்மணமும் கூடாதே
நன்றவனாம் ஆசரியன் தூய்மகனே -நன்றாக

நேர்சேவை செய்பவன்; அப்பமும் வன்பலியும்
நேர்மகன் தன்னை உடலாலும் -சேர்மனதால்

தூயின்மை கூடாது; தூயவர் சேவைச்செய்
வேயமாய் போகா திருக்கச்சொல் -தூயவர்

தூய்கெடுக்க ஆசன் மகளவள் வேசியானால்
தூய்கெடுத்த காரணத்தால் தீயிடுவீர் -தூய்கெட்டு

தூயறையுள் வந்திடும் மேலாசன் தீட்டாகா
தூயனாய் காத்திடச் சொல்லிடு -ஆயன்

தலைமை முடிதரித்த மேலாசன் நாளும்
தலைமேலே தூயெண்ணை தானே -தலைவனின்

பெற்றோர் இறந்தாலும் தீட்டாக தொட்டிடாமல்
நற்றான் இருக்கட்டும் சீராக -அற்றாண்

தலைமை முடிதரித்த ஆசரியன் என்றும்
தலைமை முடிதரித்த தாலே -தலையுடை

தன்னை கிழிக்கலாகா சொல்வாய் செவிகேட்டு
என்றுமவன் கீழ்ப்படிய நேர்மகன் -நன்றில்

உடலிலே ஊனமென்றால் ஆசன் இனத்தான்
இடலாகா எப்பலியும் கேளாய் -இடத்துள்

திரைப்பின்னே போகாது தூய்பலி தன்னை
இருந்துண்ணச் சொல்வாய் மகனும் -திரைமுன்னே

வன்பலியோ தூபமோ ஏறெடுக்க லாகாது
என்றென்றும் தூயறைக்குள் வந்திடான் -அன்றியும்

மாதூய் பலிதனில் உண்ணலாம் அம்மாந்தன்
வேதவர் இட்டார் சிறந்தன்று -வேதவர்சொல்

இந்நேமம் கேட்டறிந்து சொன்னான் திருமோசே
சந்ததியர் ஆரோனும் கேட்டு


லேவி 36
இனத்தார் இசுரேல் கொடுக்கும் பொருளை
இனத்தலை ஆரோன் புதல்வர் -அனைவர்

செவிகேட்கச் சொல்நேமம்; கர்த்தர் இறையான்
இவையே பகன்றார் இறைவன் -செவிகேள்

தலைமுறையார் ஆரோனில் யாரேனும் தீட்டாய்
தலைமுறையார் செய்திட்டால் நேமம் -மலையது

வன்பாவம் ஆதலால் மக்களே தீட்டோடு
வன்பலியோ ஏனை விடுத்திடுவீர் -நன்றில்

தொழுநோய் எவனில் உளதோ திருவூண்
வழுவிப் புசிக்கலாகா கேளீர் -அழியாதே

அந்நியர், வேலையாள் ஊண்தன்னை உண்ணவே
அந்தப் படிக்கொடா தீர்மக்காள் -மந்தம்

அறியாமல் யாரேனும் உண்டாலே உண்ட
அறிந்ததும் ஐந்திலோர் பங்கு -செறிவாக

சேர்த்திடச் சொல்வீரே உண்டவனை ஆலயத்தில்
நேர்கர்த்தர் நேமம் பகன்றவர் -நேராண்

குலத்தினள் கைம்பெண்ணோ தள்ளுண்டோ வீட்டில்
நிலைத்தவள் பிள்ளையில் சேர்ந்தால் -குலத்தினள்

தூயூண் புசிக்கலாம்; ஆசரியன் கொள்வேலை
தூயூண் புசிக்கலாம் நன்றாமே -வேயாள்

குலத்தினள் வேறாள் மணம்புரிந்துப் போனால்
குலம்விட்டுப் போனதால் ஆகா -குலத்தினள்

தூயூண் புசிக்கவே; நேமமிது என்றாரே
தூயவர் கர்த்தர் இறைவனும் -தூயர்

இறையெனக்கு காணிக்கை அந்நியர் சேர்ந்து
சிறப்பாக தந்திட வந்தால் -சிறப்பாய்

பழுதில்லா நேராய் மிருகம் தனையே
வழுவாதே வாங்கிடு வீர்நேர் -அழிய

வழுவிப் பழுதை படைத்தால் குலத்தார்
வழுவது காணிக்கை ஏற்கா -பழுதை

கொடுத்தீரே தூயவர்க்காய்; மக்காள் சிறப்பே
கொடுக்காது விட்டு டுவீரே -அடுத்து,

பிறந்தப்பின் ஏழுநாள் தாயிடம் விட்டு
பிறந்தமே தாய்விட் டெடுத்துச் -சிறப்பாய்

பலியிடலாம் எட்டாம்நாள்; ஆனாலும் தாயைப்
பலியிடாதீர் குட்டியோடுச் சேர்த்து -பலிநாளில்

தாய்சேய் ஒருநாளில் சேர்த்துப் பலியிடாதீர்
தூய்கர்த்தர் உங்களை தூய்செய்ய -தூய்மக்கள்

விட்டிடச் செய்தேன்நான் தூயராய் வாழ்ந்திட
விட்டிடாதீர் தூய்மை தனைமக்காள் -நட்டார்

மனமுவந்து காணிக்கை கொண்டுவாரும் மக்காள்
மனமுவந்து நன்றிப் பலிகள் -மனதில்கொள்

தூயரென் நாமத்தை தூய்க்கேடு ஆக்காதீர்
தூயவர் சொல்படி வாழ்ந்து


லேவி 37

பாசுகா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை



இறைவனார் மோசே யிடம்பகன்றார் சொல்வாய்
இறைமக்கள் கொண்டாடச் சொல்வாய் -நிறைவிழா

செய்வீரே வேலை நிறைநாட்கள் ஆறுநாள்;
செய்யாதே ஏழாம்நாள் ஓய்ந்திருப்பீர் -செய்வீரே

பாசுகா அப்பம் புளிப்பில்லா கொண்டாடு
தேசத்தில்; சேர்த்த முதற்கனிகள் -வீசி

அசைவாட்டும் பண்டிகை; பெந்தகொசுத் கூட
இசைக்கூடம் எக்காளம் தானே -மிசைசேர்ந்தே

ஆண்டின் முதற்றிங்கள் நாளாம் பதினான்கில்
ஆண்டுதோறும் பாசுகா நல்விழா -வேண்டுமே

மக்காள் பதினைந்தில் சேர்ந்துநீர் கொண்டாடும்
தக்க புளிப்பில்லா ஊன்தனை -மக்காள்

புளிப்பில்லா ஊன்புசிக்கும் அந்நாட்கள் ஏழு
புளிப்பில்லா ஊன்நாளாம் ஒன்றில் -களிக்கூடும்

மக்கள் திருச்சபையில் சேர்ந்தே; களிநாளில்
மக்காள் இருப்பீரே ஒய்ந்தன்று -தக்கதாய்

ஏழுநாளும் கர்த்தருக்கு வன்பலி யிட்டிடுவீர்
ஏழாம்நாள் கூடிடுவீர் ஓர்சபையாய் -ஏழாம்நாள்

செய்யாதீர் எவ்வேலை சீர்மக்காள் ஓய்ந்திருப்பீர்
மெய்யார் பகன்றார் சிறந்து


லேவி 38

அறுவடை திருநாளும் பெந்தகொசுதே திருவிழாவும்



அறுவடை செய்யும் பயிர்களில் நன்றாய்
அறுத்த முதற்கட்டை ஆசன் -சிறப்பாய்

அசைவாட்டக் கொண்டுவாரீர் மக்களே மற்றும்
அசைக்குமந் நாளில் பலியும் -திசையில்

அறுவடை செய்த பயிரை அசைத்து
சிறப்பாய் படைக்காது உண்ணீர் -அறுவடை

இச்சட்டம் உங்களுக்கு நாளும் நியமமே
எச்சரித்தார் தேவன் இறைவனார் -அச்சீர்

அறுவடை செய்தப் பயிரசை நாளாம்
சிறப்பான ஞாயிறு; பின்னே -நிறைவாக

போகட்டும் ஏழுவாரம்; ஐம்பதாம் நாளிலே
ஆகட்டும் மற்றும் பலிகொடு -தேசத்தில்

ஐம்பதாம் நாளதில் பெந்தகொசுத் நாளாமே
ஐம்பதாம் நாளதில் ஓய்ந்திருப்பீர் -ஐம்பதாம்

நாளதில் கொண்டு கொடுப்பீர் பயிர்களை
வேளையில் செய்வீர் பலிதந்து -கோளதில்

பெந்தகொசுத் நாளில் திருச்சபைக் கூடியே
இந்நாளில் நன்றாய் விளைப்பயிர் -தந்தவரை

தூயவர் கர்த்தர் துதிப்பீரே; இச்சட்டம்
ஓயா தலைமுறை யார்ச்சட்டம் -தேய

அறுவடை செய்யும் வயலின் வரப்பு
அறுவடை செய்யீர் கடைத்து -அறுவடை

ஏழை, வழிச்செல்வோர் உண்ண விடுவீரே
வேழார் பகன்றார் விதி


லேவி 39

கூடாரப் பண்டிகை



நற்றிங்கள் ஏழில் முதல்நாள் சிறப்பாமே
நற்றவர் ஏற்றித் தொழுதிட -கற்க

திருச்சபைக் கூட்டமும் ஓய்வுநாள் ஆக
திருநேரம் எக்காளம் ஊது -திருநாள்

நினைவூட்டும் நேரத்தில் எக்காளம் ஊதி
நினைவாக வன்பலி இட்டு -நினைவில்கொள்

அந்நாளில் எவ்வேலை செய்யாதே ஓய்ந்திருப்பீர்
எந்நாளும் செய்வீர் விதியது -அந்தபடி

நற்றிங்கள் ஏழதில் பத்தாம்நாள் பாவபலி
நற்றவர்முன் செய்திட வந்திடுவீர் -கற்க

திருச்சபைக் கூடி புசியாதே நோன்பு
திருமக்காள் செய்வீர் சிறந்து -திருமக்கள்

அந்நாளில் யாருமே ஊன்புசிக்கல் ஆகாது
அந்நாளில் யாரும் புசித்திட்டால் -அந்தாளும்

போவான் அழிந்து; சிறப்பான நாளதுவாய்
நீவீர் புரிவீரே ஓய்வுநாள் -தீவிர

நற்றிங்கள் ஏழில் பதினைந்தாம் நாள்முதல்
நற்றவரை போற்றித் துதித்திட -நற்றாரே

கூடார நல்விழா ஏழுநாள் கொண்டாடும்
கூடாரம் தன்னில் வசித்திடுவீர் -மேடைசேர்

காரையொடு கல்சேர்த்து வீடிருந்தும் அந்நாளில்
சீரில்லாக் கூடாரம் தன்னில்வாழ் -சீரில்லா

வாழ்க்கையை வாழ்ந்தீர் திருப்பயணம் போதுநீர்
வாழ்க்கையை செய்வீர் நினைவாக -வாழ்நல்

தலைமுறைகள் ஏனிந்த பண்டிகை கேட்டால்
தலைமுறையே ஆன்றோர் பயணம் -தலைமுறையார்

செய்தார்; நினைவாய் இறைவன் அருளினார்
செய்திடுவோம் கூட விழா


லேவி 40
இடித்துப் பிழிந்த ஒலிவநெய் தன்னை
இடித்துப் பிழிந்தது தூயாய் -அடியார்

அணையா தெரிய விடவே இரவில்
பணியார் திருவினது வீட்டில் -பணியாராம்

நன்மக்கள் ஆரோன் திருவின் திரைமுன்னே
பொன்விளக்கை ஏற்றச்சொல் ஞாவிழச் -நன்றாய்

அணையாது நல்லெண்ணெய் ஊற்றி எரிய
மணிவிளக்கு காலை வரைதான் -மணியாம்

பசும்பொன்னால் செய்த திருவிளக்கை ஏற்றி
விசுப்பலகை மேலே உணவும் -அசையாத

நேமம் பகன்றிடுவாய்; அப்பம் இருவரிசை
நேமம் உரைத்தார் இறைவனார் -நேமம்

புசிக்கட்டும் நல்லறையில் நேராண்கள் மட்டு,
புசிக்கலாகா மற்றோர் அதிலே -விசுப்பலகை

மேற்படைத்த அப்பமெந் நாளுமே ஆரோனின்
நாற்றவர்க்கு சொந்தம் அறி


லேவி 41
இசுரேல் இனத்தாள் வெளியாண் மணந்தாள்
இசுரேல் இனத்தோடு சென்றாள் -இசுரேல்

குணமில்லா வித்தாம் மகன்வளர்க்க சேறாய்
குணமில்லோன் போனான் அழன்று -குணத்தோர்

இனத்தார் மலைக்கீழே நின்றிருக்க ஆங்கே
இனத்தாருள் மாந்தருக்குள் சண்டை -இனத்தாருள்

சண்டையிலே கர்த்தர் பெயர்தனை சீரில்லோன்
வண்மையாய் பேசத் துணிந்திட -சண்டையிடம்

கேட்டோரோ தன்செவியில் வீழ்ந்த இடிபோலே
கேட்டவர் போனார் மலைத்தங்கு -நாட்டான்

வசைப்பாட்டு கேட்டோர் சிறைப்பிடித்தார் மாந்தன்
வசைசெய்தோன் நேரோர் நிறுத்த -வசைக்கென

என்செய்ய என்றே திருச்சொல் எதிர்ப்பார்த்து
நின்றார் திருமக்கள் ஆங்குத்தான் -நின்றோர்

திருவும் திரையினின்று சொன்னார் திருச்சொல்
திருமக்கள் தன்னில் வசைசொல் -திருவில்லா

மாந்தனை சீர்முகாம் விட்டுப்போய் கேட்டோரை
மாந்தலை கைவைக்கச் சொல்வாய்நீ -மாந்தனை

கல்லெரிந்துக் கொல்வீரே நாகாக்கா மாந்தனை
கல்வியாய் மக்கள்முன் சாகட்டும் -கல்லெரிவீர்

யாரேனும் கர்த்தர் பெயரை வசைசெய்தால்
சீரே இதுநேமம் என்றாரே -சீரவர்

சொல்கேட்டு மோசே இனத்தா ரிடம்சொல்ல
சொல்படியே மக்கள் வசைந்தோனைக் -கல்லெறிய

நேர்நேமம் செய்தனர் சீனாய் மலைக்கீழே
சீர்மக்கள் சீராய் சிறந்து


லேவி 42

ஏழாண்டில் ஓய்வும், யூபிலி ஆண்டில் விடுதலையும்



சீனாய் மலையிலே மோசே யிடம்கர்த்தர்
தேனோடும் தேசத்தில் சேர்ந்திடும்போ -வானார்சொல்

கேள்மின் புவியது ஏழாம் திருவாண்டில்
வேள்சொல் படியிரும் ஓய்ந்திரு -நாள்போல்

களத்திலே ஆறாண்டு சேர்ப்பயிர் ஆனால்
களம்விடும் ஓய்வாக ஏழில் -களத்திலே

தானாய் விளைந்ததை ஏழை புசிக்கவிடு
வானார் பகன்றோய்வு ஏழிலே -மேனோர்

களத்தில் பயிரிடாதுப் போவீர் கழிக்கா
வளத்தை பெருக்கவே செய்வீர் -களத்தில்

வளர்ந்த பயிரதை உண்ணலாம் மாக்கள்
களவேலை ஆளோடு சேர்த்து -களம்விதைக்கா

என்திண்போம் ஓய்வாண்டில் என்கேட்டால் ஆறிலே
நன்றாய் பயிராகும் நன்னிலமே -நன்றே

விளைச்சலது மூன்றாண்டு உண்ண வளமாய்
விளைந்திடும் நன்னிலம் கேள்


லேவி 43
ஓய்வாண்டு ஆறு கழிந்தப்பின் ஏழது
ஓய்வாண்டில் எக்காளம் ஊதிடுங்கள் -ஓய்வாண்டின்

பின்வரும் ஐம்பதாம் ஆண்டோ திருத்தூயாய்
என்று மிருக்கும் சிறந்தங்கு -நன்றாமே

ஐம்பதாம் ஆண்டது யூபிலிப் பொன்னாண்டு
ஐம்பதாம் ஆண்டில் விதைக்காது -ஐம்பதாம்

ஆண்டில் விடுதலை செய்வீர் அடிமைகள்
ஆண்டுவர எல்லார் விடுத்திடுவீர் -ஆண்டில்

நிலம்விற்றால் யூபிலியின் பின்வரும் ஆண்டு
நிலத்தின் பலன்பார்த்து விற்பாய் -நிலமது

யூபிலியில் மீட்க விடுதலை யாகும்கேள்
யூபிலியில் சொந்தம் நிலமாகும் -யூபிலிமுன்

சோதரன் ஏழையாய் காணியை விற்றாலே
சோதரன் தன்னின் இனத்தானோ -சோதரனின்

காணியை மீட்டிடலாம்; ஆனாலும் யூபிலியில்
காணியது சொந்தமாகும் கேள்மின்னே -காணீரோ

நாடோடி மக்களே எந்தன் புறக்குடியே
நாடதில் மீட்காது விற்காதீர் -வீடோ

மதில்சூழ் நகரத்தில் விற்றாலோ ஆண்டில்
அதனை புரிவீரே மீட்பு -மதிலுள்

நகர்வீட்டை ஆண்டிற்குள் மீட்கா விடுத்தால்
நகர்வீட்டை கொண்டான்கை போகும் -நகரது

லேவியர் தன்னின் நகரென்றால் எந்நேரம்
லேவியர் மீட்கலாம் வீட்டைதான் -சேவிப்போர்

மீட்காத லேவியர் வீடது யூபிலியில்
மீட்காமல் சேர்ந்திடும் சொந்தமாய் -நாட்டிலே

லேவியர் வாழ்நகர் தன்னில் வெளிவயல்
மேவாது விற்காதீர் நன்று


லேவி 44
வட்டிப் பொலிசைகள் சோதரன் கையிலே
தட்டிப் பறிக்காதீர் மக்களே -கெட்டு

விலைப்பட வந்தாலும் சோதரனை எட்டி
விலையாள்போல் செய்யாதீர் என்றும் -நலமாய்

இறைவனார்க்கு அஞ்சி நடப்பீர் இனத்தார்
இறையே எகிப்தினின்று சேர்த்தார் -இறைவனின்

ஊழியரே நீர்மக்காள் சீராய் நடப்பீரே
ஊழியர்காள் நற்கீழ் படிந்திருப்பீர் -ஏழையாய்

சோதரன் அந்நியனின் கீழ்வேலை போனாலும்
சோதரனை மீட்பீர் பணங்கொடுத்து -சோதரன்

மீட்காமல் போனாலும் யூபிலியில் மீள்வானே
நாட்டுள்ளே போகட்டும் தன்வீடு -நாட்டுள்ளே

அந்நியர்க்கும் நேமம் பொருந்தும் நிலையாக
எந்நாளும் சொல்வீர் இது


லேவி 45

கற்பனைகள் கீழ்படிந்தால் வரும் நன்மைகள்



சொல்படியே மக்களே எவ்வுருவோ கற்சிலையோ
அல்லாகிச் செய்யாதீர் தேசத்தில் -நல்லவராய்

ஓய்வுநாட்கள் தன்னைநீர் கைக்கொண்டு கற்பனைகள்
தேய்ந்திடாக் கைகொள்வீர் நேர்மக்காள் -ஆய்தேசம்

சேர்தேசம் தன்னிலே மக்களும் நேராக
நேர்கர்த்தர் சொன்ன படிதானே -நேர்நடந்தால்

சேர்தேசம் தன்னிலே சீராய் மழைபொழியும்
வேர்மரமும் நன்றாய் கனிதரும் -சீராம்

நலநெல் அறுத்துப்போர்க் காலம் வரையில்
நலதிராட்சை சாறெடுப்பீர் போலே -நலச்சாறு

தன்னை பறிப்பீர் விதைக்கும் நிலகாலம்
என்றும் கொழிக்கும் வளம்தானே -நன்றாய்

அமைதியாய் தங்குவீர் தேசத்தில் மக்கள்
அமைதி குலைக்கும் விலங்கோ -அமைந்திருக்கும்

காட்டில்; வரமாட்டார் மற்றப் படைகளும்
நாட்டின்மேல் போரெடுத்து ஆங்குத்தான் -வேட்டப்

பகைஞர் தனையோ விரட்டுவீர் மக்கள்
பகைநூறென் ஐவர் விரட்ட -பகைஞரோ

பத்தா யிரமெனில் நூறால் விரட்டுவீர்
அத்துனை மேன்மை பலம்தானே -அத்தவரும்

கண்ணோக்கம் உங்கள்மேல் கொண்டிருந்து உங்களுக்கு
கண்ணாக சந்ததியார் வந்திடுவர் -மண்ணில்

அறுத்த மணிகள் மிகுதியென நீரும்
அறுவடை தன்னில் விலக்க -சிறப்பாய்

நடுவே உலாவும் திருக்கர்த்தர் நானே
நடுவிட்டுச் செல்லமாட்டேன் நன்றே -நடந்தாலே

உங்களின் தேவனாக நானிருப்பேன் நல்லோரே
தங்குவீர் தேசம் சிறந்துநீர் -மங்கி

அடிமைகளாய் கூனிக் குறுகி வளைத்த
அடிநுகத்தை நானே உடைத்தேன் -அடிநுகம்

வெட்டி உடைத்தப்பின் நல்லார் நிமிரச்செய்
நட்டாரே எந்தன் இனம்


லேவி 46

இறைச்சொல் கீழ்ப்படியாமையின் தண்டனைகள்



கற்பனைகள் கைக்கொள்ளா மீறினால் தண்டனை
கற்பிப்பார் கர்த்தர் இறைவனார் -நெற்பயிர்

நீர்விதைக்க அந்தோ பகைஞரதை உண்பாரே
நீர்ப்போகும் ஆளுமையும் நோய்வரும் -தூர்க்கங்கு

மேலும் மனந்திரும்பா மக்களை தேவன்யான்
மேலேழு தண்டனை தந்திட -சீல

மரங்கள் கனிகொடாப் போகும் விருதா
சரமழை போகுமே பொய்த்து -பெருமை

நகரம் அழிந்திடும் நெல்மணி வீழும்
நகரில் வனமிருகம் வந்து -நகரத்தின்

சாலை தனில்நடக்க அஞ்சிடுவீர் மக்களே
சீலோர் இலையோசை அஞ்சுவீர் -காலாரே

மேலும் மனந்திரும்பா மக்களை தேவன்யான்
மேலேழு தண்டனை தந்திட -காலத்தே

ஊண்வாரா; பத்துப்பெண் ஓரடுப்பில் செய்திட
ஊண்உண்டும் போவீர் பசித்தங்கு -வீண்மக்காள்

போர்வரும் உம்மேலே ஓடுவீர் மேன்நகரம்
போர்தப்பி வந்தோரை நோயது -சீர்குலைந்தே

மக்களை ஊணாக உண்பீர் இனத்தாரே
தக்காது போவீர் பசித்தங்கு -தக்காரே

சீர்கர்த்தர் உம்மெதிராய் போனதால் மக்களே
நீர்தவறை உய்த்துணர்ந்தால் நன்றாமே -நேர்தப்பி

செய்பாவம்; முன்னோரின் பாவம் அறிக்கையிட
செய்யொப்பந் தங்கள் நினைந்து


லேவி 47

பொருத்தனை, மீட்பு மற்றும் தசமபாகம் குறித்த சட்டங்கள்



இனத்தார் பொருத்தனை செய்தால் மகவை
இனமக்கள் வெள்ளி நயமாய் –மனையினின்று

கொண்டுவரச் சொல்வாய்நீ ஈடாக; தூயறை
கொண்ட எடையது சீர்தன்னே -அண்டி

வயது இருபது தன்னறு பத்து
வயது வரைஆண் மகவென் –நயமான

வெள்ளியில் ஐம்பது சேக்கல் கொடுக்கச்சொல்
வெள்ளியது முப்பதே பெண்ணென்றால் -ஒள்ள

வயதது ஐந்து இருபது ஆக
வயது வரைஆண் மகவென் –நயமான

வெள்ளி இருபது சேக்கல் கொடுக்கச்சொல்
வெள்ளியது பத்தெனப் பெண்ணென்றால் -ஒள்ள

வயது ஒருமாதம் ஐந்தாண்டு பிள்ளை
வயது வரைஆண் மகவென் –நயமான

வெள்ளியது ஐந்தாகச் சேக்கல் கொடுக்கச்சொல்
வெள்ளியது மூன்றெனப் பெண்ணென்றால் -ஒள்ள

வயது அறுபது மேலாண் எனிலே
நயமான வெள்ளி எடையும் –வயதாண்

பதினைந்தும் பெண்ணென்றால் பத்தும் கொடுக்க
இதுவே பொருத்தனை ஈடு -இதனைச்

செலுத்த முடியா வறியோன் வரச்சொல்
செலுத்த முடியும் பணத்தை –நிலைநேராண்

செய்யட்டும் தீர்வு; அதன்படி தந்திடச்சொல்
செய்யாகா ஏழை தனையங்கு -செய்தால்

மிருகம் பொருத்தனை தன்னை அதுதூய்
மிருகத்தை மாற்றிக் கொடுத்தல் -மிருகம்

நலமோ குறையோ அதுவே தரச்சொல்
இலையென் இரண்டுமே தூய்தான் -நலமில்

பலிதகா மாக்கள் தனையோ அலகிற்
பலிதரும் ஆசன் நிறுத்த -பலிதகா

மாக்கள் அலகிட்டுச் சொல்ல மனமிருந்தால்
மாக்களை கொள்ளலாம் ஈடாக -வாக்காக

வீடு இறைவனுக்கு தூயென நேர்ந்தாலே
வீடதை ஆசன் அலகிட்டு -வீடின்

நலங்குறை பார்ச்சொல்ல மீள்மனதென் மேலாய்
நலபொன்னைந் தில்லொரு பங்கு -நலமாய்

விதைக்கும் வயலை இறைவனுக்கு நேர்ந்தால்
விதைக்கும் வயல்கணக்கு செய்வீர் -விதைக்கலம்

வெள்ளியெடை ஐம்பது சேக்கலாய் தூயெடை
வெள்ளியைத் தந்திடச் சொல்வாய்நீ -ஒள்ளதாய்

யூபிலியின் ஆண்டுமுதல் நேர்ந்தால் கணக்கிட்டு
யூபிலியின் ஆண்டுவரை செய்கணக்கு -யூபிலியின்

பின்னரவன் நேர்ந்தால் சரியாய் கணக்கிடட்டும்
நன்றாசன் தீர்த்த நலமதிப்பு -நன்றாய்

வயலை இனத்தான் தனதின்கை மீட்க
நயமனதென் றாலே, இனத்தான் -வயலின்

தொகையினது மேலாக ஐந்திலோர் பங்கு
தொகைச்செலுத்தி செய்யட்டும் மீட்பு -தொகையது

யூபிலியின் முன்நேர் வயல்விற்றால் அந்நிலம்
யூபிலியில் ஆசரியன் சொந்தமாகும் -யூபிலியில்

மீட்கா நிலமது சாபமே கேள்மின்னே
ஆட்களின் கைக்கொடா தீர்மக்காள் -நாட்டிலே

கொண்ட வயல்தன்னை தூயென நேர்ந்தாலே
கொண்ட வயலது யூபிலியில் -கொண்டோன்

விடுத்தந்த காணி நலச்சொந்தம் சேர
விடுத்திடும் மக்களே நேராய் -அடையின்

தலையீற்று கர்த்தரின் சொந்தம் அதனால்
தலையீற்றை நேர்ந்திட வேண்டாம் -தலையீற்று

ஆடோ நலமாடோ நேர்ந்திட லாகாது
நாடுள் நலஞ்சேர்ந்தப் பின்னர் -அடையின்

தலையீற்று தூயில்லா மாக்களென்றால் மீட்க
தலையீற்றை ஆசன்முன் காட்ட -தலையீற்றை

பார்த்து மதிப்பிட ஐந்திலோர் பங்கைமேல்
சேர்த்துக் கொடுத்தாலே மீட்கலாம் -நேர்மக்கள்

மீட்கலாகா காணிக்கை ஏதேனும் நேர்ந்தாலே
மீட்கலாகா எல்லாம் இறைச்சொந்தம் -மீட்கலாகா

காணிக்கை மாந்தனை நேர்ந்தாலோ மாந்தனை
வீணனைக் கொன்றிடச் சொல்வாயே -காணிநிலம்

தேச நிலத்தின் அறுப்பில் மரக்கனியில்
வீசையாய் பத்திலோர் பங்கது -நேச

இறைவனின் பங்காமே; மீட்கவோ பங்கில்
நிறையைந்தி லோர்ப்பங்கு சேர்த்து -சிறப்பான

ஆடோ நலமாடோ பத்திலோர் பங்கது
நாடில் இறைவனின் பங்காமே -ஆடுமாடு

நன்றோ இலையோ எடுக்காதீர் பங்கதில்
அன்றெடுத்தால் ஈருமே தூயாகும் -நன்றாய்

இவைதன்னே சீனாய் மலைமீது மோசே
செவிகேட்க நல்லார் இறைவன் -புவிமேல்

இனத்தாருக் கென்று கொடுத்திட்ட சட்டம்
இனத்தார் செவிமடுக்கச் சொல்


லேவி 48

திருவிவிலிய லேவியர் நூலின் கலிவெண்பா முற்றிற்று


திருவிவிலிய இனத்தொகை நூலின் கலிவெண்பா


இசுரேலினத்தார் முதல் மக்கட்தொகைக் கணக்கிடுதலும் இனத்தலைவர்கள் நியமித்தலும்

இரண்டாம் வருடம் வனத்தில் திரிய
இரண்டாம் திருமாதம் முன்னாள் -திருக்கூடம்


தன்னில் இருந்து இறைவன் பகன்றாரே
தன்தாசன் மோசே யிடம்சொன்னார் -நன்றே


இசுரேல் இனத்தார் தொகையிடுவாய் என்றார்
இசுரேல் இனத்தொகை மெய்யோர் -இசுரேலாண்


நற்றாண் இருபது மேலுட் டொகையிட்டு
நற்படைக்கு வைப்பாய் தலைவரை -நற்றினத்தில்


சேதேயூ வித்தோன் எலிசூர் தெரிந்தேன்நான்
மாதோனாம் ரூபன் இனத்தவனே -வேதவர்


சொல்ல தெரிந்திட்ட நற்றலை மூத்தவன்
வல்லாண் படைமூப்பன் தன்னருகே -வல்லவன்


சொல்லாளாம் சூரிசதா நற்றாண் செலூமியேல்
வாளோன் சிமியோன் இனத்தானாம் -வல்லவனை


நன்றே தெரிவாய் தலைவனாக நல்லிறைச்சொல்
அன்றியும் நல்லினத்தார் தன்னிலே -நன்றானோன்


அம்மினதாப் வித்தோன் நகசோன் தனைதேர்வாய்
அம்மனிதன் யூதா இனத்தானே -அம்மாந்தன்


தன்னை தெரிவாய் தலைவனாக நற்சொல்லே
தன்கேள்மின் மக்காள் இறைப்பகன்று -நன்றாய்


இனத்தானாம் சூவாரின் வித்தோன் நெதன்யேல்
இனமிசக்கார் தன்னின் சிறந்தோன் -இனத்தாரில்


நன்றே தெரிவாய் தலைவனாக நற்றாண்
இனத்தானாம் ஏலோன் எலியாப் -இனத்தில்


இனமாம் செபுலோனின் நல்லோன் தெரிவு
இனத்தாரில் நற்றலைவர் சொன்னார் -இனத்துள்ளே


நன்றே தெரிவாய் தலைவனாக நல்லிறைச்சொல்
நன்றாகக் கீழ்படிந்தார் மக்களும் -அன்றியும்


யோசேப் இருமைந்தர் யாக்கோபு பேசியே
யோசேப்பின் கையிட்டு சொன்னச்சொல் -யோசேப்பே


இவ்விருவர் என்மக்கள் என்றதால் நல்லினத்தில்
இவ்விருவர் சேர்ந்தார் இனம்தானே -இவ்வின


அம்மியூதின் வித்தோன் எலிசாமா உள்ளானே
அம்மாந்தன் எப்பிராயீம் நற்றலை -தம்பி


மனாசே இனத்தில் பெதாசூர் கமால்யேல்
நினைந்தே தெரிந்தேன் தலைவன் -வனத்தில்


இனத்தானாம் கீதெயோனின் வித்தோன் அபீதான்
இனமது பென்யமீன் தன்னின் -இனத்தாரின்


நன்றே தெரிவாய் தலைவனாக நற்சொல்கேள்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றே


இனமதுதாண் தன்னிலே அம்மிசதாய் வித்தோன்
இனத்தான் அகியேசேர் தன்னை -இனத்தாரின்


நற்றலையாய் தேர்ந்தெடு என்சொல் இறைச்சொல்லை
நற்றாரும் கீழ்படிந்தார் ஆங்கேதான் -நற்றார்


இனமது ஆசேரில் ஓகிரானின் வித்தோன்
இனத்தானாம் பாகியேல் தன்னை -இனத்தாரின்


நன்றே தெரிவாய் தலைவனாக நற்சொல்கேள்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றே


இனமது காத்தில் தெகுவேலின் வித்தோன்
இனத்தான் எலியாசாப் தன்னை -இனத்தாரின்


நன்றே தெரிவாய் தலைவனாக நற்சொல்கேள்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றே


இனமது நப்தலியில் ஏனானின் வித்தோன்
இனத்தான் அகீரா தனையே -இனத்தாரின்


நன்றே தெரிவாய் தலைவனாக நல்லிறைச்சொல்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றியும்


மோசேயும் ஆரோனும் பேர்பேராய் எண்ணிக்கை
பேசியதைக் கேட்டங்கு கூட்டிப்போய் -தேசத்தார்


மக்கட் தொகைக்கணக்குச் செய்தனர் ஆங்கேதான்
மக்களும் சொன்னார் தொகை

இனத்தொகை 1

இனத்தார் நின்றிருக்கும் திசையும் பயண முறையும்


இருபது மேல்வயது ஆண்கள் கணக்கே
இருபது மேல்வயது ஆண்கள் - நரனோர்


எழுபத்து நாலா யிரத்தறு நூறு
விழுத்தொகை யூதா இனத்தில் -விழுத்தொகை


ஐம்பத்தி நாலா யிரத்துநா னூறாமே
மேம்மான் இசக்கார் இனத்தில்தான் -ஆம்தொகை


ஐம்பத்தி ஏழா யிரத்துநா னூறாமே
மேம்மான் செபுலொன் இனத்திலே -மேம்மானோர்


மூவின யூதா இசக்கார் செபுலோன்சேர்
தேவனின் கூடாரம் கீழ்திசை -மேவியே


நின்றிருப்பர்; யூதாவின் நற்கொடி கீழ்செய்வர்
நன்பயணம் தேசத்திற் சீராக -அன்றங்கு


நாற்பத்தி ஆறா யிரத்தைனூ றாகவே
சேற்றானாம் ரூபன் இனத்தொகை -மேற்றாண்கள்


ஐம்பத்தி ஒன்பது மாயிரத்து முன்னூறே
மேம்மான் சிமியோன் இனத்திலே -மேம்மானோர்


நாற்பத்தி ஐந்தா யிரத்தறு னூற்றைம்ப
ஏற்றோனாம் காத்தின் இனத்திலே -மேற்றாண்சேர்


மூவினர் ரூபன் சிமியோனும் காத்சேர்த்து
தேவனின் கூடாரம் தென்திசை -மேவியே


நின்றிருப்பர் ரூபனின் நற்கொடியின் கீழ்ச்செய்வர்
இன்பயணம் தேசத்திற் சீராக -மேற்றாண்கள்


நாற்பத்து ஆயிரத்தை னூறே கணக்கிட்டு
ஏற்றினம் எப்பிராயீம் தன்னின்கேள் -மேற்றாண்சேர்


முப்பத்தீ ராயிரத்து னூறிரண்டு மக்களே
தப்பார் மனாசே இனத்தாரே -அப்போதே


முப்பத்தை யாயிரத்து நானூறு மக்களே
தப்பாராம் பென்யமீ னார்தானே -தப்பாது


மூவினர் பென்யமீன் எப்பிராயீம் சேர்மனாசே
தேவனின் கூடாரம் மெற்றிசை -மேவியே


நின்றிருப்பர் எப்பிராயீம் நற்கொடியின் கீழ்ச்செய்வர்
இன்பயணம் தேசத்திற் சீராக -நன்றே


அறுபத்தீ ராயிரத் தேழுனூறு மக்கள்
சிறந்தோனாம் தாணின் இனத்தார் -சிறந்தோராம்


நாற்பத்தோ ராயிரத் தைந்நூறு மக்களே
ஏற்றினம் ஆசேரின் தன்தொகை -மேற்றாண்சேர்


ஐம்பத்து மூவா யிரநானூ றேயங்கு
மேம்மானாம் நப்தலி யின்தொகை -ஆம்மாந்தர்


மூவினர் தாணொடு ஆசேரும் நப்தலியும்
தேவனின் கூடம் வடக்காக -மேவியே


நின்றிருப்பர் தாணின நற்கொடியின் கீழ்ச்செய்வர்
இன்பயணம் தேசத்திற் சீராக -நன்றே


இறைவனார் சொல்படியே லேவியர் தன்னை
நிறைமக்கள் எண்ணிக்கை செய்யா -திறைச்சொல்லிற்


கீழ்படிந்தார் மோசேயும் ஆரோனும்; லேவியினம்
வாழ்வரே கூடாரச் சுற்றியே -வாழ்வின


யூதா தலைசேனை முன்செல்ல பின்னேதான்
வேதா இனரூபன் சென்றிட -வேதவரின்


கூடத்தோ டங்கே இனலேவி பின்செல்ல
கூடமது தங்கும் இடையிலே -கூடம்பின்


எப்பிராயீம் தன்னின் படைநான்கு சென்றிட
தப்பாது தாணின் படைபின்னே -எப்போதும்


சென்றிடல் வேண்டும் பயணத்தில் என்பகன்றார்
நன்கர்த்தர் செல்லும் விதம்

இனத்தொகை 2

ஆரொன் வழியோரும் லேவியரின் பணியும்


ஆரோன் வழிமக்கள் நால்வர்; திருவேலை
ஆரோன் வழியாரே செய்திட -நேரோர்


இறைவன் உரைத்ததால் செய்தனர் வேலை
இறைவன் திருக்கூடத் தில்தான் - நிறைமக்கள்


நாதாப் அபியூ எலியாசார் இத்தாமார்
வேதனின் நால்வர் இவர்களே -வேதவர்


கூடத்தில் நாதாப் அபியூ கறைத்தீயை
நாடியதால் செத்தால் வனத்திலே -நீடியோன்


பின்பிறந்த மக்கள் எலியாசார் இத்தாமார்
முன்செய்தார் ஊழியம் கர்த்தருக்கு -அன்றியும்


சீனாய் வனத்திலே தானே நடந்தவை
கானான் புகுமுன் னிவைதானே -மேனாணாம்


லேவி குலமக்கள் மேவி உதவுவர்
தேவனின் கூடம் தொழுகைக்கு -தேவனின்


கூடத்தில் உள்ள பணிமூட்டு எல்லாமே
ஆடவராம் லேவி சுமந்திட -நாடில்


திருத்தூயக் கூடப் பணிமூட்டை மற்றோர்
திருக்குலைக்க தொட்டாலே கொன்று -திருக்கூட


வேலைகளில் லேவி உதவிட ஆரோன்கை
சீலோரை விட்டிடச் சொல்

இனத்தொகை 3

லேவியர் எண்ணிக்கை தொகையும் நிற்கும் திசையும்


எகிப்தில் இறையான் தலைமக்கள் கொண்டேன்
எகிப்தில் இறைசொன்னேன் நீவிர் -தொகைத்தலை


மக்கள் அனைவரும் தந்திட; மக்களே
மக்களாம் லேவியை ஈடாக -தக்காரை


என்னூ ழியசெய்ய லேவி இனத்தாரை
என்றென்றும் என்னினமாய்க் கொண்டேன்நான் -நன்கர்த்தர்


யானே அறிவீர் உரைத்தவர் லேவியை
நானெடுத்தேன் ஈடாகத் தானிங்கு -மேனாணாம்


லேவியர் தன்னை கணக்கிடு சீனாயில்
லேவியர் மக்கள் ஒருமாதம் -மேவிப்


பிறப்பெல்லாம் செய்கணக்கு என்றிட மோசே
சிறப்பாகக் கீழ்படிந்தான் ஆங்கு -சிறப்பின


மக்கள் பெயர்கெர்சோன், கோகாத், மெராரியென
மக்கள் குலத்தலைவர் லேவியின் -மக்கள்


தொகைசெய்ய மோசேயும் கீழ்படிந்து தக்கார்
தொகையிட்டான் நன்றாக ஆங்கு -தொகைக்கணக்கு


கெர்சோன் குலமக்கள் ஏழா யிரத்தைநூறு
கெர்சோன் குலமக்கள் மேற்றிசையில் -கர்த்தரின்


கூடப் புறப்பின்னே நிற்கச்சொல்; சொல்படி
கூடப் புறப்பின்வாழ்ந் தாரங்கு -மாடமாம்


கூடத்தை காவலே கெர்சோன் குலவேலை
கூட வெளிசுற்று மேற்றிரை -கூடத்தை


மூடு திரைசேர்த்து காத்துப் பணிசெய்தார்
ஆடவர் கெர்சோன் குலத்தினர் -நாடார்


குலமக்கள் கோகாத் தினநால்வர் தன்னின்
குலத்தொகை எண்ணா யிரமும் -நலமாந்தர்


முந்நூறும் தானே; குலத்தவர் காத்தாரே
செந்தூய் இடப்பொருளைத் தானங்கு -அந்தபடி


கூடப் புறத்தென் திசைநிற்க; சொல்படி
கூடப் புறம்பே இனம்வாழ்ந்தார் -கூடத்தின்


தூண்கள் பலகைபாதம் தாழ்ப்பாள்கள் மீந்தவை
மாண்பார் மெராரி குலத்தினர் -மாண்பாரை


கூடப் புறத்தே வடதிசை நிற்கச்சொல்
கூடப் புறம்பே இனம்வாழ்ந்தார் -கூடத்தின்


கீழ்திசையில் மோசேயும் ஆரோனும் வாழ்ந்தனர்
கீழ்படிந்து ஊழியம் செய்து

இனத்தொகை 4

இசுரேலில் அதிகமாக இருந்த ஆண்மக்களுக்கு ஈடாக ஐந்து சேக்கல் வெள்ளி வசூலித்தல்


லேவியர் மக்கட் தொகைகணக்கு எண்ணிக்கை
சேவா யிரநல் லிருபத்தீர் -லேவியர்


தன்னை எடுத்தேன்நான் ஈடாய் தலைமக்கள்
முன்சொல் விடுத்துச் சிறந்தவர் -நன்சொல்


முதற்பிறந்தோர் தன்னை கணக்கிட ஆங்கே
முதற்பிறந்தோர் எண்ணிக்கை தானே -அதிகம்


இருநூற் றெழுபத்தி மூன்று மனிதர்
இருந்தார் இசுரேலில் தானே -திருச்சொல்


இசுரேல் தலைப்பிள்ளை ஒவ்வோர் தலைக்கும்
இசுரேலர் வெள்ளி கொடுக்க -இசுரெலர்க்கை


வாங்கியோன் மோசேயும் ஆரோன் புதல்வர்கை
ஆங்கே கொடுத்தான் பணம்தனை -வாங்க


தலைச்சன் பிறந்த மனிதர்க்கு ஈடாய்
தலைச்சன் அதிக தொகைக்கு -தலைதலை


ஐந்து படிவெள்ளி சேர்த்தனன் ஆரோனின்
மைந்தர்க்கை தன்னில் கொடுத்து

இனத்தொகை 5

கோகாத் கெர்சோன் மெராரி இனத்தவரின் எண்ணிக்கையும் சுமக்க வேண்டியவையும்


கோகாத் இனத்தார் தொகையிடு மோசேநீ
கோகாத் இனத்தார் தொகையிட்டான் -கோகாத்


இனத்திலே முப்பது நல்வயது உள்ளோர்
இனவயதோர் ஐம்பது கீழ்ச்செய் -இனத்தார்


திருக்கூடம் தன்னிலுள்ள தூய்பொருட்கள் காப்பர்
திருக்குலத்தார் போகையில் ஏந்த -திருமாதூய்


மேலிடத்தை ஆரோனின் நல்லோர் திரைநீலம்
தோலிட்டு மூடிடச் சொல்லிடு -மேலாம்


விசுப்பலகை பெட்டி விளக்கினது தண்டு
மிசைப்பொருட்கள் எல்லாம் திரையால் -இசைச்சுருட்டி


பின்னரே கோகாத்தின் கைத்தரச் சொல்வாய்நீ
நன்மக்கள் ஆரோன் வழியரை -நன்றே


இனமக்கள் கோகாத் தவர்சாகா வண்ணம்
தினப்பயணம் செல்லும்முன் ஆரோன் -இனமக்கள்


செய்யச்சொல் மூடிடவே நன்றாய்; இனமக்கள்
செய்யாது போனால் மடிந்திடுவர் -செய்தே


இருந்தோர் தொகையிட்டான் கோகாத் தினத்தார்
இரண்டா யிரத்தெழு நூறும் -இருந்தாரே


ஐம்பது கூடுதல் ஆண்மக்கள் நற்படை
மேம்மக்கள் ஆங்கே கணக்காக -மேம்மானாம்


ஆரோன் மகனாம் எலியேசர் கூடத்தில்
நேரான மாதூய் இடத்திலே -நேரவன்


ஊழியம் செய்திடச் சொல்வாய்நீ அன்றாட
வாழியல் நற்பலி தந்தங்கு -வேழாண்


இனமக்கள் கெர்சோன் இனக்கணக்கு செய்வாய்
இனத்திலே முப்பது மேலே -நினைந்தே


இனவயதோர் ஐம்பது கீழுள்ளோர் சேர்த்து
இனக்கணக்கு செய்வாய் நினைந்து -இனத்தார்


திருப்பயணம் செல்லும்போ கெர்சோன் இனத்தார்
திருக்கூடத் தின்திரைகள் எல்லாம் -திருக்கூட


மேற்கூரை வாயிற் றிரைசேர்த்து உள்வட்ட
மேற்றிரைகள் சேர்த்து சுமந்திட -மேற்றாணாம்


ஆரோன் புதல்வனாம் இத்தாமார் கெர்சோனின்
நேரான ஊழியம் தன்னையே -நேராணாய்


நின்று கவனிக்கச் சொல்வாய்நீ கெர்சோனின்
நன்மக்கள் மேற்பார்வை செய்திடச்சொல் -நன்றே


திருப்பயணம் போது மெராரி இனத்தார்
திருக்கூட சட்டங்கள் எல்லாம் -திருக்கூட


பாதங்கள் தாழ்ப்பாளும் தூணெல்லாம் மேற்சுமக்க
வீதமாய் செய்திடச் சொல்வாய்நீ -வீதம்


மெராரிக்கும் இத்தாமார் தானே தலைவன்
மெராரியின் ஊழியம் தன்னை -சரிபார்த்து


நின்று கவனிக்கச் சொல்வாய்நீ இத்தாமார்
நன்மக்கள் மேற்பார்வை செய்திடச்சொல் -அன்றியும்


ஈரா யிரத்தெழு நூற்றைம் பதுபேரே
சீராண்கள் கோகாத்தின் எண்ணிக்கை -சீராண்கள்


ஈரா யிரத்தறு நூறும்சேர் முப்பதே
நேராண்கள் கெர்சோன் இனத்தவர் -நேராண்கள்


மூவா யிரத்திரு நூறே மெராரியின்
சேவைசெய்த் தக்காரின் எண்ணிக்கை -சேவைசெய்


மக்கள் தொகையைக் கணக்கிட்டார் மோசேயும்
தக்கவனாம் ஆரோனும் சேர்த்து

இனத்தொகை 6

தொழுநோயாளிகள் நகர்விட்டு விலக்குதலும் பாவப் பரிகாரமும்


தொழுநோய் பிடித்த மனிதர் விலக்கு
விழுவித்து செய்தோனைச் சேர்த்து -வழுவாது


செய்தார் நகர்விட்டு மாந்தரை மெய்மக்கள்
மெய்தீட்டு தன்னை விலக்கிடுவீர் -மெய்யார்


இறைவனின் கட்டளை மீறியோர் தன்னை
கறைபாவம் போக்கவே ஐந்தில் -நிறையொரு


பங்குதனை ஏமாந்தோன் கைச்சேர்க்கச் சொல்லிடு
அங்கவன் பாவந்தீர் செய்திட -அங்கவனின்


பங்குதனை வாங்கிட பங்காளி இல்லையென்றால்
பங்குதனை ஆசரியன் கைச்சேர்த்து -பங்கோடு


ஆடொன்றை சேர்கொடுக்கச் சொல்வாய் புவிதனில்
நாடுள்ளே நேமம் இதுவேகேள் -நாடனின்


பங்கோடு ஆடது பங்காமே ஆசனுக்கு
அங்கேசேர் ஏறெடுக்கும் எல்லாம்போல் -பங்கெல்லாம்


தூயதே கேள்மின்னே மக்காள் இறைச்சொல்லை
தூயவர் சொன்னார் நிறை

இனத்தொகை 7

கற்பு தவறிய பெண்களுக்கு அடுத்த சட்டம்


பல்வித மக்கள் வசிக்கும் நிறைதேசம்
அல்செய் மகளிர் இருப்பரங்கு -அல்செய்


களவாய் பிடித்தாலோ; அல்செய் நிலையில்
வளவன் எரிந்தால்கீழ் செய்வீர் -களவி


வளவன் மனையாள் தனைக்கூடம் முன்னே
களவிக் கலந்தாளை சேர்த்து -களவில்லாள்


என்றாலும் வேந்தனின் ஐயத்தால் சேர்ப்பீரே
நன்கூடம் முன்னால் விரைந்திட்டு -தன்கை


கதிர்கட்டு தானே சினத்திற்காய் துட்டு
மதிசினம் ஆறிட வந்தால் -அதைகேட்க


ஆசரியன் கைவாங்கி ஆங்கே பலிபீடம்
ஆசன் எரிப்பான் சிறிதெடுத்து -மேசைமேல்


மண்பாண்டம் தன்னில்தூய் நீர்வார்த்து ஆசரியன்
மண்சிறிது தூய்க்கூட முன்னெடுத்து -தண்ணீர்சேர்


பெண்ணிடம் பொய்யுரைத்தால் போவாய்நீ கெட்டழிந்து
பெண்பருக நீர்கொடுக்க; மண்சேர்ந்த -தண்ணீரை


பெண்பருகி பொய்யாளாய் அல்செய்தால் கற்பிழந்தோள்
மண்ணீரால் போவாள் அழிந்தங்கு -பெண்ணுள்ளே


உண்டான வன்புணர்வு வித்தும் அழிந்திடும்
பெண்ணவள் போவாளே வீண்மகள் -தண்ணீரை


பெண்பருகி மெய்யவளாய் அல்செய்யா கற்பினாள்
மண்ணீரால் வீணாகா வாழ்வாளே -பெண்ணவள்


கற்பினள் வித்தழியா வீண்பழி என்றாகும்
கற்பினள் வாழ்வாள் சிறந்து

இனத்தொகை 8

நசரேய நோன்புச் சட்டம்


நசரேய நன்நோன்புச் செய்யப் பொருந்தி
இசைவாக இன்நோன்பு செய்ய -நசரேயர்


எந்நாளும் கொள்ளார் திராட்சை ரசத்தாலே
எந்தவகைப் பண்டம் விடுத்தவன் -அந்தபடி


நல்லார் திராட்சை செடியினது வேர்தொடங்கி
செல்கொடி யாதும் புசியாதே -நல்லார்


நசரேயர் வாழ்வாரே தூயராய் என்றும்
இசைவாக நோன்பு நிலைத்தே -இசையாத


சாவினது தீட்டுப் படலாகா அம்மாந்தன்
சாவது பெற்றோரே ஆயினும் -சாவது


சோதரர் ஆயினும் தீட்டுப் படலாகா
வேதன் நசரேயன் மேல்தானே -வாதை


சவரகன் கூர்கத்தி என்றும் தலைமேல்
எவரும் இடாதபடிச் செய்வீர் -சவரம்


தனைச்செய்யான் நோன்புடை மாந்தனும் நேரே
நனிசெய்ய நோன்பு உயர்வு -எனினுமே


சாவது எப்படியோ இந்நோன்பை தீட்டாக்கின்
சாவினால் தீட்டானோன் செய்திடட்டும் -சாவுதீட்டு


வான்புறாவீர் இல்லை பலியிரண்டு வெல்வனந்
தான்மேற் புறாவைக் கொணர்ந்துவர -தான்தூயாய்


ஏழாம்நாள் தன்னில் நசரேயன் ஆசன்கை
வேழாணும் தந்திட தீட்டது -தாழாதே


ஆசன் அசைவாட்டி தூயாக்கி கையெடுக்க
தேசத்தான் நோன்பு தொடர்ந்திட -தேசத்தான்


நோன்பு முடிந்தப்பின் காத்தவன் ஓராண்டு
மேன்வகை ஆடு எரிபலி -ஆன்றோர்


அமைதிபலி பாவபலி சேர்த்தங்கு ஊணும்
சமைத்துத் தருவான் பலி

இனத்தொகை 9

மக்களை வாழ்த்தும் முறை


ஆரோன் திருப்புதல்வர் கேட்கச்சொல் தேசத்தார்
நேராணும் செய்ய நிலைவாழ்த்து -நேராணும்


சொல்லட்டும் பேர்வாழ்த்து; கர்த்தர் உனைவாழ்த்தி
வல்லார் உனைக்காப்பார் நன்றாக -நல்லாரும்


தன்முகத்தை உன்மேல் மிளிரச் சிறந்தவர்
உன்மேல் இரக்கம் உடைத்தாகி -தன்முகம்


உன்மேலே காட்சி யிடுத்தவர் நல்லமைதி
உன்மேல் வரச்செய்யட் டும்நன்றாய் -என்றென்றும்


இப்படிநீர் கர்த்தர் திருப்பெயரை சொல்லிட்டு
தப்பாது வாழ்த்தினால் நல்லாரும் -அப்படியே


வாழ்த்துவார் நல்லிறைவன் கர்த்தரவர், மேலினத்தார்
வாழ்தேசத் தாரைச் சிறந்திறைவன் -வாழ்கர்த்தர்


ஈதே கொடுத்திட்டார் ஆசரியன் தேசத்தார்
வேதவர் பேர்வாழ்த்தச் சீர்

இனத்தொகை 10

ஆசரிப்பு கூடாரம் நாட்டிய போது பன்னிரெண்டு குலத்தார் தந்த காணிக்கைகள்


திருக்கூடம் தன்னை முடித்தானே மோசே,
திருக்கூடம் செய்து முடித்தத் -திருநாளில்,


வம்சத் தலைவர்கள், இஸ்ரேல் பிரபுக்கள்
தம்கையால் காணிக்கை சேர்த்திட -வம்சத்தார்


தங்களின் காணிக்கை ஆறுகூண்டு வண்டில்கள்,
பங்கமிலா பன்னிரண்டு மாடுகள் -தங்களின்


ஈரீர் பிரபுக்கள் வீதமாய் ஒவ்வொரு
சேரவர் வண்டில்கள் தந்திட -சேரவர்


ஒவ்வொரு நன்பிரபு ஒவ்வொரு மாடுமாக,
அவ்வாறே கர்த்தருக்குச் தந்திட -அவ்வாண்


திருக்கூடம் முன்பாகக் கொண்டுவந்து சேர்க்க
திருவும் பிரிக்கப் பகன்று. -திருச்சொல்


திருக்கூடம் தன்னில் பணிசெய்யும் மக்கள்
திருலேவி நல்லினத்தார் கையில் -திருமுன்னே


தந்திட்ட காணிக்கை வேலைக்குத் தக்கதாய்
தந்திடுவாய் மோசே சிறந்தங்கு. -தந்தான்


இருவண்டில் கைக்கொடுத்தான் கெர்சோன் இனத்தார்
இருமடங்கு மெர்ராரி தந்து -இருமடங்காய்


மாடுகளை இவ்வினத்தார் கைத்தந்து பங்கிட்டு
வாடவே கோகாத் விடுத்தவன் -ஈடில்லா


கோத்திரத்தின் நன்தலைவர் பன்னிரெண்டு நல்லார்கள்
கோத்திரத்தின் சார்பாக செய்தனர் -மேத்தவர்


நல்லிறையோன் கூடம்சேர் காணிக்கை பன்னிரெண்டு
நல்லவர்கள் செய்தார் சமமாக -நல்லாரின்


சேர்சேக்கல் நூறொடு முப்பது வெள்ளியால்
ஆர்த்தாலம் இட்டு எழுபது -சேர்சேக்கல்


கிண்ணங்கள் தந்திட்டார் சேன்நாறு வர்க்கமும்
திண்ணமாய் தங்கத்தில் பத்தாக -திண்ணம்


சமமாகத் தந்தாரே பொன்வெள்ளி தன்னை
சமமாகத் தந்தாரே மாக்கள் -சமமாமே


பன்னிரெண்டு கோத்திரத்தார் ஒவ்வொரு நாளிலும்
தன்வகை ஈந்த பலியதும் -அன்னார்


பலியது காளை எரித்திட ஈந்து
பலியது பாவம்தீர் வெண்மே -பலியாம்


அமைதிக்காய் மாடிரண்டும் ஐந்தாய் கடாக்கள்
அமைவெண்மே குட்டியோர் ஆண்டு -அமைந்தவர்


ஒவ்வொரு நாளும் ஒருபிரபு வந்தனர்
அவ்வாறே தத்தம் பலிசெலுத்த -ஒவ்வொரு


நாளும் சமமாமே காணிக்கை கர்த்தர்முன்
நாளுமே செய்தார் பலிதந்து -நாளும்


இறைசொல் இரக்க இருக்கை கெருபீன்
இறைநடுவே பேச, இறையாண் -இறைச்சொல்


செவிகேட்பான் மோசே சிறப்பாக நாளும்
புவிமீது கூடத்தில் தூய்

இனத்தொகை 11

விளக்கு ஏற்றும் முறையும் லேவியரை தனக்கென கர்த்தர் பிரித்தலும்


இறைவன் பகன்றார் திருமோசே கேளாய்
இறைப்பணி செய்யத் திருச்சொல் -இறைமுன்னே


ஏழு விளக்குகள் தண்டினது நேர்எரிய
வேழாணாம் ஆரோ னிடம்சொல்வாய் -வேழாண்


இறைப்பணியாள் ஆரோனும் சொன்னபடி நேராய்
இறைக்கூடம் தன்னில் விளக்கு -இறைச்சொல்


படியேற்ற, நல்விளக்கு மாதிரியோ மோசே
அடியான்காண் போல்பொன் அடித்த -கடிவிளக்கு.


பின்சொன்னார் கர்த்தர் திருமோசே நோக்கியவர்
என்சொல் படியே பிரித்தெடு -நன்குலத்தான்


லேவியரை சுத்தம்செய் என்றவர் செய்முறை
லேவியர்க்கு சொன்னார் இறைவனும் -மேவிமேல்


நீர்தெளித்து விட்டிடு மேல்முடி நீக்கியவர்
சீர்க்கூடம் வந்திடச்சொல் ஆடைகள் -நேர்துவைத்து


சீர்க்கூடம் வந்திடுங்கால் காளை பலிதர
பார்மாவு கொண்டவர் இட்டிடச்சொல் -சீராண்கள்


பாவந்தீர் இன்னொரு காளை தனைநீயும்
மேவியிடச் செய்வாய் கரங்களை -பாவந்தீர்


காளைமேல் லேவியர்க்கை. பின்னர் இசுரெலின
ஆளவர் லேவியர்மேல் இட்டிடச்சொல் -கோளாணாம்


ஆரோன் திருமுன்னே லேவியர சைவாட்டி
நேராண் திருமக்கள் தந்திட்டு -சீராணும்


நேராண்கள் பாவந்தீர் ஒன்றையும் மற்றதை
நேராண் எரிபலியாய்த் தந்திடச்சொல் -சீராய்


இறைச்சொல் பகன்றார் திருமோசே கேளாய்
இறைமக்கள் என்னுடையோர் லேவி -சிறைவிட்ட


கீழ்நாடு விட்டிடும் போசொல் கருவிட்டு
வாழ்வ முதல்பேர் எனதென்றேன் -வாழ்வ


கருமுதற்பேர் தன்னை எடுக்காமல் லேவி
கருவில் வருமக்கள் மட்டும் -திருயிறைக்கு


காணிக்கை கூடத்தில் வேலைக்கு ஆரோன்கை
பேணவே தத்தமாய் ஈந்திட்டேன் -பேணிட


லேவியரின் கட்டளை ஈதே திருக்கேளாய்
லேவி அகவையாம் ஐந்தைந்து -மேவியர்


கூடத்தே வேலைசெய்ய, ஐம்பதிற்கு மேலகவை
கூடத்தை காத்திடச் சொல்

இனத்தொகை 12

வனாந்திரத்தில் ஆசரித்த முதல் பாசுகா


விட்டுவந்து ஆண்டாயிற் றீராமே சீனாயின்
வெட்டவெளி தன்னில் இறையனார் -தட்டாமல்


பாசுகா திங்கள் முதல்பதி னான்கிலே
ஆசரிக்கச் சொல்வாய் சிறந்தவரை -நேசத்தான்


மோசேயும் சொல்கேட்டுச் சொன்னான் இசுரேலே
மோசேயான் கேட்டேன் இறைச்சொல்லே -தேசத்தார்


ஆசரிப்பீர் பாசுகா நல்விருந்து சீனாயில்
ஆசரித்தார் மக்கள் வனத்திலே -தீசு


பதினான்கில் தீட்டாக நின்ற சிலரோ
பதியில் சவத்தாலே தீட்டே -அதினாலே


பாசுகா காணிக்கை இட்டிடாமல் போவதென்ன
நேசத்தால் வந்து புலம்பிட -நேசமிகு


மோசேயோ தேசத்தார் நோக்கிச்சொல்: தேசத்தார்
தேசத்தார் தேவன்சொல் கேள்சொல்வேன் -தேசத்தார்


காத்திருக்கச் சென்றான் நிறைகூடம் உள்ளேதான்
காத்தச் செவியைத் திறந்தவனும் -காத்தவன்


காக்கும் நிறைமகனை நோக்கி இறையனார்
மேத்தவம் பாசுகா நாளிலே -ஏத்தபடி


இல்லாத மக்கள் இரண்டாம் நனிதிங்கள்
நல்லபடி செய்திடச் சொல்வாய்நீ -அல்லாது


தீட்டு, பயணத்தால் ஆசரிக்கா மக்களவர்
நாட்டில் இரண்டாம் நனிதிங்கள் -வீட்டில்


பதினான்காம் நாளிலே ஆசரிக்கச் சொல்வாய்
பதியிலே என்றும் சிறந்தே -பதியிலே


இவ்விலக்கு மட்டும் தவிர நிறைமற்றோர்
அவ்வண்ணம் செய்யச்சொல் தேசத்தில் -இவ்வகை


செய்யாதோர் போவரே பாசுகா ஆசரிக்கா
செய்தனில் வீணாய் அறுந்துப்போய் -மெய்யாரே


வேறாள் மனைத்தங்கி ஆசரிக்க வேண்டுமெனில்
வேறாளும் பாசுகா செய்யட்டும் -வேறாளோ


நட்டாரோ வேறில்லை ஒன்றே நனிநீதி
நட்டார் செவிகேட்கச் சொல்

இனத்தொகை 13

வனாந்தரத்தில் பயண விதம்


கூடாரம் கட்டிய நாளில் முகில்வந்து
கூடாரம் மூடியதைக் கண்டாரே -கூடாரம்


மேலே இரவிலே தீத்தோற்றம் கண்டாரே
மேலெழும் ஞாவரை தீயேதான் -மேலோரும்


கூடமுகில் மேலெழுந்தால் போவர் பயணித்து
கூடமுகில் மேலிருந்தால் தங்கினர் -நாடவர்


கூடமுகில் பார்த்தே பயணித்தார் என்றுமே
கூடமுகில் தீயும் நிலைத்திட -கூடம்மேல்


கூடமுகில் ஆண்டாக நாளாக வாரமாக
கூடம்மேல் நின்றிருந்தால் தங்குவர் -கூடத்தை


விட்டெழுந்தால் போவர் பயணமாய் விட்டவர்
நட்டாரும் செய்தார் சிறந்தங்கு -நட்டாரின்


விட்டுப் பயண விதமது மோசேயும்
திட்டநூல் தன்னில் எழுது

இனத்தொகை 14

பூரிகைகள் செய்யச் சொல்லி அதற்கான பிரமாணத்தை தந்தார் கர்த்தர்


கர்த்தர் திருமகனார் மோசே யிடஞ்சொன்னார்
கர்த்தரென் சொல்கேள் அடித்திடுவாய் -கர்த்தரென்


மக்கட் சபைக்கூட்ட வெள்ளியால் பூரிகையீர்
எக்காளம் போலோசை செய்திட -தக்கார்


இரண்டுமே செய்திடு வெள்ளித் தகட்டால்
இரண்டும் பெருஞ்சத்தம் இட்டால் -இருவோசை


கேட்டங்கு மக்கள் வரச்சொல்வாய், ஒன்றெனில்
கேட்ட தலைவர்கள் வந்திட -கேட்க


பெருமோசை செய்திட்டால் கீழ்த்திசை மக்கள்
பெருமோசை தன்னைக்கேள் போக -பெரும்பயணம்


ஓசை இரண்டாம் முறைபெரிதாய் செய்திட
தீசைதென் பேர்பயணம் சென்றிட -மாசற்ற


ஆரோன் திருமகனார் மட்டும் பெருமோசை
சீராகச் செய்யச்சொல் அவ்வாறே -நேராக


செய்யச்சொல் இவ்வண்ணம் செய்வது அன்னாரின்
செய்வழி என்றென்றும் தானென -மெய்ச்சொல்


இனவெதிரி தன்னைப்போர் செய்யச்செல் மக்கள்
இனவெதிரி தன்னை அழிக்க -இனக்கர்த்தர்


என்முன்னே நான்நினைக்க தானே பெருவோசை
தன்னை முழக்கச்சொல் சீராக -அன்னார்சொல்


கேளார் அழித்தும்மை சீராய் விடுவிப்பேன்
கேளீர் இனமக்காள் பூரிகை -காளைபலி


தன்னில் விழாவில் நினைவாய் திருவோசை
நன்கர்த்தர் யானே உணர்

இனத்தொகை 15

சீனாய் விட்டு இசுரவேலர் பிரயாணம் செல்லுதலும் மைத்துனன் ஓபாவை மோசே கூட வரச்சொல்லுதலும்


இரண்டாந் திருவாண் டிரண்டாந் திருமாத்
திரள்கூட மேல்முகி லேழ -திரள்மக்கள்


கீழ்திசையின் முக்குலத்தோர் முன்செல்ல ஆரோனின்
வேழ்மக்கள் கூடம் இறக்கிட -வேழ்மக்கள்


தென்திசை சென்றிட பின்னே திருப்பொருளை
நன்மக்கள் கோகாத் சுமந்திட -அன்னார்


இறைவிதியின் சொல்படியே சென்றார் இனத்தார்
இறைக்கூடம் தன்தோள்மேல் இட்டு -இறைமக்கள்


சென்றார் திருப்பயணம் பாரான் வனம்வர
நன்முகில் கூடமேற் தங்கிட -நன்மக்கள்


கூடவே நீயும்வா என்றான் திருமோசே
நாடனாம் மாமன் மகனிடம் -நாடானோ


என்னினம் என்தேசம் செல்வேன்நான் ஓபாசொல்
நன்றே யிதுவே உரைத்திட -என்னோடு


வாநீ வனத்தை அறிந்தோய் திருக்கண்ணாய்
வாநீ இனத்தோடு மோசேசொல் -மாநீதி


வந்தால் இனத்திற்கு தேவன் தரும்வளத்தில்
வந்தும்மின் மக்கள் வளப்படி -தந்திடுவோம்


எந்தனின் மைத்துனனே வாநீ திருகண்ணாய்
எந்நாளும் என்றான் திருவங்கு -அந்நாளில்


மூன்றுநாள் சென்றனர் மக்கள் திருப்பயணம்
மூன்றுநாள் மக்கள்முன் சென்றது -மூன்றாம்


திருநாள் பயணித்த மக்களும் ஆற
திருக்கூடம் மேல்முகில் நிற்க -திருவோர்


முகிலது மக்கள்மேல் நன்குடையாய் காத்து
முகிலது கூடம்மேல் நின்றால் -அகிலவனம்


தன்னிலே நிற்பர் திருமக்கள் அஃதேஆம்
நன்மக்கள் தங்கும் இடமாமே -என்னாளும்


கூடத்தின் சான்றுபெட்டி செல்லிரும்போ மோசேயும்
கூடம்முன் சொல்வான் திருக்கர்த்தா -கூடம்முன்


நீரெழும்பிச் செல்ல எதிரியோர் வேல்முறிந்தே
நீரும் திரும்பிடும் வீடு

இனத்தொகை 16

பாரான் வனத்தில் மக்கள் முறையிடுதலும் அக்கினி அவர்களை அழித்தலும்


பாரான் வனத்திலே பாளையம் ஓய்ந்திருக்க
பாரதில் தன்மக்கள் ஓய்ந்திருக்கும் -சீரதைக்


காண வலம்வந்தான் மோசே இரவிலே
காணுலா பாளையஞ் சுற்றிட -காணவன


வானத்தில் விண்மீன்கள் மின்னிடவே நன்மக்கள்
மேனாடு செல்லும் வரையிலே -தேனதின்


நற்சுவை மன்னா புசித்தாரா என்கேட்க
நற்றானும் வந்தான் உலாவங்கு -நற்றார்


இசுரேல் இனத்தோடு சேர்வந்தால் நன்றே
திசைமக்கள் பல்லோர் திசையில் -திசைமக்கள்


கர்த்தரின் மேல்நம்பி வாராமல் காட்டிலே
வர்த்தக மில்லா தயர்ந்திட -கர்த்தராலே


வீடுவிட்டு வந்தோமே நன்றே நடக்குமென
வீடாமே பேரெகிப்து எஞ்ஞான்றும் -வீடதில்


யாமிருப்பின் ஊன்புசித்து நன்மகிழ்ச்சி யாகவே
யாமிருந்து செய்வோம் விருந்தேதான் -மாமன்றப்


பல்லோர்சொல் கேட்டிட்ட நல்லினத்தார் பையவே
பல்லோர்போல் ஆங்கே முறையிட -பல்லோர்போல்


சொல்லி முறையிட்ட சொல்லை இறைவனார்
பொல்லார்ச்சொல் கேட்டார் சினம்

இனத்தொகை 17

அக்கினி எல்லா மக்களை அழிக்காத படி மோசே வேண்டுதல் செய்ததும் வாதை நின்றாலும் மக்கள் முறையிடுதலை விடாதிருத்தலும்.


எரிதழல் பாளையந் தன்னில் எரிந்தே
எரிசொல் சிலமக்கள் சாக -எரிதழலால்


சாகின்றோம் என்றே முறையிட, மோசேயும்
சாகா படிசெய்தான் வேண்டுதல் -சாக


எரிதழலால் சுட்ட இடத்தை தபேரா
எரிதழலூர் என்ற பெயர்ச்சொல் -எரியூர்க்கு


இட்டான் திருமோசே; மக்களோ மேன்மேலும்
தட்டினர் சொல்கேளார் அவ்விடமே -நட்டார்


எரிதழலால் மாண்டாரே சொல்கேளார், மக்கள்
எரிதழல்பின் சொல்கேட்பார் நம்ப -சரியோனும்


காண வலம்வந்தான் காலையில் பார்க்கவேஅ
காணுலா பாளையஞ் சுற்றிட -காணவனும்


யாரெரிந்தால் நாவறியா என்றிருந்த மக்களும்
யாரின்சொல் கேளாதே தத்தமது -சேரிடத்தில்


நின்றழுதார் ஊனுண்ண இல்லை கறியென
அன்னாரும் சேர்க்காண் குறையாக -இன்னாரும்


வீடாமே பேரெகிப்து எஞ்ஞான்றும் எங்களுக்கு
வீடதில் யாமிருப்பின் ஊன்புசிக்க -நாடதில்


வெள்ளரி கொம்மட்டி கீரையுள்ளிப் பூண்டதை
அள்ளிச் சமைப்போம் விருந்தென -எள்ளியோர்


காலையில் இங்கேயோ மன்னாவே கொத்துமல்லி
மாலைவரை ஒன்றே சமைத்திட்டு -காலைமாலை


என்றேயாம் எந்நாளும் வெவ்வேறு ஊனில்லா
வன்னிலை ஏனோ முறையிட -என்னேசொல்


எவ்வளவு தேவையோ முத்து நிறமன்னா
அவ்வளவு தந்தும் முறையிட -அவ்வாறே


மன்னா ஒலிவநெய் போலே சுவைத்தாலும்
மன்னா சமைத்தார் இடித்தவர் -மன்னாவை


தேனிட்ட நற்பணியா ரம்சொல்வர் மன்னாவை
தேனின் சுவைவெறுக்க மக்களோ -தேனினும்


இன்சுவை ஊனே எனமுறை செய்திட்டார்
அன்னாராம் மோசே யிடம்

இனத்தொகை 18

மோசே கர்த்தரிடம் சென்று தன்னை இந்நிலையைக் காணாதபடி அழித்திடும் என்று இரைஞ்சுதலும் கர்த்தர் மூப்பரை நியமித்தலும், காடை பொழிதலும், இச்சித்த மக்களின் வாதையும்.


ஐயகோ என்செய்வேன் கர்த்தாவே ஐயகோ
ஐயா முலைப்பால் பருகுவோன் -ஐயனைப்போல்


ஐயா யெனைச்சுமந்துச் செல்சொன்னீர் பாருமே
ஐயகோ என்றார் சலித்திங்கு -ஐயாவே


இம்மக்கள் தம்மை கருத்தரித்து பெற்றேனோ
அம்மக்கள் சொல்லும் முறைகேட்க -அம்மாவோ


எம்மானே என்னால் சுமக்க முடியாதே
எம்மானே கேளீரோ சொல்லிதை -எம்மானே


உம்மிரக்கத் தாலே எனையீதைக் காணாதே
இம்மியும் இங்கே இலாதபடி -எம்மானே


என்னை கொலைசெய்யும், எப்படி நான்தருவேன்
என்னிடம் கேட்டவூனைத் தானேநான் -அன்னார்


சுமையென்று கண்டாயே மோசேநீ செய்வாய்
சுமைதீர் எழுபது மூப்பர் -சுமைபோட


கூடம்முன் வந்திடச்சொல், உன்மேல் அமராவி
நாடார்மேல் வந்திடச் செய்வேன்நான் -நாடார்முன்


மேலுஞ்சொல் மக்கள் செவிகேட்க ஊனுன்பீர்
காலைமாலை யல்ல ஒரிருநாள் -மேலாக


மாதம் முழுதும் இறைச்சி தனையுண்பீர்
வீதம் அழுங்குரலைக் கேட்டேனே; -வேதவரே,


ஆறு இலட்சம் இனத்தாரும் உண்ணவே
தாறுமாறாய் ஆமே அடித்தாலும் -ஆறாதே


மக்கள் பசியிங்கு, மாதம் முழுவதுமாய்
மக்கள் புசிக்கயேது ஊனிங்கு? -தக்கோனே


மோசேகேள் நல்லிறைவன் கைக்குறுகி உள்ளதோ?
மோசே இறைவனின் கைக்குறுகா -தீசையில்


மோசேநீ காண்பாயே ஊன்வருமோ வாராதோ
தீசைவனத் தின்நடு விங்குத்தான். -மோசேயும்


சொல்கேட்டு மோசே எழுபதுபேர் கூட்டினான்
நல்லோரைக் கூடம்முன் ஆங்கேதான், -நல்லோர்


அறுபத்தி எட்டே திருக்கூடம், நேரே
சிறுவர் இருவர் வராது -சிறுவரோ


மோசேயின் சீட்டில் இருவரிருந் தும்வாரா
மோசேசொல் கேட்டார் இறைவனார் -தீசைநில்


மூப்பர் அறுபத்தி எட்டுபேரும் வாக்குரைத்தார்
நாப்பிழறா ஆவியது மேல்வர -மூப்பரவர்


வாராதே விட்டவர் எல்தாத்தும் மேதாத்தும்
சேராதார் கூடம்முன் என்றாலும் -வாராத


மக்களும் பாளையத்துள் வாக்குரைத்தார் கேட்டங்கு
மக்களில் பிள்ளையறி வித்திடவும் -மக்களில்


வாலிபன் நூனின் திருமைந்தன் யோசுவா
வாலிபன்சொல் கேட்டு பகன்றானே -வாலிபன்சொல்


கேட்டீரே மோசேநீர் அம்மக்கள் வந்திட
கேட்காதார் செய்யும் தடையெனவே -கேட்டவன்,


வாலிபா நூனின் திருமைந்தா யோசுவா
வாலிபன்சொல் கேட்டேன். திருவாக்கு -மேலார்


அருளால் அனைவரும் வாக்குரைத்தால் நன்றே
இருளே உனது உரைதான் -அருளவர்


பாளையம் வந்திட்டார் எல்லாரும் சேர்ந்தங்கு
பாளையஞ் சுற்றிலும் காடைகாடை -பாளைத்தின்


னின்றிரு பக்கம் ஒருநாள் பயணமாய்
வன்காடை கொண்டது காற்றும்தான் -நன்றென


மக்கள் அகமகிழ்ந்து காடை சமைத்திட
மக்கள் அறிவிலியாய் ஊன்தன்னை -மக்கள்பல்


பட்டங்கு மெல்லும்முன் கர்த்தரின் வெஞ்சினம்
பட்டங்கு வீழ்ந்தார் குறைமக்கள் -பட்டவர்


பட்டங்கு வீழ்ந்ததால் கிப்ரோத்து அத்தாவா
இட்டனர் வீழிடம் பேராக -நட்டார்பின்


கிப்ரோத்து அத்தாவா விட்டு பயணித்தார்
தப்பியோர் ஆசரோத் திற்கு

இனத்தொகை 19

மோசேக்கு விரோதமாக ஆரோன் மிரியாமின் கலகமும் மிரியாம் தொழுநோய் படுதலும்


நாடது எத்தியோப்பின் பெண்ணை மணமுடித்தான்
ஆடவன் மோசே வனதினிலே -நாடது


தன்னா டிலையென்றே சோதரர் பேசிட
நன்றில் பகன்றார் மருள்மக்கள் -அன்றோ


தகைநல் மரந்தன்னை புல்லினம் ஏசும்
வகைமூடர் மோசே தனியே -வகைந்திறை


வாக்கனோ ஆரோன் மிரியாம் எதிர்பேச
வாக்கவர் கேட்டார் சினந்தங்கு -வாக்கவர்


மூவரும் வாரும் திருக்கூடம் உள்ளேதான்
மூவரும் போயினர் ஆங்கேதான் -மூவர்காண்


கர்த்தர் முகிற்றூணின் மேலிறிங்கி வாயிலில்
கர்த்தர் இருவரோடு பேசிட -கர்த்தரும்


என்சொல்கேள் மின்லேவி தோன்றல் சகோதரரே
என்சொல் தனைக்கூற வாக்குரை -நன்றாரின்


நற்கனவில் பேசியே தோன்றுவேன் ஆயினும்
நற்றானோ இல்லை விதமிங்கு -நற்றான்


திருவில்லம் தன்னிலே வாய்மையுள் ளோனே
திருவாண் செவிகேட்க தன்னே -திருயான்


திருச்சொல்லை நேரே பகர்கின்றேன் கேளீர்
திருவாண் மறைச்சொல் இலைகேள் -திருவிறை


என்முகந் தன்னை இறைவாக்கன் நேராக
என்னாளும் காண்கின்றான், வன்னோரே -என்னடியான்


மேல்நீர் விரோதங் கொளச்செய்தே வன்சொல்லை
வேல்போல் எரிவதும் ஏன்சொல்மின் -கோல்மக்காள்


கர்த்தர் இறையனார் அச்சமது குன்றியே
கர்த்தர் இறைவாக்கன் மேலெரிந்தீர் -கர்த்தர்


சினங்கொண்டு போய்விட்டார் கூடத்தை விட்டே
சினத்தால் தொழுநோயா னாளே -வினையால்


உறைந்த பனிபோல் தொழுநோய் உழற்ற
உறைந்தவள் தன்னையே ஆரோன் -நிறைவிலா


போனோளைக் கண்டவன் மோசே யிடம்கெஞ்ச
போனவளின் பாவமெண்ணா தீரேசால் -போனவளே


ஐயகோ சோதரி போனாள் குறைப்பிள்ளை
ஐயகோ சோதரி பாவமென்னே -ஐயாநீர்


மன்னியும் என்றே கதறிட மோசேயும்
மன்னியும் என்றே இறைஞ்சிட -அன்னார்


தகப்பன் மகளைக் கடிதல் நலமே
தகப்பன் கடிந்தேன் மகளை -அகத்தை


விடுத்து புறம்பாக ஏழுநாள் வைத்து
தடையிலை சேர்க்க மகள்தான் -விடுத்தனர்


பாளை புறம்பே மிரியாம் அதுபடி
நாளை கழிக்க இனமக்கள் -நாளேழு


போகாமல் காத்தே தரித்திருந்தார்; பின்னரவர்
தோகையைச் சேர்த்துச்சென் றார்இனட்தார் -ஆகவே


ஆசரோத் தன்னை விடுத்து இனத்தாரும்
தேசம்செல் போனார், விரிபாரான் -தேசவனம்


தன்னில் அடைந்தே தரித்தனர் மக்களும்
நன்றாக மோசே தலை

இனத்தொகை 20

மோசே தேசத்தை சுற்றிப்பார்க்க பன்னிரண்டு வேவுகாரர்களை அனுப்புதலும், அவர்களில் பத்துபேர் தேசத்தாரைக் கண்டு அஞ்சி இசுரவேல் மக்களை அச்சப்படுத்துதலும்


கண்டாலே நம்புவர் தன்மக்கள் என்றிறைவன்
கண்டுவர நீயனுப்பு தேசத்தை -கண்டுவர


மோசே பிரபுக்கள் நற்குலத்தின் நல்லோரை
தேசம் சரியோ எனக்காண -தேசத்தில்


நாற்பது நாட்கள் திரிந்துவிட்டு வாருமே
வேற்றேச மண்வளம் கண்டிங்கு -நாற்பதுநாள்


பின்நீர் வரும்போது கையில் சிலகனி
என்கண்காண் கொண்டுவா ரும்மென்றான் -நன்றாக


நற்றவரின் சொல்கேட்டு நற்பிரபுக் கள்சென்றார்
நற்றேசம் தானோ வெனக்காண -நற்றேசம்


தன்னில் வளங்கண்டுப் போனார் திகைத்தவரும்
தன்னுருவை கண்டார் இகழ்ந்தவர் -மென்னாண்


சிலகனி கொண்டுவா ரும்மென்றான் ஆக
அலரா கனிக்கொத்து கண்டார் -இலைவிட்


டறுத்தார் இருவர்கோல் கொண்டு சுமக்க
அறுத்தயிடம் ஏசுகோல் என்றார் -நறுமக்கள்


பன்னிரண்டு நற்பிரபு சென்றார், இருவரோ
நன்கர்த்தர் தேசம் தருவாரே -என்சொல்வேம்


பத்துப்பேர் தன்கண்ணில் கண்டார் இகழ்ச்சியாய்
அத்துனைப் பேர்செவி கேட்டிட -சொன்னார்


வளம்குறித்து ஓஓஓ மொத்தமாய் போவோம்
களத்தில் அழிந்தங்கு ஏனென் -கிளைஞரவர்


ஏவியர் பேராண் வியந்தோம்யாம் கண்டவரை
கூவினர் பத்துப்பேர் மக்களின் -ஏவல்


இருபிரபு காலேப்பும் யோசுவாவும் மட்டும்
திருவவர் நம்மோடே, ஏனாம் -மருளச்சம்


என்றே பகன்றிட்டார் மற்றோரோ தன்கண்ணில்
நன்வளங்கண் டும்விடாய்த்துப் போயினர் -மென்மக்கள்


தான்கெட்டு விட்டாதே ஊரைக் கெடுக்கவே
மேன்மக்கள் போலன்றி போனார்கள் -தான்கேட்ட


மக்களோ சென்றார் விடாய்த்து, மனக்குரங்கு
மக்களினுள் ஏறிக் குதித்து

இனத்தொகை 21

மக்கள் மோசே ஆரோன் விரோதமாக பேசுதலும், யோசுவா காலேப் இடைமறித்தலும்


மனமது வீணாகப் போய்பிதற்ற வாயும்
இனமனிதர் கோவென் றழுதார் -வனத்தில்


இராமுழுதும் மக்கள் அழுதறற்றி வீணர்
திருவிருவர் நின்றார் எதிர்த்து -திருவோநீர்


ஆரோனே மோசேயே என்செய்தீர் என்றனர்
சீராமே மேலெகிப்து நாடுவிட்டு -வாராமல்


வேரூன்றி நின்றின் நலமாமே வீணாக
தேராதிப் பாலை மடிவோமே -பேரிடர்


போராலே யாம்மடிய தெய்வமும் கொண்டுவர
போராலே எம்பிள்ளை எம்இல்லச் -சீரவளும்


கொள்ளையாய் போகும் படியிறை கொண்டுவர
எள்ளளவும் நம்பா பிதற்றிட -கொள்ளாதே


போவோம்யாம் மேலெகிப்து நன்னாடு என்றவரும்
போவதற்கு நற்றலைவன் கொண்டேயாம் -கேவலமாய்


பேசினரே வேள்மேலே நம்பாத வீண்மக்கள்
பேசியதை கேட்டார் மருண்டவர் -பேசுசொல்


கேட்ட இருதிருவும் கைக்கூப்பி கேட்டனர்
கேட்டின் வழிபோகா வண்ணமே -கேட்டவிரு


ஒற்றரும் தம்முடுக்கை தான்கிழித்து தூயினரே
நற்ற திருநாடு தூயாமே -நற்றவர்சொல்


பாலுந் தெளிதேனு மோடுந் திருநாடு
வாலறி நல்லிறை நம்மோடு -சீலமாய்


அன்போ டிருந்தாலே கைக்கொடுப்பார் நன்னாடு
அன்பரே செய்யீர் முறுமுறுப்பு -வன்னவராம்


அந்நாட்டு பேரின மாந்தர் நினைத்தஞ்சீர்
அந்தோ நமக்கிரை யாவாரே -எந்நாளும்


நன்கர்த்தர் நம்மோடே தானிருக்க அந்நாட்டு
வன்னவரின் போச்சே நிழல்

இனத்தொகை 22

மக்கள் யோசுவா காலேப்பை கல்லெறியத் துணிதலும் கர்த்தரின் மகிமை வெளிப்பட்டு சினத்தால் அழிப்பேன் எனச்சொல்லுதல்


ஈதென்ன வேதனையோ இவ்விருவர் பேசுகின்றார்
வேதனை சொல்லிடும் வீணரண்றோ -வேதனை


நீங்கிட கல்லெறிவோம் இவ்விருவர் மேலெனவும்
ஆங்கிறை கூடமேல் தோன்றிட -தீங்கிலா


நன்கர்த்தர் மோசே திருநோக்கி கேட்டாரே
என்சினத்தை எவ்வளவு தூண்டுவர்? -வன்மக்கள்


எம்செய்கை எல்லாமே கண்டபின்னும் ஏனோதான்
எம்மக்கள் நம்பா திருப்பாரோ -அம்மக்கள்


நோய்விட்டு வாதித்து நாட்டுள் வராதபடி
வாய்பேச்சால் கெட்டவரை நானழித்து -தூய்திருவே


உன்னைநான் பேராக்கி மேலான நல்லினமாய்
உன்விழுது செய்வேன்நான் நன்றாக - என்றவரின்


சொல்கேட் டதிர்ந்தான் திருமோசே, மக்களிவர்
சொல்பேச்சால் போனாரே கெட்டு

இனத்தொகை 23

மோசேயின் இடை வேண்டுதலும் கர்த்தர் தண்டனையை குறைத்தலும்.


ஐயகோ ஆண்டவரே உம்மக்கள் வீணர்தாம்
கையாலே வன்னெகிப்து நாடுவிட்டு -வேயா


வனத்தினில் சேயழித்தார் என்றே எகிப்தின்
இனத்தாரும் கேட்டால் இகழ்ந்தே -அனைவரின்


வல்லிறைவன் மக்கள் நடுவே குடியிருக்க
நல்லிறைவன் எம்முன் முகமுகமாய்ச் -சொல்லும்


முகிற்றூண் பகலிலே காத்தெம்மை தீத்தூண்
வகையிரவில் கேட்டார் செவியில் -தகையார்


திரளாய் திருமக்கள் நின்றிருக்க இங்கு
திருவும் ஒருமனிதன் கொல்லும் -திருவகை


கேட்டாலே வேற்றினத்தோர் கீர்த்தி அறிந்துமவர்
கோட்டவரம் போகா தழித்தாரே -கேட்டால்


இரக்கம் அமைதியின் நல்லுருவே நாதா
திருமக்கள் வீணராய் செய்த -கரையில்


கறைபாவம் மன்னிப் பவரன்றோ? தந்தை
கறைமூன்றாம் நாற்றலை கேட்கும் -இறையவரே


அப்படியே வல்லமையாய் செய்திடும் நல்லவரே
இப்பழி பேசியோர் மன்னிப்பீர் -எப்படி


வீண்நாடு விட்டுவந்த நாள்முதல் மன்னித்தீர்
ஆண்டவரே செய்யும் வகையாக -ஆண்டார்


இறைவனார் சொன்னார்: இரங்குமெனக் கேட்டாய்
மறையோனே மன்னித்தேன் வீணர் -இறைவனென்


மேன்மகிமை அண்டமெலாம் நின்றிருக்கும் சொல்லிது
வான்கர்த்தர் எம்மாணை வாழ்வுபோல் -யான்செய்கை


கண்கண்டும் போனார் திருமக்கள் வீணாக
கண்கண்டார் மேன்மகிமை செய்தவை -மண்ணாரோ


பத்துமுறை சோதித்த வீணரெல்லாம் போகாரே
அத்தனை பேரும்நல் நாடுள்ளே -சித்தவன்


காலேப்போ நல்லாண் நிறையாவி கொண்டவன்
காலேப்பை நாடதில் சேர்செய்வேன் -வேலாணை


சீலமாய் பேரினமாய் பெற்றிடுவான் நாட்டதில்
காலேப்தன் காணி நிலந்தனை -பாலாறு


கானானின் கோனும் அமலேக்கு நாட்டாரும்
கானகத்தில் கீழே கருத்தோடு -கானகங்கா


அந்தபடி மக்களைக் கொண்டுசெல் செவ்வாழி
வந்தவழி போயிடு வீர்நீரும் -வந்தச்சொல்


எப்போதும் மீறுகின்ற இம்மக்கள் பாவத்தை
எப்போதும் யான்பொறுப்பே னோதிருவே -இப்போதே


சொல்வாய் இனத்தார் செவிகேட்க சொன்னவிதம்
சொல்படி செய்வேன் திருயானும் -சொல்படி


இவ்வனத்தில் சாவீர் இருபது மேல்பெரியோர்
அவ்வகையே; போவர் சிறுபிள்ளை -ஒவ்விய


நல்லார் இருவர் தவிர எவர்போகார்
ஒல்லார் உறையந்த நாடதில் -வல்லாரால்


கொள்ளையாய்ப் போவரென் நீர்சொன்ன பிள்ளைகள்
அள்ளவள்ள குன்றா வளநாட்டின் -உள்போவர்


வீணென விட்டெறிந்து பேசிய வீணரோ
வீணாகச் சாவீர் வனத்திலே -வீணாய்


வனத்தில் சடலம் விழுமட்டும் மக்கள்
வனத்திலே நாற்பது ஆண்டு -இனத்தாரின்


பாதகம் மேல்சுமப்பர் போனாரே வீணராய்
வேதவர் நல்லார் எதிர்த்துச்சொல் -பாதகர்


ஒற்றரவர் சுற்றிய நாற்பது நாளிற்கு
நற்றவர் மக்கள் ஒருநாளை -சுற்றுவர்


ஓராண்டாய் மக்கள் திரிந்திடுவர் மீறலால்
சேரச் சுமப்பர் விழுதுகள் -நேரில்லா


பத்துப்பேர் ஒற்றர் அனைவரும் ஆங்கேதான்
அத்துனை மக்கள் மனமடிய -மெத்தனச்


சொற்களால் செய்தவர் எல்லாம் திருமுன்னே
நற்றாரின் வாதையால் செத்திட -நற்றார்


இருதிரு யோசுவா காலேப் தவிர
கரைசென்ற பத்துபேர் சாக -அருவரின்


சொல்கேட்ட மக்கள் மனதுடைந்து போயினர்
சொல்கேளா உள்ளக் குரங்கு

இனத்தொகை 24

மக்கள் கத்தர் சொல்மீறி மலை ஏற, அமலேக்கியர் கானானியரால் முறியடிக்கப் படுதல்


அதிகாலை முன்னெழுந்து மாக்கள் உரைத்தார்
அதிபதி நல்லிறைவன் நேரே -மதிகெட்டு


பாவம் புரிந்தோம், திருத்தேசம் போவோமே
ஏவியர்சேர் வாழ்நாடு என்றவர் -கேவி


உரைத்தவர் குன்றின்மேல் ஏறிடவும் ஆங்கே
திருமோசே கத்தினான் மக்காள்! -திருவவர்


கட்டளையை மீறி இனத்தாரேன் போகின்றீர்
கட்டாயம் வாய்க்காது நாடது -வெட்ட


அமலேக்கு கானான் பெருமைந்தர் காக்க,
இமைப்பொழுதில் நீர்மடிவீர் ஏறீர் -இமைப்பொழுதும்


நீங்கா இறைவனாரோ, உம்மோ டிரார்கேள்மின்
ஆங்கே விழுவீர்வல் வாளாலே -ஆங்கவர்


சொல்கேளா மக்களும் குன்றேறிப் போயிறங்க
சொல்படியே வன்னார் எதிர்வந்து -சொல்கேளா


மக்களை ஓர்மா வரைதுரத்த, மோசேயோ
தக்கவனாய் கூடம் அமர்ந்து

இனத்தொகை 25

சேரும் தேசத்தில் காணிக்கை செலுத்தும் போது அந்நியனுக்கும் இனத்தானுக்கும் ஒரேவித நியமம்


திருமோசே நீயிசுரேல் மக்களிடம் சொல்வாய்
திருக்கானான் தேசஞ்சேர் பின்னர் - திருவுக்காய்


காணிக்கை தந்தால் மனமுவந்து சேர்த்தருவீர்
ஆணையிது ஆவொடுசேர் மாவதும் -காணிக்கை


காற்படி எண்ணெயிட்டு மாவதை கைப்பிசைந்து
காற்படி நல்ரசம் சேர்த்துநீர் -மேற்மேசேர்த்


தாரும்நற் காணிக்கை நேமம் இதுவேகாண்
சேரந்த நன்னிலத் தில்தானே -தாரும்


இருமடங்கு மாவிலே மூன்றில் இரண்டாய்
செருவெண்ணெய் கைப்பிசைந்து தாரும் -திருவிற்காய்


ஆட்டுக் கிடாயென் அதனோடு சேர்த்துரசம்
கூட்டியெரி மூன்றில் இரண்டாமே -நாட்டில்


எரிபலியாய் காளை செலுத்திட வந்தால்
எரிபலிசேர் பத்திலே மூன்றும்,- அரைப்படி


எண்ணெயோடு கைப்பிசைந்து கூட்டித் தருவீரே
எண்ணெயள வேரசமும் சேர்த்திட்டு -வண்ணம்


இனத்தான் அயலானென் வேறில்லை நேமம்
இனத்தார்செய் வண்ணம் அயலான் -மனதொடு


காணிக்கை தந்திடட்டும் நீதிபரர் கர்த்தர்முன்
காணிக்கை கைத்தர ஒன்றாமே -காணில்


திருக்கர்த்தர் பின்னும் திருமோசே கேளாய்:
திருக்கானான் தேசஞ்சேர் பின்னர் -திருவிளைச்சல்


காணிக்கை ஏறெடுப்பீர், போரடிக்கும் நஞ்செய்யில்
காணிக்கை போலே படைத்திடு -காணில்


களந்தரும் முன்முதல் நற்பயிரின் மாவில்
அளையதிர சந்தன்னை ஆட்டி -களந்தரும்


முன்முதல் நற்பயிரில் இங்ஙனமே செய்வீரே
என்றுமே காணிக்கை நன்றாமே -அன்றில்


அறியாமல் செய்தவறோ நேமம் பிழன்றோ
அறியா தவையார்வன் செய்தால் -அறியாத்


தவறுக்காய் காளை ரசமா யெரித்து
அவைபாவம் போக்கவே ஆடு -தவறாய்


அறியாமல் செய்த அவைபாவம் எல்லாம்
அறியாச்செய் மன்னிப்பார் தேவன் -அறியாச்செய்


அந்நியனோ தன்னினமோ எல்லாம் சமமாமே
எந்நாளும் கர்த்தரின் முன்னரே -அந்தபடி


நன்கர்த்தர் நேமம் துணிகரமாய் மீறினால்
நன்கர்த்தர் தன்னையே நிந்திக்கும் -வன்னோனே


நன்கர்த்தர் சொல்மீறல் ஆதலால் போவரே
தன்னினம் விட்டு அறுந்து

இனத்தொகை 26

ஓய்வு நாளை கடைப்பிடிக்காதவனுக்கு தந்த தண்டனை, மற்றும் இனத்தாருக்கு கற்பனைகளை நினைவூட்ட தொங்கல்கள் அணியச் சொல்லுதல்.


வனத்தில் இருக்கையில் ஓராள் திருநாள்
மனதில் இருந்தாமல் சுள்ளி -வனத்தில்


பொறுக்க; இசுரே லியர்சேர்ந்து அந்த
சிறுவாள் பிடித்து கொணர -சிறுவனாம்


மோசே அறியானே என்செய்ய என்பதினால்
தேசத்தார் சேர்பாளை காத்திட -மோசே


திருக்கர்த்தர் முன்கேட்டான் என்செய்வேன் சொல்லும்
திருநாளைக் கைக்கொள்ளான் வன்செய் -திருவாம்


திருக்கர்த்தர் மோசே யிடஞ்சொன்னார்: மாந்தன்
திருநாளைக் கைக்கொள்ளா பாவம் -திருவெதிர்


கொல்வீர் அவையாரே பாளை புறம்பிட்டு
கல்லெறிவீர் என்றாரே தீர்ப்பங்கு -அல்லோன்


திருக்கர்த்தர் மோசேக்குக் கட்டளை யிட்டார்
வரைபாளை விட்டுப் புறம்பே -சரியற்றான்


கல்லெறிந்தார் மக்கள்; தவறிழைத்தோன் போனானே
கல்பட்டு ஆங்கே மடிந்திட -வல்லானே


மோசே இசுரேல் இனத்தார் இடம்பேசு
மாசற்று நேமம் கடைப்பிடிக்க -தேசத்தார்


ஆடையோரம் தொங்கல் இளநீல வண்ணத்தில்
ஆடைகாண் போது நினைந்து

இனத்தொகை 27

கோராகு தாத்தான் அபிராம் கலகம் செய்தலும் பூமி அவர்களை விழுங்கிப்போடுதலும்.


லேவி வழிவந்த கோகாத் பெயரனாம்
லேவியன் இத்செயார் பெற்றவன் -லேவியன்


கோராகு, ரூபன் வழிஎலியாப் பெற்றவர்
தேராதார் மூவர் இணைந்தங்கு -தேரார்


சிறகுள்ள தென்றால் கரப்பான் கழுகோ
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் -சிறப்பிலார்


சாகாத வண்ணம் திருமோசே வேண்டுதலை
ஈகை அறியார் பிதற்றிட -சாகவே


சங்கத்தார் சீரார் இருநூற்று ஐம்பது
அங்கவர் கூட்டி எழும்பியே: -பங்கம்


உரைக்காதீர் மோசே திருஆரோன் நீவிர்
வரையிலை மக்களார் தூயர் -உரையவர்


கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறார்
கர்த்தரவர் தூயர் அறிவோமே -கர்த்தரின்


நல்லவை மேலாக ஏற்றுவதேன் உம்மைநீர்
நல்லா ரதைக்கேள் அதிர்ந்தனர் -நல்லாண்


திருமோசே கூனிக் குறுகி விழுந்தான்
திருமுன்னே நாளை வருவீர் -திருச்செய்வார்


யார்தன்முன் ஊழியர் தேர்வதை, அவ்வாளே
பார்தனில் தூயர், உரைத்தவன் -நேர்கேள்மின்


கோராகே, கோராகின் கூட்டமே கொண்டுவாரும்
சீரவர் நாறுபுகை ஏந்திட -நேரவர்


கூடம்முன், லேவி வழிவந்தோர் காண்பேசின்
நாடவர் என்பே சுவரேஎன் -ஆடவர்


லேவி வழிவந்தோர் தம்மை தமக்கென
மேவியே தூயென்றே கர்த்தரும் -தேவனின்


கூடவேலை செய்யழைக்க உம்மை பிரித்தாரே
கூடவே ஆசரியர் ஆகவேண்டு? -ஆடவரே


ஆரோன் எதிராக பேசவில்லை கூட்டாதார்
நேராண் நிறையிலன் பாத்திரனோ -நேரார்


எதிராகச் செய்தீர் கலகம்; இருவர்
எதிர்வாரும் என்றான் திருவும் -அதட்டி


வரச்சொல்ல நீயென்ன ஆளரசோ மாட்டோம்
வரவைத்தாய் நல்தேசம் விட்டு -கரைசேர்ப்பேன்


என்றே இலாததைச் சொன்னாய், இலைவேண்டாம்
நன்றில்லை உன்செயல் தானிங்கு -தன்னே


வரமாட்டோம் அம்மகனார் கண்கள் பிடுங்க
திருவென்று நீநினைத்தாய் போவாய் -தரமான


காணிநிலம் தந்தாயோ வீணாய் அழைப்பதேன்
வீணர் உரைத்தார் பிழன்றங்கு -காணச்


சினங்கொண்டான் மோசே செவிவழிச் சொல்கேள்
சினத்தால் இறைவன்முன் சென்றே -இனத்தாரின்


காணிக்கை ஏற்கா திரும்திருவே; சீரறிவீர்
காணிக்கை வாங்கிலன் யானிங்கு -வீணனே


கோராகே வந்திடு நாளை திருமுன்னே
நேரவன் ஆரோன் வருவானே -தேரவே


நாறுபுகை ஏந்திவாரும் எல்லோர் தனித்தனி
வேறிரு நூற்றைம் பதாய்க்கோலச் -சேறாரும்


சொல்படி வந்தார் இருநூறும் ஐம்பதுமாய்
சொல்படி வெவ்வேறு கையேந்தி -நல்லார்முன்


கோராகோ மக்களை ஏவி திருமுன்னர்
சீரற்றே கூடிவரச் செய்தனர் -நேரவர்


கர்த்தரின் சீர்மகிமை அப்போ தவைக்காண
கர்த்தர்: திருமோசே ஆரோனே -கர்த்தரென்சொல்


நீரவை விட்டுப் பிரிந்திடுவீர்; சொல்கேளார்
சீரற்றோர் தம்மையழிப் பேன்யானே -நேரே


முகங்கவிழ்ந்து மன்றாட்டு செய்தார் திருமுன்
அகமுள்ளோர் யாவர்க்கும் தேவா -மிகையன்றோ


சீரற் றொருவன் பிழைக்காய் அவையழித்தல்
நேரார் சினங்கொள்வீ ரோயிறையே? -நேரார்


திருச்சொன்னார் கோராகு தாத்தான் அபிராம்
இருமிடம் விட்டு விலக்கு -திருவோர்;


இருமிடம் போக அவையாரும் பின்செல்
இருமிடம் யாவர் அடைய -திருவெதிர்த்தத்


தீயோர் செயலின் கொடும்பாவத் தாலேநீர்
தீயோராய் எண்ணா படியேபோம் -தீயோரின்


வீடுவிட்டு போம்விலகி கையுந் தொடாதீரே!
வீடுவிட்டு போயினர் ஆங்குத்தான் -வீடுமுன்


மூவர், மனைவி, வழிவந்தோர் நின்றனர்
மேவியான் தன்மனம்போல் செய்ததிலை -கோவின்


செயலே புரிந்தேன் எனநீர் அறிய
இயற்சாவு வாரா திவர்க்கு -செயலாம்


புதிதே இதுகாண்பீர் நேரார் செயலே
அதினால் அறிவீர் மகிமை -வதையாய்


புவியும் பிளந்து இவர்போவார் சேர்ந்தே
அவையாரின் கண்முன் மடிந்து -இவர்கள்


திருவை அவமதித்தார் என்றறிவீர் அப்போ
இருமிடம் சேர்ந்தே விழுந்தார் -திருச்சொல்லை


மீறிய வன்மக்கள்; கண்ட இனத்தாரோ
சீறினோம் போவோம் மடிந்திங்கு? -சீற்றார்


இருநூறும் ஐம்பதும் பேராய் புகைக்செய்
திருமுன்னே வந்தவரை தீயும் -இரையாக்க,


சேர்மனிதர் கொண்டுவந்த நாறுகோல் தீப்பட
நேர்மக்கள் தூயெனச் சொல்லிடு -நேரே


இனத்தார்முன் காண அடையாளம் அஃது;
இனம்பார்க்க பீடத்தின் மேலே -கனமாய்


தகடாய் அடித்தவற்றை மூடச்சொல் பீடம்;
தகவிலார் மீறுதலுக் காகத் -தகப்பொன்


எலியேசர் செய்தான் திருமோசே சொல்லால்
எலியேசர் கோல்கள் அடித்து -பலிபீடம்


மேலே தகடாக மூடினான் ஆரோனின்
ஆலம் விழுதே மகன்

இனத்தொகை 28

மக்கள் அடுத்த நாளில் மோசேவிற்கு எதிராய் கோராகை சாகடித்தது ஏன் எனக்கேட்டலும் கர்த்தரின் வாதையும்.


பதரே பதரே மகிமை அறியார்
பதரவர் சென்றே முறையில் -பதராய்


இதைப்போலச் செய்தீர் திருவினத்தார் நெல்லே
அதைக்கேட்க கூடம்முன் வந்து -அதனால்


திருமோசே ஆரோன் திருக்கூடம் முன்னர்
திருவிற் கெதிராய் தரமில் -அரைவெந்த


மக்கள் பதரை திருநெல்லாய் பேசிட்ட
மக்கள் அதமாவர் இன்றவர் -தக்கார்


முகங்கவிழ்ந்து மன்றாட்டு செய்தார் திருமுன்
அகங்காணும் கர்த்தரின் வாதை -இகத்தில்


தொடங்கிட, ஆரோனே சென்றுநீ தீக்கை
அடங்கிட காட்டு புகையே -அடங்க


திருமோசே சொல்படி போனான் திருவும்
திருவெதிர் பேசியவர் சாக -வரையில்


புகையிட வாதையும் நின்றிட அந்தோ
மிகையாமே செத்தார் கணக்கு -தகவிலான்


கோராகின் மீறல் இருநூறும் ஐம்பதும்
கோராகை நெல்லெனச் சொன்னோரால் -தேராதார்


போனாரே ஈரேழு ஆயிரமும் ஏழுநூறும்
ஆனாரே வாதை மடிந்து

இனத்தொகை 29

இனத்தலைவர் பெயர்எழுதி சமூகத்தில் வைத்த பன்னிரண்டு கோல்களில் ஆரோனின் கோல் துளிர்த்தலும் மக்கள் அழிந்துபோகிறோம் என கூறுதலும்.


இனத்தலைவர் எல்லா ரிடமுஞ்சொல் வாரீர்
இனத்தலைவர் கோல்கொண்டு, கோல்மேல் -இனத்தலைவன்


பேரெழுது, பன்னிரண்டு கோல்கள் இனத்திலக்கம்
பேரது லேவிஆ ரோன்கோலை -சீராக


இவ்வகை பன்னிரண்டு கோல்கொண்டு வாசமூகம்
அவ்வகை நானிங்குத் தேர்ந்தவன் -அவ்வாறாய்


காண்பிப்பேன் வைத்திட்ட கோலது தானாக
காண்விடுமே பச்சைத் துளிர்த்திடும் -காண்பார்கள்


இம்மக்கள் உம்மேல் இனிமேல் முறுக்காமல்
தம்கர்த்தர் தேர்ந்தோன் அறிந்திட -அம்மானே


கொண்டுவரச் சொல்லிடு பன்னிரண்டு கோல்களை
கொண்டுவரச் சொன்னான் திருவங்கு -கொண்டுவந்து


பன்னிரண்டு கோல்களை தூய்சமூகம் முன்னராய்
தன்கையால் மோசேயின் கைத்தந்தார் -வன்மக்கள்


கண்பார்க்க வைத்திட்டான்; காலையில் போய்பார்த்தால்
கண்துளிர் ஆரோனின் கோல்தானே -மண்ணிலாது


அக்கோல் இலைவிட்டுப் பூப்பூத்து நின்றதே
தக்கான்கோல் வாதுமை நற்கனியும் -அக்கோலில்


காய்த்திருக்க மற்றெல்லார் கோலோ வெறுங்கோலாய்
காய்ந்திருக்கக் கண்டார் இனமக்கள் -தூய்முன்


அவரவர் கோலை அவரவர் வாங்க
தவனவன் கோலைநீ வைப்பாய் -தவக்கூடம்


தன்னிலே, இவ்வகை நீசெய்யின் மக்களும்
வன்சொல்லா தேயிருப்பர் கோள்தானே -அன்றியும்


வேள்சொன்னார் மோசே துளிர்க்கோலை நீவைத்தால்
கோள்சொல்லா தேயிருப்பர் மக்களார் -தேள்சொல்


இனமக்கள் சொல்லாரே மோசேயும் நாளில்
இனிதே இறைக்கீழ் படிந்து -இனிதறியா


மக்களோ அச்சத்தால் மோசே யிடம்சொன்னார்
மக்கள்யாம் சாகின்றோம் இங்குத்தான் -தக்கார்


இறைவனின் சான்றிடம் செல்லும் எவரும்
கறையால் மரிக்கின்றோம் யாமே -இறைக்கூடம்


அஞ்சுகிறோம் மோசே, திருமுன்னர் யாம்வர
எஞ்சி எவரும் இலைநிலை -துஞ்சி


வரும்வரை நில்லாதோ என்றே இறைவன்
அருள்புரியார் பேச்சு பிதற்று

இனத்தொகை 30

ஆசரிய ஊழியத்தையும் கூடாரத்தின் ஊழியத்தின் பொறுப்பும் ஆரோன் மற்றும் ஆரோன் வழிவந்தோருக்கு கர்த்தர் பொறுப்பாக்குதலும் லேவியரை கூடத்தின் மற்ற பணிவிடைக்கு தத்தமாக தருதலும்.


ஆரோ னிடம்தேவன் சொன்னார் திருமக்கள்
சேர படைக்கும்நற் காணிக்கை -தேரவன்


உந்தன் திருமக்கள் எல்லாரும் உண்கவே
இந்நியமம் என்றும் சிறப்பென்று -அந்நாளில்


ஆரோ னிடம்தேவன் சொன்னார் திருலேவி
சேரலாம் கூடம் அருகேதான் -சேராரே


வேறெவரும் சாகாத வண்ணமாய்; லேவியும்
நாறுபுகை செய்யலா காதென்றும் -கூறினார்


கூடார வேலை சரிவரச் செய்தலோ
கூடத்தி நுள்ளே நுழையுமவ் -வேடமணி


ஆசரியன் உன்மேலும் உன்வழி மேலுமே
நாசமாகா வண்ணம்நீ செய்திடு -ஆசரியன்


ஆசரிய ஊழியம் செய்சரியாய் உன்வழியும்
ஆசரியர் தானே, சரிவர -ஆசரிய


ஊழியம் செய்தலோ உன்மேலும் உன்வழிமேல்
ஊழியப் பேராம் பொறுப்பாமே -ஊழியர்


கூடப் பணிவிடை காவலுக்கு லேவியர்
கூடம் வெளிநின்று செய்யலாம் -நாடார்


எவரும் அருகிலே வாராத வண்ணம்
அவர்கள் பணிசெய்யச் சொல்வாய் -தவனே


இசுரேல் இனமேற் சினம்வாரா வண்ணம்
திசைதனில் கூடத்தை காப்பீர் -இசுரேல்


மனிதரினின் றேயானும் லேவி இனத்தை
நனிதாய் கொடுத்தேனே தத்து

இனத்தொகை 31

லேவியருக்கு நாட்டவர் தரும் தசமபாகம் மற்றும் லேவியர் ஆரோன் குமாரருக்கு தரும் தசமபாகம்.


நாடார் கொடும்நற் கனிகள் விலங்குகள்
கூடம் நறுபணி செய்யுந்தன் -வேடர்


திருமக்கள் சொந்தமே; நாடாரின் பத்தோர்
திருப்பங்கு லேவியின் பங்கு -திருலேவி


பத்தோர் திருப்பங்கில் பத்தோர் எடுப்பித்து
அத்தனை பங்கிலும் கர்த்தருக்காய் -நித்தம்


தரச்சொல்வாய் லேவி மனிதரிடம் நல்ல
தரமான பத்திலோர் பங்கு -திருலேவி


இவ்வகை காணிக்கை நெல்வயல் காணிக்கை
எவ்வகையோ அவ்வகையே ஏற்பேன்யான் -அவ்வகை


காணிக்கை ஆரோன் திருப்புதல்வர் பங்காமே
காணி நிலமில்லை யாங்கேதான் -பேணுவோர்


ஊதியம் ஆரோன் திருப்புதல்வர் தன்னிற்கு
ஆதலால் லேவியர் பத்திலோர் -வீதமே


நல்லூதி யம்காண் நிறைதேசத் தில்தானே
நல்லாரும் மோசேக்குச் சொல்

இனத்தொகை 32

இறந்தவரால் வரும் தீட்டு குறித்த நியமம்


நேமம் இதுவே திருவிருவர் தான்நோக்கி
நேமச் சடங்குகள் சொன்னாரே -நேமமாய்


நற்கிடாரி எல்யேசன் கைத்தந்து வெட்டலில்
நற்கிடாரி கொல்லச்சொல் ஆங்குத்தான் -நற்றான்


கிடாரியின் நல்லுதிரம் கையால் தெளிச்சொல்
இடைத்தரம் எல்யேசன் ஏழு -கிடாரி


நிறஞ்செம்மை ஊன்பழுது இல்லா நுகங்கீழ்
அறவே படாததம் மாடு -சிறந்தங்குக்


கொன்ற கிடாரி முழுதெரித்து முப்பொருள்
வன்தீயில் எல்யேசன் போடச்சொல் -உன்மகன்


அன்றவன் ஆடை வெளுத்து குளித்தபின்
நின்றிடுவான் மாலைவரை தீட்டாமே -அன்றியும்


கொன்றோன் கொளுத்து மவனுஞ்சேர் தீட்டாமே
அன்றவர் ஆடை வெளுத்தபின் -நன்றாய்


குளித்திட, தீட்டாக மாலைவரை நிற்பர்
அளிசேர்த்த தூயோனும் தீட்டாம் -அளிசேர்த்து


மன்றம் வெளியே கிடாரியின் சாம்பல்வை;
அன்றள்ளிப் போட்டோனும் தீட்டாமே -மன்றவர்


நட்டாரும் ஆடை வெளுத்திட்டு எல்போக
நட்டார் இருப்பரே தீட்டாமே -நட்டாரில்


கூடமுள் யாரும் இறந்தாலே கூடமுள்
மூடா தெதுவுமே தீட்டாகும் -கூடமுள்


வந்தோர் சவந்தொட்டோர் தீட்டாமே ஏழுநாள்
வந்தோர்மேல் நீறுநீர் ஊற்றெடுத்து -அந்நீரை


மூன்றா வதுநாளும் ஏழா வதுநாளும்
மேன்மை யுறவே தெளித்திட -வான்கீழே


மூன்றிலும் ஏழிலும் நன்னீர் தெளிபடா
தோன்றியோர் சுத்தமாகார் கேளீரோ -வான்கீழே


வந்து வசிக்கும் இறையிடத்தை தீட்டாக்கும்
பிந்தையோர் போவரறுப் புண்டெனவே -வந்தவர்


ஏழில் தெளிபட்டு ஆடை வெளுத்திட
ஏழாம்நாள் எல்போம் அளவிற்கு -வேழில்


கடையாய் இருப்பரே தீட்டாகி நின்றோர்
கடையர்தூ யாகா தவரே -நடப்பவரோ


மூன்றில் நனியேழில் நன்னீறு நீர்தெளித்தோர்
மேன்மை திருச்செயல் என்றாலும் -வான்கீழ்


இராமட்டும் தீட்டாகி நிற்பர்கேள்; தீட்டோர்
கரந்தொட்ட யாவையுந் தீட்டாம் -இருப்பானே


தீட்டை கரந்தொட்ட மாந்தரும் -தீட்டாம்
இராமட்டும் நிற்பர்; நியமம் பகன்றார்


இருவர் செவிகேட்க நன்று

இனத்தொகை 33

மேரிபாவின் கன்மலையினின்று நீர்வருதல், ஆரோன் மோசே இருவரின் கீழ்படியாமையால் கானானிற்கு செல்லமாட்டார் என கர்த்தர் சொல்லுதல்.


வனமுள் மிரியாம் மரிக்க அடக்கம்
வனத்தில் புரிந்திட்டார் மாந்தர் - வனத்தில்


குடிக்கவும் நீரில்லை சீனில்; அவரை
குடிநீர் தருவீரே இங்கு -குடிமக்கள்


ஐயகோ அத்திப் பழமிலை மாதளம்
ஐயகோ இல்லையே நீரிலை - ஐயகோ


சாறிலை, ஊணிலை யாமுந்தான் செத்திருந்தால்
வேறோய் நலமாம் புலம்பிட -வேறாய்


திருவிருவர் சென்றாரே கூடம்முள் கேட்டு
திருமுன் விழவும் திருவின் -திருமாண்பு


சீரிருவர் கண்டனர் ஆங்கேதான், கர்த்தரும்
சீரவர் பேசினார் ஆங்குத்தான் -நேராகச்


சீரவர் மோசேயை நோக்கி: திருக்கோலைச்
சீரிருவர் கொண்டு சபைகூட்டி -நேரேச்செல்


கண்களுக்கு முன்னே மலையிடம் பேசிட
கண்காண நீரும் வருமங்கே -கண்காணக்


கோலெடுத்து போனார் திருவிருவர் கன்மலைக்கு
கோலெடுத்த மாண்பன் சினங்கொண்டோ -தாலந்து


உண்டெனக்கு என்றே நினைத்தானோ, நல்லினத்தார்
அண்டக் கலக இனத்தாரே -மண்ணின்


இனத்தார் இடம்சொல் கலகப் பிரிவோர்
இனத்தார் இதுகேள்மின் யாமோ -இனங்காணக்


கன்மலையி னின்று வருவிப்போ மோநீரை
கன்மலையை தட்டினான் கோனவன் -வன்னாய்


இருமுறை தட்டியதும் நீர்மிகுதி ஓட
திருமக்கள் நீர்குடித்து மாக்கள் -வரும்நீர்


குடித்திட அம்மலை மேரிபா; வாதம்
குடிநீருக் காய்ச்செய் ததாலே -குடித்திட்ட


பின்னர் திருக்கர்த்தர் சொன்னார் திருவிருவே
கன்மலையில் எம்மைநீர் தூயாக்கா -என்மேலே


நம்பிக்கை வையாத இக்குறைவால் செல்லீரே
நம்பி யிருந்ததந் நாடு

இனத்தொகை 34

காதேசில் இருந்து ஏதோமுக்கு தூதுவிடுதலும் ஏதோம் வழிமறுத்தலும்


காதேசு சேர்ந்து சிலதூதர் விட்டானே
காதேசு சேர்ந்தோம் வருகிறோம் -வேதவர்


நற்றூதன் கொண்டனுப்பி எம்மைதான் ஏதோமே
நற்கர்த்தர் கொண்டுவந்தார் இங்குத்தான் -நற்றாணே


ஏதோமே ஏதோமே உன்தமன் கேட்கின்றான்
ஏதோமே உன்நாட்டின் சீர்வழியில் -ஏதோமே


செல்வோம்யாம்; ஏதும்வேண் டாம்யெமக்கு செல்வழி
சொல்வாய் தமனுக்கு நீருந்தான் -சொல்லதை


ஏதோமோ கேட்டு வழிசெல்லக் கூடாது
வேதனை யாமறியோம் போம்வழி -வேதனை


செய்வேன் வழிவந்தால் என்றே இனத்தூதர்
செய்வதைச் சொன்னான் தமனும்தான் -செய்கேட்டு


ஏதோமே ஏதோமே உன்தமன் கேட்கின்றான்
ஏதோமே உன்நாட்டின் சீர்வழியில் -ஏதோமே


செல்வோம்யாம்; நீருக்கும் காசுதந்து போவோமே
செல்வழி தாருமே நீயுந்தான் -சொல்லதை


ஏதோமோ கேட்டு வழிசெல்லக் கூடாது
வேதனை யாமறியோம் போம்வழி -வேதனை


செய்வேன் வழிவந்தால் என்றே இனத்தூதர்
செய்ய மறித்தான் வழிதனை -செய்வந்த


ஏதோமின் சொல்கேட்டு அங்கேதான் விக்கித்து
ஏதோம் தமர்நிற்க பின்சென்றார் -ஏதோமின்


எல்லையாம் காதேசை விட்டுப்போய் ஓர்மலை
நல்லாரும் சென்றார் நடந்து

இனத்தொகை 35

ஓர்மலையில் ஆரோன் மரித்தலும் மக்கள் துக்கம் கொண்டாடுதலும்


ஓர்மலையில் மோசே யிடஞ்சொன்னார் கர்த்தரும்
மேர்பாவில் நீரிருவர் வாக்குக்கு -சீர்கேளா


அக்குறையால் போகீரே சீர்நாடுள் என்றேனே
தக்காராய் போனீர் தமரிருவர் -தக்கபடி


ஓர்மலைமேல் கொண்டுவா ஆரோன் மகனுடன்
சீர்ஆரோன் ஆங்கேதான் சீவிப்பான் -சீர்மகன்


எல்யேசன் நற்றாடை போடுவாய் ஓர்மலைமேல்
நல்லாணும் செய்தனன் கேட்டங்கு -நல்லாண்


மலைமேலே ஆரோன் மரித்திட வந்தார்
மலைவிட்டு நல்லிருவர் தாமே -மலைவிட்டு


வந்திருவர் கண்டு இனத்தாரும் ஆரோன்பால்
சிந்தைக்காய் துக்கித் தனராங்கு -அந்தபடி


துக்கித்த முப்பது நாட்களாம் சிந்தைக்காய்
துக்கித்தோர் கண்ணீர் சொரிந்திட -துக்கித்த


மக்களுக்கு ஆறுதற் சொற்களும் இல்லையே
மக்க ளழுது புலம்பு

இனத்தொகை 36

ஆராத் அரசனின் நாட்டை அழித்து ஓர்மா என பெயரிடுதல்.


வழிகாட்டு வேவுகாரர் காட்டும் வழியே
வழிசென்றார் மக்களு மன்றே -வழிவரும்


மக்களை கானானின் வேந்தனாம் ஆராத்து
மக்களோடு வந்தான் எதிர்த்துவர -மக்களில்


தென்திசை வேந்தன் சிலரைச் சிறைபிடிக்க
அன்றே இசுரேல் இனத்தாரும் -அன்னார்


திருக்கர்த்தர் இம்மக்கள் கைக்கொடுமே தந்தால்
திருச்சொற் படியழிப்போம் யாமே -திருவாம்


திருக்கர்த்தர் மக்கட்சொல் கேட்டார் செவிசாய்த்
தருவேன் அழிப்பீர் இனத்தார் -திருச்சொல்


படியழித்து ஓர்மா பெயரிட்டார் அவ்வூர்
அடித்தொழித்த காரணத்தால் தானே -அடித்தொழித்தப்


பின்னர் இனம்பய ணித்து

இனத்தொகை 37
-

இசுரேலர் முறுமுறுப்பால் கொள்ளிவாய்ப் பாம்புகளால் கர்த்தர் தண்டித்தலும், மோசேயின் வேண்டுதலும்


ஏதோமைச் சுற்றிப்போம் ஓர்மலை விட்டவர்
வேதன் பிளந்தக் கடல்வழி -வாதை


வரவும் வழிநிமித்தம் மக்கள் மனம்போய்
திருவெதிர் பேசினரே கேள்மின் -திருவினம்


மோசேக்கும் கர்த்தருக்கும் வீணெதிர் பேச்சாக
ஆசைப் படுநற்றூன் இல்லைக்காண் -வீசை


எடுத்தாலும் வான்மன்னா எவ்வளவாய் உண்போம்
கெடுத்தீர் வனவழி இட்டு -நடுக்காட்டில்


நீரில்லை அப்பமில்லை என்றே புலம்பலால்
சீரற்றோர் மேல்வர தீப்பாம்பு -சீரவர்


ஏவிவிட மாய்ந்தனர் பன்மக்கள் தீவனத்தில்
தேவனும் கொண்டார் சினம்தானே -சாவிலே


ஐயகோ ஐயகோ மோசேநீர் பாரீரோ
ஐயகோ தீவாய் அரவங்கள் - ஐயகோ


மக்கள்யாம் பாவஞ்செய் தோமே திருவெதிர்
மக்களுக்காய் வேண்டும் திருவிடம் -மக்களுக்காய்


மோசேயும் விண்ணப்பம் செய்திட, கர்த்தரும்
மோசேநீ ஏற்றிடு கம்பின்மேல் -தேசத்தார்


காணத்தீப் பாம்பின் உருவம்; கடிபட்டோன்
காணப் பிழைப்பான் விடமின்றி -காணவே


மோசேயும் வெண்கல பாம்பொன்றை செய்வித்து
தேசத்தார் காணவே மேலேற்ற -தேசத்தார்


பாம்பின் கடிபட்டால் நோக்க விடமுறிந்து
தேம்பா தினத்தார் பிழைத்து

இனத்தொகை 38

மக்களின் பயணம் மற்றும் அவர்களின் பாட்டு


மக்கள் வழிசென்று ஓபோத்தில் தங்கினர்
மக்கள் வழிசென்று சாரேத்போத் -தக்கதாய்


மக்கள் கிழக்கே வழிச்சென்று மோவாப்பில்;
மக்களும் சாரேத்தைச் சேர்ந்திட -மக்கள்


வழிசென்று அர்னோன் நதிசேர்ந்து தங்கி
வழிசென்று பேயேர் இடம்போய் -வழிமுன்னே


மக்களை கூடிவரச் செய்நீர் தருவேனென்
தக்கார் பகன்ற இடமது -பக்கமாய்


வந்த இனமக்கள் பாட்டெழுதி பாடினர்
வந்திடு தண்ணீரே பொங்கிடு -வந்திட்ட


நீர்க்குறித்து பாடுவோம் வாரீரோ, வந்ததே
சீர்ச்சொல்கேள் கோலாலே தோண்டினார் -சீர்மக்கள்


மீண்டும் பயணித்துச் சென்று

இனத்தொகை 39

இசுரேலர் சீகோன் மற்றும் ஓக் மன்னர்களை வீழ்த்துதல்


மக்களும் மாத்தனா சென்று நகாலியேல்
மக்கள் நடந்துவர பாமோத்து -தக்கார்


வழிசேர் எசிமோனை நோக்கும் பிசுகா
செழிமருச்சேர்ந் தாரே இனத்தார் -வழிசெல்


செழிமருச்சேர் மக்கள் எமோரிய வேந்தே
செழிமருச்சேர்ந் தோம்யாமே சீகோன் -வழிசெல்வோம்


வேந்துவழி நீர்ப்பழம் கைத்தொடோம் சொன்னார்கள்
வேந்தனோ வந்தான் எதிர்த்தங்கு -மாந்தர்


இசுரேலர் சீகோன் முறியடித்து வாழ்ந்தார்
இசுரேலர் அம்மோன் வரைவாழ் - இசுரேலர்


பாட்டு, உவமைப் புலவரே பாடுவீர்
நாட்டின் இறைவன் விழவைத்தான் -நாட்டு


எசுபோன் எமோரி அரசின் நகரம்
எசுபோன் தொடங்கித்தீ ஆர்சேர் -பொசுக்கியே


மேட்டிலே அர்னோனின் ஆண்டார் பொசுக்கியதே
நாட்டின் இறைவிடுத்தான் கையிலே -நாட்டிலே


எய்துபோட் டோம்யாம்; எசுபோன் நகரமும்
எய்ததால் தீபோன் வரைப்பாழாம் -எய்ததால்


மேதேபா நோப்பா நகரம் வரைப்பாழே
வேதமக்கள் பாடிக் களித்தனர் -வேத


இனத்தாரும் யாசேர் பிடித்தங்கு தங்கி
இனத்தாரும் யாசேர் எமோரி -இனத்தவர்


ஓடச்செய் தார்மக்கள் பாசான் வழிவர
நாடாதின் வன்னரசன் ஓக்கையும் -நாட்டில்


திருக்கர்த்தர் மோசே யிடஞ்சொன்னார் ஆங்கே:
திருமோசே அஞ்சாதே கண்டு -திருவவர்


எத்ரேயு மண்ணில்நீ மாந்தரை வீழத்து
தத்தம் கொடுத்தேன் உனக்கென்றார் -எத்ரேயு


யாரும் உயிருடன் மீதிவிடா மக்களும்
சேரவர் சேய்தமர் கொன்றார்கள் -சீரந்த


தேசத்தைக் கட்டிக்கொண் டார்கள் இனத்தரும்
மோசேயின் சொற்படி ஆங்கு

இனத்தொகை 40

மோவாப் எல்லைக்கு இசுரேல் இனமக்கள் வந்தடைதலும் மோவாப் அரசன் பாலாக்கு பிலெயாமை அழைத்துவர சொல்லுதலும்


எரிகோ அரண்நகர் அக்கரையில் வந்தார்
சரிமக்கள் வந்தங்கு தங்க -கரைவிட்டு


வாரா கடற்போல் மலைசுற்றி தங்கினர்
சீரார் இளைப்பாற மக்களின் -பேரிரைச்சல்


மோவாப் இசுரேலின் அண்ணன் வழிவந்தோர்
மோவாய் அரசனாம் பாலாக்கு -மோவாப்பின்


எல்லையிலே சென்றார் இசுரேலர், எல்மக்கள்
எல்லையிலே கண்டதும் அஞ்சினான் -எல்லையில்


அண்ணனோ தம்பியோ என்னடா நாட்டிலே
அண்ணன் வழிவந்த பாலாக்கும் -எண்ணம்


எரிதீதே என்பதால் மீதியர் முன்னே
எரிசொல்லாய்ச் சொன்னான் பிழன்றே -சரிமக்காள்


மீதியரே பாரீரோ பங்காளி மக்களை
மீதிவிடா மேயும் வெளிஆப்போல் -வேதனை


தந்திட வந்தார் இனமக்கள், என்செய்வோம்
நந்நாமும் பாலாக்கும் சொல்லிட -அந்நாளில்


பெத்தூர்வாழ் மாந்தன் பிலேயாம் அறிவேன்யான்
சித்தனவன் சொன்னச்சொல் மாறாதே -பெத்தூர்போய்


அம்மாந்தன் கொண்டுவர மூப்பர் அனுப்புவோம்
இம்மட்டும் வந்திடச் சொல்லுமின்னே -அம்மானே


பேயோர் மகனேகேள் வந்தார் எகிப்தினின்
வேயா இனமக்கள் மாக்கடல்போல் -பேயோர்


மகனே அறிவேன்யான் நீர்வாழ்த்த வாழ்வர்
இகத்தில் கெடுசொல்லென் வீழ்வர் -தகையாய்க்


குறிக்கூலி கையேந்தி மூப்பர் விரைந்து
குறிக்காரன் வீட்டில் அரசன் -குறிகேட்க


ஆளனுப்பி விட்டாரென் சொல்லி வருவீரே
கோளரசன் சொல்கேட்டு என்றதும் -கோளவனில்


கோளரசர் கர்த்தரே சொல்படி செய்வேன்யான்
ஆளவரே நீரும் இராத்தங்கும் -கோளரசர்


சொல்கேட்டு வந்திடுவேன் சொல்ல, இராத்தங்கி
சொல்படி மோவா பியர்

இனத்தொகை 41

பிலெயாம் கர்த்தர் சொல்படி பிரபுக்களை திருப்பி அனுப்ப, பாலாக் அவர்களிலும் மேலானவர்களை அனுப்புதல்


இரவிலே தேவன் பிலெயாமே யாரோ
இராத்தங்கி உள்ளார் எனக்கேள் -இராத்தங்கு


மக்கள் இனவரசன் மோவாப்பின் ஆட்களே
தக்கார் குறிகேட்க வந்தனர் -அக்காண்


கெடுசொல் உரைத்திட கூலி கொணர்ந்தார்
கெடுசொல் உரைத்திட்டால் போரில் -கெடுசொல்


பலிக்கவே பாலாக்கு மக்கள் இனத்தார்
பலியாக்க திட்டம் புரிந்தான் -இலையவர்


வாழ்த்துபெற்ற நன்மக்கள் அவ்விசு ரேலினமே
வாழ்த்துபெற்ற அம்மக்கள் வாழ்த்தில்லா -பாழ்க்கக்


கெடுசொல் எதும்சொல்லாய், போகாதே நீயும்
அடைத்தேன் வழியை உனதில் -விடைசொல்ல


காலை எழுந்த பிலெயாமும் மூப்பரை
வேலைவாய்க்கா போனதே கர்த்தரும் -சீலவர்


வந்திட உத்தரவு தந்திட வில்லையே
வந்தவழி செல்மின்னே நீர்தானே -வந்தோர்


முகம்வாடி மூப்பர் வழிசென்று சொன்னார்
சிகையோன் பிலெயாம் வராதே -நகையின்றி


விட்டான் வழிசெல்ல என்றே அரசனும்
விட்டான் அதிபரே போய்வாரும் -நட்டாண்


வழிவந்த நாட்டின் அதிபர்கள் சென்று
வழிவர தாமதம் செய்யீர் -அழிசொல்லைச்


சொல்லிட பார்பணம் மிக்கதாய் தந்திடுவேன்
சொல்செய்வேன் வாரும் விரைந்தென்றார் -சொல்கேள்


பிலெயாமோ, வெள்ளிபொன் வீடுநிறை தந்து
பிலெயாமை வாங்கயான் அல்லோ? -பிலெயாமோ


தேவன்சொல் மீறா திருப்பேன் தரித்திரும்
தேவன்சொல் கேட்பேன் இரவு

இனத்தொகை 42

பிலெயாமை கர்த்தர் போகச் சொல்லியும் வழிமறித்தலும், பிலேயாமின் கழுதை பேசுதலும், கர்த்தர் தூதனை அவன் காணுதலும்


இரவிலே தேவன்: இவர்மக்கள் கூட்டி
விரைபோக வந்தால் கிளம்பு -விரைந்தெந்த


சொல்லும் பகராதே யான்சொல்லும் சொல்மட்டும்
சொல்லிடுவாய் என்றார் திருவிறைவன் -சொல்கேட்


டெழுந்தவன் தன்னுடைய சொத்தாம் சிறப்புக்
கழுதைமேல் சேணம் இடுத்து -கழுதை


வழிசெல்ல தேவன் பிலெயாம் மனதின்
அழிசொல் தனையறிந்து போனார் -அழிப்பான்


மனதறிவார் கர்த்தர் மகராசன் தானே
மனதின் அழிநினைவு காட்ட -அனுக்கவே


விண்தூதன் வாளேந்தி நின்றான் வழியிலே
விண்தூதன் கண்டு கனைத்திட -மண்ணில்


கழுதை கனைத்து வயலிலே ஓட
கழுதை கடிதோ டுவதை -கழுதையின்


மேலிருந்த மாந்தன் அறிவின்றி சொன்னானே
சாலைசெல் என்றே அடித்தனன் -மேலது


சாலை வழியில் இருமதில் ஊடாக
சாலைச்செல் அல்லை இறைதூது -சாலைவழி


நிற்கவும் அல்லும் பிலெயாம்கால் தேய்த்திட
நிற்பதேன் அல்லே அடித்தனன் -உற்ற


வழியில் இடம்வலம் போகா படியே
வழிமறித்து தூதனும் நிற்க -வழியில்


கழுதை அமர்ந்ததே செல்லாமல் ஆங்கு
கழிகொண்டு அல்லை அடிக்க -வழியில்


கழுதையின் வாய்தனை கர்த்தர் திறக்க
கழுதையும் பேசியதே ஏனோ -கழியால்


அழவடிக் கின்றீரோ மூன்றுமுறை செய்யென்?
கழியன்றி வாளென் பலிநீ -கழுதையே


கேலிசெய் கின்றாயோ என்னைநீ கண்டுத்தான்?
காலமுதல் இந்நாள் வரையானே -காலமே


சேர்த்திட்ட அல்லன்றோ? இப்படியான் என்றேனும்
சோர்வாகச் செய்தேனோ சொல்மின்னே -சேர்ந்தநாள்


காலமுதல் இந்நாள் வரைசெய்யா அல்நீயே
காலமென் நல்லாரும் கண்திறக்க -சீலவன்


வாள்பிடித்து நிற்பதைக் கண்டு விழுந்துபணிந்
தாள்வணங்கிக் கேட்டான் இறைதூதன் -வாள்கை


இறைதூதன் சொன்னான், கழுதை விலகா
கறையோனே செத்திருப்பாய் கேள்நீ -இறைநிற்ப


கண்டதும் போயிற்றே தான்விலகி, இல்லென்றால்
கண்டதுண்டம் ஆகியிருப் பாய்நீயும் -விண்ணார்


இறைவா எதிர்பாவம் செய்தேன். அறியேன்
இறைவா இதுவுமது சித்தம் -கறையென்றால்


போகேன்; இறைதூதன் போவாய் மனிதரோடு
ஆகினும் என்சொல்லே சொல்

இனத்தொகை 43

பிலெயாம் கீரேயாத் ஊசோத்து போய் காலையில் பாகால் மேட்டில் இருந்து இசுரேல் பாளையத்தை பார்த்தல்


மோவாப் அதிபர் சிலரை அனுப்பினர்
மோவாப் அரசனிடம் தூதுச்சொல் -மோவாப்


அரசனாம் பாலாக்கு அர்னோன் நதியின்
கரைவரை வந்து அழைத்து -கரைமகன்


பாலாக்கும் கேட்டான் பிலெயாமே பாலாக்கு
ஆலாக நின்றரசன் கூப்பிட்டும் -சீலோனே


ஏனோ வராது, பணம்தரேன் என்நினைத்தோ
ஏனோ பகர்மின் எனக்கின்று -கோனாண்


பிலெயாமோ; வந்தேன் இதோநான் அரசே
பிலெயாவாய் ஏதும் பகர்மோ -பிலெயாம்வாய்


தன்னில் இறைத்தர அஃதிலா வேறொன்றும்
தன்னாலே வாராது கேள்மின்னே -அன்னானும்


பாலாக் உடன்சென்று; கீரியாத் ஊசோத்து
பாலாக் நகர்சேர பாலாக்கு -மேலான


ஊனடித்து சீலவன் என்றே நிணந்தந்தான்
ஊனுண்டார் ஆங்கே களித்தவரும் -வானிலே


எல்போய் விடியவும் பாலாக் பிலேயாமை
செல்வோம்நாம் பாகாலின் மேட்டிற்கு -வல்லாண்


இடத்தினின்று மக்களினப் பாளையம் பார்க்க
இடத்திலி ருந்தார் இனம்

இனத்தொகை 44

பிலெயாமின் முதல்பலிகளுக்கு கர்த்தர் வாக்கு அருளுதல்


மலையுச்சி சென்றவர் செய்வித்தார் ஏழு
நிலையில் பலிபீடம் தன்னை -மலைமேலே


ஏழேறு ஏழாடு ஏழுபீடம் மேற்பலி
ஏழெல்லாம் எண்ணிக்கை செய்தோனும் -கீழே


எரிநெருப்பில் மாக்கள் பலியிட்ட பின்னே
எரிநெருப்பின் பக்கம்நீர் நில்லும் -அரைக்கட்டி


நான்செல்வேன் கர்த்தர்சொல் கேட்க நிமித்தம்காண்
ஈன்மகன் சென்றான் விரைந்தங்கு -தான்சென்றோன்


விண்ணார் இறங்கிவந்து சந்தித்தார் ஈனனை
விண்ணா ரிடஞ்சொன்னான் வீணனும் -விண்ணிறைவா


ஏழேழாய் ஆடேறு தந்தேன் பலியாக
வேழிறைவா சொல்லும் கெடுசொல்லே -ஆழிறை


கர்த்தரும் இட்டார் பிலெயாமின் வாயிலே
கர்த்தரங்கு இட்டதும் வந்தானே -கர்த்தரின்


சொல்லை அறிவிக்க; பாலாக்கும் சொல்லிடும்
சொல்லழிக்கும் பேரினச் சொல்லென்றே -சொல்லவர்


இட்டதை சொன்னானே சொல்மாறா வாக்கோனும்
இட்டார் இனமக்கள் தேவனும் -நட்டார்


எனவாழ்த்த, கர்த்தர் வெறுக்கா இனத்தை
தினம்வெறுப் பேனோ பதர்யான் -இனத்தாரைக்


கன்மலை யுச்சியில் நல்லானைக் கண்டேன்நான்,
குன்றுகள் மீதிருந்துப் பார்க்கிறேன்; -நன்னினம்


சேராக் கலவார் தனித்து வசிப்பரே
நேரார் இறைவனும் வாழ்த்தினார் -நேரார்


இறைவன் தொடர்ந்து இசுரேலாம் யாக்கோப்
நிறைத்தூளை எண்ணி முடிக்க -கறையோர்


மனிதருள் யாருளரோ காண்மின்; இசுரேல்
நனிகாற்பங் கெண்ணலா மோகேள் -இனிமண்ணில்


நீதிசெய் நல்மனிதன் போலே மரணிக்க
நீதிசெய் யாதார் விழைவரே -நீதிசெய்


யாக்கோபைப் போல மரணிக்க வாக்கனும்
வாக்குரைத்தான் ஆங்கே விழைந்தங்கு -வாக்கேள்


அடடா எதிரி அழியக் கெடுசொல்
விடுமெனச் சொன்னாலே நீரோ -விடுத்தீர்நல்


வாழ்த்துரை, என்னயிது வாழ்த்தினீர் என்னெதிரி
வாழ்த்தாது சொல்லும் கெடுசொல்லே -வாழ்த்திய


ஈனனும் சொன்னான்: திருக்கர்த்தர் சொல்லைத்தான்
ஈனன் பகர்வேன் கடமையாய் -வானங்கீழ்


வாரும் கடைக்காண வேறிடம் செல்வோம்யாம்
சேரங்கு பின்கெடு சொல்

இனத்தொகை 45

பிலெயாமின் இரண்டாம் பலிகளுக்கு கர்த்தர் வாக்கு அருளுதல்


ஒருவேளை எல்லா இனக்கூட்டம் காண்நீர்
திருவின்சொல் என்வாழ்த் தினீரோ -வரவேண்டும்


என்னோடு உச்சி பிசுகாவின் போனதும்
நன்வெளியில் பார்த்தான் கடைமக்கள் -வன்பாலை


சோப்பீம் வெளியதில் வாக்கன் தனைநிறுத்தி
சோப்பீம் தனிலே பலிபீடம் -தீப்பிழை


பாலாக்கு செய்வித்தான் முன்போலே ஏழாக
சீலவர் சொல்கேட் டிடும்நீரே -கோலவன்


பாலாக்கு மீதிய மேன்மக் களோடுநிற்க
சீலவர் சொல்கேட்கப் போனானே -சீலவர்


சொல்தந்தார் வாழ்த்துரையே சொல்கேட்டு வந்தனன்
அல்பீடம் முன்னே மகனவனும் -நல்லோனே


சிப்போர்சேய் பாலாக்கே கேள்மின்னே நீரிங்கு
அப்படிப்பொய்ச் சொல்ல மனிதனல்ல -இப்படிச்


சொல்மாறிச் சொல்ல மனிதச்சேய் அல்லவே
சொல்மாறா நிற்கும் இறைவனார் -சொல்லவர்


வாழ்த்துரைக்கக் கட்டளை பெற்றேனே வாழ்த்துரைப்பேன்
வாழ்மக்கள் தன்னைநான் மாற்றாமல் -வாழ்த்துவேன்


யாக்கோபில் சால்பில் குணமில் இசுரேலில்
தீக்குற்றம் ஒன்றுமிலை கேள்மின்னே -ஆக்கமிகு


யாக்கோப் இசுரேல் இனத்தாரின் தேவனாம்
நீக்கமற நிற்கின்றார் கர்த்தர்தான் -ஆக்கம்


அரசனின் வெற்றிச் செருக்கு இனம்மேல்
இருப்பதை பார்க்கின்றேன் யான்தான் -திருக்கர்த்தர்


தேவன் அவர்தாம் எகிப்தினின்று கூட்டிவந்தார்
தேவன் புறப்படப் பண்ணினார்; -தேவமக்கள்


காண்டா மிருகத்திற் கீடாய்ப் பெலனுண்டு
ஆண்டவர் சொல்லிது கேள்மின்னே -ஆண்டிட


தீச்சிங்கம் போலெழும்பி உண்பார் இரைப்பிடித்து
தீச்சிங்கம் விட்டுவிடா போலேதான் -வீச்சுதிரம்


உண்ணுவர் யாக்கோப் எதிர்மந் திரமுமில்
மண்ணில் எதிர்குறியும் இல்லிங்கு -மண்ணோனும்


ஐயா கெடுசொல் உரைப்பீர் எனச்சொன்னால்
ஐயோ இசுரேலை வாழ்த்தினீர் -ஐயா


கெடுசொல் இனவாழ்த்து கர்த்தர் தருஞ்சொல்
கடைச்சொன்னேன் அல்லவா நான்

இனத்தொகை 46

பிலெயாம் மூன்றாம் பலிகளை ஆயத்தம் செய்து நிமித்தம் பார்க்க போகாமல் இசுரேலைப் பார்த்து பேச, தேவ ஆவி அவன் மேல் இறங்குதல்


கெடுசொல்லைச் சொல்லிட வேறிடம் போவோம்
கெடுசொல் தரவே இறைவன் -இடுவார்


எசிமோன் எதிரான பேயோர் மலையில்
எசிமோனில் கட்டிபலி தந்து -இசைந்தவர்


மூன்றுமுறை இட்ட பலியெல்லாம் ஏழேறு
மூன்றுமுறை யும்மேதான் ஏழாடு -மூன்றிலும்


ஏழாய் பலிபீடம் என்றே பலியிட்டான்
வேழார் கெடுசொல் விழைந்தவன் -பாழாகா


வாழ்த்தி உரைப்ப திறைச்சித்தம் என்கண்டு
வாழ்த்தும் உரைகேட்கப் போகாது -வாழ்மக்கள்


தங்கிய பாலைவனம் நோக்கிட தங்கினார்
எங்கும் நிறையாவி மேல்தானே -இங்கேதான்


கண்திறந்து பேசுகின்றேன் கண்திறந்த தேயானும்
விண்ணார்சொல் கேட்டுப் பணிந்தப்போ -மண்ணிலே


யாக்கோப்பின் கூடாரம் மற்றும் வசிப்பிடம்
வாக்கன் உரைத்தான் அழகன்றோ -போக்கு


பரவிப்போம் ஆறோ மனையும், நதியின்
கரையிலுள்ள தோட்டமோ கூடம், -வரையிலார்


நாட்டின சேறுமண நல்மரமோ நல்லிடம்,
நீட்டநீர் கேதுரு வேதானோ -காட்டில்


அவர்நீர்ச்சால் பாயும்; அவர்வித்து கீழே
தவநீர்ப் பரவும்; அரசன் -தவமானாம்


ஆகாகைப் பார்க்கிலும் மேலாண்; அவரரசு
போகாது மேன்மையடை யும்தானே. -வேகு


எகிப்தினின்று கூட்டிவந்து தேவனும், காண்டா
மிகைமிருகத் தீடாய்ப் பெலனும்; -இகத்தில்


எதிரியான நாடுகள் தீக்கிரை, என்னிட்
எதிரியை அம்புகளால் எய்வான். -எதிரேதான்


சிங்கம்போல் தீச்சிங்கம் போல மடங்கியே
தங்கியிரு மக்களெ ழுப்புமா -தங்கன்யார்?


உங்களை வாழ்த்துவோன் வாழ்த்துபெற்று, சொல்கெடு
உங்களைச் சொல்வோனும் கெட்டிடுவான் -ஆங்கேதான்


பாலாக்கு கையொடு கைத்தட்டி மிச்சினமாய்
சீலோன் எனநினைத்தே கூட்டிவந்தேன் -காலைமுதல்


மும்முறை வாழ்த்தினீர் எம்மெதிரி. என்னெதிர்
அம்மானே நிற்காதே ஓடுமின்னே -தம்பி


பணமும் நிலைதருவேன் என்றேன் உனக்கு
பணநிலை வாரா தடுத்தார் -குணவான்


திருக்கர்த்தர் இன்றுத்தான்; பாலாக்கே கேளும்
திருச்சொல்லே சொல்வேன் உரைத்து -திருதரும்


பாலாகே வீடுநிறை பொன்வெள்ளி தந்தாலும்
சீலவர் சொல்லே உரைப்பேன்நான் -பாலாக்கின்


தூதுவர் வந்தா ரிடஞ்சொன்னே னன்றோயான்
மேதவர் செய்வ துரைத்து

இனத்தொகை 47

பிலேயாம் மேலும் வரும் காரியங்களை உரைத்தல்


பேயோர்சேய் சொல்லென் பிலெயாம் உரைக்கின்றேன்
தேயவர் முன்பணிந்தப் போகண்கள் -வேயிற்றே


கண்டதுகாண்! காண்பேன் அவரைநான் இன்றல்ல
கண்காண் அருகில் இலைதானே -கண்ணாய்


ஒருவிண்மீன் யாக்கோபில் வந்துதிக்கும் கேளாய்
ஒருசெங்கோல் வந்தே இசுரேல் -திருமக்கள்


ஆளவரும்; மோவாப் அழிந்திடும் சேத்தழியும்
கோளத்தில் ஏதோம் கவர்ந்திடுவர் -நாளழித்து


சேயீர் எதிரிகள் வீழ்வச மாக்குவர்;
சேயாம் இசுரவேல் மேன்செய்வர். -வேயோராம்


யாக்கோ பிலிருந்து தோன்றுமவர் ஆளுகை
வாக்குமிதிப் பட்டண மிட்டுப்போம். -வாக்கே


அமலேக்கு முந்தி யெழும்பிய நீயோ
இமைமுடிவில் முற்றும் நசிந்து -தமரான


கேனியனே வாசம் அரணுள்ளே; கூட்டைநீ
கேனிமலை மேற்கட்டி னாயோகேள் -கேனியனே


கேனி அழிந்திடுவான்; ஆசூரும் மேலிட்டு
கேனி சிறைபிடித்துப் போகிடத் -தானிங்கு


எத்தனைநாள் செல்லுமோ என்றான். உரைத்தபின்
தத்தம் வழிசென்றா ரங்கு

இனத்தொகை 48

மோவாபின் சிலைகளுக்கு இசுரேலர் பணிதலும் கர்த்தரின் வாதையும்


சித்தீம் வனத்திலே சிந்தை இழந்தோராய்
தத்தம் இனம்விட்டு மோவாபின் -தத்தை


மடந்தையரை கண்டுக் களிகொண்டார் மக்கள்
இடத்தினிலே வேசித் தனஞ்செய் -திடமனதில்


விண்ணவர் சொற்கேளா மாந்தர் இனம்வீணே
மண்ணினால் செய்வித்த மோவாபின் -மண்ணிற்ப்


படைத்த உணவை புசித்தே மடந்தை
இடைக்கண்டு ஆங்கே குலாவ -விடைக்கொடா


பாகாலின் பேயோரைப் பற்றிய மாந்தருள்
ஆகாது நன்சொல்லை கேளாது -வேகும்சிற்


றேகச் சுகத்திற்காய் கர்த்தரை விட்டங்கு
ஏகமாய்ச் சென்றார் இனத்தாரே -ஆகா


வழிசென்றக் காரணத்தால் வாதை விடுத்தார்
அழித்தூக்கு ஞாமுன் வழுவோர் -அழித்தூக்கு


செய்திட்டார் சொல்லாரின் சொல்படி அன்றங்கே
செய்தயினத் தாரும் அழுது

இனத்தொகை 49

கர்த்தருக்கு முன்பாக பினகாசின் பக்தி வைராக்கியத்தால் வாதை நின்று போகுதலும் அவனை கர்த்தர் உயர்த்துதலும்


அழுகைக் குரலோடு மக்கள் கலங்க
விழுந்திட்ட மக்களையும் காணா -வழுசிம்ரி


வன்புணர்வு செய்ய கசுபி பெயர்பெண்ணை
அன்று; பினகாசும் கண்டவன் -வன்னாண்


வழிசெய் நிலைப்பொறுக்கா ஆசன் மகனும்
வழிசென்றப் பாதையில் சென்று -அழித்தான்


கழிவேலைக் கொண்டு இருவரையும் ஆங்கு;
அழிவாதை நின்றதே அன்று -வழுவோர்


பினகாசு கொன்றதால் கர்த்தரும் மண்ணில்
இனத்தில் இவன்போலே செய்ய -இனக்கர்த்தர்


வைராக் கியமுண்டோ, ஆதலால் என்முன்னே
நேராணின் தோன்றல் பணிசெய்வர் -சீராரும்


போற்றினார் ஆண்மகனின் வைராக் கியமாங்கு
ஆற்றா தழிமோவாப் சூதாலே -சீற்றம்


வரவைத்தார் பேயோரின் காரணத்தால் தானே
சிரம்தாழ்ந்தார் வீணர் இனம்

இனத்தொகை 50

கானான் செல்லும்முன் மக்கட்தொகை எண்ணிக்கை செய்தல்


நேர்கர்த்தர் நேராண் இருவரை நோக்கிச்சொல்
நேர்மக்கள் எண்ணிக்கை செய்வீரே -சீர்தேசம்


தன்னில்வாழ் நன்னிலம் தன்னை பிரித்திட
என்றதும் கீழ்படிந்தார் ஆங்குத்தான் -அன்னாரும்


எண்ணிக்கை முன்ரூபன் செய்தாரே -மண்ணிலே
எண்ணிக்கை நாற்பத்து மூவா யிரத்தோடு


எண்ணிக்கை ஏழுநூற்று முப்பது -மண்ணிலே
எண்ணிக்கை பின்சிமியோன் செய்தாரே விண்சொல்லி


எண்ண இருபத்தீ ராயிரமும் மண்ணினம்
எண்ணிக்கை நூறீரே காத்தினமோ -மண்ணிலே


எண்ணிக்கை நாற்பது ஆயிரமும் ஐநூறும்
தண்யூதா ஐநூறு சேர்த்தெண்ண -எண்ண


எழுபத்தி ஆறா யிரமினம் சீரார்
வழியிசக் காரினம் முந்நூ -றிழைவரும்


சேர்த்தே அறுபத்து நாலா யிரமினம்
சேர்செபு லோனினமோ ஐநூறு -சேர்த்தெண்ணி


பத்தா யிரம்ஆறு; எப்பிராயிம் எண்ணிக்கை
பத்தா யிரமூன்றும் ஆயிரமீர் -பத்தது


ஐம்பதே; சீர்மனாசே நல்லாரோ எண்ணிக்கை
ஐம்பதாய் ஆயிரம் ஆயிரமீர் -ஐம்பதோடு


ஆறா யிரத்தைம் பதுவே; இனத்தாராம்
மாறனவன் பென்யமீனின் எண்ணிக்கை -ஆறாக


நூறுசேர்ந்தே நாற்பத்தி ஐயா யிரம்தானே
நூறு அறுநூற்று நாற்பதும் -நேறினம்


நானூறும் சேர்த்தெண்ண தாண்வந்தான் வெற்றாகக்
கானானை விட்டான் இருவராய் -கானகத்தில்


பேரினமாய் வந்தனரே தாண்ணினம் பேரினம்
நேரினத்தார் ஆசேரின் எண்ணிக்கை -சேரவர்


நானூறும் மூவா யிரத்தோடு சேர்த்தெண்ணி
வானங்கீழ் ஐம்பது ஆயிரமே -மேதவர்


நானூறும் சேர்நாற் பதினா யிரம்தானே
மேனாளாம் நப்தலி யாங்கேதான் -வானின்கீழ்


எண்ணிக்கை லேவி இருபத்து மூன்றாக
எண்ணினார் ஆயிரத்தை; ஆனாலும் -எண்ணிக்கை


எண்ணிட்ட லேவி ஒருமாதம் மேல்மற்றோர்
எண்ணி வயதோ இருபதுமேல் -எண்ணிக்கை


எண்ணிய மக்களுள் பாலையில் சாவீரே
விண்ணார் உரைத்தவர் யாருமிலை -தேவையிலார்


ஆறு இலட்சமும் ஓரா யிரத்தோடு
நேறி எழுநூற்று முப்பது -வேறேதான்


லேவி தவிர இனத்தாரின் எண்ணிக்கை
மேவிக் கணக்கிட்டார் ஆங்குத்தான் -ஆவிநட


நூன்மகன் யோசுவா வோடங்கு காலேப்பும்
வான்கீழ் மரித்தாரே பாலையில் -தேன்தேசம்


எண்ணிக்கை யின்படியே பங்கிடச்சொல் மக்களுக்கு
எண்ணிக்கை மேலானோர் பங்கதிகம் -எண்ணிக்


குறைந்தோர் குறைவாகப் பங்கிடச்சொல் கானான்
குறைந்த இனத்தார் இடமேல் -கறையாகக்


கொள்ளா திருக்கவே சீட்டுபோடு காணியில்
தள்ளுவ தாகாது சீட்டுவிழ -அள்ளவள்ளக்


குன்றா நிலமிருக்க நேரினமும் கள்ளமாய்
வன்செயல் செய்யா திருக்கவே -அன்றுசொல்


கர்த்தரும் செய்தார் முறையாக, நற்றவர்
கர்த்தரின் சொல்லும் பலித்து

இனத்தொகை 51

செலோபியாத்தின் மகள்கள் தங்கள் தகப்பனுக்கு மகன் இல்லாததால் தங்களுக்கு காணியாட்சி தர கேட்டலும், கர்த்தர் சொன்ன நியாயவிதிப் பிரமாணமும்.


யோசேப் வழியோன் மனாசே குடும்பத்தில்
தேசம்சேர் பெண்கள் செலோபியாத்தின் -பேசினர்


ஐவரும் கூடம்முன் மோசே எலெயாசார்
தேவனிடம் கேட்க விழைந்தவர் -தீவனத்தில்


எந்தையும் மாண்டார்; வழிதீயாம் கோராகு
சிந்தையால் அல்ல; மரித்தது -எந்தையும்


பாவத்தால் தானெனச் சொல்லியவர் -தேவனின்
ஆவண நீதியில் எம்காணி -பாவத்தால்


காணியில் எந்தைப் பெயரற்று போகலாமோ
காணியில் தாரும்நீர் பங்கென -காணியில்


பெண்களுக்கு பங்கு நிலையில்லா காரணத்தால்
பெண்களிடம் சொல்கேட்டுச் சொல்வேன்நான் -விண்ணாரின்


என்றவனும் மோசே திருவவர் சொல்கேட்க
வன்மரித்தோர் பிள்ளையில் காணிகள் -அன்றியும்


பெண்ணுக்குப் போய்சேர, பெண்ணுமில்லா போனாலே
மண்ணும் அவன்சோ தரன்சொத்து -மண்ணில்


சகோதரனும் இல்லென்றால் போகும் உறவின்
வகையார்க்க ஈதே இசுரேல் -இகத்தில்


விதியாகச் சொல்லிடுவாய் என்றார் திருவும்
விதியதைச் சொன்னான் சிறந்து

இனத்தொகை 52

கர்த்தர் மோசேயை அபாரீம் மலைமேல் ஏறி கானான் தேசத்தை காணச் சொல்லுதலும் அவனுடைய மன்றாட்டும்.


மோசேநீ ஏறு அபாரீம் மலைமேலே
மோசேக்கு காட்டுவேன் கானானாம் -தேசமதை;


தேசத்தில் நீசேர மாட்டாயே ஆரோன்போல்
பேசா திருந்த பிழையதால் -தேசத்தை


கண்டு களித்திடு தூரத்தே என்றதும்
மண்ணிலே ஊனுள்ள யார்வர்க்கும் -விண்ணார்


இறைதானே, இம்மக்கள் மேய்ப்பனில்லா ஆடாய்
முறைவழி விட்டுப் பிழர்வார் -இறையோனே


மாந்தருள் ஓராள் தலையாக வைப்பீரே
மாந்தனவன் மன்றாட்டு செய்ததும் -மாந்தருள்


நூன்மகன் யோசுவா ஆவிபெற்றான் ஆதலால்
நூன்மகன் யோசுவாவை மூப்பர்முன் -மேன்மகன்


என்றே அறிவித் திடுவாய்நீ உந்தனின்
நன்னாவிப் பங்கில் சிறுபங்கை -நன்னாணும்


பெற்றிட தந்தேன்நான் என்றார் திருவங்கு
பெற்றவன் சொல்படி செய்து

இனத்தொகை 53

பலிகளை மீண்டும் மோசேயிடம் இறைவன் சொன்னார்.


அலைந்தனர் நாற்பது ஆண்டுகள் என்றே
அலைந்திரிந்தப் போது வனத்தில் -இலைபலி


இம்மக்கள் எம்சொல் மறப்பரோ நன்முறையை
அம்மானி டஞ்சொன்னார் நேர்கர்த்தர் -அம்மான்


கவனம் செலுத்திடச் சொல்வாய் இனமே
கவனம் கவனம் இசுரேல் -அவனிடம்


சொன்னார் இறைவன் சிறப்பாய் பலியது
நன்மாத வார தினமென -அன்றே


பலிகள் தினவார மாத மெனவே
நிலைக்கர்த்தர் சொன்னார் சிறந்து -பலிதினம்


காலைமாலை ஓராடும் சேர்த்து நலமாநெய்
காலைமாலை தந்திடச் சொல்வாய்நீ -காலைமாலை


ஆடு ஒருவயதுக் குட்டியாம் காலைமாலை
ஆடை தகனித்தே நன்பலி -ஆடையாசன்


செய்த படியிலே பத்திலொரு பங்காக
நெய்யிட்ட மாவு தகித்திடச்சொல் -மெய்யார்


படியிலே காற்பங்கு சாறது ஆங்கே
அடிக்கும் ஒருஆட்டுக் குட்டி -இடிபிழிந்த


பானபலி; தூய்தலத்தில் கர்த்தருக்கு முன்சாற்றை
பானபலி வார்த்திடச் சொல்வாய்நீ - ஆனயிது


சீனாய் மலைமீது தந்திட்ட நல்விதி
ஆனாலும் நேர்மகன் மோசேநீ -சீனாய்


மலைவிதி மக்கள் நினைவூட்ட மீண்டும்
நலவிதியைச் சொல்வாய் சிறந்து -பலியது


வாரத்தில் ஆறுநாள் ஓராடும் ஏழாந்நாள்
வாரத்தின் ஓய்வுநாளே ஆதலால் -வாரவோய்


நாளதில் ஈராடு தந்திடுவீர் தீயிலே
வேளை தவறாது நீரென்றும் -நாளது


மாதப் பிறப்பிலே ஓராண்மே ஈரேறும்
மேதின் ஒருவயது குட்டியேழு -வேதவர்


நன்மாவு ஒன்றரை நற்படி தீயிடுவீர்
சொன்னார் முறையாகத் தானங்கு -என்றென்றும்


வாரத்தில் ஆறுநாள் ஓராடும் ஏழாந்நாள்
வாரத்தின் ஓய்வுநாளே ஆதலால் -வாரவோய்


நாளதில் ஈராடு தந்திடுவீர் தீயிலே
வேளை தவறாது நீரென்றும் -நாளது


மாதப் பிறப்பு நலநாளில் சேர்த்துபலி
மாத மொருக்கடாவை சேர்செலுத்து -வீதமாய்


மக்கள்செய் பாவபலி யீதேகாண் மக்களின்
தக்கா செயலுக்காய் ஆடுபலி -மக்காள்


பலியிடும் போது அளவது சாறின்
பலிக்கேற்றாப் போலிடு என்றார் -பலிச்சாறு


மாடென் அரைப்படி ஆடுபடி மூன்றிலொன்று
ஆடின் சினைக்காற் படியாக -நாடோரே


பாசுகா மாதமுதல் நாளாம் பதிநான்கில்
பாசுகா ஆசரிக்கச் சொல்லிடு -பாசுகா


ஏழுநாள் அப்பம் புளிப்பின்றி செய்யச்சொல்
ஏழுநாளும் அப்பம் புசித்திடுவீர் -ஏழுநாள்


பாசுகா பண்டிகை நன்றே பதினைந்தில்
பாசுகா நன்னாள் முதலிலே -தேசத்தார்


கூடிவரச் சொல்லிடு ஓய்வுநாள் பாசுகா
கூடி யினத்தார்கொண் டாடுவீர் -கூடவே


மாதப் பிறப்பின் பலிபோலே அன்றிட்டு
வீதம் வகைசெய்வீர் மக்களே -மாதபலி


கூடவே காலைமாலை நற்பலிகள் தந்திடுவீர்
நாடது விட்ட நினைவாக -நாடோரே


ஏழுநாள் நித்தம் செலுத்திடுவீர் தீத்தகனம்
ஏழுநாள் பாசுகா பண்டிகையே -ஏழுநாளில்


காலைமாலை சேர்ப்பலி செய்திடுவீர் மக்களே
வேலைகள் ஏழில்செய் யாதோய்ந்து -சீலோரே


அந்நாட்கள் பின்னர் முதற்கனி தந்திடும்
அந்நாளில் கூடிநீர் ஆராதி -அந்நாளும்


வேலை செயவேண்டாம்; மாதப் பிறப்புபலி
சீலார் செயச்சொல் சிறந்தங்கு -மேலாம்


கனிநாளாம் அன்று செலுத்திடுவீர் தீயில்
கனிநாளும் நேரார் திருநாள் -கனிநாளில்


காலைமாலை சேர்ப்பலி செய்திடுவீர் மக்களே
வேலைகள் ஏதுஞ்செய் யாது

இனத்தொகை 54

எக்காளப் பண்டிகையின் நியமங்கள்


ஏழாந் திருந்திங்கள் முன்முதன்னாள் கூடிடச்செய்
வேழார் திருமக்கள் தூயாக -வேழாரோ


அந்நாளில் வேலைசெய்யக் கூடாதே எக்காளம்
அந்நாளில் மக்களும் ஊதுச்சொல் -அந்நாளில்


நல்மணமாய் காளையொன்றும் ஆடொன்றும் ஏழாக
நல்லாட்டுக் குட்டிகளும் சேர்ப்பலி -நல்மாவு


நெய்யிட்டு நன்றாய்ப் பிசைந்து தகிக்கச்சொல்
செய்யச்சொல் மாதப் பிறப்பினது -செய்பலியை


கூட இடச்சொல்வாய் சேர்த்தங்கு பானபலி
நாடவர் வார்க்கச்சொல் நேராக -சீடரை


காலைமாலை நற்பலி சேர்த்து தவறாமல்
சோலைநாட்டில் சீலார் இடச்சொல்வாய் -சீலாரே


ஏழாந் திருத்திங்கள் பத்தாம் திருநாளாம்
வேழார்க்கு கூடிவரும் நாளாக -வேழைபலி


மாதப் பிறப்பினதுப் போலே இடச்சொல்வாய்
வீதம் செயச்சொல் அவைகளை -மாதம்


திருயேழில் ஐந்துநாள் சென்றால் அவையார்
திருக்கூட்ட நாளாக சேர்ந்து -திருநாளில்


ஓய்ந்திருந்து அன்றும் தகனபலி தந்திடுவீர்
ஓய்வுநாளில் காளை பதிமூன்றும் -வேய்க்கடா


ஈராய் ஒருவயது மேக்குட்டி பத்தோடு
ஈரீராய் நெய்பிசைந்த மாவோடு -சேரங்கு


காலைமாலை நற்பலிசேர் வெள்ளாட்டு ஆண்கடா
சீலாக ஒன்றை இடுவித்து -சாலாக


ஈராம் திருநாளில் பன்னிரண்டு காளைகளும்
ஈராக ஆட்டுக் கடாவோடு -ஈரீர்சேர்


பத்தோடு மேக்குட்டி நெய்மா முறைசேர்த்து
அத்தோடு காலைமாலை நற்பலியும் -அத்தோடு


பானபலி எல்லாம் செலுத்திடுவீர் அன்றுத்தான்
பானபலி நெய்மா முறையாக -ஆனபடி


மூன்றாம் திருநாள் குறைப்பீர் ஒருகாளை
நான்கில் குறைப்பீர் ஒருகாளை -மேன்பலி


ஐந்தில் குறைப்பீர் ஒருகாளை ஆறிலும்
சேந்து குறைப்பீர் ஒருகாளை -தீந்தக


ஏழில் குறைப்பீர் ஒருகாளை யிட்டிடுவீர்
வேழாரே எட்டாம் திருநாளோ -வாழுமக்கு


சீர்நாளே ஒய்ந்திருந்து மாதப் பிறப்பினது
சீர்ப்பலியை இட்டிடுவீர் நன்றென -சீர்க்கர்த்தர்


உம்பலிகள் இட்டிடும் நன்முறை ஈதென
தம்மக்கள் நாட்டில் சிறப்பிடவே -அம்மானும்


சொல்லை திருவிதியாய்ச் சொன்னான்; திருச்சொல்லை
நல்லார் இசுரேலும் கேட்டு

இனத்தொகை 55

பெண்களின் காணிக்கைகள் பொருத்தனைகள் பற்றிய நியமம்


திருக்கர்த்தர் சொல்லிது கேளீரோ மூப்பர்
திருமோசே சொன்னான் விதியே -திருவிற்கு


காணிக்கை தந்திடுவேன் என்றுநா பேசிச்சொல்
காணிக்கை செய்தவ றாதுநீவிர் -காணியிலே


காணிக்கை செய்வேன் எனச்சொல் லணங்கவள்
மாணத் திருவிற்குச் செய்வேனென் -காணிக்கை


செய்ய மணமுடிக்கா பெண்ணின்சொல் தந்தைகேள்
செய்ய இயலாதென் சொன்னாலே -செய்நேமம்


விட்டவள் போனாலும் தீங்கில்லை; தந்தைகேள்
நட்டாண் கறைபேசாப் போனாலே -விட்டிடாது


செய்திடச் சொல்வாய்நீ நேமத்தை மாந்தனைச்
செய்மணப் பெண்ணென்றால் காணிக்கைச் -செய்சொற்கேள்


மாந்தன் தடுத்திட்டால் ஆங்குத் -தடுத்ததால்
மாந்தனால் தீங்கில் அவளுக்கு; -மாந்தன்


தடுக்க அவள்கணவன் செய்தால் விடுத்து
தடுக்கா திருந்தாலே இட்டு -நடுவில்


தடுத்திட மாந்தர் நிலையும் தடுக்கா
விடுத்தும் கொடுக்காது போனால் -விடுத்த


கடும்பழி மாந்தனின் மேலே; நடுவிலே
தள்ளப் படுபெண்ணோ கைம்பெண்ணோ -கள்ளமிலா


வாய்ச்சொல் படியேதான் செய்யச்சொல் பெண்டிரை
வாய்ச்சொல் மடந்தை முறை

இனத்தொகை 56

மீதியான் மீது போர்தொடுக்க கர்த்தர் சொல்ல இனத்தார் செய்தலும் கொள்ளையை பங்கிடுதலும்.


திருக்கர்த்தர் சொன்னார்சொல் மீதியான் தேசம்
திருவினம் சார்பாய் பழியை -திருமோசே


நீவாங்கிப் பின்னர் வழிவந்தோர் மூப்பரோடு
நீவைக்கப் பட்டு மரித்திட -நீவாங்கென்


மோசே இனத்தார்முன் சொன்னான் திருசார்பாய்
தேசமாம் மீதியானை தீர்க்கவே -தேசத்தார்


போர்வீரர் வாரும் இனத்திற்கு ஆயிரம்பேர்
போர்செய் நலமாண் சிறந்தங்கு -போர்வீரர்


பத்தும்சேர் ஈருமாய் ஆயிரம் அத்தனைபேர்
எத்தராம் மீதியான் மேற்போரில் -சித்தம்


இறைவன் நிறைவேற்ற ஆசன் மகனாம்
நிறைபின காசொடு கூட -நிறைபொன்செல்


ஐவரைக் கொன்றிட்டு கொள்ளையிட்டு வந்தனர்
தீவாயன் பேயோர்சேய் பீலேயாம் -ஐவர்சேர்


கொன்றனர் ஆங்கு இனத்தாரும் கொன்றுகொள்ளை
அன்றிட் டவர்வந் தனரினம் -அன்றவர்


கொள்ளையில் ஈராகப் பங்கிட ஒன்றவைக்கும்
கொள்ளையில் மீதிவீ ரர்க்குமாக -கொள்ளையைக்


காண்மோசே பெண்களை ஏன்விட்டீர் கொல்லாது
காண்பேயோர் சேய்பிலெயாம் சொல்லாலே -வீண்மக்கள்


ஈனர் விழச்செய்தார் ஆதலால் ஆண்கலவி
ஈனர்சேர் பெண்களை கொன்றிடுவீர் -ஈனரில்


பெண்களை விட்டுவிடும் உம்போ கமதற்காய்
பெண்களை வெட்டியதால் தீட்டாமே -பெண்ஆண்கள்


செய்கொலை தீட்டாமே எல்லாம் நெருப்பிட்டுச்
செய்செலா நீரால் கழுவிட்டு -மெய்யும்


தலைமேல் கழிநீரை இட்டுகழித் தீட்டை
நலமாடை ஏழில் துவைத்து -நலமான


கொள்ளையின் பங்கில் அவைப்பங்கில் லேவிக்கு
கொள்ளைபங்கில் வீரரின் ஆசனுக்கு -கொள்ளையில்


ஐம்பதில் ஒன்றாக லேவிக்கும், ஐந்நூறில்
தாம்மொன்றே ஆசனின் பங்கிடு -ஆம்நன்றாய்


ஆயிரம் ஈரோ டெழுபது மாடுகள்
வேயாத ஒன்றோ டறுபது -ஆயிரமாம்


நற்கழுதை ஆறு இலட்சமும் ஏழுபத்தும்
நற்றா யிரமைந்தாம் ஆடுகள் -நற்குல


முப்பத்தீ ராயிரம் ஆணறியா பெண்டிரும்
தப்பாது பங்கிட்டான் மோசேயும் -அப்போது


கர்த்தர்சொல் நின்றான் திருவங்கு ஆசனுக்கும்
கர்த்தர்செய் லேவிக்கும் தந்தபின் -கர்த்தர்முன்


ஆயிரம்பேர் நற்றலைவர் நூறுபேர் நற்றலைவர்
ஆயிரம் பன்னிரண்டு சென்றோம்யாம் -தேயாது


மீண்டோம் சிறப்பாய் எனவே பசும்பொன்னால்
காண்கொள் அணிகலன் ஈந்திட -காண்மக்காள்


பொன்னிறை காணீர் பதினாறு ஆயிரமும்
தன்சேர் எழுநூற்று ஐம்பதும் -பொன்சேக்கல்


பொன்வாங்கி நல்லினத்தார் ஞாபகம் செய்திட
பொன்னையவர் கூடத்தில் வைத்து

இனத்தொகை 57

ரூபன் காத் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரம் யோர்தானின் கிழக்கு கரையில் காணி பெறுதல்.


வெளிமேயும் மாக்களாம் ஆடுமாடு சீரார்
களிதேசம் வேண்டாம் இதுவே -அளித்திடும்


என்றே அவைமுன்னே சொன்னாரே காத்ரூபன்
வன்சொல்லெம் மோசே பகன்றனன் -என்சொல்வேன்


உம்தந்தை போலேதான் நீரும் இடையிலே
எம்நிலமென் போனால் இனத்தாரும் -நம்நிலத்தில்


பேர்மக்கள் போர்செய்யா விட்டார் தமரென்று
போர்தன்னில் போவர் மடிந்துமனம் -சீர்மக்காள்


நீர்செய்யீர் இத்தகைய வன்பாவம் வேண்டாமே
சீர்சொல்லக் கேளிரு மூப்பரும் -நேர்தவனே


எம்மக்கள் எம்மனைவி எல்லாரும் இங்கிருக்க
எம்மக்கள் முன்செல்வோம் போர்வீரர் -நம்மக்கள்


தம்நிலம் காணி பெரும்வரை நாங்களே
உம்உம் அதுநன்றே என்றுரைத்தான் -நும்சொல்


படிநடக்கா போனாலே போவீர்நீர் கானான்
அடிநிலம் தன்னிலே சொத்து -இடையர்சொல்


கேட்டு திருமோசே தந்தனன் காணியாக
நாட்டில் கரையாறு இப்பக்கம் -நாட்டாரில்


மாகீர் மனாசே குலத்தோர்வெல் கீலேயாத்
மாகீர் நிலமாக காத்ரூபன் -மாகீர்


உடன்சேர்த்து ஈரரை நற்குலத்தோர் ஆறின்
நடைக்கீழ் திசையிலே பெற்றார் -திடமாந்தர்


நாட்டை பிடித்து தொழுவங்கள் கட்டினர்
நாட்டின் பெயரையும் மாற்று

இனத்தொகை 58

இசுரேலரின் பயண விவரமும் எரிகோ அக்கரையில் வனாந்தரத்தில் கர்த்தர் தந்த கட்டளையும்


திருக்கர்த்தர் மோசே யிடஞ்சொன்னார் மக்கள்
திருப்பயணத் தின்விவரம் கையால் -திருமகனே


நீயெழுது; கட்டளை பெற்ற திருமகன்
வேயா தெழுதினான் ஆங்குத்தான் -தீயாம்


அடிமை எகிப்தின் கருநாடு விட்ட
அடியார் விடுதலை பெற்றார் -அடித்தார்


திருவும் எகிப்தின் தலைப்பிள்ளை அன்றே
திருமக்கள் விட்டார் எகிப்து -திருமக்கள்


விட்டநாள் சேய்தனை மக்களும் மண்ணிட
விட்டநாள் போனார் சிவக்கடல் -நட்டாரும்


ஒன்றாகச் சேர்ந்தே; திருவும் எகிப்தினது
ஒன்றுதவா தேவர் அழித்தாரே -ஒன்றாக


எண்ணிலா மக்கள் விடுத்தோம் எகிப்தினின்று
விண்ணவர் முன்செல்ல ராமசேசு -மண்விட்டே


எம்மிருவர்க் கைக்கீழ் இசுரேலும் வந்தனரே
தம்முதல் பாசுகா பின்புத்தான் -அம்மா


முதல்மாதம் பத்தோடு ஐந்தாம் திருநாள்
முதலாளர் நாட்டார்காண் விட்டு -முதலிறை


சீர்ப்பலத்த கைச்செய்கை யாலே இசுரேலர்
நேர்வேர் திருப்பயணம் சென்றனர் -சீர்மக்கள்


சுக்கோத்து சென்றடைந்து நின்றார் களைத்ததால்
சுக்கோத்து விட்டவர் ஏத்தாமில் -அக்கடா


என்றே களைப்பில் திருமக்கள் நிற்கவும்
வன்னரசு பின்னும் தொடர்ந்தனன் -அன்னாரும்


ஏத்தாம் வெளிவிட்டு ஈராத் திரும்பிட்டு
ஏத்தாம் வெளிபின்னே மிக்தோலில் -மேத்தவர்


சொல்படியே சென்றார் திருமக்கள், ஆழிமுன்
நல்லாரும் ஓய்வு பெறவிருக்க -சொல்படி


வன்னரசு பின்வர சொல்லவர் கண்போக்க
மன்னனும் கிட்டிச்சே ராதபடி -தன்னே


சிவந்த கடலும் இடைப்பிரிந்து போக
சிவந்த கடலைக் கடந்தார் -அவையோரும்


ஏத்தாம் தொடங்கி மலைசீனாய் வந்திட
மேத்தவ மக்களும் ஏழிடம் -மேத்தவர்


சீனாய் வனம்விட்டு ஏதோம் வனத்தின்ஓர்
போனார் இருபத்தி ஒன்றுநல் -போனயிடம்


ஓர்மலையில் ஆசரியன் ஆரோன் மரித்திட
ஓர்விட்டு சென்றார் திருவவர் -நேர்மக்கள்


ஏழிடம் பின்னர் எரிகோவின் அக்கரையில்
வேழார் இனத்தார் அடைந்தனர் -வேழார்


எரிகோ அருகே இறைவனும் சொன்னார்
திருமக்கள் கேட்க விதிச்சொல் -கரைக்கடந்து


செல்வீர் குடிகள் விரட்டுவீர் ஒன்றுவிடா
சொல்படி சீட்டுபோட்டு பங்காக -செல்லில்


ஒருவரும் விட்டுவைத்தால் அம்மாந்தர் ஆவர்
திருவிழக்க கண்ணிலே முள்ளாய் -கரைக்குடிகள்


உம்விலாவில் கூர்வேலாய் மாறி வதைப்பேனே
உம்மேல் அவர்திட்டத் தீங்கு

இனத்தொகை 59

ஒன்பதரை குலத்தாருக்கான எல்லைகள் மற்றும் கானான் தேசத்தை பங்கிட குலத்தலைவர்களை தேவன் பெயர் பெயராக தருதல்.


திருக்கர்த்தர் மோசேயை நோக்கி: மகனே,
திருவினத்தார் கேட்கச்சொல் நன்றே -திருவினம்சேர்


நற்றேசம் கானான் தருகின்றேன் உம்மினங்கை;
நற்றேச எல்லைகள் தந்தாரே -நற்றவரும்


தென்திசையில் எல்லையோ சீன்தொடங்கி ஏதோம்சேர்
அன்றியும் உப்புக் கடற்கடைசி -தென்னெல்லை


தென்புற அக்ராபீம் மேடுசுற்றி சீனும்போய்
தென்புற எல்லை தொடர்ந்தவர் -வன்வனமாம்


சீன்வனம்போய் காதேசு பர்னேயா ஆத்சாரும்
நன்றே அசுமோனா போயெகிப் -தின்னாறு


தென்திசை சுற்றி முடியும் கடலிலேதான்
தென்னெல்லை தந்தார் திருவங்கு -நன்றாம்கேள்


மேற்றிசைக்கு பேர்கடலே எல்லையாம் மேற்றார்சொல்
மேற்றசை எல்லை குறித்தவர் -மேற்றார்


வடக்கினது எல்லை பகன்றார் கடலின்
வடவெல்லை தானும் தொடங்க -வடக்கில்


கடல்முதல் ஓர்மலை ஆமாத் வழிவை
நடவெல்லை சிப்ரோன்போய் ஆத்சார் -கடையேனான்


தன்னில் முடியும் வடக்கெல்லை தானேயென்
நன்றாக எல்லைக் குறித்தவர் -அன்றியும்


நற்குறி ஆத்சார் கடையேனான் சேப்பாமை
நற்குறித்து ஆயின் கிழக்கிலுள்ள -நற்றேசம்


ரிப்லா முதலாக கின்னரேத் யோர்தானும்
உப்பாழி எல்லை கிழக்குதிசை -அப்போது


மோசே திருவினத்தார் நோக்கி: திருவினமே
தேசத்தின் எல்லைகள் கேளீரோ -தேசமது


ஒன்ப தரைக்குலம் காணியீதே நற்றேசம்
சொன்னான் திருயெல்லை கள்யீதே -நன்றாய்


மனாசேயின் பாதியோர் ரூபன்காத் பெற்றார்
தனதின்கண் காண்நன் னிலமே -அனைவரும்


கேளிரே எல்லையிது ஒன்ப தரைகுலத்தின்
கேளிர் செவிக்கேள் உரைத்தனன் -வேளை


திருக்கர்த்தர் மோசேயை நோக்கி: மகனே,
திருவினம்சேர் நன்னிலம் பங்கு -திருவிருவர்


யோசுவா ஆசன் எலியாசர் பங்கிடுவர்
தேசத்தை நன்றாக பத்துகுலம் -தேசத்தில்


ஒன்ப தரைகுலத்தோர் தன்னின் தலைவர்கள்
நன்றாகச் சொன்னார் திருவும்தான் -அன்றே


பெயர்தந்தார் சீராண்கள் தேசத்தார் பத்து
பெயர்பெயராய் மோசே எழுது

இனத்தொகை 60

லேவியர்களுக்காக நாற்பத்தெட்டு நகரங்களை இசுரேல் இனத்தின் காணியில் இருந்து பிரித்து தரச்சொல்லி, அதில் ஆறு பட்டிணங்களை அடைக்கலப்பட்டினங்களாக நியமிக்க கர்த்தர் பணித்தல்.


எரிகோ அருகே நதியோர்தான் மோவாப்
சரிசம நல்வெளியில் கர்த்தர் -சரியாணாம்


மோசே தனைநோக்கி: சொல்வாய் இசுரெலின
தேசத்தார் லேவிக்காய் நன்னகர் -தேச


இசுரேல் இனத்தாரின் காணியில் லேவி
இசைக்குல மாந்தர்க்கு தாவென் -றிசைக்குலத்தார்


பெற்றிட வேண்டிய நன்னகர்கள் நாற்பதும்
நற்றெட்டும் தானே நகர்எண்ணி -மற்றும்


வெளிநிலம்சேர் நன்னகர்கள் தந்திடச்சொல் சீராய்
வெளிநிலம் ஆயிரங்கை நீளம் -வெளிநிலம்


தென்மேற் வடகீழ் நகர்நடு வைத்தேசீர்
நன்றாய் அளவு முழமாக -அன்றியும்


மேய்ச்சல் நிலமாய் நகரவைச் சுற்றிலும்
மேய்நில மீரா யிரமுழம் -சேய்லேவி


மக்களுக்கு தந்திடச் சொல்வாய் குறித்தங்கு
தக்கார் சிறப்பாணை யிட்டாரே -தக்கவர்


அந்நகரில் ஆறு அடைக்கலஞ் சேர்நகரே
அந்தபடி கானானில் மூன்றாக -இந்தபுறம்


யோர்தானில் மூன்றே கொடுமின் அடைக்கலஞ்
சேர்நகர்கள் தன்னை குறித்திடு -சீர்நேர்


இசுரேல் இனத்தார் பெறும்பங்கில் தானே
இசைக்குல மக்கள் நகரை -இசைவாய்த்


தரச்சொல் நிறைபெற்றோர் பேராக மற்றோர்
தரச்சொல் குறைவின் படிதான் -வரையில்


அடைக்கல நன்னகருள் கொன்றிட்ட மாந்தன்
அடைக்கலமாய் சேரச்சொல் ஆங்கு -அடைக்கல


நன்னகர் கைப்பிசகாய் கொன்றோன் அடைக்கலமே
அன்றியும் திட்டகொலைக் கில்லைகேள் -வன்னாய்


எதிர்க்க முகாந்திர மின்றி எதிர்ச்சை
அதிர்வாகி கொன்றோன் அடைவான் -எதிர்பழி


வாங்கத் துடிக்கும் தமன்கை விழாவண்ணம்
தாங்கிடும் நன்னகர் தான்

இனத்தொகை 61

கொலைப்பழி தீர்த்தல் மற்றும் அடைக்கலப் பட்டிணங்களின் நியாயவிதிப் பிரமாணம்


மரவா யுதமோ இரும்பாலோ தட்டி
மரணம் வருமென் மரணம் -தரக்கொலைச்


செய்தோன் உதிரம் விழவேண்டும் நாட்டிலே
செய்ப்பழி வாங்குவோன் கையில்தான் -மெய்யாய்


மறைந்திருந்து மாந்தன் எதிரியைக் கொன்றால்
மறைந்திருந்து கொன்றவனைக் கொல்க -கறைநீக்கு


நாட்டுள் உதிரம் கறைசிந்தல் தன்னிற்கு
நாட்டில் உதிரமே மாற்றாமே -நாட்டில்


அடைக்கலம்சேர் மாந்தன் பழிதீர்க்க ஆகா
அடைக்கல நன்னகர் விட்டு -இடையிலே


வந்திடப் பார்த்து பழிவாங்கும் மாந்தனும்
அந்தவேளை கொல்பழி யில்லைகாண் -அந்தபடி


சான்றுகள் ஒன்றிற்கும் மேலாய் இருந்திட
சான்றுகள் கைபிசகில் கொன்றானென் -சான்றுகள்


சொல்படி கொன்றவனை நட்டான் பழிவாங்க
அல்லனை தாருமவைத் தீர்த்திட்டு -அல்லான்


அடைக்கலம் சேர்ந்தோன் அவையின்நற் தீர்ப்பில்
அடைக்கலம் சேர்ந்தோன் தவறில் -அடைக்கல


நன்னகருள் தானே தரித்திடச்சொல் தைலதலை
நன்னாசன் சாகும் வரைதானே -என்றேனும்


நன்னாசன் செத்தப்பின் காணிக்கு வந்திடலாம்
வன்னிலா கைப்பிசகாய் கொன்றோனும் -நன்னகர்


விட்டு கொலைப்பழி நீங்கிடும் அப்போது
நட்டார் கடைப்பிடியும் சீர்மக்காள் -நட்டாரே


வாங்காதீர் கொன்றவன்கை எப்பொருளும் ஈடாக
வாங்கிடச் செய்யாதீர் தீர்ப்புதான் -வாங்காதீர்


நன்னகர் விட்டுவெளி வந்திடவும் கைப்பொருளை
நன்னகர் தன்னில் தரித்திடச்சொல் -அன்றியும்


உம்நடுவே வாசம்செய் நற்கர்த்தர் யானேகேள்
எம்வீடாம் தேசத்தை தீட்டாக்கா -நும்செயலால்


நல்லுதிரம் சிந்திட்டால் நாடுபோகும் தீட்டாக
அல்ல தகற்றும் இனம்

இனத்தொகை 62

பெண்கள் பெரும் காணி குலத்தை விடாதிருக்க குலத்துள்ளேயே மணம்புரிய கர்த்தரின் கட்டளை


கானான்செல் யோசேப்சேய் நல்மனாசே மக்களவர்
மேனாணாம் மோசே யிடம்வந்து -மேனாணே


சீரவர் சீட்டுபோட்டு பங்கிடச் சொன்னாரே
நேராணே எம்வழக்கும் கேட்பீர் -கரைப்பின்


செலோபியாத்தின் பெண்களுக்கு காணிதர சொன்னீர்
செலோபியாத்தின் பெண்கள் குலவிட் -டலைந்தே


குலவேற்றில் காணிகொண்டால் யூபிலி போதும்
குலவேறாய் போகுமே பங்கு -குலங்கேள்


திருவவன் கர்த்தர்சொல் கேட்டு: குலமே
திருக்கர்த்த சொல்கேள் மணமாய் -திருக்குலம்


விட்டால் திருக்குல காணியது போய்விடும்
விட்டிவிடா தேயுள் மணம்செய்வீர் -விட்டிவிடா


தப்படியே நற்பெண்டிர் ஐவரும் தந்தைகுலந்
தப்பாது செய்தார் மணமுந்தான் -தப்பாது


காணி நிலம்வேண்டும் என்போர் குலத்துள்ளே
காணி யிருக்க மணம்செய்வீர் -மாணான்


எரிகோ அருகே சமவெளி தன்னில்
சரியாணாம் மோசேக்கு தந்த -சரிநேமம்


கட்டளைகள் தன்னை திருமோசே தந்திட்டான்
நட்டார்க்கு செய்ய விதி

இனத்தொகை 63

திருவிவிலிய இனத்தொகை நூலின் கலிவெண்பா முற்றிற்று


திருவிவிலிய இணை நூலின் கலிவெண்பா


மோவாப் சமவெளியில் மோசே பயண வரலாறு சொல்லுதல்.

மோவாப் சமவெளியில் மோசே திருவினத்தார்
தேவை பயண வரலாறு -தீவாயாற்

செத்தார் முறுமுறுத்த மக்கள் அனைவரும்
செத்தார் கிளைகளே கேட்டாரே -அத்தமர்

சேயீர் மலைவழியாய் ஓரேபு சேர்ந்தோம்நாம்
நேயர் பதினொரு நாட்பயணம் -நேயர்நாம்

ஊடுசென்றோம் காதேசு பர்னேயா விட்டுநாம்
நாடியோர்தான் அக்கரையைச் சேர்ந்திட -வாடாத

யோர்தானின் அக்கரையில் மோசே திருவினத்தார்
சேர்ந்தவரை நோக்கி பகன்றானே -நேர்வேர்

எசுபோனில் சீகோன் முறியடித்தோம் ஓக்கும்
திசைஅத்த ரோத்தில் விழுச்செய் -திசையோர்

திருவினத்தின் நற்கிளைகாள் கேளீர் திருவார்
திருச்சட்டம் சொல்கின்றேன் நானே -திருவும்

திருச்சட்டம் தன்னை விவரித்துக் காட்ட
திருவினம் சேர்ந்தங்குக் கண்டு -திருவினமே

ஓரேபில் தங்கியது போதும் இனத்தாரே
ஓரேப்பை விட்டுநீர் செல்லுவீர் -சீரோர்

மலைவிட்டுப் போம்கானான் ஐப்பிராத்து ஆறு
அலைவரை போவீர் இனத்தார் -நலமே

இதோகாண்பீர் தேசத்தை உங்கள்முன் இட்டேன்
அதேநுந்தை மூவர்க்கு வாக்கென் -அதேநாடு

தந்தேன்நான் உம்கையில் செல்லும்நீர் சீராக
தந்தையர்க்குத் தந்தவாக்கு ஈந்தேன்யான் -அந்தயிடம்

பாரம் தனியாக உங்களின் நான்சுமக்க
பாரும் இடையோர் இருக்கட்டும் -பாரஞ்

சுமந்திட ஆகாது என்னாலே ஏனென்
தமையர் பெரும்மே மடங்காய் -தமரே

சுமைசுமக்க நன்றே; இனத்தார் சரியென்
அமைத்திட ஞானியரை ஆங்கு -அமையினம்

விண்மீன்போல் மித்திரளோர் சொல்கேட்டுத் தீர்த்தந்தேன்
மண்மேல் திருச்சட்டங் கள்தானே -மண்ணிலே

தீர்க்கும் நலநீதி யோரிடஞ் சொன்னேனே
தீர்க்கும்நீர் செய்யாதீர் மாந்தனின் -சீர்முகம்

கண்டு; இறைவனின் சட்டங்கள் கைக்கொண்டு
மண்ணில் சரியாகத் தீர்ப்பீர்நீர் -மண்தலை

ஆயிரம் நூறுக்கு பத்திற்கு நற்றலைவர்
சேயோர்க்கு வைத்திட்டோம் ஞானியர் -சேயோரால்

செய்யா ததைக்கொண்டு வாருமே என்னிடம்
மெய்த்தேவன் கேட்டுப் பகர்வேன்நான் -துய்யாக்

கடினமாய் பாலையில் சேர்ந்துவந்தோம் நாமும்
கடிதாக காதேசு பர்னேய் -அடிதேசம்

போகும் வழியை அறிந்திட ஒற்றரை
போகவிட சொன்னீர் இனத்தாரும் -போகல்

சரிதான் விடுவோம் நலஒற்றர் என்றே
சரியாண்கள் பன்னிருவர் தேர்ந்தே -வரையேறி

போய்வாரும் சீர்தேசம் எப்படியோ என்கண்டு
காய்கனி நீர்வாரும் கொண்டென்றேன் -வாய்கேட்டு

பன்னிருவர் சென்றார் எசுகோல் வரையிலே
நன்னாடு என்றவர் சொன்னாரே -பன்னிருவர்

தன்னிலே பத்துப்பேர் உம்மை கலங்கடித்தார்
அன்னார் பெரியோ ரினத்தாரே -என்றுநீர்

கூடார முள்ளே முறுமுறுத்தீர்; கர்த்தரவர்
வீடில்லா விட்டாரே எம்மையிங்கு -நாடவர்

மிப்பெரியோர் தானே; அவர்கையில் சாவோமே
தப்பே விடுத்தோம் எகிப்ததனை -அப்பாடி

வானுயர் பட்டிணங்கள் வானுயர் மாந்தர்கள்
ஏனோக்கு மாந்தர்கள் என்றிருப்பர் -ஏனோ

இனவொற்றர் சொன்னார் இதயங் கலங்க
இனமக்கள் போனீர் அழன்றே -இனத்தோரே,

மோசேநான் சொன்னேன்: திருக்கர்த்தர் உங்கள்முன்
தேசத்தில் சென்று உமக்காக -நீசர்மேல்

போரிட்டுச் சாய்ப்பார்; அழலாதீர் மக்களே
சேருவோம் நாடு சிறந்துநாம் -வேராரே

கர்த்தர் திருவினமே கேளீரோ வானிறைவன்
கர்த்தரும் தந்தை சுமப்பதுபோல் -கர்த்தர்

சுமந்தாரே தீத்தூண் முகிற்றூணாய் வந்த
சுமந்தவரை நீரும் மறந்து -அமைதியாய்த்

தங்கிடமும் காட்டில் திருவவரே சொன்னாரே
அங்கேநீர் போனீரே நம்பாமல் -தங்களிடம்

வெஞ்சினம் கொண்டாரே கர்த்தரும்; அஞ்சியோர்
தஞ்சயிடம் போகார் இனிமேலும் -அஞ்சியோர்

நும்சொல் லதுஐயோ பிள்ளைகள் கொள்ளையாவர்
நும்சொல் செவிக்கேட்ட கர்த்தரும் -நும்பிள்ளை

கொள்ளையாகார் தானே; அவர்போவர் நாடதுள்
அள்ளக் குறையா வளநாடு -கொள்ளொற்றர்

பன்னிருவர் தன்னிலே எப்புன்னே சேய்காலேப்
நன்றே பகன்றான் அதனாலே -நன்னாடுள்

போவான் அவன்மட்டும் என்றாரே போமாட்டாய்
தீவனம் விட்டு மகன்நீயும் -தேவனும்

உம்பொருட்டு என்னையவர் கானானுள் போகாயென்
உம்மாலே தானே இழந்தேன்நான் -நும்சொல்லால்;

நூன்சேயோன் யோசுவா போவான் இனமுன்னே
நான்தேர்ந்தேன் என்றார் சிறந்தவர் -வான்சொல்லோ

செங்கடல் வந்தவழி போவீர் பகன்றாரே
செங்கடல் வந்தவழி போகாது -இங்கேயாம்

பாவம்செய் தோமே எனச்சொல்லி வீரர்கள்
தீவம்பாய் செய்போனீர் போர்செய்ய -தீவம்பே

அச்சமயம் யானும் திருவினார்ச் சொல்சொன்னேன்
அச்சமின்றி போகின்றீர் விண்ணாரும் -இச்சமயம்

இல்லை உமதிடையே; என்றும் துணிகரமாய்
வல்லார் புரிந்தீரே போரங்கு -கல்லாற்ப்

புறமோடும் தேனீப்போல் மக்கள் விழுந்தீர்
புறநாட்டு மக்களிடம் தோற்று -அறனே

இனம்செய்தோம் வன்பாவம் என்று அழுத
இனம்சொல்லைக் கேளா தவர்

இணை நூல் 1

தூயவரின் சொல்படி செங்கடலை நோக்கிநாம்
சேயீர் தனிலே திரிந்தோமே -தூயவர்

சொல்லும் வரைதிரிந்தோம்; சொல்வந்து சேயீரைச்
சொல்படி விட்டு வடதிசை -சொல்லாரும்

சேயீர் மலைநாடு ஏசா திருநாடு
சேயீருள் காணி கிடையாதே -சேயீர்

இனத்தாரோ அச்சப் படுவர் உனைக்காண்;
இனத்தார் விடுத்துச்செல் வீரே -இனத்தார்

மலைநாட்டில் ஊண்வாங்கி நீருக்கும் காசு
மலைநாட்டில் ஓரடியும் தாரேன் -மலைநாடு

ஏசா திருநாடே; கர்த்தர் அறிவாரே
தேசம்செல் நல்லாரின் பாடுகள் -ஏசா

வனம்வழியே வந்திடும் நல்லினத்தார் பாடு
அனைவரையும் செய்வித்த தேவன் -அனைத்தும்

அறிவாரே; ஏதும் குறைவின்றி வந்தோம்
செறிவாக நாற்பது ஆண்டு -நெறியாக

அந்தர வன்வெளியில் சென்றோமே சேயீரின்
வந்தநாம் ஏலாத் எசியோன்மேல் -அந்நாடு

மோவாபின் நாட்டின் வனம்வழி; கர்த்தர்சொல்
மோவாபை செய்யீர் இடும்புநீர் -மோவாப்நேர்

லோத்தின் இனமக்கள் ஆர்சீமை சொந்தமே
லோத்தின் இனக்காணி விட்டுவிடும் -லோத்தினம்

மேல்நீரும் போர்செய்யீர்; ஏனாக்கைப் போல்நெடி
வேல்ஏமி மக்கள் விரட்டினரே -வேல்கோல்கை

ஓர்சீமை வாழ்ஏமி மக்கள் மலைசேயீர்
பார்வாழ்ந்தார்; உம்மினம் போலேதான் -சீர்மகன்

ஏசா இனத்தார் விரட்டினர் ஏமியெனும்
பைசப் பிறப்பு களை

இணை நூல் 2

திருவவர் சொன்னார் நதியது சேரேத்
திருமக்கள் செல்வீர் கடந்து -திருச்சொல்

படியேநாம் சென்றோமே சேரேத் நதியை
கடந்து இனமக்கள் சேர்ந்தோம் -நடையாகச்

சேரேத் நதிகடக்க ஆயிற்று நாற்பதில்
சீராண்டு ஒன்றொடு ஒன்றுமாய் -சேராது

காதேசில் கர்த்தர் உரைத்தபடி போர்மக்கள்
தீதுசொல்லால் போயினர் மாண்டங்கே -வேதர்த்

திருக்கர்த்தர் சொன்னாரே ஆர்சீமை விட்டு
வரையம்மோன் சேர்கின்றீர் மக்கள் -வரையது

லோத்தின் இனத்தாரின் காணிதானே; ஆதலால்
தீத்தொன்றும் செய்யாது போமின்னே -தீத்தோன்

நதிஅர்னோன் நீர்கடந்து செல்மின் எசுபோன்
அதுவே அரசன் எமோரி -வதைவழி

சீகோனே; உம்கையில் தந்தேன் அவனைநான்
சீகோன் அழித்திடு நீவிர்தான் -தீகெனினும்

போர்விதி போர்செய்யும் முன்னே அறிவிப்பு
போர்செய்யா மக்கள் கடந்திடுவோம் -போர்செய்யா

ஏசாபோல் மோவாப்போல் விட்டுக் கடந்திட
தேசம் செலத்தா வழிசெல்வோம் -தேசத்தான்

சீகோனோ போர்செய்ய வந்தான் திருக்கர்த்தர்
சீகோன் மனதைக் கடினம்செய் -சீகோனை

ஆங்கே அழித்தோம்நாம் சொல்படியே செய்திட்டு
ஆங்கே குடிபுகுந்தோம் நாம்சிறப்பாய் -தீங்கில்

திருநமக்கு போர்செய்யீர் என்றே விலக்கம்
திருநாட்டை போர்செய்யா விட்டோம் -திருநாட்டில்

கீலேயாத் பட்டிணம் எல்கை வரையிலே
வேலாலே சாய்த்தோம் இனம்

இணை நூல் 3

பாசான் வழிபோனோம் பின்நாம் திரும்பியே;
பாசான் அரசன் எதிர்த்தங்கு -வீசைப்போர்

எத்ரேய் வரத்திருவோ: அஞ்சாதே தேசத்தை
எத்ரேயி போரில்நீ வெல்வாய்நீ -மத்தாண்

எசுபோன் அரசனாம் சீகோன்செய்ப் போல
வசைசெய்வாய் என்றார். அதுபோல் -இசைதேவன்

சொல்படி மீதி யிராமல் முறியடித்தோம்
வல்லாண் அரசெமோரி ஓக்பெயர் -மல்லாண்

அறுபதாம் நீள்மதில் பட்டிணம் பாசான்
அறுபது போக மதிலில் -நறுநகர்

பன்மடங்கே கொண்டோம்நாம் பாசானில் சீர்வெற்றி
வன்னரசன் ஓக்கை முறித்துநாம் -அன்னவர்சொல்

எல்லா மனிதர் அழித்திட்டோம் சீகோன்போல்
எல்லா உடைமை நமக்காக -அல்லார்போல்

கொள்ளையிட்டு அஃறிணை மாக்கள் நமக்காக
கொள்ளையிட்டோம் சீர்நகர்கள் நாம்தானே -வெள்ளாறு

யோர்தானின் இப்புற அர்னோன் நதிதொடங்கி
ஏர்மோன் மலைவரை தேசத்தை -சீர்நாம்

எமோரியர் ஈரரசர் வென்றோம்நாம் ஏர்மோன்
எமோரியர் சேனீர் அழைத்தார் -எமோரின்

சமனான நாட்டின் அனைத்து நகரும்
அமைந்திட்ட கீலேயாத் எல்லாம் -சமநகர்

சல்காயி, எத்ரேயி ஓகினது பாசானில்
நல்லார் பிடித்தோமே அன்றுநாம் -வல்லாண்

எமோரி அரசனாம் ஓக்கின் படுக்கை
அமைரப்பா; நீளகலம் கேள்மின் -இமைக்கும்

மனிதரின் கைமுழமாய் ஒன்பதிற்கு நான்கு
மனிதப் பிறவியற்ற வன்

இணை நூல் 4

காத்ரூபன் பாதி மனாசே குலக்காணி
மேத்தாறு யோர்தானின் இப்புறமே -மாத்தவர்

சொல்படி யானோ நதிகடக்க ஏலாதே
சொல்லவர் முன்செய்மன் றாடிக்கேள் -வல்செய்

இதுவரை காணச்செய் மெய்த்தேவன் நீரே
மதுபாலோ டும்நாடு செல்ல -விதியெனக்கு

தந்திடுவீர் நற்றேவா என்றேயான் கேட்டிட
முந்தி மறுத்தார் இறைவனும் -மந்தாண்

இனிமேலும் பேசாதே நாட்டுள் செலநீ
இனிசொல் சினமேற்ப் படவும் -நனிசொல்

இனிதவர் நீதி யெனவே விடுத்தேன்
இனியும் செலமுடியா நாடுள் -நனிநீ

இதுபோதும் நாட்டுள்ளே யோசுவா செல்வான்
அதனாலே வைத்திடு நற்கை -இதமவன்

மற்றும் யெபுன்னேசேய் காலேப் தவிரவும்
மற்றெல்லா நாட்டார் அழிந்தனர் -மற்றாராம்

நட்டார்க்கு நல்நாடு பங்கிடுவான் யோசுவா
நட்டாரை மேற்கொண்டு முன்செல்வான் - நட்டார்

இரண்டரை கோத்திர ஆண்களோ செல்வர்
நருநாடு மற்றார் கொள

இணை நூல் 5

பத்து கட்டளைகளை மீண்டும் நினைவூட்டி அடைக்கலப் பட்டிணங்கள் ஏற்படுத்தல்

இசுரேல் இனமே பிழைத்திருக்கத் தந்தை
இசுரேலின் தேவன் தருநற் -இசைக்காணி

தன்னிலே சேர்ந்து கடைப்பிடிப்பீர் என்சொல்லே
நன்றாம் நலநீதி என்றவன் -இன்றுநம்

தேவன் தரும்வாக்கில் ஒன்றும்நீ கூட்டாதே
தேவத் திருச்சொல் குறைக்காதே -தேவனல்லா

பாகால்பே யோனெனும் பேய்பின்னே சென்றமக்கள்
ஆகா தழித்தார் இறைவனும் -ஏகனவர்

தேவன் திருவிறை பற்றிய நீர்வாழ
தேவத் திருச்சொல்லைக் கேட்டேநான் -தேவச்சொல்

கட்டளை நீதியெனக் கற்பித்தேன் கட்டளைகள்
திட்டமாய்க் கைக்கொள் இனத்தாரே -சட்டங்கள்

கைக்கொள்வீர் கட்டளை நீதிகள் என்றென்றும்
கைக்கொள்தல் ஞானமும் நற்சான்றே -கைக்கொள்;

பலமக்கள் கட்டளைகள் நீதிகள் காண்பர்
பலமக்கள் கண்டு வியப்பர் - நிலத்தே

தொழுதிடும் போது நெருங்கிநிற்கும் நம்மின்
தொழுவிறைப்போல் பூமி தனிலே -தொழுவிறை

யாருண்டு? இந்நாள்போல் கட்டளை பெற்றவர்
யாருண்டு இப்புவி மீதும்காண்? -சீரவரை

ஓரேபில் நீகண்டாய் நல்லிறையின் நல்மகிமை
ஓரேபில் கார்முகில் மத்தியில் - சீரவர்

கண்டாய் எரிதழலில் கேட்டாய் ஒலிதனை
கண்டிலைநீ யாதுருவம் அங்குத்தான் -அண்ணாரும்

ஓரேபில் கற்பலகை ஈராகத் தந்தாரே
சீரவர் பத்தாகக் கட்டளை - சீரவர்

சொல்தனைக் கைக்கொண்டு கற்பி வழியார்க்கு
சொல்தனை மாறாது நீயென்றும் -நல்லூராம்

ஓரேபில் நீகண்ட நல்லிறைக்கு யாதுருவம்
சீரவர்க்கு ஆணோ யிலைப்பெண்ணோ - சீரவர்க்கு

செய்யாதே மாக்களோ அஃறிணையின் வீணுருவம்
செய்யாதீர் செய்கைக்குச் சீரின்றி -பொய்யூர்

எகிப்தென்னும் எஃகிரும்புக் காளவாய் விட்டுத்
தகைச்சேர் இனத்தை எடுத்தார் - நகைப்பிலா

தென்னையோ உங்கள் நிமித்தஞ் சினங்கொண்டு
நன்னாட்டில் சேராய் பிழன்றோனே -நன்னாடு

ஆதலால் நான்வர மாட்டேன் நதியின்மேல்
ஆதலால் நல்லினமே செய்வீர்நீர் -போதனை

ஏதும் தவறாதுக் கைக்கொள்மின் செய்யாதீர்
ஏதும் சிலையுமக்கு வீணாக -வேதன்

எரிச்சலுள்ள நற்றேவன் நம்மவரே தீயாம்
எரிச்சலூட்ட நீரும் சிலைசெய் -திரிந்திட்டால்

விண்பூமி சான்றாகும் உம்மெதிராய் என்றென்றும்
விண்வழி விட்டுப் பிழையாமே -விண்சொல்

பிழன்றுநீர் போனால் செலும்நாடு விட்டு
பிழைச்செய் இனத்தார் பழிபோம் -வழியார்

சிலையை வழிபட்ட காரணத்தால் போவர்
அலையடித்த மண்போற் சிதறி -பலவாய்ப்

பலுகிய வெண்ணார் அலுகிப்போம் நாட்டில்
அலுகி மரச்சிலை முன்னே -இலைபோல்

எலும்பாகிப் பின்னர் இறைவா எனநீ
நிலையில் அழைக்கவும் கேட்பார் -நிலையில்

முழுமனதும் நல்முழு வுள்ளுணர்வுந் தேட
வழுவை இரக்கத்தால் மன்னித் -தழுவ

அழுமுனை தாய்தேற்று மாப்போல் இறைவன்
கழிவிரங்கிச் செய்வார் நவின்று -குழந்தாய்

மறவார் உடன்படிக்கை நுந்தைக்குச் செய்தார்
மறந்தால் கடைநாளில் நீதி -மறவினத்தார்

பின்தொடர்ந்த தொல்லைகள் தன்னிலே தேடவும்
என்றும் விடாரேநுன் கைதன்னை -கன்றே

உருவாக்கி நீபிறந்த நாள்முதலாய் இங்கே
உருச்செய்த ஆண்டவர் தீயில் -உருவிலா

மெய்ச்சத்தம் கேட்டதுண்டோ கேட்டார் உயிரோடு
மெய்யாய் இருந்ததுண்டோ கேள்மின்னே -மெய்யிலார்

சோதனை மண்ணில் அடையாளம் மாபெரு
சாதனையாய் வேறோர் இனமக்கள் -வேதனை

விட்டு எகிப்தினின் வந்த வகையுண்டோ
நட்டார் இனம்தன் தெரிந்துகொள் -வீட்டிடாதே

கர்த்தர் ஒருவரே நற்றேவன் வேறொருவர்
கர்த்தரல்ல என்றுநீ கண்டங்கு -கர்த்தரே

தேவனென்று உன்மனம் நித்தம் உணரவே
தேவன் அளிக்காட்சி கண்டாயே - தேவனவர்

கற்பிக்க விண்ணின்றும் மண்ணிலே தீநடுவும்
நற்றேவன் பேசுவதை நீகேட்டாய் -நற்றினமே

நுந்தையர் அன்புசெய்த காரணத்தால் நற்றேவன்
அந்தபடி நும்மை தெரிந்துகொண்டு -விந்தையாய்

தம்முகமுன் தம்மிகு வல்லமைக் கொண்டவர்
தம்மினம்மேல் அன்புசெய்து கொண்டுவந்தார் -அம்மக்கள்

வீடெனச் சொல்லிட நும்மை விடபலத்த
நாடவர் தன்னை அழித்திடுவார் -காடோ

உயர்வானம் தாழ்பூமி எங்கிலும் கர்த்தர்
உயர்தவர் ஆதலால் தானே -துயர்நீக்கும்

நற்றேவன் சொல்லும் உயர்நீதி கைக்கொள்வீர்
நற்றேசம் வாழச் சிறந்துநீ -நற்றினம்

ரூபனும் காத்தும் மனாசே அரையினமும்
தாபரித்த கீழ்த்திசையில் மோசேயும் -கோபத்தால்

தீங்குசெய்யா நற்றார்செல் பட்டிணம் ஏற்படுத்தி
தீங்குசெய்தஞ் சம்புக மூன்று

இணை நூல் 6

பத்து கட்டளைகளை தேவன் இசுரேல் இனத்தார் செவிகேட்க சொல்லுதல்

இசுரேல் இனத்தார் அனைவரை மோசே
மிசையில் அழைத்து பகன்றான் -இசுரேல்

இனத்தாரே கேள்மின் இறைக்கட் டளைகள்
தினம்கைக்கொள் வீர்நீர் சிறந்து -இனத்தாரே

ஓரேபில் நம்மோடு தேவன் உடன்படிக்கை
நேரவர் செய்தார் சிறந்தவரும் -சீரவர்

தந்தையர் கைச்செய்யா நம்கையில் செய்தாரே
விந்தையாய் விண்ணார் சிறந்தவரே -விந்தையாய்

தேவன் மலைமேலே தீயினின்றுப் பேசினார்
தேவன் முகமுகமாய் பேசினார் -தேவன்சொல்

எம்மிடம் நீர்தெரி விக்க நடுநில்லும்
எம்மைத்தீ போடும் அழித்திடுமே -அம்மானும்

கட்டளைகள் தந்தாரே பத்து சிறப்பாக
கட்டளைகள் உங்கள் செவிகேட்க -இட்டவர்

ஒன்றையும் கூட்டாது கற்பலகை தன்னிலே
நன்றாகத் தந்தார் இறைவனும் -நின்றநீர்

குன்றதில் குன்றாத தீக்கண்டு உம்மூப்பர்
குன்றாத நம்தேவன் மாட்சிமை -நன்றாக

எம்கண்கள் காணகாட்ட, அன்றியும் போவோமே
அம்மலை தீயில் அழிந்தெனவும் -எம்மானாம்

விண்தேவன் தீயினின்று பேசியதை கேட்டும்யாம்
மண்ணழியா தேயிருந்த நன்வியப்பே -விண்ணார்சொல்

தன்னைத் தொடர்ந்துயாம் கேட்டால் மரிப்போமே
என்றார்கள் மூப்பர் மனந்திறந்து -இன்று

உயிருள்ள தேவன்சொல் தீயினின்று பேச
உயிரோடே யாருமிச் செய்தி -வியச்செய்கை

நீர்கிட்டிச் சேருமின் விண்ணார் இடத்திற்கு
நீர்வந்து சொல்லும்சீர் சொல்தன்னை -சீர்சொல்ல

நீர்சொல்லும் விண்ணார்சொல் யாம்கேட்டுக் கைக்கொள்வோம்
நீர்சொன்ன சொல்கேட்டு கர்த்தரும் -சீர்சொன்னார்

என்றாலும் கட்டளைகள் கைக்கொள்ள நல்லிதயம்
என்றும் இருப்பின் நலமென்றார் -அன்றங்கு

கூடத்திற் செல்மின்நீர் என்றாரே கர்த்தரும்
நாடதில் நன்றாக வாழ்ந்திட -நீடித்து

கட்டளை நன்னியதி யெல்லாம் உனக்குயான்
சட்டமாய் தந்திடுவேன் இன்றென்றார் -திட்டமாய்

தந்திடும் நற்றேசத் தில்வாழ நன்னியதி
தந்தார் வழிவழுவா கைக்கொள்மின் -அந்நியதி

நீரும் இடவலம் சாயாதீர்; செய்தாலே
நீரும் சுகித்து பிழைத்து

இணை நூல் 7

கர்த்தருக்கு கீழ்படிந்து அடையாளங்களாக கையிலும் கண்கள் நடுவிலும் கட்ட விதித்தல்

தேவனாம் கர்த்தருக்கு நீயஞ்சி உன்வழியும்
தேவனுக்குக் கீழ்படிந்து கைக்கொண்டு -தேவன்

உனக்களிக்கும் நாட்டிலே கட்டளைகள் சட்டம்
தினஞ்செய்ய நீதி இவைகள் -இனமே

இசுரேல் இனமே நலமாய்நீ வாழ
திசைதனில் பால்தேன் வழியும் -மிசைநாட்டில்

நன்றாய் வளர தரும்சட்ட திட்டங்கள்
என்றும்நீ கைக்கொள் சிறந்தவை -தன்னே

மனம்பலம் ஆன்மா எனும்மூன்றும் நன்றே
தினம்முழுதாய் அன்புசெய்வீர் தூயர் -தனைநீரும்

இக்கட் டளைகளை உன்வழிதோன் றல்கட்கு
தக்க விதம்போதிப் பாய்நீயும் -மக்களோடு

வீட்டில் அமர்ந்தாலும் புல்வெளியில் சென்றாலும்
வீட்டில் படுத்தாலும் கண்விழித்தும் -காட்டில்

தருமிந்த கட்டளைகள் நீபேசி கைம்மேல்
சிரசிலே கண்நடுவே கட்டு -கரத்தில்

பெறுமிவற்றை வீட்டின் நிலைவாசல் எல்லாம்
இறுமாப்பாய் நீயும் எழுது -சிறந்ததாம்

நன்னாட்டில் கட்டா நகருள் நடாவளங்கள்
தின்றதும் நீர்மறவா தீர்நீதி -என்றென்றும்

தேவனாம் கர்த்தருக்கே ஆரா தனைசெய்வீர்
தேவன் அவர்பேரில் ஆணையிடு -தேவன்

உனைசினங் கொண்டு அழியா திருக்க
வினைசெய்யீர் பொய்யைத் துதித்து -நினைப்பீர்

அழுக்கா றுடையவர் கர்த்தர் பிறரை
வழுவிப்பொய் போற்றாதீர் நீரே -வழுவியும்

முன்னோர்கள் மாசாவில் சோதித் ததைப்போலே
என்றும்நீர் செய்யீர் பிழன்றும்தான் -என்றேனும்

தோன்றல்கள் ஏனிவைச் செய்கின்றீர் என்கேட்டால்
ஆன்றோர் அடிமைகளாய் நாட்டிலே -ஏன்ஏன்ஏன்

என்றலற, கர்த்தர் பலத்த கரங்கொண்டு
இன்றிருக்கும் சேர்த்தார் இடமிதில் -மேன்மக்கள்

தந்தையர்க்கு ஆணை யிடுத்த நலநாடு
விந்தையாய் கையளித்தார் நற்றேவன் -அந்நாட்டில்

நின்று நிலைத்திட அஞ்சிநாம் கைக்கொள்வோம்
என்றுசொல் நீதி யதே

இணை நூல் 8

இறைவன் தரும்நல் பிழைத்துப் பெருக
இறைநேமம் கற்பனைகள் கைக்கொள் -இறைவன்

சிறுமைப் படுத்தி நடத்திய எல்லா
பெறுவழிகள் தன்னை நினைப்பாய் -குறைவில்

அறியாத மன்னாவால் ஊண்தந்தார் கர்த்தர்
அறியீர் இனத்தாரோ விந்தை -யறியாரே

தந்தையர் விண்ணூண் தனையுலகில் விண்ணின்று
விந்தையாய் பெய்ததே ஊணுணக்கு -விந்தைப்

பெறுநற் றிருதேசம் வாழேழு மக்கள்
அறுநெற் பதர்ப்போலத் தூற்றி -வெறுஞ்சிலை

பீடந் தகர்த்து சிறிதாய்த் துரத்திடு
நாடதில் வாழ்வோர் விலக்கிடு -நாடதில்

ஏத்தெமொரி பெர்சி கிருகாசி கானானி
தீத்தார் எபூசியும் ஏவியென் -தீத்தேழு

மக்கள்வாழ் தேசத்தை கர்த்தர் உனக்களிக்க
மக்கள்செய் தீய தவிர்த்திடு -மக்கள்

பலமிகு மக்கள் இனத்தார் சிறியோர்
பலமிலை என்றே மனதில் -அலைந்தால்

பலமிகு தேசம் எகிப்திலே கர்த்தர்
பலச்செய்கை நீகொள் நினைவு -பலரோ

மலைதலையாய் ஆறுகள் ஊற்றுகள் கொண்ட
நலகாணி தன்னிலே பள்ளம் -சிலதலை

ஆற்றிற்கு அத்தியொடு நல்மரங்கள் பற்பல
நாற்றந்தேன் தேசமது காண்பாய்நீ -தேற்றி

வயிறார உண்டபின் போற்றுவாய் கர்த்தர்
நியமங்கள் கற்பித்தேன் இன்று -நயமாக

எச்சரிக்கை கைக்கொள்ள கொள்வாய்நீ கட்டிய
மச்சுவீடு தன்னில்வாழ் போதுத்தான் -மிச்சப்

புவிதனில் பேர்மக்கள் என்றோ தெரிந்தார்
புவிசெய் திருக்கர்த்தர் உன்னை -புவியில்

சிறுமக்கள் என்றாலும் தம்தூ யினமாய்ச்
சிறியோரை கர்த்தர் தெரிந்து -அறிவிக்கும்

கற்பனை நேமங்கள் அஞ்சிநீ கைக்கொள்ள
கற்பிக்கின் றேன்இன்று இங்கேநான் -கற்பனைகள்

சொற்கள் மறவாதே மக்களே எச்சரிக்கை
தக்கமேன் மையில்நீ தாழ்த்திடு -தக்கதாகப்

பின்னாளில் நன்மை பயக்கவே அந்நாளில்
தன்மக்கள் சோதித்தார் நற்கர்த்தர் -வன்தீய

தீப்பாம்பு தேள்பல காத்தவர் பாலையில்
மேப்பாறை நீர்வரச் செய்தாரே -தீப்பிழை

பெண்கொடீர் பெண்கொள்ளீர் அவ்வேழு மக்களிடம்
பெண்கொண்டு பெண்கொடுத்தால் விட்விலகப் -பெண்டிர்

வெறுஞ்சிலைகள் போற்றிடச் செய்திடுவர் தீதே
வெறுத்தே அழித்திடுவீர் வேரும் -வெறுக்கும்

வெறுஞ்சிலைகள் தன்னைநீ பின்பற்றிப் போனால்
நறுதேவன் உன்னை அழிப்பார் -சிறுவன்நன்

சான்றாகச் சொல்கிறேன் இன்று எனவங்கு
மேன்மாந்தன் மோசே உரைத்து

இணை நூல் 9

இந்நியதி தன்னைநீ கைக்கொண்டால் நற்றேவன்
தந்தையர்க்கு கையளித்த ஆணையாம் -தந்திடுவேன்

நற்றேசம் என்றயித் தேசத்தில் ஆண்பெண்ணில்
சற்றும் மலடிலாது வாழ்வீரே -மற்றும்

அடிமை எகிப்தில்நீ கண்டத்தீ நோய்கள்
கொடிதே அவைகள் பகைக்கு -அடச்செய்வார்

பேரன்பு கொண்டே உனைமீட்டார் கர்த்தரவர்
பேரேழு மக்களை நீக்கிடு -சீராக

இந்நியதி தன்னைநீ கேட்டுக்கைக் கொண்டிட
தந்தையர்க்கு வாக்களித்த நல்லிரக்கம் -தந்திடும்

நற்றேசத் தில்நும்மை எல்லோரைக் காட்டிலும்
நற்பேறு பெற்றிடுவாய் நீயங்கு -சற்றும்நீ

அவ்வேழு மக்களின் பேய்ச்சிலைகள் போற்றாதே
அவ்வாறு செய்வது கண்ணியே -அவ்வேழோர்

மேன்மக்கள் என்றே மனதலைந்தால் பார்வோனும்
கோன்மக்கள் வீழ்ச்சி நினைந்திடு -மேன்மக்கள்

அஞ்சாதீர் எம்மக்காள் மேம்போக்காய் மற்றபடி
அஞ்சும் இனங்கள் எகிப்தைப்போல் -பஞ்சில்தீப்

போலழிவர் ஓடி ஒளிந்திடும் சிற்றாரை
சோலைக் குளவி அழித்திடும் -சீலோர்

உடன்படிக்கை செய்யாதீர் அவ்வே ழினத்தில்
திடனில் சிலைகளை தீயில் -சுடெரி

கடையோர் எனினும் எமக்குத்தூய் நற்றே
உடன்படிக்கை மீறா யிறைவன் -கடையோர்

நிறையன்பு கூர்ந்து நியமங்கள் கைக்கொள்
இறைவனார் ஆயிரம் தோன்றல் -நிறைகாத்து

தம்மேல் பகைசெய்வோர் தம்மை அழிப்பவர்
நம்மிறை என்றுணர் வாய்நீயே -தம்மே

வகைவகை நெல்லும் வகைவகை நெய்யும்
வகையாய் கனியும் வளமாய் -வகைவகை

ஆவினம் ஆட்டினம் நேமங்கள் கைக்கொள்ள
தேவன் அருள்வார் சிறந்தவர் -தேவன்செய்

கண்கண்ட மேற்செயல்கள் எல்லாம் உணர்ந்திரு
கண்காண் இனத்தார் அனைவரை -கண்காணா

நல்லிறை கொஞ்சங்கொஞ் சம்மாய் விரட்டிட
அல்லா தழிக்காதீர் சேர்த்துநீர் -வல்லார்

ஒருமிக்க மக்களை சேர்த்தழித்தால் அங்கு
விரைவாய் வனவிலங்கு மண்டும் -திருவின்சொல்

கேட்டு விரட்டிடு கொஞ்சம்கொஞ் சம்மாக
கோட்டெல்லை விட்டுக் கலங்குவர் -நாட்டதின்

ஏழினத்தின் தீயரசர் கைக்கொடுப்பார் தேவனவர்
ஏழும் அழித்துநீ தீருமட்டும் -ஏழில்

எவரும் எதிர்த்திடார் உன்னை கலங்கி
எவரோ யிவரென்று அஞ்சு -அவரின்

சிலைகள் அணிந்த அணிகலன்கள் எல்லாம்
இலைசீர்ப் பொருளது தானே -சிலையணி

பொன்னும் அணிவெள்ளி யும்தீ அருவருப்பே
நன்றேசீ யென்று விடுத்திடு -நன்றே

சிறுமைப் படுத்தி இறையுன்னை சோதித்
தறிந்தார் மனதுனதை கைக்கொள் -அறிவாயோ

அன்றோ எனநாற் பதுஆண்டு பாலையில்
நன்றாய் அவரும் நடத்தினார் -அன்றோ

சிறுமைப் படுத்தி பசியால் சிறுத்து
சிறப்பாய் உணர்த்த இறைசொல் -சிறப்பால்

நிறைவாழ்வு பெற்றிடுவான் ஊண்மட்டும் இல்லை
குறைவில்லா சொல்லே நலமாம் -சிறைவிட்டு

பாலையில் நீநடந்த நாற்பது ஆண்டுகள்
ஆலையில் நெய்தாயோ ஆடைதனை -பாலை

நடந்தும் கழல்வீங்கா சென்ற வியப்பு
நடைப்பயணம் நல்ல படிப்பு -கொடையாகக்

கற்பிக்கும் தந்தைபோல் கற்பித்தார் நற்றேவன்
கற்பனைகள் கைக்கொள்வாய் என்றென்றும் -நற்றது

காணி மலைகளும் ஆறுகளும் பல்வளமும்
காணதில் இல்லை குறைவேதும் -காணியில்

நெல்லொடு நற்கோ துமையோடு நெய்க்காக
நல்லொலிவம் மாதுளம் குன்றிலே -நல்ல

கணிமங்கள் சீர்நிறை நாடது கேளாய்
அணிசேர் இனமே சிறப்பு -கணிம

வளமிக்க நாட்டில் வயிறார உண்டு
வளம்பல பொன்வெள்ளி சேர்த்து -வளங்களால்

மேட்டிமை கொள்ளாதே என்கையால் ஆனதென
நாட்டுள் உரைக்கா திருந்திடு -நாட்டுள்சேர்

தந்தையர்க்கு இட்ட உடன்படிக்கை மீறாமல்
இந்நாளில் கைப்பெலனை தந்தாரே -விந்தை

இறையோனை விட்டுநீ வீண்சிலைகள் பின்னே
குறைச்சென்றால் போவீர் அழிந்து

இணை நூல் 10

இசுரேல் இனமேகேள் யோர்தானைத் தாண்டி
திசைமேற்கு நாட்டிற்குப் போவாய் -மிசைநாட்டில்

விண்ணுயர மேன்மதில்கள் வீழ்த்துவாய் மாமக்கள்
மண்விட்டு நீயும் விரட்டிடு -மண்ணிலே

மாமக்கள் ஏனாக் மனிதர்முன் நிற்பார்யார்
தீமக்கள் மேன்பலத்தின் சொல்லறிவாய் -மேமான்

இறைவன் அவரே இனமுன்னே செல்வார்
இறையழிப்பார் தேவன் விரைந்து -இறைவனார்

தேவன் குறையோர் துரத்த மனதிலே
மேவியென் நீதியால் ஆனதெனக் -கூவி

சிலிர்க்காதே நாட்டார் குறைநீதி யாலே
அலைய விடுத்தார் இனத்தை -இலாதவரை

நாட்டார் குறைநிமித்தம் தேவன் விரட்டுகிறார்
கேட்டின் இனங்களை நீயறி -வீட்டாரே

நம்தந்தை முன்னோர்க்கு செய்த உடன்படிக்கை
தம்மை விடாரதனால் தந்தாரே -எம்மக்கள்

நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்களினம்
நீங்கள் எகிப்தினின்று வந்தநாள் -தாங்காது

பேசிய சொற்களால் தேவன் அழித்திடுவேன்
பேசியோரை ஓரேபில் அன்றுத்தான் -மாசிலா

நாற்பது நாட்கள் புசியாது நீரருந்தா
நூற்றேன் திருநோன்பு குன்றதில் -மேற்றவர்

கைவிரலால் தானே எழுதிய கற்பலகை
தேவன் மலைமேலே தந்ததும் -தேவனில்லா

வார்ப்பித்த கன்றை மலையடியில் தீச்செய்ய
நேர்விட்டு உன்மக்கள் வீண்சிலையை -வேர்வெட்டு

என்றவரை கர்த்தாவே மன்னியும் என்றுசொல்லி
மன்றாட்டு ஏறெடுத்தேன் நான்

இணை நூல் 11

உடன்படிக்கை கற்பலகை தன்னில் எழுத்து
உடன்படிக்கை உங்களிடம் செய்து -திடன்சொற்கள்

தானே அளித்தாரே நீரோ அதைவிட்டு
ஈனராய்ச் சென்றீர் விரைந்துநீரே -நான்பெற்ற

கற்பலகை கையிலேந்தி கீழ்வந்து கன்றுகண்டு
கற்பலகை கைஓங்கி கீழுடைத்து -அற்றச்

சிலையைப் பொடிப்பொடியாய் போக்கி சிலைப்பொன்
மலையாற்றில் நானும் கலந்து -மலையிலே

மன்றாட்டு செய்யநான் நோற்றேன் திருநோன்பு
மன்றாடி தேவா எகிப்தியர் -அன்றோ

பரிதாபம் நாட்டாரை பாலை அழித்தார்
பரிதாபம் என்றுரைப்பர் கீழாய் -தெரிந்தவன்

ஆரோன் குறைமகன் செய்த குறைக்காக
ஆரோனை நீங்கழிப்பேன் என்றதும் -ஆரோன்

திருமகனுக் காக அடியேன்மன் றாட
திருவிடுத்தார் அன்று சினத்தை -செருக்காய்

பலமுறை செய்தீர் எதிராய் கலகம்
பலமுறை சொல்லெதிர்த்து போனீர் -கலக

மனிதர் உமக்காக நாற்பதுநாள் நோன்பில்
முனைந்து புரிந்தேன்மன் றாட்டு -மனிதரின்

ஆண்டவரே, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின்
ஆண்டவரே தந்தையர்க்கு செய்யிரக்கம் -ஆண்டவரே

ஐயா இசுரேல் உமதின் திருவினமே
ஐயா இரங்குவீர் இன்றுநீர் -வையக

ஆண்டவரே, மிப்பெரியக் கைக்கொண்டு கொண்டுவந்தீர்
ஆண்டவரே வாக்குதந்த நல்லிடத்தில் -ஆண்டவரே

உம்மின் இசுரேல் முரட்டைநீர் காணாது
உம்மிரக்கத் தாலிரங்கு வீர்

இணை நூல் 12

இறைவனின் கட்டளை வந்ததே மோசே
இறைசொல் பலகைகள் ஈராய் -இறைதந்தார்

மக்கள் குறைவினால் போட்டுடைத்தாய் குன்றடியில்
மக்களுக்கு தந்தநற் சொல்லது -தக்கதாய்

நான்தந்த கற்பலகை போலே எடுத்துவா
நான்தந்த சொற்களை மீண்டுமாய் -நான்தருவேன்

என்றார் இறைவனார்; சேர்த்தே மரப்பெட்டி
ஒன்றும்செய் என்றார் இறைவனும் -நன்றென

சொல்படி நான்செய்து குன்றின்மேல் ஏறினேன்
சொல்தந்தார் விண்ணவர் முன்போலே -சொல்வந்த

நல்வகை தீநடுவில் உம்மோடு பேசியதே
வல்லவர் தந்தார் இறைச்சொல்லை -வல்லவர்

தந்ததை குன்றில் இருந்து எடுத்துவந்து
அந்தப் பலகைகள் தன்னைநான் -இந்த

மரப்பெட்டி தன்னில் இடுவித்தேன் சித்தீம்
மரப்பெட்டி தானே யது

இணை நூல் 13

இனத்தார் பயணித்து மோசேரா வந்தால்
இனத்தின் முதல்குரு ஆரோன் -இனத்தான்

மரணிக்க ஆங்கே எலியேசர் ஆனான்
குருவாக கர்த்தரின் முன்நில் -திருமுன்

இனத்தார் பயணித்து குத்கோதா சென்று
இனத்தார் பயணித்து யோத்பாத் -இனமடைந்த

அக்காலத் தில்தானே லேவி குலத்தாரை
எக்காலம் தேர்ந்தார் இறைவனார் -தக்கவர்

லேவி குலத்தாரை தேர்ந்தார் இறைவனார்
லேவி உடன்படிக்கை பெட்டியை -மேவிச்

சுமக்க இறைமுன்னே நின்று துதிக்க
உமைவாழ்த்த தேர்ந்தார் இறைவன் -சுமந்து

இறைமுன்னே போற்றும் சிறப்போடு யானே
குறையில்லா சொந்தம் குலமே -நிறையார்க்கு

செல்தேசம் தன்னில் இலைகாணி என்றென்றும்
நல்லவர் கர்த்தரே காண்

இணை நூல் 14

முன்போல நாற்பதுநாள் குன்றின்மேல் மன்றாட
என்மன்றாட் டையவர் கேட்டங்கு -உன்னை

அழிக்காமல் விட்டார் இறைவனார் பின்னும்
வழிசெல்வாய் முன்னே உரைத்து -செழித்திட

கர்த்தருக்கு அஞ்சி அவர்சொல் வழிநட
கர்த்தர் எதையேனும் கேட்டாரோ -கர்த்தரை

சேவித்து போற்றி முழுதாய் மனதில்
முழுகற் பனைபடி நிற்பாய்நீ -ஏழாமே

வானாதி வானங்கள் யாவும் இறைசொத்தே
வானங்கீழ் பூமி அவர்சொத்தே -ஏனையர்

விட்டு உமதின் திருமுன்னோர் அன்புசெய்து
வெட்டிப் பிரித்தார் இனமுந்தன் -நட்டார்

சிறப்பினம் நீரென் பதால்தான் பிடரி
இறுமாப்பாய் நிற்காதீர் மக்காள் -சிறப்பினமே

நல்மனதின் முன்தோலை நீக்கி இறைவனையே
செல்லிடத்தில் போற்றிடு வாய்என்றும் -சொல்லவரே

தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும்
தேவன் திருக்கர்த்தர் தான்கேளாய் -யாவே

அவரே மகத்துவமும் வல்லமையும் அஞ்ச
இவரே ஒருவர் அறிந்து -அவரோ

செயற்காக கையூட்டு வாங்காத தேவன்
செயலில் நடுநிலை காத்து -வியனவர்

திக்கற்ற பிள்ளைக்கும் கைம்பெண் அனைவர்க்கும்
தக்கதாய் காப்பார் அறிவாய்நீ -மக்களே

அன்புவைத்து அந்நியன்மேல் ஊண்உடுக்கை தந்திடும்
அன்பான தேவனவர் எஞ்ஞான்றும் -அன்புவை

அந்நியன்மேல் அந்நியராய் கீழ்நாட்டில் நீஇருந்த
அந்நாட்கள் தன்னைமற வாதுநீ -எந்நேரம்

உன்தேவ னாகிய கர்த்தருக்கு நீயஞ்சி
நன்றாகச் சேவித் தவர்பற்றி -முன்பங்கு

உன்கண்கள் கண்ட பெரியநற் செய்கைகள்
உன்னிடம் செய்த திருத்தேவன் -முன்னோர்

எழுபது பேராய் எகிப்துக்குப் போனார்;
செழிவிண்மீன் போலத் திரும்பு -அழியா

அவர்பேரில் ஆணையிடு; உன்புகழ் என்றும்
அவரென மோசே உரைத்து

இணை நூல் 15

உன்தேவன் கர்த்தரின் கட்டளைகள் தன்னைநீ
என்றென்றும் கைக்கொள்வாய் கற்பனைகள் -நன்றே

நியாயங்கள் நற்பிரமா ணங்கள் அவரின்
நியமங்கள் தன்னைக்கைக் கொள்வீர் -கயவன்

எகிப்தின் அரசனாம் பார்வோன் உடனும்
எகிப்தின் இனமக்கள் எல்லாம் -வகைசெய்த

கைச்செயல்கள் மற்றும் அடையாளங் கள்படைமேல்
தீச்செங் கடல்புரண்ட காரியம் -மேச்செயலே

இவ்விடம் வந்துசேர பாலையில் செய்தவை
அவ்வகை தீயோர் எதிர்பேச -எவ்வகை

பூமி விழுங்கியதை கண்ட இனத்தாரே
பூமியில் சொல்கேட்கின் றீர்நீர்தான் -பூமியில்

கண்கண்ட உங்களிடம் பேசுகின்றேன் அல்லவா
கண்காணா பிள்ளை களிடம்நான் -மண்ணிலே

பேசாமல்; நீங்கள் பலப்படவும் வாக்குசெய்த
தேசத்துள் நீடிக்கக் கேள்இனமே -பேசியே

இன்றுநான் உங்களுக்குக் கற்பிக்கும் கற்பனைகள்
நன்றே அதையெல்லாம் கைக்கொள்வீர். -நன்பாலும்

செந்தேனும் ஓடும்நல் நாடே எகிப்தைப்போல்
அந்நாடு இல்லை யறிந்திடு -செந்நாட்டில்

கீரைத்தோட் டத்தில் விதையை விதைத்துநீ
நீரையுன் காலாலே பாய்ச்சினாய் -சீரவர்

சொல்நா டதிலோ மலைப்பள்ளம் உள்ளநாடு
வல்விண் மழையருந்தும் நாடது -வல்லாராம்

தேவன் திருக்காக்கும் நாடது ஆண்டுதனில்
மேவி துவக்கங் கடைவரை -தேவனாம்

கர்த்தரின் கண்கள் அதின்மேலே வைத்திருப்பார்
கர்த்தரின் கட்டளைக்கைக் கொள்வீரே -கர்த்தர்

முழுமனதும் சீரோடும் அன்புகூர்ந்து சேவி
முழுகற் பனைகளை எல்லாம் -வழுவா

நடந்தாலே நெல்லோடு நெய்சாறு நன்றாய்
நடவுசெய்ய விண்ணீர் விழுமே -இடமாமத்

தேசத்தில் முன்மாரி பின்மாரி பெய்ச்செய்து,
தேச விலங்குகட் காகப்புல் -வீசையாய்

தேசத்தில் தானே வளர்ந்திடச் செய்வாரே
தேசம்சேர் மக்களே கேளீரோ -பேச

மனதைநீர் வஞ்சனைக்கு உட்படாமல் வீணாய்
இனவிறை விட்டுப்போ னாலே -இனவிறை

வெஞ்சினம் தன்னிற்கு ஆளாகி விண்மழை
வெஞ்சினத்தால் பொய்க்கும் அறிவீர்நீர் -வெஞ்செய்

மழையில்லா காரணத்தால் தன்பலன் பொய்க்க
மழைதரும் வானம் அடைப்பார்; -மழையிலாது

நற்றேசத் தில்லிருந்து நீங்கள் அழிந்திடுவீர்
கற்பனைகள் கைக்கொள்ளா தீச்செய்கை -நற்றாரே

தேசத்தில் நாட்கள் வழிநாட்கள் நன்மிகவே
ஈசனின் சொற்கள் மனம்பதித்து -தேசவாழ்

மக்களே கண்கள் நடுவே நினைவுகுறி
தக்கதாய் கைம்மேல் பதித்திடுவீர் -தக்கதாய்

போதியும் பிள்ளைகட்கு வீட்டில் வழிசெல்லும்
பாதைகளில் தூங்கும் இரவிலும் -வேதம்

தனைக்குறித்து நீபேசு; வீட்டின் நிலைமேல்
நனிவாசல் தன்னில் எழுது -இனியாரே

தேவனாம் கர்த்தரிடம் அன்புகூர்ந்து கட்டளைகள்
யாவே அருள்வழி தன்னிலே -மேவி

வழிநடந்தால் நாட்டில் இனங்கள் துரத்தி
வழிசெய்வார் பேரை அழிக்க -வழிசெல்லும்

நாடாகும் கால்மிதி எவ்விடமும்; கீழ்திசை
நாடெல்லை ஐபிராத்து மேற்றிசை -நாடெல்லை

மேற்கடலும் தெற்கிலே பாலை வடதிசை
நற்றெல்லை லீபனோன் கேளினமே -நற்றார்முன்

மற்றார் எதிர்நிற்கா வண்ணம் புரிவாரே
சற்றே பெயர்கேட்டால் அஞ்சுவர் -சுற்றம்

மிதிநில மெல்லாம்காண் அஞ்சி நடுங்க
விதிசெய்வார் கர்த்தர் திருவும் -விதியது

வாழ்த்து கெடுசொல் இரண்டும்முன் வைக்கிறேன்
வாழ்த்துகள் கீழ்படிந்தால் வந்திடும் -வாழ்நாளில்

கீழ்படிய மாட்டோம் எனநீங்கள் வீண்சிலைகள்
வாழ்த்த வரும்வல்சொல் கேடுந்தான் -கீழ்விட்டு

வாழ்செலும் நாட்டில் கெரிசீம் மலைமேலே
வாழ்த்தும் மலையேபால் மேல்நீர்சொல் -தாழ்ச்சொல்லே

கில்கால் எதிரே நதியோர்தான் மேற்கரையில்
நல்மோரே குன்றுகள் காண்

இணை நூல் 16

உட்புகும் தேசத்தின் ஆரா தனைமுறை
கெட்டவை ஆதலால் முற்றிலும் -கெட்டவை

நாட்டில் இராதபடி நீங்கள் அழித்திடுவீர்
நாட்டார் திருச்சொல் படியங்கு -தீட்டே

பெயர்முதலாய் இல்லாது பேய்ச்சிலைகள் தன்னை
வியக்கா தழித்திடுவீர் தோப்பு -இயற்கையென

விட்டிடாது மக்காள் அழித்திடுவீர் எல்லாமே
கெட்டவை ஆதலால் தீதவை -கெட்டவர்

மற்றார் செயல்போல நீங்கள் செயலாகா
சுற்றா ருடன்தே வனைசேவி -நற்றார்

இருக்கும் நலக்கூடா ரம்வரை வந்து
திருவின் பலிகள் செலுத்தி -திருசொல்லும்

நற்றிடம் தன்னில் குடும்பத் தினரோடு
நற்றார்முன் வந்து புசித்துநீர் -நற்றார்

திருவீட்டில் நன்றாய் மகிழ்ந்திடுவீர் ஆங்கே
திருப்பலிகள் தன்னை கொடுத்து -திருதரும்

நாட்டிலே கைப்பலன் நன்றாக வந்ததால்
வீட்டைவிட்டு கூடாரம் நிற்குமிடம் -வீட்டார்

அனைவரோடும் வந்து தலையீற்று தன்னை
நினைவாகத் தந்திடுவீர் நீரும் -வனமாமே

பாலைதனில் கண்போன போக்கில் நடந்ததுபோல்
பாலைவிட்டு சேரும் நலநாட்டில் -பாலைசெய்

போல இனத்தாரே செய்யா திரும்நாட்டில்
மேலாம் திருநாடு சீர்தானே -மேலார்

இறையோன் வழிபட ஓரிடம் நாட்டில்
இறையோன் தருனில மாங்கே -இறைவனுக்கு

செய்திடும் நற்பலி எல்லாமே அங்கேதான்
செய்திடக் கொண்டுவரு வீர்நீர்தான் -மெய்யாய்ப்

பெயர்விளங்க தேவன் குறித்த இடத்தில்
பெயர்சேவி மக்களே நன்று -பெயர்க்காகக்

கூடவேறே வெற்றிடம் போகாதீர் எச்சரிக்கை
கூடம் இருமிடம் செல்வீர்நீர் -நாடில்

உணவிற்காய் வீட்டின்முன் வாசலில் நீயும்
உணவாய் விலங்கை யடித்து -நிணத்தைப்

புசித்திடலாம் மான்களைப் போல; குருதி
புசிக்காதீர் நீரைப்போல் ஊற்று

இணை நூல் 17

நெல்லும் கனிச்சாறும் பத்தி லொருபங்கும்
நல்லீற்றின் முன்னீற் றெலாம்நீவிர் -நல்லெண்ணெய்

காணிக்கை வீட்டில் புசிக்காது நற்றிடம்
காணிக்கை கொண்டுசெல் வீர்நீர்தான் -காணத்

தெரிந்துகொள் நற்றிடத்தில் செல்வசெல்வி வேலை
கரைதனில் வாழ்லேவி எல்லாம் -விருந்துண்டு

உன்தேவ சந்நிதியில் நன்றாய் மகிழ்ந்திடு
உன்தேவன் சொல்லிது கேள்மின்னே -உன்கைதரும்

தேசத்தில் வாழ்நாளெல் லாம்லேவி கைவிடாதே
தேசத்தின் எல்கை விரிவாக்க -ஈசன்சோல்

போலங்கு நல்லிறைச்சி வாயிற்கு வேண்டுமெனில்
சீலோர் புசிக்கலாம் ஊன்தனை -மூலைநில்

தீட்டுப் படயெவனும் தீட்டுப் படாதவனும்
வீட்டிலே ஊன்புசிக்க இல்லைதடை. -நாட்டில்

குருதி பருகாதீர் என்றென்றும் நேமம்
குருதிதனில் உள்ள துயிர்தான் -விரயக்

குருதி பருகாது நீர்போல ஊற்று
குருதிதனில் உள்ள துயிரே -கரையெங்கும்

நன்றா யிருக்க அதைச்சாப் பிடலாகா
என்றென்றும் நேமம் இதுதானே -நன்றாகத்

தீபலி மற்றபலி எல்லாம் செலுத்திட்டு
தீபலி போல குருதியை -தீபீடம்

மேலூற்றி மற்றபலி ஊனதனை திண்ணவே
சீலார்முன் தந்திட லாமங்கு -சீலாரில்

மற்றவர் ஆரா தனைசெய்பேய் சேவிக்கக்
கற்பேன் எனவும் விசாரிக்க -முற்படாதே

எச்சரிக்கை யாயிரு. கர்த்தர் வெறுக்கிற
அச்செய் அருவருப் பேகேளீர் -கொச்சையாய்

தம்மக்கள் தன்னையே பேய்களுக்கு தீப்பலி
அம்மக்கள் ஈந்தனர் என்பதால் -அம்மக்கள்

செய்கைகள் கர்த்தர் வெறுக்கிறார் ஆதலால்
செய்யாதீர் தீச்செய்கை கள்தன்னை -செய்ச்சொல்லும்

இன்றுனக்கு நான்விதிக்கும் யாவையும் செய்திட
நன்றாய் கவனம்கொள் நீயதில் -ஒன்றும்

நலங்கூட்ட வும்வேண்டாம், ஒன்றும் குறைத்து
விலக்கவும் வேண்டாம் சிறப்பு

இணை நூல் 18

வாக்குரைப்போன் என்றும் கணவுகண்டேன் என்றுமங்கு
வாக்கவர் விட்டு விலகிட -வாக்குரைக்கும்

தீயவர்சொல் நாட்டில் நிறைவேறி னாலுமங்கே
தீயர்ச்சொல் கேளா திரும்நீர்தான் -தீச்சிலை

மற்றப்பேய் தேவனென உன்னை தடம்மாற
வெற்றுச் சிலைகள் பணியவைக்க -சுற்றார்

உனையேவ செல்லாதீர் அச்சிலை பின்நீர்
உனைசோ தனைசெய் கிறாரே -உனையங்கு

இவ்வகை விட்டு விலகச்செய் மாந்தரை
இவ்வகை செய்கைக்காய் கொன்றுபோடு -அவ்வகை

செல்வரோ நண்பனோ இல்லாளோ தீச்செய்ய
செல்லென்கை உன்கொல் முதலாக -அல்லார்

இரக்கம் கனிவுகாட்டா மக்கள் ஒளியா
திருப்பீர் இறைவிட்டு போயேன் -விரயமாய்

சொல்பேசும் யாரெனினும் கொல்வீர் விரைந்துநீர்
சொல்லவர் தானே இறைவனார் -சொல்கேட்டுக்

கல்லெறிந்து கொல்வீர்நீர் தீச்சொல் உரைத்தோரை
கல்லெறிந்து கொல்வதை கண்டவர் -அல்லாது

செல்லார் வழிதிரிந்து; மற்றார் வழிதிரியச்
சொல்கேட்டு வெட்டிடு வீர்நீர்தான் -சொல்லிடும்

மற்றார்வாழ் பட்டணம் வாழ்குடி பட்டயத்தால்
அற்றதாய் வெட்டி, அதிலுள்ள -அற்றையும்

வாளாலே வெட்டி அதில்கொள்ளை யிட்டதை
மாளாச் சுடுதீ யெரித்திடு -கேளீர்

கெடுபொரு ளேதும் இருக்கவேண்டாம் கையில்
கெடுவிட்டு கர்த்தரின் நேமம் -விடாதுநீ

நல்லவர் கண்காணச் செம்மையாய் கைக்கொள்ள
நல்லவர் வாழ்த்துவார்நல் வாழ்த்து

இணை நூல் 19

தேவனாம் கர்த்தரின் பிள்ளைகள் நீங்கள்தான்
தேவையின்றி செத்த மனிதருக்காய் -கேவலமாய்

கீறிக்கொள் ளாமலும், உங்களின் கண்களிடை
மீறி மயிரெடுக்கா தீர்நீர்தான் -மீறாதீர்

தூயர் இனமே இறையின மக்களே
தூயர் எடுத்தார் இனமெலாம் -தூயரும்

தேடித் தெரிந்து; வெறுக்கும் விலங்குகள்
நாடிப் புசியா திருப்பீரே -நாடிப்

புசிக்கவே ஆவினம் மேவினம் மானும்
புசிக்க விரிகுளம் புள்ள -அசையிடு

எல்லா விலங்குகள் நன்றே விரிகுளம்
பில்லா அசையிடா விட்டுவிடும் -அல்லா

விலங்கு களில்வகை ஒட்டகம் போன்ற
விலங்குகள் வாயில் அசைத்தும் -இலையே

விரிகுளம் பங்கு வெறுத்து விடுவீர்
சரியிலா தவ்வகை தீதே -சரியில்

விலங்கு களில்வகை பன்றிகள் போன்ற
விலங்கு விரிக்குளம் பேயென் -இலையே

அசையிலா காரணம் விட்டு வெறுப்பீர்
அசையிலா மாக்கள் வெறுத்து -மிசைதனில்

நீர்வாழும் எல்லாவற் றில்செதிள்கள் தானிருக்க
நீர்வாழும் மீன்வகைகள் உண்ணலாம்நீர் -நீர்வாழ்ஊன்

நற்சிறகு இல்லாத நற்செதிள்கள் இல்லாத
மற்றவைகள் விட்டுவிலக் கும்மக்காள் -அற்றில்

பறப்பன வற்றில் புசிக்கலாம் என்றே
பறவை யினத்திலே தந்தார் -சிறப்பாய்

பறப்பன வற்றிலே ஊர்வன விட்டு
பறவை பலபுசி நன்றே -சிறப்பின்றி

தானாய் மரித்த விலங்கோ பறவையோ
ஈனமாய் நீரும் விடுத்திடு -தானமாய்

மாற்றார் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது
மாற்றார் விலைக்குவிற் றுப்போடு -நற்றாராம்

உங்களுடை தேவனாமே கர்த்தருக்கு தூயர்நீர்
பங்கமாக வெள்ளாட்டுக் குட்டிதனை -அங்கேதான்

ஆதாயின் பால்விட்டு நீர்சமையா தீரென்றே
வேதவரும் சொன்னாரே ஆங்குத்தான் -வீதம்

விதைத்த நிலங்கள் வளமாய் பலனாய்
அதில்நீர் திருவவர் பங்கும் -அதுபடி

நற்றலை யீற்றும் எடுத்து திருவவர்
நற்றவர் முன்புசிப் பீர்நீர்தான் -நற்றாய்

வயலில் விளையும் மெலாப்பலன் தன்னில்
நியமமாய் பத்தில் லொருநல் -நியம்பிரி

எண்ணெயும் சாறும் நியம்பிரி பங்கதை
எண்ணி புசித்தேர்ந் திடத்திலே -விண்ணவர்

தேர்ந்திட்ட நல்லிடமோ தூரமென்றால் விற்றுகாசு
தேர்ந்திட்ட நல்லிடம்சேர் வந்தங்கு -தேர்ந்திட்ட

நல்லிடத்தில் நல்விலங்கு வாங்கிபுசி நல்லவராம்
நல்லேவி சுற்றங்கள் சூழ்ந்துண்டு -நல்லவராம்

லேவியர்க்கு உன்னோடே பங்கில்லை என்பதனால்
லேவியரைக் கைவிடீரே. மூன்றாண்டு -மேவகடை

பத்திலொரு பங்கதைநீர் அவ்வாண்டில் வாசலில்நீர்
அத்தவராம் கையெடுக்க விட்டுவிடு -அத்தவராம்

திக்கற்ற பிள்ளைகளும் கைம்பெண்கள் எல்லாரும்
வக்கற்று தேசத்தில் வாழ்மக்கள் -அக்கறையாய்

வாழ்ந்திடவே விட்டுவைப்பீர் மூன்றாமாண் டின்பங்கு
வாழ்த்துவாரே கர்த்தரிறை வன்.

இணை நூல் 20

ஏழாந் திருவாண்டு சுற்றார் விடுதலைக்கே
ஏழாந் திருவாண்டில் சோதரர் -கீழாகிப்

பெற்றகடன் எல்லாமே தண்டாமல் விட்டுவிடு
பெற்றகடன் மற்றாரின் தண்டலாம் -அற்றார்

எளியோர் திருவில் இருக்கா முறைக்கே
எளியோர் கடனெலாம் விட்டு -எளியோர்

கடனில் விடுதலை பெற்று நலவாழ்
கடனை விடுவெனச் சொல்ல -கடனை

அடயிதோ ஏழாந் திருவரு கின்ற
நடப்பென கைகளை மூடி -நடவீர்

எளியோர் திருவவர் நோக்கி அழைக்க
தெளித்தவர் பாவம் விழுமே -தெளிவே

எளியோர் இலாதே திருநா டிராதே
எளியோர் சிறுமை விலக்க -தெளிவாய்

அளிப்பீர் திறந்து இனத்தார்; அளிப்பார்
அளிக்க மடைதிறந் தங்கு -எளியோர்

எபிரெய ஆணோ எபிரெய பெண்ணோ
எபிரெயர் உன்னில் விலைப்போய், -எபிரெயர்

ஆறென ஆண்டுகள் வேலைசெய்ப் பின்னராய்
மீறா விடுதலை செய்திடுவீர் -மாறா

விடுதலை நாளில் வெறுங்கை விடாது
விடுதலை சேர்த்து நறுநெல் -விடுத்து

விடுவாய் இரண்டு மடங்கு விலைக்காய்
இடத்தான் புரிந்த தனால்காண் -விடாதுநான்

வேலை புரிகிறேன் நேசம் விடாதுநான்
வேலைசெய் கின்றேன் எனச்சொலின் -வேலையின்

காதை கதவோ டுசேர்த்துத் துளைத்திட
மீதி இருப்பான் விதி

இணை நூல் 21

ஆவின மேவினத்தின் ஈன்றெடுக்கும் முன்னெல்லாம்
யாவே இறைவனுக்கு சொந்தம்காண் -மேவிநீர்

செல்நல்ல நாட்டில் தலைமாக்கள் வேலைகொளா
மல்விடும் ஆட்டின் மயிர்தனை -நெல்லொடு

கர்த்தரவர் சொல்லிடத்தில் யீற்றுதலை கொண்டுவந்து
கர்த்தருக்கு நேர்பலியாய் தந்திடுவீர் -கர்த்தருக்கு

நேர்பலி மாக்களில் ஏதும் குறைப்பழுதென்
சீர்ப்பலி இல்லை அறிவீர்நீர் -சேர்ந்து

தலையீற்று மாக்களில் சீர்ப்பலி இல்லை
தலையீற்று மாக்களை வீட்டில் -கலைமானைப்

போல புசித்திடலாம் தீட்டோ இலாதவனோ
சாலப் புசித்திட லாம்நீர்தான் -சாலே

குருதியை உண்ணீர் விடுவீர் தரைமேல்
குருதி குடிப்பது நன்றில் -குருதி

உயிரே அதனால் குடியா தரைமேல்
நியமம் படியே விடு

இணை நூல் 22

திருமாதம் ஆபிப் வரக்காத் திருப்பாய்
திருமாதம் ஆபிப் தனிலே -திருவும்

எகிப்தில் இருந்துக் கொணர விடுத்தே
எகிப்தின் அடிமைத் தனவில் -எகிப்துவிட்ட

ஏழுநாள் அப்பம் புளிப்பிலா சாப்பிடு
ஏழுநாள் வீட்டில் புளியப்பம் -வீழதைக்

காணா திருக்கட்டும் தீவிரமாய் நீவிரைந்து
காணப் பொழுதில் விடுத்தீரே -காண

முதல்நாளில் நீப்பலி யிட்டமே யின்ஊன்
முதல்நாளே சாப்பிட்டு விட்ட -முதல்நாளின்

ஊனதை காலையில் தீயிலே யிட்டழியும்
ஊனை புசியாதீர் பின்னராய் -வானவர்

தேவனாம் கர்த்தர் தரும்நல நாட்டிலே
தேவன் அளித்தநல் வீட்டிலே -தேவனின்

பாசுகா நீயடிக் காதீர்; திருநல
தேசத் திலேதேர்ந் திடந்தன்னில் -தேசத்

திருவிழாக்கள் மூன்றிக்கு ஆண்மக்கள் எல்லாம்
திருமுன்னே வந்திடுதல் நேமம் -திருமுன்

வெறுங்கை வராது தகுதி பலியை
சிறுத்தேனும் கொண்டு வரச்சொல் -நறுமத்

திருவிழாக்கள் மூன்றது பாசுகா கூட
திருவிழாக்கள் ஏழுவாரம் கூடம் -திருவிழா

நேமத்தை கர்த்தர் அளித்தவர் ஏற்படுத்து
நேமம் திருமக்கள் என்றவர் -நேமங்கள்

நீதியையே பின்பற்றி கையூட்டு வாங்காது
நீதியாய் தீர்க்க திருமக்கள் -வேதவர்

சொன்னாரே நீதியாய் தீர்க்கவே ஏற்படுத்த
முன்முகம் காணாது தீர்ப்புசெய் -வன்னாமே

கையூட்டு ஞானியரின் கண்கள் குருடாக்கி
கையூட்டு நீதிமானின் நீதியை -வேயாது

தாறுமாறாய் போகச் செயல்புரியும் என்பதால்
வேறாய் வெறுப்பீர்கை யூட்டுதனை -வேறாமே

தேவனாம் கர்த்தரின் நற்பீடம் பக்கத்தில்
தேவனாம் கர்த்தர் அருவருக்கும் -தேவனிலா

மக்களின் தோப்போ வெறுஞ்சிலையோ நாட்டாதீர்
மக்களே கர்த்தர் திரு

இணை நூல் 23

பழுதிருந்தால் ஆமே எதுவும் தராதீர்
பழுதான மாக்கள் இறைக்கு -வழுவாம்

அதனால் பலியாய் படைக்கா திருப்பீர்
அதுவோ அருவருப்பே கேள்மின் -அதுபோல்

உடன்படிக்கை தன்னை தரும்வீட்டில் மீறி
கடவுளை விட்டு இயற்கை -கடவுளென

போற்றிடும் ஆண்பெண் இருந்தார் எனக்கேட்க
போற்றுதலை நீவிசா ரித்துப்பின் -போற்றுமவ்

மக்கள் செயலது கேட்டபடி என்றாலே
மக்கள் அவர்களை கொன்றிடும் -மக்களை

கொன்றிட சான்றுசொல் மக்கட்கை முன்முதல்
கொன்றிட மக்களின்கை பின்னாகி -என்றும்

இருவரோ மூவரோ சான்றளிக்க வேண்டும்
திருவிட்டு போனதை சான்றாய் -இருமூவர்

சொல்லிட சான்றுசொல் மக்கட்கை முன்முதல்
சொல்லா தவர்கள்கை பின்னாக -சொல்படி

கல்லெறிந்து கொல்லவேண்டும் அம்மக்கள் தன்னைநீர்
கல்லெறிய வாசல் வெளிக்கொண்டு -கல்லெறியும்

சான்று ஒருவரின் மட்டும் கொளாதுநீர்
சான்று இருமூவர் கேட்டுச்செய் -சான்றுகொல்

அப்படியே தீமையை தேசத் தினின்றுநீர்
எப்போதும் வன்விலக்கும் மக்களே -அப்படியே

உங்களுள் ஏதும் வழக்கிருந்தால் போவீர்சீர்
உங்களுள் பேர்நீதி மான்உளரே -அங்கே

நியாயந்தீர் செய்கை உனக்கு அரிதாய்
நியாயத்திற் காக எழுந்து, -நியாயவர்

தேவனாம் கர்த்தர் தெரிந்த இடம்போய்நீர்,
லேவிய ஆசரியர் கேள்மின்னே -தேவனின்

லேவிய ஆசரியர் இன்ன நியாயமென
தேவன்சொல் என்றுரைக்க அச்சொல்லை -மேவிநீர்

ஏற்று இணங்கி விதிக்கும்செய் கைகளைநீர்
மாற்றாது செய்வீரே நன்றதுவே -ஏற்றதை

மாற்றாது செய்வீரே நற்சொல் தனைநீரும்
மாற்றாது செய்யாத மக்களை - மாற்றிசெய்த

காரணத்தால் தீதேன நீரறிந்து மாற்றியோர்
கோரமாய்கல் சாக எறிந்திடு -காரணம்

கண்ட இனத்தார் இடும்புசெய்யா தேயிருப்பர்
கண்டவர் அஞ்சி இருப்பார்கள் -கண்டுநீ

மாற்றார்க் கரசர் உளரதனால் சோதரர்
ஏற்படுத்து தேவன்சொல் கேட்டங்கு -போற்றும்நல்

சோதரர் விட்டு இனவேறாள் மேனாளாய்
வீதமாய் ஏற்பாடு செய்யாதீர் -சோதர்னென்

றாலும் பலவளம் பெற்றிட என்றும்நீர்
பாலை எகிப்துபோகா தீர்தீதே -வேலையாயும்

பாலை தனைத்தாண்டி கீழ்நாடாம் மேற்காக
வேலை வளங்கொள்ள போகாதீர் -பாலைநாடு

போகவேண்டாம் என்று திருவின்சொல் உள்ளதே
போகா திருமெகிப்து நாடுநோக்கி -வாகாக

ஏற்பட்ட அவ்வரசன் சிம்மா சனத்திலமர்ந்
தேற்றாண் எனவவன் சோதரரை -மாற்றியே

காணுதல் கூடாது; பெண்டிர்கள் பற்பலராய்
வீணாய் மணம்செய் விடுத்திட -வீணாக

பெண்டிர் பலரை மணஞ்செய்தால் விட்விலக
பெண்டிர் வகைசெய்வர் என்பதால் -பெண்பலர்

வேண்டாம் அரசர்க்கு என்றென்றும் வாக்கையவர்
வேண்டியே நிற்க விருப்பமாய் -வேண்டியவன்

இந்நியதி தன்னை எழுதி தனக்காக
இந்நியதி நூல்களை கைவைத்து -இந்நியதி

தன்னை அரசனவன் வாசித்துக் கைக்கொள்ள
நன்றாய் வழியாளு வர்

இணை நூல் 24

லேவியர் ஆசரியர் நேரவர்க்குப் பங்கில்லை
லேவி குலத்தவரை தேர்ந்தாரே -தேவனவர்

தேவனே நற்பங்கு என்றென்றும் நற்பலி
லேவி குலத்தவரின் பங்குகேள் -லேவியர்

தன்மக்கட் கைபெறட்டும் பங்காக மாக்களில்
முன்னந் தொடையொடு தாடைகள் -நன்னிரைப்பை

ஆசரியன் பங்கே அதன்சேர் முதற்பலன்
ஆசரியன் கைப்பங் கறிவாய்நீ -தேசத்தில்

நெல்லோடு நற்சாறு எண்ணெய் மயிரெல்லாம்
நல்லாசன் கைசேர்த் திடச்சொல்லே -நல்லேவி

தன்வீடு விட்டுவந்து தேர்ந்திடத்தில் வாழவர
முன்போல பங்குண்டு ஆங்குத்தான் -சென்றாரும்

முன்னிருக்கும் லேவியர்போல் பங்கடைவர் வந்தலேவி
முன்னின்று ஊழியத்தைச் செய்திடவும் -தன்சொத்து

தந்தையர் சோத்தோடு முன்னவர்போல் பங்குண்டு
எந்நாளும் தேவ விதி

இணை நூல் 25

தீமக்கள் போலநீர் செய்யாதீர் தேவனவர்
தீமக்கள் செய்கையால் தானிருக்கும் -தீமக்கள்

வாழ்தேசம் விட்டகற்று கின்றாரே தீதுசெய்கை
கீழ்தானே செய்யாதீர் நீரென்றும் -கீழோரோ

தன்மகனோ தன்மகளோ தீக்கடக்கப் பண்ணுதல்
நன்னாள் குறிபார்த்தல் அஞ்சனம் -வன்னே

வியன்வித்தைக் காரர்கள் மந்திர வாதி,
வயஞ்செத்தோர் கேள்குறி தீது -மயக்கும்செய்

இவ்வகைச் செய்கைகள் தேவன் அருவருக்க
இவ்வகைச் செய்வோரை விட்விரட்டு -அவ்வகை

செய்வ நிமித்தமே உன்தேவன் முன்னின்று
செய்வோர் துரத்துகிறார் சீரவர் -மெய்யிலா

நன்னாள் எதுவெனக் காண்போரை கேட்கின்ற
முன்னாள் இனத்தவர் போலிரீர் -என்னாளும்

கர்த்தர் குறிகேள் விடைதர மாட்டாரே
கர்த்தர்முன் தூயனாய் நில்

இணை நூல் 26

தேவன் திருகர்த்தர் என்னைப்போல் வாக்குரைக்க
யாவே இறைவாக்கர் தந்திடுவார் -யாவேசொல்

வாக்குரைக்கும் நல்லவரின் சொல்கேட்டு பின்பற்று
வாக்குரைத்தான் மோசே சிறந்தங்கு -வாக்கவர்

ஓரேபில் கூடிய நாளில் இனம்சொன்னீர்
சீரவர் தீப்பெருந்தீ சாகாது -நேரே

இனிகாணா கேளாத வண்ணம் இறையோன்
நனிசெய்யக் கேட்டீர் இனமே -மனிதா

சரிசொல்லே மக்கள்சொல் என்றங்கு சொன்னார்
திருவாக்கு சொல்லிட என்போல் -தருவேன்

எனச்சொன்னார்; வாக்குரைக்கும் நல்லார்சொல் கேட்டு
நனிசொல்வார் கற்ற துனக்கு -நனிபெயர்

என்பெயரால் சொல்லுமவர் சொற்களை கேளாது
வன்செய்வோன் தன்னைநான் தண்டிப்பேன் -என்சொல்

இலாதவை என்சொல் லெனச்சொல்லும் தீயோர்
இலாதே அழித்து விடுங்கள் -இலாதபொய்

மற்ற பெயரால் இறைவாக் கெனவுரைத்தீ
அற்றா தகற்று விரைந்துநீ -நற்றவர்

வாக்கை அறிவது எப்படியோ வாக்குரை
வாக்கு நடந்தேறா போழ்துத்தான் -வாக்குரை

அவ்வகைத் தீயோர் துணிகரச் சொல்லாமே
அவ்வகைச் சொன்னவன் அஞ்சாது -அவ்வகைத்

தீயோர் அழித்திடு வாக்கு நடந்தேறா
தீய உரையென் பதால்

இணை நூல் 27

வேரறுத்து கர்த்தர் தரும்தேசத் தில்பிசகாய்
சீராண் ஒருவன் கொலைசெய்ய -சீராண்

ஒளிந்திட கட்டு நகரங்கள் மூன்று
ஒளிய விரையவே ஆங்கு -ஒளிநகர்

மூன்றாய் நிலத்தைநீ பங்கிட்டு ஓடுநகர்
மூன்றை விரைந்தோடக் கட்டுவாய் -மூன்றில்

பகைகண்கள் விட்டு விரைதூரம் மட்டும்
பகைவன் வராத நகரம் -வகையாக

இன்றுனக்கு சொல்லும்நல் கற்பனைகள் எல்லாமே
என்றென்றும் நீகைக் கொளவுமிறை -நன்றென

எல்லைகள் பேராக்க மீண்டும் ஒளியகட்டு
எல்லை நகரங்கள் மூன்றுநகர் -அல்லாமல்

முன்பகை காரணத்தால் கொன்றால் நகரொளிந்த
வன்னாரை மூப்பர் கொணர்ந்துவந்து -முன்பகை

தானே கொலைக்கென சான்றறிந்து கொன்றோனை
தானே கொலைசெய்வீர் ஆங்குத்தான் -ஈனர்

இரங்காதே அம்மக்கள் வன்செய்கை செய்தார்
மரண விதியது மாறா -விரைந்துசெய்

தீதை அகற்றிடுவீர் தேசத்தில் அப்படியே
வேதன் உரைத்தார் சிறந்தங்கு -வேதன்முன்

சான்றுசொல் மக்கள் விலகாது மெய்யாகச்
சான்றளிக்க வேண்டுமே; தீதேபொய்ச் -சான்றுரைத்தல்

சான்றுசொல் மக்கள்பொய் என்றே அறிந்திட்டால்
சான்றளித்தோன் தண்டனை யிட்டுடும் -சான்றளித்த

பொய்சான்றால் கைபோனால் சான்றளித்தோன் கையெடுப்பீர்
பொய்சான்றால் கண்போனால் கண்ணெடுப்பீர் -பொய்சான்றால்

சாகடித்தால் சான்றளித்தோன் சாகச்செய் நீதியது
தீகரையோன் பொய்ச்சான்று கேள்

இணை நூல் 28

பகைவர் எதிராக போர்செய்யப் போக
பகைவர் படைக்கண்டு அஞ்சித் -திகையீர்

பகைவர் அழிக்க எகிப்துனின்று உன்னை
வகையழைத்த தேவனுன் னோடு -பகைவர்நேர்

போர்செய்யப் போகுமுன் ஆசரியர் சேர்ந்துவந்து
போர்செய்யப் போகின்றீர் மக்களே -போரோ

மனங்கலங்கி நீரும் துவளாதீர் உங்கள்
இனயிறை கூடயிருப் பார்கேள் -இனமே

அழிப்பாய்நீ தேர்கள் பரிகள் படைகள்
அழிசெல்லும் போது படைசேர்த் -தழித்திடப்

போகிறோம் போகுமுன் மக்களைச் சேர்த்துநீர்
ஆகாதோர் வேறு பிரித்திடு -ஆகாதோர்

நெல்லை விதைக்க வயல்கொண்டு அவ்வயலின்
நெல்லை புசியா மனிதனோ -நல்லதாய்

சாறெடுக்க ஆலைசெய்து அவ்வாலை யின்னின்று
சாறுகுடி யாதோன் தவிர்த்திடு -தேறத்

திருமணம் செய்ய தனக்கென பெண்ணை
திருமுன் நியமித்தோன் வேண்டாம் -விரைவாய்

திருமக்கள் தன்னை பிரித்து மனைசெல்
அரியச் செயல்நிறை வேற்ற -எரிய

மனமஞ்சு மாந்தர் இனத்திலே மற்றோர்
மனமஞ்ச வைப்பார் தவிர்ப்பாய் -இனத்தில்

திடனில்லா மாந்தர் எவரும் தவிர்த்து
உடனே திருப்பி அனுப்பு -இடத்திலே

மக்கள் தலைவர்கள் பேசிய பின்னராய்
மக்கள் படைமேல் தளபதிகள் -தக்கவர்

தேர்ந்தெடுத்தப் பின்செல்வீர் போருக்கு சீராரே
சீர்படை சேர்க்கும் முறை

இணை நூல் 29

போர்வகை யாதெனில் போர்செய் நகரின்மேல்
போர்புரிய வந்துள்ளோம் வீண்போரேன் -போரில்

அமைதியாய் முன்பணிய தூதனுப்பு கேட்டால்
அமைந்து பணிந்திடச் செய்வீர் -அமைதிசெல்

தூதர்சொல் கேளா நகரை அழித்திடுவீர்
தூதர் அமைதிசொல் விட்டாரே -வேதன்சொல்

ஆடவர் எல்லாம் அறுத்து யெறிந்திடுவீர்
மாட மகளிர் உமக்காக -வேடன்போல்

இவ்வகைச் செய்வீர் அனைத்து நகருக்கும்
இவ்வகை தூர நகருக்கும் -அவ்வகை

ஆறினம் தீண்டாது வாழும் தினையெல்லாம்
கீறி அழித்திடு ஆங்குநீர் -கீறி

அழிக்காது ஆறினத்தில் மீதியாய் வைத்தால்
அழிக்காத ஆறின மாந்தர் -அழிவழியாம்

பொய்ச்சிலைகள் பின்பற்ற செய்வா ரதனாலே
மெய்த்தேவன் சொல்தனை பற்றிடு -மெய்யார்

நகரை பிடித்திட சுற்றிலும் சூழ
நகர்வெளி யுள்ள மரங்கள் -வகையறுக்க

வேண்டாம்; புசிக்கக் கனிமரம் விட்டுவிட்டு
வேண்டாத வீண்மரங்கள் வெட்டு

இணை நூல் 30

திருகர்த்தர் தந்திடும் தேசத்தில் ஆங்கே
வரைவெளியே ஓராள் கொலையாய் -யிருக்கண்டு

மூப்பரோ டாசரியர் சேர்ந்து அருகாமை
மூப்பரளக் கச்சொல் நகர்வரை -மூப்பரவர்

வேலைக் கொளாக்கிடாரி தன்னை நகர்மூப்பர்
மேலில் மலைப்பள்ளத் தாக்கிலே -மேலார்

நகர்மூப்பர் மேம்மேல் தனதின்கை யிட்டு
நகர்ப்பழி இல்லையென்று கூறு -நகர்ப்பழிதீர்

மூப்பர் கிடாரியை வெட்டியபின் கைக்கழுவி
மூப்பர்யாம் சொல்கின்றோம் இப்பழி -தீப்பழி

எங்கள் நகர்மே லிலையேனென் கண்ணாலும்
இங்கிவனைக் கண்டதிலை சொல்லிட -மங்காதார்

ஆதலினால் மீட்டயெம் தேவனே தீப்பழி
வேதனை எம்மேல் சுமத்தாதீர் -வேதனே

எம்மேல் இரங்கிடும் என்றுகூற தீப்பழி
அம்மாந்தர் மேலிராது போம்கேள்மின் -அம்மான்

திருகர்த்தர் பார்வைக்குச் செம்மையாய் ஆங்கு
திருமக்கள் செய்தால் குருதி -திரைப்பழி

உன்நடுவின் னின்று விலக்கிவிடு நன்றாமே
என்றென்றும் செய்வீர் விதி

இணை நூல் 31

பகைவர் எதிராகப் போர்செய்ய நல்லார்
பகைவரைக் கையளிக்க பல்லோர் -பகையோர்

சிறைபிடித்தோர் தன்னில் அழகாக ஆங்கே
சிறைபெண் மணக்க விதியே -அறையில்

சிறைபெண் தலைசிரைத்து தன்நகம் வெட்டி
சிறையாடை விட்டு கழுவ -அறைவீட்டில்

பெற்றோர் நினைவாய் ஒருமாதம் காத்திருந்து
மற்றபின் பெண்மணம் செய்திடு -மற்றும்

மணம்செய்து பின்னர் அழகியின் அன்பில்
குணம்தெரிய விற்காது ஈனள் -மணம்செய்த

காரணத்தால் ஆதாயம் தேடாது போகவிடு
வேரருப்பீர் வாழ்வில் பொருளாசை -பாரில்

இருமனைவி கொண்டோன் விருவெறுப்பு செய்யா
திருமகன் மூத்தோன் முதலே -திருப்பங்கில்

ஈராக முன்பிறந்தோன் கைத்தந் திடச்சொல்வீர்
பேரவனே முன்பிறந்த தால்தானே -பாரீர்

மனைவியை காழ்ப்பாக பார்த்தாலும் அப்பெண்
வினைபெற்ற முன்பிறப்பை தள்ளி -வினைவேறு

பிள்ளைக்கு சொத்தில் தலைப்பங்கு தந்திடாதே
பிள்ளைகளில் முன்பிறந்தோன் பங்கு

இணை நூல் 32

பெற்றோரின் சொல்கேளா ஈனனவன் தண்டனை
பெற்றும் அவர்களுக்குக் கீழ்ப்படியா -அற்றாய்

அடங்காத பிள்ளை இருந்தால் பிடித்து
அடங்கோன் அவைமுன் நிறுத்த -இடத்தே

அடங்காத பிள்ளை தனைநகர் மாந்தர்
அடங்கோன் விழக்கல் லெறிவீர் -அடங்கோன்

வகையழியக் கண்டு இனமற்றார் அச்சம்
வகைக்கொள்வர் நேரார் இனமே -வகையாய்

மரம்மேலே ஏற்றி நிறைவேற்றும் வன்செய்
மரம்மேமே தூக்கப் பெறுவோன் -திரைபின்

இறைவனால் வன்கெடுசொல் பெற்றோன் அதனால்
கறையிரவு தொங்க விடாது -திரைபின்


இறைசொல் கடைபிடிப் பீர்

இணை நூல் 33

தமையருக்குச் சொந்தமான ஆமே கழுதை
தமர்காணா விட்டுத் திரிந்தால் -தமையரிடம்

சேர்த்திடு; அத்தமரில் தூரமென்றால் தேடிவர
சேர்த்திடு மாக்கள் தனைநீரே -நீர்வெளியில்

மேலாடை வேறேதும் அவ்வகை கண்டாலே
மேலவர் சொல்படி கொண்டுப்போய் -சீலதமர்

வந்துகேட்க தந்திடுவீர் காணா ததுபோல
மந்தமாய் விட்டுவிடா தீர்எதுவும் -வந்த

தமரின் விலங்கேதும் கீழ்விழ காணா
தமனாகப் போகாதே; வீழ்ந்த -தமன்விலங்கு

காலூன் றியெழ உதவிசெய் திட்டுப்பின்
மேலவர் சொல்படி செல்லுவாய் -சீலாரே

ஆடவரின் ஆடைகளை பெண்தரிக்க வேண்டாமே
ஆடவர்க்கும் பெண்களின் ஆடைகள் -மூடவிடீர்

பாலினர் ஆடைமாற்றி யேயுடுத்தும் மாந்தரை
சீலார்க் கருவருப்பு கேள்

இணை நூல் 34

வழிசெல்ல மேலே மரத்திலோ பாதை
வழியோர மாக குருவி -வழிசெய்ய

கூடுகண்டு தாயோடு முட்டைகள் குஞ்சுகள்
கூடினின்று கையெடுக்கா தீர்நீரும் -கூடுவிட்டு

தாய்ப்பறவை போகவிட்டு குஞ்சுகளோ முட்டையோ
தாய்ப்பறவை காணா தெடுத்திடலாம் -தாய்ச்சேர்த்து

குஞ்சுகள் முட்டைகள் ஆகாது தேவன்சொல்
அஞ்சி நடந்தால் நலம்கேளாய் -தஞ்சயிடம்

வாழ ஒருவீட்டை நீகட்ட மேலிருந்து
கீழே விழாதபடி கைச்சுவர் -வாழும்நீ

கட்டிடிடு; அப்போது சென்னீர் பழிசேரா
கட்டிடம் கட்ட விதிதந்தார் -நட்டநல்

சாறு தருந்திராட்சை தோட்டத்தில் கீழாக
வேறுவிதை போடாதே போட்டாலே -கூறுதீட்டு

எல்லாமாய் ஆகும் அதனால் விதைகலப்பு
இல்லாமல் நாட்டில் உழுதிடுவீர் -அல்லாது

சேர்த்துழாதே ஏறு கழுதை இரண்டையும்
சேர்த்தரி மாறுநூல் வேண்டாமே -சேர்ச்சட்டை

தன்னிலே நாற்கடை யில்நல்ல தொங்கல்கள்
அன்றாடம் சேர்த்து உடுத்து

இணை நூல் 35

திருமணம் செய்தவளின் கன்னிமை கேள்வி
திருமணம் சேய்தவன் கேட்க -திருமண

நல்லுறவின் நல்லிரவு ஆடைதனை சான்றாக
நல்லார்முன் பெற்றோர் கொடுத்திட -நல்லார்முன்

கன்னிமையின் சான்று உறுதியென் றால்ஆணை
கன்னிமை கேள்வி தவறாக -வன்னாய்

மனதிலே வேறுவைத்து கேட்டதனால் தண்டம்
இனமூப்பர் ஆங்கே விதிக்க -இனத்திலே

கன்னியை தாறுமாறாய் பேசியதால் ஆடவன்
கன்னிதண்டம் பெற்றோர்க்கை தந்திட்டு -கன்னியைத்

தன்மனை யாளாய் உயிர்நாளுந் தள்ளிவிடா
தென்றும் மணநேமம் காத்திடவே -அன்றியும்

கன்னிமையின் சான்று உறுதிசெய் யாதபோது
கன்னிமையை வேற்றா னிடத்திலே -வன்னாய்ப்

புணர்ந்ததால் மங்கையை கல்லெறிந்து கொல்வீர்
புணர்தல் மணநேமம் காத்து -புணரத்

திருமண நல்லுறவை மீறி இருவர்
திருநேமம் விட்டுப் புணர்ந்தால் -அருவருப்பு

கல்லெறிந்து கொல்வீர் இருவரையும் மண்ணில்வாழ்
அல்லா தவரவர் கேள்மின்னே -நல்லாரும்

ஆடவனுக் குப்பெண் எனநியமித் தப்பின்னர்
ஆடவன் வேறாண் வெளிசேர்ந்தால் -ஆடவன்

தான்பொறுப்பு கல்லெறிவாய்; சீரில் இருவரும்
போன்ற வுரையது தீதறிவாய் -ஈன்றவன்

ஆடவனுக் குப்பெண் எனநியமித் தப்பின்னர்
ஆடவன் வேறாண் நகருள்சேர் -ஆடவன்

பெண்சேர் பொறுப்பாவர் கல்லெறிவாய்; சீரது
மண்ணில் உரையது நன்றாமே -எண்ணி

நகருள் புணர இழுத்தால் கதறி
நகராரை பெண்ணழைக்க லாமே -நகரவெளி

மன்றாடி பெண்ணழை சத்தம் நகருள்ளே
மன்றாட்டு கேட்காதே போமதனால் -அன்றியும்

ஆடவனுக் குப்பெண் எனநியமம் செய்யாதோள்
வேடனாய் ஆணவன் சேரக்காண் -ஆடவன்பெண்

சேர்ந்துவாழச் செய்வீர் உயிர்நாள் வரையிலே
சேர்ந்துவாழ நேமம் விதியாமே -சேர்ந்திடக்

கன்னியைக் கைபிடித்த காரணத்தால் பெற்றோர்க்கு
கன்னிதண்டம் தந்திட்டு கைப்பிடித்து -கன்னியோடாண்

சேர்ந்துவாழச் செய்வீர் உயிர்நாள் வரையிலே
சேர்ந்துவாழ நேமம் விதியதே -சேர்ந்துவாழ

தந்தை திருமணம் செய்த மடந்தையாள்
தந்தையின் நல்மனைவி யாதலால் -எந்நாளும்

அன்னையே நல்லபடி யாகத் தனையர்கள்
அன்னையைச் சேரா திரும்

இணை நூல் 36

விதையடிப் பட்டவர் அண்ணகர் சேரார்
அதுபோல வேசிமகன் சேரார் -இதுநேமம்

கர்த்தரின் நற்சபையில் பத்தாம் வழியாரும்
கர்த்தரவை சேரார் விதியது -கர்த்தரினம்

அம்மோ னியரும்கீழ் மோவாப் இனமக்கள்
நம்வழி வந்தபோது பீலேயாம் -எம்வழி

வந்தவரை சொல்லும் கெடுசொல்லே என்றதால்
அந்நியர் ஆனார் அவர்தாமே -அந்நாளில்

உன்னிறை உன்மேல் இரக்கமாய் எண்ணியதால்
உன்னிறை சொல்லதை மாற்றிவாழ்த்த -அன்பாலே

செய்தாரே ஆதலின் இவ்விரு மக்களின்
பொய்யமைதி நாடா திருப்பீரே -மெய்யது

சோதரனாம் ஏதோம் அருவருக்கா தேமண்ணில்
தீயாம் எகிப்தில் அலைந்திரிந்தாய் -சோதரன்

ஏதோம் எகிப்தினது மூன்றாம் வழியினர்
வீதம்சேர் நற்றவை யில்தாமே -ஏதும்

விலகிநில் தீயதை போர்செய்யும் போழ்து
விலகிரவில் விந்தாலே தீட்டால் -விலகியிரு

மற்றநாள் மாலைவரை நன்று; குளித்தபின்
நற்றார் நகருள்ளே வந்திடு -நற்றவரே

ஆயுதங்கள் தன்னிலொரு கோல்வைத் திருப்பீர்நீர்
வேய மலக்கழிவு தன்னைநீ -தீயவை

யென்றே குழியால் புதைத்திட கோலது
நன்றே இறைவன் விதியதே -என்றென்றும்

உன்னடுவே வாழ்கின்றார் நல்லிறைவன் தானங்கு
உன்மலம் கண்டு விலகாமல் -உன்னிறை

நித்தம் நடுவிலே வாழ புறமாக
தத்தம் மலத்தை மறைத்திடு -நித்தம்

உனைமீட்க தூயர் நடுவே உலாவி
வினைப்பகை விட்டுமீட்கத் தானே -வினையவர்

தூயர் இருப்பதால் என்றும் நகரைநீர்
தூயதாய் வைப்பீர் நலம்

இணை நூல் 37

தன்தலை விட்டோடும் வேலையை காட்டாதே
வன்செயலால் வந்திருப்ப தாலேதான் -நன்செய்வாய்

உன்வாயில் ஒன்றிலே வாழகொடு தேர்ந்திடமே
உன்கையால் வன்செய் தவிர்த்திடு -உன்னுள்

இசுரேல் இனப்பெண்ணில் வேசி தவிர்ப்பீர்
இசுரேல் இனத்தாரில் ஆணுள் -வசைபுணர்

தீதே; அருவருப்பு வேசி பணமேகேள்
தீதாமே நாய்விற் றபணம்தான் -தீதாமே

சோதரன் கையிலே வட்டியேதும் வாங்காதீர்
சோதரனில் அந்நியர்கை வட்டியை -சோதரனில்

காரணியால் வாங்கலாம் வாழ்த்துவார் வட்டியைநீர்
சீராராய் வாங்கா ததாலங்கு -சீரார்

பொருத்தனை நற்பொருந்த அப்படி செய்வீர்
பொருத்தனை தாமதம் செய்யீர் -பொருத்த

பொருந்தினோர் கையில் இறைகேட்பார் அன்றோ
பொருத்தனை நற்பலி தீர்த்து -வரையில்

பிறனின் வயல்வெளியோ தோட்டமோ செல்ல
பிறன்பலன் கையெடுத்து ஆற்று -பிறன்பலன்

கூடையில் சேர்த்தோ அரிவாளால் வெட்டவோ
கூடாது நல்லிறை சொல்

இணை நூல் 38

திருமண நேமம் இதுவே இனமே
திருமணஞ் செய்த இருவர் -வரைமனம்

கேடென பெண்மணந்தோன் எண்ண மணமுறிவு
கேடாக சீட்டுதர விட்டுடுவீர் -கேடாக

வன்சீட்டு கைகொடுத்த பின்னர் மடந்தையாள்
தன்வாழ்வில் மீண்டும் திருமணம் -நன்றே;

வரைமனம் கேடுணர்ந்த ஆண்தள்ளுச் சீட்டைத்
தரமுன்னாண் மீள்மணம் தீட்டே -திருவும்

அருவருப்பாய் காண்கிறார் மீள்மணம் தன்னை
திருகர்த்தர் நேமம் சிறப்பே -திருவாய்த்

தரும்திருநாட் டில்பாவம் வாரா படிநல்
திருமண நேமம் அளித்தார் -திருநாட்டில்

பெண்ணைப் புதிதாய்த் திருமணம் செய்திருந்தால்
பெண்விட்டு போர்செய்ய போகாது -பெண்ணவளை

ஓராண்டு பெண்ணை மகிழ்விக்கச் சொல்வீரே
சீரார் சிறப்பாய் உரைத்து

இணை நூல் 39

அரைக்கும் திரிகையின் கற்கள் அடகாய்
கரத்தில் வினைவாங்க வேண்டாம் -அரைகல்

உயிரை அடகுபோல் என்பதால் வேண்டாம்
உயிரடகு நாட்டில் விடுத்து -உயிராம்

சகோதரரில் ஓராளை வன்னாய்த் திருடி
வகைவிற்றால் அத்திருடன் சாக -வகைசெய்வீர்

இப்படியே நாட்டில் இசுரேல் இனம்தீங்கை
தப்பா தகற்றிடு வீர்சீரே -எப்போதும்

லேவியராம் ஆசரியர் வன்தொழு நோய்பற்றி
மேவியுரைக் கும்சொல்லை பின்பற்றும் -தேவன்சொல்

தந்தேநான் கட்டளைகள்; மீண்டுவரும் போ(து)மிரியாம்
மந்தசெயல் எண்ணுவீர் நீரங்கு -முந்தி

அடகு பணம்மீண்டும் வாங்கிட நீங்கள்
அடகுவைத்தோன் வீட்டில் நுழையீர் -அடகுவைத்தோன்

வீட்டினது வாயிலிலே தானிற்பீர் மீறிநீர்
வீட்டுள் செலலாகா தென்றார்சீர் -நாட்டான்

அடகுவைத்தோன் ஏழையெனில் ஆடைதனை வைக்கா
அடகை இரவிலே தந்து -இடத்தில்

குளிரால் அவனவதி கொள்ளா திருக்க
வளிமூடு ஆடைத் திருப்பு -எளியவன்

ஏழை களத்திலே வேலைசெய்ய கூலியை
ஏழைக்கு அவ்விரவே தந்திடு -ஏழையவன்

கூலியை நோக்கியிருக் கின்றான் இரவிலே
கூலியைத் தாராமன் றாட்டுசெய் -கூலியாள்

ஏழை இரவில் பசித்து இறைஞ்சினால்
ஏழையின் மன்றாட்டை கேட்பாரே -வீழ

வகைச்செயல்கள் செய்யாதீர் ஏழைக்கு கூலி
வகைமாலை யில்தானே தந்து

இணை நூல் 40

தந்தைக்காய் பிள்ளையும் பிள்ளைக்காய் தந்தையும்
எந்நாளும் கொல்லாதீர்; தன்தனதின் -மந்தசெய்கை

பாவத்திற் காக கொலைசெய்வீர் நாட்டிலே
பாவம்செய் வோர்வகை தீர்ப்புதான் -மேவிநீர்

அந்நியன் என்றே நியாயம் புரட்டாதீர்
அந்தபடி திக்கற்ற பிள்ளைக்கு -எந்நாளும்

நீதிசெய்து கைம்பெண்ணின் ஆடை அடகுவாங்கா
நீதிசெய் வீரே சிறந்தென்றும் -வீதி

எகிப்தில் அடிமையாய் நீயிருக்க கர்த்தர்
எகிப்தைவிட்டு உன்னை அழைத்த -வகையறிவாய்

செய்த அறுவடை தன்னில் ஒருக்கட்டு
வெய்யென் திரும்பாதீர் வீடுவிட்டு -அய்யா

திராட்சை ஒலிவம் பறிப்பீர் விடுத்து
திருவகை மற்ற தறுக்க -திருவில்

வறியவர் தந்தையிலார் கைம்பெண் பசிக்கு
அறுவடை செய்யாதீர் ஒட்டு

இணை நூல் 41

மனிதருள் ஏதும் வழக்குற நீதி
தனைத்தேடி நீதிமன்றம் வந்தால் -நனிசெய்தே

தீர விசாரித்து நீதி அறிவிப்பார்
சீராராம் நீதிபதி தானங்கு -சீரில்லா

குற்றம்செய் குற்றவாளி தீர்ப்பு அடியெனில்
குற்றவாளி கீழ்க்கடத்தி நாற்பதே -குற்றமடி

மீற சிறுமையாய் சோதரன் போவானே
மீறியே நீரடி யீரங்கு -மீறாது

போரடிக்கும் மாட்டினது வாயைநீர் கட்டாதீர்
போரடிக்கும் போழ்து உணவுண்ண -சீரார்

விடுமேறை என்றார் திருவங்கு நன்றே
படுமாடு உண்பது ஆங்கு -இடையிலே

சோதரன் பிள்ளை பெறாது மரித்தாலே
சோதரனின் சோதரன் பேர்காக்க -சோதரனின்

நல்மனையாள் சேர திருமணம் கட்டச்சொல்
நல்லாண் பெயர்விளங்க ஆங்குத்தான் -நல்லாணாம்

சோதரனின் சோதரன் பேர்காக்க நல்மனையாள்
சோதரன் சேரேன் எனசொன்னால் -சோதரனின்

மேலே மடந்தை உமிழ்ந்தங்கு காலணியை
காலை விடுத்தகற்று வாளங்கு -சீலார்சொல்

ஆளின் குறையில்லம் காலணியை அவ்வகை
ஆளிங்கால் விட்டகற்ற செய்தவனில் -கோளில்

உரைத்திடுவர் சோதரன் பேர்விளங்க செய்யா
திருந்ததானால் கேடுபெயர் சொல்லே -விரைந்தங்கு

ஆடவர் சண்டையிட உட்புகுந்தே பெண்ணவள்
ஆடவரில் தன்கணவன் தப்பிக்க -ஆடவனின்

மானத்தை கைநீட்டி தொட்டால் கரமறுப்பாய்
ஈனதொடு பெண்ணிரங் காதுசெய் -ஈனமாக

வெவ்வேறாய் பையில் நிறைகற்கள் தீதாமே
வெவ்வேறாய் வீட்டில் படியளவு -அவ்வகை

தீதாமே; சீராய் நிறைகற்கள் நற்படி
வேதவர்வைத் தின்புற வாழ்ந்திட -வேதனை

வேறாய் நிறைகற்கள் வேறாய் படியளவு
சீறில்லா வைத்திருப்போன் தன்னையே -சீறும்

அருவருப்பாய் கர்த்தர்க்குக் காணப் படுவான்
சரியாக சீரா யளப்பீர் -இருந்த

எகிப்தின்று வந்த வழியில் அமலேக்
வகையாய் இளைப்பான மக்கள் -திகைக்கவே

அஞ்சாது தேவன்சொல் கேளாது வெட்டினான்
மிஞ்சியிரா வண்ணமாய் வெட்டிபோடு -வஞ்சியொடு

நாட்டில் சிறப்பாய்க் குடிசேர்ந்த பின்னாளில்
நாட்டின் பகைவர்கள் அற்றுபோக -நாட்டில்

வரும்முன் அமலேக்கு செய்த செயலை
கரம்வைத்து வாங்கு பழி

இணை நூல் 42

திருவளிக்கும் நற்றேசம் சேர்ந்து வசிக்க
திருதரும் நற்பலன்கள் தன்னில் -தருவீர்

முதற்பலங்கள் எல்லாம் திருமுன்னே கூடை
யதில்போட்டு ஆசரியன் கையில் -முதலாகத்

தந்தையர்க்கு கர்த்தரவர் வாக்களித்த தேசத்தில்
வந்துசேர்ந்தேன் என்றே உமதிறையின் -சந்நிதியில்

செய்கிறேன் நல்லறிக்கை இன்றுநான் என்றாசன்
மெய்செவி கேட்க உரைத்திடு -செய்த

உரைகேட்ட ஆசரியன் கூடைபீடம் முன்னர்
தரும்கனிகள் வைக்க உரைப்பாய் -உரையே

அழிந்திடும் சீரிய தேசத்தான் எந்தை
வழிசென்றார் சிற்றார் எகிப்து -வழிசென்ற

சிற்றாராய் சேர்ந்தோம் எகிப்தில் திரட்சியாய்
நற்றவர் நாடோடி யாய்வளர்ந் -திற்றமாய்

மேலினம் ஆக அடிமைகளாய் வாதித்தான்
சீலரை கீழாண் அரசனவன் -சீலர்

ஒடுக்கத்தில் கர்த்தாவே மீட்டிடும் என்றே
நடுங்கும் கதறல் செவிகேள் -ஒடுக்கியோர்

தண்டித்தீர் கைபலத்தால் ஓங்கிய உம்புயத்தால்
விண்வியன்செய் செய்துநீர் மீட்டுவந்தீர் -விண்வியன்

மீட்டுதந்தீர் எங்களுக்கு இத்தேசம்; வந்துசேர்ந்த
நாட்டிலே பாலோடு தேனோடும் -நாட்டின்

முதற்கனிகள் கொண்டுவந்தேன் என்றுரைத்து ஆங்கே
முதற்கனிக்காய் கொண்டாடு வீர்நீர் -முதலார்

திருமுன்னே நீயும்சார் லேவியனும், உன்னில்
இருக்கிற நாடோடி யோடும் திருதேவன்

உன்கை அளித்த சிறப்பான வாழ்பொருள்
தன்னிற்காய் சேர்ந்து மகிழ்ந்திடுவீர் -அன்றியும்

பத்திலொருப் பங்குதரும் மூன்றாம் திருவாண்டு
பத்திலொருப் பங்குதனை வாயிலில் -தத்தமாய்

லேவியர் கைம்பெண்கள் தந்தையிலார் கையெடுக்க
மேலவர் முன்னுரை தீர்த்திட்டேன் -மேலார்

திருவே உரைபடி பத்திலோர் பங்கை
திருத்தமாய் சொன்னபடி தந்தேன் -திருவே

எழவிற்கோ இல்குறைக்கோ நானெடுக்க வில்லை
உழவின் வரத்தினது பங்கு -விழாதுநான்

கட்டளைகள் மீறாது நான்மறவா தேசெய்தேன்
கட்டளை பத்திலொருப் பங்குதனை -திட்டமாய்

செய்துமுடித் தேன்விண்ணின் ரெம்செய்கை கண்டுநீர்
செய்வீர் திருவாழ்த் துரைத்திடும் -மெய்யாமே

கட்டளைகள் நேமங்கள் நீசெய்ய ஆணையாய்
கட்டளை தந்தார் உனக்கின்று -திட்டமாய்

உன்முழு ஆன்மா முழுமன தோடுகாத்து
என்றும் நடப்பாய் சிறந்துநீ -இன்று

திருகர்த்தர் என்தேவன் என்றாய் இனமே
திருதந்த கட்டளைகள் எல்லாம் -சிரமேற்று

என்றுமே கைக்கொண்டு, சொல்லிற்குக் கீழ்ப்படிவேன்
என்றும் கொடுத்தாய்நீ வாக்காக -இன்று

திருவும் தருங்கட் டளைகள் படிகீழ்
சிரமேற் சிறஞ்செய் இனமே -திருவில்

புகழில் வியனில் உனைப்போல் எவரில்
இகத்தில் இனமெனதாய் தூய்

இணை நூல் 43

தந்தையரின் தேவன் உரைபடியே தந்திட்ட
விந்தை நறுதேசம் ஆறுகடந்(து) -அந்த

திருநாட்டில் சென்றபின் ஏபால் மலையில்
திருநேமம் கல்லில் எழுது -திருசொல்போல்

கல்லுகள் பேராய் திருநாட்டி ஏபாலில்
கல்மேலே பூசுசாந்து, சொற்களை -கல்மேல்

எழுதி; இரும்பு படாது செதுக்கி
வழுவிலா பீடத்தைக் கட்டு -அழகாய்

முழுக்கற்கள் கொண்டு பலிபீடம் செய்வாய்
வழுவிலா நற்பலி தீயில் -வழுவிலா

மாக்கள் பலிதந்து கர்த்தரின் சந்நிதியில்
மாக்கள் புசித்து மகிழ்ந்திடு -வாக்குரை

லேவியராம் ஆசரியர் கூட இருக்கையில்
மேவியே மோசே இசுரேல்கேள் -தேவனாம்

யாவேயின் மக்களானாய் இந்நாளில்; ஆகையால்
யாவேயின் சொல்கீழ்ப் படிந்திடு -தேவனினம்

யோர்தான் கடந்தபின்பு சொல்லாலே வாழ்த்திட
சீரார் சிமியோன்சேர், லேவியூதா, -சேர

இசக்காரும், யோசேப்பும், பென்யமீனும் ஆறாம்
திசைகெரிசீம் தன்னிலே சொல்லு -மிசைநதி

யோர்தான் கடந்தபின்பு சொல்லாம் கெடுசொல்லை
சீரினம் ரூபன்காத் ஆசேரும் -சேர

செபுலோன்தாண் நப்தலி என்றினம் ஆறும்
யெபால்மலை மேலே உரைக்க -சபைகேள்மின்

அப்பொழுது லேவியர் சத்தமிட்டு பார்த்தங்கு:
எப்பொழுதும் கர்த்தர் அருவருக்கும் -தப்புசெயல்

வார்ப்பிக்கப் பட்ட சிலையை ஒளிப்பிடத்தில்
சேர்த்தோன்மேல் சாபமென சொல்லிட -சீராராம்

மக்களும் அச்சொல்லிற் காமென் எனச்சொல்ல
மக்களில் பெற்றோர் கெடுசொல்லால் -தக்காக்

கெடுசொன்னோன் மேல்சாபம் சொல்ல இனத்தார்
கெடுசொல்லிற்(கு) ஆமெனென சொல்லிட -வையில்

பிறனெல்லை ஒற்றி செயற்தவறு சேய்தோன்
அறமில்லோன் மேற்பாவம் சொல்லு -சிறப்பில்

புரிந்தோன்மேல் சாபமென ஆமென் இனம்சொல்
குருடன் வழிவிலக்கல் கேடு -இரும்நாட்டில்

நாடோடி திக்கற்றோன் கைம்பெண் இவர்களின்
நாடிவர தம்நியாயம் செய்புரட்டு -கேடவர்மேல்

சாபமென சொல்ல; இனமுமங்கு ஆமெனென
சாப முரைத்திடச் சொல்லங்கு -சாபமே

தந்தையின் நல்மனையாள் தன்னையெவன் வன்புணர்ச்சி
எந்நாளும் சாபம் பெறவுரை -அந்தபடி

மக்களும் ஆமெனென சொல்லி விலங்கோடு
தக்கா புணர்பவன் கேடுசெய்வோன் -மக்களும்சொல்

தந்தைக்கோ தாயிற்கோ வித்தாம் மகளையங்கு
சிந்தையிலா வன்புணர்வோன் மேல்சாபம் -அந்தபடி

மக்களும் ஆமெனென சொல்லிட மாமியோடு
தக்கா புணர்பவன் கேடுசெய்வோன் -தக்கா

ஒளிப்பிடத்தில் கொல்பவன்மேல் சாபமெனச் சொல்லு
அளிமக்கள் எல்லார்சொல் ஆமென் -எளியோனாம்

குற்றமிலா தோனை கொலைசெய்ய கையூட்டு
அற்றான் சபிக்கப்பட் டோன்என்றே -குற்றம்

அளிமக்கள் எல்லார்சொல் ஆமெனென இந்த
அளிநேம சொல்லெல்லாம் கேட்டும் -அளிநேமம்

பின்பற்றக் கைக்கொள்ளா தோன்மேலே சாபமென
பின்மக்கள் ஆமென் உரைத்து

இணை நூல் 44

இன்றுநான் நன்றாய் விதிக்கிற கட்டளைகள்
என்றும்நீ செய்ய கவனமாகி -மன்னர்சொல்

மெய்யாகக் கேட்டு செவிகொடுத்தால், உன்தேவன்
மெய்பூமி மேன்மையாய் வைத்திடுவார் -மெய்யாராம்

உன்தேவ சத்தம் செவிகொடுக்க இப்பொழுது
இன்சொல்லாம் வாழ்த்துக ளெல்லாமே -உன்மேல்

பலிக்கும். நகர்வெளி என்றெங்கும் பேறு
நிலந்தரு நற்கனி பெற்று -இலாசெல்வம்

ஒன்றுமிரா; கூடையும் மாப்பிசையும் தொட்டியும்
நன்றாய் இருக்கும்; வரத்திலும் -மேன்மையாய்

போக்கிலும் பேறுபெற்று வாழ்வீர் விரைந்தங்கு
தாக்க வருவோர் கலைந்தவர் -தாக்குதல்

தாளாது ஏழு வழிகளில் ஓடுவார்கள்
கேளினமே வந்தார் ஒருவழியாய் -கேளினமே

கட்டளைகள் கைக்கொண்டு கர்த்தரளி தேசத்தில்
இட்டபடி தம்தூய நல்லினமாய் -எட்டா

நிலையில் திருவைப்பார்; அப்போது கர்த்தர்
நிலைபெயரைக் கொண்ட இனத்தார் -நிலையஞ்சி

பூமியின் மக்கள்காண் பர்சீரார் கர்த்தரும்
தீமையிலா உன்தந்தை யர்க்கொடுப்பேன் -பூமி

உரைத்த திருத்தேசம் தன்னில் கனியை
உரைத்த படியே திருவும் -கரந்தருவார்

கர்ப்பக் கனியிலும், உன்மிருக நற்பலனும்,
கர்த்தரவர் கட்டளை யிட்டவர் -கர்த்தரவர்

ஏற்ற நலகாலத் தில்மழை பெய்யவும்,
போற்றிசெய் வேலையில் எல்லாமே -போற்றிவாழ்த்தி

செல்வக் கருவூலம் வானைத் திறந்திடுவார்
செல்வம் திறந்து கடன்தருவாய் -செல்வமில்

நீயோ கடன்வாங்கா தேயிருப்பாய் இன்றுநான்
நீயுன் செவிகேட்கும் நேமம் - அனைத்திலும்

சாயாக் கடைப்பிடித்தால் மேற்சொன்ன வாழ்த்துகள்
தேயாது தந்திடுவார் சீர்தானே -சாயாது

இன்றுநான் உங்களுக்கு சொல்லும்சொல்
நன்றிலாது விட்(டு)விலகி வேறுதேவர் -தன்னைநீர்

சேவிக்க வலதிடதாய் போகாமல், நின்றாலே
மேவிதலை யாய்வாலா காதிருப்பீர் -தேவயினம்

கீழாகா மேலாவாய் என்றே உரைத்தனன்
வீழா திருமக்கள் பெற்றிடும் -வேழா

திருவாழ்த்து தன்னையே மோசே பகன்றான்
திருச்சொல் கடைப்பிடிக்க சீர்

இணை நூல் 45

இன்றுநான் உங்களுக்கு சொல்லும்சொல் சீராமே
நன்றிலாது விட்(டு)விலகி வேறுதேவர் -தன்னைநீர்

சேவித் திடவலதாய் போனால் கெடுசொற்கள்
மேவிவரும் நான்சொல் பவைபலித்து -ஏவ

நகர்வெளி எங்கும் சபிக்கப்பட் டோனாய்
வகைகூடை மாத்தொட்டி கேடாய் -வகைசாபம்

பிள்ளைக் கனியும் நிலக்கனியும் சாபமாய்
கிள்ளிப்போம் செல்வ மெலாமங்கு -மெள்ள

வருகையிலும் சாபமே, போகையிலும் சாபம்.
திருவிட்டு செய்கிற தீச்செய் -கரத்தினால்

கெட்டுப்போய் நீஅழியு மட்டுமாய், கைகளை
யிட்டுச்செய் எல்லாம் சபித்திருக்க -நட்டவர்

காணியாம் தேசத்தில் கர்த்தர் உனையழிக்க
காணங்குக் கொள்ளைநோய் தந்திட்டு -வீணாக

ஈளையினால், காய்ச்சலினால், வெம்மையினால், தீயினால்
வேளை வறட்சியினால் வாதுவர வேளை

கருக்காயால், விண்பனியால் வாதித் தழிய
இருமட்டும் உன்னைத் தொடரும் -இருந்தலைமேல்

வானமது வெண்கலமாய் கீழுள்ள பூமியும்
ஏனோ இரும்பாகப் போமங்கு -வானிறை

விண்ணின்று பெய்மழை தூசியாய் மண்ணாய்பெய்
விண்ணின்று நீயழியப் பெய்திடும் -விண்ணார்சொல்

உன்பகைவர் மேற்கொள்வர் உன்னைத்தான்; ஏழுவழி
என்றே முறிந்தோடு வாய்நீதான் -அன்றியும்

பூமியின் மூலையெலாம் போவாய் சிதறுண்டு
பூமியின் காட்டு மிருகங்கள் -பூமேல்

பறந்திடு மெல்லா பறவைக்கும் ஊணாய்
இறந்தவுன் இன்னுடல் போகும் -இறந்தோன்

இரையாய் உடல்தின்னும் மாக்கள் விரட்ட
கரமில்லா போகும். குணமில் -எரிபந்த

சீழ்பருக்கள் நாடாம் எகிப்தினது வாதைகள்
கீழ்மக்கள் மீது வருமன்றோ -வீழ்மனதின்

எண்ண மயக்கத்தால் கண்குருடால் வாதிப்பார்
விண்ணார் மனந்திகைக்கச் செய்திட்டு -மண்ணில்

குருடன் தடவித் திரியுமாப்போல் காலை
திரிவாய் தடவி இருள்சூழ் -திருக்க

வழிகளில் ஒன்றுமே வாய்க்காபோம்; எந்த
வழியும் உதவிசெய்வார் இல்லா -தழிய

ஒடுங்கி பறிகொடுப்போன் ஆவாய் திரிந்து
எடுத்த செயலெலாம் வீணாய் -எடுத்துநீ

பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன்
பெண்ணை புணர்வானே; வீடுகட்ட -மண்ணில்

குடியிருக்க மாட்டாய்; திராட்சை விதைத்தும்
குடித்திடாய் சாறோ பலனை -அடித்தவர்

ஆவினம் கண்முன்னே ஊனாக்கி உண்பரே
ஆவினம் மாக்களெலாம் கொள்ளையாக -தேவ

உதவியில் லாது விடுவிப்பார் இல்லா
ததனால் தவிப்பாய் உழன்று -விதமாகப்

பிள்ளையோடு பெண்களும் அந்நியர்கை போவார்கள்;
பிள்ளை வரும்வழி வைத்தங்கு -நொள்ளையாய்

உன்கண்கள் நாடோறும் பூத்துப்போம்; உன்கையில்
என்றும் பெலனில்லாப் போம்தானே -அன்றியும்

உன்நிலத்தின் எல்லாக் கனியையும், கைச்செயல்கள்
தன்னின் பலனையும் நீஅறியா -வன்னார்

புசிப்பார்கள்; நீயெல்லா நாளும் ஒடுங்கி
திசையில் நொறுங்கி உழன்று -அசைவிலாதே

உன்கண்கள் காண்செயல்க ளாலே மதிமயங்கி
உன்கால் தொடங்கி தலையுச்சி -வன்பருக்கள்

உன்மேல் குணமாகா வண்ணம் முழங்கால்கள்
உன்தொடைகள் எல்லாம் வருமேகேள் -என்றும்

உனையும், உனக்காக ஏற்படுத்திக் கொண்ட
உனது அரசனையும் விட்டு -இனமறியா

மக்களிடம் போகச்செய் வாரே திருவில்லா
மக்களின் தேவர் பணிவாய்நீ -தக்கா

உனைக்கொண்டு போய்விடும் மக்களுள் நீயோ
வினைதிகைப்பு வன்பழஞ்சொல் லாவாய் -வினைவிதைக்க

மிக்காய் விதையை வயலுக்குக் கொண்டுபோவாய்,
தக்காது கொஞ்சம் அறுப்பாய்நீ -மிக்கறுப்பும்

வெட்டுக் கிளிநிலத்தின் நெல்லெல்லாம் தின்றுபோடும்
நட்ட திராட்சையின் சாற்றைநீ -கிட்டிப்

பருகுவ தில்லையே பூச்சி அதைத்தின்(று)
இருமிட மில்லா வகையாய் -நருநெட்(டு)

ஒலிவ மரங்கள் இருக்குமே மிக்காய்
ஒலிவயெண் ணெய்யோ வராது -ஒலிவமர

பிஞ்சிலே தானுதிரும்; பிள்ளை திருச்செல்வம்
பிஞ்சிலே போவர் சிறையாக -மிஞ்சிய

உன்மரங்கள் எல்லாம்சேர்த் துன்நிலத்தின் நற்கனிகள்
தன்னை வரும்விட்டில் பாழாக்கும் -உன்நடுவே

வாழவந்த அந்நியன் மேற்பட்டு மேன்மேலாய்
வாழ இனம்நீரோ தாழ்ந்துபோய் -வாழவந்த

அந்நியன் உன்னிடத்தில் செல்வ கடன்படான்,
அந்நியன் கையில் கடன்படுவாய்; -அந்நியன்

உன்மேலே மேற்றலையாய் நீவாலாய் தானிருப்பாய்
தன்தேவன் சொற்கேளா தோன்சாபம் -கொன்று

அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,
அழித்து அடையாள மாக -பழிச்சொல்லாய்

எல்லாம் இருந்தும் மனமகிழ்ச்சி யோடுகளிப்
பெல்லாம்சேர் தேவனை விட்டுவிட்டு -அல்லாமல்

எல்லாம் குறைவுபட்டு, பட்டினியாய் தாகமாய்
நல்லாடை இல்லாது நல்தேவன் -வல்லார்

எதிர்வரச் செய்ய பகைவரைச் சேவித்(து)
எதிரி அழிநுகம் எஃகாய் -எதிரி

கிழவனென்றும் பாராமல், வாலிபன் என்றும்
அழுகைக் கிரங்காம லும்வன் -வழுமனம்

கொண்ட தெரியா மொழிபேசு மக்களை
மண்கடை விட்டுவர செய்வாரே -மண்ணில்

அழியுமட்டும் மக்கள் பலனை, நிலத்தின்
வழிகனியைத் தின்பாரே ; உன்னை -யழித்தவர்

தீருமட்டும் உன்நெல்லும் சாறு திராட்சையும்,
சேரமாக்கள் இல்லாது போம்தானே -வீரர்கள்

தேசமெங்கும் நீநம்பி உள்ளிருக்கும் உன்மதில்கள்
நாசமாகி கீழே விழுமளவும், -வீசைபகை

வாசல் களிலெங்கும் முற்றிகைப் போடுவர்;
வாசல் களிலெங்கும் போட்டிடுவார் -நாசமாக்க

உன்பகைவர் முற்றிகைப் போட்டு நெருக்கவும்
உன்தேவன் தந்த கனியான -உன்பிள்ளை

ஊணாகத் தின்பாய்நீ அக்காலம் செல்வமழி
வீணாய் பகிராரே ஊன்தனை -ஊணில்லா

உன்பகைவர் முற்றிகைப் போட்டு நெருக்கவும்
உன்னிடம் எல்லாம் குறைவுபட -உன்நட்டான்

தின்னுவான் ஊணை மறைவாக. ஈதெல்லாம்
உன்தேவன் சொல்கேளா வாதைதான் -நன்றாய்த்

திரட்சியிலே விண்மீன்கள் போலிருந்த நீங்கள்,
சிரமேற்கா காரணியால் கொஞ்சம் -கரையினமாய்ப்

போவீர்கள். உங்களுக்கு நன்மைசெய்ய உங்களை
மேவிபெருஞ் செய்தார் அழித்திடுவார் -மேவிதான்

காணியாய் நீர்பெறும் தேசத் திலிருந்து
காணாப் பிடுங்கிப்போ டப்படுவீர் -வீணாய்

கடைவரை மக்களுள் உன்னை சிதறி
திடனில் சிலைகள்சே வித்தே -அடையுமம்

மக்களுள்ளே ஆங்கே யுனக்கு இளைப்பிராது,
தக்கதாய் தங்கித் தரிக்கயிடம் -தக்கிராது

தத்தளிக்கும் உன்மனது, சோர்ந்துபோம் கண்களையும்
நித்தம் மனக்குழப்பம் தான்மிஞ்சும் -நித்தமும்

ஐயத்தால் உன்னுயிர் ஊசலாடும்; உன்னுயிர்பால்
ஐயமுற நம்பிக்கை யில்லாமல் -வைய

இரவும் பகலும் திகில்கொண்டு நீயும்
இருப்பாய் நிதமுமங்கு அஞ்சி -இருளில்

விடியலில் எப்போது மாலை வருமோ
நெடிதாய் இரவே விடியல் -கடிதாய்

வருமோ எனத்திகிலால் கண்காணும் காட்சி
வருந்திநீ வாயால் பிதற்றி -வருத்தம்

இனிக்காணாய் என்றுநான் சொன்னவழி, கர்த்தர்
உனைக்கப்பல் தன்னில் எகிப்து -முனைக்கொண்டு

போகச்செய் வாரே பகைவர்க்கு வேலையாளாய்
போகவிற்றால் கொள்வா ரிலை

இணை நூல் 46

ஓரேபில் நல்லினத்தா ரோடு உடன்படிக்கை
சீரவர் செய்திட்ட பின்னராய் -சீரவர்

மோவாப் எனும்நாட்டில் சொன்ன உடன்படிக்கை
தேவன்சொல் கேட்பீர் இவைதானே -மேவியவன்

மோசே இசுரேலர் எல்லாம் வரவழைத்து,
மோசே அவர்களை நோக்கிச்சொல்: -வீசை

எகிப்தென்னும் தேசத்தில் உங்களின் கண்கள்
வகைமுன் னனைத்தும் அழித்தார் -எகிப்தின்

அரசனவன் பார்வோன் அவனுடைய வேலை
அரசினது தேச முழுதும், -அரசர்நம்

தேவன்செய் மிப்பெரிய சோதனைகள் வாதைகள்
மேவும் அடையாளங் கண்டீர்நீர் -தேவனவர்

உங்களுக்கு கர்த்தர் உணர்த்தக்க மேன்மனதும்
இங்கே விழிகாணத் தக்ககண்கள் -மங்கவே

இந்நாள் வரைத்தர வில்லையே; கேள்தக்க
அந்தோ செவியிலை கேள்மின்னே -எந்நாளும்

நான்உங்கள் தேவனென்று நீங்கள் அறிந்துகொள்ள
நான்நாற் பதாண்டுகள் உங்களை -நான்நடத்தி

பாலையில் ஏந்தி வரவைத்தேன்; உங்களின்
மேலிருந்த ஆடைகிழி யாதிருந்த -மேலார்செய்

காலிருந்த உன்செருப்பு தேயா திருந்ததே
காலைமாலை அப்பம் புசியாது -சீலசாறு

நீரருந்தா தேயிருந்தீர்; நீங்கள் இடம்சேர
வீரசிகோன் ஓக்விழுந்தார் மண்ணிலே -சீராக

கீழ்த்திசை தேசத்தைப் ரூபன் மனாசெபாதி
வாழ்காத்தென் நல்லினத்தார்த் தந்தோம்நாம் -வாழ்நல்

இனமிப் பொழுதும் செயலெலாம் வாய்க்க
மனம்கொண்டு சொல்கீழ் படிவீர் -இனத்தாரே

உன்தேவன் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபென்
உன்முன்னோர்க் கையிட்ட ஆணைக்காய் -இன்றுன்னைத்

தன்மக்கள் என்றேற் படுத்திடவும் தாம்உனக்கு
நன்தேவ னாயிருக்க வும்தானே -என்றென்றும்

தேவனாம் கர்த்தர் உடன்படிக்கைக் கின்றவர்
தேவன்செய் ஆணை யுறுதியை -தேவமக்கள்

உட்பட நற்குலத்தின் சீர்தலைவர் மூப்பர்கள்
நட்டார் எலாரும் உளரல்லோ -நட்டாராம்

உங்களின் பிள்ளைகள், உங்கள் மனைவிகள்,
உங்களின் பாளயத்துள் அந்நியர் -இங்கு

திருவின்முன் நிற்கிறீர்; உங்களோடே மட்டும்
திருச்சொல் உறுதி யிலாது -திருமுன்னே

இன்றிங்கே நம்மோடே கூட திருமுன்னர்
மன்றாட நிற்கிறவர் மற்றுமாய், -இன்றிங்

கிராதவர்கள் கூட அதைசெய் கிறேன்நான்
இராதவரும் சேர்த்தாணை செய்து -இருந்தோம்

எகிப்தென்னும் தேசக் குடியாய், கடந்த
வகையிட மக்கள் நடுவில் -திகைநடந்து

வந்த கதையும் அறிவீர்கள். பொன்வெள்ளி
வந்த சிலைமரக் கல்தானே -அந்த

இனமவரின் தேவரென பொய்போற்றப் போக
இனத்திருவை விட்டுவிட்டு செல்ல -இனத்திலே

நஞ்சு வளராத வண்ணம்வேர் தன்னையும்
அஞ்சி பிடுங்கி எறிந்திடுவீர் -மிஞ்சியவர்

விட்டுச் செலவங்கு ஆணை யுறுதிசொல்
கெட்ட வழியில் மதுவருந்தி -இட்டப்

படிநடந் தாலும் எனக்குச் சுகமே
அடிமனதை தேற்றுமன்னி யார்கேள் -இடிந்தவர்

அப்போ சினங்கொண்டு கர்த்தர் எரிச்சலுடன்
தப்பாது இந்நூலில் தானெழுத்தாம் -தப்பாத

சாபமெலாம் மேற்றங்க; கர்த்தர் அவன்பேரை
சாபமாய் விண்கீழ் குலைத்திடுவார் -ஏபால்சேர்

இந்நூலில் தானெழுத்தாம் சாபங்கள் தப்பாது
எந்த இனத்திலும் சேராது -அந்தபடி

எல்லாவற் றிற்கும் புறம்பாக்கிப் போடுவார்
வல்லார் இறைவனின் சொல்லிது -அல்லாமல்

பின்எழும்பும் உன்வழியார் அந்நியர் ஈதுகண்டு
மன்னர் வருவித்த வாதைகள் -வன்நோய்கள்

காண, திருகர்த்தர் வெஞ்சினத்தால் சோதோமும்
வீணர் கொமோராவைப் போல்செய்தார் -வீணராம்

அத்மா செபோயீம் கவிழ்த்தது போலவே
இத்தேச நல்வள மெல்லாமே -வித்தும்

விதைப்பும் விளைவும் இலாது, எரிகல்
சிதையுப்பால் காண்பார் எரித்தே -வதையாக

வெஞ்சினம் பற்றெரிய காரணம் என்வென்று
அஞ்சிடும் மாந்தரவர் சொல்லுவார் -வெஞ்சிறை

விட்டுமீட்ட கர்த்தர் தருநல் உடன்படிக்கை
விட்டு சிலைபொய் யுணர்வீர்நீர் -மட்டிலா

வெஞ்சினம் பற்றி கடையெல்லை தன்னிலே
வெஞ்சினத்தால் வேறாய் யெறிந்தாரே -அஞ்சாது

பொய்ச்சிலைகள் பின்பற்றி மீறியதால் என்றுசொல்லி
மெய்யார் செயல்நன் றெனவுரைப்பார் -மெய்யே

மறைவான தெல்லாமே கர்த்தரின் சொந்தம்
மறையார் நமக்களித்த இந்த -மறைநூல்

படியெல்லாம் செய்வதே நம்வழியார் நம்மின்
அடிபணிதல் என்றும் சிறப்பு

இணை நூல் 47

நானுனக்கு முன்வைத்த வாழ்த்துகளும் சாபமும்
ஈனர்மேல் வந்திட: உன்தேவன் -ஈனராய்

மண்ணில் துரத்தி விடப்பட்டே போயிரும்போ,
எண்ணமாறி ஈனர் திரும்பிட -மண்ணிலே

இன்றுநான் கற்பிக் கிறபடி யெல்லாமே,
என்றென்றும் நீயுமுன் பிள்ளைகள் -அன்றாடம்

உங்கள் முழுமனது ஆன்மா நிறைவோடு
தங்கி செவிகொடுத் தால்தானே -மங்காத

உன்தேவன் உந்தன் சிறையிருப்பை விட்டிரங்கி,
உன்தேவன் உன்னைச் சிதறடித்த -வன்மக்கள்

எல்லா ரிடத்தி லிருக்கும் உனைத்திரும்ப
நல்லார்ச்சேர்த் துக்கொள்ளு வார்சீராய் -நல்லாரும்

உன்னுடையோர் வானின் கடைதிசை மட்டுமாய்
வன்துரத் துண்டிருந்தால் தானுமவர் -உன்தேவன்

அங்கே இருக்கிற உன்னைச் சிறப்பாய்சேர்த்
தங்கே யிருந்து கொணர்ந்தவர் -அங்கிரு

உன்முன்னோர் காணியாம் தேசத்தை உன்காணி,
உன்தேவன் உன்னைச் சிறப்பாய்சேர்த் -தன்றவர்

நன்மைசெய்து, முன்னோரைப் பார்க்கிலும் உன்னைத்தான்
நன்றாய்ப் பெருகச்செய் வாரிறை -என்றென்றும்

உன்தேவன் தன்னை முழுமனதும் ஆன்மாவும்
அன்புகூர்ந்து நீபிழைக்க , உன்தேவன் -உன்மனதின்

வன்செய் நுனித்தோலை வெட்டி எறிவாரே
நன்றாய் வழியார்க்கும் அங்குத்தான் -வன்செய்மேல்

இந்நூலின் சாபங்க ளெல்லாம் பகைமேலும்
அந்நாளில் உன்னைப் படுத்தினவர் -எந்நாளும்

மேலே சுமரச்செய் வார்திரு. நீயங்கு
மேலாய் மனந்திரும்பு சீராக்கி -மேலவர்

கர்த்தரின் சொல்லிற் செவிகொடுத்து, கற்பிக்கும்
கர்த்தரின் கற்பனைகைக் கொள்வாய்நீ -கர்த்தர்

உனக்குநன் மைசெய் வகைசெய்த உந்தன்
வினையிலெலாம் செல்வம் கொழிக்க -நனியிறை

கர்த்தரின் சொல்லிற் செவிகொடுத்து, கற்பிக்கும்
கர்த்தரின் கற்பனைகைக் கொள்வாய்நீ -கர்த்தர்

உனதுடைய முன்மேல் மகிழ்ந்தது போல
உனைமகிழ்வார் மீண்டும் சிறந்து -நினைப்பீரே

கட்டளைகள் தூரத்தில் இல்லையே கட்டளைகள்
விட்டு மறைந்து இலையேகாண் -எட்(டு)விண்

தனையேறி யாரெமக்கு தந்திடுவார் என்சொல்
வினையது விண்ணில் இலையே - வினையாய்

கடல்கடந்து யாரெமக்கு தந்திடுவார் சொல்ல
கடல்கடந்து உள்ளதோ சொல்லே -அடைய

அருகாக வாயில் மனதில் உளதே
திருச்சொன்ன கட்டளைகள் தானே -திருவாக

வாழ்வும்சேர் நன்மையும், தீமை மரணமும்
வாழ்வுனக்கு முன்னாக வைத்தேன்நான். -வாழ்ந்து

பிழைத்துப் பெருக வளதேசத் தில்தான்
அழைதேவன் சொல்கைக்கொள் நன்று -அழைதேவன்

கேளா மனம்பேத லித்து, இழுப்புண்டு
கேளாத தேவர் பணிந்திட்டு -கோளில்

நதியோர்தான் நீகடந்து போகிற நாட்டில்
விதியது போவீர் அழிந்து -விதியிது

வாழ்வும்சேர் நன்மையும், தீமை மரணமும்
வாழ்வுனக்கு முன்னாக வைத்தேன்நான். -கீழ்பூமி

மேல்வானம் இவ்விரண்டும் சான்றாக இன்றுநான்
மேல்லும்மின் வைத்தேன் சிறந்துனக்கு - மால்மக்காள்

ஆகவே நீயும் வழியாரும் தப்பித்து
வேகமாய் வாழ்வை தெரிந்திடு, -ஈகைதந்த

முன்னோர்க்கை ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபென்
நன்னார் இறையளித்த நாடதில் -நன்றாய்நீர்

தேவனாம் கர்த்தரில் அன்புகூர்ந்து, சொல்லவரின்
மேவி செவிகொடுத்து, பின்பற்று -தேவனே

உந்தனுக்கு வாழ்வாகி நீண்டநாள் வீடுமாக
எந்நாளும் தானிருப்பார் சீர்

இணை நூல் 48

பின்னுமவன் மோசே இசுரேலர் நோக்கியே:
இன்றுநான் நூற்றி யிருபது -நன்சேர்

வயதானோன்; நானியும் போகவரக் கூடா
இயலாக் கடப்பதுயோர் தானே -வியனாக

உன்தேவன் கர்த்தர் கடப்பாரே முன்னின்று
வன்தேச மக்கள் அழிப்பாரே; -நன்றாக

தேசத்தை கொள்ள திருச்சொன்ன யோசுவா
தேசங் கொளமுன் கடந்திட -வீசியே

கர்த்தர் அழித்த எமோரியர் சீகோன்ஓக்
கர்த்தர் அவர்தேசம் செய்ப்போல -கர்த்தர்

இனங்கள் எலாங்கொடுக்க, இங்கே விதித்த
வனக்கட் டளைபடிய ழித்து -இனமே

பலங்கொண்டு நன்றாய் திடமனதாய் ஆகி
பலங்கண்டு அஞ்சி திகைத்து -பலமில்லா

போகாதீர்; உன்தேவன் கர்த்தர்தாம் உன்னோடே
போக வருகிறார் சேர்ந்தேதான் -ஈகையார்

உன்னிறை விட்டு விலகுவதும் இல்லையுனை;
உன்னையவர்க் கைவிடுவ தும்மில்லை -என்று

திருமோசே சொன்னான் இனத்தார் செவிக்கேள்
திருசெல்வார் முன்னே சிறந்து -திருசொல்கேள்

பின்மோசே யோசுவாவை கூறி அழைத்தவன்
இன்ன இசுரேலர் எல்லார்முன், -இன்சொல்

அவனோக்கி: பிள்ளாய் பலதிடங்கொள் நன்றாய்
இவர்க்களிக்க முன்செல்வாய் நாடு -அவர்தாமே

கர்த்தர் உனக்குமுன் போயுன்னோ டேயிருப்பார்;
கர்த்தருனை விட்டு விலகாரே -கர்த்தர்

உனைக்கை விடுவ துமில்லைகாண்; அஞ்சி
இனங்கலங்கா தேநீயும் என்று -இனங்கற்க

சட்டநூல் மோசே எழுதி, அதைதிருவின்
சட்டபடி பெட்டி சுமப்போராம் -திட்டலேவி

ஆசரியர்க் கொப்புவித்து கட்டளை யிட்டதிது
தேசத்தில் வாசியும் நூல்தனை -தேச

விடுதலையின் ஆண்டாமே ஒவ்வொரு ஏழின்
முடிவிழா கூடாரம் தேர்ந்த -அடைநகரில்

எல்லாரும் சந்நிதியில் சேர்ந்தபோது, இந்நூலை
எல்லாரும் கேட்கவாசிப் பீர்நீரே -நல்லாராம்

ஆடவர் பெண்டிர் வழிவந்தோர் அந்நியர்
மேடைவாசி சொற்களைக் கற்றிட்டு -மேடைவாசி

இந்நூலின் சொற்களை அஞ்சி படிநடக்க
இந்நூலை கேட்கவாசிப் பீர்

இணை நூல் 49

பின்னும் திருவங்கு மோசே மரித்திடுவாய்
நன்மகன் யோசுவா கட்டளை -என்கைபெற

கூடம் அழைத்துவா; அவ்வா றிருவரும்
கூடம்முன் நின்றார்கள் ஆங்குவந்து -சாட

திருகர்த்தர் கூட முகிற்றூண் தனிலே
திருவிருவர்க் காண திருவின் -திருத்தூண்

திருக்கூட வாயில்மேல் நின்றது. கர்த்தர்
திருமோசே நோக்கி உரைத்து -கரையோய்

மரிக்கப்போ கின்றாய்நீ; இம்மக்கள் போன
திருதேசத் தில்லுள்ள தேவர் -திருவின்றி

சோரமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, செய்தவர்
தீர உடன்படிக்கை மீறுவர் -சோரம்போய்

அந்நாளில் வெஞ்சினங் கொண்டவரை கைவிட்ட
அந்நாள், முகமறைப்பேன்; தீங்குகளும் -அந்நாளில்

இக்கட்டு வன்னாய்த் தொடர்ந்திட நற்றேவன்
தக்கார் நடுவிராத தால்என்று -மக்கள்மேல்

இக்கட்டு வன்னாய்த் தொடர்ந்ததே நற்றேவன்
தக்கார் நடுவிராத தால்தானே -இக்கட்டு

எங்களை வந்துத் தொடர்ந்தது நாங்கள்போய்
மங்கிய வேறிறைபின் சென்றதால் -இங்குனக்கு

நான்தரும் இப்பாட்டை சீராய் எழுதியிதை
நான்தர சொன்னேன் இசுரேலின் -இன்மக்கள்

பிள்ளை அனைவருக்கும் கற்பித்து, இப்பாட்டு
உள்ளேவாய்ப் பாடிடயிச் சான்றாகும் -வள்ளலாய்

முன்னோர்க்கு ஆணைசெய் நன்நாட்டில் சேர்ந்தவர்
நன்றாய் புசித்துக் குடித்தங்கு -வன்னாய்

கொழுத்தபோது வேறிறை பின்பற்றி யாங்கு
விழவே உடன்படிக்கை மீறி -வழுசெய்யால்

பற்பல தீங்குகள் பற்பல இக்கட்டு
சிற்றார் அடைய அவர்வாயில் -கற்ற

திருப்பாடல் சான்றாய் ஒலிக்கும் எதிராய்
திருவறிவார் வீணர்செய் முன்தான் -திருப்பாட்டாம்

அன்றுமோசே அப்பாட்டை தானெழுதி, அங்கேதான்
நின்று படிப்பித்தான் எல்லார்கேள் - அன்றியும்

யோசுவாவை நோக்கி: பலங்கொள் திடமனங்கொள்,
ஈசனுன் னோடிருப்பார் நேர்மகனே -மாசிலா

நூல்முழுதும் மோசே எழுதி முடித்தபின்,
நூல்தனை கர்த்தரின லேவியர்க்கை: நூல்தனை

தேவ உடன்படிக்கைப் பெட்டியின் பக்கம்வை
மேவியதிர் சான்றே அதுதானே -தேவனெதிர்

உன்கலக துர்குணமும் உன்கடினக் வன்கழுத்தும்
என்றும் அறிந்தவன்; இன்றுநான் -இன்னும்

உயிரோ டிருக்கையில் கர்த்தரெதிர்; மேலாம்
செயற்கலகம் நான்செத்த பின்னே -வயதுசென்ற

மூப்பர் செவிகேட்க விண்பூமி சான்றாக
மூப்பன்நான் சொல்கிறேன் கூடிவாரும் -மூப்பன்நான்

செத்தபின்னர் நீங்கள் கெடுத்து வழிவிட
எத்தனிப்பீர் என்றறிவேன் நானிங்கு -சித்தமே

இப்பாட்டு இங்குள் இசுரேல் அவையார்க்கு
எப்போதும் சான்றாகும் என்றவன் -அப்பாட்டு

தப்பாது சொன்னான் முடியும் வரையிலே
அப்பாட்டே பின்வரும் பாட்டு

இணை நூல் 50

செவிகொடுங்கள் நான்பேச வானங்கள்; பூமி
செவிகொடுத் துக்கேளாய் எந்தன் -செவிச்சொல்

மழையது சிற்பயிர் மேல்பொழியு மாப்போல்
வழுவிலா போதனை கேள்மின் -அழகாய்

பனித்துளிகள் புல்மேல் இறங்குமாப் போல,
இனிதாக என்சொல் இறங்கும் -நனிதேவன்

கர்த்தர் பெயரறிவித் திட்டுநான் மேன்மையை
கர்த்தருக்கு தானே செலுத்துவீர் -கர்த்தர்

அவர்நமக்குக் கன்மலை; செய்கையில் நல்லார்;
அவர்வழிகள் எல்லாம் நியாயம், -அவர்நியாயம்

கேடில்லா உண்மையுள்ள தேவன்; அவர்தாமே
கேடில்செந் நீதி யுடையவர் -கேடிலே

மக்கள் கெடுத்துகொண்டார் தம்மைத்தாம் ஆதலால்
மக்கள் அவருடைய பிள்ளைகள் -தக்கிலை

இப்படி செய்வ தவர்செயலாம்; மாறுபாடும்
தப்பிதாறு மாறு வழிசெல்ல -அப்போ

விவேக மிலாத மதிகெட்ட மக்காள்,
இவையோ விடைதரும் வீதம் -அவரன்றோ

உன்னையே ஆட்கொண்ட தந்தையும்? உண்டாக்கி
உன்னை நிலைசீரன் றோஅவர்? -உன்கண்கள்

முன்சென்ற நாட்கள் நினைந்து; தலைமுறையாய்ச்
சென்றாண்டு எல்லாம் கவனிப்பாய்; -உன்தந்தை

தன்னைக்கேள், சொல்லறி விப்பானே; உன்மூப்பர்
தன்னைக்கேள், சொல்லறிவிப் பார்கேளீர் -நன்றாக

நல்லார் இனங்களுக்குத் தேசங்கள் பங்கிட்ட
எல்லா வழியாராம் ஆதாமின் -நல்வேளை

வெவ்வேறாய்ப் நல்லார் இசுரேல் தொகைத்தக
அவ்வாறு எல்லை பிரித்தாரே -அவ்வினமே

மக்களவர் கர்த்தரின் பங்காமே; யாக்கோபு
மக்கள் அவருடைய காணிவீதம் -மக்கள்

அலைந்த நிலத்திலும் பாலையில் கண்டு
நிலைநடத்தி கண்மணிபோல் காத்தார் -நிலைமேல்

கழுகுதன் கூட்டைக் கலைத்து, சிறார்மேல்
கழுகும் அசைவாடி, செட்டை -அழகாய்

விரித்து, அவையெடுத்து, தன்செட்டை மேலே
இருத்திசுமந் தாற்போல் நடத்தி -விரிநஞ்சே

அந்நிய பொய்ச்சிலை எங்கும் இருந்ததிலை.
இந்நாள் உயர்ந்த இடங்கள்மேல் -விந்தையாய்

பண்ணினார் ஏறிவர; நல்விளைச்சல் தந்தாரே;
எண்ணெயையும் பாறை வடித்துத்தான் -மண்மேலே

கன்மலை தன்னிலுள்ள தேனையும், கற்பாறை
தன்னின் வடிநெய்யும் உண்ணதந்தார். -நன்றாமே

வெண்ணெய்பால் ஊன்நெல்லும் கோதுமை, சாறையும்
உண்ணதந்தார் நல்லிறை வன்தானே -உண்டு

கொழுத்து உதைத்தான் யெசுரன்; கொழுத்து,
கொழுத்த நிணமுண்ட பின்னர், -வழுவி

பிறப்பித்த தேவனை விட்டு, மலையாம்
சிறப்பான மீட்பரை விட்டு -கறையான

அந்நிய பொய்ச்சிலையால் மூட்டி எரிச்சலாக்கி
அந்த அருவருப்பில் எல்லாமே -விந்தி

சினமாக்கி; தேவ பலியிடாது பேய்க்கே
இனமும் பலியிட் டனர்வீண் -இனமேநீ

உன்னை பிறப்பித்த கன்மலையை விட்டுநீ
உன்னைபெற்ற தேவன் நினைமறந்தாய். -தன்னார்

சினஞ்செய்த தாலே மனமடிவாய், கீழார்
சினத்தால் புறக்கணித்தேன் சீர்நான் -சினந்து

முகமறைப்பேன்; கீழார் முடிவுபார்ப்பேன் என்றும்
இகத்தில் பெருமாறு பாடுள் -வகைவழி

உண்மையில்லா பிள்ளைகள். தெய்வமல்லா வீண்சிலை
பண்ணி எரிச்சலை மூட்டவே -பண்ணியோர்

மாயையால் என்னைச் சினமூட்டி விட்டதால்
தீய எரிச்சலை உண்டாக்கி, -வேய

மதிகெட்ட மக்களால் மக்கள் சினஞ்செய்
வதேயென் விடையாம் இவர்க்கு -அதனால்

சினந்தீ யதுபற்றி தாழ்ந்த நரகம்
கனன்றெரியும்; பூமியையும், சேர்ந்தே -இனபலனும்

சேர்த்தழித்து, மேம்மலை கீழடி வெந்திடும்.
சேர்க்குவி தீங்கவர் மேலேதான் -சேர்த்தழிக்க

என்னுடைய அம்புகளை யெல்லாம் அவர்கள்மேல்
கொன்றிட எய்தே பசிவாட்டி -வன்சூடும்

வாதைகளும் வந்து மரிப்பார்கள்; வன்கொடிய
தீதாய் விலங்கை அனுப்புவேன் -வாதை

நகர்வெளியில் வாட்களும், உள்ளேயோ அச்சம்,
நகர்வாழும் வாலிபன் கன்னி -அகத்துள்

குழந்தை, நரைத்த கிழவன் அனைவர்
அழிக்கும் நிலையஞ்சி செத்து -அழிக்கவே

எம்கை உயர்ந்ததென்றும், கர்த்தர் புரியவில்லை
தம்வேர் பகைஞரோ தப்பாக -தம்புகழ்

எண்ணங் கொளச்சொல்வர், ஆயின் பகைவரின்
எண்ணமது தீதே அதுயென்றும் -எண்ணம்

பகைவரின் எண்ணமது தீதென் பதாலே
இகத்தில் சிதறி பெயரற் -றகவிலக்கி

போகச்செய் வேன்என்று சொல்லி யிருப்பேனே.
ஆக பகையால் விடுத்தேன்நான் -வேக

அவர்கள்தம் எண்ணமெலாம் கெட்டு உணர்வில்
லவருக்கு. ஞான முணர்ந்து -அவர்தம்

முடிவுதனை எண்ண நலமா யிருக்கும்
இடியாய் உரைத்தார் இறைவன் -நெடிய

மலையான கர்த்தர் அவர்களை விற்கா
வலைக்கீழே கர்த்தர் கொடாமல் -நிலைத்தால்

ஒருவனோ ஆயிரம் பேரைத் துரத்த,
இருவரோ பத்தா யிரமோ? -திருவவர்

தங்களின் கன்மலை நம்மலை போலல்ல
மங்கி பகைவர்கள் தீர்க்கிறார்கள் -மங்கு

சொதோமின் கொமோரா விடவுமாய் தாழ்ந்த
விதங்கனி யெல்லாம் கசந்து -விதமாகச்

சாறது நஞ்சே விரியனின்; பெட்டகத்தில்
சாறது முத்திரை போட்டவர் -வேறாக

வைத்திருக்க வில்லையோ? எப்போதும் கர்த்தருக்கே
வைத்துரிய வாங்கு பழியெலாம் -வைத்த

பழியும் விடையளிப்பும் கர்த்தர்க் குரிய
பழிவாங்கும் ஏற்றகாலம் கால்கள் -அழிந்திட

தள்ளாடும்; ஆபத்(து)நாள் கிட்டி யிருக்கிறது;
மெள்ளவரா தீவிரிக் கும்தானே -கள்ளத்தால்

தேவன்தம் மக்கள் நியாயந்தீர்த் தேபெலன்
மேவியே போயிற்று, நல்லவர் -தீவிரமாய்

காணவும் ஊழியர்மேல் வைப்பார் இரக்கங்கள்
வீணாம் சிலையெங்கே என்றுகேட்டு -வீணச்

சிலைகள் எழுந்து உதவிசெய்து மக்கள்
நலமறைவாய் தங்கட்டும் என்று -சிலையெள்ளி

நான்நானே தேவன், தவிரவேறு தேவனில்லை
நான்கொன்று பின்னுயிரச் செய்திடுவேன் -நான்தானே

புண்படுத்தி, நானே குணமாக்கும் நல்தேவன்
மண்ணிலென் கைக்கெவரும் தப்புவிப்பார் -மண்ணிலிலை.

என்கரத்தை வானத்தில் நேரா யுயர்த்திட்டு
என்றென்றும் வாழ்வேன் உரைத்தாரே -என்றென்றும்

மின்னும்என் வாளை கருக்காக்கி, என்கையது
நன்றாய் நியாயம் பிடித்திட, -என்பகைவர்

மண்பழி வாங்கியே, என்னைப் பகைப்போரை
தண்டிப்பேன் சீரார் உரைத்தாரே -தண்டனையாய்

மக்கள் கொலையுண்டும் எங்கோ சிறைப்பட்டும்
தக்காரும் போனவரின் செந்நீரால் -தக்கயென்

அம்புகள் கொள்செய் வெறியே; இரும்வாளோ
உம்பகையின் தின்னும் நிணம்தனை -உம்மின்

தலைவர் முதலாய் பகைவர் நிணத்தை
கலைவாள் புசிக்க திருச்செய் -நிலவிறை

தம்பகை தண்டித்து ஊழியர்க்காய் வாங்குபழி
தம்தேச மேலே இரங்குவார் -அம்மான்கள்

மோசேயும் நூனின் திருமகன் யோசுவாவும்
வாசித்தார் இப்பாட்டின் சொற்களை -தேசத்தின்

மக்கள் செவிகேட்கத் தக்கதாகச் சொன்னார்கள்.
மக்கள் செவிகேட்டார் பாட்டு

இணை நூல் 51

மோசே திருச்சொல் இசுரேலே கேள்சொல்லி
மோசே உரைத்தான் கடையிலே -தேசமே

இந்நூலின் சொல்படி எல்லாம் வழியார்கள்
எந்நாளும் வையும் மனதுமது -அந்தோ

முடியாத செய்கை இலையே மனதில்
படிய திருச்சொல் உயிரே -கடந்து

நதியோர்தான் விட்டுச் செலுந்தேசத் தில்நீர்
விதிவாழ்வீர் நீடித்து வாழ்வு -நதியின்கீழ்

அந்நாளில் தானே திருகர்த்தர் மோசேகேள்:
இந்நாளில் மோவாப் அபாரீமென்(ற) -அந்ததொடர்

தன்னில் மலைநேபோ ஏறி இனம்கைபெறும்
நன்நாட்டை கண்ணாலே பார்மகனே -என்னமோ

சீன்வன காதேசில் மேரிபாவின் நீரருகே
ஏன்யின மக்கள்முன் தூய்செய்யா -ஏன்போனீர்

என்கட் டளைகளை மீறிய தாலேநீ,
உன்தமன்போல் இம்மலையில் செத்திடுவாய் -இன்றிங்கு

நாட்டைநீ கண்டாலும் உட்புக ஏலாது
நாட்டை எரிகோ எதிராக -வாட்டங்காண்

கண்களால் கண்டிடு நேபோ மலைமேலே
விண்ணார் தரும்சீராம் நாடு

இணை நூல் 52

தேவனின் மாந்தன் திருமோசே சாகுமுன்னே
தேவ இனத்தார் இசுரேலை -தேவமாந்தன்

வாழ்த்தினான் மோவாப் சமவெளியில் ஆங்குதான்
வாழ்த்திய வாழ்த்து இதுதானே -வாழ்த்திட

கர்த்தரவர் சீனாயில் தானே எழுந்தருளி,
கர்த்தரவர் சேயீரில் தானிருந்து -கர்த்தர்

உதயமா னாரே; மலைபாரான் மேலே
உதித்து ஒளிவிட்டார் சீரும் -உதித்தவர்

பத்தா யிரங்களான தூயரோடே வீசொளி
தக்கார் அவர்க்காக தீப்போல -தக்கநூல்

வந்தவ் வலது கரத்தினின்று; மெய்யாமே
இந்தமக்கள் மேல்வைத்தார் அன்புதனை -அந்தவரில்

தூயரவர் எல்லாரும் உம்முடைய கையிலிருத்
தூயர் கழலில் விழுந்தும்மின், -தூயசொற்கள்

கற்பாரே தூயரும் போதனை ஆங்கடைவர்
கற்பித்தான் மோசேயின் னூல்தனை -கற்பித்த

நூலது யாக்கோப் அவைக்கது சொந்தமாகி.
நூலார் தலைவர் குலத்தார்கள் -சீலாகக்

கூடிய போழ்து யெசுரனுக்கு நல்லரசன்
நாடவர் தானே இறைவனார் -நாடில்

திருரூபன் சாவா பிழைக்கட்டும்; கொஞ்ச
மிராது இனமவனின் மக்கள் -திருயூதா

தன்னை குறித்தவன்: கர்த்தாவே, யூதாவின்
மன்றாட்டு சத்தத்தைக் கேட்டவர் -தன்னே

அவன்தனது மக்களோடு சேரச்செய் வீரே
அவன்கை பலத்திடட்டும் என்றும்; -அவனின்

பகைவர்க் கவனைநீர் நீங்கலாக்கி மீட்கும்
வகையுதவி செய்பவ ராகி -சிகைக்குலம்

லேவி குறித்தவனும்: நீமாசா தன்னிலே
மேவியே சோதித்த மேரிபாவின் -சீவநீர்

வாக்குவாதம் பண்ணின தூயவுன்கை தும்மிமூரீம்
வாக்குரை நிற்க நிலைத்திடும் -வாக்கே

தகப்பனுக்கும் தாய்க்கும்: இனிபாரேன் என்றும்
சகோதரர் சேர்க்காமல் பிள்ளை -அகமறியோர்

கையில் அவைகள் இருக்க; அவர்களும்சொல்
கையிலே கொண்டுகாப் பாரவர் -கையிற்சேர்

யாக்கோபுக் கும்நேமம் இந்நூல் இசுரேல்கேள்
ஆக்க பிரமாணம் போதித்தே -ஆக்கிட்டார்

உம்மின் திருசந் நிதியிலே தூபவர்க்கம்
உம்பீடத் தில்நல் பலியிட்டு -உம்முன்நில்

கர்த்தாவே, செல்வமவன் வாழ்த்தி, அவன்செயலில்
கர்த்தாவே அன்புகூரும்; வன்பகையை -கர்த்தர்,

திரும்ப எழுந்திராத வண்ணம் இடுப்பை
திருநொறுக்கி விட்டுவிடட் டும்வீண் -திருகுலம்

பென்யமீன் சீர்குறித்து: கர்த்தருக்கு அன்பானோன்
என்றும் அவரோடே தங்கிசுகித் -தென்பவனை

பென்யமீன் சீர்குறித்து: கர்த்தருக்கு அன்பானோன்
என்றும் அவரோடே தங்கிசுகித் -தென்பவனை

என்றும் அவர்காத்து எல்லைக்குள் வாழ்வாரே;
நன்யோசேப்(பு) சீர்குறித்து: கர்த்தரால் -நன்றாக

வானத்தின் செல்வமும், வீழ்பனியும், ஆழத்தின்
தேனாக நீரூற்று தேசத்தில் -மேனாளும்

ஆதவன் பக்குவம்செய் நற்கனிகள் பெற்றிடட்டும்
மாதறிவி திங்கள் அருமைபலன் -மேதவர்

பெற்றிடட்டும், செல்வமெலாம் நாடும் அதின்நிறைவும்
பெற்றிடட்டும் நெல்வளமும் பெற்றிட -நற்றவர்

முட்செடியில் வந்து எழுந்தருளி யோர்தம்மின்
திட்டதயை யோசேப் சிரசின்மேல், -நட்டான்

சகோதரரில் உச்சந் தலைமேல் வரட்டும்
வகையணி நல்லதலை ஏறாம் -வகையோனின்

கொம்புகள் காண்டா மிருகத்தின் கொம்பைப்போல்
தெம்போடு மக்களை ஏகமாய் -தம்தேச

எல்லை கடைமட்டும் முட்டித் துரத்துவான்
நல்லவிரு பல்லா யிரமாமே -நல்லாண்

செபுலோன் குறித்து: செபுலோன் வெளியே
சபைபுறப் பட்டுப்போ கையில், -சபைஇசக்கார்

கூடாரந் தங்கி மகிழ அனைஅழைத்து
நாடாருக் குன்றில் பலியிடுவார் -நாடும்

கடல்களில் உள்ள திருவெலாம் மண்ணில்
இடம்மறை செல்வமெலாம் கொள்வர். -திடகாத்து

பேரிடத்தைக் கைக்கொடுப்பார் போற்றுவோம்; சிங்கம்போல்
பேரிடத்தில் தங்கியவன் பீறுவான் -பேரில்

தனக்காய் முதலிடம்பார்த் தேர்ந்தான் இனத்தான்
தனக்கு நியாய நலமாய் -இனபங்கு

பத்திர மாயிருக்க; முன்னணியாய் வந்தவன்,
மத்தவர்ப் போரை நடத்துவான் -அத்தவன்

தாணைக் குறித்தவன்: தாண்ஒரு பாலசிங்கம்,
தாணவன் பாசானின் பாய்வானே -மேணாளாம்

நப்தலி சீர்குறித்து: நப்தலி கர்த்தரின்
ஒப்பில் தயவை அடைந்திடுவான் -ஒப்பில்

அவருடைய வாழ்த்தால் நிறைந்திருப்பான் மேற்கும்
அவர்தரும் தென்திசையும் காணி -இவனாக்க

ஆசேரோ தேசத்தில் பிள்ளைநிறை பெற்றவன
தேசநெய்யில் தன்கால்தோய்ப் பான்கேள்மின் -தேச

இரும்பும்சேர் வெண்கலமும் உன்கா லணிகீழ்
இரும்நா ளெலாம்சீர் பெலன்

இணை நூல் 53

இலையே யெசுரனின் தேவன்போல் எங்கும்
மலையே இசுரேல் இனத்தார்க் -குலமெலாம்

வானங்கள் மேலும் தமதுடைய மாட்சிமை
வானதிரு மண்டல மேலேறி -வானார்

வருகிறார். ஆதியிலா தேவன் திருவே
மருவில் அடைக்கலம் உந்தன் -வருமவர்

ஆதியிலா தேவனின் நன்புயங்கள் ஆதாரம்;
தோதாய் உனக்குமுன் னின்றவர் -தீதாம்

பகைதுரத்தி, கட்டளை தந்திடுவார் சீறி
பகையழித்து வாசம் தனித்து -இகத்திலே

யாக்கோபின் ஊற்றது நெல்லும் கனிச்சாறும்
தாக்கியலார் தேசத்தில் தானிருக்கும்; -தேக்கமிலா

வானம் பனியைப் பொழியும் சிறப்பாக
ஈனமிலை தேசத்தில் கேளமின்னே -மான

இசுரேலே, நீபேறு பெற்றோன்; திசையில்
மிசைமீட்ட கர்த்தரின் மக்கள், -திசையில்

உனக்கொப்பு யாரோ? உனக்கு உதவும்
நனிகேட யம்மவரே வாள்போல் -இனிமேல்

பகைவர்கள் உன்னெதிர் இச்சகம் பேசி
வகையடங்கிப் போவர்; அவர்கள் -அகமாமே

மேடு தனைமிதிப்பாய், என்று உரைத்தனன்
ஈடிலா வாழ்த்தைத் திரு

இணை நூல் 54

திருமோசே மோவாப் சமவெளியில் நேபோ
வரைமலைமேல் உள்ள பிசுகா -இரும்பேர்

கொடுமுடியில் ஏற திருகர்த்தர் காட்ட
கொடுதேசம் எல்லை யெலாமே -இடங்கீழே

கீலேயாத் தாண்மட்டும் தேசம் அனைத்தையும்,
சீலாராம் நப்தலி தேசமெலாம் -மேலே

மனாசேசேர் எப்பிராயீம் என்பவர் தேசம்,
இனயூதா தேசம் கடலும் -இனதேசம்

தென்புற சோவார் வரையுள்ள ஈச்சமர
நன்நகரும் பள்ளம் எரிகோவும் -மன்னவர்

பூமியெலாம் காண்பித்து மூன்றுமூப்பர்ச் சந்ததிக்குக்
பூமியாணை தேசம் இதுதானே -பூமியில்

இன்றுனது கண்காணச் செய்தேன்நான்; ஆனாலும்
நின்ற யிடத்தில் மரிப்பாய்நீ -என்றார்;

இடத்திற்குக் போகாய் கடந்துநீ என்றார்.
இடத்தில்தான் மோசே மரிக்க -அடக்கம்செய்

மோவாப் திருதேச பெத்பேயோர் பள்ளத்தில்
தேவன் அடக்கஞ்செய் தாருடல் -தேவன்செய்

தவ்விடம் இந்நாள் வரைக்கும் ஒருவனும்
எவ்வா றறியா தடமாமே -அவ்வாண்

மரிக்கும் பொழுது திருமோசே நூறும்
இருபத்தும் சீர்வயதே; கண்கள் -இருளாகா

சிற்றும் பெலன்குறையா நல்ல நிறையோனாய்
நற்றாண் மரித்தான் சிறந்தங்கு -நற்றார்

இசுரேல் இனத்தவர் மோவாப் வெளியில்
இசுரேலின் மோசே மரணம் -வசைபாடி

ஐயகோ ஐயகோ என்றவர் ஆங்கேதான்
ஓயவொரு மாதம் அழு(து)முடித்து -வேயாண்

திருவுள யோசுவா சீர்மகன் நூனின்
திருத்தலை மேலே திருவும் -திருக்கை

யிடவும் அவனுள்ளே ஞானத்தின் ஆவி
யடங்கி நிறைந்தனன் சீராண் -படிந்தே

இசுரேல் இனத்தார் அவனுக்குக் கீழாய்
விசும்பின் மகனாமே மோசே -திசைதனில்

இட்ட திருகர்த்தர் கட்டளை யிட்டபடி
நட்டார் படிந்தனர்; அன்றியும் ஆங்கே

எகிப்தெனும் தேசத்தில் பார்வோன்சேர் வேலை
திகைக்கவே அத்தேசம் செய்ய -வகைபேர்

அடையாளம் அற்புதம்செய் வாக்கர் எவரும்
கடைபார்க்கின் வேறே இலர்கேள் -இடத்தில்

முகமுகமாய் கர்த்தரை கண்டறிந்த மோசே
இகமாம் இசுரேலில் இன்றும் -முகம்பார்க்கும்

வாக்கர் எழும்பின தில்லையென்று இன்றறிவோம்
வாக்கன் தலைமோசே தான்

இணை நூல் 55

திருவிவிலிய இணை நூலின் கலிவெண்பா முற்றிற்று


திருவிவிலிய ஐந்தாகமங்கள் கலிவெண்பா முற்றிற்று


Comments

Popular posts from this blog

முழு வேதாகமம் வெண்பா வடிவில்