திருவிவிலியம் - சாமுவேலின் இரண்டாம் நூல் - கலிவெண்பாவில்

சவுலும் யோனத்தானும் இறந்ததை தாவீதிற்கு அமலேக்கியன் வந்து அறிவித்தல்.

சவுல்செத்த பின்னர் அமலேக் கியரை
அவித்தபின் சிக்லாக்கில் தாவீத் -தவனிடம்

மூன்றாம்நாள் வந்தான் ஒருஅமலேக் ஆள்வந்தான்
ஏன்தானோ ஆடைதனை வன்கிழித்து -தன்தலைமேல்

மண்போட்டு ஓடி; மறவரின் போர்க்களம்
கண்பார்த்து வந்தேன்நான், என்னசேதி -கண்பார்த்தாய்

என்றவன் கேட்க சவுலொடு யோனத்தான்
அன்றிறந்த சேதிசொல்ல, அன்றவன் -தன்மேல்

இடிவிழுந்தாற் போலங்கு தாவீத் அதிர்ந்து
இடிசொல் பகன்றவனே அச்சொல் -இடிசொல்

உனக்கெப் படிதெரியும் மன்னன் இறந்த
இனத்தினது வீழ்ச்சியெனக் கேட்க -இனப்போர்

நடக்கும் மலைவழி வந்தேன்நான்; ஆங்கே
இடையே அரசன் விழுந்து -கடையியிர்

தன்விட்டு போகா திருக்கவும் கூப்பிட்டார்
என்னநான் சாகவில்லை, வாவந்து -உன்கையால்

வாளெடுத்து கொன்றிடு என்றாரே, மன்னனவர்
மீளார் எனத்தெரிந்த தாலேநான் -வாளெடுத்துக்

கொன்றேன்நான் என்றான் கறைமாந்தன்; சீராணோ
அன்றே இறந்தார் அரசென -நன்னவன்

செய்தான் திருநோன்பு மாலைவரை உண்ணாது
செய்தியால் மக்கள் அழுது

2 சாமு கலி 1

அறிவித்த அமலேக்கியனை கொல்ல தாவீது கட்டளையிடுதல்

மாலையில் வந்த இளைஞனிடம் கேட்டான்கோன்
மேலேறிக் கொன்றாய் எனச்சொன்னாய் -சீலவரை

நன்றென; யாரடா நீசெல்வ? என்கேட்க
என்னினம் தானே அமலேக்கு;   -வன்னார்

அயலோ, திருவவர் நெய்ச்சொரி மன்னன்
அயலின மாந்தனே வீழ்த்த -அயலுனக்கு

ஏனச்சம் வாரா திருந்ததேன் மாந்தனே
ஏனுந்தன் வாயால் அறிக்கைச்சொல் -மானமிலோய்

வீணனை வீழ்த்தென நின்ற இளைஞனிடம்
ஆணையாய்ச் சொல்லவும், ஆணவன் -வீணனை

வெட்டினான் அன்றே விழச்சாக, தாவீது
வெட்டிவீழ் மாந்தனை நோக்கியவன் -மட்டிலார்

நெய்ச்சொரி மன்னனை நான்கொன்றேன் என்றுனது
வெய்நாவு சொன்னதால் உன்பழி -அய்யோ

உனதின் தலைமேலே தான்விழும்; அன்றோ
இனமாந்தர் சோகத்தில் தானே -இனமழுதார்

தாவீது மன்னனை யோனதனை தானினைந்து 
மேவியோர் வீழ்ந்தனர் வில்வீரர் -தாவீதும்

யூதா இனத்தார்க்கு வில்வித்தை கற்றிட
யூதன் இடுத்தானே ஆணைதனை -மேதவர்

சீரிருவர் சாவதைத் தாங்காது மேதவன்
சீராணும் பாடினான் பாட்டு

2 சாமு கலி 2

சவுல் மற்றும் யோனத்தானின் இறப்பிற்காக தாவீது பாடிய புலம்பல் பாட்டு

இசுரேலின் சீரலங் காரம் விடுத்தோ!
திசைவிழுந்து போனார் வலியார் -திசைவன்னார்

பெண்கள் மகிழாத வண்ணமாய், அல்லாரின்
மண்நகர் காத்தசுக்லோன் சொல்லாதீர் -மண்ணிலே

கில்போவா குன்றுகளே, விண்ணின்று நீர்விழாதுச்
செல்லழியுன் நெல்லெதும் விட்டழிந்து -செல்லொணா

வல்லாரின் கேடகம் போயிற்றே -அல்சொல்லாய்
வில்லேந்தி மக்கள் நெருக்கியவர் -வல்லாரை

நெய்ச்சொரியில் மாந்தன்போல் போனார் சவுல்மன்னன்
பெய்ச்செந்நீர் பாராமல் போர்க்களத்தில் -அய்யனவன்

வாஅள் சுவுலின் வெறுமைவந்த நாஅளுண்டோ? 
ஆஅள் படாமகனின் வில்வந்த -நாஅளுண்டோ?

வாழ்கையில் அன்பராய் நின்றார் இருவரும்
வாழ்விடுத்து சாவும்சேர்ந் தேபோனார் -வாழ்கழுகு

பார்க்கிலும் சீரார் விரைவாம், வலியிலே
பார்ரரிமா மேலா மவரிருவர் -சீர்மகளிர்

சீரினத்தார் உங்களுக்கு சீராடை தந்தவரே
சீரினப் பெண்டிர்கள் நீரழுவீர் -சீரிருவர்

உங்களுக்கு பொன்னணிவித் தார்போனார் செத்தின்று
தங்கமகன் யோனத்தான் ஏனுயர் -தங்கிடத்தில்

வீழ்ந்தானோ செத்து; வலியார் பலவாக
வீழ்ந்தாரே போர்க்களத்தில்; என்தமனே -வீழ்ந்தாயே

யோனத்தான் உன்நினைவால் வாடுகின்றேன், யாருளர்
யோனத்தான் போலன்பு செய்திட -வானவர்ச்செய்

மங்கையரின் அன்பை விடமேலாம் உன்னன்பு
இங்கே வலியோர் விழுந்தாரே, -இங்கிலை

வில்வேல்வாள் போயிற் றழிந்திங்கு என்றவன்
நல்லாண் புலம்பினான் பாட்டு

2 சாமு கலி 3

தாவீது யூதா செல்லலாமா என்று கேட்க போ என்று கர்த்தர் எபிரோன் போகச் சொல்லுதலும் யூதர்களுக்கு அரசனாக தாவீதை மக்கள் அபிஷேகம் செய்தலும்.

தாவீது மன்னன் மரித்ததும் சென்றுகேட்டான்
மேவிநான் யூதா நிலத்திலே -மேவிகுடி

போக விடுவீரோ சீரோய்நீர் என்றுகேட்க
வாகையார் சொன்னார் புறப்படு -போகநீ

எங்குநான் போகட்டும் என்கேட்க எப்ரோனில்
தங்குநீ என்றார் திருவங்கே -தங்கிய

காத்தூர் விடுத்து இருமனைவி யோடவன்
காத்தூர் இருவீரர் சேர்ந்தவர் -மேத்தவன்

பின்செல்ல வந்திட்டார் எப்ரோன் புறநகர்
நன்றெ குடியேறி னர்வீரர் -அன்றியும்

யூத இனத்தவர் வந்தங்கு தாவீதை
யூதர்மேல் மன்னனாய் எப்ரோனில் -யூதரெலாம்

சேர்ந்தங்கு நெய்ச்சொரிய மன்னனாய் ஆனானே
நேர்மகன் தன்குலத் திற்கு

2 சாமு கலி 4

யாபேசு குடிகளுக்கு தூதுவரை அனுப்பி தாவீது நன்றி சொல்லுதலும், அப்னேர் இஸ்போசேத்தை மற்ற குலத்தார்க்கு அரசனாக அபிஷேகம் செய்தலும்

சவுலிற்கு யாபேசு நன்மக்கள் செய்தார்
சவுலுடல் தானெடுத்துத் தீயிட் -டவரென்பை

நல்லடக்கம் என்றறிவித் தார்சீர்க்கு மக்களவர்
நல்லவர்க்கு விட்டான்சீர் தூதுவர் -நல்லாரே

மன்னனுக்கு நீர்ச்செய்த நற்செய்கை கேட்டேன்நான்
அன்னவர்க்கு நீர்கீழ்ப் படிந்திருந்தீர் -நன்னகரார்

கேள்மின்னே யூதர் எனைகோனாய் ஆக்கினர்
வேள்நன்செய் நன்னகரார் என்றும்போல் -வேள்சீராண்

என்கீழ் சிறப்பா யிருப்பீரே சொல்வந்தார்
அன்றியும் ஆங்கே உரைத்திட -அன்றங்கு

தூதுவர் கேட்ட தளபதி அப்னோரோ
யாதோ ஒருவரிலை மக்களென -ஏதோ

அவன்செய்தான் கோனாகி என்றே பிழன்று
அவனிசுபோ சேத்சிற்றாண் என்னும் -சவுல்தனையன்

மக்னாயீம் சென்று இசுரெலின மற்றார்மேல்
தக்கான் யெனக்கோனாய் நெய்ச்சொரிந்தான் -தக்கார்

சவுலின் மகனாம் இசுபோசேத் மன்னன்
அவன்வயது நாற்பது தானே -அவனோ

இசுரெலை ஆண்டான் இரண்டாண்டு; யூதர்
திசைதன்னில் தாவீதின் பின்னே -திசையூதர்

மேலே அரசாண்டான் எப்ரோனில் தாவீது
சீலவன் ஏழரை ஆண்டுகள் -சீலவனை

வன்னெதிர்த்த அப்னேரோ சேவித்தான் தன்மன்னன்
நன்றென ஆங்கே தரித்து

2 சாமு கலி 5

அப்னேரின் வீரரும் யோவாபின் வீரரும் கிபியோனின் குளத்தில் செய்த போரும், அப்னேர் ஓடும்போது ஆசகேலை கொல்லுதலும்.

நேரின் மகனான அப்னேர் சிலவீரர்
நேரே கிபியோன் விரைந்தனர் -சீராண்

படையின் தலைவனாம் யோவாபும் சென்றான்
படைவீரர் கொண்டங்கு சேர்ந்து -படைகள்

குளத்தின் இருகரையில் தங்க, கிபியோன்
குளமதே ஆனது போர்ச்சேர்க் -குளம்போல

ஞாயிறின் சீரொளியால் நீர்மினுக்க, வீரரணி
ஞாயிறுபோல் மின்னிட கண்டங்கு -ஞாயிறங்கி

வந்ததோ புள்ளெலாம் சென்ற தலர்ப்பறந்து
இந்தவகை நின்றிருந்த வீரரில் -எந்தவொரு

அல்சொல்லும் மில்லா திருக்கவும், நாவடக்கம்
நல்லதென இல்லாதே அப்னேரே -நல்லதுநம்

நல்வீரர் ஆடட்டும் போர்போல யிங்குதான்
வல்போர் அழைத்தால் வராதுபோவ -தில்லையே

பின்போக யாம்கோழை அல்லவே; என்றங்கு
அன்றவர் வீரர்கள் கைக்கலந்தார் -அன்றியும்

பன்னிருவர் சென்றாரே ஓரணிக்கு சீரெதிர்
பன்னிருவர் வீழ்ந்தார் ஒருமித்து -பன்னிருவர்

வீழ்ந்த தலம்பெயரோ எல்காத் அசூரிம்மாம்
வீழ்ந்த துடன்விட் டிடாமலே -காழ்ப்பாலே

போரிட்டார் பன்னிருவர்க் காக அணியவர்
போரது மிக்காகி தாவீதின் -போரனையர்

வல்பெற்று அப்னே ரொடுமற்றார் ஓடிட
நல்யோவாப் சோதரன் ஆசகேல் -வல்லாணாம்

அப்னேரைப் பின்தொடர, வீணேணோ ஆசகேலே
அப்னேராண் பின்னோக்கிக் கேட்டவன் -அப்பக்கம்

செல்வாய்நீ ஆசகேலே, உன்னைநான் கொன்றிட்டால்
செல்வனே உந்தன் தமனாமே -நல்லாணாம்

யோவாபின் நன்முகத்தில் நான்விழிப்ப தெங்கணம்
யோவாபின் தம்பி, விரைந்திடும் -மேவா

இளைஞரில் ஓராள் உரிந்திடு, சொல்ல
இளைஞன்நான் உன்னைத் தொடரா -திளைஞனை

கைப்போட மாட்டேன் எனவவன் பின்போக
கைப்போட்டோன் வேலாலே குத்திட -கைப்போட்டோன்

ஆங்கே விழுந்தனன் செத்து; விரைவந்தார்
ஆங்கே விழுந்ததைக் கண்டவர் -தாங்காணின்

வீழிடத்தில் நின்றார் சிலவீரர்; குன்றின்மேல்
வேழேறு போலப்னேர் ஏறியே -வீழவோ

யோவாபே சோதரர் நாமன்றோ; விட்டிடு
யோவாபே ஏனோநம் வீரரிடை -யோவாபோ

யானோ உரைத்தேன் படைகளார் ஆடவங்கு
ஏனோ அடக்கா துரைத்தீர்நீர் -மானான்

படைநிறுத்த ஊதினான் சங்கு; படைகள்
நடந்தே பெதலகேம் சென்றார்  -அடைந்ததும்

ஆசகேலை நல்லடக்கம் செய்து நடந்தாரே
மாசிலான் ஊராமெப் ரோன் 

2 சாமு கலி 6

எப்ரோனில் தாவீது மன்னனுக்குப் பிறந்த பிள்ளைகளின் விவரமும் சவுல் வீட்டார் பலத்தில் குறைதலும், இசுரேலில் அப்னேர் இசுபோசேத்தை விட வலிமை அடைதலும்.

எப்ரோனில் தாவீது மன்னன் அரசாள
எப்ரோனில் மக்கள் பிறந்தனர் -எப்ரோனில்

சீர்ப்பிறந்த மக்களவர் ஆறுபேர்; முன்பிறந்தோன்
சீர்ப்பெண் அகினோவாம் பெற்றாளே -சீர்மகன்

அம்னோன்; இரண்டாம் மகனோ அபிகாயில்
தம்பிள்ளை கீலேயாப்; மூன்றாம்சேய் -தம்மாக்காள்

பெற்றெடுத்த அப்சலோம்; நான்காம்சேய் ஆகீத்தாள்
பெற்ற அதொனியா; ஐந்தாம்சேய் -பெற்றெடுத்த

பெண்பெயர் ஆபித்தால், சேய்பெயர் செப்பதியா
பெண்எக்லாள் பெற்றாள் மகனாறு -பெண்ணவள்

இட்டனள் இத்ரேயாம் என்றபெயர்; எப்ரோனில்
நட்டானின் பேர்மக்கள் ஆறுமகன் -நட்டாண்

வலிந்துபோர் செய்ய முடியா -நிலையாம்
சவுல்வழிக்குப் போர்ச்செய் தளபதி அப்னேர்

சவுலின் மகன்சிறுத்து அப்னேர் -சவுலார்
விடவலிமைக் கொண்டான் சிறந்து

2 சாமு கலி 7

அப்னேருக்கும் இசுபொசேத்துக்கும் வாக்குவாதம் வர, அப்னேர் தாவீதோடு உடன்படிக்கை செய்தல்.

சவுலின் மறுமனையாள் பேர்ரிசுபாள் மன்னன்
சவுலின் மகனிடம் சென்றாள் -சவுல்சேயே

கேளாய் தலைவனாம் அப்னேர் எனைச்சேர
வாளார் விடுத்தனன் தூதென -வேளாண்

அதிர்ந்தெழ என்னயென் தந்தை மனைவி
வெதிர்ச்சேரல் தீங்கன்றோ அப்னேர் -எதினால்

இதைச்செய்தீர் என்றுகேட்க, பெண்ணின்சொல் கேட்டு
வதைச்சொல்லாய் நீசொல இங்கே -எதிரியர்

யூதரின் நாய்த்தலையோ என்று சினத்துடன்
யூதனாம் தாவீது நல்லாணே -யூதன்

அரசாள தாண்முதல் பேர்சேபா செய்தே
அரசனாக்க நான்போவேன் என்றே -அரசனாக்க

தன்னின மூப்பர்கள் எல்லா ரொடும்பேசி
தன்பெயரால் விட்டானே தூதுவரை -மன்னனாக

ஆக்குவேன் என்னோ டுடன்படிக்கை செய்யும்நீர்
ஆக்கமாய் என்றுரைத்த தூதரை -வாக்கையிட்ட

அப்னேரை எப்ரோன் வரச்சொல்லும், வாக்குபடி
அப்னேரே செய்வோம் உடன்படிக்கை -அப்னேரும்

எப்ரோன் விரைந்துவர செய்தார் உடன்படிக்கை
அப்படியே மாந்தரவர்; பின்சொன்னான் -அப்னேரே;

நல்லது நீர்செய்யும் மண்ணில் ஒருசெயல்
நல்லவள் மீகாள் மனைவியென் -நல்லவளை

நான்கொண்டேன் நூறு நுனித்தோலை வெட்டியே
மேன்வன் பெலித்தரை வீழ்த்திட்டு -நான்செய்த

அம்மனைவி என்னிடம் கொண்டுவாரும் சீராணே
அம்மனைவி வாராது வாராதீர் -அம்மாதை

விட்டனுப்பத் தூதுவரை விட்டான்நேர் மன்னனுக்கு
நட்டானும் விட்டா னவள்தன்னை -விட்டாலும்

மேன்மகளை பின்மணம் செய்தவன் பல்தியேல்
மேன்மகள் போகின்றாள் என்றவன் -மேன்மகள்பின்

சென்றான் அழுதங்கே; அப்னேரோ இன்முகமில்
அன்னானைக் கண்டு, வராதேபோ -என்றதும்

கண்கண்டு அஞ்சி திரும்பினான் அக்கணவன்
மண்மேல் அரசனிற் கீடாக -மண்ணாரில்

அக்காலம் எப்ரோனில் இல்லாது போர்க்களத்தில்
தக்கானாம் யோவாப் சிறந்துபோர் -தக்கதாய்

இட்டு பலசெல்வம் கொண்டுவர ஆங்கேயோ
இட்ட உடன்படிக்கை தன்னையொரு -நட்டான்

அறிவிக்க சென்றான் சினத்தோடு; மன்னான்
அறிவிலிச் செய்கை விடுத்தீர் -அறிவிலியை

அந்த மகன்வந்தான் உம்மைத்தான் வேவுகாண
அந்தமகன் நல்லாணில் என்று

2 சாமு கலி 8

அப்னேரை யோவாப் கொல்லுதலும் தாவீது மக்கள் முன் துக்கம் கொண்டாடுதலும்.

தாவீதின் பேரால் விடுத்தனன் தூதுவர்
மேதவன் கூட்டிவரச் சொன்னார்சொல் -தூதர்

விரைச்சென்று அப்னேரைக் கண்டனர் சீராத்
துரவிலே; தூதர்கள் மன்னன் -விரைவரச்சொல்

என்றுவிட்டார் என்றுசொல வந்தனன் அப்னேராண்
அன்றவன் எப்ரோனுள் வந்திட -நன்னகர்

வாயிலில் சந்தித்த யோவாபோ ஏமச்சொல்
வாயிலிலே சொல்லாகா என்றவன் -வாயில்விட்

டங்கே மறைவிடம் கூட்டிப்போய் அப்னேரை
அங்கேதான் வாளால் கொலைச்செய்ய -அங்கே

விழுந்தான் சிறந்தவீரன் அன்று அழன்று
விழுந்தசெய்தி கேட்டதிர்ந்தான் கோன்சீர் -அழுதனன்

ஐயகோ ஏன்செய்தான் யோவாபும் இச்செயலே
ஐயகோ வன்செயலே செய்தானே -ஐயமிலை

அன்னானின் வீட்டிலே நோயில்லான் தானில்லா
தென்னாளும் வீட்டில் இருக்கட்டும் -என்றே

கெடுசொல் உரைத்தான் திருவவன் அன்று
எடுத்தார் அழுதங்கு யோவாப் -உடலை

உடுப்பைக் கிழித்தெறி யோவாபின் மக்காள்
அடுத்தவன் தானே சிறப்பாண் -திடமிலான்சொல்

மாலைவரை ஏனோ விழுந்தாய் மகனேநீ
வேலாள் பலரை அடித்தாயே -ஆலவா

முட்டாள்போல் செத்தானோ அப்னேரும் இங்குதான்
நட்டானே வீழ்த்தெதிரி வன்னாய்கை -இட்டதிலை

நட்டானே ஏன்மடிந்தாய் வன்னார்கை சாவதுபோல்
நட்டவர் கண்டழுதார் மேன்மேலும் -நட்டாண்

வருந்திட; மன்னா சிறிதேனும் உண்ணும்
திருவூண் எனவங்கு சொல்லிட -தக்கிலை

மாலைவரை ஊணது உட்சென்றால், இன்றிங்கு
வேலார்முன் செத்திட என்றழுது -ஆலாண்

வருந்திட, கண்டமக்கள் மன்னனால் இல்லை
இருந்திட்டால் ஏனழுவார் என்றார் -திருவவனோ

என்னைநீர் மன்னனாக்கி விட்டாலும் நான்வலியில்
என்படையின் நற்றலைவன் யோவாபோ -என்னைவிட

மிஞ்சினோர் தன்வலியில் அன்றோ; திருவவரே
மிஞ்சினோர்க்குச் செய்வார் சரி

2 சாமு கலி 9

இசுபொசேத்தை அவனுடைய வீரர்களே கொலைசெய்து தாவீதிடத்தில் இசுபொசேத்தின் தலையை எடுத்துச் செல்ல, தாவீதோ கொலை செய்தவர்களை கொன்றிட ஆணையிடுதல்.

அப்னேர் எபிரோனில் மாண்டசேதி கேட்டவன்
அப்னேரின் மன்னன் இசுபோசேத் -தப்பா

தினிநானும் எப்படி காப்பேனோ நின்றான்
அவன்கலங்கி; ஆங்கிரு ஆட்படைக்கு நின்றார்

அவன்மக்கள் பேரோத்து ஊரார் -அவர்பெயர்
பானா, இரண்டா மவன்ரேகாப்; போட்டாரே

மானமிலார் திட்டத்தை மன்னனை -ஏனோ
கொலைசெய்ய ஆங்கே; படைக்கு செலவு

நலநெல்லை வாங்குவோர்போல் உட்சென்றார் மன்னன்
நலவீடு தன்னில் உறங்க -வலியிலார்

குத்தினார் மன்னனை அன்றுசாக குத்திவிட்டு
அத்தவன் சீர்த்தலையைக் கொய்தவர் -அத்தூரை

விட்டு இராநடந்து சென்றார் எபிரோனில்
நட்டவர் மன்னன்முன் வந்தவர் -நட்டவரின்

மன்னனே, நும்மெதிரி கொன்றோம்யாம் நேற்றங்கு
மன்னா சவுல்வழியார் வன்பழி -இன்றுதீர்த்தோம்

என்றவரை பார்த்தான் சினத்தோடு மன்னனோ
மன்றமில் தன்வீட்டுள் தானுறங்க -அன்னவன்

நீதிமான் அன்றோ; அவன்தலை கொய்தநீர்
நீதிபிழன் றீரன்றொ; மன்னனாம் -நீதிமான்

எந்தை சவுலைக் கொலைசெய்தேன் என்றொருவன்
அந்நாளில் கைப்பரிசு கிட்டுமென -வந்தானே

நெய்ச்சொரி மாந்தனை வெட்டியதேன் என்றுநான்
வெய்ம்மாந்தன் வெட்டிடச் சொன்னேனே -மெய்யாக

தீங்குசெய்த இவ்விரு மாந்தரை கொல்லாமல்
ஈங்குவிட நீதிபிழன் றேபோகும் -தீங்கவரை

வெட்டியுடல் எப்ரோனில் தொங்கவிட்டு மன்னனின்
வெட்டசிரம் வைத்தாரே அப்னேரின் -நட்டவன்

கல்லறையில் ஆங்கவர் அன்று; திருமகன்
அல்லார் அழித்தான் சிறந்து

2 சாமு கலி 10

இசுரேலர் மேல் தாவீது அரசனாகி எருசலேமைக் கைப்பற்றுதல், தீருவின் அரசன் தாவீதிற்கு அரண்மனை கட்டித்தருதல்.

இசுபோசேத் மாண்டபின்னர் மக்களார் வந்தார்
இசுரெலர் எப்ரோனில் தாவீத் -இசுரெலை

மன்னன் சவுலரசன் ஆண்டபோதும் நீரென்றோ
முன்னின்று சென்றீர் நிறைச்சீரே -மன்னனிலை

எங்களுக்கு முன்நடத்தும் என்றவர் கைக்கூப்பி
தங்களின் மன்னனாகும் என்றவர்கள் -அங்கேதான்

நெய்ச்சொரிந்து ஆக்கினர் கோனாக தாவீத்தை
மெய்யாணும் ஆகி எபூசியர் -செய்விட்டு

ஆங்கே விரட்டிடப் போனானே போருக்கு
ஆங்கிரு மக்களோ, கூடாதே -ஈங்கிரு

சப்பாணி கண்குருடர் உன்னை எதிர்த்திடுவர்
எப்போதும் என்றிட; போயந்த -சப்பாணி

கண்குருடர் நீர்க்குழாய் ஏறி அழியுமென
மண்ணினது மன்னன் சொலவங்கு -மண்ணில்

நிலைச்சொல்லாய் சப்பாணி கண்குருடர் உள்ளே
நிலைப்பின் வராதிருப்ப என்று -அலையலையாய்

வீரர்கள் சென்று எருசலேமைக் கைப்பற்றி
சீரவண் தன்நகர் ஆக்கினான் -நேரவன்

மில்லோ தொடங்கியங்கு சுற்றுமதில் கட்டினான்
அல்லாதார் உள்நுழையா வண்ணமாய் -நல்லாண்

அரசனெனக் கண்ட திருத்தீரு மன்னன்
அரசனுக்கு ஆளனுப்பி ஆங்கே -அரண்மனை

கட்டி யளித்தான் அயல்மன்னன்; தாவீதோ
கட்டினான் மேன்மேலும் பெண்டிரை -கட்டியவன்

பெற்றான் பதினொன்று மக்கள் எருசலேமில்
நற்றென இந்நூல் குறிப்பு

2 சாமு கலி 11

இரண்டுமுறை போருக்கு பெலிஸ்தர் வந்து தாவீதிடம் தோற்றுப்போகுதல்

பெலித்தர் செவிகேட்டார் மன்னனானான் தாவீத்
பெலித்தர் வலிகாட்ட போர்போர் -பெலித்தர்

இறங்கினர் ரெப்பாயிம் பள்ளத்தில் பேராய்
அறனவன் சென்றவன் கேட்டான் -மறைவில்;

அறவனரே போய்பெலித்தர் சண்டையிட மெய்யார்
அறனார் அளிப்பீரோ நீர்சீர்? -அறனவர்

செய்போர் அளித்திடுவேன் உன்கையில் மெய்யார்ச்சொல்;
செய்தனன் வன்போர் உடைந்தங்கு -செய்போனார்

செய்தாரே நீருடைந்து போகும்போல் செய்தனில்
செய்ததால் பாஅல் பிரசாயீம் -செய்ப்பெயர்

மன்னனும் இட்டான் இடத்திற்கு; போனவர்
அன்றியும் வந்தார் திரும்பிப்போர் -என்றவர்

இம்முறையும் கேட்டான் திருமுன்னே; சொன்னாரே
இம்முறை நேரேநீர் போகாதீர் -இம்முறை

சுற்றிப்போம் ஆங்கே முசுக்கட்டை தன்னிலை
அற்றேபோம் சீரிரைச்சல் அப்போது -நற்றார்

திருமுன்னே சென்றிருப்பார் வன்செய் அழிக்க
திருச்சொல் படிசென்று வென்றான் -திருவாண்

திருப்படைகள் தன்னின் திருக்கர்த்தர் மன்னன்
திருவோடு நிற்பதால் வென்றான் -திருவாண்

திருச்சொல்லே அன்னான் அரசாளக் கற்ற
திருமந் திரமாம் சிறப்பு

2 சாமு கலி 12

பாலே யூதாவில் இருந்து தேவனுடைய பெட்டியை தேர்ப்பூட்டி எடுத்துவர ஓரிடத்தில் தேரிழுத்த மாடுகள் மிரண்டிட ஊசா பெட்டியை பிடித்திட கர்த்தர் அவனை அடித்ததால் மரித்தல்.

இசுரேலில் தேர்ந்தோரைத் தாவீது கூட்டி
இசுரேலின் தேவனார் பெட்டி -திசையிலே

பாலேயூ தாவி லிருந்துநாம் கொண்டுவர
பாலேயூ தாபோவோம் நாமென -ஆலவன்

சென்றனன்; புத்தம் புதுத்தேர் தனைப்பூட்டி
நன்றே எடுத்துவர என்றவன் -அன்று

மகனார் அபினதாபின் ஊசா அகியோ
அகம்விட்டு வந்தார் நடத்த -இகத்தின்

அரசன் நடந்தனன் பாடி, அகியா
அரசனோடு போக களத்தில் -மரத்தேர்

சிறப்பாகப் போக மரத்தேர் இழுக்கும்
கறைமாடு ஏனோ மிரள -சிறப்பெட்டி

ஆடிட ஆங்கே விழாத படிஊசா
ஓடிப் பிடித்தனன் பெட்டியை -பாடலை

ஆங்கே நிறுத்தினர் ஏனென்றால் ஊசாவின்
பாங்கில் செயலால் அடித்தாரே -ஆங்கே

திருக்கர்த்தர்; ஊசா மரித்தான் களத்தில்
திருமகன் போனான் அதிர்ந்து -திருப்பெட்டி

என்னிடம் எப்படி வந்திடும் என்றவன்
அன்றே ஒபேத்ஏதோ மின்னில்லம் -தன்னிலே

இட்டுவந்து பேரெசு ஊசா யெனப்பெயர்
இட்டனன் அக்களத் திற்கு

2 சாமு கலி 13

பெட்டியினால் ஓபேத் ஏதோம் வீட்டார் ஆசீர்வதிக்கப்பட, தாவீதிற்கு அது அறிவிக்கப்பட, அதை எருசலேம் எடுத்து வருதல்

தேவனின் பெட்டியை லேவியர் தூக்கிவர
மேவியோர் தானன்றொ; ஆதலால் -மேவியவன்

சென்றனன் லேவி யரொடு ஒபெத்எதோம்
அன்றே எடுத்துவர நன்றாக -அன்றவர்

பெட்டி யெடுத்து பலரும்முன் சென்றனர்
தட்டடித்து சங்குதனை ஊதினர் -நட்டவர்முன்

மன்னன் ஒருஏபோத் தன்னை யணிந்தவன்
மன்னனோ ஆடினான் பெட்டிமுன் -அன்றியும்

ஆறடி லேவியர் சென்றதும் காளைகள்
வேறாக ஆடுகள் நற்பலி -மாறாது

தந்திட்டார் கர்த்தருக்குத் நேர்மக்கள் ஆங்குதான்
அந்நாளில் மக்களோ ஆரவாரம் -அந்நாளில்

எக்காளம் தன்னையூதி மக்கள் மகிழ்ந்தனர்
தக்கவர் பாடினர் பாட்டு

2 சாமு கலி 14

தாவீது பெட்டியை எடுத்துவந்து மக்களுக்கு ஆசீர்வதித்து உணவு தருதல். மீகாள் தாவீது ஆடி வருகிறதைப் பார்த்து தன் மனதில் அவள் அவமதித்து பேசுதல்

விண்ணாரின் பெட்டிவர சீயோனில் நின்றவர்
மண்மன்னன் பெட்டிமுன் ஆடிவர -மண்மக்கள்

கண்டனர்; மீகாளும் சாஅள ரம்வழியே
கண்டாள் அரசனவன் ஆடுகின்றார் -மண்மக்கள்

கண்டிட ஆங்கென வன்னாகத் தன்மனதில்
மண்மன்னன் தன்னை அவமதித்தாள் -மண்மன்னன்

தாவீது தான்கட் டியக்கூடா ரம்தன்னில்
மேவியந்த பெட்டியை வைத்தவன் -தேவனிடம்

வந்த திருமக்கள் தன்னிற்கு ஊணூனைத்
தந்து அனுப்பினான் வாழ்த்திவிட்டு -அந்நாளில்

தன்மக்கள் வாழ்த்தத் திரும்பிட ஆங்கவள்
என்னே அரசன் உரிந்துயேன் -நின்றாரோ

மன்னனாடை யில்லார் இனப்பெண்கள் நின்றுகாண
என்கண்கள் சாஅள ரம்வழியே -நின்றுகாண

என்னயிது கோஅலம் வாதிட்டாள் மன்னனோ
என்னசொன்னாய் மங்காஅய் என்கர்த்தர் -முன்னேநான்

இன்றாடி வந்ததைக் கீஇழென வன்னாக
என்றாயே; மன்னன் மகளேகேள் -மன்னனென

எண்ணினாஅய்; இந்நிலையோ பேராஅம் -என்கண்ணில்
எண்ணுகிறேன் மிக்காஅய் கீழாஅய் -எண்ணத்தைச்

சொல்லி இகழ்ந்தவள் கோன்விடுத்துச் செல்லவும்
சொல்லதின் காரணத்தால் பிள்ளைகள் -இல்லையே

மீகாள் மரிக்கும் வரையங்கு; மேதவனை
மீகாள் மனதில் அவமதிக்க -வாகையோன்

பல்லோ ரெனப்பெற்றும் முன்மனையாள் தன்னிற்கு
இல்லையாம் செவ்வர் மகவு

2 சாமு கலி 15

தாவீது கர்த்தருக்கென ஆலயம் கட்டுவேன் எனச்சொல்ல நாத்தான் செய்க எனச்சொன்ன பின்னர் நாத்தானுக்கு கர்த்தரின் வாக்கு உண்டாகி அதை நாத்தான் தாவீதுக்கு அறிவித்தல்.

மன்னனாம் தாவீதைக் கர்த்தரவர் சுற்றிலும்
வன்பகைஞர் விட்டுநீக்கி ஓய்வுசெய்ய -மன்னனாம்

தாவீது தன்வீட்டில் வாசம்செய் கையிலே
தாவீது வாக்குரை மாந்தனை -மேவியே

நாத்தானே, இங்கேநான் கேதுரு வீட்டிலே
நாத்தானே நானிருக்க ஆங்கேயோ -நாத்தானே

தேவனின் பெட்டி திரைநடுவே வாசமேன்?
தேவ இறைவாக்கன் சொன்னான்சீர்: -தேவனுக்காய்

உம்முள்ளத் தில்லுள்ள தெல்லாம்நீர் செய்யுமே
உம்மோடே கர்த்தர் இருக்கிறாரே -நம்தேவன்;

சொல்லிவிட்ட தன்றிரவில் நாத்தானிற் சொல்வந்து
சொல்சொன்ன நீயும் அரசனாம் -நல்லவன்

சீர்சென்று சொல்வாய்நீ என்னுரை தன்னையே
சீர்ச்சொல் இதுதானே: கர்த்தரவர் -சீர்ச்சொல்லே:

நாஅன் வசிக்கவோர் ஆலயத்தை நீயெனக்கு
மாஅந்தா கட்டுவாயோ? சீரின -மாஅந்தர்

நாடாம் எகிப்தினின்று வந்தநாள் கொண்டிந்நாள்
வீடெதில் வாசம் செயாதுநான் -நாடிதில்

கூடாரத் தில்பல்லோர் வீட்டில் உலாவினேன்.
நாடிதில்நான் யாரிடமும் கேட்டதுண்டோ -நாடிதில்

வீட்டில் உலாவிய நான்கேட்ட துண்டோகேள்
வீட்டாக கோவில் தனைகட்ட? -நாட்டானாம்

தாவீதே, சீர்ப்படைகள் தன்னின்சீர்க் கர்த்தரவர்
மேவியுரை என்னவெனில்: ஆடுபின் -ஏவலாளாய்

நின்ற திருவுன்னை மந்தையை விட்டெடுத்து
வன்பகைஞர் எல்லாரை நானழித்து -நன்னார்

பெரியோர்ப் புவியினர்க் கொத்த பெயரை
அரிதாண் உனக்கிடு வித்தேன் -சரியார்

இனியலையா மல்தரிக்க நீதித் தலைவர்
நனிதந்து வீணரால் போகா -நனிபிழறார்

நாட்டினேன் நாள்வரையில் சீரினத்தை நான்தானே
நாட்டிதில் சீராய்க் குடியிருக்க -நாட்டரசா

உன்பகைஞர் விட்டுன்னை மீட்டேன்நான் நீங்கலாக்கி
உன்வீட்டை உண்டுசெய்வார் சீரவர் -என்று

திருக்கர்த்தர் உன்செவிக்கு சொல்கிறார் சீரார்
திருவேநீ செத்துபோன பின்னர் -திருமகன்

தன்னை எழுப்பிநான் அன்னவனை மன்னனாக்கி
என்றைக்கும் சீர்நிலை யாக்கிடுவேன் -அன்னவனே

என்பெயர்க்காய் ஓரா லயம்தனைக் கட்டுவான்
என்றைக்கும் மன்னன் அரசது -என்முன்னே

நிற்குமாம்; நானவனின் தந்தையாகி அன்னானோ
நற்சேயாய் நிற்பானே; வன்செய்தால் -அற்றானை

மாந்தரின் சாட்டையால், மாந்தர் அடிகளால்
வேந்தனை நானடித்து தண்டிப்பேன் -வேந்தன்மேல்

சீரிரக்கம் தன்னை அரசன் சவுலெடுத்த
நேரிலான் போலெடுக்கா மல்விட்டு -சீரநிலை

உன்வீடும், உன்னரசும், என்றென்றும் உன்முன்னர்
உன்அரி நல்லணையும் என்றென்றும் -என்கிறார்

என்றவன் நாத்தான் இறைச்செய்கை, நோக்கியவன்
மன்னன் செவிகேட்கச் சொல்.

2 சாமு கலி 16

நாத்தான் தாவீதுக்கு அறிவித்த பின்னர் தாவீது ஆசரிப்பு கூடாரத்தில் போய் கர்த்தருக்கு முன் நன்றியறிவிக்கச் செல்லுதல்.

வாக்குரைப்போன் சொல்கேட்டு தாவீது மன்னனவன்
வாக்கவரின் கூடமுள் சென்றவன் -வாக்குதந்த

ஆண்டவரே கர்த்தாவே தேவரீர் என்னைநீர்
ஆண்டவரே கொண்டுவந்தீர் இம்மட்டும் -ஆண்டவரே

இந்நிலைக்கு நானோ தகுதியான வன்தானோ?
இந்நிலைக்கு வீடென் தகுதியோ? -இந்நிலையோ

உம்பார்வை தன்னில் மிகச்சிறிய தொன்றாமே
உம்மடியான் வீட்டைக் குறித்தந்த -உம்சொல்

வெகுதொலைவில் உள்ளதை முன்சொல்ல நீரோ
அகமாந்தர் சொற்களினால் சொன்னீர் -இகத்திலே

இந்தசொல் கேட்டநான் தாவீது சொல்லயினி
இந்நாளில் உள்ளதென்னச் சீராரே? -எந்நாளும்

கர்த்தாவே நேரடியான் தன்னையே நீரறிவீர்
கர்த்தரின் சொல்தனை என்செவியில் -கர்த்தாவே

கேட்கச்செய் தீர்சீர்த் தயவாய் திருவவரே!
கேட்கச்செய் தீரதனால் நீர்பெரியார் -நாட்டுள்ளே

என்று விளங்குகின்ற தேசீரே; தேவரீர்
என்றும் உமக்கும் நிகரிலை -என்றென்றும்

உம்மைத் தவிரவும் வேறுதேவன் இல்லையே
உம்மினமாம் சீரிசுரெல் தன்னிகர் -இம்மி

உலகிதில் உண்டோ? புவியிதின் மக்கள்
அலையலையுள் உம்மேன்மை தானே -நிலம்விளங்க

தேர்ந்திட்டு நாடுவிட்டு மீட்டெடுத்து மேன்நடத்து
வேர்த்தேசம் மக்களும் சீரிலா -கார்ச்சிலைகள்

மேல்மேன்மை நீர்விளங்கச் செய்து உமதினம்
மேல்சீராம் மக்களாய் நிற்கவே -மேல்மாந்தர்

தன்னிற்கு நீர்தாமே சீரவர்க்குத் தேவனானீர்.
சொன்னநல் சொல்லாம் அடியானின் -அன்னவரே

செய்தருளும் சொல்படியே நன்னிலை தான்படுத்தி
மெய்ப்படைகள் தேவனாம் கர்த்தாவே -மெய்யிசுரெல்

மேற்றேவன் என்றுசொல்லி, உம்பெயர் என்றென்றும்
சாற்றியே மேன்மைப் படுவதாக -சாற்றிடும்

தாவீதின் வீடும்முன் நிற்கட்டும் சீர்நிலையாய்
தாவீதின் வீடு நிலைநிற்கும் -மேவிநீர்

சொன்னதால் வேண்டுகின்றேன் சீரவரே வாழ்த்தும்நீர்
சொன்னபடி என்றென்றும் நிற்கட்டும் -என்வீடு

இப்போதும் கர்த்தராம் ஆண்டவரே, தேவன்நீர்;
எப்போதும் உம்சொற்கள் மெய்யாமே; -இப்போதும்

தேவரீர் உம்மடியான் கேட்கயிந்த நற்சொற்கள்
தேவரீர் சொல்லிநீர் வாக்களித்தீர் -தேவரீர்

உம்மடியான் வீடு உமக்குமுன் என்றைக்கும்
அம்மிருக்க வாழ்த்திடும்நீர்; கர்த்தாவே -அம்மானே

தேவரீர் நீரிதைச் சொன்னீரே; உம்வாழ்த்தால்
மேவி உமதடியான் வீடது -தேவனே

என்றைக்கும் வாழ்த்துகள் பெற்றிருப்ப தாகவென
அன்னான் துதித்தான் திரு

2 சாமு கலி 17

தாவீது பெலிஸ்தர், சீரியர், மோவாபியர் ஏதோமியரைக் கீழ்படுத்தி சுற்றிடும் தாணையங்களை ஏற்படுத்துதல்.

தாவீத் பெலித்தரை போரிட்டுக் கீழ்ப்படுத்தி
தாவீத் பெலித்தரின் மேதெகம்மா -ஏவிப்

பிடித்தபின் மோவா பியரை முறிய
அடித்தே அவர்களை செய்தான் -அடிதரை

அங்கே பணியவைத்து நூல்போட்டு மூன்றிலிரு
பங்கு மனிதரைக் கொன்றுவிட்டான் -பங்கொன்று

சேவித்து செய்தான் வரிகட்டச் சீர்மகன்;
மேவியே சோபாவின் ஆதரெசர் -சீவவே

சென்றனன் ஐபிராத்து சீமை தனைப்பிடிக்க,
அன்னவனை தாவீத் முறியடித்து -அன்னவனின்

தேர்களில் நூறை எடுத்திட்டு மற்றபிற
தேர்களை துண்டாடிப் போட்டவன் -தேர்வீரர்

தன்வீரர் ஆக்கினான்; பத்தா யிரமிரண்டு
தன்வீரர் ஆக்கினான் சீர்மகன் -வன்னான்

அரசனென சீரியர் வந்தார் உதவ
அரசனவன் தாவீத் முறித்தே -இருபது

ஆயிரம் வீரரை வெட்டினான்; பின்னரவன்
வேயிலா தாணையம் சீரியாவில் -ஆயம்

பெறவைக்க, சீரியர் தந்தார் வரிதான்
அறனவர் தாவீத்தை காத்தார் -அறனவன்

சென்றயிட மெல்லாம் சிறந்தங்கு; மன்னனோ
வன்னவன் வீரரின் பொற்பரிசை -தன்னெடுத்து

கொண்டுவந்தான் சீர்நகர் தன்னிற்கு; பல்மடங்கு
கொண்டுவந்தான் வன்நகரின் வெங்கலம் -கொண்ட

இராணுவம் செய்திகேட்ட ஆமாத்தின் தோயீ
அரசன் தலைவனை வாழ்த்தி -அரசனிடம்

யோராம் எனும்தன் மகனை அனுப்பினான்.
யோராம் அவன்கையில் சீர்வளம் -சீரவன்

கைக்கொண்டு வந்தான். அனைத்து வளங்களும்
கைக்கொண்டு சீர்தூயாய்ச் செய்தனன் -வேக்காடாம்

உப்பினது பள்ளத்தில் சீரியர் தான்வர
அப்போ பதினெட்டு ஆயிரம் -தப்பா

தடித்துத் திரும்பினதால் நற்கீர்த்திப் பெற்றான்
அடித்தவன் தாவீத் அரசன் -அடித்தவன்

ஏதோமில் தாணையங்கள் வைத்தனன் தாவீது
ஏதோமின் மக்களும் சேவித்தார் -மேதவன்

தாவீது போன இடத்திலெலாம் கர்த்தரவர்
தாவீதைக் காப்பாற்றி னார்சீரார் -தாவீது

தன்னிலம் எல்லாம்மேல் மன்னனாய் நீதிசெய்தான்
அன்னான் இராணுவம் சேரூயா -நன்மகன்

நின்றனன் யோவாப் தலைவனாக மன்னனொடு;
மன்னனின் சீரமைச்சர் யோசபாத் -அன்றியும்

ஆசரியர் சாதோக்கும் சீராண் அபியத்தார்
ஆசனின் சேயோன் அகிமெலெக்கும் - ஆசரியர்

சேராயா மன்னனின் நல்ல எழுத்தனாம்
சீராண் பெனாயா இருவினச் -சீரார்த்

தலைவனாய் நின்றிட தாவீதின் சேயோர்
தலைவராய் ஆண்டனர் ஆங்கு.

2 சாமு கலி 18

யோனத்தான் மகனாகிய மேவிபோசேத்தை தாவீது அழைத்து வந்து தன்னோடு வைத்திருத்தல்.

யோனத்தா னிற்காய் தயவுபெறத் தக்கவன்
யோனத்தான் தந்தை சவுலினது -மேனவன்

வீட்டாரில் இன்னும் எவரேனும் மீதியுண்டோ
நாட்டவரை தாவீது கேட்கவும் -நாட்டவர்

சீபா யெனும்வேலைக் காரன் அழைத்துவர
சீபா எனும்பேர் உடையோனோ? -சீபாஆம்

என்றுசொல்ல மன்னனவன் கேட்டான் இறைநிமித்தம்
மன்னன் சவுலின் குடும்பத்தில் -நன்தயை

செய்யும் படியவன் வீட்டிலே யாதொருவன்
மெய்யாக மீதியாய் உள்ளானா? -மெய்மன்னன்

கேட்டதற்கு, சீபா அரசனிடம்: மன்னனே
கேட்டீர்சீர், இன்னமும் யோனத்தான் -வீட்டில்

இருகால்கள் சீரிழந்த சேயொருவன் தானே
இருக்கிறான் என்றிட கேட்டான் -அரசனும்

எங்கே இருக்கிறான் சேயவன் என்றதற்கு
அங்கவன் லோதேபார் ஊரிலே -தங்கியிரும்

தங்குகிறான் மாகீரின் வீட்டிலே என்றிட
தங்கு யிடம்விட் டழைப்பித்தான் -அங்கவன்

வந்தபோது கீழ்ப்பணிந்து சேயாண் வணங்கிட
அந்தசேய் கண்ட அரசனவன் -வந்தநீ

மேவிபோசேத் தோசேய் எனக்கேட்க; ஆம்சீரே
மேவியிதோ, நானடியேன் என்றிட -மேவியோன்

உன்தந்தை யோனத்தான் என்நண்பன். சீரவர்
முன்மன்னர் செய்நில மெல்லாமே -உன்கை

தருவேன்நான்; என்னுடன் ஊண்புசிப்பாய் என்றும்
திருவே, மரித்தநாய் போலே -இருக்குமெனை

நீர்பார்க்க நானிங்கு செய்தது சீரென்ன!
சீர்மன்னன் சீபா நிலமெலாம் -சீர்ப்படுத்து

தந்தேன்நான் முன்னவன் சீர்நிலத்தில் செய்யதை
இந்தசேய் உண்டிட ஊண்தனை -அந்தவன்

சீபாவின் பேறாம் பதினைந்து மக்களார்
சீபாவின் வேலை இருபதாம் -சீபா:

அரசனை நோக்கி: நிறைச்சீரும் சொல்லே,
அரசே படிசெய்வேன் என்றான் -அரசனோ

மேவிபோசேத் என்முன்னே என்சேய்போல் ஊணுண்பான்
மேவிபோசேத் சேய்ப்பெயர் மீகாவாம் -மேவிபோசேத்

தன்னிற்காய் சீபாவின் வீட்டார் அனைவரும்
நன்றாகச் செய்தாரே வேலைகள் -மன்னன்முன்

மேவிபோசேத் நித்தமும் ஊணுண்ட தாற்சீராண்
மேவி, எருசலேமில் தங்கு

2 சாமு கலி 19

நாகாசு எனும் அம்மோன் அரசன் சாக, ஆறுதல் செய்ய தூதரை தாவீது அனுப்ப, அவர்களை ஆனூன் எனும் நாகாசின் மகன் அவமானப்படுத்தி அனுப்புதல்.

அம்மோன் அரசனாம் நாகாசு சாகவும்
அம்மோன் அரியணைக்கு சேய்ஆனூன் -அம்மோன்

அரசனாக, மன்னன் திருமகன் விட்டான்
அரசனின் ஆட்களை, அம்மோன் -அரசனிடம்

சென்றுபேச, உன்தந்தை எந்தனுக்கு செய்துதவி
சென்றுபேசும் ஊழியரை அம்மோனின் -வன்மக்கள்

அம்மோன் அரசனிடம் சொன்னார்கள், தாவீது
அம்மோன் உளவுபார்க்க விட்டனன் -அம்மோன்மேல்

போர்செய்ய என்றவரும் சூழ்ச்சியெனச் சொல்லிட
பார்மேலாள் சூழ்ச்சியது என்றசொல்லை -சீர்மகன்

ஏற்றிட்டு வந்தவரைத் தூதரென்றும் பாராமல்
வேற்றாய் அவமானம் செய்திட்டான் -ஏற்காத

வண்ணமாய் தூதர் முகமயிரை பாதியென
வண்ணாடை தன்னை இருப்பிட -மண்டைவெட்டி

விட்டனன் போபோபோ என்றே அரசன்செய்
விட்டவழி தாவீதின் நற்செவிக்கு -நட்டார்

சொலவங்கு விட்டனன் சீர்மக்கள் சென்று
சொலும்நீர் திருத்தூதர் போக -நலமயிர்

மேல்வளரும் நாள்வரை நீர்தான் எரிகோவில்
ஆல்தரிப்பீர் என்றனன் கோன்

2 சாமு கலி 20

அம்மோனிய சீரியர் படைகளை யோவாபும் அபிசாயும் முறியடித்தல்

அடடா அரசனாம் தாவீதின் பார்வை
நடப்பில் அருவருப்பும் ஆனோம் -விடுத்தானே

ஆனூன் இனத்தாராம் சீரியர் வாரும்நீர்
மேனானைப் போரிட என்றழைத்து -மானமிலார்க்

கூலிப் படையாக பன்னிரு ஆயிரம்
கூலி கொடுத்து அழைத்தனன் -கூலிதனை

வாங்கவந்த முப்பத்து மூன்றா யிரவீரர்
ஆங்குவரும் சேதிகேட்டு தாவீது -ஆங்குதன்

போர்ப்படையின் நற்றலைவன் யோவாபை விட்டனன்
போர்ப்படைகள் கொண்டெதிர்க்கச் சீரவன் -போர்ச்செய்ய

அம்மோன் கறைவீரர் நின்றார் ஒலிமுகத்தே
அம்மோன் அழைக்கூலி நின்றாரே -அம்மோன்

வெளிதன்னில் சென்ற இராணுவத்தார் ஈராய்
வெளியொன்றும் வாயிலி லொன்றும் -விளித்தார்

கறைப்போர்போர் என்றே அபிசாய்க்குச் சொன்னான்
கறையம்மோன் நீபோர்ச்செய் ஆங்கே -கறைசீரி

நான்போர்ச்செய் எங்கேனும் கைமிஞ்ச மற்றாரோ
மேன்சீர்ப் படைக்குதவ வந்திடட்ட்ய்ன் -மேன்சீர்

திருநமக்கு கையிட்ட சீர்நகர்க்காய் மக்கள்
திருவவர்க்காய் நான்செய்வோம் போரை -திருத்தமன்

சொல்கேட்டு போனார் படைப்பற்றி சீர்மக்கள்
அல்லாத சீரி முறியடிந்து -நில்லாதே

போகவும் அம்மோனும் பின்னிட்டு அந்நகர்க்குள்
போகவும் வெற்றியொடு வந்தாரே -போகவிட்டு

சீர்நகர் சீரிருவர் வந்தடைந்தார் சீர்ப்படையோர்
சீர்முன்னே சீரியர் போனதை -சீர்குறையோன்

ஆதரெசர் கேட்டபோது ஐபிராத்து அக்கரையில்
ஆதரெசர் தூதர்போய் கூட்டினர் -ஆதரெசர்

தன்னின் படைத்தலைவன் சோபாக் அவர்முன்னே
சென்றான். அதுசேதி தாவீது -மன்னன்

செவிவர, கூட்டினான் தன்படையை யோர்தான்
புவிநதியின் அக்கரையாம் , ஏலாம் -புவிவந்து

சீரியர் போர்செய்ய முன்பாய் முறிந்தோடி
சீரியரில் தேர்வீரர் சோபாகை -சேரங்கு

சாகும் படிவெட்ட, தாவீத்முன் சீரியர்
சாக முறிந்ததை ஆதரெசர் -வாகையார்

கண்டங்கு சீரினத் தோடமைதி ஒப்பந்தம்
கண்டவர்ச் செய்தார்; வரிகட்டி -அண்டையார்

அம்மோ னியர்க்கவர் இன்னுதவி செய்யாது
அம்மோ னியர்விடுத்தார் சீரியர்கள் -அம்மாண்

அரசனுக் கஞ்சியவர்ச் சேவித்தார் வேறார்
அரசர்கீழ் ஆத ரெசர்

2 சாமு கலி 21

அரசர் போர்ச்செய்யும் வசந்த காலத்தில் தாவீது போருக்குப் போகாமல் எருசலேமில் தங்கித் தரித்திருத்தலும், எலியாமும் உரியாவும் யோவாபோடு போருக்குச் செல்லுதலும்.

மலர்மலரும் காலம் வரவங்கு மன்னர்
தலைவர் எவரெனப் பார்க்க -சிலர்ப்போரைச்

செய்திடும் காலமாம்; யோவா பொடுபலர்
செய்திடுவோம் போரெனச் சென்றிட -செய்யும்போர்

என்ற திருமன்னன் நின்றான் எருசலேம்
அன்னான் பிழன்றங் கரசனவன் -மன்னன்சொல்

கேட்டு தலைவர்கள் போயினர் போருக்காய்
நாட்டில் பலரொடு, போயினர் -நாட்டிலே

யோவா பொடுசீர் எலியாம் உரியாசேர்
மேவியே மேன்வலி பெற்றவர்கள் -ஏவியதால்

போர்போர்போர் என்றங்கு நாட்டுப் புறத்தினில்
சீர்மக்கள் சென்றாரே சீர்த்தலைவர் -சீர்ப்பெட்டி

சென்றது சீரினத்தின் சேர்ப்படை யோடுத்தான்
அன்னவனோ நின்றான் நகர்

2 சாமு கலி 22

உரியாவின் மனைவியாகிய எலியாமின் மகள் பத்சேபாள் எனும் அழகி மாலை மயங்கும் நேரத்தில் ஓடையில் குளித்தலும், தாவீது தன் அரண்மனை உப்பரிகையில் இருந்து அவளை காணுதலும்

பத்சேபாள் என்றொரு நல்லழகி சீரவள்
அத்தவள் வீடோ அரணருகே -அத்தவள்

சீராண் எலியாமின் நன்மகளாம், மேன்வலியான்
சீராண் உரியா மனைவியாம் -சீரார்

இருவரும் போரிற்குச் சென்றிட வீட்டில்
இரும்வேலை எல்லாம் முடித்தத் -திருமகள்

சென்றனள் ஆங்கே உலாவி மகிழ்ந்திட
அன்னாள் நதியருகே சென்றங்கு -என்னே

குளிர்நீர் எனக்கண்டு ஈதன்றோ சீரே
களித்திங்கு நான்குளிப்பேன் என்றே -களித்தவள்

நீராட, நீரதும் அன்னவளின் சீயழகு
சீரிலா தெல்லாம் மறைத்திட்டு -சீரழகாய்

காட்டியதே; அன்னவள் மாலைவேளை என்றேதான்
வீட்டி லிருந்து வரும்போது -தோட்டிட

ஏதுமின்றி வந்தவள் நீரதின் சில்குளிரால்
ஏதுமிலா அந்நினைவு இல்லாது -மேதிலாள்

நீராடி னாள்நதி தன்னில் களித்தங்கு
சீரிலாள் நீராட்டை கண்டனர் -சீரற்று

மன்னன் அரண்மனையில் உண்(டு)குடித்து நின்றிட
மன்னன் ஒருநாள் உறங்கிவிட்டு -அன்னவன்

மாலைநேரம் தன்னில் எழுந்து நலமிது
மாலைநேரம் தென்றல் படப்போவோம் -ஆலவன்

சென்றான் அரண்மனை உப்பரிக்கை தன்னிலே
சென்று நடக்க; திருமகன் -தன்கண்ணால்

கண்டனன் யாரோ அதுவேளை ஏனங்கே
கண்காண ஓடையில் நீராடல் -மண்மன்னன்

கண்களால் சீரழகி தன்னைப் பருகினான்
கண்காண நீராடும் மாது

2 சாமு கலி 23

குளிக்கும் மாது யாரென தாவீது பார்த்துவரச் சொல்லுதலும் இன்னாரென்று மக்கள் வந்து சொல்லுதலும்.

யாரங்கே யாரங்கே வாடா விரைவாய்நீ
யாரது அந்நதியில் நீராடும் -சீரவள்

இங்கிருந்து கண்டேன்நான் சீரழகி நீராட
அங்குசென்று யாரவள் என்றுநீ -அங்குசென்று

நீயறிந்து வாயென, கட்டளை யேற்றந்த
வேயவன் வீரனோ சென்றுவந்தான் -வேயறிந்தேன்

சீராள் எலியாமின் சீர்மகள் என்றுகேட்டு
சீராள் உரியாவின் இன்மனைவி -சீரவர்

நாட்டிலிலார் போர்களத்தில் போர்செய்ய சென்றாரே
வீட்டிலே மாதவள் மட்டுமாம் -நாட்டினது

மன்னன் செவிதனில் சொல்லிட, மன்னனுக்கோ
தன்வீரன் சீர்மனைவி என்றசொல்லோ -தன்மேலார்

வீட்டின் மகளவள் என்றசொல்லோ, ஏழாக
வீட்டில் மனைவியர் என்நினைவோ -வீட்டிலே

பத்து மறுமனை யாட்டி யுளரென்றோ
அத்தவன் போனான் மறந்து

2 சாமு கலி 24

பத்சேபாளோடு தாவீது பாவம் செய்தல்.

பிறன்மனை நோக்கா வலியது எங்கே
அறனார் அறத்தைப் பிழன்றே -பிறன்மனை

தன்னை அழைத்துவர விட்டான் அரசனவன்
இன்னா எனச்சொல்ல யாருமிலை -அன்னார்

தரித்தாரே போர்தனில், இன்னா தறிந்தும்
அரசனின் காமம் தலைமேல் -அரசனவன்

ஆங்கே கலவிப் புணர, அறனாரின்
தீங்கிலா நேமம் மறந்தனர் -தீங்கதைச்

செய்தனர் சீரிலார் ஆங்குதான்; மெய்யவர்
மெய்ச்சொல் இதுவே; நகர்தன்னில் -அய்யோ

மகளவளை வன்புணர்ந்தால் சத்தமிட்டு ஊரார்
மகளவள் கூப்பிட வன்னாண் -மகளவளைச்

சீரிலாக் கைவைத்த காரணத்தால் சீரிலான்
சீரினத்தார் கல்லெறிந்து கொன்றிடுவர் -சீரிலாள்

மன்னன் எனவச்சம் கொண்டவளோ, வேறேதோ
அன்னான் அழிசெயல் தன்னையேன் -இன்னாச்

செயலென விட்டோடா நின்றாளோ, இன்னா
செயலதற்கு சீரிலாள் விட்ட -செயலதும்

சீரிலை தானே அறனாரின் கண்களில்
சீரிலாதுச் செய்தார் வழு

2 சாமு கலி 25

செய்த பாவப் புணர்ச்சியால் பத்சேபாள் கருத்தரிக்க போர்முனையில் இருந்த உரியாவை அனுப்பு என யோவாபிடம் சொல்லியனுப்ப, உரியா வந்திடவும் அவனை வீட்டிற்கு போ என்று சொன்னாலும் அவன் அரண்மனை வாயிலில் தரித்திருக்க, மன்னன் தாவீது அவனைக் கொல்ல சதித்திட்டம் செய்தல்.

முற்றிக்கை போரது நாட்கணக்கில் ஆகிட
அற்றவள் பத்சேபாள் தாவீது -அற்றசெயல்

தன்தீட்டு நீங்கிட தூயாக்கிச் சென்றாளே
தன்வீட்டுள்; ஆனாலும் சீரில்லா -வன்செயல்

தன்னால் கருத்தரிக்க, பெண்ணவள் போனாளே
வன்செயல் நான்செய்த காரணத்தால் -என்வயிற்றில்

சேய்வளர் கின்றதே, என்கணவன் போர்க்களம்
வேய்த்தரிக்க ஆணறியா எங்ஙணம் -சேய்தரித்தாள்

என்றிங்கு மக்களார் கல்லெறிவர் என்றேதான்
மன்னனுக்குச் சேதி யறிவிக்க -அன்னவள்

விட்டாளே தூதுவர் தன்னையே; மன்னனோ
கெட்டவன் சேதி யறிந்தவன் -விட்டானே

தூதுவன் வீரன் உரியாவை இங்குனுப்பும்
மேதவன் மன்னனின் தூதுவர -ஏதோ

சிறப்பிருக்க வேண்டுமென யோவாபும் விட்டான்
அறனது மன்னன்சொல் கேட்டு -சிறப்பாணும்

போர்விட்டு வந்தான் நகர்தன்னே; வந்தவன்
போர்ச்செய்தி என்னசொல் வீரனே -போர்தன்னில்

வீரர் தலைவன் நலமோ எனக்கேட்டு
வீரனே வந்திட்டாய் தூரமிது -வீரனே

வீட்டிற்குச் சென்றுநீ கால்கழுவி ஓய்வெடு
வீட்டிற்கு செல்லென ஆல்சொல்லை -நாட்டவன்

கேட்டங்கு; சென்றிட்டான் வீடல்ல வாயிலில்
நாட்டினது வீரர்கள் போர்க்களத்தில் -நாட்டின்

திருப்பெட்டி போர்க்களத்தில் நின்றிருக்க நானோ
வரவிங்கு இன்மனைவி யோடு -தரிப்பேனோ

என்றவனும் வாயிலில் தான்தூங்க, பின்சென்ற
மன்னனின் ஏவலாள் பல்பொருள் -மன்னன்சொல்

கேட்டெடுத்துச் சென்றாலும், வாயிலில் தங்கினான்
வீட்டுள்ளே செல்லவில்லை என்றசேதி -நாட்டரசன்

தான்கேட்க சொன்னாரே; நாட்டவனோ, வீட்டிளெ
தான்செல்வான் என்றே மதுவூற்றி -மேன்மகன்

தான்வெறிக்க வைத்தாலும் அந்நாளும் வாயிலே
தான்னெனது வீடென்று போயினன் -மேன்மகன்

மூன்றாம்நாள், ஈதென்ன போகாது விட்டானே
தான்செய்த வன்செயல் வந்திடுமே -மேன்மகன்

தன்னை அழித்திடவே திட்டத்தைத் தீட்டினான்
வன்னரசன் கீழ்மன தோடு

2 சாமு கலி 26

உரியா தானே தன் மரண ஓலையை யோவாபிடம் எடுத்துச் செல்லுதலும், உரியா போரில் மரித்திட யோவாப் அரசனுக்குக் கடிதம் அனுப்புதலும்.

வலிவீரர் முப்பதில் நன்னான் உரியா,
நலமாகும் இல்செல்; அவனோ -நலமில்

வலிவீரர் போர்க்களம் தன்னிருக்க என்றே;
வலிவீரன் போரிலே மாண்டால் -நலமனையாள்

நானெடுப்பேன் அன்னவள் இன்னாளை என்மனையாய்
மேனிலான் திட்டமதைச் செய்தானே -ஏனோசீர்

இல்லாதான் கையால் மடல்வரைந்து கோனவன்
நல்லாணின் கைதனில் போர்த்தலைவன் -நல்லாண்கை

தந்திடு இம்மடலை என்றே அனுப்பிட்டான்
அந்தோ பலிகடா என்னென்று -அந்நாளில்

தானறியா நிற்குமே, அந்தபடி சீரவன்
தானறியா தன்மரண வன்கடிதம் -தானேந்திச்

சென்றனன் போர்க்களத்தில்; வன்கடிதம் சொல்லிது
என்சொல்கேள் யோவாபே, போர்முனையில் -இன்னான்

உரியாவை வேலேந்தி செல்லச்சொல், அன்னான்
உரியா செலும்போது பின்மே -திரும்பச்சொல்

மற்றவரை, மாளட்டும் அன்னான் எனக்கடிதம்
நற்றவனோ அற்ற தறியாதே -நற்றாண்

மடல்கண்டு சொல்படியே வேலேந்து சீராண்
நடவங்கே என்றுசொல்ல போக -நடந்தாலும்

மற்றாரோ பின்னிடவும் மேன்மதிலில் நின்றெதிரி
அற்றாரோ வில்லம்பு எய்திடவே -நற்றாண்

மரித்தானே அந்தோ; செயல்செய்து சேதி
அரசனுக்கு விட்டான் தலைவன் -அரசனோ

ஏன்நீர் மதிலருகே சென்றீரோ? வில்வீரர்
தான்னெதிரி அம்பெய்வர் என்றறிவீர் -மேன்கேட்டால்

மன்னா, திருவாண் உரியாவும் செத்தனன்
மன்னா, எனவங்குச் சொல்

2 சாமு கலி 27

உரியாவின் மரணச்செய்தி வந்தபின் பத்சேபாளை தாவீது மணந்து ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தலும்



செய்திகொண்டு வந்த இனத்தூதன் சொன்னானே
செய்தியிது வன்னார் மதிலினின் -எய்தாரே

அம்புகளை, செத்தார் சிலரங்கே, செத்தானே
அம்புபட்டு வீரன் உரியாவும் -அம்மான்கேள்

போரில் ஒருமுறை வாள்வேலோ நம்பக்கம்
சீரிருக்கும்; அல்வேளை தானெதிர்க்கும் -சீரார்த்

தலைவனை சீராகச் செய்திடச்சொல் போரை,
தலைவனவன் சீரிலான் சொல்ல -தலைவன்

மரித்தனன் சேதி யறிய கறையாள்
மரித்தவனுக் காக வருந்தி -மரித்தாரே

என்தலைவன் மேனாரே என்றவள் கைம்பெண்ணாய்
என்னைவிட்டுப் போனாரே போரில்தான் -என்செய்வேன்

என்றவளும் கண்ணீர் வடித்திட்டாள்; வன்னரசன்
என்னவளே வந்திடுநீ என்மனைவி -என்றிட

கைம்பெண்ணின் ஆடை களைந்திட்டு வந்தனள்
கைம்பெண்ணாள் மன்னன் மனைவியாய் -வைம்பெண்ணாள்

பெற்றெடுத்தாள் சீராண் மகவுதனை அற்றவள்
பெற்றசீரில் சீரார்கண் முன்

2 சாமு கலி 28

நாத்தான் இறைவாக்கு வர தாவீதிற்கு வந்து பாவத்தையும் தண்டனையையும் அறிவித்தல்



சீராண் இறைவாக்கன் நாத்தான் தரித்திருக்க
சீரவர் சொன்னாரே வன்செயலை; -நேராகச்

சென்றனன் சீர்வாக்கன் மன்னனிடம் சென்றங்கு
அன்னவன் சொன்னான் கதையொன்று -மன்னா

ஒருஊரில் ஏழை ஒருமனிதன் வாழ்ந்தான்,
ஒருசீராண் வாழ்ந்தனன் அவ்வூர் -ஒரேயொரு

ஆடுதான் ஏழையிடம்ல் சீராணோ பல்மடங்கு
ஆடுகள் நின்றன மந்தையில் -ஆடது

ஏழையின் வாயினின்று அப்பத்தைத் தின்னுமே
ஏழையோ போற்றி வளர்த்திட்டான் -வேழாகச்

சீராணோ வந்திட்ட நண்பனுக்கு சீர்விருந்தாய்
சீரிலாதே அவ்வாட்டை கைக்கொண்டு -சீரங்கு

செய்தான் விருந்ததை என்றிட மன்னனோ
செய்தது தீதே; மரணிக்கும் -செய்கையே

செய்தவன் நாலத் தனையாக ஆட்டைத்தான்
கைக்கொடுக்க வேண்டுமவன் என்றதும் -செய்தது

நீயே அரசனோ நீயும்தான்? சீரிலோய்
நீயோ கிடைதனில் நின்றனை -வேயான்

அரியணையில் ஏற்றிட்டு தந்தேன் திருக்கை
அரிவைகள் சீராக; மங்கை -அரிவைகள்

போதாது என்றாலோ என்னிடம் கேட்டிட்டால்
வேதவர் நான்தருவேன் என்றாலும் -தீதாக

செய்தாயே வேலியே நன்பயிர் மேய்வதுபோல்
செய்ததால் வாளது உன்வீட்டை -மெய்யாய்

விலகாது, வேய்மறைவில் செய்தாய் செயலை
விலக்கதுவே; உன்பெண்டிர் தன்னை -அலங்கோல

மாகவே வேறாண் புணர்ந்திடுவான் கேள்நீயும்
வாகன்நீ செய்தாய் மறைவாக -ஏகனோ

ஆதவனின் நல்லொளியில் செய்வான் புணர்வதை;
மேதவன் சொன்னானே: ஐயகோ -வேதவர்க்கு

வன்னெதிராய்ச் செய்திட்டேன் இப்பாவம்; என்றதும்
அன்னவா, நீசாகா வண்ணமாய் -வன்பாவம்

நீங்கிடவே கர்த்தரவர் செய்திட்டார் ஆனாலும்
தீங்காய்நீ மற்றோரும் தேவனைத் -தீங்குச்சொல்

சொல்லிடவே வைத்ததினால் வன்பாவம் வந்திட்ட
அல்பிறப்பு இப்பிள்ளைச் செத்திடும் -சொல்லிதுவே

என்றுகூறிச் சென்றான் இறைவாக்கன் அன்றுதான்
வன்சொல்லைக் கேட்டோன் அதிர்ந்து

2 சாமு கலி 29


இந்த நிலையில் தாவீது அரசன் பாடிய பாவ மன்னிப்பு கோரும் திருப்பாடல் எண் 51, இங்கே படிக்கலாம்

பிள்ளைக்காக தாவீது உபவாசம் இருந்து அழுதலும் பிள்ளை செத்தபின்னர் பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளைச் சேர்ந்து சாலமோனை அவள் பெற்றெடுத்தலும்.



வன்சொல்லே, ஆண்டவா மன்னியும் என்றேதான்
மன்னனும் வேண்டினான் சீர்மகன் -அன்றியும்

நாளுக்கு நாளந்த பிள்ளையோ நோயினால்
வேளவன் நோன்பிருந்தும் பட்டிட -வேளவா

நாள்பல நீருண்ணா தேயிருக்கின் றீரேயேன்
ஆள்பலர் வந்துகேட்க கேளாது -வேள்மகன்

உண்ணாது அன்னான் புலம்பினானே பிள்ளைக்காய்
உண்ணாது ஏழாமே நாட்களது -உண்ணாது

மன்னன் புலம்பிட ஏழாம்நாள் பிள்ளையது
வன்மரிக்க, எப்படி நாம்சொல்வோம் -மன்னனிடம்

பிள்ளைநோய்ப் பட்டிருந்த நாள்முதலாய் உண்ணாது
பிள்ளைக்காய் செய்கின்றார் இப்படி -பிள்ளையவன்

செத்தான் எனக்கேட்டால் என்னாகும் என்றவர்
அத்தாண் சொலாது கிசுகிசுக்க -அத்தவன்

சொல்கின்றார் ஏதோ எனவங்குக் கேட்டானே
சொல்லும் பிழைத்தோ மரித்தோயேன் -சொல்லவும்

நோன்புவிட்டு நீராடி ஊண்தரச் சொல்லிட
ஏன்மன்னா இப்படி செய்கின்றீர் -ஏன்சேய்

மரித்தானே என்றழுவீர் என்றுநினைத் தோமே
தெரியும் எனக்கிங்கு கர்த்தர் -மரிக்காது

அச்சேயை விட்டுவிடு வாரோயென் றேநோன்பு
அச்சேயோ செத்தபின் என்செய்வேன்? -அச்சேயின்

போனயிடம் நான்போவ தல்லாமல் வேறேதும்
மேனானும் செய்கிலேன் நான்தானே -மேனாண்

பகன்றிட்டு பத்சேபாள் ஆறுதல் சொல்லி
அகமனையாள் தன்னை அடைந்தே -வகையாகப்

பெற்றான் திருமகன் சீர்மகன் சாலொமோனை
பெற்றதும் சீர்வாக்கன் வந்தவன் -பெற்றபிள்ளை

வாழ்த்தினான் யேதிதியா என்றுபேர் இட்டனன்
வாழ்மகவைக் கர்த்தரோ நேசித்தார் -ஆழ்ழன்பால்

தாழ்த்தினதால் அம்மகவை நேசித்தார் சீரவரும்
வாழ்ழிறைவன் தன்னே சிறப்பு

2 சாமு கலி 30

போரில் ரப்பாவை பிடிக்கப்போக யோவாப் தாவீதை வரச்சொல்லுதலும் தாவீது அம்மோன் நகர்களை அழித்தலும்.



யோவாபு போர்முகத்தில் ரப்பா நகர்பிடிக்க
யோவாபோ விட்டனன் தாவீதிற் -மேவிசெய்தி

நீரோர சீர்நகரை நான்பிடித்தே என்பேரே
சீராய் விளங்குமே; சீர்நீரும் -நேராக

வந்திடும் ரப்பா நகர்தன்னில், வந்துநீர்
அந்தூரை மேன்பிடியும் என்றேதான் -அந்நாளில்

போர்த்தலைவன் சொல்லிட, வந்தனன் தாவீது
போர்முகத்தே சீர்களிறான் சீர்ப்போரில் -சீர்ரில்லார்

வெட்டியவன் ரப்பா அரசன் பலமுத்து
நட்டமுடி தன்னை தனக்காக -நட்டவன்

கையெடுத்து அங்கிருந்த மக்களை வாளுக்கும்
கையிரு கோடரிக்கும் செங்கற்கள் -வையிரும்

சூளைக்கும் இட்டவன் அம்மோன் நகர்க்கெலாம்
ஆளவன் செய்தான் வகை

2 சாமு கலி 31

தாவீதின் மகனாகிய அம்னோன் அப்சலோமின் தங்கையாகிய தாமாரை கற்பழித்தல்

தாவீதின் மைந்தனாம் அப்சலோம், மின்தமக்கை
தாவீதின் சீர்மகள் தாமாராம் -தாவீதிற்

அம்னோனோ மூத்த மகனவன் தாமார்மேல்
அம்னோனும் காமங் கொளவங்கு -அம்னோனால்

காணவும் கூடாமற் போயிற்றே கன்னிகையை
காணக் கிடைக்காதே காதல்நோய் -வீணனாய்

நோய்வாய்ப்பட் டான்பேர் மகனவன் அங்குதான்
நோய்வாய்ப் படுத்திட்ட நண்பனை -வேய்வீட்டில்

காணவந்தான் யோனதாப் என்னும் தமனவன்
காணவந்து, ஏனடா நாளைடைவில் -காணுதற்கு

நைந்துநீ ஆனதேனோ சொல்லடா என்றுகேட்க
நைந்தவன் சொன்னானே சோதரியாம் -நைந்திடையாள்

காணுதலும் கூடவில்லை தாமாரை, ஊணூனும்
வேணாது போனேன் இளைத்திங்கு -காணநான்

ஏதும் வழியுண்டோ சொல்நண்பா என்றிட
ஏதேது பாம்பிடம் நஞ்சுளதோ -சூதாணோ

சூதுசெய்தான் திட்டமே; பாரடா நண்பாநீ
சூதாக நோய்ப்போலக் காட்டிடு -மேதார்சீர்

என்னடா என்மகனே நோயென்ன என்றுகேட்க
என்தமக்கை கையாலே ஊணுண்டால் -என்நோயும்

தீருமதால் தாமாரை என்வீட்டில் என்கண்முன்
வாருதற் சொல்லிடும் எந்தாய்நீர் -சீரவன்

தங்கைக்கை ஊண்தானே கேட்கின்றான் என்றவனும்
தங்கையை வந்திடச்சொல் என்றுசொல -தங்கையும்

அம்னோனின் வீட்டிற்கு வந்தவள் கண்முன்னே
அம்னோனோ சீரழகைக் கண்பருக -அம்னோனே

எங்கேநீ பார்க்கிறாய்? ஊணுண்பாய் செய்திட்டேன்
தங்கைநான் என்கையால் என்றதும் -அங்கே

கனாக்கலைந்து ஏதேது பாட்டெல்லாம் பாடி
கனவில் திரிந்தேன்நான் ஐயோ -கனவிலை

என்முன்னே மங்கை இருக்கின்றாள் தங்கையிலை
என்கண்கள் சீராய்ப் பருகிற்றே -என்றுநினைத்

தேயவன் எல்லாரும் போயிடும் வீடுவெளி
தீயவன் சொல்லிட மற்றார்போய் -தீயவன்

என்னறைக்குள் வாதாமார் உன்கையால் சோறுதர
என்னறைக்குள் வாமகளே என்றவனின் -வன்சொல்

அறியாத நல்லழகி போனாள் அறைக்குள்
அறியாதாள் வந்திடவும் தாழ்ப்பாள் -மறித்திட்டான்

தீயவன், கைப்பற்றி வாமகளே வன்பசிதீர்
தீயாய் எரியுமென் காமந்தீர் -ஐயகோ

என்னயிது அண்ணா, அரசனை நீர்கேட்டால்
என்னைத்தான் தந்திடுவார் உன்மனைவி -என்றேதான்

இன்னா திதைச்செய்யீர் அண்ணா விடுமெனை
என்றவள் சொல்லியும், மேல்வந்து -வன்னாக

தங்கையென்றும் பாராது வன்புணர்வு செய்திட்டான்
அங்கவன் செய்தது போதிலை -தங்கையை

பின்னரவன் போபோ வெளியே எனவவன்
வன்னாகத் தீயாண் துரத்தியதும் -என்னயிது

அண்ணா, முதல்செயல் தீதென்றால் இச்செயல்
அண்ணா மிகுந்ததீய வேண்டாமே -அண்ணாகேள்

என்றவள் சொல்லவும் வேலையாள் ஆணையாய்
வன்வெளி விட்டு கதவைநீ -வன்னடைப்பாய்

என்றதும் வேலையாள் விட்டான் வெளியேதான்
வன்னடைத்தான் தாழ்ப்பாள் தனையங்கு -அன்னவளோ

வண்ணமே லாடைமேல் சாம்பலை வாரியிட்டு
அண்ணா, எவருமிலை கேட்கத்தான் -அண்ணா

எனவவள் சென்றனள் அப்சலோமின் வீடு
மனைவந்த மங்கை அழுது

2 சாமு கலி 32

தன் தங்கையாகிய தாமாரை கற்பழித்ததால் அப்சலோம் கருவி பழிவாங்கத் உள்ளத்தில் துடித்தல்

அழுதழுது கண்வீங்கி நின்ற தமக்கை
வழியேது மில்லாமல் ஆங்கே -அழாதேநீ,

சோதரியே, அம்னோன் சகோதரனே உன்மனதில்
ஏதும்நீ வைக்காதே என்றனன் -தீததை

மன்னனவன் கேட்டு சினத்தால் எரிந்தனன்
அன்றியும் மூத்தமகன் வன்செய்கை -மன்னனவன்

கண்டிக்கா தேபோனான்; அப்சலோம் சோதரனைக்
கண்டிக் கவுமில்லை நல்லதென -கண்பார்த்துச்

சொல்ல வுமில்லையே; கற்பழித்த காரணத்தால்
அல்லாக அம்னோனை அப்சலோம் -சொல்லாமல்

உள்ளத்தே தீயாய்ப் பகைத்திட்டான் சோதரன்
தள்ளிநாள் போகட்டும் பார்த்திடுவேன் -எள்ளியவன்

கையைத்தான் என்றவனும் உட்கருவி நின்றானே
வையா திருந்தாலும் தங்கைக்காய் -வையத்தில்

வைத்தானே வைராக் கியத்தை யவனும்தான்
வைத்ததை மன்னனறி யாது

2 சாமு கலி 33

அப்சலோம் சூதாக அம்னோனை விருந்துண்ண அழைத்து அவனைக் கொன்றுபோடுதல்

இரண்டாண்டு சென்றபின் அப்சலோமோ மன்னா
திருவிருந்து செய்கின்றேன் நானே -திருநீரும்

எல்லா இளையரும் வாரும்சீர் ஆடுமயிர்
நல்லாண்நான் செய்தரிக்கும் நல்லிடமே -அல்லாக

தன்மனதில் சூதோடு தன்தந்தை மக்களைத்தான்
இன்விருந் தென்றே அழைத்திட்டான் -வன்னாண்

அரசனோ, மைந்தா அனைவரும் வந்தால்
விரயம் செலவாகும் வீணே -அரசன்நான்

வாழ்த்துகின்றேன் போய்வாநீ என்றாலும் அம்மானோ
வாழ்த்தினீர் நல்லதே நீர்வாரா -வாழ்த்தும்சீர்

ஆனாலும் எம்தமையர் நீரனுப்பும் சீர்விருந்து
மேனவன் கேட்டான் வருந்தியங்கு -தானே

தமையர்க்குச் சீர்விருந்து என்றரசன் விட்டான்
தமையரைக் கொண்டுபோ என்றே -தமையரொடு

உண்டுகுடித் தானே திருமகன் அம்னோனும்
உண்டுகுடித் தன்னிலை அற்றதும் -அண்டையில்

நிற்கும்நீர் அம்னோனை வன்னடியும் என்பேன்நான்
நிற்குமவன் வேலைக்கு ஆணையிட -அற்றவரோ

மன்னனின் மைந்தனன்றோ யாமடித்தால் தீதென
அன்னவனோ யாரது யானன்றோ -என்சொல்லே

சீரடியும் என்றவன் ஆணையிட்டு, தன்னிலை
சீரிலாக் கள்ளுண்ட மாந்தனை -நீரடியும்

அம்னோனை என்றதும் வேலையாட்கள் மேலெதிர்த்து
அம்னோனைச் சாய்த்தனர் கொன்று

2 சாமு கலி 34

மற்ற அரசகுமாரர்கள் தப்பித்தலும் அப்சலோம் கேசூருக்கு ஓடிச்செல்லுதலும்

அம்னோனைக் கொன்றதைக் கண்டனர் மற்றமக்கள்
அம்னோனைக் கொன்றாரே என்றவர்கள் -தம்தம்மின்

இன்னுயிரைக் காத்திடவே அங்கே கழுதையேறி
தன்னூர்க்கு வந்தார் விரைவாக -அன்றியும்

அப்சலோம் எல்லா அரசமைந்தர் கொன்றானென்
தப்பாகச் செய்திவர தாவீதோ -அப்பப்பா

என்னயிது என்றே புலம்பித் தரைப்புரள
மன்னன் தமன்மகன் யோனதாபோ -மன்னவா

எல்லா அரசமைந்தர் கொல்லவில்லை சீரவா
அல்லானாம் அம்னோனைக் கொன்றார்கள் -அல்லாது

தன்தங்கை கற்பழித்த காரணத்தால் செய்திட்டான்
தன்வஞ்சம் தீர்த்திடவே என்றாலும் -என்னே

மகற்போனார் செத்தங்கு என்றவன் மன்னன்
மகற்காக கீழ்ப்புரள, தப்பி -மகற்மற்றோர்

வந்தனர் தூரத்தே, யோனதாப் சொன்னானே
வந்திட்டார் மற்றமகன் பாரும்நீர் -அந்தோ

அழுதிட்டார் வந்தமகற் ஐயகோ கொன்றான்
வழுவாக என்றே அழவும் -வழுச்செயல்

செய்தவன் அப்சலோமோ தப்பித்து ஓடினான்
செய்தன்னில் கேசூரின் தல்மாயாம் -செய்மன்னன்

தஞ்சமாக; மூன்றாண்டு சென்றது, தாவீதும்
கொஞ்சநாள் துக்கித்து ஆறுதல் -எஞ்சிடவும்

அப்சலோமைப் பின்தொடரும் வன்னினைவை விட்டானே
அப்பனவன் நன்றில் லது

2 சாமு கலி 35

யோவாப் தெக்கோவா ஊராளான ஒரு புத்தியுள்ள பெண்ணை மன்னனிடம் அனுப்புதல்

செருயா மகனாம் படைத்தலைவன் யோவாப்
அரசனின் வஞ்சினம் ஆறா -திருப்பதைக்

கண்டவன் திட்டமாய் சீர்மதி பெண்ணொருத்தி
மண்மீது தேர்ந்தெடுத்தான் தெக்கோவா -மண்ணூரில்

பேசிடும் வார்த்தை யெலாம்வாயில் போட்டவன்
வீசும் நறுமணமே தும்மில்லா -தீசுநகர்ச்

சென்றிடுவாய், சாவருத்தம் கொண்டவள்போல் காட்டிடுவாய்
மன்னனிடம் சொல்லிடுவாய் கற்றசொல் -அன்னவளும்

சொல்கேட்டுப் போனாள் எருசலேம் சீர்நகருள்
அல்லாதாள் வந்துள்ளாள் மன்னனே -சொல்சொல்ல

வேண்டுமாம் ஏதோ வுமக்கென வாயிலாள்
வேண்டிட, தன்னிரு சீரவைக்கு -வேண்டிட

கொண்டுவா இங்கிவளை ஏதோ செவிகேட்போம்
மண்ணவள் வந்தாள் வருத்தியே -அண்ணவா

மன்னவா மீட்டிடும் சீரவா என்றழுதாள்
மன்னனோ என்செய்ய வேண்டுவ -அன்னவளே

கண்வருத்தம் ஏனோ நலமரசில் ஏதுகுறை
மண்தன்னில் சொல்லிடு செய்வேன்சீர் -அண்ணவன்

சொல்லிட சொன்னாள் திருமகன் சொல்லிட்ட
சொல்தனை ஆங்கே கதை

2 சாமு கலி 36

தெக்கோவா ஊராளான ஒரு புத்தியுள்ள பெண் மன்னனிடம் உவமானமாக பேசுதலும் மன்னன் அப்சலோமை அழைத்து வா என்று சொல்லுதலும்

மன்னவா கைம்பெண்ணாள், செத்தான் கணவனென்
மன்னா மகனிருவர் எந்தனின் -வன்னாகச்

சண்டையிட்டு கொன்றுபோட்டான் என்மகனை மற்றவன்
சண்டையிட்டுக் கொன்றதால் மற்றவனும் -மண்ணில்

குருதிப் பழிவந்த தென்றே சிலரோ
குருதிப் பழிவாங்க மற்றாண் -திருப்பிடு

என்றுகேட் கின்றாரே, உள்ள சிறுபொறி
வன்னாய் அவித்திடல் நன்றாமோ -மன்னா

இதைநீர் விரைவாகத் தீர்த்திடும் சீரே
அதுகேட்டு மன்னன் பகன்றான் -இதைக்குறித்து

பின்னர் தருவேன்நான் தீர்ப்பென, மன்னவா
அன்றியும் வந்திடுவார் கொல்லவே -நன்றோ

கறைத்தீதோ உம்மேலோ வீற்றிரு சீராம்
அறமனை மேலோ பழியில் -அறனாகத்

தீரும் சிறப்பாகத் தீர்ப்பிதை என்றதும்
சீரிலைப் பாராது கொல்லவே -வாருமந்த

மாந்தரை என்னிடம் கொண்டுவா, தீர்க்கிறேன்
மாந்தரை என்றதும் பெண்ணவள் -வேந்தனே

நம்திரு வேந்தனை நீர்நினையும் என்றதும்
நம்சீர் திருப்பெயரால் சொல்கின்றேன் -அம்மகனின்

ஒன்றேனும் கீழ்விழாது மாந்த மயிருமே
என்றவன் சொல்லிட பெண்ணவள் -மன்னனே

என்ஆண் டவனோடே சொல்லொன்று சொல்லவேண்டும்
என்றதும் சொல்லுநீ பெண்ணவளே -என்றான்.

மடந்தையோ பின்னைஏன் தேவனின் மக்கள்
கடைநீரோ வன்னெதிராய் கொண்டுள் -ளடைநினைவு

ஏனோ பகரும்?, துரத்துண்ட தம்மகன்
ஏனோ அரசன் திரும்பவும் -மேனாய்

அழைக்கா ததினாலே, இப்பொழுது சொன்ன
விழைச்சொல்லால் குற்றமுள்ள மாந்தர் -குழைப்போல

நிற்பதேனோ? மாந்தர் மரிப்ப துறுதிதான்,
அற்பமாய் செய்யில் சுவறுகிற -நற்றாமே

தண்ணீரைப் போலிருக் கின்றோமே; தேவனவர்
மண்ணில் உயிரெடாமல் சேண்துரத் -துண்டவன்

முற்றிலும் தம்மைவிட்டு வீண்விலக் கப்படா
நற்றாம் நினைவை நினைக்கிறார். -நற்றவா

ஆண்டவனாம் என்மன்னா இச்சொல்லைப் பேசவந்த
மாண்பினது காரணி என்னவென்றால்: -மாண்பிலா

மக்களவர் அச்சப் படுத்தினாரென் றேதான்நான்
தக்கவராம் மன்னனொடு பேசவந்தேன் -தக்கபடி

சொல்லெந்தன் சீர்ப்படியே செய்வீரே என்றுநம்பி
அல்லாதாள் வந்தேன்நான் மற்றபடி -அல்லாது

வேறில்லை சீரவரே; என்னையும் என்மகன்
வேறாரோ விட்(டு)விலக்க வன்னினைப்போர் -வேறாக்கி

மீட்பீரே என்றுதான் நான்வந்தேன் மன்னவா,
நாட்டிலே சீராரோ தேவதூதன் -காட்டும்

முகம்போல மன்னவன் நீருளதால் வந்து
முகம்பார்த்துக் கேட்டேன்நான் சீரே -அகத்தினது

நன்மைதீமை கேட்கும் படிதானே வந்தேன்நான்
நன்கர்த்தர் உம்மோடு சீரிருப்பார் -என்றதும்

மன்னனோ: பெண்சீரோய் உன்னிடத்தில் கேட்டிடும்
என்கேள்வி தன்னிற்கு சீராய்நீ -என்முன்

மறைக்காது சொல்விடை என்றதும் பெண்ணாள்
அறனே பகரும்நீர் கேள்வி. -மறவன்

இதிலெல்லாம் யோவாப் உனக்கிங்கு உட்கை
அதுவகை இல்லையா? பெண்ணோ -எதுவகை

நானோ மறைக்கவும் கூடுமோ மன்னவா
தானேநீர் மேன்யுள் மதிவீரர் -மானாராம்

நின்தலைவன் யோவாபே என்வாயில் இச்சொற்கள்
நின்முன்னே சொல்லிடச் சொன்னாரே -அன்றியும்

தேசத்தில் சீர்நடக்கும் நீதியெலாம் உம்செவிக்கேள்
தேசத்தில் தேவனின் சீர்த்தூதன் -தேசமன்னா

நீரன்றோ, ஆக உவமான மாகவே
சீரும்மின் நாட்டுப்பெண் சொன்னேனே -சீரவா

ஆனாலும் உட்கருத்தை கச்சிதமாய் கற்றீரே
மேனவன் உம்ஞானம் தேவதூதர்த் -தானாமே;

மன்னனும் சொல்கேட்டு யோவாபே சொல்லாலே
இன்றுநான் கண்விழித்தேன் சென்றுநீ -என்பிள்ளை

அப்சலோம் தன்னைத் திரும்ப அழைத்துவா
அப்பனின் சொல்லிது என்றதும் -அப்பொழுது

யோவாப் தரையில் வணங்கி, அரசனை
யோவாப் திருவாழ்த்தி, மன்னவா -யோவாபென்

சீரடியான் சொல்கேட்டு செய்ததினால் சீராலே
தாரும் தயைகிட்டிட் றேசீரே -சீரவன்

பிள்ளையாம் அப்சலோமை கேசூரி னின்றவன்
தள்ளாதூர் கொண்டுவந்தான் சீர்

2 சாமு கலி 37

வந்த அப்சலோமை இரண்டு ஆண்டுகளாக முகம் பாராதே தாவீது இருக்க அப்சலோம் யோவாபைக் கொண்டு தூதுவிடுதல்

அடடா மகனவன் என்றங்குத் துள்ளா
திடமனதோ கல்தானோ மன்னன் -இடம்வந்து

என்முகம் காணவேண்டு தில்லையவன் என்றுசொல்ல
அன்மகனோ நேரே அவன்வீட்டுள் -நின்றிட

மன்னவனோ ஆண்டிரண்டாய் பார்க்காதே விட்டிருக்க
மன்னன் மகனவன் யோவாபை -மன்னனிடம்

செல்லழைக்க வாராதே யோவாபும் பன்முறை
செல்லா நழுவவும், வேலையாளே -செல்நீயும்

யோவாபின் செய்தனில் தீமூட்டு; அவ்வேலை
யோவாபின் செய்தனில் தீமூட்ட -யோவாபோ

ஏனிப் படியெரித் தீரோசெய் தன்னில்வீண்
மானவன் யோவாபு வந்துகேட்க -ஏனீரும்

மன்னன் முகம்பாரா நிற்க அழைத்தீரோ
தன்னேநான் கேசூரில் தான்தரிப்ப -நன்றென

மன்னனிடம் சொல்லிடத்தான் சொல்லிவிட்டேன் ஆனாலும்
அன்னவன் நீர்வாரா விட்டதாலே -என்றதும்

மன்னனிடம் சென்று தலைவா திருமன்னா
என்னயிது மைந்தன் முகம்பாரா -என்னநீர்

மைந்தனைப் புண்பட ஏன்வைத்தோ என்றுகேட்க
மைந்தனை கொண்டுவா என்றதும் -மைந்தனோ

வந்தங்கு தந்தையே என்று வணங்கிட
வந்தவனை முத்தமிட்டான் கோன்

2 சாமு கலி 38

இசுரெலியரைத் தன்பக்கம் அப்சலோம் சாயவைத்தல்

இசுரேல் அனைத்திலும் அப்சலோம்போல் சீராண்
திசைதன்னில் இல்லை அழகன் -திசையெதில்

கண்டாலும் சீர்தான் பழுதற்ற கோன்மகன்
மண்ணவன் தன்மயிரை ஆண்டொரு -மண்தரம்

வெட்டுவான்; அம்மயிர் தன்னெடை மன்னனின்
நட்டார்கோல் தன்னில் இருநூறாய் -நட்டுநிற்கும்

அப்சலோம் பெண்கொன்டு மூன்றுமகன் பெற்றனன்
அப்சலோம் பெற்றமகள் தாமார்பேர் -அப்சலோம்

தன்தமக்கை பேர்தன்னே வைத்தனன்; பெண்ணாளோ
இன்முகத்தாள் நல்லழகாள் சீராளே -அன்றியும்

அப்சலோம் தேர்கள் பரிகளென வாங்கினான்
அப்சலோம் தன்முன்னே ஓடசில -தப்பாண்கள்

கூலிக் கமர்த்தினான் வன்னெண்ணம் கொண்டவன்
கூலியாள் சேர்த்து நகர்வாயில் -வேலியில்

சென்றவன் மன்னனிடம் போகும் இனத்தவரே
மன்னனிடம் நீதிகேட்க யாருமிலை -அன்றியும்

என்னிடம் வாரும்நீர் நீதிசெய்வேன் என்றுசொல்லி
தன்னிடம் வந்துநிற்போர் கட்டியவன் -நன்தழுவி

வீணராம் அவ்வினத்தார் நற்பெயரைப் பெற்றிட
வீணனவன் வாயிலில் ஓரவை -சேணாகச்

செய்திட மன்னவன் கண்டனன் தேர்பல
எய்திவர, மன்னனோ கேட்டனன் -எய்துவரும்

இத்தேர்கள் என்னவென, மன்னவா நின்மைந்தன்
அத்தேர்கள் தன்னிலே போகின்றார் -அத்தேர்கள்

தன்சீராய்க் கொண்டாரே அப்சலோம் மைந்தனவர்
நன்றே திருபெற்றார் என்றங்கு -நன்றாமே

சொல்லிட, வேந்தனோ என்மைந்தன் என்றங்கு
பொல்லா தவன்மனம் தன்னிறியா -நல்லவன்

என்றெண்ணி மன்னன் பெருமிதம் பூத்தனன்
மன்னவன் பேருவகைக் கண்டவர் -மன்னனுக்கு

வாயிலின் பேரவைச் செய்திதனைச் சொல்லாமல்
வேயவே விட்டார் வழு

2 சாமு கலி 39

அப்சலோம் எபிரோன் போய் அகிதொப்பேலுடனும் இசுரேல் இனத்தவருடனும் கட்டுப்பாடு செய்தல்

யூபிலி வந்திட நாற்பதாம் ஆண்டுவர
ஏபிரோன் சென்றுவர மன்னனிடம் -ஏபிரோன்

நான்பிறந்த ஊர்தன்னில் கர்த்தருக்கு சீர்ப்பலி
நான்செலுத்த போக விடைக்கொடும் -மேன்வேந்தே

என்னைத் திருவார் எருசலேம் மீண்டுமாய்
என்வீட்டில் கொண்டுவந்தால் செய்வேன்நான் -நன்பலியென்

நேர்ந்தேனே, சொல்விடும் வேந்தேநான் ஏபிரோன்
சேர்ச்செல்ல என்றதும் மன்னனோ -நேர்கேட்ட

மைந்தனிடம் செல்மகனே நல்லமைதி யோடேநீ
மைந்தனோ சென்றனன் ஊர்ச்சேர -மைந்தனவன்

சொல்லி யிருந்தனன் வேவுகாரர் ஊரிலெலாம்
சொல்லுங்கள் எக்காளச் சத்தத்தை -செல்லூரில்

கேட்கும் பொழுதினில் சத்தமாக, அப்சலோம்
நாட்டினது மன்னனானான் ஊர்தனில் -நாட்டவர்

சீர்நகரார் சென்றார் இருநூறாய் மக்களவர்
சீர்மகன் பொல்லாப்பை தானறியா -சீர்ப்பலி

என்றேதான் ஏபிரோன் சென்றனர்; தந்தையின்
நன்னவர் ஆலோ சனைச்சொல்வா -அன்னார்

அகிதொப்பேல் தன்னை அழைத்தவன் ஊரில்
வகைச்செய்தான் கட்டுப்பாட் டைத்தான் -வகையை

அறிவிக்க வந்தான் உளவாளி சீராண்
அறிவிப்பைக் கேட்டே அழன்று -எறிகல்போல்

போவோம்நாம் வாருமே, அப்சலோம் வந்தெம்மை
சீவாமல் விட்டிட மாட்டானே -போவோம்நாம்

என்றவனும் கால்நடையாய்ச் சென்றனன் குன்றின்மேல்
அன்றியும் வீட்டிலே பத்துபெண்டிர் -நின்றுகாக்க

வைத்துவிட்டுச் சென்றனர்; ஊழியரும், மன்னன்சொல்
தைத்தாலும் சொல்படி போய்

2 சாமு கலி 40

சாதோக்கை தேவனுடைய பெட்டியோடு மீண்டும் எருசலேமிற்கு தாவீது அனுப்புதல்.

மன்னனின் ஊழியர் எல்லாரும், கீரேத்தர்
அன்னார் பிலேத்தியர் யாவரும் -மன்னனின்

பக்கம் நடந்துபோனார்; காத்தூ ரிலிருந்து
தக்கவனைக் கால்நடையாய் வந்திருந்தார் -தக்கார்

அறுநூறு பேர்கித்தி மக்களெல்லாம் முன்னாய்
விறுவிறு வென்று நடந்தார். -அறுநூற்றின்

சீராணாம் ஈத்தாயைப் பார்த்தவர்: கூடயேன்
சீரார் வருவானேன்? நீதிரும்பு -சீரநகர்,

சீராண் அரசனொடு தங்கியிரு. நீவேறாண்
நேராகப் போதிரும்பிப் நேற்றுதான் -சீரவர்

வந்தீர்கள்; இன்றெநான் உங்களை எங்களோடே
வந்திடும் என்றே அழைத்துக்கொண்(டு) -அந்தபடி

போகலாமா? நான்போகக் கூடு மிடத்திற்குப்
போகிறேன்; நீயுன் சகோதரரை -போகழைத்து

போவாய்நீ; கண்ணோட்டம் உண்மை உமதுடன்
போகட்டும் என்றான் திருமகன் -போகாது

ஈத்தாய் அரசனிடம்: மன்னவா என்மன்னன்
மேத்தவர் எங்கே யிருப்பாரோ, -ஈத்தாய்நான்

அங்கே உமது அடியானும், செத்தாலும்
தங்கிப் பிழைத்தாலும், நானிருப்பேன் -மங்காத்

திருவவர் மற்றுமாய் உம்முயிர் மேல்தான்
இருப்பவன் ஆணையிது என்றே -திரும்பாது

கித்தின் இனத்தாரை நோக்கி நடந்துவா
கித்தின் இனத்தார் நடந்தனர் -அத்தவர்

மக்கள் அழுதனர் போகும்போ(து) சத்தமிட்டு;
மக்கள் தனைவிட்டு மன்னனும் -அக்கரைச்

சேர்ந்தனன் கீதரோன் ஆற்றினது; பின்னரவர்
சேர்ந்து வனம்போகும் அவ்வழி -நேர்ப்போனார்.

சாதோக்கும் தேவ உடன்படிக்கைப் பெட்டியை
சாதோக் உடனிருந்த லேவியரும் -மேதவர்

வந்து, திருத்தேவன் பெட்டியை வைத்தனரே;
வந்த அபியத்தார் மேலேறி -செந்நீரால்

பீடத்தில் நற்பலி தந்திட்டான், மக்களார்
நாடுவிட்டு காடுசெல்லும் வேளைவரை -பீடத்தை

விட்டிறங்க வில்லையவன்; மன்னனோ: சாதோக்கே
பெட்டியை தீசு நகரெடீர் -விட்டு;

அனைவரும் போம்திரும்பி; கர்த்தரின் கண்ணில்
எனக்குசீர்க் கண்ணோட்டம் வந்தால், -அதையும்

அவர்வசிக்கும் நல்லிடமும் பார்க்கிற பேற்றை
அவர்வரச் செய்வார் திருவும் -அவரோ

உனக்கு எனதுசீர் கண்ணோட்ட மில்லை
வினையாய்ப் பகன்றால், அவரின் -வினைப்படிச்

செய்வராக என்றனன். சாதோக் கிடமரசன்
செய்யில் இறைவாக்கன் நீயன்றோ -மெய்யமைதி

கொண்டே திரும்பிடும் மற்றாசர் எல்லாரும்
மண்வனத்தில் நிற்பேன் தரித்து

2 சாமு கலி 41

ஊசாயை அப்சலோமின் அவையில் ஊழியனாய் இருந்து செய்திகளை ஆசரியர் மூலம் சொல்லிடு என்று தாவீது சொல்லுதல்.

செய்திவரும் வேளை வரையிலே மெய்யாக
அய்யா, வனத்திலே தங்குவேன் -மெய்யவர்

சொல்கேட்டு பெட்டியெடுத் தங்கே எருசலேம்
இல்லத்திற் சென்றார் திருமக்கள் -அல்லாதான்

தன்முகத்தை மூடி, வெறுங்காலால் தானடந்து
வன்னாய் அழுதுகொண்டு, ஏறினான் -குன்றாம்

ஒலிவ மலைமேல்; அவனோ டிருந்தார்
ஒலிவ மலையின்மேல் ஏற -இலாச்சீரார்

அப்சலோ மோடேவன் கட்டுப்பாட் டைச்செய்தோர்
தப்பாய் அகித்தோப்பேல் உள்ளாரென் -அப்போது

தாவீதிற் கங்கே அறிவிக்கப் பட்டபோது,
தாவீது: தேவா, அகித்தோப்பேல் -மேவிசெயும்

ஆலோ சனைகளைச் சீரார்நீர் பித்தாக்கும்
மேலவரே என்றனன் கோமகன் -மேலேறி

தாவீது குன்றின உச்சிமட்டும் வந்தவன்
மேவியவன் அங்கே வணங்கினான் -தேவனை

அப்போது அற்கியனாம் ஊசாய் எனும்நண்பன்
தப்பிது என்றேதன் ஆடைகிழி -தப்புழுதி

மேல்போட்டு தாவீதின் செல்வழி வந்திட
மேல்வந்த நண்பா, நடந்திட்டால் -சால்பினன்

என்கூட, பாரமே என்பதால் சீர்நகர்
தன்னிலே போயிரு; அப்சலோம் -என்மகன்

தன்னைநீ நோக்கி, அரசே, உமதுடைய
வன்தந்தை வேலைநான் உந்தன்சீர் -நன்வேலை

அப்போது வீணன் அகிதொப்பேல் தன்தரும்
தப்பான ஆலோ சனைகளை -தப்பாக்கிப்

போடுவாய்நீ. சாதோக்கும் மற்றாசர் உள்ளாரே
நாடுதன்னின் சேதியைத் தந்திடு -நாடியாசர்

சீரவர் என்செவிக்குச் சேர்த்திடுவார் சேதியென
சீரெனச் சென்றான் நகர்

2 சாமு கலி 42

சீபா தாவீதிற்கு எதிர்ப்பட்டு வந்து உணவு தருதலும், சீமேயி எனும் பென்யமீன் இனத்தான் தாவீதைத் தூஷித்து கற்களை எறிதலும்.

அரசனவன் உச்சிவிட்டு அப்புறமாய் செல்ல
அரசே அரசே எனச்சொல் -அரசமைந்தன்

மேவிபோசேத் வேலையாள் நின்றிருந்தான் ஊணெடுத்து
மேவியவன் நற்கனிகள் சாறென -ஏவாது

வந்து, அரசே, சிறுவனின் காணிக்கை
வந்தவன் சொல்லவும், என்னயிது? -அந்தமகன்

ஊணெடுத்து வந்தேன் வரும்மக்கள் வன்பசிக்காய்
ஊணொடு நற்கனிகள் தின்னவே -ஊணொடு

நற்சாறு ஏறேலா மக்களுக்காய் சீராக
நற்றவா உள்ளதே வாங்குமே -அற்றவனோ

எங்கேயுன் ஆண்டவனின் சீர்மைந்தன் சொல்லிடு
எங்கே யிருக்கின்றான் சீரவன்? -அங்கே

தரித்துநின்றான் எந்தையர் சீரரசை கர்த்தர்
பிரித்தளிப்பார் இன்றெனச்சீர் கெட்டு -உரைத்தங்கு

நின்றாரே மேவிபோசேத்; ஐயகோ நன்செய்தேன்
என்றாலும் கேடுநினைத் தானவனே -இன்றுசொல்

கேட்டிடு, நானளித்த எல்லா நிலமெலாம்
நாட்டிலே உன்னுடைய தாயிற்று -நாட்டரசே

என்றவன் கீழ்வணக்கம் செய்திட்டான் சீபாவும்
மன்னனும் மக்களும் சென்றனர் -அன்றியும்

வந்தனர் பாகூரிம் ஆங்கேயோ பென்யமீன்
அந்நாட்டின் சீமேயி வந்தவன் -செந்நீரைச்

சிந்துவோன் வன்சிலைகள் போற்றுவோன் தாவீதே
அந்த மகன்தூற்றி கற்களை -வெந்தெறிய

மக்களவர் மன்னன் இருபுறமும் காத்(து)நடந்தார்
தக்கவன் பேசாது விட்டனன் -தக்காது

எம்மினத்தான் சீரரசன் வீட்டாரின் செந்நீரின்
அம்பழியை நேரவர் உம்மேலே -தன்நீதி

செய்திட்டார் என்றங்கு சீமேயி சொல்லவும்
வெய்தே யிருப்பதேனோ, செத்தநாயாம், -எய்துநான்

வன்டலையைக் கொய்யவோ என்றான் அபிசாயும்
என்னயிது கர்த்தர் அவனைத்தான் -வன்பேச

விட்டுள்ளார் ஆதலால் கேட்பார்யார் நாட்டுள்ளே
விட்டுவிடு போவோம்நாம் என்பிறப்பே -நட்டானில்

வன்னாகி யென்னுயிரை வாங்கிடத் தேடுகிறான்
வன்னவன் பென்யமீனன் செய்வானே -வன்னதிகம்

விட்டுவிடு திட்டட்டும், இவ்வகையாய்ச் செய்திடவே
விட்டவர் கர்த்தரன்றோ; சீராரோ -திட்டுமிவன்

வன்சொற்கள் கேட்டொரு வேளை மனதிரங்கி
வன்சொல்லை விட்டெனக்கு செய்திடலாம் -நன்மைதான்

அப்படியே தாவீதும் சேர்மாந்தர் போனாரே
அப்படியே சீமேயி குன்றினது -அப்பக்கம்

வன்னெதிராய் வன்சொல்லைச் சொல்லியே கற்களை
வன்னெறிந்து, மண்தூற்றி வந்திட்டான் -மன்னனும்

சேரிருந்த மக்களும் ஓய்விலா வேய்நடந்து
சேரந்தத், தங்குமிடம் சேர்ந்தனர் -சேர்ந்தே

இளைப்பா றினர்மக்கள்; சீரில்லா தாங்கே
இளையோன் அவைக்கூட்டி னான்.

2 சாமு கலி 43

ஊசாய் அப்சலோமிடம் சேருதலும் அகிதொப்பேலின் ஆலோசனைப்படி மாடியில் இசுரேல் மக்களெலாம் பார்க்க தாவீதின் மறுமனையாட்டிகளை அப்சலோம் வன்புணர்வு செய்தலும்.

திருநகர்க்கு அப்சலோம் மன்னனாய் வந்தான்
திருநகருள் வந்ததும் வந்தான் -திருவினது

ஊசாய் வணங்கி அரசனே வாழ்கவென
ஊசாயோ, நண்பனொடு போகலையோ -ஆசைமகன்

கேட்டிட, தேவனார் மக்களின் மன்னனே
நாட்டிலென் மன்னனாம், ஊசாய்நான் -நாட்டிலே

யாரையோ சேவிக்கின் றேனாம்? அரசனின்
நேரவன் நன்மகன் தானேயென் -நேராகச்

சொல்லிட, அப்சலோமோ, நானென்ன செய்யட்டும்
சொல்லும்சீர் ஆலோ சனைதனை -அல்லாண்

அகிதொப்பேல் தன்னை யவன்கேட்க, வன்னாய்
அகிதொப்பேல் சொன்னானே, வீட்டில் -வகைக்காவல்

செய்திடும் பெண்டிரார் பத்து உளராமே
செய்புணர்ச்சி மாடியிலே வன்னாக -செய்தாலே

செய்தன்னிற் காண்மக்கள் எல்லாரும் நன்கறிவர்
மெய்தானே தாவீதின் பார்வைக்கு -அய்யோவென்

சீயானான் என்றிட, உப்பரிகை தன்னிலே
வேயிலாது கூடாரம் போடுவித்து -தீயாய்

அரசன் மறுமனையார் பத்துபேர் வன்னாய்
கரம்பற்றி வன்புணர்ந் தானே -அரசனுக்கு

ஆலோ சனையில் சிறந்த அகிதொப்பேல்
ஆலோ சனைதனை தேவனின் -ஆலோ

சனையாக தாவீதும் அப்சலோமும் கண்டார்
வினையாணோ செய்தான் பிழன்று

2 சாமு கலி 44

அகிதோப்பேலின் ஆலோசனையை கர்த்தர் அபத்தமாக்க ஊசாய் வேறு ஆலோசனையை அப்சலோமிற்குத் தருதல்.

பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கியே:
மன்னா தெரிவேன்நான் வீரர்கள் பன்ணிரண்

டாயிரம் பேர்தனை; தேர்ந்தே வழுப்பின்னே
வேயநாம் சென்றால் தளர்ந்தவனாய் -காயப்பட்

டந்த தகப்பனை வீழ்த்திட நல்லதாமே
இந்த இரவினது காரிருளும் -அந்தவகை

போனோர் திகைத்திட ஓடுவரே தான்தெறித்து;
போனோரில் தாவீதை வெட்டிவிட்டு -போனோரில்

மற்றாரை விட்டுவிட்டால் கண்டவர் எல்லாரும்
நற்றென உம்மைத்தான் சேவிப்பார் -மற்றார்

திரும்பிவந்து கண்டால் விதங்கண்டு போவர்
அரசே இதுயெனது சொல்லாம் -அரசனின்

பார்வைக்கும் நின்ற வழுவோர்க்கும் இச்சொல்லோ
பார்மன்னன் நின்றிடவே சீரென -பார்ப்போம்நாம்

அற்கியனாம் ஊசாய் தனின்சொல் தனையென
அற்கியனை வந்திடச் சொல்லிட -அற்கியன்

வந்திடச் சொன்னான் அரசனும் சொல்லதை
அந்தவிதம் என்றங்கு சொன்னதும் -அந்தாளோ

இல்லை திருமன்னா, உம்தந்தை போர்வீரர்
இல்லையிந்த ஆலோ சனைசீரில் -வல்லார்

தகப்பனொடு நிற்கும் மனிதர்கள் தன்னே
இகத்திலே தானீன்ற குட்டி -வகைக்காணா

பீறும் கரடிபோல் நிற்பார்கள் பாலையிலே
தோறும் இரவிலே மக்களோடு -மாறாதார்

தங்கமாட்டார் ஈதை அறிவேன்நான் மன்னவா
அங்கேபோய் வல்லார்க்கை யாரேனும் -அங்கே

விழவும் மனிதரெலாம் அப்சலோமின் வீரர்
விழுந்தார் எனச்சொன்னால் பேராய் -இழப்புவரும்

ஆதலால் தாண்முதல் தென்வரை உள்ளவரை
மேதினில் கூடச்செய் திட்டுநாம் -சேதாரம்

சீரற்றோர் மேல்போவோம் மண்கணக்காய் வீரர்கள்;
வீரர் பனிபோல வீழ்த்திட -சீராய்

இறங்கினால் போவரே ஏதோ நகருள்
கறைநகரை நாமடித்து சீரில் -அறைக்கல்லும்

நில்லா படிச்செய்ய மக்களின் பேர்திரள்
அல்லாமல் செய்யலாகா ஆதலால் -சொல்படி

செய்திடச் செல்வோம் விரைவீர்நீர் என்றவன்
மெய்தனை சொன்னான் சிறந்ததாய் -மெய்யது

நாம்செய்வோம் மக்களை கொண்டுவாரீர் மண்கணக்காய்
நாம்பின்னே போவோ மெனவரசன் -ஆம்சொல்ல

ஆலோ சனைத்திருவு மங்கே அகிதோப்பேல்
மேலாணின் சீரில்லா தாக்கிட -மேலார்கள்

ஆலோ சனையென்றால் ஈதன்றோ நல்லசரி
ஆலோ சனையென மெச்சு

2 சாமு கலி 45

ஊசாய் சென்று அபியத்தார் சாதோக் இருவரிடமும் அப்சலோமின் அவையில் நடந்ததைச் சொல்ல அவர்கள் தங்கள் மகன்களை தாவீதிற்கு அறிவிக்க அனுப்புதலும் தாவீதும் அவனோடு இருந்தவர்களும் யோர்தானைக் கடந்து இரவோடு இரவாகச் செல்லுதலும்.

அவைவிட்ட பின்பு அபியத்தார் சாதோக்
அவர்களைக் கண்டனன் சீரில் -அவைதனில்

சொல்லிவைச் சொன்னார்கள் இன்னபடி யானும்தான்
சொல்சொன்னேன் என்றசேதி சொல்லிடும் -வல்லார்க்கு

பாலையில் காரிருளில் தங்காதே சீர்போவீர்
மேலவா சீரிடம் யோர்தானை -சீலவர்

செல்வீர் கடந்துநீர் என்றே அறிவியும்
வல்லார்க்கு; ஆசரியர் மக்களார் -அல்லார்க்கண்

தன்னில் படாதவாறு இன்றொகேல் அண்டையில்
அன்னவர் நிற்க, ஒருவேலைப் பெண்ணவள்

சென்றங்கு இச்செய்தி தன்னைச் சொலவுமே
சென்றனர் சீராண் இரும்திசை -அன்னவர்

பாகூரிம் தன்னில் நுழைந்தனர் வீட்டொன்றில்
பாகூரிம் மக்களில் சீரவன் -ஏகன்

மனையவள் முன்னிருந்த நீர்க்கிணறில் வந்தார்
வினைமறைய பாய்விரித்து நொய்யை -மனையாள்

பரப்பிவிட்டு காய்வதுபோல் காட்டினர்; ஒற்றர்
வருகைப் புரிந்த மகனார் -தருவீரே

எம்கையில் என்றே கறைக்கேட்க, வந்தவர்
எம்விட்டுச் சென்றாரே ஓடையின் -அம்பக்கம்

என்றவளும் பொய்யுரைக்க தப்பினர் ஆசரின்
நன்மக்கள், தப்பித்து மன்னனிடம் -நன்னவர்

சென்று சொலவும் உளரெலாம் போனாரே
அன்றேதான் யோர்தான் கரைக்கடந்து -அன்றியும்

யோர்தானை அன்றிரவே சேர்க்கடவா தோனில்லை
சீர்மக்கள் போனார்தப் பித்து

2 சாமு கலி 46

அகிதோப்பேல் தன் ஆலோசனை படி நடக்கவில்லை என்றதும் தற்கொலைச் செய்துகொள்ளுதலும் அப்சலோம் படைதிரட்டி அமாசாவை தளபதி ஆக்குதல்.

அகிதோப்பேல் தன்சொற் படிநடக்க வில்லை
வகையென ஆணறிந்துப் போனான் -வகைஙேமேல்

ஏறிதன் வீட்டிற்குச் சென்றவன் செய்தானே
வேறாக தன்வீட்டின் சீர்ச்சரியாய் -ஏறியே

தூக்குமாட்டிச் செத்தானே தன்னுயிர் மாய்த்திட்டு
ஆக்கமிலான் தன்னை தகப்பனின் -தேக்கத்தில்

நல்லடக்கம் செய்தனர் ஊரார்கள்; நல்லவனோ
நல்லபடி மக்னாயீம் வந்திட -நல்லவனை

சந்திக்க அம்மோனின் சீர்மக்கள் வந்தனர்
சந்திக்க வந்தனர் கீலேயாத் -அந்தபுற

மக்களில் பர்சில்லாய் என்றொரு மூப்பனும்
மக்களார் ஓய்வெடுக்க நற்படுக்கை -தக்கவூண்

என்றவர் கொண்டுவந்தார் சீர்மன்ன னோடிருப்போர்
நன்றாக உண்டு தளர்நீக்க -அன்னவர்

கொண்டுவந்த சீர்பயரும் தானியமும் நற்பொரியும்
கொண்டுவந்த தேனொடு பாற்கட்டி -அண்டையில்

மேன்விளைச்சல் சீரெலாம் தந்தனர் சீர்க்கையில்
ஏன்தானோ ஈனனாய் அப்சலோமும் -மேன்தொடர

வந்திட்டான் யோர்தான் கடந்தங்கே; சீராக
வந்திட்ட வீரர்க்கு சீர்த்தலையாய் -அந்தபடி

வைத்தான் அமாசா யெனுமினத்தான் தன்னையங்கே
வைத்திட்டுப் போயினர் கீலேயாத் -மேத்தவன்

வந்தயிடம் அஃதன்றோ, பாளையம் போட்டனர்
அந்தயிடம் வீரர்க் கறை

2 சாமு கலி 47

அப்சலோமுடன் போருக்காக மூன்று தலைவர்கள் தாவீது நியமித்தலும் அவர்களிடம் அப்சலோமை மெதுவாய் நடத்தச் சொல்லுதலும், அப்படி சொல்வதை மக்கள் கேட்குதலும்.

மகனவன் அப்சலோமை போரிட தாவீத்
இகம்சேர்ந்த மக்களைக் கூட்டி -வகையிலக்கம்

பார்த்தவன் சீராய்த் தலைவர்கள் நேமித்து
பார்த்தங்கு மூவரை மூன்றுபங்கு -பார்படைக்கு

போர்வழி காட்டும் தளபதியாய்; யோவாபும்
சீர்த்தமனும் ஈத்தாயும் சீர்த்தலைவர் -போர்செய்ய

நானும் வருவேன் எனச்சொல்ல மக்களோ
மேனவர் வேண்டாமே, வீரர்யாம் -ஈனர்க்கை

விட்டோடிப் போனாலும் எண்ணார் ஒருபொருட்டாய்
வெட்டுண்டுப் பாதிபேர் வீழ்ந்தாலும் -நட்டமென

ஈனரார் எண்ணார் திருவே; திருநீரோ
மானவீரர் பத்தா யிரமீடாம் -ஆனபடி

மன்னவா, நீர்நகரத் தில்தானே சீர்நில்லும்
இன்னபடித் தானே நலமென -என்மக்கள்

உம்சொல் படிநான் அரசன் தரிப்பேன்நான்
அம்நின்றான் அந்நகர் கோட்டையில் -அம்மானோ

மூன்று தலைவர்கள் கண்டவன் சொன்னாரே
மேன்மகன் அப்சலோமை என்னிமித்தம் -தான்மெதுவாய்

செய்வீர் நடப்பித்து என்றானே பெற்றமனம்
மெய்யாக பித்தாமே கீழ்

2 சாமு கலி 48

எப்பிராயிம் காட்டில் போர்நடப்பதும் அப்சலோமின் மரணமும்

எப்பிராயிம் காட்டிலே போர்நடக்க சீரிலார்
அப்போ இருபதி னாயிரம் -தப்பாமல்

வீழ்ந்திட்டார் அன்றேதான் போர்ப்பரவ ஓடினர்
வீழ்ந்தவர் காட்டிற்குள் வாள்படா -தாழ்மக்கள்

வீழ்ந்தனர் காட்டினால் வாள்விட மிக்காமே;
வீழ்ந்தோரின் தீர்த்தலைவன் அப்சலோம் -பாழ்செய்யும்

மக்கள்முன் வந்திட, ஓட்டினான் கோவேறு
தக்கிலான் ஓட சடையவனின் -தக்காத

பேர்மரமாம் கர்வாலி பின்னல் மரக்கிளையில்
சீர்மயிரும் மாட்டிட ஏறிவந்த -சீர்க்கழுதை

ஓடிட, அந்தரத்தில் தொங்கினான் அப்சலோம்
ஓடிவந்த வீரரில் ஓடுமகன் -ஓடுவந்தே

மாட்டியங்கு தொங்கிடப் பார்த்த ஒருவனோ
மாட்டினான் என்றே தலைவனாம் -நாட்டவன்

யோவா பிடம்சொல்ல ஏன்நீ மகனையேன்
மேவி அழிக்கவிலை வாள்தன்னால்? -தேவச்

செயலென சீர்த்தந் திருப்பேனே வீரா!
செயலது சீரில், திருவார் -செயல்முன்னே

நும்செவிச் சொன்ன தறிவேனே ஆதலால்
எம்வாளால் வெட்டாது வந்தோமே -எம்மன்னன்

சீர்மகன்மேல் ஆயிரமாய் வெள்ளியினை நீர்நிறுத்து
சீர்ப்பிடி என்றாலும் கைநீட்டேன் -சீர்ரரசன்

செய்திகேட்டு என்னை அழிப்பாரே, நீருமங்கு
கைப்போடா தீர்ரென்று சொல்லமாட்டீர்; -செய்திடவே

என்னை அழைத்துப்போ என்றவனை வீரனும்
என்னோடு வாருமெனக் கூட்டிப்போய் -அன்னவன்

தொங்கும் இடம்செல்ல யோவாபோ வாளுருவி
தொங்கும் திருமகனை வீழ்த்திட -தொங்கியவன்

கீழெடுத்து ஆயுதத்தார் கொன்றிட்டார் ஆங்கேதான்
பாழாக்கி அப்சலோமைச் சூழ்ந்தங்கு -வேழாண்

இறந்ததும் எக்காளம் ஊதிட வீரர்
பிறகாய் விரட்டுவதை விட்டே -அறனவன்

வீரர் திரும்பினர்; அப்சலோமை கையெடுத்து
வீரர் குழியிலே போட்டங்கே -சீரிலான்

மேல்கற்கள் தன்னைக் குவித்தனர் சீர்வீரர்
ஆல்மக்கள் கூடாரத் துள்ளோட -சால்பிலாம்

தன்பெயரை தாங்கிநிற்க தூணொன்றை வைத்தங்கு
வன்னாகச் செய்தனன் பிள்ளையிலை -என்றேதான்

இந்நாளும் அப்சலோமின் நல்லடை யாளமென
இன்றுமுள தாமேயத் தூண்

2 சாமு கலி 49

அகிமாசு கூஷி இருவரும் ஓடிப்போய் தாவீதிற்கு செய்தி அறிவித்தல்.

யோவா புடனிருந்த சாதோக் அகிமாசு
யோவாபே நான்மன்னன் கேட்டிட -மேவியோடிச்

செல்லட் டுமாயென்று கேட்க, அரசமைந்தன்
கொல்லப்பட் டிந்தநாள் ஆதலால் -சொல்லநீ

போகவேண்டாம் என்றுசொல்லி கூசி தனைநோக்கி
ஆகவே நீசென்று சொல்லடா -வேகமாய்

என்றிட, கூசி வணங்கியங்கு ஓடினான்
என்றாலும் சாதோக் மகனவன் -நின்றுநான்

என்செய்வேன், பின்னாலே ஓடட்டும் சீர்திருவே
என்னநீ நற்செய்தி இல்லாமல் -என்னத்திற்

கோடவே கேட்கின்றாய்? ஆனாலும் ஓடுவேன்
ஓடிட நல்விடைத் தாருமென -ஓடடா

என்றான்; அகிமாசோ கூசி விடவேகம்
அன்றோடி முந்தினான் சீர்மகன் -மன்னனோ

மக்னாயிம் வாயில் இரண்டினது மேன்மதிலில்
தக்கான் அமர்ந்திருந்தான் ஓடுவீரன் -அக்கணம்

கண்டவன் காவலன் சொன்னானே ஓடுவீரன்
கண்டேன்நான் வீரனொரு என்றிட - மண்மகன்

சீரொருவன் வந்தாலே நற்செய்தி தந்திடுவான்
சீராரே வேறொருவன் பின்னோடி -சீரவர்

வீரன் வருகின்றான், முந்திவரும் ஆளோட்டம்
வீரனாம் சாதோல் அகிமாசின் -வீரவோட்டம்

என்றதும் சொன்னானே மன்னவன் நல்லவன்
வன்செய்தி கொண்டுவர மாட்டானே -என்றங்கு

நிற்க அகிமாசு ஓடிவந்து சீர்வணங்கி
நற்றவா வெற்றிவெற்றி என்றிட -நற்றவனோ

பிள்ளையான் டான்நிலை யென்ன எனக்கேட்க
தள்ளிநான் நின்றிருந்தேன் போர்தனில் -வள்ளலே,

யோவாபு சொன்னபோது பேரிரைச்சல் உண்டாக
மேவிநான் ஓடிவந்தேன் பேரிசைச்சல் -ஏவலென்ன

என்றறியேன் என்றேபொய் சொல்லிட கூசியவன்
நின்றானே பின்வந்த வன்வணங்க -என்னசெய்தி

என்றுகேட்ட மன்னனிடம் நற்செய்தி மன்னவா
வன்னார் களந்தோற்றார் சீரவா -மன்னனோ

அப்சலோம் செய்தியென்ன என்றுகேட்க, கூசியோ
தப்பாண் நடந்ததுபோல் ஆகட்டும் -அப்பாமேல்

பொல்லாப்புச் செய்ய உமக்கெதிராய் வந்தவர்
அல்லாண்போல் போகட்டும் என்றதும் -நல்லரசன்

தன்மகன் செத்தானே என்றசெய்தி கேட்டதும்
வன்செய்தி என்றேதான் மேலறைக்கு -நின்றேறும்

போதுமாய் சீரழுதான் கூப்பிட்டு என்மகனே
வாதையாய்ச் செத்தாயே என்மகனே -மேதவமாய்ப்

பெற்றேனே சீர்மகனே அப்சலோமே, உன்னுயிர்
அற்றா யெனதுயிர் போனாலோ -நற்றதே

என்றங்கு பெற்றமனம் பித்தாய்க் கலங்கிற்றே
வன்செய்தி கேட்டது மாங்கு

2 சாமு கலி 50

யோவாப் தாவீது அழுதிடும் அறைக்குச் சென்று அவனைக் கடிந்துகொள்ளுதல்

என்மகனே அப்சலோமே என்மகனே அப்சலோமே
என்றே முகம்மூடி மேலறையில் -மன்னன்

புலம்புகின்றார் என்றே படைத்தலைவன் யோவாப்
கலக்கமுறச் செய்தி வரவும் -நலமிலை

வெற்றியது வெற்றியல்ல என்றுமக்கள் அந்நாளில்
வெற்றியிலா மக்கள் வருமாப்போல் -நற்றவர்

வந்தார் முகம்மூடி வெட்கி வருமாப்போல்
அந்நாளில்; மேற்றலைவன் மேலறைக்கு -வந்தவன்

மன்னனிடம் சொன்னான்: இதுசரியோ? போரிலே
இன்னவர் உம்சீர்க்காய், உம்வழிக்காய் -இன்றுயாம்

போரிட்டோம் ஆனாலும் உம்மடங்கா கீழ்மகன்தான்
சீரவர்க்கு மேலாகி எம்வெற்றி -சீரில்லை

என்றேநீர் எண்ணினீர் என்றுணர்ந்தேன் இன்றுநான்;
நன்றாமே நாங்கள் அனைவரும் -வென்றிடாது

செத்திருந்தால் என்றுநீர் இன்று நினைத்தீரோ
இத்தரணி தன்னிலே; நீர்கீழாய் -இத்தரணி

தன்னிலே உம்பகைவர் தன்னிலன்பு கூருவதே
நன்றெனக் கண்டீரே; ஆனாலும் -நன்றரசன்

என்றே உமையன்பு கூருவோர் தன்னைநீர்
இன்றோ பகைத்தீரே என்றெனக்கு -இன்று

விளங்கிற்று; ஊழியர் வீரர்கள் எல்லாம்
களத்திலே போரிட்டும் நீரோ -களமோ?

கிளையோ? நிலைக்கீழ்க் கிளையென்றே தேர்ந்தீர்
களத்தின் அதிபதிகள் கண்முன் -களையென

வன்நினைத்தீர் என்றே விளங்கிற்றே மன்னவா
நன்மனையார், சீர்மக்கள், நும்முயிர் -நன்றெனப்

போரிட்டோம் போர்க்களத்தில் ஆனாலும் எம்முயிர்
போரதில் செத்தாலும் மன்னனுக்கு -சீராமோ

ஊழியர் வெட்கி அளைந்திட்டார் வாரும்நீர்
ஊழியர் முன்னன்பாய் பேசாதே -கீழாக

நீர்நின்றால் இன்றிரவே யாமெல்லாம் ஓடிடுவோம்
சீர்விட்டு என்றேநான் சீர்க்கர்த்தர் -சீர்ப்பெயரால்

செய்கின்றேன் சீராணை என்றே சினத்தோடு
மெய்யிது உம்வாழ்வில் நேரிட்ட -வெய்த்தீமை

எல்லாம் விடயிந்தத் தீமையோ மேலாகும்
அல்லோநேர் யோவாப் உரைத்து

2 சாமு கலி 51

தாவீது யூதா இனத்தாரை தன்னை அழைத்துப்போக முந்தி வரச்சொல்லுதல்

மக்னாயீம் சீர்நகரில் மன்னன் செவிகொடுத்து
தக்கார் சிறந்தவர் கண்பார்க்க -மக்னாயீம்

வாயிலில் சென்றமர மக்களவர் கேட்டங்கு
வாயிலில் வந்தனர்; ஆள்தோற்ற -வேயவர்

சென்றாரே தத்தமது கூடாரங் கள்தன்னிற்(கு)
அன்றியும் மற்றாரோ சேர்ந்தங்கு -என்னயிது

நம்மன்னன் அப்சலோம் விட்டோ டினாரன்றோ
நம்மன்னன் மீண்டுமாய் வந்திட -நம்மில்

சிலர்போய் அழைத்து வருவோமே என்சொல்
சிலர்ப்போய் அரசனிடம் சொல்ல -நலமாமே

எம்மினத்தார் யூதர் அழைத்திட முந்திட்டால்
எம்குலத்தார் தன்னிற்கு சென்றுசொல்ல -தம்வீரர்

தன்னை விடுத்தானே தாவீது; யூதரும்
தன்குல மன்னனை சீராக -தன்னே

அழைத்துவரச் சென்றாரே யோர்தானைத் தாண்டி
அழைக்கவே வந்தார்யூ தர்

2 சாமு கலி 52

தாவீது அரசனிடம் மன்னிப்பு கேட்க சீமேயி, மேவிபோசேத் வருதலும் கிலேயாத்தியனாகிய பர்சில்லாய் அரசனை வழிவிட்டனுப்ப யோர்தான் கரைவரை வருதலும்.

அரசனாம் தாவீது சென்றங்கே யோர்தான்
கரைதனில் நின்றிட முன்னே -கரைசேர்க்க

யூதர் விரைந்துவந்தார் மன்னனைச் சீரழைக்க
யூதர் பலராக கில்காலில் -வேதன்

அழைத்திடக் கூடிவர சீமேயி வந்தான்
அழைத்திடவே கீழாணும் சேர்ந்தான் -அழைக்கவந்த

யூதரோடு; மன்னனைக் கண்டதும் சீமேயி
வேதா சிறுவன்யான் செய்திட்ட -தேதும்நீர்

நின்மனதில் வைக்காதீர், சீர்குலத்தார் முன்னேநான்
நின்னழைக்க வந்திட்டேன் தக்கவனே -என்றங்குக்

கீழ்விழுந்து மன்னனிடம் மன்னிப்புக் கேட்டிட
வாழ்க்கர்த்தர் நெய்ச்சொரிந்த நல்லரசன் -கீழ்ப்பாழாய்ப்

பேசிய இம்மாந்தன் வெட்டுண்டு சாகவேண்டும்
பேசியதால் என்றங்கு யோவாபும் -பேச

செருயாவின் சீர்மக்காள் ஏனிந்த பேச்சு
திருகர்த்தர் சீரினத்தில் இன்று -அரிந்தே

கொலைச்செய்ய லாமோ? எதற்காக வன்னாய்
கொலைப்பகைஞர் ஆகின்றீர் நீரும் -நலமிலை

கொன்றிடுதல் என்றே அரசனும் ஆணையிட்டான்;
அன்றியும் சீரழைக்க வந்தனன் -அன்றாண்டான்

மேவிபோசெத் சீராண்முன் வந்தவன் சூதுதனை
மேவிச் சொலவங்கு சீபாவின் -மேவியவன்

சொன்னானே சீர்வளத்தை நீரிருவர் பங்கிடும்
என்றிட; சீர்வேண்டாம் சீர்மன்னா -நன்றாக

நீர்திரும்பி வந்திட்டீர் சீரெனக்கு அச்செயலே
சீர்தன்னை சீபாவே வைத்திடட்டும் -சீர்மன்னன்

சீர்முகம் கண்டதே சீரெனக்கு என்றேதான்
சீர்தனைக் கைவாங்கா விட்டனன் -நேர்மகன்

கீலேயாத் வந்தபோது ஆங்கவனை வீட்டிலேற்ற
கீலேயாத் ஊரானாம் பர்சிலாய் -சீலவன்

தன்னை வழியனுப்ப வந்திட, ஆங்கேதான்
என்னோடு வாரும்நீர் மன்னனுரை -அன்னவா

என்மூப்பில் சீர்மன்னா நன்றேதும் வந்திடுமோ
என்நாவும் சீர்ச்சுவைக் காணுமோ -என்மூப்பில்

இன்னிசையோ வன்னிசையோ கேட்டிட ஏலாதே
என்மூப்பில் ஆட்டமோ பாட்டமோ -என்றில்லை

என்மன்னா நின்வழிச்செல் விட்டுவர யோர்தானின்
நன்கரை வந்திட்டேன் சீரவா -அன்றியும்

நான்மரிக்க என்னூரில் என்பெற்றார் கல்லறையில்
நான்செத்த பின்னடங்க சீரவா -நான்செல்ல

விட்டுவிடும், கிம்காம் வருவானே சீரவா
நட்டவனும் வந்திடுவான் என்றதும் -நட்டரசன்

நன்றே வரட்டுமே கிம்காம் சிறப்பாக
அன்னவன் தன்னை நடத்திடுவேன் -நின்சொல்

படியேநான் என்றுமன்னன் சொல்லிவிட்டு அன்னார்
இடத்திலே முத்தமிட் டார்

2 சாமு கலி 53

இசுரேலரும் யூதரும் யோர்தானின் மேற்குக்கரையில் வாதம் செய்தலும் யூதரின் பேச்சு பலத்தலும்.

மன்னனொடு பாதிபேர் இக்கரை வந்ததும்
அன்னவனை சீராய் வரவேற்க -நன்னினத்தார்

வந்தனர் சீரிசுரெல் மக்களும் வந்தங்கு
வந்தவர் வாதிட்டார் ஏதேது -அந்நாளில்

கூடியே யாம்சொன்னோம் கொண்டுவரப் போவோம்நாம்
கூடிமன்னன் தன்னையென்றே சொன்னோமே -நாடவர்

நீரேனோ முந்திட்டீர் யூதர்காள் எங்களுக்கு
சீரவரில் பத்துபங்கு உண்டன்றோ -சீரிசுரெல்

மக்களும் வாதிட, எம்குலத்தான் யாமழைக்க
மக்களோடு சென்றோம் இதுகுறையோ -தக்கார்

இனமெங்கள் தானே எனச்சென்றோம், உண்ண
இனம்சென்றோ மோசீர் யெடுத்தோ -இனமெம்மை

நீர்சினமாய் ஏசுவதேன் என்றனர் யூதர்கள்
சீர்மன்னன் எம்பங்கில் பத்தெனச் -சீர்மக்கள்

வாதிட்டும் மேலோங்கி நின்றதே யூதரின்
வாதமது சீரிசுரேல் மேல்

2 சாமு கலி 54

சேபா புரட்சி செய்து தாவீதிற்கு எதிராக இசுரேலை கிளப்புதலும் தாவீது அமாசாவை தளபதியாக ஆக்க நினைத்து அவனை அழைத்தும் வாரா திருக்க அபிசாயை சேபாவைப் பின்தொடர அழைத்தலும் போகும் வழியில் அமாசாவை யோவாப் கொல்லுதலும்.

பென்யமீனில் ஓரலகை மைந்தன் பெயர்சீபா
பென்யமீனின் பிக்கிரியின் மைந்தனாம் -பென்யமீனில்

எக்காளம் ஊதியவன் சொன்னானே தாவீதோ
தக்கா னெமக்கிலை பங்கொன்றும் -தக்கிலை

என்றேவன் சொல்லாய்ப் பகன்றிட பல்லோரும்
நன்றென வன்னாகப் போயினர் -வன்னாண்பின்

தாவீதோ ஏதேது அப்சலோம் செய்கைவிட
ஏவுமிவன் சேபா செயலதாம் -தாவீதோ

கோனழைத்தான் அப்சலோமின் போர்த்தலைவன் பேர்அமாசா
கோனழைத்துச் சொன்னான், தலைவனாய் -கோனெனைக்

காத்திட வாவிரைந்து மூன்றுநாளில் என்றிட
மேத்தவன் சொல்படி வாராதே -காத்திருந்தான்

போர்த்தலைவன் சீரில்லா தாங்குத்தான்; நேர்மன்னன்
போர்த்தலைவன் சீராண் அபிசாயே -சீர்ரில்

செயலது என்றேன்நான் சேபாவின்; வாரா
அயலூரில் தங்கி அமாசா -செயலென்ன

நானறியேன் ஆதலால் பின்தொடர்ந்து செல்லும்நீர்
தானவன் சேபாவை நீர்சீராய் -மேனவன்

சொல்கேட்டுச் சென்றார் அபிசாயும் யோவாபும்
வல்லாணின் ஞானிலே வாளது -நில்லாதே

கீழ்விழவும் கையில் பிடித்தங்கு நின்றிட
கீழ்மகனைக் கண்டார் வழிதன்னில் -கீழ்மகனைக்

கிட்டிவந்து முத்தமிட்டு சேருமாப் போலங்கு
எட்டியவன் தாடிபிடித்(து) அல்லாணை -நட்டானை

கையிலிரு கூர்வாளிற்(கு) எச்சரிக்கை இல்லாதான்
வையரசன் கீழ்ப்படியா தான்என்றே -கையிலிரும்

கூர்வாளால் யோவாபு கொல்ல, அமாசாவோ
கூர்வாளால் செத்தான் விழுந்து

2 சாமு கலி 55

அமாசாவின் உடலைக் கண்ட இசுரேலர் நிற்க வீரன் அவன் உடலை மறைத்து வைத்தல்.

அமாசாவின் பூத வுடல்தன்னைக் கண்ட
அமைமக்கள் அஞ்சியே நிற்க -அமாசாவின்

பூத வுடல்தன்னை காத்தவீரன் விட்(டு)விலக்கி
பூத வுடலை களத்திலிட -பூதவுடல்

காணாதோர் போயினர் யோவாப்பின் போர்செய்ய
காணவர் நின்றனர் ஆங்குத்தான் -காணாத

வண்ணம் உடல்தன்னை ஆங்கே மறைத்திட்டான்
எண்ணம் சரிவீரன் ஆங்குத்தான் -வண்ணம்

இசுரேலின் வீரர்கள் சென்றாரே பின்னே
இசுரேலின் மன்னனை ஏசி -வசைப்பாடும்

வன்னவனை வீழ்த்திடச் சென்றாரே ஆபேலிற்
அன்னவர் கொத்தளமிட் டார்நகரை -வன்னவன்

உள்ளே மறைந்திருக்க விண்ணளாவும் மண்மதில்
உள்ளே செலவழிப் பார்த்திட்டு -தள்ளியே

வீரர்கள் நின்றிட அந்நகரம் உள்நுழைவோர்
சீரற்று மூடிக் கிடந்து

2 சாமு கலி 56
நகருள்ளே மக்கள் வதையாக ஆங்கே
நகரத்தில் பெண்ணாள் அறிவாய் -நகரம்மேல்

வந்து மதில்மேலே நின்றவள் போர்ப்படையின்
இந்நாள் தலைவனாம் யோவாபை -இந்தமதில்

தன்னின் அருகில் வரச்சொல்லும் என்றிட
அன்னவன் வந்தான் மதிலருகே -என்னசொல்

பெண்ணவளே என்றிட, ஏனோநீர் ஆபேல்மேல்
மண்ணிலே வன்னெதிராய் வந்திட்டீர்? -மண்ணில்

இசுரேலின் மூப்பான ஊராமே ஆபேல்
இசுரேலில் வாரீர் நலமாம் -திசையில்

மிசைச்சொல்லைத் தந்திடும் ஆபேலே இவ்வூர்
வசையாக ஏனோ இடிக்க -திசைதன்னில்

வந்தீரே ஏனோ இதுசெய்கை என்றிட
வந்தோமே சேபா எனும்பெயருள் -அந்தாளோ

மன்னனாம் தாவீதிற் வன்னெதிராய் கையெடுத்தான்
மன்னவனை வன்னெதிராய் பேசியவன் -வன்னவனின்

மட்டத் தலைதாரும், தந்தாலே யாம்போவோம்
நட்டவரை தாக்கவர வில்லையே -நட்டவனின்

சீர்ப்பேச்சை கேட்ட திருப்பெண்ணாள் சென்றங்கு
சீர்நகரின் மூப்பரிடம் பேசியவர் -நேர்மைந்தன்

இல்லையே சேபா, அவனைநாம் தந்திட்டால்
இல்லையே நம்நகரிற் காபத்து -அல்லாணை

மக்களவர் கொன்றங்கு வன்தலையை மேலிட்டார்
தக்கூர் மதில்மேலே ஆங்கு

2 சாமு கலி 57

தாவீது ஆட்சியில் மூன்றாண்டு காலம் பஞ்சம் வரவும் கர்த்தர் கிபியோனியரை சவுல் கொன்றதால் வந்ததெனச் சொல்ல சவுலின் வழியார் ஏழுபேரை கிபியோனின் மக்கள் கொல்லவேண்டும் என்று கேட்குதலும் தாவீது கையளித்தலும்.

தாவீது ஆட்சியில் பஞ்சம் தலைவிரிக்க
தாவீது மூன்றாமாண் டில்சென்று -தேவனிடம்

கேட்டான்; திருவேயிப் பஞ்சம் எதற்காக?
கேட்டதும் சீர்கர்த்தர் சொன்னாரே -நாட்டிதில்

கொன்றான் கிபியோனின் நற்குடிகள் தன்னையே
மன்னன் சவுல்தான் உடன்படிக்கை -தன்னையே

மீறியதால்; செந்நீரைச் சிந்த அவனுமவன்
சீறுவழி யார்ச்செய் ததாலேதான் -ஆறாத

பஞ்சமிது என்றாரே சீர்கர்த்தர்; ஆறாத
பஞ்சத்தை போக்கிட என்செய்வோம் -பஞ்சத்தின்

காரணர் ஏமோரி பாழ்க்குடிகள் மண்குடிகள்
தேரார் இசுரெலர் விட்டுவைத்தோர் -சாராதான்

ஆங்கழைத்துப் பேசினான், ஏதேது சீர்கர்த்தர்
ஈங்கழைத்த சீர்மக்கள் தன்னைநீர் -பாங்கிலாதே

வன்சொற்கள் சொன்னீர்கள்; நீவிரிங்கு வாழ்த்திட
என்செய்ய வேண்டும்யான் என்றுகேட்டான் - -அன்னார்

இசுரேலின் இன்னினம் இல்லையே, மக்கள்
இசுரேலர் தன்னையே சூதாய் -திசைதன்னில்

செய்யவைத்தார் சீரில் உடன்படிக்கை; அஃதுமே
செய்யாது நின்றால் தவறென -மெய்யவர்

நீதியது எப்போதும் சீர்தானே ஆனாலும்
நீதியென மக்களார் சொல்லட்டும் -நீதிக்காய்

மன்னனே மக்களிங்கு மாய்ந்திட வேண்டுமென்றோ
மன்னவா எங்களுக்கு ஆசையில்லை -அன்னவனின்

பொன்பொருள் ஏதுமே எங்களுக்கு வேண்டாமே
வன்மன்னன் ஏழு வழியாரை -வன்னாகக்

கொல்வோம் கிபியாவில் ஈதேயாம் வாழ்த்திட
நல்லசெயல் செய்யும்நீர் என்றதும் -அல்லார்க்கு

செய்திடுவேன் என்றவன் கையிட்டான் ஏழுபேர்
செய்யும் கிபியாவில் வன்கொலை -மெய்மன்னன்

ஆளவர்க் கைத்தந்தான்; ஐந்தாம் பெயரன்கள்
ஆளின் இரண்டு மகன்களைக் -கோளிலே

கொன்றிடத் தந்தான் திருமகன், தன்மக்கள்
வன்பஞ்சம் போக்கிடவே அன்றுதான்; -நன்றென

வன்னார் கொலைச்செய்தார் கோன்வழியார் தன்னையே
இன்னாணோ தானிட்ட ஆணைக்காய் -மன்னனின்

சீர்மகனாம் யோனத்தான் தன்னின் மகனவனை
நேர்விட்டான் தப்பிக்க; கொன்றிட்ட -சீர்ரில்லார்

வைத்துபோனார் சீரெழுவர் தன்னின் உடல்தன்னை
வைத்த யிடந்தன்னில் மாதங்கள் -வைத்தபடி

வான்பறவை காட்டு விலங்குகள் வந்திடாமல்
தான்னிரட்டுச் சேலையைக் கொண்டங்கு -தான்பெற்ற

சீர்மைந்தர் மேலும் வழியாரின் மேலுமாய்
சீர்க்குலையா வண்ணம் ரிசுபாளோ -நேர்க்காத்தாள்

விண்ணின் மழைபெய்யும் நாள்வரை; காக்கிறாள்
விண்பறவை தான்விரட்டி யென்றங்கு -மண்மன்னன்

தான்கேட்டு யாபேசு சென்றவன் மன்னனொடு
மேன்மகன் யோனத்தான் என்புகள் -தான்வாங்கி

ஏழுமக்கள் தன்னோடு நல்லடக்கம் செய்வித்தான்
வாழுமன்னன் சீராக ஆங்குதான் -ஏழுமக்கள்

செத்தபின் கர்த்தர் திருநாட்டிற் காய்ச்செய்த
அத்தவனின் வேண்டுதல்கள் கேட்டு

2 சாமு கலி 58

பெலிஸ்தர் யுத்தம் செய்ய பலமுறை வந்து ஆங்கே ராட்சதப் பிறவிகளான கோலியாத்தின் நான்கு சகோதரர்களை தாவீதின் வீரர்கள் மேற்கொண்டு கொன்றதின் பதிவு

பின்னர் பெலித்தரங்கு வன்போர் செயவர
நன்னார் வதைநீக்க போர்ச்செய்தார் -அன்றியும்

மன்னனாம் தாவீத் அயர்ச்சியாய் ஆகிட
வன்மக்கள் தன்னின் இசுபெனோப் -என்றவொரு

நீள்மைந்தன் வேளவனோ தாவீதை வெட்டுவேன்
ஆள்நானே என்றுவர ஆங்கேதான் -கோள்கோனிற்

நல்லுதவிச் செய்ய செருயாவின் மைந்தனாம்
நல்லாண் அபிசாய் பெலித்தனை -அல்லாதான்

ஆக்கிக் கொலைச்செய்தான் சீராக; அன்றியும்
தாக்குதல் தன்னிற்கு நீர்வாரா -ஆக்கமாம்

எம்மினம் தன்னிற் கொளியிழக்க வேண்டாமே
நும்போரை யாம்செய்வோம் என்றனர் -அம்மானை

பார்த்தவர் ஆணையிட்டுச் சொல்லிவிட்டு செய்தார்போர்
பார்கொன்றார் எல்க்கானான் கோலியாத்தின் -பார்த்தமனைக்

கொன்றிட, சீபேக்காய் சாப்பென்னும் நீள்மைந்தன்
கொன்றானே கோப்பினது போரிலே -கொன்றானே

தாவீதின் நீர்தமனாம் சீமேயா நன்மகனாம்
மேவியவன் யோனத்தான் காத்தூரில் -ஏவுபோரில்

அவ்வாறு கைவிரல்கள் கொண்டநீள் மாந்தனை
எவ்வகையோ வெட்டினான் சாய்த்தங்கு -இவ்வகையாய்

பார்தன்னில் நால்வராய் நீள்மக்கள் கொன்றாரே
பார்மன்னன் சீர்வீரர் ஆங்கு

2 சாமு கலி 59

இராகத்தலைனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். கர்த்தரின் தாசனாகிய தாவீது கர்த்தர் அவனை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தபோது கர்த்தருக்கு இந்தப் பாடலின் வார்த்தைகளை மொழிந்தான்.

திருக்கர்த்தர் தாவீதை எல்லாப் பகைஞர்
கரத்தினின்று நீங்கலாக்கி மீட்டு -திருச்சொரி

மன்னன் சவுலுக்கும் நீங்கலாக்கி மீட்டபோது
அன்னவர் முன்பாட்டாய் பாடினது -என்திருவே

என்கன் மலையுமென் கோட்டையும், என்மீட்பர்.
என்தேவன் நான்நம்பி சீரிருக்கும் -என்மலையின்

உச்சியும், காக்கும்சீர் கேடகமும், என்மீட்பின்
உச்சிதக் கொம்பும் உயர்ந்தயென் -மெச்சும்

அடைக்கலமும், என்சீர்ப் புகலிடமும், மீட்பர்
நடக்கும்வல் செய்கைக்கு நீங்கி -அடிக்கெனை

மீட்பவர் சீரவரே; நன்துதிக்குப் பாத்திரராம்
நாட்டிலே மீட்பரை கூப்பிடுவேன் -காட்டிலும்

என்பகைஞர்க் கைவிடுவிப் பார்சீரே நீங்கலாக்கி;
என்னை மரண அலைச்சூழ -என்னையோ

அல்லாதார் பல்லோராய் அச்சப் படுத்தினர்
வல்குழியின் கட்டுகள் என்னைத்தான் -அல்ச்சூழ

சாவினது கண்ணிகள் என்மேல் விழுந்தன.
தேவனை என்நெருக்கத் தில்நானோ -மேவிநோக்கி

ஆலே அபயமெனச் சத்தமிட்டேன்; கோவிலினின்
சீலவர் என்சத்தம் கேட்டாரே -சீலாரின்

தன்செவியில் என்சத்தம் ஏறிற்று. அப்போது
வன்னாக பூமி அசைந்ததிர -நன்கர்த்தர்

வன்சினத்தால் வான அடிக்கற்கள் தானங்கு
வன்னாய்க் குலுங்கி அசைந்தது. -வன்சினத்தால்

அன்னாரின் நாசியில் வன்புகை வந்தது
அன்னாரின் வாயினின்று தீவர -இன்னாத

வெந்தழல் மூண்ட ததனாலே; விண்ணின்று
செந்தழல் தாழ்த்தி யிறங்கினார் -செந்தழற்கீழ்

காரிருள் சூழ்ந்திருக்க கேரூபீன் மேலேறி
சீரவர்ச் சென்றார் விரைவாக -சீரவர்

காற்றின் இறகுகள் மேலிருந்துக் கண்கண்டோம்;
மேற்றவர் விண்முகில் தன்சீர்க்காய் -மேற்குடிலாய்

நீர்த்துளிகள் கொண்ட யிருள்தம்மை ஆக்கினார்
சீர்க்கர்த்தர் சீரொளியால் செந்தழலும் -ஆர்த்தெரிய

சீர்க்கர்த்தர் வானத் தினின்று குமுறியவர்,
சீர்த்தமது சத்தம் தொனிக்கச்செய்ச் -சீர்தன்னே.

சீரவர் அம்புகளை எய்தவரைச் சீராரோ
சீரில் சிதறடித்து, மின்னல்கள் -சீரவர்

விட்டே அவர்களைக் சீரார் கலங்கசெய்தார்.
திட்டமாய்க் கண்டித்து நாசியின் -விட்டசீர்க்

காற்றினாலும் ஆழி மதகு திறவுண்டு,
ஏற்றமாம் பூமி அடிக்கற்கள் -சாற்றியது

கண்காண. சீரார் உயரத் திலிருந்து
மண்மே லிருமென்னை கைநீட்டி, -தண்ணீர்கள்

சூழ்ந்திருக்க என்னைப் பிடித்தவர், தூக்கிவிட்டார்.
சூழ்நிற்கும் என்னிலும் வல்லாராம் -பாழ்ப்பகைஞர்

எல்லார்க்கும் என்னை விடுவித்தார். ஆபத்து
வல்நாளில் என்னெ திரிட்டுவந்தார் -நல்லவர்

சீராரோ சீரெனக்கு ஆதரவாய் நின்றாரே.
சீரவர் என்மேலே அன்பாகச் -சீரிருந்த

காரணத்தால் நற்பரந்த சீரிடத்தில் என்னழைத்து
சீரவர் என்னைத்தான் தப்புவித்தார். -சீரவர்

என்நீதிக் குத்தக்காய் சீரளித்தார் நல்விடையே;
என்கைத்தூய்ப் பார்த்தக்கத் தந்தாரே -நன்சரியாய்;

சீர்கர்த்தர் சீர்வழிகள் சீராய் நடந்துவந்தேன்
சீர்திருவிற் அல்லாச் செயலைநான் -பார்தன்னில்

செய்ததில்லை நேராண்நான்; சீர்நேமம் எம்முன்னே
மெய்யாய் நிறுத்திநான் சீரவற்றை -செய்தேன்

விலகாமல் முன்மெய்யாய், தீச்செய்கை நானோ
விலக்கி வழியவரின் காத்தேன் -விலகியே

என்தேவா, என்நீதி தக்கதாய் தம்கண்ணின்
நன்தூய்தக் காகவே செய்தாரே -நன்பலனே;

சீரார் தயவுசெய் மாந்தனுக்கு சீர்த்தயவு
நேரவர் செய்கின்றார்; சீரார்க்கு -சீராராய்

தூயர்க்கு தூயராய் மாறுபாடுள் மாந்தனுக்கோ
வேயவர் மாறுபாடுள் ளோராய்த்தான் -தூயவர்

தோன்றுவீர் சீரவரே; மீட்பீரே தாழ்மக்கள்;
மேன்மை பெருமையுளோர் வன்னெதிராய் -மேன்கர்த்தர்

கண்களவர் மேலிருக்கே; கர்த்தராம் என்தேவப்
கண்காண் விளக்காமே; என்னிருளை -கண்காண

சீர்வெளிச்சம் செய்கின்றீர்; நேராய் ஒருபடைக்குள்
சீர்நானும் உம்மாலே பாய்ந்திடுவேன் -சீர்நானும்

என்தேவ னாலே மதிலைநான் தாண்டுவேன்
நன்றாமே சீர்வழிகள் மேன்மையே -நன்றாமே

சீரவரின் சீர்ச்சொற்கள் சீராய்ப் புடமிட்டே;
சீரவர் தம்நம்பும் எல்லார்க்கும் -சீரவர்

கேடக மாயிருக் கின்றார். திருவன்றி
நாடிதில் தேவன்யார்? நம்தேவன் -மாடல்லார்

கன்மலையும் யாருள்ளார்? என்தேவன் என்னரண்
என்வழியைச் செவ்வைப் படுத்துகின்ற -என்சீரார்

என்கால்கள் தன்னையவர் மான்கால்கள் போலாக்கி
என்னை உயர்ந்த இடங்களில் -நன்றாய்

நிறுத்துகின் றார்சீரார்; வெண்கல வில்லும்
சிறப்பிலா என்தோளால் பட்டு -அறனார்

வளையும் படிச்செய்து, என்கைகள் தன்னை
களப்போர்க்குச் சீரார் பழக்கி -வளர்க்கிறார்.

உம்மீட்பின் கேடகமும் என்கைக்குத் தந்தீரே
உம்மிரக்கம் என்னை பெரியவனாய் -அம்சீராய்

ஆக்குமே; என்கால்கள் சீரில் வழுவாது
ஆக்கமாய் நான்நடக்கும் சீர்வழியை -வாக்கர்

அகலமாக்கி னீர்சீரே. என்பகைஞர்ப் பின்னே
இகத்தில் தொடர்ந்தவரை கொல்வேன் -இகத்தில்

அவரில்லா போகுமட்டும் நான்திரும்பேன். சீரில்
அவர்கள் எழுந்திருக்க மாட்டா -தவராக

என்கால்கீழ் வீழ்ந்தார்கள்; சீரில்லார் நான்முறித்து
வன்னாரை வெட்டினேன் நான்சீரோய் -வன்போர்க்காய்

என்னைப் பலத்தா லிடைக்கட்டி நீரேசீர்
என்மேல் எழும்பினவர் தன்னையே -என்கீழ்

மடங்கிடச் செய்திட்டீர்; நான்என் பகைஞர்ச்
சடுதியாய் வெட்டிட சீரில் -பிடரியை

என்கைக்கு ஒப்புக் கொடுத்தீரே சீரவா;
நின்னையவர் நோக்கி அழைத்தாலும் -நின்சீரோய்

வன்னவர்க்கு தன்செவியால் கேட்டு விடையளியீர்
வன்னவரை மீட்கவோ யாருமிலை -வன்னாரை

பூமியின் தூளாக்கி சேற்றைப்போல் சீரில்லார்
பூமிமேல் செய்கிறேன் சீரற்றே -ஆமாம்சீர்

என்னினத்தின் சண்டை களுக்குநீர் தான்விலக்கி
என்னை புறவினத்தார் மேலாக -நன்தலைவன்

சீராக்கி வைக்கிறீர்; நானறியா மக்களென்னைச்
சீரவா சேவிக்க வைக்கின்றீர் -சீரிலார்

அந்நியர் பொய்ப்புரட்டுப் பேசி எனக்கடங்கி
இந்நாளில் என்பேச்சை கேட்டவுடன் -தந்தார்

செவிகொடுத்துக் கீழ்ப்படி கின்றாரே சீராய்;
புவியிலே அந்நியர் தன்னின் -அவிமுனை

வீழ்ந்துபோய், தங்கள் அரண்க ளிலிருந்து
ஆழ்த்தத் தளிப்பாய்ப் புறப்பட்டார் -வாழ்க்கர்த்தர்

சீராரே; என்கன் மலையார் துதிப்பெறுவார்
சீராரே மீட்பின்சீர் கன்மலையாம் -சீரார்

உயர்ந்திருப் பாராக. சீரார் எனக்காய்
இயல்பவர் தீப்பழிக்குத் தானே -அயலார்

பழிவாங்கி மக்களை என்கீழ்ப் படுத்தும்
வழிதேவன் சீராரே; சீரார் -அழிப்பகைஞர்

தன்னைவிட் டென்னை விலக்கி விடுவிப்பார்;
என்னை கொடுங்கோலர் விட்டுதப்ப -நன்சீரார்

என்னை உயர்த்தினார் என்னெதிர் வன்னெழும்பும்
வன்னார்மேல் மேலுயர்த்தி விட்டவர் -என்னேநின்

சீர்நீதி ஆகையால் கர்த்தாவே மக்களுள்
சீர்நேரார் உம்மைத் துதித்துநான் -சீர்பாட்டை

உம்பெயர்க்காய் பாடுவேன்நான். தாம்சொரிந்த மன்னனுக்கு
தம்மீட்பை தானளித்து தாம்சொரிந்த -தம்மடியான்

தாவீதும் அன்னவனின் சீர்வழிக்கென் றும்மிரக்கம்
தேவனவர் செய்கின்றார் சீர்.

2 சாமு கலி 60
இப்பாட்டு சங்கீத புத்தகத்தில் 18ம் சங்கீதமாக பதிவிடப்பட்டுள்ளது.

தாவீது பேசியதாகக் கூறப்படும் கடைசி சொற்களாக பதிவு

தாவீ துடைய கடைச்சொற்கள்: மேன்மையாய்
தேவனால் சீருயர்த்தப் பட்டவன், -மேவினம்

யாக்கோபின் தேவனால் நெய்ச்சொரிப் பெற்றவன்
ஆக்கமாஉ சீரிசுரெல் பாடல்கள் -தேக்காது

பேரின்ப மாய்ப்பா டினஈசாய் நன்மகனாம்
சீரவன் தாவீது சொல்வது: -சீராரின்

சீராவி என்னையும் கொண்டவர் பேசினார்;
சீராரின் சொல்லெந்தன் நாவிலே -சீராய்

இருந்தது. தேவன் இசுரேலின் குன்றாம்
திருவவர் சொல்லி உரைத்தார் -திருவவர்

நீதிபர ராகாளு மைச்செய்தே தெய்வச்சம்
நீதிபரர் கொண்டாள்வார் சீராரே -நீதியார்

காலை உதித்து மழைப்பின் விளைவிக்க
மேலுதிக்கும் ஞாப்போல் இருப்பாரே -ஆலெந்தன்

வீட்டார் படியில்லா தேயிருமோ? திட்டமாய்
நாட்டிறை செய்தார் உடன்படிக்கை -நாட்டவன்

என்னுடன் நித்தியமாய் நிச்சயமாய் சீர்செய்தார்;
என்னெல்லா மீட்புகளும் வாஞ்சையும் -நன்னவர்

சீராய் வளர்ந்தோங்கச் செய்யாரோ? சீரிலா
சீரில்லார் எல்லாரும் கைப்பட்டால் -கூராகக்

குத்தும்முள் போலிருக்கின் றாரதனால் விட்டிறிவர்;
குத்தும்முள் போலிருக்கும் அம்மக்கள் -அத்தார்

தொடப்போனால் ஆயுதங்கள் ஈட்டிகள் கையால்
பிடித்துத் திடத்தான் திறமாம் -இடத்திலே

தீயா லவைமுற்றும் சுட்டெரிக்கப் பட்டுவிடும்
சாயும்முன் சொன்னானே சொல்

2 சாமு கலி 61

தாவீது பேசியதாகக் கூறப்படும் கடைசி சொற்கள் மற்றும் தாவீதிடம் இருந்த முப்பத்தியேழு பராக்கிரமசாலிகளின் பதிவு

தாவீ துடைய கடைச்சொற்கள்: மேன்மையாய்
தேவனால் சீருயர்த்தப் பட்டவன், -மேவினம்

யாக்கோபின் தேவனால் நெய்ச்சொரிப் பெற்றவன்
ஆக்கமாஉ சீரிசுரெல் பாடல்கள் -தேக்காது

பேரின்ப மாய்ப்பா டினஈசாய் நன்மகனாம்
சீரவன் தாவீது சொல்வது: -சீராரின்

சீராவி என்னையும் கொண்டவர் பேசினார்;
சீராரின் சொல்லெந்தன் நாவிலே -சீராய்

இருந்தது. தேவன் இசுரேலின் குன்றாம்
திருவவர் சொல்லி உரைத்தார் -திருவவர்

நீதிபர ராகாளு மைச்செய்தே தெய்வச்சம்
நீதிபரர் கொண்டாள்வார் சீராரே -நீதியார்

காலை உதித்து மழைப்பின் விளைவிக்க
மேலுதிக்கும் ஞாப்போல் இருப்பாரே -ஆலெந்தன்

வீட்டார் படியில்லா தேயிருமோ? திட்டமாய்
நாட்டிறை செய்தார் உடன்படிக்கை -நாட்டவன்

என்னுடன் நித்தியமாய் நிச்சயமாய் சீர்செய்தார்;
என்னெல்லா மீட்புகளும் வாஞ்சையும் -நன்னவர்

சீராய் வளர்ந்தோங்கச் செய்யாரோ? சீரிலா
சீரில்லார் எல்லாரும் கைப்பட்டால் -கூராகக்

குத்தும்முள் போலிருக்கின் றாரதனால் விட்டிறிவர்;
குத்தும்முள் போலிருக்கும் அம்மக்கள் -அத்தார்

தொடப்போனால் ஆயுதங்கள் ஈட்டிகள் கையால்
பிடித்துத் திடத்தான் திறமாம் -இடத்திலே

தீயா லவைமுற்றும் சுட்டெரிக்கப் பட்டுவிடும்
சாயும்முன் சொன்னானே சொல்லது -பாயவே

சீராணின் சீர்ப்படையில் நின்றாரே வல்லாரும்
சீராண்கள் முப்பத்தி யேழாமே -சீரவரில்

சீர்வீரர் ஏழுபேர் தன்னின் தனித்திறன்கள்
சீர்ப்பதிவாய் உள்ளதே, முப்பது -சீர்வீரர்

தன்பெயர்கள் மட்டு முளதே நலப்பதிவு
நன்றாய்ப் படித்திடும் நீர்

2 சாமு கலி 62

இசுரேலை இலக்கம் பார்க்க ஏவப்பட்டு தாவீது பாவம் செய்து பின்னர் கர்த்தரிடம் மன்னிப்பு கோருதல்

கர்த்தரின் வன்சினம் பற்றியது மீண்டுமாய்
கர்த்தரின் நல்லினமாம் சீரிசுரேல் -கர்த்தரின்

நல்லினத்தார் எண்ணிட ஏவப்பட் டான்சீரில்
நல்லினத்தார் எண்ணிடும் என்றங்கு -நல்லாணாம்

யோவா பிடம்சொல்ல ஏனிந்த வன்யெண்ணம்
தேவனாம் கர்த்தர் இதைவிட -மேவிநூறு

சீர்மடங்குத் தந்திடுவார், சீராணே வேண்டாமே
சீர்செயல் இல்லையெனச் சொல்லிட -சீர்ச்செயலே

மேவிநான் செய்ச்சொன்ன வேலையை செய்யும்நீர்
யோவாபே மன்னனங்குச் சொல்லவும் -யோவாபின்

சீர்ப்பேச்சு போயிற்றே அல்லாதாய் மன்னன்சொல்
சீர்ரில்லா போழ்தும்தான் மேலோங்க -சீர்படையின்

அக்கணக்கை எண்ணிடவே சென்றாரே சீர்த்தலைவர்
அக்கணக்கை எண்ணி முடித்தனர் -அக்கணக்கை

எண்ணிட ஒன்பது மாதம் இருபதுமாய்
எண்ணிக்கை நாட்களாகி ஆங்கேதான் -எண்ணிக்கை

செய்துமுடித் தாரே இசுரேலும் யூதாவும்
மெய்க்கணக்கு ஆங்கேதான் நல்லினத்தார் -மெய்யோ

இசுரேலில் எட்டு இலட்சம்பேர் வீரர்
இசுரெலின யூதா மனிதர் -திசைதன்னில்

ஐந்து இலட்சம்பேர் நல்கணக்கு தானிருக்க
வேந்தனிடம் தந்தாரே சீர்க்கணக்கை -வேந்தனுக்கு

பிற்பாடு செய்த்தவறை உள்ளுணர்த்த செய்தேனே
அற்றாகி இச்செயலை வன்னாக -நற்றவரே

உம்மடியான் தன்னின் வழுபாவம் நீக்கிவிடும்
எம்மறிவற் றிச்செயலே என்று.

2 சாமு கலி 63

மூன்று வாதைகளில் ஒன்றை தெரிவு செய்ய தாவீதிற்கு காத் தீர்க்கதரிசி சொல்லுதலும் அவன் கர்த்தர் கையில் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தலும், எருசலேமில் வாதை நிறுத்த கர்த்தர் மனஸ்தாபப் படுதலும்.

தாவீது காலை எழுந்தபோது காத்தென்னும்
தேவனின் வாக்கனுக்கு வந்ததேசொல் -மேவும்முன்

மூன்றுவேறு செய்கைகள் வைக்கின்றேன், நீயெதை
கோன்தெரி வாயோ திருவவர் -கோன்செய்வார்

நாட்டிதில் வன்பஞ்சம் மூன்றாண்டு தேர்வாயோ
வாட்டும் பகைஞர்கை மூன்றுமாதம் -நாட்டைவிட்டு

ஓடுவாயோ, நாட்டிதில் மூன்றுநாள் நோய்வரவோ
மாடல்லார் சொல்ல எதைத்தெரிவாய் -நாடரசே

தாவீதோ, ஐயகோ வன்னாய் இடுக்கண்ணில்
ஏவிநான் மாட்டிவிட்டேன் இப்போதும் -தேவன்கை

தன்னில் விழுவோமே; சீராரின் நல்லிரக்கம்
தன்பெரிதே, மாந்தர்க்கை நான்விழாது -மன்னராம்

சீர்கர்த்தர் கைவிழுவோம் என்றிட சீரவர்
நேர்குறித்த காலமுதல் கொள்ளைநோய் -ஆர்த்துவர

மக்கள் எழுபதி னாயிரம் செத்தனர்
தக்கவன் தேவதூதன் சீர்நகரை -தக்கபடி

நேர்தூது வாளெடுத்து சீரழிக்க வந்திட
நேர்கர்த்தர் அத்தீங்கிற் காகத்தன் -நேர்மனதில்

சீருருகி தூதனை நோக்கியவ்ர்: போதுமே
சீரிலார் வாதையை இப்போது -சீரோய்

நிறுத்திடு உன்கையை என்றார்; மறவன்
நிறுத்திய அவ்விடம் அர்வன் -கறையாண்

களமாமெ போரடிக்கும் நெற்பயிர்; அர்வன்
களம்சொந்தம் ஏபூசு மாந்தன் -களமதில்

தாவீது தூதனைக் கண்டபோது, கர்த்தரிடம்:
தாவீதாம் நான்தானே பாவஞ்செய் -ஏவுமாந்தன்;

நான்தானே சீரற்றாய்ச் செய்தவன்; மேக்கள்மேல்
ஏன்வாதை? உம்கை எனக்குமென் -மேன்வழிக்கும்

வன்னெதிராய் நின்றிடட்டும் என்றவன் விண்ணப்பம்
நன்னவர்க்குச் செய்திட அன்றேதான் -நன்காத்

இறைவாக்கு பெற்றுவந்து: நீர்போய், களம்கொள்
கறையவன் அர்வனின், பீடம் -சிறப்பாகக்

கட்டுமெனச் சொன்னானே; காத்தின்சொல் கேட்டவன்
நட்டவன் சென்றான் களத்திலெ -கட்டிட

இக்களமும் தாயென்று அர்வனிடம் கேட்டிட
தக்கபடி கட்டும்சீர், ஈதோயென் -தக்கயேறு

ஏற்றிடும் தீப்பலிக்காய் மாட்டின் நுகங்களை
சாற்றிடும் தேவனார் என்றிட -ஏற்றிடுவேன்

ஆனாலும் ஈதின் விலைக்கொடுத்து இங்கேநான்
மேனவன் ஐம்பது சேக்கலை -தானவன்

வாங்கினான்; கைக்கொடுத்து அந்நிலத்தைச் சீராணும்
வாங்கிவிட்டுப் பின்னரங்கு சீர்ப்பீடம் -தாங்கிகட்டி

தீப்பலி யோடே அமைதிப் பலிகளை
காப்பவர்க் காகயிட ஆங்கேதான் -காப்பவர்

வேண்டுதலைக் கேட்ட ருளினார், இசுரேல்மேல்
மாண்டிடும் அவ்வாதை நின்று.

2 சாமு கலி 64

Comments

Popular posts from this blog

முழு வேதாகமம் வெண்பா வடிவில்